Kamba Ramayanam
கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
யுத்த காண்டம் -
36. இராவணன் வதைப் படலம்
தேவர்கள் வாழ்த்த, இராமன்
தேரில் செல்லுதல்
ஆழி அம் தடந் தேர், வீரன் ஏறலும், அலங்கல் சில்லி
பூழியில் சுரித்த தன்மை நோக்கிய புலவர் போத,
ஊழி வெங் காற்றின் வெய்ய கலுழனை ஒன்றும் சொல்லார்,
வாழிய அனுமன் தோளை ஏத்தினார், மலர்கள் தூவி. 1
'எழுக, தேர்; சுமக்க, எல்லோம் வலியும்; புக்கு இன்றே பொன்றி
விழுக, போர் அரக்கன்; வெல்க, வேந்தர்க்கு வேந்தன்; விம்மி
அழுக, பேர் அரக்கிமார்' என்று ஆர்த்தனர், அமரர்; ஆழி
முழுகி மீது எழுந்தது என்னச் சென்றது, மூரித் திண் தேர். 2
இராமன் எதிரே தேரை செலுத்துமாறு இராவணன் சாரதிக்குக் கூறுதல்
அன்னது கண்ணின் கண்ட அரக்கனும், 'அமரர் ஈந்தார்
மன் நெடுந் தேர்' என்று உன்னி, வாய் மடித்து எயிறு தின்றான்;
பின், 'அது கிடக்க' என்னா, தன்னுடைப் பெருந் திண் தேரை,
மின் நகு வரி வில் செங் கை இராமன் மேல் விடுதி' என்றான். 3
வானரர் போருக்கு ஆயத்தமாதல்
இரிந்த வான் கவிகள் எல்லாம், 'இமையவர் இரதம் ஈந்தார்;
அரிந்தமன் வெல்லும் என்றற்கு ஐயுறவு இல்' என்று, அஞ்சார்,
திரிந்தனர்; மரமும் கல்லும் சிந்தினர்; 'திசையோடு அண்டம்
பிரிந்தனகொல்!' என்று எண்ணப் பிறந்தது, முழக்கின் பெற்றி. 4
வார்ப் பொலி முரசின் ஓதை, வாய்ப்புடை வயவர் ஓதை,
போர்த் தொழில் களத்து மற்றும் முற்றிய பொம்மல் ஓதை,
ஆர்த்தலின், யாரும் பார் வீழ்ந்து அடங்கினர், இருவர் ஆடல்
தேர்க் குரல் ஓதை பொங்க, செவி முற்றும் செவிடு செய்த. 5
இராமன் மாதலிக்கு தன் கருத்து கூற, அவன் அதற்கு இசைதல்
மாதலி வதனம் நோக்கி, மன்னர் தம் மன்னன் மைந்தன்,
'காதலால் கருமம் ஒன்று கேட்டியால்; களித்த சிந்தை
ஏதலன் மிகுதி எல்லாம் இயற்றிய பின்றை, என் தன்
சோதனை நோக்கிச் செய்தி; துடிப்பு இலை' என்னச் சொன்னான். 6
'வள்ளல்! நின் கருத்தும், மாவின் சிந்தையும், மாற்றலார்தம்
உள்ளமும், மிகையும், உற்ற குற்றமும், உறுதிதானும்,
கள்ளம் இல் காலப் பாடும், கருமமும், கருதேன் ஆகில்,
தௌ;ளிது என் விஞ்சை!' என்றான்; அமலனும், 'சீரிது!' என்றான். 7
வேறு இடத்துப் பொர மகோதரன் வேண்ட , இராவணன், 'நீ இலக்குவனோடு போர் செய்'
எனல்
'தோன்றினன் இராமன், எந்தாய்! புரந்தரன் துரகத் தேர் மேல்;
ஏன்று இருவருக்கும் வெம் போர் எய்தியது; இடையே, யான் ஓர்
சான்று என நிற்றல் குற்றம்; தருதியால் விடை ஈண்டு' என்றான் -
வான் தொடர் குன்றம் அன்ன மகோதரன் இலங்கை மன்னை. 8
'அம்புயம் அனைய கண்ணன் தன்னை யான் அரியின் ஏறு
தும்பியைத் தொலைத்தது என்னத் தொலைக்குவென்; தொடர்ந்து நின்ற
தம்பியைத் தடுத்தியாயின், தந்தனை கொற்றம்' என்றான்;
வெம்பு இகல் அரக்கன், 'அஃதே செய்வென்' என்று, அவனின் மீண்டான். 9
இராமன் தேர் அணுக, 'அதன் எதிரே தேரை விடு' எனச் சாரதிக்கு மகோதரன் பணித்தல்
மீண்டவன் இளவல் நின்ற பாணியின் விலங்கா முன்னம்,
ஆண்தகை தெய்வத் திண் தேர் அணுகியது; அணுகும் காலை,
மூண்டு எழு வெகுளியோடும், மகோதரன் முனிந்து, 'முட்டத்
தூண்டுதி தேரை' என்றான்; சாரதி தொழுது சொல்லும்: 10
மகோதரன் இராமனுடன் பொருது, முடிதல்
'எண் அருங் கோடி வெங் கண் இராவணரேயும், இன்று
நண்ணிய பொழுது மீண்டு நடப்பரோ, கிடப்பது அல்லால்?
அண்ணல் தன் தோற்றம் கண்டால், ஐய! நீ கமலம் அன்ன
கண்ணனை ஒழிய, அப் பால் செல்வதே கருமம்' என்றான். 11
என்றலும், எயிற்றுப் பேழ் வாய் மடிந்து, 'அடா! எடுத்து நின்னைத்
தின்றனென் எனினும் உண்டாம் பழி' என, சீற்றம் சிந்தும்
குன்று அன தோற்றத்தான் தன் கொடி நெடுந் தேரின் நேரே
சென்றது, அவ் இராமன் திண் தேர்; விளைந்தது, திமிலத் திண் போர். 12
பொன் தடந் தேரும், மாவும், பூட்கையும், புலவு உண் வாட் கைக்
கல் தடந் திண் தோள் ஆளும், நெருங்கிய கடல்கள் எல்லாம்
வற்றின, இராமன் வாளி வட அனல் பருக் வன் தாள்
ஒற்றை வன் தடந் தேரொடும் மகோதரன் ஒருவன் சென்றான். 13
அசனிஏறு இருந்த கொற்றக் கொடியின்மேல், அரவத் தேர்மேல்,
குசை உறு பாகன் தன்மேல், கொற்றவன் குவவுத் தோள்மேல்,
விசை உறு பகழி மாரி வித்தினான்; விண்ணினோடும்
திசைகளும் கிழிய ஆர்த்தான்; தீர்த்தனும், முறுவல் செய்தான். 14
வில் ஒன்றால், கவசம் ஒன்றால், விறலுடைக் கரம் ஓர் ஒன்றால்,
கல் ஒன்று தோளும் ஒன்றால், கழுத்து ஒன்றால், கடிதின் வாங்கி,
செல் ஒன்று கணைகள், ஐயன் சிந்தினான்; செப்பி வந்த
சொல் ஒன்றாய்ச் செய்கை ஒன்றாய்த் துணிந்தனன், அரக்கன் துஞ்சி. 15
மகோதரனது முடிவு கண்டு வருந்திய இராவணன், இராமன் எதிரே தேரைச் செலுத்தச்
செய்தல்
மோதரன் முடிந்த வண்ணம், மூவகை உலகத்தோடும்
மாதிரம் எவையும் வென்ற வன் தொழில் அரக்கன் கண்டான்,
சேதனை உண்ணக் கண்டான்; 'செல விடு, செல விடு!' என்றான்;
