Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nationகந்த புராணம் - Kantha Puranam பாயிரம் (1-352) & உற்பத்திக் காண்டம் (353-725) உற்பத்திக் காண்டம் (726- 1328)  >  உற்பத்திக் காண்டம் (1329- 1783) > அசுர காண்டம் (1 - 925 ) > அசுர காண்டம் (926 - 1497) > அசுர காண்டம் (1498 - 1929) > மகேந்திர காண்டம் (1 - 639) > மகேந்திர காண்டம் (640 - 1170) > யுத்த காண்டம் (1 - 456) > யுத்த காண்டம் (457 - 876) யுத்த காண்டம் (877 - 1303) > யுத்த காண்டம் (1304 - 1922) > யுத்த காண்டம் (1923 - 2397) > யுத்த காண்டம் (2398 - 2967) > தேவ காண்டம் (1 - 421) தக்ஷ காண்டம் (1 - 403) > தக்ஷ காண்டம் (404 - 907)  > தக்ஷ காண்டம் (908-1562 ) >  தக்ஷ காண்டம் (1563 - 2067)

 

கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய
கந்த புராணம் 6. தக்ஷ காண்டம் / படலம் 21 -24 (1563 - 2067)

kantapurANam of kAcciyappa civAccAriyAr
part 13/canto 6 taksha kANTam (verses 1563 - 2067)


Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten & colleagues of the Univ. of Koeln, Germany for providing with a transliterated/romanized version of this work and for permissions to release the Tamil script version as part of Project Madurai collections. Our thanks also go to Shaivam.org for the help in the proof-reading of this work in the Tamil Script format.

Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. � Project Madurai, 1998-2008.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


21. அடிமுடி தேடு படலம்

1563- 1661

22. தக்கன் சிவபூசைசெய் படலம்

1662 -1673

23. கந்த விரதப் படலம்

1674 - 1800

24. வள்ளியம்மை திருமணப் படலம்

1801 -2067



செந்திலாண்டவன் துணை
திருச்சிற்றம்பலம்

5. தக்ஷ காண்டம்
21. அடிமுடி தேடு படலம் (1563- 1661)

    1563

    இங்கிது நிற்கமுன் இறைவன் வந்துழி
    அங்குற நின்றதோர் அமரர் தங்களுட்
    செங்கம லத்துறை தேவன் தக்கனாந்
    துங்கமில் மைந்தனை நோக்கிச் சொல்லுவான்.

    1

    1564

    யாதுமுன் னுணர்ந்தனை யாது செய்தனை
    யாதவண் கருதினை யாரிற் பெற்றனை
    யாதுபின் செய்தனை யாது பட்டனை
    யாதிவண் பெற்றனை யாதுன் எண்ணமே.

    2

    1565

    பொன்றுதல் இல்லதோர் புலவர் யாவர்க்கும்
    வன்றிறல் முனிவரர் தமக்கும் வையமேல்
    துன்றிய அந்தணர் தொகைக்குந் துண்ணெனக்
    கொன்றுயிர் உண்பதோர் கூற்ற மாயினாய்.

    3

    1566

    சீரையுந் தொலைத்தனை சிறந்த தக்கனாம்
    பேரையுந் தொலைத்தனை பேதை யாகிநின்
    ஏரையுந் தொலைத்தனை ஏவல் போற்றுநர்
    ஆரையுந் தொலைத்தனை அலக்கண் எய்தினாய்.

    4

    1567

    நின்னுணர் வல்லது நிகரின் மேலவர்
    சொன்னதும் உணர்ந்திலை தொல்லை ஊழினால்
    இந்நிலை யாயினை இறையை எள்ளினாய்
    முன்னவன் உயர்நிலை முழுதுந் தேர்ந்தநீ.

    5

    1568

    இயற்படு வளம்பெறீஇ ஈசன் மேன்மைகள்
    அயர்த்தனை நின்னள வன்று மையறான்
    அயிர்த்தொகை தமக்கெலாம் உள்ள தாதலான்
    மயக்கினை அடைந்தனை மற்றென் செய்திநீ.

    6

    1569

    முற்றுணர் வெய்தியே முழுத ளித்திடப்
    பெற்றவெங் கண்ணினும் பெரிது மாமயக்
    குற்றன முற்பகல் உதுகண் டின்றுபோல்
    நெற்றியங் கண்ணினான் அருளின் நீக்கினான்.

    7

    1570

    ஆதலின்அருளுடை அமல நாயகன்
    பாதம தருச்சனை பரிவிற் செய்குதி
    பேதுறும் இப்பவப் பெற்றி நீக்கியே
    போதமொ டின்னருள் புரிவன் என்றலும்.

    8

    1571

    மைதிகழ் முகத்தினன் மற்ற தற்கிசைந்
    துய்திற முணர்த்தினை உங்கள் கண்ணுமுன்
    எய்திய மையலும் எம்பி ரானருள்
    செய்ததும் இயம்புதி தௌ�தற் கென்னவே.

    9

    1572

    பொன்னிருஞ் சததளப் போதின் மீமிசை
    மன்னிய திசைமுகன் மதலை மாமுகம்
    முன்னுற நோக்கியே முந்துங் கூறினம்
    இன்னமும் அக்கதை இயம்பு வோமெனா.

    10

    (1. துங்கம் இல் - உயர்வு இழந்த.
    3. பொன்றுதல் இல்லதோர் புலவர் - தேவர்கள்.
    கூற்றம் - எமன். 4. சீர் - சகல சிறப்பு. ஏர் - அழகு.
    6. மையல் - மயக்கம். 8. அமல நாயகன் - சிவபெருமான்.
    பரிவு - அன்பு. பவம் - பாவம். போதம் - ஞானம்.
    9. மைதிகழ் மகத்தினன் - தக்கன்; (மை - ஆடு).
    10. சததளப்போது - நூறிதழ்த் தாமரைப்பூ.)

    1573

    நாலுள திசைமுக நாதன் தொல்லைநாள்
    மாலொடு பற்பகல் மலைவு செய்துநாம்
    மேலதோர் பொருளென விமலன் வந்தருள்
    கோலம துன்னியே தொழுது கூறுவான்.

    11

    1574

    வேறு
    பத்தினொடு நூறெதிர் படுத்தயுக நான்மை
    ஒத்தமுடி வெல்லையென தோர்பகல தாகும்
    அத்தகு பகற்பொழுதும் அந்தியொடு செல்ல
    நத்தமுறு நான்துயிலின் நண்ணுவன் அவ்வேலை.

    12

    1575

    வாளுமொடுங் கும்பரிதி மாமதி யொடுங்கும்
    நாளுமொடுங் குந்தமது நாளுமொடுங் குற்றே
    கோளுமொடுங் குங்குலிச பாணிமுதல் வானோர்
    கேளுமொடுங் கும்புவனி கேடுபடும் அன்றே.

    13

    1576

    மண்ணுலகில் ஆருயிர் வறந்திறுதி யாகும்
    விண்ணுறு பதங்களில் வியன்முனிவர் யாருந்
    துண்ணென வெருக்கொடு துளங்கினர்கள் சூழா
    எண்ணுசன லோகமிசை எய்துவர்கள் அந்நாள்.

    14

    1577

    வாரிதிகள் நாற்றிறமும் எல்லையில் எழுந்தே
    ஆரியை தவஞ்செய்பதி ஆதியன அல்லாப்
    பாரினைய ருந்தியொரு பாகமதன் மேலும்
    ஓரெழு பிலத்துலகம் உண்டுலவும் அன்றே.

    15

    1578

    ஒண்டிகிரி மால்வரை உடுத்தநில முற்றுங்
    குண்டுறு பிலத்தினொடு கூடும்வகை வீட்டி
    அண்டருல குண்டுநிமிர்ந் தப்புறனு மாகி
    மண்டுபுன லேயுலகை மாற்றியிடும் அன்றே.

    16

    1579

    ஆனதொரு வேலையிலொ ராலிலையின் மீதே
    மேனிலவு தண்மதி மிலைந்தவன் மலர்த்தாள்
    தானகமு றுத்தியொர் தனிக்குழவி யேபோல்
    கானுறு துழாய்மவுலி கண்டுயிலு மாதோ.

    17

    1580

    கண்டுயிலு கின்றபடி கண்டுசன லோகத்
    தண்டுமுனி வோர்புகழ வாங்ஙனம் விழித்தே
    பண்டைநிலன் நேடவது பாதலம தாகக்
    கொண்டல்மணி மேனியனொர் கோலவுரு வானான்.

    18

    (11. மலைவு - போர்.
    12. பத்தினொடு நூறு எதிர்படுத்த யுக நான்மை - ஆயிரஞ் சதுர் யுகங்கள்.
    நத்தம் - இரவு. 13. வாள் - ஔ�; இங்கு அக்கினி. நாள் - வாணான்.
    கோள் - கிரகம். 14. சனலோகம் - இது ஒரு உலகம்.
    15. ஆரியை தவஞ்செய் பதி - உமாதேவி தவஞ்செய்த காஞ்சிபுரம்.
    உண்ணுதல் - மூடிக்கொள்ளுதல்.
    16. ஒண்திகிரி மால்வரை - சக்கரவாளகிரி. குண்டு - ஆழம்.
    18. நேட - தேட. கோலவுரு - பன்றி வடிவு.)

    1581

    கோலமெனு மோருருவு கொண்டுபில மேகி
    ஞாலமெவ ணுற்றதென நாடியது தன்னை
    வாலிய வெயிற்றினிடை வல்லைகொடு மீண்டு
    மூலமென வேநிறுவி மொய்ம்பினொடு போனான்.

    19

    1582

    அற்பொழுது நாலுகமொ ராயிரமும் ஏக
    எற்பொழுது தோன்றிய தியான்துயில் உணர்ந்தே
    கற்பனை இயற்றிய கருத்தினினை போழ்தின்
    நிற்புழி அடைந்தன நெடும்புணரி எல்லாம்.

    20

    1583

    அருத்திகெழு பாற்கடல் அராவணையின் மீதே
    திருத்திகழும் மார்புடைய செம்மல்புவி தன்னை
    இருத்தினம் எயிற்றினில் எடுத்தென நினைத்தே
    கருத்தினில் அகந்தைகொடு கண்டுயிலல் உற்றான்.

    21

    1584

    ஆனபொழு தத்தினில் அளப்பிலிமை யோரைத்
    தானவரை மானுடவர் தம்மொடு விலங்கை
    ஏனைய வுயிர்த்தொகையை யாவையும் அளித்தே
    வானகமும் வையகமும் மல்கும்வகை வைத்தே.

    22

    1585

    மன்னியலும் இந்திரனை வானரசில் உய்த்தே
    அன்னவன் ஒழிந்ததிசை யாளர்களை எல்லாம்
    தந்நிலை நிறுத்தியது தன்னைநெடி துன்னி
    என்னையல தோர்கடவுள் இன்றென எழுந்தேன்.

    23

    1586

    துஞ்சலுறு காலைதனில் துஞ்சுமெழும் வேலை
    எஞ்சலி லுயிர்த்தொகுதி யாவுமெழும் யானே
    தஞ்சமெனை யன்றியொரு தாதையிலை யார்க்கும்
    விஞ்சுபொருள் யானென வியந்தெனை நடந்தே.

    24

    1587

    மல்லலுறு மேலுலகு மாதிரமும் ஏனைத்
    தொல்லுலகு மேருவொடு சுற்றுகடல் ஏழும்
    ஒல்லென விரைத்தெழும் உயிர்த்தொகையும் அல்லா
    எல்லையில் பொருட்டிறனும் யான்நெடிது நோக்கி.

    25

    1588

    இப்பொருள் அனைத்துமுனம் யான்பயந்த என்றால்
    ஒப்பிலை யெனக்கென உளத்திடை மதித்தேன்
    அப்பொழுதில் ஆரமுத ஆழியிடை யாழிக்
    கைப்புயல் அகந்தையொடு கண்டுயிலல் கண்டேன்.

    26

    (19. எவண் - எவ்விடம். வாலிய - வெண்மையான.
    எயிறு - கொம்பு. மூலமெனவே - முன்போலவே.
    20. அல்பொழுது - இராப்பொழுது. எல்பொழுது - பகற்பொழுது.
    21. அருத்தி - விருப்பம். கருத்தினில் - உள்ளத்தினில்.
    24. துஞ்சல் - தூங்குதல். விஞ்சுபொருள் - உயர்ந்த பொருள்.
    25. மாதிரம் - திக்கு.
    26. அமுத ஆழி - பாற்கடல். புயல் - திருமால்;
    ஆகுபெயர். துயிலல் - நித்திரை செய்தலை.)

    1589

    அன்றவனை மாலென அறிந்தனன் அறிந்துஞ்
    சென்றனன் அகந்தையொடு செய்யதிரு வைகும்
    மன்றன்மணி மார்பமிசை வண்கைகொடு தாக்கி
    இன்றுயில் உணர்ந்திடுதி என்றலும் எழுந்தான்.

    27

    1590

    ஏற்றெழு முராரிதனை யாரையுரை என்றே
    சாற்றுதலும் யாமுனது தாதையறி யாய்கொல்
    நாற்றலைகொள் மைந்தவென நன்றென நகைத்துத்
    தேற்றிடினும் நீதுயில் தௌ�ந்திலைகொ லென்றேன்.

    28

    1591

    தந்தையென வந்தவர்கள் தாமுதவு கின்ற
    மைந்தர்கள் தமக்குரைசெய் வாசகம தென்ன
    முந்துற வெமக்கிது மொழிந்ததியல் பன்றால்
    எந்தையென வேநினைதி யாம்பிரம மேகாண்.

    29

    1592

    உந்தியிலி ருந்துவரும் உண்மையுண ராமே
    மைந்தனென நீயெமை மனத்தினினை குற்றாய்
    இந்தன முதித்திடும் எரிக்கடவு ளுக்குத்
    தந்தையது வோவிது சழக்குரைய தன்றோ.

    30

    1593

    நின்னுடைய தாதையென நீயுனை வியந்தாய்
    அன்னதை விடுக்குதி அருந்தவ வலத்தான்
    முன்னமொரு தூணிடை முளைத்தனை யவற்றால்
    உன்னிலது வேமிக உயர்ந்தபொரு ளாமோ.

    31

    1594

    துய்யமக னாம்பிரு சொற்றசப தத்தால்
    ஐயிரு பிறப்பினை அடிக்கடி யெடுத்தாய்
    மெய்யவை யனைத்தையும் விதித்தனம் விதித்தெங்
    கையது சிவந்துளது கண்டிடுதி என்றேன்.

    32

    1595

    வேறு
    அன்றவற் கெதிர்புகுந் தனையசொற் புகறலுங்
    குன்றெடுத் திடுகரக் கொண்டல்போல் மேனியான்
    நன்றெனச் சிரமசைஇ நகைசெயா வெகுளியால்
    பொன்றளிர்க் கரதலம் புடைபுடைத் துரைசெய்வான்.

    33

    1596

    நச்சராப் பூண்டிடு நம்பனுன் சென்னியில்
    உச்சியந் தலையினை உகிரினாற் களைதலும்
    அச்சமாய் வீழ்ந்தனை யதுபடைத் தின்னமும்
    வைச்சிலாய் நன்றுநீ மற்றெமை தருவதே.

    34

    1597

    நேயமாய் முன்னரே நின்னையீன் றுதவிய
    தாயும்யா மன்றியுந் தந்தையும யாமுனக்
    காயதோர் கடவுள்யாம் அடிகள்யாம் மைந்தநம்
    மாயையால் இன்றிவண் மதிமயக் குறுதிகாண்.

    35

    (29. பிரமம் - மேலான கடவுள்.
    30. இந்தனம் - விறகு. சழக்கு - அறியாமை.
    31. முன்னமொரு தூணிடை முளைத்தனை -
    இது நரசிங்க அவதாரத்தைக் குறிப்பது.
    32. பிருகு - ஒரு முனவர். ஐயிருபிறப்பு - பத்துப்பிறப்பு.
    33. குன்று - கோவர்த்தனகிரி. அசைஇ - அசைத்து.
    34. உகிர் - நகம். களைதல் - நீக்குதல். அது - அத்தலையை.
    வைச்சிலாய் - வைத்துக்கொண்டாய் இல்லை.
    35. அடிகள் - குரு. மைந்த - மகனே!)

    1598

    பொன்னலா தாங்கொலோ பூணெலாம் இறைபுரி
    மன்னலா தாங்கொலோ மாநில மாநிலந்
    தன்னலா தாங்கொலோ தகுவதோர் வளமதில்
    என்னலா தாங்கொலோ எச்சரா சரமுமே.

    36

    1599

    எண்ணுவிப் போனுநான் எண்ணுகின் றோனுநான்
    கண்ணுதற் பொருளுநான் காண்டகும் புலனுநான்
    நண்ணுதற் கரியன்நான் நாரணக் கடவுள்நான்
    விண்ணகத் தலைவன்நான் வேதமும் பொருளுநான்.

    37

    1600

    ஆதிநான் உருவுநான் அருவுநான் இருளுநான்
    சோதிநான் அத்தன்நான் தூயன்நான் மாயன்நான்
    யாதுநான் பூதநான் யாருநான் சங்கரன்
    பாதநான் அவனுநான் பரமெனும் பொருளுநான்.

    38

    1601

    என்றுபற் பலவுரைத் திடுதலும் யானெதிர்
    சென்றுருத் திருவருஞ செருவினைப் புரிதுமேல்
    வென்றியுற் றவரரோ மேலையோர் எழுகென
    வன்றிறற் போர்செய்வான் வந்தனன் மாலுமே.

    39

    1602

    ஏற்றெழுந் தோர்சிலை ஏந்தியே வாங்கிமால்
    கூற்றிரும் படைமுதற் கொடியவெம் படையெலாம்
    மாற்றருந் தன்மையால் வல்லையுய்த் திடுதல்கண்
    டாற்றினன் குசைகளால் அனையவெம் படைதொடா.

    40

    1603

    வேறு
    ஆங்கவை யழிவுற அரியுந் தன்படை
    வாங்கினன் விடுத்தலும் வருதல் கண்டியான்
    பாங்கரின் நின்றவென் படையை அங்கையில்
    தாங்கிநின் றுய்த்தனன் தடுத்து மீண்டதே.

    41

    1604

    அப்படை மீண்டபின் ஆதி யாகிய
    ஒப்பருஞ் சிவனளித் துளது புங்கவர்
    எப்பெரும் படைக்குமோ ரிறைவ னாயது
    மைப்புயல் மேனிமால் வழுத்தி வாங்கினான்.

    42

    1605

    மஞ்சன முதலிய மறுவில் பூசனை
    நெஞ்சுறு புலன்களின் நிரப்பி ஓச்சலும்
    எஞ்சலில் அமரர்கள் இரிய மேற்செலும்
    நஞ்சினுங் கொடிதென நடந்த வேலையே.

    43

    (39. செருவினை - போரினை. புரிதுமேல் - செய்தால்.
    40. கூற்று இரும்படை எமனுடைய பெரிய அஸ்திரம்.
    குசைகளால் - தருப்பைகளால்.
    42. புங்கவர் எப்பெரும் படைக்கும் ஓர் இறைவனாயது -
    இது பாசுபதாஸ்திரம்.
    43. மஞ்சனம் - திருமஞ்சனம். நிரப்பி - செய்துமுடித்து.)

    1606

    முன்னமே எனக்கும்அம் முக்கண் நாயகன்
    அன்னதோர் படையளித் தருளி னானதை
    உன்னியே வழிபடீஇ ஒல்லை யுய்த்தனன்
    வன்னிமேல் வன்னிசெல் வண்ண மென்னவே.

    44

    1607

    ஒருதிறத் திருவரும் உஞற்றி யேவிய
    அரனருள் பெரும்படை தம்மில் ஆடல்செய்
    தெரிகனற் கற்றைகள் யாண்டுஞ் சிந்தியே
    திரிதலுற் றுலகெலாஞ் செற்று லாயவே.

    45

    1608

    அப்படை திரிதலும் அவைகள் வீசிய
    துப்புறழ் கொழுங்கனல் தொல்லை வானினும்
    இப்புவி மருங்கினும் ஈண்ட வானவர்
    வெப்புற விரிந்தனர் விதிர்ப்புற் றேங்குவார்.

    46

    1609

    வீண்டனர் ஒருசிலர் வெதும்பி விம்மியே
    மாண்டனர் ஒருசிலர் வந்த நஞ்சமுண்
    டாண்டவர் கழலிணை அடைதும் யாமெனாக்
    காண்டகு கயிலையின் கண்ணுற் றார்சிலர்.

    47

    1610

    காரெலாங் கரிந்தன ககனந் தன்னொடு
    பாரெலாம் எரிந்தன பௌவப் பாற்படு
    நீரெலாம் வறந்தன நிரந்த பல்லுயிர்ப்
    பேரெலாந் தொலைந்தன பின்னும் போர்செய்தேம்.

    48

    1611

    இந்தவா றமர்புரிந் திட்ட காலையில்
    தந்தையார் அருளினால் தமியன் மாமுகம்
    வந்துநா ரதனெனும் மறுவில் மாமுனி
    சிந்தைசெய் தெமக்கிவை செப்பல் மேயினான்.

    49

    1612

    நீர்முதல் நாமென நினைந்து கூறியே
    போர்முத லேசில புரிகின் றீர்கொலாம்
    ஓர்முதல் அன்றியே இல்லை உங்களில்
    ஆர்முதல் இருவரும் அன்ன பண்பினீர்.

    50

    1613

    பொருசமர் கருதியே புகுந்த போழ்தினும்
    உரியதோர் படையல துலகந் தீப்பதோர்
    வெருவரும் பெரும்படை விடுத்திர் அப்படை
    அருளிய கடவுளை அயர்த்திர் போலுமால்.

    51

    1614

    கடவுளை மறந்திரேல் கருதி நீர்பெறும்
    அடுபடை நாமமும் அயர்த்தி ரோவது
    நெடிதுநும் மனத்தினில் நினைந்து தேற்றுமின்
    விடுமினி அமரென விளம்பி மேலுமே.

    52

    (46. துப்பு உறழ் - பவளத்துண்டுகள் போல.
    47. வீண்டனர் - விலகியோடினார்கள்.
    49. தந்தையார் - இங்குச் சிவபெருமான்.
    50. ஓர் முதல் அன்றியே இல்லை - ஒரு பிரமத்தினை அன்றி வேறு இல்லை.
    52. அயர்த்திரோ - மறந்தீர்களோ.)

    1615

    வாதியா இன்னுநீர் மலைதி ரேயெனின்
    ஆதியாய் அருவுரு வான தோர்பொருள்
    சோதியாய் நடுவுறத் தோன்றுங் காண்டிரென்
    றோதியால் எமக்கிவை உணர்த்திப் போயினான்.

    53

    1616

    போயினன் உரைத்தசொற் புந்தி கொண்டிலம்
    தீயென உருத்திகல் செருக்கு நீங்கலம்
    ஆயிர மாண்டுகா றமரி யற்றினம்
    மாயிரும் புவனமும் உயிரும் மாயவே.

    54

    1617

    இங்கிவை யாவையும் இறுதி யூழியின்
    அங்கியின் நடம்புரி அண்ணல் நோக்கியே
    தங்களில் இருவருஞ் சமர்செய் சின்றனர்
    புங்கவர் தாமெனும் புகழை வெ�கினார்.

    55

    1618

    அறிவறை போயினர் அகந்தை உற்றனர்
    உறுவதொன் றுணர்கிலர் உண்மை யோர்கிலர்
    சிறுவரில் இருவருஞ் சீற்றப் போர்செயா
    இறுதிசெய் கின்றனர் உலகம் யாவையும்.

    56

    1619

    ஈங்கிவர் செயலினை இன்னுங் காண்டுமேல்
    தீங்குறும் உலகுயிர் சிதைந்து வீடுமால்
    ஓங்கிய நந்நிலை உணர்த்தின் ஆயிடைத்
    தாங்கரும் வெஞ்சமர் தணிந்து நிற்பரால்.

    57

    1620

    தம்மையே பொருளெனச் சாற்று கின்றதும்
    வெம்மைசேர் வெகுளியும் வெறுத்து வீட்டியே
    செம்மைசேர் மனத்தராய்த் திகழ்வர் தாமெனா
    எம்மையா ளுடையவன் எண்ணி னானரோ.

    58

    1621

    வேறு
    ஆன்றதோ ரளவை தன்னில் அடைந்தது மாகந் தன்னில்
    வான்றிகழ் பானாட் கங்குல் மதிபகல் தழுவு நென்னல்
    ஞான்றது தனில்யாங் கண்டு நடுக்குற நடுவ ணாகத்
    தோன்றினன் கனற்குன் றேபோல் சொல்லரும் பரத்தின் சோதி.

    59

    1622

    தோற்றிய செய்ய சோதி தொல்லமர் உழந்தி யாங்கண்
    மாற்றரும் படைக ளாக வழங்கிய இரண்டும் வௌவி
    ஆற்றருந் தன்மைத் தாக அணுகுறா தகன்று போகிச்
    சீற்றமுஞ் சமரும் நீங்கிச் சேணுற நோக்கி நின்றேம்.

    60

    (53. மலைதிரேல் - போர் புரிவீராயின். ஓதியால் - ஞான உணர்ச்சியால்.
    54. புந்தி - மனம். மா இரும் - மிகப்பெரிய.
    56. அறிவு அறை போயினர் - அறிவு அற்றுப் போயினர்.
    58. எம்மையாளுடையவன் - சிவபெருமான்.
    59. மாகந்தன்னில் - மாசி மாதத்தில். பானாட்கங்குல் மதிபகல்
    தழுவு நென்னல் ஞான்றதுதனில் - அமாவாசையின் முதனாளான
    சதுர்த்தசியின் நடு இராத்திரியில்; மகாசிவராத்திரியில்.
    60. சோதி - சோதி லிங்கம். சேணுற - வானத்தில் (அச்சோதிலிங்கத்தையே).)

    1623

    நிற்றலும் யாங்கள் கேட்ப நெடுவிசும் பிடையோர் வார்த்தை
    தெற்றென எழுந்த தம்மா சிறுவிர்காள் நுமது வன்மை
    பற்றலர் புரமூன் றட்ட பரமமே காண்பான் சோதி
    மற்றிதன் அடியும் ஈறும் வரன்முறை தேரு மென்றே.

    61

    1624

    கேட்டனம் அதனை நெஞ்சில் கிளர்ந்தெழு சீற்றம் யாவும்
    வீட்டினம் எனினும் பின்னும் விட்டிலம் அகந்தை தன்னைக்
    காட்டிய எமது முன்னோன் காண்பனும் வலியை யென்ன
    வீட்டுடன் விசும்பிற் சொற்றார் யார்கொலென் றெண்ணிப் பின்னும்.

    62

    1625

    ஏணுற எதிர்ந்தி யாஞ்செய் இகலினுக் கிடையூ றாக
    நீணில மதனைக் கீண்டு நிமிர்ந்துவான் புகுந்து நீடு
    மாணுறு சோதி தானும் மறைமுனி உரைத்த வாறு
    காணிய வந்த தெம்மில் கடந்தவான் பொருள்கொல் என்றேம்.

    63

    1626

    தீதறு காலின் வந்த செந்தழல் அன்றால் ஈது
    யாதுமொன் றறிதல் தேற்றாம் இருவரும் இதனை இன்னே
    ஆதியும் முடியும் நாடி யன்னது காண்டும் என்னா
    மாதவன் தானும் யானும் வஞ்சினம் இசைத்து மன்னோ.

    64

    1627

    நீடுவான் உருவிச் சென்று நிலனுற விடந்து புக்கும்
    ஓடிநாம் ஒல்லை தன்னில் உற்றிதற் கடியும் ஈறும்
    நாடினால் அவற்றில் ஒன்றும் நலம்பெற முன்னங் கண்டோர்
    பீடுயர் தலைவர் ஈதே துணிவெனப் பேசி நின்றேம்.

    65

    1628

    முடியினைக் காண்பன் என்றே மொழிந்தனன் தமியன் ஏனை
    அடியினைக் காண்பன் என்றே அரியும்அங் கிசையா நின்றான்
    நடைபயில் மழலை ஓவா நாகிளஞ் சிறுவர் வானில்
    சுடர்மலி கதிரைக் கையால் தீண்டுவான் துணியு மாபோல்.

    66

    1629

    எரியுறழ் தறுகட் செங்கண் இமிலுடை எருத்தம் யாரும்
    உருகெழு துழனிக் கூர்வாய் ஔ�ளெயி றிலங்கு தந்தங்
    கருவரை யனைய மேனிக் கடுநடைக் குறுந்தாள் வௌ�ளைக்
    குரமொடு கண்ணன் அன்றோர் கோலமாங் கோலங் கொண்டான்.

    67

    1630

    ஒருபது நூற தாகும் யோசனை உகப்பி னோடு
    பருமையு மாகும் அந்தப் பகட்டுரு வாகி முன்னந்
    தரணியை இடந்து கீழ்போய்த் தடவியே துருவிச் சென்று
    நிறைபடு புவனம் யாவும் நீந்தியே போயி னானால்.

    68

    (61. கேட்ப - கேட்கும்படி. சிறுவிர்காள் - சிறுவர்களே.
    காண்பான் - காணுமாறு. தேரும் - உணருங்கள்.
    63. ஏண் - வலிமை. 64. காலின் வந்த - வாயுவில் உண்டாகும்.
    ஈது - இச்சோதி. யானும் - இங்குப் பிரமன். வஞ்சினம் - சபதம்.
    67. தறுகண் - அஞ்சாமை. கருவரை - கரியமலை.
    குறுந்தாள் - குறுகிய காலும். குரம் - குளம்பு. கண்ணன் - திருமால்.
    கோலமாம் - பன்றியின். கோலம் - வடிவு. 68. உகப்பு - உயரம்.
    பருமை - பருமன். பகடு - பன்றி. இடந்து - பிளந்து. நீந்தி - கடந்து.)

