802
|
ஆயது காலையில் அவுணன் யாக்கையை
ஏயென ஒன்றுமா றியற்றி மாதவன் மாயம தாகியே மறைந்து மற்றவன் காயம திடைதனில்
கலந்து வைகினான்.
|
283 |
803
|
புல்லிய குரங்கெனப் புகுந்த
கள்வரும் ஒல்லையின் மறைந்தனர் உயர்ச லந்தரன் தொல்லுடல் புகுந்தரி
துண்ணென் றேயெழ மெல்லியல் கண்டனள் வியந்து துள்ளினாள்.
|
284 |
804
|
உய்ந்தனன் கணவனென் றுளத்தில்
உன்னியே வெந்துயர் அகன்றனள் விருந்தை என்பவள் வந்தனை பேலுமென் மகிண
நீயெனா அந்தமில் உவகையால் அவனைப் புல்லினாள்.
|
285 |
805
|
புல்லிய விருந்தையைப் புணர்ந்து
மாயவன் எல்லியும் பகலுமோர் இறையும் நீங்கலான் அல்லியந் தேனுகர் அளியைப்
போல்அவண் மெல்லிதழ் அமுதமே மிசைந்து மேவினன்.
|
286 |
806
|
காய்கதிர் நுழைவுறாக் கடிமென்
காவினுள் மேயினன் பலபகல் வேளின் நூல்வழி ஆயதோர் வைகலின் அரன தாணையால்
மாயம தயர்த்தனன் மலர்க்கண் துஞ்சினான். (279. தானையின் மன்னவர் -
சேனைக்காவலர். 280. அரிவை - பிருந்தை. 284. புல்லிய - இழிந்த. துள்ளுதல் -
மகிழ்ச்சி மிகுதியால் குதித்தாடுதல். 286. புல்லிய - தழுவிய. எல்லியும் -
இரவும். 287. கதிர் - சூரிய வௌ�ச்சம். கடி - அச்சம். வேளின் நூல் -
மன்மதாகமம். மாயமது அயர்த்தனன் - (தான்கொண்ட) மாயைமறந்து; முற்றெச்சம்.
துஞ்சினான் - தூங்கினான்.)
|
287 |
807
|
துஞ்சிய வேலையில் துணைவி யாகிய
பஞ்சினின் மெல்லடிப் பாவை பார்த்திவன் வஞ்சகன் வஞ்சகன் மாய னேயெனா
அஞ்சினள் நெஞ்சகம் அழன்று நீங்கிளாள்.
|
288 |
808
|
அருந்ததி அன்னகற் பழிந்த
தன்மையால் வருந்தினள் உயிர்த்தனள் மாயம் யாவையும் பொருந்திய தன்னுயர்ப்
போத நீர்மையால் தெரிந்தனள் சீதரற் கிதனைச் செப்புவாள்.
|
289 |
809
|
மாவலி யுடையதோர் மடங்க லாயினோர்
காவல ரிருவர்அக் காவ லாளர்உன் மேவல ராயுற வேந்த னாகிநீ ஓவலை குரங்கொடு
திரிதி ஒண்புவி.
|
290 |
810
|
பொற்புறு கணவனைப் போல வந்தெனைப்
பற்பகல் புணர்ந்தனை பகைவர் மாயையால் கற்புடை மனைவியைக் கவர்ந்து போகநீ
சொற்படு பழியினைச் சுமத்தியால் என்றாள்.
|
291 |
811
|
இக்கொடு மொழிபுகன் றெரியை
மூட்டியே புக்குயிர் துறந்தனள் புலம்பி யாங்கவள் அக்குறு சுடலைநீ றாடி
வாடினான் மைக்கடல் மேனியன் மாலின் மூழ்கியே.
|
292 |
812
|
வேறு அத்துணை தன்னின் வானோர்
அம்புயன் கயிலை யேகி நித்தனை இறைஞ்சி மாயோன் நிலைமையை உயர்த்தும் போழ்தில்
சத்தியங் கதனைத் தேர்ந்து தலையளி செய்து தானோர் வித்தினை உதவி ஈது
விண்டுமுன் இடுதிர் என்றாள்.
|
293 |
813
|
ஈதலும் அதனை வேதா இருகையால்
ஏந்திச் சென்னி மீதுறக் கொண்டு போந்து விருந்தைதன் ஈமந் தன்னில் தாதுறு
பலியின் வித்தித் தடங்கட லமுதம் பெயய மாதவன் முன்னம் ஆங்கோர் துளவமாய்
மலிந்த தன்றே. (289. தன் உயிர்ப்போத நீர்மையால் - தனது சீவபோதத் தன்மையால்.
290. மாவலி - மிக்க வலிமை. மேவலராய் உற - பகைவராய்ப் பொருந்த.
இங்குப் பகைவர் இராவணனும் கும்பகர்ணனும் ஆவர். அரசன் - இ�து இராமனை
உணர்த்தும். 291. கற்புடைய மனைவி - இங்கு சீதையை உயர்த்தும். 292.
அக்கு - என்பு. சுடலைநீறு - சுடுகாட்டுச் சாம்பல். ஆடி - புரண்டு. 293.