சூதனும் முடுகித் தூண்ட, சென்றது, துரதத் திண் தேர். 16
இராவணன் சேனையை இராமன் கணத்தில் நீறாக்குதல்
'பனிப் படா நின்றது என்னப் பரக்கின்ற சேனை பாறித்
தனிப்படான் ஆகின் இன்னம் தாழ்கிலன்' என்னும் தன்மை
நுனிப் படா நின்ற வீரன், அவன் ஒன்று நோக்காவண்ணம்
குனிப் படாநின்ற வில்லால், ஒல்லையின் நூறிக் கொன்றான். 17
இராவணனுக்குத் துன்னிமித்தம் தோன்றுதல்
அடல் வலி அரக்கற்கு அப் போழ்து, அண்டங்கள் அழுந்த, மண்டும்
கடல்களும் வற்ற, வெற்றிக் கால் கிளர்ந்து உடற்றும்காலை,
வடவரை முதல ஆன மலைக் குலம் சலிப்ப போன்று,
சுடர் மணி வலயம் சிந்தத் துடித்தன, இடத்த பொன் -தோள். 18
உதிர மாரி சொரிந்தது, உலகு எலாம்;
அதிர வானம் இடித்தது; அரு வரை
பிதிர வீழ்ந்தது, அசனி; ஒளி பெறாக்
கதிரவன் தனை ஊரும் கலந்ததால். 19
வாவும் வாசிகள் தூங்கின் வாங்கள் இல்
ஏவும் வெஞ் சிலை நாண் இடை இற்றன்
நாவும் வாயும் உலர்ந்தன் நாள்மலர்ப்
பூவின் மாலை புலால் வெறி பூத்ததால். 20
எழுது வீணை கொடு ஏந்து பதாகை மேல்
கழுகும் காகமும் மொய்த்தன் கண்கள் நீர்
ஒழுகுகின்றன, ஓடு இகல் ஆடல் மர்
தொழுவில் நின்றன போன்றன, சூழி மா. 21
துன்னிமித்தங்களை மதியாது, இராவணன் பொர நெருங்குதல்
இன்ன ஆகி, இமையவர்க்கு இன்பம் செய்
துன்னிமித்தங்கள் தோன்றின் தோன்றவும்,
அன்னது ஒன்றும் நினைந்திலன், 'ஆற்றுமோ,
என்னை வெல்ல, மனித்தன்?' என்று எண்ணுவான். 22
வீங்கு தேர் செலும் வேகத்து, வேலை நீர்
ஓங்கு நாளின் ஒதுங்கும் உலகுபோல்,
தாங்கல் ஆற்றகிலார், தடுமாறித் தாம்
நீங்கினார், இரு பாலும் நெருங்கினார். 23
இராம இராவணர் தோற்றம்
கருமமும் கடைக்கண் உறு ஞானமும்,
அருமை சேரும் அவிஞ்சையும் விஞ்சையும்,
பெருமை சால் கொடும் பாவமும் பேர்கலாத்
தருமமும், எனச் சென்று, எதிர் தாக்கினார். 24
சிரம் ஒர் ஆயிரம் தாங்கிய சேடனும்,
உரவு கொற்றத்து உவணத்து அரசனும்,
பொர உடன்றனர் போலப் பொருந்தினர்,
இரவும் நண்பகலும் எனல் ஆயினார். 25
வென்றி அம் திசை யானை வெகுண்டன
ஒன்றை ஒன்று முனிந்தன ஒத்தனர்;
அன்றியும், நரசிங்கமும் ஆடகக்
குன்றம் அன்னவனும் பொரும் கொள்கையார். 26
துவனி வில்லின் பொருட்டு ஒரு தொல்லைநாள்,
'எவன் அ(வ்) ஈசன்?' என்பார் தொழ, ஏற்று, எதிர்
புவனம் மூன்றும் பொலங் கழலால் தொடும்
அவனும் அச் சிவனும் எனல் ஆயினார். 27
இராவணன் சங்கம் ஊத, திருமாலின் சங்கம் தானே முழங்குதல்
கண்ட சங்கரன் நான்முகன் கைத் தலம்
விண்டு அசங்க, தொல் அண்டம் வெடித்திட,
அண்ட சங்கத்து அமரர்தம் ஆர்ப்பு எலாம்
உண்ட சங்கம் இராவணன் ஊதினான். 28
சொன்ன சங்கினது ஓசை துளக்குற,
'என்ன சங்கு?' என்று இமையவர் ஏங்கிட,
அன்ன சங்கைப் பொறாமையினால், அரி-
தன்ன வெண் சங்கு தானும் முழங்கிற்றால். 29
திருமாலின் ஐம்படையும் அடிமை செய்ய வந்ததை இராமன் காணாதிருத்தல்
ஐயன் ஐம் படை தாமும் அடித் தொழில்
செய்ய வந்து அயல் நின்றன் தேவரில்
மெய்யன் அன்னவை கண்டிலன், வேதங்கள்
பொய் இல் தன்னைப் புலன் தெரியாமைபோல். 30
மாதலி இந்திரனது சங்கை முழக்குதல்
ஆசையும் விசும்பும் அலை ஆழியும்
தேசமும் மலையும் நெடுந் தேவரும்
கூச அண்டம் குலுங்க, குலம் கொள் தார்
வாசவன் சங்கை மாதலி வாய்வைத்தான். 31
இராவணன்-இராமன் போர்
துமில வாளி அரக்கன் துரப்பன்
விமலன் மேனியின் வீழ்வதன் முன்னமே,
கமல வாள் முக நாடியர் கண் கணை
அமலன் மேனியில் தைத்த அனந்தமால். 32
சென்ற தேர் ஒர் இரண்டினும் சேர்த்திய
குன்றி வெங் கண் குதிரை குதிப்பன,
ஒன்றை ஒன்று உற்று, எரி உக நோக்கின்
தின்று தீர்வன போலும் சினத்தன. 33
கொடியின்மேல் உறை வீணையும், கொற்ற மா
இடியின் ஏறும், முறையின் இடித்தன-
படியும் விண்ணும் பரவையும் பண்பு அற
முடியும் என்பது ஒர் மூரி முழக்கினால். 34
இருவருடைய வில்லின் ஒலி
ஏழு வேலையும் ஆர்ப்பு எடுத்து என்னலாம்,
வீழி வெங் கண் இராவணன் வில் ஒலி;
ஆழி நாதன் சிலை ஒலி, அண்டம் விண்டு
ஊழி பேர்வுழி, மா மழை ஒத்ததால். 35
ஆங்கு நின்ற அனுமனை ஆதியாம்
வீங்கு வெஞ் சின வீரர் விழுந்தனர்-
ஏங்கி நின்றது அலால், ஒன்று இழைத்திலர்,
வாங்கு சிந்தையர், செய்கை மறந்துளார். 36
தேவர்களின் திகைப்பும், பூமழையும்
'ஆவது என்னை கொலாம்?' என்று அறிகிலார்,
'ஏவர் வெல்வர்?' என்று எண்ணலர் ஏங்குவார்,
போவர், மீள்வர், பதைப்பர், பொருமலால்,
தேவரும் தங்கள் செய்கை மறந்தனர். 37
சேண அந்தரம் நோக்கலும் திண் சரம்,
பூண முந்தின, சிந்தின பூ மழை,
காண வந்த கடவுளர் கை எலாம்-
ஆணவம் துணை யார் உளர் ஆவரோ? 38
இருவரின் வில்லின் தகைமை
நீண்ட மின்னொடு வான் நெடு நீல வில்
பூண்டு இரண்டு எதிர் நின்றவும் போன்றன-
ஆண்ட வில்லிதன் வில்லும், அரக்கன் தன்
தீண்ட வல்லர் இலாத சிலையுமே. 39
இராவனது சினத்தின் எழுச்சி