    68

    1631

    பாதலம் நாடி அன்னான் படர்தலும் யானும் ஆங்கோர்
    ஓதிம வடிவ மாகி ஒல்லையில் எழுந்து மீப்போய்
    மேதகு விசும்பின் மேலாம் வியன்புவ னங்கள் நாடிப்
    போதலுஞ் சோதி முன்னம் போலமேல் போயிற் றம்மா.

    69

    1632

    முன்னமோ ரேன மாகி முரணொடு புவனி கீண்டு
    வன்னியாய் எழுந்த சோதி வந்ததோர் மூலங் காண்பான்
    உன்னியே போன மாலோன் ஊக்கியே செல்லச் செல்லப்
    பன்னெடுங் காலஞ் சென்ற பாதமுங் காணான் மாதோ.

    70

    1633

    நொந்தன எயிறு மேனி நுடங்கின நோன்மை யாவுஞ்
    சிந்தின புனலுண் வேட்கை சேர்ந்தன உயிர்ப்பி னோடும்
    வந்தன துயரம் போன வஞ்சினம் அகந்தை வீந்த
    முந்தையில் உணர்வு மால்பால் முழுதொருங் குற்ற தன்றே.

    71

    1634

    தொல்லையில் உணர்ச்சி தோன்றத் துண்ணெனத் தௌ�ந்த கண்ணன்
    அல்லுறழ் புயலின் தோற்றத் தண்ணலங் களிற்றின் யாக்கை
    மெல்லவே தரிக்க லாற்றான் வீட்டவுங் கில்லான் மீண்டு
    செல்லவும் ஊற்ற மில்லான் சிவனடி சிந்தை செய்தான்.

    72

    1635

    வேறு
    என்றும் உணர்வரிய எம்பெருமான் உன்றிருத்தாள்
    அன்றி அரணில்லை அவற்றைஅருச் சித்திடவும்
    பொன்றிய தென்வன்மை பொறுத்தி குறையடியேன்
    ஒன்று முணரேன்என் றுளம்நொந்து போற்றினனே.

    73

    1636

    ஆன பொழுதில் அமலன் திருவருளால்
    தேனு லவுதண்டார்த் திருமால் மிடலுடைத்தாய்
    ஏன வடிவோ டெழுந்துபுவிப் பால்எய்தி
    வானுறுசோ திக்கணித்தா வந்து வணங்கிநின்றான்.

    74

    1637

    வேறு
    நின்றான் ஒருபால் நெடுமாலது நிற்க யான்முன்
    பின்றா வகையாற் பெருஞ்சூளிவை பேசி வானில்
    சென்றா யிரமாண்டு திரிந்து திரிந்து நாடிக்
    குன்றாத சோதிக் கொழுந்தின்தலை கூட லேன்யான்.

    75

    1638

    மீளும் படியும் நினையேன் வினையேனும் மீளில்
    சூளும் பழுதா மதுவன்றித் துணிந்து முன்னம்
    மூளுஞ் சுடரின் முதல்கண்டரி மூர்த்தி யாவான்
    ஆளென்பர் என்னை அழிவெய்தும்இவ் வாற்றல் மன்னோ.

    76

    1639

    எந்நாள் வரைசெல் லினுஞ்செல்லுக இன்னும் விண்போய்ப்
    பொன்னார் முடிகண் டபின்அல்லது போக லேனென்
    றுன்னா வதுகா ணியபோதலும் உள்ளம் வெம்பி
    மன்னா வுயிரு முலைந்தாற்றலும் மாண்ட தன்றே.

    77

    (69. ஓதிமம் - அன்னப்பறவை. 70. ஏனம் - பன்றி. புவனி - பூமியை.
    ஊக்கி - முயற்சித்து. 72. அல்உறழ் - இருளை ஒத்த.
    களிற்றின்யாக்கை - பன்றிவுருவினை. ஊற்றம் - வல்லமை.
    73. என்றும் - எந்நாளும். 74. மிடல் - வலிமை. புவிப்பால் - பூவுலகத்தை.
    75. பெருஞ்சூள் - பெரிய சபதம். 77. எந்நாள் வரை செல்லினும் செல்லுக -
    எவ்வளவு காலம் சென்றாலும் செல்லட்டும்; எந்நாள் - எவ்வளவு காலம்;
    வரை - இச்சோதிமலை செல்லினும் - மேற்போனாலும்;
    செல்லுக - இன்னும் மேற்போகட்டும்.)

    1640

    கண்ணுஞ் சுழன்ற சிறைநொந்தன காலும் ஓய்ந்த
    எண்ணுந் திரிந்தத துபோதில் எழுந்த சோதி
    உண்ணின்ற சித்த ரெனவேபலர் ஒல்லை மேவி
    விண்ணின் தலைபோய் இதுவொன்று விளம்ப லுற்றார்.

    78

    1641

    வானார் பரஞ்சோ தியின்ஈற்றினை வாரி தன்னுள்
    மீனார் தரவே திரிகின்றதொர் வௌ�ளை அன்னந்
    தானா முணருஞ் சிறைபோகித் தளர்ந்து வன்மை
    போனலும் நாட வருகின்றது போலும் அம்மா.

    79

    1642

    அன்னந் தனக்கீ தறிவின்மைய தாகும் அல்லால்
    பின்னொன் றுளதோ துணிவுற்றதொர் பெற்றி நோக்கின்
    இன்னுஞ் சிறிது பொழுதேகின் இறக்கும் இந்த
    மன்னுஞ் சுடரைச் சிவனென்று மனங்கொ ளாதோ.

    80

    1643

    மாலென் பவனும் நிலங்கீண்டனன் வல்லை யேகி
    மூலந் தெரிவான் உணராமல் முரணும் நீங்கிச்
    சீலங் குறுகச் சிவனேசர ணென்று பைய
    ஞாலந் தனில்வந் தனல்வெற்பினை நண்ணி நின்றான்.

    81

    1644

    முந்துற் றிதனை அருள்செய்திடு மூர்த்தி தானே
    சிந்தைக்குள் மாசு தனைத்தீர்த்தருள் செய்யின் உய்யும்
    இந்தப் பறவை யெனயானும் இதனை நாடிப்
    புந்திக்குள் மைய லொழிந்தேயவர்ப் போற்றி செய்தேன்.

    82

    1645

    ஈசன் அருளால் இவைகூறினர் ஏக லோடும்
    ஆசின் வழியாம் அகந்தைத்திற னாதி யாய
    பாசங் களைவீட் டியரன்புகழ பன்னி ஏத்தி
    நேசங் கொடுபூ சனைசெய்ய நினைந்து மீண்டேன்

    83

    1646

    வேறு
    வந்துகண்ணன் தனையணுகி வான்பொருள்யா மென்றிகலி
    முந்துறுவெஞ் சமர்இயற்றி முனிமொழியும் உணர்ந்திலமால்
    தந்தைவர வறியாமல் தாள்முடியுந் தேடலுற்றேம்
    அந்தமுறும் வேலைதனில் அவன்அருளால் அவற்புகழந்தேம்.

    84

    1647

    கீண்டுநில னிருவிசும்பிற் கிளர்ந்தும்அடி முடியுணரேம்
    மீண்டும்அவன் தன்அருளால் மிடல்பெற்று வந்தனமால்
    ஈண்டுசிவன் தனைவழிபட் டிருவரும்அன் னவன்தோற்றங்
    காண்டுமென யானுரைப்பக் கண்ணனும்அங் கதற்சிசைந்தான்.

    85

    (79. ஈற்றினை - முடிவினை. வாரி - நீர். ஆர்தா - அடைய.
    80. மூலம் - அடி. பைய - மெதுவாக.
    83. ஆசின் வழியாம் - அஞ்ஞானத்தின் வழியாய் உண்டாகும்.)

    1648

    இருவரும்அச் சிவனுருவை இயல்முறையால் தாபித்து
    விரைமலர்மஞ் சனஞ்சாந்தம் விளக்கழலா தியவமைத்துப்
    பொருவருபூ சனைபுரிந்து போற்றிசெய்து வணங்குதலும்
    எரிகெழுசோ திக்கணித்தா எந்தைஅவண் வந்தனனே.

    86

    1649

    மைக்களமும் மான்மழுவும் வரதமுடன் அபயமுறும்
    மெய்க்கரமும் நாற்புயமும் விளங்குபணிக் கொடும்பூணுஞ்
    செக்கருறு மதிச்சடையுஞ் சேயிழையோர் பாகமுமாய்
    முக்கணிறை யாங்காண முன்னின்றே யருள்புரிந்தான்.

    87

    1650

    அவ்விடையா மிருவர்களும் அமலன்றன் அடிவணங்கிச்
    செவ்விதின்நின் றவன்அருளில் திளைத்திதனைச் செப்பினமால்
    மெய்வகையாம் அன்பின்றி விளங்காநின் னியம்மறையும்
    இவ்வகையென் றுணராதே யாங்காணற் கௌ�வருமோ.

    88

    1651

    வேறு
    புந்தி மயங்கிப் பொருங்காலை யெம்முன்னில்
    செந்தழலின் மேனிகொடு சென்றருளித் தொல்லறிவு
    தந்து நினையுணர்த்தித் தாக்கமரும் நீக்கினையால்
    எந்திரம்யாம் உள்நின் றியற்றுகின்றாய் நீயன்றோ.

    89

    1652

    உன்னை உணரும் உணர்வுபுரிந் தாலுன்னைப்
    பின்னை யுணர்வேம் பெருமசிறி யேஞ்செய்த
    புன்னெறியை யெல்லாம் பொறுத்தியால் தஞ்சிறுவர்
    என்ன செயினும் இனிதன்றோ ஈன்றவர்க்கே.

    90

    1653

    இன்னாத் தகைசேர் இரும்பினைவல் லோன்இலங்கும்
    பொன்னாக் கியபரிசு போல எமையருளி
    மன்னாக் கினையயர்த்தோம் மற்றுனையும் யாங்களுயிர்
    தொன்னாட் பிணித்த தொடர கற்றவல் லோமோ.

    91

    1654

    வேறு
    என்றி யம்பியாம் ஏத்தலும் எதிருற நோக்கிக்
    குன்ற வில்லுடை யொருவன்நீர் செய்தன குறியா
    ஒன்றும் எண்ணலீர் நும்பெரும் பூசனை உவந்தாம்
    அன்று மக்கருள் பதந்தனை இன்னும்யாம் அளித்தேம்.

    92

    1655

    வேண்டு நல்வரங் கேண்மின்நீர் என்றலும் விசும்பில்
    தாண்ட வம்புரி பகவநின் சரணமே அரணாப்
    பூண்டி டுந்தலை யன்பருள் என்றலும் புரிந்து
    காண்ட குந்தழற் சோதியுள் இமைப்பினிற் கலந்தான்.

    93

    (86. இயல் முறை - இலக்கண முறைப்படி. விளக்கு - தீபம்.
    அழல் - தூபம். எந்தை - எம்பெருமான்.
    87. பணிக் கொடும் பூண் - அரவகுண்டலம்.
    சேயிழை - உமாதேவியர். யாம் - நாங்கள்.
    89. நினை உணர்த்தி - உன்னையும் அறிவித்து.
    90. பெரும - பெருமானே! ஈன்றவர்க்கு - பெற்றவர்க்கு.
    91. இன்னாத் தகைசேர் - கொடுந்தன்மை வாய்ந்த.
    மன்ஆக்கினை - படைத்தல் காத்தல் தொழில்களில் தலைமை ஆக்கினை.
    தொடர் - பாசம். 93. விசும்பில் - சிதாகாயவௌ�யில்.
    தாண்டவம் - ஆனந்தத் தாண்டவம். பகவ - பகவனே!
    கலத்தல் - சோதியோடு சோதியாதல்.)

    1656

    கலந்த காலையில் யாங்கள்முன் தொழுதெழுங் காலைச்
    சலங்கொள் பான்மையின் முன்னுறத் தேடுவான் தழலாய்
    மலர்ந்த பேரொளி மீமிசை சுருங்கியே வந்தோர்
    விலங்க லாகிய துலகெலாம் பரவியே வியப்ப.

    94

    1657

    அன்ன தாஞ்சிவ லிங்கரூப ந்தனை அணுகி
    முன்ன மாகியே மும்முறை வலஞ்செய்து முறையால்
    சென்னி யால்தொழு தேத்தியெம் பதங்களிற் சென்றேம்
    பின்னர் எந்தையை மறந்திலம் போற்றுதும் பெரிதும்.

    95

    1658

    அரியும் யானும்முன் தேடும்அவ் வனற்கிரி யனல
    கிரியெ னும்படி நின்றதால் அவ்வொளி கிளர்ந்த
    இரவ தேசிவ ராத்திரி யாயின திறைவற்
    பரவி யுய்ந்தனர் அன்னதோர் வைகலிற் பலரும்.

    96

    1659

    ஆத லால்அவ னருள்பெறின் அவனியல் அறியும்
    ஓதி யாகுவர் அல்லரேல் பலகலை உணர்ந்தென்
    வேத நாடியென் இறையும்அன் னவன்நிலை விளங்கார்
    பேதை நீரரும் ஆங்கவர் அல்லது பிறரார்.

    97

    1660

    மோக வல்வினை யாற்றியே பவத்திடை மூழ்கும்
    பாகர் அல்லவர்க் கெய்திடா தவனருள் பவமும்
    போக மாற்றிடு தருமமும் நிகர்வரு புனிதர்க்
    காகும் மற்றவன் அருள்நிலை பாகராம் அவரே.

    98

    1661

    நீயுந் தொல்வினை நீங்கலின் எம்பிரான் நிலைமை
    ஆயுந் தொல்லுணர் வின்றுவந் தெய்திய தவனே
    தாயுந் தந்தையுங் குரவனுங் கடவுளுந் தவமும்
    ஏயுஞ் செல்வமும் அனையவற் சார்தியா லென்றான்.

    99

    (94. சலம் - தீராக் கோபம். விலங்கல் ஆகியது - மலைவடிவாயது.
    96. அனற்கிரி - அக்கினிமலை. அனலகிரி - அருணாசலம்;
    திருவண்ணாமலை.
    98. பவமும் போகமாற்றிடு தருமமும் நிகர்வரு புனிதர் -
    இருவினையொப்பு வாய்ந்த புனிதர். அவன் அருள்நிலை பாகர் -
    சத்திநிபாதத்து உத்தமர். 99. தொல்வினை - பழைய இருவினை.
    அவனே - அச்சிவபெருமானே.)


    ஆகத் திருவிருத்தம் - 1661
    ----------

    22. தக்கன் சிவபூசைசெய் படலம் (1662-1673)

    1662

    மருமலர் அயனிவை வகுப்ப நாடியே
    புரிகுவன் அ�தெனப் புகன்று தாதைதாள்
    பரிவொடு சிறுவிதி பணிந்து காசியாந்
    திருநகர் அதனிடைச் சேறல் மேயினான்.

    1

    1663

    சென்றனன் காசியில் சிறந்த தொல்மணி
    கன்றிகை ஒருபுடை கங்கை வேலையில்
    பொன்றிகழ் செஞ்சடைப் புனிதற் காலயம்
    ஒன்றுமுன் விதித்தனன் உணர்வு சேர்ந்துளான்.

    2

    1664

    அருளுரு வாகியே அகில மாவிகள்
    தருவதுங் கொள்வது மாகித் தாணுவாய்
    உருவரு வாகிய ஒப்பில் பேரொளித்
    திருவுரு வொன்றினைச் சிவனுக் காக்கினான்.

    3

    1665

    நாயகன் மொழிதரு நவையில் ஆகமம்
    மேயின முறைதெரி விரத னாகியே
    பாய்புனல் புனைசடைப் பரமன் தாள்மலர்
    ஆயிரம் யாண்டுகா றருச்சித் தேத்தினான்.

    4

    1666

    அருச்சனை புரிதலும் அயன்தன் காதலன்
    கருத்துறும் அன்பினைக் கண்டு கண்ணுதல்
    பொருக்கென வௌ�ப்படப் புகழ்ந்து பொன்னுலாந்
    திருக்கழல் வணங்கினன் தௌ�வு பெற்றுளான்.

    5

    1667

    அகந்தைய தாகியே ஐய நின்தனை
    இகழ்ந்தனன் என்கணே எல்லை யில்பவம்
    புகுந்தன அவையெலாம் போக்கி நின்னிடைத்
    தகும்பரி சன்பினைத் தருதி யால்என்றான்.

    6

    1668

    ஆயவை தொலைத்தளித் தவன்தன் பூசையின்
    நேயம தாகியே நிமலன் தன்கண
    நாயக இயற்கையை நல்கி வல்லையில்
    போயினன் தக்கனும் புனிதன் ஆயினான்.

    7

    1669

    வேறு
    கங்கைச் சடையான் தனைத்தக்கனக் காசி தன்னில்
    அங்கர்ச் சனைசெய் திடப்போந்துழி அம்பு யன்மால்
    துங்கத் திமையோர் இறையாவருஞ் சூர மாதர்
    சங்கத் தவரு மகவெல்லை தணந்து போனார்.

    8

    1670

    போகுற் றவர்கள் அனைவோரும் பொருவில் சீர்த்தி
    வாகுற்ற வீரன் சயந்தன்னை வழுத்தித் தங்கட்
    காகுற்ற தொல்லைத் தலந்தோறும் அடைந்து மாதோர்
    பாகத் தமலன் தனைப்பூசனை பண்ண லுற்றார்.

    9

    1671

    ஆரா தனைகள் புரிந்தேஅனை வோரும் எங்கும்
    பேரா துநிற்கும் பெருமானருள் பெற்று மெய்யில்
    தீராத சின்னங் களுந்தீர்ந்து சிறந்து தத்த
    மூரா கியதோர் பதமேவி உறைத லுற்றார்.

    10

    1672

    மேதக்க தக்கன் மகந்தன்னில் விரைந்து புக்காங்
    கேதத் தடிசில் மிசைந்தேபொருள் யாவும் ஏற்றுப்
    பூதத் தரின்மாய்ந் தெழுந்தேதம் புரிகள் தோறும்
    பேதைத் தொழில்அந் தணர்யாரும் பெயர்ந்து போனார்.

    11

    1673

    என்றிங் கிவைகள் குரவோன்இசைத் திட்டல் கேளா
    நன்றென்று சென்னி துளக்குற்று நனிம மகிழ்ந்து
    குன்றின் சிறைகொய் தவன்தந்த குரிசில் உள்ளத்
    தொன்றுங் கவலை இலனாகிஅவ் வும்ப ருற்றான்.

    12

    (1. மலர் - இங்குத் தாமரை. சிறுவிதி - தக்கன்.
    காசியாம் திருநகர் - அழகிய காசிநகர். 2. மணிகன்றிகை - மணிகர்ணிகை.
    3. அகிலம் ஆவிகள் - உலகினையும் உயிர்களையும் கொள்வதும் -
    அழிப்பதும். திருவுரு ஒன்று - சிவலிங்கம். 4. நாயகன் - சிவன்.
    தெரி - தெரிந்த. விரதன் - சிவதீட்சா விதரத்தினையுடையவன்.
    6. பவம் - பாவம். 7. கணநாயக இயற்கையை - கணநாதத் தன்மையினை.
    8. துங்கத்து - மிகவுயர்ச்சி வாய்ந்த. சூரமாதர் - தேவமாதர்.
    9. வாகு வலிமை. வீரன் - வீரபத்திரன்.
    10. தீராத சின்னங்கள் - நீங்காத வடுக்கள்.
    12. குரவோன் - வியாழ பகவான். குன்றின் சிறை கொயதவன்
    தந்தகுரிசில் - இந்திர குமாரனாகிய சயந்தன்.)

    ஆகத் திருவிருத்தம் - 1673
    -----------

    23. கந்த விரதப் படலம் (1674- 1800)

    1674

    உரைசெறி மகவான் செம்மல் உம்பரில் இருப்ப இம்பர்
    முரசெறி �னை வேந்தன் முசுகுந்தன் என்னும் வள்ளல்
    விரைசெறி நீபத் தண்டார் வேலவன் விரதம் போற்றித்
    திரைசெறி கடற்பா ராண்ட செயல்முறை விளம்ப லுற்றாம்.

    1

    1675

    முந்தொரு ஞான்று தன்னில் முசுகுந்தன் வசிட்டன் என்னும்
    அந்தணன் இருக்கை எய்தி அடிமுறை பணிந்து போற்றிக்
    கந்தவேள் விரத மெல்லாங் கட்டுரை பெரியோய் என்ன
    மைந்தநீ கேட்டி யென்னா மற்றவை வழாது சொல்வான்.

    2

    1676

    எள்ளருஞ் சிறப்பின் மிக்க எழுவகை வாரந் தன்னுள்
    வௌ�ளிநாள் விரதந் தானே விண்ணவர் உலகங் காத்த
    வள்ளல்தன் விரத மாகும் மற்றது புரிந்த மேலோர்
    உள்ளமேல் நினைந்த வெல்லாம் ஒல்லையின் முடியும் அன்றே.

    3

    1677

    பகிரதன் என்னும் வேந்தன் படைத்தபா ருலகை யெல்லாம்
    நிகரறு கோரன் என்னும் நிருதனங் கொருவான் வௌவ
    மகவொடு மனையுந் தானும் வனத்திடை வல்லை ஏகிப்
    புகரவன் தனது முன்போய்த் தன்குஆஆ புகன்று நின்றான்.

    4

    (1. மகவான் செம்மல் - சயந்தன். இம்பர் - இவ்வுலகம்.
    நீபம் - கடம்பு. வேலவன் விரதம் - முருகக் கடவுளுக்குரிய
    சஷ்டிவிரதம். 3. எழுவகை வாரந் தன்னுள் - ஞாயிறு முதலிய
    ஏழு நாட்களில். வௌ�ளி நாள் விரதம் - சுக்கிர வார விரதம்.
    4. கோரன் என்னும் திருதன் - கோரன் என்னும் அசுரன்.
    புகர் - சுக்கிரன்.)

    1678

    பார்க்கவன் என்னும் ஆசான் பகீரதன் உரைத்தல் கேளா
    வேற்கரன் மகிழு மாற்றால் வௌ�ளிநாள் விரதந் தன்னை
    நோற்குதி மூன்றி யாண்டு நுங்களுக் கல்லல் செய்த
    மூர்க்கனும் முடிவன் நீயே முழுதுல காள்வை என்றான்.

    5

    1679

    நன்றென வினவி மன்னன் ஞாயிறு முதலாம் நாளில்
    ஒன்றெனும் வௌ�ளி முற்றும் உணவினைத் துறந்து முன்பின்
    சென்றிடும் இரண்டு நாளும் திவாவினில் அடிசில் மாந்தி
    இன்றுயில் அதனை நீத்தி யாண்டுமூன் றளவு நோற்றான்.

    6

    1680

    நோற்றிடும் அளவில் ஐயன் நுதியுடைச் செவவேல் வந்து
    மாற்றலன் உயிரை யுண்டு வல்லையின் மீண்டு செல்லப்
    போற்றியே பகீர தப்பேர்ப் புரவலன் தன்னூ ரெய்தி
    ஏற்றதொல் லரக பெற்றான் இன்னுமோர் விரதஞ் சொல்வாம்.

    7

    1681

    வாரிச மலர்மேல் வந்த நான்முகன் மதலை யான
    நாரத முனிவன் என்போன் உலத்தகு விரத் மாற்றி
    ஓரெழு முனிவர் தம்மில் உயர்ந்திடு பதமும் மேலாஞ்
    சீரொடு சிறப்பும் எய்தச் சிந்தனை செய்தான் அன்றே.

    8

    1682

    நூற்படு கேள்வி சான்ற நுண்ணிய உணர்வின் மிக்கோன்
    பார்ப்பதி உதவு முன்னோன் பதமுறை பணிந்து போற்றி
    ஏற்புறு முனிவ ரான எழுவகை யோரில் யானே
    மேற்பட விரத மொன்றை விளம்புதி மேலோய் என்றான்.

    9

    1683

    முன்னவன் அதததக் கேளா முழுதருள் புரிந்து நோக்கி
    அன்னது பெறுதி திண்ணம் ஆறுமா முகத்து நம்பி
    பொன்னடி வழிபா டாற்றிப்பொருவில்கார்த் திகைநாள் நோன்பைப்
    பன்னிரு வருடங் காறும் பரிவுடன் புரிதி என்றான்.

    10

    1684

    நாரதன் வினவி ஈது நான்புரிந் திடுவன் என்னாப்
    பாருல கதனில் வந்து பரணிநாள் அபரா ணத்தில்
    ஓர்பொழு துணவு கொண்டே ஒப்பில்கார்த் திகைநாள் தன்னில்
    வீரவேல் தடக்கை அண்ணல் விரதத்தை இயற்ற லுற்றான்.

    11

    1685

    தூசொடு கயத்தின் மூழ்கித் துய்யவெண் கலைகள் சுற்றி
    ஆசறு நியம முற்றி ஆன்றமை புலத்த னாகித்
    தேசிகன் தனது பாதஞ் சென்னிமேற் கொண்டு செவ்வேள்
    பூசனை புரிந்திட் டன்னான் புராணமும் வினவி னானால்.

    12

    (5. ஆசான் - அசுரகுரு. வௌ�ளிநாள் விரதந்தன்னை மூன்று
    யாண்டுநோற்குதி - மூன்று வருடம் சுக்கிரவார விரதந்தனை
    அனுட்டிக்கக் கடவாய். 6. வௌ�ளி முற்றும் - வௌ�ளிக்கிழமை
    முழுவதும். முன்பின் சென்றிடும் இரண்டு நாளும் - வியாழனும்
    சனியும் ஆகிய இரு தினங்களிலும். திவாவினில் - பகலில் மாத்திரம்.
    7. ஐயன் - முருகன். மாற்றலன் - இங்குக் கோரன் என்னும் அசுரன்.
    8. வாரிச மலர் - தாமரை மலர். ஓர் எழு முனிவர் - சத்தவிருடிகள்.
    9. பார்ப்பதி - பார்வதி. முன்னோன் - விநாயகன்.
    மேற்பட - உயர்ந்தோனாக.
    10. ஆறு மாமுகத்து நம்பி - சண்முகக்கடவுள்.
    கார்த்திகை நாள் நோன்பு - கார்த்திகை விரதம்.
    11. பரணி நாள் - பரணி நட்சத்திரம். அபராணத்தில் - பிற்பகலில்.
    12. தூசொடு - கட்டிய ஆடையுடன். கயம் - குளம். வெண்கலை - வௌ�ளை வஸ்திரம்.)

    1686

    கடிப்புனல் அள்ளித் தன்னோர் கைகவித் துண்டு முக்காற்
    படுத்திடு தருப்பை என்னும் பாயலிற் சயனஞ் செய்து
    மடக்கொடி மாதர் தம்மை மறலியா மதித்து வள்ளல்
    அடித்துணை யுன்னிக் கங்குல் அவதியு முறங்கா துற்றான்.

    13

    1687

    அந்தநாள் செல்லப் பின்னர் உரோகிணி யடைந்த காலைச்
    சந்தியா நியமம் எல்லாஞ் சடக்னெ முடித்துக் கொண்டு
    கந்தவேள் செம்பொற் றண்டைக் கான்முறை வழிபட் டேத்தி
    வந்தமா தவர்க ளோடும் பாரணம் மகிழ்ந்து செய்தான்.

    14

    1688

    பாரணம் விதியிற் செய்தோன் பகற்பொழு துறங்கு மாயின்
    ஆரண மறையோர் தம்மில் ஐம்பதிற் றிருவர் தம்மைக்
    காரண மின்றிக் கொன்ற கடும்பழி யெய்தும் என்னா
    நாரதன் மாயம் வல்லோன் இமைத்திலன் நயனஞ் சற்றும்.

    15

    1689

    விழியொடும் இமைகூ டாமே வெய்யவன் குடபால் வீழும்
    பொழுதள விருந்து மற்றைப் புறத்துள செயலும் போற்றி
    அழிவறு விரதம் இவ்வாறு ஆறிரு வருட மாற்றி
    எழுவகை முனிவோ ருக்கும் ஏற்றமாம் பதத்தைப் பெற்றான்.

    16

    1690

    இந்தநல் விரதந் தன்னை ஈண்டொரு மறையோன் நோற்று
    முந்திய மனுவே யாகி முழுதுல கதனை ஆண்டான்
    அந்தணன் ஒருவன் பின்னும் அவ்விர தத்தைப் போற்றிச்
    சிந்தையின் நினைந்தாங் கெய்தித் திரிசங்கு வாகி யுற்றான்.

    17

    1691

    ஈங்கொரு மன்னன் வேடன் இருவரும் நோற்று வண்மை
    தாங்கிய அந்தி மானே சந்திமான் என்று பேராய்
    வீங்குநீர் உடுத்த பாரை மேலைநாட் புரந்தார் என்ப
    ஆங்கவர் பின்னாள் முத்தி அடைவது திண்ணம் அம்மா.

    18

    1692

    இப்படி ஆரல் நாளில் விரதத்தை இயல்பின் நோற்று
    முப்புவ னத்தின் வேண்டும் முறைமையை யடைந்த நீரார்
    மெய்ப்படு தொகையை யாரே விளம்புவர் ஈதே யன்றி
    ஒப்பரும் விரதம் வேறும் ஒன்றுள துரைப்பக் கேண்மோ.