சத்தி - உமாதேவியார். வித்து - (துளசி) விதை. 294. தாது - புழுதி. பலி -
சாம்பல்.)
|
294 |
814
|
தண்டுள வான தாங்கோர் கையலாய்
நின்ற காலைக் கண்டனன் தருவின் கேள்வன் கனலிடைப் புகுந்தாள் மீது கொண்டிடு
காதல் நீங்கி அவள்வயிற் கூட்டம் வெ�க அண்டரும் அயனும் மாலுக் கருங்கவடி
இயற்றி ஈந்தார்.
|
295 |
815
|
கடியுறு துளவம் என்னுங் கன்னியைக்
கொண்டு கஞ்சக் கொடியுறு தகைமைத் தான கோநகர் குறுகி வேறோர் படியுறு
பெற்றித் தல்லாப் பல்பெரும் போகம் ஆற்றி முடியுறு கூட்டு மாக முடித்தனன்
முளரிக் கண்ணன்.
|
296 |
816
|
அவன்சலந் தரனை வீட்டும் ஆழியை
வாங்கப் பன்னாள் சிவன்கழல் வழபட் டோர்நாள் செங்கணே மலராச் சாத்த உவந்தனன்
விடைமேல் தோன்றி அப்படை உதவப் பெற்று நிவந்தனன் அதனால் வையம் நேமியான் என்ப
மாதோ.
|
297 |
817
|
வேறு போற்ற லார்தம் புரமடு
புங்கவன் வேற்று ருக்கொள் வியனருட் டன்மையைச் சாற்றி னாம்இனித் தன்னிகர்
இல்லதோர் ஏற்றின் மேல்வருந் தன்மை இயம்புவாம்.
|
298 |
818
|
இன்ன நான்குகத் தெல்லை இராயிரம்
மன்னு கின்றதொர் வைகல்அவ் வைகல்தான் துன்னு முப்பது தொக்கதொர் திங்களா
அன்ன தாறிரண் டால்வரும் ஆண்டரோ.
|
299 |
819
|
ஆண்டு நூறுசென் றால்அயற் காயுவும்
மாண்டு போமது மாற்கொரு வைகலாம் ஈண்டு நூல்களெ லாமிவை கூறுமால் காண்டி
யாலிவை கற்றுணர் பேதைநீ.
|
300 |
820
|
ஆய தன்மையில் அச்சுதற் காயுவும்
மாயும் எல்லையின் மன்னுயிர் யாவையுந் தேயும் அண்டஞ் சிதைந்திடும் எங்கணும்
பாயி ருங்கன லேபரந் துண்ணுமால்.
|
301 |
821
|
ஆன காலை அகிலமும் ஈமமாய்த் தூந
லங்கொடு தோன்றுமச் சூழலில் தானு லாவித் தனிநடஞ் செய்திடு ஞான நாயக னாயகி
காணவே.
|
302 |
822
|
பெருகு தேயுப் பிரளயம் அன்னதில்
தருமம் யாவினுக் குந்தனித் தெய்வதம் வெருவி யாமிவண் வீடுது மேலினிப்
புரிவ தேனெப் புந்தியிற் சூழ்ந்ததே. (295. கூட்டம் - சேர்க்கை. அருங்கடி -
அரிய திருமணம். 297. அவன் - இங்குத் திருமால். நிவந்தனன் - உயர்ந்தனன்.
298. ஏறு - இடபம். 299. உகம் - யுகம். இன்ன - (பிரமனுக்கு)
இத்தன்மையான. 303. தேயுப்பிரளயம் - அக்கினிப் பிரளயம்; இதில் தருமத்
தெய்வம் மட்டும் அழியாது என்பது நூற்றுணிபு. தருமம் யாவினுக்கும்
தனித்தெய்வதம் - எல்லோர்க்கும் பொதுவான தருமத்தெய்வம்.)
|
303 |
823
|
ஆறு லாஞ்சடை அண்ணலைச் சேர்வனேல்
ஈறிலா சென்றும் உற்றிடு வேனெனாத் தேறி யேஅறத் தெய்வதஞ் செங்கணான் ஏற தாயொ
ரெழிலுருக் கொண்டதே.
|
304 |
824
|
ஏற்றின் மேனிகொண் டீசன்முன் ஏகியே
போற்றி யானின்று பொன்றிடுந் தன்மையை மாற்றி யாற்றல் வழங்கிநிற் கூர்தியாம்
பேற்றை எற்குப் பிரானருள் என்னவே.
|
305 |
825
|
வேறு இறத்தலை இன்மையும் யான
மாய்த்தனைப் பொறுத்திடுந் தன்மையும் பொருவில் வன்மையும் உறைத்திடும்
அன்பும்வா லுணர்வும் நல்கியே அறத்தனிக் கடவுளுக் கண்ணல் கூறுவான்.
|
306 |
826
|
முதலயல் இடைகடை மொழிய நின்றிடுஞ்
சதுர்வித யுகந்தனில் தருமத் தின்திறம் இதுவென நான்குமூன் றிரண்டொன் றாகிய
பதமுறை யூன்றியே படியிற் சேறிமேல்.
|
307 |
827
|
ஈங்குன திடந்தனில் யாமெக் காலமும்
நீங்கலம் இருந்தனம் நீயும் வந்துநம் பாங்கரின் அடைந்தனை பரிவொ டூர்தியாய்த்
தாங்குதி யாரினுந் தலைமை பெற்றுளாய்.
|
308 |
828
|
எண்ணுநந் தொண்டர்கள் இயற்று
பாவமும் புண்ணிய மாநமைப் புறக்க ணித்துளார் பண்ணிய அறமெலாம் பாவ மாகுமால்
திண்ணமீ தரமறை தானுஞ் செப்புமே.
|
309 |
829
|
மைதவிர் அடியர்செய் பவமு
மற்றுளார் செய்திடு தருமமுந் திரிப தாகியே எய்திடு கின்ற தியாம்உன்
றன்னிடை மெய்திகழ் உயிரென மேவும் பான்மையால்.
|
310 |
830
|
நின்னிடை யாமுளோம் நீயும்
ஊர்தியாய் மன்னுதி எமதுபால் மற்றி தல்லதை இன்னுமோர் வடிவு கொண் டெம்மைப்
போற்றுதி அன்னதும் உணர்கென அருளிச் செய்தரோ. (306. யானம் - வாகனம். 307.
