2814
|
மலர்தலை யுலகிற் புன்னெறிச்
சமயர் வாய்ப்பிதற் றுரை
மனங் கொளாது, பலர்கொள்பூ தியுங்கண் மணியுமைந்
தெழுத்தும்பற்றியா
னுய்யுமா றருள்வாய்,
வலனுடைத் திகிரிப் படையினான்
வணங்க வரமுகி லெனவுள மதித்துக், கலபமா மயில்கள் களிசிறந்தாடுங்
கற்குடி மாமலைப் பரனே.
|
1 |
2815
|
பண்வழுக் குற்ற வீர்ஞ்சொலர்
மையற் பரப்பினை நயந்துபா
ராட்டிப், புண்வழுக் குற்ற மெய்யினைச் சுமந்தேன்
பொய்யினைப் போக்குநா ளுளதோ,
வெண்வழுக் குறுவா னவர்கள்பொன் மோலியிணைந்
திணைந் துரிஞவீழ் துகளாற், கண்வழுக் குறுவின் மேருவேபோலுங்
கற்குடி மாமலைப் பரனே.
|
2 |
2816
|
இட்டமா விரையாக் கலிபிழைத்
தாரென் றிருங்கிளைதந்தை
தாய் மனையாள், பட்டபால் வாய்ச்சே யொறுத்தகோட்
புலியார்பத்திபெற்
றுய்யுநா ளுளதோ,
வட்டமாய் நடுப்பொ் மானந்தாங்குதலால்
வரத்தகா தவருங்கண் டனாதிக், கட்டறுத் துய்ய வருட்குறியாகுங்
கற்குடி மாமலைப்பரனே
|
3 |
2817
|
நளிமனம் வாக்குக் காயமூன்
றாலு நனிமுயன் றவர்கொணின்
னருளை, யொளிர்பசும் பொன்செய் கொழுக்கொடு
வரகுக்குழுதயான் கொள்வது
முளதோ,
குளிறுமா மேகந் தவழ்ந்துறைபிலிறறுங்
குளிர்க்குடைந் தாலென வுடலிற், களிவரக் காந்தட் டழல்வளர்த் தணைக்குங்
கற்குடி மாமலைப்பரனே
|
4 |
2818
|
மங்கைமூக் கரிந்த தொன்றுமோ
போது மாமலர் தொட்டது
கரமென், றங்கையுந் துணித்த வன்பரோ வடியா
ரஃதிலா வெமர்களோ வடியார்,
பங்கமி றவத்தா னினதுசா ரூபம்
பயனுறப் பெற்றென வானக், கங்கையு மதியு முடிதரித் தோங்குங்
கற்குடி மாமலைப்பரனே
|
5 |
2819
|
புண்ணிய வடிவாம் வேடர்தம்
பிரானார் பொன்னடித்
தாமரைச் செருப்பு, மண்ணிடைத் தோய வேட்டஞ்செய் நாளவ்
வழிப்புலாய்க் கிடப்பினு
முய்வே,
னெண்ணுவ தினியா திமையவருலக
மிறுதிநா ளழிவது நோக்கிக், கண்ணகன் குடுமி மதியினா னகைக்குங்
கற்குடி மாமலைப்பரனே
|
6 |
2820
|
மறைநெறி வழாத புகலிகா வலனார்
வளங்கொளோத் தூரிலாண் பனைகாய், நிறைதர வருள்கால் யானுமோர் பனையாய்
நிற்பினு முய்வனென் செய்வே,
னிறைவநின் றனக்குப் போர்வையுமுடையு
மீந்தவென் றாதரித் தாற்போற், கறையடி புலிகள் பயிலவீற்றிருக்குங்
கற்குடி மாமலைப்பரனே
|
7 |
2821
|
மண்பொழி தானக் களிற்றொடு
பாகர் மடிந்தது
போதுமோவெனையும், புண்பொழிவாளாற்கொல்லுமென் றவர்
வாழ் புரங்குடியிருப்பினு
முய்வே, னொண்பொழி லேத்தச் சிவானந்த வெள்ள
மூற்றெழத் தவஞ்செயு மடியார், கண்பொழி நீரோ டருவிநீர் பாயுங்
கற்குடி மாமலைப்பரனே
|
8 |
2822
|
யாதனின் யாத னினீங்கியா னோத
லதனின தனினிலனெனமுன், னோதிய பெரியோர் வார்த்தையும் பேணா
துழல்கொடியேற்கருள் குவையோ, மேதகு புழுகு நானமு முகிலும்
விரைதருமாரமு நூற்றுக்,
காதநாற் றிசையுங் கமழ்தருந் தெய்வக்
கற்குடி மாமலைப் பரனே.