அரக்கன் அன்று எடுத்து ஆர்க்கின்ற ஆர்ப்பும், அப்
பொருப்பு மெய் வில் தெழிப்பும் உண்டு என்பபோல்,
குரைக்கும் வேலையும் மேகக் குழாங்களும்
இரைத்து இடிக்கின்ற, இன்றும் ஒர் ஈறு இலா. 40
மண்ணில் செல்வன செல்லினும், மாசு அற
எண்ணின் சூல் மழை இல்ல் இராவணன்
கண்ணின் சிந்திய தீக் கடு வேகத்த
விண்ணில் செல்வன வெந்தன வீழ்வன. 41
மால் கலங்கல் இல் சிந்தையன் மாதிரம்
நால் கலங்க நகும்தொறும், நாவொடு
கால் கலங்குவர், தேவர்; கண மழைச்
சூல் கலங்கும்; இலங்கை துளங்குமால். 42
இக் கணத்தும் எறிப்ப தடித்து என,
நெக்க மேகத்து உதிக்கும் நெருப்பு என,
பக்கம் வீசும் படைச் சுடர், பல் திசை
புக்குப் போக, பொடிப்பன போக்கு இல. 43
இராவணன் சின மொழி
'கொற்ற வில் கொடு கொல்லுதல் கோள் இலாச்
சிற்றையாளனைத் தேவர்தம் தேரொடும்
பற்றி வானில் சுழற்றி, படியின்மேல்
எற்றுவேன்' என்று உரைக்கும், இரைக்குமால். 44
'தடித்து வைத்தன்ன வெங் கணை தாக்கு அற,
வடித்து வைத்தன்ன மானுடன் தோள் வலி
ஒடித்து, தேரை உதிர்த்து, ஒரு வில்லொடும்
பிடித்துக் கொள்வென், சிறை' எனப் பேசுமால். 45
இராவணன் அம்பு மாரி பொழிதலும், இராமன் தடுத்தலும்
பதைக்கின்றது ஓர் மனமும், இடை படர்கின்றது ஒர் சினமும்,
விதைக்கின்றன பொறி பொங்கின விழியும், உடை வெய்யோன்,
குதிக்கின்றன நிமிர் வெஞ் சிலை குழைய, கொடுங் கடுங் கால்
உதைக்கின்றன சுடர் வெங் கணை, உரும் ஏறு என, எய்தான். 46
உரும் ஒப்பன, கனல் ஒப்பன, ஊற்றம் தரு கூற்றின்
மருமத்தினும் நுழைகிற்பன் மழை ஒப்பன் வானோர்
நிருமித்தன, படை பற்று அற நிமிர்வுற்றன, அமிழ்தப்
பெரு மத்தினை முறை சுற்றிய பெரும் பாம்பினும் பெரிய. 47
'துண்டப்பட நெடு மேருவைத் தொளைத்து, உள் உறை தங்காது
அண்டத்தையும் பொதுத்து ஏகும்' என்று இமையோர்களும், அயிர்த்தார்;
கண்டத் தெறு கணைக் காற்றினை, கருணைக் கடல், கனகச்
சண்டச் சர மழை கொண்டு, அவை இடையே அறத் தடுத்தான். 48
உடையான் முயன்றுறு காரியம் உறு தீவினை உடற்ற,
இடையூறு உறச் சிதைந்தாங்கெனச் சரம் சிந்தின, விறலும்;
தொடை ஊறிய கணை மாரிகள் தொகை தீர்த்து, அவை துரந்தான்-
கடை ஊறு உறு கண மா மழை கால் வீழ்த்தென, கடியான். 49
விண் போர்த்தன் திசை போர்த்தன் மலை போர்த்தன் விசை ஓர்
கண் போர்த்தன் கடல் போர்த்தன் படி போர்த்தன் கலையோர்
எண் போர்த்தன் எரி போர்த்தன் இருள் போர்த்தன் 'என்னே,
திண் போர்த் தொழில்!' என்று, ஆனையின் உரி போர்த்தவன் திகைத்தான். 50
அல்லா நெடும் பெருந் தேவரும் மறை வாணரும் அஞ்சி,
எல்லார்களும் கரம் கொண்டு இரு விழி பொத்தினர், இருந்தார்;
செல் ஆயிரம் விழுங்கால் உகும் விலங்கு ஒத்தது சேனை;
வில்லாளனும் அது கண்டு, அவை விலக்கும் தொழில் வேட்டான். 51
செந் தீ வினை மறைவாணனுக்கு ஒருவன், சிறுவிலை நாள்,
முந்து ஈந்தது ஒர் உணவின் பயன் எனல் ஆயின, முதல்வன்
வந்து ஈந்தன வடி வெங் கணை; அனையான் வகுத்து அமைத்த
வெந் தீவினைப் பயன் ஒத்தன, அரக்கன் சொரி விசிகம். 52
இராம இராவணப் பெரும் போர்
நூறாயிரம் வடி வெங் கணை நொடி ஒன்றினின் விடுவான்,
ஆறா விறல் மறவோன்; அவை தனி நாயகன் அறுப்பான்;
கூறு ஆயின, கனல் சிந்துவ, குடிக்கப் புனல் குறுகி,
சேறு ஆயின, பொடி ஆயின, திடர் ஆயின, கடலும். 53
வில்லால் சரம் துரக்கின்றவற்கு, உடனே, மிடல் வெம் போர்
வல்லான், எழு, மழு, தோமரம், மணித் தண்டு, இருப்பு உலக்கை,
தொல் ஆர் மிடல் வளை, சக்கரம், சூலம், இவை தொடக்கத்து
எல்லாம் நெடுங் கரத்தால் எடுத்து எறிந்தான், செரு அறிந்தான். 54
வேல் ஆயிரம், மழு ஆயிரம், எழு ஆயிரம், விசிகக்
கோல் ஆயிரம், பிற ஆயிரம், ஒரு கோல் படக் குறைவ-
கால் ஆயின, கனல் ஆயின, உரும் ஆயின, கதிய
சூல் ஆயின, மழை அன்னவன் தொடை பல் வகை தொடுக்க. 55
ஒத்துச் செரு விளைக்கின்றது ஒர் அளவின் தலை,-உடனே
பத்துச் சிலை எடுத்தான், கணை தொடுத்தான், பல முகில்போல்
தொத்துப் படு நெடுந் தாரைகள் சொரிந்தாலெனத் துரந்தான்-
குத்துக் கொடு நெடுங் கோல் படு களிறு ஆம் எனக் கொதித்தான். 56
ஈசன் விடு சர மாரியும், எரி சிந்துறு தறுகண்
நீசன் விடு சர மாரியும், இடை எங்கணும் நெருங்க
தேசம் முதல் ஐம் பூதமும் செருக் கண்டனர் நெருக்க,
கூசிம் மயிர் பொடிப்பு அற்றன் அனல் ஆயின கொடிய. 57
மந்தரக் கிரி என, மருந்து மாருதி
தந்த அப் பொருப்பு என, புரங்கள் தாம் என,
கந்தருப்பந் நகர் விசும்பில் கண்டென
அந்தரத்து எழுந்தது, அவ் அரக்கன் தேர் அரோ. 58
எழுந்து உயர் தேர்மிசை இலங்கை காவலன்
பொழிந்தன சர மழை உருவிப் போதலால்,
ஒழிந்ததும் ஒழிகிலது என்ன, ஒல்லெனக்
கழிந்தது, கவிக் குலம், இராமன் காணவே. 59
தேரை விசும்பில் எழவிடுமாறு இராமன் கூற, மாதலி அவ்வாறே செய்தல்
'முழவு இடு தோளொடு முடியும் பல் தலை
விழ விடுவேன், இனி; விசும்பு சேமமோ?
