Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
 

Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nationகந்த புராணம் - Kantha Puranam பாயிரம் (1-352) & உற்பத்திக் காண்டம் (353-725) உற்பத்திக் காண்டம் (726- 1328)  >  உற்பத்திக் காண்டம் (1329- 1783) > அசுர காண்டம் (1 - 925 ) > அசுர காண்டம் (926 - 1497) > அசுர காண்டம் (1498 - 1929) > மகேந்திர காண்டம் (1 - 639) > மகேந்திர காண்டம் (640 - 1170) > யுத்த காண்டம் (1 - 456) > யுத்த காண்டம் (457 - 876)யுத்த காண்டம் (877 - 1303) > யுத்த காண்டம் (1304 - 1922) > யுத்த காண்டம் (1923 - 2397) >> யுத்த காண்டம் (2398 - 2967) > தேவ காண்டம் (1 - 421)> தக்ஷ காண்டம் (1 - 403)தக்ஷ காண்டம் (404 - 907)  > தக்ஷ காண்டம் (908-1562 )தக்ஷ காண்டம் (1563 - 2067)


 
கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய
கந்த புராணம் - 2. அசுர காண்டம் படலம் 13-32 (926 - 1497)

kantapurANam of kAcciyappa civAccAriyAr
canto 2 (verses 926 - 1497)


Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten & colleagues of the Univ. of Koeln, Germany for providing with a transliterated/romanized version of this work and for permissions to release the Tamil script version as part of Project Madurai collections. Our thanks also go to Shaivam.org for the help in the proof-reading of this work in the Tamil Script format. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. © Project Madurai, 1998-2006.Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

13. எதிர்கொள் படலம் 926 - 950
14. உருத்திரர் கேள்விப் படலம் 951 - 962
15. நகர்செய் படலம் 963 - 980
16. பட்டாபிடேகப் படலம் 981 - 1004
17. அரசுசெய் படலம் 1005 - 1025
18. தேவரை யேவல்கொள் படலம் 1026 - 1050
19. புதல்வரைப் பெறு படலம் 1051 - 1073
20. வில்வலன் வாதாவிப் படலம் 1074 - 1104
21. இந்திரன் கரந்துறை படலம் 1105 - 1152
22. விந்தகிரிப் படலம் 1153 - 1181
23. அகத்தியப் படலம் 1182 - 1209
24. கிரவுஞ்சப் படலம் 1210 - 1222
25. விந்தம் பிலம்புகு படலம்1223 - 1235
26. வில்வலன் வாதாவி வதைப் படலம் 1236 - 1267
27. காவிரி நீங்கு படலம்1268 - 1353
28. திருக்குற்றாலப் படலம் 1333 - 1353
29. இந்திரன் அருச்சனைப் படலம் 1354 - 1383
30. தேவர் புலம்புறு படலம் 1384 - 1408
31. அயிராணி சோகப் படலம் 1408 - 1429
32. மகா சாத்தாப் படலம் 1429 - 1497


செந்திலாண்டவன் துணை
திருச்சிற்றம்பலம்

2. அசுர காண்டம்
13. எதிர்கொள் படலம் (926 - 950)

    926

    திண்டிறன் மாயையின் செம்மல் இத்திறம்
    அண்டர்தந் துறக்கமேல் அடைந்த காலையிற்
    பண்டிமை யோர்களாற் படருந் தானவர்
    கண்டனர் மகிழ்ந்தனர் களிப்பின் மூழ்கினார்.

    1

    927

    ஆயவன் வருவதை அவுணர் தம்பெரு
    நாயகற் கொற்றர்போய் நவில அன்னவன்
    தூயநல் லமுதினைக் கிடைத்துத் துண்ணென
    மேயின னாமெனக் களிப்பின் மேயினான்.

    2

    928

    தானையம் படையொடு தகுவர் கோமக
    னானவெஞ் சூர்பெறும் அளப்பில் ஆக்கமுங்
    கூனலம் பிறைதவழ குடுமிச் செஞ்சடை
    வானவன் கருணையும் மணங்கொண் டேகினான்.

    3

    929

    அன்னவன் புகர்தனை யடைந்து நங்குல
    மன்னனை உற்றிட வல்லை செல்லுவன்
    முன்னுற ஏகியெம் முறையுஞ் செய்கையும்
    பன்னுதி யென்றுமுன் படர்வ தாக்கினான்.

    4

    930

    அன்னதோர் காலையில் அவுணர் தேசிகன்
    முன்னுற மானமேல் முடுகி ஏகலுந
    தன்னுறு கிளைஞருந் தானும் ஆங்கவன்
    பின்னுற மன்னவன் பெயர்ந்து போயினான்.

    5

    931

    மாசறு பேரொளி மான மீமிசைத்
    தேசிகன் விரைவொடு செல்லும் எல்லையில்
    காசிபன் அருள்மகன் கண்டு சேணிடை
    ஈசனை யெதிர்ந்தென எதிர்கொண் டேகினான்.

    6

    932

    அஞ்சலி செய்தனன் அவுணன் அத்துணை
    நெஞ்சக மகிழவொடு நின்று தேசிகன்
    விஞ்சுக திருவொடு விசயந் தானெனா
    எஞ்சலில் ஆசிகள் எடுத்துக் கூறினான்.

    7

    933

    ஆயது காலையில் அனையன் பாங்கரின்
    மேயின அரிமுகன் வேழ மாமுகத்
    தீயவன் இருவருந் தேரொ டேகியே
    தூயதோர் புகர்அடி தொழுது போற்றினார்.

    8

    934

    ஏத்திடும் அவர்தமக் கியலு ஆற்றினால்
    மீத்தகும் ஆசிகள் விளம்பி வேந்தனைப்
    பார்த்தனன் உனக்கியாம் படுத்து கின்றதோர்
    வார்த்தையுண் டன்னது வகுத்துங் கேட்டிநீ.

    9

    935

    பங்கமில் காசிபன் பன்னி யாகிய
    நுங்கையைப் பயந்துளான் நுனித்த கேள்வியான்
    சங்கையற் றிருந்ததா னவரைத் தாங்கினான்
    எங்களுக் கோர்துணை யென்னுந் தன்மையான்.

    10

    936

    ஈண்டையில் வாசவன் எதிர்ந்து பற்பகல்
    மூண்டிடு வெஞ்சமர் முற்றி வீரத்தைப்
    பூண்டனன் ஆதலிற் புழுங்கி மாரிநாள்
    மாண்டிடு கதிரென மாழ்கி வைகினான்.

    11

    937

    அத்தகு மேலையோன் அவனி மீமிசை
    வித்திடு நாறுசெய் விளைவு காணுறா
    எய்த்திடு நிரப்பினன் என்ன நின்னையே
    நித்தலும் நோக்கினான் சிறுமை நீங்கவே.

    12

    938

    தவங்கொடு முந்துநீ தழலை வேட்டதுஞ்
    சிவன்புரி வரங்களுஞ் செப்பக் கேட்டனன்
    உவந்தனன் ஆகுலம் ஒழித்து வைகினான்
    நிவந்தன ஆங்கவன் நெடிய தோள்களே.

    13

    939

    பற்றலர் புரமடு பரமன் ஈந்திடப்
    பெற்றதோர் வரத்தொடு பெயர்ந்திடு யாரையும்
    வெற்றிகொண் டிவண்வரும் மேன்மை கேட்புறா
    மற்றுனை அடைந்திட வருகின் றானெனா.

    14

    940

    வன்றிறல அவுணர்கோன் வருதல் காட்டியே
    புன்றொழில் படுத்திய புகரு ரைத்தலுந்
    துன்றிய கனைகழற் சூர னென்பவன்
    நின்றனன் உவகையால் நிறைந்த நெஞ்சினான்.

    15

    941

    ஆர்ந்ததொல் கிளையொடும் அவுணர் காவலன்
    சேர்ந்தனன் சூரனைச் செங்கையால் தொழாப்
    பேர்ந்திடும் ஆவியைப் பிரிந்த தோருடல்
    சார்ந்திடு கின்றதோர் தன்மை என்னவே.

    16

    942

    ஆயிடை வெய்யசூர் அவுணர் கோவினை
    நீயினி திருத்திகொல் என்ன நீயுளை
    தீயன அடையுமோ சிறுமை எய்துமோ
    மேயநுங் குலமுறை விளங்கத் தோன்றினாய்.

    17

    943

    என்றிவை நயமொழி இயம்பி யேபுடை
    சென்றன மாயையின் செய்ய காதலன்
    துன்றிய தகுவர்தம் அனிகஞ் சூழதர
    வென்றியொ டவனிமேல் விரைவின் மீளவே.

    18

    944

    வேறு
    மண்ணுல கத்தில் வெஞ்சூர் வந்தனன் எனுஞ்சொற் கேளா
    அண்ணலங் கமலத் தேவும் அமரர் மானும் ஏனை
    விண்ணவ ராயுள் ளோரும் வியத்தகு முனிவர் யாருந்
    துண்ணென வந்து மாயோன் துயில்கொளுங் கடலிற் புக்கார்.

    19

    945

    கொய்துழாய் அலங்கல் மோலிக் குழகனைக் குறுகி நின்று
    கைதொழு திறைஞ்சித் தாங்கள் கனைகழற் சூரன் தன்னால்
    எய்திடு கின்ற தென்கொல் செப்புதி பெரும வென்றார்.

    20

    946

    அன்றவர் உரைத்த மாற்றம் அச்சுதக் கடவுள் கேளாப்
    புன்றொழில் தக்கன் வேள்வி புகுந்திடுந் தீமை தன்னால்
    இன்றிது பொருந்திற் றம்மா யாரிது விலக்கற் பாலார்
    ஒன்றினிச் செய்யுந் தன்மை கேண்மின்என் றோத லுற்றான்.

    21

    947

    பண்டெயின் மூன்றும் அட்ட பராபரன் வரம்பெற் றுள்ளான்
    அண்டமெங் கெவையும் வென்றான் ஆதலால் நம்மால் வென்றி
    கொண்டிடு திறத்தான் அல்லன் கொடியவச் சூரன் தன்னைக்
    கண்டுசென் றிடுதும் ஈதே காரியம் போலு மென்றான்.

    22

    948

    செங்கம லத்தோ னாதி தேவரும் முனிவர் யாரும்
    இங்கிது கரும மென்றே இசைந்தன ராகி நிற்ப
    அங்கவ ரோடு மாயோன் அரவணைப் பள்ளி நீங்கித்
    துங்கம துடைய தொல்சீர் சூரனைக் காண வந்தான்.

    23

    949

    மருத்துழாய் மவுலி யாதி வானவர் முனிவர் யாருந்
    திருத்தகு சூரன் நேரே சென்றுநின் றாசி கூறி
    அருத்திய தாகப் போற்ற அவர்களுட் பதினோர் கோடி
    உருத்திரர் தொகுதி யானோர் ஒருங்குடன் நிற்பக் கண்டான்.

    24

    950

    கண்டிடும் அவுணர் தங்கள் காவலன் இமையா முக்கண்
    அண்டர்தம் பெருமான் என்ன அமைந்ததொல் வடிவ முள்ளார்
    எண்டரு தொகையின் மிக்கார் ஈங்கிவர் யாவ ரென்னத்
    தண்டுள வலங்கல் மோலிப் பண்ணவன் சாற்றல் உற்றான்.

    25


    ஆகத் திருவிருத்தம் - 950

14. உருத்திரர் கேள்விப் படலம் (951-962)

    951

    மன்னவர் மன்ன கேண்மோ மற்றிது புகல்வன் வேதா
    முன்னொரு கற்பந் தன்னில் மூவகை யுலகும் நல்கித்
    துன்னுயிர் முழுதும் நல்கித் துண்ணென அகந்தை கொண்டு
    தன்னையும் பரமென் றுன்னித் தாணுவை அயர்த்தான் அன்றே.

    1

    952

    எந்தையை மறந்து போதன் யாவையும் விதித்த லோடுந்
    தந்திடும் அளவே யன்றிச் சராசரம் பெருகா வாக
    நொந்தனன் குறையென் னென்றே நோக்கினன் எமைமுன் ஈன்ற
    ஐந்தொழில் முதல்வன் தன்னை அயர்த்தனன் போலு மென்றான்.

    2

    953

    இனியவன் அருள்பெற் தன்றி இவ்விதி முடியா தென்னாத்
    தனயனும் அளவில் காலந் தவம்புரிந் திடவும் முக்கட்
    பனிமதி முடியோன் அன்னான் பாற்படா தொழிய அந்தோ
    வினையினேன் முன்னந் தாதை வௌ¤ப்படும் எவன்கொ லென்றான்.

    3

    954

    கழியுடல் புயமேற் கொண்ட கண்ணுதல் உறாத துன்னி
    இழுதைய ரென்ன ஏங்கி இன்னலுற் றுயிர்த்து வல்லே
    அழுதனன் மகவென் செய்வான் அன்னதோர் வேலை கண்ணீர்
    விழவிழ அலகை யாகி மிகவெழுந் தீண்டிற் றன்றே.

    4

    955

    காண்டலும் அலகை ஈட்டங் கருத்திடர் உழப்ப வீழ்ந்து
    மாண்டனன் போலச் சோர மன்னுயிர்க் குயிராய் நின்ற
    ஆண்டகை யுணர்வு நல்கி அனையவன் கனவில் நண்ணி
    ஈண்டினி வருந்தல் மைந்த எழுகெனா அருளிச் செய்வான்.

    5

    956

    மதித்தனை பரமென் றுன்னை மறந்தனை யெம்மை யற்றால்
    விதித்திறங் கூடிற் றில்லை விரைந்தது முடிய நந்தம்
    பதத்துளார் தம்மை உன்றன் பாங்குற விடுத்தும் என்றான்
    உதித்திடல் இறத்த லின்றி உலகளித் துதவும் ஐயன்.

    6

    957

    அந்நெறி கனவிற் காணும் அற்புதத் தெழுந்து வேதன்
    செந்நெறி பூண்டு வைகிச் சிந்தையில் தேற்ற மெய்தி
    உன்னலும் அறுவ ரைவர் உருத்திர ணத்தோர் தாதை
    தன்னரு ளதனால் நெற்றித் தலத்தினும் போந்து நின்றார்.

    7

    958

    நிற்றலும் அவரை நோக்கி நெற்றியந் தலத்தில் நீவிர்
    உற்றதை எவன்கொ லென்ன உன்செயல் முடியு மாற்றால்
    மற்றெமை விடுத்தான் நம்பன் ஆதலன் வந்தே மென்றார்
    பற்றலர் புரமூன் றட்ட பண்ணவன் வடிவங் கொண்டோர்.

    8

    959

    பரமன துருவாய் நின்றோர் பதினொரு வோரும் இவ்வா
    றருள்செய விரிஞ்சன் கேளா அன்பினால் என்பால் வந்தீர்
    விரைவுடன் உயிர்கள் தம்மை விதிக்குதிர் என்னத் தத்தம்
    உருவுபோற் பதினோர் கோடி உருத்திரர் தொகையைத் தந்தார்.

    9

    960

    ஆங்கது தெரிந்து வேதா ஆவிகள் வினைக்கீ டன்றி
    ரூ¦ங்களிவ் வாறு செய்கை நெறியதன் றென்ன லோடும்
    ஓங்கிய உருத்தி ரேசர் ஒல்லையெம் பதத்திற் போதும்
    ஈங்கிவண் உயிரை முன்போல் ஈந்தனை இருத்தி யென்றார்.

    10

    961

    என்றிவை உரைத்துப் போதன் யாவையும் படைப்பான் நல்கி
    ஒன்றிய உணர்வின் மிக்க உருத்திரர் யாரும் வௌ¢ளிக்
    குன்றுடை முதல்வன் தொன்னாட் கொடுத்திடும் புவனம் புக்கார்
    அன்றுதாம் அளித்து ளோரை அமரரோ டிருத்தி ரென்றார்.

    11

    962

    அவனியை அளித்தோன் தன்பால் அடைந்துளார் அண்டந் தன்னில்
    புவனமே லிருந்தார் அன்னார் புரிந்திடத் தொன்னாள் வந்த
    பவர்முதல் உருத்தி ரேசர் பதினொரு கோடி யுள்ளார்
    இவர்சிவ னருளால் வானோர் இனத்துடன் ஈண்டி யுற்றார்.

    12


    ஆகத் திருவிருத்தம் - 962
    ---------

    15. நகர்செய் படலம் (963 - 980)

    963

    எனஅரி புகலக் கேளா இன்னதோ நிகழ்ச்சி யென்றான்
    அனையதற் பின்னர் ஆண்டை அமரர்கம் மியனை நோக்கி
    வனைகழற் சூர பன்மன் மற்றியாம் உறைதற் கொத்த
    புனைதிரு நகரம் வல்லே புரிமதி புலவ வென்றான்.

    1

    964

    என்றலுங் கடவுள் தச்சன் இறைஞ்சியே நுமக்குச் செய்யும்
    வென்றிகொள் மூதூ ருககு வியலிடம் உரைத்தி யென்ன
    நன்றெனப் புகரோன் தானே நகர்களுக் கெல்லை கூற
    அன்றவை வினவித் தென்பால் அளக்கரை அடைந்தான் அன்றே.

    2

    965

    ஆசறு கடலி னூடே அயுதமோர் எட்டா யுள்ள
    யோசனை எல்லை முன்னோன் உறுநக ராகக் கோலிக்
    காசினி வரைகள் தம்மால் கதுமெனத் தூர்த்து மிக்க
    பாசறை கொண்டே ஒப்ப அணித்தலம் படுத்துப பின்றை.

    3

    966

    காயுறு கதிர்கள் காஞ்சிக் கம்பைமா நீழல் வைகும்
    நாயகி நகர மென்ன நாடொறுஞ் சூழு மாற்றால்
    சேயுயர் விசும்பிற் போகச் செம்பொனால் மதிலைச் செய்து
    வாயில்கள் நான்க மைத்து ஞாயிலும் வகுத்து நல்கி.

    4

    967

    நாற்பெரு வாயி லூடு மேருவே நண்ணிற் றென்ன
    மாற்பெருங் கோபு ரங்கள் மணிவெயில் எறிப்ப நல்கி
    நூற்படும் ஒழுக்கம் நாடி நூறியோ சனையொன் றாகப்
    பாற்படு மாட வீதி பற்பல அமைத்து மன்னோ.

    5

    968

    முப்புரம் ஒருங்குற் றென்ன மும்மதில் அவற்றுள் நல்கி
    ஒப்பருந் திருவின் வீதி உலப்பில புரிந்து சோமன்
    வைப்பெனச் செம்பொன் மாடம் வரம்பில வகுத்து மாதர்
    மெய்ப்படும் ஆடல் கூரும் வியலிடம் பலவுஞ் செய்து.

    6

    969

    மாளிகை தோறுந் தெற்றி மண்டபம் அணிசேர் முன்றில்
    கோளரி தயங்கு பொற்பிற் கோபுரங் குன்றம் அம்பொற்
    சூளிகை அரங்க மன்றஞ் சுடருமேற் றலங்கள் தூய
    சாளரஞ் சோலை வாவி தனித்தனி யாகத் தந்து.

    7

    970

    வேறு
    ஆயதன் நடுவுற அயுத வெல்லையில்
    பாயதோர் நெடுமதில் பயில நல்கியே
    மாயவள் திருமகன் வைக ஆங்கொரு
    கோயிலை எழில்பெறக் குயற்றி னானரோ.

    8

    971

    வாரணம் விரவுதேர் மக்கள் போந்திடுந்
    தோரண வாயில்கள் தொடர்ந்த தெற்றிகள்
    சீரணி தபனியச் சிகர கோபுரங்
    காரணி மணிவரை கவின்கொள் சூளிகை.

    9

    972

    ஆனைகள் பயிலிடம் அயங்கள் சேரிடம்
    சேனைகள் உறைவிடம் தேர்கள் வைகிடம்
    தானவர் தலைவர்கள் சாருந் தொல்லிடம்
    ஏனைய அரக்கர்கள் இனிது சேரிடம்.

    10

    973

    நாடரும் விசும்புறை நாரி மாரெலாம்
    ஆடலை இயற்றிடும் அரங்க மண்டபம்
    பாடலின் முறைபயில் பைம்பொன் மண்டபம்
    மாடக யாழ்முரல் வயிர மண்டபம்.

    11

    974

    மயில்புற வோதிமம் வன்ன மென்கிளி
    குயில்முத லாகிய குலவு மண்டபம்
    இயலுறு யூகமான் இரலை செச்சைகள்
    பயிலுறு வாரணம் பரவும் மண்டபம்.

    12

    975

    சந்ததம் மறையொலி தழங்கு மண்டபம்
    முந்திய வேள்விகள் முயலும் மண்டபம்
    மந்திர வியல்பினோர் மருவு மண்டபம்
    இந்திரன் முதலினோர் இருக்கும் மண்டபம்.

    13

    976

    திருமிகு நிருதர்கோன் தேவர் போற்றிட
    அரசியல் புரியுமத் தாணி மண்டபம்
    இருநிதி உளலொம் ஈண்டும் மண்டபம்
    பரனருள் படைக்கலம் பயிலும் மண்டபம்.

    14

    977

    அருந்துறும் அமிர்துறழ் அடிசில் மண்டபம்
    நரந்தையே பாளிதம் நறைகொள் சாந்தகில்
    பெருந்துவர்க் காயடை பிறவுஞ் சாலவும்
    இருந்திடு கின்றபேர் எழில்கொள் மண்டபம்.

    15

    978

    மானனை யார்பலர் மருவு மண்டபம்
    ஆனதோர் ஊசலாட் டயரும் மண்டபம்
    பானிலா உமிழ்தரு பளிங்கின் மண்டபம்
    வானுயர் சந்திர காந்த மண்டபம்.

    16

    979

    மாமணி யொளிர்தரு வசந்த மண்டபம்
    காமரு பவளமார் கவின்கொள் மண்டபம்
    ஏமரு மரகதத் தியன்ற மண்டபம்
    தாமரை உயிர்த்திடு தரள மண்டபம்.

    17

    980

    கோவியல் மரபினோர் கொள்கைக் கேற்றன
    யாவையும் நல்கியே இதனுக் குள்ளுற
    மாவுறு சூரபன் மாவுந் தன்குலத்
    தேவியும் உறையவோர் உறையுள் செய்தரோ.

    18

    981

    இங்கிது சூழ்தர எண்ணி லாதன
    மங்கல நிறைதரு மாட வீதிகள்
    அங்கவன் துணைவிய ராகி வந்திடும்
    நங்கையர் மேவர நலத்தின் நல்கியே.

    19

    982

    காவியுங் குமுதமுங் கமல முஞ்செறி
    வாவிக ளோடைகள் பொய்கை வான்றொடு
    பூவியல் தண்டலை பொலன்செய் குன்றுடன்
    யாவையும் முறைபட இயற்றி னானரோ.

    20

    983

    அள்ளலந் திரைக்கடல் அகழி யாகவே
    யுள்ளுறு நகரிடை உறையுங் கோயிலில்
    தள்ளரும் பொன்சுடர் தழைத்த பொற்பினால்
    வௌ¢ளிய தானது மேலைப் பொன்னகர்.

    21

    984

    வேறு

    இன்னவையும் ஏனவையும் எண்ணிமனத் தால்அருளித்
    தன்னிகரில் அவுணர்பிரான் சயத்தோடு பெருந்தலைமை
    மன்னவரு தலின்வீர மகேந்திரமே யாமென்றே
    அந்நகருக் கோர்நாமம அணிபெறுத்தி அளித்தனனே.

    22

    985

    ஏமபுரம் இமையபுரம் இலங்கைபுரம் நீலபுரம்
    சோமபுர மெனப்புகலுஞ் சுவேதபுரம் அவுணர்புரம்
    வாமபுரம் பதுமபுரம் மகேந்திரமா புரமென்னுங்
    காமர்புரத் தெண்டிசைக்குங் காட்சிபெற உதவினனால்.

    23

    986

    மாண்டகுசீர் கெழுவீர மகேந்திரமிவ் வாறுதவி
    ஆண்டதுபோல் அகன்பரப்பில் ஆசுரம்என் றொருநகரம்
    நீண்டவட கடல்நடுவண் நிருதர்புகழ்ந் திடுமாற்றால்
    காண்டகைய சீயமுகக் காவலற்கு நல்கினனே.

    24

    987

    மற்றுளவெம் புணரிதொறும் வயின்வயின்சேர் தீவுதொறுங்
    கொற்றமிகுஞ் சூரபன்மன் குலவுபெருந் தானையெலாஞ்
    சுற்றமுடன் மேவுதற்குத் தொன்னகரம் பலவமைத்துக்
    கற்றுணருஞ் சிறுவரொடுங் கம்மியன்மீண் டேகினனே.

    25

    988

    வேறு
    நீடு மேரு நெடுவரைத் தென்புடை
    நாடு சீர்கெழு நாவலந் தீவினில்
    கூடு கின்றபொற் கூடந் தனக்கொரு
    மாடு போந்தனன் மாமயன் தாதையே.

    26

    989

    பகரு கின்றஅப் பாற்படும் எல்லையில்
    தகுவர் போற்றிடுந் தாரகற் காகவே
    மகிழ்வின் நீரொடு மாயா புரமெனா
    நகர மொன்றை அணிபெற நல்கினான்.

    27

    990

    வினையர் தம்மொடு விச்சுவ கன்மனும்
    இனைய வூர்கள் இயற்றியம் மாயையின்
    தனய னுக்கிவை சாற்றலும் நன்றெனா
    அனிக மோடங் கடைந்தனன் என்பவே.

    28

    ஆகத் திருவிருத்தம் - 990
    ----

    16. பட்டாபிடேகப் படலம் (991-1004)

    991

    மற்றவ் வீர மகேந்திரம் நண்ணியே
    உற்று நாடியவ் வும்பர்தங் கம்மியன்
    கற்ற விஞ்சை வியந்து களிப்புறீஇக்
    கொற்ற நீடுதன் கோயிலை நண்ணினான்.

    1

    992

    நண்ணு கின்றுழி நான்முக னாதியாம்
    விண்ணு ளோர்கள் வியன்முடி சூட்டுதும்
    அண்ண லுக்கென் றவற்றிற்கு வேண்டிய
    எண்ணில் பல்பொருள் யாவுமுய்த் தாரரோ.

