Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Kamba Ramayanam > பால காண்டம் > அயோத்திய காண்டம் > ஆரணிய காண்டம் > கிட்கிந்தா காண்டம் > சுந்தர காண்டம் > யுத்த காண்டம் > 1 கடல் காண் படலம் > 2 இராவணன் மந்திரப் படலம் > 3 இரணியன் வதைப் படலம் > 4 வீடணன் அடைக்கலப் படலம > 5 இலங்கை கேள்வி படலம் > 6 வருணனை வழி வேண்டு படலம் > 7 சேது பந்தனப் படலம் > 8 ஒற்றுக் கேள்விப் படலம் > 9 இலங்கை காண் படலம் > 10 இராவணன் வானரத் காண் படலம் > 11 மகுட பங்கப் படலம் > 12 அணி வகுப்புப் படலம் > 13 அங்கதன் தூதுப் படலம் > 14 முதற்போர் புரி படலம் > 15 கும்பகருணன் வதைப் படலம் > 16 மாயா சனகப் படலம் > 17 அதிகாயன் வதைப் படலம் >18 நாகபாசப் படலம் >19 படைத் தலைவர் வதைப் படலம் > 20 மகரக் கண்ணன் வதைப் படலம் > 21 பிரமாத்திரப் படலம் > 22 சீதை களம் காண் படலம் > 23 மருத்துமலைப் படலம் > 24 களியாட்டுப் படலம் > 25 மாயா சீதைப் படலம் >26 நிகும்பலை யாகப் படலம் > 27 இந்திரசித்து வதைப் படலம் > 28 இராவணன் சோகப் படலம் >29 படைக் காட்சிப் படலம் >30 மூலபல வதைப் படலம் >31 வேல் ஏற்ற படலம் >32 வானரர் களம் காண் படலம்>33 இராவணன் களம் காண் படலம் >34 இராவணன் தேர் ஏறு படலம் > 35 இராமன் தேர் ஏறு படலம்  >36 இராவணன் வதைப் படலம் > 37 மீட்சிப் படலம > 38 திரு முடி சூட்டு படலம் > 39 விடை கொடுத்த படலம

Kamba Ramayanam

கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
யுத்த காண்டம் - 18. நாகபாசப் படலம்
 


அரக்கியர் அழுவது கண்ட ,ந்திரசித்தன் எழுதல்

'குழுமி, கொலை வாட் கண் அரக்கியர், கூந்தல் தாழ,
தழுவித் தலைப் பெய்து, தம் கைகொடு மார்பின் எற்றி,
அழும் ,த் தொழில் யாதுகொல்?' என்று, ஓர் அயிர்ப்பும் உற்றான்,
எழிலித் தனி ஏறு என ,ந்திரசித்து எழுந்தான். 1

'எட்டு ஆகிய திக்கையும் வென்றவன் ,ன்றும் ஈடு-
பட்டான் கொல்? அது அன்று எனின், பட்டு அழிந்தான்கொல்? பண்டு
சுட்டான் ,வ் அகன் பதியைத் தொடு வேலையோடும்
கட்டான் கொல்? ,தற்கு ஒரு காரணம் என்கொல்?' என்றான். 2

,ந்திரசித்து-,ராவணன் உரையாடல்

கேட்டான், ',டை உற்றது என்?' என்று, கிளத்தல் யாரும்
மாட்டாது நடுங்கினர், மாற்றம் மறந்து நின்றார்.
ஓட்டா நெடுந் தேர் கடிது ஓட்டி, ,மைப்பின் உற்றான்
காட்டாதன காட்டிய தாதையைச் சென்று கண்டான். 3

கண்டான், ,றை ஆறிய நெஞ்சினன், கைகள் கூப்பி,
'உண்டாயது என், ,வ்வுழி?' என்றலும், 'உம்பிமாரைக்
கொண்டான் உயிர் காலனும்; கும்ப நிகும்பரோடும்
விண் தான் அடைந்தான், அதிகாயனும்-வீர!' என்றான். 4

சொல்லாத முன்னம், சுடரைச் சுடர் தூண்டு கண்ணான்,
பல்லால் அதரத்தை அதுக்கி, விண் மீது பார்த்தான்;
'எல்லாரும் ,றந்தனரோ!' என ஏங்கி நைந்தான்;-
வில்லாளரை எண்ணின், விரற்கு முன் நிற்கும் வீரன். 5

'ஆர் கொன்றவர்?' என்றலுமே, 'அதிகாயன் என்னும்
பேர் கொன்றவன் வென்றி ,லக்குவன்; பின்பு நின்றார்
ஊர் கொன்றவனால், பிறரால்' என, உற்ற எல்லாம்
தார் கொன்றையினான் கிரி சாய்த்தவன் தான் உரைத்தான். 6

'கொன்றார் அவரோ? "கொலை சூழ்க!" என நீ கொடுத்தாய்;
வன் தானையர் மானிடர் வன்மை அறிந்தும், மன்னா!
என்றானும் எனைச் செல ஏவலை; ,ற்றது' என்னா,
நின்றான், நெடிது உன்னி, முனிந்து, நெருப்பு உயிர்ப்பான். 7

'அக்கப் பெயரோனை நிலத்தொடு அரைத்துளானை,
விக்கல் பொரு வௌ; உரைத் தூதுவன் என்று விட்டாய்;
புக்கத் தலைப்பெய்தல் நினைந்திலை; புந்தி ,ல்லாய்!
மக்கள்-துணை அற்றனை; ,ற்றது உன் வாழ்க்கை மன்னோ! 8

,ந்திரசித்து வஞ்சினம்

'என், ,ன்று நினைந்தும், ,யம்பியும், எண்ணியும்தான்?
கொன் நின்ற படைக்கலத்து எம்பியைக் கொன்றுளானை,
அந் நின்ற நிலத்து அவன் ஆக்கையை நீக்கி அல்லால்,
மன் நின்ற நகர்க்கு ,னி வாரலென்; வாழ்வும் வேண்டேன். 9

'வெங் கண் நெடு வானரத் தானையை வீற்று வீற்றாய்ப்
பங்கம் உற நூறி, ,லக்குவனை படேனேல்,
அங்கம் தர அஞ்சி என் ஆணை கடக்கலாத
செங் கண் நெடு மால் முதல் தேவர் சிரிக்க, என்னை! 10

'மாற்றா உயிர் எம்பியை மாற்றிய மானுடன் தன்
ஊற்று ஆர் குருதிப் புனல் பார்மகள் உண்டிலாளேல்,
ஏற்றான் ,கல் ,ந்திரன் ஈர்-,ரு கால், எனக்கே
தோற்றான் தனக்கு என் நெடுஞ் சேவகம் தோற்க' என்றான். 11

'பாம்பின் தரு வெம் படை, பாசுபதத்தினோடும்,
தேம்பல் பிறை சென்னி வைத்தான் தரு தெய்வ ஏதி,
ஓம்பித் திரிந்தேன் எனக்கு ,ன்று உதவாது போமேல்,
சோம்பித் துறப்பென்; ,னிச் சோறும் உவந்து வாழேன். 12

'மருந்தே நிகர் எம்பிதன் ஆர் உயிர் வவ்வினானை
விருந்தே என அந்தகற்கு ஈகிலென், வில்லும் ஏந்தி,
பொரும் தேவர் குழாம் நகைசெய்திடப் போந்து, பாரின்
,ருந்தேன் எனின், நான் அவ் ,ராவணி அல்லென்' என்றான். 13

'ஏகா, ,து செய்து, எனது ,ன்னலை நீக்கிடு; எந்தைக்கு
ஆகாதனவும் உளவோ? எனக்கு ஆற்றலர் மேல்
மா கால் வரி வெஞ் சிலையோடும் வளைத்த போது
சேகு ஆகும் என்று எண்ணி, ,வ் ,ன்னலின் சிந்தை செய்தேன்'. 14

