| 
		 63
      
        | 
		 ஆங்கவன் தேவி யானாள் 
		அருந்ததிக் கற்பின் மிக்காள் வாங்கிய நுசுப்பின் நல்லாள் மறைக்கொடி 
		யெனுநா மத்தாள் பூங்கம லத்துப் புத்தேள் பொன்னடி தன்னில் வந்தாள் 
		ஓங்குதொல் லுலகுக் கெல்லாம் ஒருதனி முதல்வி யானாள். 
       
        | 
		 1  | 
    
      | 
		 64
      
        | 
		 வேறு சேயிழை அவளொடு 
		செறிந்து புல்லியே மீயுயர் கமலமேல் விரிஞ்சன் காதலன் மாயிரும் பணிபதி 
		மணிகள் ஈன்றென ஆயிர மைந்தரை அருளி னானரோ. 
       
        | 
		 2  | 
    
      | 
		 65
      
        | 
		 அப்பெரு மைந்தர்கள் ஆயி 
		னோர்க்கெலாம் முப்புரி நூல்விதி முறையின் ஆற்றியே செப்பரு மறைகளின் 
		திறமும் ஈந்துபின் இப்பரி சென்றினை இசைத்தல் மேயினான். 
       
        | 
		 3  | 
    
      | 
		 66
      
        | 
		 நல்லதோர் மானதம் நணுகி 
		நீவிர்கள் எல்லிரும் ஈசனை எண்ணி நோற்றிரீஇப் பல்லுயி ருந்தரும் பரிசு 
		பெற்றிவண் செல்லுதி ராலெனச் செப்பி ஏவினான். 
       
        | 
		 4  | 
    
      | 
		 67
      
        | 
		 ஏயின காலையில் இறைஞ்சி 
		மைந்தர்கள் போயினர் மானதப் பொய்கை புக்கனர் ஆயிடைப் படிந்தனர் அரனை 
		உன்னியே மாயிரு நோன்பினை இயற்றி வைகினார். 
       
        | 
		 5  | 
    
      | 
		 68
      
        | 
		 நேரற இன்னணம் நெடிது நோற்புழி 
		நாரதன் என்பவன் நண்ணி ஆயிடை வாரியுள் ஆற்றவும் வருந்து கிற்றிரால்  
		காரியம் யாவது கழறு வீர்என்றான். 
       
        | 
		 6  | 
    
      | 
		 69
      
        | 
		 என்னலும் முனிவகே ளியாங்கள் 
		**நல்கிடும் முன்னுற நல்குவான் முயன்று முக்கணான் தன்னடி உன்னியே 
		தவத்தை ஆற்றுதும் அன்னதும் எந்தைதன் ஆணையா லென்றார்.  (பா-ம் 
		**நல்கிட.)
      
        | 
		 7  | 
    
      | 
		 70
      
        | 
		 அறிந்திடு முனிவரன் அதனைக் 
		கேட்டலுஞ் செறிந்திடு கரத்தொடு செங்கை தாக்குற எறிந்தனன் நகைத்தனன் 
		இதுகொல் ஈசனால் பெறும்பரி சேயெனப் பின்னுங் கூறினான்.  (1. மறைக்கொடி 
		- வேதவல்லி.  3. மறைகளின் திறம் - வேதங்களை ஓதும் தன்மைகள்.  4. 
		பல்லுயிரும் தரும் பரிசு - பலவுயிர்களையும் படைக்கும் தன்மை.)
      
        | 
		 8  | 
    
      | 
		 71
      
        | 
		 ஈசனை யேநினைந் திறைஞ்சி 
		யேத்தியே பேசரும் அருந்தவம் பிடித்து மூவகைப் பாசம தகல்நெறி படரச் 
		சிந்தியீர் ஆசுறு படைப்பினுக் கார்வஞ் செய்திரோ. 
       
        | 
		 9  | 
    
      | 
		 72
      
        | 
		 சிறப்புள அருந்தவஞ் செய்து 
		நீர்இனி உறப்படு கதிமுறை உரைப்பக் கேட்டிரால் பிறப்புள திடருள 
		தன்றிப் பின்னரும் இறப்புள ததுநுமக் கினிய தாகுமோ. 
       
        | 
		 10  | 
    
      | 
		 73
      
        | 
		 இன்றுநீர் வெ·கிய தியற்று 
		நான்முகன் தன்றலை ஐந்தினில் ஒன்று சங்கரன் பொன்றிகழ் கரங்கொளப் 
		புகுந்த தீமையும் நின்றதோர் பழியையும் நினைக்கி லீர்கொலோ. 
       
