202
|
நச்சகம் அமிர்தம்
அன்ன நங்கையர் நாட்ட வைவேல் தைச்சக மயக்கல் செய்யாத் தடுப்பருந்
தவத்தின் மிக்கான் இச்சகம் புகழு கின்ற இருபிறப் பாளர் கோமான்
குச்சகன் என்னும் பேரோன் கொடிமதிற் கடகம் வாழ்வோன்.
|
1 |
203
|
அவற்கொரு புதல்வன்
உண்டால் அருமறை பயின்ற நாவான் கவுச்சிகன் என்னும் பேரோன்
கரையொரு சிறிதுங் காணாப் பவக்கடல் கடக்கும் ஆற்றாற் பராபர
முதல்வற் போற்றித் தவத்தினை இழைப்ப ஆங்கோர் தண்புனல் தடாகஞ்
சார்ந்தான்.
|
2 |
204
|
அத்தலை ஒருசார் எய்தி
ஆனினந் தீண்டு குற்றி ஒத்தென அசைத லின்றி உயிர்ப்பொரீஇ உலக
மெல்லாம் பித்தென உன்னி மாயாப் பேரின்ப அளக்கர் மூழ்கி
நித்தன்ஐ யெழுத்தும் அன்னான் நிலைமையும் நினைந்து நோற்றான்.
|
3 |
205
|
ஓவிய மவுன முற்றாங்
குணவொடும் உறக்கம் நீங்கித் தாவற நோற்கும் வேலைத் தடமரை கடமை
யாதி மேவிய விலங்கு தத்தம் மெய்யகண் டூயம் யாவும் போவது
கருதி அன்னான் புரத்திடை உரைத்துப் போமால்.
|
4 |
206
|
இப்பரி சியன்ற
போழ்தும் யாவதும் உணரா னகி ஒப்பற நோற்கும் வேலை ஒல்லையில் அதனை
நாடி முப்புரஞ் சிதைய மோனாள் முனிந்தவன் அருளி தென்னாத்
செப்பினன் இமையோர் சூழச் சேணிடைத் திருமால் சேர்ந்தான்.
|
5 |
207
|
அற்புதம் எய்தி
மைந்தன் அருந்தவம் புகழ்ந்து முன்போய் எற்படும் அவன்றன் மேனி
எழின்மலர்க் கரத்தால் நீவி வெற்பன மனிவ நின்பேர் மிருககண் டூயன்
என்னார் சொற்பயில் நாமஞ் சாத்த ஏழுந்துகை தொழுது நின்றான்.
|
6 |
208
|
தொழுதெழு முனியை
நோக்கித் தூமதிச் சென்னி யோன்றன் முழுதுறு கருணை நின்பால்
முற்றுக முன்னஞ் செய்த பழுதவை நீங்க வென்னாப் பரிவுசெய் தருளி
வானோர் குழுவுடன் உவண வூர்தி கொம்மென மறைந்து போனான்.
|
7 |
209
|
போனபின் முனிவர்
மேலோன் புரமெரி படுத்த முக்கண் வானவன் அருளி னாலே வல்விரைந்
தேகித் தாதை யானவன் முன்னர் எய்தி அடிமுறை வணங்க அன்னான்
தானுள மகிழ்ந்து கண்டாங் கெடுத்தனன் தழுவிக் கொண்டான்.
|
8 |
210
|
தவத்திடை யுற்ற தன்மை
மொழிகெனத் தனயன் தானும் உவப்புறு தாதை கேட்ப உள்ளவா றுரைத்த
லோடும் நிவப்புறு முவகை மிக்கு நின்குலத் தவர்க்குள் நின்போல்
எவர்க்குள தினைய நோன்மை யாதுநிற் கரிய தொன்றே.
|
9 |
211
|
பாருளார் விசும்பின்
பாலார் பயனுகர் துறக்க மென்னும் ஊருளார் அல்லா ஏனை உலகுறு
முனிவர் தம்மில் ஆருளார் நின்னை ஒப்பார் ஐயநீ புரிந்த நோன்மை
காருளார் கண்டத் தெந்தை யன்றிமற் றெவரே காண்பார்.
|
10 |
212
|
எனப்பல புகழ்த லோடும்
இவன்வழி மரபு தன்னில் மனப்படும் ஒருசேய் பின்னாள் மறலியைக்
கடக்குங் கூற்றால் வினைப்பகை இயல்பு நீக்கும் விமலன தருளால்
வேறோர் நினைப்பது வரலுந் தாதை நெடுமகற் குரைக்கல் உற்றான்.
|
11 |
213
|
கிளத்துவ துனக்கொன்
றுண்டால் கேண்மதி ஐய மேனாள் அளப்பரு மறைக ளாதி அறைந்தன யாவ
ரேனுந் தளத்தகு பரிசு மன்றால் சால்புடை அந்த ணாளர் கொளப்படு
கடனே யாகும் நாற்பெருங் கூற்ற தன்றே.
|
12 |
214
|
உனற்கரும் பிரமந்
தன்னில் ஒழுகல்இல் லறத்தில் நிற்றல் வனத்திடைச் சேறல் பின்னர்
மாதவத் துறவில் வாழ்தல் எனப்படும் அவற்றி னாதி இயற்றினை யின்று
காறும் நினக்கது புகல்வ தென்னோ நீயவை அறிதி யன்றே.
|
13 |
215
|
பின்னவை இரண்டும்
பின்னர்ப் பேணுதல் பேச வொண்ணா முன்னதும் இயற்ற லாலே முற்றிய
திடையின் வைத்துச் சொன்னதோர் கடன்இஞ் ஞான்று தொடங்கிய வேண்டுந்
தூயோய் அன்னதன் நிலைமை தன்னை ஆற்றினை கோடி யென்றான்.
|
14 |
216
|
முனிவரன் இதனை ஆங்கண்
மொழிதலும் இதனைக் கேளா இனியதோர் உறுதி சொற்றார் எந்தையார்
எனக்கீண் டென்னா மனமுற முறுவல் செய்து மதலையாம் ஒருவற் கீது
வினையறு தவத்தின் நீரும் விளம்புதல் மரபோ வென்றான்.
|
15 |
217
|
வேறு பேதைப்
படுக்கும் பிறவிக் கடல்நீந்தும் ஓதித் திறத்தை உணர்ந்துடையோன்
ஆதலினால் காதற் புதல்வன் கவுச்சிகனென் போன்தனது தாதைக் கினைய
பரிசுதனைச் சாற்று கின்றான்.
|
16 |
218
|
முன்னருள பாச
முயக்கறுக்க வேண்டியநான் பின்னுமொரு பாசம் பிணிக்கப் படுவேனேல்
தன்னிகரில் ஈசன் றனையெவ்வா றெய்துவன்யான் இன்னலெனும் ஆழி
யிடைப்பட் டுலைவேனே.
|
17 |
219
|
மொய்யான தில்லா
முடவன்ஒரு வன்தனது கையா னவையிரண்டுங் கந்தாத் தவழ்தருவான்
ஐயா அதற்கும் அரும்பிணியொன் றெய்தியக்கால் உய்யானே யானும்
உவன்போல் தளர்வேனோ.
|
18 |
220
|
மொய்யுற் றிடவே
முயலுந் தவத்தினன்றிப் பொய்யுற்ற இல்லொழுக்கம் பூண்டுவினை
போக்குவது மெய்யுற் றிடுதுகளை மிக்க புனலிருக்கச்
செய்யற்சின் னீரிடத்துத் தீர்க்குஞ் செயலன்றோ.
|
19 |
221
|
மண்ணுலகி லுள்ள
வரம்பில் பெரும்பவத்தைப் பெண்ணுருவ மாகப் பிரமன் படைத்தனனால்
அண்ணல் அ�துணர்தி அன்னவரைச் சிந்தைதனில் எண்ண வரும்பாவம்
எழுமையினும் நீங்குவதோ.
|
20 |
222
|
ஆதரவு கொண்டே அலமந்த
ஐம்புலமாம் பூதவகை யீர்க்கப் புலம்புற்ற புன்மையினேன்
மாதரெனுங் கணமும் வந்தென்னைப் பற்றியக்கால் ஏதுசெய்கேன் அந்தோ
எனக்கோ இதுவருமே.
|
21 |
223
|
பன்னாளும் பாரிற்
பரவரலின் மூழ்குவிக்கும் பின்னாள் நிரயப் பெரும்பிலத்தி
னூடுய்க்கும் எந்நாளில் ஆண்டகையோர்க் கின்பம் பயந்திடுமோ
மின்னார்கள் தம்மை விழையுற்ற வேட்கையதே.
|
22 |
224
|
துன்பம் நுகரும்
வினையின் தொடர்ச்சியினோர் இன்பம் நுகர்வார்போல் ஏந்திழையார்
கட்பட்டார் தன்பல் மிகநடுங்க ஞாளி தசையில்லா என்பு
கறித்திட்டால் இருஞ்சுவையும் பெற்றிடுமோ.
|
23 |
225
|
அஞ்சன வைவேற்கண்
அரிவையர்தம் பேராசை நெஞ்சு புகின்ஒருவர் நீங்கும் நிலைமைத்தோ
எஞ்சல்புரி யாதுயிரை எந்நாளும் ஈர்ந்திடுமால் நஞ்சம் இனிதம்ம
ஓர்நாளும் நலியாதே.
|
24 |
226
|
கள்ளுற்ற கூந்தல்
கனங்குழைநல் லார்கருத்தில் கொள்ளப் படமெண் குணிக்குந் தகைமையதோ
தள்ளற் கரிதாகித் தம்மொடுபன் னாட்பழகி உள்ளுற்ற தேவும் உணர்தற்
கரிதன்றோ.
|
25 |
227
|
ஓதலும் ஒன்றா
உளமொன்றாச் செய்கையொன்றாப் பேதை நிலைமை பிடித்துப்
பெரும்பவஞ்செய் மாதர் வலைப்பட்டு மயக்குற்றார் அல்லரோ சாதல்
பிறப்பில் தடுமாறு கின்றாரே.
|
26 |
228
|
ஆனால் உலகில்
அருங்கற் பினையுடைய மானார் இலரோ எனவே வகுப்பீரேல் கோனான
தங்கள் கொழுநன் இயல்வழுவாத் தேனார் மொழியாரும் உண்டு சிலர்தாமே.
|
27 |
229
|
உற்ற வுலவையிடை
ஓர்புலிங்கம் ஊட்டியக்கால் கற்றை விடுசுடர்மீக் கான்று
கனல்மிக்குப் பற்றுதல் செல்லாத பலவினும்போய்ப் பற்றிடுமால்
அற்றெனலாம் ஈங்கோர் அரிவைமுயங் காதரமே.
|
28 |
230
|
சந்திரற்கு நேருவமை
சாலுந் திருமுகத்துப் பைந்தொடிக்கை நல்லார் பலரும் புடைசூழக்
குந்தமொத்த நாட்டத்துக் கோதமனார் பன்னியினால் இந்திரற்கு நீங்கா
இடர்ப்பழிஒன் றெய்தியதே.
|
29 |
231
|
வேறு கூன்முகத்
திங்கள் நெற்றிக் கோதையர் குழுவுக் கெல்லாந் தான்முதல் இறைவி
யாகத் தன்கையாற் சமைக்கப் பட்ட மான்முக நோக்கி முன்னோர் மலரயன்
மையல் எய்தி நான்முகன் ஆனான் என்ப நாமுண ராத தன்றே.
|
30 |
232
|
மற்றுள முனிவர் தேவர்
மாயமாங் காமந் தன்னால் உற்றிடு செயற்கை யெல்லாம் உரைப்பினும்
உலப்பின் றாமால் அற்றெலா நிற்க யான்அவ் வாயிழை மடந்தை கூட்டம்
பெற்றிடும் ஒழுக்கந் தன்னைப் பேணலன் பிறப்பு நீப்பேன்.
|
31 |
233
|
பூண்டகு விலங்கல்
திண்டோட் புரந்தரன் முதலோர் சீரும் வேண்டலன் இல்வாழ் வென்னும்
வெஞ்சிறை அகத்தும் வீழேன் மாண்டகு புலத்தின் மாயும் மயக்கொரீஇத்
தவமென் றோதும் ஈண்டிய வெறுக்கை மேவி இன்பமுற் றிருப்ப னென்றான்.
|
32 |
234
|
இவைபல உரைத்த லோடும்
இருந்தகுச் சகன்தான் இந்தக் குவலய மதிக்கு மாற்றாற் கூறும்இல்
லொழுக்கந் தன்னை நவையென இகழா நின்றான் நான்மறைத் துணிவுங்
கொள்ளான் தவமயல் பூண்டான் என்னாத் துயர்கொடு சாற்ற லுற்றான்.
|
33 |
235
|
புலத்தியன் போலு
மேலோய் பொருவின்மங் கலஞ்சேர்பொன்னின் கலத்தியல் வதுவை பூண்டோர்
கன்னியைக் கலத்தல் செய்து குலத்தியல் மரபின் ஓம்பக் குமரரைப்
பயந்தே அன்றோ நலத்தியல் தவத்தை ஆற்றி நண்ணருங் கதியிற் சேரல்.