,ந்திரசித்து களம் புகுதல்

என்றானை வணங்கி, ,லங்கு அயில் வாளும் ஆர்த்திட்டு,
ஒன்றானும் அறா, உருவா, உடற்காவலோடும்,
பொன் தாழ் கணையின் நெடும் புட்டில் புறத்து வீக்கி,
வன் தாள் வயிரச் சிலை வாங்கினன் -வானை வென்றான். 15

வயிரந் நெடு மால் வரை கொண்டு, மலர்க்கண் வந்தான்,
செயிர் ஒன்றும் உறா வகை, ,ந்திரற்கு என்று செய்த
உயர் வெஞ் சிலை; அச் சிலை பண்டு அவன் தன்னை ஓட்டி,
துயரின் தலை வைத்து, ,வன் கொண்டது; தோற்றம் ஈதால். 16

தோளில் கணைப் புட்டிலும், ,ந்திரன் தோற்ற நாளே
ஆளித் திறல் அன்னவன் கொண்டன் ஆழி ஏழும்
மாள, புனல் வற்றினும் வாளி அறாத் வன்கண்
கூளிக் கொடுங் கூற்றினுக்கு ஆவது ஓர் கூடு போல்வ. 17

பல்லாயிர கோடி படைக்கலம், பண்டு, தேவர்
எல்லாரும் முனைத்தலை யாவரும் ஈந்த, மேரு
வில்லாளன் கொடுத்த, விரிஞ்சன் அளித்த, வெம்மை
அல்லால் புரியாதன, யாவையும் ஆய்ந்து, கொண்டான். 18

நூறாயிரம் யாளியின் நோன்மை தெரிந்த சீயத்து
ஏறாம் அவை அன்னவை ஆயிரம் பூண்டது என்ப்
மாறாய் ஓர் ,லங்கை நிகர்ப்பது; வானுளோரும்
தேறாதது-மற்று அவன் ஏறிய தெய்வ மாத் தேர். 19

பொன் சென்று அறியா உவணத் தனிப் புள்ளினுக்கும்,
மின் சென்று அறியா மழுவாளன் விடைக்கும், மேல்நாள்,
பின் சென்றது அல்லது ஒரு பெருஞ் சிறப்பு உற்ற போதும்,
முன் சென்று அறியாதது, மூன்று உலகத்தினுள்ளும். 20

'ஏயாத் தனிப் போர் வலி காட்டிய ,ந்திரன் தன்
சாயாப் பெருஞ் சாய் கெட, தாம்புகளால் தடந் தோள்
போய் ஆர்த்தவன் வந்தனன், வந்தனன்' என்று பூசல்
பேய் ஆர்த்து எழுந்து ஆடு நெடுங் கொடி பெற்றது அம்மா! 21

செதுகைப் பெருந் தானவர் ஊனொடும் தேய்த்த நேமி-
யது;-'கைத் திசை யானையை ஓட்டியது' என்னலாமே?-
மதுகைத் தடந்தோள் வலி காட்டிய வான வேந்தன்
முதுகைத் தழும்பு ஆக்கிய மொய் ஒளி மொட்டது அம்மா! 22

அத் தேரினை ஏறியது ஒப்பன ஆயிரம் தேர்
ஒத்து ஏய்வன சேமமதாய் வர, 'உள்ளம் வெம் போர்ப்
பித்து ஏறினன்' என்ன, நடந்தனன் -பின்பு அலால், மற்று
எத் தேவரையும் முகம் கண்டு அறியாத ஈட்டான். 23

அன்னானொடு போயின தானை அளந்து கூற
என்னால் அரிதேனும், ,யம்பு வான்மீகன் என்னும்
நல் நான்மறையான், 'அது நாற்பது வெள்ளம்' என்னச்
சொன்னான்; பிறர் யார், அஃது உணர்ந்து தொகுக்க வல்லார். 24

தூமக் கண் அரக்கனும், தொல் அமர் யார்க்கும் தோலா
மாபக்கனும், அந் நெடுந் தேர் மணி ஆழி காக்க,
தாமக் குடை மீது உயர, பெருஞ் சங்கம் விம்ம,
நாமக் கடற் பல் ,யம் நாற்கடல் மேலும் ஆர்ப்ப. 25

தேர் ஆயிரம் ஆயிர கோடி தன் மாடு செல்ல,
போர் ஆனை புறத்தின் அவற்றின் ,ரட்டி போத,
தார் ஆர் புரவிக் கடல் பின் செல, தானை வீரப்
பேர் ஆழி முகம் செல, சென்றனன்-பேர்ச்சி ,ல்லான். 26

போருக்கு வருபவனைப் பற்றி ,லக்குவன் வீடணனிடம் வினவலும் வீடணனின் பதிலும்

நின்றனன் ,லக்குவன், களத்தை நீங்கலன்-
'பொன்றினன், ,ராவணன் புதல்வன்; போர்க்கு ,னி,
அன்று அவன், அல்லனேல் அமரர் வேந்தனை
வென்றவன், வரும்' என விரும்பும் சிந்தையான். 27

'யார், ,வன் வருபவன்? ,யம்புவாய்!' என,
வீர வெந் தொழிலினான் வினவ, வீடணன்,
'ஆரிய! ,வன் ,கல் அமரர் வேந்தனைப்
போர் கடந்தவன்; ,ன்று வலிது போர்' என்றான். 28

'எண்ணியது உணர்த்துவது உளது, ஒன்று-எம்பிரான்!-
கண் அகன் பெரும் படைத் தலைவர் காத்திட,
நண்ணின துணையொடும் பொருதல் நன்று; ,து
திண்ணிதின் உணர்தியால், தெளியும் சிந்தையால். 29

'மாருதி, சாம்பவன், வானரேந்திரன்,
தாரை சேய், நீலன் என்று ,னைய தன்மையார்,
வீரர், வந்து உடன் உற,-விமல!-நீ நெடும்
போர் செய்த குருதியால்-புகழின் பூணினாய்! 30

'பல் பதினாயிரம் தேவர் பக்கமா,
எல்லை ,ல் சேனை கொண்டு எதிர்ந்த ,ந்திரன்
ஒல்லையின் உடைந்தனன், உயிர் கொண்டு உய்ந்துளான்-
மல்லல் அம் தோளினாய்!-அமுதின் வன்மையால். 31

',னி அவை மறையுமோ, ,ந்திரன் புயப்
பனி வரை உள நெடும் பாசப் பல் தழும்பு?
அனுமனைப் பிணித்துளன் ஆனபோது, ,வன்
தனு மறை வித்தகம் தடுக்கற்பாலதோ?' 32

என்று, அவன் ,றைஞ்சினன்; ,ளைய வள்ளலும்,
'நன்று' என மொழிதலும், நணுகினான் அரோ-
வன் திறல் மாருதி, ',லங்கைக் கோ மகன்
சென்றனன் ,ளவல்மேல்' என்னும் சிந்தையான். 33

கூற்றமும் கட்புலம் புதைப்ப, கோத்து எழு
தோற்றமும், ,ராவணி துணிபும், நோக்குறா,
மேல் திசை வாயிலை விட்டு, வெங் கடுங்
காற்று என அணுகினன், கடிதின் வந்துஅரோ. 34

அங்கதன் முன்னரே ஆண்டையான்; அயல்
துங்க வன் தோளினார் எவரும் சுற்றினார்;
செங் கதிரோன் மகன் முன்பு சென்றனன்,
சங்க நீர்க் கடல் எனத் தழீ,ய தானையே. 35