        | 
		 11  | 
    
      | 
		 74
      
        | 
		 என்னல திறையவா¢ இல்லை 
		யார்க்கும்யான் முன்னவன் என்றுநான் முகத்தன் மாலொடு பன்னெடு நாளமர் 
		பயின்று சோதிகண் டன்னம தானதும் அறிந்தி லீர்கொலோ. 
       
        | 
		 12  | 
    
      | 
		 75
      
        | 
		 நேயமெண் ணுற்றென நிறைந்த 
		கண்ணுதல் நாயகன் விதித்திட நம்மில் யாவையும் ஆயவென் றகந்தையுற் 
		றமர்வன் அன்னவன் மாயமென் றுரைத்திடுந் தளையின் வன்மையால். 
       
        | 
		 13  | 
    
      | 
		 76
      
        | 
		 பற்றொடு முழுதுயிர் படைக்கும் 
		பான்மையால் பெற்றிடு பயனெவன் பெருமை யல்லது நற்றவ முனிவிர்காள் நன்கி 
		தென்றொரு பொற்றளை தம்பதம் பூட்ட லாகுமோ. 4
      
        | 
		 14  | 
    
      | 
		 77
      
        | 
		 எத்துணை எத்துணை இன்பம் 
		வேண்டுநர்க் கத்துணை அலக்கண்வந் தடையும் ஆங்கது மெய்த்திறம் நீவிரும் 
		விதியின் நிற்றிரேல் கைத்துறு துயரெனுங் கடலில் சா¢திரால். 
       
        | 
		 15  | 
    
      | 
		 78
      
        | 
		 அன்றியும் ஈசனை அயர்த்தி 
		யாமிறை என்றுளம் உன்னுதிர் இசைவில் தீவினை மன்றவு மாற்றுதிர் மயக்கங் 
		கொள்ளுதிர் ஒன்றிய பேருணா¢ வொருவிப் போதிரால். 
       
        | 
		 16  | 
    
      | 
		 79
      
        | 
		 வீட்டிடும் இச்செயல் வீடு 
		சேர்தர மோட்டுறு நிலைகொடு முயன்று கூடுதிர் ஈட்டுறு நன்னெறிக் கியைவ 
		தொன்றினைக் காட்டியே இனைத்தெனக் கழற லாகுமோ.  (9. மூவகைப் பாசம் - 
		ஆணவம் முதலியவை.  10 உறப்படு - அடையத்தக்க.  11. வெ·கியது - பெற 
		விரும்பியது.  13. நேயமெண்ணுற்றென நிறைந்த - எள்ளுக்குள் எண்ணெய் 
         போல் எங்கும் நிறைந்த(நேயம்-நெய், எண்-எள்), தளை - பாசம்.  14. 
		பொற்றளை - பொன்விலங்கு.  15. கைத்துறு - வெறுக்கத்தக்க.)
      
        | 
		 17  | 
    
      | 
		 80
      
        | 
		 அற்றமில் தவம்புரிந் தரிய 
		வீட்டினைப் பெற்றவர் அளப்பிலர் பெறுவ தாகியே உற்றவர் அளப்பிலர் 
		உலகில் சிற்சில மற்றவர் தமதியல் வகுப்பக் கேண்மினோ. 
       
        | 
		 18  | 
    
      | 
		 81
      
        | 
		 சுற்றம தரனடித் தொண்டர் 
		அல்லது மற்றிலர் அவனடி மலர்க ளேயலால் பற்றிலர் சாலவும் இனிய பண்பினா¢ 
		குற்றம தகன்றதோர் கொள்கை மேயினார். 
       
        | 
		 19  | 
    
      | 
		 82
      
        | 
		 நேசமுற் றடைபவர் நினைப்பின் 
		நீக்கரும் ஆசறுத் தருள்பொழி அறிவின் மேலையோர் ஈசனைக் குறுகியெஞ் 
		ஞான்றும் வாழபவர் பேசுதற் கரியதோர் பெருமை எய்தினார். 
       
        | 
		 20  | 
    
      | 
		 83
      
        | 
		 ஆதலின அவரென அவாஇன் றுற்றிடு 
		மேதகு நெறியுறீஇ வீடு சேருதிர் ஏதமில் வெறுக்கைபெற் றெண்ணந் 
		தீர்ந்திடுந் தாதைதன் பணியினைத் தவிர்திர் என்னவே. 
       
