1518 |
நீங்காதுறை தனிநாயகன் நெடுமாலயன் உணரா
ஓங்காரமு தற்பண்ணவன் உறையுங்கிரி செல்லப்
பாங்காயணங் கினர்போற்றிடப் பயிழ்காழிவ னத்திற்
பூங்காவனந் தனிலேச்சி இருந்தேதவம் புரிந்தாள். |
1 |
1519 |
சேணாடுபு ரக்கின்றவன் சிந்தித்திடு
கின்ற
மாணாகிய வினைமுற்றுற வருவான்றவம் புரிவாள்
காணாளவன் வருகின்றது காலம்பல தொலைய
நாணாடொறுந் தன்மேனியின் நலமாழ்குற மெலிவாள். |
2 |
1520 |
கொளையாரிசை அளிபாடிய குழலிந்திரன்
பிரிவால்
உளையாமனம் பதையாத்தவத் துறைகின்றதொ ரளவில்
வளையார்கலி உலகந்தனில் வாழ்சூரபன் மாவுக்
கிளையாள்பலர் இளையார்புணர்ந் தாலுஞ்சிறி திளையாள். |
3 |
1521 |
கழிகின்றதொர் கடலேபுரை காமந்தெறு
நோயால்
அழிகின்றவள் எவர்தம்மையும் வலிதேபிடித் தணையும்
இழிகின்றதொ ரியல்பாள்முகில் இனம்வாய்திறந் தெனவே
மொழிகின்றதொர் கடியாள்அச முகியென்பதொர் கொடியாள். |
4 |
1522 |
பொறையில்லவள் அருளில்லவள் புகழில்லவள்
சிறிதும்
நிறையில்லவள் நாணில்லவள் நிற்கின்றதொ ரறத்தின்
முறையில்லவள் வடிவில்லவள் முடிவில்லதொர் கற்பின்
சிறையில்லவள் உலகோர்க்கொரு சிறையாமெனத் திரிவாள். |
5 |
1523 |
கீழுற்றிடும் உலகெத்தனை யவையாவையுங்
கிளர்ந்தோர்
வாழுற்றிடும் உலகெத்தனை அவையாவையு மாடே
சூழுற்றிடும் உலகெத்தனை அவையாவையுஞ் சுற்றா
ஊழுற்றிடு தன்னூர்தனில் ஒருநாழியில் வருவாள். |
6 |
1524 |
பொய்யுற்றவள் களவுற்றவள் புரையுற்றிடு
சுரையூன்
துய்யுற்றவள் களியுற்றவள் சோர்வுற்றவள் கொலைசெய்
கையுற்றவள் விழியாலழல் காலுற்றவள் பவத்தின்
மொய்யுற்றவள் படிறுற்றவள் முனிவுற்றவள் மனத்தின். |
7 |
1525 |
பொங்குஞ்சிகை அழல்மைத்தலை புகுந்தாலென
ஔ�ருஞ்
செங்குஞ்சிய துடையாளெவர் செருச்செய்யினும் இடையாள்
துங்கங்கெழு தூணத்திடை தோன்றிக்கன கனைமுன்
பங்கம்படுத் துயிருண்டெழு பகுவாயரி நிகர்வாள். |
8 |
1526 |
சீயப்பெரு முகன்தாரகன் நிகராகிய
திறலாள்
மாயத்தொழில் பயில்கின்றவள் மணிமால்வரை புரையுங்
காயத்தவள் அடற்கூற்றையுங் கடக்கின்றதொர் வலியாள்
தோயப்புண ரிகளேழுமொர் துணையிற்கடந் திடுவாள். |
9 |
1527 |
மாலுற்றிட வாழ்சூரபன் மாவின்கிளை
முழுதும்
மூலத்தொடு முடிவித்திடு முறையூழ்வினை யென்னச்
சூலத்தினை யேந்தித்தனி தொடர்துன்முகி யுடனே
ஆலத்தின துருவாமென ஆங்குற்றனள் அன்றே. |
10 |
1528 |
கானின்றுள பொழிலேர்தனைக் காணாநனி
சேனாள்
ஆநன்றென வியவாப்புவி அமர்சோலையி தன்றால்
வானின்றுள வனத்தைக்கொடு வந்தேயிவண் மகவான்
தானின்றுவைத் தானிங்கிது தப்பாதென நிற்பாள். |
11 |
1529 |
ஏலாவிது காணாயென ஈர்ந்தண்பொழில் எழிலை
ஆலாலம தெனவேவரும் அசமாமுகி யென்பாள்
பாலானதுன் முகிதன்னொடு பகராவது காட்டித்
கோலாலம துடனேயது குறுகும்படி வந்தாள். |
12 |
1530 |
மட்டுற்றிடு தண்காவினை வருடைத்தனி
முகத்தாள்
கிட்டிச்சினை நனைமாமலர் கிளையாவையும் நோக்கித்
தட்டற்றிவண் உறைகின்றவர் தமைநோக்குவ லென்னா
எட்டுத்திசை யினும்நாடுதற் கிடையுற்றனள் கடிதின். |
13 |
1531 |
அதுகண்டனன் அவண்நின்றதொ ரையன்படைத்
தலைவன்
முதுகண்டகி இவளாம்அச முகியென்பதொர் கொடியாள்
எதுகண்டிவண் வருகின்றனள் என்னோகருத் திவள்தன்
கதிகண்டனன் நிற்பேனெனைக் காணாநெறி யதனில். |
14 |
1532 |
மற்றிங்கிவள் செயல்யாவையும்
வரலாற்றொடு காணாத்
தெற்றென்றவண் மீள்கின்றுழிச் செவ்வேயெதிர் போந்து
குற்றந்தனக் கிசையுந்திறம் முடிப்பேனெனக் கொலைசெய்
விற்றங்கிய புயவேடரில் வேறோரிடை நின்றான். |
15 |
1533 |
நின்றானவன் அதுகண்டிலன் நெஞ்சிற்களி
தூங்கக்
குன்றாமலை அசமாமுகக் கொடியாள்அவ ளுடனே
சென்றாள்மலர்க் காவெங்கணுந் திரிந்தாள்திரிந் தளவில்
பொன்றாழ்முலைச் சசிமாதவம் புரிகின்றது கண்டாள். |
16 |
1534 |
அந்தாவிவள் அயிராணிநம் மரசன்றனக்
கஞ்சி
நந்தாவளந் தனைப்பெற்றபொன் னகரத்தைவிட் டிங்கே
வந்தாளிவள் தன்னைக்கொடு வருவீரென எங்கோன்
முந்தாதர முடனுய்த்தனன் முடிவற்றதன் படையே. |
17 |
1535 |
இங்குற்றதை உணராமையின் இமையோர்புரம்
நாடி
அங்குற்றிலள் அயிராணியென் றரசன்தனக் குரைப்ப
வெங்கட்டழ லெனச்சீறினன் மீண்டுஞ்சிலர் தமையித்
திங்கட்புரை முகத்தாள்தனைத் தேடும்படி விடுத்தான். |
18 |
1536 |
வானெங்கணும் பிலமெங்கணும்
வரையெங்கணும் பரவை
தானெங்கணுந் திசை யெங்கணுந் தரையெங்கணுந் தரையிற்
கானெங்கணும் நமர்தேடினர் காணாரிவள் தன்னை
ஊனெங்கணும் வருந்தத்திரிந் துழன்றாரிது வுணரார். |
19 |
1537 |
தண்டேனமர் குளிர்பூங்குழற்
சசியென்பவள் தனைநான்
கண்டேனினி இவள்மையலிற் கவலாதொழி கென்றே
வண்டொலிடு தொடைமன்னவன் மகிழ்வெய்தமுன் னுய்ப்பக்
கொண்டேகுவன் யானேயிவள் தனையென்றுகு றித்தாள். |
20 |
1538 |
இத்தேமொழி தனைஇந்திரன் ஈண்டேதனி யாக
வைத்தேகினன் இவள்தன்னை வருந்தாதளித் திடவோர்
புத்தேளிரும் இலரிங்கிது பொழுதாமவன் புகுமுன்
கொத்தேமலர்க் குழலாள்தனைக் கொடுபோவனென் றடைவாள். |
21 |
1539 |
தீனக்குற் கடுஞ்சொல்லெனும் உருமேறு
தொழிப்பக்
கூனற்பிறை எயிறாகிய மின்னுப்புடை குவலக்
காணக்கரும் படிவத்தொடு கால்கொண்டேழு விசையால்
வானப்புயல் வழுவிப்புவி வந்தாலேன வந்தான். |
22 |
1540 |
ஊற்றங்கொடு வருதுன்முகி யுடனேயச
முகிதான்
தோற்றங்கிளர் மணிவெற்பெனத் துண்ணென்றவண் வரலும்
ஏற்றம்பெற நோற்றேதனி இருந்தாளது காணாக்
கூற்றந்தனைக் கண்டாலெனக் குலைந்தாள்வலி குறைந்தாள். |
23 |
1541 |
நீரோதமி சைத்தங்கிய நிருதக்ககுல மகளோ
பாரோர்மயக் குறுபேய்மக ளோபாரிடத் தணங்கோ
சூரொடுறு தனிக்கொற்றவை தொழில்செய்பவள் தானோ
ஆரோவிவள் அறியேனென அஞ்சிக்கடி தெழுந்தாள். |
24 |
1542 |
எழுகின்றவள் தனைநில்லென இசைத்தேயெதிர்
எய்தி
மொழிகின்றனள் அயிராணிநின் முதிராவிள நலனும்
பழியில்லதொர் பெருங்காமரும் பயனற்றிவண் வறிதே
கழிவெய்திடத் தவம்பூண்டிடல் கடனோஇது விடுநீ. |
25 |
1543 |
ஆரொப்புனக் குலகந்தனில் அருளாழியம்
பகவன்
மார்பத்துறை திருமங்கையும் மற்றிங்குனக் கொவ்வாள்
பாரிற்கரந் திருந்தேதவம் பயில்வாயிதென் உன்னைச்
சேரத்தவம் புரிகின்றனன் திறற்சூரபன் மாவே. |
26 |
1544 |
இந்நாள்வரை உனைநண்ணிய இமையோர்க்கிறை
உனது
நன்னாயகன் நாகப்பெரு நலனுற்றவன் அன்றே
தன்னாலுணர் வரிதென்பர்கள் தன்பேரழ கதனாற்
பன்னாள்அவ னுடன்மேவினை பாகிற்படு கரிபோல். |
27 |
1545 |
தவறுஞ்சுரர் உலகொன்றுளன் சதவேள்வியன்
எம்முன்
புவனம்பல அண்டம்பல புரக்குந்திரு வுளனால்
இவனங்கவன் பணியேபுரிந் திளைத்தேகரந் துழல்வான்
அவனிங்கிவன் றனையேவல்கொண் டகிலந்தனி யாள்வான். |
28 |
1546 |
அழிவில்லவன் அவனிங்கிவன் அழியும்பரி
சுடையான்
பழியில்லவன் அவனிங்கிவன் பழிவேலையில் திளைப்பான்
கழியும்படர் உழந்தானிவன் களிப்புற்றுளன் அவனே
தொழுவன்பல ரையுமிங்கிவன் தொழுமோவவன் சிலரை. |
29 |
1547 |
அந்நேரில னொடுமேவுவ தறிகின்றிலை
அனையான்
தனனேவலின் ஒழுகித்திரி தமியோன்றனைத் துணையென்
றின்னேமெலிந் தனையீதுனக் கியல்போநின தெழிலுங்
கொன்னேகழிந் தனபற்பகல் குறியாயிது குணனோ. |
30 |
1548 |
எத்தேவரும் முகிலூர்தியும்
இகல்மேவரும் அவுணக்
கொத்தேவரும் அணங்கோருமுன் குற்றேவல்செய் திடவே
முத்தேவரும் புகழப்படும் மொய்ம்புற்றிடு சூர்முன்
உய்த்தேயவ னொடுகூட்டுவன் உலகாண்டுடன் இருக்க. |
31 |
1549 |
பொன்னோடிகல் பங்கேருகப் பூங்கோமளை
தனையும்
அன்னோன்வெறுத் திடுவன்பிறர் அனைவோரையும் அ�தே
உன்னோடள வறுகாதலின் உறுமிங்கிது சரதம்
என்னோடினி வருவாய்கடி தென்றாள்அறங் கொன்றாள். |
32 |
1574 |
பையரா அமளி யானும் பரம்பொருள் முதலும்
நல்கும்
ஐயனே யோலம் விண்ணோர்க் காதியே யோலம் செண்டார்
கையனே யோலம் எங்கள் கடவுளே யோலம் மெய்யர்
மெய்யனே யோலம் தொல்சீர் வீரனே யோலம் ஓலம். |
1 |
1575 |
ஆரணச் சுருதி யோர்சார் அடலுருத்
திரனென் றேத்துங்
காரணக் கடவுள் ஓலம் கடல்நிறத் தெந்தாய் ஓலம்
பூரணைக் கிறைவா வோலம் புட்கலை கணவா வோலம்
வாரணத் திறைமேற் கொண்டு வரும்பிரான் ஓலம் என்றாள். |
2 |
1576 |
ஒய்யெனச் சசியிவ் வாற்றால் ஓலிட
அதுகேட் டெங்கள்
ஐயனைக் குறித்துக் கூவி அரற்றுவாள் போலு மென்னா
மையினைத் தடுத்துச் சிந்து மருத்தென வந்தா னென்ப
வெய்யரிற் பெரிதும் வெய்யோன் வீரமா காளன் என்போன். |
3 |
1577 |
சாத்தன தருளின் நிற்குந் தானையந்
தலைவன் வானோர்
வேத்தவை யான வெல்லாம் வியத்தகு வீரன் உந்தி
பூத்தவன் முதலோர் யாரும் புகழவெவ் விடத்தை யுண்டு
காத்தவன் நாமம் பெற்றோன் காலற்குங் காலன் போல்வான். |
4 |
1578 |
இருபிறை ஞெலிந்திட் டன்ன இலங்கெழில்
எயிற்றன் ஞாலம்
வருமுகில் தடிந்தா லென்ன வாள்கொடு விதிர்க்குங் கையன்
உருமிடிக் குரல்போல் ஆர்க்கும் ஓதையன் உரப்புஞ் சொல்லன்
கரவிழைத் தெங்ஙன் போதி நில்லெனக் கழறி வந்தான். |
5 |
1579 |
கொம்மென வந்த வீரன் கூவிய சசியை
நோக்கி
அம்மனை அழுங்கல் வாழி அசமுகி யெனும் வெய்யாட்
கிம்மியின் துணையும் அஞ்சேல் ஈண்டுனைத் தீண்டு கின்ற
கைம்முறை தடிந்து வல்லே விடுவிப்பன் காண்டி யென்றான். |
6 |
1580 |
வீரன துரையைக் கேளா மெல்லியல்
அணங்கின் நல்லாள்
பேரிடர் சிறிது நீத்துப் பெயலுறு துவலை தூங்கு
மாரியின் செலவு கண்ட வளவயற் வைங்கூழ் போல
ஆருயிர் பெற்றாள் மற்றை அசமுகி அவனைக் கண்டாள். |
7 |
1581 |
ஓவரும் புவனம் யாவும் ஒருங்குமுத்
தொழிலும் ஆற்றும்
மூவருந் துறக்கம் வைகும் முதல்வனுந் திசைகாப் பாளர்
யாவரும் என்முன் நில்லார் ஈண்டெனை இகழ்ந்து சீறித்
தேவர்தங் குழுவி னுள்ளான் ஒருவனோ செல்வ னென்றாள். |
8 |
1582 |
வெறித்திடு கண்ணில் நோக்கி வெவ்விதழ்
அதுக்கி வல்லே
கறித்தனள் வயிற்றின் மாலை கறகற கலிப்ப ஆர்த்தது
முறித்திவன் தன்னை யுண்டு முரண்வலி தொலைப்ப னென்னாக்
குறித்தச முகத்தி நிற்பக் குறுகினன் திறல்சேர் வீரன். |
9 |
1583 |
தட்டறு நோன்மை பூண்ட சசிதனைத் தமிய
ளென்றே
பட்டிமை நெறியாற் பற்றிப் படருதி இவளை யின்னே
விட்டனை போதி செய்த வியன்பிழை பொறுப்பன் நின்னை
அட்டிடு கின்ற தில்லை அஞ்சலை அரிவை யென்றான். |
10 |
1584 |
கேட்டலும் உருத்திவ் வார்த்தை
கிளத்தினை நின்னை யாரே
ஈட்டுடன் இவளைப் போற்றென் றிப்பணி தலைதந் துள்ளார்
வேட்டனன் அவரைக் கேட்ப விளம்புதி யென்றாள் முந்தூழ்
மாட்டுறு கனலி யென்னத் தன்குலம் முடிப்பான் வந்தாள். |
11 |
1585 |
தாரணி முதல மூன்றுந் தலையளி புரிந்து
காப்பான்
காரணி செறிந்துற் றன்ன கரியவன் கடவுள் வௌ�ளை
வாரண முடைய ஐயன் மற்றிது பணித்தான் என்பேர்
வீரரில் வீரனான வீரமா காளன் என்றான். |
12 |
1586 |
என்றலும் அனைய வாய்மை இந்திரன்
தனக்கும் ஈசன்
பொன்றிரண் மார்பன் நல்கும் புதல்வற்கும் பொதுமைத் தாகி
நின்றது வாகத் தேவர் நிருதரால் வருந்தும் ஊழாற்
சென்றவன் மகவான் ஏவ லாளெனச் சிந்தை செய்தாள். |
13 |
1587 |
புந்தியில் இதனை யுன்னிப் பொள்ளெனச்
சினமீக் கொள்ள
இந்திரன் தொழுவன் கொல்லாம் எனையிடை தடுக்கு நீரான்
சிந்துவன் இவனை யென்னாச் செங்கையிற் சூலந் தன்னை
உந்தினள் அதுபோய் வீரன் உரனெதிர் குறுகிற் றன்றே. |
14 |
1588 |
குறுகிமுன் வருத லோடுங் குரூஉச்சுடர்
அங்கி மூன்றும்
முறையினோ ரிடையுற் றன்ன முத்தலைப் படையைக் காணூஉ
அறைகழல் வீரன் தொன்னாள் அங்கியை அட்ட தேபோல்
எறிகதிர் வாளால் மைந்தன் இருதுணி படுத்தி னானே. |
15 |
1589 |
படுத்தலும் மணிகள் நீலப் பையரா
உமிழ்ந்த தென்னக்
கடித்திடும் எயிற்றுப் பேழ்வாய்க் கருங்கணம் அழல்கான் றென்ன
விடித்திடு கொண்மூ வின்பால் எழுந்தமின் னென்ன அன்னாள்
விடுத்திடு சூல வைவேல் வெவ்வழல் பொழிந்த தன்றே. |
16 |
1590 |
காலத்தின் உலகம் உண்ணக் கடலுறு வடவை
தானே
ஆலத்தை மீது பூசி அசமுகி கரத்திற் கொள்ளச்
சூலத்தின் அமைந்த தம்மா சோதனை கொடுப்ப னென்னாச்
சீலத்தின் மிக்கோன் கூர்வாள் செந்தழல் பொழிவித் தன்றே. |
17 |
1591 |
சூளினார்த் தெறியும் வீரன்
சுடர்கொள்முத் தலைவேல் தன்னை
வாளினால் தடித லோடும் மறிமுகத் தணங்கு சீறிக்
கேளினால் தனது பாங்கிற் கிடைத்ததுன் முகிகைச் சூலங்
கோளினாற் கடிது வாங்கிக் கூற்றனும் உட்க ஆர்த்தாள். |
18 |
1592 |
வசிகெழு சூலம்பற்றி மருத்துவன் துணைவி
