| 
					 
			
			  
					 
Project Madurai is an open, world-wide initiative devoted to preparation & 
free distribution of ETexts of Tamil Literary Works  led by 
Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland (Project Leader) 
and 
Dr. P. Kumar Mallikarjunan, Blacksburg, Va, USA (Dy. Project Leader). 
					 It is directed to preserve in electronic 
					form the rich literary treasures of the Tamil people so that 
					anyone located anywhere may download a copy for personal use 
					or read it free of charge.  The following indices to 
					the works published by Project Madurai are available here - 
					
						1. 
						A subjectwise classified catalogue of  texts in 
						Unicode & PDF 
						2. A chronological 
						index of texts in Unicode & PDF  
					 
					
					
					The Distributed Proofreading for Project Madurai 
					site provides a web-based method  to simplify the 
					typing and  proofreading work necessary to create 
					e-texts in Project Madurai.  This DP-PM concept was 
					inspired by the 
					Distributed Proofreaders for 
					Project Gutenberg and the website is derived from PGDP's 
					code base. The first step to take if you would like to help 
					in the work of Project Madurai would be to register to be a 
					new volunteer. You can do so by clicking
					
					here. 
					Unicode fonts may be downloaded from
					
					here  and stepwise instructions to view Unicode 
					Tamil text are available
					
					here.  TSCII conformant fonts are available free 
					for use on Macintosh, Unix and Windows platforms from 
					here.  Some of the ETexts released before 
					January 1999, are in Inaimathi Tamil font which may be 
					downloaded from 
					here. 
					Dr.N. Kannan's Introduction to the Project 
					in Tamil is aptly titled "எழுதாக் 
					கிளவி (வேதம்) முதல் இலத்திரன் பதிப்பு வரை! 
					- 
					From Vedas to Electronic 
					Publishing".  
					
					Dr. Jayabarathi 
					from Malaysia, discussing the reasons for naming the project 
					as Project Madurai commented in 1998: 
					
						"... Our proto-historical legends say 
						that there was already a Madurai called Then Madurai 
						(Southern Madurai). This was situated in the land of 
						Kumari, by the river called Kanni. The first 
						academy/library called Sangam was established here. The 
						first scholar to preside over that first Sangam or 
						Thalai Sangam was iRaiyanaar. He is identified with 
						"Thiripuram eriththa virisadaik KadavuL" The patrons 
						were, hereditarily, the Pandiyan kings. This, then, was 
						the earliest Madurai.  
						 After a cataclysm, the capital shifted to a place 
						called Kabaadapuram, by the river Kumari. This city was 
						south of the present Kumari Cape. It is mentioned in the 
						Raamaayana of Vaalmiiki. Here was the Second Sangam or 
						Idai Sangam and was thought to be presided by Murugak 
						KadavuL. Murugan in this context is called "KunRam 
						eRintha KumaravEL". Incidentally, Krishna has also 
						presided over this Second Sangam. He is known by the 
						name of "Thuvaraik KOmaan". The TholkAppiyam is the only 
						remaining work belonging to this time.  
						 After another debacle, the capital was shifted to 
						the present Madurai. Here was the Third Sangam or Kadai 
						Sangam. The famouse "ThiruviLaiyaadal" by iRaiyanaar 
						with Tharumi and Nakkeerar happened in this period. The 
						literary compilations that go by the name of 
						Ettuththogai and Paththuppaattu belong to this Sangam. 
						Due to some unclear circumstances, this Sangam came to 
						an end.  
						 The Jains dominated the scene in Madurai around 
						4th-7th centuries. It was during this time that many of 
						the works belonging to "Pathinen kIzh kaNakku" were 
						composed. The "5 Perum Kaappiyam" also took their shape 
						during this period, as did the "5 SiRum Kaappiyam".  
						 The Jains under a very eminent scholar/priest called 
						Vajra Nandhi, formed a Tamil Sangam in Madurai. For some 
						reasons best known to the scholars concerned, this Tamil 
						Sangam was not deemed as the Fourth Tamil Sangam, but 
						just went under the modest proprietary name of "Vajra 
						Nandhi Tamil Sangam".  
						 Even after the Turkish invasion and during the 
						Telugu Nayak rule, Tamil studies were actively pursued 
						in Madurai. It was during this time, that 
						Nachchinaarkkiniyar wrote the commentaries to 
						Tolkaappiyam and the other Sangam works. He was a native 
						of Madurai. If not for him, much of the Sangam 
						literature would have got lost forever. The meanings of 
						the Sangam poetry also would have been lost. The 
						remaining Sangam literature would have remained as a 
						museum piece, waiting to be deciphered, like the 
						Harappan seals.  
						 Then we come to the 19th century. There was a great 
						awakening of the Tamils and 
						
						U.V. Saminatha Aiyer, 
						
						Thamodharam Pillai, and others brought to light many 
						of the ancient Tamil works which had hitherto remained 
						in obscurity. Tamils wanted to live back the ancient 
						glory. A Tamil Sangam was formed in Madurai by Prince 
						Paandi Thurai Thevar and other scholars. This was the 
						Fourth Madurai Tamil Sangam.  
						 So naming the proposed electronic text archive 
						project devoted to Tamil literature after this great 
						historic city Madurai is very appropriate." 
					 