,ரு படைகளும் பொருதல்

,ரு திரைப் பெருங் கடல் ,ரண்டு திக்கினும்
பொரு தொழில் வேட்டு எழுந்து ஆர்த்துப் பொங்கின
வருவன போல்வன-மனத்தினால் சினம்
திருகின எதிர் எதிர் செல்லும் சேனையே. 36

'கண்ணினால் மனத்தினால் கருத்தினால் தெரிந்து,
எண்ணினால் பெறு பயன் எய்தும், ,ன்று' எனா,
நண்ணினார் ,மையவர் நங்கைமாரொடும்-
விண்ணின் நாடு உறைவிடம் வெறுமை கூரவே. 37

ஒத்து ,ரு தானையும் உடற்ற உற்றுழி,
அத்தனை வீரரும் ஆர்த்த அவ் ஒலி,
நத்து ஒலி, முரசு ஒலி, நடுக்கலால், தலை-
பொத்தினர் செவிகளை-புரந்தராதியர். 38

'எற்றுமின், பற்றுமின், எறிமின், எய்ம்மின்' என்று,
உற்றன உற்றன உரைக்கும் ஓதையும்,
முற்றுறு கடை யுகத்து ,டியின் மும் மடி
பெற்றன, பிறந்தன, சிலையின் பேர் ஒலி. 39

கல் பட, மரம் பட, கால வேல் பட,
வில் படு கணை பட, வீழும் வீரர்தம்
எல் படும் உடல் பட, ,ரண்டு சேனையும்
பிற்பட, நெடு நிலம் பிளந்து பேருமால். 40

எழுத் தொடர் மரங்களால் எற்ற முற்றிய
விழுத் தலை முழுவதும் சிதறி வீழ்ந்தன,
அழுத்திய பெருஞ் சினத்து அரக்கர் ஆக்கைகள்
கழுத்து உள, தலை ,ல, களத்தின் ஆடுவ. 41

வெட்டிய தலையன, நரம்பு வீச மேல்
முட்டிய குருதிய, குரங்கின் மொய் உடல்-
சுட்டு உயர் நெடு வனம் தொலைந்தபின், நெடுங்
கட்டைகள் எரிவன போன்று காட்டுவ. 42

அரக்கர் அழிவு

பிடித்தன நிருதரை, பெரிய தோள்களை
ஒடித்தன, கால் விசைத்து உதைத்த, உந்தின,
கடித்தன கழுத்து அற, கைகளால் எடுத்து
அடித்தன, அரைத்தன, ஆர்த்த-வானரம். 43

வாள்களின் கவிக் குல வீரர் வார் கழல்
தாள்களைத் துணித்தனர், தலையைத் தள்ளினர்,
தோள்களைத் துணித்தனர், உடலைத் துண்ட வன்
போழ்களின் புரட்டினர், நிருதர் பொங்கினார். 44

மரங்களின், அரக்கரை மலைகள் போன்று உயர்
சிரங்களைச் சிதறின் உடலைச் சிந்தின்
கரங்களை, கழல்களை, ஒடியக் காதின-
குரங்கு எனப் பெயர் கொடு திரியும் கூற்றமே. 45

சுடர்த்தலை நெடும் பொறி சொரியும் கண்ணன,
அடர்த்து அலை நெடு மரம் அற்ற கையன,
உடர்த்தலை வைர வேல் உருவ, உற்றவர்
மிடற்றினைக் கடித்து, உடன் விளிந்து போவன. 46

அடர்ந்தன கிரிகளை அசனி ஏறு எனத்
தொடர்ந்தன, மழை பொழி தும்பிக் கும்பங்கள்
,டந்தன, மூளைகள் ,னிதின் உண்டன,
கடந்தன, பசித் தழல்-கரடி, காதுவ. 47

கொலை மதக் கரியன, குதிரை மேலன,
வல மணித் தேரன, ஆளின் மேலன,
சிலைகளின் குடுமிய, சிரத்தின் மேலன,-
மலைகளின் பெரியன குரங்கு-வாவுவ. 48

தண்டு கொண்டு அரக்கர் தாக்க, சாய்ந்து உகு நிலைய, சந்தின்
துண்டங்கள் ஆக வாளின் துணிந்த பேர் உடலைத் தூவி,
கொண்டு எழும் அலைகளோடும் குரக்கு ,னப் பிணத்தின் குப்பை
மண்டு வெங் குருதி ஆறு அம் மறி கடல் மடுத்த மாதோ. 49

பனி வென்ற பதாகை என்றும், பல் உளைப் பரிமா என்றும்,
தனு என்றும், வாளி என்றும், தண்டு என்றும், தனி வேல் என்றும்,
சின வென்றி மதமா என்றும், தேர் என்றும், தெரிந்தது ,ல்லை-
அனுமன் கை வயிரக் குன்றால் அரைப்புண்ட அரக்கர் தானை. 50

பொங்கு தேர், புரவி, யானை, பொரு கழல் நிருதர் என்னும்
சங்கையும் ,ல்லா வண்ணம், தன் உளே தழுவி, கூற்றம்,
'எங்கு உள, உயிர்?' என்று எண்ணி, ,ணைக் கையால் கிளைத்தது என்ப-
அங்கதன் மரம் கொண்டு எற்ற, அளறுபட்டு அழிந்த தானை. 51

தாக்கிய திசைகள்தோறும் தலைத்தலை மயங்கி, தம்மில்
நூக்கிய களிறும், தேரும், புரவியும், நூழில் செய்ய,
ஆக்கிய செருவை நோக்கி, அமரரோடு அசுரர் போரைத்
தூக்கினர், முனிவர், 'என்னை? ,தற்கு அது தோற்கும்' என்றார். 52

எடுத்தது நிருதர் தானை; ,ரிந்தது குரங்கின் ஈட்டம்;
தடுத்தனர், முகங்கள் தாங்கி, தனித் தனி தலைவர் தள்ளி;
படுத்தனர் அரக்கர், வேலை பட்டதும்; படவும், பாரார்,
கடுத்தனர்; கடுத்த பின்னும், காத்தனர் கவியின் வீரர். 53

சூலமும் மழுவும் தாங்கித் தோள் ,ரு நான்கும் தோன்ற
மூலம் வந்து உலகை உண்ணும் உருத்திர மூர்த்தி என்ன,
நீலன் நின்றுழியே நின்றான்; நிரந்தரம், கணங்களோடும்
காலன் என்று ஒருவன், யாண்டும் பிரிந்திலன், பாசக் கையான். 54

காற்று அலன்; புனலோ அல்லன்; கனல் அல்லன்; ,ரண்டு கையால்,
ஆற்றலன், ஆற்றுகின்ற அருஞ் சமம் ,துவே ஆகில்,
ஏற்றம் என் பலவும் சொல்லி? 'என் பதம் ,ழந்தேன்' என்னா,
கூற்றமும் குலுங்கி அஞ்ச, வெங் கதக் குமுதன் கொன்றான். 55

மறி கடல் புடை சூழ் வைப்பின் மானவன் வாளி போன
செறி பணை மரமே நின்ற, மரங்களில்; தெரியச் செப்பும்
குறியுடை மலைகள் தம்மில் குல வரைக் குலமே-கொள்ளா,
எறிதலோடு அறைதல் வேட்ட, ,டவன் அன்று ,டந்திலாத. 56

'வாம் பரி, மத மா, மான் தேர், வாள் எயிற்று அரக்கர் மானப்,
பாம்பினும் வெய்யோர் சாலப் படுகுவர்; பயம் ,ன்று, ,ன்றே;
தூம்பு உறழ் குருதி மண்ட, தொடர் நெடு மரங்கள் சுற்றிச்
சாம்பவன் கொல்ல, சாம்பும்' என்று கொண்டு அமரர் ஆர்த்தார். 57