சதுர்வித யுகம் - கிரேத திரேத துவாபர கலி என்னும் நான்கு வகை யுகங்கள்.
பதம் - கால். சேறி - செல்வாய். 309. புறக்கணித்துளார் - அலட்சியம்
செய்தவர்கள். 311. இன்னுமோர் வடிவு - மானுட வடிவு.)
|
311 |
831
|
வேறு கூர்ந்த சூலக் கொடும்படை
வானவன் சார்ந்து போற்றுந் தருமக் கடவுளை ஊர்ந்தி டுந்தனி யூர்திய தாகியே
சேர்ந்தி டும்படி சீரருள் செய்தனன்.
|
312 |
832
|
அந்த நாண்முத லாதிப் பிரான் றனைச்
சிந்தை மேல்கொண்ட சீருடை யன்பர்முன் நந்தி யாகும் நலம்பெறும் ஊர்திமேல்
வந்து தோன்றும் வரம்புரி பான்மையால்.
|
313 |
833
|
சாற்றும் அவ்விடைக் கேதனைத்
தாங்குபேர் ஆற்றல் ஈந்த செயலறிந் தல்லவோ மாற்ற லார்புரஞ் செற்றுழி மாயவன்
ஏற்றின் மேனிகொண் டெந்தையைத் தாங்கினான்.
|
314 |
834
|
ஆத லால்அரன் அவ்விடை யூர்ந்திடல்
ஏத மோவன் றிதுநிற்க தெண்டிரை மீது தோன்றும் விடத்தையுண் டானென ஓதி
னாய்அதன் உண்மையைக் கேட்டிநீ.
|
315 |
835
|
வேறு நிருதர் தம்முடன்
அவுணரும் அமரரும் நேர்ந்து திருகு வெஞ்சினத் தொருபகல் முந்துபோர் செய்ய
இருதி ரத்தினும் பற்பலர் வல்லையில இறப்ப வெருவி யன்னது கண்டனர் அமரினை
விடுத்தார்.
|
316 |
836
|
மேலை வானவர் அவுணர்தங் கோவொடு
விரவிக் கால மெண்ணில இருந்துபோர் செய்வது கருதி நாலு மாமுகத் திறையவன்
பதத்தினை நணுகிச் சீல மோடவன் தாள்மலர் பணிந்துரை செய்வார்.
|
317 |
837
|
ஒல்கு மாயுளை உடையரேம் பற்பகல்
உஞற்று மல்கு பேரமர் இயற்றுவான் பாற்கடல் மதியா அல்க லின்றிய அமிர்தினை
வாங்கியே அடிகேள் நல்கு வாயெமக் கென்றலும் அயன்இவை நவில்வான்.
|
318 |
838
|
ஆதி மாயவற் கிச்செயல் மொழிகுவம்
அவனே ஓத வேலையைக் கடைந்தமு தளித்திடும் உண்டால் சாதல் வல்லையில் வந்திடா
தென்றயன் சாற்றிப் போது நாமென அவரொடும் பாற்கடல் புகுந்தான்.
|
319 |
839
|
நனந்த லைப்படு பயங்கெழு தெண்டிரை
நடுவண் அனந்தன் மீமிசைச் துயிலுறும் மூர்த்தியை அணுகி மனந்த வாதபேர்
அன்பொடு நான்முகன் வழுத்த நினைந்து கண்விழித் தொய்யென எழுந்தனன் நெடியோன்.
|
320 |
840
|
நீவிர் இவ்விடை வந்தவா றென்னென
நெடியோன் பூவின் மேல்வரு பண்ணவன் அவுணர்கள் பொருவில் தேவர் வேந்தர்கள்
வேண்டிய குறையினைச் செப்ப ஆவ தென்றதற் கியைந்தனன் அளித்திடும் அருளால்.
(314. செற்றுழி - அழித்தபோது. ஏற்றின் மேனி - இடபவடிவம். 316. நிருதர் -
இராக்கதர். அவுணர் - அசுரர். 320. நல் + நந்து + அலைப்படு - நனந்தலைப்படு.
நந்து - சங்கு.
பயம் - பால்.)
|
321 |
841
|
அருள்பு ரிந்தெழு மாயவன் மந்தரம்
அதனை உருள்பு ரிந்திடு மத்தென நிறுவியே உடலாம் பொருள்பு ரிந்திடும்
மதியினை மதலையாப் புரியா இருள்பு ரிந்தவா சுகிதனை நாணென யாத்தான்.
|
322 |
842
|
ஒருபு றத்தினில் அமரர்கள்
ஒருபுறத் தவுணர் இருபு றத்தினும் ஈர்த்திட நல்கியிப் புவிசூழ் தருபு
றக்கிரி யனையமத் தடிமுடி தன்மெய் வருபு றத்தினுங் கரத்தினும் பரித்தனன்
மாலோன்.
|
323 |
843
|
ஆன தன்மையின் மாயவன் பரித்துழி
அமரர் கோனும் வானவர் யாவரும் அவுணருங் கோமான் தானும் வாசுகி பற்றியே
வலியுறுந் தகவால் வானி லாவுமிழ் பாற்கடல் மறுகிட மதித்தார்.