    19

    1693

    வெற்பொடும் அவுணன் தன்னை வீட்டிய தனிவேற் செங்கை
    அற்புதன் தன்னைப் போற்றி அமரரும் முனிவர் யாருஞ்
    சொற்படு துலையின் திங்கட் சுக்கில பக்கந் தன்னில்
    முற்பக லாதி யாக மூவிரு வைகல் நோற்றார்.

    20

    (13. மறலியா மதித்து - யமனாகக் கருதி. உன்னி - நினைத்து.
    14. பாரணம் - விரத முடிவில் உண்ணுதல்.
    15. ஐம்பதிற்று இருவர் - நூறுபேர். கடும் பழி - கொடிய பழி.
    16. குடபால் - மேற்கு. ஆறு இரு வருடம் - பன்னிரண்டு வருடம்.
    17. இந்த நல் விரதம் - நல்ல இக் கார்த்திகை விரதம்.
    19. ஆரல் நாள் - கார்த்திகை நாள்.
    20. வெற்பு - கிரவுஞ்ச மலை. அவுணன் - தாரகன்.
    துலையின் திங்கள் - ஐப்பசிமாதம். முற்பகல் ஆதியாக
    மூவிரு வைகல் - பிரதமை முதலாக ஆறுதினம்.)

    1694

    முந்திய வைக லாதி மூவிரு நாளுங் காலை
    அந்தமில் புனலின் மூழ்கி ஆடையோ ரிரண்டு தாங்கிச்
    சந்தியிற் கடன்கள் செய்து தம்பவிம் பங்கும் பத்திற்
    கந்தனை முறையே பூசை புரிந்தனர் கங்குற் போதில்.

    21

    1695

    நிறைதரு கட்டி கூட்டி நெய்யினாற் சமைக்கப் பட்ட
    குறைதவிர் மோத கத்தைக் குமரநா யகற்க ருத்திப்
    பிறவுள விதியுஞ் செய்து பிரான்திருப் புகழ்வி னாவி
    உறுபுனல் சிறிது மாந்தி உபவசித் திருந்தார் மாதோ.

    22

    1696

    ஆரண முனிவர் வானோர் அங்கதன் மற்றை வைகல்
    சீரணி முருக வேட்குச் சிறப்பொடு பூசை யாற்றிப்
    பாரணம் விதியிற் செய்தார் பயிற்றுமிவ் விரதந் தன்னால்
    தாரணி அவுணர் கொண்ட தம்பதத் தலைமை பெற்றார்.

    23

    1697

    என்றிவை குரவன் செப்ப இறையவன் வினவி எந்தாய்
    நன்றிவை புரிவன் என்னா நனிபெரு வேட்கை யெய்தி
    அன்றுதொட் டெண்ணில் காலம் அவ்விர தங்கள் ஆற்றிக்
    குன்றெறி நுதிவேல் ஐயன் குரைகழல் உன்னி நோற்றான்.

    24

    1698

    வேறு
    ஆன காலையில் ஆறுமா முகமுடை அமலன்
    கோன வன்தனக் கருளுவான் மஞ்ஞைமேல் கொண்டு
    தானை வீரனும் எண்மரும் இலக்கருஞ் சார
    வானு ளோர்களுங்கணங்களுஞ் சூழ்வுற வந்தான்.

    25

    1699

    வந்து தோன்றலும் மன்னவர் மன்னவன் மகிழ்ந்து
    கந்த வேளடி பணிந்தனன் கைதொழூஉப் பரவ
    அந்த மில்பகல் விரதங்கள் ஆற்றினை அதனால்
    எந்த நல்வரம் வேண்டினை அதுபுகல் என்றான்.

    26

    1700

    என்ற காலையில் முசுமுக முடையவன் எந்தாய்
    நன்று பாரெலா மெனதுசெங் கோலிடை நடப்பான்
    வென்றி மொய்ம்பினன் ஆதியாம் வீரரை யெல்லாம்
    ஒன்று கேண்மையின் துணைவராத் தருதியென் றுரைத்தான்.

    27

    1701

    மன்னன் இவ்வஆஆ வேண்டுகோள் வினவுறா வள்ளல்
    அன்ன வாறுனக் குதவுவ மென்றருள் புரிந்து
    மின்னல் வாட்படை வீரமொய்ம் பன்முதல் விளம்புந்
    துன்னு தானையந் தலைவரை நோக்கியே சொல்வான்.

    28

    1702

    நோற்றல் கூடிய முசுகுந்தன் நும்மினும் எம்பால்
    ஏற்ற மேதகும் அன்பினான் எழுகடற் புவியும்
    போற்ற வைகுவான் நீவிர்கள் ஆங்கவன் புடைபோய்
    ஆற்றல் சான்றிடு துணைவராய் இருத்திர்என் றறைந்தான்.

    29

    (21. தம்பம் - அக்கினி. பிம்பம் - உருவம். கும்பம் - கலசம்.
    22. கட்டி - வெல்லக்கட்டி. திருப்புகழ் - அழகிய புகழ்.
    வினாவி - கேட்டு. 23. ஆரணம் - வேதம்.
    அதன் மற்றை வைகல் - அந்தச் சஷ்டியின் மறுதினம்.
    24. குரவன் - இங்கு வசிட்டன். இறையவன் - முசுகுந்தன்.
    25. மஞ்ஞை - மயில். தானை வீரன் - வீரவாகு.
    26. அந்தமில் பகல் - அளவற்றகாலம்.
    27. முசுமுகமுடையவன் - குரங்கின் முகத்தினையுடைய முசுகுந்த மன்னன்.
    29. நோற்றல் கூடிய - சஷ்டி விரதத்தை நோற்று முற்றுப்பெற்ற.)

    30

    1703

    வேறு
    முழுதருட் புரிதருங் கடவுள்சொல் வினவியே முடிவ தில்லாச்
    செழுமதித் தண்குடைச் சூர்குலந் தனையடுந் திறலி னேங்கள்
    பழிபடப் பானுவின் வழிவருஞ் சிறுமகன் பாங்க ராகி
    இழிதொழில் புரிகிலோ மெனமறுத் துரைசெய்தார் யாரும்வீரர்.

    1704

    ஞானநா யகனவர் மொழிதனைத் தேர்ந்துநம் முரைம றுத்தீர்
    ஆனதோர் பான்மையால் நீவிர்மா னுடவராய் அவனி மன்னன்
    சேனையா கிப்புறம் போற்றியே பற்பகற் சேர்திர் பின்னர்
    வானுளோர் புகழவே நோற்றுநம் பக்கலில் வருதி ரென்றான்.

    31

    1705

    ஐயன்வான் மொழியினால் வீரமொய்ம் புடையவ னாதி யானோர்
    மையல்மா னுடவராய்த் தொல்லைநா ளுடையதோர் வன்மை நீங்கி
    மெய்யெலாம் வியர்வுறப் பதைபதைத் தேங்கியே விழும மிக்குப்
    பொய்யரேம் பிழைபொறுத் தருடியா லென்றுபொன் னடிப ணிந்தார்.

    32

    1706

    கமலமார் செய்யசே வடியின்மேற் றாழ்ந்துகை தொழுது போற்றிக்
    குமரவேள் விடைதனைப் பெற்றுமா னவரெலாங் கொற்ற மன்னன்
    தமர்களாய் ஒழுகினார் நேமியம் படையுடைத் தரும மூர்த்தி
    அமரர்கோன் இளவலாய் ஆங்கவன் பின்செலும் அமைதி யேபோல்.

    33

    1707

    ஆயதோர் காலையின் முசுமுகத் திறையவன் ஆடல் வேற்கை
    நாயகன் பொற்பதம் வந்தியா நிற்பநல் லருள்பு ரிந்தே
    பாயபொன் சுடர்மணித் தோகையம் புரவியும் படைக ளாகும்
    மாயிரும் பூதருந் தானும்அந் நிலைதனில் மறைத லுற்றான்.

    34

    1707

    வேறு
    மறைந்தனன் குமரன் ஏக மன்னவன் மகிழ்ச்சி கொண்டு
    சிறந்திடு கருவூர் என்னுந் திருநகர் அரசின் மேவி
    அறந்தரு மாட வீதி அளப்பில புரிவித் தாங்கே
    நிறைந்திடு வீரர் தம்மை நிலைபெற இருத்தி னானே.

    35

    1709

    ஆயவர் தங்கட் கெல்லாம் அரும்பெறல் ஆக்க முள்ள
    தேயமுங் கரிதேர் வாசித் திரள்களும் வரிசை முற்றுந்
    தூயபல் சனங்க ளாகுந் தொகுதியும் உதவித் தண்ட
    நாயக முதல்வ ராக நல்கினன் ஞால மன்னன்.

    36

    1710

    அன்னதோர் காலந் தன்னில் அரம்பையர் அவனி யாளும்
    மன்னவர் தம்பால் தோன்றி வளர்தலும் வாகை மொய்ம்பின்
    முன்னவன் முதலோர்க் கெல்லாம் முசுகுந்த வேந்தன் அந்தக்
    கன்னியர் தம்மைக் கூவிக் கடிமணம் இயற்று வித்தான்.

    37

    (30. சூர்குலம் - சூரபன்மனுடைய குலம்.
    பானுவின் வழிவரு சிறு மகன் - சூரியகுலத்தில் தோன்றிய முசுகுந்தன்.
    31. ஞான நாயகன் - முருகக் கடவுள். 33. மானவர் - வீரர்.
    தமர் - நண்பர். அமரர்கோன் இளவல் - உபேந்திரன்.
    35. வீரர்தம்மை - நவவீரர் ஆதியரை.
    37. வாகை மொய்ம்பின் முன்னவன் - வீரவாகுதேவன்.)

    1711

    அந்தமில் வன்மை சான்ற ஆடலம் புயத்தோன் புட்ப
    கந்தியென் றுரைபெற் றுள்ள கன்னிகை தன்னை வேட்டுச்
    சிந்தையின் மகிழ்வால் சேர்ந்து சித்திர வல்லி யென்னும்
    பைந்தொடி தன்னை அன்பால் பயந்தனன் பதும மின்போல்.

    38

    1712

    அத்தகு பொழுதில் பன்னை அனகனே சனகன் என்னும்
    புத்திரர் தம்மை நல்கிப் புவனியாள் முசுகுந் தற்குச்
    சித்திர வல்லி யென்னுஞ் சீர்கெழு புதல்வி தன்னை
    மெய்த்தகு வதுவை நீரால் விதிமுறை வழாமல் ஈந்தான்.

    39

    1713

    ஏனைய வீரர் தாமும் இயல்புளி வழாமல் வேட்ட
    தேனிவர் குழலா ரோடுஞ் சிறந்தஇல் வாழ்க்கை போற்றிப்
    பானலங் குதலைச் செவ்வாய்ப் பாலரை நீல வேற்கண்
    மானனை யாரை நல்கி மனுகுலத் தொன்றி உற்றார்.

    40

    1714

    சித்திர வல்லி யென்னுஞ் சீருடைச் செல்வி ஆங்கோர்
    தத்தையை வளர்த்த லோடுந் தண்டகத் தருமன் தேவி
    அத்தனிக் கிளியை வெ�க ஆங்கவன் தூதர் போந்து
    கைத்தலத் ததனைப் பற்றிக் கடிதினில் கொடுபோய் ஈந்தார்.

    41

    1715

    அவ்வழி கிள்ளை காணாள் ஆயிழை அயர்த லோடும்
    எவ்வழி போயிற் றோவென் றிறையவன் உலகின் நாடி
    மைவழி கின்ற மேனி மறலிதன் துணைவி யானாள்
    கைவழி அமருந் தன்மை கதுமென உணர்ந்தான் அன்றே.

    42

    1716

    பூதலம் புரந்த செங்கோல் புரவலன் வீர மொய்ம்பன்
    ஆதியர் தம்மைக் கூவி அங்ஙனந் தூண்ட அன்னோர்
    ஏதமில் கரிதேர் வாசி எல்லையின் மறவர் சுற்ற
    மேதியங் கடவுள் மூதூர் விரைந்துபோய் வளைந்து கொண்டார்.

    43

    1717

    தன்னகர் வளைத லோடுந் தருமன்வந் தேற்ற காலை
    அன்னவ னொடுபோர் செய்தே அடுமுரண் தொலைச்சி யம்பொன்
    வன்னமென் கிள்ளை தன்னை வாங்கினர் மீண்டு தங்கண்
    மின்னுள மகிழ நல்கி வேந்தற்கு விசயஞ் செய்தார்.

    44

    1718

    சித்திர வல்லி பின்னர்ச் சீர்கெழு சூல்கொண் டுற்று
    மெய்த்தகு பலங்காய் வேண்டிய வேண்டினள் வினவ லோடு
    முத்தணி அலங்கல் திண்டோள் முசுகுந்த னதுகொண் டேக
    அத்திரு மலைநன்னாட்டுக் களப்பிலோர் தம்மை உய்த்தான்.

    45

    1719

    மஞ்சுசூழ் மலைநா டுள்ளார் மன்னவர் மன்னன் ஆணைக்
    கஞ்சலர் இகழ்த லோடும் ஆடலம் புயனு மேனைச்
    செஞ்சிலை வீரர் தாமுஞ் சென்றனர் அந்நாட் டுள்ள
    வெஞ்சுர மீரொன் பானும் வென்றொரு பகலின் மீண்டார்.

    46

    (38. பதுமமின்போல் - திருமகளைப் போல.
    41. தந்தை - கிளி. தருமன் தேவி - எமனுடைய மனைவி.
    42. மை - கருமை. மறலி - எமன். 43. மேதி - எருமை.
    மேதியங்கடவுள் மூதூர் - எமலோகம். 45. சூல் - கருப்பம்.
    பலங்காய் - பழங்களையும் காய்களையும்.
    46. சுரம் ஈர் ஒன்பான் - பதினெண் சுரங்கள். சுரம் - ஊர்.)

    1720


    பூண்டிடு கழற்கால் வீரர் பொற்புறு புதல்வி யானாள்
    வேண்டிய தீய பைங்காய் வியத்தக நல்கிப் பின்னர்
    ஈண்டுள தரணி யெல்லாம் ஏகியே திறைகொண் டெங்கும்
    ஆண்டைய மன்னன் கோலும் ஆணையும் நடக்கச் செய்தார்.

    47

    1721

    கருமுதிர் கின்ற காமர் கற்பக வல்லி யன்னாள்
    எரிகிளர் அங்கி வன்மன் என்பதோர் குமரன் தன்னை
    அரியதோர் தவத்தின் சீரால் அளித்தனள் அதனைக் கண்டு
    பெரிதுள மகிழ்ந்து மன்னன் பேரர சாட்சி செய்தான்.

    48

    1722

    வேறு
    அன்ன காலையில் வலாசுரன் என்பதோ ரவுணன்
    பன்னெ டும்பெருஞ் சேனையுந் தானுமாய்ப் படர்ந்து
    பொன்னி னாட்டினைச் சுற்றியே அடர்த்தலும் புலவோர்
    மன்னர் மன்னவன் அவனுடன் சிலபகல் மலைந்தான்.

    49

    1723

    நிருதர் போற்றிய வலாசுரன் தன்னொடு சேர்ந்து
    பொருது வென்றிலன் ஆதலால் பூதலம் புரக்குங்
    குருதி வேற்படை முசுகுந்த மன்னனைக் கூவி
    வருதி யென்றொரு தூதனை விடுத்தனன் மகவான்.

    50

    1724

    ஏய தூதுவன் இருநிலம் புக்கனன் இமையோர்
    நாய கன்பணி உரைத்தலும் நன்றென வினவி
    மாயி ருந்திறல் வீரர்தம் படையொடும் வான்மேற்
    போயி னான்முசு குந்தனென் றுரைபெறும் புகழோன்.

    51

    1725

    போன மன்னவன் புரந்தரன் பொன்னடி வணங்கித்
    தானை விண்ணவர்க் கதிபனாந் தலைமையைத் தாங்கி
    மானி னங்கள்மேல் மடங்கல்சென் றென்னவல் அவுணர்
    சேனை யங்கடல் யாவையும் இமைப்பினில் செறுத்தான்.

    52

    1726

    சுற்று நிற்புறும் அவுணராஞ் சூழ்பெரும் பௌவம்
    வற்று கின்றுழி வலாசுரன் தன்னொடு மகவான்
    செற்ற நீரொடு சிலபகல் நின்றுபோர் செய்து
    கொற்ற மார்குலி சத்தினால் அவனுயிர் குடித்தான்.

    53

    1727

    மன்னு தொல்புகழ் வலனுயிர் கோறலால் வலாரி
    என்ன வோர்பெயர் பெற்றனன் வாகையும் எய்திக்
    கொன்னு னைப்படை முசுகுந்த வேந்தனைக் கொண்டு
    பொன்ன கர்த்திருக் கோயிலில் புரந்தரன் புகுந்தான்.

    54

    1728

    காய்ந்த மாற்றலர் தம்வலி கடந்தெனைக் ககன
    வேந்த னாக்கினை வீரமும் மேதகு புகழும்
    ஈந்தெ னக்குநற் றுணைவனு மாயினை இதனால்
    ஆந்த ரங்கமாஞ் சுற்றம்நீ அல்லையோ வென்றான்.

    55

    (47. தீய பைங்காய் - இனிய பலாப்பழம்.
    49. பொன்னின் நாடு - சுவர்க்கம். 53. குலிசம் - வச்சிராயுதம்.
    55. ஆந்தரங்கம் - அந்தரங்கம்; நெருங்கிய நண்பு.)

    1

    1729

    என்று மன்னனை நோக்கியே முகமன்கள் இயம்பிக்
    குன்று போலுயர் தன்பெருங் கோயிலுட் கொடுபோய்
    மன்றல் மாண்புன லாடியே மணிக்கலை புனைந்து
    சென்று மால்தொழுந் தேவனைப் பூசனை செய்தான்.

    56

    1730

    எயிலை யங்கெரி யூட்டிய கண்ணுதல் இமைய
    மயிலும் மைந்தலும் ஒருபுடை மகிழ்வுடன் மேவக்
    கயிலை யின்கணே அமர்தல்போல் இருத்தலுங் கண்டான்
    பயிலும் அன்புடை மன்னவன் பரவச மானான்.

    57

    1731

    ஆடி னான்தொழு தேத்தினான் அடிகளை முடிமேற்
    சூடி னான்உள முருகினான் துள்ளினான் சுருதி
    பாடி னான்கரங் கொட்டினான் பகரொணா உவகை
    கூடி னான்மொழி குழறினான் பொடிப்புமெய் கொண்டான்.

    58

    1732

    சிறந்த வௌ�ளியங் கிரியின்மேற் கண்ணுதற் செல்வன்
    உறைந்த இப்பெருங் கோலத்தைக் கண்டுகண் டுளத்தே
    நிறைந்த மாமகிழ் வெய்தியே இருந்தனன் நெடுநாள்
    மறந்த னன்கொலோ பிறப்பினான் மயங்கியே என்றான்.

    59

    1733

    ஓவி லாமலே ஒருபொருள் போற்றுவான் உன்னி
    மேவு கின்றவன் அவசமாய் விழிதுயின் றதுபோல்
    மாவின் மாமுகம் வாங்கியும் மயங்கிய மன்னன்
    தேவ தேவனை நோக்கியே தொழுதிவை செப்பும்.

    60

    1734

    வேறு
    ஏகனே போற்றி யார்க்கும் ஈசனே போற்றி அம்மை
    பாகனே போற்றி மேலாம் பரஞ்சுடர் உருவே போற்றி
    மேகமார் களனே போற்றி விடைமிசை வருவாய் போற்றி
    மோகமார் தக்கன் வேள்வி முடித்திடு முதல்வா போற்றி.

    61

    1735

    அம்புயா சனன்மால் இன்னும் அளப்பருந் திறத்தாய் போற்றி
    நம்பனே போற்றி எங்கள் நாதனே போற்றி கோதில்
    செம்பொனே மணியே போற்றி சிவபெரு மானே போற்றி
    எம்பிரான் போற்றி முக்கண் இறைவனே போற்றி போற்றி.

    62

    1736

    பொங்கரா வணிக ளாகப் புனைதரு புனிதா போற்றி
    அங்கரா கத்திற் பூதி அணிந்திடும் ஆதி போற்றி
    வெங்கரா சலத்தின் வன்றோல் வியப்யும் போர்த்தாய் போற்றி
    சங்கரா பரமா போற்றி தாணுவே போற்றி போற்றி.

    63

    (56. முகமன் - உபசார வார்த்தைகள்.
    57. கண்ணுதல் இமைய மயிலும் மைந்தனும் -
    இது சோமாஸ்கந்தமூர்த்தியினைக் குறிப்பது.
    60. மாவின் மாமுகம் - குரங்கின் முகம்.
    61. மேகமார்களனே - நீலகண்டனே.
    63. பொங்கு - சீறு. அங்கராகத்தில் - பூசும் பரிமணத்திரவியத்தைப் போல.
    பூதி - விபூதி. கராசலம் - யானை.)

    64

    1737

    முன்னெனும் பொருளுக் கெல்லாம் முன்னவா போற்றி முப்பால்
    மன்னுயிர்க் குயிரே போற்றி மறைகளின் முடிவே போற்றி
    என்னைமுன் வலிந்தாட் கொண்டே இருநிலம் விடுத்தாய் போற்றி
    நின்னுருக் காட்டி யென்னை நினைப்பித்த நித்தா போற்றி.

    1738

    எவ்வெவர் தம்மை யேனும் யாவரே எனினும் போற்றின்
    அவ்வவ ரிடமாகக் கொண்டே அவர்க்கருள் தருவாய் போற்றி
    மெய்வரு தௌ�வில் உன்னை வௌ�ப்பட உணர்ந்து ளோர்க்குத்
    தெய்வத போக முத்தி சிறப்பொடு தருவாய் போற்றி.

    65

    1739

    அம்புய மலர்மேல் அண்ணல் அச்சுத னாதி வானோர்
    தம்பதம் எமக்கு நல்குந் தற்பரா என்றே யாரும்
    நம்புறு பொருட்டால் வேதம் நவின்றிட அடைந்தோர்க் கெல்லா
    உம்பதம் பதமும் ஈயும் உலகுடை முதல்வா போற்றி.

    66

    1740

    உறைதரும் அமரர் யாரும் உழையராய்ச் சூழ நாப்பண்
    மறைபயில் பெரியோ ருற்று வழிபட இருந்தாய் போற்றி
    அறுவகை ஐந்தும் ஆறு மாகிய வரைப்பின் மேலாம்
    இறைவனே போற்றி என்பிழை பொறுத்தி என்றான்.

    67

    1741

    இவைமுசு குந்தன் கூற எம்பிரான் கருணை செய்தே
    இவன்முகந் தன்னை நோக்கி ஆழியான் அளப்பில் காலம்
    உவகையால் வழிபா டாற்றி உம்பர்கோன் இடத்தில் வைத்தான்
    புவிதனிற் கொடுபோய் நம்மைப் பூசனை புரிதி என்றான்.

    68

    1742

    என்றிவை முக்கண் மூர்த்தி இந்திரன் கேளா வண்ணம்
    நன்றருள் புரி லோடும் நனிபெரு மகிழ்ச்சி யெய்தி
    உன்றிரு வுளமீ தாயின் உய்த்தனன் அடியேன் என்னா
    வென்றிகொள் மன்னர் மன்னன் விம்மித னாகி யுற்றான்.

    69

    1743

    இந்திரன் அமலன் பசை இவ்வழி முடித்த பின்னர்ச்
    செந்தழல் ஓம்பி ஏனைச் செய்கடன் புரிந்து வேறோர்
    மந்திரம் புகுந்து தேனு வருகென வல்லை கூவி
    வெந்திறல் மன்னற் கந்நாள் விருந்துசெய் வித்தான் அன்றே.

    70

    1744

    விருந்துசெய் வித்த பின்னர் விசித்திரக் கலையும் பூணுந்
    தெரிந்திடு மணியும் முத்தும் தெய்வதப் படையும் மற்றும்
    பரிந்துடன் உதவி இன்னும் வேண்டுவ பகர்தி என்னப்
    புரந்தரன் அருள லோடும் புரவலன் இதனைச் சொல்வான்.

    71

    1745

    ஏவருந் தெரிதல் தேற்றா திருந்திடும் இமையா முக்கட்
    பாவையோர் பாகன் தன்னைப் பரிவொடு கொடுத்தி ஐய
    பூவுல கதனின் யான்போய்ப் பூசனை புரிதற் கென்னத்
    தேவர்கள் முதல்வன் கேளா இனையன செப்ப லுற்றான்.

    72

    (64. முப்பால் மன்னுயிர் - விஞ்ஞானகலர்,
    பிரளயாகலர், சகலர் என்னும் மூவகை ஆன்மாக்கள்.
    67. அறுவகை ஐந்தும் ஆறும் - முப்பத்தாறு தத்துவங்கள்.
    68. ஆழியான் - திருமால்.
    70. செந்தழல் ஓம்பி - அக்கினி காரியம் செய்து.
    ஏனைச் செய்கடன் - சண்டேசுவரர் பூசை முதலியன.
    மந்திரம் - மாளிகை. தேனு - காமதேனு.
    72. இமையாமுக்கண் பாவையோர் பாகன் தன்னை - இங்குச் சோமாஸ்கந்தமூர்த்தி.)

    73

    1746

    உந்தியால் உலகைத் தந்த ஒருதனி முதல்வன் முன்னம்
    மைந்தர்தாம் இன்மை யாலே மன்னுயிர்த் தொகுதிக் கெல்லாந்
    தந்தையாய் இருந்த தங்கோன் சரணமே அரண மென்னாச்
    சிந்தைசெய் தூழி காலஞ் செய்தவம் இயற்றி யிட்டான்.

    1747

    தவமுழந் திருந்த காலைச் சாரதப் புணரி சுற்றக்
    கவுரியுந் தானும் ஐயன் கரணையால் வந்து தோன்றப்
    புவிதனை அளந்த மாயோன் பொள்ளென எழுந்து போற்றிச்
    சிவனடி வணக்கஞ் செய்து செங்கையால் தொழுது நின்றான்.

    74

    1748

    வேறு
    மாதொரு பாகன் மகிழ்ந்தருள் செய்து
    நீதவ மாற்றி நெடும்பகல் நின்றாய்
    ஏதிவண் வேண்டும் இயம்புதி யென்னச்
    சீதரன் இன்னன செப்புத லுற்றான்.

    75

    1749

    அந்தமில் ஆயுவும் ஆருயிர் காப்புஞ்
    செந்திரு வோடுறை செல்வமும் ஈந்தாய்
    மைந்தனி லாமல் வருந்தினன் எந்தாய்
    தந்தரு ளாய்தமி யேற்கினி என்றான்.

    76

    1750

    குன்றிஆஆ ஆற்றிடு கோன்இவை செப்ப
    நன்றென வேநகை யாநவை இல்லா
    ஒன்றொரு செம்மல் உனக்குத வுற்றாம்
    என்றருள் செய்தனன் யாரினும் மேலோன்.

    77

    1751

    கழையிசை போற்று கருங்கடல் வண்ணன்
    முழுதுல கீன்றிடு முற்றிழை பாதந்
    தொழுதிலன் நின்று துதித்திலன் அன்பால்
    வழிபடு நீரின் வணங்கிலன் மாதோ.

    78

    1752

    வேறு
    முறையி னால்தனக் கிளையவள் என்றே
    முன்னி னன்கொலோ மூலமும் நடுவும்
    இறுதி யும்மிலாப் பரமனுக் கெம்போல்
    இவளு மோர்சத்தி யெனநினைந் தனனோ
    மறுவி லாமலை மகளென உளத்தே
    மதித்த னன்கொலோ மாயவன் கருத்தை
    அறிகி லேம்உமை யம்மையாற் சிறிதும்
    அன்பு செய்திலன் முன்புசெய் வினையால்.

    79

    (73. உந்தியால் உலகைத்தந்த ஒருதனி முதல்வன் - திருமால்.
    75. நெடும்பகல் - அளவற்ற காலம். சீதரன் - திருமால்.
    77. குன்றினை ஆற்றிடு - கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்திய.
    செம்மல் - ஆண்மகன்.
    78. கழை - வேய்ங்குழல். உலகீன்றிடு முற்றிழை - உமாதேவியார்.
    79. நினைந்தனனோ, ஓ: ஐயவினா.)

    80

    1753

    ஆன்ற ஐம்புலன் ஒருவழிப் படுத்தி
    ஆர்வம் வேரறுத் தையமொன் றின்றி
    ஊன்தி ரிந்திடி னுந்நிலை திரியா
    உண்மை யேபிடித் துலங்கண் முழுதும்
    ஈன்ற வெம்பெரு மாட்டியை நீக்கி
    எம்பி ரானையே வழிபடும் இயற்கை
    மூன்று தாளுடை ஒருவனுக் கல்லால்
    ஏனை யோர்களால் முடியுமோ முடியா.

    1754

    அன்ன காலையில் எம்பெரு மாட்டி
    ஆழி யம்படை அண்ணலை நோக்கி
    என்னை நீயிவண் அவமதித் தனையால்
    எம்பி ராற்குநீ அன்புளன் அன்றால்
    முன்ன நீபெறு மதலையும் ஐயன்
    முனிவின் ஒல்லையின் முடிந்திட என்னாப்
    பன்ன ருங்கொடு மொழிதனை இயம்பிப்
    பராப ரன்தனை நோக்கியே பகர்வான்.