பொரும் குலப் புரவி ஆன திரைகளும், கலம் பொன் தேரும்,
,ருங் களி யானை ஆன மகரமும், ,ரியல் போக,
நெருங்கிய படைகள் ஆன மீன் குலம் நெரிந்து சிந்த
கருங் கடல் கலக்கும் மத்தின், பனசனும் கலக்கிப் புக்கான். 58

மயிந்தனும் துமிந்தன் தானும், மழைக் குலம் கிழித்து, வானத்து
உயர்ந்து எழும் எருவை வேந்தர் உடன் பிறந்தவரை ஒத்தார்;
கயம் குடைந்து ஆடும் வீரக் களிறு ஒத்தான், கவயன்; காலின்
பெயர்ந்திலன், உற்றது அல்லால், கேசரி பெரும் போர் பெற்றான். 59

பெரும் படைத் தலைவர் யாரும் பெயர்ந்திலர், பிணத்தின் குப்பை
வரம்பு ,ல பரப்பி ஆர்த்து மலைகின்ற பொழுதின் வந்துற்று,
,ரிந்தன கவியும் கூடி எடுத்தன் எடுத்தலோடும்,
சரிந்தது நிருதர் தானை; தாக்கினன் அரக்கன், தானே. 60

,ந்திரசித்தின் பெரும் போர்

பூண் எறிந்த குவடு அனைய தோள்கள் ,ரு புடை பரந்து உயர, அடல் வலித்
தூண் எறிந்தனைய விரல்கள் கோதையொடு சுவடு எறிந்தது ஒரு தொழில் பட,
சேண் எறிந்து நிமிர் திசைகளோடு மலை, செவிடு எறிந்து உடைய,-மிடல் வலோன்
நாண் எறிந்து, முறை முறை தொடர்ந்து, கடல் உலகம் யாவையும் நடுக்கினான். 61

சிங்கஏறு, கடல்போல் முழங்கி, 'நிமிர் தேர் கடாய் நெடிது செல்க' எனா,
அங்கதாதியர் அனுங்க, வானவர்கள் அஞ்ச, வெஞ் சின அனந்தன் மாச்
சங்கபால குளிகாதி வால் எயிறு தந்த தீ விடம் உமிழ்ந்து சார்
வெங் கண் நாகம் என, வேகமாய், உருமு வெள்க, வெங் கணைகள் சிந்தினான். 62

சுற்றும் வந்து, கவி வீரர் வீசிய சுடர்த் தடங் கல் வரை, தொல் மரம்
,ற்று ஒடிந்து பொடியாய் உதிர்ந்தன் எழுந்து சேணிடை ,ழிந்தபோல்,
வெற்றி வெங் கணை படப் பட, தலைகள் விண்ணினூடு திசைமீது போய்,
அற்று எழுந்தன விழுந்து, மண்ணிடை அழுந்துகின்றன அனந்தமால். 63

சிலைத் தடம் பொழி வயக் கடும் பகழி செல்ல, ஒல்கினர், சினத்தினால்
உலைத்து எறிந்திட எடுத்த குன்றுதொறு உடல் பரங்கள் கொடு ஒதுங்கினார்,
நிலைத்து நின்று, சினம் முந்து செல்ல, எதிர் சென்று சென்று, உற நெருக்கலால்,
மலைத் தடங்களொடு உரத் தலம் கழல, ஊடு சென்ற, பல வாளியே. 64

முழுத்தம் ஒன்றில், ஒரு வெள்ள வானரம் முடிந்து மாள்வன, தடிந்து போய்,
கழுத்த, கைய, நிமிர் கால, வால, பல கண்டமானபடி கண்டு, நேர்
எழுத் தொடர்ந்த படர் தோள்களால் எறிய, எற்ற, அற்றன எழுந்து மேல்,
விழுத்த பைந் தலைய வேணு மால் வரைகள் வீசி வீசி, உடன் வீழுமால். 65

அற்ற பைந் தலை அரிந்து சென்றன அயில் கடுங் கணை, வெயில்கள் போல்,
புற்று அடைந்த கொடு வௌ; அராவின் நெடு நாகலோகம் அது புக்கவால்;
வெற்ற வெள்ளிடை விரைந்து போவது, ஒரு மேடு பள்ளம் வெளி ,ன்மையால்,
உற்ற செங் குருதி வெள்ளம், உள்ள திரை ஓத வேலையொடும் ஒத்ததால். 66

விழிக்குமேல் விழிய, நிற்கின் மார்பிடைய, மீளுமேல் முதுக, மேனிய
கழிக்குமேல், உயர ஓடுமேல் நெடிய கால, வீசின் நிமிர் கைய, வாய்த்
தெழிக்குமேல் அகவும் நாவ, சிந்தையின் உன்னுமேல்-சிகரம் யாவையும்
பழிக்கும் மேனிய குரங்கின்மேல், அவன் விடும் கொடும் பகழி பாயவே. 67

மொய் எடுத்த கணை மாரியால், ,டை முடிந்தது ஒன்றும் முறை கண்டிலார்;
எய்விடத்து எறியும் நாணின் ஓசையலது யாதும் ஒன்று செவி உற்றிலார்;
'மெய் எடுத்த கவி வெள்ளம் யாவையும் விழுந்து போன' எனும் விம்மலால்,
கை எடுத்தன குரங்கின் ஓடும் முறை கண்டு,-தேவர்கள்-கலங்கினார். 68

சுக்கிரீவன் எதிர்த்தல்

கண்ட வானரம் அனந்த கோடி முறை கண்டமானபடி கண்ட அக்
கண்டன், மாறு ஒருவர் ,ன்மை கண்டு, கணை மாறினான், விடுதல் ,ன்மையாய்;
கண்ட காலையில், விலங்கினான் ,ரவி காதல், காதுவது ஓர் காதலால்,
கண்ட கார் சிதைய மீது உயர்ந்து ஒளிர் மராமரம் சுலவு கையினான். 69

உடைந்து, தன் படை உலைந்து சிந்தி, உயிர் ஒல்க, வெல் செரு உடற்றலால்,
கடைந்து தௌ; அமுது கொள்ளும் வள்ளல் என மேல் நிமிர்ந்தது ஓர் கறுப்பினான்,
,டைந்து சென்றவனை எய்தி, எய்த அரிய காவல் பெற்று ,கல் ,யற்றுவான்
மிடைந்து நின்ற படை வேலை கால் தளர, வீசினான்; நிருதர் கூசினார். 70

சுற்றும் நின்ற படை சிந்தி ஓட, ஒரு மரா மரம் கொடு துகைத்துளான்
வெற்றி கண்டு, 'வலி நன்று, நன்று!' என வியந்து, வெங் கணை தெரிந்து, அவன்
நெற்றியின் தலை ,ரண்டு, மார்பிடை ஓர் அஞ்சு, நஞ்சு என நிறுத்தினான்;
பற்றி வந்த மரம் வேறு வேறு உற நொறுக்கி, நுண் பொடி பரப்பினான். 71

அனுமன் குன்று எறிதல்

அக் கணத்து, அனுமன் ஆலகாலம் எனலாயது ஓர் வெகுளி ஆயினான்;
புக்கு, அனைத்து உலகமும் குலுங்க நிமிர் தோள் புடைத்து உருமுபோல் உறா,
',க் கணத்து அவன் ,றக்கும்' என்பது ஒரு குன்று எடுத்து, மிசை ஏவினான்;
உக்கது அக் கிரி, சொரிந்த வாளிகளின், ஊழ் ,லாத சிறு பூழியாய். 72