|
9 |
2823
|
சாவிபோ மற்றைச் சமயங்கள்
புக்குத் தவறுறேல் சைவ
சித்தாந்த, மோவுறே லெனமுன் வாய்மலர்ந் தவர்த
முரைவழி
நிற்குமாறருள்வாய், பாவிய பாகற் கோட்டினிற் பற்றிப் படர்கறிக்
கொடியினைவணக்கிக், காவளர் சார லருவிகல் லெனப்பாய்
கற்குடி மாமலைப்பரனே.
|
10 |
2824
|
மெல்வினை ஞானம் வல்வினை
ஞான மிளிரிவை பத்திவை ராக, நல்வினை யென்ப ரவற்றிலோர் வினையு
நண்ணிலேன் றீவினை யன்றிச், செல்வழி யருள்வா யகத்திரு டனைநின்
றிருவருளோட்டல்போற் புறத்துக், கல்லரு மிருளை யராமணி யோட்டுங்
கற்குடி மாமலைப் பரனே.
|
11 |
2825
|
மெய்யெலா முரோமஞ்
சிலிர்ப்பவென் புருக
விழிகணீர் சொரியவன் புருவா, யையநின் புகழே பேசிடார் நாவா
யளக்கரின் மிதக்குநாவாயே,
தெய்வமங் கையர்கள் சுனைகுடைந் தேறித்
திருமகப்பெறுவரம் வேண்டிக், கைகளேந் துதல்போற் காந்தள்கண்
மலருங்கற்குடி மாமலைப் பரனே.
|
12 |
2826
|
செயிரறு நினது திருவருள்
காட்டுந் திறத்தினாற்
காண்பதை யன்றிப், பயிறரு கல்வி கேள்வியா னின்னைப்
பளகறக் காணவும் படுமோ,
வயிரமா மலைச்செம் மணிக்குவால் பச்சை
மணிக்குவா லொடுபிறங் கிடுதல், கயிலைநீ யுமையோ டிருப்பது தெரிக்குங்
கற்குடி மாமலைப் பரனே.
|
13 |
2827
|
ஏந்தறற் செறுவிற் செந்நெலுட்
பதடி யென்னவிப் புவியிடைப்
பிறந்த, மாந்தருட் பதடி யானயான் மூல மலத்தொட
ரறுத்துய்வ தென்றோ, பாந்தளின் மிசைக்கண் படுக்குமா யவன்போற்
பரப்பிய தழலெனப் பூத்த, காந்தளி னருகு யானைகண் படுக்குங்
கற்குடி மாமலைப் பரனே.
|
14 |
2828
|
கல்லினால் வல்லப் பலகையால்
வாளாற் கமரினாற்
சாணையாலன்பர், புல்லுமும் மலமும் போக்கிநின் னடிக்கண்
புகுந்தனர்யான்புகு
மாறென்,
வெல்லும்வான் சைவம் விட்டுப்புன் சமயம்
விரும்புவார் போற்பல கந்தங், கல்லுவார் மணிக ளகழ்ந்தெறிந்தெடுக்குங்
கற்குடி மாமலைப் பரனே.
|
15 |
2829
|
வேணவா வெகுளி முதற்களை கட்டு
வேரற மனச்செயி லன்பாம், பேணறல் பாய்த்திப் பத்தியாம் பைங்கூழ்
பிறங்கயான் வளர்த்துய்வ
தென்றோ,
மாணுறு வட்டப் பளிக்கறை மதிபோல்
வயங்கலா லுடுக்கண் மதனைக், காணவந் தாற்போல் வேரன்முத் திமைக்குங்
கற்குடி மாமலைப் பரனே.