    81

    1755

    ஆன தோர்பரப் பிரமமும் யானே
    அல்ல தில்லையென் றறிவிலாப் பேதை
    மானு டப்பெரும் பசுக்களை யெல்லாம்
    மருட்டி யேதிரி வஞ்சகன் முன்னம்
    ஞான நீரினார் அறிவினால் அன்றி
    நணுகு றாதநீ அணுகிநிற் பதுவோ
    ஊனு லாவிய உயிரினுக் குயிராம்
    ஒருவ செல்லுதும் வருகென உரைத்தாள்.

    82

    1756

    இன்ன வாறுரைத் தெம்பெரு மாட்டி
    எம்பி ரான்தனைக் கொண்டுபோ மளவில்
    அன்ன தன்மைகண் டச்சுதக் கடவுள்
    அலக்கண் எய்தியே அச்சமுற் றயர்ந்து
    தன்னு ளந்தடு மாறிமெய் பனித்துத்
    தளர்ந்து நேமயந் தண்கரைக் கணித்தாய்
    மன்னு பல்பொருட் கலந்தனைக் கவிழ்த்த
    வணிக னாமென வருந்தினன் மாதோ.

    83

    1757

    அம்மை தன்பொருட் டால்இடை யூறிங்
    கடைந்த தென்றுமால் அகந்தனில் உன்னி
    எம்மை யாளுடை இறையவன் தனையும்
    இறைவி தன்னையும் இளங்கும ரனையும்
    மெய்மை சேர்வடி வாகஆங் கமைத்து
    வேத வாகம விதிமுறை வழாமற்
    பொய்மை தீர்ந்திடும் அன்பினாற் பூசை
    புரிந்து பின்னரும் வருந்தியே நோற்றான்.

    84

    (80. மூன்றுதாளுடை ஒருவன் - பிருங்கிமுனிவன்.
    81. ஐயன் - இறைவன். முனிவின் - கோபத்தால்.
    84. இறையவன் தனையும் இறைவி தன்னையும் இளங்குமரனையும்
    மெய்மை சேர்வடிவு - இது சோமாஸ்கந்தமூர்த்தி உருவம்.)

    1758


    வேறு
    அனைய தன்மையால் ஆண்டுபல் லாயிர கோடி
    புனித னாகியே நோற்றனன் அதுகண்டு புழுங்கி
    முனிவ ராயுளோர் இன்னமும் வருகிலன் முதல்வன்
    இனிய ருந்தவஞ் செய்பவர் இல்லையால் என்றார்.

    85

    1759

    அந்த வெல்லையில் சத்தியுஞ் சிவமுமாய் அனைத்தும்
    வந்தி டும்பரி சளித்தவர் இருவரும் வரலுஞ்
    சிந்தை யின்மகிழ் வெய்தியே அம்மைசே வடியின்
    முந்தி யோடியே வணங்கினன் முழுதொருங் குணர்ந்தோன்.

    86

    1760

    இறைவி தாள்மலர் பணிந்தபின் எம்பிரான் பதமும்
    முறையி னாற்பணிந் திருவர்தஞ் சீர்த்திகள் முழுதும்
    மறையின் வாய்மையால் பன்முறை யால்வழுத் துதலும்
    நிறையும் நல்லருள் புரிந்தனன் தனக்குநே ரிலாதான்.

    87

    1761

    மாது நீயிவற் கருள்புரி யென்னஅம் மாது
    சீத ரன்தனை நோக்கியே நம்பெருந் தேவன்
    ஓதும் வாய்மையும் யான்முனிந் துரைத்திடும் உரையும்
    பேதி யாவினி யாவரே அன்னவை பெயர்ப்பார்.

    88

    1762

    எங்கள் நாயகன் விழிபொழி அங்கியால் இறந்து
    துங்க மேன்மைபோய்ப் பின்முறை முன்புபோல் தோன்றி
    உங்குன் மாமகன் இருக்கவென் றுரைத்தனள் உமையாள்
    அங்க தாகவென் றருளியே மறைந்தனன் ஐயன்.

    89

    1763

    அம்மை தன்னுடன் எம்பிரான் மறைதலும் அண்ணல்
    விம்மி தத்தொடு தன்பதி புகுந்துவீற் றிருப்ப
    மைம்ம லிந்திடு மெய்யுடைக் காமவேள் வாரா
    இம்மெ னக்கடி துதித்தனன் அவன்மனத் திடையே.

    90

    1764

    வேறு
    வந்திடுங் காமவேள் வடிவுடைக் காளையாய்க்
    கந்தமார் பூங்கணை கன்னல்விற் கைகொடே
    மைந்தரா னோர்களும் மாதருங் காமமேற்
    புந்திவைத் திடும்வகை போர்புரிந் துலவினான்.

    91

    1765

    தண்ணிழற் குடையெனச் சசிபடைத் துடையவன்
    எண்ணமற் றொருபகல் யார்க்குமே லாகிய
    கண்ணுதற் பகவன்மேற் கணைமலர் சிதறியே
    துண்ணெனத் துகளதாய்த் தொலைதலுற் றானரோ.

    92

    1766

    பூழியாய் மாண்டுளான் பொருவிலா நல்லருள்
    ஆழியான் ஆணையால் அருவொடே உருவமாய்
    வாழிசேர் தொல்லைநாள் வளனொடு மன்னினான்
    சூழிமால் கிரிதருந் தோகைசொல் தவறுமோ.

    93

    (90. அவன் மனத்திடை - திருமால் மனத்தினின்றும்.
    91. பூங்கணை - மலர்க்கணை. கன்னல் வில் - கரும்புவில்.
    92. சசி - சந்திரன். 93. நல்லருள் ஆழியான் - சிவபெருமான் -
    சிவபெருமான். சூழிமால்கிரி - சிகரங்களையுடைய பெரிய இமயமலை.)

    1767

    நிற்பமற் றித்திறம் நேமியான் முன்னைநாள்
    அற்புடன் வழிபடும் அமலையைக் குமரனைத்
    தற்பரக் கடவுளைத் தனதுமார் பிற்கொடே
    பற்பகல் பணியின்மேல் பாற்கடல் துஞ்சினான்.

    94

    1768

    நீடவே துயிலுமால் நெட்டுயிர்ப் பசைவினால்
    பீடுசேர் நாகணைப் பேருயிர்ப் பசைவினால்
    பாடுசூழ் தெண்டிரைப் பாற்கடல் அசைவினால்
    ஆடியே வைகினார் அலகிலா ஆடலார்.

    95

    1769

    அன்னதோர் அமைதியில் அசுரசே னைக்கெலாம்
    மன்னனாய் உற்றுளான் வாற்கலி என்பவன்
    என்னைவா னவரொடும் ஈடழித் தமர்தனில்
    முன்னைநாள் வென்றனன் முடிவிலா மொய்ம்பினால்.

    96

    1770

    அத்திறங் கண்டுநான் அமரரோ டேகியே
    பத்தநூற் றுத்தலைப் பாந்தள்மேல் துயில்கொளுஞ்
    சுத்தனைப் போற்றியே தொழுதுவாற் கலியினால்
    எய்த்தனம் காத்தியால் எம்மைநீ என்றனன்.

    97

    1771

    நஞ்சுபில் கெயிறுடை நாகமாம் பள்ளிமேல்
    துஞ்சும்வா லறிவினான் துயிலைவிட் டேயெழீஇ
    அஞ்சலீர் உங்களுக் கல்லலே ஆற்றிய
    வஞ்சனா ருயிர்தனை வல்லையுண் டிடுதுமால்.

    98

    1772

    என்றுதன் கையமைத் தேழொடே ழுலகமுண்
    டன்றொரா லிலையின்மேல் அறிதுயில் மேவிய
    மன்றலந் தண்டுழாய் மாலைசூழ் மவுலியான்
    ஒன்றுபே ரன்பினால் ஒன்றெனக் குரைசெய்தான்.

    99

    1773

    பார்த்தியா லெனதெனும் பைம்பொன்மார் பத்திடை
    மூர்த்தியாய் வைகிய முதல்வியைக் குமரனைத்
    தீர்த்தனைப் பூசனை செய்துநின் தீவினை
    ஆர்த்திநீங் குதியெனா ஆதரத் தருளினான்.

    100

    1774

    அன்னவா றருள்செய்தே அனையர்மூ வோரையும்
    பொன்னுலா மார்பினும் பொள்ளென வாங்கியே
    என்னதா கியகரத் தீந்தனன் ஈதலுஞ்
    சென்னிமேல் தாங்கினன் மாதவத் திண்மையால்.

    101

    (95. பாடு - பக்கங்களில்.
    98. வாலறிவினான் - தூயவறிவினையுடைய திருமால்.
    100. தீர்த்தன - பரிசுத்தன். தீவினையார்த்தி - தீவினையாலாகும் துன்பத்தை.
    101. அனையர் மூவோரையும் - சோமாஸ்கந்தமூர்த்தியை.)

    1775

    வேறு
    அங்கதற்பின் முறையாக அச்சுதன்பாற் கடல்அகன்று
    நங்குழுவெ லாஞ்சூழ நாவலந்தீ வகத்தணுகி
    எங்கள்பிரான் அருள்நடஞ்செய் எல்லையிலாத் தில்லைதனில்
    துங்கமணி மன்றுதனைத் தொழுதுபர வசமானான்.

    102

    1776

    செல்லரிய பரவசமாய்த் திருமுன்னே வீழ்ந்திறைஞ்சித்
    தொல்லைதனில் அறிவிழந்து துணைவிழிகள் புனல்பெருகப்
    பல்லுயிர்க்கும் உயிராகும் பரமசிவ பூரணத்தின்
    எல்லைதனில் புக்கழுந்தி எழுந்திலன்ஈ ரிருதிங்கள்.

    103

    1777

    இத்திறத்தால் அவசமதாய் ஈறுமுதல் நடுவுமிலா
    அத்தனது திருவடிக்கீழ் அடங்கியே ஆணையினால்
    மெய்த்துரியங் கடந்தவுயிர் மீண்டுசாக் கிரத்தடையத்
    தத்துவமெய் யுணர்ச்சியெலாந் தலைத்தலைவந் தீண்டினவால்.

    104

    1778

    கண்டுயில்வான் எழுந்ததெனக் கதுமெனமா யோன்எழுந்து
    புண்டரிகப் பதந்தொழுது போற்றிசெய்து புறத்தேகித்
    தெண்டிரைசூழ் புவிக்கரசு செலுதியவாற் கலியுடனே
    மண்டுபெருஞ் சமர்செய்து வல்லைதனில் உயிர்உண்டான்.

    105

    1779

    வாற்கலிதன் உயிருண்டு வாகைபுனைந் தேதிருமால்
    சீர்க்கருணை நெறியதனால் தேருக்கும் என்றனக்கும்
    ஏற்கும்வகை விடையுதவி இம்மெனவே மறைந்தேகிப்
    பாற்கடலில் பணியணைமேற் பண்டுபோல் கண்வளர்ந்தான்.

    106

    1780

    தேவர்குழாத் தொடுமீண்டு சிறந்திடும்இத் துறக்கத்தில்
    ஆவலுடன் வந்தேயான் அன்றுமுதல் இன்றளவும்
    பூவைநிறங் கொண்டபுத்தேள் பொன்மார்பில் வீற்றிருந்த
    மூவரையும் அருச்சித்தேன் முதுமறைநூல் விதிமுறையால்.

    107

    1781

    மன்னர்க்கு மன்னவநீ வழிபடுதல் காரணமாத்
    தன்னொப்பி லாதாரைத் தருகென்றாய் தந்திடுவ
    தென்னிச்சை யன்றேமால் இசைவுனக்குண் டாமாகில்
    பின்னைத்தந் திடுவனெனப் பெருந்தகையோன் பேசினனால்.

    108

    1782

    பேசுதலும் முசுகுந்தன் பெயர்ந்துபாற் கடலிடைபோய்க்
    கேசவனை அடிவணங்கிக் கிட்டிநின்று வேண்டுதலும்
    வாசவன்தன் இடந்தன்னில் வைத்திடும்நம் முயிர்க்குயிரைப்
    பூசனைசெய் கொடுபோந்து பூதலத்தி னிடையென்றான்.

    109

    1783

    நன்றெனவே இசைவுகொண்டு நாரணனை விடைகொண்டு
    சென்றுபுரந் தரற்குரைப்பச் சிந்தைதளர்ந் தேயிரங்கி
    அன்றுதனை ஈன்றதனிப் புனிற்றாவை அகலுவதோர்
    கன்றெனவே நனிபுலம்பி ஒருசூழ்ச்சி கருதினனால்.

    110

    1784

    தேவர்பிரான் அவ்வளவில் தெய்வதக்கம் மியன்செயலான்
    மூவடியும் மூவிரண்டு முறைவேறு வேறாக
    ஏவர்களும் வியப்பெய்த இமைப்பின்முனம் அமைப்பித்துக்
    காவலன்கை தனிற்கொடுப்பக் கைதவமென் றறிந்தனனே.

    111

    (102. தில்லை - சிதம்பரம். துங்கமணிமன்று - சிற்சபை.
    103. ஈரிரு திங்கள் - நான்கு மாதம். 106. வாகை - வெற்றிமாலை.
    107. பூவை - காயாம்பூ. மூவர் - சோமாஸ்கந்தமூர்த்தியை.
    111. மூவிரண்டுமுறை - ஆறு முறை. அமைப்பித்து - உண்டாக்கி.
    கைதவம் - வஞ்சனை.)

    1

    1785

    ஆதியில்விண் ணவர்தச்சன் அமைத்திடுமூ விருவடிவும்
    பூதலமன் னவன்வாங்கிப் புதல்வனொடுங் கவுரியொடும்
    வீதிவிடங் கப்பெரமான் மேவியதாம் எனஇருந்தும்
    ஏதுமுரை யாநெறியால் இவரவரன் றெனமொழிந்தான்.

    112

    1786

    துங்கமுறு முசுகுந்தன் சொல்வினவிச் சுடராழிப்
    புங்கவன்தன் மார்பமெனும் பொன்னூசல் ஆட்டுகந்து
    மங்கையொடுங் குமரனொடும் மகிழச்சியொடும் வீற்றிருந்த
    எங்கள்பிரான் தனைக்கொடுவந் திவராமோ என்றனனே.

    113

    1787

    இந்திரன்இவ் வாறுரைப்ப இமையாமுக் கட்பகவன்
    முந்துதிறல் முசுகுந்தன் முகநோக்கி நின்பாலில்
    வந்தனமால் எம்மையினி மாநிலத்திற் கொடுபோந்து
    புந்திமகிழ் வாய்பூசை புரிவாயென் றருள்செய்தான்.

    114

    1788

    ஊழிநா யகன்மகவான் உணராமே இ�துரைப்பக்
    கேழிலாப் பெருவகை கிடைத்தினிது பணிந்தேத்தி
    ஆழியான் பூசனைகொண் டமர்ந்தவரா மாமிவரை
    வாழியாய் தருகவென வாங்கினன்மன் னவர்மன்னன்.

    115

    1789

    வாங்கியபின் இமையவர்கோன் மன்னவனை முகநோக்கி
    ஈங்கிவரை அறுவரொடும் இருநிலத்தி னிடைகொடுபோய்ப்
    பூங்கமலா லயமுதலாப் புகல்கின்ற தலந்தன்னில்
    தீங்கறவே வழிபாடு செய்தியென விடைகொடுத்தான்.

    116

    1790

    நன்றெனவே விடைகொண்டு நானிலத்தி னிடையிழிந்து
    தென்றிசையா ரூர்தன்னில் சிவனுறைபூங் கோயில்புக்கு
    மன்றல்கமழ் தண்டுளவோன் வழிபடவீற் றிருந்தோரை
    வென்றியரி யணைமீதில் விதிமுறையால் தாபித்தான்.

    117

    1791

    கடனாகை நள்ளாறு காறாயல் கோளரியூர்
    மடனாக முத்தீனும் வாய்மியூர் மறைக்கானம்
    உடனாகுந் தலம்ஆறில் ஓராறு வடிவுகொண்ட
    படநாக மதிவேணிப் பரஞ்சுடரை அமர்வித்தான்.

    118

    1792

    இப்படியே ஒருபகலில் எழுவரையுந் தாபித்து
    மெய்ப்பரிவில் வழிபாடு விதிமுறையால் புரிவித்துச்
    செப்பரிய புகழாரூர்த் தேவனுக்கு விழாச்செய்வான்
    முப்புவனங் களும்போற்றும் முசுகுந்தன் முன்னினனால்.

    119

    (112. இவர் அவர் அன்றுத - இவர் நீர் பூசித்த மூர்த்தி அல்ல.
    113. இவராமோ - இவரோ அவர். 14. திறன் - வெற்றியினையுடைய.
    115. ஊழிநாயகன் - சிவபெருமான். கேழிலா - ஒப்பற்ற.
    வாழியாய் - வாழ்வினையுடையாய்.
    116. இவரை அறுவரொடும் - இப்பெருமானை இந்த ஆறுமூர்த்திகளுடன.
    கமலாலயம் - திருவாரூர்.
    117. பூங்கோயில் - இது திருவாரூரிலுள்ள சிவாலயத்தின் பெயர்.
    118. நாகை - நாகப்பட்டினம். நள்ளாறு - திருநள்ளாறு.
    காறாயில் - திருக்காறாயில். கோளரியூர் - திருக்கோளிலி.
    வாய்மியூர் - திருவாய்மூர். மறைக்கானம் - திருமறைக்காடு.
    119. ஒரு பகலில் - ஒரே நாளில்.)

    1

    1793

    அந்நாளில் இமையவர்கோன் அருச்சனைசெய் பரம்பொருளைக்
    கொன்னார்வேல் மன்னவன்கைக் கொடுத்ததொரு கொடும்பவத்தால்
    பொன்னாட்டின் திருவிழந்து புலையுருவந் தனைத்தாங்கிக்
    கைந்நாக மிசையூர்ந்து கமலையெனும் பதியடைந்தான்.

    120

    1794

    ஆரூரின் மேவியபின் அமலன்விழாப் போற்றுதற்குப்
    பாரூருந் திரையூரும் பலவூரும் வருகவென்றே
    வாரூரும் முரசெறிந்து மதக்களிற்றின் மிசையேறித்
    தேரூருஞ் செம்பொன்மணித் திருவீதிப் புடைசூழ்ந்தான்.

    121

    1795

    பூங்கமலா புரிவாழும் புங்கவனார்க் கன்னதற்பின்
    ஓங்குதிரு விழாநடத்தி ஒழிந்தபதிப் பண்ணவர்க்கும்
    ஆங்கதுபோல் நிகழவித்தே அந்தமில்சீர் முசுகுந்தன்
    பாங்கில்வரும் வீரருடன் பாருலகம் புரந்திருந்தான்.

    122

    1796

    ஆண்டுபல அப்பதியில் அமலன்விழாச் சேவித்துக்
    காண்டகைய தவம்புரிந்து கடைஞர்வடி வினைநீங்கித்
    தூண்டகைய தோள்மகவான் தொல்லுருவந் தனைப்பெற்று
    மீண்டுசுரர் பதிபுகுந்து விபவமுடன் வீற்றிருந்தான்.

    123

    1797

    விண்ணவர்கோன் ஏகியபின் விரவுபுகழ்க் கருவூரில்
    எண்ணரிய பலகாலம் இறையரசு செலுத்தியபின்
    மண்ணுலகம் புரக்கஅங்கி வன்மனுக்கு முடிசூட்டித்
    துண்ணெனவே நோற்றிருந்து தொல்கயிலை தனையடைந்தான்.

    124

    1798

    துங்கமிகு முசுகுந்தன் தொல்கயிலை யடைந்தபின்னர்
    எங்கள்விறல் மொய்ம்பினனும் இலக்கருடன் எண்மர்களும்
    தங்கள்சிறார் தமைவிளித்துத் தத்தமது சிறப்புநல்கி
    அங்கிவன்மன் பாலிருத்தி அரியதவம் ஆற்றினரே.

    125

    1799

    மாதவம்எண் ணிலஇயற்றி மானுடத்தன் மையைநீங்கி
    ஆதிதனில் அடலெய்தி அருள்முறையால் அனைவர்களும்
    மேதகுசீர்க் கந்தகிரி விரைந்தேகி வேற்கடவுள்
    பாதமலர் பணிந்தேத்திப் பத்திமைசெய் துற்றனரால்.

    126

    1800

    ஆகையால் அயன்அறியா அருமறைமூ லந்தெரிந்த
    ஏகநா யகன்விரதம் எவரேனும் போற்றியிடின்
    ஓகையால் நினைநதவெலாம் ஒல்லைதனில் பெற்றிடுவர்
    மாகமேல் இமையவரும் வந்தவரை வணங்குவரே.

    127

    (எழுவரையும் - ஏழு மூர்த்திகளையும் (ஏழு தலங்களில்); [திருவாரூரில் வீதிவிடங்கர் என்றும், திருநாகையில் அழகவிடங்கர் என்றும், திருநள்ளாற்றில் நகரவிடங்கர்
    என்றும், திருக்காறாயிலில் ஆதிவிடங்கர் என்றும், திருக்கோளிலியில்
    அவனிவிடங்கர் என்றும், திருவாய்மூரில் நீலவிடங்கர் என்றும்,
    திருமறைக்காட்டில் புவனிவிடங்கர் என்றும் இறைவன் பெயர் பெறுவார்.]
    120. கொன் - அச்சம். கைந்நாகம் - ஐராவதம். கமலை - திருவாரூர்.
    121. பாரூரும் திரையூரும் பலவூரும் - பெரிய நகரங்களில் உள்ளவர்களும்,
    கடற்கரை நகரங்களில் உள்ளவர்களும், பற்பல கிராமங்களில் உள்ளவர்களும்.
    பார் - பூமியை. ஊரும் - ஊர்ந்து மோதுகின்ற. திரை - கடல்.
    ஊரும் - சூழ்ந்த. பலவூரும் - பல ஊரிலுள்ளாரும் என்று கூறினும் அமையும்.
    123. கடைஞர் வடிவினை - புலையன் உருவத்தை. விபவம் - செல்வம்.
    124. அங்கிவன்மன் - இவன் முசுகுந்தன்மகன். இங்குக் கூறப்பட்ட
    முசுகுந்தன் பாகவத புராணம்முதலியவற்றில் கூறப்படும் முசுகுந்தன் அல்ல என்க.
    125. விறல் மொய்ம்பினன் - வீரவாகுதேவன்.
    127. வேதநாயகன் விரதம் - முருகக்கடவுளுக்குரிய சுக்கிரவார விரதம்,
    கார்த்திகை விரதம், சஷ்டி விரதம் ஆகிய விரதங்கள்.)

    ஆகத் திருவிருத்தம் - 1800
    -------

    24. வள்ளியம்மை திருமணப் படலம் (1801 -2067)

    1801

    வௌ�ளியங் கிரியி னோர்சார் விளங்கிய கந்த வெற்பின்
    நள்ளுறு நகரந் தன்னில் நங்கையோ டினிது மேவும்
    அள்ளிலை மேற்கை நம்பி அம்புவி எயினர் போற்றும்
    வள்ளியை வதுவை செய்த மரபினை வழாது சொல்வாம்.

    1

    1802

    வேறு
    அயன்ப டைத்திடும் அண்டத்துக் காவியாய்ப்
    பயன்ப டைத்த பழம்பதி என்பரால்
    நயன்ப டைத்திடு நற்றொண்டை நாட்டினுள்
    வியன்ப டைத்து விளங்குமேற் பாடியே.

    2

    1803

    ஆய தொல்லை அணிநகர் ஞாங்கரின்
    மீயு யர்ந்ததொர் வெற்புநிற் கின்றதால்
    பாய தெண்கடல் பாரள விட்டிடு
    மாய வன்தன் வடிவென நீண்டதே.

    3

    1804

    அரவுந் திங்களும் ஆறுமெல் லாரமுங்
    குரவுங் கொன்றையுங் கூவிள மும்மிசை
    விரவுந் தன்மையின் வெற்புவிண் ணோரெலாம்
    பரவுங் கண்ணுதற் பண்ணவன் போன்றதால்.

    4

    1805

    வாலி தாகிய வான்அரு வித்திரள்
    நீல மேக நிரையொடு தாழ்தலில்
    தோலு நூலுந் துயல்வரு மார்புடை
    நாலு மாமுகன் போலுமந் நாகமே.

    5

    1806

    குமர வேள்குற மங்கையொ டிவ்விடை
    அமரு மாலது காண்பனென் றாசையால்
    தமர வானதி தானணு குற்றிட
    நிமிரு கின்றது நீள்கிரி அன்னதே.

    6

    (1. நங்கை - தெய்வயானையம்மை. எயினர் - வேடர்.
    வள்ளி - வள்ளியம்மை. வதுவை - திருமணம்.
    2. மேற்பாடி - இ�து ஓர் ஊர். 4. ஆரம் - ஆத்தி.
    குரவு - ஒரு மரப்பூ. கூவிளம் - வில்வம்.
    5. அருவிக்கு நூலும், மேகத்திற்கு தோலும் உவமையாகும்.
    தோல் - மான்தோல். நாகம் - மலை. 6. வானதி - ஆகாயகங்கை.
    நீள்கிரி - இது மாயவனுக்கும் உவமையாம். திருமாலுக்கும் கங்கைக்கும்
    முறையே முருகன் மருமகனும் மகனும் ஆதலால், முருகன் வள்ளியுடன்
    இருத்தலை இருவரும் காண விழைவர் ஆதலின் இங்குத் திருமாலும்
    கங்கையும் பொருந்துமாறு பொருள்படுதல் காண்க.)

    1807

    வேறு
    கள்ளிறைத் திடுபூந் தண்டார்க் கடம்பணி காளை பன்னாட்
    பிள்ளைமைத தொழின்மேற் கொண்டு பெட்புடன் ஒழுகும் வண்ணம்
    வள்ளியைத தன்பால் வைத்து வள்ளிவெற் பென்னு நாமம்
    உள்ளவக் கிரியின் மேன்மை உரைத்திடும் அளவிற் றாமோ.

    7

    1808

    செய்யவெண் குன்றி வித்துஞ் சீர்திகழ் கழைவீழ் முத்தும்
    பையர வினங்கள் ஈன்ற பருமணித் தொகையும் ஈண்டிச்
    சையம தெங்குஞ் சேர்தல் தாரகா கணங்க ளெல்லாம்
    வெய்யவன் அழற்காற் றாது வீழந்தென விளங்கு கின்ற.

    8

    1809

    கானுறு தளவம் பூத்த காட்சியால் கழைக ளெல்லாந்
    தூநகை முத்த மீன்ற தோற்றத்தால் பொதும்பர் தன்னில்
    தேனமர் தொடையல் தூங்குஞ் செய்கையாற் சிலம்பின் சாரன்
    மீனமும் மதியும் பூத்த விண்ணென விளங்கிற் றம்மா.

    9

    1810

    கூட்டளி முரலும் நீலக் குண்டுநீர்ச் சுனைகள் யாண்டுங
    காட்டிய பிறங்கல் யாருங் காணொணா வள்ளல் ஈண்டே
    வேட்டுவர் சிறுமிக் காக மேவுதல் காண்ப னென்னா
    நாட்டமெய்ம் முழுதும் பெற்று நண்ணிய தன்மை போலாம்.

    10

    1811

    விண்ணுயர் பிறங்கல் மீது விரிகின்ற சுனைகள் மிக்குத்
    துண்ணென விளங்கும் பெற்றி சூரியன் முதலோர் காண
    மண்ணெனும் மடந்தை ஆங்கோர் மதலையில் வரம்பி லாத
    கண்ணடி விரைந்து வைத்த காட்சிபோன் றிருந்த மாதோ.

    11

    1812

    ஔ�ளிணர்க் கணியின் கொம்பர் உலவியே அசோகில் வாவி
    வௌ�ளிலிற் பாய்ந்து மந்திவியன்கடு வுறைப்ப மீள்வ
    வள்ளியர் இடத்துச் சென்றோர் மானவப் பண்பி லோர்பாற்
    பொள்ளென இரப்பான் புக்குப் புலம்பொடு மீண்டவா போல்.

    12

    (7. பிள்ளைமைத்தொழில் - குழந்தைகள் விளையாடும் விளையாட்டு.
    இது களவொழுக்கமாகப் பலவேடங்கள் பூண்டு முருகன் விளையாடிய
    விளையாட்டு ஆகும். 8. குன்றிவித்து - குன்றிமணி. கழை - மூங்கில்.
    சையம் - மலை. தாரகாகணங்கள் - நட்சத்திரங்கள்.
    9. தவளம் - முல்லை. பொதும்பர் - சோலை. 10. அளி - வண்டு.
    குண்டு - ஆழம். பிறங்கல் - மலை. 11. சூரியன் முதலோர் - சூரியன்
    சந்திரன் முதலியோர். மதலை - தூண். கண்ணடி - கண்ணாடி.
    12. இணர் - பூங்கொத்து. கணி - வேங்கை. வாவி - உலவி.
    வௌ�ளில் - விளாமரம். வள்ளியர் - கொடையாளி.
    இங்கு, விளாமரம் மானுடத்தன்மை அற்றார்க்கு இணையாதல் காண்க.)

    1813

    தொகையுறு குலைச்செங் காந்தள் துடுப்பெடுத் தமருஞ் சூழ்விற்
    சிகையுறு தோகை மஞ்ஞை செறிந்துலா வுற்ற தன்மை
    அகையுறு கழைகொன் றுண்ட வாரழல் சிதற ஆங்கே
    புகையுறு கின்ற தன்மை போலவே பொலிந்த தம்மா.