மழ விடை அனைய நம் படைஞர் மாண்டனர்;
எழ விடு, தேரை' என்று இராமன் கூறினான். 60
'அந்து செய்குவென்' என அறிந்த மாதலி
உந்தினன், தேர் எனும் ஊழிக் காற்றினை;
இந்து மண்டிலத்தின்மேல் இரவி மண்டிலம்
வந்தென, வந்தது, அம் மானத் தேர் அரோ. 61
இருவரது தேரும் சாரிகை திரிதல்
இரிந்தன மழைக் குலம், இழுகித் திக்கு எலாம்;
உரிந்தன உடுக் குலம், உதிர்ந்து சிந்தின்
நெரிந்தன நெடு வரைக் குடுமி; நேர் முறை
திரிந்தன சாரிகை, தேரும் தேருமே. 62
வலம் வரும்; இடம் வரும்; மறுகி வானொடு
நிலம் வரும்; இடம் வலம் நிமிரும்; வேலையும்,
அலம்வரு குல வரை அனைத்தும், அண்டமும்,
சலம் வரும், குயமகன் திகிரித் தன்மைபோல். 63
'எழும் புகழ் இராமன் தேர்; அரக்கன் தேர் இது' என்று
உழுந்து உருள் பொழுதின் எவ் உலகும் சேர்வன,
தழும்பிய தேவரும் தெரிவு தந்திலர்,
பிழம்பு அனல் திரிவன என்னும் பெற்றியார். 64
உக்கிலா உடுக்களும், உருள்கள் தாக்கலின்,
நெக்கிலா மலைகளும், நெருப்புச் சிந்தலின்,
வக்கிலாத் திசைகளும், உதிரம் வாய் வழி
கக்கிலா உயிர்களும், இல்லை, காண்பன. 65
தேர்களின் வேகம்
'இந்திரன் உலகத்தார்' என்பர்; 'ஏன்றவர்,
சந்திரன் உலகத்தார்' என்பர்; 'தாமரை
அந்தணன் உலகத்தார்' என்பர்; 'அல்லரால்,
மந்தர மலையினார்' என்பர்-வானவர். 66
'பாற்கடல் நடுவணார்' என்பர்; 'பல் வகை
மால் கடல் ஏழுக்கும் வரம்பினார்' என்பர்;
'மேல் கடலார்' என்பர்; 'கிழக்கு உளார்' என்பர்;
'ஆர்ப்பு இடை இது' என்பர்-அறிந்த வானவர். 67
'மீண்டனவோ?' என்பர்; 'விசும்பு விண்டு உகக்
கீண்டனவோ?' என்பர்; 'கீழவோ?' என்பர்;
'பூண்டன புரவியோ? புதிய காற்று!' என்பர்;-
'மாண்டன உலகம்' என்று, உரைக்கும் வாயினார். 68
ஏழுடைக் கடலினும், தீவு ஓர் ஏழினும்,
ஏழுடை மலையினும், உலகு ஓர் ஏழினும்,
சூழுடை அண்டத்தின் சுவர்கள் எல்லையா,
ஊழியில் காற்று எனத் திரிந்த, ஓவில. 69
அரக்கன் வீசிய படைக்கலங்களை இராமன் தடுத்தல்
உடைக் கடல் ஏழினும், உலகம் ஏழினும்,
இடைப் படு தீவினும், மலை ஒர் ஏழினும்,
அடைக்கலப் பொருள் என அரக்கன் வீசிய
படைக்கலம், மழை படு துளியின் பான்மைய. 70
ஒறுத்து உலகு அனைத்தையும் உழலும், ஓட்டிடை
இறுத்தில் இராவணன் எறிந்த எய்தன
அறுத்ததும் தடுத்ததும் அன்றி, ஆரியன்
செறுத்து ஒரு தொழிலிடைச் செய்தது இல்லையால். 71
தேர்கள் இலங்கையை அணுகுதல்
விலங்களும் வேலையும், மேலும் கீழரும்,
அலங்கு ஒளி திரிதரும் உலகு அனைத்தையும்,
கலங்குறத் திரிந்தது ஓர் ஊழிக் காற்றென,
இலங்கையை எய்திய, இமைப்பின் வந்த தேர். 72
தேர்ப் பரிகளின் திறமை
உய்த்து உலகு அனைத்தினும் உழன்ற சாரிகை
மொய்த்தது, கடலிடை மணலின் மும்மையால்;
வித்தகர் கடவிய விசயத் தேர் பரி,
எய்த்தில வியர்த்தில, இரண்டு பாலவும். 73
இராமன் தேர்க்கொடியை இராவணன் அறுத்தல்
இந்திரன் தேரின்மேல் உயர்ந்த, ஏந்து எழில்
உந்த அரும் பெரு வலி உருமின் ஏற்றினை,
சந்திரன் அனையது ஓர் சரத்தினால், தரைச்
சிந்தினன், இராவணன், எரியும் செங் கணான். 74
சாய்ந்த வல் உருமு போய், அரவத் தாழ் கடல்
பாய்ந்த வெங் கனல் என முழங்கிப் பாய்தலும்,
காய்ந்த பேர் இரும்பின் வன் கட்டி காலுறத்
தோய்ந்த நீர் ஆம் எனச் சுருங்கிற்று, ஆழியே. 75
இராமனது தேர்க் குதிரைகள் மீதும், மாதலிமீதும் இராவணன் அம்பு எய்தல்
எழுத்து எனச் சிதைவு இலா இராமன் தேர்ப் பரிக்
குழுக்களைக் கூர்ங் கணைக் குப்பை ஆக்கி, நேர்
வழுத்த அரு மாதலி வயிர மார்பிடை
அழுத்தினன் கொடுஞ் சரம், ஆறொடு ஆறு அரோ. 76
மாதலி மார்பில் அம்பு தைத்தமை கண்டு, இராமன் வருந்துதல்
நீல் நிற நிருதர்கோன் எய்த, நீதியின்
சால்புடை மாதலி மார்பில் தைத்தன
கோலினும் இலக்குவன் கோல மார்பின் வீழ்
வேலினும் வெம்மையே விளைத்த, வீரற்கு. 77
இராவணன் அம்புகளால் இராமன் மறைபடுதல்
மண்டில வரி சிலை வானவில்லொடும்
துண்ட வெண் பிறை எனத் தோன்ற, தூவிய
உண்டை வெங் கடுங் கணை ஒருங்கு மூடலால்,
கண்டிலர் இராமனை, இமைப்பு இல் கண்ணினார். 78
'தோற்றனனே இனி' என்னும் தோற்றத்தால்
ஆற்றல் சால் அமரரும் அச்சம் எய்தினார்;
வேற்றவர் ஆர்த்தனர்; மேலும் கீழுமாய்க்
காற்று இயக்கு அற்றது; கலங்கிற்று அண்டமே. 79
அங்கியும் தன் ஒளி அடங்கிற்று; ஆர்கலி
பொங்கில திமிர்த்தன் விசும்பில் போக்கு இல,
வெங் கதிர் தண் கதிர், விலங்கி மீண்டன்
மங்குவின் நெடு புயல் மழை வறந்ததால். 80
திசை நிலைக் கட கரி செருக்குச் சிந்தின்
அசைவு இல வேலைகள், ஆர்க்க அஞ்சின்
விசை கொடு விசாகத்தை நெருக்கி ஏறினன்
குசன் என, மேருவும் குலுக்கம் உற்றதே. 81
வானரத் தலைவனும், இளைய மைந்தனும்,
ஏனை, 'அத் தலைவனைக் காண்கிலேம்' எனக்
கானகக் கரி எனக் கலங்கினார்; கடல்
மீன் எனக் கலங்கினார், வீரர் வேறு உளார். 82
இராவணன் தேர்க் கொடியை இராமன் வீழ்த்துதல்
எய்தன சரம் எலாம் இமைப்பின் முந்துறக்
கொய்தனன் அகற்றி, வெங் கோலின் கோவையால்
நொய்து என அரக்கனை நெருங்க நொந்தன