,ந்திரசித்து - அனுமன் வீர உரை

'நில் அடா! சிறிது நில், அடா! உனை நினைந்து வந்தனென், முனைக்கு நான்;
வில் எடாமை நினது ஆண்மை பேசி, உயிரோடு நின்று விளையாடினாய்;
கல் அடா, நெடு மரங்களோ, வரு கருத்தினேன் வலி கடக்கவோ?
சொல் அடா!' என ,யம்பினான், ,கல் அரக்கன், ஐயன், ,வை சொல்லினான். 73

'வில் எடுக்க உரியார்கள், வெய்ய சில வீரர், ,ங்கும் உளர்; மெல்லியோய்!
கல் எடுக்க உரியானும் நின்றனன்; அது ,ன்று நாளையிடை காணலாம்;
எல் எடுத்த படை ,ந்திராதியர் உனக்கு ,டைந்து உயிர் கொடு ஏகுவார்;
புல் எடுத்தவர்கள் அல்லம்; வேறு சில போர் எடுத்து, எதிர் புகுந்துளோம். 74

'என்னொடே பொருதியோ? அது என்று எனின், ,லக்குவப் பெயரின் எம்பிரான்-
தன்னொடே பொருதியோ? சொல்; நுந்தை தலை தள்ள நின்ற தனி வள்ளலாம்
மன்னொடே பொருதியோ? உரைத்தது மறுக்கிலோம்' என, வழங்கினான்-
பொன்னொடே பொருவின் அல்லது ஒன்றொடு பொருப் படா உயர் புயத்தினான். 75

'எங்கு நின்றனன் ,லக்குவப் பெயர் அவ் ஏழை, எம்பி அதிகாயனாம்
சிங்கம் வந்தவனை வென்று, தன் உயிர் எனக்கு வைத்தது ஓர் சிறப்பினான்?
அங்கு அவன் தனை மலைந்து கொன்று, முனிவு ஆற வந்தனென்; அது அன்றியும்,
உங்கள் தன்மையின் அடங்குமோ, உலகு ஒடுக்கும் வெங் கணை தொடுக்கினே? 76

'யாரும் என் படைஞர் எய்தல் ,ன்றி அயல் ஏக, யானும், ,கல் வில்லும், ஓர்
தேரின் நின்று, உமை அடங்கலும் திரள் சிரம் துணிப்பென்; ,து திண்ணமால்;
வாரும்; உங்களுடன் வானுளோர்களையும் மண்ணுளோரையும் வரச் சொலும்;
போரும், ,ன்று ஒரு பகற்கணே பொருது, வெல்வென்; வென்று அலது போகலேன்'. 77

,ந்திரசித்து - அனுமன் போர்

என்று, வெம்பகழி, ஏழு நூறும், ,ருநூறும், வெஞ் சிலைகொடு ஏவினான்;
குன்று நின்றனைய வீர மாருதிதன் மேனிமேல் அவை குழுக்களாய்ச்
சென்று சென்று உருவலோடும், வாள் எயிறு தின்று சீறி, ஒரு சேம வன்
குறு நின்றது பறித்து எடுத்து, அவனை எய்தி, நொய்தின் ,து கூறினான்: 78

'தும்பி என்று உலகின் உள்ள யாவை, அவை ஏவையும் தொகுபு துள்ளு தாள்,
வெம்பு வெஞ் சின மடங்கல் ஒன்றின் வலி-தன்னை நின்று எளிதின் வெல்லுமோ?
நம்பி தம்பி, எனது எம்பிரான், வரு துணைத் தரிக்கிலை நலித்தியேல்,
அம்பின் முந்தி உனது ஆவி உண்ணும் ,து; கா அடா! சிலை வல் ஆண்மையால்'. 79

செருப் பயிற்றிய தடக் கை ஆளி செல விட்ட குன்று, திசை யானையின்
மருப்பை உற்ற திரள் தோள் ,ராவணன் மகன் தன் மார்பின், நெடு வச்சிரப்
பொருப்பை உற்றது ஓர் பொருப்பு எனக் கடிது ஒடிந்து ,டிந்து, திசை போயதால்;
நெருப்பை உற்றது ஓர் ,ரும்பு கூடம் உற, நீறு பட்டது நிகர்த்ததால். 80

விலங்கல்மேல் வர விலங்கல் வீசிய விலங்கல் நீறுபடு வேலையில்,
சலம் கைமேல் நிமிர, வெஞ் சினம் திருகி, வஞ்சன் மேல் நிமிர் தருக்கினான்,
வலம் கொள் பேர் உலகம் மேருவோடு உடன் மறிக்கும் மாருதிதன் வாசம் நாறு
அலங்கல் மார்பும் உயர் தோளும் ஊடுருவ, ஆயிரம் சரம் அழுத்தினான். 81

ஒன்று போல்வன ஓராயிரம் பகழி ஊடு போய் உருவ, ஆடகக்
குன்று கால் குடைய மேல் உயர்ந்து ,டை குலுங்கநின்றனைய கொள்கையான்,
மன்றல் நாறு தட மேனிமேல் உதிர வாரி சோர வரும் மாருதி,
நின்று தேறும் அளவின்கண், வெங் கண் அடல் நீலன் வந்து, ,டை நெருக்கினான். 82

நீலன் போர்

நீலன், நின்றது ஒரு நீல மால் வரை நெடுந் தடக் கையின் ,டந்து, நேர்
மேல் எழுந்து, எரி விசும்பு செல்வது ஒரு வெம்மையோடு வர வீசலும்,
சூலம் அந்தகன் எறிந்தது அன்னது துணிந்து சிந்த, ,டை சொல்லுறும்
காலம் ஒன்றும் அறியாமல், அம்பு கொடு கல்லினான், நெடிய வில்லினான். 83

ஊகம் எங்கு உயிரொடு நின்றனவும் ஓட, வானவர்கள் உள்ளமும்
மோகம் எங்கும் உள ஆக, மேருவினும் மும் மடங்கு வலி திண்மை சால்
ஆகம் எங்கும் வெளி ஆக, வெங் குருதி ஆறு பாய, அனல் அஞ்சு வாய்,
நாக வெங் கண் நகு, வாளி பாய்தொறும் நடுங்கினான், மலை பிடுங்கினான். 84

அங்கதன் போர்

மேரு, மேரு' என, 'அல்ல, அல்ல' என வேரினொடு நெடு வெற்பு எலாம்,
மார்பின்மேலும் உயர் தோளின்மேலும் உற, வாலி காதலன் வழங்கினான்;
சேருமே அவை, தனுக் கை நிற்க? எதிர் செல்லுமே? கடிது செல்லினும்,
பேருமே? கொடிய வாளியால் முறி பெறுக்கலாவகை நுறுக்கினான். 85

நெற்றிமேலும், உயர் தோளின்மேலும், நெடு மார்பின்மேலும், நிமிர் தாளினும்,
புற்றினூடு நுழை நாகம் அன்ன, புகை வேக வாளிகள் புகப் புக,
தெற்றி வாள் எயிறு தின்று, கைத்துணை பிசைந்து, கண்கள் எரி தீ உக,
வற்றி ஓடு உதிர வாரி சோர்வுற, மயங்கினான், நிலம் முயங்கினான். 86

,லக்குவன் உரை

மற்றை வீரர்கள் தம் மார்பின் மேலும், உயர் தோளின்மேலும், மழை மாரிபோல்,
கொற்ற வெங் கணை உலக்க, எய்தவை குளிப்ப நின்று, உடல் குலுங்கினார்;
,ற்று அவிந்தன, பெரும் பதாதி; உயிர் உள்ள எங்கணும் ,ரிந்த் அப்
பெற்றி கண்டு, ,ளைய வள்ளல், ஒள் எரி பிறந்த கண்ணன், ,வை பேசினான்: 87