    13

    1814

    கண்டுதங் கேளிர் தம்மைக் கைகொடு புல்லி இல்லங்
    கொண்டசெல் பான்மை உன்னி விலக்குறு கொள்கைத் தென்ன
    விண்டொடர் செலவிற் றாகும் வெஞ்சுடர்க் கதிரை வெற்பில்
    தண்டலை கணியின் கொம்பால் தழீஇக்கொடு தடுக்க லுற்ற.

    14

    1815

    நிறையழி கடமால் யானை நெடுவரைச் சிகரம் பாய்ந்து
    விறலொடு முழங்க ஆங்கோர் விடரளை மடங்கல் கேளாக்
    கறுவுகொள் சினத்தி னார்க்குங் கம்பலை கனகன் எற்றுந்
    தறியிடை இருந்த சீயத் தழங்குர லென்ன லாமால்.

    15

    1816

    பறையடிப் பதனாற் சேணிற் பயன்விரிப் பார்போல் மாறாய்
    அறையடிப் பாந்த ளார்ப்ப அகலிரு விசும்பே றார்ப்பக்
    கறையடித் தொகுதி யார்ப்பக் கடுந்திறல் அரிமா னார்ப்பச்
    சிறையடிக் கொண்டு சிம்பு ளார்த்திடத் திங்கள் செல்லும்.

    16

    1817

    இன்னபல் வளமை சான்ற கிரிதனில் எயினர் ஈண்டி
    மன்னிய தாங்கோர் சீறூர் வதனமா றுடைய வள்ளல்
    பின்னரே தன்பால் மேவப் பெருந்தவந் தன்னை யாற்றிப்
    பொன்னகர் இருந்த வாபோல் புன்மையற் றிருந்த தம்மா.

    17

    1818

    ஆயதோர் குறிச்சி தன்னில் அமர்தருங் கிராதர்க் கெல்லாம்
    நாயகன் நுகம்பூண் டுள்ளோன் நாமவேல் நம்பி யென்போன்
    மாயிருந் தவமுன் செய்தோன் மைந்தர்கள் சிலரைத் தந்து
    சேயிழை மகட்பே றுன்னித் தெய்வதம் பராவி யுற்றான்.

    18

    1819

    அவ்வரை மருங்கு தன்னில் ஐம்புலன் ஒருங்கு செல்லச்
    செவ்விதின் நடாத்துந் தொன்மைச் சிவமுனி என்னும் மேலோன்
    எவ்வெவர் தமக்கும் எய்தா ஈசனை யுளத்துட் கொண்டு
    சைவநல் விரதம் பூண்டு தவம்புரிந் திருத்த லுற்றான்.

    19

    1820

    சிறப்புறு பெரிய பைங்கட் சிறுதலைச் சிலைக்கும் புல்வாய்
    நெறிப்பொடு நிமிர்வுற் றான்ற நெடுஞ்செவிக் குறிய தோகைப்
    பொறிப்படு புனித யாக்கைப் புன்மயிர்க் குளப்பு மென்கால்
    மறிப்பிணை யொன்று கண்டோர் மருளவந் துலாவிற் றங்கண்.

    20

    1821

    போர்த்தொழில் கடந்த வைவேற் புங்கவன் அருளால் வந்த
    சீர்த்திடு நவ்வி தன்னைச் சிவமுனி என்னுந் தூயோன்
    பார்த்தலும் இளைமைச் செவ்வி படைத்திடும் பிறனிற் கண்ட
    தூர்த்தனின் மையல் எய்திக் காமத்தால் சுழல லுற்றான்.

    21

    (15. நிறை - மன அடக்கம். விடர் - பிளவு. அளை - குகை.
    18. குறிச்சி - சிற்றூர். கிராதர் - வேடர். நம்பி - நம்பிராசன்.
    தெய்வதம் - இஷ்டதேவதை. 20. புல்வாய் - சிறியவாய்.
    குளப்பு - குளம்பு. மறிப்பிணை - பெண்மான்.
    21. நவ்வி - மான். பிறன்இல் - அயலான்மனைவி.
    தூர்த்தனின் - காமுகனைப்போல.)

    1822

    ஏமத்தின் வடிவஞ் சான்ற இலங்கெழில் பிணையின் மாட்டே
    காமத்தின்வேட்கை வைத்துக் கவலையாய் அவல மெய்தி
    மாமத்தம் அளைபுக் கென்ன மனக்கருத் துடைந்து வேறாய்
    ஊமத்தம் பயன்துய்த் தார்போல் உன்மத்த னாகி உற்றான்.

    22

    1823

    படவர வனைய அல்குற் பைந்தொடி நல்லார் தம்பாற்
    கடவுளர் புணர்ச்சி யென்னக் காட்சியின் இன்பந் துய்த்து
    விடலரும் ஆர்வ நீங்கி மெய்யுணர் வெய்தப் பெற்றுத்
    திடமொடு முந்து போலச் சிவமுனி இருந்து நோற்றான்.

    23

    1824

    நற்றவன் காட்சி தன்னால் நவ்விபால் கருப்பஞ் சேரத்
    தெற்றென அறிதல் தேற்றிச் செங்கண்மால் உதவும் பாவை
    மற்றதன் இடத்தில் புக்காள் வரைபக வெறிந்த வைவேற்
    கொற்றவன் முன்னஞ் சொற்ற குறிவழிப் படரும் நீராள்.

    24

    1825

    வேறு
    மானி டத்தின் வருமைந்தன் முந்துநீ
    மானி டத்தின் வருகென்ற வாய்மையான்
    மானி டத்தின் வயினடைந் தாள்மரு
    மானி டத்தின் மானாகுமம் மான்மகள்.

    25

    1826

    அனைய காலையில் ஆயுடை நீங்கியே
    புனித நவ்வி புனமெங் கணுமுதலாய்ச்
    சுனையின் நீருண்டொர் சூழலின் வைகியே
    இனிய மால்வரை ஏறி நடந்ததே.

    26

    1827

    நடந்த நவ்வி நலத்தகு வெற்பினில்
    இடந்தொ றுஞ்செறி ஏனற் புனமெலாங்
    கடந்து போயது காவல்கொள் வேட்டுவர்
    மடந்தை மார்கள் வரிவிழி யென்னவே.

    27

    1828

    பிள்ளை ஈற்றுப் பிணாஎயின் சேரியின்
    உள்ள மாதர் உளித்தலைக் கோல்கொடு
    வள்ளி கீழ்புகு மாமுதல் வௌவியே
    பொள்ளல் செய்திடு புன்புலம் புக்கதே.

    28

    (22. ஏமத்தின் வடிவு - பொன்போலும் வடிவு;
    இன்பத்தைத் தரும் உறுப்புமாம். ஊமத்தம் - ஊமத்தங்காய்.
    உன்மத்தன் - ஒன்றுந் தோன்றாது மயங்கி இருப்போன்.
    23. கடவுளர் புணர்ச்சி உள்ளப் புணர்ச்சியே அன்றி மெய்யுறு
    புணர்ச்சி அன்று என்பதை விளக்க 'கடவுளர் புணர்ச்சி யென்ன'
    என்றார். இருவரிடத்தும் காதல் நேர்ந்துழியெல்லாம் காந்தர்வம்
    என்பது வேதநூல் முடிபாம். ஆதலால் காட்சியால் இன்பந்துய்த்தல்
    உண்டு. உள்ளப்புணர்ச்சி என்பது காட்சியால் இன்பந்துய்த்தலைக்
    காட்டிற்று என்க.
    25. மானிடத்தில் வருமைந்தன் - சிவபெருமானிடத்தில் அவதரித்த
    முருகன். முந்து - முன்னாளில். மருமானிடத்தில் - மகனாகிய
    பிரமனிடத்தில். மானாகும் - வௌ�ளைப் பன்றியாகிய.
    மான்மகள் - திருமாலின் புதல்வியான சுந்தரி என்பவள்.
    27. ஏனல் - தினை. 28. பிணா - பெண்மான். எயின் - வேடர்.
    புலம் - கொல்லை.)

    1829

    தோன்ற லுக்குத் துணைவியைத் தொல்விணை
    தான்த ரித்துத் தளர்ந்து தளர்ந்துபோய்
    மான்ற ரற்றி உயிர்த்து வயிறுநொந்
    தீன்று வள்ளி இருங்குழி இட்டதால்.

    29

    1830

    குழைகு றுந்தொடி கோல்வளை யேமுதற்
    பழைய பூண்கள் பலவுடன் தாங்குறாத்
    தழைபு னைந்து தனதுணர் வின்றியே
    உழைவ யின்வந்து தித்தனள் ஒப்பிலாள்.

    30

    1831

    கோற்றொ டிக்கைக் குழவியை நோக்கியே
    ஈற்று மான்பிணை எம்மினத் தன்றிது
    வேற்று ருக்கொடு மேவிய தீண்டெனா
    ஆற்ற வேமருண் டஞ்சிய கன்றதே.

    31

    1832

    வேறு
    அன்னை யெனஈன்ற அரிணமருண் டோடியபின்
    தன்னிணை யிலாத தலைவி தனித்தனளாய்க்
    கின்னரநல் யாழொலியோ கேடில்சீர்ப் பாரதிதன்
    இன்னிசையோ என்றயிர்க்க ஏங்கிஅழு திட்டனளே.

    32

    1833

    அந்த வளவைதனில் ஆறிரண்டு மொய்ம்புடைய
    எந்தை யருளுய்ப்ப எயினர்குலக் கொற்றவனும்
    பைந்தொடி நல்லாளும் பரிசனங்கள் பாங்கெய்தச்
    செந்தினையின் பைங்கூழ் செறிபுனத்துப் புக்கனரே.

    33

    1834

    கொல்லை புகுந்த கொடிச்சியொடு கானவர்கோன்
    அல்லை நிகர்குழலாள் அம்மென் குரல்கேளா
    எல்லை யதனில் எழுமொலியங் கேதென்னா
    வல்லை தனில்அவ் வறும்புனத்தில் வந்தனனே.

    34

    1835

    வந்தான் முதலெடுத்த வள்ளிக்குழி யில்வைகும்
    நந்தா விளக்கனைய நங்கைதனை நோக்கி
    இந்தா இ�தோர் இளங்குழவி என்றெடுத்துச்
    சிந்தா குலந்தீரத் தேவிகையில் ஈந்தனனே.

    35

    1836

    ஈந்தான் சிஆநை�லத்தில் இட்டான் எழுந்தோங்கிப்
    பாய்ந்தான் தெழித்தான் உவகைப் படுகடலில்
    தோய்ந்தான் முறுவலித்தான் தோள்புடைத்தான் தொல்பிறப்பின்
    நாந்தாம் இயற்றுதவம் நன்றாங்கொல் என்றுரைத்தான்.

    36

    1837

    கொற்றக் கொடிச்சி குழவியைத்தன் கைவாங்கி
    மற்றப் பொழுதில் வயாவும் வருத்தமுமாய்ப்
    பெற்றுக்கொள் வாள்போலப் பேணிப் பெரிதுமகிழ்
    வுற்றுக் கனதனத்தில் ஊறும்அமிர் தூட்டினவளால்.

    37

    (30. குறுந்தொடி - சிறுவளையல். கோல்வளை - ஒருவகை வளையல்.
    33. பைங்கூழ் - பசியபயிர். 34. கொடிச்சி - வேடப்பெண்.
    35. நந்தா - கெடாத. இந்தா - இங்கு; இவ்விடத்து.
    சிந்தாகுலந் தீர - மனவருத்தம் நீங்க.
    36. தோள்புடைத்தான் - தோளைத்தட்டினான்;
    புயன்பூரித்தான் எனினுமாம். வயா - கருப்பம்.)

    1

    1838

    வென்றிச் சிலையெடுத்து மேலைப் புனமகன்று
    குன்றக் குறவன் குதலைவாய்க் கொம்பினுடன்
    மன்றற் றுணைவிதனை வல்லைகொடு சீறூரில்
    சென்றக் கணத்தில் சிறுகுடிலில் புக்கனனே.

    38

    1839

    அண்டர் அமுதம் அனையமகட் பெற்றிடலான்
    மண்டுபெரு மகிழ்வாய் மாத்தாட் கொழுவிடையைக்
    கெண்டி யொருதன் கிளையோ டினிதருந்தித்
    தொண்டகம தார்ப்பக் குரவைமுறை தூங்குவித்தான்.

    39

    1840

    காலை யதற்பின் கடவுட் பலிசெலுத்தி
    வாலரிசி மஞ்சள் மலர்சிந்தி மறியறுத்துக்
    கோல நெடுவேற் குமரன்விழாக் கொண்டாடி
    வேலனை முற்கொண்டு வெறியாட்டு நேர்வித்தான்.

    40

    1841

    இன்ன பலவும் இயற்றி இருங்குறவர்
    மன்னன் மனைவி வடமீன் தனைஅனையாள்
    கன்னி மடமகட்குக் காப்பிட்டுக் கானமயிற்
    பொன்னஞ் சிறைபடுத்த பூந்தொட்டில் ஏற்றினளே.

    41

    1841

    நாத்தளர்ந்து சோர்ந்து நடுக்கமுற்றுப் பற்கழன்று
    மூத்து நரைமுதிர்ந்த மூதாளர் வந்தீண்டிப்
    பாத்தி படுவள்ளிப் படுகுழியில் வந்திடலால்
    வாய்த்த இவள்நாமம் வள்ளியெனக் கூறினரே.

    42

    1842

    தம்மரபி லுள்ள தமரா கியமுதுவர்
    இம்முறையால் ஆராய்ந் தியற்பேர் புனைந்துரைப்பக்
    கொம்மை முலையாள் கொடிச்சியொடு குன்றவர்கோன்
    அம்மனையை நம்மகள்என் றன்பால் வளர்த்தனனே.

    43

    1843

    முல்லைப் புறவ முதல்வன் திருமடந்தை
    கொல்லைக் குறிஞ்சிக் குறவன் மகளாகிச்
    சில்லைப் புன்கூரைச் சிறுகுடிலில் சேர்ந்தனளால்
    தொல்லைத் தனித்தந்தை தோன்றியமர் வுற்றதுபோல்.

    44

    (39. விடை - கடா. கெண்டி - வெட்டி.
    தொண்டகம் - குறிஞ்சி நிலப்பறை. குரவை - கைகோத்தாடும் ஒரு கூத்து.
    40. கடவுட்பலி - கடவுளான முருகவேள் பூசை. மறி - ஆடு.
    வேலனை - தேவராளனை. 42. வள்ளிப் படுகுழி - வள்ளிக்கிழங்குகளையுடைய குழி.
    43. தமர் - தம்மைச் சேர்ந்தவர். முதுவர் - கிழவர்கள்.
    கொம்மை - திரட்சி. 44. சில்லை - இழிந்தபுல். தொல்லை
    தனித்தந்தை தோன்றி அமர்வுற்றதுபோல் - முன்னாளில் தனது தந்தையாகிய
    கண்ணன் அரசர் குடியில் தோன்றி ஆயர் குடியில் புகுந்ததைப்போல)

    1844

    மூவா முகுந்தன் முதனாட் பெறுமமுதைத்
    தேவாதி தேவன் திருமைந்தன் தேவிதனை
    மாவாழ் சுரத்தில்தம் மாமகளாப் போற்றுகையால்
    ஆவா குறவர்தவ மார்அளக்க வல்லாரே.

    45

    1845

    பொற்றொட்டில் விட்டுப் புவியின் மிசைதவழக்
    கற்றுத் தளர்நடை காட்டிக் கணிநீழல்
    முற்றத் திடையுலவி முறத்தின் மணிகொழித்துச்
    சிற்றில் புனைந்து சிறுசோறட் டாடினளே.

    46

    1846

    முந்தை யுணர்வு முழுதுமின்றி இம்முறையால்
    புந்திமகிழ் வண்டல் புரிந்துவளர் செவ்விக்கண்
    எந்தைபுயம் புல்லுவதற் கிப்பருவம் ஏற்குமெனப்
    பைந்தொடியி னுக்கியாண்டு பன்னிரண்டு சென்றனவே.

    47

    1847

    ஆன பருவங்கண் டம்மனையும் அம்மனையில்
    கோனும் ஒருதங் குலத்தின் முறையோக்கி
    மானின் வயிற்றுதித்த வள்ளிதனைப் பைம்புனத்தில்
    ஏனல் விளையுள் இனிதளிக்க வைத்தனரே.

    48

    1848

    காட்டில் எளிதுற்ற கடவுள்மணி யைக்கொணர்ந்து
    கூட்டி லிருளோட்டக் குருகுய்த்த வாறன்றோ
    தீட்டுசுடர் வேற்குமரன் தேவியாந் தௌ�ளமுதைப்
    பூட்டுசிலைக் கையார் புனங்காப்ப வைத்ததுவே.

    49

    1849

    சுத்த மெழுகிட்டுச் சுடர்கொளுவிப் பன்மணியின்
    பத்தி குயின்றிட்ட பழுப்பேணி யிற்பாதம்
    வைத்து மகிழ்�ந்தேறி மகடூஉத் தினைப்புனத்தில்
    எத்திசையுங் காணும் இதணத் திருந்தனளே.

    1850

    கிள்ளையொடு கேகயமே அன்றிப் பிறநிலத்தில்
    உள்ள பறவை ஒருசார் விலங்கினொடும்
    வள்ளி மலைப்புனத்தில் வந்துற் றனமாவுற்
    புள்ளு மயங்கல் பொருள்நூற் றுணிபன்றோ.

    51

    1851

    கட்டு வரிவில் கருங்குறவர் கைத்தொழிலால்
    இட்ட இதணத் திருந்தெம் பெருமாட்டி
    தட்டை குளிர்தழலைத் தாங்கித் தினைப்புனத்தைக்
    கிட்டலுறா வண்ணங் கிளிமுதற்புள் ளோட்டினளே.

    52

    1852

    எய்யா னவையும் இரலைமரை மான்பிறவுங்
    கொய்யாத ஏனற் குரல்கவர்ந்து கொள்ளாமல்
    மையார் விழியாள் மணிக்கற் கவணிட்டுக்
    கையால் எடத்துக் கடிதோச்சி வீசினளே.

    53

    (45. அமுதை - அமுதம்போன்றவளாகிய வள்ளியை.
    46. அட்டு - சமைத்து. 48. அம்மனை - தாய்.
    வேடர்தம் பெண்மக்கள் மங்கைப்பருவம் அடைந்தவுடன்
    தினைப்புனங்காத்தல் வேண்டும் என்பது முறையாதலின்
    'தங்குலத்தின்முறை' என்றார். 49. கடவுள் மணி - சிந்தாமணி.
    குருகு - குருவிகள். பூட்டுசிலைக்கையார் - வேடர்கள்.
    50. குயின்றிட்ட - பதத்துள்ள. மகடூஉ - வள்ளிநாயகி.
    இதண் - பரண். 51. கேகயம் - மயில். பொருள்நூல் -
    பொருள் இலக்கணம்; அ�து அகப்பொருள் ஆகும்.
    52. தட்டை - கிளிகடி கருவி. குளிர் - கவண். தழல் - தீ.
    53. எய் - முட்பன்றி. இரலை - கருமான். மரைமான் -
    இவை மானின் வகைகள். குரல் - கதிர்.)

    1853

    பூவைகாள் செங்கட் புறவங்காள் ஆலோலம்
    தூவிமா மஞ்ஞைகாள் சொற்கிளிகாள் ஆலோலம்
    கூவல் சேர்வுற்ற குயிலினங்காள் ஆலோலம்
    சேவல்காள் ஆலோலம் என்றாள் திருந்திழையாள்.

    54

    1854

    இந்த முறையில் இவள்ஏனற் புனங்காப்ப
    அந்த வளவில் அவளுக் கருள்புரியக்
    கந்த வரைநீங்கிக் கதிர்வே லவன்தனியே
    வந்து தணிகை மலையிடத்து வைகினனே.

    55

    1855

    வேறு
    சூரல் பம்பிய தணிகைமால் வரைதனில் சுடர்வேல்
    வீரன் வீற்றிருந் திடுதலும் வேலையங் கதனில்
    வாரி யும்வடித் துந்தியும் வரிசையால் உறழ்ந்துஞ்
    சீரி யாழ்வல்ல நாரதன் புவிதனிற் சேர்ந்தான்.

    56

    1856

    வளவி தாகிய வள்ளிமால் வரைதனில் வந்து
    விளைவு ளாகிய தினைப்புனம் போற்றிவீற் றிருந்த
    புளினர் பாவையைக் கண்டுகை தொழுதுபுந் தியினில்
    அளவி லாததோர் அற்புதத் துடனிவை அறைவான்.

    57

    1857

    அன்னை யாகியிங் கிருப்பவர் பேரழ கனைத்தும்
    உன்னி யான்புனைந் துரைக்கினும் உலவுமோ உலவா
    என்னை யாளுடை அறுமுகன் துணைவியாய் இருப்ப
    முன்னர் மாதவம் புரிந்தவர் இவரென மொழிந்தான்.

    58

    1858

    வேறு
    கார்த்தி னைப்புனங் காவற் கன்னியைப்
    பார்த்து மற்றிவை பகர்ந்து போற்றிப்போய்
    மூர்த்த மொன்றினில் மூன்று பூமலர்
    தீர்த்தி கைச்சுனைச் சிகரம் நண்ணினான்.

    59

    1859

    தணிகை யங்கிரி தன்னில் வைகிய
    இணையில் கந்தனை எய்தி அன்னவன்
    துணைமென் சீறடி தொழுது பன்முறை
    பணிதல் செய்திவை பகர்தல் மேயினான்.

    60

    (54. பூவை - நாகணவாய்ப் பறவை. புறவம் - புறா.
    ஆலோலம் - இது பறவை முதலியவைகளை நயமாக ஓட்டும்
    ஒருவகை இன்னோசை. 55. தணிகைமலை - திருத்தணிகைமலை.
    56. சூரல் - பிரம்பு. வாரியும் வடித்து உந்தியும் வரிசையால்
    உறழ்ந்தும் - வார்தல் வடித்தல் உந்தல் முறையாக உறழ்தல்
    என்னும் திறத்துடன்; (சிலப் - புகார் - கானல்வரியின் உரையைக் காண்க.)
    57. வள்ளி மால்வரை - வள்ளிமலை. புளினர் - வேடர்.
    புளினர்பாவை - வள்ளி நாயகி. 59. மூர்த்தம் ஒன்றினில் -
    நாள் ஒன்றுக்கு. மூன்று பூ - மூன்று செங்காவி மலர்.
    மலர் - அலர்கின்ற. தீர்த்திகைச் சுனை - தீத்தமாகிய சுனை.
    சிகரம் - தணிகை; மலையுச்சி.)

    1

    1860

    மோன நற்றவ முனிவன் தன்மகள்
    மானின் உற்றுளாள் வள்ளி வெற்பினில்
    கான வக்குலக் கன்னி யாகியே
    ஏன லைப்புரந் திதணில் மேயினாள்.

    61

    1861

    ஐய னேயவள் ஆகம் நல்லெழில்
    செய்ய பங்கயத் திருவிற் கும்மிலை
    பொய்ய தன்றிது போந்து காண்டிநீ
    கைய னேன்இவண் கண்டு வந்தனன்.

    62

    1862

    தாய தாகுமத் தையல் முன்னஅஅ
    மாய வன்மகள் மற்றுன் மொய்ம்பினைத்
    தோய நோற்றனள் சொற்ற எல்லையில்
    போய வட்கருள் புரிதி யால்என்றான்.

    63

    1863

    என்ற வேலையில் எ�க வேலினான்
    நன்று நன்றிது நவையில் காட்சியோய்
    சென்றி நீயெனச் செப்பித் தூண்டியே
    கன்று காமநோய்க் கவலை யுள்வைத்தான்.

    64

    1864

    எய்யும் வார்சிலை எயினர் மாதராள்
    உய்யு மாறுதன் உருவம் நீத்தெழீஇச்
    செய்ய பேரருள் செய்து சேவகன்
    மையல் மானுட வடிவந் தாங்கினான்.

    65

    1865

    காலிற் கட்டிய கழலன் கச்சினன்
    மாலைத் தோளினன் வரிவில் வாளியன்
    நீலக் குஞ்சியன் நெடியன் வேட்டுவக்
    கோலத் தைக்கொடு குமரன் தோன்றினான்.

    66

    1866

    கிள்ளை யன்னதோர் கிளவி மங்கைமாட்
    டுள்ள மோகந்தன் னுள்ள கந்தனைத்
    தள்ள எம்பிரான் தணிகை வெற்பொரீஇ
    வள்ளி யங்கிரி வயின்வந் தெய்தினான்.

    67

    1867

    வேறு
    மண்டலம் புகழுந் தொல்சீர் வள்ளியஞ் சிலம்பின் மேல்போய்ப்
    பிண்டியந் தினையின் பைங்கூழ்ப் பெரும்புனத் திறைவி தன்னைக்
    கண்டனன் குமரன் அம்மா கருதிய எல்லை தன்னில்
    பண்டொரு புடையில் வைத்த பழம்பொருள் கிடைத்த வாபோல்.

    68

    (61. மோன நற்றவ முனிவன் - சிவமுனி. இதணில் - பரணின்மேல்.
    62. கையனேன் - சிறியேன். 64. சென்றி - செல்வாய்.
    கன்றுதல் - வருந்துதல். 65. சேவகன் - வீராதி வீரனாகிய குமரவேள்.
    66. குஞ்சி - குடுமி. வேட்டுவக் கோலத்தைக்கொடு - வேட்டுவ வடிவத்தை
    எடுத்து; வேட்டையாடும் அரசர் கோலத்தைக்கொண்டு எனினுமாம்.
    67. கிளவி - மொழியினையுடைய. 68. பிண்டி - மாவு. வைத்த - புதைத்து வைத்த.)

    1868

    பூமஞ்சார் மின்சொல் என்னப் பொருப்பினில் ஏனல் காக்குங்
    காமஞ்சால் இளைமை யாளைக் கடம்பமர் காளை நோக்கித்
    தூமஞ்சால் விரகச் செந்தீச் சுட்டிடச் சோர்ந்து வெம்பி
    ஏமஞ்சால் கின்ற நெஞ்சன் இதணினுக் கணியன் சென்றான்.

    69

    1869

    நாந்தக மனைய உண்கண் நங்கைகேள் ஞாலந் தன்னில்
    ஏந்திழை யார்கட் கெல்லாம் இறைவியாய் இருக்கும் நின்னைப்
    பூந்தினை காக்க வைத்துப் போயினார் புளின ரானோர்க்
    காய்ந்திடு முணர்ச்சியொன்றும் அயன்படைத்திலன்கொல் என்றான். 70

    1870

    வாரிருங் கூந்தல் நல்லாய் மதிதளர் வேனுக் குன்றன்
    பேரினை உரைத்தி மற்றுன் பேரினை உரையாய் என்னின்
    ஊரினை உரைத்தி ஊரும் உரைத்திட முடியா தென்னில்
    சீரிய நின்சீ றூர்க்குச் செல்வழி உரைத்தி யென்றான்.

    71

    1872

    மொழியொன்று புகலா யாயின் முறுவலும் புரியா யாயின்
    விழியொன்று நோக்கா யாயின் விரகமிக் குழல்வேன் உய்யும்
    வழியொன்று காட்டா யாயின் மனமுஞ்சற் றுருகா யாயின்
    பழியொன்று நின்பாற் சூழும் பராமுகந் தவிர்தி என்றான்.

    72

    1873

    உலைப்படு மெழுக தென்ன உருகியே ஒருத்தி காதல்
    வலைப்படு கின்றான் போல வருந்தியே இரங்கா நின்றான்
    கலைப்படு மதியப் புத்தேள் கலங்கலம் புனலிற் றோன்றி
    அலைப்படு தம்மைத் தன்றோ அறுமுகன் ஆடல் எல்லாம்.

    73

    1874

    செய்யவன் குமரி முன்னந் திருநெடுங் குமரன் நின்று
    மையலின் மிகுதி காட்டி மற்றிவை பகரும் எல்லை
    எய்யுடன் உளியம் வேழம் இரிதர விரலை யூத
    ஒய்யென எயினர் சூழ ஒருதனித் தாதை வந்தான்.

    74

    1875

    ஆங்கது காலை தன்னின் அடிமுதல் மறைக ளாக
    ஓங்கிய நடுவண் எல்லாம் உயர்சிவ நூல தாகப்
    பாங்கமர் கவடு முற்றும் பல்கலை யாகத் தானோர்
    வேங்கையின் உருவ மாகி வேற்படை வீரன் நின்றான்.

    75

    1876

    கானவர் தல்வன் ஆங்கே கதுமென வந்து தங்கள்
    மானினி தன்னைக் கண்டு வள்ளியங் கிழங்கு மாவுந்
    தேனொடு கடமான் பாலுந் திற்றிகள் பிறவு நல்கி
    ஏனலம் புனத்தில் நின்ற யாணர்வேங் கையினைக் கண்டான்.

    76

    1877

    ஆங்கவன் அயலாய் நின்ற அடுதொழில் மறவ ரானோர்
    வேங்கையின் நிலைமை நோக்கி விம்மித நீர ராகி
    ஈங்கிது முன்னுற் றன்றால் இத்துணை புகுந்த வாற்றால்
    தீங்குவந் திடுதல் திண்ணம் என்றனர் வெகுளித் தீயார்.