        | 
		 21  | 
    
      | 
		 84
      
        | 
		 அந்தமில் வீடுபே றடையும் 
		ஊழுடை மைந்தர் கள்ஓர்புடை வந்து தேர்வுறாத் தந்தைசொல் லினுமது தக்க 
		தேயெனப் புந்திகொண் டடிகளை வணங்கிப் போற்றினார். 
       
        | 
		 22  | 
    
      | 
		 85
      
        | 
		 வேறு போற்று மைந்த 
		ரைப்பெரும் புறந்தழீஇ அரன்புகழ் சாற்றி வீடு வெ·குறுந் தவத்தினோர்கள் 
		நிலையினைத் தேற்றி மந்தி ரங்களுஞ் செயற்கையும் புணர்த்தியே மாற்றினன் 
		தொல்லுணர்வு தன்னை மற்றொருண்மை உதவினான். 
       
        | 
		 23  | 
    
      | 
		 86
      
        | 
		 வேறொ ருண்மை உதவல்செய்து 
		விதியின்நாடி வேதநூல் கூறு கின்ற முறைபுரிந்து குமரர்யாரும் இன்னணம் 
		ஈறின் மாத வங்கள்ஆற்றி எல்லைதீர்ந்த முத்தியில் சேறி ரென்று 
		முனிவன்ஒல்லை சேணெழுந்து போயினான். 
       
        | 
		 24  | 
    
      | 
		 87
      
        | 
		 போகு நார தற்புகழ்ந்து 
		பொன்னடித் தலத்தின்மேல் ஓகை யோடு தாழ்ந்துமுன் உணர்த்துபான்மை உன்னியே 
		மோக மாதி யானதீமை முழுதுமாற்றி மோனிகள் ஆகி மைந்தர் எவரும் 
		அங்கண்ஆற்றினார் அருந்தவம்.  (21. வெறுக்கை - செல்வம்.  22. ஊர்உடை - 
		ஊழ்வினையினையுடைய,  அடிகளை - நாரதன் அடிகளை.  23. புறந்தழீஇ - 
		மார்பொடு தழுவி, ஒரு உண்மை -  ஒப்பற்ற முத்திநிலையின் உண்மையினை. 
         24. வேறொருண்¢மை - ஞானநிலை.)
      
        | 
		 25  | 
    
      | 
		 88
      
        | 
		 அருந்த வங்கள் பலவும்ஆற்றி 
		அவர்கள்வீடு சேர்தலும் இருந்த வம்பு ரிந்த தக்கன் இளைஞர்பெற்றி இன்னமுந் 
		தெரிந்த தில்லைஎன்று சிந்தை செய்துபோத வுணர்வினால் பொருந்த நோக்க லுற்ற 
		வட்பு குந்த பான்மை கண்டனன். 
       
        | 
		 26  | 
    
      | 
		 89
      
        | 
		 மானதத்த டத்தி னூடு 
		மாற்றருந்த வத்தராய் மோனமுற்ற சிறுவர் பாலின் முன்னிவந்து நாரதன் 
		ஞானமுற்று மோதி யென்சொல் நவையதென்று மாற்றியே மேனிலைக்கண் உய்த்து 
		மீண்டு விண்படர்ந்து போயினான். 
       
        | 
		 27  | 
    
      | 
		 90
      
        | 
		 மிக்க மைந்தர் அவன் உரைத்த 
		விதியினின்று வீடுபே றொக்க லோடுமே யினார்கள் ஒருவரின்றி எற்கினி மக்க 
		ளின்றெனத் தெரீஇ வருத்தமுற்றி ருந்திடுந் தக்கன் மற்றும் ஆயிரந் 
		தவச்சிறாரை உதவினான். 
       
        | 
		 28  | 
    
      | 
		 91
      
        | 
		 பெற்ற மைந்தரைத் தழீஇப் 
		பிறங்குகாமர் மீச்செல அற்றமில் சிறப்பின் வேதம் அறிவுறுத்தி ஆதியாம் 
		நெற்றியங் கணானை உன்னி நீவிர்யாவும் நல்குவான் நற்ற வஞ்செய் தணைதிர் 
		மாதத்துடத் தில்என்னவே. 
       