|
324 |
844
|
மதித்த வேலையவ் வேலையி னுடைந்தென
வாய்விட் டதிர்த்த தேவரும் உலைந்தனர் குலைந்தன அகிலம் கதித்த மேருவுஞ்
சலித்தன ஒலித்தன கரிகள் பதைத்து வெய்துயிர்த் தொடுங்கின நடுங்கின பணியே.
|
325 |
845
|
உடைந்து போவது கொல்லென அமரர்கள்
ஒருங்கே தொடர்ந்து தம்பெரு வலிகொடே மந்தரஞ் சுழலக் கடைந்து வேலையைக்
கலக்குறி ஈர்த்திங் கயிறாய் அடைந்த வாசுகி பொறுக்கலா தயர்ந்ததை அன்றே.
|
326 |
846
|
ஊன்று பேதுற வெய்தியே யாற்றவெய்
துயிர்த்துத் தோன்று வெஞ்சினங் கொண்டுமெய் பதைத்துநாத் துடிப்ப ஆன்ற
ஆயிரம் வாய்தொறும் ஆலகா லத்தைக் கான்ற தத்துணை அளக்கரும் உமிழ்ந்தது கடுவே.
|
327 |
847
|
ஈற்றுக் கோடியின் எழுமுகிற்
கோடியின் இருண்டு கூற்றுக் கோடியின் மறங்கொடு திசைதொறுங் குலவுங்
காற்றுக் கோடியின் விரைவினால் வடவையங் கடுந்தீ நூற்றுக் கோடியிற் பரந்ததவ்
விடமெலாம் நொய்தின்.
|
328 |
848
|
ஓட லுற்றெழுந் தவ்விடஞ் சூழ்தலும்
உலையா ஓட லுற்றனர் தானவர் உம்பரா யுள்ளோர் ஓட லுற்றனர் முனிவரர் ஓடலுற்
றனரால் ஓட லுற்றனர் உலகெலாம் படைத்திடும் உரவோர். (322. மதலை - தூண்.
நாண் - கயிறு. 323. புறக்கிரி - சக்கரவாளகிரி. 324. பரித்துழி -
தாங்கியவுடனே. மறுகிட - கலங்கும் வண்ணம். 325. கரிகள் - திக்கு யானைகள்.
பணி - அட்டநாகங்கள். வேலையின் இன : சாரியை. 327. அளக்கர் - பாற்கடல்.
கடு - விஷம். 328. ஈற்றுக்கோடி - யுகமுடிவு.)
|
329 |
849
|
தண்டு ழாய்முடிப் பண்ணவன்
இனையதோர் தன்மை கண்டு மந்தரங் காப்புவிட் டுள்ளமேற் கவற்சி கொண்டு
நாமின்று போற்றுதும் ஈதெனக் குறியா அண்ட ராதியர் மேற்செலும் விடத்தின்முன்
அடுத்தான்.
|
330 |
850
|
மேல்வ ருங்கொடு விடத்தின்முன்
னுறுதலும் வெகுண்டு சால அங்கது தாமரைக் கண்ணன்மேல் தாக்கி மூல முள்ளதோர்
வச்சிர மணிநிற முருக்கி நீல வண்ணமே யாக்கிய தவனும்நின் றிலனால்.
|
331 |
851
|
கோல காலமாய் உலகெலாம் அடுந்தொழில்
கொண்ட ஆல காலமுன் நிற்கலார் அரிமுத லானோர் மூல காலமும் இறுதியும் இன்றியே
மூவாக் கால காலன்வாழ் கயிலையை அடைந்தனர் கடிதில்.
|
332 |
852
|
முந்து வெவ்விடஞ் சுடுதலால்
இரிந்தவர் முக்கண் எந்தை எம்பெரு மாட்டிவாழ் கயிலையில் எவரும் வந்த
தற்புத நீரதோ வெருவினால் மைந்தர் தந்தை தாயிடத் தன்றியே யாங்ஙனஞ் சார்வார்.
|
333 |
853
|
வேறு ஆயவர் கயிலையில் அமலற்
காகிய கோயிலின் முதற்பெருங் கோபு ரத்திடை நாயக நந்தியந் தேவை நண்ணியே
போயதெந் துயரெனப் புகன்று போற்றினார்.
|
334 |
854
|
போற்றிய பின்னுறப் புகுந்த
வாறெலாஞ் சாற்றினர் கேட்டலுந் தகுவர் தேவர்கள் வீற்றுற அவண்நிறீஇ வேதன்
மாறிசைக் கோற்றொழிலாதமைக் கொண்டு போயினான்.
|
335 |
855
|
நடைநெறி யருள்புரி நந்தி
யெம்பிரான் கடைநிலை ஐந்தவாங் காப்பில் எண்டிசை அடைதரு மன்னரை அருளின்
நோக்கியிவ் விடைதனில் உறுதிரென் றியம்பி யேகியே.
|
336 |
856
|
அருள்முறை நாடிமால் அயனென்
றுள்ளதோ� இருவரை அமலன்முன் எய்த உய்த்தலுங் கருணையங் கடல்தனைக் கண்டு
போற்றினார் பரவச மாயினார் பணிந்து பன்முறை.
|
337 |
857
|
போற்றினர் நிற்றலும் புரத்தை
முன்அடும் ஆற்றலின் உம்பரான் உரிநின் மேனிதான் வேற்றுரு வாய்இவண் மேவிற்
றென்னெனச் சாற்றினன் யாவையும் உணருந் தன்மையான். (330. போற்றுதும் -
காப்போம். 331. மூலம் - முன்னர். முருக்கி - கெடுத்து. 332. கோலகாலம் -
பேரொலி. மூலகாலம் - தோற்றம். மூவா - அழியா. 333. வெருவினால் - பயமுற்றால்.