    77

    (69. மஞ்சு - மேகம். கடம்பு - ஓர்மலர். 70. நாந்தகம் - வாள்.
    புளினர் - வேடர். 72. விரகம் - காமநோய். 74. செய்யவள் - திருமகள்.
    எய் - முட்பன்றி. உளியம் - கரடி. இரலை - ஊதுகொம்பு.
    75. அடிமுதல் - அடிப்பாகம். சிவநூல் - சிவாகமம். கவடு - கிளை.
    வேங்கை - வேங்கைமரம். 76. கடமான் - ஒருவகை மான்.
    திற்றிகள் - தின்பதற்குரியன. யாணர் - புதுமையான.)

    1878

    எறித்தரு கதிரை மாற்றும் இருநிழற் கணியை இன்னே
    முறித்திடு வீர்க ளென்பார் முதலொடு வீழச் சூழப்
    பறித்திடு வீர்க ளென்பார் பராரையைக் கணிச்சி தன்னால்
    தறித்திடு வீர்க ளென்பார் தாழ்க்கலீர் சற்று மென்பார்.

    78

    1879

    இங்கிவை உரைக்குந் தீயோர் யாரையும் விலக்கி மன்னன்
    நங்கைதன் வதனம் பாரா நறுமலர் வேங்கை யொன்று
    செங்குரல் ஏனற் பைங்கூழ் செறிதரு புனத்தின் மாடே
    தங்கிய தென்னை கொல்லோ சாற்றுதி சரத மென்றான்.

    79

    1880

    தந்தையாங் குரைத்தல் கேளாத் தையலும் வெருவி ஈது
    வாந்தவா றுணர்கி லேன்யான் மாயம்போல் தோன்றிற் றையா
    முந்தைநாள் இல்லா தொன்று புதுவதாய் முளைத்த தென்னாச்
    சிந்தைமேல் நடுக்க மெய்தி இருந்தனன் செயலி தென்றாள்.

    80

    1881

    வேறு
    என்றிவை சொற்றபின் ஏந்திழை அஞ்சேல்
    நன்றிவண் வைகுதி நாண்மலர் வேங்கை
    இன்றுணை யாயிவண் எய்திய தென்னாக்
    குன்றுவன் வேடர் குழாய்த்தொடு போனான்.

    81

    1882

    போனது கண்டு புனத்திடை வேங்கை
    ஆனதொர் தன்மையை ஐயன் அகன்று
    கானவர் தம்மகள் காண்வகை தொல்லை
    மானுட நல்வடி வங்கொடு நின்றான்.

    82

    1883

    வேறு
    தொல்லையின் உருக்கொடு தோன்றி நின்றவேள்
    எல்லையில் மையலுற் றிரங்கு வானென
    அல்லிவர் கூந்தலாள் அருகு நிற்புறீஇ
    நல்லரு ளால்இவை நவிறல் மேயினான்.

    83

    1884

    கோங்கென வளர்முலைக் குறவர் பாவையே
    ஈங்குஆ அடைந்தனன் எனக்கு நின்னிரு
    பூங்கழல் அல்லது புகலொன் றில்லையால்
    நீங்கலன் நீங்கலன் நின்னை என்றுமே.

    84

    1885

    மாவியல் கருங்கணாய் மற்று நின்றனைப்
    பாவியன் நீங்கியே படர வல்லனோ
    ஆவியை யகன்றுமெய் யறிவு கொண்டேழீஇப்
    போவது கொல்லிது புகல வேண்டுமே.

    85

    (78. கதிர் - சூரிய கிரணத்தை. கணி - வேங்கைமரம்.
    பராரை - பெரிய அடிப்பாகத்தை. கணிச்சிதன்னால் - கோடரியால்.
    80. தையல் - வள்ளிநாயகி. 81. குன்றுவன் - நம்பிராசன்.
    84. கோங்கு - கோங்கரும்பு. 85. மா - மான்; மாவடுவுமாம்.
    பாவியன் - பாவியேன்.)

    1

    1886

    மைதிகழ் கருங்கணின் வலைப்பட் டேற்கருள்
    செய்திடல் அன்றியே சிறைக்க ணித்தனை
    உய்திறம் வேறெனக் குளகொல் ஈண்டுநின்
    கைதனில் இவ்வுயிர் காத்துக் கோடியால்.

    86

    1887

    கோடிவர் நெடுவரைக் குறவர் மாதுநீ
    ஆடிய சுனையதாய் அணியுஞ் சாந்தமாய்ச்
    சூடிய மலர்களாய்த் தோயப் பெற்றிலேன்
    வாடினன் இனிச்செயும் வண்ணம் யாவதே.

    871

    1888

    புல்லிது புல்லிது புனத்தைக் காத்திடல்
    மெல்லியல் வருதியால் விண்ணின் பால்வரும்
    வல்லியர் யாவரும் வணங்கி வாழ்த்திடல்
    தொல்லியல் வழாவளந் துய்ப்ப நல்குவேன்.

    88

    1889

    என்றிவை பலபல இசைத்து நிற்றலுங்
    குன்றுவர் மடக்கொடி குமரன் சிந்தையில்
    ஒன்றிய கருத்தினை யுற்று நோக்கியே
    நன்றிவர் திறமென நாணிக் கூறுவாள்.

    89

    1890

    இழிகுல மாகிய எயினர் பாவைநான்
    முழுதுல கருள்புரி முதல்வர் நீரெனைத்
    தழுவுதல் உன்னியே தாழ்ச்சி செப்புதல்
    பழியது வேயலால் பான்மைத் தாகுமோ.

    90

    1891

    இலைமுதிர் ஏனல்காத் திருக்கும் பேதையான்
    உலகருள் இறைவர்நீர் உளம யங்கியென்
    கலவியை விரும்புதல் கடன தன்றரோ
    புவியது பசியுறில் புல்லுந் துய்க்குமோ.

    91

    1892

    வேறு
    என்றிவை பலப்பலவும் ஏந்திழை இயம்பா
    நின்றபொழு தத்தில்அவள் நெஞ்சம்வெருக் கொள்ள
    வென்றிகெழு தொண்டகம் வியன்துடி யியம்பக்
    குன்றிறைவன் வேட்டுவர் குழாத்தினொடும் வந்தான்.

    92

    1893

    வந்தபடி கண்டுமட மான்நடு நடுங்கிச்
    சிந்தைவெரு விக்கடவுள் செய்யமுக நோக்கி
    வெந்திறல்கொள் வேடுவர்கள் வெய்யர்இவண் நில்லா
    துய்ந்திட நினைந்துகடி தோடும்இனி யென்றாள்.

    93

    (87. கோடு - சிகரங்கள். நெடுவரை - வள்ளிமலை.
    88. புல்லிது - இழிந்தது. 90. தாழ்ச்சி - தாழ்மை.
    91. 'புலிபசித்தால் புல்லைத் தின்னுமோ' என்னும் பழமொழி
    இங்கு விளங்குதல் காண்க. 92. தொண்டகம் - குறிஞ்சி நிலப்பறை.)

    1894

    ஓடுமினி யென்றவள் உரைத்தமொழி கேளா
    நீடுமகிழ் வெய்தியவண் நின்றகும ரேசன்
    நாடுபுகழ் சைவநெறி நற்றவ விருத்த
    வேடமது கொண்டுவரும் வேடரெதிர் சென்றான். 94

    94

    1895

    சென்றுகிழ வோன்குறவர் செம்மலெதிர் நண்ணி
    நின்றுபரி வோடுதிரு நீறுதனை நல்கி
    வன்றிறல் மிகுத்திடுக வாகைபெரி தாக
    இன்றியமை யாதவளன் எய்திடுக என்றான்.

    95

    1896

    பூதியினை யன்பொடு புரிந்த குரவன்தன்
    பாதமலர் கைகொடு பணிந்துகுற மன்னன்
    மேதகுமிவ் வெற்தபினில் விருத்தரென வந்தீர்
    ஓதிடுதிர் வேண்டியதை ஒல்லைதனில் என்றான்.

    96

    1897

    ஆண்டுதொழிலின் மேதகைய அண்ணலிது கேண்மோ
    நீண்டதனி மூப்பகல நெஞ்சமருள் நீங்க
    ஈண்டுநும் வரைக்குமரி எய்தியினி தாட
    வேண்டிவரு கின்றனன் மெலிந்துகடி தென்றான்.

    97

    1898

    வேறு
    நற்றவன் மொழியைக் கேளா நன்றுநீர் நவின்ற தீர்த்தம்
    நிற்றலு மாடி எங்கள் நேரிழை தமிய ளாகி
    உற்றனள் அவளுக் கெந்தை ஒருதனித் துணைய தாகி
    மற்றிவண் இருத்திர் என்ன அழகிதாம் மன்ன வென்றான்.

    98

    1899

    இனையதோர் பொழுதில் தந்தை ஏந்திழை தன்பா லேகித்
    தினையொடு கிழங்கு மாவுந் தீங்கனி பிறவும் நல்கி
    அனையவள் துனைய தாக அருந்தவன் தன்னை வைத்த
    வனைகழல் எயின ரோடும் வல்லையின் மீண்டு போனான்.

    99

    1900

    போனது முதியோன் கண்டு புனையிழை தன்னை நோக்கி
    நானினிச் செய்வ தென்கொல் நலிவது பசிநோ யென்னத்
    தேனொடு கனியும் மாவுஞ் செங்கையிற் கொடுப்பக் கொண்டு
    வேனிலும் முடுகிற் றுண்ணீர் விடாய்பெரி துடையேன் என்றான்.

    100

    1901

    செப்புறும் அனைய மாற்றஞ் சேயிழைக் கிழத்தி கேளா
    இப்புற வரைக்கும் அப்பால் எழுவரை கடந்த தற்பின்
    உப்புற மிருந்த தெந்தாய் ஒருசுனை யாங் ணேகி
    வெப்புற லின்றித் தெண்ணீர் மிசைந்துபின் வருதி ரென்றான்.

    101

    (94. சைவ நெறி நற்றவ விருத்த வேடம் - சைவ சந்நியாச
    வேடங்கொண்ட வயோதிக வடிவம். 96. பூதி - விபூதி.
    97. ஆண்டொழில் - ஆண்மைத்தன்மை. அண்ணல் - இங்கு
    வேட அரசன். ஈண்டு நும் வரைக்குமரி எய்தி இனிது ஆட
    வேண்டி - இவ்வித்துள்ள உம் மலையிலுள்ள குமரித் தீர்த்தத்தை
    அடைந்து ஆட விரும்பி; இவ்விடத்திலிருக்கின்ற உன்னுடைய
    மலையில் பிறந்த குமரியாகிய வள்ளியை அடைந்து செவ்வனே
    புணர்தற்கு விரும்பி எனப் பொருள்கொள்ளுதலுமாம்.
    இது சிலேடைப் பொருளாகும். 99. அருந்தவன் - தவசி.
    100. நலிவது - வருந்துகின்றது. வேனில் - வெய்யில்.
    உண்ணீர்விடார் . தண்ணீர்த்தாகம்.)

    1902

    பூட்டுவார் சிலைக்கை வேடர் பூவையே புலர்ந்து தெண்ணீர்
    வேட்டனன் விருத்தன் வெற்பில் வியனெறி சிறிதுந் தேரேன்
    தாட்டுணை வருந்து மென்று தாழ்த்திடா தொல்லை யேகிக்
    காட்டுதி சுனைநீர் என்றான் அறுமுகங் கரந்த கள்வன்.

    102

    1903

    முருகன துரையை அந்த மொய்குழல் வினவி எந்தாய்
    வருகென அழைத்து முன்போய் வரையெலாங் கடந்து சென்று
    விரைகமழ் சுனைநீர் காட்ட வேனிலால் வெதும்பி னான்போல்
    பருகினன் பருகிப் பின்னர் இ�தொன்று பகர்த லுற்றான்.

    103

    1904

    ஆகத்தை வருத்து கின்ற அரும்பசி அவித்தாய் தெண்ணீர்த்
    தாகத்தை அவித்தாய் இன்னுந் தவிர்ந்தில தளர்ச்சி மன்னோ
    மேகத்தை யனைய கூந்தல் மெல்லியல் வினையேன் கொண்ட
    மோகத்தைத் தணித்தி யாயின் முடிந்ததென் குறைய தென்றான்.

    104

    1905

    வேறு
    ஈறில் முதியோன் இரங்கி இரந்துகுறை
    கூறி மதிமயங்கிக் கும்பிட்டு நின்றளவில்
    நாறு மலர்க்கூந்தல் நங்கை நகைத்துயிர்த்துச்
    சீறி நடுநடுங்கி இவ்வாறு செப்புகின்றாள்.

    105

    1906

    மேலா கியதவத்தோர் வேடந் தனைப்பூண்டிங்
    கேலா தனவே இயற்றினீர் யார்விழிக்கும்
    பாலாகித் தோன்றிப் பருகினார் ஆவிகொள்ளும்
    ஆலால நீர்மைத்தோ ஐயர் இயற்கையதே.

    106

    1907

    கொய்தினைகள் காப்பேனைக் கோதிலா மாதவத்தீர்
    மெய்தழுவ உன்னி விளம்பா தனவிளம்பிக்
    கைதொழுது நிற்றல் கடனன்று கானவரிச்
    செய்கை தனைஅறியின் தீதாய் முடிந்திடுமே.

    107

    1908

    நத்துப் புரைமுடியீர் நல்லுணர்வு சற்றுமிலீர்
    எத்துக்கு மூத்தீர் இரிகுலத்தேன் தன்னைவெ�கிப்
    பித்துக்கொண் டார்போல் பிதற்றுவீர் இவ்வேடர்
    கொத்துக் கெலாமோர் கொடும்பழியைச் செய்தீரே.

    108

    1909

    சேவலாய் வைகுந் தினைப்புனத்திற் புள்ளினுடன்
    மாவெலாங் கூடி வளர்பைங் குரல்கவரும்
    நாவலோய் நீரும் நடந்தருளும் நான்முந்திப்
    போவனால் என்று புனையிழையாள் போந்தனளே.

    109

    (102. பூவையே : விளி : ஆகுபெயராய் வள்ளி நாயகியை உணர்த்திற்று.
    புலர்ந்து - நாவுலர்ந்து. 105. ஈறுஇல் - அழிவற்ற.
    106. தவத்தோர் வேடம் - தவவேடம். ஆலாலம் விஷம்.
    ஐயர் - தவ வேடங்கொண்ட வயோதிகர். இங்குப் பால்
    தவவேடத்திற்கும் விஷம் துர்ச்செயலுக்கும் உவமை ஆகும்.
    107. இச்செய்கைதனை - உமது தகாத செய்கைய.
    108. நத்துப்புரைமுடியீர் - சங்கினை ஒத்த வெண்மையான
    தலைமயிரினை யுடையீர். எத்துக்கு - எதற்கு.
    கொத்துக்கெலாம் - வமிசத்தினர்க்கெல்லாம்.
    109. சேவலாய் - காவலாக. நாவலோய் - அறிவுடையோனே.)

    1

    1910

    பொன்னே அனையாள் முன்போகுந் திறல்நோக்கி
    என்னே இனிச்செய்வ தென்றிரங்கி எம்பெருமான்
    தன்னே ரிலாதமரும் தந்திமுகத் தெந்தைதனை
    முன்னே வருவாய் முதல்வா வெனநினைந்தான்.

    110

    1911

    அந்தப் பொழுதில் அறுமா முகற்கிரங்கி
    முந்திப் படர்கின்ற மொய்குழலாள் முன்னாகத்
    தந்திக் கடவுள் தனிவார ணப்பொருப்பு
    வந்துற்ற தம்மா மறிகடலே போல்முழங்கி.

    111

    1912

    அவ்வேலை யில்வள்ளி அச்சமொடு மீண்டுதவப்
    பொய்வேடங் கொண்டுநின்ற புங்கவன்தன் பாலணுகி
    இவ்வேழங் காத்தருள்க எந்தைநீர் சொற்றபடி
    செய்வேன் எனவொருபால் சேர்ந்துதழீஇக் கொண்டனளே.

    112

    1913

    அன்ன தொருகாலை அறுமா முகக்கடவுள்
    முன்னொரு சார்வந்து முதுகளிற்றின் கோடொற்றப்
    பின்னொரு சார்வந்து பிடியின் மருப்பூன்ற
    இந்நடு வேநின்றான் எறுழ்வயிரத் தூணேபோல்.

    113

    1914

    கந்த முருகன் கடவுட் களிறுதனை
    வந்தனைகள் செய்து வழுத்திநீ வந்திடலால்
    புந்தி மயல்தீர்ந்தேன் புனையிழையுஞ் சேர்ந்தனளால்
    எந்தை பெருமான் எழுந்தருள்க மீண்டென்றான்.

    114

    1915

    என்னும் அளவில் இனிதென்றி யானைமுக
    முன்னிளவல் ஏக முகமா றுடையபிரான்
    கன்னி தனையோர் கடிகாவி னிற்கலந்து
    துன்னு கருணைசெய்து தொல்லுருவங் காட்டினனே.

    115

    1916

    முந்நான்கு தோளும் முகங்களோர் மூவிரண்டுங்
    கொன்னார்வை வேலுங் குலிசமுமே னைப்படையும்
    பொன்னார் மணிமயிலு மாகப் புனக்குறவர்
    மின்னாள் கண்காண வௌ�நின் றனன்விறலோன்.

    116

    1917

    கூரார் நெடுவேற் குமரன் திருவுருவைப்
    பாரா வணங்காப் பரவலுறா விம்மிதமுஞ்
    சேரா நடுநடுங்காச் செங்கைகுவி யாவியரா
    ஆராத காதலுறா அம்மையிது ஓதுகின்றாள்.

    117

    (110. தந்தி முகத்து எந்தை - விநாயகக் கடவுள்.
    111. வாரணப் பொருப்பு - மலையனைய யானையாக.
    112. நீர் சொற்றபடி செய்வேன் - நீங்கள் கூறியபடி நான் நடப்பேன்.
    ஒரு பால் சேர்ந்து - தவசியின் ஒருபுறத்தை அடைந்து சேர்ந்து.
    113. பிடி - வள்ளிநாயகி. மருப்பு - இங்கு முலைகள்.
    எறுழ் - வலிமை. 114. கடவுட்களிறு - விநாயகர்.
    புனைஇழை - வள்ளி. 115. கன்னிதனை - வள்ளிநாயகியை.
    காவினில் - சோலையில். கலந்து - கூடிமகிழ்ந்து.
    116. கொன் - பெருமை. வை - கூர்மை.
    விறலோன் - வெற்றியினையுடைய முருகக் கடவுள்.
    117. பாரா - தரிசித்து. வியரா - வியர்த்து. ஆராதகாதல் - நிறையாக்காதல்.)

    1918

    மின்னே அனையசுடர் வேலவரே இவ்வுருவம்
    முன்னேநீர் காட்டி முயங்காமல் இத்துணையுங்
    கொன்னே கழித்தீர் கொடியேன்செய் குற்றமெலாம்
    இன்னே தணித்தே எனையாண்டு கொள்ளுமென்றாள்.

    118

    1919

    உம்மை யதனில் உலகமுண்டோன் தன்மகள்நீ
    நம்மை அணையும்வகை நற்றவஞ்செய் தாய்அதனால்
    இம்மை தனிலுன்னை எய்தினோ மென்றெங்கள்
    அம்மை தனைத்தழுவி ஐயன் அருள்புரிந்தான்.

    119

    1920

    எங்கண் முதல்வன் இறைவி தனைநோக்கி
    உங்கள் புனந்தன்னில் உறைந்திடமுன் னேகுதியால்
    மங்கைநல் லாயாமும் வருவோம் எனவுரைப்ப
    அங்கண் விடைகொண் டடிபணிந்து போயினளே.

    120

    1921

    வேறு
    வாங்கிய நிலைநுதல் வள்ளி என்பவள்
    பூங்குரல் ஏனலம் புனத்து ளேகியே
    ஆங்கனம் இருத்தலும் அயற்பு னத்தமர்
    பாங்கிவந் தடிமுறை பணிந்து நண்ணினாள்.

    121

    1922

    நாற்றமுந் தோற்றமும் நவிலொ ழுக்கமும்
    மாற்றமுஞ் செய்கையும் மனமும் மற்றதும்
    வேற்றுமை யாதலும் விளைவு நோக்கியே
    தேற்றமொ டிகுளையங் கினைய செப்புவாள்.

    122

    1923

    இப்புனம் அழிதர எங்ஙன் ஏகினை
    செப்புதி நீயெனத் தெரிவை நாணுறா
    அப்புற மென்சுனை யாடப் போந்தனன்
    வெப்புறும் வேனிலால் மெலிந்தி யானென்றாள்.

    123

    1924

    மைவிழி சிவப்பவும் வாய்வெ ளுப்பவும்
    மெய்வியர் வடையவும் நகிலம் விம்மவுங்
    கைவளை நெகிழவுங் காட்டுந் தண்சுனை
    எவ்விடை இருந்துள தியம்பு வாயென்றாள்.

    124

    1925

    சொற்றிடும் இகுளையைச் சுளித்து நோக்கியே
    உற்றிடு துணையதா உனையுட் கொண்டியான்
    மற்றிவண் இருந்தனன் வந்தெ னக்குமோர்
    குற்றம துரைத்தனை கொடியை நீயென்றாள்.

    125

    (118. முயங்காமல் - அணையாமல். கொன்னே - வீணாக.
    119. உம்மை - முன்சனனம். இம்மை - இப்பிறவி.
    எங்கள் அம்மை - வள்ளிநாயகி. 122. நாற்றம் - வாசனை.
    தோற்றம் - உருவம். ஒழுக்கம் - நடத்தை. மாற்றம் - சொல்.
    செய்கை - செயல். மனம் - உள்ளம். இவைகள் பெண்களிடம்
    வேற்றுமையாதல் காமம் நுகர்ந்தமைக்கு அடையாளங்கள் ஆகும்.
    தேற்றம் - துணிவு. இகுளை - தோழி. 125. சுளித்து - கோபித்து.
    ஓர் குற்றமது - ஒரு பழியை.)

    1926

    பாங்கியுந் தலைவியும் பகர்ந்து மற்றிவை
    யாங்கனம் இருத்தலும் அதனை நோக்கியே
    ஈங்கிது செவ்வியென் றெய்தச் சென்றனன்
    வேங்கைய தாகிமுன் நின்ற வேலையோன்.

    126

    1927

    கோட்டிய நிலையினன் குறிக்கொள் வாளியன்
    தீட்டிய குறியவாள் செறித்த கச்சினன்
    வேட்டம தழுங்கிய வினைவ லோனெனத்
    தாட்டுணை சிவந்திடத் தமியன் ஏகினான்.

    127

    1928

    வேறு
    காந்தள் போலிய கரத்தினீர் யானெய்த கணையால்
    பாய்ந்த சோரியும் பெருமுழக் குறுபகு வாயும்
    ஓய்ந்த புண்டுபடு மேனியு மாகியோர் ஒருத்தல்
    போந்த தோவிவண் புகலுதிர் புகலுதிர் என்றான்.

    128

    1929

    வேழ மேமுதல் உள்ளன கெடுதிகள் வினவி
    ஊழி நாயகன் நிற்றலும் உமக்குநே ரொத்து
    வாழு நீரருக் குரைப்பதே யன்றிநும் வன்மை
    ஏழை யேங்களுக் கிசைப்பதென் என்றனள் இகுளை.

    129

    1930

    ஐயர் வேட்டைவந் திடுவதுந் தினைப்புனத் தமர்ந்து
    தையல் காத்திடு கின்றதுஞ் சரதமோ பறவை
    எய்யும் வேட்டுவர் கோலமே போன்றன இருவர்
    மையல் தன்னையும் உரைத்திடும் விழியென மதித்தாள்.

    130

    1931

    மனத்தில் இங்கிவை உன்னியே துணைவியும் மற்றைப்
    புனத்தி லேகிவீற் றிருந்தனள் அன்னதோர் பொழுதில்
    சினத்தி டுங்கரி எய்தன மென்றசே வகன்போய்க்
    கனத்தை நேர்தரு கூந்தலாய் கேளெனக் கழறும்.

    131

    1932

    உற்ற கேளிரும் நீங்களே தமியனுக் குமக்குப்
    பற்ற தாயுள பொருளெலாந் தருவன் நும்பணிகள்
    முற்று நாடியே புரிகுவன் முடிவுகொள் ளாது
    சற்று நீரருள் செய்திடு மென்றனன் தலைவன்.

    132

    (127. வேட்டமது அழுங்கிய - வேட்டையால் இளைத்த.
    128. பகுவாய் - பிளந்தாய். ஒருத்தல் - ஆண் யானை.
    இவண் - இவ்விடம். 129. உமக்குநேர் ஒத்துவாழும் நீரருக்கு -
    உமது வன்மைக்கு ஒப்பாக வாழும் தன்மையினரிடம்.
    ஏழையேங்களுக்கு - பெண்களாகிய எங்களுக்கு.
    130. வேடர்கோலம் - வேடர் பறவை முதலியவற்றை
    வேட்டையாடும்போது நேரே பாராமல் குறிப்பாகப்பார்க்கும் தன்மை;
    இது வஞ்சப்பார்வை ஆகும். இருவர் மையல் - வள்ளிநாயகி,
    வேடவடிவுகொண்ட முருகன் இவர்களின் காதல்.
    132. பற்று - விருப்பம். நும் பணிகள் - உங்கள் கட்டளைகளை.)

    1933

    அண்ணல் கூறிய திகுளைதேர்ந் திடுதலும் ஐயர்
    எண்ண மீதுகொல் எம்பெருங் கிளைக்கிதோர் இழுக்கை
    மண்ணின் நாட்டவோ வந்தது மறவர்தம் பேதைப்
    பெண்ணை ஆதரித் திடுவரோ பெரியவர் என்றாள்.

    133

    1934

    சீத ரன்தரும் அமிர்தினை எயினர்கள் செய்த
    மாத வந்தனைப் பெண்ணினுக் கரசைமற் றெனக்குக்
    காதல் நல்கியே நல்லருள் புரிந்தகா ரிகையைப்
    பேதை யென்பதே பேதைமை என்றனன் பெரியோன்.

    134

    1935

    என்றெங் கோனுரை செய்தலும் மடமகள் இங்ஙன்
    குன்றங் காவலர் வருகுவர் அவர்மிகக் கொடியோர்
    ஒன்றுந் தேர்கிலர் காண்பரேல் எம்முயிர் ஒறுப்பார்
    நின்றிங் காவதென் போமென நெறிப்படுத் துரைத்தாள்.

    135

    1936

    தோட்டின் மீதுசெல் விழியினாய் தோகையோ டென்னைக்
    கூட்டி டாயெனில் கிழிதனில் ஆங்கவள் கோலந்
    தீட்டிட மாமட லேறிநும் மூர்த்தெரு வதனில்
    ஓட்டு வேன்இது நாளையான் செய்வதென் றுரைத்தான்.

    136

    1937

    ஆதி தன்மொழி துணைவிகேட் டஞ்சியை யர்க்கு
    நீதி யன்றுதண் பனைமட லேறுதல் நீர்இம்
    மாத வித்தருச் சூழலில் மறைந்திரும் மற்றென்
    காதல் மங்கையைத் தருவனென் றேகினள் கடிதின்.

    137

    1938

    வேறு
    அங்க வெல்லையில் அகம கிழ்ச்சியாய்
    எங்கள் தம்பிரான் இனிதின் ஏகியே
    மங்குல் வந்துகண் வளரும் மாதவிப்
    பொங்கர் தன்னிடைப் புக்கு வைகினான்.

    138

    1939

    பொள்ளெ னத்தினைப் புனத்திற் பாங்கிபோய்
    வள்ளி தன்பதம் வணங்கி மானவேற்
    பிள்ளை காதலும் பிறவுஞ் செப்பியே
    உள்ளந் தேற்றியே ஒருப்ப டுத்தினாள்.

    139

    1940

    இளைய மங்கை இகுளை ஏனலின்
    விளைத ரும்புனம் மெல்ல நீங்கியே
    அளவில் மஞ்ஞைகள் அகவும் மாதவிக்
    குளிர்பொ தும்பரிற் கொண்டு போயினாள்.

    140

    (133. மண்ணில் நாட்டவோ - உலகத்தில் நிறுத்தவோ.
    மறவர் - வேடர். பெரியவர் - உயர்குலத்தார்.
    134. சீதரன் தரும் அமிர்தினை - திருமால் பெற்ற மகளான
    அமிர்தம் போல்பவளை. 135. ஒன்றும் தேர்கிலர் - ஒன்றையும்
    உணரார். நெறிப்படுத்து - முறையாக.
    136. தோகையோடு - உனது துணைவியாகிய மயில்போன்ற
    வள்ளிநாயகியுடன். கிழிதனில் - துணியில். கோலம் - வடிவு.
    தீட்டி - எழுதி. மாமடல்ஏறி - பனைமடலால் ஆகிய குதிரைமீது .
    137. ஐயர்க்கு நீதி அன்று - அரசராகிய உமக்கு முறை அன்று.
    இம்மாதவித்தருச் சூழலில் - இக்குருக்கத்தி மரச்செறிவினிடத்து.
    138. மங்குல் - மேகம். கண்வளருதல் - படிதல். பொங்கர் - சோலை.
    139. பிள்ளை காதலும் - இளையோன் காதலும். பிறவும் என்றது
    மடலேறுவேன் என்று தலைவன் கூறியதை.
    140. அகவும் - கூவும்; ஆடும் எனினுமாம்.)