செய்தனன், இராகவன்; அமரர் தேறினார். 83
தூணுடை நிரை புரை கரம் அவைதொறும் அக்
கோணுடை மலை நிகர் சிலை இடை குறைய,
சேணுடை நிகர் கணை சிதறினன்-உணர்வொடு
ஊணுடை உயிர்தொறும் உறைவுறும் ஒருவன். 84
கயில் விரிவு அற வரு கவசமும் உருவிப்
பயில் விரி குருதிகள் பருகிட, வெயிலொடு
அயில் விரி சுடு கணை கடவினன்-அறிவின்
துயில்வுழி உணர்தரு சுடர் ஒளி ஒருவன். 85
திசை உறு துகிலது, செறி மழை சிதறும்
விசை உறு மிகிழது, விரிதரு சிரனொடு
இசை உறு கருவியின் இனிது உறு கொடியைத்
தசை உறு கணைகொடு தரை உற விடலும். 86
படை உக, இமையவர் பருவரல் கெட, வந்து
இடை உறு திசை திசை இழுகுற, இறைவன்
அடையுறு கொடிமிசை அணுகினன்-அளவு இல்
கடை உக முடிவு எழு கடல் புரை கலுழன். 87
பண்ணவன் உயர் கொடி என ஒரு பரவைக்
கண் அகன் உலகினை வலம் வரு கலுழன்
நண்ணலும், இமையவர், 'நமது உறு கருமம்
எண்ணலம், முனிவினின் இவறினன்' எனவே. 88
இராவணன் தாமதம் என்னும் படையை விடுதலும், அப் படையின் செயல்களும்
ஆயது ஒர் அமைதியின், அறிவினின் அமைவான்
நாயகன் ஒருவனை நலிகிலது உணர்வான்,
ஏயினன், இருள் உறு தாமதம் எனும் அத்
தீவினை தரு படை-தெறு தொழில் மறவோன். 89
தீ முகம் உடையன சில் முகம் உதிரம்
தோய் முகம் உடையன் சுரர் முகம் உடைய்
பேய் முகம் உடையன் பிலமுகம் நுழையும்
வாய்முகம் வரி அரவு அனையன வருவ. 90
ஒரு திசை முதல் கடை ஒரு திசை அளவும்,
இரு திசை எயிறு உற வருவன் பெரிய்
கருதிய கருதிய புரிவன் கனலும்
பருதியை மதியொடு பருகுவ-பகழி. 91
இருள் ஒரு திசை, ஒரு திசை வெயில் விரியும்;
சுருள் ஒரு திசை, ஒரு திசை மழை தொடரும்;
உருள் ஒரு திசை, ஒரு திசை உரும் முரலும்;
மருள் ஒரு திசை, ஒரு திசை சிலை வருடம். 92
இராமன் சிவனது படையை விட்டு, தாமதப் படையைத் தொலைத்தல்
இனையன நிகழ்வுற, எழு வகை உலகும்
கனை இருள் கதுவிட, அமரர்கள் கதற,
வினை உறு தொழிலிடை விரவலும், விமலன்
நினைவுறு தகையினன் நெறியுறு முறையின், 93
கண்ணுதல் ஒருவனது அடு படை கருதிப்
பண்ணவன் விடுதலும், அது நனி பருக்
எண்ணுறு கனவினொடு உணர்வு என, இமையில்,
துண்ணெனும் நிலையினின் எறி படை தொலைய 94
இராவணன் இராமன் மேல், ஆசுரப் படையை விடுதல்
விருந்த தன் படை மெய் கண்ட பொய் என வீய்ந்த்
எரிந்த கண்ணினன், எயிற்றிடை மடித்த வாயினன், தன்
தெரிந்த வெங் கணை, கங்க வெஞ் சிறை அன்ன, திறத்தான்,
அரிந்தமன் திரு மேனிமேல் அழுத்தி, நின்று ஆர்த்தான். 95
ஆர்த்து, வெஞ் சினத்து ஆசுரப் படைக்கலம், அமரர்
வார்த்தை உண்டது, இன் உயிர்களால் மறலிதன் வயிற்றைத்
தூர்த்தது, இந்திரன் துணுக்குறு தொழிலது, தொடுத்து,
தீர்த்தன்மேல் வரத் துரந்தனன், உலகு எலாம் தெரிய. 96
ஆசுரப் பெரும் படைக்கலம், அமரரை அமரின்
ஏசுவிப்பது, எவ் உலகமும் எவரையும் வென்று
வீசு வெற்பு இறத் துரந்த வெங் கணையது, - விசையின்
பூசுரர்க்கு ஒரு கடவுள் மேல் சென்றது போலாம். 97
ஆசுரப் படையை அக்கினிப் படையால் இராமன் அறுத்தல்
'நுங்குகின்றது, இவ் உலகை ஓர் நொடி வரை' என்ன,
எங்கும் நின்று நின்று அலமரும் அமரர் கண்டு இரைப்ப,
மங்குல் வல் உருமேற்றின்மேல் எரி மடுத்தென்ன
அங்கி தன் நெடும் படை தொடுத்து, இராகவன் அறுத்தான். 98
தொடர்ந்து இராவணன் பல படை துரக்க, இராமன் அவற்றைப் பிறைமுக அம்புகளால்
பிளத்தல்
கூற்றுக் கோடினும் கோடல, கடல் எலாம் குடிப்ப,
நீற்றுக் குப்பையின் மேருவை நூறுவ, நெடிய
காற்றுப் பின் செலச் செல்வன, உலகு எலாம் கடப்ப,
நூற்றுக் கோடி அம்பு எய்தனன், இராவணன், நொடியில். 99
'என்ன கைக் கடுப்போ!' என்பர் சிலர்; சிலர், 'இவையும்
அன்ன மாயமேர் அம்பு அல' என்பர்; 'அவ் அம்புக்கு
இன்னம் உண்டுகொல் இடம்!' என்பர் சிலர்; சிலர், 'இகல் போர்
முன்னம் இத்தனை முயன்றிலனாம்' என்பர்-முனிவர். 100
மறைமுதல் தனி நாயகன், வானினை மறைத்த
சிறையுடைக் கொடுஞ் சரம் எலாம் இமைப்பு ஒன்றில் திரிய,
பொறை சிகைப் பெருந் தலைநின்றும் புங்கத்தின் அளவும்
பிறை முகக் கடு வெஞ் சரம் அவை கொண்டு பிளந்தான். 101
இராவணன் விட்ட மயன் படையைக் கந்தருவக் கணையால் இராமன் போக்குதல்
அயன் படைத்த பேர் அண்டத்தின் அருந் தவம் ஆற்றி,
பயன் படைத்தவர் யாரினும் படைத்தவன், 'பல் போர்
வியன் படைக்கலம் தொடுப்பென் நான், இனி' என விரைந்தான்;
மயன் படைக்கலம் துரந்தனன், தயரதன் மகன்மேல். 102
'விட்டனன் விடு படைக்கலம் வேரொடும் உலகைச்
சுட்டனன்' எனத் துணுக்கமுற்று, அமரரும் சுருண்டார்;
'கெட்டனம்' என வானரத் தலைவரும் கிழிந்தார்;
சிட்டர் தம் தனித் தேவனும், அதன் நிலை தெரிந்தான். 103
'பாந்தள் பல் தலைப் பரப்பு அகன் புவியிடைப் பயிலும்
மாந்தர்க்கு இல்லையால் வாழ்வு' என வருகின்ற அதனைக்
காந்தர்ப்பம் எனும் கடுங் கொடுங் கணையினால் கடந்தான்-
ஏந்தல் பல் மணி எறுழ் வலித் திரள் புயத்து இராமன். 104
இராவணன் தண்டாயுதம் எறிய, அம்பினால் இராமன் அதைப் பொடியாக்கல்
'பண்டு நான்முகன் படைத்தது, கனகன் இப் பாரைத்