|
16 |
2830
|
சூதினாற் பொருள்செய் துன்னடி
யார்க்கே துறுத்த மெய்
யன்பரோ மூர்க்கர், வாதினாற் பொருள்செய் துண்டுடுத் துவக்கு
மறத்தொழி லெமர்களோ மூர்க்கர், சீதளக் கதிரோ னெனவுல கேத்தத்தினமும்
வெண் மதிமலர் ததைந்த, காதநீள் சுனையின் மூழ்கிநின்றேறுங்
கற்குடி மாமலைப் பரனே.
|
17 |
2831
|
துன்றிய பூத விருளொரு
பொருளுந் தோன்றக்காட்
டாதுபோ லிரண்டு, ளொன்றினை யேனுங் காட்டிடா வனாதி
யுறுமலமொழித்துய்வ தென்றோ,
நன்றுநின் னுருவங் கண்டுகண்
புனல்பெய்நற்றவர்க் கருகுநி லாக்கல், கன்றலின் மதியைக்
கண்டுதண்புனல்பெய் கற்குடி
மாமலைப் பரனே.
|
18 |
2832
|
தரணியான் மாக்க ளுடற்குரி
மைகளிற் றலைக்குமே லிலாதது
போல, வுரவுசெய் நின்ற னருட்குமே லிலையென்
றுண்மையோ ரறிவர்யான் வலனோ,
பொருள்செய்நம் மகளார் கதுப்பினுக் கிணையாப்
புகறகா தெனக்கறுத் துவந்த, கருளினைத் துரந்தெக்காலமும் பகல்செய்
கற்குடி மாமலைப் பரனே.
|
19 |
2833
|
சேரர்நின் கயிலைக்
கெழுந்தநாட் பரிக்குந்
திருப்பரி யுருக்கொண்டே னெனினு, மோருமென் கிளையு முய்யுமெற் குறுமோ
வுதிக்குமாற் பரிக்குமஃ துறுமோ, பாரவில் வயிரப் படையினாற் சுமந்த
பகையற வடுத்துற வுறல்போற், காரணைந் திரவி வெப்பற வுறைபெய்
கற்குடி மாமலைப் பரனே.
|
20 |
2834
|
அன்றுநன் புகலூர் மணிமுதற்
றோற்றி யரசினைச்
சோதனைசெய்த, தென்றுமெம் போல்வா ருய்பொருட் டன்றோ
விதனையுமெண்ணிலன் சிறியே,
னொன்றுமும் முனிவர் தமிழ்வளர் வரையென்
றொருமுனித் தமிழ்வரைத் தென்றற், கன்றுபன் மலர்வா சனையொடுற் றுலவுங்
கற்குடி மாமலைப் பரனே.
|
21 |
2835
|
பிறைவடங் கிடந்த பொம்மல்வெம்
முலையார் பெருங்களி
மயக்கிடை வீழ்ந்து, நிறைபொறி யிலானை யாண்டதென் னென்று
நினைவெறுப் பாரிலை யருள்வா,
யிறைபிர ணவகுஞ் சரமுமை பிடியீ
ரெச்சமும் யானையா னைக்கோ, கறையடி வதியு மிடமெனக்கரிசூழ்
கற்குடி மாமலைப் பரனே.
|
22 |
2836
|
வறியவ ரகட்டும் பசித்தழ லவிய
வல்சியீந் திடுதலோ மாயாக், குறியுடைச் செல்வர்க் கீதலோ வறமக்
கொள்கைதேர்ந் தெனைப்புரந்
தருள்வாய்,
சிறியபுன்சுரர்நன் றிலரென நின்னைத்
தேடுவார் போற்பல்வா னரங்கள், கறிகறித் துமிழ்ந்து குளிர்சுனை நேடுங்
கற்குடி மாமலைப் பரனே.
|
23 |
2837
|
பொற்புறு சபையின் மாதரார்
நடனம் புரிந்தியான்
காண்பதை யொழித்துச், சிற்பர சபையி னின்றிரு நடனந்
தரிசிக்கப் பெறுவதெந்நாளோ,
மற்பொரு முசுக்கள் காந்தளைப் பாந்தண்
மணிப்பட மெனப்பயந் துந்திக், கற்பக தருவின் கழுத்தொடி தரப்பாய்
கற்குடி மாமலைப் பரனே.