|
34 |
236
|
மன்பதை உலக மேபோல்
மாலுறா மயங்கு காம இன்பநீ நுகர்தற் கேயோ இசைத்தனன் இறந்த மேலோர்
துன்பமும் நிரயஞ் சேர்வுந் துடைத்திடுந் தொன்மை நோக்கி அன்புறு
புதல்வர்க் காக அரிவையைக் கோடி ஐயா.
|
35 |
237
|
சித்திரம் இலகு
செவ்வாய்ச் சீறடிச் சிறுவர் தம்மைப் புத்திர ரென்னுஞ் சொற்குப்
பொருணிலை அயர்த்தி போலாம் இத்தக வதனை நாடி இல்லறம் பூண்டு
நிற்றல் உத்தம நெறியே யாகும் தவத்தின தொழுக்கும் அ�தே.
|
36 |
238
|
குவவுறு நிவப்பின்
மிக்க கோடுயிர் குடுமிக் குன்றின் இவர்வுறு காத லாளர் இயற்படு
சார லெய்தித் திவவொடு போத லன்றிச் சேணுற உகளுந் தன்மைக்
குவமைய தாகும் இன்னே உயர்தவத் தொழுக உன்னல்.
|
37 |
239
|
தருவினில் விலங்கில்
அன்ன தகையன பிறவிற் சால வருபயன் கோடற் கன்றோ மற்றவை வரைதல்
செய்யார் பெருகும்இல் லறத்தி னோடும் பெருமகப் பொருட்டால் நீயும்
அரிவையை மணந்து பின்னாள் அருந்தவம் புரிதி அன்றே.
|
38 |
240
|
இந்தநன் னிலைமே னாளே
எண்ணிலை இந்நாள் காறும் முந்துசெய் கடன தாற்றி முற்றினை முறையே
பன்னாட் சிந்தனை செய்த வானோர்க் கவிமுதற் சிறப்புச் செய்யாய்
மைந்தநீ இன்னே நோற்கும் வண்ணமே எண்ணற் பாற்றே.
|
39 |
241
|
இந்திரர் புகழுந்
தொல்சீர் இல்லறம் புரிந்து ளோர்க்குத் தந்தம தொழுக்கந் தன்னில்
தகுமுறை தவற்றிற் றேனுஞ் சிந்திடுந் தீர்வும் உண்டால்
செய்தவர்க் கனைய சேரின் உய்ந்திடல் அரிதால் வெற்பின் உச்சியின்
தவற லொப்ப.
|
40 |
242
|
சுழிதரு பிறவி
யென்னுஞ் சூழ்திரைப் பட்டுச் சோர்வுற் றழிதரு துயர நேமி
அகன்றிடல் வேண்ட மேனுங் கழிதரு நாளான் அல்லாற் கதுமெனத் துறக்க
லாமோ வழிமுறை நும்மு னோரின் மற்றது புரிதி மன்னோ.
|
41 |
243
|
தேவரும் முனிவர்
தாமுஞ் செங்கண்மா லயனும் மற்றும் யாவரு மடந்தை மாரோ டில்லறத்
தொழுகுந் தன்மை மேவரப் பணித்தான் அன்றே விமலையோட டணுகி மேனாள்
தாவரும் புவன மாதி சராசரம் பயந்த தாணு.
|
42 |
244
|
மறுக்கலை அவன்றான்
செய்த வரம்பினை வழியை வேண்டி வெறுக்கலை எனது கூற்றை விலக்கலை
உலகின் செய்கை செறுக்கலை இகலு மாற்றாற் செப்பலை சிறிது மாற்றந்
துறக்கலை எமரை இன்னே தொன்முறை உணர்ந்த தூயோய்.
|
43 |
245
|
வேறு ஆடக வனப்புடை
அருந்ததியை நீங்கான் மாடுற இருத்தியும் வசிட்டமுனி யென்போன்
நீடுதவ நோன்மைகொடு நின்றனன் அதன்றிப் பீடுகெழு ஞாலமிசை பெற்றபழி
யுண்டோ.
|
44 |
246
|
துயக்குறு பவத்திடை
தொடர்ச்சியறு தூயோர் நயப்பொடு வெறுப்பகலின் நாளுமட மானார்
முயக்குறினும் மாதவ முயன் றிடினும் அன்னோர் வியத்தகு
மனத்துணர்வு வேறுபடு மோதான்.
|
45 |
247
|
மேனவியல் பான்வரையும்
மெல்லியலை மேவில் தானமுள தாகும்அரி தானதவ மாகும் வானமுள
தாகுமிவண் மண்ணு முளதாகும் ஊனமில தாகும்அரி தொன்றுமிலை யன்றே.
|
46 |
248
|
காண்டகைய தங்கணவ
ரைக்கடவு ளார்போல் வேண்டலுறு கற்பினர்தம் மெய்யுரையில் நிற்கும்
ஈண்டையுள தெய்வதமும் மாமுகிலு மென்றால் ஆண்டகைமை யோர்களும்
அவர்க்குநிக ரன்றே.
|
47 |
249
|
ஆயிழையொ டின்புறும்
அறத்தைமுத லாற்றாய் தூயதவ நன்னெறி தொடங்கல்புரி வாயேல்
மாயமிகு காமவிடம் வந்தணுகின் அம்மா மேயவிதி காக்கினும்
விலக்கியிட லாமோ.
|
48 |
250
|
துறந்தவர்கள்
வேண்டியதொர் துப்புரவு நல்கி இறந்தவர்கள் காமுறும் இருங்கடன
இயற்றி அறம்பலவும் ஆற்றிவிருந் தோம்புமுறை யல்லால்
பிறந்தநெறி யாலுளதொர் பேருதவி யாதோ.
|
49 |
251
|
மெத்துதிறல் ஆடவரும்
மெல்லியல்நல் லாருஞ் சித்தமுற நன்கினொடு தீதுசெயல் ஊழே
உய்த்தபடி யல்லதிலை யாம்உழவர் ஒண்செய் வித்துபய னேயலது வேறுபெற
லாமோ.
|
50 |
252
|
நற்றவம தாகுமில
றந்தனை நடாத்திச் சுற்றமற நீங்குதுற வேதுறவ தம்மா மற்றது
புரிந்திடின் உனக்குநவை வாரா அற்றது மறுத்துரையல் ஆணைநம
தென்றான்.
|
51 |
253
|
அன்னபல மாமுனி
யறைந்திடலும் ஓரா முன்னமறை யாதிய மொழிந்ததுணி வென்றார்
பன்னகம் அணிந்திடு பரன்பணியும் என்றார் என்னினி உரைப்பதென
எண்ணிஇனை கின்றான்.
|
52 |
254
|
தத்தமத ருட்குரவர்
தாவில்வளம் நீங்கி அத்தியிடை யாழ்கெனினும் அன்பினது செய்கை
புத்திரர்கள் தங்கள்கட னாம்புதுமை யன்றே இத்திறம் மறுக்கலன்
இசைந்திடுவன் யானும்.
|
53 |
255
|
தந்தைசொல்
மறுப்பவர்கள் தாயுரை தடுப்போர் அந்தமறு தேசிகர்தம் ஆணையை
இகந்தோர் வந்தனைசெய் வேதநெறி மாற்றினர்கள் மாறாச் செந்தழல
வாயநிர யத்தினிடை சேர்வார்.
|
54 |
256
|
ஆதலின் விலக்கல்முறை
அன்றென வலித்துக் கோதறு குணத்தின்மிகு குச்சகர்தம் அம்பொற்
பாதம திறைஞ்சிமுனி யேல்பணியில் நிற்பன் ஓதுவ துனக்குள
தெனக்கழறல் உற்றான்.
|
55 |
257
|
தன்னுரைகொ ளாதமனை
வாழ்க்கையது தன்னில் வெந்நிரயம் வீழும்வகை யேவிழுமி தம்மா
அன்னரொடு மேவியமர் ஆடவர் தமக்குப் பின்னுமொரு கூற்றுமுள
தோபிணியும் உண்டோ.
|
56 |
258
|
என்னுரையி
னிற்சிறிதும் எஞ்சலில வாகி மன்னுமியல் பெற்றிடு மடந்தையுள
ளேல்அக் கன்னிதனை யான்வரைவல் காயெரிமுன் என்னாச் சொன்னமொழி
கேட்டுமகிழ் வுற்றுமுனி சொல்லும்.
|
57 |
259
|
வேறு யானும்
உய்ந்தனன் என்கிளை யுய்ந்தன இனையதால் நினையீன்றாள், தானும்
உய்ந்தனள் தவங்களும் உய்ந்தன தண்ணளி யது மற்றால்,
வானும் உய்ந்தன மண்ணுல குய்ந்தன வாசவ னெனவாழுங், கோனும்
உய்ந்தனன் என்னுரை மறாமலுட் கொண்டனை அதனாலே.
|
58 |
260
|
வேண்டும் வேட்கையை
உரைத்தியால் மைந்தநீ விளம்பிய இயல்பெல்லாம்,
பூண்டு குற்றமோர் சிறிதுமில் லாததோர் பூவையைப் புவியின்பாற்,
தேண்டி நின்வயிற் புணர்க்குவன் அங்கது செய்கலா தொழிவேனேல்,
மாண்டி றந்திடுங் குறைமதிக் கதிரென மாய்கஎன் தவமென்றான்.
|
59 |
261
|
இனைய பான்மையிற்
குச்சகன் சூளுரை இயம்பலுந் திருமால் முன்,
புனையும் மெய்ப்பெயர் தரித்தசேய் ஆங்கவன் பொலங்கழல்
தனைப்பூண்டோர்,
தனயன் உய்பொருட் டாலிது புகன்றனை தவத்தினில் தலையான, முனிவ
நீயுனக் கரியதாய் ஒருபொருள் முச்சகந் தனிலுண்டோ.
|
60 |
262
|
ஆவ தேனும்யான்
உரைப்பதுண் டத்தனை யற்றவர் அருளும்யாய்,
சாவ தாயினர் தன்னையர் இல்லவர் தங்கையர் இலரானோர், காவ
லாடவர் தம்முடன் உதித்திடார் காசினி தனிலன்னோர், வீவதாயினர்
பெருங்கிளை இல்லவர் வியத்தகு திருவற்றோர்.
|
61 |
263
|
குடிப்பி றந்திலர்
பிணியுறும் இருமுது குரவர்பாற் குறுகுற்றோர், கடுத்த யங்கிய
மிடற்றிறை யாதியாங் கடவுளர் பெயர்கொள்ளா,
தடுத்த மாக்கடம் பெயர்பெறு பீடிலர் அலகைதன் நாமத்தோர்,
படித்த லந்தனில் புன்னெறிச் சமயமாம் படுகுழிப் பட்டுள்ளோர்.
|
62 |
264
|
பிணியர் மூங்கையர்
பங்கினர் வெதிரினர் பிறர்மனை தனிற் செல்வோர், கணிகை மாதரின்
விழிப்பவர் பன்முறை காளையர் தமை நோக்கி,
நயிண காதலான் முன்கடை நிற்பவர் நலம்பெறப் புனைகின்றோர், தணிவில்
துயில்மிகு் இயல்பினர் தன்னினும் மூப்புற்றோர்.
|
63 |
265
|
ஒருமை தங்கிய கோத்திர
மரபினர் உயாந்தவர் குறளானோர்,
பருமை தங்கிய யாக்கையர் மெல்லுருப் படைத்தவர் பயனில்லாக்,
கருமை தங்கிய வடிவினர் பொன்னெனக் கவின்றெழு காயத்தோர், இருமை
தங்கிய பசப்பினர் விளர்ப்பினர் எருவையின் உருமிக்கோர்.
|
64 |
266
|
நாணி லாதவர் ஆடவர்
புணர்ச்சியில் நணியவர் நகைக்கின்றோர்,
ஏணி லாதவர் பெருமிடல் சான்றவர் இருமுது குரவோர்தம், ஆணை
நீங்கினர் சினத்தினர் இகலினர் அடுதிறம் முயல்கின்றோர், காண
வேணடினர் நடமுத லாயின காமனாற் கவல்கின்றோர்.
|
65 |
267
|
ஈசன் அன்பிலர்
பெருந்தகை முனிவரை இகழ்பவர் உயிர்மீது,
நேசமென்பன இல்லவர் தங்குல நெறிதனில் நில்லாதோர், மாசு
தங்கிய குணத்தினர் நிறையிலார் மனமெனுங் காப்பில்லோர், தேசி
கன்றனை மனிதனென் றுன்னினர் தேவரைச் சிலையென்றோர்.