    2

    993

    கோவில் நண்ணிய கொற்றவன் மற்றொரு
    தாவில் பீடிகை தன்மிசை வைகியே
    மாவு லாவிய மால்கடல் தெண்புனல்
    தேவர் ஆட்டச் சிறப்புடன் ஆடினான்.

    3

    994

    ஆடி யம்பொனின் ஆடையு டீஇமலர்
    சூடி ஒண்கலன் தூயன் பூண்டுபின்
    பீடு சேர்தரு பின்னவர் பால்வர
    நீடு காதல் நிருதர் புகழ்வே.

    4

    995

    நிகரி லாத நிருதர்க் கிறைதொழப்
    புகரு மாமுனி வோரும் புகழ்ந்திட
    மிகந டுங்கிய விண்ணவர் போற்றிட
    மகப திக்கு மனந்தளர் வெய்தவே.

    5

    996

    வந்து சீய மணித்தவி சேறினன்
    அந்த வெல்லையில் அச்சுதற் காமெனும்
    இந்தி ரத்திரு மாமுடி ஏந்தியே
    சுந்த ரத்தொடு நான்முகன் சூட்டினான்.

    6

    997

    கண்டு தானவர் காசிபன் காதலன்
    புண்ட ரீகப் பொலன்கழல் தாழ்ந்தெழா
    அண்டொ ணாமகிழ் வால்அடுந் தேறலை
    உண்ட ளாரின் உளங்களிப் பெய்தினார்.

    7

    998

    அன்ன வேலை அமரர் முனிவர்கள்
    பொன்ன வாநறும் போது கரங்கொடே
    மன்னர் மன்னன் மணிமுடி யின்மிசை
    முன்னி வாழ்த்தி முறைமுறை வீசினார்.

    8

    999

    வேறு
    பாங்குறு தவிசின் பாலில் துணைவர்பங் கயன்மால் தம்மை
    ஈங்கினி திருத்திர் என்ன இருந்தனர் ஏவ லாலே
    ஓங்கிய மகவான் கொண்டான் களாசிஒண் ணிதியின் கோமான்
    தாங்கினன் அடைப்பை மற்றச் சமீரணர் கவரி கொண்டார்.

    9

    1000

    நிருதர்தங் குரிசி லான நெடுந்தகை யுடைவாள் கொண்டான்
    பரிதியும் மதியும் அங்கட் பனிக்குடை நிழற்றி நின்றார்
    வருணனும் மகாரும் ஆல வட்டம்வீ சினர்யாழ வல்ல
    கருடர்கந் தருவர் சித்தர் கானமங் கிசையா நின்றார்.

    10

    1001

    முத்தலை அயில்வே லேந்தி முறைநெறி ஆற்றுங் கூற்று
    மெய்த்தழற் கடவுள் தானும் வேத்திர மேந்தி யாண்டும்
    எத்திறத் தவரும் நீங்க எரிவிழித் திடியி னார்த்துப்
    பத்தியின் நிறுவிச் சூரன் பல்புகழ் பரவி நின்றார்.

    11

    1002

    குரைகழல் நிருதி என்போல் கோடிக மதுகைக் கொண்டான்
    இருமைசேர் குரவர் தாமும் எல்லைதீர் முனிவர் யாருந்
    திரைகெழு கங்கைத் தூநீர் செம்பொனங் கலசஞ் சேர்த்துத்
    துருவையின் மறையால் வாங்கித் துவலைதூர்த் தாசி சொற்றார்.

    12

    1003

    அரம்பைமே னகையே மிக்க உருப்பசி யாதி யாகி
    வரம்பறும் அமரர் மாதர் வரன்முறை விதியின் நாடி
    நரம்பியல் சுருதி பாடல் இயத்தொடு படிந்து நண்ணித்
    திரம்பயில் நடனம் மூன்றுஞ்* செவ்விதிற் புரிய லுற்றார்.
    ( * நடனம் மூன்று - தேசிகம், வடுகு, சிங்களம் என்பன.)

    13

    1004

    இத்திறம் அமரர் யரும் ஏனையர் தாமும் ஈண்டித்
    தத்தம துரிமை தன்னைத் தவாநெறி தலைக்கொண் டாற்ற
    மைத்தகு சூர பன்மன் மடங்கலந் தவிசின் மீதே
    மெய்த்திரு நிகழ மன்னிப் பின்னிவை விளம்ப லுற்றான்.

    14


    ஆகத் திருவிருத்தம் - 1004

    17. அரசுசெய் படலம் (1005-1025)

    1005

    களித்திடு ஞிமிறும் வண்டுங் கலந்திட நறவம் பொங்கித்
    துளித்திடு துழாய்மால் தன்னைச் சூரனாம் அவுணன் பாரா
    அளித்தவன் தன்மூ தாதை யாயினை அதனால் நின்னை
    விளித்திடு மெல்லை தோறும் விரைந்திவண் மேவு கென்றான்.

    1

    1006

    செங்கம லத்தின் மேவுந் திசைமுகத் தொருவன் தன்னைத்
    துங்கமோ டரசு செய்யுஞ் சூரனாம வீரன் பாரா
    இங்குநின் மைந்த ரோடும் என்னிடந் தன்னி லேகி
    அங்கம்ஐ வகையும் நாளும் அறைந்தனை போதி யென்றான்.

    2

    1007

    அறத்தினை விடுத்த தீயோன் அருக்கனை நோக்கி நம்மூர்ப்
    புறத்தினில் அரண மீதாய்ப் போகுதல் அரிது கீழ்மேல்
    நிறுத்திய சிகரி யூடு நெறிக்கொடு புக்கு வான்போய்
    எறித்தனை திரிதி நாளும் இளங்கதிர் நடாத்தி யென்றான்.

    3

    1008

    அறைகழற் சூர பன்மன் அவிர்மதி தன்னை நோக்கிப்
    பிறையென வளரு மாறும் பின்முறை சுருங்கு மாறும்
    மறைவொடு திரியு மாறும் மற்றினி விடுத்து நாளும்
    நிறைவொடு கதிரோன் போல்இந் நீள்நகர் வருதி யென்றான்.

    4

    1009

    பொங்கழல் முதல்வன் தன்னைப் புரவலன விரைவின் நோக்கி
    இங்குநம் மூதூர் உள்ளோர் யாவரே எனினும் உன்னின்
    அங்கவர் தம்பா லெய்தி அவர்பணி யாவும் ஆற்றிச்
    செங்கம லம்போல் யாவர் தீண்டினுங் குளிர்தி யென்றான்.

    5

    1010

    சுடர்முடி யாவுணர் செம்மல் தொல்பெருங் கூற்றை நோக்கிப்
    படிமுழு துயிரை நாளும் படுப்பது போல நந்தங்
    கடமத கரியை மாவைக் கணிப்பிலா அவுணர் தம்மை
    அடுவது கனவும் உன்னா தஞ்சியே திரிதி யென்றான்.

    6

    1011

    அண்டரும் உலவை யானை அவுணர்மாத் தலைவன் பாரா
    எண்டரு நம்மூ தூரில் யாவரும் புனைந்து நீத்த
    தண்டுளி நறவ மாலை தயங்குபூண் கலிங்கஞ் சாந்தம்
    நுண்டுக ளாடு சுண்ணம் மாற்றுதி நொய்தின் என்றான்.

    7

    1012

    காவலன் வருணன் தன்னைக் கண்ணுறீஇ நம்மூ தூரில்
    நாவிவெண் பளிதஞ் சாந்தம் நரந்தமோ டளாவித் தீம்பால்
    ஆவியின் வௌ¤ய நொய்ய அரும்பனி நீரிற் கூட்டித்
    தூவுதி இடங்க டோறுங் காற்றது துடைக்க வென்றான்.

    8

    1013

    வாசவன் றன்னை நோக்கி மால்கெழு திருவின் மேலோன்
    தேசுறு துறக்கம் வைகுந் தேவர்தங் குழுவி னோடும்
    ஆசையங் கிழவ ரோடும் அருந்தவ ரோடும் போந்து
    பேசிய பணிகள் ஆற்றித் திரிமதி பிழையேல் என்றான்.

    9

    1014

    இந்நெறி சூர பன்மன் யாவர்க்கும் வீற்று வீற்றாத்
    தன்னுறு பணியின் நிற்பான் சாற்றுலும் அனையர்
    அன்னது செய்து மென்றே அனையவர் றொழுக அன்னான்
    மன்னினன் அரசில் பின்றை மணஞ்செய உன்னி னானால்.

    10

    1015

    மதிமுகத் திருவே போல்வாள் வானவர் புனைவன் தந்த
    பதுமகோ மளைஎன் றோதும் பாவையைப் புகரோன் நாடிச்
    சதுர்முகன் முதலாந் தேவர் தானவர் பிறரும் போற்ற
    விதிமுறை வதுவை செய்து விழைவொடு மேவி யுற்றான்.

    11

    1016

    அன்னதன் பின்னர் வானோர் அசுரர்கந் தருவர் சித்தர்
    கின்னரர் இயக்கர் நாகர் கிம்புரு டாதி யானோர்
    கன்னியர் அளப்பி லாரைக் கடிமணஞ் செய்து கூடித்
    துன்னுபன் மலர்த்தேன் உண்ணுஞ் சுரும்பென இன்பந் துய்த்தான்.

    12

    1017

    அரிமுகத் தவுணர் வேந்தற் கந்தகன் மகளா யுள்ள
    திருமிகு விபுதை தன்னைச் சீர்மணஞ் செய்து நல்கி
    நிருதிதன் புதல்வி யான நேரிழை சவுரி தன்னைக்
    கரிமுக இளவல் சேரக் கடிமணம் புரிவித் திட்டான்.

    13

    1018

    இவ்வகை மணஞ்செய் பின்றை இருதுணை வரையும் நோக்கி
    மெய்வளம் பெறநுங் கட்கு விதித்திடும் மூதூ ரேகி
    அவ்விரு கோடி வௌ¢ளம் அனிகமோ டிருத்தி ரென்னாத்
    தெவ்வடு சூரன் அன்னோர் செல்லுமா றேவி னானால்.

    14

    1019

    ஏவியே தனது தானைக் கிறைவரில் பலரை நோக்கி
    நீவிர்கள் இரண்டு கோடி நீத்தமாம் அனிகத் தோடு
    தீவுக டோறும் ஆழி இடந்தொறுஞ் செய்த மூதூர்
    மேவுதிர் விரைவின் என்னா அனையரை விடுத்தான் மன்னோ.

    15

    1020

    மாறிலாத் திசைக ளெட்டும் வானுல கேழும் இப்பாற்
    கூறுபா தலங்கள் யாவும் ஒழிந்தவுங் குறுகி யேதன்
    ஈறிலா ஆணை போற்ற எல்லையில் அவுணர் தம்மை
    ஆறெனுங் கோடி வௌ¢ளத் தனிகமோ டேகச் செய்தான்.

    16

    1021

    விட்டிடு காலை தானே விண்ணுமண் ணுலகுந் திக்கோர்
    எட்டொடு பிலனோ ரேழும் ஏனைய வரைப்பு மாகிக்
    கிட்டின செறிந்து மொய்த்த கேடில்சீர் அவுணர் தானை
    மட்டகல் வானம் பூத்த உடுக்களின் மலிந்த அன்றே.

    17

    1022

    எங்கணுந் தனது தானை அடையறா தீண்ட லோடுந்
    துங்கவெஞ் சூர பன்மன் தானுரை தொன்மூ தூரில்
    அங்கணோ ரிலக்கம் வௌ¢ளத் தவுணர்தந் தானை தன்னை
    மங்கல இருக்கை தோறும் மரபுளி இருத்தி மன்னோ.

    18

    1023

    கரிபரி யாளி எண்கு கடுவயப் புலியே ஏனம்
    அரிமரை முகத்து வீரர் அவணர்தந் தலைவ ரானோர்
    இருவகை நான்மை யோர்க்கும் எண்டிசை நகரும் ஈந்து
    வருபடை அயுதத் தோடும் மகேந்திரங் காக்கச் செய்தான்.

    19

    1024

    ஞாயில்கள் செறிந்த நொச்சி நாற்பெருந் தகைமைத் தான
    வாயில்க டோறும் நாப்பண் வளநகர் இஞ்சி தோறும்
    கோயிலின் இருக்கை தோறுங் குணிப்பிலா வீரர் தம்மை
    நீயிர்கள் காமின் என்னா நிலைப்பட நிறுவி யிட்டான்.

    20

    1025

    துர்க்குணன் தரும கோபன் துன்முன் சங்க பாலன்
    வக்கிர பாலன் தீய மகிடனே முதலோர் தம்மைத்
    தொக்கமந் திரிக ளாகத் துணைக்கொடே சூர பன்மன்
    மிக்கவா னவர்கள் போற்ற வீற்றிருந் தரசு செய்தான்.

    21


    ஆகத் திருவிருத்தம் - 1025
    ----

    18. தேவரை யேவல்கொள் படலம் (1026-1050)

    1026

    அரசு செய்தலும் அந்தர நாதனுஞ்
    சுரரு மேனை முனிவருந் தொக்குறீஇ
    வரைசெய் மாட மகேந்திர மாபுரத்
    தொருவன் ஏவலின் முன்னம் ஒழுகுவார்.

    1

    1027

    கொலைவல் சிங்க முகன்பதி குஞ்சரத்
    தலைவன் மாப்பதி சார்ந்தவர் தம்பதி
    பலவு மேகிப் பணித்தன ஆற்றியே
    உலைவர் வைகலும் ஊசலின் நீர்மையார்.

    2

    1028

    வேறு

    ஊனமுற்றோர் போலிவ்வா றுலைகின்ற காலத்தில் ஒருநாட் சூரன்,
    வானகத்துத் தலைவனையும் அமரரையும் வருகவெனா வலித்துக் கூவித்,
    தானவர்க்குத் தம்பியர்நீர் அவர்பணிநும் பணியன்றோ தரங்க வேலை,
    மீனனைத்துஞ் சூறைகொண்டு வைகலுமுய்த் திடுதிரென விளம்பினானால்.

    3

    1029

    உரைக்குமொழி யதுகேளா அனையரெலம் உள்நடுங்கி உயங்கி வௌ¢கித்,
    திரைக்கடலின் மீன்றனக்குத் தருகென்றான் இதற்கினிநாஞ் செய்வ தேதோ,
    விரைக்கமலத் தனிக்கடவுள் இப்படியும் நந்தலையில் விதித்தான் என்னா,
    இரக்கமொடு மறுத்தலஞ்சி அத்திறமே புரிதுமென இறைஞ்சிப் போனார்.

    4

    1030

    போகின்ற நெறியின்கண் இமையவரும் புரந்தரனும் பொருமி யேங்கி,
    ஆகின்ற தெமக்கேயோர் பழியன்றோ அனையதுவந் தணுகா முன்னர்ச்,
    சாகின்ற தேமிகவும் இனிதாகும் எமக்கதுவுஞ் சாரா தந்தோ,
    வேகின்ற சிந்தையினேஞ் செய்வதெவன் எனப்புலம்பி வேலை புக்கார்.

    5

    1031

    அவ்வேலை இமையவர்கோன் வருணனெனுங் கடவுளைநின் றழையா இந்த,
    மைவேலை தனக்கிறைவன் நீயன்றோ நின்னினுமோர் வலியா ருண்டோ,
    கைவேலைப் பணியியற்றித் திமிங்கிலமே முதலாய கணிப்பின் மீன்கள்,
    இவ்வேலை ஏற்றுதியேல் இடர்வேலைக் கரையிலெமை யெடுத்தி யென்றான்

    6

    1032

    வௌ¢ளைவா ரணக்கடவுள் உரைசெய்த மொழிகேட்டு விண்ணுளோர்க்கு,
    வள்ளல்நீ இரங்குதியோ அத்தொழில்யான் புரிவனென வருணன் கூறி,
    அள்ளல்வே லையுட்புகுந்து தனதுபெருங் கரதலத்தால் அலைத்து வாரி,
    யுள்ளமீன் குலங்களெல்லாந் தடங்கரையில் வரையேபோல் உயர்த்த லுற்றான்.

    7

    1033

    தடக்கடலின் வேலைதனில் வருணர்பிரான் ஒல்லைதனில் தந்த மீனத்,
    தடுக்கல்முழு வதுநோக்கிக் கடவுளரை விளித்திவற்றை ஆற்றலாலே,
    எடுப்பதுநுந் தொழிலென்றே இந்திரன்றான் விளம்புதலும் இமையோ ரெல்லாம்,
    நடுக்கமுடன் உளம்பதைப்ப விழிபனிப்பக் கரங்குலைத்து நாணுக் கொண்டார்.

    8

    1034

    சின்னைதிமிங் கிலகிலமீ னாதியமீன் அடுக்கலினைத் தென்பால் வைகும்,
    மன்னனுயிர் தலைவாங்கச் செங்கதிரோன் பெரும்புனலின் வடிவை வாட்டப்,
    பன்னகரா கியதிறத்தாற் பிணித்திடும்அச் சுமையதனைப் பகட்டின் வேந்தன்,
    இன்னலுறு வானவர்பால் எடுத்தவவர் கொண்டேகி இரங்கு கின்றார்.

    9

    1035

    வேறு
    பன்னும் புகழ்ச்சூர பன்மனெனுந் தீயவனான்
    முன்னுந் துயர்க்கடலின் மூழ்கி முரணழிந்தேம்
    துன்னும் பழியாந் தொழலிதுவுஞ் செய்தனமால்
    இன்னும் படுவதொழில் ஏதோ உணரேமே.

    10

    1036

    பேர்கின்ற நீலப் பிறங்கல்அனை யான்பணியால்
    ஆர்கின்ற தின்றோ ரலரே அ·துயிரை
    ஈர்கின்ற தந்தோ விதியே எமக்கிதுவுந்
    தீர்கின்ற காலம் உளதோநீ செப்பாயே.

    11

    1037

    பூவுலகந் தன்னில் பொருந்துகின்ற மானுடரும்
    பாவமென நூலில் பகருகின்ற இத்தொழிலை
    ஏவர்புரி கின்றார் எமக்கோவந் தெய்துமதோ
    தேவ கதியின் நிரயஞ் சிறப்புடைத்தே.

    12

    1038

    தக்க துணராத தானவர்கள் தங்களினும்
    மக்களினுந் தாழ்வாம் வலைஞர்தொழில் செய்தனமால்
    இக்ககன வாழ்வை விரும்பியே யாஞ்செய்த
    மிக்க தவமும் வினையாய் விளைந்ததுவே.

    13

    1039

    வேத நெறியை விலக்கினேம் மிக்குள்ள
    போத நெறியாம் அதற்குப் புறம்பனேம்
    தீதுடைய வெஞ்சூரன் சீற்றத்தாற் செப்புகின்ற
    வேதநெறி செய்வேமேல் எம்மினுயர்ந் தாரெவரே.

    14

    1040

    தேனுலவுந் தாருத் திருநிழற்கீழ் இன்பமுறும்
    வானவர்க ளென்றே மதிக்குந் தகைமையினோம்
    ஈனமொடு மீன்சுமந்தே எல்லோர் களும்நகைக்கத்
    தானவர்முன் செல்வதிலுஞ் சாதல்மிக நன்றுநன்றே.

    15

    1041

    என்னு மொழிகள் இயம்பிப் புலம்புற்றுத்
    துன்னு நிருதர்புகழ் சூரன் திருநகரின்
    மன்னுதிசை யாளரொடும் வந்தனரால் அவ்வளவில்
    அன்னசெயல் கண்டே அவுணர்உரை செய்குவார்.

    16

    1042

    மாதோயந் தன்னை வயிறலைத்து மற்றிவர்தாம்
    ஈதோ சிலமீன் தருகின் றனரென்பார்
    மீதோ டியபரிதி வெய்யோன்முன் னுண்டவெறுங்
    கோதோ எமக்குக் கொணர்கின்றார் என்றுரைப்பார்.

    17

    1043

    தாங்கடற்குள் மீனந் தலைக்கொண்டு மேவுகின்றார்
    ஈங்கிவர்க்கு நாணம் இலையோ சிறிதென்பார்
    தீங்கிழைக்கின் யாரேனுஞ் செய்யாத தேதென்பார்
    மூங்கையொத்து ளாரோ மொழியார் இவரென்பார்.

    18

    1044

    முந்துற்ற தொல்லை முழுநீரின் வேலைதொறும்
    பந்தத் துடன்வாழ் பரதவரே செய்கின்ற
    இந்தத் தொழிலும் இவர்க்குவரு மோவென்பார்
    சிந்திப்ப தென்னோ விதியின் செயலெனபார்.

    19

    1045

    வேத நெறிமுறைமை விட்டார் வினைசெய்யும்
    பேதை நெறியே பிடித்தார் இவரென்பார்
    கோதுபடா நந்தங் குலத்தை மிகநலிந்தார்
    ஏதுபடார் இன்னம் இமையோ ரெனவுரைப்பார்.

    20

    1046

    மண்ணோர் களுமிகழும் வன்பழிதன் பால்வரவும்
    விண்ணோர்க் கிறைவன் விரைவினுயிர் விட்டிலனாற்
    கண்ணோ பெரிது கருத்தோ சிறிதென்பார்
    பெண்ணோ அலிதானோ பேடோ வெனவுரைப்பார்.

    21

    1047

    வேறு
    இந்த வாறு பலரும் இயம்பிடப்
    புந்தி நொந்து புலம்புபுத் தேளிர்கள்
    தந்தி யூருந் தலைவனை முற்கொடு
    வந்து தீயவன் வாய்தலுற் றாரரோ.

    22

    1048

    பரிதி வேந்தன் பணிமுறை நாடியே
    வருதிர் ஈண்டென்று வாயிலர் கூறிடப்
    பொருதி ரைக்கடல் மீன்கொடு போய்ச்சுரர்
    ஒருத னிப்பெருங் கோயிலுள் உய்த்தனர்.

    23

    1049

    எளித்தல் எய்தும் இமையவர் உய்த்தமீன்
    துளித்த தேன்றொடைச் சூர்முதல் காணுறீஇக்
    களித்து வந்து கடவுளர் வைகலும்
    அளித்தி ரென்ன அழகிதென் றேகினார்.

    24

    1050

    என்றும் ஆங்கவர் இச்செயல் ஆற்றியே
    பொன்றி னாரின் புலர்ந்து புலம்புறீஇத்
    துன்று கின்ற துயர்க்கடல் மூழ்கியே
    ஒன்றும் வேத வொழுக்கமற் றாரரோ.

    25


    ஆகத் திருவிருத்தம் - 1050
    ----

    19. புதல்வரைப் பெறு படலம் (1051-1073)

    1051

    அதுபொழு தவுணர் கோமான் ஆற்றிய தவத்தின் சீரால்
    பதுமகோ மளையென் றோதும் பாவைதன் உதரம் போந்து
    புதுமதிக் குழவி யேபோல் பொற்பொடு பொலிந்து முன்னம்
    மதலையங் கொருவன் வந்தான் மறலிக்கு மறலி போல்வான்.

    1

    1052

    வந்ததோர் மதலை தன்னை மன்னவர் மன்னன் காணூஉ
    அந்தமில் மகிழ்ச்சி பொங்க அவுணர்தங் கிளைஞர்க் கெல்லாம்
    நந்திய வெறுக்கை தன்னை நலத்தக வீச லுற்றான்
    இந்திரன் முதலி னோரும் யாவரும் இடுக்கண் எய்த.

    2

    1053

    வீசிய பின்றை வானோர் மெல்லியர் அவுணர் மாதர்
    ஆசிகள் புகன்று போற்றி அன்னதோர் மைந்தன் தன்னைக்
    காசொடு வயிர முத்தங் கதிர்பொலந் தொட்டில் சேர்த்தார்
    மாசகல் மதிய மேபோல் பைப்பய வளர்தல் உற்றான்.

    3

    1054

    கட்டழ குடைய மைந்தன் கம்பலங் கொண்ட செம்பொன்
    தொட்டிலில் துயிலு மெல்லை ஒருபகல் சுடரின் என்றூழ்
    விட்டதோர் நூழை தன்னால் மேவியே அனையன் மெய்யிற்
    பட்டதங் கதனை நாடிப் பரிதியைச் சுளித்துப் பார்த்தான்.

    4

    1055

    பார்த்திடு கின்ற மைந்தன் பன்மணித் தொட்டில் நின்றுஞ்
    சீர்த்தெழுந் தண்டம் பாய்ந்து செங்கதிர்ச் செல்வற் பற்றிக்
    கார்த்திடு புயங்கங் கவ்வும் படித்தெனக் கரத்திற் கொண்டு
    போத்துமோர் இறையில் வந்தான் தவத்தினும் பெரிதொன் றுண்டோ.

    5

    1056

    தானுறை இருக்கை தன்னில் தகுவர்கோன் தனயன் சாரா
    ஆனதோர் செம்பொற் றொட்டில் அணிமணிக் காலி னூடே
    பானுவை வலிதிற் கட்டிப் பண்டுபோல் துயின்றான் அங்கண்
    வானவர் அதனை நோக்கி மனம்வெரீஇ மறுக்க முற்றார்.

    6

    1057

    பரிதிவிண் சேறல் இன்றிப் பிழைத்தலும் பார்தந் துள்ளோன்
    கருதியிந் திரனே ஏனைக் கடவுளர் யாருஞ் சூழ
    நிருதர்கோன் தன்பால் வந்து நீடிருட் பகைவன் தன்னைத்
    தருதிநின் மைந்தன் செய்த தனிச்சிறை நீக்கி யென்றான்.

    7

    1058

    வேறு
    மறைபு ரிந்தநான் முகன்இவை புகறலும் வானத்
    திறைபு ரிந்திடும் இரவியை என்மகன் இன்னே
    சிறைபு ரிந்ததை உணர்கிலேன் அவனது செய்யக்
    குறைபு ரிந்ததென் பகர்தியென் றுரைத்தனன் கொடியோன்.

    8

    1059

    சொற்ற வாசகங் கேட்டலும் ஆருயிர்த் தொன்மை
    முற்று நாடிய நான்முகன் நின்மகன் முகமேல்
    அற்ற மில்சுடர் ஆதபந் தீண்டிய ததனால்
    பற்றி வெய்யவற் சிறைபுரிந் தானெனப் பகர்ந்தான்.

    9

    1060

    மகவு தன்செயல் கேட்டலுஞ் சூரபன் மாவாந்
    தகுவர் கோன்மிக மகிழந்துநீர் என்மகற் சார்ந்து
    மிகவும் நன்மொழி கூறியே ஆங்கவன் விடுப்பப்
    பகல வற்கொடு போதிரால் ஈண்டெனப் பகர்ந்தான்.