Tamil works of Eelam 
origin  are also amongst the target works for electronic archiving. 
					
Dr.K. Kalyanasundaram  has commented that it is unfortunate that 
the world famous Jaffna library which contained important material was burnt 
out, but that he is optimistic that there are many Eelam Tamil lovers, who may 
have some copies of Tamil works in their personal libraries. He wrote: 
  "The problem is to get hold of a copy of the printed works 
	still available. Will it be possible  to lobby on this point and 
	solicit individuals who are willing to lend (yes, we would like to borrow 
	the books for few months for etext preparation or we can even work with a 
	photocopy of the work if the book is too delicate to lend)? ... If anyone is 
	willing to lend his/her personal collections, we will certainly do our best 
	to return the book at the earliest possible date."  
 
Dr. N. Kannan of Kiel, Germany and  Mr.Padmanabha Iyer of London have 
been coordinating a major effort to render 
Modern Eelam Tamil Literature 
in Etext form and release them under the auspices of Project Madurai. 
 
					
					 
					
					An Introduction 
					to Project Madurai in Tamil 
					எழுதாக் கிளவி (வேதம்) முதல் 
					இலத்திரன் பதிப்பு வரை! 
					
					From Vedas to Electronic 
					Publishing 
					  Dr.N.Kannan, 
					Kiel, Germany 
					
						
						கணினி மூலம் தமிழ் மையங்கள் அமைப்போம்,
						 கணினி மூலம் தமிழ் இலக்கியத்தை பதிப்பிப்போம், 
						கணினி மூலம் பள்ளiகள் நடத்துவோம், கணினி மூலம் நட்புப் 
						பாலம் அமைப்போம். தொழில் திறனும், தமிழ் வளமும் கை 
						கோர்க்கும் நேரமிது. இதில் நம் பங்கு என்ன என்பது, நாம் 
						தீர்மானிப்பதில் உள்ளது.
						 
						
							 
						 
					 
					
					இந்திய நாகரிகத்தின் மிகச் சிறந்த சிந்தனைகளான வேதங்கள் 
					தொன்மையான காலம் தொட்டு எழுதப் படாமல் சொல்லப் பட்டே வந்தன. 
					அதனால்தான் நான்கு வேதங்களுக்கும் எழுதாக் கிளவி என்றொரு பெயர் 
					உண்டு. எழுத்து வடிவம் தொடங்குமுன்னே மனிதனனின் சீரிய 
					எண்ணங்களை பதிவு செய்யும் ஊடகமாகச் சொல் இருந்தது இதனால் 
					அறியக் கிடைக்கிறது. 
					
					பின் எழுத்தாணி கொண்டு பனை ஓலைகளiல் எழுதி, இவ்வோலைகள் 
					காலத்தின் அழிவை எதிர்கொள்ளும் வண்ணம் பதப்படுத்தப் பட்டு, 
					இந்த நூற்றாண்டு வரை காக்கப் பட்டு வந்துள்ளது. மரப்பட்டை, 
					பஞ்சு முதலான நார்களைக் கொண்டு காகிதம் தயாரிக்கப் பட்டபின் 
					தாளiல் மை கொண்டு எழுதி, பின் அச்சு கொண்டு எண்ணங்கள் 
					பதிப்பிக்கப் படுகின்றன. இந்த பரிணாமத்தின் சம காலத்து 
					வளர்ச்சியாக கணினிப் பதிவு  வந்துள்ளது. 
					
					எழுத்துக்களை மின் எழுத்துக்களாக ((eText or electronic text) 
					பதிப்பிக்கும் முறை சென்ற சில தசாப்தங்களiலேயே உருவாக்கப் 
					பட்டுளளது. பண்டைய தொன்மை இலக்கியங்களiலிருந்து சம காலத்து 
					இலக்கியம் வரை இப்புதிய வடிவில் பதிப்பக்கபட உள்ளன. ஐரோப்பிய 
					மொழிகள் இந்த புதிய ஊடகத்தை நன்கு பயன் படுத்தி வருகின்றன. 
					தமிழில் மின் பதிவு என்பது புதிது. 
					