|
66 |
268
|
பத்தின் மேற்படும்
ஆண்டினர் பூத்திடு பருவம்வந் தணுகுற்றோர்,
ஒத்த பண்பிலர் அச்சமில் மனத்தினர் உருமென வுரை செய்வோர்,
அத்தன் அன்னையீந் தருளுமுன் ஒருவர்பால் ஆர்வமுற்றவர்சேர, வைத்த
சிந்தையர் பெருமிதம் உற்றுளோர் மடமொடு பயிர்ப்பில்லோர்.
|
67 |
269
|
பிறப்பின் எல்லையில்
விழியிலார் தோற்றிய பின்றையே இழக்கின்றோர், மறுப்ப யின்றிடுங்
கண்ணினர் படலிகை வயங்கிய நோக்கத்தார்,
குறிப்பின் மெல்லென வெ�கியே விழித்திடுங் குருடர்சாய்
நயனத்தோர்,
சிறப்பில் பூஞையின் நாட்டத்தர் கணத்தினில் திரிதரு
செங்கண்ணோர்.
|
68 |
270
|
தூறு சென்னியர்
நரைமுதிர் கூந்தலர் துகளுறும் ஐம்பாலார்,
வீறு கோதையர் சின்னமார் குழலினர் விரிதரும் அளகத்தோர்,
ஈறில் செம்மயிர்ப் பங்கியர் நிலனிடை இறக்கிய கேசத்தோர், ஊறு
சேர்தரும் ஓதியர் விலங்கென உரமிகு குரலுள்ளோர்.
|
69 |
271
|
சிறுகு கண்ணினர்
மிகநெடுந் துண்டத்தர் சேர்ந்திடு புருவத்தோர்,
குறிய காதினர் உயர்தரும் எயிற்றினர் கோணுறு கண்டத்தோர்,
மறுவி ராவிய முகத்தினர் சுணங்குறா மணிமுலை மார்பத்தோர், வெறிய
தாகிய நுசுப்பிலர் சிலையென வியன்மிகு வயினுள்ளோர்.
|
70 |
272
|
காய நூல்முறை
உரைத்திடும் இயல்பிலாக் கடிதட நிதம்பத்தோர், வாயும் அங்கையும்
நகமுமுள் ளடிகளும் வனப்புறு சிவப்பில்லோர், மேய சின்மயிர்
பரந்திடு பதத்தினர் மென்சிறை எகினம்போல்,
தூய நன்னடை இல்லவர் அங்குலி தொல்புவி தோயாதோர்.
|
71 |
273
|
இனைய தன்மைய ராகிய
மாதர்கள் ஏனையர் இவர்யாவரும்,
புனையு மங்கல மாகிய கடிவினை புரிதர வரையாதோர், அனைய
ரேயெனின் வேண்டலன் முழுவதும் அவரியல் அணுகாத, வனிதை யுண்டெனின்
வேண்டுவன் தேர்ந்தனை மரபினில் தருகென்றான்.
|
72 |
274
|
காட்டில் நின்றிடு
குற்றியின் நோற்புறு கவுச்சிகன் இவைகூறக்,
கேட்டு மூரலும் உவகையுங் கிடைத்தனன் கேடில்சீர் உலகுள்ள,
நாட்ட கந்தனில் நாடிநல் லியல்புள நங்கையை நின்பாலிற்,
கூட்டுகின்றனன் மானுதல் ஒழிகெனக் குச்சகன் உரைசெய்தான்.
|
73 |
275
|
உரைத்த குச்சகன்
மைந்தனை நிறுவியே ஒல்லைசென் றகிலத்தில்,
திருத்த குஞ்சுடர் மலிதரு செம்பொனிற் செய்ததோர் அணிநாப்பண்,
அருத்தி சேர்தரக் குயிற்றிட வேண்டியோர் அருமணி தனைக்கொள்வான்,
கருத்தி லுன்னுபு தெரிபவன் போல்ஒரு கன்னியைத் தேர்கின்றான்.
|
74 |
276
|
வேறு அன்னவன்
தன்னேர் முனிவரர் சிலர்வந் தணுகலும் அவரொடும் வினாவிச்,
சென்னிதன் தேயத் தநாமயம் என்னுஞ் செயிரிலா வனத்துசத் தியன்பால்,
கன்னிகை யிருத்தல் உணர்ந்துமற் றவன்பாற் கதுமெனச் சேறலுங் காணூஉத்,
தன்னடி வணங்க வெதிருறத் தொழுது தழுவியே அவனொடுஞ் சாரா.
|
75 |
277
|
மாசற வியன்ற
உறையுளிற் கொடுபோய் வரன்முறை வழாமலே அமைத்த,
ஆசனத் திருத்திக் கன்னிகை யொடுதன் பன்னியை யாயிடை அழைத்துத்,
தேசிக னுற்றான் பணிமின்நீர் என்னாச் சென்னியால் இறைஞ்சுவித்
துரிய, பூசனை புரிந்து நகையொடு முகமன் புகன்றள வளாயினன்
புனிதன்.
|
76 |
278
|
அறுசுவை கெழுவும்
நறியசிற் றுண்டி அமுதினில் தூயன அருத்திக்,
குறைவறும் அடிகட் கென்னிடை வேண்டுங் கொள்கைய தென்னெனக் கூற,
மறுவறு தவத்துக் குச்சக முனிவன் மகிழ்ந்துநீ மாதவம் புரிந்து,
பெருமகள் தன்னை யெனதொரு மகற்குப் பேசுவான் பெயர்ந்தனன் என்றான்.
|
77 |
279
|
இனையசொல் வினவி
முனிவரன் மகிழா என்மகள் விருத்தையை இயல்சேர்,
உனதுமைந் தற்கு நல்கமுன் செய்த உயர்தவம் என்கொலென் றுரைத்து,
மனமுற நகையும் உவகையுங் கிளர மணவினை இசைந்துமா தவத்துப்,
புனிதனை அங்கட் சிலபகல் இருத்திப் போற்றிசெய் தொழுகுறும் பொழுதின்.
|
78 |
280
|
வேறு பங்கமில்
உசத்தியன் பன்னி யாகிய மங்கலை விடுத்திட மகள்வி ருத்தைதான்
அங்குள இகுளையர் ஆயந் தன்னுடன் செங்கயல் பாய்புனல் திளைப்பப்
போயினாள்.
|
79 |
281
|
காடுற வந்திடு கலுழி
மாண்புனல் ஆடினள் மகிழ்சிறந் தணங்க னாரொடு மாடுறு
பொதும்பர்போய் மலர்கொய் தன்னவை சூடினள் இருந்தனள் தொடலை
ஆற்றியே.
|
80 |
282
|
பாசிழை மங்கையர்
பண்ணை யோடெழீஇ ஆசறு பொதும்பினும் அணங்கை யன்னவள் மாசறு தாரகை
மரபற் சூழ்தருந் தேசுறு மதியெனத் திரும்பவும் வேலையே.
|
81 |
283
|
உருகெழு கனையொலி
உருமுக் கான்றிடுங் கருமுகில் இ�தெனக் கனன்று காய்கனல்
சொரிதரும் விழியது சூர்த்த மெய்யது பெருமத நதியொடு பெயரு
கின்றதே.
|
82 |
284
|
தாழுறு கரத்தது
தடத்தின் சால்பெனக் காழுறும் எயிற்றத கறைகொள் காலதால்
ஏழுகியர் குறும்பொறை இபமொன் றேற்றெதிர் பாழிய வரைதுகள்
படுத்துச் சென்றதே.
|
83 |
285
|
காண்டலும் வெருவினர்
கவன்றவ் வாறுசெல் ஆண்டகை யோர்களும் அகன்று சிந்தினார்
நீண்டிடு கடலிடை நிமிர்ந்த வெவ்விடம் ஈண்டலும் இரிந்தபுத்
தேளிர் என்னவே.
|
84 |
286
|
கன்னிகை விருத்தையாள்
கண்டு துன்புறா அன்னமென் னடையினர் அகன்று சிந்தலும் என்னினி
இழைப்பதென் றிரங்கி யேங்கியே உன்னருங் கடுப்பினில் உஞற்றி
யோடலும்.
|
85 |
287
|
கீழ்ந்தறை போகிய
கிளைஞ ராமெனத் தாழ்ந்திடு பசும்புதல் செறியத் தான்மறைந்
தாழ்ந்திடு கூவலொன் றணுக அன்னதில் வீழ்ந்தனள் அழுந்தினள்
விளிவுற் றாளரோ.
|
86 |
288
|
முடங்களை அலங்குறு
முதிய பூநுதல் மடங்கலின் ஏறெதிர் வரினும் மாறுகொள் கடங்கலுழ்
மால்கரி கல்லென் ஆர்ப்பொடு நடந்தது மலையமா னாடு சாரவே.
|
87 |
289
|
இரிந்திடு மாதரார்
யாண்டு மாகியே விரிந்திடு வோர்குழீஇ வியர்க்கு மேனியர்
சரிந்திடு கூந்தலர் தளரும் நெஞ்சினர் பிரிந்திடும் உவகையர்
பெயர்ந்து நாடினார்.
|
88 |
290
|
தண்டம தெங்கணுந்
தானஞ் சிந்திடக் கொண்டலின் எய்திய கோட்டு மாதிரங் கண்டிலர்
கன்னிகை தனையுங் காண்கிலர் உண்டிலை யெனவுயிர் உயிர்ப்பு
நீங்கினார்.
|
89 |
291
|
மண்ணிடை யாறென
வழிக்கொண் டேகவே கண்ணிணை புனலுகக் கலுழ்ந்து சோர்வுறாத்
துண்ணென உணர்வுறத் துளங்கிச் சூழ்கனல் புண்ணுறு வோரெனப்
புலம்பல் மேயினார்.
|
90 |
292
|
வேறு பெண்ணுக்
கணிகலமே பேராகுக் கோருருவே கண்ணுக் கணியே கமலத்துச் செந்திருவே
மண்ணிற் புனல்படிந்தாய் வானதியும் ஆடுவதற் கெண்ணித் துணிந்தோ
எமைவிட்டுப் போயினையே.
|
91 |
293
|
வன்னப் புனலாட்டி
வல்லே புறங்காத்தென் மின்னைத் தருதி ரெனவே விடைகொடுத்த
அன்னைக்கென் சொல்வேம் அடுகளிற்றின் முன்னாக உன்னைத் தனிவிட்
டுயிர்கொண்டு போந்தனமே.
92 |
294
|
ஐயர் உசத்தியரும்
அன்னையெனும் மங்கலையும் வையம் பரவுகின்ற மாதுலராங் குச்சகருங்
கையறவின் மூழ்கக் கரந்தாய் இனியொருகால் செய்ய முகமுந்
திருநகையுங் காட்டாயோ.
|
93 |
295
|
என்னப் பலவும்
புலம்பி இரங்குற்றே உன்னற் கருஞ்சீர் உசத்தியன்றான் நற்றவத்தின்
மன்னுற்ற தெய்வ வனத்தின் மலைவாழக்கைப் பன்னிக் கிவையுரைத்துப்
பாவைநல்லார் ஆவலித்தார்.
|
94 |
296
|
கேட்டிடலும் அன்னை
வயிறதுக்கிக் கேழ்கிளர்தீ ஊட்டரக்கே யென்ன உருகி மனமறுகி
வாட்டடங்கண் நீர்குதிப்ப வாய்வெரீஇத் தன்கணவன் தாட்டுணையில்
வீழ்ந்து புகுந்தபடி சாற்றினளால்.
|
95 |
297
|
ஒன்றுபுரி காட்சி
முனிவன் உவைகேட்டுக் கன்றுபிரி தாயின் கவன்றரற்றிக் கன்னியொடு
சென்றுபிரி வுற்றோரை நோக்கிச் சினக்களிறு கொன்றதுவோ அஞ்சாது
கூறுமெனச் செப்புதலும்.
|
96 |
298
|
தூயபுன லாடித்
துறைபுகுந்து சூழ்பொதும்பில் ஆயமுடன் ஆடி யகன்றிங்கு வந்திடலுங்
காயுமழல் வெங்கட் கடகளிறு வந்ததுகண் டோயுமுணர் வெய்தி எல்லோமும்
ஓடினமால்.
|
97 |
299
|
ஓடி யுலையா ஒருவர்
நெறியொருவர் கூடல் இலதா அணியின் குழாஞ்சிந்திச் சாடு
மதகரியில் தப்பி விருத்தைதனைத் தேடியங்ஙன் காணாது சென்றனம்யாம்
என்றிடலும்.
|
98 |
300
|
சென்றாங்கவ்
வெல்லைதனில் தேடித் தியங்குற்று நின்றான் மகள்தன் நிறங்கிளரும்
பொற்கலனோர் ஒன்றாக வெவ்வே றொருநெறியில் சிந்திடக்கண்
டென்றாய் படர்ந்தநெறி ஈதுகொலென் றேமுற்றான்.
|
99 |
301
|
பூண்போ கியநெறியே
தொட்டுப் புதல்விதனைக் காண்போ மெனவே கனங்குழையா ரோடேகி
மாண்போய கூவலொன்று வந்தணுக ஆங்கதனில் சேண்போய தன்மகளைக் கண்டு
தெருமந்தான்.