338. அரி - திருமாலே!.)
|
338 |
858
|
மெய்வழி பாடுசெய் மேலை
யோர்க்கெலாம் உய்வழி புரிபவன் இனைய ஓதலும் மைவழி மேனியன் மானம் உள்ளுற
அவ்வழி இனையன அறைதல் மேயினான்.
|
339 |
859
|
வஞ்சின அவுணர்கள் வான மேலவர்
வெஞ்சின அமரினில் விளிந்த வேலையில் எஞ்சலில் ஆயுவுற் றிகல்செய் வாமெனப்
புஞ்சமொ டயனொடு புகறல் மேயினார்.
|
340 |
860
|
அன்னமென் கொடியினன் அனைய ரோடுபோந்
தென்னொடு கூறினன் யானெ ழுந்தரோ உன்னருள் பெற்றிலன் உணர்ந்தி டாமலே மன்னிய
அமிழ்திவண் வருதல் வேண்டினேன்.
|
341 |
861
|
தானவர் அமரர்கள் சதுர்மு கத்தவன்
ஏனையர் தம்முட னியானின் றெய்தியே பானிறை கடல்கடை பொழுதிற் பாயெரி யானது
மருளுற ஆலம் போந்ததே.
|
342 |
862
|
உன்றன தருள்பெறா உண்மை நாடியே
இன்றுல குயிரெலாம் இறக்க அவ்விடஞ் சென்றதி யாவருந் தெருமந் தோடினார்
நின்றவென் மெய்யையிந் நிறம் தாக்கிற்றே.
|
343 |
863
|
வேற்றுரு வாக்கியென் மெய்யில்
தாக்கலும் ஆற்றலன் அகன்றனன் அனையர் தம்மொடே ஏற்றம தானவெம் மிடர்கள்
யாவையும் ஆற்றுநர் யாருளர் மற்று நீயலால்.
|
344 |
864
|
உன்னருள் பெறாமல்அவ் வுததி
சேர்தலால் இன்னதொர் இன்னல்வந் தெய்திற் றாதலால் நின்னடி அடைந்தனம் நீடு
தீயெனத் துன்னிய கொடுவிடந் தொலைக்கச் செல்லுமால்.
|
345 |
865
|
ஆரணம் யாவையும் அறிந்து நாடொணாப்
பூரண வுமையொடு பொருந்தி இன்னதாம் ஏரண வுருவுகொண் டிருக்கை எம்மையாள் காரண
மன்றியே கருமம் யாவதோ.
|
346 |
866
|
தீயென எழுதரு சீற்ற வெவ்விடம்
ஆயதை மாற்றியே அளியர் தங்களை நீயருள் புரிகென நீல்நி றத்திகழ் மாயவன்
உரைத்தனன் வழுத்தி நிற்கவே. (340. ஆயு - ஆயுள். புஞ்சம் - கூட்டம். 346.
ஏரணம் - அழகு.)
|
347 |
867
|
மாதிர இறைவரும் வானு ளோர்களும்
நீதியில் அவுணரும் நின்ற எல்லையில் நாதனை வழுத்தலும் நம்பன் கேட்டரோ
ஏதிவை அரவம்என் றியம்ப லோடுமே.
|
348 |
868
|
வானவர் அவுணர்கள் மாதி ரத்தவர்
ஏனையர் வல்லிடத் தின்னல் உற்றுளார் கோநகர்க் கடைதொறுங் குழுமி ஏத்தினார்
ஆனதிவ் வொலியென அயன்வி ளம்பவே.
|
349 |
869
|
கறுத்திடும் மிடறுடைக் கடவுள்
நந்தியைக் குறிப்பொடு நோக்கியே கொணர்தி யாலெனப் புறத்திலம் மேலவன் போந்து
மற்றவர் திறத்துடன் உரையுளில் செல்ல உய்ப்பவே.
|
350 |
870
|
வந்தவர் யா�ரும் வணங்கி ஈசனைப்
புந்தியில் அன்பொடு போற்றி யாற்றவுங் நொந்தனம் விடத்தினால் நொய்தில்
அன்னதைச் சிந்தினை எமக்கருள் செய்தி என்னவே.
|
351 |
871
|
வறு ஈதெலாங் கேட்ட மேலோன்
இறைவியை நோக்கி இன்னோர் ஓதலா மாற்றம் உன்றன் உளத்தினுக் கியைவ தாமோ
மாதுநீ புகறி யென்ன வந்துநின் னடைந்தார் வானோர் ஆதலால் அவர்க்கு வல்லே
அருள்புரிந் திடுதி என்றாள்.
|
352 |
872
|
வண்டமர் குழலெம் மன்னை மற்றிவை
இசைத்த லோடும் அண்டரு மகிழ்ச்சி எய்தி ஆதியங் கடவுள் தன்பால் தொண்டுசெய்
தொழுகு கின்ற சுந்தரன் தன்னை நோக்கிக் கொண்டிவண் வருதி யால்அக் கொடுவிடந்
தன்னை என்றான்.
|
353 |
873
|
என்றலும் இனிதே என்னா இறைஞ்சினன்
ஏகி யாண்டுந் துன்றிய விடத்தைப் பற்றிச் சுந்தரன் கொடுவந் துய்ப்ப
ஒன்றொரு திவலை யேபோல் ஒடுங்குற மலர்க்கை வாங்கி நின்றிடும் அமரர் தம்மை
நோக்கியே நிமலன் சொல்வான்.