        | 
		 29  | 
    
      | 
		 92
      
        | 
		 கேட்ட மைந்தர் தாதைதாள் 
		கெழீஇயதங்கள் சென்னியில் சூட்டி ஏவல் போற்றிஅன்ன தூமலர்த் தடத்திடை 
		ஈட்ட மோடு சென்றிருந் திருந்தவம் புரிந்தனர் காட்டி லுள்ள கயமுனிக் 
		கணங்கள்அங் கணுற்றென. 
       
        | 
		 30  | 
    
      | 
		 93
      
        | 
		 வேறு ஆன காலையில் அனைய 
		மைந்தர்கள் றுன மின்றிநோற் றொழுக முன்னரே போன நாரதன் புணர்ப்பொன் 
		றோர்ந்திடா மான தத்தட மருங்கில் எய்தினான். 
       
        | 
		 31  | 
    
      | 
		 94
      
        | 
		 எய்தி யாவர்நீர் யாரும் 
		மாதவஞ் செய்திர் எப்பொருள் சேர்தல் வெ·கினீர் நொய்தில் அன்னது நுவல 
		வேண்டுமால் கைத வம்பெறாக் கருத்தி னீரென. 
       
        | 
		 32  | 
    
      | 
		 95
      
        | 
		 தந்தை யாகியோன் தக்கன் 
		ஆங்கவற் கந்தி வண்ணனார் அருளும் பேற்றினால் வந்த மைந்தரேம் யாங்கண் 
		மற்றவன் இந்த வான்தடத் தெம்மை ஏவினான். 
       
        | 
		 33  | 
    
      | 
		 96
      
        | 
		 தேவ தேவனைச் சிந்தை யிற்கொடே 
		ஆவி யோடுடல் அலச நோற்றிரீஇ ஓவில் பல்லுயிர் உதவல் பெற்றிட ஏவி னானெமை 
		என்று சொற்றனர். 
         (26. போதவுணர்வு - ஞானவுணர்ச்சி.  27. மோனம் - மௌனநிலை.  28. 
		மற்றும் - பின்னறும். 30. கயமுனிக்கணங்கள் - யானைக்கன்றுகள்.  32. 
		நொய்தில் - விரைவில், கைதவம் - வஞ்சனை.  33. அந்திவண்ணனார் - சிவன்.)
      
        | 
		 34  | 
    
      | 
		 97
      
        | 
		 சொற்ற காலையில் துகளில் 
		தூயவன் நற்ற வஞ்செய்வீர் தாதன் தாளையே பற்ற தாவுளீர் பயனென் 
		றுன்னலீர் குற்றம் யாவரே குறுக லார்களே. 
       
        | 
		 35  | 
    
      | 
		 98
      
        | 
		 நோற்றி யாவையும் நோக்கிச் 
		செய்வினைப் பேற்றை எய்துவீர் பிறப்பு மாய்வது மாற்று வீரலீர் மயக்கந் 
		தீர்திரோ ஏற்றம் என்கொல்நீர் றீரினும். 
       
        | 
		 36  | 
    
      | 
		 99
      
        | 
		 மேய மாசுதோய் விழைவின் 
		மெய்யினர் தூய தோ¢தடந் துறையை எய்தியுஞ் சேய சேதகந் திளைத்தல் 
		போலுமால் நீயிர் கொண்டதோர் நிலைமை தானுமே. 
       
        | 
		 37  | 
    
      | 
		 100
      
        | 
		 தலைய தாகிய தவந்த னக்குநீர் 
		விலைய தாப்பெறும் விதியின் செய்கையும் நிலைய தாகுமோ நீடு நாளொடே உலக 
		மீதுசீர் உறுவ தன்றியே. 
       
        | 
		 38  | 
    
      | 
		 101
      
        | 
		 போவதும் வருவதும் பொருமலும் 
		நன்குமின் றாவதோர் கதியதே ஆருயிர்க் குறுதியாம் நீவிரக் கதியினை 
		நினைகிலீர் இறுதியும் ஓவரும் பிறவியும் உம்மைவிட் டகலுமோ. 
       
        | 
		 39  | 
    
      | 
		 102
      
        | 
		 சிறுவர்தம் முள்ளமுஞ் சேயிழை 
		மகளிர்தம் அறிவுமா லெய்தினோர் சிந்தையும் ஆனவால் உறுவதோர் பனுவலும் 
		உற்றிடும் பெற்றியே பெறுவதாம் அன்றியே பின்னரொன் றாகுமோ. 
       