|
100 |
302
|
வேறு கூவலுறு
வதுநோக்கி நெடிதுயிர்த்து விழிவழிநீர் குதிப்பக் குப்புற்,
றாவலியா மகளையெடுத் தகன்கரையின் பாற்படுத்தி அழுங்கலோடும்,
பாவையர்கள் தழீஇக்கொண்டு புலம்பினரால் அதுகேட்டுப் பயந்த நற்றாய்,
காவிலுறு கோகிலம்போல் நெடிதரற்றிப் பெருந்துயரக் கடலுட் பட்டாள்.
|
101 |
303
|
தன்பால்வந் தவதரித்த
நங்கைதனைக் கைவிட்டுத் தரியா ளாகி,
அன்பாலே உயிர்பதைப்ப வயிறதுக்கி ஆகுலியா அரற்றி யேங்கி,
மின்பாலோர் மின்படிந்த தன்மையென அவளாக மிசையே வீழ்ந்து,
தென்பாலிற் புகுந்தனையோ ஓமகளே யெனப்புலம்பித் தேம்ப லுற்றாள்.
|
102 |
304
|
அன்னேயோ அன்னேயோ
ஆகொடிய தறனேயோ அியேன் அந்தோ,
முன்னேயோ நெடுங்காலங் குழவியின்றிப் பெரநோன்பு முயன்று பெற்ற,
மின்னேயோ உயிரிழந்து வௌ�ளிடையிற் கிடந்திடுமால் விதியார் செய்கை,
இன்னேயோ யானொருத்தி பெண்பிறந்து பெற்றபயன் இதுவே யன்றோ.
|
103 |
305
|
புலிக்கணங்கள்
திரிகானில் ஒருமானை வளர்த்ததனைப் போக்கி நின்றே,
அலக்கணுறு வோரெனவே கைவிட்டுத் தமியேனும் அழுங்கா நின்றேன்,
மலர்க்கமலத் திருவைநிகர் என்மகளைக் கொல்லியமுன் வந்த தந்தக், கொலைக்க
ளிற்றின் வடிவன்றே கொடியேன் செய் பெரும்பவத்தின் கோல மன்றோ.
|
104 |
306
|
அறங்காட்டிற்
சென்றதுவோ தெய்வதமும் இங்கிலையோ அரிதா முத்தித்,
திறங்காட்டுந் தவநெறியும் பொய்த்தனவோ கலியுமினிச் சேர்ந்த
தேயோ,
மறங்காட்டும் வனக்களிறு வந்தடர்க்க ஈண்டெனது மாது மாண்டு,
புறங்காட்டிற் கிடந்திடுமோ என்னேயென் னேயிதுவோர் புதுமை யாமே.
|
105 |
307
|
வேறு என்றிவை
பலவும் பன்னி இடருழந் தரற்றும் வேலை மன்றலங் குழலின் மாதர்
வளைந்தனர் இரங்கி மாழ்க ஒன்றிய கேளிர் அல்லா ரியாவரும் உருகி
நைந்தார் அன்றவண் நிகழ்ந்த பூசல் ஆகுலம் அறைதற் பாற்றோ.
|
106 |
308
|
கோட்டமில் சிந்தை
யோனாங் குச்சகன் குறுகி யங்கண்
நாட்டநீர் பனிப்பச் சோரும் நங்கையர் தம்பா லெய்தி
மீட்டினித் தருவன் மாதை விம்மலிர் என்னா வேறோர் மாட்டுற விருந்த
தந்தைக் கினையன வகுத்துச் சொல்வான்.
|
107 |
309
|
மறைமுத லாய நுண்ணூல்
மருளற உணரா மாக்கள் சிறியரே முதியர் பாலர் சேயிழை மகளிர்
இன்னோர் உறுவதோர் அவலஞ் செய்தாய் ஊழ்வினை முறையும் ஓராய்
அறிவநீ இன்னே யாயின் ஆரிது தணிக்கற் பாலார்.
|
108 |
310
|
கேளையா மனத்தில்
துன்பங் கிளத்தலை கேடு நீங்கி நீளயா வுயிர்த்தார் போலிந்
நேரிழைக் கன்னி தன்னை நாளையான் விளித்து நின்பால் நல்குவன் நல்க
நீநங் காளையா னவற்குப் பின்னாட் கடிமணம் புரிதி அன்றே.
|
109 |
311
|
ஐயமென் றுளத்தி
லுன்னி அழுங்கலை விதியு மற்றே மெய்யுணர் வதனாற் கண்டாம்
�வருத்தைதன் யாக்கை தன்னை மொய்யுறு தயிலத் தோணி மூழ்குவித்
திருத்தி யின்றே ஒய்யென நோற்று மீட்டுத் தருகுவன் உயிரை
யென்றான்.
|
110 |
312
|
சாற்றிய துணர்ந்து
தாதை தயிலத்தி லிட்டு மாதைப் போற்றினன் இருப்ப மேலோன் போயொரு
பொய்கை மூழ்கிக் கூற்றுவற் புகழ்ந்து நோற்பக் கொடுங்குழை மடவார்
அஞ்சக் காற்றென முன்னர் வந்த களிறுமீண் டணைந்த தம்மா.
|
111 |
313
|
தடமிகு புனலுட்
புக்குத் தாளினால் உலக்கிச் சாடிப் படவர வனைய செய்கைப் பருவலித்
தடக்கை தன்னால் இடைதொறுந் துழாவி நின்ற இருந்தவ முனிவற் பற்றிப்
பிடர்மிசை யேற்றிக் கொண்டு பெரிதுசேண் பெயர்ந்த தன்றே.
|
112 |
314
|
கோதறு குணத்தின்
மேலாங் குச்சகன் என்னுந் தொல்பேர் மாதவன் உணர்ந்து பின்னர்
மதக்களி றதனை நோக்கி ஈதெனைப் பற்றிச் செல்வ தென்கொல்கா ரணமென்
றெண்ணி ஓதியின் வலியா லன்ன தூழமுறை உன்ன லுற்றான்.
|
113 |
315
|
வேறு மாவ தத்தினை
இழைத்திடும் பூட்கையின் மதநீர் காவ தத்தினுங் கமழ்தரு
கலிங்கநாட் டதன்பால் ஆவ தத்நேர் மாக்கள்வாழ் அரிபுரம் அதனில்
தேவ தத்தன்என் றுளன்ஒரு வணிகரில் திலகன்.
|
114 |
316
|
தவத்தின் அன்னவன்
பெறுமகன் தருமதத் தன்எனப் புவிக்கண் மேலவர் புகழ்செய அறம்புரி
புகழோன் கவற்சி யின்றியே மூவகைப் பொருளையுங் காண்போன் உவப்பு
நீடிய இருநிதிக் கிறையினும் உயர்ந்தோன்.
|
115 |
317
|
தந்தை அன்னையும்
இறத்தலுந் தமியனே யாகச் சிந்தை வெந்துயர் உழந்துபின் ஒருவகை தேற
அந்த வேலையின் அவன்பெருந் திருவினை அகற்ற வந்து தோன்றினன்
மனமருள் செய்வதோர் வாதி.
|
116 |
318
|
முண்டி தப்படு
சென்னியன் தாதுவின் முயங்கு குண்ட லத்தினன் கோலநூல் மார்வினன்
நீற்றுப் புண்ட ரத்தயல் நெற்றியண்� கஞ்சுகன் புதியோன் கண்டி
கைக்கலன் புனைந்துளோன் வேத்திரக் கரத்தோள்.
|
117 |
319
|
அவனைக் கண்டனன்
அடிமுறை வணங்கின் அருவாஞ் சிவனைக் கண்டன னாமெனப் பெருமகிழ்
சிறந்தான் புவனிக் குள்ளவர் என்னினுஞ் சாலவும் புதியர்
தவமிக் கோரிவர் என்றுகொண் டுறையுளிற் சார்ந்தான்.
|
118 |
320
|
பொன்ன ருங்கலந்
திருத்துபு குய்யுடைப் பழுக்கல் நன்ன லம்பெற அருத்தினன்
முகமனும் நவின்றான் பின்னர் அன்னவன் றனையெதிர் நோக்கினன்
பெரியோய் என்னி வண்வந்த தென்றனன் வணிகருக் கிறைவன்.
|
119 |
321
|
ஈசன் தந்திடு
விஞ்சையொன் றெமக்குள தெவர்க்கும் பேசுந் தன்மைய தன்றது
குரவர்பாற் பெரிதும் நேசம் பூண்டவர்க் குரைப்பது நெஞ்சினில்
சிறிதும் மாசின் றாயநிற் குணர்த்துவன் அ�தென வகுத்தான்.
|
120 |
322
|
சரத மேயிது சம்புவின்
வந்ததோர் தகைசால் இரத முண்டது பொன்னெனச் செய்தனம் எமக்கோர்
அரிது மன்றது போல்வன பலவுள அவைதாம் விரத மாதவர் அல்லதி யார்கொலோ
விரும்பார்.
|
121 |
323
|
காரி ரும்பையும்
நாகத்திற் காட்டுதுங் கரிய சீரி ரும்பினைப் பொன்னென உரைபெறச்
செய்வாம் மேரு வுங்கயி லாயமும் என்றிரு வெற்பை யாரும்
நோக்கவே காட்டுதும் இவைநமக் கரிதோ.
|
122 |
324
|
எய்தும் ஈயமும்
இரதமும் வௌ�ளிய தெனவே செய்து மன்றியும் வங்கத்திற் செம்பொனுந்
தெரிப்பாம் நொய்தின் அன்னது வலியுறக் காட்டுதும் நுவலுங் கைத
வம்பயில் மாக்களுக் கினையன கழறாம்.
|
123 |
325
|
இரும்பி னிற்செம்பு
வாங்குவம் ஈயமும் அற்றே வரம்பி லாததோர் தரணியண் டஙகளை மரபின்
அரும்பொன் வண்ணம தாக்குவம் வல்லவா றறைய விரும்பி னாமெனின்
யாண்டுமோர் அளப்பில வேண்டும்.
|
124 |
326
|
ஒன்று கோடிபொன்
னாக்குவங் கோடிய துளவேல் குன்று போலவே கோடியிற் கோடிசெய்
குவமால் நின்ற னக்குள பொருளெலாந் தருதியேல் நினது மன்றல்
மாளிகை நிதிக்கிடம் இல்லென வகுப்பாம்.
|
125 |
327
|
என்ன வேமொழி சோரனை
வணங்கினன் இமைப்பின் முன்னர் உள்ளதுந் தான்றன துரிமையால் முயலப்
பின்னர் எய்திய நிதியமும் பேழையான் அவற்றின் மன்னு பூண்களுங்
கொணர்ந்தனன் முன்புற வைத்தான்.
|
126 |
328
|
வைத்த மாநிதி
நோக்கலும் வணிகரில் திலகர் உய்த்த செல்வமும் இதுகொலோ ஓவென
உரையாக் கைத்த லங்கொடு கைத்தலம் புடைத்துடுக் கணங்கள் நத்த
வேலையிற் ஒருங்குபட் டாலென நகைத்தான்.
|
127 |
329
|
இந்த நின்பொருள்
நம்முடை விஞ்சையில் இறைக்கும் வந்தி டாதுநாம் உருக்குறு
முகந்தனில் வழுவிச் சிந்து கின்றதற் கிலையிது நமதுபின் திரியின்
அந்த மில்பொருள் கொடுக்குவம் வைத்தியென் றறைந்தான்.
|
128 |
330
|
முனியல் ஐயநீ வேண்டிய
பெருநிதி முழுதும் இனிது நாடியே கொணருவன் இருத்தியென்
றுரைத்துப் புனையும் ஆடையும் நிலங்களும் மணிகளும் ம் மனையும்
மாக்களும் பகர்ந்தனன் நிகரிலா வணிகன்.
|
129 |
331
|
பொரும தத்தினை
இழைத்திடு மருப்புயர் புழைக்கைப் பெரும தக்கரி யென்னவே
மயங்கினன் பெரிதும் வரும தத்தமென் றறத்தையும் பர்ந்துமெய்
வணிகன் தரும தத்தனாம் பெயரினை நிறுவினன் தரைமேல்.
|
130 |
332
|
இத்தி றத்தினில்
தேடிய பெருநிதி எனைத்துங் கைத்த லங்கொடு தாங்கியே கரவன்முன் காண
வைத்து நிற்றலும் மகிழ்ந்தனன் அவையெலாம் வாங்கி மொய்த்த
செங்கணல் தீயிடை உருக்குதல் முயன்றான்.
|
131 |
333
|
திரட்டி யாவையும்
ஓருரு வாக்கினன் செழும்பொன் இரட்டி தூக்கிய இரதமாங் கொருசிலை
யிட்டு மருட்டி ஆடக முழுவதும் உரைத்தவை வலிதா உருட்டி
மட்பெருங் குகையினில் மருந்தையுள் ளுறுத்தான்.