    10

    1061

    கேட்ட நான்முகன் நன்றென விடைகொண்டு கிளர்பொன்
    நாட்டின் மேனகை முதலினோர் பாடலின் நலத்தால்
    ஆட்டு பொன்மணித் தொட்டிலின் மிசையுறும் அண்ணல்
    மாட்டு மேவிநின் றளவையில் ஆசிகள் வகுத்தான்.

    11

    1062

    அன்பின் மைந்தனைப் புகழ்ந்துமுன் நிற்றலும் அனையான்
    என்பெ றும்பரி சுமக்கென இன்னதோர் இரவி
    துன்பு றுஞ்சிறை அகற்றுதி என்றலுந் தொல்லோய்
    உன்பெ ரும்படை தருதியேல் விடுவனென் றுரைத்தான்.

    12

    1063

    உரைத்த மைந்தனுக் கயன்றன தகன்படை யுதவ
    நிரைத்த செங்கதிர்ச் செல்வனை விடுத்தனன் நிருதன்
    விரைத்த பயங்கயக் கிழவனும் புதல்வனை வியந்து
    பரித்தி யாலென உதவினன் மோகவெம் படையே.

    13

    1064

    படைய ளித்தலும் பகலொடு பங்கயத் தவற்கு
    விடைய ளித்தனன் தாதையத் தன்மையை வினவி
    நடைய ளித்தனன் புதல்வனுக் கன்னதோர் நன்னா
    ளிடைய ளித்தனன் பானுகோ பன்எனும் இயற்பேர்.

    14

    1065

    பானு கோபனென் றொருபெயர் பெற்றஅப் பாலன்
    மானை நேர்விழி மங்கையர் மதனென மயங்க
    ஆன பேருரு வெய்தியே அம்புயத் திருவின்
    கோனொ டேபொரு தவன்றனைப் பெருந்திறல் கொண்டான்.

    15

    1066

    பரிதி யின்பகை யாமிவற் பெற்றபின் பரிவால்
    நிருதர் காவலன் அங்கிமா முகத்தனை நிறஞ்சேர்
    இரணி யன்றனை வச்சிர வாகுவை எழிலார்
    மருவு லாங்குழற் பதுமகோ மளைதர மகிழ்ந்தான்.

    16

    1067

    மைத்த கூர்விழி ஏனைய தேவியர் மகிழ்வால்
    உய்த்து நல்கிடச் சூரனும் வெய்யவன் ஒருங்கே
    பத்து நூறுள மும்மைசேர் பாலரைப் பயந்தான்
    இத்தி றத்தவர் தம்முடன் அங்கண்வீற் றிருந்தான்.

    17

    1068

    வேறு
    சீற்ற முற்றிடு சிங்க முகன்கணே
    தோற்றி னான்அதி சூரன்என் ோர்மகன்
    வீற்று நூற்றுவர் மேவினர் அன்னவர்
    ஆற்றல் யாவர் அறைந்திட வல்லரே.

    18

    1069

    அந்த நாளில் அவன்றன் இளவலாந்
    தந்தி மாமுகத் தாரகன் தன்னிடை
    முந்து செய்தவ மொய்ம்பினொர் மாமகன்
    வந்து தோன்றினன் வான்கதிர்ப் பிள்ளைபோல்*.
    (* வான் கதிர்ப் பிள்ளை - பாலசூரியன். )

    19

    1070

    ஆமி வன்அசு ரேந்திரன் என்றவற்
    கேம மான குரவன் இசைப்பஅந்
    நாமம் எய்தி நலம்பெறு காளையாய்க்
    காமன் என்னக் கவின்றனன் யாக்கையே.

    20

    1071

    ஓத ருங்கலை யாவும் உணர்கினும்
    ஏத மாவதோர் விஞ்சை இயற்றிடான்
    பாத கம்புரி யான்பழி பூண்கிலான்
    நீதி யன்றி எவையும் நினைகிலான்.

    21

    1072

    வீறு கொண்டிகல் வீரம் புகன்றெதிர்
    மாறு கொண்டவர் உண்டெனின் மற்றவர்
    ஈறு கொண்டிட ஏற்றுர மேற்படை
    ஊறு கொண்டிட உன்னுந் தகைமையான்.

    22

    1073

    சிகரம் எண்ணில சேட்படு கள்ளிதான்
    அகரும்** நல்கி அமர்ந்தென அன்னதோர்
    மகனை நல்கி வளங்கெழு மாயமா
    நகர வாழ்க்கையின் நண்ணினன் தாரகன்.
    (** அகர் - அகில்; பல அகில்களில் சதுரக்கள்ளி
    வைரமாகிய அகிலும் ஒன்று. )

    23

    ஆகத் திருவிருத்தம் - 1073
    - - -

    20. வில்வலன் வாதாவிப் படலம் (1074 -1104)

    1074

    அன்னவ ருடன்வந்தாள் அசமுகி எனுநாமம்
    மன்னினள் ஒருவன்றன் மனையெனும் முறையில்லாள்
    தன்னிறை தவிர்கின்றாள் தருமம திலள்வானோர்
    பன்னியர் தமைமுன்னோர் படர்புயம் உறவுய்ப்பாள்.

    1

    1075

    ஆள்வினை புரியுள்ளத் தவமுனி வரர்ஆற்றும்
    வேள்விநை யுறும்வண்ணம் வெந்தொழில் புரிகின்றாள்
    நீள்வினை வடிவானாள் நிருதர்ள் குலமெல்லாம்
    மாள்வினை யெனயாண்டும் வைகலும் உலவுற்றாள்.

    2

    1076

    கட்டழ குளதாகுங் காளையர் தமைநாடிக்
    கிட்டினள் புணர்கிற்பாள் கேளிரை இகழ்வோரை
    அட்டனள் நுகர்கின்றான் அனையவள் ஒருவைகல்
    முட்டினள் துருவாச முனியுறு தனியெல்லை.

    3

    1077

    அந்தநன் முனிதன்னை ஆயிழை அவள்காணாச்
    சிந்துவன் இவனின்னே செய்தவம் அ·தன்றி
    மைந்தர்கள் பெறுவேனால் வல்லையில் இவண்என்னாப்
    புந்தியில் நினைவாயே போய்அவன் எதிருற்றாள்.

    4

    1078

    உறுதலும் முனிநாடி ஒண்டோடி தனியேநீ
    குறுகிய தெவன்மாதோ கூறுதி யெனலோடும்
    மறுவறு முனிநின்பால் மனமகிழ வொடுமேவிச்
    சிறுவர்கள் பெறவந்தேன் செப்புவ திதுவென்றாள்.

    5

    1079

    என்றலும் முனிசூரற் கிளையவள் எனநாடி
    வென்றிகொள் மடமாதே மேலுறு தவமெல்லாங்
    குன்றிடும் உனையின்னே கூடுவ னெனின்நீயும்
    நின்றிடல் பழியல்லால் நீதியும் அலவென்றான்.

    6

    1080

    முனியிது பகர்வேலை மொய்குழல் மடமானாள்
    இனியுனை மருவாதே ஏகலன் ஒருவிப்போம்
    மனநினை வொழிகென்றே வன்மையி னொடுபுல்லி
    அனையவன் இதமூறல் ஆரமு தயிலுற்றாள்.

    7

    1081

    ஆடெனு முகவெய்யாள் அனையனை வலிதாகக்
    கூடினள் அதுபோழ்தில் குறுகினர் இருமைந்தர்
    ஈடுறு வலிமிக்கார் இன்னவர் தமையன்னை
    மாடுற வருகென்றே மகிழ்வொடு தழுவுற்றாள்.

    8

    1082

    தழுவினள் பரிவோடுந் தன்புதல் வரைநோக்கி
    மழகளி றனையீர்காள் வல்லவு ணரில்வந்தீர்
    விழுமிய தவமாற்றி மேவுதிர் வலியென்ன
    அழிதரு நிறைகொண்ட அசமுகி உரைசெய்தாள்.

    9

    1083

    தாயின துருவாயுந் தந்தைதன் உருவாயும்
    ஏயின இருமைந்தர் வில்வலன் வாதாவி
    ஆயதொர் பெயர்பெற்றோர் அன்னைதன் உரைகொண்டே
    தூயதொர் குரவோன்றன் துணையடி பணிகுற்றார்.

    10

    1084

    மூண்டிடு வெகுளித்தீ முனிவரன் அடிதன்னைப்
    பூண்டிடு திறன்மிக்க புதல்வரை யெதிர்நோக்கி
    வேண்டிய தெவனென்ன வெய்யவள் தருமைந்தர்
    ஈண்டுன தவமெல்லாம் யாம்பெற அருளென்றார்.

    11

    1085

    ஆற்றிடு தவமெல்லாம் அருளெனின் அவைதாரேன்
    வீற்றொரு பொருளுண்டேல் வினவுதிர் எனமேலோன்
    சீற்றம துளராகிச் சிறுவர்கள் இவன்ஆவி
    மாற்றுதும் இவண்என்னா வல்லையின் எழலுற்றார்.

    12

    1086

    இறுதிசெய் திடவுன்னி இகலுடன் எழுகின்ற
    சிறுவர்கள் செயல்நாடிச் சினமொடு முனிநீவிர்
    மறுவறு தவருக் வைகலும் இடர்செய்வீர்
    குறுமுனி நுமதாவி கொள்ளுக இனியென்றான்.

    13

    1087

    இனையது முனிசொற்றே எமையடு வர்களென்னா
    மனமுறு தனிவிஞ்சை மாயையின் மறைபோழ்தில்
    தனயர்கள் இருவோருந் தந்தைத னைக்காணார்
    அனைதனை விடைகொண்டே யாயிடை ஒருவுற்றார்.

    14

    1088

    வேறொரு வனமெய்தி மெய்த்தவர் குழுவெல்லாங்
    கோறலை மனமுன்னிக் குமரர்கள் இருவோரும்
    தேறிய வுணர்வோடுந் திசைமுக வனைநோக்கி
    ஈறகல் பகலாக எரியத னிடைநோற்றார்.

    15

    1089

    செந்தழ லிடைநோன்பு செய்யவும் அயன்அங்கண்
    வந்திலன் அதுநாடி மற்றொரு செயலுன்னி
    வெந்திறல் இளையோனை வில்வல னெனும்வெய்யோன்
    சுந்தர மணிவாளால் துணிபட எறிகுற்றான்.

    16

    1090

    கையன துடல்கீறிக் கறையொடு தசையெல்லாம்
    நெய்யுடன் அவியாக்கி நீடிய கனலூடே
    வையகம் அருள்தாதை மந்திர முறையுய்த்து
    வெய்யவன் ஒருவேள்வி விரைவொடு புரிகுற்றான்.

    17

    1091

    தவமொடு மகமாற்றச் சதுர்முகன் அதுகண்டே
    அவனியின் மிசைவந்தே அரியதொர் செயல்செய்வாய்
    எவனருள் பரிசென்ன இணையடி தொழுதேத்தி
    அவுணர்கள் வடிவாம்வில் வலன்இவை அறைகின்றான்.

    18

    1092

    வன்னியில் அவியூணாய் மாண்டிடும் ஒருபின்னோன்
    மெய்ந்நிறை வடிவோடும் விரைவுடன் வரல்வேண்டும்
    என்னலும் வாதாவி எழுகென அயன்ஓத
    அன்னதொர் பொழுதின்கண் ஆர்த்தவன் எழுந்திட்டான்.

    19

    1093

    ஆங்கனம் அசுரேசன் அதிசய முளனாகித்
    தீங்குடன் ஒருசூழ்ச்சி சிந்தையி னிடையுன்னிப்
    பூங்கம லத்தோனைப் போற்றிசெய் தடியேனுக்
    கீங்கொரு வரம்எந்தாய் ஈகென உரைசெய்வான்.

    20

    1094

    புல்லயின் மறியேபோற் பொலிவுறும் வாதாவி
    ஒல்லையின் இனிமேலும் உடல்துணி படுவானேல்
    எல்லையில் பரிவால்யான் எம்பியை எழுகென்னத்
    தொல்லையில் வடிவோடுந் தோன்றிமுன் வரல்வேண்டும்.

    21

    1095

    இப்படி வரமொன்றே யான்பெற அருள்கென்றே
    மெய்ப்படும் உணர்வில்லா வில்வலன் உரைசெய்ய
    அப்படி பலகாலம் அதுமுடி கெனநல்கிச்
    செப்பரு மறைவேதாச் சேணுடை நெறிசென்றான்.

    22

    1096

    சேறலும் அதுகாலைச் சிறுவர்கள் இருவோரும்
    ஏறென அமர்சூர்முன் ஏகியுன் மருகோர்யாம்
    வேறல எனவோதி மேதினி முனிவோரைக்
    கோறல்செய் வெருவன்மை கொண்டதும் உரைசெய்தார்.

    23

    1097

    மன்னவன் அவர்தம்மை மகிழ்வொடு நனிபுல்லி
    என்னுழை மருகீர்காள் இனிமையொ டுறுமென்ன
    அன்னவர் சிலவைகல் ஆயிடை தனில்வைகிப்
    பின்னுற இருவோரும் பெருநில மிசைவந்தார்.

    24

    1098

    நவைதவிர் குடகின்கண் நால்வகை நெறிகூடுங்
    கவலையின் வளமல்குங் கானக விடைதன்னில்
    அவுணர்கள் தாம் அங்கோர் ஆச்சிர மஞ்செய்தே
    எவரெவ ரும்வெ·கும் எப்பொருள் களுமுய்த்தார்.

    25

    1099

    அன்னதொ ரிடைதன்னில் ஆரிட ராயுள்ளோர்
    இன்னுயிர் கொளவுன்னி இருவருள் இளமைந்தன்
    பொன்னிவர் திரிகோட்டுப் பொருதக ராய்நிற்க
    முன்னவன் விரதஞ்செய் முனிவரின் இனிதுற்றான்.

    26

    1100

    வில்வலன் எனவோதும் வெய்யவன் அவ்வெல்லைச்
    செல்வதோர் முனிவோரைச் செவ்விதின் எதிர்கொண்டு
    வல்விரை வொடுதாழ்ந்து மற்றும தடியேன்றன்
    இல்வரு வீரென்னா இயல்பொடு கொடுசென்றே.

    27

    1101

    இப்பகல் அடிகேளுக் கிவ்விடை உணவென்னா
    ஒப்பறு நெறிகூறி ஓதன வகையெல்லாம்
    அப்பொழு தினிலட்டே அயமெனும் இளையோனைத்
    துப்புறு கறியாகத் துண்டம துறுவித்தே.

    28

    1102

    உள்ளுறு குறியாகும் ஊன்முழு வதும்நாடி
    வள்ளுறு சுடர்வாளால் வகைவகை படவீர்ந்தே
    அள்ளுறு கறியாக அட்டபின் அவரவ்வூண்
    கொள்ளுற நுகர்வித்தே கூவுவன் இளையோனை.

    29

    1103

    கூவிய பொழுதின்கட் கொறியெனும் உருவானோன்
    ஆவிமெய் யுளனாகி அன்னவர் உதரத்தை
    மாவலி யொடுகீண்டே வருதலும் இருவோருஞ்
    சாவுறு முனிவோர்தந் தசையினை மிசைவாரால்.

    30

    1104

    வேறு
    வீடுறு முனிவர்ஊன் மிசைந்து தொன்மைபோல்
    ஆடென முனியென அனையர் மேவிய
    நாடொறும் இச்செயல் நடாத்தி யுற்றனர்
    கேடறு முனிவர்தங் கிளைகள் மாளவே.

    31


    ஆகத் திருவிருத்தம் - 1104
    ------

    21. இந்திரன் கரந்துறை படலம் (1105 - 1152)

    1105

    இப்படி அவுணர்கள் இனையர் ஏனையோர்
    செப்பரு முனிவரைத் தேவர் தங்களை
    ஒப்பறு நரர்தமை ஒறுப்ப மாயைதன்
    வைப்புறு காதலன் அரசின் மன்னினான்.

    1

    1106

    ஆயிரத் தெடடெனும் அண்டம் யாவையுஞ்
    சேயுயர் இந்திர ஞாலத் தேர்மிசை
    ஏயெனும் அளவையில் ஏகி வைகலும்
    நாயக முறையினை நடாத்தி நண்ணினான்.

    2

    1107

    ஒருபகற் பாதலத் தூடு வைகிடும்
    ஒருபகல் மாதிரம் உலவிச் சேர்தரும்
    ஒருபகல் விண்பதந் தோறும் உற்றிடும்
    ஒருபகல் அயன்பதத் துன்னி மன்னுமே.

    3

    1108

    தண்ணறுந் துளவினான் தனது தொல்பதம்
    நண்ணிடும் ஒருபகல் நாளு மிவ்வகை
    எண்ணரும் உலகுதோ றேதி மாலையில்
    துண்ணென மீள்வனால் சூர பன்மனே.

    4

    1109

    அவ்வகை யால்அர சாற்றும் எல்லையில்
    எவ்வமில் சூர்முதல் இந்தி ரன்னெனுந்
    தெவ்வினை வன்சிறை செய்து தேவியை
    வவ்விய வுன்னினன் வருவ தோர்கிலான்.

    5

    1110

    உன்னிய தீயவன் ஒருதன் தானையின்
    மன்னனை விளித்துநீ வாச வன்றனை
    இன்னதோர் பொழுதினில் எய்திப் பற்றியென்
    முன்னுற விடுகென முன்னம் ஏவியே.

    6

    1111

    நீடிய தன்பெரு நிலயங் காப்பவர்
    கோடுறு நிசிசரர் குலத்துள் தோன்றினார்
    கேடகம் வாள்அயில் கெழுவு கையினார்
    பாடவ மடந்தையர் பவங்கள் போன்றுளார்.

    7

    1112

    ஒன்பது கோடியர் தம்மை ஒல்லையில்
    அன்புடன் விளித்துநீர் அமரர் தம்மிறை
    இன்புறு தேவியைப் பற்றி யீமென
    வன்பொடு போக்கினன் மன்னர் மன்னனே.

    8

    1113

    போக்கலும் அவரெலாம் பொன்னின் நாட்டின் மேல்
    ஊக்கம தாகியே உருத்துச் சேறலும்
    நோக்கிய தூதுவர் நொய்திற் போகியே
    மாக்கிளர் இந்திரன் மருங்கு நண்ணினார்.

    9

    1114

    வந்நனர் அவுணரும் வயங்கொள் மாதரும்
    அந்தமில் படையொடும் அடல்செய் நீரர்போல்
    சிந்தனை யாவதோ தெரிந்தி லோமென
    இந்திரன் வினவுற இசைத்து நிற்கவே.

    10

    1115

    பொம்மென அவர்தமைப் போக்கித் தீயினும்
    வெம்மைகொள் நெஞ்சினார் வினைய முன்னியே
    அம்மனை மனைவியோ டகன்று மாயையான்
    இம்மென இப்புவி தன்னில் ஏகினான்.

    11

    1116

    ஏகய வெல்லையின் இகல்வெஞ் சூர்விடப்
    போகிய மாதரும் பொருவில் வீரரும்
    நாகர்தம் மிறையமர் நகரை நண்ணினார்
    ஆகர முதலிய இடந்தொ றாய்குவார்.

    12

    1117

    வினைவயிற் சென்றிடும் வீரர் யாவருந்
    துனைமத் திறைவனைத் துவிக் காண்கிலர்
    மனைவியைக் காண்கிலர் மாதர் யாவரும்
    நினைவயர்த் துள்ளுறு கவலை நீடினார்.

    13

    1118

    நாயகன் இவ்விடை நம்மைக் கூவியே
    ஏயின செயலினை ஈறு செய்கிலம்
    போயினன் சசியொடும் புலவர் கோனெனா
    ஆயவன் நகரெலாம் ஆய்வுற் றாரரோ.

    14

    1119

    சுற்றினர் நகரெலாந் துவித் தேவரைப்
    பற்றினர் விலங்கலின் பகைவற் காட்டென
    எற்றினர் புலோமசை யாண்டை யாளெனக்
    குற்றினர் வாய்தொறுங் குருதி பாயவே.

    15

    1120

    விண்ணவர் யாவரும் வேந்துந் தேவியும்
    நண்ணிய துணர்கிலம் நாங்கள் எங்களைத்
    துண்ணென வருத்தலிர் துயர்கின் றோமெனாத்
    தண்ணளி வருநெறி தளர்ந்து சாற்றவே.

    16

    1121

    விட்டனர் தேவரை விண்ணை நீங்கினர்
    முட்டினர் மகேந்திர மதிய மாநகர்
    கிட்டினர் வேந்தனைக் கிளர்ந்து வானிடைப்
    பட்டது புகன்றனர் பழிகொள் நெஞ்சினார்.

    17

    1122

    போயினர் இருவரும் புறத்த ராயென
    ஆயவர் மொழியவே அவுணர் மன்னவன்
    தீயென வெகுண்டனன் தேடொ ணாததோர்
    தூய்மணி இழந்திடும் அரவின் துன்புளான்.

    18

    1123

    ஒற்றரி பலர்தமை யொல்லை கூவியே
    பொற்றொடி அணங்கொடு பொன்னின் நாட்டவர்
    கொற்றவன் இருந்துழிக் குறுகி நாடியே
    சொற்றிடு வீரெனச் சூரன் தூண்டினான்.

    19

    1124

    தோடவிழ் தெரியலான் தூண்டை ஒற்றர்கள்
    ஓடினர் வீற்றுவீற் றுலக மெங்கணும்
    தேடினர் காண்கிலர் திரிகுற் றார்இனி
    நீடிய பொன்னகர் நிகழ்ச்சி கூறுகேன்.

    20

    1125

    வேறு
    செல்லெனும் ஊர்தி அண்ணல் தேவியுந் தானும் நீங்கச்
    சொல்லருங் ககனம் பூத்த சோமனும் உடுவும் போன
    எல்லியம் பொழுது போன்றே யாதுமோர் சிறப்பும் இன்றாய்ப்
    புல்லென லாய தன்றே பொருவில்பொன் னகர மெல்லாம்.

    21

    1126

    அழிந்தன வளங்க ளெல்லாம் ஆகுல மயங்கிற் றின்பம்
    ஒழிந்தது வானோர் உள்ளம் ஒடுங்கிய துலக மெங்கும்
    எழுந்தது புலம்ப லோதை யாவர்தங் கண்ணுந் தெண்ணீர்
    பொழிந்தது சுவர்க்கம் ஆவி போனவர் போன்ற தன்றே.

    22

    1127

    இன்னனம் நிகழும் முன்னர் இந்திரன் இளவ லாகி
    மன்னிய உபேந்தி ரன்றான் வானவர் உலகை நீங்கி
    முன்னைவை குண்டம் புக்கான் முனிவரர் கலிக்கா வஞ்சிக்
    கன்னிகை நோற்று மேவுங் காஞ்சியை யடைந்த வாபோல்.

    23

    1128

    சேண்பதந் தன்னை நீங்குஞ் சிறியதோர் தந்தை தன்னைக்
    காண்பது கருதிப் போந்து கடவுளர்க் கிறைவன் மைந்தன்
    தூண்புரை கின்ற செம்பொற் றோளுடைச் சயந்தன் என்போன்
    மாண்பொடு சிறிது வைகல் வைகுண்டத் திருந்தான் அன்றே.

    24

    1129

    இருந்திடு சயந்தன் என்போன் இந்திரன் இறைவி யோடுங்
    கரந்துடன் போந்த வாறுங் காமரு துறக்கந் தன்னில்
    விரைந்துவந் தவுணர் தேடி மீண்டிட விண்ணு ளோர்கள்
    அரந்தையோ டுற்ற வாறும் அங்ஙனந் தேர்ந்தான் அம்மா.

    25

    1130

    தந்தைதன் மெலிவு காணில் தங்குடித் தலைமை யெல்லாம்
    மைந்தர்கள் பரித்துக் கோடல் வழக்கதாம் அறனும் அ·தே
    எந்தையு மில்லை யான்போய் என்னகர் காப்ப னென்னாப்
    புந்தியி லுன்னி மைந்தன் பொன்னகர் தன்னில் வந்தான்.

    26

    1131

    பொன்னகர் புக்க மைந்தன் புலம்புறு சுரரைக் கண்டு
    தன்னுயிர் போலுந் தந்தை தாய்தனைக் காணா னாகி
    இன்னலங் கடலின் மூழ்கி ஏக்கமோ டிரக்க மிக்குப்
    பின்னொரு செயலு மின்றிப் பித்தரே போல வுற்றான்.

    27

    1132

    உற்றிடு மெல்லை தன்னில் உம்பர்கோன் மதலை யுள்ளந்
    தெற்றெனத் தௌ¤ப்ப வுன்னி நாரதன் என்னுஞ் சீர்சால்
    நற்றவ முனிவன் செல்ல நடுக்கமோ டெழுந்து தாழ்ந்து
    மற்றொரு தவிசு நல்கி இருத்தியே மருங்கு நின்றான்.

    28

    1133

    நின்றிடு சயந்தன் சொல்வான் நித்தலும் வருத்தஞ் செய்யும்
    வன்றிறற் சூரற் கஞ்சி மற்றெனைப் பயந்த மேலோர்
    சென்றனர் சென்ற வெல்லை தெரிந்திலேன் எமக்குத் தீமை
    என்றினி யகலுங் கொல்லோ எம்பிரான் இயம்பு கென்றான்.

    29

    1134

    தருக்கினை இழந்து நின்ற சயந்தன்இத் தன்மை கூறப்
    பொருக்கென முனிவன் ஓர்ந்து பொங்குபே ரருளால் நோக்கித்
    திருக்கிளர் கின்ற தாங்கோர் செழுமணித் தவிசின் மீதில்
    இருக்கென இருத்திப் பின்னர் இன்னன இசைக்க லுற்றான்.

    30

    1135

    தீங்குவந் தடையு மாறும் நம்மைதான் சேரு மாறும்
    தாங்கள்செய் வினையி னாலே தத்தமக் காய அல்லால்
    ஆங்கவை பிறரால் வாரா அமுதநஞ் சிரண்டி னுக்கும்
    ஓங்கிய சுவையின் பேதம் உதவினார் சிலரும் உண்டோ.