யான
சசிதனை இகுளை யாகுந் தையல்தன் கரத்திற் சேர்த்தி
நிசியின் பாந்த ளோடு நெடுங்கதிர் நேர்புக் கென்ன
விசையொடு கொடியள் சென்றாள் வீரமா காளன் தன்மேல். |
19 |
1593 |
ஒற்றைமுத் தலைவேல் தன்னை ஒப்பிலான்
மரும மீது
குற்றிய முன்னி நீட்டிக் குறுகினள் அமர்செய் போழ்திற்
கற்றையஞ் சுடர்க்கூர் வாளாற் காவலன் எறித லோடும்
இற்றது சூலங் கண்ட அசமுகி இடைந்து போனாள். |
20 |
1594 |
இடைந்தனள் ஏகி ஆண்டோர் இருங்கிரி
பறித்திட் டின்னே
முடிந்தனை போலு மென்னா மொய்ம்புடன் அவன்மேல் ஓசசத்
தடிந்தனன் தடித லோடுந் தாரைவாட் படையும் வல்லே
ஒடிந்தது கொடியள் காணா ஒல்லொலிக் கடல்போல் ஆர்த்தாள். |
21 |
1595 |
வீரமம காள கேண்மோ வேதனே ஆதி விண்ணோர்
ஆரும்வந் தாசி கூற அகிலமும் ஆளு கின்ற
சூரனாம் எமது முன்னோன் தோளிடை உய்ப்பக் கொண்டு
பேருவன் இவளை யோராய் விலக்கினை பேதை நீராய். |
22 |
1596 |
தடுத்திடல் முறைய தன்றால் தாரகன் தானை
வீரர்
அடுத்திடிற் படுப்பர் கண்டாய் அன்றியும் யானே நின்னை
எடுத்தனன் மிசைவன் துய்க்கின் இரும்பசி யுலவா தென்னா
விடுத்தனன் உய்ந்து போதி விளிவுறேல் எளியை யென்றாள். |
23 |
1597 |
பாதகி இனைய மாற்றம் பகர்தலும் வீரன்
கேளா
வேதியின் நினது சூலப் படையிற எறிந்தேன் நின்னை
மாதென அடாது நின்றேன் மற்றிதை உணர்ந்து வல்லே
போதியால் இவளை விட்டுப் போக்கலை கரத்தை யென்றான். |
24 |
1598 |
என்றலுங் கொடியள் கேளா ஈங்கிவன் வாளு
மின்றி
நின்றனன் இவனொ டேபோர் நேருதல் நெறிய தன்றால்
அன்றியும் இவனை வெல்லல் அரிதினிச் சசியைக் கொண்டு
சென்றிடல் துணிபா மென்னாத் திரும்பினள் சேடி தன்பால். |
25 |
1599 |
துன்முகி யாகி நின்ற துணைவிதன்
சிறைப்பட் டுள்ள
பொன்மிகும் யாணர் மேனிப் புலோமசை தனைத்தான் பற்றிக்
கொன்மலி அம்பொன் மேருக் குவட்டினைக் கொடுபோங் காலின்
வன்மையி னோடு கொண்டு மறிமுகத் தணங்கு போனால். |
26 |
1600 |
போகலும் அதனை ஐயன் பொருநரில் தலைவன்
பாரா
ஏகுதி போலும் நில்லென் றெய்தியே உடைவாள் வாங்கிச்
சேகுறு மனத்தாள் கூந்தல் செங்கையாற் பற்றி யீர்த்துத்
தோகையைத் தொட்ட கையைத் துணித்தனன் விண்ணோர் துள்ள. |
27 |
1601 |
இருட்டுறு பிலத்துற் றோரை எடுத்துவௌ�
ளிடையிட் டென்ன
மருட்டுறு மதிய ளாகி வருந்திய சசியென் பாளை
அருட்டிறத் தோடு வீடு செய்துபின் அவுண மாதை
உருட்டினன் றனது தாளால் உருமென உதைத்துத் தள்ளி. |
28 |
1602 |
அயமுகி வீழ்த லோடும் அழுங்கியே அயலின்
நின்ற
வயமிகு துன்மு கத்து மங்கைதன் கரத்தி லொன்றைச்
செயிரறு சசியை நீயுந் தீண்டினை போலு மென்னாத்
துயல்வரு தொடையல் வீரன் துணித்தனன் சோரி பொங்க. |
29 |
1603 |
வேறு
மதர்த்திடு துன்முகி வன்கை வாளினாற்
சிதைத்திடு மொய்ம்புடைச் சேனை காவலன்
உதைத்தனன் அனையளும் ஓவென் றேயுளம்
பதைத்தனள் புலம்பியே படியில் வீழவே. |
30 |
1604 |
அறைபடு கழலினான் அவுண மாதர்கை
எறிதலுங் குருதிநீர் எழுந்த தன்மையால்
திறல்கெழு வெய்யசூர் திருவைச் சுட்டிடுங்
குறைபடு ஞெகிழியின் கோலம் போலுமே. |
1 |
1605 |
திரைந்தெழு குடிஞைபோல் குருதி
சென்றிடக்
கரந்துமி படுதலுங் கவன்று வீழ்ந்தனள்
வருந்தினள் அரற்றினள் மறிமு கத்தினாள்
விரிந்திடு கனலுடை வேலை போன்றுளாள். |
2 |
1606 |
மருண்டனள் பதைத்தனள் மறித்த கையினள்
வெருண்டனள் நிலனுற வியன்கை எற்றினள்
உருண்டனள் வெரிநுடன் உரமுந் தேய்வுறப்
புரண்டனள் செக்கரிற் புயலிற் றோன்றுவாள். |
3 |
1607 |
புரந்தரன் தேவியைப் பொம்மெ னப்பிடித்
துரந்தரு வாயிலிட் டுண்பன் ஈண்டெனா
விரைந்தெழும் சென்றிம் மீளும் வீழ்ந்திடும்
இருந்திடும் சாய்ந்திடும் இரங்குஞ் சோருமே. |
4 |
1608 |
கடித்திடும் இதழினைக் கறைகண்
மீச்செலக்
குடித்திடும் உமிழ்ந்திடும் குவல யத்திரீஇத்
துடித்திடும் பெயர்ந்திடும் துளக்குஞ் சென்னியை
இடித்தெனக் கறித்திடும எயிற்றின் மாலையே. |
5 |
1609 |
திகைத்திடும் நன்றுநஞ் செய்கை ஈதெனா
நகைத்திடும் அங்குலி நாசி யில்தொடும்
புகைத்தென உயிர்த்திடும் புவியைத் தாள்களால்
உகைத்திடும் புகையழல் உமிழும் வாயினால். |
6 |
1610 |
உம்மென உரப்பிடும் உருமுக் காண்றென
விம்மெனச் சினத்திடும் எரிவி ழித்திடுந்
தெம்முனைப் படையடுஞ் சேனை வீரனை
விம்மிதப் படுமுடல் வியர்க்கும் வௌ�குமே. |
7 |
1611 |
அற்றிடு கரத்தினை அறாத கையினால்
தெற்றென எடுத்திடும் தெரிந்து நோக்கிடும்
ஒற்றிடும் விழிகளில் உகுக்குஞ் சோரிநீர்
இற்றெவர் பட்டனர் என்னின் என்னுமே. |
8 |
1612 |
வீவதே இனியெனும் வினையி னேன்றனக்
காவதோ இ�தெனும் ஐய கோவெனும்
ஏவரும் புகழ்தரும் எங்கள் அண்ணர்பாற்
போவதெவ் வாறெனப் புலம்பு கொள்ளுமே. |
9 |
1613 |
காசினி தனில்வருங் கணவர் கைதொடக்
கூசுவ ரேயெனுங் குறிய பங்ககெனப்
பேசுவ ரேயெனும் பிறரும் வானுளோர்
ஏசுவ ரேயெனும் என்செய் கேனெனும். |
10 |
1614 |
தேவர்கள் அனைவருஞ் சிந்தித் தென்கரம்
போவது புணர்ந்தனர் பொன்று வேன்இனி
ஆவதன் முன்னரே அவரை யட்டுல
கேவையும் முடிப்பனென் றெண்ணிச் சீறுமே. |
11 |
1615 |
பாருயிர் முழுவதும் படுத்தி டோவெனும்
ஆரழல் வடவையை அவித்தி டோவெனும்
பேருறு மருத்தினைப் பிடித்தி டோவெனும்
மேருவை அலைத்தனன் வீட்டு கோவெனும். |
12 |
1616 |
பீளுறும் எழிலிகள் பிறவும் பற்றியே
மீளரி தெனும்வகை மிசைந்தி டோவெனும்
நாளினை முழுவதும் நாளு டன்வருங்
கோளினை முழுவதுங் கொறித்தி டோவெனும். |
13 |
1617 |
சீர்த்தகை இழந்தியான் தெருமந் துற்றது
பார்த்திக ழுங்கொலஇப் பரிதி வானவன்
ஆர்த்திடுந் தேரொடும் அவனைப் பற்றியே
ஈர்த்தனன் வருவதற் கெழுந்தி டோவெனும். |
14 |
1618 |
கண்டதோர் பா�தியைக் கறித்துச்
சூழ்ச்சிசெய்
அண்டர்கள் யாரையும் அடிசி லாகவே
உண்டெழு கடலையும் உறிஞ்சிக் கைபுறத்
தெண்டிரை தனிற்கழீஇத் திரும்பு கோவெனும். |
15 |
1619 |
செந்நலம் நீடிய தென்னங் காயிடைத்
துன்னிய தீம்பயன் சுவைத்திட் டாலெனப்
பின்னுறு மதியினைப் பிடித்துக் கவ்விமெய்
இன்னமிர் தினை நுகர்ந் தெறிகெ னோவெனும். |
16 |
1620 |
இந்திரன் களிற்றினை ஏனைத் தந்தியைச்
செந்துவர்க் காயெனச் சேர வாய்க்கொளா
ஐந்தரு இலைகளா அவற்றுள் வெண்மலர்
வெந்துக ளாக்கொடு மிசைகெ னோவெனும். |
17 |
1621 |
தாக்குகோ பணிகளைத் தலைகி ழக்குற
நீக்குகோ பிலம்படு நிலயத் தோரையுந்
தூக்குகோ புவனியைச் சுழற்றி மேலகீழ்
ஆக்குகோ மாலென அருந்து கோவெனும். |
18 |
1622 |
வேறு
ஆரும் அச்சுற இனையன அசமுகி வெய்யாள்
சூரன் தங்கைமா லுளத்தினள் இறப்பது துணிவாள்
பேரிடும் பையள் தொலைவுறா மானமே பிடித்தாள்
வீர வன்மையள் ஆதலின் உரைத்தனள் வெகுண்டாள். |
19 |
1623 |
வெகுளு மெல்லையில் கண்டனள் துன்முகி
வெய்ய
தகுவர் தங்குலத் துதித்தனள் ஆயினுந் தகவின
புகுதி சால்புணர் புந்தியள் ஆதலிற் பொருக்கென்று
இகுளை முந்துற வந்தனள் இனையன இசைத்தாள். |
20 |
1624 |
வைய மென்செயும் வானக மென்செயும்
மற்றைச்
செய்ய வானவர் என்செய்வர் வரைகளென் செய்ும்
ஐய மால்கடல் பிறவுமென் செய்திடும் அவனால்
கையி ழந்திடின் உலகெலாம் முடிப்பது கடனோ. |
21 |
1625 |
பாரும் வானமுந் திசைகளும் பல்லுயிர்த்
தொகையுஞ்
சேர வேமுடித் திடுவதை நினைந்தனை செய்யின்
ஆரும் நின்றனை என்செய்வர் அவையெலா முடைய
சூர னேயுனை முனிந்திடும் அவன்வளந் தொலையும். |
22 |
1626 |
ஆத லான்மனத் தொன்றுநீ எண்ணலை அவுணர்
நாத னாகிய வெய்யசூர் முன்னுற நாம்போய்
ஈதெ லாஞ்சொலின் இமையவர் கிளையெலா முடிக்கும்
போத லேதுணி வென்றனள் பின்னரும் புகல்வாள். |
23 |
1627 |
வேறு
ஞானமில் சிறுவிதி நடாத்தும் வேள்வியில்
வானவர் தங்களின் மடந்தை மார்களில்
தானவர் தங்களில் தத்தம் மெய்களில்
ஊனமில் லோரையாம் உரைக்க வல்லமோ. |
24 |
1628 |
நினைவருங் கண்ணுதல் நிமலற் கேயலால்
அனையனை அடைதரும் அறிஞர்க் கேயலால்
எனைவகை யோர்க்கும்எவ் வுயிர்க்கும் ஏற்பதோர்
வினைபடும் இழிதுயர் விட்டு நீங்குமோ. |
25 |
1629 |
ஆகையின் மங்கைநீ அரற்றல் வௌ�கியே
சோகமுங் கொள்ளலை துயரும் இன்பமும்
மோகமும் உயிர்க்கெலாம் முறையிற் கூடுமால்
ஏகுதுங் எழுகென இயம்பித் தேற்றினாள். |
26 |
1630 |
வேறு
மொழிந்து துன்முகி தௌ�த்தலும் நன்றென முன்னா
எழுந்து துண்ணென அசமுகி என்பவள் இலதாய்க்
கழிந்த துன்பொடு நின்றதோர் சசியினைக் காணூஉ
அழிந்த மானவெந் தீச்சுட இனையன அறைவாள். |
27 |
1631 |
துப்பு றுத்திய அண்டங்கள் யாவினுஞ்
சூரன்
வைப்பு றுத்திய திகிரியும் ஆணையும் வழங்கும்
இப்பு றத்தினில் ஔ�ப்பினும் இதுவன்றி அண்டத்
தப்பு றத்தினில் ஔ�ப்பினும் பிழைப்புமக் கரிதே. |
28 |
1632 |
மறைத லுற்றிடும் இந்திரன் தன்னைஇவ்
வனத்தின்
உறைத லுற்றிடும் உன்றனை ஒழிந்தவா னவரை
இறைத னிற்பற்றி ஈர்த்துப்போய் என்னகர் தன்னில்
சிறைப டுத்துவன் திண்ணமெங் கோமகன் செயலால். |
29 |
1633 |
உங்கள் தம்மையான் சிறைபடுத் தேன்எனின்
உலகம்
எங்கு மாள்கின்ற சூரபன் மாவெனும் இறைவன்
தங்கை யன்றியா னெனதுரந் தனிலெழுந் தனவுங்
கொங்கை யன்றியான் பேடியே குறிக்கொளென் றகன்றாள். |
30 |
1643 |
இன்ன பான்மையின் மகபதி இருந்தனன்
இப்பால்
முன்ன மேகிய அசமுகி வெய்யதுன் முகத்தாள்
தன்னொ டேகியே மகேந்திரத் தனிநகர் அடைந்தாள்
அன்ன காலையிற் சூரன்வீற் றிருந்தவா றறைவாம். |
1 |
1644 |
வேறு
மீயுயர் கின்ற விண்ணினின் றிழிந்த விழுமிய மேதினி வரைப்பின்,
ஆயிர கோடி கொண்டவண் டத்தில் ஆடகப் பித்திகை அவற்றுள்,
தீயன விலக்கி நல்லன எடுத்துத் திசைமுகத் தவர்கள் செய் தென்ன,
ஓய்வற விளங்கு தபனியப் பொதுவொன் றொராயிரம் யோசனை யுறுமே. |
2 |
1645 |
இத்தரை யுளதாந் தொல்லைஅண் டத்தில்
இடையிடை எய்தியே இலங்கும்,
அத்தமால் வரைகள் கைபுனைந் தியற்றி அம்புயா சனர் பலர் கூடி,
வைத்தெனச் சூரன் அரசியல் நடாத்தும் மன்றினில் ஆயிர கோடி,
பத்தியின் நிறுவும் ஆடகத் தூணம் பரந்ததப் பருமையார் பகர்வார். |
3 |
1646 |
தொல்லையன் டத்தின் கண்டொறுங் கெழீஇய
சுவணமா தரையெலாந் தொகைசெய்,
தல்லன விலக்கி நல்லன தெரிந்தே அமைத்த போல் அணிபெறு நிலத்தில்,
ஒல்லுறு புடையில் உம்பரில் அங்கண் உலப்பிலாக் குலகிரிக் குழுவிற்,
பல்லிருந் துணிசெய் தணிபடுத் தென்னப் பன்னிற ஓவியம் பயிலும். |
4 |
1647 |
பொன்னுலா அண்டத் தும்பர்க டோறும்
பொருந்திய செக்கர்வான் புராரி,
தன்னதா ணையினால் ஒருங்குசூழ்ந் தென்னத் தண்மலர் விதானமீத் தயங்கப்,
பன்னிரு கோடி யாகியெங் கணுஞ்சூழ் பகலவர் சிலவரே யன்றி,
அன்னவர் பலரும் பணியிலுற் றென்ன அணி மணிக் கண்ணடி ஔ�ரும். |
5 |
1648 |
மண்ணுலா அண்டத் திரவிகள் என்றூழ்
வரம்பிலா மதிகளின் உளவாந்,
தெண்ணிலாக் கற்றை ஐம்பரு நிறத்த செல்லினம் யாவையுஞ் செறிந்தே,
அண்ணலார் மேலைக் கம்பலஞ் சூழ்போய் அமர்ந்தென ஆயிடைக் கவரி,
எண்ணிலா தனவும் ப�றுகிற் குழுவும் இடைவிராய் மிடைவன எங்கும். |
6 |
1649 |
பரக்குறும் அண்டந் தொறுந்தொறும்
உளவாம் பகலினைப் பரிமுகத் தெரியின்,
உருக்கியொன் றாக்கித் தவிசென இயற்றி ஔ�றுதா ரகையவட் குயிற்றித்,
தருக்குறு கின்ற மதிகளை மடங்கல் தகவுசெய் திருத்திய தென்னத்,
திருக்கிளர் அவையத் தவுணர்கோன் இருப்பச் சிறந்ததோர் அரியணை திகழும். |
7 |
1650 |
ஆனதோர் மன்றத் தரியணை மிசையே ஆயிர
கோடியண் டத்தின்,
மேனிமிர் வடவை அங்கியும் விடமு மிசைந்தழி யாநெறி மேவித்,
தானவர் பரவக் கூற்றெலா மொன்றாய்த் தணப்பில்பேர் அணிகலந் தயங்க,
வானிமிர்ந் துற்றா லென்னவெஞ் சூர மன்னவர் மன்னன்வீற் றிருந்தான். |
8 |
1651 |
மேலைநாள் அமலன் உதவுபல் லண்டம் மேவர
நடாத்துதொல் லாணைக,
கோலொடு வௌ�ய சீர்த்திகள் முழுதுங் குறுகியே ஈருருக் கொண்டு,
பாலுற வந்து நின்றதே யென்னப் பாங்கரில் அவுணர்கள் தாங்கும்,
வாலிய துணைசேர் தவளவெண் கவிகை மாமதிக் கடவுளை மலைய. |
9 |
1652 |
காருறழ் படிவத் துவரிகள் அனைத்துங்
கண்ணகன் பாற்கடல் முழுதும்,
ஈருரு வெய்தி யெழுந்துமே லோங்கி இருந்தென வைகலுஞ் செலுமத்,
தாரக விறலோன் ப�றலைச் சீயத் தலைமையான் சார்ந்தயல் இருப்ப,
ஆரழல் உருவப் பண்ணவ ரேபோல் அமைச்சருங் குமரரும் அமர.