|
132 |
334
|
பண்ணு றுத்திய
கனகமுள் ளிட்டதன் பாலும் எண்ணு றுத்திய மிசைக்கணுங் களங்கமொன்
றிட்டு மண்ணு றுத்திநற் றுகில்கொடு பொதிந்தனன் மருங்கிற்
கண்ணு றுத்திய செந்தழற் புடைமிசை கரந்தான்.
|
133 |
335
|
நூற்று நான்கொடு
நான்குகுக் குடபுடம் நொய்தின் வீற்று வீற்றதா விட்டது நோக்கினன்
மிகவும் மாற்று வந்தது பழுக்குமோர் வராகியின் மருளேல் காற்றி
லாததோர் உறையுள்காட் டென்றனன் கரவன்.
|
134 |
336
|
சேமஞ் செய்ததோர்
உறையுளைக் காட்டலுஞ் சென்று வாமஞ் செய்ததோர் இந்தனக் குவான்மிசை
மறவோர் ஈமஞ் செய்தசெந் தழற்கொடு வராகிமே லிட்டுத் தூமஞ்
செய்தனன் அங்கியும் அவனெதிர் துரந்தான்.
|
135 |
337
|
ஓங்கி நாட்டநீர்
பொழிதர ஆருயிர் உலைய வீங்கு கின்றமெய் வெதும்புற எங்கணும்
வியர்ப்ப மூங்கை யாமென மொழிகிலான் போவது முயலான் பாங்கி
ருந்திடு வணிகர்கோன் பட்டதார் பகர்வார்.
|
136 |
338
|
எல்லை அன்னதிற்
பொதிந்திடு பொற்குறை யெடுத்து மெல்லெ னத்தன தாடையிற் கரந்தனன்
வெய்யோன் வல்லை யக்குகை போலஒன் றிருந்தது மருங்கில் செல்ல
வைத்தனன் தழற்பெரும் புகையையுந் தீர்த்தான்.
|
137 |
339
|
தந்த இக்குகை
நின்கையில் தாங்கினை தழல்மேல் வைத்தி என்றனன் அவனது புரிதலும்
மரபின் அத்த குஞ்செயற் குரியன யாவையும் அமைத்து வித்த
கம்பெறச் சேமியா ஒருசெயல் விதித்தான்.
|
138 |
340
|
வேறு உண்டி
இகந்துரை யாடலை யாகிப் பெண்டிரை வெ�கல் பெறாய்பிறர் தம்மைக்
கண்டிடல் இன்று கருத்தினில் என்மைக் கொண்டிரு முப்பகல் கோதில்
குணத்தோர்.
|
139 |
341
|
நெய்கமழ் செஞ்சடை
நீலிதன் முன்னோர் மொய்கனல் வேள்வி முடித்திடல் உண்டால்
செய்கடன் அன்னது தீர்த்தபின் நாலாம் வைகலின் ஏகுதும் மற்றிவண்
என்றான்.
|
140 |
342
|
அம்முறை செய்கென
ஆங்கவன் அடியை மும்முறை தாழ்ந்து முதற்பெரு வணிகச் செம்மல
வன்புடை சென்றிலன் நின்றான் மைம்மலி சிந்தையன் வல்லை அகன்றான்.
|
141 |
343
|
காவத மோரொரு கன்னலின்
ஆகப் போவது செய்து புறத்துரு மாறி வாவினன் வேறொர் வளாகம
துற்றான் ஏவலின் வைகினன் இத்தலை வணிகன்.
|
142 |
344
|
முப்பகல் போதலும்
மூதறி வுள்ளோன் செப்பிய நாள்வரை சென்றுள வன்றே இப்பகல்
வந்திலன் என்னை அவன்சொல் தப்புவ னோவென வேதளர் கின்றான்.
|
143 |
345
|
நீடிய தொல்புகழ் நீலி
இருக்கை நாடினன் ேதகு நன்னகர் எங்கும் தேடினன் மாலுறு
சிந்தைய னானான் வாடினன் மீண்டனன் மாளிகை வந்தான்.
|
144 |
346
|
அடுத்துமுன் வைத்த
அருங்குகை தன்னை எடுத்தது நோக்க இரும்பது வாக வடுத்தவிர்
சிந்தையன் மாயைகொ லென்னா விடுத்தனன் அன்னது வீழுமுன்
வீழ்ந்தான்.
|
145 |
347
|
அத்தம் அனைத்தும்
அகன்றிட லோடும் பித்தின் மனத்தொடு பீழை யனாகி எய்த்தனன்
ஆயுளின் எல்லையும் எய்தத் தத்தனும் விண்ணிடை சார்ந்தனன் அன்றே.
|
146 |
348
|
அறந்தனை விற்ற
அருஞ்செய லாலே மறந்தரு தந்தனு மால்கரி யாகிப் பிறந்தனன்
முன்னுறு பெற்றிய தெல்லாம் மறந்தனன் என்று மனத்திடை கொண்டு.
|
147 |
349
|
மாற்றுவன் இப்பவம்
வல்லையி னென்னாச் சாற்றினன் முன்பு தவம்புரி வேலை நோற்றிடு
மோர்பகல் நோன்பவை தான்இவ் வாற்றல்இ பத்துழை யாகுக வென்றான்.
|
148 |
350
|
இப்பரி சங்கண்
இயம்புத லோடும் அப்பொழு தன்னவன் ஆண்டுறு வேழம் மெய்ப்படி
வந்தனை வீட்டினன் யாருஞ் செப்பரி தாகிய தேவுரு வானான்.
|
149 |
351
|
அந்தர துந்துபி
யார்த்தன வானோர் சிந்தினர் பூமழை சேணிடை நின்றும் வந்தது
தெய்வத மானம தன்பால் இந்திர னாமென ஏறினன் அன்றே.
|
150 |
352
|
பாசிழை மங்கையர்
பற்பலர் சுற்றா வீசினர் சாமரை விண்ணுறை கின்றோர் ஆசிகள்
கூறினர் அங்கவண் நிற்குந் தேசிக னாரடி செங்கை குவித்தான்.
|
151 |
353
|
நோக்கினன் மாதவ
நோன்மை யுளானை வாக்கினில் வந்தன வந்தனை செய்தான் நீக்கரும்
வல்வினை நீக்கினை யென்னா மேக்குயர் புங்கவர் விண்ணுல குற்றான்.
|
152 |
354
|
விண்ணிடை யேயவன்
மேவுத லோடு மண்ணிடை நின்றிடு மாதவன் முன்போல் எண்ணரு நோன்ப
தியற்றலும் அன்னோன் கண்ணிய தென்றிசை காவலன் வந்தான்.
|
153 |
355
|
முன்னுறு கூற்றுவன்
முப்பகை வென்றோய் உன்னிலை நோக்கி உவந்தனம் நம்பால் என்னைகொல்
வேண்டிய தென்றலும் அன்னோன் தன்னடி வீழ்ந்திது சாற்றுதல்
உற்றான்.
|
154 |
356
|
உந்திய சீர்த்தி
உசத்தியன் மானென் மைந்தன் மணஞ்செய வந்தனன் அன்னாள் முந்துறு
நென்னல் முடிந்தனள் முன்போல் தந்தருள் என்றிது சாற்றுத லோடும்.
|
155 |
357
|
அத்தகு போழ்தினில்
அந்தகன் என்போன் இத்தவன் வேண்டிய ஏந்திழை ஆவி வைத்தன மேயது
வல்லையின் மீட்டிங் குய்த்திடு வாயென ஒற்றொடு சொற்றான்.
|
156 |
358
|
கொற்றவன் இங்கிது
கூறி மறைந்தான் சொற்ற துணர்ந்திட தூதுவன் முன்போய் உற்றிடு
மவ்வுயி ரைக்கொடு போந்து மற்றவள் யாக்கையுள் வந்திடு வித்தான்.
|
157 |
359
|
வேறு உடற்குளுயிர்
வந்திடலும் புகுந்ததுமெய் யுணர்வுசிறி துயிர்த்த நாசி,
துடித்தனகால் பதைத்ததுரந் துளங்கிமுகம் விளங்கியதால் துவண்ட தாகம்,
எடுத்தனகை யசைந்தனதோ ளிமைத்தனகண் விழித்தனவால் இனைய காலை,
மடக்கொடியுந் துயிலுணர்ந்தாள் போலெழுந்தாள் எல்லோரும்
மருங்கிற் சூழ்ந்தார்.
|
158 |
360
|
அன்னையவள் தனைத்தழுவி
இரங்குற்றாள் தந்தையெடுத் தணைத்துப் பல்காற், சென்னிதனில்
உயிர்த்தேதன் இருகுறங்கின் மீமிசையே திகழச் சேர்த்தி,
என்னடிகள் என்கடவுள் எனதுதவப் பயனாகும் எந்தை நென்னல்,
சொன்னபடி தவமியற்றி உய்வித்தான் இவளை யென்று துணிவிற் சொற்றான்.
|
159 |
361
|
சுற்றுகின்ற
கிளைஞர்களும் அல்லோரும் அதிசயிப்பத் தொல்லை ஞாலம்,
பெற்றதிரு அனையாளதன் பெண்ணணங்கை முகநோக்கிப் பேதை நீயீண்,
டுற்றதுவும் இறந்ததுவும் மீண்டதுவும் முறைப்படவே உரைத்தி யென்னப்,
பொற்றொடியாள் அதுவினவிப் புகுந்ததொரு பரிசனைத்தும் புகல லுற்றாள்.
|
160 |
362
|
நீடியமங் கையர்பண்ணை
தன்னுடனே போந்ததுவும் நெடுநீர்க் கான்யா,
றாடியதும் மீண்டதுவுங் கடகளிறு போந்ததுவும் அதனைக் கண்டே,
ஓடியதுந் தானொருத்தி தனித்ததுவுங் கூவலிடை உலைந்து வீழ்ந்து,
வீடியதும் மீண்டதுவுந் தென்றிசைக்கண் நிகழ்வனவும் விரித்துச்
சொற்றாள்.
|
161 |
363
|
சொன்னமொழ யதுகேளா
மிகமகிழும் வேலைதனில் துகளில் தூயோன்,
கொன்னவிலும் முத்தலைவேற் கூற்றுவன்றன் அருள் பெற்றுக் குறுக
லோடு,
முன்னுறவே எதிர்சென்று பெருங்கிளையும் பன்னியுமா முனியும்
பெற்ற,
கன்னியும்வந் தடிவணங்கிப் போற்றி செய வரன்முறையே கருணை
செய்தான்.
|
162 |
364
|
என்னுயிரும்
பெருங்கிளைஞர் தம்முயிரும் இல்லறத்திற் கியன்ற பன்னி,
தன்னுயிரும் நட்டோர்கள் தமதுயிரும் நின்றிடயான் தவத்திற் பெற்ற,
மின்னுயிர்தந் தருளினையால் அரிதோநிற் கிதுவம்மா வேலை ஞாலம்,
மன்னுயிர்காத் தளிப்பவனும் நீயெனவே எனதுள்ளம் மதித்த தன்றே.
|
163 |
365
|
வள்ளலையுன்
றிருவுளத்தை யாருணர்வார் கவுச்சிகனா மகற்கியான் பெற்ற,
தௌ�ளமிர்த மனையமொழி விருத்தையெனுங் கன்னிகையைத் திசையின் நாடிக்,
கொள்ளுதற்கு வந்தனையோ கூற்றுவனாற் போனவுயிர் குறுகி மீண்டு,
மௌ�ளவரும் படியஆ�த்துத் தந்திடுவான் வந்தனையோ விளம்பு கையா.
|
164 |
366
|
எனமுனிவன் தனைநோக்கி
முகமன்கள் இவைபலவு மெடுத்துக் கூறி,
அனையவனை யுடன்கொண்டு கூற்றத்தா ரெல்லாரு மடைந்து சூழ,
மனைவியொடும் புதல்வியொடும் மடமாதர் தங்களொடும் வல்லையேகித்,
தனதுறையுள் இடைப்புகுந்து வீற்றிருந்தான் ஆற்றரிய தவத்தின் மேலோன்.
|
165 |
367
|
பின்புமொரு சிலவைகல்
குச்சகனை அவணிருத்திப் பெரியோய் இங்ஙன்,
என்புதல்வி தனையளிப்பன் உன்மதலை தனைக்கொண்டேயேகு கென்னத்,
தன்புதல்வற் கொடுவரலும் விருத்தையெனுங் கன்னிகையைத் தழல்சான் றாக,
அன்பினொடு நன்னாளி லோரைதனில் விதிமுறையே அருள்செய் தானால்.
|
166 |
368
|
வேறு அருள்புரிந்
திடுதலும் அன்பி னான்இயைந் யூ�ருவரும் இல்லறம் இயற்றப் பல்பகல்
கருணைசெய் குச்சகன் கண்டு மாதவம் புரிதர வேவட புலத்திற்
போயினான்.