        | 
		 40  | 
    
      | 
		 103
      
        | 
		 ஆதலால் உங்களுக் கருள்செயுந் 
		தன்மையான் தாதையா கின்றதோர் தக்கனே எனின்அவன் பேதையாம் ஈசனால் 
		பெருவளம் பெற்றவன் பாததா மரையினில் பரிவுறா நெறிமையால். 
       
        | 
		 41  | 
    
      | 
		 104
      
        | 
		 ஆங்கவன் மையலோன் ஆதலால் 
		அவனருள் நீங்களும் அனையரே நெறிதருந் தேசிகன் தீங்கெலாம் நீக்கியே 
		சிவகதிப் பாற்பட ஓங்குபேர் அருளொடும் உணர்த்துவான் அல்லனோ.  (36. 
		ஈகின்றீர் - படைக்கப் போகின்றீர்.  37. சேதகந்திளைத்தல் - சேற்றினைப் 
		பூசிக்கொளளுதல்.  39. பொருமலும் - துன்புறுதலும், நன்கும் - 
		இன்படைதலும்.  41. பரிவுஉறா - அன்பு பொருந்தாத.  42. ஆங்கவன் - 
		அத்தக்கன், நெறி - ஞானமார்க்கம், அல்லனோ - அல்லவா.) 
       
        | 
		 42  | 
    
      | 
		 105
      
        | 
		 முந்துமா யிரவரும் முன்பரிப் 
		பொய்கைவாய்த் தந்தைதன் பணியின்மூ தாதைபோல் நல்கவே வந்துளார் நோற்றுழி 
		மயலறத் தேற்றியே அந்தமா நெறிநிறீஇ அரியவீ டருளினாம். 
       
        | 
		 43  | 
    
      | 
		 106
      
        | 
		 என்னலும் நாரதன் எழில்மலர்த் 
		தாளிணை சென்னிமேற் சேர்த்தியே சிறியரேம் உய்யவே உன்னியீண் டேகிநீர் 
		உணர்த்துமெய்ந் நெறியினை இன்னதென் றுணர்கிலேம் எமக்கருள் புரிதிரால். 
       
        | 
		 44  | 
    
      | 
		 107
      
        | 
		 என்பவர்க் கருள்புரிந் 
		தெண்ணிலார் வத்தொடு நன்பொருட் காட்சியை நானுமக் குதவியே வன்புலத் 
		தாறுபோய் மதிமருண் டின்பமுந் துன்புமுற் றுழல்பவந் தொலைவுசெய் 
		திடுவனால். 
       
        | 
		 45  | 
    
      | 
		 108
      
        | 
		 ஆதியார் தாளிணை அருளொடே 
		வழிபடும் நீதியாம் நீரினார் நிலைமையாய் நின்றிடும் பாதநான் 
		கவர்பெறும் பதமுநான் கதனுளே ஓதியார் பெறுவதோர் உயர்பெருங் கதியதே. 
       
        | 
		 46  | 
    
      | 
		 109
      
        | 
		 முத்தியென் றிடுவதே மொழிவதோர் 
		நாமமாம் அத்திறங் கடவுளர்க் காயினுந் தெரிவதோ நித்தன்அன் புறுவதோர் 
		நெறியராய் இருவினை ஒத்தபண் போர்களால் உணரலாம் அல்லதே. 
       
        | 
		 47  | 
    
      | 
		 110
      
        | 
		 அந்நிலைக் கண்ணுளார் ஆதியார் 
		தாளடைந் தின்னலுக் கிடையதாம் இப்பெரும் பிறவியுட் பின்னருற் 
		றிடுகிலர் பேசுதற் கரியதோர் நன்னலத் தொடுகெழீஇ நாளுமின் புறுவரே. 
       
        | 
		 48  | 
    
      | 
		 111
      
        | 
		 ஆதலால் நீவிரும் அந்நெறிப் 
		பாலுறீஇ மேதைசால் யோகினால் வீடுசே ருதிரெனா ஆதியாம் இறைவனூல் 
		அறையுமுண் மைகளெலாம் நாதனார் அருளினால் நாரத னுரைசெய்தான். 
       