					தமிழ் வரி வடிவங்கள் (fonts)  கணினிக்கு ஏற்றவாறு சில 
					ஆண்களுக்கு முன்பாகத்தான் தயாரிக்கப் பட்டுள்ளன. தனி 
					மனிதர்களiன் முயற்சிகளால் ஆரம்பிக்கப் பட்ட இத்தொழில் பெரிதும் 
					செழித்து வளர்ந்துள்ளது. பல்வேறு வரி வடிவங்கள் இப்போது 
					புழக்கத்தில் உள்ளன. 
					சில 
					உதாரணங்கள் -  பாமினி, பூபாளம், சிந்தியா, ஆதவின், மயிலை, 
					அஞ்சல் (இணைமதி) போன்றவை. இவ்வரிவடிவங்களுக்கு ஏற்றவாறு ஆங்கில 
					தட்டச்சு விசைப் பலகை அமைப்பு (keyboard) மாறுபடுகிறது. பண்டைய 
					தமிழ் தட்டச்சு முறையிலிருந்து, ஒலி வழி அமைப்புகள் வரை 
					பல்வேறு அமைப்புகள் புழக்கத்தில் உள்ளன. 
					
					கணினியில் சேமிக்கும் இயலியின் அளவு பிரம்மாண்டமாக 
					கூடியிருக்கும் இத்தருணத்தில், நமது தமிழ் இலக்கியங்கள் 
					அனைத்தும் சின்ன ஒரு சுடு ருஓமு ல் (காந்தத்தகடு) சேமிக்கப் 
					படக் கூடியதாக உள்ளது. 
					
					ஆயினும், தமிழ் காந்தத் தகடுகளும், மின் பதிப்பும் இன்னும் 
					மிகவும் பின் தங்கிய நிலையிலேயே உள்ளன. தமிழ் இலக்கியங்கள் ஆமை 
					வேகத்தில் மின் பதிப்புகளாக கணிக்குள் ஏறிக் கொண்டு வருகின்றன. 
					
					சங்கம் வளர்த்த தமிழின் கடைச்சங்கமாக கணினி வந்துள்ளது. 
					மதுரைத் திட்டம் என்ற பெயரில் தமிழின் பண்டைய இலக்கியங்கள் 
					மின் எழுத்துக்களாக பதிப்பிக்கப் பட்டு, வலையகத்தில் (iநதரெநதெ 
					ஹுஒமபொஙe) சேமிக்கப் பட்டுள்ளன. இவ்விலக்கிய மின் பதிப்புகளை 
					எல்லோரும் இலவசமாக தங்கள் கணினிக்கு மாற்றிக் கொண்டு, கணினித் 
					திரையிலோ அல்லது தனிப்பட்ட முறையில் அச்சு எடுத்துக் கொள்ளவோ 
					முடியும்..   
					
					இதுவரை வந்துள்ள மின் பதிப்புகள. 1330 திருக்குறள், 
					திருவாசகம், திருமந்திரம் (முதல் தொகுதி) நாலாயிர 
					திவ்யப் பிரபந்தம் (முதல் தொகுதி) 
					
					இத்திட்டத்தில் இனி வரவிருக்கும் பதிவுகளை கிழ்க்கண்ட 
					முகவரியில் அறிந்து கொள்ளலாம். 
					
						
							
							
							
							http://www.projectmadurai.org
							 
						 
					 
					
					இம்மின் பதிப்பு முழுவதும் தனி மனித முயற்சியின் ஊடாக, சொந்த 
					ஆர்வத்தில், சொந்தக் கணனிகள் கொண்டு பதிப்பிக்கப்பட்டு 
					வருகின்றன. எந்தவித வியாபார நோக்கமுமின்றி, எந்த நிறுவனத்தின் 
					உதவியுமின்றி இத்தொகுப்பு தமிழ் தாத்தா உ.வே.சா செய்தது போல் 
					தமிழுக்கு வளம் சேர்க்க செய்யப் பட்டு வருகிறது. எங்கள் 
					வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று நினைப்போர் 
					மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டு செய்ய வேண்டிய ஒரு தொண்டு இது. 
					
					வலையகத்தில் நிற்கும் இப்பதிப்பகம் உண்மையில் ஒரு நூலகமும் 
					ஆகும். இந்நூலகத்தில் இப்பதிப்புகளுக்கான அறிமுக உரைகளும் 
					காணக்கிடைக்கின்றன. இந்நூலகம், தாயகம் இழந்து அந்நிய மண்ணில் 
					வதிக்கும் புகலிட மாந்தர்க்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாகும். 
					