|
354 |
874
|
காளக வுருவு கொண்ட கடுவினை உண்கோ
அன்றேல் நீளிடை அதனிற் செல்ல நெறிப்பட எறிகோ என்னா வாளுறு மதிதோய் சென்னி
வானவன் அருள அன்னான் தாளுற வணங்கி நின்று சதுர்முகன் முதலோர் சொல்வார்.
|
355 |
875
|
ஐயநீ யன்றி யாரிவ் வனல்விட மாற்று
நீரார் செய்யகைக் கொண்ட ஆற்றாற் சிறிதெனக் காட்டிற் றன்றே வெய்யதோர் இதனை
இன்னே விட்டனை என்னிற் பின்னை உய்வரோ யாரும் இன்னே ஒருங்குடன் முடிந்தி
டாரோ. (348. மாதிர விறைவர் - திசைகாவலர். அரவம் - ஓசை. 349. கோநகர் -
(இக்)கயிலையின். கடைதொறும் - திருவாயில்கள் தோறும். 353. அண்டரும் -
அடைதற்கரிய. சுந்தரன் - இவர் இறைவனின் அணுக்கத் தொண்டரில் ஒருவர்; பின்னர்
பூமியில் சுந்தரமூர்த்தியாக வந்து தோன்றியவர். 354. ஒரு திவலை - ஒரு துளி.
355. காளகவுருவு - கருமை நிறம். உண்கோ - உண்ணவோ.
எறிகோ - எறியவோ.)
|
356 |
876
|
முடிவிலா உனக்கே அன்றோ முன்னுறு
பாக மெல்லாம் விடமதே எனினு மாக வேண்டுதும் இதனை வல்லே அடியரேம் உய்யு
மாற்றால் அருந்தினை அருள்மோ என்னக் கடிகமழ் இதழி வேய்ந்தோன் கலங்கலீர் இனிநீ
ரென்றான். 357
|
357 |
877
|
என்றனன் விரைவில் தன்கை ஏந்திய
விடமுட் கொள்ளச் சென்றது மிடற்றில் அன்ன திறத்தினை யாரும் நோக்கி இன்றெம
துயிர்நீ காத்தற் கிங்கிது சான்றாய் அங்கண் நின்றிட வருடி என்றே நிமலனைப்
போற்றல் உற்றார்.
|
358 |
878
|
போற்றலும் மிடற்றில் எங்கோன்
பொலன்மணி அணிய தென்ன மாற்றருந் தகைமைத் தான வல்விடம் நிறுவி அன்னார்க்
கேற்றநல் லருளைச் செய்ய யாவரும் இறந்தே இன்று தோற்றின ராகும் என்னச் சொல்லரு
மகிழ்ச்சி கொண்டார்.
|
359 |
879
|
மாமகிழ் சிறந்து நிற்கும் மாலயன்
முதலோர் தம்மைத் தூமதி மிலைச்சுஞ் சென்னித் தொல்லையோன் அருளால் நோக்கிக்
காமரு கடலை இன்னுங் கடைதிரால் அமுதுண் டாகும் போமினீர் இன்னே என்னப்
போற்றினர் வணங்கிப் போனார்.
|
360 |
880
|
போனவர் தொன்மை போலப் புணரியைக்
கடைந்த காலை மேனிகழ் அமிர்த மேனை வியன்பொருள் பலவும் வந்த வானவர் தாமே
பெற்றோர் மற்றவை தம்மை ஆலம் ஆனதை அமலன் உண்ட தவருயிர் அளித்த தன்றே.
|
361 |
881
|
கடல்விடம் நுகர்ந்த தொல்லைக்
கடவுள்பின் னழிக்குங் காலை உடலுயிர் அகிலம் யாவும் ஒடுங்கிய விடம தன்றோ
சுடலைய தாகும் அந்தச் சுடலைகாண் அனைய சோதி நடநவில் கின்ற எல்லை நாடருந்
தகைமைத் த�தே.
|
362 |
882
|
அங்கதும் அன்றி எந்தை அகிலமு
முடித்த ஞான்றின் எங்கும்வௌ� ளிடைய தாகி ஈமமாம் அவ்வீ மத்து மங்கையுந்
தானு மேவு மற்றிது தவறோ அன்னான் கங்கையை முடிமேற் கொண்ட காதைமேல் உரைத்தும்
அன்றே.
|
363 |
883
|
ஈசனை ஒருஞான் றம்மை எழில்பெறு
கயிலைக் காவில் பேசலள் ஆடல் உன்னிப் பின்வரா விழியி ரண்டுந் தேசுறு
கரத்தாற் பொத்தச் செறிதரு புவனம் யாவும் மாசிருள் பரந்த தெல்லா உயிர்களும்
வருத்தங் கொள்ள.
|
364 |
884
|
திங்களின் கதிரும் ஏனைத் தினகரன்
வெயிலுந் தீயின் பொங்குசெஞ் சுடரும் ஏனைப் புலவர்தங் கதிரு மற்றும்
எங்குள ஔ�யும் மாய்வுற் றிருள்நிறம் படைத்த மாதோ சங்கரன் விழியால் எல்லாச்
சோதியுந் தழைத்த நீரால். (357. அருந்தினை அருள்மோ - அருந்தி அருள்க.
359. பொலன்மணி - அழகிய நீலமணி. 361. புணரி - போற் கடல். ஏனை
வியன்பொருள் - மற்றைய மேலான காமதேனு, கற்பகத்தரு முதலிய பல பொருள்கள்.