|
10 |
1653 |
எவ்வெலா அண்டத் துறைதரு மருத்தும்
இரும்புனற் கிறைவரு மாகிச்,
செவ்விதின் ஒருங்கித் தத்தமில் உலவாச் சீகரம் படுபனி சிதறி,
அவ்வயின் வேண்டும் அளவையிற் பலவாய் அவனடி பணிந் தெழுந் திறம்போல்,
மைவரை யனைய அவுணா�கள் இரட்டும் வாலிய கவரிகள் வயங்க. |
11 |
1654 |
உரைத்திடும் அண்டந் தொறுந்தொறும் உள்ள
உம்பரில் இயக்கர் கோன் உலகில்,
தரைப்பெரு வரைப்பில் பிறவிலுள் ளதனில் தவறிலா அறபுதத் தனவாத்,
தெரித்தனர் எடுத்துப் பொதிந்தென நறிய திரையன்மெல் லிலைதுவர்ப் பழுக்காய்,
விரைத்திடு சுண்ணங் கொள் கலம் பரியா வினைமுறை யோர்பலர் விரவ. |
12 |
1655 |
நின்றதோ ரேனை அருக்கருட் சிலரை
நீரமுய்த் துள்ளகோ டிகமேற்,
பொன்றரை யுழியின் மணிசொரிந் தென்னப் புகட்டுறு தம்பலக் களாசி,
மன்றதொல் லறிவர் திருத்தினர் பொருவ மற்றவை அவுணர்க ளேந்தித்,
துன்றிருந் துவர்க்கா யடைபிற பரிக்குந் தொழுவர்தங் குழுவொடு துவன்ற. |
13 |
1656 |
ஆழியங் கிரியிற் கதிர்மணி வெயிலும்
அன்னது சூழ்ந்தபேர் இருளும்,
வாழிய அமுதும் உவரியும் அல்லா வாரிதி யும்பல மணியும்,
ஊழியி னிறுதி அமையமே லெல்லாம் ஒன்றிய தென்னமுன் னிருபால்,
கேழுறு பின்னர் அவுணர்மாத் தலைவர் கிளையொடு துவன்றினர் கெழும. |
14 |
1657 |
மின்னவிர் விசும்பின் அகட்டினை அளவி
வெண்மதிக் கடவுண்மெய் யணுகிப்,
பின்னுறும் அமுத நீர்க்கடல் திளைத்துப் பெரும்புறப புணரியிற் படியா,
இந்நில மருங்கில் வானகத் துள்ள எழின்மலர்க் காவுதோ றுலாவித்,
தன்னொலி யின்றி மென்மெல அசைந்து தண்ணென வசந்தன்முற் சார. |
15 |
1658 |
விண்படு நிறைநீர்ப் புதுமதிக் கடவுள்
வியன்பனித் துவலையைத் துற்றுக்,
கண்படு துறக்கத் தண்டலைப் பொதும்பிற் காமரம் போதிடைக் கவிழ்த்தி,
எண்படு பன்னாள் கழித்தபின் கவர்ந்தே எழிலிகள் கரந்துநின் றீண்டைத்,
தண்பனி உறைப்பிற் கண்ணுறாத் துவலை தணப்பறச் சிதறிடத் தம்மில். |
16 |
1659 |
தேனனர் ஐம்பால் உருப்பசி அரம்பை
திலோத்தமை மேனகை முதலாம்,
வானவர் மகளிர் இயக்கர்தம் மகளிர் வலிகெழும் அரக்கர் தம் மகளிர்,
தானவர் மகளிர் விஞ்சையர் மகளிர் சாரணர் சித்தர்தம் மகளிர்,
ஏனையர் மகளி ரியாவரும் வெவ்வே றியற்படு களிநடம் இயற்ற. |
17 |
1660 |
ஐந்திறத் துருவங் காலையில் உரைப்பான்
அமையமின் றாகியே தேவா,
வந்தொரு புடையில் ஒதுங்கினன் இருப்ப மற்றவன் உதவுறுங் குமரர்,
நந்துறு பெருநீர்க் குடங்கரிற் கன்னல் நாடினர் நாழிகைப் பறையை,
முந்துற விரட்டிப் பதந்தொறுஞ் சென்று முறை முறை உரைத்தனர் திரிய. |
18 |
1661 |
தேர்த்திடும் உழுவைச் சூழலிற் சிலமான்
சென்றென அவுணர்தஞ் செறிவில்,
வேர்த்துடல் பதைப்ப வரும்பல முனிவர் வேறுவே றாசிகள் இசையா,
ஆர்த்திடும் ஒலியாற் கேட்டில வாமென் றஞ்சினர் அவருறு புலத்தைப்,
பார்த்திடுந் தோறும் வாழ்கெனப் பரவிப் பாணியை விரித்தனர் நிற்ப. |
19 |
1662 |
திருக்கிளர் பொன்னாட் டிந்திரன்
அல்லாத் தேவர்கள் யாவரும் அவுணர்,
நெருக்கினர் உந்த ஏகிநேர் புகுவோர் நெடுங்கடை காறுமுன் றள்ள,
வெருக்கொடு சென்று மீண்டுமற் றாகி வியன்கடை காவலர் புடைப்பத்,
தருக்குறும் அவையங் காணிய பெறாது தம்முளங் குலைந்தனர் திரிய. |
20 |
1663 |
வெற்றவெங் கதத்தர் அவுணர்கஞ் சுகிசேர்
மெய்யினர் வெறுக் கையஞ் சூரல்,
பற்றிடு சுரத்தர் செல்லெனுந் தெழிப்பர் பனிப்பிறை எயிற்றர் பல்லிமையோர்,
பொற்றட மகுடஞ் சிதறிடப் புடைப்போர் புயலுறு சூறையிற் றுரந்துஞ்,
சுற்றுற நிறுத்தும் இருத்தியும் புகுந்தோர் தொல்பெயர் செப்பிமுன் துதிப்ப. |
21 |
1664 |
பொன்றிகழ் கமலத் திதழெலாம் விரிந்த
போதினிற் பொகுட் டிடை தோறும்,
மின்றிகழ் நுசுப்பில் திருமக்ள் பலராய் வீற்றுவீ ற்றிருத்தலே போலக்,
குன்றுறழ் கொங்கை மங்கையர் பல்லோர் கொண்டுதன் னுறையுளிற் சென்று,
துன்றிய பலவாந் தீபிகைத் தட்டஞ் சொன்முறை யாசியிற் சுற்ற. |
22 |
1665 |
தென்னுறு பாலை குறிஞ்சியே மருதஞ
செவ்வழி யென்னுநா னிலத்திற்,
பின்னகம் புறமே அருகியல் மற்றைப் பெருகியல் உறழவெண் ணிரண்டாய்,
மன்னிய நாதத் திசைகளிற் பிறவில் வரம்பில வாயபாட் டதனுட்,
கின்னரர் சித்தர் இயக்கர்கந் தருவர் கிளத்துமங் கலத்தன இசைப்ப. |
23 |
1666 |
மாகநல் வேள்வி ஆற்றிய திறனும்
மதிமுடிப் பரனருள் அடைந்தே,
ஏகிய திறனுந் தனதனை முதலா யாரையும் நிலையழித் தனவுஞ்,
சேகுறும் அண்டம் யாவையுங் கண்டு திருவுடன் அரசியற் றியதும்,
பூகத நிலையத் தவுணர்கள் பல்லோர் புடைதனில் முறைமுறை புகழ. |
24 |
1667 |
கார்த்திடும் அவுணர் திசையுளா ரேனோர்
கைதொழூஉத் தனது நோன் கழற்கால்,
தூர்த்திடு மலருந் தொல்பெருங் கவியுந் தூநெறி முனிவரர் தொகையுஞ்,
சார்த்தினர் வரையா மந்திர நெறியால் தலைத்தலை யாசிகள் சாற்றிச்,
சேர்த்தனர் சிந்துந் துணருமக் கதமுஞ் சீர்த்தகால் வீசினன் திரிய. |
25 |
1668 |
ஆடியல் முறையை இயற்றினர் தமக்கும்
அடைந்துதற் புகழுநர் தமக்கும்,
பாடியல் முறையில் வல்லுநர் தமக்கும் பரிவுசெய் தலைவர்கள் தமக்கும்,
பீடுறு மகுடங் கடகநூல் முதலாம் பேரணி மணித் துகில் பிறவும்,
மாடுறு நிதியும் ஏனவும் நின்று மலர்க்கைநீட் டினதொறும் வழங்க. |
26 |
1669 |
தேவரும் ஏனை முனிவரும் பிறருஞ்
செய்துறாத் தங்கள்பா லன்றி,
ஏவர்பா லானும் இறைவனாம் ஒருதான் ஏதம்நோக் குற்றனன் வெகுளின்,
ஆவிய திழப்பார் போல்வெரீஇப் புகழ்ந்தும் அவனுவப் புற்றிடின் உய்ந்தும்,
ஓவற நிற்பர் அசனிவீழ் தோறும் உரைக்குமந் திரத்தினோர் என்ன. |
27 |
1670 |
இன்னன பலபல எய்தச் சூரனாம்
மன்னவன் இருத்தலும் மற்றவ் வெல்லையில்
தொன்னகர் அணித்துறத் துன்மு கத்தினாள்
தன்னொடும் அசமுகி தான்வந் தெய்தினாள். |
1 |
1671 |
மோட்டுறு மகேந்திர முதிய மாநகர்
கூட்டுறு திருவெலாங் குலைய முன்னவள்
மாட்டுறு துணையொடு வந்துற் றாலெனக்
கீட்டிசை வாய்தலைக் கிட்டி னாளரோ. |
2 |
1672 |
கெழுதரும் அசமுகக் கெடல ணங்குதன்
பழிதரு கையினைப் பார்த்து நேர்ந்துளார்
அழிதரு துன்புகொண் டழலில் சீறினார்
இழிதரும் இச்செயல் யார்செய் தாரெனா. |
3 |
1673 |
மானமில் அசமுகி மகேந்தி ரப்புரந்
தானுறு துயர்க்கொரு தாரி காட்டல்போல்
ஊனுறு குருதிகை யுகுப்பச் சென்றுழி
யானது கண்டனர் அவுணர் யாவரும். |
4 |
1674 |
வட்டுறு பலகையின் வல்ல நாய்நிரைத்
திட்டனர் கவற்றினை இசைத்த சூளொடுங்
கிட்டினர் இடந்தொறுங் கெழுமி யாடினர்
விட்டனர் அத்தொழில் விரைந்துற் றார்சிலர். |
5 |
1675 |
தெரிதரு கரியபொன் திரித்திட் டாலெனப்
புரிதரு மருப்புடைப் புயலின் செச்சையை
முரிவரு பேரமர் மூட்டிக் கண்டுளார்
பரிவொடு பிரிந்தயல் படர்கின் றார்சிலர். |
6 |
1676 |
கார்ப்பெயல் அன்னதோர் கடாங்கொள்
மால்கரி
கூர்ப்புறு மருப்புமெய் குளிப்பச் சோரிநீர்
ஆர்ப்பொடு தத்தமில் ஆடல் செய்வது
பார்ப்பது விட்டனர் படர்கின் றார்சிலர். |
7 |
1677 |
துய்யதோர் கிஞ்சுகச் சூட்டு வாரணம்
மொய்யொடு தன்னுயிர் முடியும் எல்லையுஞ்
செய்யுறு வெஞ்சினச் செருவை நோக்கினார்
ஒய்யென நீங்கியே யுறுகின் றார்சிலர். |
8 |
1678 |
ஊனமில் பலபணி யுடன்று சீறியே
பானுவை நுகரவிண் படரு மாறென
வானிகள் ஓச்சினர் வானிற் கைவிடா
மேனிகள் வியர்ப்புற வெகுண்டுற றார்சிலர். |
9 |
1679 |
வாம்பரி தேர்கரி மானம் பாண்டில்கள்
ஏம்பலோ டூர்ந்திட இயற்றுங் கற்பொரீஇ
யாம்பொருள் அல்லதொன் றடைவ தென்னெனச்
சோம்புதல் இன்றியே தொடர்கின் றார்சிலர். |
10 |
1680 |
குறிகெழு வௌ�லொடு குற்றி நாட்டியும்
அறிகுறி தீட்டியும் அவையி லக்கமா
எறிகுறு படையினை எய்யுங் கோலினை
நெறிதொறும் விட்டவண் நேர்கின் றார்சிலர். |
11 |
1681 |
நாந்தகம் ஆதியா நவிலுந் தொல்படை
ஆய்ந்திடும் விஞ்சைகள் அடிகள் முன்னமாய்
ஏய்ந்திடுங் கழகமுற் றியற்று மாறொரீஇப்
போந்தனர் ஒருசிலர் பொருமல் மிக்குளார். |
12 |
1682 |
வாட்படு கனலிகால் வானின் கண்ணவாங்
காட்புறு நரம்பியாழ் காமர் வீணைகள்
வேட்புறும் ஈர்ங்குழல் மிடறு காலிசை
கேட்பது விட்டவண் கிட்டி னார்சிலர். |
13 |
1683 |
நாடக நூல்முறை நுனித்து நன்றுணர்
கோடியர் கழாயினர் கூத்தர் ஏனையோர்
ஆடுறு கோட்டிகள் அகலுற் றங்ஙனங்
கூடினர் ஒருசிலர் குலையும் மெய்யினார். |
14 |
1684 |
புலப்படு மங்கலப் பொருள்முற் றுங்கொடு
நலப்படு வேள்விகள் நடத்திக் கேளொடு
பலப்பல வதுவைசெய் பான்மை நீத்தொராய்க்
குலைப்புறு கையொடுங் குறுகுற் றார்சிலர். |
150 |
1685 |
மாலொரு மடந்தைபால் வைதது முன்னுறு
சேல்விழி யொருத்திபாற் செல்ல வூடியே
மேலுறு சினத்திகல் விளைக்க நன்றிது
காலமென் றுன்னியே கழன்றுற் றார்சிலர். |
16 |
1686 |
தோடுறு வரிவிழித் தோகை மாருடன்
மாடம திடைதொறும் வதிந்த பங்கயக்
காடுறு பூந்தடங் காமர் தண்டலை
ஆடலை வெறுத்தெழீஇ யடைகின் றார்சிலர். |
17 |
1687 |
சுள்ளினைக் கறித்தனர் துற்று வாகையங்
கள்ளினைக் கொட்பொடு களிக்கும் நெஞ்சினார்
உள்ளுறுத் தியபுலன் ஊசல் போன்றுளார்
தள்ளுறத் தள்ளுறத் தளர்ந்துற் றார்சிலர். |
18 |
1688 |
அனையபல் வகையினர் அவளைக் கண்டுளார்
பனிவரு கண்ணினர் பதைக்கும் நெஞ்சினர்
கனலொடு தீர்ப்புகை காலு யிர்ப்பினர்
முனிவுறு கின்றனர் மொழிகின் றார்இவை. |
19 |
1689 |
வேறு
அந்தகன் ஒருத்தற் பேரோன் ஆடல்வல் லியத்தோ னாதி
வந்திடும் அவுணர் தம்மை மதிக்கிலா வலியோர் தம்மை
முந்துறு புரத்தை அட்டு முழுவதும் முடிப்பான் நின்ற
செந்தழல் உருவத் தண்ணல் செய்கையோ இனைய தென்பார். |
20 |
1690 |
மேதியஞ் சென்னி வீரன் வெவ்வலி
நிசும்பன் சும்பன்
கோதறு குருதிக் கண்ணன் குருதியங் குரத்தன் முந்தே
பூதலம் புரந்த சீர்த்திப் பொருவில்தா ரகனே பண்டன்
ஆதியர் ஆயுள் கொண்ட ஐயைதன் செயலோ என்பார். |
21 |
1691 |
சிரபத்தி அளவை யில்�த் திறலரி ஒருநாற்
றந்தக்
கரபத்தின் அண்ணல் வானோர் யாரையும் கலக்கஞ் செய்ய
வரபத்தி புரியா அன்னோர் வணங்கினர் அடைய அந்நாட்
சரபத்தின் வடிவங் கொண்டான் தன்செய லாங்கொல் என்பார். |
22 |
1692 |
வண்டுளர் கமலச் செங்கண் மாயனுந் தூய
நீலங்
கண்டம தடைத்த தேவுங் கலந்தனர் தழுவிச் சேரப்
பண்டவர் புணர்ப்புத் தன்னில் உருத்திரர் பரிசா லுற்ற
செண்டுறு கரத்து வள்ளல் செய்கையே போலும் என்பார். |
23 |
1693 |
பிளிற்றுறு குரலின் நால்வாய்ப்
பெருந்துணை எயிற்றுப் புன்கண்
வௌ�ற்றுறு தடக்கை கொண்ட வேழமா முகத்தெம் மேலோன்
ஔ�ற்றுறு கலன்மார் பெய்தி உயிர்குடித் துமிழ்ந்த தந்தக்
களிற்றுடை முகத்துப் பிள்ளை செய்கையோ காணும் என்பார். |
24 |
1694 |
ஈசனை மதிக்கி லாதே யாமுதற் கடவு
ளென்று
பேசிடு தலைவர்க் கேற்ற பெற்றியால் தண்டம் ஆற்றும்
ஆசறு சங்கு கன்னன் அகட்டற் குண்டம் போல்வான்
தேசுறு பானு கம்பன் முதலினோர் செயலோ என்பார். |
25 |
1695 |
நஞ்சுபில் கெயிற்றுப் புத்தேள்
நாகணைப் பள்ளி மீது
தஞ்ச மொடிருந்த அண்ணல் தன்செய லாமோ என்பார்
அஞ்சுவன் இனைய செய்கைக் கனையது நினைவன் றென்பார்