					ஏனெனில் இந்நூலகத்தின் ஆக்கமும், வளர்ச்சியும், விஸ்தாரணமும் 
					நாம் திர்மானிக்கக் கூடியதாக உள்ளது இதன் ஜனநாயகத் தன்மைக்கு 
					நல்ல எடுத்துக்காட்டு. உதாரணமாக, ஈழக் கவிஞன் மகா கவியை வைய 
					விரிவு வலையில் ஏற்றி அவனது கவிதை உலகமெலாம் பரவ வேண்டுமென்று 
					ஒரு ஈழத்தவன் விரும்பினால் அவரது கவிதைகளை தன் முயற்சியாலோ, 
					ஒரு குழுவாகச் சேர்ந்தோ சில நாட்களiல் பதிப்பித்து விட 
					முடியும். மகாகவியின் கவிகைளiல் ஆர்வமுள்ள பேராசிரியர்களைக் 
					கொண்டு இலக்கிய ஆர்வத்தைத் தூண்டும் வண்ணம் அறிமுகக் 
					கட்டுரைகளை எழுதச் சொல்லியும் வலையகத்தில் ஏற்றி விடலாம். 
					புகலிட இலக்கியம் என்ற புதிய துறையா? கவலை வேண்டாம், புகலிட 
					எழுத்துக்களை ஆசிரியர்களiன் அனுமதியுடன் வலையகத்தில் கொண்டு 
					சேர்த்து விடலாம்.
					 
					 
					
					புத்தகமாக வரும் போது வாசிக்கப் படுவதைப் போல் பல மடங்கு அதிக 
					வாசகர்களைக் கொண்ட வைய விரிவு வலையகம் பிரபலமாக 
					விரும்புவர்களுக்கு நல்ல ஊடகமாகவும், பிரபலமான எழுத்துக்களை 
					உடனுக்குடன் அறிந்து கொள்ள உதவும் ஊடகமாகவும் நம் கையில் 
					உள்ளது. 
					
					கணினி என்பது கணிக்கும் காரியத்திற்கும் மேலாக படைப்பாளiயின், 
					வாசகனின் தொடர்பு ஊடகமாக பரிமளிக்கிறது. 
					
					இவ்வூடகத்தை நன்கு பயன் படுத்தி தமிழ் பற்றை வளர்க்கவும், 
					தமிழ் இலக்கிய ஆர்வத்தை வளர்க்கவும், புதிய தலைமுறைக்கு 
					தமிழைக் கொண்டு செல்லவும், உலகமெலாம் பரந்து கிடக்கும் 
					தமிழர்களை ஒன்று கூட்டவும் முடியும். கணினிப் பலகையில் 
					கொஞ்சமேனும் பரிச்சயமுள்ள பெண்களும், ஆண்களும் தங்கள் வேலை 
					நேரம் போக மிதமுள்ள நேரத்தில் நாளுக்கு அரை மணித் தியாலங்கள் 
					செலவழித்தால் கூட நம் தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் சில 
					மாதங்களiல் பதிப்பிக்கப் பட்டுவிடும். 
					 
					 
					
					யாழ் தமிழ் நூலகம் இன துவேஷத்தின் காரணமாக அழிக்கப் பட்டது. 
					இந்நிலை மிண்டும் தமிழுக்கு வராமல் காக்க நம் இலக்கிய 
					செல்வங்களை மின் பதிப்பாக்கி உலகில் உள்ள அத்தனை 
					தமிழர்களiடமும் பாதுகாப்பாக எவ்விதச் செலவுமின்றி வைத்து விட 
					முடியும். கணினி நம் தோழன்/தோழி. அதன் செயல்திறன் அளப்பரியது. 
					அதை செம்மையாக பயன்படுத்துவது நமது திறமையைப் பொருத்த விடயம். 
					
					கணினி மூலம் தமிழ் மையங்கள் அமைப்போம், 
					 கணினி மூலம் தமிழ் இலக்கியத்தை பதிப்பிப்போம், கணினி 
					மூலம் பள்ளிகள் நடத்துவோம், கணினி மூலம் நட்புப் பாலம் 
					அமைப்போம். தொழில் திறனும், தமிழ் வளமும் கை கோர்க்கும் 
					நேரமிது. இதில் நம் பங்கு என்ன என்பது, நாம் தீர்மானிப்பதில் 
					உள்ளது.
					 
					 
					
					நா.கண்ணன், கில், ஜெர்மனி 
					
  |