தொண்டு கொண்டது, மது எனும் அவுணன் முன் தொட்டது,
உண்டு இங்கு என் வயின்; அது துரந்து உயிர் உண்பென்' என்னா,
தண்டு கொண்டு எறிந்தான், ஐந்தொடு ஐந்துடைத் தலையான். 105
தாருகன் பண்டு தேவரைத் தகர்த்தது, தனி மா
மேகு மந்தரம் புரைவது, வெயில் அன்ன ஒளியது,
ஓர் உகம் தனின் உலகம் நின்று உருட்டினும் உருளாச்
சீர் உகந்தது, நெரித்தது, தானவர் சிரத்தை. 106
பசும் புனல் பெரும் பரவை பண்டு உண்டது, பனிப்புற்று
அசும்பு பாய்கின்றது, அருக்கனின் ஒளிர்கின்றது, அண்டம்
தசும்புபோல் உடைந்து ஒழியும் என்று அனைவரும் தளர,
விசும்பு பாழ்பட, வந்தது மந்தரம் வெருவ. 107
கண்டு, 'தாமரைக் கடவுள் மாப் படை' எனக் கழறா,
அண்டர் நாயகன் ஆயிரத்து அளவினும் அடங்கா,
புண்டரீகத்தின் மொட்டு அன்ன புகர் முகக் கணையால்
உண்டை நூறுடை நூறுபட்டுளது என உதிர்த்தான். 108
இராவணன் மாயையின் படையை விடல்
'தேய நின்றவன், சிலை வலம் காட்டினான்; தீராப்
பேயை என் பல துரப்பது? இங்கு இவன் பிழையாமல்
ஆய தன் பெரும் படையொடும் அடு களத்து அவிய
மாயையின் படை தொடுப்பென்' என்று, இராவணன் மதித்தான். 109
பூசனைத் தொழில் புரிந்து, தான் முறைமையின் போற்றும்
ஈசனைத் தொழுது, இருடியும் சந்தமும் எண்ணி,
ஆசை பத்தினும் அந்தரப் பரப்பினும் அடங்கா
வீசி மேற் செல, வில் விசைத் தொடை கொண்டு விட்டான். 110
மாயம் பொத்திய வயப் படை விடுதலும், வரம்பு இல்
காயம் எத்தனை உள, நெடுங் காயங்கள் கதுல,
ஆயம் உற்று எழுந்தார் என ஆர்த்தனர்-அமரில்
தூய கொற்றவர் சுடு சரத்தால் முன்பு துணிந்தார். 111
இந்திரற்கு ஒரு பகைஞனும், அவற்கு இளையோரும்,
தந்திரப் பெருந் தலைவரும், தலைத் தலையோரும்,
மந்திரச் சுற்றத்தவர்களும், வரம்பு இலர் பிறரும்,
அந்தரத்தினை மறைத்தனர், மழை உக ஆர்ப்பார். 112
குடப் பெருஞ் செவிக் குன்றமும், மற்றுள குழுவும்,
ப்டைத்த மூல மாத் தானையும், முதலிய பட்ட,
விடைத்து எழுந்தன-யானை, தேர், பரி, முதல் வௌ;வேறு
அடைத்த ஊர்திகள் அனைத்தும் வந்து, அல் வழி அடைய. 113
ஆயிரம் பெரு வெள்ளம் என்று அறிஞரே அறைந்த
காய் சினப் பெருங் கடற்படை களப் பட்ட எல்லாம்,
ஈசனின் பெற்ற வரத்தினால் எய்திய என்ன,
தேசம், முற்றவும் செறிந்தன, திசைகளும் திசைக்க. 114
சென்ற எங்கணும், தேவரும் முனிவரும் சிந்த-
'வென்றதும் எங்களைப்போலும்; யாம் விளிவதும் உளதோ?
இன்று காட்டுதும்; எய்துமின், எய்துமின்' என்னா,
கொன்ற கொற்றவர்தம் பெயர் குறித்து அறைகூவி. 115
மாயப் படையால் பூதங்களும் பேய்களும் தோன்றுதல்
பார் இடந்து கொண்டு எழுந்தன பாம்பு எனும் படிய,
பாரிடம் துனைந்து எழுந்தன மலை அன்ன படிய,
'பேர் இடம் கதுவ அரிது, இனி விசும்பு' என, பிறந்த,
பேர் இடங்கரின் கொடுங் குழை அணிந்தன பேய்கள். 116
மாயத்தினால் தோன்றியவர் பல வகைப் படைகளை ஏந்தி நிற்றல்
தாமசத்தினில் பிறந்தவர், அறம் தெறும் தகையர்,
தாம் அசத்தினில் செல்கிலாச் சதுமுகத்தவற்கும்
தாமசத்தினைத் தொடர்ந்தவர், பரிந்தன தாழ்ந்தார்-
தாம சத்திரம் சித்திரம் பொருந்திய, தயங்க. 117
தாம் அவிந்து மீது எழுந்தவர்க்கு இரட்டியின் தகையர்,
தாம இந்துவின் பிளவு எனத் தயங்கு வாள் எயிற்றர்,
தாம் அவிஞ்சையர், கடல் பெருந் தகையினர், தரளத்
தாம விஞ்சையர் துவன்றினர், திசைதொறும் தருக்கி. 118
தாம் மடங்கலும், முடங்கு உளை யாளியும் தகுவார்,
தாம் அடங்கலும் நெடுந் திசை உலகொடும் தகைவார்,
தா மடங்கலும் கடலும் ஒத்து ஆர்தரும் தகையார்,
தாம் மடங்கலும் கொடுஞ் சுடர்ப் படைகளும் தரித்தார். 119
தன்னைக் காண வந்த தேவர் முதலியோரை இராமன் காணச் செல்லுதல்
அவ் வகை அருளி, வள்ளல் அனைத்து உலகங்களோடும்
எவ் வகை உள்ள தேவர் யாவரும் இரைத்துப் பொங்கிக்
கவ்வையின் தீர்ந்தார் வந்து வீழ்கின்றார் தம்மைக் காண,
செவ்வையின் அவர் முன் சென்றான்; வீடணன் இதனைச் செய்தான். 1
வீடணன் பாசத்தால் தமையன்மேல் விழுந்து அரற்றுதல்
'போழ்ந்தென அரக்கன் செய்த புன் தொழில் பொறையிற்று ஆமால்;
வாழ்ந்த நீ இவனுக்கு ஏற்ற வழிக் கடன் வகுத்தி' என்ன,
தாழ்ந்தது ஓர் கருணைதன்னால், தலைமகன் அருள, தள்ளி
வீழ்ந்தனன் அவன்மேல், வீழ்ந்த மலையின்மேல் மலை வீழ்ந்தென்ன. 2
ஏவரும் உலகத்து எல்லா உயிர்களும் இரங்கி ஏங்க,
தேவரும் முனிவர்தாமும் சிந்தையின் இரக்கம் சேர,
தா அரும் பொறையினான் தன் அறிவினால் தகையத் தக்க
ஆவலும் துயரும் தீர, அரற்றினான் பகு வாய் ஆர, 3
வீடணன் புலம்பல்
'உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு; சனகி எனும் பெரு நஞ்சு உன்னைக்
கண்ணாலே நோக்கவே, போக்கியதே உயிர்; நீயும் களப் பட்டாயே!
எண்ணாதேன் எண்ணிய சொல் இன்று இனித் தான் எண்ணுதியோ? -எண் இல் ஆற்றல்
அண்ணாவோ! அண்ணாவோ! அசுரர்கள்தம் பிரளயமே! அமரர் கூற்றே! 4
'"ஓராதே ஒருவன் தன் உயிர் ஆசைக் குலமகள்மேல் உற்ற காதல்
தீராத வசை" என்றேன்; எனை முனிந்த முனிவு ஆறித் தேறினாயோ?