நெஞ்சினும் இதனைச் செய்ய நினைக்குமோ மலரோன் என்பார். |
26 |
1696 |
புரந்தர னென்னும் விண்ணோன்
புணர்த்திடு செயலோ என்பார்
கரந்தனன் திரிவான் செய்ய வல்லனோ கருத்தன் றென்பார்
இருந்திடு கடவு ளோர்கள் இழைத்திடு விதியோ என்பார்
நிரந்துநம் பணியின் நிற்போர் நினைப்பரோ இதனை என்பார். |
27 |
1697 |
கழைத்துணி நறவ மாந்திக் களிப்புறா
உணர்ச்சி முற்றும்
பிழைத்தவ ராகும் அன்றேல் பித்தர்செய் தனராம் என்பார்
இழைத்தநா ளெல்லை சென்றோர் இயற்றியார் யாரோ என்பார்
விழுப்பெரு முனிவா� சொல்லால் வீழ்ந்ததோ இவர்கை என்பார். |
28 |
1698 |
அங்கியின் கிளர்ச்சி யேபோல்
அவிர்சுடர்க் கூர்வாள் தன்னைத்
தங்களி லேந்தி இன்னோர் சான்றசூள் உறவு சாற்றித்
துங்கமொ டமரின் ஏற்று முறைமுறை துணித்தார் கொல்லோ
இங்கிவர் இருவர் கையும் இற்றன காண்மின் என்பார். |
29 |
1699 |
ஆரிவள் கரத்தி லொன்றை அடவல்லார்
எவர்கண் ணேயோ
பேருறு காதல் கொண்டு பெண்மதி மயக்கந் தன்னாற்
சீரிய வுறுப்பி லொன்று சின்னமாத் தருவ னென்று
கூருடை வாளால் ஈர்ந்து கொடுத்தனள் போலும் என்பார். |
30 |
1700 |
கேடுறும் இனையள் தன்னைக் கேட்பதென்
இனிநாம் என்பார்
நாடிநாம் வினாவி னோமேல் நம்மெலாம் முனியும் என்பார்
மாடுறப் போவ தென்னை மாநில வரைப்பின் காறும்
ஓடியே அறிதும் என்பார் இனையன வரைத்த லோடும். |
31 |
1701 |
சொல்லியற் சூரன் தங்கை துன்முகி யோடு
கைபோய்
வல்லையிற் போதல் கேளா மம்மருற் றவுண மாதர்
சில்லியற் கூந்தல் தாழத் தெருத்தொறுஞ் செறிந்து கஞ்சம்
ஒல்லைமுத் துதிர்ப்ப தென்ன ஒண்கணீர் உகுத்துச் சூழ்ந்தார். |
32 |
1702 |
அந்நகர் மகளிர் யாரும் ஆடவர் யாருஞ்
சூழ்ந்து
துன்னினர் இனைய வாற்றால் துயருழந் திரங்கிச் சோரப்
பின்னவர் தொகுதி நீங்கிப் பிறங்குகோ நகரம் போந்து
மன்னவர் மன்னன் வைகும் மன்றினுக் கணிய ளானான். |
33 |
1703 |
மறிமுக முடைய தீயாள் மன்றினுக் கணிய
ளாகிக்
கிறிசெயும் அன்னை தன்னைக் கேளிரை மருகா னோரைத்
திறலுடை முனைனை யோரைத் சிந்தையில் உன்னி யாண்டைப்
பொறிமகள் இரியல் போகக் கதறியே புலம்ப லுற்றாள். |
1 |
1704 |
வேறு
வெறியாரும் இதழிமுடிப் பண்ணவர்கோன் அருள்புரிந்த மேனாள் வந்தாய்,
பிறியாது நுமைப்போற்றித் திரிவனென்றாய் அம்மொழியும் பிழைத்தாய் போலும்,
அறியாயோ கரம்போன தஞ்சலென்றாய் இலைதகுமோ அன்னே யன்னே,
சிறியேனான் பெண்பிறந்து பட்டபரி பவமென்று தீரும் ஐயோ. |
2 |
1705 |
தாதையா னவர்அளித்த மைந்தர்கணே
விருப்புறுவர் தாயர்பெற்ற,
மாதரார் பால்உவகை செய்திடுவர் ஈதுலக வழக்கம்என்பார்,
ஆதலால் என்துயரம் அகற்றவந்தாய் இலையந்தோ ஆரு மின்றி,
ஏகிலார் போல்தமியேன் கரமிழந்தும் இவ்வுயிர்கொண் டிருப்ப தேயோ. |
3 |
1706 |
வருவீரெங் கணுமென்றே அஞ்சாது
புலோமசையை வலிதே வௌவிப்,
பெருவீர முடன்வந்ததேன் எனதுகர தலந்துணித்துப் பின்னே சென்று,
பொருவீர மாகாளன் அவையுமீட் டேகினன் அப்பொதும்பர்க் கானில்,
ஒருவீருஞ் செல்லீரோ நமரங்காள் நீருமவர்க் கொளித்திட் டீரோ. |
4 |
1707 |
புரங்குறைத்தும் வலிகுறைத்தும்
பொங்கியதொன் னிலைகுறைத் தும்புரையு றாத,
வரங்குறைத்தும் புகழ்குறைத்தும் மறையொழுக்கந் தனைக்குறைத்தும் மலிசீர் தொல்லை,
உரங்குறைத்தும் வானவரை ஏவல்கொண்டோம் என்றிருப்பீர் ஒருவன் போந்தென்,
கரங்குறைத்த தறியீர்நுந் நாசிகுறைத் தனன்போலுங் காண்மின் காண்மின். |
5 |
1708 |
மேயினான் பொன்னுலகின் மீன்சுமந்து
பழிக்கஞ்சி வெருவிக் காணான்,
போயினான் போயினான் வலியிலனென் றுரைத்திடுவீர் போலும் அன்னான்,
ஏயினான் ஒருவனையே அவன்போன்தென் கரந்துணித்தான் இல்லக் கூரைத்,
தீயினார் கரந்ததிறன் ஆயிற்றே இந்திரன்றன் செயலு மாதோ. |
6 |
1709 |
எள்ளுற்ற நுண்டுகளில் துணையாகுஞ்
சிறுமைத்தே எனினும் யார்க்கும்,
உள்ளுற்ற பகையுண்டேன் கேடுளதென் றுரைப்பர் அ�துண்மை யாமால்,
தள்ளுற்றுந் தள்ளுற்றும் ஏவல்புரிந் துழல்குலிசத் தடக்கை அண்ணல்,
கள்ளுற்று மறைந்திருந்தே எனதுகரந் துணிப்பித்தான் காண்மின் காண்மின். |
7 |
1710 |
சங்கிருந்த புணரிதனில் நடுவிருந்த
வடவையெனுந் தழலின் புத்தேள்,
உங்கிருந்த குவலயமோ டவைமுழுதுங் காலம்பார்த் தொழிப்ப தேபோல்,
அங்கிருந்தென் கரந்துணித்த ஒருவோனும் உங்களைமேல் அடுவன் போலும்,
இங்கிருந்தென் செய்கின்றீர் வானவரைச் சிறயரென இகழ்ந்திட் டீரே. |
8 |
1711 |
முச்சிரமுண் டிரணியனுக் கிருசிரமுண்
டந்தவன்னி முகற்கு மற்றை,
வச்சிரவா குவுக்கொருபான் சிரமுண்டே அவைவாளா வளர்த்திட் டாரோ,
இச்சிரங்கள் என்செய்யும் ஒருசிரத்தோன் என்கரத்தை இறுத்துப் போனான்,
அச்சுரருக் கஞ்சுவரே பாதலத்தில் அரக்கரிவர்க் களியர் அம்மா. |
9 |
1712 |
பிறைசெய்த சீருருவக் குழவியுருக்
கொண்டுறுநாட் பெயர்ந்து வானின்,
முறைசெய்த செங்கதிரோன்ஆதபமெய் தீண்டுதலும் முனிந்து பற்றிச்,
சிறைசெய்த மருகாவோ மருகாவோ ஒருவனெனைச் செங்கை தீண்டிக்,
குறைசெய்து போதுவோ வினவுகிலாய் ஈதென்ன கொடுமை தானே. |
10 |
1713 |
நீண்டாழி சூழுலகை ஓரடியால்
அளவைசெய்தோன் நேமி தன்னைப்,
பூண்டாய்பொன் னாரமென இந்நாளும் ஓர்பழியே பூணா நின்றான்,
ஈண்டாருங் குறும்பகைஞர் என்ரம்போந் திறமியற்ற இனிது வையம்,
ஆண்டாய்நந் தாரகனே குறைமதிநீ ரோநின்பேர் ஆற்றல் அம்மா. |
11 |
1714 |
வையொன்று வச்சிக்கைப் புரந்தரனைத்
தந்தியொடும் வான்மீச் செல்ல,
ஒய்யென்று கரத்தொன்றால் எறிந்தனைவீழ்ந் தனன்கிடப்ப உதைத்தாய் என்பர்,
மெய்யென்று வியந்திருந்தேன் பட்டிமையோ அவன் தூதன் வெகுண்டு வந்தென்,
கையொன்று தடிந்தானே சிங்கமுக வீரவிது காண்கி லாயோ. |
12 |
1715 |
சூரனாம் பெயர்படைத்த அவுணர்கள்தம்
பெருவாழ்வே தொல்லை யண்டஞ்,
சேரவே புரந்ததனைநின் பரிதிசெங்கோல் குடை யெங்குஞ் செல்லா நிற்கும்,
ஆரும்வா னவர்அவற்றிற் கச்சுறுவர் பொன்னகரோன் ஆணை போற்றும்,
வீரமா காளனிடைக் கண்டில னால்வலியர்முனம் மேவு றாவோ. |
13 |
1716 |
ஒன்னார்தஞ் சூழ்ச்சியினால்
ஒருமுனிவன் என்சிறுவர் உயிர்கொண் டுற்றான்,
இந்நாளில் அ�தன்றி ஒருவனைக்கொண் டெனது கையும் இழப்பித் தாரே,
பின்னாள்இவ் வருத்தமுற நன்றரசு புரிந்தனையால் பிழைஈ தன்றோ,
மன்னாவோ மன்னாவோ யான்பட்ட இழி வரவை மதிக்கி லாயோ. |
14 |
1717 |
காவல்புரிந் துலகாளும் அண்ணாவோ
அண்ணாவோ கரமற் றேன்காண்,
ஏவரெனக் குறவாவர் ஊனமுற்றோர் இருப்பதுவும் இழுக்கே அன்றோ,
ஆவிதனை விடுவேன்நான் அதற்குமுனம் என்மானம் அடுவதையோ,
பாவியொரு பெண்பிறந்த பயனிதுவோ விதிக்கென்பாற் பகைமற் றுண்டோ. |
15 |
1718 |
என்று பற்பல உரைத்தனள் ஆவலித்
திரங்கிப்
பின்றொ டர்ந்திடு துன்முகி தன்னொடும் பெயரா
மன்றின் மேவரு சூரபன் மாவெனும் வலியோன்
பொன்ற டங்கழல் முன்னரே வீழ்ந்துபோய்ப் புரண்டாள். |
1 |
1719 |
புரண்டு மற்றவள் சகடையிற்
பெயர்ந்திடும் போழ்தின்
மருண்டு பேரவை யகத்தினோர் அஞ்சினர் மறுக
அரண்ட ருங்கழற் சூரபன் மாவெனும் அவுணன்
இரண்டு நோக்கினுந் தீயெழ விழித்திவை இசைப்பான். |
2 |
1720 |
என்னை யோவிவட் புலம்புதி அசமுகத்
திளையோய்
உன்னை யோர்கிலா தென்னையும் நினைகிலா துன்கை
தன்னை யும்மிவள் கரத்தையும் வாளினால் தடிந்து
முன்னை யோரென இருந்துளார் யாரென மொழிந்தான். |
3 |
1721 |
புரந்த ரன்புணர் புலோமசை புவியிலோர்
புறத்தில்
இருந்து நோற்றலும் உன்றனக் கென்றுசென் றெடுத்தோம்
விரைந்து வந்தொரு விண்ணவன் எங்களை வெகுண்டு
கரந்து ணித்துமற் றவளைமீட் டேகினன் கண்டாய். |
4 |
1722 |
என்னு முன்னரே சொரிந்தன விழிகனல்
எரிவாய்
துன்னு தீம்புகைப் படலிகை உமிழ்ந்தது துண்டம்
வன்னி காலுறு காலென உயிர்த்தது மதிபோல்
மின்னல் வாளெயி றிதழினை மறைத்தது விரைவில். |
5 |
1723 |
வெடிக்க லுற்றதெவ் வண்டமென் றையுற
விரைவில்
இடிக்க லுற்றது தீயவாய் நகைவந்த திதழுந்
துடிக்க லுற்றது புருவமேல் நிமிர்ந்தது துள்ளிக்
கடிக்க லுற்றன எயிற்றணி கறகற கலிப்ப. |
6 |
1724 |
புயற்பு றந்தொறு நித்தில முதிர்ந்தவா
போல
வியர்ப்பு மிக்கன முறைமுறை அன்னது விளிய
மயிர்ப்பு றந்தொறும் புலிங்கம்வந் தடைந்தன வல்லே
செயிர்ப்பெ னுங்கனல் கிளர்ந்தது சிந்தையின் நின்றும். |
7 |
1725 |
நீடு வெஞ்சினம் இத்திறம் அவனிடை நிகழ
ஓடு கின்றனர் திசையுளார் உலைந்தனர் முனிவர்
ஆட கன்றதோர் தெய்வதக் கணிகையர் அவன்சீர்
பாடு கின்றவர் யாவரும் பதைபதைத் திரிந்தார். |
8 |
1726 |
தாங்க லுற்றிடு திசைக்கரி ஓடிய
தரிக்கும்
ஓங்கல் மேருவுங் குலைந்தன பணியெலாம் உலைந்த
ஏங்கு கின்றனர் வானவர் நடுங்கினர் இரவி
தீங்கு நாடியே பொயினன் மீண்டனன் திரிந்தான். |
9 |
1727 |
பார்ந டுங்கின விண்ணெலாம் நடுங்கின
பரவை
நீர்ந டுங்கின அயன்பதம் நடுங்கின நெடியோன்
ஊர்ந டுங்கின அவுணரும் நடுங்கினர் உலகத்து
ஆர்ந டுங்கிலர் அவன்சினஞ் சிறியதோ அன்றே. |
10 |
1728 |
அண்ண லம்புகழ்ச் சூரபன் மாவென அறையுங்
கண்ணில் புன்மனத் தவுணர்கோன் இத்திறங் கனன்று
துண்ணெ னச்சினத் தமரர்கள் யாரையுந் தொலைப்பான்
எண்ணி யுற்றிடும் இளையரைப் பார்த்திவை இசைப்பான். |
11 |
1729 |
மீனெ டுத்துநம் மேவலில் திரிந்தவிண்
ணவர்கோன்
கானி டத்திருந் தொருவனைக் கொண்டிவர் கரங்கள்
ஊனெ டுத்திடத் தறித்தனன் என்றிடின் ஒழிந்த
மானு டத்தரும் அடுவரே இங்கினி மாதோ. |
12 |
1730 |
பரம னேயலன் பங்கயத் தவிசினோன் அல்லன்
திருவு வாவரு மார்புடைத் தேவனும் அல்லன்
இரியும் வாசவன் தானலன் அவன்பணி இயற்றும்
ஒருவ னாமிவர் கைதடிந் தாவிகொண் டுறைவான். |
13 |
1731 |
விண்ம யங்குறு செருவிடைத் தானையால்
வீக்கி
எண்மை கொண்டுறும் அமரரைக் கொணர்தலும் எனது
கண்முன் நின்றிடும் அவுணர்தங் கழிபசி யொழிய
உண்மின் நீரெனக் காடுத்திலேன் அறநினைந் துற்றேன். |
14 |
1732 |
மறைவைத் தேயமர் கின்றதோர் வாசவன்
தனையும்
நறைவைத் தேயமர் பூங்குழற் சசியையும் நான்முன்
சிறைவைத் தேனிலன் சிறியரென் றுன்னினன் தீயின்
குறைவைத் தோர்கள்போல் ஆயினேன் இத்திறங் குறியேன். |
15 |
1733 |
கைப்ப டுத்திய உயிர்ப்பலி கடிதின்உண்
ணாது
தப்ப விட்டதோர் மால்கரி யொத்தனன் தமியேன்
இப்பு விக்கணே இவர்கரங் குறைத்திட்ட தெனது
மெய்ப்ப டுத்திய ஊனமே அலதுவே றுண்டோ. |
16 |
1734 |
பூத ரந்தனைச் சிஆதைடிந் திடுபுரந்
தரனை
மாத ரார்புகழ் சசிதனை நாடுவான் வழிக்கொள்
தூதர் இன்னமுங் கண்டிலர் கொல்அவர் துணிவால்
ஏத மின்றிஇப் புடவியிற் குறும்புசெய் திருத்தல். |
17 |
1735 |
நீரி ருந்தனிர் புதல்வரும் இருந்தனர்
நிகரில்
தேரி ருந்தது நேமியும் இருந்தது சிறிதென்
பேரி ருந்தது யானுமிங் கிருந்தனன் பின்னை
யாரி ருந்துமென் இருந்துமா கின்றதென் அந்தோ. |
18 |
1736 |
வான ளாவுவெண் பஞ்சியின் மால்வரை வறிதே
தீநி லாயதோர் அளவையின் முடிந்திடுஞ் செயல்போல்
தூநி லாவெயிற் றனையர்கைச் சோரியின் துளியால்
போன தேபல அண்டமுங் கொண்டநம் புகழே. |
19 |
1737 |
இழிவும் இங்கிவர்க் குறுவதே இமையவர்