    31

    1136

    இன்பம தடைந்த காலை இனிதென மகிழ்ச்சி எய்தான்
    துன்பம துற்ற போதுந் துண்ணெனத் துளங்கிச் சோரார்
    இன்பமுந் துன்பந் தானும் இவ்வுடற் கியைந்த வென்றே
    முன்புறு தொடர்பை ஓர்வார் முழுவதும் உணர்ந்த நீரார்.

    32

    1137

    வறியவர் செல்வ ராவர் செல்வர்பின் வறிய ராவர்
    சிறியவர் உயர்ந்தோ ராவர் உயர்ந்துளோர் சிறிய ராவர்
    முறைமுறை நிகழும் ஈது முன்னையூழ் வினையே கண்டாய்
    எறிகதிர் வழங்கும் ஞாலத் தியற்கையும் இனைய தன்றோ.

    33

    1138

    ஆக்கமும் வறுமை தானும் அல்லலும் மகிழ்வு மெல்லாம்
    நீக்கமில் உயிர்கட் கென்றும் நிலையெனக் கொள்ளற் பாற்றோ
    மேக்குயர் கடவுட் டிங்கள் வெண்ணிலாக் கதிரின் கற்றை
    போக்கொடு வரவு நாளும் முறைுறை பொருந்திற் றன்றே.

    34

    1139

    ஆதலின் உமது தாழ்வும் அவுணர் தம்உயர்வும் நில்லா
    ஈதுமெய் யென்று கோடி இந்நகர் தணந்து போன
    தாதையும் பயந்த தாயும் தம்முருக் கரந்து போந்து
    மேதினி வரைப்பி னூடு மேவினர் போலு மன்றே.

    35

    1140

    மைந்தநீ தோற்று முன்னம் வானவர்க் கலக்கண் செய்த
    தந்தியின் முகங்கொண் டுற்ற தானவன் துஞ்சும் வண்ணம்
    அந்தநாள் உனது தந்தை முயன்றனன் அதனைப் போல
    இந்தவெஞ சூரன் மாயம் இன்னமும் முயல்வன் கண்டாய்.

    36

    1141

    என்றிவை பலவுங் கூறி இன்னினி வெஞ்சூர் தானும்
    பொன்றிடும் உமது துன்பும் பொள்ளென அகன்று போரும்
    நன்றிது துணிதி யென்றே நாரத முனிவன் தேற்றிச்
    சென்றனன் சயந்தன் அங்கண் இருந்தனன் தெட்ப மெய்தி.

    37

    1142

    வருந்திய அமரர் தம்மை மனப்படத் தேற்றி நாளுந்
    திருந்தலன் பணித்த ஏவல் செய்திடத் தூண்டி வான்மேல்
    இருந்தனன் சயந்த னென்போன் இருநிலத் திடைமுன் போன
    புரந்தரன் செய்த தன்மை யானினிப் புகலு கின்றேன்.

    38

    1143

    மெய்த்தரு நீழல் வைகும் வெறுக்கையை வெறுத்துப் பாரில்
    சித்திர மனைவி யோடுந் தெக்கிண தேயம் புக்குப்
    பத்துடன் இரண்டு நாமம் படைத்ததொல் காழி நண்ணி
    இத்தல மினிதே யென்னா இருந்தனன் இமையோர் கோமான்.

    39

    1144

    அந்தநல் லிருக்கை தன்னில் அயர்வுயிர்த் திறைவி யோடும்
    இந்திரன் இருந்த பின்னர் என்றுநாம் இறைவற் போற்றிப்
    புந்திகொள் மகிழவாற் பூசை புரிதுமென் றுன்னி யாண்டோர்
    நந்தன வனத்தை வைப்பான் நாடியே இனைய செய்வான்.

    40

    1145

    சந்தகில் பலவு தேமாச் சரளமே திலகந் தேக்குக்
    கொந்தவிழ் அசோகு புன்கு குரவொடு நாளி கேரம்
    நந்திய கதலி கன்னல் நாகிளம் பூகம் வன்னி
    முந்துயர் காஞ்சி வேங்கை முதலிய வேலி கோலி.

    41

    1146

    சாதியே கோங்கு நாகஞ் சண்பகம் இதழி ஞாழல்
    பாதிரி வழையே குந்தம் பாரிசா தஞ்செ ருத்தி
    போதுறு நரந்தம் வில்வம் பொலிகா வீரஞ் செச்சை
    கோதறு மயிலை மௌவல் கொழுந்துசெவ் வந்தி முல்லை.

    42

    1147

    இவைமுத லாகி யுள்ள தருக்களும் புதலு மெல்லாம்
    நவையறந் தெரிந்து வைத்தோர் நந்தன வனத்தைத் செய்ய
    அவைமிக மலர்ந்த அம்மா அம்மலர் கொண்டு நாளுஞ்
    சிவனடி அருச்சித் தங்கட் டேவியோ டிறைவன் உற்றான்.

    43

    1148

    உற்றிடு மெல்லை தன்னில் உலகினில் அவுணர்க் கெல்லாங்
    கொற்றவன் விடுத்த ஒற்றர் குவலயந் துருவிச் செல்ல
    அற்றது தெரிந்து வல்லே அமரர்கோன் துணைவி யோடு
    மற்றவண் வேணு வாகி மறைந்துநோற் றிருந்தான் மாதோ.

    44

    1149

    வேணுவின் உருப்போல் நின்று மெலிவொடு நோற்று நாளுந்
    தாணுவை வழிபட் டங்கட் சரமகன் சாரும் நாளிற்
    காணிலர் ஒற்றர் போனார் கருமுகில் அவுணர் தங்கள்
    ஆணையிற் பெய்யா தாக அவ்வனம் வாடிற் றன்றே.

    45

    1150

    நீடிய காமர் பூங்கா நெருப்புறு தன்மைத் தென்ன
    வாடின நீரின் றாகி மற்றது மகத்தின் கோமான்
    நாடினன் கவன்று தொன்னாள் நான்முகத் தவனும் மாலுந்
    தேடரும் பரனை யுன்னி இரங்கின்ன் செயல்வே றில்லான்.

    46

    1151

    திருந்தலர் புரமூன் றட்ட சேவகற் பரவ லோடும்
    பொருந்தலர் பூங்கா வாடிப் போயின எனினும் பொன்றா
    இருந்தலம் இதனில் யாறொன் றெய்துமால் மகவான் இன்னே
    வருந்தலை என்றோர் மாற்றம் வானிடை எழுந்த தன்றே.

    47

    1152

    எழுவதோர் செஞ்சொற் ளோ எம்பிரான் அருளீ தென்னாத்
    தொழுதனன் போற்றி மேனி துண்ணெனப் பொடிப்பச் சிந்தை
    முழுவதும் மகிழ்ச்சி பொங்க மொய்ம்பொடே இருந்தான் அங்கண்
    அழகிய நதியொன் றுற்ற வரன்முறை அறைய லுற்றேன்.

    48


    ஆகத் திருவிருத்தம் - 1152
    -----

    22. விந்தகிரிப் படலம் (1153 -1181)

    1153

    அந்தப் பொழுதத் தளிகொண் டுடையோர்
    சிந்தைக் கௌ¤தாஞ் சிவன்மெய் யருளான்
    முந்துற் றுணர்நா ரதமா முனிவன்
    விந்தக் கிரிமுன் னுறமே வினனால்.

    1

    1154

    மேவிப் பலஆ சிவிளம் புதலுந்
    தேவப் படிவங் கொள்சிலம் புதொழா
    ஆவற் புதம்வந் ததெம்மண் ணலென
    கூவப் படுபான் மையிசைத் திடுவான்.

    2

    1155

    மேருத் தனிவெற் புவிதிக் கரியோன்
    மூரிச் சிலையா கியமொய்ம் பதனால்
    தாரித் துலகீன் றவள்தன் மரபாற்
    பேரற் பொடுவந் துபிறக் கையினால்.

    3

    1156

    குன்றுக் கிறையாய் உறுகொள் கையினால்
    என்றைத் தொடவிண் ணிலெழுந் துறலால்
    இன்றிப் புவியா வையும் நித் தன்அடும்
    அன்றைப் பகல்கா றும்அளித் திடலால்.

    4

    1157

    ஓரா யிரமாம் முடியுள் ளதனால்
    காரார் களன்மே யகவின் கயிலை
    சாரா வொருசார் வுறுதன் மையினால்
    சூரான் அவனால் தொலைவில் லதனால்.

    5

    1158

    தாழுங் கதிருந் தகுமேல் நெறியில்
    வாழுஞ் சசியும் மலிதா ரகையும்
    ஏழென் றிடுகோ ளுமியா வர்களுஞ்
    சூழும் படிநின் றிடுதொன் மையினால்.

    6

    1159

    கொன்னே இமையோர் குடிகொண் டதனால்
    பொன்னேர் கொடுயர்ந் துபொருந் துதலால்
    பன்னே மிகள்சூழ வருபான் மையினால்
    தன்னேர் இலையென் றுதருக் கியதே.

    7

    1160

    பரந்தும் பர்நிமிர்ந் திடுபைம் பொன்வரை
    பெருந்தன் மைமதித் திடுபெற் றியைநீ
    தெரிந்தில் லைகொல்அன் னசெயற் கையெலாம்
    விரைந்துன் னொடுசெப் பியமே வினனே.

    8

    1161

    என்றான் முனிவோன் இதுகேட் டிடலும்
    ஒன்றா ியதே வுருவாய் எதிரும்
    வன்றாழ் கிரிமா மறமுற் றுயிரா
    நன்றால் இ·தென் றுநகைத் தறையும்.

    9

    1162

    இல்லா புளதொல் லிறுமாப் பகலம்
    பல்லார் இகழப் பகரும் விதியான்
    அல்லா ரெனவே நனிநா ணமுறா
    வில்லா கிவளைந் ததுமேன் மையதோ.

    10

    1163

    பொன்னார் இமவான் புரிநோன பதனால்
    அன்னான் இடைவந் தமர்வுற் றனளால்
    மன்னா குமவன் மகளா யினளோ
    எந்நா ளுமியா ரையுமீன் றருள்வாள்.

    11

    1164

    பாங்குற் றிடுபா ரினையாற் றுவனென்
    றோங்குற் றனன்எவ் வுலகும் பரியா
    ஆங்குற் றனவோ பலஅன் னவையுந்
    தாங்குற் றதுகண் ணுதல்சத் தியதே.

    121

    1165

    விற்சூழ் கதிரோன் முதல்விண் ணவர்கள்
    தற்சூழ்ந் தனல்அல் லதுசந் ததமும்
    எற்சூழ்ந் திலரோ எழுதீ வுளவாங்
    கற்சூழந் திலரோ கடல்சூழந் திலரோ.

    13

    1166

    பன்னிற் குவடும் பலவுண் டெனவே
    உன்னுற் றிடுமோ உயர்கள் ளிகளின்
    சென்னித் தொகையைத் தெரிசிக் கின்அயன்
    தன்னொத் திலனோ தலைநான் குளவே.

    14

    1167

    கடிதா கியசூ£¢ இதுகல் லெனவே
    அடரா மல்விடுத் தனன்அன் றுதனை
    நெடிதே யதுவுன் னிலன்நீள் பரிதிப்
    படையா னினும்ஆற் றல்படைத் துளனோ.

    15

    1168

    தண்ணுற் றிடுபொன் மைதயங் குருவம்
    நண்ணுற் றனமென் றுளநா டினனோ
    எண்ணுற் றவன்நல் லுணர்வெய் திலனான்
    மண்ணிற் புனைபா வைவனப் பதுவே.

    16

    1169

    தன்கண் ணுறுவா னவர்தாம் பலரும்
    என்கண் ணமரா மல்இகழ்ந் தனரோ
    நன்கண் ணுதல்நா யகனா¢ கயிலை
    யின்கண் அரகுற் றிலதெக் கிரியே.

    17

    1170

    திருவைத் தவர்கண் டுயில்செங் கண்அரா
    மருவித் தனைமுந் துமறைத் திடுநாள்
    விரைவிற் படரூ தைவெகுண் டுபறித்
    தொருமுத் தலைகொண் டதுணர்ந் திலனோ.

    18

    1171

    கிளர்ப்புற் றிடுசிம் புளொர்கே சரிமுன்
    அளப்பற் றிடுதன் னுருவண் டமெலாம்
    வளர்ப்புற் றிடுஞான் றொர்மணிப் பரல்போல்
    குளப்புற் றனன்ஈ துகுறித் திலனோ.

    19

    1172

    வரபத் திரைகேள் வன்மறம் புரியுஞ்
    சரபத் துருவுற் றுழிதாழ் சிறையின்
    விரவிப் படரூ தையின்மின் மினிபோல்
    திரிகுற் றனன்அன் னதுதேற் றிலனோ.

    20

    1173

    அறியுற் றிடுபா ரதமா னவெலாங்
    குறியுற் றிடதோல் முகர்குஞ் சரன்மேல்
    எறியுற் றமருப் பினிலே டெனலாய்ப்
    பொறியுற் றிடுமென் பதுபொய்த் திடுமோ.

    21

    1174

    தானோர் வரையல் லதுதா ரணியுண்
    கோனோ அலன்அல் லதுகோ கனத
    வானோன் அலன்வா சவன்அல் லன்அவன்
    ஏனோ தனைமே லெனவெண் ணியதே.

    22

    1175

    என்னா வடவெற் பையிழித் துரையா
    அந்நா கம்பியக் கும்அகந் தையினை
    நன்னா ரதநீக் குவனநா டுகெனா
    முன்னா வுருநீத் ததுமொய் வரையே.

    23

    1176

    வேறு
    எண்டரு முகுந்தர் கோடி எல்லையின் மாயை யாக்கை
    கொண்டனர் திரண்டு நீண்டு குலாய்நிமிர் கொள்கைத் தென்ன
    விண்டொடா விந்த மாங்கோர் விஞ்சையால் அகன்று சேண்போய்ப்
    புண்டரி கத்தன் மேய புரத்துணை நிமிர்ந்த தன்றே.

    24

    1177

    உருக்கிளர் விந்த மென்னும் உருகெழு பிறங்கல் மேல்போய்ப்
    பரக்கம் தாகி அம்பொற் பனிவரை காறும் ஆன்று
    நெருக்கிய தனைய பான்மை நிலமுழு தளந்த மேலோன்
    திருக்கிளர் பொன்னந் தூசு புனைந்தெனத் திகழந்த தம்மா.

    25

    1178

    விந்தமிந் நெறியால் ஆன்று மேக்குறக் கிளர்ந்து போகி
    அந்தர நெறியை மாற்ற அலரிவெண் டிங்கள் சேயோன்
    புந்திபொன் புகரே காரி புயங்கநாள் பிறரும் நோக்கிச்
    சிந்தையில் துணுக்க மெய்தி இனையன செப்ப லுற்றார்.

    26

    1179

    தானவர் செயலோ என்பார் தருமமில் அரக்க வெய்யோ
    ரானவர் செயலோ என்பார் அல்லவேல் அயன்மா லென்னும்
    வானவர் செயலோ என்பார் மாயமீ தாகும் என்பார்
    மேனிமிர் பிறங்க லின்றி வௌ¢ளிடை இலைகொல் என்பார்.

    27

    1180

    என்னிது வென்று போதத் தெம்பிரான் அருளால் நாட
    அன்னது தெரித லோடும் ஆமிது விந்த மேருத்
    தன்னுடன் இகலொன் றுண்டாய்த் தராதல வரைப்பில் வானில்
    சென்னெறி விலக்கிற் றென்று சிந்தனை செய்து தேர்வார்.

    28

    1181

    செம்பொன்மால் வரையின் பாங்கிற் சிவனடி யுன்னி நோற்றே
    அம்புரா சியைமுன் னுண்டோன் அமர்ந்தனன் அவனீண் டுற்றால்
    உம்பர்போய் நின்ற விந்தம் ஒடுங்கும்என் றியாரும் ஓர்ந்து
    கும்பமா முனியை யுன்னி இனையன கூற லுற்றார்.

    29

    ஆகத் திருவிருத்தம் - 1181
    - - -

    23. அகத்தியப் படலம் (1182 - 1209)

    1182

    பொன்னார் கழல்கள் அருச்சித்திடப் போது கொய்யுங்
    கைந்நாக மாலை நினைந்தே கராவொன்று கௌவ
    என்னா யகனே எனத்தன் கையெடுத் தழைப்ப
    அன்னான்அங் கெய்தி விடுவித்த தறிகி லாயோ.

    1

    1183

    பூவார் கமலத் தயன்நல்கிய பூவை தன்மேல்
    தூவா மயலாய்க் கிளியாகித் தொடர்ந்து செல்லக்
    காவாய் பரனே எனலோடுங் கலங்கல் என்றே
    தேவாதி தேவன் அருள்செய்தது தேர்கி லாயோ.

    2

    1184

    சத்தார் பிருகு தனதில்லைத் தடிந்த வெல்லை
    இத்தா ரணியில் அளவில்பிறப் பெய்து கென்ன
    அத்தா அருளென் றரிநோற்றுழி ஐயன் வந்து
    பத்தாக என்று நிறுவுற்றது பார்த்தி டாயோ.

    3

    1185

    தேவர்க் கெனினும் நிலத்தின்கட் செறிந்து வாழ்வோர்
    ஏவர்க் கெனினும் ஒருதுன்புறின் எய்தி நீக்கல்
    காவற் குரியார் கடனாம்அக் கடமை தூக்கின்
    மேவற் கரிதாந் தனிமுத்தியின் மேல தன்றோ.

    4

    1186

    தௌ¢ளத் தௌ¤ந்த மறைக்கள்வனைச் செற்ற மீன்போல்
    அள்ளற் கடலை ஒருநீ அகன்கை யடக்கிக்
    கள்ளத் தவுணன் நிலைகாட்டிநங் கண்ணில் வைத்த
    கொள்ளைக் கருணை உலகெங்கணுங் கொண்ட தெந்தாய்.

    5

    1187

    விந்தக் கிரிநாரதன் சூழ்ச்சியின் மேரு வெற்போ
    டிந்தப் பொழுதத் திகல்கொண் டுலகெங்கும் ஈறாம்
    அந்தத் துயருங் கயிலைக்கிணை யாவ லென்றே
    சிந்தித் ததுகொல் எழுந்திட்டது சேண தெல்லாம்.

    6

    1188

    மண்ணுற்ற வெல்லை அளவிட்டிடு மால்கொ லென்றே
    எண்ணுற் றெவரும் வெருக்கொண்டிட ஈண்டை விந்தம்
    விண்ணுற்ற அண்டத் துணையாய்மிசைப் போவ தையா
    கண்ணுற்ற நோக்கம் விடுத்தேயிது காண்கி லாயோ.

    7

    1189

    மல்லற் கிரிவிண் ணெறிமாற்றலின் மற்றெ மக்குஞ்
    செல்லற் கரிதாயது பாருடைத் தேய முற்றும்
    எல்லைப் பொழுது மயக்குற்ற இவற்றை நீக்க
    ஒல்லைக் குறியோய் வரல்வேண்டுமென் றுன்ன லுற்றார்.

    8

    1190

    வேறு
    உன்ன லோடும் உலகம் நனந்தலைப்
    பொன்னின் மேருப் புடையொர் பொதும்பரின்
    மன்னி நோற்றுறை வண்டமிழ் மாமுனி
    தன்னு ளத்தில்அத் தன்மைகண் டானரோ.

    9

    1191

    மேக்கு யர்ந்திடும் விந்தத்தின் ஆற்றலை
    நீக்கி வான நெறியினைத் தொன்மைபோல்
    ஆக்கி அண்டர் குறையும் அகற்றுவான்
    ஊக்கி னான்முன் உததியை உண்டுளான்.

    10

    1192

    துள்ளி கண்ணிடைத் தூங்குறக கைதொழ
    உள்ளம் என்பொ டுருகவு ரோமமார்
    புள்ளி பொங்கப் புகழந்து பரிசடை
    வள்ளல் தன்னை மனத்திடை முன்னினான்.

    11

    1193

    முன்னும் எல்லையில் மூரிவௌ¢ ளேறெனும்
    மின்னு தண்சுடர் வௌ¢ளிவெற் பின்மிசைப்
    பொன்னின் மால்வரை போந்தெனப் புங்கவன்
    துன்னு பாரிடர் சூழ்தரத் தோன்றினான்.

    12

    1194

    ஆதி யுற்றுழி அச்சமொ டேயெழீஇ
    மூது ரைத்தமிழ் முற்றுணர் மாமுனி
    கோதை யுற்றிடக் கொம்பொடு வாங்கிய
    பாத வத்திற் பணிந்தனன் பன்முறை.

    13

    1195

    சென்னி பாரில் திளைத்திடத் தாழ்ந்துபின்
    முன்னர் நின்று முறைபட போற்றலும்
    மின்னு லாஞ்சடை விண்ணவன் வெ·கிய
    தென்னை மற்ற தியம்புரி யாலென்றான்.

    14

    1196

    விந்த மால்வரை மேருவை மாறுகொண்
    டந்த ரத்தை யடைத்த ததன்வலி
    சிந்த என்கட் சிறிதருள் செய்கெனாச்
    சந்த நூற்றமிழ்த் தாபதன் கூறினான்.

    15

    1197

    அக்க ணத்துனக் காற்றல் வழங்கினாம்
    மிக்க விந்தத்தை வேரொடும் வீட்டிஅத்
    தெக்கி ணஞ்சென்று சீர்ப்பொதி யத்திடைப்
    புக்கு வைகெனப் புங்கவன் செப்பினான்.

    16

    1198

    என்ற லுந்தொழு தேத்திநின் பூசனை
    நன்று செய்ய நளிதடங் கூவலும்
    நின்றி டாப்புனல் நீடவுந் தென்றிசைக்
    கொன்றொர் தீர்த்தம் உதவுகென் றோதினான்.

    17

    1199

    அனைய காலை அருங்கயி லாயமேல்
    இனிது வைகிய ஏழ்நதி தன்னுளும்
    புனித மாகிய பூம்புனற் பொன்னியைப்
    பனிம திச்சடைப் பண்ணவன் முன்னினான்.

    18

    1200

    அந்த வேலை அ·துணர்ந் தேவெரீஇச்
    சிந்தை பின்னுறச் சென்று திருமுனம்
    வந்து காவிரி வந்தனை செய்தலும்
    எந்தை நோக்கி இதனை இயம்புவான்.

    19

    1201

    தீது நீங்கிய தென்றிசைக் கேகிய
    கோதி லாத குறுமுனி தன்னொடும்
    போதல் வேண்டும் பொருபுனற் காவிரி
    மாது நீயென மற்றவள் கூறுவாள்.

    20

    1202

    திண்மை ஐம்பொறி செற்றுளன் ஆயினும்
    அண்ண லேயிவன் ஆண்டகை யாகுமால்
    பெண்ணி யானிவன் பின்செலல் நீதியோ
    எண்ணின் ஈதும் இயற்கையன் றென்னவே.

    21

    1203

    திரிபில் சிந்தையன் தீதுநன் கிற்படா
    ஒருமை கொண்ட உளத்தன்நம் மன்பருள்
    பெரியன் ஈங்கிவன் பின்னுறச் செல்கெனா
    அருள்பு ரிந்தனன் ஆல மிடற்றினான்.

    22

    1204

    ஆங்க தற்கிசைந் தந்நதி யின்றியான்
    தீங்கி லாத முனியொடு பின்செல்வன்
    ஓங்கல் மேய வொருவ இவன்றனை
    நீங்கு காலத்தை நீயருள் கென்னவே.

    23

    1205

    நன்று நன்றிது நங்கைநின் காரணத்
    தென்று நோக்கி இவன்கரங் காட்டுவன்
    அன்று நீங்கி அவனியின் பாலதாய்ச்
    சென்று வைகெனச் செப்பினன் எந்தையே.

    24

    1206

    செப்பு மாற்றஞ் செவிக்கமு தாதலும்
    அப்பெ ரும்புன லாறவன் பின்செல
    ஒப்ப லோடும் உயிர்க்குயி ராகியோன்
    தப்பின் மாமுனிக் கின்னது சாற்றினான்.

    25

    1207

    நீடு காவிரி நீத்தத்தை நீயினிக்
    கோடி உன்பெருங் குண்டிகைப் பாலென
    நாடி யத்திறஞ் செய்தலும் நன்முனி
    மாடு சேர்ந்தனள் மாநதி யென்பவே.

    26

    1208

    ஆய காலை அகத்திய தென்றிசைத்
    தேய மேகெனச் சீர்விடை நல்குறாப்
    பாயு மால்விடைப் பாகன் மறைந்தனன்
    போயி னான்செறி பூதரி னத்தொடும்.

    27

    1209

    வேறு
    அத்தனங் கொருவ அன்னான் அருளடைந் தங்கண் நீங்கி
    மெய்த்தகு மதலை வேண்டி விதர்ப்பர்கோன் பயந்த லோபா
    முத்திரை தனைமுன் வேண்டு*மு துக்குறைத் திண்மை சான்ற
    சிந்தனை யளித்த வள்ளல் தென்றிசை நோக்கிச் சென்றான்.
    ( * முதுக்குறைத் திண்மை சான்ற சித்தன் - புலத்திய முனிவன்.
    முதுக்குறை - பேரறிவு. )

    28


    ஆகத் திருவிருத்தம் - 1209
    - - -

    24. கிரவுஞ்சப் படலம் (1210 - 1222)

    1210

    24. கிரவுஞ்சப் படலம்

    பொன்றிகழ வரையின் நின்றுங் குறுமுனி புவியே ஆறாத்
    தென்றிசைக் கேகு மெல்லைத் திறலரிக் கிளவல் வாழ்க்கை
    வன்றிறல் மாய மூதூர் வந்தெய்த ஆண்டை வைகும்
    அன்றிலம் பேர்பெற் றுள்ள அவுணன்அத் தன்மை கண்டான்.

    1

    1211

    வானுயர் உலகந் தன்னை வசுந்தரை யாக்ம் பாரை
    ஏனைய ககன மாக்கும் எறிதிரைப் பரவை தன்னை
    மேனிமியர் பிறங்க லாக்கும் வெற்பினைப் புணரி யாக்கும்
    பானுவை மதிய மாக்கும் மதியினைப் பகலாச் செய்யும். .

    2

    1212

    அணுவினை மேரு வாக்கும் அன்னதோர் மேரு வெற்பை
    நுணுகிய அணுவே யாக்கும் நொய்தெனப் புவனி தன்னைப்
    புணரிய தாக்கும் நேமிப் புணரியைப் புவன மாக்கும்
    இணருறு நேமித் தீயை எல்லைநீ ராகச் செய்யும். .