    1941

    பற்றின் மிக்கதோர் பாவை இவ்வரை
    சுற்றி யேகிநீ சூடுங் கோடல்கள்
    குற்று வந்துநின் குழற்கு நல்குவன்
    நிற்றி ஈண்டென நிறுவிப் போயினான்.

    141

    1942

    வேறு
    கோற்றொடி இகுகுளளன் குறிப்பி னால்வகை
    சாற்றினள் அகன்றிடத் தையல் நிற்றலும்
    ஆற்றவும் மகிழ்சிறந் தாறு மாமுகன்
    தோற்றினன் எதிர்ந்தனன் தொன்மை போலவே.

    142

    1943

    வடுத்துணை நிகர்விழி வள்ளி எம்பிரான்
    அடித்துணை வணங்கலும் அவளை அங்கையால்
    எடுத்தனன் புல்லினன் இன்ப மெய்தினான்
    சுடர்த்தொடி கேட்டியென் றிதனைச் சொல்லினான்.

    143

    1944

    உந்தையும் பிறரும்வந் துன்னை நாடுவர்
    செந்தினை விளைபுனஞ் சேவல் போற்றிடப்
    பைந்தொடி அணங்கொடு படர்தி நாளையாம்
    வந்திடு வோமென மறைந்து போயினான்.

    144

    1945

    போந்தபின் இரங்கியப் பொதும்பர் நீங்கியே
    ஏந்திழை வருதலும் இகுளை நேர்கொடு
    காந்தளின் மலர்சில காட்டி அன்னவள்
    கூந்தலிற் சூடியே கொடுசென் றேகினாள்.

    145

    1946

    இவ்வகை வழிபடும் இகுளை தன்னொடு
    நைவள மேயென நவிலுந் தீஞ்சொலாள்
    கொய்வரு தினைப்புனங் குறுகிப் போற்றியே
    அவ்விடை இருந்தனள் அகம்பு லர்ந்துளாள்.

    146

    1947

    வளந்தரு புனந்தனில் வள்ளி நாயகி
    தளர்ந்தனள் இருத்தலுந் தலைய ளித்திடும்
    இளந்தினை யின்குரல் ஈன்று முற்றியே
    விளைந்தன குறவர்கள் விரைந்து கூடினார்.

    147

    1948

    வேறு
    குன்ற வாணர்கள் யாவருங் கொடிச்சியை நோக்கித்
    துன்றும் ஏனல்கள் விளைந்தன கணிகளுஞ் சொற்ற
    இன்று காறிது போற்றியே வருந்தினை இனிநீ
    சென்றி டம்மஉன் சிறுகுடிக் கெனவுரை செய்தார்.

    148

    (141. கோடல்கள் - காந்தள் மலர்கள். குற்று - பறித்து.
    142. வகை - (பிரிதற்குரிய) வகையினை. தையல் வள்ளிநாயகி.
    143. வடு - மாவடு. 144. உந்தை - உனது தந்தை.
    பிறரும் என்றது தோழி முதலியவர்களை. படர்தி - செல்லுவாய்.
    146. நைவளம் - ஒரு பண்.
    148. கணிகளும் சொற்ற - வேங்கைகளும் மலர்ந்து கூறியன.)

    1949

    குறவர் இவ்வகை சொற்றன செவிப்புலங் கொண்டாங்
    கெறியும் வேல்படு புண்ணிடை எரிநுழைந் தென்ன
    மறுகு முள்ளத்த ளாகியே மற்றவண் நீங்கிச்
    சிறுகு டிக்குநல் லிகுளையுந் தானுமாய்ச் சென்றாள்.

    149

    1950

    மானி னங்களை மயில்களைக் கிளியைமாண் புறவை
    ஏனை யுள்ளவை தங்களை நோக்கியே யாங்கள்
    போன செய்கையைப் புகலுதிர் புங்கவர்க் கென்னாத்
    தானி ரங்கியே போயினள் ஒருதனித் தலைவி.

    150

    1951

    பூவை யன்னதோர் மொழியினாள் சிறுகுடிப் புகுந்து
    கோவில் வைப்பினுட் குறுகியே கொள்கைவே றாகிப்
    பாவை ஒண்கழங் காடலள் பண்டுபோல் மடவார்
    ஏவர் தம்மொடும் பேசலள புலம்பிவீற் றிருந்தாள்.

    151

    1952

    மற்ற எல்லையில் செவிலியும் அன்னையும் மகளை
    உற்று நோக்கியே மேனிவே றாகிய துனக்குக்
    குற்றம் வந்தவா றென்னென வற்புறக் கூறிச்
    செற்ற மெய்தியே அன்னவள் தன்னையிற் செறித்தார்.

    152

    1953

    வேறு
    ஓவிய மனைய நீராள் உடம்பிடித் தடக்கை யோனை
    மேவினள் பிரித லாலே மெய்பரிந் துள்ளம் வெம்பி
    ஆவிய தில்லா ளென்ன அவசமாய் அங்கண் வீழப்
    பாவையர் எடுத்துப் புல்லிப் பருவர லுற்றுச் சூழ்ந்தார்.

    153

    1954

    ஏர்கொள்மெய் நுடங்கு மாறும் இறைவளை கழலு மாறுங்
    கூர்கொள்கண் பனிக்கு மாறுங் குணங்கள்வே றாய வாறும்
    பீர்கொளு மாறும் நோக்கிப் பெண்ணினைப் பிறங்கற் சாரற்
    சூர்கொலாந் தீண்டிற் றென்றார் சூர்ப்பகை தொட்ட தோரார்.

    154

    1955

    தந்தையுங் குறவர் தாமுந் தமர்களும் பிறரும் ஈண்டிச்
    சிந்தையுள் அயர்வு கொண்டு தெரிவைதன் செயலை நோக்கி
    முந்தையின் முதியா ளோடு முருகனை முறையிற் கூவி
    வெந்திறல் வேலினாற்கு வெறியயர் வித்தார் அன்றே.

    155

    1956

    வெறியயர் கின்ற காலை வேலன்மேல் வந்து தோன்றிப்
    பிறிதொரு திறமும் அன்றால் பெய்வளை தமிய ளாகி
    உறைதரு புனத்தில் தொட்டாம் உளமகிழ் சிறப்பு நேரிற்
    குறையிது நீங்கு மென்றே குமரவேள் குறிப்பிற் சொற்றான்.

    156

    (150. புங்கவர்க்கு - முருகப்பெருமானுக்கு.
    151. கோவில் வைப்பு - நம்பி வேடனுடைய குடில்.
    152. இற்செறித்தல் - இனிவௌ�யே போகக்கூடாது என்று
    ஆணையிட்டு வீட்டில் இருக்கச்செய்தல்.
    154. நுடங்குதல் - துவளுதல். இறைவளை - கை வளையல்.
    பீர் - பசனை; அச்சமுமாம். சூர் - தெய்வம். சூர்ப்பகை தொட்டது
    ஓரார் - சூரருக்குப் பகையான முருகக் கடவுள் தொட்டதனை அறியாதார்.
    155. முந்தையின் - முன்னாளிற்போல. முதியாள் - தேவராட்டி;
    இவளைச் சாமியாடி என்பர். வெறிஅயர்வித்தார் - வெறியாட்டு
    என்னும் விழவினைச் செய்தார். வெறியாடல் - தெய்வத்தை
    அழைத்துக் குறிகேட்டல்.)

    1

    1957

    குறிப்பொடு நெடுவேல் அண்ணல் கூறிய கன்ன மூல
    நெறிப்பட வருத லோடும் நேரிழை அவசம் நீங்கி
    முறைப்பட எழுந்து வைக முருகனை முன்னி யாங்கி
    சிறப்பினை நேர்தும் என்று செவிலித்தாய் பராவல் செய்தாள்.

    157

    1958

    மனையிடை அம்மை வைக வனசரர் முதிர்ந்த செவ்வித்
    தினையினை அரிந்து கொண்டு சிறுகுடி அதனிற் சென்றார்
    தினையது நோக்கிச் செவ்வேள் இருவியம் புனத்திற் புக்குப்
    புனையிழை தன்னைக் காணான் புலம்பியே திரித லுற்றான்.

    158

    1959

    கனந்தனை வினவும் மஞ்ஞைக் கணந்தனை வினவும் ஏனற்
    புனந்தனை வினவும் அம்மென் பூவையை வினவுங் கிள்ளை
    இனந்தனை வினவும் யானை இரலையை வினவுந் தண்கா
    வனந்தனை வினவும் மற்றை வரைகளை வினவு மாதோ.

    159

    1960

    வாடினான் தளர்ந்தான் நெஞ்சம் வருந்தினான் மையற் கெல்லை
    கூடினான் வெய்து யிர்த்தான் குற்றடிச் சுவடு தன்னை
    நாடினான் திகைத்தான் நின்று நடுங்கினான் நங்கை தன்னை
    தேடினான் குமரற் கீது திருவிளை யாடல் போலாம்.

    160

    1961

    வல்லியை நாடு வான்போல் மாண்பகல் கழித்து வாடிக்
    கொல்லையம் புனத்திற் சுற்றிக் குமரவேள் நடுநாள் யாமஞ்
    செல்லுறு மெல்லை வேடர் சிறுகுடி தன்னிற் புக்குப்
    புல்லிய குறவர் செம்மல் குரம்பையின் புறம்போய் நின்றான்.

    161

    1962

    பாங்கிசெவ் வேளைக் கண்டு பணிந்துநீர் கங்குற் போதில்
    ஈங்குவந் திடுவ தொல்லா திறைவியும் பிரியின் உய்யாள்
    நீங்களிவ் விடத்திற் கூட நேர்ந்ததோ ரிடமு மில்லை
    ஆங்கவள் தன்னைக் கொண்டே அகலுதிர் அடிகள் என்றாள்.

    162

    1963

    என்றிவை கூறிப் பாங்கி இறைவனை நிறுவி யேகித்
    தன்றுணை யாகி வைகுந் தையலை யடைந்து கேள்வர்
    உன்றனை வவ்விச் செல்வான் உள்ளத்தில் துணியா இங்ஙன்
    சென்றனர் வருதி என்னச் சீரிதென் றொருப்பா டுற்றாள்.

    163

    1964

    தாய்துயில் அறிந்து தங்கள் தமர்துயில் அறிந்து துஞ்சா
    நாய்துயில் அறிந்து மற்றந் நகர்துயில் அறிந்து வெய்ய
    பேய்துயில் கொள்ளும் யாமப் பெரும்பொழு ததனிற் பாங்கி
    வாய்தலிற் கதவை நீக்கி வள்ளியைக் கொடுசென் றுய்த்தாள்.

    164

    (157. கன்னமூலம் - காதினிடத்து. அவசம் - மயக்கம்.
    செவிலித்தாய் - வளர்ப்புத் தாய். 158. வனசரர் - வேடர்கள்.
    இருவி - தினைத்தாள். 159. கனம் - மேகம்.
    160. குற்றடி - சிறியஅடி. சுவடு - அடையாளம்.
    161. நடுநாள் யாமம் - நடுஇரவு. புல்லிய - இழிந்த.
    குரவர் செம்மல் - வேட நம்பி. குரம்பை - குடில்.
    162. கங்குற்போதில் இங்கு வந்திடுவது ஒல்லாது - ஏற்று இழிவு
    உடைத்தாகிய இம்மலையில் பாம்பு, புலி, கரடி, யானை முதலியவற்றால்
    ஏதமுண்டாகும்; ஆதலால் இராக்காலத்தில் வருதல் தகுதி அன்று.
    163. வவ்வி - கவர்ந்து. சீரிது - நல்லது.)

    1965

    அறுமுக வொருவன் தன்னை யாயிழை எதிர்ந்து தாழ்ந்து
    சிறுதொழில் எயினர் ஊரில் தீயேனேன் பொருட்டால் இந்த
    நறுமலர்ப் பாதங் கன்ற நள்ளிருள் யாமந் தன்னில்
    இறைவநீர் நடப்ப தேயென் றிரங்கியே தொழுது நின்றாள்.

    165

    1966

    மாத்தவ மடந்தை நிற்ப வள்ளலை இகுளை நோக்கித்
    தீத்தொழில் எயினர் காணில் தீமையாய் விளையும் இன்னே
    ஏத்தருஞ் சிறப்பி னும்மூர்க் கிங்கவள் தனைக்கொண் டேகிக்
    காத்தருள் புரியு மென்றே கையடை யாக நேர்ந்தாள்.

    166

    1967

    முத்துறு முறுவ லாளை மூவிரு முகத்தி னான்தன்
    கைத்தலந் தன்னில் ஈந்து கைதொழு திகுளை நிற்ப
    மெய்த்தகு கருணை செய்து விளங்கிழய் நீயெம் பாலின்
    வைத்திடு கருணை தன்னை மறக்கலங் கண்டாய் என்றான்.

    167

    1968

    மையுறு தடங்கண் நல்லாள் வள்ளியை வணக்கஞ் செய்து
    மெய்யுறப் புல்லி அன்னாய் விரைந்தனை சேறி யென்னா
    ஐயனோ டினிது கூட்டி ஆங்கவர் விடுப்ப மீண்டு
    கொய்யுறு கவரி மேய்ந்த குரம்பையின் கூரை புக்காள்.

    168

    1969

    விடைபெற்றே இகுளை ஏக வேலுடைக் கடவுள் அன்ன
    நடைபெற்ற மடந்தை யோடு நள்ளிரு ளிடையே சென்று
    கடைபெற்ற சீறூர் நீங்கிக் காப்பெலாங் கடந்து காமன்
    படைபெற்றுக் குலவும் ஆங்கோர் பசுமரக் காவுட் சேர்ந்தான்.

    169

    1970

    செஞ்சுடர் நெடுவேல் அண்ணல் செழுமலர்க் காவிற் புக்கு
    வஞ்சியொ டிருந்த காலை வைகறை விடியல் செல்ல
    எஞ்சலில் சீறூர் தன்னில் இறையவன் தனது தேவி
    துஞ்சலை யகன்று வல்லே துணுக்கமுற் றெழுந்தாள் அன்றே.

    170

    1971

    சங்கலை கின்ற செங்கைத் தனிமகட் காணா ளாகி
    எங்கணும் நாடிப் பின்னர் இகுளையை வந்து கேட்பக்
    கங்குலின் அவளும் நானுங் கண்படை கொண்ட துண்டால்
    அங்கவள் அதற்பின் செய்த தறிகிலன் அன்னாய் என்றாள்.

    171

    1972

    தம்மகட் காணா வண்ணந் தாய்வந்து புகலக் கேட்டுத்
    தெம்முனைக் குறவர் செம்மல் தெருமந்து செயிர்த்துப் பொங்கி
    நம்மனைக் காவல் நீங்கி நன்னுதற் பேதை தன்னை
    இம்மெனக் கொண்டு போந்தான் யாவனோ ஒருவன் என்றான்.

    172

    1973

    மற்றிவை புகன்று தாதை வாட்படை மருங்கிற் கட்டிக்
    கொற்றவில் வாளி ஏந்திக் குமரியைக் கவர்ந்த கள்வன்
    உற்றிடு நெறியை நாட ஒல்லையிற் போவன் என்னாச்
    செற்றமொ டெழுந்து செல்லச் சிறுகுடி எயினர் தேர்ந்தார்.

    173

    (165. இறைவ - இறைவனே! 166. மாத்தவ மடந்தை - வள்ளிநாயகி.
    கையடை - அடைக்கலம். 168. சேறி - செல்வாய்.
    170. வைகறை விடியல் - விடியற்காலம்; அற்றை நாட்பொழுது எனினுமாம்.
    171. சங்கு - சங்குவளையல். கண்படை கொண்டது - உறங்கியது.)

    1974

    எள்ளுதற் கரிய சீறூர் இடைதனில் யாமத் தேகி
    வள்ளியைக் கவர்ந்து கொண்டு மாயையால் மீண்டு போன
    கள்வனைத் தொடர்தும் என்றே கானவர் பலருங் கூடிப்
    பொள்ளெனச் சிலைகோல் பற்றிப் போர்த்தொழிற் கமைந்துபோனர். 174

    174

    1975

    வேடுவர் யாரும் ஈண்டி விரைந்துபோய் வேந்த னோடு
    கூடினர் இரலை தன்னைக் குறித்தனர் நெறிகள் தோறும்
    ஓடினர் பொதும்ப ரெல்லாம் உலாவினர் புலங்கள் புக்கு
    நாடினர் சுவடு நோக்கி நடந்தனர் இடங்க ளெங்கும்.

    175

    1976

    ஈங்கனம் மறவ ரோடும் இறையவன் தேடிச் செல்லப்
    பாங்கரில் ஒருதண் காவிற் பட்டிமை நெறியால் உற்றாள்
    ஆங்கனந் தெரியா அஞ்சி ஆறுமா முகத்து வள்ளல்
    பூங்கழல் அடியில் வீழ்ந்து பொருமியே புகல லுற்றாள்.

    176

    1977

    கோலொடு சிலையும் வாளுங் குந்தமும் மழுவும் பிண்டி
    பாலமும் பற்றி வேடர் பலருமாய்த் துருவிச் சென்று
    சோலையின் மருங்கு வந்தார் துணுக்கமுற் றுளதென் சிந்தை
    மேலினிச் செய்வ தென்கொல் அறிகிலேன் விளம்பா யென்றாள்.

    177

    1978

    வருந்தலை வாழி நல்லாய் மால்வரை யோடு சூரன்
    உரந்தனை முன்பு கீண்ட உடம்பிடி யிருந்த நும்மோர்
    விரைந்தமர் புரியச் சூழின் வீட்டுதும் அதனை நோக்கி
    இருந்தருள் நம்பின் என்னா இறைமகட் கெந்தை சொற்றான்.

    178

    1979

    குறத்திரு மடந்தை இன்ன கூற்றினை வினவிச் செவ்வேள்
    புறத்தினில் வருத லோடும் பொள்ளெனக் குறுகி அந்தத்
    திறத்தினை யுற்று நோக்கிச் சீறிவெய் துயிர்த்துப் பொங்கி
    மறத்தொழில் எயினர் காவை மருங்குற வளைந்து கொண்டார்.

    179

    1980

    தாதையங் கதனைக் கண்டு தண்டலை குறுகி நந்தம்
    பேதையைக் கவர்ந்த கள்வன் பெயர்கிலன் எமது வன்மை
    ஏதையு மதியான் அம்மா இவன்விறல் எரிபாய்ந்த துண்ணும்
    ஊதையங் கான மென்ன முடிக்குதும் ஒல்லை யென்றான்.

    180

    1981

    குறவர்கள் முதல்வன் தானுங் கொடுந்தொழில் எயினர் யாரும்
    மறிகட லென்ன வார்த்து வார்சிலை முழுதும் வாங்கி
    எறிசுடர்ப் பரிதித் தேவை எழிலிகள் மறைத்தா லென்ன
    முறைமுறை அம்பு வீசி முருகனை வளைந்து கொண்டார்.

    181

    1982

    ஒட்டல ராகிச் சூழ்ந்தாங் குடன்றுபோர் புரிந்து வெய்யோர்
    விட்டவெம் பகழி யெல்லாம் மென்மலர் நீர வாகிக்
    கட்டழ குடைய செவ்வேற் கருணையங் கடலின் மீது
    பட்டன பட்ட லோடும் பைந்தொடி பதைத்துச் சொல்வாள்.

    182

    (174. தொடர்தும் - பின்பற்றுவோம். 175. ஈண்டி - ஒருங்குகூடி.
    இரலை - ஊது கொம்பு. குறித்தனர் - ஊதினர்.
    176. பட்டிமை நெறி - களவொழுக்கம்.
    178. உடம்பிடி - வேல். வீட்டுதும் - அழிப்போம்.
    நம்பின் - நமது பின்புறத்தில். 180. ஊதை - வெட்டிச் சுடுகின்ற.
    181. பரிதித்தேவை - சூரியன். எழிலி - மேகம்.
    182. ஒட்டலர் - பகைவர்.)

    1983

    நெட்டிலை வாளி தன்னை ஞெரேலென நும்மேற் செல்லத்
    தொட்டிடு கையர் தம்மைச் சுடருடை நெடுவேல் ஏவி
    அட்டிடல் வேண்டும் சீயம் அடுதொழில் குறியா தென்னில்
    கிட்டுமே மரையும் மானுங் கேழலும் வேழந் தானும்.

    183

    1984

    என்றிவை குமரி செப்ப எம்பிரான் அருளால் பாங்கர்
    நின்றதோர் கொடிமாண் சேவல் நிமிர்ந்தெழுந் தார்ப்புக் கொள்ளக்
    குன்றவர் முதல்வன் தானுங் குமரருந் தமரும் யாரும்
    பொன்றின ராகி மாண்டு பொள்ளெனப் புவியில் வீழ்ந்தார்.

    184

    1985

    தந்தையும் முன்னை யோரும் தமரும்வீழ்ந் திறந்த தன்மை
    பைந்தொடி வள்ளி நோக்கிப் பதைபதைத் திரங்கிச் சோரக்
    கந்தனத் துணைவி அன்பு காணுவான் கடிகா நீங்கிச்
    சிந்தையில் அருளோ டேக அனையளுந் தொடர்ந்து சென்றாள்.

    185

    1986

    செல்லநா ரதப்பேர் பெற்ற சீர்கெழு முனிநேர் வந்து
    வல்லியோ டிறைவன் தன்னை வணங்கிநின் செய்கை எல்லாஞ்
    சொல்லுதி என்ன அன்னான் தோகையைக் காண்டல் தொட்டு
    மல்லல்வேட் டுவரை யட்டு வந்திடும் அளவுஞ் சொற்றான்.

    186

    1987

    பெற்றிடு தந்தை தன்னைப் பிறவுள சுற்றத் தோரைச்
    செற்றமொ டட்டு நீக்கிச் சிறந்தநல் லருள்செ யாமல்
    பொற்றொடி தன்னைக் கொண்டு போந்திடத் தகுமோ வென்னா
    மற்றிவை முனிவன் கூற வள்ளலும் அ�தாம் என்றான்.

    187

    1988

    விழுப்பம துளதண் காவில் விசாகன்மீண் டருளித் தன்பால்
    முழுப்பரி வுடைய நங்கை முகத்தினை நோக்கி நம்மேற்
    பழிப்படு வெம்போர் ஆற்றிப் பட்டநுங் கிளையை எல்லாம்
    எழுப்புதி என்ன லோடும் இனிதென இறைஞ்சிச் சொல்வாள்.

    188

    1989

    விழுமிய உயிர்கள் சிந்தி வீழ்ந்தநங் கேளிர் யாரும்
    எழுதிரென் றருள லோடும் இருநிலத் துறங்கு கின்றோர்
    பழையநல் லுணர்வு தோன்றப் பதைபதைத் தெழுதற் கொப்பக்
    குழுவுறு தமர்க ளோடுங் குறவர்கோன் எழுந்தான் அன்றே.

    189

    1990

    எழுந்திடு கின்ற காலை எம்பிரான் கருணை வௌ�ளம்
    பொழிந்திடு வதன மாறும் புயங்கள்பன் னிரண்டும் வேலும்
    ஒழிந்திடு படையு மாகி உருவினை அவர்க்குக் காட்ட
    விழுந்தனர் பணிந்து போற்றி விம்மித ராகிச் சொல்வார்.

    190

    1991

    அடுந்திறல் எயினர் சேரி அளித்திடு நீயே எங்கள்
    மடந்தையைக் கரவில் வௌவி வரம்பினை அழித்துத் தீரா
    நெடுந்தனிப் பழிய தொன்று நிறுவினை புதல்வர் கொள்ள
    விடந்தனை அன்னை யூட்டின் விலக்கிடு கின்றா ருண்டோ.

    191

    (183. சீயம் - சிங்கம். மரை, மான் - மான் வகைகள்.
    185. முன்னையோர் - தமையன். அத்துணைவி - அந்த வள்ளி நாயகி.
    186. காண்டல் தொட்டு - கண்டதுமுதல். அட்டு - கொன்று.
    188. விழுப்பம் - சிறப்பு. விசாகன் - முருகக் கடவுள்.)

    1992

    ஆங்கது நிற்க எங்கள் அரிவையை நசையால் வௌவி
    நாங்களும் உணரா வண்ணம் நம்பெருங் காவல் நீங்கி
    ஈங்கிவட் கொணர்ந்தாய் எந்தாய் இன்னினிச் சீறூர்க் கேகித்
    தீங்கனல் சான்றா வேட்டுச் செல்லுதி நின்னூர்க் கென்றார்.

    192

    1993

    மாதுலன் முதலோர் சொற்ற மணமொழிக் கிசைவு கொண்டு
    மேதகு கருணை செய்து மெல்லியல் தனையுங் கொண்டு
    கோதிலா முனிவ னோடுங் குளிர்மலர்க் காவு நீங்கிப்
    பாதபங் கயங்கள் நோவப் பருப்பதச் சீறூர் புக்கான்.

    193

    1994

    தந்தையுஞ் சுற்றத் தோருஞ் சண்முகன் பாங்க ரேகிச்
    சிந்தையின் மகிழ்ச்சி யோடு சிறுகுடி யோரை நோக்கிக்
    கந்தனே நமது மாதைக் கவர்ந்தனன் நமது சொல்லால்
    வந்தனன் மணமுஞ் செய்ய மற்றியது நிகழ்ச்சி யென்றார்.

    194

    1995

    சங்கரன் மததத தானே தையலைக் கவர்ந்தான் என்றும்
    மங்கல வதுவை செய்ய வந்தனன் இங்ஙன் என்றும்
    தங்கள்சுற் றத்தோர் கூறச் சிறுகுடி தன்னில் உற்றோர்
    பொங்குவெஞ் சினமும் நாணும் மகிழ்ச்சியும் பொடிப்ப நின்றார்.

    195

    1996

    குன்றவர் தமது செம்மல் குறிச்சியில் தலைமைத் தான
    தன்றிரு மனையி னூடே சரவண முதல்வன் தன்னை
    மன்றலங் குழலி யோடு மரபுளி யுய்த்து வேங்கைப்
    பொன்றிகழ் அதளின் மீது பொலிவுற இருத்தி னானே.

    196

    1997

    அன்னதோர் வேலை தன்னில் அறுமுக முடைய வள்ளல்
    தன்னுழை இருந்த நங்கை தனையரு ளோடு நோக்கக்
    கொன்னவில் குறவர் மாதர் குயிற்றிய கோலம் நீங்கி
    முன்னுறு தெய்வக் கோல முழுதொருங் குற்ற தன்றே.

    197

    1998

    கவலைதீர் தந்தை தானுங் கணிப்பிலாச் சுற்றத் தாருஞ்
    செவிலியும் அன்னைதானும் இகுளையும் தெரிவை மாரும்
    தவலருங் கற்பின் மிக்க தம்மகள் கோலம் நோக்கி
    இவள்எம திடத்தில் வந்த தெம்பெருந் தவமே என்றார்.

    198

    1999

    அந்தநல் வேலை தன்னில் அன்புடைக் குறவர் கோமான்
    கந்தவேள் பாணி தன்னில் கன்னிகை கரத்தை நல்கி
    நந்தவ மாகி வந்த நங்கையை நயப்பால் இன்று
    தந்தனன் கொள்க வென்று தண்புனல் தாரை உய்த்தான்.

    199

    2000

    நற்றவம் இயற்றுந் தொல்சீர் நாரதன் அனைய காலைக்
    கொற்றம துடைய வேலோன் குறிப்பினால் அங்கி யோடு
    மற்றுள கலனுந் தந்து வதுவையின் சடங்கு நாடி
    அற்றம தடையா வண்ணம் அருமறை விதியாற் செய்தான்.

    200

    (192. நசையால் - ஆசையால். தீங்கனல் சான்றா - நல்ல ஓமாக்கினி
    சாட்சியாக. வேட்டு - திருமணம் புரிந்து. 193. மாதுலன் - மாமன்;
    வேடநம்பி. கோதிலா முனிவன் - இங்கு நாரத முனிவன்.
    196. குறிச்சி - மலைநாட்டுச் சிற்றூர். வேங்கை அதள் - புலித்தோல்.
    197. தவிலல் - செய்தல். முன்னுறு தெய்வக் கோலம் - முன்னே
    சுந்தரியாயிருந்த காலத்துள்ள அழகு. 199. பாணிதன்னில் - கையில்.
    தண்புனல்தாரை உய்த்தான் - நீரினால் தாரைவார்த்தான்.)

    2001

    ஆவதோர் காலை தன்னில் அரியும்நான் முகனும் வானோர்
    கோவொடு பிறருஞ் சூழக் குலவரை மடந்தை யோடுந்
    தேவர்கள் தேவன்வந்து சேண்மிசை நின்று செவ்வேள்
    பாவையை வதுவை செய்யும் பரிசினை முழுதுங் கண்டான்.

    201

    2002

    கண்ணுதல் ஒருவன் தானுங் கவுரியுங் கண்ணாற் கண்டு
    தண்ணளி புரிந்து நிற்பத் தண்டுழாய் முடியோ னாதிப்
    பண்ணவர் உவகை நீடிப் பனிமலர் மாரி வீதி
    அண்ணலை வழிபட் டேத்தி அஞ்சலி புரிந்திட் டார்த்தார்.

    202

    2003

    அறுமுக முடைய வள்ளல் அன்னது நோக்கிச் சீறூர்
    இறையதும் உணரா வண்ணம் இமையமேல் அணங்கி னோடுங்
    கறையமர் கண்டன் தன்னைக் கைதொழு தேனை யோர்க்கு
    முறைமுறை யுவகை யோடு முழுதருள் புரிந்தான் அன்றே.