தங்கள்
வழியின் நின்றதோர் அரந்தையும் இவ்விடை வருமே
பழியும் என்னிடத் தெய்துமே என்றும்இப் பழிதான்
ஒழிவ தில்லையே பொறுப்பதே அதனையென் னுயிரே. |
20 |
1738 |
மல்ல லந்தடந் தேர்கடக் கைம்மலை வயமா
எல்லை யில்லவும் அவுணரும் எங்கணும் இருப்பச்
சில்லை மென்குழல் அசமுகி படுவதித் திறமோ
நல்ல நல்லஎன் னரசியல் முறையென நக்கான். |
21 |
1739 |
நக்க காலையிற் காலுறும் வார்கழல் நரல
மக்கள் தங்களிற் பானுகோ பப்பெயர் வலியோன்
செக்கர் அங்கியிற் கிளர்ந்துதன் தந்தைமுன் செவ்வே
புக்கு வந்தனை செய்துநின் றினையன புகல்வான். |
22 |
1740 |
ஐய கேண்மதி நமதுகுற் றேவலால்
அழுங்கித்
தொய்ய லுள்ளமோ டிந்திரன் கரந்தனன் சுரரும்
நொய்யர் இத்தொழில் நினைப்பதுஞ் செய்யலர் நுங்கை
கையி ழந்ததென் மாயமோ உணர்கிலேன் கவல்வேன். |
23 |
1741 |
வந்தி பெற்றிடு கான்முளை எட்டிவான்
தவழும்
இந்து வைக்கரங் கொண்டனன் என்பதோர் இயல்பே
அந்த ரத்தரில் ஒருவனே இனையவர் அங்கை
சிந்தி யுற்றனன் என்றுநீ உரைத்திடுந் திறனே. |
24 |
1742 |
வலியர் ஆகியே பு��ந்தனர் எனினுமற்
றவர்கள்
மெலியர் ஆற்றநீ வெகுளுறுந் தகைமைமே வினரோ
ஒலித ருங்கடல் மீன்சுமந் துன்பணி யுழந்தார்
அலியர் அல்லதை ஆண்டகை யார்கொலோ அனையோர். |
25 |
1743 |
நறைம லர்க்கம லத்தனை வெகுளினும் நாரத்
துறையுள் வைகிய முகுந்தனை வெகுளினும் உம்பர்
எறிபு னற்சடை இறைவனை வெகுளினும் இயல்பே
சிறியர் தம்மையும முனிதியோ பெருமையிற் சிறந்தோய். |
26 |
1744 |
முத்தி றப்படுந் தேவரே அல்லதுன்
முனிவிற்
கெத்தி றத்தினர் இயைந்துளோர் இளையர்க்கும் இனைத்தே
சித்த முற்றிடும் வெகுளியைத் தீருதி இன்னோர்
கைத்த லந்தனை இழந்துழிப் பெயருவன் கடிதின். |
27 |
1745 |
விசைய வாளினால் இங்கிவர் கரந்தனை
விட்டும்
அசைவில் ஆடவன் றன்னைநின் னுளத்தின்மால் அளித்த
சசியை இந்திரக் கள்வனைத் தம்முயிர் தமக்குப்
பசையி லாததோர் அமரரைப் பற்றினன் படர்வேன். |
28 |
1746 |
அங்கண் உற்றிலர் மறைகுவ ரெயெனில்
அகிலம்
எங்கும் நாடுவன் அனையர்வாழ துறக்கநா டேகிச்
செங்க னற்கொள அளிக்குவன் அமரர்தந் திறத்தை
மங்கை மாரொடும் பற்றியோர் கன்னலின் வருவேன். |
29 |
1747 |
ஈதி யால்விடை தமியனுக் கென்றுநின்
றிரப்பத்
தாதை யாகிய அவுணர்கோன் முனிவினைத் தணிந்து
போதி மைந்தநின் படையொடும் ஆங்கெனப் புகல
ஆத வன்பகை அழகிதென் றுவகையை அடைந்தான். |
30 |
1748 |
ஓகை சேர்தரு விண்ணவர் மணிமுடி
உரிஞ்சிச்
சேகை சேர்தரு தாதைதாள் உச்சியிற சேர்த்தி
வாகை சேர்சிறு தந்யைர் தம்மையும் வணங்கிப்
போகை சேர்விடை கொண்டுதன் னிருக்கையிற் போனான். |
31 |
1749 |
மைந்தன் ஏகலுஞ் சூரபன் மாவெனும்
வலியோன்
உந்து தீவிழி உழையரிற் சிலவரை நோக்கி
அந்த நான்முகன் இங்ஙனம் வருகுவன் அவனை
நந்தம் முன்னுறக் கொடுவரு வீரென நவின்றான். |
32 |
1750 |
எங்கண் உற்றுளான் அயனெனக் கூவினர்
ஏகிப்
பங்க யத்தனைக் கண்டுநிற் கொணர்கெனப் பணித்தான்
நங்கள் கொற்றவன் என்றலும் ஒல்லென நடவா
அங்கம் ஐந்துடன் அவுணர்கள் மன்னன்முன் அணைந்தான். |
33 |
1751 |
அணைந்த பூமகன் வைகலே பக்கநாள்
அவற்றாற்
புணர்ந்த யோகொடு கரணமே லுள்ளன புகல
நுணங்கு சிந்தையால் அகிலமும் படைத்துளாய் நொய்தில்
தணந்த கையிவர்க் குதவுதி என்றனன் தலைவன். |
34 |
1752 |
என்று தானிவை மொழிதலுந் திசைமுகன்
இசைந்து
வன்றி றற்கரங் கூடுக மற்றிவா�க் கெனலும்
ஒன்றொர் மாத்திரைப் பொழுதின்முன் அவைவளர்ந் துறலும்
நன்று நன்றுநின் வல்லபம் என்றுசூர் நவின்றான். |
35 |
1753 |
அன்ன தற்பின்னர் அசமுகத் தணங்கினை
அரசன்
தொன்ன கர்க்குளே இருந்திடச் செய்துதுன் முகத்தி
தன்னை மைந்தனோ டுய்த்தனன் புலோமசைத் தையல்
முன்னி ருந்துழி காட்டியே வருகென மொழிந்து. |
36 |
1754 |
உழைத்திர் இந்தபல் சிலதரை நோக்கியே
உலகில்
தழைத்த செங்கதிர்க் கடவுளைத் தாரகா கணத்தை
எழுச்சி கொண்டுறு கோளினை யாரையும் இன்னே
அழைத்தி ராலெனச் சொற்றனன் அவுணர்கட் கரசன். |
37 |
1755 |
சேடர் பற்பலர் விடைகொடு சேட்புலஞ்
சென்று
நேடி அன்னவர் தமையெலாங் கொணர்ந்துமுன் நிறுவ
மூடு கொண்டலிற் கரந்தமின் பின்னெழு முறைபோல்
கேடு கொண்டதொல் சினவெரி சூரனுட் கிளர்ந்த. |
38 |
1756 |
வியர்க்கும் நெஞ்சினன் கதிர்
முதலோர்தமை விளியா
அயர்க்கை இன்றியே வானிடைத் திரியுநீர் அறியா
இயற்கை ஒன்றிலை எங்கைதன் செங்கையை எறிந்தோன்
செயற்கை காணுதிர் வறிதுநீர் இருந்ததென் சேணில். |
39 |
1757 |
இளையள் தன்கரங் குறைத்திடும் இமையவன்
உயிரைக்
களைதல் செய்திலீர் அல்லதேல் அனையனைக் கட்டித்
தளைசெய் திவ்விடைக் கொணர்ந்திலீர் அல்லதத் தலையில்
விளைவை வந்தெமக் குரைத்திலீர் நன்றுநும் மிகுதி. |
40 |
1758 |
மறத்தி றத்தினால் எங்கைதன் கையையோர்
வலியோன்
குறைத்த தற்குநீர் அகத்தரே அல்லது குறிக்கில்
புறத்தர் அன்றுநம் மாணையால் இத்தொழில் புரிவீர்
முறைத்தி றங்கொலோ நுங்களுக் கிதுவென மொழிந்தான். |
41 |
1759 |
நீதி இல்லவன் ஈங்கிஆவை உரைத்தலும்
நிருப
ஏதும் எங்களை வெகுளலை இங்கி இங்கிவள் கரத்தைக்
காது வான்றனைக் கண்டிலம் இன்றுசெல் கதியின்
மீது சென்றவெம் விழியென உரைத்தனர் விண்ணோர். |
42 |
1760 |
துண்ட மாகியே இவள்கரந் துணிபட்ட
செய்கை
கண்டி லார்களாங் கதியிடைச் சென்றவாங் கண்கள்
அண்டர் தஞ்செயல் அழகிதென் றனையரை யெல்லாந்
தண்டல் இல்லதோர் சிறைபுரி வித்தனன் தலைவன். |
43 |
1761 |
வேறு
தினகரன் முதலினோர் சிறையிற் புக்கபின்
வினைஞரிற் சிலா�தமை விளித்து நீவிர்போய்த்
துனைவரு மருத்துவர் தொகையைத் தம்மென
முனிவொடு தூண்டினன் முடிவி லாற்றலான். |
44 |
1762 |
ஒற்றரில் ஒருசிலர் ஒல்லை ஏகியே
குற்றமின் மருத்துவர் குழாத்தைக் கூவியே
பற்றிமுன் உய்த்தலும் பதைக்கும் நெஞ்சினான்
தெற்றென் ஆங்கவர்க் கிதனைச் செப்புவான். |
45 |
1763 |
வானிடை மண்ணிடை மாதி ரத்திடை
மேனிகழ் கடலிடை வியன்பி லத்திடை
ஊனிடை யுயிரிடை ஒழிந்து நின்றிடும்
ஏனைய பொருளிடை எங்கும் நிற்றிரால். |
46 |
1764 |
ஏணுறு கின்றஎன் இளையள் கையையோர்
சேணினன் வாள்கொடு சேதித் திட்டதைக்
காணுதிர் உமக்கெவர் கரக்கற் பாலினோர்
நீணகர் குறுகியிந் நிலைமை சொற்றிலீர். |
47 |
1765 |
தரியலர் சூழ்ச்சியால் தகுவர்க்
கிப்பழி
வருவது நன்றென மகிழ்ந்து வைகினீர்
பெருமிதம் நன்றெனப் பேச மாறுசொல்
உரையற நின்றனர் உலவைப் பண்ணவர். |
48 |
1766 |
வன்றிறல் இன்றியே மனத்தில் அச்சமாய்
நின்றிடு கால்களை நீடு கால்களிற்
துன்றிய கனைகழற் சூர னென்பவன்
ஒன்றொரு சிறைதனில் உய்த்திட் டானரோ. |
49 |
1767 |
ஈற்றினை இழைத்திட இருக்குங் கால்களைச்
சீற்றமொ டவுணர்கோன் சிறையில் வீட்டினான்
சாற்றிடின் உலகமேல் தவத்தி னால்வரும்
பேற்றினும் உளதுகொல் பெருமைத் தானதே. |
50 |
1768 |
திரிதத மருத்தரைச் சிறையில் வைத்தபின்
குரைகழல் வினைஞரைக் கூவி இற்றையாண்
டிருதுநன் மதிமுதல் எல்லை யாளரைத்
தருதிரென் றுரைத்தலுந தாழ்ந்து போயினார். |
51 |
1769 |
ஏவல ராயினோர் ஏகி யெல்லையின்
காவலராகிய கடவு ளோர்தமைக்
கூவினர் பற்றியே கொடுவந் துய்த்தலுந்
தேவர்கள் மாற்றலன் சீறிக் கூறுவான். |
52 |
1770 |
புல்லிய மகபதி புணர்த்த அச்செயல்
ஒல்லுவ தென்றதற் குள்ள மாகிநீர்
எல்லிரு மனமகிழ்ந் திருத்திர்� என்னொடுஞ்
சொல்லிய வந்திலீ ரியாண்டுந் துன்னினீர். |
53 |
1771 |
நிரந்தரம் நம்பணி நெறியின் நின்றுநீர்
இருந்ததிற் பயனெவன் இருக்கலா மையால்
வருந்தவ றென்சுரர் மருங்குற் றீரெனா
அருந்தளை இட்டனன் அவர்கள் தம்மையும். |
54 |
1772 |
தூவி கெழுவிய சூரன் பின்பில
ஏவலர் தங்களை விளித்திட் டிப்புவி
காவலர் தமையெலாங் கடிது வம்மெனக்
கூவுதிர் தம்மெனக் கூறித் தூண்டினான். |
55 |
1773 |
தூண்டலும் அளவைதீர் தூத ரோடியே
ஈண்டிய காவலர் இனத்தை மாநிலந்
தேண்டினர் பற்றியே சென்று வென்றிகொள்
ஆண்டகை இறைவன தவையின் உய்ப்பவே. |
56 |
1774 |
ஆக்கையில் வியர்ப்புற அச்சம் நாணுயிர்
தாக்குற நனியுளந் தளாக் கைதொழுங்
காக்குநா� தொகுதியைக் காவல் மன்னவன்
நோக்கினன் வெகுண்டிது நுவறல் மேயினான். |
57 |
1775 |
எளித்துற லின்றிகம் ஏவல் நீங்கியே
களித்திடு சசியொடுங் கடவுள் வாசவன்
ஔ�த்தனன் இம்பரின் உம்பர் இல்லைநீர்
அளித்தது சாவும் அழகி தாமரோ. |
58 |
1776 |
குறித்திடு புரைமனக் கொண்ட லூர்பவன்
நெறித்திகழ ஆணையின் நின்ற தூதுவன்
மறித்திரு முகனுடை மங்கை தன்கரம்
அறுத்தவண் இருந்தனன் அதுவுந் தேர்ந்திலீர். |
59 |
1777 |
மறங்கிளர் தேறல்வாய் மடுத்து வைகலுங்
கறங்குறு நிலையராய்க் கலங்கி னீர்கொலோ
உறங்கினி ரேகொலோ ஓம்பலீர் கொலோ
பிறங்குதொல் வளமையால் பித்துற் றீர்கொலோ. |
60 |
1778 |
ஓயுமென் பகைஞரோ டுறவுற் றீர்கொலோ
வாயவர் தங்களுக் கஞ்சி னீர்கொலோ
சேயிழை யாரிடைச் செருக்குற் றீர்கொலோ
நீயிர்கள் இருந்ததென் நிலைமை யென்னவே. |
61 |
1779 |
எண்டரும் எந்தைநீ இசைத்த தன்மையிற்
கொண்டிலம் ஒன்றுமக் குவல யந்தனைப்
பண்டுதொட் டளிக்குதும் பகைஞர் யாரையுங்
கண்டிலங் கரந்துறை கதையுங் கேட்டிலம். |
62 |
1780 |
தாயெனும் ஏழகத் தலையள் துன்முக
ஆயிழை யொடும்வரல் அதுவும் அன்னர்கை
போயதுந் தெரிந்திலம் புந்தி கொள்ளுதி
மாயமி தாகுமால் மன்ன என்னவே. |
63 |
1781 |
மிடைதரு வெறுக்கையை மிசைந்து
மால்கொளீஇப்
புடவியை யிடைதொறும் போற்றல் செய்திலீர்
இடையுற என்வயின் இனைய தோர்பழி
அடைவது மாயையாம் அழகிதே என்றான். |
64 |
1782 |
வேறு
ஒலிகெழும் உவரிப் புத்தேள் உள்ளுறை வடவைச் செந்தீத்
தொலைவுழி எழுவ தேபோல் சூரனுட் சினமீக் கொள்ள
மலிகதிர் இருள்புக் கென்ன வாளுரீஇ மருங்கே தானைத்
தலைவர் நின்றாரை ஏவித் தனித்தனி தண்டஞ் செய்வான். |
65 |
1783 |
சிற்சிலர் தமது நாவைச் செங்கையைச்
சேதித் திட்டான்
சிற்சிலர் துண்டந் தன்னைச் செவிகளைக் களைதல் செய்தான்
சிற்சிலர் மருமந் தன்னைச் சிறுபுறத் தொடுகொய் வித்தான்
சிற்சிலர் தாளைத் தோளைச் சென்னியைச் சேதிப் பித்தான். |
66 |
1784 |
எறிதரு கழற்காற் சூரன் இத்திறம்
பல்தண் டங்கள்
முறையினிற் செய்து சீய முழுமணித் தவிசில் தீர்ந்து
விறல்கெழும் இனையர் செல்ல விடைகொடுத் தயனை நோக்கி
மறைமுனி போதி யென்ன மற்றவன் இனைய சொற்றான். |
68 |
1785 |
மன்னவர் மன்ன கேண்மோ வான்கதிர்
உடுக்கள் ஏனோர்
இந்நில மடந்தை வேலைக் கிறையவர் யாரு மென்றும்
உன்னுடைப் பணியில் நிற்பர் உலகிவர் இன்றி யாகா
அன்னவர் பிழையுட் கொள்ளேல் அருஞ்சிறை சிடுத்தி என்றான். |
68 |
1786 |
குறையிரந் தினைய கூறிக் கோகன தத்தோன்
வேண்ட
நறையிருந் துலவு தாரோன் நன்றென இசைவு கொள்ளா
உறையிருந் திலங்கும் வாட்கை ஒற்றரை நோக்கி நந்தஞ்
சிறையிருந் தோரைத் தம்மின் என்றலுஞ் சென்றங் குய்த்தார். |
69 |
1787 |
வன்றளை உற்றோர் தம்மை மன்னவர் மன்னன்
பாரா
என்றுநம் பணியில் நிற்றிர் இந்திர னொடுசேர் கல்லிர்