        | 
		 49  | 
    
      | 
		 112
      
        | 
		 அன்றுநா ரதமுனி அவரெலாம் 
		அவ்வழி  நின்றிடும் படிநிறீஇ நெறிகொள்வா னுலகமேல் சென்றனன் பின்னரச் 
		சிறுவரா யிரவரும் ஒன்றுசிந் தனையினால் உயர்தவத் தொழுகினார். 
       
        | 
		 50  | 
    
      | 
		 113
      
        | 
		 உயர்தவக் கிழமையில் ஒழுகியே 
		யுற்றுளோர் மயல்தொலைத் தருள்சிவன் மன்னுபே ரருளினால் வியனெறிப் 
		பாலதாம் வீடுபே றெய்தினார் அயன்மகற் கினிமைகூர் ஆயிரங் குமரரும். 
         (43. மூதாதைபோல் - பிரமனான பாட்டனைப்போல்.  46. பாதம் நான்கு - 
		சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன;  பதம் நான்கு - சாலோகம், சாமீபம், 
		சாரூபம், சாயுச்சியம்;  ஓதியார் - ஞானமுடையவர். 47. கடவுளர் - தேவர்.)
      
        | 
		 51  | 
    
      | 
		 114
      
        | 
		 உங்ஙனம் நாரதன் ஓதிய 
		துணர்வுறா இங்ஙனம் வீடுபே றெய்தலுஞ் சிறுவர்கள் எங்ஙனம் போயினார் 
		இன்னும்வந் திலரெனா அங்ஙனஞ் சிறுவிதி அயருவான் ஆயினான். 
       
        | 
		 52  | 
    
      | 
		 115
      
        | 
		 வேறு போதத் துணர்வால் 
		அவர்க்கண்ணுறும் போழ்து தன்னின் மேதக்க மைந்தர் தமைநாரதன் மேவி மேலாம் 
		ஓதித் திறமுள்ளன கூற உணர்ந்து நோற்றுத் தீதற்று வீடு புகுதன்மை தெரிந்த 
		தன்றே. 
       
        | 
		 53  | 
    
      | 
		 116
      
        | 
		 தெரிகின்ற வேலைக் 
		கிளர்கின்றது சீற்றம் உள்ளம் பரிகின்ற தாவி பதைக்கின்றது பையுள் மாலை 
		விரிகின்ற தம்மா வியர்க்கின்றது மேனி விண்ணின் றிரிகின் றதுகோள் 
		இரங்குற்றது ஞால மெல்லாம். 
       
        | 
		 54  | 
    
      | 
		 117
      
        | 
		 தன்பா லகர்தஞ் செயல்கண்டு 
		தளர்ந்து சோரும் வன்பா லினனா கியதக்கன் வரத்தை வேண்டும் என்பாலர் 
		என்பால் இலதாக்கினன் எண்ண மிக்கு நன்பா லுலகத்து ழல்வானினி நாளு 
		மென்றான். 
       
        | 
		 55  | 
    
      | 
		 118
      
        | 
		 மேனா ரதன்செய் புணர்ப்புன்னி 
		வெகுண்டு தக்கன் நோனாது சாபம் நுவன்றே நனிநோற்க மைந்தர் ஆனாரை 
		நல்கேன் மகப்பெற்ற தமையு மென்னா மானார் தமையே புரியத்தன் மனம்வ 
		லித்தான். 
       
        | 
		 56  | 
    
      | 
		 119
      
        | 
		 வேறு இருபதின் மேலும் 
		மூவர் ஏந்திழை மாரை நல்கிப் பெருமை கொள்தக்கன் தன்மன் பிருகுவே மரீசி 
		யென்போன் கருணை கொள்பு லத்தியன் அங்கிராப் புலகன் வசிட்டன் திரிவில் 
		அத்திரி தீவேள்வி சீர்ப்பி தராவுக் கீந்தான். 
       
        | 
		 571  | 
    
      | 
		 120
      
        | 
		 துய்யதோர் சுபுத்தி புத்தி 
		சுரசையே திருதி துட்டை செய்யநற் கிரியை கீர்த்தி சிரத்தையோ டிலச்சை மேதா 
		மைவிழிக் கத்தி சாந்தை வபுவைமுன் தருமன் வேட்டுப் பொய்தவிர் இருபா னேழு 
		புதல்வரை அளித்தான் மன்னோ. 
       