364. ஒரு ஞான்று - ஒரு தினம். பொத்த - மூட.)
|
365 |
885
|
தன்னிகர் பிறரி லாத தற்பரன்
விழியி ரண்டுங் கன்னிகை கமலக் கையாற் புதைப்பஅக் கணம தொன்றின்
மன்னுயிர்த் தொகைகட் கெல்லாம் வரம்பிலா வூழி யாக அன்னதோர் பான்மை நோக்கி
அருளுவான் நினைந்தான் அன்றே.
|
366 |
886
|
ஓங்குதன் நுதலின் நாப்பண் ஒருதனி
நாட்டம் நல்கி ஆங்கது கொண்டு நாதன் அருள்கொடு நோக்கி யாண்டும் நீங்கரு
நிலைமைத் தாகி நின்றபேர் இருளை மாற்றித் தீங்கதிர் முதலா னோர்க்குச்
சிறந்தபே ரொளியை ஈந்தான்.
|
367 |
887
|
மண்ணுறு புவனத் துள்ள மாயிருள்
முழுதும் நீங்க உண்ணிகழ் உவகை மேல்கொண் டுயிர்த்தொகை சிறத்த லோடுங்
கண்ணுதல் இறைவன் செய்கை கவுரிகண் டச்சம் எய்தித் துண்ணென விழிகள் மூடுந்
துணைக்கரம் வாங்கி னாளால்.
|
368 |
888
|
சங்கரன் விழிகள் மூடுந் தனாதுகை
திறக்கும் எல்லை அங்குலி யவையீ ரைந்தும் அச்சத்தால் வியர்ப்புத் தோன்ற
மங்கையத் தகைமை காணூஉ மற்றவை விதிர்ப்பப் போந்து கங்கையோர் பத்தா யாண்டுங்
கடல்களிற் செறிந்த அன்றே.
|
369 |
889
|
ஆயிர நூறு கோடி அணிமுகம் படைத்தி
யாண்டும் பாயிரு நீத்த பரவலும் அதுகண் டஞ்சி மாயனும் அயனும் வானோர்
மன்னனும் பிறரும் போற்றி மீயுயர் கயிலை நண்ணி விமலனை அடைந்து தாழ்ந்தார்.
|
370 |
890
|
அடிமலர் தொழுதே எந்தாய் அறிகிலோம்
இதுவோர் நீத்தங் கடல்களும் அன்றால் யாண்டுங் கல்லென விரைத்தி யாரும்
முடிவுறு திறத்தால் அண்டம் முழுவதுங் கவர்ந்த முன்னாள் விடமெனப் பரித்தே ஈது
விமலநீ காத்தி என்றார்.
|
371 |
891
|
என்றலும் நதிகள் தோற்றம்
இயம்பிஎவ் வுலகுஞ் சூழபோய் நின்றவந் நீத்தந் தன்னை நினைத்தவண் அழைத்து நாதன்
ஒன்றுதன் வேணி மேல்ஓர் உரோமத்தின் உம்ப ருய்ப்ப மன்றலங் கமலத் தோனும்
மாலுமிந் திரனுஞ் சொல்வார்.
|
372 |
892
|
மேதினி யண்ட முற்றும் விழுங்கிய
கங்கை உன்றன் பாதியாள் கரத்தில் தோன்றும் பான்மையால் உனது சென்னி
மீதினிற் செறிக்கும் பண்பால் விமலமாம் அதனில் எங்கண் மூதெயில் நகரம் வைகச்
சிறிதருள் முதல்வ என்றார். (366. புதைப்ப - மூட. 367. ஒரு தனி நாட்டம் -
இங்கு நெற்றிவிழி. 368. துணைக்கரம் - இருகரங்கள். 369. அங்குலி அவை
ஈரைந்தும் - பத்து விரல்களிலும். 371. கல்லென - கலீரென. 372. நீத்தம் -
சலம்பிரவாகம். 373. மேதினி அண்டம் - பிருதிவியண்டம். பாதியாள் - உமை.
விமலமாம் - பரிசுத்தமானதாம்.)
|
373 |
893
|
இறையவன் வேணி யுள்புக்
கிருந்ததோர் கங்கை தன்னில் சிறுவதை வாங்கி மூவர் செங்கையுஞ் செறிய நல்க
நிறைதரும் அன்பால் தாழ்ந்து நிகழ்விடை பெற்றுத் தத்தம் உறைநகர் எய்தி அங்கண்
உய்த்தனர் அனைய நீத்தம்.
|
374 |
894
|
அந்நதி மூன்று தன்னில் அயனகர்
புகுந்த கங்கை பன்னருந் திறலின் மிக்க பகீரதன் தவத்தால் மீளப் பின்னரும்
இமையா முக்கட் பெருந்தகை முடிமேல் தங்கி இந்நில வரைப்பிற் செல்ல இறையதில்
விடுத்தல் செய்தான்.
|
375 |
895
|
நானில மிசையே உய்த்த நன்னதி சகரர்
எல்லாம் வானுயர் கதிபெற் றுய்ய மற்றவர் என்பிற் பாய்ந்து மீனெறி தரங்க
வேலை மேவிய தி�தொன் றல்லால் ஏனைய நதிகள் தொல்லை இடந்தனில் இருந்த அன்றே.
|
376 |
896
|
தொல்லையில் இறைவி அங்கைத் தோன்றி
கங்கை நீத்தம் ஒல்லையில் உலகங் கொள்ளா தடக்கிய உண்மை அன்றோ அல்லிருள்
அனைய கண்டத் தாதியங் கடவுள் முன்னோர் மெல்லியல் தன்னை வேணி மிசைக்கொண்டா
னென்னு மாறே.