சென்றிடு நுங்கள் தொன்மை செய்திட வென்ன அன்னோர்
நன்றிது புரிதும் என்னா நயமொழி புகன்று போனார். |
70 |
1788 |
போதலுங் கமலத் தோற்கும்
புதல்வர்க்கும் அமைச்சர் யார்க்கும்
மேதகு முனிவர் யார்க்கும் வியன்படைத் தலைமை யோர்க்கும்
போதலை உதவிச் சூரன் உறையுளிற் புகுந்தான் முன்செல்
ஆதவன் பகைஞன் செய்த செயலினை அறைத லுற்றேன். |
71 |
1789 |
எழிலிகள் மொய்த்ததன் இருக்கை போகிய
மழவுறு சூர்மகன் மாறி லாதபேர்
அழகினை மெய்கொள் அணிந்து தொல்படை
விழுமிய கொண்டனன் மிலைச்சித் தும்பையே. |
1 |
1790 |
இருவகைப் பத்துநூ றிவுளி பூண்டிடும்
ஒருதனித் தேர்தனை ஒல்லை ஊர்ந்துராய்த்
திருமுதற் கடைதனிற் செல்லும் எல்லையில்
விரைவினில் சுற்றின அனிக வௌ�ளமே. |
2 |
1791 |
நிரைத்தெழு தானவர் நீத்தம் ஆயிரம்
பரித்தொகை அன்னதே பாதி தேர்கரி
உரைத்தஅத் தானையோ டொல்லை ஏகினான்
திருத்தகும் இரவியைச் சிறையில் வீட்டினான். |
3 |
1792 |
கிளர்ந்தன தூளிகள் கெழீஇய வீரர்தோள்
வளர்ந்தன அவரணி மாலை யிற்படீஇ
உளர்ந்தன வண்டினம் உம்பர் தம்மனந்
தளர்ந்தன நௌ�ந்தனன் தரிக்குஞ் சேடனே. |
4 |
1793 |
பொள்ளென ஆண்டெழு பூமி பாரினுந்
தள்ளரும் விசும்பினும் நிரந்த தானவர்
எள்ளுறும் அமரர்தம் மிருக்கை நாடியே
உள்ளொடு பவத்துகள் ஒருங்கு சென்றபோல். |
5 |
1794 |
வேறு
ஏறிய பூழி நாப்பண் ஈண்டிய இவுளி வாயில்
வீறுகொள் களிற்றுக் கையின் விலாழியுங் கரிக்க போலத்
தூறிய கடமும் ஒன்றாய் ஒழுகுதன் மழைசூழ குன்றின்
ஆறுகள் இழிந்து வையத் தடைவது போலு மன்றே. |
6 |
1795 |
பானிற முதல வாய பல்வகை வண்ணத் துள்ள
கானிமிர் துவசக் காடுங் கவிகையின் கானு மொய்த்த
சேனமுங் கழுகும் ஏனைச் சிறைகெழு புள்ளும் வெம்போர்
ஊனுகர் பொருட்டுத் தாமும் உம்பருற் றிடுவ தேபோல். |
7 |
1796 |
மண்ணுறு துகளின் மாலை மகேந்திர மூதூர்
முற்றுந்
துண்ணென மறைத்த லோடுந் துளங்கியே சூரற் கஞ்சி
விண்ணிடை மதிபல் கோடி மேவல்போல் வௌ�யே செய்ய
தண்ணிழற் கவிகை ஈட்டந் தலைத்தலை ஈண்டிற் றன்றே. |
8 |
1797 |
முறையிது நிகழ மைந்தன் முதியமா நகரம்
நீங்கி
அறைகடல் அகழி தாவி அவனியின் எல்லை யேகிச்
சிறைவரு துன்மு கத்துத் தெரிவையை நோக்கி நுங்கை
எறிசுடர் வாளால் இற்ற தெவ்விடை இயம்பு கென்றான். |
9 |
1798 |
என்னலுங் குமர கேண்மோ எங்கரந்
துணித்தோர் வீரன்
மன்னினன் சசியும் உற்றாள் மதுமலர்ப் பொதும்ப ரொன்றில்
அன்னதும் இ�தே என்றோர் அணிவிரல் சுட்டிக் காட்டப்
பன்னிரு பெயர்ச்சீ காழிப்* பழுமரக் காவிற் சேர்ந்தான். 10
(* பன்னிரு பெயர்ச் சீகாழி - பன்னிரண்டு பெயர்களில்
ஒன்றாகிய சீகாழிப்பதி.) |
1<0/td> |
1799 |
தேசுறும் இரவி தன்னைச் செயிர்த்திடு
சிறுவன் தானைத்
தூசிமுன் சென்று காவைத் தொலைத்துவௌ� ளிடைய தாக்க
வாசவன் மனையைக் கூர்வாள் வயவனை நாடிக் காணான்
காசினி யாண்டுந் தேர்ந்து காமர்பொன் னுலகிற் போனான். |
11 |
1800 |
வேறு
அந்நிலை அவுணர்கள் அனிகம் யாவையும்
முன்னுற ஏகியே மொய்ப்ப ஆங்கவர்
மெய்ந்நிறை மணிவெயில் விரிந்து சூழ்தலாற்
பொன்னகர் வேறொர்பொன் னகரம் போன்றதே. |
12 |
1801 |
எழுந்திடு முனிவினர் இமைக்கும்
வெவ்வழல்
வழிந்திடு கண்ணினர் மடித்த வாயினர்
கழிந்திடு திறலினர் ககன வாணர்கள்
அழிந்திடும் ஆர்ப்பினர் அவுணர் எய்தினார். |
13 |
1802 |
மண்டல மேமுதல் வகுத்த வான்கதி
கொண்டிடு கந்துகக் குழுவின் மாலைகள்
விண்டொடர் செலவினில் விரவு பூழியால்
அண்டமும் புவியென வையம் ஆக்கிய. |
14 |
1803 |
இலகிய பொன்னகர் எல்லை எங்கணும்
அலைதரு மதநதி யாக்கி யாயிடை
நிலவிய கங்கைமா நீத்தம் யாவுமுன்
டுலவுத லுற்றன ஒருத்தல் யானையே. |
15 |
1804 |
வெங்கரி சொரிமதம் விரும்பும் வண்டினங்
கொங்கிவர் தருமலா�க் கூந்தல் வாசத்தால்
அங்குள மாதர்மேல் அணுகி வையக
மங்கையர் கொல்லென மால்செய் கின்றவே. |
16 |
1805 |
அற்றமில் வலியரைச் சிறிய ராயினோர்
பற்றிடின் மேல்நெறிப் பால ராவரால்
வெற்றிகொள் அவுணர் கோன்வேழத் தின்குழாஞ்
சுற்றிய பறவையுந் துறக்கம் புக்கவே. |
17 |
1806 |
மன்னவன் ஓடினன் மைந்த னேயுளன்
முன்னுறு பகையினை முடித்தும் யாமெனா
இந்நில வரையெலாம் ஏகிச் சூழ்ந்தபோற்
பொன்னகர் வளைந்தன பொலம்பொற் றேர்களே. |
18 |
1807 |
விடா�நெறி ஒழுகிய வெய்யர் மேலையோர்
இடமுறு மகளிரை எய்திப் பற்றல்போற்
கடிகமழ் தருவினைக் கலந்து சுற்றிய
கொடியினை ஈர்த்தன கொடியின் கானமே. |
19 |
1808 |
வேறு
செந்தோ டவிழுந் தாரான்இச் செய்கை நிகழச் சேண்புகலும்
அந்தோ என்று பதைபதையா அலமந் தேங்கி அறிவழிந்து
வந்தான் பானுப் பகைவனெனா மகவான் செம்ம லொடுவானோர்
நொந்தோ டினர்போய் உரைத்திடலும் அனையோன் இனைய நுவல்கின்றான். |
20 |
1809 |
எந்தை யாகுங் குரவன் இலை இமையோர்
குழுவிற் பலரில்லை
தந்தை எம்மோ யிங்கில்லை தமியேன் நும்மோ டிருந்தேனால்
அந்த அசுரன் சென்றமையும் அல்லல் புரியுந் திறம்போலும்,
முந்தை விதியை அறிவேனோ என்னோ இன்று முடிந்திடுமே. |
21 |
1810 |
பாடின் றோங்கு திருநீங்கப் பயந்தோர்
கரக்கப் பழிவேலை
வீடின் றாகத் தமர்பரிய வெஞ்சூர் முதல்வன் பணிபோற்றி
ஈடின் றாயும் இப்பகல்கா றிந்த நகரத் திருந்தேனாற்
கேடின் றாகும் என்செய்கேன் கிளத்தீர் புரைதீர் உளத்தீரே. |
22 |
1811 |
தாயும் பயந்த தொல்லோனுந் தமரா குற்ற
அமரர்களும்
பாயுங் கடல்சூழ் நிலவரைப்பிற் கரந்தார் அதனைப் பல்லவுணர்
ஆயும் படியே திரிந்தனரால் அற்றாம் எல்லை அளியேமும்
போயெங் குறைவோம் நமையெல்லாம் போற்றும் படிக்கோர் புகலுண்டோ. |
23 |
1812 |
போவ தில்லை யாண்டும்இனிப் புலம்பு
மாறும் இல்லையதின்
ஆவ தில்லை வருவதெல்லாம் அடையும் அன்றி அகலுவதோ
ஈவ தில்லை யவர்க்கு வெரிந் இறைஞ்சிப் புகழவ திலையெதிர்ந்து
சாவ தல்லால் உய்ந்திடுதல் இரண்டே உறுதி தமியேற்கே. |
24 |
1813 |
அஞ்சேன் மன்னோ அவர்க்கினியான் ஆவி
பொருளாக் கொள்ளாதார்
நஞ்சே பொருவுந் தீங்குறினும் நடுக்கஞ் செய்யார் இடர்படியார்
தஞ்சே வகத்தின் நெறிபிழையார் அ�தே போலத் தானவர்கோன்
வெஞ்சே னைகளேற் றெதிர்செல்வேன் வெல்வேன் பலரைக் கொல்வேனே |
25 |
1814 |
செருவீ ரமுடன் அவர்ப்பொருவான் செல்வன்
நீரும் எற்போற்றி
வருவீர் வம்மின் வல்லாதீர் வல்லை இன்னே வழிக்கோண்மின்
ஒருவீ ரன்றி, எல்லீரும் உள்ளத் தஞ்சி ஒருவிஅழ
தருவீவேனும் நன்றிறையுந் தளரேன் துணிந்த தமியேயே. |
26 |
1815 |
என்று சயந்தன் மொழிந்திடலும் இமையோர்
கேளா இடருழவா
உன்றன் உள்ளம் ஈதாயின் உமக்கு வேறோர் உணர்வுண்டோ
வென்றி அவுணர் பணிபுரிந்து வீடா விழுமந் துய்ப்பதினும்
பொன்றி விடுதல் இனிதம்மா எழுதி கடிதே போர்க்கென்றார். |
27 |
1816 |
வேறு
சயந்தனது கேட்டமரர் தங்குழுவை நோக்கித்
துயர்ந்தநும சிந்தனை துணிந்ததுகொல் என்னா
வியந்துகன கத்தவிசின் மேவுதல்வி டாத்தன்
கயந்தனை நினைப்பஅ துணர்ந்தது கருத்தில். |
28 |
1817 |
கல்கெழு நுதற்சிறிய கண்சுளகு கன்னம்
மல்கிய கறைப்த மருப்பிணை இரட்டை
மெல்கிய புழைக்கரம் வௌற்றுடலின் வேழம்
பில்கிய மதத்தொடு பெயர்ந்துளதை அன்றே. |
29 |
1818 |
இந்திர குமாரனை இறைஞ்சி எதிராகி
வந்திட அதன்பிடரில் வல்லைதனில் ஏறி
உந்தினன் நடாத்திஅயல் உம்பபர்புறம் மொய்ப்பப்
புந்திகெழு வேர்வினொடு பொள்ளென அகன்றான். |
30 |
1819 |
போகிதரு காளைபசும் பொற்புயல்
நிறத்தான்
ஆகம்வௌ� றாகும்அயி ராவதமி சைக்கண்
வாகுபெற மேவுவது மன்னுநெடு மால்பாற்
சீகரஅளக் கரிடை செவ்விதிருந் தன்ன. |
31 |
1820 |
பாங்கருறு வானவர்கள் பல்படையும் ஏந்தி
வீங்குதுயர் கொண்டகல வேறொரிடை காணார்
நீங்கல்வசை என்பது நினைந்துதுணி வாகி
ஆங்கவ னொடேகினர்கள் அச்சமில ரேபோல். |
32 |
1821 |
பெருந்தவள மெய்க்கரி பிளிற்றொலியும்
உள்ளத்
தரந்தையுறு வானவர்தம் ஆர்ப்பொலியும் ஆற்றப்
பரந்தபகு வாய்முரசு பண்ணொலியும் ஒன்றாய்
வருந்தவறெ னக்ககனம் வாய்விடுதல் போலும். |
33 |
1822 |
ஊழவரு கால்அனைய உம்பர்படை செல்லப்
பூழிநிமிர்ந் தேகின பொலத்துயர் நிலத்த
வாழிகொள் சுவர்க்கமெரி வௌவுநமை என்னாக்
கேழிலுயர் மேனிலை கிளர்ந்தெழுதல் போலும். |
34 |
1823 |
முறையிது நிகழந்திட முரட்களிறு மேலான்
வறியமக வான்மதலை மாநகரம் நீங்கி
எறிகதிர் அருக்கனை இருஞ்சிறையில் வீட்டுஞ்
சிறுவன்அனி கத்தினெதிர் சென்றுபுக லோடும். |
35 |
1824 |
வற்புறு தயித்தியர் வருஞ்சுரரை நோக்கி
முற்பகலின் எல்லையும் முறைப்பணி புரிந்தார்
தற்பமுடன் நின்றுசமர் உன்னிவரு வாரோ
அற்புதம் இதற்புதம் இதென்றறையல் உற்றார். |
36 |
1825 |
கிட்டினர்கள் வானவர் கிடைத்ததமர்
என்னா
முட்டினர் தெழித்தவுணர் முன்பினிரு பாலார்
ஒட்டினர் முனிந்தயில்கள் உய்த்தனர்கை வாளால்
வெட்டினர் குனித்துவில் வடிக்கணை விடுத்தார். |
37 |
1826 |
எழுப்படை விடுத்தர் எடுத்தகதை
விட்டார்
மழுப்படை எறிந்தனர் வயிர்க்குலிசம் உய்த்தார்
நிழற்பரவு முத்தலை நெடும்படைகள் தொட்டார்
சுழற்றினர் உருட்டினர் சுடர்ப்பரிதி நேமி. |
38 |
1827 |
மாரியென இப்படை வழங்கியிமை யோருஞ்
சீரவுண ராயினருஞ் சேர்ந்துபொரும் எல்லைச்
சோரியது தோன்றியது தூயவிரும் பெற்றும்
பாரிய உலத்திடை பரந்தெழு கனற்போல். |
39 |
1828 |
அங்கமெம செங்குருதி ஆற்றின்
நிமிர்ந்தோடி
எங்கணும் நிரந்தன இமைப்பிலவர் வைகுந்
துங்கமிகும் உம்பரிடை சூர்மதலை சீற்ற
வெங்கனல் எழுந்துமுன் மிசைந்திடுவ தேபோல். |
40 |
1829 |
நீடிரு திறத்தரும் நெடும்படைகள் ஏந்தி
ஆடல்புரி காலையழிந் தாற்றலில ராகி
ஓடினர்கள் வானவர்கள் ஒல்லைதொடர்ந் தேபின்
கூடினர்கள் வெவ்வவுணர் குற்றினர்கள் பற்றி. |
41 |
1830 |
சேண்கொடு முரிந்துபடர் தேவர்குழு வோரை
ஏண்கொடு வருந்தகுவர் யாத்தனர் புயங்கள்
நாண்கொடு திரும்பினர் நலங்கொள்கலை மானை
மாண்கொடு வரித்தொகுதி வவ்விஅகன் றென்ன. |
42 |
1831 |
இடுக்கணுறு தேவர்தமை ஈர்த்தனர்கொ டேகி
மிடற்கதிர் அருக்கனை வெகுண்டவன்முன் உய்ப்பக்
கடக்கரிய வன்மையொடு காவல்கொளு மென்றான்
தடக்களிறு மேல்வரு சயந்தன்இவை கண்டான். |
43 |
1832 |
வேறு
கண்டான் வெகுண்டான் புகையாரழல் கல்லென் மேகம்
உண்டான் எனவே உமிழ்ந்தான் ஒருதன் சிலைக்கைக்
கொண்டான் குணத்தின் இரைகாட்டினன் கோட்டி நேர்போய்
அண்டார் வெருவக் கணைமாரிகள் ஆர்ப்பொ டுய்த்தான். |
44 |
1833 |
பொழியும் பொழுதத் தவுணப்படை போந்த
வீரர்
மொழியும் மனமும் நனிதாழ்த்திட முன்ன ரேகி
ஒழியுங் கடைநாள் அரன்வெற்பை உறாது சூழ்போஞ்
சுழியுங் கடல்போல் அவனூர்கரி சுற்றி ஆர்த்தார். |
45 |
1834 |
சயந்தன் மிசையும் பொலங்கிம்புரித்
தந்த வௌ�ளைக்
கயந்தன் மிசையுஞ் சிலைவாங்கிக் கணைகள் கோடி
பயந்தந் திடத்தூர்த் தனர்சோமனைப் பன்ன கங்கள்
வயந்தன் னொடுபோய் முயலோடு மறைக்கு மாபோல். |
46 |
1835 |
கல்லென் றரற்றுங் கழல்வீரர் கனைந்து
சுற்றிச்
செல்லென் றுவிட்டகணை யாவையுஞ் சிந்தி வல்லே
மல்லொன் றுமொய்ம்பிற் சயந்தன்சர மாரி தூண்டி