    203

    2004

    வேறு
    அங்க வேலையின் அலரின் மேலவன்
    செங்கண் மாயவன் தேவர் கோமகன்
    செங்கை தீர்தருந் தவத்தர் தம்மொடு
    மங்கை பாதியன் மறைந்து போயினான்.

    204

    2005

    போன எல்லையில் பொருவில் நாரதன்
    தானி யற்றிய சடங்கு முற்றலுங்
    கான வேடுவர் கன்னி தன்னொடு
    மான வேலனை வணங்கிப் போற்றினான்.

    205

    2006

    வேறு
    மற்றது காஆஆ தன்னில் மாதுலன் வள்ளி தன்னைக்
    கொற்றவே லுடைய நம்பி வதுவைசெய் கோலம் நோக்கி
    உற்றவிவ் விழிகள் தம்மால் உறுபயன் ஒருங்கே இன்று
    பெற்றனன் என்றான் அன்னான் உவகையார் பேசற் பாலார்.

    206

    2007

    மெல்லிடை கொம்பென் றுன்ன விரைமலர் தழைமேற் கொண்ட
    புல்லிய குறவர் மாதர் பொருவில்சீர் மருகன் தானும்
    வல்லியும் இன்னே போல வைகலும் வாழ்க என்று
    சொல்லியல் ஆசி கூறித் தூமலர் அறுகு தூர்த்தார்.

    207

    2008

    செந்தினை இடியும் தேனும் தீம்பல கனியும் காயும்
    கந்தமும் பிறவு மாக இலைபொலி கலத்தி லிட்டுப்
    பைந்தொடி யணங்கு நீயும் பரிவுடன் நுகர்திர் என்ன
    வெந்திறல் எயினர் கூற வியனருள் புரிந்தான் மேலோன்.

    208

    (202. கவுரி - உமாதேவியார். பண்ணவர் - தேவர்கள்.
    204. தேவர்கோமான் - இந்திரன்; தேவர்களும் அவர்களுடைய
    அரசனான இந்திரன் எனினுமாம்.
    207. விரைமலர் - நறுமணம் உள்ள மலர்.
    அறுகு தூர்த்தார் - அறுகம்புல்லைத் தூவினார்.
    இங்கு அறுகு அரிசி கலந்த அறுகு. இதனைச் சேஷையிடுதல் என்பர். 208. இடி - மாவு. கந்தம் - கிழங்கு.)

    2009

    வேறு
    கிராதர் மங்கையும் பராபரன் மதலையும் கெழுமி
    விராவு சில்லுணா மிசைந்தனர் மிசிந்திடு தன்மை
    முராரி யாதியாந் தேவர்பால் முனிவர்பால் மற்றைச்
    சராச ரங்கள்பால் எங்கணுஞ் சார்ந்துள தன்றே.

    209

    2010

    அனைய காலையில் அறுமுகன் எழுந்துநின் றாங்கே
    குனியும் வில்லுடைக் குறவர்தங் குரிசிலை நோக்கி
    வனிதை தன்னுடன் சென்றியாஞ் செருத்தணி வரையில்
    இனிது வைகுதும் என்றலும் நன்றென இசைத்தான்.

    210

    2011

    தாயும் பாங்கியுஞ் செவிலியுந் தையலை நோக்கி
    நாய கன்பின்னர் நடத்தியோ நன்றெனப் புல்லி
    நேய மோடுபல் லாசிகள் புகன்றிட நெடுவேல்
    சேயு டன்கடி தேகவே சிந்தையுட் கொண்டாள்.

    211

    2012

    பாவை தன்னுடன் பன்னிரு புயமுடைப் பகவன்
    கோவில் நீங்கியே குறவர்தங் குரிசிலை விளித்துத்
    தேவ ருந்தொழச் சிறுகுடி அரசியல் செலுத்தி
    மேவு கென்றவண் நிறுவியே போயினன் விரைவில்.

    212

    2013

    இன்ன தன்மைசேர் வள்ளியஞ் சிலம்பினை இகந்து
    பன்னி ரண்டுமொய்ம் புடையவன் பாவையும் தானும்
    மின்னும் வெஞ்சுடர்ப் பரிதியும் போலவிண் படர்ந்து
    தன்னை யேநிகர் தணிகைமால் வரையினைச் சார்ந்தான்.

    213

    2014

    செச்சை மௌலியான் செருத்தணி வரைமிசைத் தெய்வத்
    தச்சன் முன்னரே இயற்றிய தனிநகர் புகுந்து
    பச்சிளங் கொங்கை வனசரர் பாவையோ டொன்றி
    இச்ச கத்துயிர் யாவையும் உய்யவீற் றிருந்தான்.

    214

    2015

    கந்த வேலையில் வள்ளிநா யகிஅயில் வேற்கைக்
    கந்த வேள்பதம் வணங்கியே கைதொழு தைய
    [1] இந்த மால்வரை இயற்கையை இயம்புதி என்னச்
    சிந்தை நீடுபேர் அருளினால் இன்னன செப்பும்.
    ([1] பா-ம் - விந்தை)

    215

    2016

    செங்கண் வெய்யசூர்ச் செருத்தொழி லினுஞ்சிலை வேடர்
    தங்க ளிற்செயுஞ் செருத்தொழி லினுந்தணிந் திட்டே
    இங்கு வந்தியாம் இருத்தலால் செருத்தணி என்றோர்
    மங்க லந்தரு பெயரினைப் பெற்றதிவ் வரையே.

    216

    2017

    முல்லை வாள்நகை உமையவள் முலைவளை அதனான்
    மல்லல் மாநிழல் இறைவரை வடுப்படுத் தமரும்
    எல்லை நீர்வயற் காஞ்சியின் அணுகநின் றிடலால்
    சொல்ல லாந்தகைத் தன்றிந்த மால்வரைத் தூய்மை.

    217

    (209. கிராதர் - வேடர். பராபரன் - சிவன்.
    210. குனியும் - வளையும். செருத்தணிவரை - திருத்தணிகைமலை.
    214. செச்சை - வெட்சிமாலை. 215. இந்தமால்வரை - இத்திருத்தணிகைமலை.
    216. இச்செய்யுள் செருத்தணி என்ற பெயர்க் காரணம் கூறுகிறது.
    217. மாநிழல் இறைவர் - மாமர நிழலில் எழுந்தருளிய ஏகாம்பரநாதர்.
    வடு - தழும்பு. அணுக - சமீபமாக.)

    2018

    விரையி டங்கொளும் போதினுள் மிக்கபங் கயம்போல்
    திரையி டங்கொளும் நதிகளிற் சிறந்தகங் கையைப்போல்
    தரையி டங்கொளும் பதிகளிற் காஞ்சியந் தலம்போல்
    வரையி டங்களிற் சிறந்ததித் தணிகைமால் வரையே.

    218

    2019

    கோடி யம்பியும் வேய்ங்குழல் ஊதியும் குரலால்
    நீடு தந்திரி இயக்கியும் ஏழிசை நிறுத்துப்
    பாடி யுஞ்சிறு பல்லியத் தின்னிசை படுத்தும்
    ஆடு தும்விளை யாடுதும் இவ்வரை அதன்கண்.

    219

    2020

    மந்த ரத்தினும் மேருமால் வரையினும் மணிதோய்
    கந்த ரத்தவன் கயிலையே காதலித் ததுபோல்
    சுந்த ரக்கிரி தொல்புவி தனிற்பல வெனினும்
    இந்த வெற்பினில் ஆற்றவும் மகிழச்சியுண் டெமக்கே.

    220

    2021

    வான்றி கழந்திடும் இருநில வரைபல அவற்றுள்
    ஆன்ற காதலால் இங்ஙனம் மேவுதும் அதற்குச்
    சான்று வாசவன் வைகலுஞ் சாத்துதற் பொருட்டால்
    மூன்று காவியிச் சுனைதனில் எமக்குமுன் வைத்தான்.

    221

    2022

    காலைப் போதினில் ஒருமலர் கதிர்முதிர் உச்சி
    வேலைப் போதினில் ஒருமலர் விண்ணெலாம் இருள்சூழ்
    மாலைப் போதினில் ஒருமல ராகஇவ் வரைமேல்
    நீலப் போதுமூன் றொழிவின்றி நிற்றலும் மலரும்.

    222

    2023

    ஆழி நீரர சுலகெலாம் உண்ணினும் அளிப்போர்
    ஊழி பேரினும் ஒருபகற் குற்பலம் மூன்றாய்த்
    தாழி ருஞ்சுனை தன்னிடை மலர்ந்திடும் தவிரா
    மாழை ஒண்கணாய் இவ்வரைப் பெருமையார் வகுப்பார்.

    223

    2024

    இந்த வெற்பினைத் தொழுதுளார் பவமெலாம் ஏகும்
    சிந்தை அன்புடன் இவ்வரை யின்ணே சென்று
    முந்த நின்றவிச் சுனைதனில் விதிமுறை மூழ்கி
    வந்து நந்தமைத் தொழுதுளார் நம்பதம் வாழ்வார்.

    224

    2025

    அஞ்சு வைகல்இவ் வகன்கிரி நண்ணியெம் மடிகள்
    தஞ்ச மென்றுளத் துன்னியே வழிபடுந் தவத்தோர்
    நெஞ்ச கந்தனில் வெ�கிய போகங்கள் நிரப்பி
    எஞ்ச லில்லதோர் வீடுபே றடைந்தினி திருப்பார்.

    225

    (218. விரை - மணம். வரை இடங்களில் - மலை இடங்களில்.
    219. கோடு - ஊதுகொம்பு. குரலால் - உரோமத்தால்; இன்னிசையால்
    எனினுமாம். தந்திரி - வீணை. 220. இந்த வெற்பினில் - இத்தணிகைமலையில்.
    221. சான்று - சாட்சி. காவி - செங்காவி மலர்க்கொடிகள்.
    223. ஆழிநீர் அரசு - வட்ட வடிவான கடல். தவிரா - தவறாமல்.
    மாழை - மாவடு. 224. பவம் - பாவம். நம்பதம் - சாயுச்சியம்.
    225. வெ�கிய - விரும்பிய.)

    2026

    தேவ ராயினும் முனிவர ராயினும் சிறந்தோர்
    ஏவ ராயினும் பிறந்தபின் இவ்வரை தொழாதார்
    தாவ ராதிகள் தம்மினுங் கடையரே தமது
    பாவ ராசிகள் அகலமோ பார்வலஞ் செயிலும்.

    226

    2027

    பாத கம்பல செய்தவ ராயினும் பவங்கள்
    ஏதும் வைகலும் புரிபவ ராயினும் எம்பால்
    ஆத ரங்கொடு தணிகைவெற் படைவரேல் அவரே
    வேதன் மாலினும் விழுமியர் எவற்றினும் மிக்கார்.

    227

    2028

    வேறு
    உற்பல வரையின் வாழ்வோர் ஓரொரு தருமஞ் செய்யில்
    பற்பல வாகி யோங்கும் பவங்களில் பலசெய் தாலுஞ்
    சிற்பம தாகி யொன்றாய்த் தேய்ந்திடும் இதுவே யன்றி
    அற்புத மாக இங்ஙன் அநந்தகோ டிகளுண் டன்றே.

    228

    2029

    என்றிவை குமரன் கூற எயினர்தம் பாவை கேளா
    நன்றென வுவகை யெய்தி நானில வரைப்பி னுள்ள
    குன்றிடைச் சிறந்த இந்தத் தணிகைமால் வரையின் கொள்கை
    உன்றிரு வருளால் தேர்ந்தே உய்த்தனன் தமியன் என்றாள்.

    229

    2030

    இவ்வரை ஒருசார் தன்னில் இராறுதோ ளுடைய எந்தை
    மைவிழி யணங்குந் தானும் மாலயன் உணரா வள்ளல்
    ஐவகை யுருவில் ஒன்றை ஆகம விதியால் உய்த்து
    மெய்வழ பாடு செய்து வேண்டியாங் கருளும் பெற்றான்.

    230

    2031

    கருத்திடை மகிழ்வும் அன்புங் காதலுங் கடவ முக்கண்
    ஒருத்தனை வழிபட் டேத்தி ஒப்பிலா நெடுவேல் அண்ணல்
    மருத்தொடை செறிந்த கூந்தல் வள்ளிநா யகியுந் தானுஞ்
    செருத்தணி வரையில் வைகிச் சிலபகல் அமர்ந்தான் அன்றே.

    231

    2032

    தள்ளரும் விழைவின் மிக்க தணிகையின் நின்றும் ஓர்நாள்
    வள்ளியுந் தானு மாக மானமொன் றதனிற் புக்கு
    வௌ�ளியங் கிரியின் பாங்கர் மேவிய கந்த வெற்பில்
    ஔ�ளிணர்க் கடப்பந் தாரோன் உலகெலாம் வணங்கப் போனான்.

    232

    2033

    கந்தவெற் பதனிற் சென்று படிகெழு மானம் நீங்கி
    அந்தமில் பூதர் போற்றும் அம்பொனா லயத்தின் ஏகி
    இந்திரன் மகடூஉ வாகும் ஏந்திழை இனிது வாழும்
    மந்திர மதனிற் புக்கான் வள்ளியுந் தானும் வள்ளல்.

    233

    (228. உற்பலவரை - தணிகைமலை. இத்தணிகைமலையில்
    வாழ்வார் தீங்கினை ஒருபோதும் செய்யார் என்பார் செய்தாலும்
    என்ற எதிர்மறை உம்மைகொடுத்துக் கூறினார்.
    230. ஐவகை உருவு - சிவசாதாக்கியம், அமூர்த்தி சாதாக்கியம்,
    மூர்த்தி சாதாக்கியம், கர்த்திரு சாதாக்கியம், கன்ம சாதாக்கியம்
    என ஐந்து வடிவு. ஒன்று என்றது கன்ம சாதாக்கியமாகிய
    பீடலிங்க வடிவை. 232. மானம் - தேவவிமானம்.
    233. இந்திரன் மகடூஉ ஆகும் ஏந்திழை - தெய்வயானையம்மை.)

    2034

    ஆரணந் தெரிதல் தேற்றா அறுமுகன் வரவு நோக்கி
    வாரண மடந்தை வந்து வந்தனை புரிய அன்னாள்
    பூரண முலையும் மார்பும் பொருந்துமா றெடுத்துப் புல்லித்
    தாரணி தன்னில் தீர்ந்த தனிமையின் துயரந் தீர்த்தான்.

    234

    2035

    ஆங்கது காலை வள்ளி அமரர்கோன் அளித்த பாவை
    பூங்கழல் வணக்கஞ் செய்யப் பொருக்கென எடுத்துப் புல்லி
    ஈங்கொரு தமிய ளாகி இருந்திடு வேனுக் கின்றோர்
    பாங்கிவந் துற்ற வாறு நன்றெனப் பரிவு கூர்ந்தாள்.

    235

    2036

    சூர்க்கடல் பருகும் வேலோன் துணைவியர் இருவ ரோடும்
    போக்கடல் கொண்ட சீயப் பொலன்மணி அணைமேற் சேர்ந்தான்
    பாற்கடல் அமளி தன்னில் பாவையர் புறத்து வைகக்
    கார்க்கடற் பவள வண்ணன் கருணையோ டமரு மாபோல்.

    236

    2037

    செங்கனல் வடவை போலத் திரைக்கடல் பருகும் வேலோன்
    மங்கையர் இருவ ரோடு மடங்கலம் பீட மீதில்
    அங்கினி திருந்த காலை அரமகள் அவனை நோக்கி
    இங்கிவள் வரவு தன்னை இயம்புதி எந்தை யென்றாள்.

    237

    2038

    வேறு
    கிள்ளை அன்னசொற் கிஞ்சுகச் செய்யவாய்
    வள்ளி தன்மையை வாரணத் தின்பிணாப்
    பிள்ளை கேட்பப் பெருந்தகை மேலையோன்
    உள்ள மாமகிழ் வால்இவை ஓதுவான். 238

    238

    2039

    நீண்ட கோலத்து நேமியஞ் செல்வர்பால்
    ஈண்டை நீவிர் இருவருந் தோன்றினீர்
    ஆண்டு பன்னிரண் டாமள வெம்புயம்
    வேண்டி நின்று விழுத்தவம் ஆற்றினீர்.

    239

    2040

    நோற்று நின்றிடு நுங்களை எய்தியாம்
    ஆற்ற வும்மகிழ்ந் தன்பொடு சேருதும்
    வீற்று வீற்று விசும்பினும் பாரினும்
    தோற்று வீரென்று சொற்றனந் தொல்லையில்.

    240

    2041

    சொன்ன தோர்முறை தூக்கி இருவருள்
    முன்ன மேவிய நீமுகில் ஊர்தரு
    மன்னன் மாமக ளாகி வளர்ந்தனை
    அன்ன போதுனை அன்பொடு வேட்டனம்.

    241

    (234. வாரண மடந்தை - தெய்வயானை.
    236. துணைவியர் - தெய்வயானையம்மை வள்ளியம்மை.
    பாவையர் - திருமகள், நிலமகள். திருமால் கருநிறத்தை ஒழித்துப்
    பவளவண்ணன் ஆனதைக் காஞ்சிப்புராணத்துட் காணலாம்.
    237. அரமகள் - தெய்வயானையம்மை. 238. கிஞ்சுகம் - முருக்கமலர்.
    239. நேமியஞ்செல்வன் - திருமால். வேண்டி - (தழுவ)விரும்பி.
    240. தொல்லையில் - முன்னாளில்.)

    2042

    பிளவு கொண்ட பிறைநுதற் பேதைநின்
    இளைய ளாய்வரும் இங்கிவள் யாம்பகர்
    விளைவு நாடி வியன்தழன் மூழ்கியே
    வளவி தாந்தொல் வடிவினை நீக்கினாள்.

    242

    2043

    பொள்ளெ னத்தன் புறவுடல் பொன்றலும்
    உள்ளி னுற்ற வுருவத் துடன்எழீஇ
    வள்ளி வெற்பின் மரம்பயில் சூழல்போய்த்
    தௌ�ளி தில்தவஞ் செய்திருந் தாளரோ.

    243

    2044

    அன்ன சாரல் அதனில் சிவமுனி
    என்னு மாதவன் எல்லையில் காலமாய்
    மன்னி நோற்புழி மாயத்தின் நீரதாய்ப்
    பொன்னின் மானொன்று போந்துல வுற்றதே.

    244

    2045

    வந்து லாவும் மறிதனை மாதவன்
    புந்தி மாலொடு பொள்ளென நோக்கலும்
    அந்த வேலை யதுகருப் பங்கொள
    இந்த மாதக் கருவினுள் எய்தினாள்.

    245

    2046

    வேறு
    மானிவள் தன்னை வயிற்றிடை தாங்கி
    ஆனதொர் வள்ளி அகழ்ந்த பயம்பில்
    தானருள் செய்து தணந்திட அங்கட்
    கானவன் மாதொடு கண்டனன் அன்றே.

    246

    2047

    அவ்விரு வோர்களும் ஆங்கிவள் தன்னைக்
    கைவகை யிற்கொடு காதலொ டேகி
    எவ்வமில் வள்ளி யெனப்பெயர் நல்கிச்
    செவ்விது போற்றினர் சீர்மக ளாக.

    247

    2048

    திருந்திய கானவர் சீர்மக ளாகி
    இருந்திடும் எல்லையில் யாமிவள் பாற்போய்ப்
    பொருந்தியும் வேட்கை புகன்றும் அகன்றும்
    வருந்தியும் வாழ்த்தியும் மாயைகள் செய்தேம்.

    248

    2049

    அந்தமில் மாயைகள் ஆற்றிய தற்பின்
    முந்தை யுணர்ச்சியை முற்றுற நல்கித்
    தந்தை யுடன்தமர் தந்திட நென்னல்
    இந்த மடந்தையை யாமணஞ் செய்தேம்.

    249

    2050

    அவ்விடை மாமண மாற்றி அகன்ற
    இவ்விவள் தன்னுடன் இம்மென ஏகித்
    தெய்வ வரைக்கணொர் சில்பகல் வைகி
    மைவிழி யாய்இவண் வந்தனம் என்றான்.

    250

    2051

    என்றிவை வள்ளி இயற்கை அனைத்தும்
    வென்றிடு வேற்படை வீரன் இயம்ப
    வன்றிறல் வாரண மங்கை வினாவி
    நன்றென ஒன்று நவின்றிடு கின்றுழள்.

    251

    (242. பிளவுகொண்ட பிறை - எண்ணாட்டிங்கள்.
    243. புறவுடல் - தூலவுடல். உள்ளின்உற்ற உருவம் - சூக்குமவுடல்.
    246. பயம்பில் - பள்ளத்தில். 249. தந்திடல் - தாரைவார்த் தளித்தல்.
    250. தெய்வவரை - திருத்தணிகைமலை.)

    2052

    வேறு
    தொல்லையின் முராரி தன்பால் தோன்றிய இவளும் யானும்
    எல்லையில் காலம் நீங்கியிருந்தனம் இருந்திட் டேமை
    ஒல்லையில் இங்ஙன் கூட்டி யுடனுறு வித்த உன்றன்
    வல்லபந் தனக்கி யாஞ்செய் மாறுமற் றில்லை என்றாள்.

    252

    2053

    மேதகும் எயினர் பாவை விண்ணுல குடைய நங்கை
    ஓதுசொல் வினவி மேனாள் உனக்கியான் தங்கை யாகும்
    ஈதொரு தன்மை யன்றி இம்மையும் இளைய ளானேன்
    ஆதலின் உய்ந்தேன் நின்னை அடைந்தனன் அளித்தி என்றாள்.

    253

    2054

    வன்றிறல் குறவர் பாவை மற்றிது புகன்று தௌவை
    தன்றிருப் பதங்கள் தம்மைத் தாழ்தலும் எடுத்துப் புல்லி
    இன்றுனைத் துணையாப் பெற்றேன் எம்பிரான் அருளும் பெற்றேன்
    ஒன்றெனக் கரிய துண்டோ உளந்தனிற் சிறந்த தென்றாள்.

    254

    2055

    இந்திரன் அருளும் மாதும் எயினர்தம் மாதும் இவ்வா
    றந்தரஞ் சிறிது மின்றி அன்புடன் அளவ ளாவிச்
    சிந்தையும் உயிருஞ் செய்யுஞ் செயற்கையுஞ் சிறப்பு மொன்றாக்
    கந்தமு மலரும் போலக் கலந்துவே றின்றி யுற்றார்.

    255

    2056

    இங்கிவர் இருவர்தாமு மியாக்கையும் உயிரும் போலத்
    தங்களில் வேறின் றாகிச் சரவண தடத்தில் வந்த
    புங்கவன் தன்னைச் சேர்ந்து போற்றியே ஒழுக லுற்றார்
    கங்கையும் யமுனை தானுங் கனைகட லுடன்சேர்ந் தென்ன.

    256

    2057

    கற்றையங் கதிர்வெண் டிங்கள் இருந்துழிக் கனலிப் புத்தேள்
    உற்றிடு தன்மைத் தென்ன உம்பர்கோன் உதவு மானும்
    மற்றைவில் வேடர் மானும் வழிபடல் புரிந்து போற்ற
    வெற்றியந் தனிவேல் அண்ணல் வீற்றிருந் தருளி னானே.

    257

    2058

    கல்லகங் குடைந்த செவ்வேற் கந்தனோர் தருவ தாகி
    வல்லியர் கிரியை ஞான வல்லியின் கிளையாய்ச் சூழப்
    பல்லுயிர்க் கருளைப் பூத்துப் பவநெறி காய்த்திட் டன்பர்
    எல்லவர் தமக்கு முத்தி இருங்கனி உதவும் என்றும்.

    (252. செய்மாறு - செய்யும் பதில் உபகாரம்.
    254. தௌவை - தமக்கை. இங்குத் தெய்வயானையம்மை.
    255. அந்தரம் - பேதம். கலந்து - அளவளாவி.
    256. தெய்வயானையம்மைக்குக் கங்கையும், வள்ளியம்மைக்கு
    யமுனையும், முருகக் கடவுளுக்குக் கடலும் உவமையாகும்.
    257. கனலிப்புத்தேள் - அக்கினிதேவன்.
    258. கல்லகம் - கிரவுஞ்சமலை. கிரியை - கிரியாசத்தி.
    ஞானம் - ஞானசத்தி. பவநெறி - சனன மார்க்கம்.
    இங்கு ஞானசத்தி தெய்வயானையம்மை.
    கிரியா சத்தி வள்ளியம்மை என்க. பவநெறி - பிறவி வழி.)

    258

    2059

    பெண்ணொரு பாகங் கொண்ட பிஞ்ஞகன் வதனம் ஒன்றில்
    கண்ணொரு மூன்று வைகுங் காட்சிபோல் எயினர் மாதும்
    விண்ணுல குடைய மாதும் வியன்புடை தன்னின் மேவ
    அண்ணலங் குமரன் அன்னார்க் கருள்புரிந் திருந்தான் அங்கண்.

    259

    2060

    சேவலுங் கொடிமான் தேருஞ் சிறைமணி மயிலுந் தொன்னாள்
    மேவருந் தகரும் வேலும் வேறுள படைகள் யாவும்
    மூவிரு முகத்து வள்ளல் மொழிந்திடு பணிகள் ஆற்றிக்
    கோவிலின் மருங்கு முன்னுங் குறுகிவீற் றிருந்த மன்னோ.

    260

    2061

    ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்
    கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்
    ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க
    மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீர் அடியார் எல்லாம்.

    261

    2062

    புன்னெறி அதனிற் செல்லும் போக்கினை விலக்கி மேலாம்
    நன்னெறி ஒழுகச் செய்து நவையறு காட்சி நல்கி
    என்னையும் அடியன் ஆக்கி இருவினை நீக்கி யாண்ட
    பன்னிரு தடந்தோள் வள்ளல் பாதபங் கயங்கள் போற்றி.

    262

    2063

    வேறு
    வேல்சேர்ந்த செங்கைக் குமரன்வியன் காதை தன்னை
    மால்சேர்ந் துரைத்தேன் தமிழ்ப்பாவழு வுற்ற தேனும்
    நூல்சேர்ந்த சான்றீர் குணமேன்மை நுவன்று கொள்மின்
    பால்சேர்ந் ததனாற் புனலும்பய னாவ தன்றே.

    263

    2064

    பொய்யற்ற கீரன் முதலாம்புல வோர்பு கழ்ந்த
    ஐயற் கெனது சிறுசொல்லும் ஒப்பாகும் இப்பார்
    செய்யுற் றவன்மால் உமைபூசைகொள் தேவ தேவன்
    வையத்த வர்செய் வழிபாடு மகிழும் அன்றே.

    264

    2065

    என்னா யகன்விண் ணவர்நாயகன் யானை நாமம்
    மின்னா யகனான் மறைநாயகன் வேடர் நங்கை
    தன்னா யகன்வேல் தனிநாயகன் தன்பு ராணம்
    நன்னா யகமா மெனக்கொள்கஇஞ் ஞால மெல்லாம்.

    265

    2066

    வற்றா அருள்சேர் குமரேசன்வண் காதை தன்னைச்
    சொற்றாரும் ஆராய்ந் திடுவாருந் துகளு றாமே
    கற்றாருங் கற்பான் முயல்வாருங் கசிந்து கேட்கல்
    உற்றாரும் வீடு நெறிப்பாலின் உறுவர் அன்றே.

    266

    2067

    பாராகி ஏனைப் பொருளாய் உயிர்ப்பன் மையாகிப்
    பேரா வுயிர்கட் குயிராய்ப் பிறவற் றுமாகி
    நேராகித் தோன்றல் இலாதாகி நின்றான் கழற்கே
    ஆராத காத லொடுபோற்றி அடைதும் அன்றே.

    267

    (259. பிஞ்சகன் - தலைக்கோலம் உடையவன்; சிவன்.
    260. தேர் - இந்திர ஞாலத்தேர். தகர் - ஆட்டுக்கடா.
    261. குக்குடம் - சேவல். அடியார் எல்லாம் - வீரவாகு தேவர்
    முதலிய அடியவர்கள் யாவரும்.
    262. புன்நெறி அதனில் - இழிந்த காமவெகுளி மயக்கமாதிகளைத்தரும்
    பிறமதச் சார்பினில். நன்னெறி - சைவ மார்க்கம்.
    காட்சி - சகள நிட்கள வடிவின் காட்சி.
    நல்கி - உள்ளும் புறமும் அளித்து.
    263. பாவழு - ஆனந்தம் முதலிய குற்றங்கள்.
    264. கீரன்முதலாம் பொய்யற்றபுலவோர் - நக்கீரர் முதலாகிய
    பொய்யடிமை இல்லாதசங்கப் புலவர்கள்.
    266. குமரேசன் வண்காதை - குமாரக் கடவுளின் சரிதம்.
    காதை - நடந்தவைகளையே கூறுவது.
    267. நின்றான் கழற்கே - நிட்கள வடிவாக நின்ற இறைவன்
    திருவடிகளுக்கே. நிட்கள சிவமே அடியவர்களை ஆட்கொள்ளச்
    சகள சிவமாக எழுந்தருளுவர் என்பது சித்தாந்தம்.)

    268


    ஆகத் திருவிருத்தம் - 2067

    தக்ஷகாண்டம் முற்றுப் பெற்றது
    ஆகக் காண்டம் ஆறுக்குந் திருவிருத்தம் - 10345

    கந்தபுராணம் முற்றுப் பெற்றது
    திருச்சிற்றம்பலம்

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home