போர் ஆசைப்பட்டு எழுந்தகுலம் முற்றும் பொன்றவும்தான் பொங்கி நின்ற
பேர் ஆசை பெயர்ந்ததோ?-பெயர்ந்து ஆசைக் கரி இரியப் புருவம் பேர்த்தாய்! 5
'"அன்று எரியில் விழு வேதவதி இவள்காண்; உலகுக்கு ஓர் அன்னை" என்று,
குன்று அனைய நெடுந் தோளாய்! கூறினேன்; அது மனத்துள் கொள்ளாதே போய்,
உன் தனது குலம் அடங்க, உருத்து அமரில் படக் கண்டும், உறவு ஆகாதே
பொன்றினையே! இராகவனார் புய வலியை இன்று அறிந்து, போயினாயே! 6
'மன்றல் மா மலரோனும் வடி மழுவாள் புடையோனும், வரங்கள் ஈந்த
ஒன்று அலாதன உடைய முடியோடும் பொடி ஆகி உதிர்ந்து போன்
அன்றுதான் உணர்ந்திலையே ஆனாலும் அவர் நாட்டை அணுகாநின்ற
இன்றுதான் உணர்ந்தனையே, இராமனார் யாவர்க்கும் இறைவன் ஆதல்? 7
'வீர நாடு உற்றாயோ? விரிஞ்சனாம் யாவர்க்கும் மேலாம் முன்பன்
பேரன் நாடு உற்றாயோ? பிறை சூடும் பிஞ்ஞகன் தன் புரம் பெற்றாயோ?
ஆர், அணா! உன் உயிரை, அஞ்சாதே, கொண்டு அகன்றார்? அது எலாம் நிற்க,
மாரனார் வலி ஆட்டம் தவிர்ந்தாரோ? குளிர்ந்தானோ, மதியம் என்பான்? 8
'"கொல்லாத மைத்துனனைக் கொன்றாய்" என்று, அது குறித்துக் கொடுமை சூழ்ந்து,
பல்லாலே இதழ் அதுக்கும் கொடும் பாவி நெடும் பாரப் பழி தீர்ந்தாளோ?
நல்லாரும் தீயாரும் நரகத்தார் சொர்க்கத்தார், நம்பி! நம்மோடு
எல்லாரும் பகைஞNர் யார் முகத்தே விழிக்கின்றாய்? எளியை ஆனாய்! 9
'போர்மகளை, கலைமகளை, புகழ்மகளை, தழுவிய கை பொறாமை கூர,
சீர்மகளை, திருமகளை, தேவர்க்கும் தம் மோயை, தெய்வக் கறிப்ன்
பேர்மகளை, தழுவுவான் உயிர் கொடுத்து, பழி கொண்ட பித்தா! பின்னைப்
பார்மகளைத் தழுவினையோ, திசை யானைப் பணை இறுத்த பணைத்த மார்பால்?' 10
சாம்பன் தேற்ற, வீடணன் தேறுதல்
என்று ஏங்கி, அரற்றுவான் தனை எடுத்து, சாம்பவனும் எண்கின் வேந்தன்,
'குன்று ஓங்கு நெடுந் தோளாய்! விதி நிலையை மதியாத கொள்கைத்து ஆகிச்
சென்று ஓங்கும் உணர்வினர்போல், தேறாது வருந்துதியோ?' என்ன, தேறி
நின்றான், அப்புறத்து; அரக்கன் நிலை கேட்டள், மயன் பயந்த நெடுங் கண் பாவை.
11
இராவணன் இறந்த செய்தி கேட்டு, மண்டோ தரி அவன் வீழ்ந்து கிடக்கும் இடம்
அடைதல்
அனந்தம் நூறாயிரம் அரக்கர் மங்கைமார்,
புனைந்த பூங் குழல் விரித்து அரற்றும் பூசலார்,
இனம் தொடர்ந்து உடன் வர, ஏகினாள் என்ப-
நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள். 12
இரக்கமும் தருமமும் துணைக்கொண்டு, இன் உயிர்
புரக்கும் நன் குலத்து வந்து ஒருவன் பூண்டது ஓர்
பரக்கழி ஆம் எனப் பரந்து, நீண்டதால்-
அரக்கியர் வாய் திறந்து அரற்றும் ஓதையே. 13
நூபுரம் புலம்பிட, சிலம்பு நொந்து அழ,
கோபுரம்தொறும் புறம் குறுகினார் சிலர்;
'ஆ! புரந்தரன் பகை அற்றது ஆம்' எனா,
மா புரம் தவிர்ந்து, விண் வழிச் சென்றார் சிலர். 14
அழைப்பு ஒலி முழக்கு எழ, அழகு மின்னிட,
குழைப் பொலி நல் அணிக் குலங்கள் வில்லிட,
உழைப் பொலி உண் கண் நீர்த் தாரை மீது உக,
மழைப் பெருங் குலம் என, வான் வந்தார் சிலர். 15
அரக்கியர் இராவணன்மேல் விழுந்து அழுதல்
தலைமிசைத் தாங்கிய கரத்தர், தாரை நீர்
முலைமிசைத் தூங்கிய முகத்தர், மொய்த்து வந்து,
அலைமிசைக் கடலின் வீழ் அன்னம்போல், அவன்
மலைமிசைத் தோள்கள்மேல் வீழ்ந்து, மாழ்கினார். 16
தழுவினர் தழுவினர் தலையும் தாள்களும்,
எழு உயர் புயங்களும், மார்பும், எங்கணும்,
குழுவினர், முறை முறை கூறு கூறு கொண்டு
அழுதிலர், உயிர்த்திலர், ஆவி நீத்திலார். 17
வருத்தம் ஏது எனின், அது புலவி; வைகலும்,
பொருத்தமே வாழ்வு எனப் பொழுது போக்கினார்,
ஒருத்தர்மேல் ஒருத்தர் வீழ்ந்து, உயிரின் புல்லினார்-
திருத்தமே அனையவன் சிகரத் தோள்கள்மேல். 18
இயக்கியர், அரக்கியர், உரகர் ஏழையர்,
மயக்கம் இல் சித்தியர், விஞ்சை மங்கையர்,-
முயக்கு இயல் முறை கெட முயங்கினார்கள்-தம்
துயக்கு இலா அன்பு மூண்டு, எவரும் சோரவே. 19
'அறம் தொலைவுற மனத்து அடைத்த சீதையை
மறந்திலையோ, இனும்? எமக்கு உன் வாய்மலர்
திறந்திலை; விழித்திலை; அருளும் செய்கிலை;
இறந்தனையோ?' என இரங்கி, ஏங்கினார். 20
மண்டோதரி இராவணன் மார்பில் விழுந்து புலம்புதல்
தரங்க நீர் வேலையில் தடித்து வீழ்ந்தென
உரம் கிளர் மதுகையான் உரத்தின் வீழ்ந்தனள்,
மரங்களும் மலைகளும் உருக, வாய் திறந்து,
இரங்கினள்-மயன் மகள்,-இனைய பன்னினாள்: 21
'அன்னேயோ! அன்னேயோ! ஆ, கொடியேற்கு அடுத்தவாறு! அரக்கர் வேந்தன்
பின்னேயோ, இறப்பது? முன் பிடித்திருந்த கருத்து அதுவும் பிடித்திலேனோ?
முன்னேயோ விழுந்ததுவும், முடித் தலையோ? படித் தலைய முகங்கள்தானோ?
என்னேயோ, என்னேயோ, இராவணனார் முடிந்த பரிசு! இதுவோ பாவம்! 22
'வெள் எருக்கஞ் சடை முடியான் வெற்பு எடுத்த திரு மேனி, மேலும் கீழும்,
எள் இருக்கும் இடம் இன்றி, உயிர் இருக்கும் இடம் நாடி, இழைத்தவாறோ?