|
377 |
897
|
மாதுமை வசத்த னாகி மருவுவான்
என்றி அன்னான் நாதனே தருளே எல்லாம் நண்ணுவித் தருளும் வண்ணம் பேதக மாகித்
தானோர் பெண்ணுருக் கொண்டு மேவும் ஆதலின் அவள்வந் துற்ற தன்மையை அறைவன்
கேட்டி.
|
378 |
898
|
தொல்லையோர் கமலத் தண்ணல் தோன்றியே
இருந்த காலைப் பல்லுயிர்த் தொகுதி தன்னைப் படைப்பது கருதி முன்னர்
வல்லையிற் சனக னாதி மைந்தர்நால் வரையுநல்க நல்லுணர் வெய்தி அன்னோர் நற்றவ
ராகி உற்றார்.
|
379 |
899
|
அன்னதற் பின்னர் வேதன் அளிப்பதும்
அல்கா தாக இன்னலுற் றிரக்கம் எய்தி யாதினிச் செய்வ தென்னா முன்னுறு குமர
ரோடு முகுந்தன திடத்தில் எய்திப் பொன்னடி வணக்கஞ் செய்து தன்குறை புகன்று
நின்றான்.
|
380 |
900
|
நின்றிடு கின்ற காலை நேமியங்
கரத்து வள்ளல் இன்றிது நம்மல் முற்றா தீசனால் அன்றி யென்னா நன்றுணர்
முனிவ ரோடு நான்முக னோடும் வௌ�ளிக் குன்றினில் ஏகி நாதன் குரைகழல் பணிந்து
சொல்வான். (374. சிறு வதை - ஒருசிறிது. மூவர் - திருமால், பிரமன், இந்திரன்
என்ற மூவர். 375. பகீரதன் - இவன் சகரர் வம்சத்தில் வந்த ஒரு அரசன், மிக்க
முயற்சியுடையவன். 376. நானிலம் - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற
நிலங்கள்; பூமியுமாம். சகரர் - இவர் அயோத்தி நகரை அரசுபுரிந்த சகரன்
புதல்வர்கள்; இவர்கள் அறுபதினாயிரவர் ஆவர். 379. தொல்லை - முன்னொரு
கற்பம். சனகன் ஆதி மைந்தர். நால்வர் - சனகன், சனந்தனன், சநாதனன்,
சனத்குமாரன் என்னும் நான்கு புதல்வர்கள். 381. முற்றாது - முற்றுப்பெறாது.)
|
381 |
901
|
அண்டர்கள் முதல்வ கேண்மோ அம்புயன்
படைப்பின் உள்ளங் கொண்ட னன்அதுமல் காதால் குறையிது நீக்கு கென்ன வண்டுள
வத்தி னானை மைந்தரை அயனை நோக்கி நுண்டுகள் படவே ஈசன் நொய்தென வீறு செய்தான்.
|
382 |
902
|
ஏகனை ஆகை வைகும் எந்தைதன் னிடப்பா
லான வாகுவை நோக்கும் எல்லை மற்றவண் உமையாள் தோன்றப் பாகம திருத்தி
அன்னாள் பரிவொடு கலந்து மேவிக் கோகன தக்கண் னானைக் குமரரை அயனைத் தந்தான்.
|
383 |
903
|
தந்துழி ஈசன் தன்னைத் தனயரும்
அயனும் மாலும்
வந்தனை செய்து போற்ற மாயவன் வதனம் நோக்கி நத்தம தருள தாகு நங்கையோ
டினிது சேர்ந்தாம் முந்தையின் வேதாச் செய்கை முற்றிடும் போதி என்றான்.
|
384 |
904
|
என்னலும் உவகை எய்தி யாமினி
உய்ந்தோம் என்னா அன்னையொ டத்தன் தன்னை அளியொடு வலஞ்செய் தேத்திப்
பின்னரும் வணக்கஞ் செய்து பெயர்ந்தனர் பின்பு வேதா மன்னுயிர்த் தொகுதி
யெல்லாம்வரன்முறை படைக்கல் உற்றான். 385
|
385 |
905
|
மாற்றலர் புரமூன் றட்ட வானவன்
உமையா ளோடும் வீற்றிருந் தருள லாலே விழைவுடன் ஆண்பெண் மேவி ஆற்றவும் இன்ப
மெய்தி ஆவிகள் பெரிது மல்க நாற்றிசை முகத்தன் செய்கை நன்றுற நடந்த தன்றே.
|
386 |
906
|
தேனமர் கமலத் தண்ணல் செய்தொழில்
முற்று மாற்றால் ஆனதன் னருளை யாங்கோ ராயிழை யாக நல்கி மேனிகழ் கருணை
தன்னால் மேவுவ துணராய் ஏனை வானவர் போலெங் கோனை மதித்தனை மதியி லாதாய்.
|
387 |
907
|
காமரு வடிவாய் எங்குங் காண்பது
சத்தி அங்கண் மாமய மாகி நின்றான் மன்னிய சிவனாம் ஈது தூமறை முதலா வுள்ள
தொலைநூல் புகலும் அன்னால் தாமொரு புதல்வன் தன்னைத் தந்தவா சாற்று கின்றாம்.
(382. மல்காதால் - மலிவுற்றதில்லை. மைந்தர் - சனகாதியர்.
383. வாகு - தோள். 386. ஆற்றவும் - மிகவும். ஆவிகள் - உயிர்கள். 388.
காமரு - அழகிய,
|
388 |