        | 
		 58  | 
    
      | 
		 121
      
        | 
		 கேதமில் பிருகு என்பான் 
		கியாதியைக் கொண்டு புல்லி ஏதமில் விதாதாத் தாதா என்றிரு சிறாரை ஈன்று 
		சீதள வனசங் கொண்ட செந்திரு வையுமுன் தந்து மாதவன் தனக்கு நல்கி மாதவத் 
		திருந்¢தான் மாதோ. 
         (54. பையுள்மாலை - துன்பவரிசை, கோள் - நவக்கிரகம், இரிதல் - விலகி 
		ஓடுதல்.  56. மானார்தமை - பெண்மக்களை.  57. தன்மன் - தருமன், தீ - 
		அக்கினிதேவன், வேள்வி - பலி;  இ·து இங்குக் கிரது என்பவரை குறிக்கும் 
		போலும்.  59. செந்திரு - இலக்குமி, மாதவன் - திருமால், மாதவம் - சிறந்த 
		தவம்.)
      
        | 
		 59  | 
    
      | 
		 122
      
        | 
		 தாரணி புகழ்ம ரீசி சம்பூதி 
		தன்னை வேட்டாங் கீரிரு பிணாக்கள் ஈந்தான் இவர்வழிப் பிறந்தார் பல்லோர் 
		போரியல் புலத்தை வென்ற புலத்திய முனிவன் என்பான் நாரிசன் னதியை வேட்டு 
		நன்மகார் பலரைத் தந்தான். 
       
        | 
		 60  | 
    
      | 
		 123
      
        | 
		 அங்கிரா மிருதி என்னும் ஆயிழை 
		தனைம ணந்து பங்கமில் அங்கி தீரன் பரதனாம் மகாரைப் பெற்று மங்கையர் 
		நால்வர் தம்மை மகிழ்ந்துடன் அளித்தான் அன்னார் தங்குடிப் பிறந்த மேலைத் 
		தவத்தரும் அளப்பி லோரால். 
       
        | 
		 61  | 
    
      | 
		 124
      
        | 
		 பெருமைகொள் புலகன் என்போன் 
		பிருதியைக் கொண்டு தத்தாத் திரிதனைப் பயந்தான் அன்னோன் சீர்வழிக் 
		கும்பன் போந்தான் ஒருமைசேர் வசிட்டன் என்போன் ஊற்சையை மணஞ்செய் தாங்கோர் 
		தெரிவையை நல்கி மைந்தர் எழுவரைச் சிறப்பில் தந்தான். 
       
        | 
		 62  | 
    
      | 
		 125
      
        | 
		 அத்திரி என்னு மேலோன் அனசூயை 
		தன்னை வேட்டுச் சத்தி நேத்திரனே திங்கள் சனிசங்க தானன் என்னும் 
		புத்திரர் தம்மைத் தந்தான் பொங்குதீச் சுவாவை வேட்டு மெய்த்திறல் படைத்த 
		மைந்தர் மூவரை விரைவொ டீந்தான். 
       
        | 
		 63  | 
    
      | 
		 126
      
        | 
		 கவிபுகழ் கிரது வானோன் கமைதனை 
		மணத்திற் கூடி உவகையின் மூன்று பாலர் உதவினன் பிதரா என்போன் கவதையென் 
		றிசைக்க நின்ற துடியிடை தன்னை வேட்டுத் தவலருஞ் சிறப்பின் மேனை தரணிமங் 
		கையரைத் தந்தான். 
       
        | 
		 64  | 
    
      | 
		 127
      
        | 
		 அந்தநன் மேனை தன்னை ஆர்வமோ 
		டிமவான் கொண்டான் முந்துறு தரணி தன்னை முறையினால் மேரு வேட்டு மந்தர 
		கிரியை நல்க மற்றது நோற்று முக்கண் எந்தைதன் னிடத்தெஞ் ஞான்றும் 
		இருந்திடப் பெற்ற தன்றே. 
       
        | 
		 65  | 
    
      | 
		 128
      
        | 
		 விண்ணுயர் மேருப் பின்னர் 
		வேலையென் பவனை நல்கித் தண்ணுறு கடற்கு நல்கச் சரவணி என்ன ஆங்கோர் 
		பெண்ணினை அனையன் பெற்றுப் பெரும்புகழப் பிராசி னப்பேர் அண்ணலுக் குதவ 
		அன்னான் ஈயிரு மகாரைத் தந்தான். 66 (64. கவி - கவிந்த, தரணி - பூமி. 65. 
		இமவான் - மலையரசன், மேரு - மேருமலை.) 
       
        | 
		 66  |