    3

    1213

    கன்னலின் அயுதத் தொன்றிற் கடவுளர்க் கேனும் நீத்தோர்
    என்னவர் தங்கட் கேனும் எனைப்பல மாயஞ் சூழ்ந்து
    பன்னெடுங் காலஞ் செல்லப் படுத்திடும் என்னின் அம்மா
    அன்னவன் வன்மை யாவும் ஆரறிந் துறைக்கற் பாலார். .

    4

    1214

    அத்தகு தகுவர் கோமான் அடற்கிர வுஞ்சன் அன்போன்
    மெய்த்தமிழ் முனிவன் செல்லும் வியனெறி விந்த மேபோல்
    கொத்துயர் குவடு மல்கிக் குன்றுருக் கொண்டு தன்பால்
    உய்த்திடு மாறு போக்கி உறுதலுங் குறியோன் கண்டான். .

    5

    1215

    காண்டலும் வியந்து நன்றிக் கடிவரை நடுவ ணாக
    ஈண்டிதோ ரத்தம் உண்டால் இவ்வழி நடத்தும் என்னா
    ஆண்டத னிடையே போக அந்நெறி குரோச வெல்லை
    மாண்டலும் இலதே யாக மற்றொரு சுரமுற் றன்றே. .

    6

    1216

    அந்நெறி கண்டு தொன்னூல் அறைமுனி ஏக லோடுஞ்
    சென்னெறி மேலின் றாகத் திரும்பினன் செல்லுங் காலை
    முன்னுள நெறியுங் காணான் முனிவரன் மயங்க ஓர்சார்
    பின்னொரு வட்டை கண்டு பேதுற லோடும் போனான். .

    7

    1217

    ஆறது செல்லுமெல்லை அடலெரி கனைந்து சூழச்
    சூறைகள் மயங்க மங்குல் துண்ணென மாரி தூவ
    மாறகல் உருமுச் சிந்த வல்லிருட் படலை சுற்ற
    வீறகல் மாயை சூழந்தான் எறுழ்வலி அவுணர் கோமான். .

    8

    1218

    மட்டுறு குறிய செம்மல் மற்றது நோக்கித் தீயோர்
    பட்டிமை யொழுக்கீ தென்னாப் பயின்றிடு போத நீரால்
    உட்டௌ¤ பான்மை நாட ஊழ்த்திறந் தெரித லோடுங்
    கட்டழல் என்னச் சீறிக் கரதலம் புடைத்து நக்கான். .

    9

    1219

    நன்றுநன் றவுணன் கொல்லாம் நமக்கிது புரியு நீரான்
    இன்றிவன் வன்மை நீப்பன் யானென அவுண வெய்யோன்
    குன்றுரு வதனிற் குற்றிக் குறுமுனி பாணித் தண்டால்
    துன்றிரும் பூழை யாக்கிச் சூளிவை புகல லுற்றான்..

    10

    1220

    மாண்மதி பெறாத வெய்யோய் மற்றுநின் தொன்மை நீங்கி
    நீண்மலை யாகி ஈண்டே நின்றுநீ யவுணர்¢க் கெல்லாம்
    ஏண்மிகும் இருக்கை யாகி இருந்தவத் தோர்க்கும் ஏனைச்
    சேண்மலி கடவு ளோர்க்குந் தீத்தொழில் இழைத்தி பன்னாள்.

    11

    1221

    மாற்படு நமது பாணி வலிகெழு தண்டால் உன்றன்
    பாற்படு புழைகள் யாவும் பற்பல மாயைக் கெல்லாம்
    ஏற்புடை இருக்கை யாக எம்பிரான் உதவுஞ் செவ்வேள்
    வேற்படை தன்னிற் பின்னாள் விளிகுதி விரைவின் என்றான்.

    12

    1222

    பழிதரும் இனைய சாபம் பகர்ந்துதன் சிரகந் தன்னில்
    உழிதரு புனலை வாங்கி உளங்கொள்மந் திரத்தால் வீசி
    அழிதர மாயை நீக்கி ஆண்டொரீஇ மீண்டு தென்பால்
    வழியது செவ்வன் நாடி வண்டமிழ் முனிவன் போனான்.

    13


    ஆகத் திருவிருத்தம் - 1222
    -------

    25. விந்தம் பிலம்புகு படலம் (1223 - 1235)

    1223

    அன்னனதா ரவுணர் கோமான் அன்றுதொட் டசல மாகித்
    துன்னெறி அவுணர் யாருந் துவன்றிய அரண மாகி
    நென்னலின் முதனாள் காறு நின்றனன் அனையான் தன்னை
    என்னையா ளுடைய நீயன் றியாவரே அடுதற் பாலார்.

    1

    1224

    பைந்தமிழ் முனிவன் வான்றொய் பனிவரை யதனை நீங்கித்
    கந்தரஞ் செறியாற் கோட்டுக் கடவுளர் வரைச்சா ரெய்தி
    அந்தம தடைந்தோர்க் தங்கண் அருளினால் தனது மூல
    மந்திரம் உணர்த்தும் முக்கண் வானவன் காசி புக்கான்.

    2

    1225

    கங்கைசென் றொழுகுங் காசிக் கறைமிடற் றகில நாதன்
    பங்கய அடிகள் தாழ்ந்து பரவல்செய் தாண்டு நீங்கித்
    துங்கதை கொண்ட விந்தத் தொல்வரைக் கொருசா ரேகி
    அங்கதன் நிலைமை நோக்கி அறிவன்ஒன் றியம்ப லுற்றான்.

    3

    1226

    சேயுயர் நிவப்பிற் றாகிச் சேண்புகும் விந்த மென்னும்
    மாயிருங் குவடு கேண்மோ மற்றியாம் பொதிய வெற்பில்
    போயிருந் திடவே உன்னிப் போந்தனம் அதனுக் கின்னே
    நீயொரு சிறிது செல்லும் நெறியளித் திடுதி யென்றான்.

    4

    1227

    எறிகதிர் மதிலி னுக்கும் ஏகருந் திறத்தால் வான
    நெறியினை யடைத்துத் தொல்லை நெடியமால் போன்று நின்றேன்
    குறியநிற் கஞ்சி யாறு கொடுப்பனோ எனது தோற்றம்
    அறிகிலை மீண்டு போகென் றவ்வரை மொழிந்த தன்றே.

    5

    1228

    கேட்டலும் அதனைச் சீற்றங் கிளர்ந்திட நகைத்து நாதன்
    தாட்டுணை யுன்னித் தொன்னாட் சதமகன் வேண்ட ஆழி
    மாட்டுறச் செறித்த கையை மலரயன் பதத்தின் காறும்
    நீட்டினன் தவமே யன்றி நெடும்பொருள் பிறவு முண்டோ.

    6

    1229

    அற்புதம் அமரர் கொள்ள ஆற்றவுங் குறியோன் விந்த
    வெற்பின தும்பர் தன்னில் மீயுயர் குடங்கை சேர்த்தி
    வற்புற வூன்ற வல்லே மற்றது புவிக்கட் டாழ்ந்து
    சொற்பிலம் புகுந்து சேடன் தொன்னிலை அடைந்த தன்றே.

    7

    1230

    அள்ளலை யடைகின் றோரில் அரம்புகும் அடுக்க லஞ்சி
    வள்ளலை யருளிக் கேண்மோ மற்றுனை வழிப டாமல்
    எள்ளலை யிழைத்து மேன்மை இழந்தனன் தமியன் குற்றம்
    உளளலை எழுவ தெஞ்ஞான் றுரையெனக் கூறிற் றன்றே.

    8

    1231

    அன்னதோர் பொழுது தன்னில் அலைகடல் செறித்த அங்கை
    முன்னவன் விந்த வெற்பின் மொழியினை வினவி யான்போய்
    இந்நெறி யிடையே மீளின் எழுதியால் நீயு மென்னா
    நன்னகை யோடு சொற்றான் நாரதன் சூழ்ச்சிக் கொப்ப.

    9

    1232

    வன்புலப் புவிக்குள் விந்தம் மறைதலும் அறிவின் நீராற்
    புன்புலப் பகையை வென்றோன் கரத்தைமுன் போலச் செய்து
    துன்புலப் புற்ற சிந்தைச் சுரர்கள்பூ மாரி தூர்ப்பத்
    தென்புலப் பொதிய வெற்பிற் செல்வது சிந்தை செய்தான்.

    10

    1233

    ஆயிடை விந்தம் பார்புக் கழுந்திட அகல்வா னத்துத
    தேயம்வௌ¢ ளிடைய தாகத் தினகரன் முதலாந் தேவர்
    பாய்சுடர் விளக்கம் யாண்டும் பரந்தன சிறையை நீங்கி
    ஏயென அளக்கர் நீத்தம் எங்கணுஞ் செறிவு மாபோல்.

    11

    1234

    அதுபொழு தலரி யாதி அமரர்கள் அகத்தி யன்பாற்
    கதுமென அடைந்து போற்றிக் கைதொழு தெந்தை செய்த
    உதவியார் புரிவர் நின்னால் உம்பரா றொழுகப் பெற்றோம்
    பொதியமேல் இனிநீ நண்ணி இருத்தியெம் பொருட்டா லென்றார்.

    12

    1235

    என்றலும் விழுமி தென்னா இசைவுகொண் டமரர் தம்மைச்
    சென்றிட வானிற் றூண்டித் தெக்கிணந் தொடர்ந்து செல்லக்
    குன்றமர் குடாது தேயங் குறுகும்வில் வலன்வா தாவி
    அன்றுயிர் இழப்ப நின்றார் அகத்தியன் வரவு கண்டார்.

    13


    ஆகத் திருவிருத்தம் - 1235
    ----

    26. வில்வலன் வாதாவி வதைப் படலம் (1236- 1267)

    1236

    கண்டனர் இவனே போலுங் காய்சினத் தவுணர் ஆவி
    கொண்டனன் வேலை முன்னங் குடித்துமிழ் கின்ற நீரான்
    அண்டரை யருள்வா னாங்கொல் அடைந்தனன் அவனுக் கின்னே
    உண்டியை யுதவி ஆவி கொள்ளுதும் ஊனொ டென்றார்.

    1

    1237

    என்றிவை புகன்ற பின்னர் இளவல்வா தாவி யொன்போன்
    குன்றதன் புடையில் ஓர்சார் கொறியுருக் கொண்டு போந்து
    மென்றழை புதலின் மேய வில்வலன் என்னு மேலோன்
    ஒன்றிய புலத்தின் மிக்கோர் உருவுகொண் டுற்றான் அன்றே.

    2

    1238

    மீதுறு சடையும் நீறு விளங்கிய நுதலும் வேடங்
    காதணி குழையின் சீருங் கண்டிகைக் கலனும் மேற்கொள்
    பூதியுந் தண்டுங் கையும் புனையுரி யுடையு மாக
    மாதவ வேடந் தாங்கி முனிவனேர் வல்லை சென்றான்.

    3

    1239

    மெய்தரு புறத்துக் காமர் வியனுருக் கொண்டு தன்னுட்
    கைதவங் கொண்டு செங்கேழக் காஞ்சிரங் கனிபோல் மேய
    மைதிகழ் மனத்தன் நோ¢போய் வண்டமிழ் முனிவற் போற்றி
    ஐதென வணங்கி முக்கால் அஞ்சலி செய்து சொல்வான்.

    4

    1240

    அடிகள்நீர் போத இந்நாள் அருந்தவம் புரிந்தேன் இன்று
    முடிவுற வந்தீர் யானும் முனிவர்தம் நிலைமை பெற்றேன்
    கொடியனேன் இருக்கை ஈதால் குறுகுதிர் புனித மாகும்
    படியென உரைத்துப் பின்னும் பணிந்தனன் பதங்கள் தம்மை.

    5

    1241

    பணிதலும் ஒருதன் கையிற் பரவையம் புனலை வாரி
    மணிபடு பதுமம் போல வாய்க்கொளும் முனிவன் தீயோன்
    துணிவினை யுணரா னாகித் துண்ணென வுவகை தோன்ற
    இணையறு தவத்தின் மிக்கோய் எழுதியென் றிதனைச் சொற்றான்.

    6

    1242

    ஆறெதிர் எண்ம ராகும் ஆயிர முனிவர் தம்பால்
    வேறுள தவத்தார் தம்பால் மிக்கநின் னியற்கை தன்னில்
    கூறுசெய் அணுவின் காறுங் குணமில சரதம் ஈது
    தேறுதி இருககை யேது செல்லுதும் வருக வென்றான்.

    7

    1243

    என்றருள் முனியை நோக்கி ஈதென துறையுள் என்னச்
    சென்றனன் முடிவான் வந்த தீயவன் அவற்கொண் டேகி
    மன்றதன் இருக்கை யுற்று மரபுறு தவிசிற் சேர்த்திப்
    பொன்றிகழ் அடிகட் கேற்ற பூசனை புரிந்து சொல்வான்.

    8

    1244

    எந்தைநீ யானும் ஏனை என்குலத் தவரும் உய்ய
    வந்தனை போலும் இந்நாள் மற்றென திருக்கை வைகி
    வெந்திடு புற்கை யேனும் மிசைநதனை எனக்குச் சேடந்
    தந்தருள் புரிந்து போதி தவத்தரில் தலைவ என்றான்.

    9

    1245

    சொல்வல முனிவர் மேலோன் சூர்முதன் மருகா யுள்ள
    வில்வலன் மாற்றங் கேளா விழுமிது பரிவின் மிக்கோய்
    ஒல்வதோர் உணவு நின்பால் உவந்தியாம் அருந்திப் பின்னர்ச்
    சொல்வது கடனா மென்று செப்பினன் தீமை தீர்ப்பான்.

    10

    1246

    மேலவன் இதனைக் கூற வில்வன் வணங்கி எந்தாய்
    சீலமோ டடிசில் செய்வன் சிறிதுபோ திருத்தி யென்று
    காலையங் கதனில் ஆண்டோர் கயப்புனல் படிந்து மூழ்கிச்
    சாலவும் புனித னாகி அடுவதோர் சாலை புக்கான்.

    11

    1247

    அத்தலை நிலத்தை நீரால் ஆமயம் பூசி யாண்டுஞ்
    சித்திரம் உறுத்தி யாவுந் தேடிவால் வளையின் சின்னம்
    ஒத்ததண் டுலமா சேக ஒண்புன லிடையே இட்டு
    முத்திறம் மண்ணி மற்றோர் முழுமணிக் குழிசி உய்த்தான்.

    12

    1248

    தாக்குறு திறலின் வெய்ய தழல்பொதி கருவி யான
    ஆக்கிய செய்த தொன்றில் அழலினை அதனுள் மூட்டித்
    தேக்ககில் ஆர மாட்டிச் சீருணத் தசும்ப ரொன்றில்
    வாக்கிய வுலைப்பெய் தேற்றி மரபில்வால் அரியுள் ளிட்டான்.

    13

    1249

    பதனறிந் துண்டி யாக்கிப் பாலுற வைத்துப் பின்னர்
    முதிரையின் அடிசி லட்டு முன்னுறு தீம்பால் கன்னல்
    விதமிகும் உணாக்கள் யாவும் மேவுற அமைத்துக் கொண்டு
    புதுமணங் கமழுந் தெய்வப் புனிதமாங் கறியுஞ் செய்தான்.

    14

    1250

    ஆற்றலால் மேடம் போலாய் ஆரிடர் உயிரை யெல்லாம்
    மாற்றுவான் அமைந்து இளவலை வலிதிற் பற்றிக்
    கூற்றமே போல மேவும் முனிவன்முற் கொணர்ந்து கையில்
    ஏற்றகூர்ங் குயத்தாற் காதி இருதுணி யாக்கி னானே.

    15

    1251

    அணிப்படு போர்வை நீக்கி அங்கமும் அகற்ி வாளால்
    துணிப்பன துணித்தும் ஈர்ந்துஞ் சுவைத்திடும் உறுப்பூன் எல்லாங்
    குணிப்பொடு குட்ட மிட்டுக் குழிசிகள் பலவிற் சேர்த்தி
    மணிப்புனல் கொண்டு முக்கால் மரபினால் மணணல் செய்து.

    16

    1252

    உரைத்தவக் கறிக்கு வேண்டும் உவர்முதல் அமைந்த நல்கி
    வருத்துறு கனன்மேற் சேர்த்தி வாதியிற் புழுக்கல் செய்தே
    அரைத்திடு கறியின் நுண்தூள் ஆதிதூய் இழுது பெய்து
    பொரிப்பன பொரித்திட்டாவி போந்திடா வண்ணம் போற்றி.

    17

    1253

    கறியினுண் பொடியும் ஏனைக் கந்தமார் துகளும் அந்நாள்
    வரையல்போ குற்ற தூய வாலரிப் பொடியும் நீவி
    உரைகெழு துப்பும் வாக்கி பொழுகுபல் காயங் கூட்டித்
    திறனொடும் அளாவி யாங்கோர் சிற்சில பாகு செய்து.

    18

    1254

    பின்னரும் பலகால் வேண்டும் பெற்றியிற் கரித்துச் செம்மி
    முன்னுற அளிக்க நின்ற முதிரையின் புழுக்கல் அட்டுச்
    செந்நல நீடுங் கன்னல் தீம்புளிங் கறியுஞ் செய்யா
    அன்னதோர் தொடக்கம் யாவும் அருளினன் அருளி லாதான்.

    19

    1255

    ஆசினி வருக்கை யாதி அளவையில் கனிகள் கீறித்
    தேசமர் கன்னல் தீந்தேன் சேர்தரச் சிவணி யேனை
    வாசமும் மலரும் இட்டு வரம்பில அமைத்துப் புத்தேள்
    பூசனைக் குரிய அன்பாற் பொருக்கெனக் குவவு செய்தான்.

    20

    1256

    குய்வகை யுயிர்ப்பின் மாந்திக் குவலயம் விரும்பு கின்ற
    ஐவகை உணவும் ஆறு சுவைபட அளித்துப் பின்னும்
    எவ்வகை யனவுந் தானே இமைப்பினில் அமைத்து வல்லே
    கவ்வையி னோடுஞ் சென்று கடமுனி கழல்மேல் தாழ்ந்தான்.

    21

    1257

    எந்தைநீ இன்ன காலை இரும்பசி யுடற்ற ஆற்ற
    நொந்தனை போலும் மேனி நுணங்கினை தமியேன் ஈண்டுத்
    தந்தனன் உணவி யாவுந் தளர்வற நுகரு மாறு
    வந்தருள் என்று வேண்ட மற்றதற் கியைந்து போனான்.

    22

    1258

    அட்டிடு சாலை மாட்டே அகத்தியற் கொடுபோய் ஆங்கண்
    இட்டதோர் இருக்கை தன்னில் இருத்தியே முகமன் கூறி
    மட்டுறு தூநீர் கந்த மலர்புகை தீபங்கொண்டு
    பட்டிமை நெறியிற் பூசை புரிந்துபின் பதநேர் குற்றான்.

    23

    1259

    வேறு
    தௌ¢ளுஞ் சுடர்ப்பொன் இயல்கின்ற தட்டை திருமுன்னர் வைத்து நிரையா,
    வள்ளங்கள் வைத்து மிகுநாரம் உய்த்து மரபில் திருத்தி மறையோன்,
    உள்ளங் குளிர்ப்ப அமுதன்ன உண்டி யுறு பேதம் யாவும் உதவா,
    வௌ¢ளம் படைத்த நறுநெய்ய தன்கண் விட்டான்தன் னாவி விடுவான்.

    24

    1260

    முறைவைப்பு நாடி முதன்மைக்கண் மேவு முதிரைப் புழுக்கல் மறியின்,
    கறிவர்க்கம் ஏனை யவைசுற்றின் மேய கவினுற்ற கிண்ண மிசையே,
    உறவிட்டு நீட மதுரித்த யாவும் உடனுய்த் தொழிந்த வளனுஞ்,
    செறிவித்து மேலை முனிகைக்குள் நீடு சிரகத்தின் நீரு தவினான்.

    25

    1261

    பெருநீர் அடங்கு சிறுகையி னூடு பெறவுய்த்த தோயம் அதனை,
    இருபான்மை உண்டி யதுசூழும் வண்ண மிசையோடு சுற்றியதுதான்,
    ஒருகால் நுகர்ந்து பலகாலி னுக்கும் உதவிப்பின் உள்ள படியும்,
    அருகாது செய்து மிகவே விரும்பி அயில்வான் தவங்கள் பயில்வான்.

    26

    1262

    அடுகின்ற உண்டி கறிவர்க்க மேலை அவையன்பி லாத அசுரன்,
    இடுகின்ற தேது முடிவெய்து காறும் இனிதுண்டு பின்றை முனிவன்,
    கடிகொண்ட நாரம் அனையன் கொணர்ந்து கரமுய்ப்ப நுங்கி யெழுவான்,
    பொடிகொண்டு தன்கை மலர்நீவி மிக்க புனல்கொண்டு மண்ணல் புரியா.

    27

    1263

    மைக்காரின் மெய்யன் அருள்கின்ற நாரம் வாய்க்கொண் டுமிழ்ந்து பலகால்,
    முக்காலின் நுங்கி வாய்பூ முறைநாடி அங்க மெவையும்,
    மிக்கானுமூறு புரியாவ தன்றி வேறுள்ள செய்கை பலவும்,
    அக்காலை யங்கொர் புடையுற் றியற்றி அவண்வீற் றிருக்கும் அளவில்.

    28

    1264

    வேதா அளித்த வரமுன்னி யேவில் வலனென்னும் வெய்ய அசுரன்,
    போதா விருந்த முனியாவி கோடல் பொருளாக நெஞ்சின் நினையா,
    வாதாவி மைந்த இளையாய் விரைந்து வருகென்று கூற முனிவன்,
    தீதார் வயிற்றின் இடையே எழுந்து திறல்மேட மாகி மொழிவான்.

    29

    1265

    வேறு
    எண்ணாம லேமுன்பு கடலுண்ட தேபோல எனதூனும் உண்ட கொடியோன்,
    உண்ணாடும் உயிர்கொண்டு வலிகொண்டு குறிதான உதரங் கிழித்து வருவன்,
    அண்ணாவில் வலனேயெ னக்கூறி ஏதம்பி அரிபோல் முழங்கி யிடலும்,
    மண்ணாடர் புகழ்கும்ப முனிதீயர் செய்ய திட்ட மாயந் தெரிந்து வெகுள்வான்.

    30

    1266

    ஊனகொண்ட கறியாகி நுகர்வுற்ற வாதாவி உயிர்போகி யுண்ட இயல்பே,
    தான்கொண்டு முடிகென்று சடரத்தை யொருகாலை தமிழ் வல்ல முனித டவலுங்,
    கான்கொண்ட எரிமண்டு சிறுபுன் புதற்போன்று கடியோ னுமுடி வாகவே,
    வான்கொண்ட லெனஅங்கண் முன்னின்ற வன்தம்பி மாய்வுற்ற துன்னி வருவான்.

    31

    1267

    மெய்க்கொண்ட தொன்னாள் உருக்கொண்டு முனிதன்னை வெகுளுற்றொர் தண்ட மதனைக்,
    கைக்கொண்டு கொலையுன்னி வருபோழ்தில் முனிவன் கரத்தில் தருப்பை ஒன்றை,
    மைக்கண்டர் படையாக நினைகுற்று விடவில் வலன்றானு மடிவெய்தலும்,
    அக்கண்ட கக்கள்வர் உறையுற்ற இடம்நீங்கி அப்பால் அகன்ற னனரோ.

    32


    ஆகத் திருவிருத்தம் - 1267
    ------

    27. காவிரி நீங்கு படலம் (1268- 1333)

    1268

    செங்கை தூங்கிய தீர்த்த நீரொடுங்
    கொங்கின் பாற்செலக் குறிய மாமுனி
    மங்கு கின்றஅம் மைந்தர் நேருறா
    அங்கண் மேவினார் அருந்த வத்தர்போல்.

    1

    1269

    நேரு மைந்தர்கள் இருவர் நீனிறக்
    காரின் மேனியர் கறங்கு கண்ணினர்
    தீரர் ஆற்றவுஞ் சினத்தர் ஒல்லென
    ஆர வாரஞ்செய் தணுகி னாரரோ.

    2

    1270

    அண்மை யாகுவர் அகல்வர் மாமுனி
    கண்முன் எய்துவர் கரந்து காண்கிலார்
    விண்மு கிற்குளே மேவி ஆர்ப்பரால்
    மண்மி சைப்பினும் வருவர் சூழவரே.

    3

    1271

    கோதில் ஆற்றல்சேர் கும்ப மாமுனி
    ஈது நோக்கியே இவரை முன்னமே
    காதி னாம்நமைக் கருதி வந்தனர்
    மாத வத்தினோன் மைந்தர் ஆதலால்.

    4

    1272

    பேர்கி லாதஇப் பிரம கத்திநோய்
    தீரு மாற்றினால் சிவன தாள்களை
    ஆர்வ மோடிவண் அருச்சிப் பாமெனா
    நேரின் மாமுனி நினைந்து நின்றரோ.

    5

    1273

    ஆசில் கொங்கினுக் கணித்தின் ஓரிடை
    வாச மீதென மகிழ்ந்து வீற்றிரீஇ
    ஈச னார்தமை இலிங்க மேயில்
    நேச நெஞ்சினான் நினைந்து தாபித்தான்.

    6

    1274

    தூய குண்டிகைத் தோயம் அன்றியே
    சேய மாமலர் தீபந் தீம்புகை
    ஆய போனகம் ஆதி யானவை
    ஏயு மாற்றினால் இனிது தேடினான்.

    7

    1275

    விழுமி தாகிய விரதர் வீயவே
    வழியி ருந்திடும் வஞ்சர் ஆவிகொள்
    பழிய கன்றிடப் பரமன் தாள்மிசை
    அழிவில் அன்பொடே அருச்சித் தானரோ.

    8

    1276

    மங்கை பாகனை மற்றும் பற்பகல்
    சிங்கல் இன்றியே சிறந்த பூசைசெய்
    தங்கண் மேவினான் அவன்க ணாகிய
    துங்க வெம்பவந் தொலைந்து போயதே.

    9

    1277

    அனைய காலையில் அரிய தீந்தமிழ்
    முனிவ ரன்செயல் முற்றும் நாடியே
    துனியல் நாரதன் தொல்லை வானவர்க்
    கினிய கோமகன் இருக்கை எய்தினான்.