வில்லும் மனையோர் தனுவும்புவி வீட்டி னானால். |
47 |
1836 |
வீட்டிக் கணைகள் அவுணப்படை மீது
தூர்த்து
மோட்டுக் களிற்றின் தொகைதன்னை முகங்கொள் பாய்மா
வீட்டத் தினைத்தேர் களைவீரர் இனத்தை யெல்லாம்
வாட்டிப் பின்வௌ�ளம் ஒருநூற்றினை மாய்வு செய்தான். |
48 |
1837 |
வாலிற் புடைக்கும் புழைக்கைகொடு வாரி
எற்றுங்
காலிற் படுக்கும் மருப்பாலடுங் கந்த ரம்போல்
ஓலிட் டுயிருண் டிடுமாங்கவன் ஊர்ந்த வேழஞ்
சீலக் கதிரைச் சிறையிட்டவன் சேனை தன்னை. |
49 |
1838 |
நூறாய்ப் புகுதா னவர்வௌ�ளம்
நொடிப்பின் மாய
வீறாய்ப் படையும் பலபூண்களும் மீன மாக
ஆறாய்க் குருதி பெயர்ந்தேயகல் வான நீத்தம்
மாறாய்ப் பொருது மிசையோடி வளைந்து கொண்ட. |
50 |
1839 |
காய்கொல் இபமேற் சயந்தன்அடு காலை
தன்னில்
பேய்கொல் உனைத்தீண் டினமேல்வரும் பெற்றி யோராய்
தீகொல் பறவை புரைவாய்எமர் சேனை தன்னை
நீகொல் லடுதி யெனவந்தனன் நீல கேசன். |
51 |
1840 |
எண்ணத் தவரை அலைக்கின்ற இருண்ட கேசன்
தண்ணத் தவரை நிகர்கின்ற சயந்தன் முன்போய்
விண்ணத் தவரை முகில்தாங்குறும் வேட மென்ன
வண்ணத் தவரைக் குனித்தம்பெனும் ாரி தூர்த்தான். |
52 |
1841 |
தூர்த்தான் அதுகால் சயந்தன்எதிர்
தூண்டி வாளி
தீர்த்தான் சரமாரி யையன்றியுஞ் சின்ன மாக்கி
ஆர்த்தான் கவசம் அவனிட்டதை அம்பு நூறால்
வேர்த்தான் உயிர்த்தான் இருட்குஞ்சியன் மேக மொப்பான். |
53 |
1842 |
பாசம் பிணித்த அரணம் பரிவெய் தநீல
கேசன் விடுத்தோர் பிறையம்பினைக் கேடில் விண்ணோர்
ஈசன் சிறுவன் சிலைநாணை இறுத்தி சைத்தான்
காசொன் றரவந் துணியப்பகை கௌவு மாபோல். |
54 |
1843 |
சின்னம் படலும் பெருநாண்சிலை வீழ
விட்டுத்
தன்னந் தனியாஞ் சயந்தன்சமர் செய்வ தற்கு
முன்னம் பயிற்றும் ஒருமாயையை முன்னி யாற்றித்
துன்னந் தருபல் லுருவங்கொடு தோன்றி யுற்றான். |
55 |
1844 |
வேறு
ஒன்றேயெனுங் கரிமேல்வரும் ஒருவன்பல வுருவாய்ச்
சென்றேதிறம் பலவால்அடச் செறிபேரிருட் குடுமிக்
குன்றேபுரை அவுணர்க்கிறை குறிப்பால்இது மாயம்
என்றேநினைந் தவைமாற்றிட யாதுஞ்செயல் இல்லான். |
56 |
1845 |
மலைவுற்றெதிர் நின்றார்த்திட
வாயற்றனன் மயங்கித்
தொலைவுற்றனன் இருட்குஞ்சியன் சூரன்மகன் அனிகம்
மலைவுற்றன விரிகின்றன அலமந்தன வெருவி
உலைவுற்றன இறுதிப்பகல் ஒழிவுற்றிடும் உயிர்போல். |
57 |
1846 |
சோமாசுரன் மாயாபல சுரகேசரி பதுமன்
மாமாருத பலிதண்டகன் வாமன்மதி வருணன்
தீமாகதன் முதலாகிய சேனைப்பெருந் தலைவர்
ஆமாயமி தெனவந்தனர் அவ்விஞ்சையை உணரார். |
58 |
1847 |
தாங்கற்றிடு மாயப்பெருந் தனிவிஞ்ரைகண்
முன்னி
ஆங்குற்றிடு பரபாற்பொரு தன்னான்புரி மாயம்
நீங்கற்கரு நிலையாதலும் நெஞ்சந் தடுமாறி
ஏங்குற்றனர் என்செய்குதும் யாமென்று நினைந்தார். |
59 |
1848 |
அந்நேருறு காலந்தனில் ஆகின்றதுந்
தலைவர்
தன்னேவலின் மெலிவுற்றதும் சயந்தன்பெரும் திறலும்
கொன்னேதன தனிகக்கடல் குறைகின்றதும் கண்டான்
முன்னேயிர வியைஓர்பகற் சிறைவீட்டிய முதல்வன். |
60 |
1849 |
வேறு
அந்த ரந்தனில் இரவியைச் செயிர்த்திடும் அவுணன்
இந்தி ரன்மகன் மாயைகொல் இதுவென எண்ணா
முந்தை நாட்புகர் உதவிய மூலமா ஞான
மந்தி ரந்தனை உளந்தனில் விதிமுறை மதித்தான். |
61 |
1850 |
மதித்து வெஞ்சுடர்ப் பகையினன் சேறலும்
மாயை
விதித்த பல்லுருப் போயின தமியனாய் விடலை
கதக்க ளிற்றின்மேல் தோன்றினன் ஆயிரங் கதிரோன்
உதித்த காலையில் கலையிலாக் குறைமதி யொப்ப. |
62 |
1851 |
ஆன காலையில் இதுபுகர் விஞ்சையென்
றறிந்து
மான முஞ்சின முஞ்சுடச் சயந்தன்உள் மறுகித்
தான வேழமேல் இருந்துழித் தேரொடுஞ் சார்ந்து
பானு கோபனாம் பெயரினான் இனையன பகர்வான். |
63 |
1852 |
வருதி இந்திரன் மதலைநின் மாயையும்
வலியும்
கருதி யான்வரு முன்னரே போயின கண்டாய்
பரிதி போலவே நின்னையும் இருஞ்சிறைப் படுப்பன்
பொருதி வல்லையேல் என்றனன் சூர்தரு புதல்வன். |
64 |
1853 |
வல்ல ராயினோர் வெல்வதும் மற்ற�
தில்லோர்
அல்ல ராகியே தோற்பதும் இல்லையால் அரனே
தொல்லை யூழ்முறை புணர்ந்திடும் நின்னைநீ துதிக்கச்
செல்லு மோவென உரைத்தனன் சயந்தனாந் திறலோன். |
65 |
1854 |
தேற்ற மோடிவை புகறலும் இரவியைச்
செயிர்த்தோன்
ஆற்றல் இல்லவர் மொழிதிறம் புகன்றனை அன்றே
ஏற்ற வீரரும் இத்திறம் உரைப்பரோ என்னாக்
கூற்ற மேயென இருந்ததோர் தன்சிலை குனித்தான். |
66 |
1855 |
சிலைவ ணக்கிய காலையில் சயந்தனுஞ்
சினத்து
மலைவ ணக்குதன் புயங்கொடே ஒருசிலை வளைத்தான்
அலைவ ணக்கரும் ஞமலியெம் மடிகளை அடைந்தோர்
தலைவ ணக்கியே தத்தமில் இருவர்தாழ வதுபோல். |
67 |
1856 |
பாற்றி ருஞ்சிறைக் கணைபல பரிதியம்
பகைஞன்
ஊற்ற மோடுவான் புயலெனச் சொரிதலும் ஒருத்தன்
மேற்றி கழ்ந்திடு சயந்தனும் அனையன விசிகங்
காற்றெ னும்படி தூண்டியே விலக்கினன் கடிதின். |
68 |
1857 |
அன்ன வன்விடுஞ் சரமெலாஞ் சூர்மகன்
அறுத்துத்
துன்னு பல்கணை தூண்டினன் அவனவை தொலைத்தான்
இன்ன தன்மையின் இருவரும் பொருதனர் இருளும்
மின்னு மாகவே முறைமுறை மலைந்திடும் விதிபோல். |
69 |
1858 |
இனைன வாறமர் புரிவுழி இரவியம் பகைஞன்
வினைய நீரினால் சொரிந்திடு பகழியை விலக்கித்
துனைய இந்திரன் மதலைஆ யிரங்கணை தூண்டி
அனையன் ஏந்திய சிலைப்பெரு நாணினை அறுத்தான். |
70 |
1859 |
அறுத்த காலையில் ஞாயிறு வெகுண்டுளோன்
அழலிற்
செறுத்து வேறொரு சிலைவளைஇக் கணைமழை சிதறி
மறுத்தும் ஆங்கவன் விடுஞ்சரம் சிந்திமற் றவன்மெய்
உறுத்தி னான்என்ப ஒராயிரஞ் சிலீமுகம் உய்த்து. |
71 |
1860 |
உய்த்த காலையில் சயந்தனும் ஒராயிரங்
கணைதூய்ப்
பத்தி யோடவன் தேர்கெழு பாய்பரி படுத்து
மெத்து பல்சரந் தானைமேல் வீசினன் விளிவோர்
வைத்த மாநிதி யாவர்க்கும் வழங்குமா றென்ன. |
72 |
1861 |
வாய்ந்த தோர்தன திரதமீ றாகமற்
றொருதேர்
பாய்ந்து வெய்துயிர்த் தழலென வெகுண்டுபற கறித்துச்
சேந்த மெல்லிதழ அதுக்கிவா னுருமெனத் தெழியா
ஏந்து வார்சிலை குனித்தனன் எறிகதிர்ப் பகைஞன். |
73 |
1862 |
கூனல் வெஞ்சிலை குனித்துநூ றாயிர கோடி
சோனை வெங்கணை தூண்டிவிற் றூண்யைத் துணித்துத்
தான வெங்கரி தன்னுடன் முழுவதுஞ் சயந்தன்
மேனி முற்றவும் அழுத்தினன் பகலினை வெகுண்டோன். |
74 |
1863 |
வெய்ய வற்சிறை இட்டவன் விட்டபோல்
சைய மொத்த சயந்தன்மெய்ம் மூழ்கலும்
மைய லுற்றனன் மற்றொரு வெஞ்சமர்
செய்வ தற்குத் தௌ�தலின் றாயினான். |
75 |
1864 |
நீண்ட வாளிக ளான நிறத்திடை
ஆண்ட காலை அரிமகன் தந்திமேல்
வீண்டு விம்மி உணர்ச்சியும் விட்டனன்
மாண்டி லான்அமு தங்கொண்ட வன்மையால். |
76 |
1865 |
நண்ணு பாசடை நாப்பணி டந்தொறுந்
தண்ணென் மாமலர்த் தாமரை பூத்தென
விண்ண வர்க்கிறை மாமகன் மெய்யிடைத்
துண்ணெ னப்படு சோரி பொலிந்ததே. |
77 |
1866 |
கற்ற வாசவன் காளைதன் சீற்றம்நாம்
முற்ற ஓத முடியுங்கொல் தன்னுணர்
வற்ற போதும் அவன்சினக் கண்ணழல்
வற்று வித்தமெய் வார்குரு திப்புனல். |
78 |
1867 |
சயந்தன் அவ்வழி தன்னுணர் வின்றியே
அயர்ந்த போதத் தலையவன் ஊர்தியாம்
கயந்தன் நக்கிறை கண்டு கலங்கியே
துயர்ந்து நின்று சுளித்தெதிர் புக்கதே. |
79 |
1868 |
காய்ந்த தொன்மைக் கதிரை முனிந்திடும்
ஏந்தல் ஊர்தரும் எந்திரத் தேர்மிசைப்
பாய்ந்த காலைப் பரித்தொகை பாகுடன்
வீய்ந்து போன தெழித்தது வேழமே. |
80 |
1869 |
பாண்டில் சேர்தரு பண்ணமை செய்யதேர்
மாண்ட காலையில் வல்லையிற் கீழுறத்
தாண்டி வௌ�ளையந் தந்தியைச் சீறினான்
மூண்டு பானுவை முன்சிறை செய்துளான். |
81 |
1870 |
மற்ற வன்றன் மணியணி மார்பிடைச்
செற்ற மால்கரி சென்றுமுன் தாக்கலும்
பொற்றை யின்கட் புழைத்திடுஞ் சூசியின்
இற்ற வால்அதன் ஈரிரு தந்தமும். |
82 |
1871 |
தந்தம் நான்குஞ் சடசட ஆர்ப்பொடு
சிந்தல் உற்றன சீர்கெழு சூர்மகன்
உந்து தொண்டலம் பற்றிமற் றோர்கையால்
தந்தி வேந்தன் கவுளிடைத் தாக்கினான். |
83 |
1872 |
வேறு
காழ்ந்த நெஞ்சினன் கரங்கொடு தாக்கலுங் கயமா
ஆழ்ந்த தெண்டிரைப் பாற்கடல் உடைந்தென அரற்றி
வீழ்ந்த யர்ந்தது சயந்தனும் அறிந்தனன் விரைவில்
சூழ்ந்த தொல்லுணர் வெய்தலும் அவனிவை சொல்லும். |
84 |
1873 |
மாயை போயது தனித்தனங் குறைந்தது வன்மை
தீயர் பற்றுவர் அழியுமிந் நகரெனச் சிறிது
நீயி ரங்கலை இனிமன னேவிதி நெறிகாண்
ஆயின் இங்கிவை என்றனன் சயந்தனாம் அறிஞன். |
85 |
1874 |
நுனித்து நாடியே இத்திறம் நுவன்றுநூற்
றுணிபு
மனத்தில் வைத்திடும் இந்திர்கான்முளை மயங்கித்
தனித்த நீர்மையுங் களிற்றோடு வீழந்ததுந் தளர்வும்
அனைத்தும் நோக்கியே தானவத் தலைவர்கள் ஆர்த்தார். |
86 |
1875 |
ஆர்த்த தானவத் தலைவர்கள் சயந்தனை அயலே
போர்த்த தாமெனச் சுற்றினர் பற்றினர் புவிமேல்
கூர்த்த வாலெயிற் றரவினம் யாவையுங் குழீஇப்போய்ச்
சீர்த்த வெல்லையில் இரவியைக் கரந்திடுந் திறம்போல். |
87 |
1876 |
தடித்த மொய்ம்புடைச்சயந்தனைத் தானவத்
தலைவர்
பிடித்த காலையிற் கைதவன் கைதவன் பெரிதும்
அடித்தி டுங்கள்குற் றிடுங்கள்இங் கிவனுயிர் அதனைக்
குடித்தி டுங்களென் றா��எலா வவுணரும் குழுமி. |
88 |
1877 |
மன்னர் மன்னவன் திருமகன் அவ்வழி
மற்றோர்
பொன்னே டும்பெருந் தேர்மிசைப் பொள்ளென ஏகிப்
பன்ன ரும்புகழ் படைத்திடு சயந்தனைப் பற்றித்
துன்னி நின்றிடும் அவுணருக் கொருமொழி சொல்வான். |
89 |
1878 |
வரிவில் வாங்கியே யான்விடுஞ் சரம்பட
மயங்கிப்
பெரிது மெய்தளர் வுற்றனன் பேசவுங் கில்லான்
கருத லானெ இவன்றனை வருத்தலிர் கடிதே
சுரர்கு ழாத்தொடு புரிமினோ சிறையெனச் சொற்றான். |
90 |
1879 |
கொற்ற வன்மொழி வினவியே மந்தரக்
குன்றைச்
சுற்று பாந்தள் போல் இந்திரன் திருமகன் துணைத்தோள்
இற்ற கொல்லேன நாணினால் யாத்தனர் இமையோர்
உற்று நின்றதோர் குழுவினுள் ஒருங்குற உய்த்தார். |
91 |
1880 |
வேறு
தொழிலிது புரிந்த காலைச் சூர்மகன் தனது மாடே
தழியகா வலரை நோக்கிச் சயந்தனும் இருவரும் அல்லால்
ஒழியநின் றோரை எல்லாம் ஒல்லையில் தருதிர் பின்னர்
அழியஇம் மூதூர் செந்தீ அரசனுக் களித்திர் என்றான். |
92 |
1881 |
என்றலும் இறைஞ்சி யன்னோர் எழிலுடைத்
துறக்கம் யாண்டுஞ்
சென்றனர் நாடி யேனைத் தேவரை மகளீர் தம்மை
ஒன்றொரு வரையும் வீடா துடனுறப் பற்றி நாணால்
பொன்றிரள் தடந்தோள் யாத்துப் புரவலன் முன்னர் உய்த்தா�ர். |
93 |
1882 |
உய்த்தபின் பதுமச் செல்வி உறைதரும்
உறையுள் போலச்
சித்திரங் கெழுவு பொன்னந் திருநகர் எல்லை யெங்கும்
புத்தழல் கொளுவ லோடும் பொள்ளெனப் பொடிபட் டன்றே
முத்திற வரைப்பும் எங்கோன் முறுவலான் முடிந்த வாபோல். |
94 |
1883 |
ஊழியின் அன்றி என்றும் ஒழிவுறாத்
துறக்க மூதூர்
பூழிய தான தன்றே புரந்தரன் வறியன் போனான்
வீழுறு சிறையின் உற்றார் மிக்கவ ரென்றால் யாரும்
வாழிய செல்வந் தன்னை நிலையென மதிக்க லாமோ. |
95 |
1884 |
அளிபட னின்றி யென்றும் அலர்தரு
நிழற்றும் மூதூர்
வௌ�படு சுடலை போலாய் வேற்றுருக் கோட லோடுங்
களிபடு பானு கோபன கண்டனன் அவுணர் தம்மில்