|
167 |
369
|
போதலும் இருந்திடும்
புனித வேதியன் மாதவ வலியினால் மாதின் நோன்பினால் மேதினி
வியந்திட மிருகண் டென்னவோர் காதலன் உதித்தனன் கணிப்பில்
காட்சியான்.
|
168 |
370
|
அப்புதல் வற்கியாண்
டாறு சென்றுழி மெய்ப்பிர மச்செயல் விளங்கு பான்மையால்
முப்புரி நூல்வினை முடித்துத் தாதைபோல் செப்பரு மாதவஞ் செய்யப்
போயினான்.
|
169 |
371
|
ஊற்றமா மிருககண்
டூயன் என்றிடும் ஆற்றன்மா முனிவரன் அகல வன்னவன் தோற்றமா
கியசுதன் தொன்மை நாடியே போன்றினன் ஆதியிற் புரியுஞ் செய்கடன்.
|
170 |
372
|
சொற்கலை தெரிமருத்
துவதி யென்றிடும் முற்கலன் மகள்தனை முறைவ ழாதுபின் நற்கலை
யணிகலன் நல்கி நீக்கிய வற்கலை யுடையினான் வதுவை முற்றினான்.
|
171 |
373
|
இருந்தனன் அநாமயம்
என்னும் பேரொடும் பொருந்திய வனத்திடைப் புதல்வர் இன்றியே
வருந்தினன் தமரொடும் மாது தன்னொடும் அருந்தன் காசியை அடைதல்
மேயினான்.
|
172 |
374
|
அடைந்ததோர்
பொழுதினில் அமரர் யாவருங் கடைந்திடு திரைக்கட லனைய கங்கைநீர்
குடைந்தனன் ஆடினன் குழுமி மாதவர் மிடைந்திடு மறுகிடை விரைவில்
மேவினான்.
|
173 |
375
|
பொன்றிரண் மாமதில்
புடைய தாமணி கன்றிகை யென்பதோர் கடவுள் ஆலயஞ் சென்றனன்
சூழ்ந்தனன் திங்கள் வேணியான் மன்றமர் திருவடி வணங்கிப்
போற்றினான்.
|
174 |
376
|
மெய்ப்படு மறையுணர்
மிருகண் டென்பவன் அப்பெருங் கோயிலுக் கணித்தொர் பாங்கரில்
செப்புறும் ஆகமத் தௌ�வு நாடியே மைப்பெருங் கண்டனை வழிபட் டானரோ.
|
175 |
377
|
ஆதவம் பனிமழை அனிலத்
தச்சுறாப் பாதவ மாமெனப் பரவ மாறினும் பேதைபங் குடையவெம்
பிரானை உன்னியே மாதவம் புரிந்தனன் மதலை வேண்டியே.
|
176 |
378
|
அருந்தவம் ஓரியாண்
டாற்றத் தொல்லைநாட் பொருந்திய மூவெயில் பொடித்த புங்கவன்
வரந்தனை உதவுவான் வந்து தோன்றலும் இருந்தவ முனிவரன் இறைஞ்சிப்
போற்றினான்.
|
177 |
379
|
முந்துறு முனிவரன்
முகத்தை நோக்கிநீ சிந்தையில் விழைந்ததென் செப்பு கென்றலும்
மைந்தனை வேண்டினன் வரத்தை நல்கென எந்தையும் முறுவல்செய் தினைய
கூறுவான்.
|
178 |
380
|
வேறு தீங்குறு
குணமே மிக்குச் சிறிதுமெய் யுணர்வி லாமல் மூங்கையும் வெதிரு
மாகி முடமுமாய் விழியும் இன்றி ஓங்கிய ஆண்டு நூறும் உறுபிணி
யுழப்போ னாகி ஈங்கொரு புதல்வன் தன்னை யீதுமோ மாத வத்தோய்.
|
179 |
381
|
கோலமெய் வனப்பு
மிக்குக் குறைவிலா வடிவ மெய்தி ஏலுறு பிணிகள் இன்றி எமக்குமன்
புடையோ னாகிக் காலமெண் ணிரண்டே பெற்றுக் கலைபல பயின்று வல்ல
பாலனைத் தருது மோநின் எண்ணமென் பகர்தி யென்றான்.
|
180 |
382
|
மாண்டகு தவத்தின்
மேலாம் மறைமுனி அவற்றை யோரா ஆண்டவை குறுகி னாலும் அறிவுள னாகி
யாக்கைக் கீண்டொரு தவறு மின்றி எம்பிரான் நின்பா லன்பு
பூண்டதோர் புதல்வன் தானே வேண்டினன் புரிக வென்றான்.
|
181 |
383
|
என்றிவை துணிவி னாலே
இசைத்தலும் ஈசன் நிற்கு நன்றிகொள் குமரன் தன்னை நல்கின மென்று
சொல்ல நின்றிட முனிவன் போற்றி நெஞ்சகம் மகிழ்ச்சி யெய்தி
ஒன்றிய கேளி ரோடும் உறைந்தனன் உறையும் நாளில்.
|
182 |
384
|
பூதல இடும்பை நீங்கப்
புரைதவிர் தருமம் ஓங்க மாதவ முனிவர் உய்ய வைதிக சைவம் வாழ
ஆதிதன் னருளி னாலே அந்தகன் மாள அன்னான் காதலி உதரத் தாங்கோர்
கருப்பம்வந் தடைந்த தன்றே.
|
183 |
385
|
அடைதலும் அதனை நோக்கி
அறிதரு முனிவன் ஆண்டை விடையவன் அடியார் யார்க்கும் வேண்டிய
வேண்டி யாங்கே நெடிதுபல் வளனும் ஈந்து நிறைதரு திங்க டோறுங்
கடனியல் மரபு மாற்றிக் காசியின் மேவி னானே.
|
184 |
386
|
கறையுயிர்த் திலங்கு
தந்தக் காய்சின அரவங் கவ்வக் குறையுயிர்ப் படிவத் திங்கள்
அமிர்தினைக் கொடுத்திட் டாங்கு மறையுயிர்த் தருளுஞ் செவ்வாய்
மதலையை வயாவின் மாழ்கிப் பொறையுயிர்த் தருளில் தந்தாள் பொறைதரு
திருவைப் போல்வாள்.
|
185 |
387
|
மீனமும் முடி்த நாளு
மேவுற மிதுனஞ் செல்ல ஊனமில் வௌ�ளி தானும் ஒண்பொனும் உச்ச மாகுந்
தானமுற் றினிது மேவத் தபனனே முதலா வுள்ள ஏனையர் முனிவர் நாகர்
இந்தொறும் இருப்ப மன்னோ.
|
186 |
388
|
நன்ணினன் புவியின்
மைந்தன் நவமணிக் குலமும் பொன்னுஞ் சுண்ணமும் மலருந் தாதுந்
தூயமென் கலவைச் சாந்தும் தண்ணுறு நானச் சேறுந் தலைத்தலைக் கொண்ட
தாவில் விண்ணவர் மண்ணு ளோர்கள் வியப்புற வீசி ஆர்த்தார்.
|
187 |
389
|
தேவதுந் துபிகள்
ஆர்த்த செய்தவை யோம்பி மாற்றும் மூவர்கள் அன்றி ஏனோர் முறைமுறை
ஆசி செய்தார் யாவதென் றுணர்தல் தேற்றா திந்நகர் அன்றி நேமி
காவல்செய் உலகம் யாவுங் களிமயக் குற்ற வன்றே.
|
188 |
390
|
தந்தையும் அதனைக்
கேளாத் தடம்புனற் கங்கை மூழ்கி அந்தணர் முதலோர்க் கெல்லாம்
ஆடகம் பலவும் நல்கி முந்துறு கடன்கள் ஆற்ற முளரிமேல் முனிவன்
மேவி மைந்தனுக் குரிய நாமம் மார்க்கண்டன் என்று செய்தான்.
|
189 |
391
|
மறுப்படாத் திங்கள்
போல வளர்தலும் மதியந் தோறும் உறுப்படை உபநிட் டானம் ஓதனம்
பிறவும் முற்ற நெறிப்படு மோரி யாண்டின் நெடுஞ்சிகை வினையும்
ஆற்றிச் சிறப்புடை இரண்டாம் ஆண்டிற் செவிநெறி புரித லுற்றான்.
|
190 |
392
|
ஏதமில் ஐந்தின்
முந்நூல் இலக்கண விதியுஞ் செய்தே ஓதிடுங் கலைக ளெல்லாம் உள்ளுற
வுணர்த்துங் காலை வேதமும் பிறவுங் கொண்ட வியன்பொருள் தெரிந்து
மேலாம் ஆதியே சிவனென் றெண்ணி அவனடி அரணென் றுற்றான்.
|
191 |
393
|
அரனைமுன் இறைஞ்சி
யன்னான் அன்பரைத் தாழ்ந்து தங்கள் குரவனை வணக்கஞ் செய்து கோதறு
முனிவர் தம்மைப் பரவியே பயந்த மேலோர் பாதபங் கயங்கள் சூடிப்
பிரமமாம் ஒழுக்கம் நாளும் பேணினன் பிறப்பு நீப்போன்.
|
192 |
394
|
இந்தவா றியலுங் காலை
எண்ணிரண் டான யாண்டும் வந்ததால் அதனை நோக்கி மைந்தனை நோக்கி
வாளா தந்தையும் பயந்த தாயுந் தனித்தனி இருந்து சால
வெந்துயர்க் கடலின் மூழ்கி விம்மலுற் றிரங்கி நைந்தார்.
|
193 |
395
|
ஆங்கது மதலை காணா
அடியினை வணங்கி அன்னோர் பாங்குற அணுகி நீவிர் பருவரல் உறுகின்
றீரால் ஈங்கிது வென்னே என்னும் யாதுமொன் றறிதல் தேற்றேன்
நீங்குமின் அவலம் நும்பால் எய்திய நிகழத்து மென்றான்.
|
194 |
396
|
கூறிய மொழியுட்
கொண்டு குமரநீ யிருக்க நம்பால் வேறொரு துயர மெய்தி மெலிவதும்
உண்டோ மேனாள் ஏறுடை அமல மூர்த்தி யாண்டுநின் தனக்கீ ரைந்தும்
ஆறுமென் றளித்தான் அந்நாள் அடைதலின் அவலஞ் செய்தேம்.
|
195 |
397
|
என்றுரை செய்த தாதை
இடருறு முகத்தை நோக்கி ஒன்றுநீர் இரங்கல் வேண்டாம் உயிர்க்குயி
ராகி யென்றும் நின்றிடும் அரனை யேத்தி அருச்சனை நிரப்பிக்
கூற்றின் வன்றிறல் கடந்து நும்பால் வல்லைவந் தடைவன் மன்னோ.
|
196 |
398
|
இருத்திரால் ஈண்டே
என்னா ஏதுக்கள் பலவுஞ் செப்பிக் கருத்துற நெடிது தேற்றிக்
கான்முறை வணங்கி நிற்பத் திருத்தகு குமரற் புல்லிச் சென்னியும்
மோந்து முன்னர் வருத்தமும் நீங்கிச் சிந்தை மகிழ்ந்தனர் பயந்த
மேலோர்.
|
197 |
399
|
இருமுது குரவர்
தத்தம் ஏவலின் ஈசன் என்னும் ஒருவன தருளும் அன்பு முடனுறு
துணையாய்ச் செல்லப் பொருவரு மகிழ்ச்சி பொங்கப் பொள்ளெனப்
பெயர்ந்து போகித் திருமணி கன்றி கைப்பேர்ச் செம்பொன்ஆ லயத்திற்
புக்கான்.
|
198 |
400
|
என்புநெக் குருகக்
கண்ணீர் இழிதர வலஞ்செய் தீசன் முன்புற வணக்கஞ் செய்து முடிமிசை
யடிகள் சூடித் தென்புலத் தொருசா ரெய்திச் சிவனுருச் செய்து
பன்னாள் அன்புடன் அருச்சித் தேத்தி அருந்தவம் இயற்றி யிட்டான்.
|
199 |
401
|
வேறு ஈசனும்
அவ்வழி யெய்தி நற்றவம் பூசனை அதனொடு புரிதி யாலது மாசில
தாதலின் மகிழ்ந்து நீயினிப் பேசுக வேண்டிய பெறுதற் கென்னவே.
|
200 |
402
|
ஐயனே அமலனே அனைத்து
மாகிய மெய்யனே பரமனே விமல னேயழற் கையனே கையனேன் காலன் கையுறா
துய்யநேர் வந்துநீ உதவென் றோதலும்.
|
201 |
403
|
அஞ்சலை அஞ்சலை அந்த
கற்கெனாச் செஞ்சரண் இரண்டையுஞ் சென்னி சேர்த்தலும் உஞ்சனன்
இனியென ஓத வொல்லையில் நஞ்சணி மிடற்றினான் மறைந்து நண்ணினான்.