    10

    1278

    தாணு வின்பதந் தன்னை உன்னியே
    வேணு வாகியே மெய்த்த வஞ்செயுஞ்
    சேணின் மன்னவன் செல்லு நாரதற்
    காணும் எல்லையிற் கழல்வ ணங்கினான்.

    11

    1279

    எழுதி மன்னவெண் றெடுத்து மார்புறத்
    தழுவி நன்றிவட் சார்தி யோவெனா
    உழுவ லன்பினால் உரைப்ப வாசவன்
    தொழுத கையினான் இனைய சொல்லுவான்.

    12

    1280

    இன்று காறுநின் னருளின் யானிவண்
    நன்று மேவினன் நாதன் பூசனைக்
    கொன்ற துண்டுதீங் குரைப்பன் கேட்டியால்
    குன்ற மன்னதோர் குணத்தின் மேலையோய்.

    13

    1281

    கோதின் மாமல்ர் குழுவு தண்டலைக்
    கேது நீரிலை இறந்து வாடுமால்
    போதும் இல்லையால் பூசை செய்வதற்
    கீத ரோகுறை யென்றி யம்பினான்.

    14

    1282

    வேறு
    இன்னவை பலவுங் கூறி இந்திரன் தவிசொன் றிட்டு
    முன்னுற இருத்தித் தானும் முனிவரன் பணியால் வைக
    அன்னதோர் அறிஞன் நின்னூர் அரசியல் பிறவும் ஈசன்
    தன்னருள் அதனால் மேனாள் வருவது தளரேல் மன்னோ.

    15

    1283

    ஆறணி சடையி னானுக் கருச்சனை புரிதற் கிங்கோர்
    ஊறுள தென்றே ஐய உரைத்தனை அதுவும் வல்லே
    மாறிடுங் காலம் ஈண்டு வந்ததப் பரிசை யெல்லாங்
    கூறுவன் கேட்டி யென்னாக் கோமகற் குரைக்க லுற்றான்.

    16

    1284

    தன்னிகர் இலாத முக்கண் சங்கரன் பொதிய வெற்பின்
    முன்னுறை கென்று விதும்ப முனிவனை விடுத்த வாறும்
    அன்னவன் விந்தந் தன்னை அகன்பிலத் திட்ட வாறும்
    துன்னெறி புரிந்த வெஞ்சூர் மருகரைத் தொலைத்த வாறும்.

    17

    1285

    அப்பழி தீரு மாற்றால் ஐதெனக் கொங்கின் நண்ணி
    முப்புர மெரித்த தொல்லை முதல்வனை அருச்சித் தேத்தி
    மெய்ப்பரி வாகி அங்கன் மேவிய திறனும் முற்றச்
    செப்பினன் பின்னும் ஆங்கோர் செய்கையை உணர்த்த லுற்றான்.

    18

    1286

    அருந்தவ முனிவன் கொங்கின் அமலனை அருச்சித் தங்கண்
    இருந்திடு கின்றான் நாடி ஏகினன் அவன்வா லாகப்
    பொருந்துகுண் டிகையின் மன்னும் பொன்னியா றதனை இங்கே
    வரும்பரி சியற்றின் உன்றன் மனக்குறை தீரு மென்றான்.

    19

    1287

    குரவன்ஈ துரைத்த லோடுங் குறுமுனி கொணர்ந்து வைத்த
    வரநதி தனையிக் காவில் வரவியற் றிடுமா றென்கொல்
    பெருமநீ யுரைத்தி யென்னப் பேரமு தருத்தி யேத்திக்
    கரிமுகத் தேவை வேண்டில் கவிழ்த்திடும் அதனை என்றான்.

    20

    1288

    குணப்பெருங் குன்ற மன்ன கோதிலா அறிவன் இன்ன
    புணர்ப்பினை இரைதத லோடும் புரந்தான் பொருமல் நீங்கிக்
    கணிப்பிலா மகிழ்ச்சி யெய்திக் காசிபன் சிறுவர் கொண்ட
    அணிப்பெருந் திருவும் நாடும் அடைந்தனல் போன்று சொல்வான்.

    21

    1289

    எந்தைநீ இனைய எல்லாம் இயம்பினை அதனால் யானும்
    உய்ந்தனன் கவலை யாவும் ஒருவினன் முனிவன் பாங்கர்
    வந்திடு மாறும் ஈண்டு வரவுன தருளால் இன்னே
    தந்திமா முகற்குப் பூசை புரிகுவன் தக்கோய் என்றான்.

    22

    1290

    அருள்முனி இதனைக் கேளா அன்னதே கருமம் வல்லே
    புரிகரி முகவற் கைய பூசனை யென்று கூறிப்
    பரவிய இமையோர் கோனைப் பார்மிசை நிறுவிப் போந்து
    சுரரெலாம் பரவு கின்ற தொல்லையம் பதத்தி லுற்றான்.

    23

    1291

    சேறலும் புணர்ப்பு வல்லோன் திங்களும் அரவுங் கங்கை
    யாறொடு முடித்த அண்ணல் அருள்புரி முதல்வன் றன்னை
    மாறகல் மேனி கொண்டு வரன்முறை தாபித் தன்னான்
    சீறடி அமரர் கோமான் அருச்சனை செய்து பின்னர்.

    24

    1292

    இக்கொடு தென்னங் காயும் ஏனலின் இடியுந் தேனும்
    முக்கனி பலவும் பாகும் மோதக முதல முற்றுந்
    தொக்குறு மதுர மூலத் தொடக்கமுஞ் சுவைத்தீம் பாலும்
    மிக்கபண் ணியமு மாக விருப்புற நிவேதித் தானால்.

    25

    1293

    இவ்வகை நிவேதித் தேபின் எம்பிரான் றன்னை ஏத்த
    மைவரை யனைய மேனி மதகரி முகத்துத் தோன்றல்
    கவ்வையோ டனந்த கோடி கணநிரை துவன்றிச் சூழ
    அவ்விடை விரைவால் தோன்ற அஞ்சினன் அமரர் கோமான்.

    26

    1294

    அஞ்சலை மகவா னென்ன ஐங்கரக் கடவுள் கூற
    நெஞ்சகந் துணுக்கம் நீங்கி நிறைந்தபே ருவகை யெய்தி
    உஞ்சன னென்று வள்ளல் உபயமா மலர்த்தாள் மீது
    செஞசெவே சென்னி தீண்டச் சென்றுமுன் வணக்கஞ் செய்தான்.

    27

    1295

    பூண்டிகழ் அலங்கல் மார்பில் பொன்னகர்க் கிறைவன் முக்கண்
    ஆண்டகை சிறுவன் தாள்மேல் அன்பொடு பணிந்து போற்ற
    நீண்டதோர் அருளால் நோக்கி நின்பெரும் பூசை கொண்டாம்
    வேண்டிய பரிசென் என்றான் வேழமா முகனை வென்றான்.

    28

    1296

    இந்திரன் அதுகேட் டைய எம்பிராற் காக ஈண்டோர்
    நந்தன வனத்தை வைத்தேன் அன்னது நாரம் இன்றிச்
    செந்தழ லுற்றா லென்னத் தினகரன் சுடரால் மாய்ந்து
    வெந்துக ளான தண்ணல் மேலடு புரமே யென்ன.

    29

    1297

    என்னலும் ஏந்தல் கேளா ஏழ்பெருந் தலத்தின் நீரும்
    முன்னுறத் தருகோ வான முழுப்பெருங் கங்கை தானும்
    பன்னதி பிறவும் இங்ஙன் விளித்திடோ பரவை யாவுந்
    துன்னுறு விக்கோ ஒன்று சொல்லுதி வேண்டிற் றென்றான்.

    30

    1298

    ஐங்கரக் கடவுள் இவ்வா றறைதலும் அனைத்தும் நல்கும்
    பங்கயத் தயனு மாலும் பரவுறு பழையோய் இங்ஙன்
    அங்கவற் றொன்றும் வேண்டேன் அதுநினக் கரிதோ யானொன்
    றிங்குனைக் கேட்ப னென்னா இனையன இசைக்க லுற்றான்.

    31

    1299

    சகத்துயர் வடபொன் மேருச் சாரலின் நின்றும் போந்து
    மிகத்துயர் எவர்க்குஞ் செய்யும் வெய்யள் சிறுவர்ச் செற்று
    மகத்துயர் விதியின் சேய்க்கு வருவித்த நிமலன் பொற்றாள்
    அகத்தியன் கொங்கின் பால்வந் தருச்சனை புரிந்து மேவும்.

    32

    1300

    அன்னவன் தனது மாட்டோர் அணிகமண் டலத்தி னூடே
    பொன்னியென் றுரைக்குந் தீர்த்தம் பொருந்தியேஇருந்த தெந்தாய்
    நன்னதி யதனை நீபோய் ஞாலமேற் கவிழ்த்து விட்டால்
    இன்னதோர் வனத்தின் நண்ணும் என்குறை தீரு மென்றான்.

    33

    1301

    பாகசா தனன்இம் மாற்றம் பகர்தலும் பிறைசேர் சென்னி
    மாகயா னனத்து வள்ளல் மற்றித செய்து மென்னா
    ஓகையால் அவனை அங்கண் நிறுவிப்போய் ஒல்லை தன்னில்
    காகமாய் முனிபா லான கமண்டல மிசைக்கண் உற்றான்.

    34

    1302

    கொங்குறு முனிவன் பாங்கர்க் குண்டிகை மிதிற் பொன்னி
    சங்கரன் அருளின் வந்த தன்மையும் புணர்ப்பு முன்னி
    ஐங்கரன் கொடியாய் நண்ண அகத்தியன் அவனென் றோரான்
    இங்கொரு பறவை கொல்லாம் எய்திய தென்று கண்டான்.

    35

    1303

    கண்டனன் பிள்ளை செல்லக் கரதல மெடாநின் றோச்ச
    அண்டருக் கலக்கண் செய்த கயமுகத் தவுணற் செற்றேன்
    குண்டிகை அதனைத் தள்ளிக் குளிர்புனற் கன்னி யன்னான்
    பண்டையில் இசைவு செய்தான் பாரில்நீ படர்தி என்றான்.

    36

    1304

    என்னலுங் காஞ்சி தன்னில் எம்பிரான் உலகம் ஈன்ற
    அன்னைதன் அன்பு காட்ட அழைத்திட வந்த கம்பை
    நன்னதி போல விண்ணும் ஞாலமும்நடுங்க ஆர்த்துப்
    பொன்னியா றுலகந் தன்னில் பொள்ளெனப் பெயர்ந்த தன்றே.

    37

    1305

    பெயர்தலும் உமைதன் பிள்ளை பிள்ளையின் உருவம் நீத்துப்
    பயிறரு மறைநூல் வல்ல பார்ப்பன மகன்போற் செல்லச்
    சயமிகு தவத்தின் மேலோன் தன்மையங் கதனை நோக்கி
    உயிர்முழு தடவே தோன்றும் ஒருவன்போல் உருத்து நின்றான்.

    38

    1306

    தேவனோ அவுணன் தானோ அரக்கனோ திறலின் மேலோன்
    யாவனோ அறிதல் தேற்றேன் ஈண்டுறு நதியைச் சிந்திப்
    போவனோ சிறிது மெண்ணா அகந்தையன் போலும் அம்மா
    யாவனோ வன்மை தன்னை அறிகுவன் விரைவின் என்றான்.

    39

    1307

    விரைந்தன பின்ன ரேக மெய்வழி பாடு செய்வோர்
    அரந்தையை நீக்கும் எங்கோன் அச்சுறு நீரன் போல
    இரிந்தனன் போத லோடும் இருகையுங் கவித்த மாக்கித்
    துரந்தனன் முனிவன் சென்னி துளக்குறத் தாக்க உன்னி.

    40

    1308

    குட்டுவான் துணிந்து செல்லுங் குறுமுனிக் கணிய னாகிக்
    கிட்டுவான் விசும்பி னூடு கிளருவான் திசைக டோறும்
    முட்டுவான் பின்பு பாரின் முடுகுவான் அனையன் கைக்கும்
    எட்டுவான் சேய னாகி ஏகுவான் எவர்க்கும் மேலோன்.

    41

    1309

    இப்படி முனிவன் சீற்றத் தலமர யாண்டு மேகித்
    தப்பினன் திரித லோடுஞ் சாலவுந் தளர்ச்சி யெய்திச்
    செப்பரி திவன்றன் மாயஞ் செய்வதென் இனியா னென்னா
    ஒப்பருந் தவத்தோன் உன்ன எந்தைய· துணர்ந்தான் அன்றே.

    42

    1310

    ஓட்டமோ டுலவு முன்னோன் ஒல்லையில் தனது மேனி
    காட்டினன் முனிவன் காணாக் கதுமெனக் கலங்கி அந்தோ
    கோட்டிப முகனோ ஈண்டுக் குறுகினன் அவனை யானோ
    ஈட்டொடு துரந்தேன் கொல்லென் றேங்கினன் இரங்கு கின்றான்.

    43

    1311

    இரங்கிய முனிவன் முன்னம் ஏந்தலைப் புடைப்பான் கொண்ட
    கரங்களை எடுத்து வானில் காருரும் ஏறு வெற்பின்
    உரங்கிழி தரவே நீங்கா துரப்பினில் வீழ்வ தேபோல்
    வரங்கெழு தனாது நெற்றி வருந்துறத் தாக்கல் உற்றான்.

    44

    1312

    தாக்குதல் புரிந்த காலைத் தாரகப் பிரம மான
    மாக்கய முகத்து வள்ளல் வரம்பிலா அருளி னோடு
    நோக்கியுன் செய்கை என்னை நுவலுதி குறியோய் என்னத்
    தேக்குறு தமிழ்தேர் வள்ளல் இனையது செப்பு கின்றான்.

    45

    1313

    அந்தண குமரன் என்றே ஐயநின் சிரமேல் தாக்கச்
    சிந்தனை புரிந்தேன் யாதுந் தௌ¤விலேன் அதற்குத் தீர்வு
    முந்தினன் இயற்று கின்றேன் என்றலும் முறுவல் செய்து
    தந்தியின் முகத்து வள்ளல் அலமரல் தவிர்தி யென்றான்.

    46

    1314

    என்றலுந் தவிர்ந்து முன்னோன் இணையடி மிசையே பல்கால்
    சென்றுசென்றிறைஞ்சி யன்னோன் சீர்த்திய தெவையும் போற்றி
    உன்றிறம் உணரேன் செய்த தவற்றினை உளத்திற் கொள்ளேல்
    நன்றருள் புரிதி என்ன நாயகன் அருளிச் செய்வான்.

    47

    1315

    புரந்தரன் எந்தை பூசை புரிதரு பொருட்டால் ஈண்டோர்
    வரந்தரு காமர் தண்கா வைத்தனன் அதுநீ ரின்றி
    விரைந்தது பொலிவு மாழ்க வெறுந்துகள் ஆத லோடும்
    இரந்தனன் புனல்வேட் டெம்மை இயல்புடன் வழிபட் டிந்நாள்.

    48

    1316

    ஆதலின் கோடிபோல் யாமுன் னரும்புனற் குடிகை மீது
    காதலித் திருந்து மெல்லக் கவிழத்தனம் அதனை ஈண்டுப்
    போதலுற் றிடவுஞ் சொற்றாம் பொறாதுநீ செய்த வற்றில்
    யாதுமுட் கொள்ளேம் அவ்வா றினிதென மகிழ்தும் அன்றே.

    49

    1317

    ஈண்டுநீ புரிந்த தெல்லாம் எமக்கிதோ ராட லென்றே
    காண்டுமா லன்றி நின்பால் காய்சினங் கொண்டேம் அல்லேம்
    நீண்டசெஞ் சடையெம் மையன் நேயன்நீ எமக்கும் அற்றே
    வேண்டிய வரங்கள் ஈதுங் கேண்மதி விரைவின் என்றான்.

    50

    1318

    வேறு
    என்னா இதுசெப் பலும்எம் பெருமான்
    முன்னா கியதோர் முனிவன் பணியா
    உன்ன ரருள்எய் தலின்உய்ந் தனன்யான்
    நன்னா யகனே எனவே நவில்வான்.

    51

    1319

    நின்பா லினும்அந நெடுமா லுணரான்
    தன்பா லினுமே தமியேன் மிகவும்
    அன்பா வதொர்தன் மையளித் தருள்நீ
    இன்பால் அதுவெ· குவன்எப் பொழுதும்.

    52

    1320

    இன்னே தமியேன் எனவே இனிநின்
    முன்னே நுதலின் முறையால் இருகை
    கொன்னே கொடுதாக் குநர்தங் குறைதீர்த்¢
    தன்னே யெனவந் தருள்செய் யெனவே.

    53

    1321

    முத்தண் டமிழ்தேர் முனிஈ தறைய
    அத்தன் குமரன் அவைநல் கினமால்
    இத்தன் மையவே அலதின் னமும்நீ
    சித்தந் தனில்வேண் டியசெப் பெனவே.

    54

    1322

    கொள்ளப் படுகுண் டிகையிற் குடிஞை
    வௌ¢ளப் பெருநீர் மிசையுற் றடிகள்
    தள்ளக் கவிழ்வுற் றதுதா ரணிமேல்
    எள்ளிற் சிறிதும் இலதென் றிடவே.

    55

    1323

    ஊனாய் உயிராய் உலகாய்* உறைவோன்
    மேனாள் அருள்செய் வியன்மா நதிதான்
    போனா லதுபோற் புனலொன் றுளதோ
    நானா டிடவே நலமா னதுவே.

    ( * சிவஞானிகள், “மரத்தை மறைத்தது மாமத யானை” என்று
    திருமூலர் கூறியதுபோல் உலகாதிகளையும் சிவபெரு-
    மானாகவே காண்கின்றார்கள். அல்லாதவர்கள் உலகாதி-
    களாகவே காண்கின்றார்கள்; ஆதலின் உலகாய் என்றார். )

    56

    1324

    அந்நீர் மையினால் அடியேற் கிவண்நீ
    நன்னீர் நவையற் றதுநல் கெனவே
    கைந்நீர் மையினாற் கடுகின் துணையாம்
    முந்நீர் அயிலும் முனிவன் மொழிய.

    57/td>

    1325

    காகத் தியல்கொண் டுகவிழ்த் திடமுன்
    போகுற் றபுதுப் புனலாற் றிடையே
    மாகைத் தலநீட் டினன்வா னுலவும்
    மேகத் திறைமால் கடல்வீழ்ந் தெனவே.

    58

    1326

    அள்ளிச் சிறிதே புனலம் முனிவன்
    கொள்ளப் படுகுண் டிகையுய்த் திடலும்
    உள்ளத் தைநிரப் பியொழிந் ததெலாம்
    வௌ¢ளத் தொடுபார் மிசைமே வியதே.

    59

    1327

    முன்னுற் றதுபோல் முனிகுண் டிகைநீர்
    துன்னுற் றதுமேல் தொலையா வகையால்
    என்னிப் புதுமை யெனநோக் கினனால்
    தன்னுற் றமனத் தவமா முனியே.

    60

    1328

    பேருற் றிடுமிப் பெருநீர் அதனில்
    வாரிச் சிறிதே வருகுண் டிகையில்
    பாரித் தனன்இப் படிமுற் றுறுவான்
    ஆரிப் படிவல் லவரா யினுமே.

    61

    1329

    அந்தத் திருமால் அயனே முதலோர்
    வந்தித் திடவே வரமீந் தருளி
    முந்துற் றிடுமூ லமொழிப் பொருளாம்
    எந்தைக் கரிதோ இதுபோல் வதுவே.

    62

    1330

    என்றே நினையா இபமா முகவற்
    சென்றே பணியாச் சிறியேன் குறையா
    ஒன்றே துமிலேன் உதவுற் றனைநீ
    நன்றே கவிழும் நதிநீ ரையுமே.

    63

    1331

    முந்தே முதல்வா முழுதுன் னருளால்
    அந்தே யளவும் அளியில் சிறியேன்
    உய்ந்தேன் இனியும் முனையுன் னுழிநீ
    வந்தே அருள்கூர் மறவேல் எனவே.

    64

    1332

    அற்றா கவென அருள்செய் தயலே
    சுற்றா வருதொல் படையோ டுமெழாப்
    பற்றா னவர்நா டுபரம் பொருள்சேய்
    மற்றா ரும்பியப் பமறைந் தனனே.

    65

    1333

    வேறு
    மறைகின்ற எல்லைதனில் குறுமுனிவிம் மிதமாய்மன் னுயிர்கள் எங்கும்,
    உறைகின்ற தனிமுதல்வன் புதல்வன்றன் கோலத்தை உணர்ந்து போற்றி,
    அறைகின்ற காவிரியைக் கண்ணுற்று நகைத்து வெகுண் டருள்கை நாடி,
    உறைகின்ற கொங்குதனை ஒருவித்தென் றிசைநோக்கி யொல்லை சென்றான்.

    66


    ஆகத் திருவிருத்தம் - 1333
    -------

    28. திருக்குற்றாலப் படலம் (1333 - 1353)

    1334

    செற்றாலம் உயிரனைத்தும் உண்டிடவே நிமிர்ந்தெழலுஞ் சிந்தை மேற்கொள்,
    பற்றாலங் கதுநுகர்ந்து நான்முகனே முதலோர்தம் பாவை மார்கள்,
    பொற்றாலி தனையளித்தோன் புகழ்போற்றி முகின் மேனிப் புத்தேள் வைகுங்,
    குற்றாலம் ஆவதொரு வளநகரைக் குறுமுனிவன் குறுகி னானால்.

    1

    1335

    அப்பதியில் அச்சுதனுக் காலயமொன் றுளதம்மா அவனி மீதில்
    ஒப்பிலதோர் திருமுற்றம் அ·தென்பர் இம்பரெலாம் உம்பர் தாமுஞ்
    செப்புவரா யிடைதன்னில் அந்தணர்கள் அளப்பில்லோர் செறிவர் அன்னார்,
    மெய்ப்படுநூல் முறைகண்டு மோகத்தால் தமதுமத மேற்கொண் டுள்ளார்.

    2

    1336

    அன்னவர்கள் எம்பெருமான் தன்னடியார் தமைக்காணின் அழன்று பொங்கி,
    மூன்னுறுதொல் பகைஞரென மிகஇகழந்து மற்றவர்தம் முகநோக் காராய்த்,
    துன்னெறியே மேற்கொண்டு மறைபயில்வோர் என்பதொரு சொல்லே தாங்கித்,
    தந்நெறியும் புரியாதங் கிருந்தனரால் அ·துணர்ந்தான் தமிழ்நர் கோமான்.

    3

    1337

    குறுமுனிவன் ஆங்கவர்தஞ் செயலுணர்ந்து குற்றால மென்னும் மூதூர்,
    மறுகினிடை யேநடந்து மாயவன்தன் ஆலயமுன் வருத லோடும்
    நெறிவருமவ் வாலயத்திற் செறிகின்ற வைணவர்கள் நெடிது நோக்கிச்,
    செறுநர்தமைக் கண்டுபதை பதைப்பார்போல் வெய்துயிர்த்துச் செயிர்த்துச் சொல்வார்.

    4

    1338

    ஒல்லாத கண்டிகையும் நீறும்அணிந் தனையதனால் உலகில் தேவர்,
    எல்லாரும் அறியவைய மேற்றோனுக் கடியவன்நீ ஈண்டு செல்லச்,
    செல்லாது கைத்தலத்தில் ஒருகோலுங் கொண்டனையாற் சிறியை போலும்,
    நில்லாயெம் பெருமான்றன் மாநரம் அணுகாது நீங்கு கென்றார்.

    5

    1339

    என்றிடலும் வெகுளாது நகைசெய்து மறைநெறியை யிகந்து நின்றீர்,
    துன்றியிவண் உறைகின்ற துணரேன்இத் திறமெவருஞ் சொன்னார் இல்லை,
    நன்றுநெறி யென்றுவந்தேன் நும்பான்மை உணர்வேனேல், நான்இம் மூதூர்,
    சென்றிடவும் நினையேனால் முனியற்க யான்மீண்டு செல்வே னென்றான்.

    6

    1340

    பொதியமலை தனிலேகும் முனிவன்இது புகன்றிடலும் பொறாது நீயிப்,
    பதியதனில் வருவதுவும் பாவமாம் ஈண்டுநீ படர்தி யென்ன,
    இதுசரதம் மொழிந்தீர்கள் தொல்லோர்தம் நூன்முறையும் ஈதேயென்னா,
    விதியருளுந் தக்கனார் வழிமுறையோர் தமைநீங்கி மீண்டு செல்வான்.

    7

    1341

    சிட்டர்புகழ் கயிலைமலை காத்தருளுந் திருநந்தி தேவன் செங்கேழ்,
    மட்டுறுபங் கயத்துறையும் நான்முகத்தோன் துருவாசன் மறைநூல் யாவுந்,
    தட்டறவே உணர்பிருகு கவுதமன்கண் ணுவமுனிவன் ததீசி இன்னோர்,
    இட்ட பெருஞ் சாபமெலாம் பொய்த்திடுமோ எனவுன்னி ஏக லற்றான்.

    8

    1342

    ஏகலுறு குறுமுனிவன் உயிர்க்குயிராய் நின்றோனை இகழ்வார் தங்கண்,
    மோகமுறும் அகந்தையினை முதலோடுங் களைவனென முன்னி முன்னாட்,
    போகியதன் மாயையினால் இரதத்தின் ஆவிபடு பொன்னே போலப்,
    பாகவத மாகுவதோர் உருக்கொண்டான் கருணையினாற் பரவை போல்வான்.

    9

    1343

    ஆளுடைய நாயகன்பால் அன்புடையான் மாயவன்றன் அடியனேபோல்,
    கோளுடைய மாயத்தான் மேனிகொண்டு மீண்டுமங்கட் குறுக லோடும்,
    நீளிடையில் வரக்கண்ட வயிணவர்கள் எதிர்சென்று நெடிது போற்றித்,
    தாளிடையில் வீழ்ந்திடலும் நாரணனுக் காகவெனச் சாற்றி நின்றான்.

    10

    1344

    அடிமுறையின் வணங்கியெழும் வேதியர்தங் களைநோக்கி அரிபால் அன்பு,
    முடிவிலைநும் பாலென்று மொழிந்தனர்அங் கதுகாண முன்னி வந்தாம்,
    படியதனில் உமக்குநிகர் யாருமிலை நுமைக்கண்ட பரிசால் யாமுந்,
    தொடர்வரிய பேருணர்வு பெற்றெனமென் றேபின்னுஞ் சொல்லல் உற்றான்.