'பிழைத்தது, கொள்கை போத் பெரும் படைத் தலைவர் யாரும்
உழைத்தனர், குருதி வெள்ளத்து; உலந்ததும் உலப்பிற்று அன்றே,
அழைத்து ,வன் தன்னை, யானே ஆர் உயிர் கொளப்படாதே?
,ழைத்தது பழுதே அன்றோ?-வீடண!' என்னச் சொன்னான். 88

வீடணன் ,சைவு

'ஐய! ஈது அன்னதேயால்; ஆயிர கோடித் தேவர்
எய்தினர்; எய்தினார்கள் ஈடுபட்டு ,ரிந்தது அல்லால்,
செய்திலர் ,வனை ஒன்றும்; நீ ,து தீர்ப்பின் அல்லால்,
உய்திறன் உண்டோ , வேறு,வ் உலகினுக்கு உயிரோடு?' என்றான். 89

என்பது சொல்லக் கேட்ட, ,ந்திரவில்லினோடும்
பொன் புரை மேகம் ஒன்று வருவது போல்கின்றானை,
முன்பனை, முன்பு நோக்கி, ',வன்கொலாம், பரதன் முன்னோன்-
தன் பெருந் தம்பி?' என்றான்; 'ஆம்' எனச் சாரன் சொன்னான். 90

அரக்கர் ,லக்குவனை எதிர்த்தல்

தீயவன் ,ளவல் தன்மேல் செல்வதன் முன்னம், 'செல்க!' என்று
ஏயினர் ஒருவர் ,ன்றி, ,ராக்கதத் தலைவர், 'எங்கள்
நாயகன் மகனைக் கொன்றாய்! நண்ணினை, நாங்கள் காண்
போய் ,னி உய்வது எங்கே?' என்று, எரி விழித்துப் புக்கார். 91

அரக்கர் படை அழிவு

கோடி நூறு அமைந்த கூட்டத்து ,ராக்கதர், கொடித் திண் தேரும்,
ஆடல் மாக் களிறும், மாவும், கடாவினர் ஆர்த்து மண்டி,
மூடினார்; மூடினாரை முறை முறை துணித்து, வாகை
சூடினான், ,ராமன் பாதம் சூடிய தோன்றல் தம்பி. 92

அதிர்ந்தன, உலகம் ஏழும்; அனற் பொறி, அசனி என்னப்
பிதிர்ந்தன் மலையும் பாரும் பிளந்தன் பிணத்தின் குன்றத்து
உதிர்ந்தன, தலைகள்; மண்டி ஓடின, உதிர நீத்தம்;
விதிர்ந்தன, அமரர் கைகள்; விளைந்தது, கொடிய வெம் போர். 93

விட்டனன், விசிகம் வேகம் விடாதன, வீரன்; மார்பில்
பட்டன் உலகம் எங்கும் பரந்தன் பதாகைக் காட்டைச்
சுட்டன் துரக ராசி துணித்தன் பனைக் கைம்மாவை
அட்டன் கூற்றம் என்ன அடர்ந்தன, அனந்தம் அம்மா! 94

உலக்கின்றார்; உலக்கின்றாரை எண்ணுவான் உற்றவிண்ணோர்,
கலக்குறு கண்ணர் ஆகி, கடையுறக் காணல் ஆற்றார்,
விலக்க அரும் பகழி மாரி விளைக்கின்ற விளைவை உன்னி,
',லக்குவன்சிலை கொடேகொல், எழு மழை பயின்றது!' என்றார். 95

ஓளி ஒண் கணைகள் தோறும் உந்திய வேழம், ஒற்றை
வாளியின் தலைய, பாரில் மறிவன, மலையின் சூழ்ந்த்
ஆளியின் துப்பின வீரர் பொரு களத்து, ஆர்த்த ஆழித்
தூளியின் தொகைய, வள்ளல் சுடு கணைத் தொகையும் அம்மா! 96

'பிறவியில் பெரிய நோக்கின் பிசிதம் உண்டு, உழலும் பெற்றிச்
சிறையன' என்ன நோக்கி, தேவரும் திகைப்ப, தேற்றி,
துறைதொறும் தொடர்ந்து, வானம் வெளி அறத் துவன்றி, வீழும்
பறவையின் பெரிது பட்டார் பிணத்தின் மேல் படிவ மாதோ. 97

திறம் தரு கவியின் சேனை, செறி கழல் நிருதன் சீற,
,றந்தன கிடந்த வெள்ளம் எழுபதின் பாதி மேலும்,
பறந்தலை முழுதும் பட்ட வஞ்சகர் படிவம் மூட,
மறைந்தன் குருதி ஓடி, மறி கடல் மடுத்திலாத. 98

கை அற்றார்; காலன் அற்றார்; கழுத்து அற்றார்; கவசம் அற்றார்;
மெய் அற்றார்; குடர்கள் சோர, விசை அற்றார்; விளிவும் அற்றார்;
மையல் தார்க் கரியும், தேரும், வாசியும், மற்றும் அற்றார்;
உய்யச் சாய்ந்து ஓடிச் சென்றார், உயிர் உள்ளார் ஆகி உள்ளார். 99

,லக்குவன்-,ந்திரசித்து போர்

வற்றிய கடலுள் நின்ற மலை என, மருங்கின் யாரும்
சுற்றினர் ,ன்றி, தோன்றும் தசமுகன் தோன்றல், துள்ளித்
தெற்றின புருவத்தோன், தன் மனம் எனச் செல்லும் தேரான்,
உற்றனன், ,ளைய கோவை; அனுமனும் உடன் வந்து உற்றான். 100

'தோளின்மேல் ஆதி, ஐய!' என்று அடி தொழுது நின்றான்;
ஆளிபோல் மொய்ம்பினானும் ஏறினன்; அமரர் ஆர்த்தார்;
காளியே அனைய காலன் கொலையன, கனலின் வெய்ய,
வாளிமேல் வாளி தூர்த்தார், மழையின்மேல் மழை வந்தன்னார். 101

,டித்தன, சிலையின் நாண்கள்; ,ரிந்தன, திசைகள் ,ற்று;
வெடித்தன, மலைகள் விண்டு; பிளந்தது, விசும்பு மேன்மேல்;
பொடித்த, ,வ் உலகம் எங்கும்; பொழிந்தன, பொறிகள் பொங்கி;
கடித்தன, கணைகளோடு கணைகள் தம் அயில் வாய் கவ்வி. 102

அம்பினோடு அம்பு ஒன்று ஒன்றை அறுக்க, மற்று அறுக்கிலாத,
வெம் பொறி கதுவ, விண்ணில் வெந்தன, கரிந்து வீழ்ந்த்
உம்பரும் உணர்வு சிந்தி ஒடுங்கினார்; உலகம் யாவும்
கம்பமுற்று உலைந்த் வேலைக் கலம் எனக் கலங்கிற்று, அண்டம். 103

அரி ,னம் பூண்ட தேரும், அனுமனும், அனந்த சாரி
புரிதலின், ,லங்கை ஊரும் திரிந்தது; புலவரேயும்,
எரி கணைப் படலம் மூட, ',லர், உளர்' என்னும் தன்மை
தெரிகிலர்; செவிடு செல்லக் கிழிந்தன, திசைகள் எல்லாம். 104

'என் செய்தார்! என் செய்தார்!' என்று ,யம்புவார்; ',னைய தன்மை
முன் செய்தார் யாவர்?' என்பார்; 'முன் எது? பின் எது?' என்பார்;
கொன் செய்தார் வீரர் ,ன்ன திசையினார் என்றும் கொள்ளார்;-
பொன் செய்தார் மவுலிவிண்ணோர்-உணர்ந்திலர், புகுந்தது ஒன்றும். 105