|
202 |
404
|
நண்ணிய பின்னரே
நவையின் மைந்தனுக் கெண்ணிரண் டாண்டெனும் எல்லை செல்லலும்
விண்ணிவைட முகிலென விசைகொண் டொல்லையில் துண்ணென வோர்யம தூதன்
தோன்றினான்.
|
203 |
405
|
பண்டுமுப் புரமெரி
படுத்த புங்கவன் புண்டரீ கப்பதம் பரவும் பூசனை கண்டனன்
வெருவிமார்க் கண்டன் தன்னையான் அண்டுவ தரிதென அகன்று போயினான்.
|
204 |
406
|
தீயெழ நோக்கியே
சென்றி டாதுசேண் போயதோர் வல்லியம் போலுந் தன்மையான் வேயென
வந்துபின் மீண்டு தென்புல நாயகன் அடிதொழா நவிறல் மேயினான்.
|
205 |
407
|
இந்திரன் புகழ்தரும்
இறைவ கேட்டியால் அந்தியின் நிறமுடை அண்ணல் பாலுறு சிந்தையன்
அவனடி சேருஞ் சென்னியோன் சந்தத மவன்புகழ் சாற்றும் நோன்மையோன்.
|
206 |
408
|
ஈசன தருச்சனை இயற்று
கின்றனன் ஆசறு மனத்தினன் அறிவன் அந்தணன் காசியின்
இடத்தன்மார்க் கண்ட னாமெனப் பேசிய சிறப்புடைப் பெயர்பெற்
றோங்குவான்.
|
207 |
409
|
அன்னதோர் பாலனை அணுக
அஞ்சினன் முன்னரும் ஏகலன் முக்கண் எம்பிரான் தன்னுழை
இருந்தனன் தண்டக நாயக உன்னுதி இதுவென உணரக் கூறினான்.
|
208 |
410
|
கூறிய அளவையிற்
கூற்றன் துப்பினை ஆறிய செந்தழற் கருத்தி னாலெனச் சீறினன்
உயிர்த்தனன் சிறுவன் ஆங்கவன் ஈறில னாகிய இறைவ னோவென்றான்.
|
209 |
411
|
தருதியென் கணகரை
யென்று தணடகன் உரைசெய நின்றதோர் ஒற்றன் ஓடியே வருதிர்நும்
மழைத்தனன் மன்னன் என்றிடக் கரணர்கள் வந்தனர் கழல்வ ணங்கினார்.
|
210 |
412
|
இறையவன் அவ்வழி
எவருங் காணொணா அறைகழல் அண்ணலை யருச்சித் தேத்திய மறுவறு
காட்சியான் மார்க்கண் டப்பெயர்ச் சிறுவனுக் கிறுவரை செப்பு
மென்னவே.
|
211 |
413
|
சித்திர குத்தரென்
றுரைக்குஞ் சீரியோர் ஒத்திடும் இயற்கையர் உணர்வின் மேலையோர்
கைத்தல மிருந்ததங் கணக்கு நோக்கியே இத்திறங் கேளென இசைத்தல்
மேயினார்.
|
212 |
414
|
கண்ணுதல் இறையவன்
கருதி மேலைநாள் எண்ணிரண் டாண்டென இறுதி கூறினான் அண்ணலே
சென்றதால் அதுவும் ஆங்கவன் பண்ணிய பூசனை அறத்தின் பாலதே.
|
213 |
415
|
முதிர்தரு தவமுடை
முனிவ ராயினும் பொதுவறு திருவொடு பொலிவ ராயினும் மதியின
ராயினும் வலிய ராயினும் விதியினை யாவரே வெல்லும் நீர்மையார்.
|
214 |
416
|
ஆதலின் அமருல கடைவ
தாயினன் பேதுறு நிரயமும் பிழைத்து நீங்கினான் ஈதவன்
நிலைமையென் றிருவ ருஞ்சொல மேதகு தண்டகன் வெகுட்சி எய்தினான்.
|
215 |
417
|
அந்தகன் அத்துணை
யமைச்ச னாகிய வெந்திறற் காலனை விளித்துக் காசியில் அந்தணன்
ஒருமன் அவன தாவியைத் தந்திடு கென்றலுந் தரணி எய்தினான்.
|
216 |
418
|
மற்றவன் காசியில்
வந்து மாசிலா நற்றவன் இருந்துழி நணுகி நான்மறைக் கொற்றவன்
பூசையுங் குறிப்பும் நோக்கியே எற்றிவன் வரவதென் றெண்ணி
யேங்கினான்.
|
217 |
419
|
விழியிடைத் தெரிவுற
மேவி மைந்தனைத் தொழுதனன் யாரைநீ சொல்லு கென்றலும் முழுதுல
குயிரெலா முடிக்கும் ஆணையான் கழலிணை யடிமைசெய் கின்ற காலன்யான்.
|
218 |
420
|
போந்ததிங் கெவனெனப்
புகலு வீரெனின் ஆய்ந்தது மொழிகுவன் ஆதி நாயகன் ஈந்திடு
காலமெண் ணிரண்டு நென்னலே தேய்ந்தது தென்புலஞ் சேர்தல்
வேண்டுநீர்.
|
219 |
421
|
வேறு தடுக்குந்
தன்மைய தன்றிது சதுர்முகத் தவற்கும் அடுக்குந் தன்மையே புதுவது
புகுந்ததோ அன்றே கொடுக்குந் தன்மைபோற் காத்திடுந் தன்மைபோற்
கூற்றன் படுக்குந் தன்மையுங் கறைமிடற் றிறையருட் பணியே.
|
220 |
422
|
ஆத லால்உமை
விளித்தனன் அன்றியும் அமலன் பாத மாமலர் அருச்சனை புரிவது பலரும்
ஓத வேமன மகிழ்ந்துமைக் காணிய வுன்னிக் காத லாகியே நின்றனன்
தென்றிசைக் கடவுள்.
|
221 |
423
|
அடுத லோம்பிய
செய்கையன் என்பதால் அவனைக் கொடியன் என்பரால் அறிவிலார் செய்வினை
குறித்து முடிவில் ஆருயிர் எவற்றிற்கும் முறைபுரிந் திடலால்
நடுவன் என்கின்ற தவன்பெயர் உலகெலாம் நவிலும்.
|
222 |
424
|
சிந்தை மீதினில்
யாவதும் எண்ணலீர் தென்பால் அந்த கன்புரம் அடைதிரேல் அவனெதிர்
அணுகி வந்து கைதொழு தேத்தியே நயமொழி வழங்கி இந்தி ரன்பதம்
நல்குவன் வருதிரென் றிசைத்தான்.
|
223 |
425
|
மாற்ற மிங்கிது
கேட்டலும் மதிமுடி அரனைப் போற்று மன்பர்கள் இந்திரன் உலகினும்
போகார் கூற்று வன்றன துலகினும் நும்மொடு குறுகார் ஏற்ற மாகிய
சிவபதம் அடைந்தினி திருப்பார்.
|
224 |
426
|
நாத னார்தம தடியவர்க்
கடியவன் நானும் ஆத லான்நும தந்தகன் புரந்தனக் கணுகேன் வேதன்
மாலமர் பதங்களும் வெ�கலன் விரைவில் போதி போதியென் றுரைத்தலும்
நன்றெனப் போனான்.
|
225 |
427
|
போன காலனும் மறலியை
வணங்கியே புகுந்த பான்மை யாவையும் உரைத்தலும் உளம்பதை பதைப்ப
மேனி மார்பகம் வியர்ப்புற விழிகனல் பொழியக் கூனல் வார்புரு
வக்கடை நிமிர்ந்திடக் கொதித்தான்.
|
226 |
428
|
அழைத்திர் மேதியை
யென்னலும் போந்ததால் அதன்மேல் புழைக்கை மால்கரி யாமென
வெரிநிடைப் புகுந்து நிழற்று கின்றதோர் கவிகையுந் துவசமும்
நிவப்ப வழுத்தி வீரர்கள் சுற்றிட அந்தகன் வந்தான்.
|
227 |
429
|
போந்து காசியின்
முனிமகன் இருந்துழிப் போகிச் சேந்த குஞ்சியும் முகில்புரை
மேனியுஞ் சினத்திற் காந்து கண்களும் பிடித்ததோர் பாசமுங்
கரத்தில் ஏந்து தண்டமுஞ் சூலமு மாகியே எதிர்ந்தான்.
|
228 |
430
|
வேறு வந்து
தோன்றலும் மார்க்கண்ட னென்பவன் அந்த கன்வந் தணுகின னாமெனச்
சிந்தை செய்வன் செய்கையை நோக்கியே எந்தை யாரடி யேத்தி
இறைஞ்சினான்.
|
229 |
431
|
அன்ன வேலையில்
அந்தகன் மைந்தநீ என்நி னைந்தனை யாவ தியற்றினை முன்னை யூழின்
முறைமையும் முக்கணான் சொன்ன வாறுந் துடைத்திட லாகுமோ.
|
230 |
432
|
சிறிதும் ஊழ்வினைத்
திண்மையுந் தேர்கிலாய் உறுதி யொன்றும் உணர்கிலை போலுமால்
இறுதி யேபிறப் பென்றிவை யாவரும் பெறுவர் அன்னது பேசுதல்
வேண்டுமோ.
|
231 |
433
|
பீடு சாலும்
பெருந்தவர்க் காயினுங் கூடு றாவிது கூடுமென் றுன்னியே நாடி
யின்னணம் நண்ணுதல் கற்றுணர் ஆட வர்க்கும் இயற்கைய தாகுமோ.
|
232 |
434
|
ஈச னார்தம் இணையடி
மீமிசை நேச செஞ்சினை நித்தலும் நீபுரி பூசை வெம்பவம் போக்குவ
தன்றியான் வீசு பாசம் விலக்கவும் வல்லதோ.
|
233 |
435
|
சிந்து வின்கட்
செறிமணல் எண்ணினும் உந்து வானத் துடுவினை எண்ணினும் அந்த
மின்றியென் ஆணையின் மாண்டிடும் இந்தி ரன்றனை எண்ணிட லாகுமோ.
|
234 |
436
|
இற்ற வானவர்
தம்மையும் என்னின்நீ றுற்ற தானவ ராகியுள் ளோரையும் முற்ற
ஓதில் முடிவில தாதலால் மற்றை யோரை வகுத்திடல் வேண்டுமோ.
|
235 |
437
|
கனக்கு முண்டகக்
காமரு கண்ணினான் தனக்கு முண்டு சதுர்முகற் குண்டுமற் றெனக்கு
முண்டு பிறப்பிறப் பென்றிடின் உனக்கு முண்டென றுரைத்திடல்
வேண்டுமோ.
|
236 |
438
|
வாச மாமல ரிட்டு
வழிபட ஈச னார்முன் எனக்கருள் செய்தன ஆசி லாவிவ் வரசியல்
ஏந்திய பாச சூலம் படைமழுத் தண்டமே.
|
237 |
439
|
தேவர் காப்பினுஞ்
செய்தளித் தீறுசெய் மூவர் காப்பினும் மொய்ம்பின ராயினோர்
ஏவர் காப்பினுங் காத்திட இன்றுநின் ஆவி கொண்டன்றி மீண்டும்
அகல்வனோ.
|
238 |
440
|
துன்ப மென்பது
கொள்ளலை சூலிதன் அன்ப ராயினும் அந்தம்வந் தெய்திடில் தென்பு
லந்தனிற் சேர்த்துவன் திண்ணமே என்பின் நீயினி யேகென்
றியம்பலும்.
|
239 |
441
|
மைந்தன் ஆங்கது
கேட்டு மறலிகேள் எந்தை யாரடி யார்தமக் கில்லையால் அந்தம்
என்பதுண் டாயினும் நின்புரம் வந்தி டார்வௌ�ளி மால்வரை ஏகுவார்.
|
240 |
442
|
அனையர் தன்மை
அறைகுவன் ஆங்கவர் புனித மாதவ ராயினும் பொற்புடை மனையின்
வாழ்க்கையின் மல்கின ராயினும் வினையின் நீங்கிய வீட்டின்பம்
எய்துவார்.
|
241 |
443
|
ஏதந் தீர்சுடர்
தன்னையும் எண்ணும்ஐம் பூதந் தன்னையும் போதிகன் தன்னையும்
பேதஞ் செய்வர் பிறப்பொழித் தோரவர் பாதஞ் சேர்தல் பரபதஞ்
சேர்வதே.
|
242 |
444
|
உன்னை எண்ணலர் உம்பரை
எண்ணலர் மன்னை எண்ணலர் மாமலர்ப் பண்ணவன் தன்னை எண்ணலர்
தண்டுள வோனையும் பின்னை எண்ணலர் பிஞ்ஞகன் அன்பினோர்.
|
243 |
445
|
நாதன் தன்னையும் நாதன
தம்புயப் பாதஞ் சேர்ந்து பரவினர் தம்மையும் பேதஞ் செய்வது
பேதைமை நீரென வேதங் கூறும் விழுப்பொருள் பொய்க்குமோ.