    11

    1345

    முத்திதரு பேரழகர் திருமலையி னிடையுற்றோம் முன்னம் இன்னே,
    அத்திகிரி தனிலிருப்பச் செல்கின்றோம் நமபெருமான் அமருங் கோயில்,
    இத்தல மேல் உளதென்பர் அதுபாவும் விருப்புடையோம் என்ன அன்னோர்,
    கைத்தலத்தோர் விரற்சுட்டி அதுதிருமால் இருக்கையெனக் காட்டலுற்றார்.

    12

    1346

    காட்டுதலுங் கைதொழுது மாலுறையும் மந்திரத்தைக் கடிது நண்ணி,
    ஈட்டமுடன் வலஞ்செய்து கண்ணபிரான் அடியிணையை இறைஞ்சி யேத்திப்,
    பாட்டிலுறு தொல்லடியார் தமைநோக்கி இவரை வழி படுதற் குள்ளம்,
    வேட்டனமால் மஞ்சனமே முதலியன கொணர் மின்கள் விரைவின் என்றான்.

    13

    1347

    நன்றெனவே சிலரேகித் தூயதிரு மஞ்சனமும் நறுமென் போதும்,
    மன்றலுறு செஞ்சாந்தும் அணித்துகிலும் ஏனையவும் மரபிற் கொண்டு
    சென்றுமுனி வரன்முன்னம் உய்த்திடலும் அனையவர்தந் திறத்தை நோக்கி,
    இன்றிவரை யருச்சனைசெய் விதிமுறையைப பார்த்திடுங்கள் யாரு மென்றே.

    14

    1348

    அறுகுமதி நதிபுனையுஞ் செஞ்சடையெம் பெருமானை அகத்துட் கொண்டு,
    சிறுகுமுரு வுடையமுனி நாரணனார் திருமுடிமேற் செங்கை யோச்சிக்,
    குறுகுகுறு கெனஇருத்தி ஔளரக்கிற் புனைபாவை கோல மீதும்,
    அறுகுதழல் உற்றென்னக் குழைவித்தோர் சிவலிங்க வடிவஞ் செய்தான்.

    15

    1349

    அல்லிமலர்ப் பங்கயனும் நாரணனும் எந்நாளும் அறியொணாத்,
    எல்லையிலாப் பரம்பொருளைத் தாபித்து மந்திரங்க ளெடுத்தக் கூறித்,
    தொல்லையுருக் கொண்டுமலர் மஞ்சனமே முதலியன தூய ஆக்கி,
    ஒல்லைதனில் அருச்சிப்பக் காண்டலும்அவ் வந்தணர்கள் உருத்துச் சொல்வார்.

    16

    1350

    காயத்தான் மிகச்சிறியன் முப்புரத்தை நீறாக்குங் கடவுட் காற்ற,
    நேயத்தான் இவ்விடையே முன்வந்தான் யாமிகழ நில்லா தேகி,
    ஆயத்தான் பாகவத வடிவாய்வந் திச்சமயம் அழித்தான் அந்தோ,
    மாயத்தான் பற்றுமினோ கடிதென்று குறுமுனியை வளைந்து கொண்டார்.

    17

    1351

    பற்றிடுவான் வளைகின்றோர் தமைநோக்கி எரிவிழித்துப் பரவை தன்பால்,
    உற்றவிடம விடுத்ததென முனிவனறன் வெகுளித்தீ உய்த்த லோடுஞ்,
    சுற்றியது சுற்றியவர் தமைப்பின்னும் பொறிபடுத்தித் துரந்து செல்ல,
    மற்றவர்கள் இரிந்தேதம் பதியிழந்து சிதறினரால் மண்மே லெங்கும்.

    18

    1352

    அன்னோர்கள் போயிடலும் இன்றுமுதல் சிவன்இடமீ தாயிற்றென்று,
    முன்னோனை அருச்சித்துப் பணிந்துவிடை கொண்டுதென்பால் முன்னிச் சென்று,
    பொன்னோடு மணிவரன்றி அருவியிழி தருபொதியப் பொருப்பில் நண்ணி,
    மன்னோமெய்த் தவம்புரிந்து வீற்றிருந்தான் அப்பரமன் மலர்ந்தான் உன்னி.

    19

    1353

    வேறு
    பூவிரி கின்ற காமர் பொதும்பர்சேர் பொதிய வெற்பில்
    தாவிரி கும்பத் தண்ணல் வந்திடு தன்மை சொற்றாம்
    மாவிரி கின்ற சாதி வனத்திடை மலர்ப்பூங் காவில்
    காவிரி போந்த வாறும் ஏனவும் கழறு கின்றோம்.

    20


    ஆகத் திருவிருத்தம் - 1353
    -----

    29. இந்திரன் அருச்சனைப் படலம் (1354- 1383)

    1354

    கொடியுருக் கொண்டு முன்னங் குண்டிகை இருந்த பிள்ளை
    படிமிசை அதனைத் தள்ளப் படர்ந்தகா விரியின் றன்மை
    விடலருந் தளையின் நீக்கி வியனெறிப் படுத்த லோடும்
    அடிகளின் அருளாற் செல்லும் ஆருயிர் போன்ற தன்றே.

    1

    1355

    பண்டொரு தந்தி யானோன் படர்சிறைப் புள்ளாய்த் தள்ளக்
    குண்டிகை இருந்த நீத்தங் குவலயம் படர்ந்த பான்மை
    எண்டருந் தடையால் வல்லோன் இருங்கடத் திட்ட பாந்ாள்
    மண்டலத் தொருவன் நீப்ப வழிக்கொளல் போன்ற தன்றே.

    2

    1356

    ஏதத்தின் ஒழுக்கு நீக்கும் இறைவனூல் ஒழுக்குந் தொல்லை
    வேதத்தின் ஒழுக்கும் நோற்று வீட்டினை அடையும் நீரார்
    போதத்தின் ஒழுக்கும் எங்கோன் புரிதரு கருணை யென்னும்
    ஓதத்தின் ஒழுக்கு மென்னக் காவிரி யோடிற் றன்றே.

    3

    1357

    தள்ளரும் பரவை ஏழுந் தரணியைச் சூழ்ந்து நின்ற
    உள்ளுறு தொடர்பு நாடி யாவையும் ஒருங்கு நண்ணிப்
    பொள்ளெனப் புகுந்த தென்னப் புவியெலாம் பரவி ஆர்த்துத்
    தௌ¢ளிதிற் கலங்கி நீத்தந் தௌ¤கிலா தொழுகிற் றாமால்.

    4

    1358

    தெண்டிரைப் புணரி யெல்லாந் தினைத்துணை யாக வாரி
    உண்டருள் முனிவன் தீர்த்தம் ஒன்றினை வேண்டு மெல்லை
    அண்டர்தம் பெருமான் நல்க அன்னவன் கரத்தி லேந்துங்
    குண்டிகைப் புனற்கு நேராக் கூறுதற் குவமை உண்டோ.

    5

    1359

    தொல்லையிற் குறியோன் வந்தான் துய்க்குமோ இன்னு மென்னா
    வல்லையில் தழைகள் பற்றி வாரிதி கூவிப் பாரின்
    எல்லையிற் படர்ந்த தென்ன இலைசெறி பொதும்பர் ஈட்டம்
    ஒல்லையிற் பரித்து மேல்கொண் டோடிய தொலிகொள் நீத்தம்.

    6

    1360

    சந்தமும் அகிலுஞ் சங்குந் தரளமுங் கவரி தானுஞ்
    சிந்துரத் தெயிறும் பொன்னும் மணிகளுந் திரைமேற் கொண்டு
    வந்திழி நதியின் தன்மை வருணன்இப் பொருள்க ளெல்லாம்
    இந்திரன் தன்பால் ஒச்ச ஏகுதல் போன்ற மாதோ.

    7

    1361

    வரையெனுந் தடம்பொற் றேரும் மதகரித் தொகையும் மாந்தர்
    நிரைகளுந் தரங்க மாவும் நெறிக்கொடு மகவான் தன்பால்
    விரைவொடு சேறல் சூரன் விண்ணவர்க் கரசன் மீது
    பொரவிடு தானை வௌ¢ளம் போவன போன்ற தன்றே.

    8

    1362

    ஆவதோர் இனைய வாற்றால் அலையினால் அகல்வான் முட்டிக்
    காவதம் பலவாய் ஆன்று காசினி அளந்து கீழ்பாற்
    போவதோர் பொன்னி நீத்தம் புரந்தரன் இருந்து நோற்குந்
    தாவறு வனத்திற் போதார் தண்டலை புகுந்த தன்றே.

    9

    1363

    ஓடுநீர் நீத்தப் பொன்னி யொல்லையிற் காமர் காவில்
    பீடுற வருத லோடும் பேதுறு மகவான் காணா
    ஆடினான் நகைத்தான் எங்கோன் அருச்சனை முடிந்த தென்று
    பாடினான் முதல்வன் றாளைப் பரவினான் படர்ச்சி தீர்ந்தான்.

    10

    1364

    சீரினை யகற்றி நீங்காத் திருவினை மாற்றித் தொல்பேர்
    ஊரினைக் கவர்ந்து தன்னோர் உயிருக்கும் இறுதி நாடுஞ்
    சூரனை வென்றால் என்னத் தொலைவிலா மதர்ப்பு மிக்கான்
    ஆரவன் உளத்திற் கொண்ட உவகையை அறைதற் பாலார்.

    11

    1365

    பாடுறு பொன்னி நீத்தம் பாய்தலும் மகவா னேபோல்
    வாடுறு கின்ற தண்கா வல்லையிற் கிளர்ச்சி யெய்தி
    ஆடுறு பசிநோ யுற்றோர் அரும்பெறல் அமிர்தம் வந்து
    கூடுற நுகர்ந்தால் என்னக் குளிர்ப்பொடு தளிர்த்த தன்னே.

    12

    1366

    வானிறை கின்ற கொண்மூ வார்துளி தலைஇய பின்றைக்
    கானிறை மரனும் பூடும் வல்லியுங் கவின்றா லென்ன
    மேனியுறை அடைகள் மல்கி விரிதரு சினையும் போதுந்
    தானிறை கின்ற தம்மா சதமகன் வளர்த்த பூங்கா.

    13

    1367

    வேறு
    வானில மளவிட வளர்ந்த புன்னைகள்
    ஆனவை முழுவதும் அரும்பு கின்றன
    தூநகை நித்திலத் தொடையல் மெய்யுடை
    நீனிற மாயவன் இலைஇய தொக்குமால்.

    14

    1368

    தண்ணுறு பாசடை தயங்கு புன்னைகள்
    கண்ணுறு வியன்சினை கவினப் பூத்தன
    எண்ணுறு தாரகை ஈண்டி மொய்த்திட
    எண்ணுற முகிலினம் விளங்கிற் றென்னவே.

    15

    1369

    பண்படும் அளியினம் பயிலு றாதன
    சண்பக அணிமரந் தயங்கிப் பூத்தன
    எண்படு தபனியத் தியன்ற போதினை
    விண்படு தருக்கொடு மேவல் போன்றவே.

    16

    1370

    புயற்பட லந்தொடும் புதுமென் பாடலம்
    வியற்பட மலர்ந்தபூ விழுமென் வண்டினம்
    அயற்பட வூதுவான் வயந்தக் கம்மியன்
    செயற்படு மணிச்சிறு சின்னம் போலுமால்.

    17

    1371

    விண்டொடர் மதிகதிர் மிளிருந் தாரகை
    கண்டிட வைகலுங் கணிப்பில் கண்ணடி
    மண்டல நிரைத்துமண் மாது வைத்தெனக்
    கொண்டலை யளவிய கோங்கு பூத்தவே.

    18

    1372

    மாமலர்க் கொன்றையும் மணிமென் பூவையுந்
    தாமிரு புடையுறத் தளிர்த்த செய்யமா
    ஏமுறு மாலயன் இடையில் வந்தெழு
    தோமறு பரஞ்சுடர்த் தோற்றம் போன்றவே.

    19

    1373

    ஆதவன் மீதுபோய் அசையுந் தாழைகள்
    மேதகு பாளைகள் மிசைதந் துற்றன
    பூதலம் அணங்கினார் புனைய நீட்டிய
    கோதறு நித்திலக் கோவை போன்றவை.

    20

    1374

    வச்சிர மேனிய வரைகொள் காட்சிய
    பச்சிளம் பூகம்வெண் பாளை கான்றன
    நச்சுறு சோலையா நங்கைக் கெண்ணிலார்
    எச்சமில் சாமரை இரட்ட ஏந்தல்போல்.

    21

    1375

    மேற்றிகழ் செங்கர வீர மானவை
    ஆற்றவுஞ் சினைதொறும் அரும்பு கின்றன
    நாற்றடம் புயமுடை நாதற் கிந்திரன்
    ஏற்றிய மணிச்சுட ரென்ன லாயதே.

    22

    1376

    அல்லிடை யனறியே அலர்ந்த மாலதி
    வல்லிகள் தருவெனும் மகிழ்நர் தங்களைப்
    புல்லுவ பகலினும் பொருந்து மோவெனா
    முல்லைகள் மலர்ந்தன முறுவல் செய்வபோல்.

    23

    1377

    ஆசறு வாவியில் அலர்ந்த காவிகள்
    பாசடை யிடையிடை பரவு கின்றன
    தேசுறு தருநிழல் திருவில் துஞ்சிய
    வாசவன் விழிகளின் மல்கு கின்றவே.

    24

    1378

    தொல்லையின் முறைநெறி யொருவித் தோயமேல்
    வல்லையில் அங்கிகள் வந்துற் றாலென
    அல்லியுஞ் சேயன அரத்த ஆம்பலும்
    புல்லிய கிடங்கினிற் பொலிந்து பூத்தவே.

    25

    1379

    பாயிரும் புனற்கயம் பரந்த பாசடை
    ஆயின இடையிடை அவிழ்ந்த பங்கயச்
    சேயலர் வண்டினந் திளைப்பச் சேர்வன
    காயெரி புகையொடு கானம் புக்கபோல்.

    26

    1380

    எண்ணுமித் தருக்களுங் கொடியும் ஏனவுங்
    கண்ணுற மலர்வதும் அரும்புங் காட்சியும்
    வண்ணம தெற்றெனின் மாலைச் செக்கரும்
    விண்ணுறும் உடுக்களும் விரவிற் றொக்குமால்.

    27

    1381

    இந்திரன் மகிழ்வுற இனைய பான்மையால்
    நந்தன வனமெலாம் நன்று பூத்தலும்
    அந்தநன் மலர்கொடே யாதிக் கன்பினால்
    முந்துறு பூசனை முயல முன்னினான்.

    28

    1382

    விடியல்வை கறை* தனின் மேவி வண்டுதேன்
    புடையுறு முன்னரே புரையி லாததோர்
    கடிமலர் கொய்தனன் கொணர்ந்து கண்ணுதல்
    அடிகளில் விதிமுறை அருச்சித் தானரோ.
    ( * விடியல்வைகறை - மிக விடியற் காலம். )

    26

    1383

    அப்பெரு நாண்முதல் ஆதி அண்ணலை
    இப்படி அருச்சனை இயற்றி வைகலும்
    ஒப்பற நோற்றரோ உம்பர் கோமகன்
    வைப்புறு சண்பக வனத்தின் வைகினான்.

    30


    ஆகத் திருவிருத்தம் - 1383
    - - -

    30. தேவர் புலம்புறு படலம் (1384- 1408)

    1384

    அந்நாள் அதனில் அவுணர்க் கிறைஏவல்
    தன்னான் மிகவுந் தளர்ந்து சிலதேவர்
    எந்நாள்இப் புன்மை எமைநீங்கும் என்றிரங்கிப்
    பொன்னாடு விட்டுப் புவிதன்னிற் போந்தனரே.

    1

    1385

    தீந்துமிழின் வைப்பான தெக்கிண தேயநண்ணி
    மாந்தர்புகழ் காழி வனம்போந்து வானவர்தம்
    வேந்துதனைக் கண்டு விரைநாண் மலரடிக்கீழ்ப்
    போந்து பணிந்து புகழ்ந்து புகல்கின்றார்.

    2

    1386

    ஒன்றே தருமம் ஒழிந்து புவனமெலாஞ்
    சென்றே அடுகின்ற தியவுணர் தந்துடக்கில்
    அன்றே எமைவிட் டகன்றாய் உனக்கிதுவும்
    நன்றே எமையாளும் நாயகனும் நீயன்றோ.

    3

    1387

    கோட்டுக் களிற்றோடுங் கோளரியோ டும்புவியை
    வாட்டுற் றிடுஞ்சூர வல்லியத்தின் வன்சிறையில்
    ஈட்டுற்ற தேவர் எனும்பசுக்கள் தம்மையெலாங்
    காட்டிக் கொடுத்துக் கரந்ததென்கொல் காவலனே.

    4

    1388

    ஏனம் பசுமான் இரலை மரைபடுத்த
    ஊனும் வடியும் ஒலிகடலின் உள்ளபல
    மீனுஞ் சுமந்து விறலசுரர்க் கேவல்செய்து
    மானங் குலைந்து மறந்தோம் மறைகளுமே.

    5

    1389

    மையார் களத்தார் வரம்பெற்ற சூரனுக்குச்
    செய்யாத ஏவலேலாஞ் செய்தோம் நெறிநீதி
    எய்யாத மான மிவையெல்லாந் தானிழந்தோம்
    ஐயா மிகவும் அலுத்தோம் அலுத்தோமே.

    6

    1390

    முந்நாளுந் தந்தி முகத்தவுணன் ஏவல்செய்து
    பன்னாள் உழன்றோம் பரமர் அதுதீர்த்தார்
    பின்னாளுஞ் சூரன் பெயர்த்தும் எமைவருத்த
    இந்நாடி ரிந்தோம் இனித்தான் முடியாதே.

    7

    1391

    எந்நாளும் உன்னைப் புகலென் றிருந்தவியாந்
    துன்னா அவுணராற் சோர்ந்து துயருழப்ப
    உன்னா ருயிர்காத் தொளித்திங் கிருந்தனையால்
    மன்னா உனக்குத் தகுமோ வசையன்றோ.

    8

    1392

    சூரன் முதலாச் சொலப்பட்ட வெவ்வசுரர்
    வீரங் குலைந்து விளிவதற்கும் இவ்வுலகில்
    ஆரும் பழிக்கத் திரிகின்றோம் ஆகுலங்கள்
    தீரும் படிக்குஞ் செயலொன்று செய்வாயே.

    9

    1393

    என்னாப் பலவும் இயம்பி இரங்குதலும்
    மன்னா கியமகவான் மாற்றம் அவைகேளா
    அன்னார் மனங்கொண்ட ஆகுலத்தைக் கண்டுநெடி
    துன்னா அயரா உயரா உரைக்கின்றான்.

    10

    1394

    மாயை உதவ வருகின்ற வெஞ்சூரன்
    தீய பெருவேள்வி செய்யத் தொடங்குமன்றே
    போய நமதுரிமை பொன்னாடுந் தோற்றனமென்
    றோயு முணர்வால் உமக்கங் குரைத்திலனோ.

    11

    1395

    அற்றே மகஞ்செய் தமலன் தருவரங்கள்
    பெற்றே நமது பெரும்பதமுங் கைக்கொண்டு
    சற்றேனும் அன்பில்லாத் தானவர்கோன் தாழ்வான
    குற்றே வலைநம்பாற் கொண்டான் குவலயத்தே.

    12

    1396

    நீள்வா ரிதியின் நெடுமீன் பலசுமந்து
    தாழ்வாம் பணிபிறவுஞ் செய்துந் தளர்ந்துலகில்
    வாழ்வா மெனவே மதித்திருந்தோம் மற்றதன்றிச்
    சூழ்வால் ஒருதீமை சூரபன்மன் உன்னினனே.

    13

    1397

    என்னே அத்தீமை யெனவே வினவுங்காற்
    பொன்னே அனைய புலோமசையைப் பற்றுதற்குங்
    கொன்னே எனையுங் கொடுஞ்சிறையில் வைப்பதற்கு
    முன்னே நினைந்தான் முறியில்லாத் தீயோனே.

    14

    1398

    ஆன செயலுன்னி அனிகந் தனைநம்பால்
    வானுலகில் உய்ப்ப மதியால் அ·துணர்ந்து
    நானும் இவளும் நடுநடுங்கி அச்சுற்று
    மேனி கரந்து விரைந்துவிண்ணை நீங்கினமால்.

    15

    1399

    மீனும் வடியும் வியன்தசையுந் தான்சுமந்த
    ஈன மதுவன்றி ஈதோர் பழிசுமக்கின்
    மானம் அழிய வருமே அதுவன்றித்
    தீன முறுசிறையுந் தீராது வந்திடுமே.

    16

    1400

    வெய்யவர்தம் வன்சிறையின் வீழின் முடிவில்லா
    ஐயன் அடிகள் அருச்சித் தியாமெல்லாம்
    உய்ய அவுணர் உயிரிழப்ப மாதவத்தைச்
    செய்யும் நெறியுண்டோ வெனச்சிந்தை செய்தனனே.

    17

    1401

    சிந்தை அதனில் இனைய செயலுன்னி
    அந்த மறுதுயரத் தாழும் நுமைவிட்டு
    வந்து புவியின் மறைந்துதவஞ் செய்துமுக்கன்
    எந்தை அடிகள் அருச்சித் திருந்தனனே.

    18

    1402

    அல்லல் புரியும் அவுணர்பணி யால்வருந்தித்
    தொல்லையுள மேன்மையெலாந் தோற்றனமே மற்றினிநாம்
    எல்லவரும் வௌ¢ளி மலைக்கேகி இறைவனுக்குச்
    சொல்லி நமது துயரகற்றிக் கொள்வோமே.

    19

    1403

    வம்மின் எனவுரைப்ப வானோர் அதுகேளா
    வெம்மி னதுகண்ட வியன்கண் டகியெனவும்
    அம்மென் மயிலெனவும் ஆடி நகைசெய்து
    தம்மின் மகிழ்ந்து மதர்ப்பினொடு சாற்றலுற்றார்.

    20

    1404

    கோவுநீ எங்கள் குரவனுநீ தேசிகன்நீ
    தேவுநீ மேலாந் திருவுநீ செய்தவநீ
    ஆவிநீ மற்றை அறிவுநீ இன்பதுன்பம்
    யாவுநீ யாகில் எமக்கோர் குறையுண்டோ.

    21

    1405

    பார்த்துப் பணித்த பணிசெய்து நின்றன்னை
    ஏத்தித் திரிதல் எமக்குக் கடனாகும்
    நீத்துத் துயர நெறியுறுத்தி எம்மையென்றுங்
    காத்துப் புரத்தல் உனக்குக் கடன்ஐயா.

    22

    1406

    தேரா அவுணர் திறந்தன்னை முன்தடிந்தாய்
    சூரா தியருயிருங் கொள்ளுநெறி சூழ்கின்றாய்
    பாராள் பவர்க்கும் பலமுனிவர்க் குஞ்சுரர்க்கும்
    ஆராயின் நீயன்றி யாரே துணையாவார்.

    23

    1407

    ஆதலால் எங்கள் அலக்கண் அகற்றிடுவான்
    காதலாய் அத்தன் கயிலைக் கெமைக்கொண்டு
    போதுநீ யென்னப் புரந்தரனும் நன்றென்று
    கோதிலா உள்ளத் தொருசூழ்ச்சி கொண்டனனே.

    24

    1408

    ஆவ தொருகாலை அமரர்கோன் தானெழுந்து
    தேவர் தமைநோக்கிச் சிறிதிங் கிருத்திரென
    ஏவரையும் அங்கண் இருத்தியொரு தானேகிப்
    பாவை அயிராணி பாங்கர் அணுகினனே.

    25


    ஆகத் திருவிருத்தம் - 1408
    ----

    31. அயிராணி சோகப் படலம் (1408 - 1429)

    1409

    அன்னம் பொருவு நடையாள் அவன்வரலும்
    முன்னங் கெதிரா முறையாற் பலமுறையும்
    பொன்னங் கழலிணையைப் பூண்டு வணங்கியெழீஇ
    என்னிங்கொ ரெண்ணமுடன் ஏகிற் றிறையென்றான்.

    1

    1410

    அம்மொழியைக் கேளா அரசன் உரைசெய்வான்
    வெம்மைபுரி சூரன் வியன்பணியா லேவருந்தி
    எம்மை யடைந்தார் இனையசில தேவர்
    தம்முன் இடர்பலவுஞ் சாற்றி இரங்கினரே.

    2

    1411

    அன்னார் மனங்கொண்ட ஆகுலமும் நந்துயரும்
    பொன்னார் சடைமுடியெம் புண்ணியற்குத் தாம்புகலின்
    இந்நாள் அவுணர்க் கிறுவாய் தனைப்புரிந்து
    தொன்னான் உரிமை யளிப்பன்எனுந் துணிவால்.

    3

    1412

    ஆகின்ற துன்பத் தழலாற் பதைபதைத்து
    வேகின்ற சிந்தை வியன்அமரர் தம்முடன்யான்
    பாகொன்று தீஞ்சொல் உமைபாகன் பணிவரைக்குப்
    போகின்றேன் இது புகலுதற்கு வந்தனனே.

    4

    1413

    என்னும் பொழுதில் இடருற் றிகல்வாளி
    தன்னங்கம் மூழ்கத் தளர்ந்துவீழ் மஞ்ஞையென
    அன்னம் பொருவு நடையாள் அயிராணி
    மன்னன் திருமுன் மயங்குற்று வீழ்ந்தனளே.

    5

    1414

    வீழ்ந்தாள் தரிக்கரிதாம் வெய்ய துயர்க்கடலில்
    ஆழ்ந்தாள் தனதறிவும் அற்றாள் பிரியாது
    வாழ்ந்தாளென் செய்வாள் மகவான் அதுகண்டு
    தாழ்ந்தா குலத்தோ டெடுத்தான் தடக்கையால்.

    6

    1415

    ஆர்வமொடு கையால் அணைத்தே அவளைத்தன்
    ஊருமிசை யேற்றி உணர்ச்சிவரும் பான்மையெலாஞ்
    சேரவொருங் காற்றச் சிறிதே தௌ¤வுற்றாள்
    காரின் மலிகின்ற மின்போலுங் காட்சியினாள்.