ஔ�படு காவ லோரை நோக்கியீ துரைக்கல் உற்றான். |
96 |
1887 |
தாதுலாந் தெரிய லாகச் சயந்தனை அவனோ
டுற்ற
ஏதிலார் தம்மைப் பின்னோர் யாரையுங் கொடுமுன் நீவிர்
போதிரால் என்ன அற்றே போயினர் உவணை நீங்கி
ஆதவன் பகைஞன் மீளா அனிகமோ டவனி வந்தான். |
97 |
1886 |
மாநில மதிக்கும் வீர மகேந்திர
புரத்துப் புக்குக்
கோனகர் முன்னம் ஏகிக் கொடிஞ்சிமான் தேரின் நீங்கிச்
சேனையை நிறுவி வானச் சிறையினைக் கொண்டு சென்று
தானவர் மன்னன் முன்போய்த் தாள்முற வணக்கஞ் செய்தான். |
98 |
1887 |
தண்டுளி நறவ மாலைத் தாதைதாள் வணங்கி
எந்தாய்
கண்டிலன் சசிய வானோர் காவலன் தனையுங் காணேன்
அண்டரைச் சயந்தன் தன்னை யாரையுங் கொண்டு சென்றான்
விண்டொடர் துறக்க முற்றும் வெங்கனல் கொளுவி என்றான். |
99 |
1888 |
என்றலும் மகிழ்ந்து சூரன் இளஞ்சிறு
குமரற் புல்லித்
தன்றிரு முன்னர் இட்ட சயந்தனை முதலி யோரைக்
கன்றினன் உருத்து வாட்கைக் காவலர் சிலரை நோக்கித்
துன்றிய இனையர் அங்கம் யாவையுந் துணித்திர் என்றான். |
100 |
1889 |
இரலைமான் தொகுதி தன்மேல் இருஞ்சிறை
வீடு பெற்ற
உருகெழு புலிபாய்ந் தொப்ப ஒப்பிலா அரசன் சொல்லால்
விரைவுடன் அவுணர் பல்லோர் விண்ணவர் தம்பால் மேவித்
துருவையின் முகத்தி காணத் துண்ணெனத் துணிக்கல் உற்றார். |
101 |
1890 |
கரத்தினைத் தாளைத் தோளைக் கன்னமூ
லத்தைக் கல்லென்
றரற்றுறு கண்டந் தன்னை அணிகெழு துண்டந் தன்னைச்
சிரத்தினைத் துணிப்ப அன்னோர் சிறியரோ செய்த நோன்பின்
உரத்தினில் அவைக ளெல்லாம் உடனுடன் பொருந்த லுற்ற. |
102 |
1891 |
செல்லரு நெறிக்கண் நின்ற சேணுளார்
தம்மை யாருங்
கொல்லா� திறையுங் அங்கங் குறைத்தலும் அரிதா மென்றாற்
சொல்லரி தினையர் வன்மை தொலைந்ததெம் வரத்தா லென்னா
வல்லரி புரைவெஞ் சூரன் மதித்துமற் றதனைக் கண்டான். |
103 |
1892 |
கண்டனன் முனிந்தின் னோரைக் காலமொன்
றானும் வீடா
எண்டரு நிரயம் போலும் இருஞ்சிறை இடுதி ரென்றே
திண்டிறல் அசுரர் கேட்பச் செப்பலுஞ் சயந்தன் றன்னை
அண்டரைப் பிடர்தொட் டுந்தி ஆங்ஙனங் கொண்டு போனார். |
104 |
1893 |
போயினர் சிறையின் எல்லை போற்றினர்
தம்மை நோக்கி
ஏயினன் நங்கோன் இன்னோர் யாரையுங் காவல் கொண்மின்
நீயிர்க ளென்னா ஒற்றர் நீங்கினர் நின்றோர் தம்மை
ஆயவர் வல்லி பூட்டி அருஞ்சிறைக் களத்தில் உய்த்தார். |
105 |
1894 |
மன்னவன் அதற்குப் பின்னர் மைந்தனை
அன்பால் நோக்கி
நின்னக ரத்திற் போதி நீயென அனையன் போனான்
அன்னதோர் சூர பன்மன் அவையொரீஇ உறையுள் புக்கான்
இன்னலங் கடலில் உற்றார் இருஞ்சிறைப் பட்ட வானோர். |
106 |
1895 |
வேறு
காடு போந்தனன் இந்திரன் பொன்னகர் கா�ந்து
பாடு சேர்ந்தது சயந்தனுஞ் சிறையிடைப் பட்டான்
நாடில் விண்பதச் செய்கையீ தெம்பிரான் நல்கும்
வீட தேயலால் துன்பறும் ஆக்கம்வே றுண்டோ. |
107 |
1896 |
வேறு
படவர வனையதோர் பரும அல்குலார்
இடுகிய நுண்ணிடை எழில ணங்கினோர்
கொடுமைசெய் அவுணரூர் குறுகி வேடர்பால்
பிடியுறு மஞ்ஞையிற் பெரிதும் அஞ்சினார். |
108 |
1897 |
சூரன்வாழ் பெருநகா� துன்னிக் காப்பொடு
சீரிலா ஏவல்கள் செய்து மேவினார்
கூரும்வாய் வெங்குரீஇக் குடம்பை உய்த்திடப்
பேருறா திலகுமின் மினியின் பெற்றிபோல். |
109 |
1898 |
வாடிய மகபதி மதலை வானுளோர்
ஆடுறு துயர்க்கடல் அழுந்திச் சூரர்கோன்
வீடருஞ் சிறையிடை மேவி னாரவர்
பாடுறு திறத்தையார் பகரற் பாலினோர். |
110 |
1899 |
இன்னலங் கடலினும் எடுத்து வீடுதந்
தன்னவர் பெருஞ்சிறை அகற்றும் வன்மையார்
பின்னெவர் உண்டுயிர் பெற்றுக் காத்திடு
முன்னவர் தமக்கெலா முதல்வ நீயலால். |
111 |
1900 |
வியந்தரு கதிரைமுன் வெகுண்டு ளானொடு
சயந்தன்விண் ணுலகிடைச் சமர்செய் தெய்த்துழி
வயந்தரு கோடுகண் மாய்ந்து தந்திவீழ்ந்
தயர்ந்தது புவியிடை அணுகிற் றத்துணை. |
112 |
1901 |
வாலிய ஔ�கெழு வனத்தில் ஏகியே
மூலம தாகிய முக்கண் மூர்த்தியை
மேலுள தாணுவின் மேவச் செய்துபின்
சீலமொ டருச்சனை செய்து வைகிற்றே. |
113 |
1902 |
அறிவுள மால்கரி அமலன் தந்திர
முறையது நாடியே முதிரும் அன்பினால்
மறையுற வழிபடீஇ வைகும் எல்லையில்
குறைபடு நாற்பெருங் கோடும் வந்தவே. |
114 |
1903 |
பா��ப்பதி மருங்குறு பகவன் ஆணையால்
மாற்பெருங் களிற்றிடை வல்லை முன்புபோல்
நாற்பெருந் தந்தமும் நண்ண நோக்கியே
ஏற்பரு மகிழ்ச்சியோ டிருந்த தவ்விடை. |
115 |
1904 |
வேறு
ஆயதோர் அமைதி யின்கண் அணங்கொடு மேரு வெற்பிற்
போயின அமரர் கோமான் பொன்னகர் சூரன் மைந்தன்
காயெரி கொளுவி அங்கட் கடவுளர் குழுவி னோரைச்
சேயொடு பற்றி ஏகிச் சிறைசெய்த தன்மை தேர்ந்தான். |
116 |
1905 |
தேர்ந்தனன் தளர்ந்து மேருச்
சிலம்பினின் மகவான் பன்னாள்
வார்ந்திடு கங்கை வேணி வள்ளலை உன்னி நோற்பச்
சார்ந்துநிற் கென்னை வேண்டுஞ் சாற்றென முதல்வன் நீதி
பேர்ந்தசூர் கிளையைச் செற்றெம் பேதுற வகற்று கென்றான். |
117 |
1906 |
என்றலும் எந்தை சொல்வான் யாமுமை தன்னை
மேவி
ஒன்றொரு குமரன் றன்னை உதவுவம் அவனே போந்து
வென்றிகொள் சூர னாதி அவுணரை விரைவிற் செற்று
மன்றநும் முரிமை ஈவன் வருந்தலென் றுரைத்துப் போனான். |
118 |
1907 |
சாதலுந் தொலைவும் இல்லாத் தானவர்க்
கிறைவன் ஏனோர்
ஏதிலர் தம்மால் வீடான் என்றுதன் உளத்தி லெண்ணிச்
சோதிகொள் பரம மாகிதத் தோன்றிடு முதல்வன் நீயே
ஆதலின் விமல மூர்த்தி அவரைமே லடுதி யென்றான். |
119 |
1908 |
அவ்வுரை மகவான் தேறி அரியய னோடு
சூழ்ந்து
மைவரு களத்தோன் தன்பான் மதனனை உய்ப்ப அன்னோன்
மெய்விழி எரியின் மாய்ந்து வெறுந்துகள் படலுந் தேவர்
எவ்வெவ ரும்போய் வேண்ட இரங்கியே கருணை செய்தான். |
120 |
1909 |
அரியயன் மகவான் தேவர் அருங்கணத்
தலைவர் யாரும்
பரவுற இமய வெற்பிற் படா�ந்துபின் உமையை வேட்டுப்
பிரிவருங் கயிலை நண்ணிப் பின்னெம திரக்கம் நாடிக்
கருணையால் எந்தை நின்னை நெற்றியங் கண்ணால் தந்தான். |
121 |
1910 |
எந்தைநீ வந்த பின்றை இந்திரன்
அயன்மால் தேவர்
அந்தமில் முனிவர் ஏனோர் அனைவர்க்கும் அகன்ற ஆவி
வந்தது போன்ற தம்மா வலியவெஞ் சூரற் செற்றுத்
தந்தம தரசு பெற்ற தன்மையர் போல வுற்றார். |
122 |
1911 |
ஆழ்தத முந்நீர் நேமி அகன்கடல் அழுவம்
புக்கு
வீழ்தரு வோர்கள் தம்பால் வியன்கல மொன்று சேர
ஊழ்தரு தொடர்பாற் பற்றி உய்ந்தெனத் துன்ப வேலைக்
கீழ்தரு வோர்கள் நின்னாற் கிளர்ந்துமேல் எழுதல் உற்றார். |
123 |
1912 |
புரந்தரன் முதலா உள்ள புங்கவர் எம்ம
னோர்கள்
அரந்தையை அகற்ற உன்னி ஐயநீ போந்த பின்னுந்
தெரிந்திடு துணிபிற் சேர்ந்துந் தெம்முனைச் சூரற் கஞ்சிக்
கரந்தனர் இருந்தார் காணிற் கடுஞ்சிறைப் பிணிப்ப னென்�. |
124 |
1913 |
எம்பிரான் நின்னை முக்கண் எந்தையை
வணங்க நேரில்
தம்பெரு வடிவங் காணச் சாருவர் ஒழிந்த காலை
உம்பர்கோன் முதலோர் தத்தம் உருக்கரந் துழல்வர் வான்மேல்
வெம்பணி சிலைகண் மாறாம் வெய்யவர் நிலைமை யேபோல். |
125 |
1914 |
மறைந்திடு பாங்கர் இன்ன வாசவன்
முதலோர் யாரும்
அறந்தவிர் சூர பன்மன் அடுபடைத் தலைவர்க் காணிற்
பறைந்திட மார்பம் உள்ளம் பனித்திட வியர்ப்ப யாக்கை
இறந்தன ராகிப் பின்னர் இன்னுயிர் பெறுவர் அன்றே. |
126 |
1915 |
வினைப்பவம் உழந்த விண்ணோர் வெந்தொழில்
அவுணர் கோனை
நினைப்பினும் அவச மாவர் நெடுந்துயில் பெறாத நீரால்
மனப்படு கனவு நீத்தார் மற்றது வருமேல் அங்கண்
உனப்படு சூரற் காணின் உயிரையும் இழப்பர் அம்மா. |
127 |
1916 |
பொன்னகர் இறுதி செய்து புதல்வனை அமர
ரோடு
துன்னருஞ் சிறையுட் சேர்த்தித் துயர்ப்பெருங் கடலுள் வீட்டி
மன்னிய வெறுக்கை வவ்வி மனையொடு கரப்பச் செய்தும்
இன்னமும் அவுணர் கோமான் இந்திரற் கலக்கண் சூழும். |
128 |
1917 |
ஒப்பரும் வெறுக்கை தன்னால் ஓங்கிய
விறலாற் சீரான்
மெய்ப்படு மிடலால் யார்க்கும் மேன்மையால் அழியா வாற்றால்
இப்பகல் வானோர்க் கெல்லாம் இடர்புரி கொடுமை நீரால்
அப்பெருஞ் சூரற் கென்றும் ஆரம்நேர் அன்று மாதோ. |
129 |
1918 |
ஏயதோ ரண்ட மொன்றின் இழைத்தன இவ்வா
றேனை
ஆயிரத் தோரேழ் அண்டத் தவன்செயல் அறிதல் தேற்றாந்
தூயதோர் பரத்தின் மேலாஞ் சோதியாய் எம்மைக் காப்பான்
மேயின ஒருநீ அன்றி வேறியார் தெரிதற் பாலார். |
130 |
1919 |
தொடர்ந்திடு சீர்பெற் றுள்ள சூரன தாணை
என்னில்
கடந்திடல் புரியார் மாலுங் கமலமேல் அயனும் வானோர்
அடங்கலும் முனிவர் யாரும் ஆயிர விருநா லண்டத்
தொடுங்கிய உயிரும் அன்னோன் பெருமையார் உரைக்கற் பாலார். |
131 |
1920 |
முடிவிலிவ் வளம்பெற் றுள்ள முரண்கெழு
சூர பன்மன்
கெடுகிலன் அன்று மேலோன் கிளத்திய வரத்தின் சீராற்
படியறும் அமல மேனிப் பரஞ்சுடர் குமர நீயே
அடுவதை அன்றிப் பின்னர் அவனையார் முடிக்கற் பாலார். |
132 |
1921 |
ஐந்தியல் அங்கஞ் சூரற் கயன்புகன்
றுழல்வான் நாளும்
இந்திரை கேள்வன் போர்செய் தெஞ்சினன் எவர்க்கும் மேலாய்
முந்திய சிவன்அன் னோற்கு முதல்வரம் அளித்தான் பின்னர்
வந்தடல் புரியான் நீயே மற்றவற் கோறல் வேண்டும். |
133 |
1922 |
ஆவதோர் சூரன் றன்னை அவன்றுணை வோரை
மைந்தர்
ஏவர்கள் தமையும் அட்டே எழிலபெறு சயந்த னோடும்
தேவர்தஞ் சிறையை நீக்கித் திசைமுகன் மகவா னாதிக்
காவலர் பதங்கள் நல்கிக் காத்தருள் எம்மை யென்றான். |
134 |
1923 |
இவ்வஆஆ முகமா றுள்ள எம்பிரான்
உளத்திற் கேற்ப
உய்வுறும் அன்பாற் பொன்னோன் உரைப்பமுன் அறிந்த தொன்றை
மெய்வரு தொடர்பால் ஈன்றோர் விழைவினான் மழலை ஓவாச்
செவ்வியல் மகார்வாய்க் கேட்குந் திறனென வினவிச் சொல்வான். |
135 |
1924 |
புன்றொழில் அவுணர் தன்மை புறத்தவர்
செய்கை யாவும்
ஒன்றிடை விடாது முற்றும் உள்ளவா றுரைத்தாய் நம்மு
னன்றிது பனுவற் கெல்லாம் நாதனை ஒருநீ அன்றோ
வென்றவன் புறத்தை நீவி இனிதருள் புரிந்தான் எங்கோன். |
136 |
1925 |
அறிவினுள் அறிவாய் வைகும் அறுமுக அமல
வெஞ்சூர்
இறுசெயல் நினைக்கி லாகும் ஈண்டையோர் ஆடல் உன்னிக்
குறுகினை யதுபோல் அன்னோன் கொள்கையுந் தேர்ந்தாய் நிற்கோர்
சிறியனேன் உரைத்தேன் என்னுந் தீப்பிழை பொறுத்தியென்றான். |
137 |
1926 |
பொறுத்தியென் குற்றம் என்று பொன்னடித்
துணையைப் பொன்னோன்
மறத்தலில் அன்பிற் பூண்டு வணங்கினன் தொழுது போற்ற
வெறித்தரு கதிர்வேல் அண்ணல் எம்முரை கொண்டு சொற்றாய்
உறத்தகு பிழையில் யாதும் உன்னலை இருத்தி என்றான். |
138 |
1927 |
வேறு
பொன்னெனும் பெயரினான் பொருவில் கந்தவேள்
இன்னருள் நிலைமைபெற் றிருந்த பின்னரே
தன்னயல் நிற்புறு சதம கத்தனை
அந்நிலை நோக்கியே அன்பிற் கூறுவான். |
139 |
1928 |
ஈண்டிது கேண்மனத் தேதும் எண்ணலை
மூண்டிடு சூர்குல முடிய வானுளோர்
மீண்டிட இருஞ்சிறை விண்ப தத்தைநீ
ஆண்டிட நல்குதும் ஐயுறேல் என்றான். |
140 |
1929 |
இகபரம் உதவுவான் இதனைச் சாற்றலும்
மகபதி பரிவொடு வணங்கி வானவத்
தொகையொடு போற்றியே துன்பெலாம் ஒரீஇப்
புகலரும் மகிழ்ச்சியுட் பொருந்தல் மேயினான். |
141 |