"கள் இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச் சிறையில் கரந்த காதல்
உள் இருக்கும்" எனக் கருதி, உடல் புகுந்து, தடவினவோ ஒருவன் வாளி? 23
'ஆரம் போர் திரு மார்பை அகல் முழைகள் எனத் திறந்து, இவ் உலகுக்கு அப்பால்
தூரம் போயின, ஒருவன் சிலை துரந்த சரங்களே; போரில் தோற்று,
வீரம் போய், உரம் குறைந்து, வரம் குறைந்து, வீழ்ந்தானே! வேறே! கெட்டேன்!
ஓர் அம்போ, உயிர் பருகிற்று, இராவணனை? மானுடவன் ஊற்றம் ஈதோ! 24
'காந்தையருக்கு அணி அனைய சானகியார் பேர் அழகும், அவர்தம் கற்பும்,
ஏந்து புயத்து இராவணனார் காதலும், அச் சூர்ப்பணகை இழந்த மூக்கும்,
வேந்தர் பிரான், தயரதனார், பணிதன்னால் வெங் கானில் விரதம் பூண்டு
போந்ததுவும், கடைமுறையே புரந்தரனார் பெருந் தவமாய்ப் போயிற்று, அம்மா! 25
'"தேவர்க்கும், திசைக் கரிக்கும், சிவனார்க்கும், அயனார்க்கும், செங் கண்
மாற்கும்,
ஏவர்க்கும், வலியானுக்கு என்று உண்டாம் இறுதி?" என ஏமாப்புற்றேன்;
ஆவற்கண் நீ உழந்த அருந் தவத்தின் பெருங் கடற்கும், வரம் என்று ஆன்ற
காவற்கும், வலியான் ஓர் மானுடவன் உளன் என்னக் கருதினேனோ? 26
'அரை கடை இட்டு அமைவுற்ற கோடி மூன்று ஆயு, பேர் அறிஞர்க்கேயும்
உரை கடையிட்டு அளப்ப அரிய பேர் ஆற்றல், தோள் ஆற்றற்கு உலப்போ இல்லை;
திரை கடையிட்டு அளப்ப அரிய வரம் என்னும் பாற்கடலைச் சீதை என்னும்
பிரை கடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ, தவப் பயனின் பெருமை பார்ப்பேன்.27
'ஆர் அனார், உலகு இயற்கை அறிதக்கார்? அவை ஏழும் ஏழும் அஞ்சும்
வீரனார் உடல் துறந்து, விண் புக்கார்; கண் புக்க வேழ வில்லால்,
நார நாள், மலர்க் கணையால், நாள் எல்லாம் தோள் எல்லாம், நைய எய்யும்
மாரனார் தனி இலக்கை மனித்தனார் அழித்தனரே, வரத்தினாலே! 28
இராவணன் உடலை மண்டோ தரி தழுவி, உயிர்விடல்
என்று அழைத்தனள், ஏங்கி எழுந்து, அவன்
பொன் தழைத்த பொரு அரு மார்பினைத்
தன் தழைக் கைகளால் தழுவி, தனி
நின்று அழைத்து உயிர்த்தாள், உயிர் நீங்கினாள். 29
வான மங்கையர், விஞ்சையர், மற்றும் அத்
தான மங்கையரும், தவப் பாலவர்,
ஆன மங்கையரும், அருங் கற்புடை
மான மங்கையர் தாமும், வழுத்தினார். 30
இராவணனையும் மண்டோ தரியையும் முறைப்படி ஈமத்தில் ஏற்றி, உரிய கடன்களை
வீடணன் செய்தல்
பின்னர், வீடணன், பேர் எழில் தம்முனை,
வன்னி கூவி, வரன்முறையால், மறை
சொன்ன ஈம விதி முறையால் தொகுத்து,
இன்னல் நெஞ்சினொடு இந்தனத்து எற்றினான். 31
கடன்கள் செய்து முடித்து, கணவனோடு
உடைந்து போன மயன் மகளோடு உடன்
அடங்க வெங் கனலுக்கு அவி ஆக்கினான் -
குடம் கொள் நீரினும் கண் சோர் குமிழியான். 32
மற்றையோர்க்கும் உரிய கடன்களை வீடணன் இயற்றி, இராமனை வந்தடைதல்
மற்றையோர்க்கும் வரன்முறையால் வகுத்து,
உற்ற தீக் கொடுத்து, உண் குறு நீர் உகுத்து,
'எற்றையோர்க்கும் இவன் அலது இல்' எனா,
வெற்றி வீரன் குரை கழல் மேவினான். 33
வந்து தாழ்ந்த துணைவனை, வள்ளலும்,
'சிந்தை வெந் துயர் தீருதி, தௌ;ளியோய்!
முந்தை எய்தும் முறைமை இது ஆம்' எனா,
அந்தம் இல் இடர்ப் பாரம் அகற்றினான். 34
மிகைப் பாடல்கள்
'வான் கயிலை ஈசன், அயன், வானவர் கோன், முதல் அமரர் வாழ்த்தி ஏத்த,
தான் புவனம் ஒரு மூன்றும் தனி புரந்து, வைகிய நீ, தாய் சொல் தாங்கி,
கான் புகுந்த மறை முதல்வன் விடும் கடவுள் வாளி ஒன்று கடிதின் வந்து, உன்
ஊன் புகும் கல் உரம் உருவி ஓட, உளம் நாணினையோ? உயிரும் உண்டோ ? 5-1
'அரு வினை வந்து எய்தியபோது, ஆர் அரசே! உன் தன்
திருவினை நீ பெறுவதற்குத் திருநாமங்களைப் பரவ,
ஒருபது வாய் உள் வணங்க, ஒண் முடி பத்து உள் இறைஞ்ச,
இருபது கை உள் இலங்கை என்னாக வீந்தாயே! 7-1
'அரு வினை வந்தெய்திய போழ்து ஆர் தடுப்பார்? ஆர் அதனை அறிவார்? வீட்டின்
திருவினை நீ பெறுவதற்கு இங்கு இவன் திரு நாமங்கள் தமைச் சிந்தித்து ஏத்த,
ஒருபது நா உள் வணங்க, ஒண் முடிகள் பத்து உளவே; இறைஞ்ச, மேரு
இருபது கை உள் இலங்கை என்னாக உயிரோடும் இழந்திட்டாயே! 7-2
'அன்னை அவள் சீதை அனைத்து உலகும் ஈன்றாள்' என்று
உன்னி உரைத்தேன்; உரை கேளாது, உத்தமனே!
பின்னை இராமன் சரத்தால் பிளப்புண்ட
உன்னுடைய பேர் உடல்நலம் உற்று ஒருகால் நோக்காயோ? 28-1
'ஆரா அமுதாய் அலை கடலில் கண்வளரும்
நாராயணன் என்று இருப்பேன் இராமனை நான்;
ஓராதே கொண்டு அகன்றாய், உத்தமனார் தேவிதனை;
பாராயோ, நின்னுடைய மார்பு அகலம் பட்ட எலாம்? 28-2
இந்தனத்து அகில் சந்தனம் இட்டு, மேல்
அந்த மானத்து அழகுறத் தான் அமைத்து,
எந்த ஓசையும் கீழுற ஆர்த்து, இடை
முந்து சங்கு ஒலி எங்கும் முழங்கிட, 31-1
கொற்ற வெண்குடையோடு கொடி மிடைந்து,
உற்ற ஈம வீதியின் உடம்படீஇ,
சுற்ற மாதர் தொடர்ந்து உடன் சூழ்வர,
மற்ற வீரன் விதியின் வழங்கினான். 31-2
இனைய வீரன் இளவலை நோக்கி, 'நீ
புனையும் நன் முடி சூட்டுதி, போய்' எனா,
அனைய வீரன் அடியின் இறைஞ்சவே,
'அனையனோடும் அனுமனைச் சார்க' எனா. 34-1
|