    7

    1416

    சிந்தை மயக்கஞ் சிறிதகன்று தேற்றம்வர
    முந்தை இடர்வந்து முற்றுந் தனைச்சூழ்ந்த
    வந்த மடமான் அதுபோழ்தில் தன்னுள்ளம்
    நொந்து நடுங்கி இனைய நுவல்கின்றாள்.

    8

    1417

    பொன்னாடு விட்டுப் புவியின் வனத்திருந்து
    முன்னார் அருள்கொண் டுவப்புற்று மேவினனால்
    என்னா ருயிரே எனைநீ பிரிவாயேல
    பின்னர் துணையான் பிழைக்கும் நெறியுண்டோ.

    9

    1418

    வாகத்து நேமிக்கும் வான்பாடு புள்ளினுக்கும்
    மேகத் திறமும் வியன்மதியு மாவதுபோல்
    நாகத் துறைவோர்க்கு நாயகமே நீயலதென்
    சோகத்தை நீக்கித் துணையாவார் வேறுண்டோ.

    10

    1419

    அன்றி யுனைப்பிரிந்தும் ஆவிதனைத் தாங்கவல்லேன்
    என்றிடினும் யானொருத்தி யாருந் துணையில்லை
    ஒன்றுநெறி நீதி உணராத தீயவுணர்
    சென்றிடுவர் நாளும் அவர்கண்டால் தீங்கன்றோ.

    11

    1420

    நீடு புகழ்சேர் நிருதர்கோன் சூழ்ச்சியினால
    தேடரிய பொன்னுலகச் செல்வத்தை விட்டிந்தக்
    காடுதனில் வந்து கரந்து தவம்புரிந்து
    பாடுபடு மாறும் பழிக்கஞ்சி யேயன்றோ.

    12

    1421

    தீய அவுணர் திரிவர் அவர்சிறியர்
    மாயை பலபலவும் வல்லார் பவமல்லால்
    ஆய தருமம் அறியார் பழிக்கஞ்சார்
    நீயும் அ·துணராய் அன்றே நெடுந்தகையே.

    13

    1422

    உன்னன் புடைய வொருமகனும் இங்கில்லை
    துன்னுஞ் சுரருமில்லை தொல்களிற்றின் வேந்துமில்லை
    பின்னிங் கொருமா தருமில்லை பெண்ணொருத்தி
    தன்னந் தனியிருக்க அஞ்சேனோ தக்கோனே.

    14

    1423

    பல்லா றொழுகிப் பவஞ்செய் அவுணரெனும்
    ஒல்லார் எனைக்காணின் ஓடிவந்து பற்றினர்போய்
    அல்லா தனபுரிவ ரானால் அனையபழி
    எல்லாமுன் பாலன்றி யார்கண்ணே சென்றிடுமே.

    15

    1424

    மன்னே இதுவோர் துணிவுரைப்பன் மன்னுயிர்கொண்
    டின்னே தமியேன் இரேன்உலகில் யாவரையும்
    முன்னே படைத்தளிக்கும் முக்கணர்தம் வெற்பினுக்குன்
    பின்னே வருவேன் பெயர்வா யெனவுரையா.

    16

    1425

    பின்றாழ் குழலி பெருந்துயரத் தோடெழுந்து
    நின்றாள் இறையுன்னி நேயத் தொடுநோக்கி
    நன்றால் உனது திறனென்று நாகரிறை
    சென்றார்வ மோடவளைப் புல்லியிது செப்புகின்றான்.

    17

    1426

    வாராய் சசியே வருந்தேல் அமரருடன்
    காரார் களத்தோன் கயிலைக் கியான்போனால்
    ஆராய்ந்து நின்னை அளிப்பவர்ற் றாலன்றோ
    பேரார்வ மோடெனது பின்நீ வருவதுவே.

    18

    1427

    செய்ய சடைமேற் சிறந்தமதிக் கோடுபுனை
    துய்யவனும் வேலைத் துயின்றோனுஞ் சேர்ந்தளித்த
    ஐயன் எமக்கோர் அரணாகி யேயிருக்க
    நையல் முறையாமோ நங்காய் நவிலுதியால்.

    19

    1428

    ஏவென்ற கண்மடவாய் ஈசனருள் அன்னோனை
    வாவென் றளியால் வழுத்திமனத் துன்னின்இங்கே
    மேவுங் கயிலையில்யான் மீண்டு வருந்துணையுங்
    காவென் றுனைஅவன்பாற் கையடையா நல்குவனால்.

    20

    1429

    ஆற்றல் பெரிதுடைய ஐயனே நின்றன்னைப்
    போறறியருள் செய்யும் பொருந்துதியால் ஈண்டேன்று
    தேற்றுதலும் அன்னான் சிறப்பெவன்கொல் செப்புகெனக்
    கோற்றொடிகேள் என்னா அமரேசன் கூறுகின்றான்.

    21


    ஆகத் திருவிருத்தம் - 1429
    ---

    32. மகா சாத்தாப் படலம் (1429 - 1497)

    1430

    முன்னம் பரமன் அருளின்றி முகுந்த னாதி
    மன்னுஞ் சுரர்தானவர் வேலை மதித்த வேலைக்
    கன்னங் கரிய விடம்வந்துழிக் காரி னங்கள்
    துன்னும் பொழுதிற் குயில்போல் துணுக்குற் றிரிந்தார்.

    1

    1431

    அண்ணற் கயிலைக் கிரிதன்னில் அடைந்து செந்தீ
    வண்ணத் தமலன் அடிபோற்ற வருந்தல் என்றே
    உண்ணற் கரிய பெருநஞ்சினை உண்டு காத்துக்
    கண்ணற்கும் ஏனை யவர்க்கும்மிவை கட்டு ரைப்பான்.

    2

    1432

    இன்னுங் கடைமின் அமுதம் மெழுமென்று கூற
    அந்நின் றவர்பாற் கடலின்கண் அடைந்து முன்போற்
    பின்னுங் கடைந்தார் இபமாமுகப் பிள்ளை தன்னை
    முன்னம் வழிபட் டிலர்வந்து முடிவ தோரார்.

    3

    1433

    என்னா யகற்கு வழியா டியற்றாத நீராற்
    கொன்னார் கடலின் நடுமத்தங் குலைந்து வீழ்ந்து
    பன்னாகர் வைகும் இடஞ்செல்லஅப் பான்மை நோக்கி
    அன்னானை அர்ச்சித் தனர்அச்சுத னாதி யானோர்.

    4

    1434

    ஆரா தனைசெய்துழி மந்தர மாதி மைந்தன்
    பேரா அருளால் பிலம்நின்று பெயர்ந்து முன்போல்
    வாரா நிலைபெற் றிடலோடு மகிழ்ந்து போற்றிக்
    காரார் திருமால் முதலோர் கடலைக் கடைந்தார்.

    5

    1435

    கடைகின்றுழிச் செம்மதி யாமெனக் காமர் செம்பொன்
    அடைகின்ற கும்பத் தெழுந்திட்ட தமுத மங்கண்
    மிடைகின்ற தொல்லைச் சுரர்தானவர் யாரும் வெ·கி
    உடைகின்ற வேலையென ஆர்த்தனர் ஒல்லை சூழ்ந்தார்.

    6

    1436

    எம்மால் இதுவந் துளதால் எமக்கேயி தென்றே
    தம்மா சையினாற் சுரர்தானவர் தம்மின் மாறாய்த்
    தெம்மா னமுடன் பொரவுன்னலுந் தீர்வு நோக்கி
    அம்மால் விரைவின் ஒருமோகினி ஆயி னானே.

    7

    1437

    மூலம் பிறந்த விடம்போல் அழன்மூண் டிடாமல்
    நீலம் பிறந்து பிறர்அச்சுற நேர்ந்தி டாமல்
    ஞாலம் பிறந்தோர் சுரர்தானவர் நச்ச ஆங்கோர்
    ஆலம் பிறந்த தெனமோகினி யாகி நின்றான்.

    8

    1438

    சேணார் உலகிற் புவிதன்னில் திசையி லெங்குங்
    காணாத வப்பெண் ணுருக்கண்டனர் காதல் கைமிக்
    கூணார் அமுதந் தனைவிட்டு முன்னொன்று கண்டோர்
    மாணா கியபல் பொருள்கண்டென வந்து சூழ்ந்தார்.

    9

    1439

    மெய்த்தா மரையே முதலாய விசிக நான்கும்
    உய்த்தான் மதவேள் அதுகாலை உலப்பில் காமப்
    பித்தாய் உணர்வு பிழையாகிப் பெரிது மாலாய்
    அத்தா ருகமா முனிவோரினும் ஆர்வ மிக்கார்.

    10

    1440

    எண்ணா அவுணர் தொகையல்லதை எந்தை மாயம்
    உண்ணாடு வானோர் களும்பெண்மயல் உற்று நின்றார்
    மண்ணாசை தன்னிற் பொருளாசையின் மாய வாழ்க்கைப்
    பெண்ணாசை நீங்கல் எளிதோ பெரியோர் தமக்கும்.

    11

    1441

    பூண்டுற்ற கொங்கைப் பொலன்மோகினி யான புத்தேள்
    ஆண்டுற் றவர்தங் களைநோக்கி அமரை நீங்கும்
    ஈண்டுற் றனன்யான் அமுதும் முளதேது நீவிர்
    வேண்டுற்ற தும்பால் உறக்கொண்மின் விரைவின் என்றான்.

    12

    1442

    மாலா னவன்அங் கதுகூற மனந்தி ரிந்து
    நோலா மையினால் இறக்கின்றவர் நோக்கி யெங்கள்
    பாலா வதுநீ யெனமுன்வரும் பான்மை நாடி
    மேலாம் அமுதே எமக்கென்றனர் விண்ணு ளோர்கள்.

    13

    1443

    வானா டவர்நல் லமுதங்கொடு மாயை நீங்கிப்
    போனார் ஒருசார் அவரோடு பொருத தீயோர்
    தேனார் மொழிமோ கினியாகிய செங்கண் மாலை
    ஆனா விருப்பிற் கொடுபோயினர் ஆங்கொர் சாரில்.

    14

    1444

    கொண்டே கியதா னவர்தங்கள் குழுவை நோக்கித்
    தண்டேன் மலர்ப்பா யலின்என்னைத் தழுவ வல்லான்
    உண்டே இதனில் ஒருவீரன் உவனை இன்னங்
    கண்டேன் இலையென்றனன் பெண்ணுருக் கொண்ட கள்வன்.

    15

    1445

    ஈறாம் அவுணர் பலரும்மிது கேட்டெ னக்கு
    மாறாய் ஒருவர் இலையாரினும் வன்மை பெற்றேன்
    வீறா கியவீ ரனும்யானென வீற்று வீற்றுக்
    கூறா எனையே புணரென்று குழீஇயி னாரே.

    16

    1446

    கொம்மைத் துணைமென் முலையண்ணலைக் கூடயாரும்
    வெம்மைப் படலால் இகல்கொண்டனர் வேறு வேறு
    தம்மிற் பொருது முடிந்தார் கிளைதம்மி லுற்ற
    செம்மைக் கனலால் முடிவுற்றிடுஞ் செய்கை யேபோல்.

    17

    1447

    அன்னார் தொகையில் இருவோர்அரி மாயை யுன்னி
    என்னாம் இவரோ டிறக்கிறனம் என்று நீங்கித்
    தொன்னாள் உருவந் தனைமாற்றிச் சுரர்கள் போலாய்ப்
    பொன்னா டவர்தங் குழுவோடு புகுந்து நின்றார்.

    18

    1448

    மாண்டார் அவுணர் அதுநோக்கி வரம்பின் மாயம்
    பூண்டாரும் வெ·க மடமாதெனப் போந்த கள்வன்
    மீண்டான் அமரர் பலரும் விருப்புற்று மேவ
    ஈண்டாழி தன்னில் அமுதந்தனை ஈத லுற்றான்.

    19

    1449

    ஈயும் பொழுதின் இமையோர்கள் இனத்தி னூடு
    போயங் கிருந்த இருகள்வரும் பொற்பு மிக்க
    மாயன் பகிரும் அமிர்த்ந்தனை மந்தி ரத்தால்
    ஆயும் படிகொண் டிலர்வல்லையின் ஆர்த லுற்றார்.

    20

    1450

    தண்டா மரைக்குப் பகைநண்பெனச சாரும் நீரார்
    கண்டார் புடையுற் றவரிங்கிவர் கள்வ ரேயாம்
    உண்டார் அமுதங் கடிதென் றுளத்துன்னி யங்கண்
    விண்டான் அவற்குக் குறிப்பால் விழிகாட்டி னரால்.

    21

    1451

    காட்டுற் றிடலும் அரிநோக்கியிக் கள்வ ரேயோ
    வீட்டுற்ற வானோ ருடன்உண்குவ ரென்று தன்கை
    நீட்டுற் றிடுசட் டுவங்கொண்டு நிருதர் சென்னி
    வீட்டிச் சுரருக் கமுதூட்டி விருந்து செய்தான்.

    22

    1452

    அண்டத் தவர்முன் னருந்துற்ற அமுத மன்னார்
    கண்டத் திடையே வருமுன்னது கண்டு மாயன்
    துண்டித்த சென்னி யழிவற்ற துணிந்த யாக்கை
    முண்டத் துடனே துணிபட்டு முடிந்த வன்றே.

    23

    1453

    மாளாத சென்னி யுடைத்தானவர் மாண்பு நோக்கி
    நீளார் அமுதுண்டவர் விண்ணிடை நிற்ப ரென்னாத்
    தாளால் உலகம் அளந்தோன் அவர்தங் களுக்குக்
    கோளா நிலையை இறையோன் அருள்கொண்டு நல்க.

    24

    1454

    புன்னாகம் நாக மணிவான் அடிபோற்றி நோற்றுச்
    செந்நாக மோடு கருநாகத்தின் செய்கை பெற்றுப்
    பின்னாக முன்னந் தமைக்காட்டிய பெற்றி யோரை
    அந்நாக மீது மறைப்பார் அமுதுண்ட கள்வர்.

    25

    1455

    வேறு
    கெழிய ராகுவுங் கேதுவு மேயென
    மொழிய நின்ற முதற்பெயர் தாங்கியே
    விழுமி தாகிய வெய்யவ னாதியாம்
    எழுவர் தம்மொ டிருவரும் ஈண்டினார்.

    26

    1456

    ஈது நிற்கமுன் இன்னமு தந்தனை
    ஆத ரத்தொ டயின்றவிண் ணோர்தொழ
    ஓத வேலை யொருபுடை யாகவே
    மாது ருக்கொண்ட மாதவன் வைகவே.

    27

    1457

    நால்வ கைப்பட நண்ணிய சத்தியுள்
    மாலும் ஆதலின் மற்றது காட்டுவான்
    ஆல கண்டத்தன் அச்சுதன் அச்சுறுங்
    கோல மெய்திக் குறுகினன் அவ்விடை.

    28

    1458

    தண்டு ழாய்முடி யான்தனி நாயகற்
    கண்டு வெ·கக் கறைமிடற் றெம்பிரான்
    உண்டெ மக்கு முனைப்புணர் காதல்நீ
    கொண்ட வேடம் இனிதென்று கூறினான்.

    29

    1459

    ஆணின் நீங்கிய அச்சுதன் ஆற்றவும்
    நாணி இவ்வுரு நல்கிய தன்மையாள்
    காணி யாயுனைக் காதலித் துற்றனள்
    பேணி நிற்பதெ னென்னைப் பெருமநீ.

    30

    1460

    ஆதி காலத் தயன்செயல் முற்றிட
    மாதை மேவிட வந்துனை வேண்டினங்
    காத லோவன்று காரண னாகையின்
    மீது சேர்தரும் வீரியன் அல்லையோ.

    31

    1461

    நெற்றி யங்கண் நிமல உனக்கிகல்
    பற்ற தில்லையெப் பான்மையர் கண்ணினும்
    அற்ற தாக என்னாகந் தழுவுவான்
    உற்ற காதலும் உண்மைய தன்றரோ.

    32

    1462

    என்ன காரணம் எண்ணிக்கொல் ஏகினை
    அன்ன பான்மை யறிகிலன் எம்பிரான்
    இன்ன தாடலை நீயல்ல தேவரே
    பின்னை நாடி யறிவுறும் பெற்றியோர்.

    33

    1463

    அன்பில் ஆடவர் ஆடவ ரோடுசேர்ந்
    தின்ப மெய்தி யிருந்தனர் இல்லையால்
    முன்பு கேட்டது மன்று முதல்வநீ
    வன்பொ டென்னைப் புணர்வது மாட்சியோ.

    34

    1464

    என்று மாயன் இசைத்தலும் எம்பிரான்
    அன்று நீம் நமக்கொரு சத்திகாண்
    அன்று தாருகத் தந்தணர் பாங்குறச்
    சென்ற போழ்தினுஞ் சேயிழை யாயினாய்.

    35

    1465

    முன்னை வேதன் முடிந்தனன் போதலும்
    உன்னொ டேவந் துவப்பொடு கூடினோம்
    பின்னர் இந்தப் பிரமனை யுந்தியால்
    அன்னை யாகி அளித்தனை அல்லையோ.

    36

    1466

    ஆகை யாலுன் அணிநலந் துய்த்திட
    ஓகை யால்இவண் உற்றனன் செல்கென
    மாகை யாரப் பிடிப்ப வருதலும்
    போகை யுன்னிப் பொருக்கென ஓடினான்.

    37

    1467

    நாணி ஓடிய நாரண னைப்பிறை
    வேணி யண்ணல் விரைவுட னேகியே
    பாணி யாலவன் பாணியைப் பற்றினான்
    சேணி னின்று திசைமுகன் போற்றவே.

    38

    1468

    பற்றி யேகிப் படிமிசை நாவலாற்
    பெற்ற தீவிற் பெருங்கடற் சார்பினின்
    மற்று நேரில் வடதிசை வைப்பினில்
    உற்ற சாலத்தின் ஒண்ணிழல் நண்ணினான்.

    39

    1469

    நண்ணி யேதனி நாயகன் அவ்விடைப்
    பெண்ணின் நீர்மையைப் பெற்றிடு நாரணன்
    உண்ணெ கிழ்ந்து மயக்குற் றுருகியே
    எண்ணில் இன்புறக் கூடினன் என்பவே.

    40

    1470

    மூன்று கண்ணன் முகுந்தன் இருவரும்
    ஏன்று கூடிய வெல்லையில் அன்னவர்
    கான்று மிர்ந்த புனல்கண்டகி யென
    ஆன்ற தோர்நதி யாகிஅ கன்றதே.

    41

    1471

    அந்த நீரின் அகம்புறம் ஆழிகள்
    தந்து வச்சிர தந்தி யெனப்படும்
    முந்து கீட முறைமுறை யாகவே
    வந்து தோன்றின மாழையின் வண்ணமாய்.

    42

    1472

    ஆய மண்ணில் அகங்கெழு பஞ்சர
    மேயெ னத்தந் திருந்து சிலபகல்
    மாயும் அவ்வுயிர் மாய்ந்தபிற் கூடுகள்
    தூய நேமிக் குறிகொடு தோன்றுமால்.

    43

    1473

    நீர்த்த ரங்க நிரல்பட வீசியே
    ஆர்த்தி ரங்கி அணைவுறு கண்டகித்
    தீர்த்தி கைப்புனல் சென்றக் குடம்பைகள்
    ஈர்த்து வந்திடும் இம்பர்கொண் டெய்தவே.

    44

    1474

    அன்ன கீடம் அமர்ந்த குடம்பையை
    இந்நி லத்தர்கொண் டேகி அகத்துறை
    பொன்னை வாங்கிப் பொறியினை நோக்கியே
    இன்ன மூர்த்தம் இ·தென நாடுவார்.

    45

    1475

    நாடி யேயவை நாரண னாகவே
    கூடும் அன்பிற் குவலயத் தேசிலர்
    தேடி அர்ச்சனை செய்வர் அதன்பெயர்
    கேடில் சானக் கிராமம் தென்பரால்.

    46

    1476

    மாலும் எந்தையும் மாண்பொடு கூடியே
    சால மேவு தனிநக ரேயிதன்
    மூல காரணம் ஆகையின் முந்தையோர்
    மேலை நாமம் அதற்கு விதித்தனர்.

    47

    1477

    இந்த வண்ணம் இருக்க முராரியும்
    அந்தி வண்ணத் தமலனு மாகியே
    முந்து கூடி முயங்கிய வெல்லையில்
    வந்த னன்னெமை வாழ்விக்கும் ஐயனே.

    48

    1478

    மைக்க ருங்கடல் மேனியும் வானுலாஞ்
    செக்கர் வேணியுஞ் செண்டுறு கையுமாய்
    உக்கி ரத்துடன் ஓர்மகன் சேர்தலும்
    முக்கண் எந்தை முயக்கினை நீங்கினான்.

    49

    1479

    அத்த குந்திரு மைந்தற் கரிகர
    புத்தி ரன்எனும் நாமம் புனைந்துபின்
    ஒத்த பான்மை உருத்திரர் தம்மொடும்
    வைத்து மிக்க வரம்பல நல்கியே.

    50

    1480

    புவனம் ஈந்து புவனத் திறையென
    அவனை நல்கி அமரரும் மாதவர்
    எவரும் ஏத்திடும் ஏற்றமும் நல்கினான்
    சிவன தின்னருள் செப்புதற் பாலதோ.

    51

    1481

    முச்ச கத்தை முழுதருள் மேனிகொண்
    டச்சு தன்றொழ அச்சுதன் போற்றிட
    மெச்சி யேயவ ருக்கு விடைகொடுத்
    தெச்ச மில்சிவன் ஏகினன் என்பவே.

    52

    1482

    நாய கன்செல நான்முகத் தோனைமுன்
    தாயெ னத்தருந் தாமரைக் கண்ணினான்
    சேய வைகுண்டஞ் சேர்ந்தனன் ஐயனும்
    போயி னான்றன் புவனத் தரசினில்.

    53

    1483

    அங்கண் மேவி அரிகர புத்திரன்
    சங்கை யில்பெருஞ் சாரதர் தம்மொடும்
    எங்கு மாகி இருந்தெவ் வுலகையுங்
    கங்கு லும்பகல் எல்லையுங் காப்பனால்.

    54

    1484

    மண்ண கத்தரும் வானவ ரும்மலர்
    அண்ண லுந்தினம் அர்ச்சிக்கும் நீர்மையான்
    கண்ண னும்புக ழப்படு காட்சியான்
    எண்ணின் அங்கவ னுக்கெதிர் இல்லையே.

    55

    1485

    அன்ன நீர்மையன் காணென தன்பினால்
    உன்னை வந்திக் காத்தருள் உத்தமன்
    என்ன லோடும் இசைந்துநின் றாளரோ
    பொன்னி னாடு தணந்த புலோமசை.

    56

    1486

    வேறு
    இந்திரன் மங்கை இசைந்தது காணா
    நந்தமர் கையனும் நம்பனும் நல்கு
    மைந்தனை உன்னி வழுத்துத லோடும்
    அந்தமி லாவெம தையன் அறிந்தான்.

    57

    1487

    காருறழ் வெய்ய களிற்றிடை யாகிப்
    பாரிடர் எண்ணிலர் பாங்குற நண்ணப்
    பூரணை புட்கலை பூம்புற மேவ
    வாரணம் ஊர்பவன் முன்னுற வந்தான்.

    58

    1488

    முன்னுற மேவலும் மூவுல கோர்க்கு
    மன்னவ னாகிய வாசவன் ஐயன்
    பொன்னடி தாழ்ந்து புகழ்ந்தனன் நிற்ப
    என்னிவண் வேண்டும் இயம்புதி யென்றான்.

    59

    1489

    கேட்டலும் இன்ன கிளத்தினன் மாயை
    மாட்டுறு சூரன் வருத்துத லாற்பொன்
    நாட்டினை விட்டனன் நானிவ ளோடுங்
    காட்டுறு வேயென வேகர வுற்றே.

    60

    1490

    நோற்றிவண் மேவினன் நோதகும் வானோர்
    ஆற்றரி தாவவு னன்செயும் இன்னல்
    சாற்றினர் வந்து தளர்ந்தனம் எம்மைப்
    போற்றுதி யென்று புலம்பின ரன்றே.

    61

    1491

    தள்ளரும் வானவர் தம்மொடு முக்கண்
    வள்ளல் தனக்கெம் வரத்த முரைக்க
    வௌ¢ளி மலைக்கு விரைந்துசெல் கின்றேன்
    எள்ளரி தாகிய இல்லினை வைத்தே.

    62

    1492

    தஞ்சமி லாது தனித்திவ் வனத்தே
    பஞ்சுறழ் செய்ய பதத்தியை வைத்தால்
    வஞ்சகர் கண்டிடின் வௌவுவர் என்றே
    அஞ்சினள் உன்றன் அடைக்கலம் ஐயா.

    63

    1493

    ஆத்தன் அமர்ந்த அகன்கிரி நண்ணி
    வாய்த்திடும் இவ்விடை வந்திடு காறும்
    பூத்திடு காமர் புலோமசை தன்னைக்
    காத்தருள் என்றிது கட்டுரை செய்ய.

    64

    1494

    மேதகு செண்டுள வீரன் இசைப்பான்
    ஏதமு றாதநின் ஏந்திழை தன்னைத்
    தீதடை யாது சிறப்பொடு காப்பன்
    நீதனி யென்று நினைந்திடல் கண்டாய்.

    65

    1495

    இல்லுறு நங்கையை இங்ஙனம் வைத்தே
    அல்லுறழ் கண்டன் அருங்கயி லைக்குச்
    செல்லுதி யென்றருள் செய்து திரும்பித்
    தொல்லையெம மையனொர் சூழலின் உற்றான்.

    66

    1496

    வாளமர் நீந்தி வயந்தனின் மிக்க
    காளனெ னப்படு கட்டுரை யோனை
    ஆளுடை அண்ணல் அருட்கொடு நோக்கிக்
    கேளிவை யென்று கிளத்திடு கின்றான்.

    67

    1497

    மூவரின் முந்திய மூர்த்தி வரைக்குப்
    போவது முன்னினன் பொன்னகர் மன்னன்
    தேவியி ருந்தனள் தீங்கு வராமே
    காவல் கொள்நீ யெனக் கற்பனை செய்தான்.

    68


    ஆகத் திருவிருத்தம் - 1497
 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home