'நாண் பொரு வரி வில் செங் கை, நாம நூல் நவின்ற கல்வி
மாண்பு ஒரு வகையிற்று அன்று; வலிக்கு ,லை அவதி; வானம்
சேண் பெரிது' என்று, சென்ற தேவரும், ',ருவர் செய்கை
காண்பு அரிது' என்று, காட்சிக்கு ஐயுறவு எய்திற்று அன்னோ! 106

ஆயிர கோடி பல்லம், அயில் எயிற்று அரக்கன், எய்தான்;
ஆயிர கோடி பல்லத்து அவை துணித்து அறுத்தான், ஐயன்;
ஆயிர கோடி நாகக் கணை தொடுத்து, அரக்கன் எய்தான்;
ஆயிர கோடி நாகக் கணைகளால் அறுத்தான், அண்ணல். 107

கோட்டியின் தலைய கோடி கோடி அம்பு அரக்கன் கோத்தான்;
கோட்டியின் தலைய கோடி கோடியால் குறைத்தான், கொண்டல்;
மீட்டு, ஒரு கோடி கோடி வெஞ் சினத்து அரக்கன் விட்டான்;
மீட்டு, ஒரு கோடி கோடி கொண்டு, அவை தடுத்தான், வீரன். 108

கங்கபத்திரம் ஓர் கோடி கை விசைத்து, அரக்கன் எய்தான்;
கங்கபத்திரம் ஓர் கோடி கணை தொடுத்து, ,ளவல் காத்தான்,
திங்களின் பாதி கோடி, ,லக்குவன் தெரிந்து விட்டான்;
திங்களின் பாதி கோடி தொடுத்து, அவை அரக்கன் தீர்த்தான். 109

கோரையின் தலைய கோடி கொடுங் கணை அரக்கன் கோத்தான்;
கோரையின் தலைய கோடி தொடுத்து, அவை ,ளவல் கொய்தான்;
பாரையின் தலைய கோடி பரப்பினான் ,ளவல், பல் கால்;
பாரையின் தலைய கோடி, அரக்கனும், பதைக்க எய்தான். 110

தாமரைத் தலைய வாளி, தாமரைக் கணக்கின் சார்ந்த,
தாம் வரத் துரந்து, முந்தி, தசமுகன் தனயன் ஆர்த்தான்;
தாமரைத் தலைய வாளி, தாமரைக் கணக்கின் சார்ந்த,
தாம் வரத் தடுத்து வீழ்த்தான், தாமரைக்கண்ணன் தம்பி. 111

வச்சிரப் பகழி கோடி வளை எயிற்று அரக்கன் எய்தான்;
வச்சிரப் பகழி கோடி துரந்து, அவை அனகன் மாய்த்தான்;
முச் சிரப் பகழி கோடி ,லக்குவன் முடுக விட்டான்;
முச் சிரப் பகழி கோடி தொடுத்து, அவை தடுத்தான் முன்பன். 112

அஞ்சலி அஞ்சு கோடி தொடுத்து, ,கல் அரக்கன் எய்தான்;
அஞ்சலி அஞ்சு கோடி தொடுத்து, அவை அறுத்தான், ஐயன்
குஞ்சரக்கன்னம் கோடி ,லக்குவன் சிலையில் கோத்தான்;
குஞ்சரக்கன்னம் கோடி தொடுத்து, அவை அரக்கன் கொய்தான். 113

எய்யவும், எய்த வாளி விலக்கவும், உலகம் எங்கும்
மொய் கணைக் கானம் ஆகி முடிந்தது; முழங்கு வேலை
பெய் கணைப் பொதிகளாலே வளர்ந்தது; பிறந்த கோபம்
கைம்மிகக் கனன்றது அல்லால், தளர்ந்திலர், காளை வீரர். 114

வீழியின் கனிபோல் மேனி கிழிபட, அனுமன் வீரச்
சூழ் எழு அனைய தோள்மேல் ஆயிரம் பகழி தூவி,
ஊழியின் நிமிர்ந்த செந் தீ உருமினை உமிழ்வது என்ன,
ஏழ்-,ருநூறு வாளி ,லக்குவன் கவசத்து எய்தான். 115

'முற்கொண்டான், அரக்கன்' என்னா, முளரி வாள் முகங்கள், தேவர்,
பின் கொண்டார்; ,ளைய கோவைப் பியல் கொண்டான் பெருந் தோள் நின்றும்
கல்கொண்டு ஆர்கிரியின் நாலும் அருவிபோல், குருதி கண்டார்,
'வில்கொண்டான், ,வனே!' என்னா, வெருக் கொண்டார் முனிவர் எல்லாம். 116

சீறும் நூல் தெரிந்த சிந்தை ,லக்குவன், சிலைக் கை வாளி
நூறு நூறு ஏவி, வெய்தின், நுடங்கு உளை மடங்கல் மாவும்
வேறு வேறு ,யற்றி, வீரக் கொடியையும் அறுத்து வீழ்த்தி,
ஆறு நூறு அம்பு செம் பொன் கவசம் புக்கு அழுந்த எய்தான். 117

காளமேகத்தைச் சார்ந்த கதிரவன் என்னக் காந்தி,
தோளின்மேல் மார்பின்மேலும், சுடர் விடு கவசம் சூழ,
நீள நீள் பவள வல்லி நிரை ஒளி நிமிர்வ என்ன,
வாளிவாய்தோறும் வந்து பொடித்தன, குருதி வாரி. 118

பொன் உறு தடந் தேர் பூண்ட மடங்கல் மாப் புரண்ட போதும்,
மின் உறு பதாகையோடு சாரதி வீழ்ந்த போதும்,
தன் நிறத்து உருவ, வாளி தடுப்பு ,ல சார்ந்த போதும்,
,ன்னது என்று அறியான், அன்னான், ,னையது ஓர் மாற்றம் சொன்னான். 119

'அந் நரன்; அல்லன் ஆகின், நாரணன் அனையன்; அன்றேல்
பின், அரன், பிரமன் என்பார்ப் பேசுக் பிறந்து வாழும்
மன்னர், நம் பதியின் வந்து, வரி சிலை பிடித்த கல்வி
,ந் நரன் தன்னோடு ஒப்பார் யார் உளர், ஒருவர்?' என்றான். 120

,ந்திரசித்தன் தேர் அழிதல்

வாயிடை நெருப்புக் கால, உடல் நெடுங் குருதி வார
தீயிடை நெய் வார்த்தன்ன வெகுளியான்,-உயிர் தீர்ந்தாலும்,
ஓய்விடம் ,ல்லான்-வல்லை, ஓர் ,மை ஒடுங்காமுன்னம்,
ஆயிரம் புரவி பூண்ட ஆழி அம் தேரன் ஆனான். 121

ஆசை எங்கணும் அம்பு உக, வெம்பு போர்
ஓசை விம்ம, உருத்திரரும் உடல்
கூச, ஆயிர கோடி கொலைக் கணை
வீசி, விண்ணை வெளி ,லது ஆக்கினான். 122

அத் திறத்தினில், அனகனும், ஆயிரம்
பத்தி பத்தியின் எய்குவ பல் கணை
சித்திரத்தினில் சிந்தி, ,ராவணன்
புத்திரற்கும், ஓர் ஆயிரம் போக்கினான். 123

ஆயிரம் கணை பாய்தலும், ஆற்ற அருங்
காய் எரித்தலை நெய் எனக் காந்தினான்;
தீயவன் பெருஞ் சேவகன் சென்னிமேல்
தூய வெங் கணை நூறு உடன் தூண்டினான். 124