|
244 |
446
|
செம்மை யாகிய
சிந்தையர் சீரியோர் வெம்மை என்பதை வீட்டி விளங்கினோர் தம்மை
யுந்துறந் தேதலை நின்றவர் இம்மை தன்னினும் இன்பத்தை வேவுவார்.
|
245 |
447
|
இன்மை யாவதி
யாண்டுமில் லாதவர் நன்மை என்ப தியல்பென நண்ணினோர் புன்மை யான
பொருள்விரும் பார்அவர் தன்மை யாவரே சாற்றவல் லார்களே.
|
246 |
448
|
வேறு அன்னார்
தன்மை தேர்கிலை வையத் தவர்போல உன்னா நின்றாய் ஆங்கவர் தம்பா
லுறுகின்ற என்னா விக்குந் தீங்கு நினைத்தாய் இவையெல்லாம்
உன்னா விக்கும் இத்தலை மைக்கும் ஒழிவன்றோ.
|
247 |
449
|
தீதா கின்ற வாசகம்
என்றன் செவிகேட்க ஓதா நின்றாய் மேல்வரும் ஊற்ற முணர்கில்லாய்
பேதாய் பேதாய் நீயிவண் நிற்கப் பெறுவாயோ போதாய் போதாய் என்றுரை
செய்தான் புகரில்லான்.
|
248 |
450
|
கேட்டான் மைந்தன்
கூறிய மாற்றங் கிளர்செந்தீ ஊட்டா நின்ற கண்ணினன் யானச்
சுறுமாற்றல் காட்டா நின்றாய் நம்முயிர் கூற்றன் கைக்கொள்ள
மாட்டான் என்றே எண்ணினை கொல்லோ வலியில்லாய்.
|
249 |
451
|
என்றான் வானத் தேறென
ஆர்த்தான் இவன்நேரே நின்றால் வாரான் என்று நினைந்தே நெடுநீலக்
குன்றா மென்னப் பாலகன் முன்னங் கொலைவேலான் சென்றான் பாசம் வீசுவ
தற்குச் சிந்தித்தான்.
|
250 |
452
|
எறிந்தான் பாசம்
ஈர்த்திடல் உற்றான் இதுபோழ்தில் அறிந்தான் தானும் ஈசனை ஏத்தி
அடிநீழற் பிறிந்தான் அல்லன் மற்றினி இந்தப் பெருமைந்தன்
மறிந்தான் அன்றோ என்றிமை யோரும் மருளுற்றார்.
|
251 |
453
|
ஈர்க்கும் பாசங்
கந்தர முற்றும் இடரில்லா மார்க்கண் டன்முன் தோன்றினன் நின்பால்
வருதுன்பந் தீர்க்கின் றாம்நீ அஞ்சலை என்றே திரையாழிக்
கார்க்கண் டத்துக் கண்ணுதல் ஐயன் கழறுற்றான்.
|
252 |
454
|
மதத்தான் மிக்கான்
மற்றிவன் மைந்தன் உயிர்வாங்கப் பதைத்தான் என்னா உன்னிவெ
குண்டான் பதிமூன்றுஞ் சிதைத்தான் வாமச் சேவடி தன்னால்
சிறிதுந்தி உதைத்தான் கூற்றன் விண்முகில் போல்மண்
ணுறவீழ்ந்தான்.
|
253 |
455
|
வீழுங் காலத் தம்புய
னாதி விண்ணோர்கள் வாழுந் தன்மைத் தெவ்வுல கென்னா மறுகுற்றார்
சூழும் வேலை ஆர்த்தில தண்டத் தொகையெல்லாங் கீழும் மேலும் நெக்கன
பாருங் கிழிந்தன்றே.
|
254 |
456
|
பாங்காய் நின்ற
தானையும் ஊரும் பகடுந்தான் ஏங்கா நின்றே பார்மிசை வீழா இறவுற்ற
தீங்காய் நின்ற செய்னி யாளர் சிதைவாகிப் போங்கா லத்திற்
சேர்ந்தவர் தாமும் போகாரோ.
|
255 |
457
|
அந்தக் காலத்
தெம்முயிர் காப்பான் அரனுண்டால் வந்தக் கூற்றன் என்செய்வ னென்னா
வடதொன்னூல் சந்தப் பாவிற் போற்றுதல் செய்தே தனிநின்ற மைந்தற்
காணூஉ எம்பெர மானும் மகிழ்வுற்றான்.
|
256 |
458
|
வேறு மைந்த நீநமை
வழுத்தி மாசிலா முந்து பூசனை முயன்ற தன்மையால் அந்த
மில்லதோர் ஆயுள் நிற்கியாந் தந்து நல்கினாம் என்று சாற்றினான்.
|
257 |
459
|
சாற்றும் எல்லையில்
தனது தாளிணை போற்று கின்றவன் பூசை செய்திடும் ஏற்ற தாணுவுக்
கிடைய தாகவே கூற்றின் கூற்றுவன் குறுகுற் றானரோ.
|
258 |
460
|
மறைய வன்கணும் மன்னு
தென்புலத் திறைய வன்கணும் இகல்பற் றின்றரோ அறிவர் தேர்குறின்
ஐயன் செய்தன முறைய தாகுமால் முதன்மைப் பாலதே.
|
259 |
461
|
நின்ற மைந்தனும்
நித்தன் மேனியை ஒன்றும் அன்பினால் உன்னி யேமணி கன்றி
கையெனுங் கடவுள் ஆலயஞ் சென்று நாதன்றாள் சென்னி சேர்த்தினான்.
|
260 |
462
|
புந்தி நைந்திடப்
புலம்பி நாட்டநீர் சிந்தும் வேலையில் திளைத்துச் சாம்பிய
தந்தை அன்னைதாள் தழுவித் தாழ்ந்திடா முந்து மாகுலம் முழுதும்
மாற்றினான்.
|
261 |
463
|
அங்கண் சில்பகல்
அமர்ந்து நீங்கியே செங்கண் ஏறுடைச் செல்வன் மல்கியே தங்கு
கின்றநற் றானம் யாவையும் பொங்கு காதலிற் போற்றல் மேயினான்.
|
262 |
464
|
அத்தன் ஆலயம்
அனைத்தும் வைகலும் பத்தி யோடுமுன் பரவி யேமிகுஞ் சுத்த
னாகியே தொலைவில் ஆருயிர் முத்தி யெய்தினான் முழுது ணர்ந்துளான்.
|
263 |
465
|
விண்ணின் பாலுளன்
விரும்பிப் போற்றுவோர் கண்ணின் பாலுளன் கருத்தின் பாலுளன்
மண்ணின் பாலுளன் மற்ற வன்செயல் எண்ணின் பாலதோ இசையின் பாலதோ.
|
264 |
466
|
முண்ட கத்திடை
முளைத்த வன்துயில் கொண்ட வெல்லையைக் குணிக்கி லாவதென் அண்டம்
நல்கியோன் துஞ்ச ஆங்கவன் கண்ட கற்பமோ கணக்கி லாதவே.
|
265 |
467
|
அன்ன வன்றனை அலக்ண்
செய்திடுந் தென்ன வன்உயிர் சிதைந்து போதலால் பன்ன கத்திறை
பரித்த பார்மிசை மன்னு பல்லுயிர் வளர்ந்து மல்கிற்றே.
|
266 |
468
|
முடிவின் றாமுயிர்
முற்றும் பற்பகல் மடிவின் றாகியே மலியும் பான்மையால் படியின்
மங்கையும் பரம்பொ றாதுமால் அடியின் வீழ்ந்துதன் அயர்வு
கூறினாள்.
|
267 |
469
|
கொண்டல் வண்ணனுங்
குலச பாணியும் புண்ட ரீகமேற் பொலிந்த போதனும் அண்டர் யாவரும்
அணுகி ஆலமார் கண்டன் மேவுறுங் கயிலை மேவினார்.
|
268 |
470
|
காவி யம்மலர் கடுத்த
கந்தரத் தேவு பொற்பதஞ் சென்னி சேர்த்தியே தாவில் பங்கயச்
சதுர்மு கத்தனும் பூவை வண்ணனும் போற்றல் மேயினார்.
|
269 |
471
|
நீல கண்டனாம் நிமலன்
முன்னரே சாலும் அன்பொடுந் தாழ்ந்து போற்றலும் மாலை
நோக்கிநீர் வந்த தென்னென ஏலு மாற்றினால் இதனைக் கூறுவான்.
|
270 |
472
|
வேறு பங்கய
மிசைவரு பகவன் ஆதியா இங்குள தலைவர்கள் எவரும் இத்துணைத்
தங்கள்தம் அரசியல் தவாது போற்றினர் அங்கவர் தமக்குநீ அளித்த
வண்ணமே.
|
271 |
473
|
ஐயநீ எனக்குமுன்
அளித்த காப்பினைத் துய்யநின் திருவருள் துணைய தாகவே வைகலும்
புரிகுவன் வழாது மற்றதற் கெய்திய தோர்குறை இசைப்பன் கேட்டிநீ.
|
272 |
474
|
நின்பெருந் திருவருள்
நினைகி லாமையால் தென்புலக் கோமகன் சிதைந்து போயினான்
மன்பதைக் குலம்பிற வளர்ந்து மிக்கன துன்பமுற் றனள்அவை சுமக்கும்
பூமகள்.
|
273 |
475
|
தன்புடை எவற்றையுந்
தாங்கு கின்றவள் துன்புற உயிரெலாந் தோன்றித் தோன்றியே
பின்பிற வாமலே பெருகி வைகுமேல் என்படும் என்படும் எனது காவலே.
|
274 |
476
|
இறுத்திடும் அரசினுக்
கெவரு மில்லைநீ செறுத்திடல் அந்தகன் செய்த தீமையைப்
பொறுத்தருள் அவன்றனைப் புரிதி ஈங்கிது மறுத்திடல் என்றடி வணங்கி
வேண்டவே.
|
275 |
477
|
அந்தக எழுகென அமல
நயகன் முந்தருள் புரிதலும் முடிந்த கூற்றுவன் வந்தனன்
தொழுதனன் வணங்கித் தாள்பட உய்ந்தனன் அடியனென் றுணர்ந்து
போற்றினான்.
|
276 |
478
|
போற்றிடு தருமனைப்
புராரி நோக்கியே சாற்றிடு கின்றனன் தயங்கு கண்டிகை நீற்றொடு
புனைந்தெமை நினையும் நீரர்பால் கூற்றுவன் யானெனக் குறுகு வாயலை.
|
277 |
479
|
நண்ணருங் கதிபெறு
நமது தொண்டரை மண்ணுல கத்தவர் மனித ரேயென எண்ணலை அவர்தமை
யாமென் றெண்ணுதி கண்ணுறின் அன்னவர் கழலின் வீழ்தியால்.
|
278 |
480
|
கண்ணிய மனமொழி காயம்
ஈறதா எண்ணிய கருவிகள் இடைய தாகவே புண்ணிய மொடுபவம் புரியும்
ஏனையர் விண்ணொடு நிரயமேல் மேவச் செய்திநீ.
|
279 |
481
|
என்றருள்
புரிந்துநின் படையொ டேகென மன்றமர் அடிமிசை வணங்கி முன்னரே
பொன்றிய பகட்டொடும் பொருநர் தம்மொடும் தென்றிசை புகுந்துதன்
செயலின் மேவினான்.
|
280 |
482
|
சித்தசற் புரிதரு
செங்கண் மான்முதல் மொய்த்திடு கடவுளர் முனிவர் மும்முறை
நித்தனை வணங்கினர் கயிலை நீங்கினர் தத்தம துறையுளில் சார்தல்
மேயினார்.
|
281 |
483
|
கொன்னவில் அடுபடைக்
கூற்றன் பண்டுபோல் இன்னமும் விளைகுவ தென்கொ லோவெனா மன்னருள்
பெற்றமார்க் கண்டன் மாக்கதை பன்னினர் முன்னமும் படர்தற்
கஞ்சுமால்.
|
282 |
484
|
ஆதலிற் குச்சகன்
அருந்த வத்திலோர் மாதுயிர் அளித்தனன் மால்க ளிற்றினைக்
காதுகை நீக்கியொன் கடவு ளாக்கியே மேதகு விண்ணிடை மேவச்
செய்தனன்.
|
283 |
485
|
உதவிய மிருககண் டூயன்
மால்அயன் முதலவர் புகழ்தரு முதன்மை பெற்றனன் விதிமுறை
அவனருள் மிருகண் டொப்பிலோர் புதல்வனைப் பெற்றனன் புரிந்த
நோன்மையால்.
|
284 |
486
|
அப்பெருந் திருமகன்
ஆற்றும் நோன்பினால் தப்பரும் விதியினைத் தணந்து கூற்றுவன்
துப்பினை அகற்றியே தொலைவு கண்டுபின் எப்பொழு தத்தினும் இறப்பின்
றாயினான்.
|
285 |