நெற்றிமேல் ஒரு நூறு நெடுங் கணை
உற்ற போதினும், யாதும் ஒன்று உற்றிலன்,
மற்று அவ் வன் தொழிலோன் மணி மார்பிடை
முற்ற, வெங் கணை நூறு முடுக்கினான். 125

நூறு வெங் கணை மார்பின் நுழைதலின்,
ஊறு சோரியொடு உள்ளமும் சோர்தர,
தேறல் ஆம் துணையும், சிலை ஊன்றியே
ஆறி நின்றனன்-ஆற்றலில் தோற்றிலான். 126

புதையும் நல் மணி, பொன் உருள், அச்சொடும்
சிதைய, ஆயிரம் பாய் பரி சிந்திட-
வதையின் மற்றொரு கூற்று என மாருதி-
உதையினால் அவன் தேரை உருட்டினான். 127

பேய் ஓர் ஆயிரம் பூண்டது, பெய்ம் மணி
ஏய தேர் ,மைப்பின்னிடை ஏறினான்;
தூயவன் சுடர்த் தோள் ,ணைமேல் சுடர்த்
தீய வெங் கணை ஐம்பது சிந்தினான். 128

ஏறி ஏறி ,ழிந்தது அல்லால், ,கல்
வேறு செய்திலன், வெய்யவன்; வீரனும்,
ஆறு கோடி பகழியின் ஐ-,ரு
நூறு தேர் ஒரு நாழிகை நூறினான். 129

ஆசி கூறினர்; ஆர்த்தனர்; ஆய் மலர்
வீசி வீசி, வணங்கினர்;-விண்னவர்-
ஊசல் நீங்கினர்; உத்தரிகத்தொடு
தூசு வீசினர்;-நல் நெறி துன்னினார். 130

அக் கணத்தின், ஓர் ஆயிரம் ஆயிரம்
மிக்க வெங் கண் அரக்கர், அவ் வீரனோடு
ஒக்க வந்துற்று ஒரு வழி நண்ணினார்,
புக்கு முந்தினர், போரிடைப் பொன்றுவான். 131

தேரர், தேரின் ,வுளியர், செம் முகக்
காரர்,-காரின் ,டிப்பினர், கண்டையின்
தாரர், தாரணியும் விசும்பும் தவழ்
பேரர், பேரி முழக்கு அன்ன பேச்சினார். 132

பார்த்த பார்த்த திசைதொறும், பல் மழை
போர்த்த வானம் என ,டி போர்த்து எழ,
ஆர்த்த ஓதையும், அம்பொடு வெம் படை
தூர்த்த ஓதையும், விண்ணினைத் தூர்த்தவால். 133

ஆளி ஆர்த்தன் வாள் அரி ஆர்த்தன்
கூளி ஆர்த்தன் குஞ்சரம் ஆர்த்தன்
வாளி ஆர்த்தன் தேர், ,வர் மண்தலம்
தூளி ஆர்த்திலதால், பிணம் துன்னலால். 134

வந்து அணைந்தது ஓர், வாள் அரி வாவு தேர்,
,ந்திரன் தனை வென்றவன் ஏறினான்;
சிந்தினன் சர மாரி, திசை திசை;
அந்திவண்ணனும் அம்பின் அகற்றினான். 135

சுற்றும் வந்து படர்ந்து தொடர்ந்தவர்
எற்றுகின்றன, எய்த, எறிந்தன,
அற்று உதிர்ந்தன் ஆயிரம் வன் தலை,
ஒற்றை வெங் கணையொடும் உருண்டவால். 136

குடர் கிடந்தன, பாம்பு என் கோள் மதத்
திடர் கிடந்தன் சிந்தின, தேர்த் திரள்
படர் கிடந்தன, பல் படைக் கையினர்-
கடர் கிடந்தன போன்ற களத்தினே. 137

குண்டலங்களும், ஆரமும், கோவையும்,
கண்டநாணும், கழலும், கவசமும்,
சண்ட மாருதம் வீச, தலத்து உகும்
விண் தலத்தினின் மீன் என, வீழ்ந்தவால். 138

அரக்கன் மைந்தனை, ஆரியன் அம்பினால்,
கரக்க நூறி, எதிர் பொரு கண்டகர்
சிரக் கொடுங் குவைக் குன்று திரட்டினான்-
,ரக்கம் எய்தி, வெங் காலனும் எஞ்சவே. 139

சுற்றும் வால்கொடு; தூவும்; துவைக்கும்; விட்டு
எற்றும்; வானின் எடுத்து எறியும்; எதிர்
உற்று மோதும்; உதைக்கும்; உறுக்குமால்-
கொற்ற வில்லி அன்று ஏறிய கூற்றமே. 140

பார்க்கும் அஞ்ச் உறுக்கும்; பகட்டினால்
தூர்க்கும், வேலையை; தோள் புடை கொட்டி நின்று
ஆர்க்கும்; ஆயிரம் தேர் பிடித்து அம் கையால்
ஈர்க்கும்-ஐயன் அன்று ஏறிய யானையே. 141

மாவும் யானையும் வாளுடைத் தானையும்,
பூவும் நீரும் புனை தளிரும் என,
தூவும்; அள்ளிப் பிசையும்; துகைக்குமால்-
சேவகன் தெரிந்து ஏறிய சீயமே. 142

உரகம் பூண்ட உருளை பொருந்தின
,ரதம் ஆயிரம், 'ஏ' எனும் மாத்திரை,
சரதம் ஆகத் தரைப் படச் சாடுமால்-
வரதன் அன்று உவந்து ஏறிய வாசியே. 143

அவ் ,டத்தினில், ஆய் மருந்தால், அழல்
வௌ; விடத்தினை உண்டவர் மீண்டென,
எவ் ,டத்தினும் வீழ்ந்த ,னத்தலைத்
தெவ் அடங்கும் அவ் வலியவர் தேறினார். 144

தேறினார் கண் நெருப்பு உகச் சீறினார்;
ஊறினார் வந்து, ,ளவலை ஒன்றினார்;
மாறு மாறு, மலையும் மரங்களும்
நூறும் ஆயிரமும் கொடு நூறினார். 145

விகடம் உற்ற மரனொடு வெற்பு ,னம்
புகட, உற்ற பொறுத்தன, போவன,
துகள் தவத் தொழில் செய் துறைக் கம்மியர்
சகடம் ஒத்தன, தார் அணி தேர் எலாம். 146

வாலி மைந்தன் ஓர் மால் வரை வாங்கினான்,
காலின் வந்த அரக்கனை; 'கர் ,து
போலும் உன் உயிர் உண்பது, புக்கு' எனா,
மேல் நிமிர்ந்து, நெருப்பு உக வீசினான். 147

'ஏர் அழித்தது செய்தவன் ஈண்டு எழில்
சீர் அழித்தவன் ஆம்' என, தேவர்கள்
ஊர் அழித்த உயர் வலித் தோளவன்
தேர் அழித்து, ஓர் ,மைப்பிடைச் சென்றதால். 148

அந்த வேலையின், ஆர்த்து எழுந்து ஆடினார்,
சிந்தை சால உவந்தனர், தேவர்கள்-
'தந்தை தந்தை பண்டு உற்ற சழக்கு எலாம்
எந்தை தீர்த்தனன்' என்பது ஓர் ஏம்பலால். 149

அழிந்த தேரின்நின்று, அந்தரத்து, அக் கணத்து,
எழுந்து, மற்று ஓர் ,ரதம் உற்று ஏறினான்,-
'கழிந்து போகலை, நில்!' என, கைக் கணை
பொழிந்து சென்றனன்-தீ எனப் பொங்கினான். 150



 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home