|
24 |
2838
|
தட்பமே மிகுந்த சாகரம்
புனிதத் தடநதிப் புனலலா
லெவரும், பெட்புறா திழிக்கு மங்கணப் புனலும்
பெருகிடின் வெறுப்பது
முளதோ, கொட்புறு மனத்தேன் பிதற்றுரை யுங்கொள்
குகைதொறு முறைதவர்க் குறுவெங், கட்பணி யுமிழ்ந்த மணிவிளக் கெடுக்குங்
கற்குடி மாமலைப் பரனே.
|
25 |
2839
|
மைக்கணார் முதலா மாயகா
ரியங்கண் மயலென
வெறுத்தெனதுள்ள, மெய்க்கணின் னடியார் பாதமே பற்றி
விடாவிருப்
புடனுறவருள்வாய்,
மொய்க்குமீ னுவரி புகுந்தறன் மடுத்து
முழங்கிவந்தணைதரு முகிலைக், கைக்களி றோடிப் பிடியென வணைக்குங்
கற்குடி மாமலைப் பரனே.
|
26 |
2840
|
வேடமே பொருளா வுயிரளித் தவரை
மெய்ப்பொரு ளென்பருய் திறத்தோர், மாடமின் மக்கண் மெய்ப்பொரு ளென்று
மயங்முவேற் குய்திற மெவனோ,
பேடைமா மயின்மீ நோக்கியே யகவப்
பெருமகண் மகிழ்நனூர் தியெனக், காடுடைத் தருக்கோ னூர்தியையுய்க்குங்
கற்குடி மாமலைப் பரனே.
|
27 |
2841
|
பனிமதி நுதலெம் பிராட்டிமேற்
கடைக்கண் பாய்த்திநீ
யாடுமா னந்தத், தனிநடங் காண வருள்வையேன் மற்றோர்
தவமுமோர் பேறும்வேண் டுவனோ,
நனியரம் பையர்தங் குழைகள்கொண்டெறிய
நறுவிளக் கோட்டுவா னரமக், கனிகள்கைப் பறித்து மீச்செல வெறியுங்
கற்குடி மாமலைப் பரனே.
|
28 |
2842
|
வளிமுதன் மூன்றும் பயிறர
விடக்கால் வகுத்தவிப்
புழுக்குடி லந்தோ, விளிவுறக் குலையு முன்னராண் டிடினுண்
டெனக்கினியெப்பிறப் புறுமோ,
துளிமுகிற் கூந்தற் சசிபுல வியினாற்
றுரந்தமுத்தாரமா நடஞ்செய், களிமயிற் கழுத்திற் பரிசிலின் வீழுங்
கற்குடி மாமலைப் பரனே.
|
29 |
2843
|
மன்னெகப் புளக முடலெலாம்
புதைப்ப மழைபொழி தருங்கணி
னடியா, ரினநகத் திரிவே னாணஞ்சற் றில்லே
னென்செய்கேனருள்செயூ
டலினாற், சினமதக் களிறு தொடர்ந்திட
வோடுஞ்சிறுபிடி குறமட மாதர், கனதனத் திடியுண் டஞ்சிமீண் டணைக்குங்
கற்குடி மாமலைப் பரனே.
|
30 |
2844
|
தடித்தெழு மன்பே யுருவமாம்
வேடர் தம்பிரா னோவென்றி
முன்னீ, பொடித்தமுப் புரத்தும் வலியதோ வெய்ய
பொய்யினேன் றீவினை
யுரையாய்,
கொடிச்சிய ரேன லிடித்திடு முலக்கைக்
கொம்புபட் டுடைந்திழி பாகற், கடிச்செழு நறவவ் வுரற்குழி நிறைக்குங்
கற்குடி மாமலைப் பரனே.
|
31 |
2845
|
தேயுநுண் மருங்கு லிறுத்தெழு
முலையார் சீறடிச்
சிலம்பொலி நேடி, யாயுமென் செவிநின் குஞ்சித பாதத்
தணிசிலம் பொலியறிந் திடுமோ,
பாயுமம் புலியின் குழவியும் வானப்
பரப்பிடை யுதித்திரு ளனைத்துங், காயுமம் புலியின் குழவியுந் தவழுங்
கற்குடி மாமலைப் பரனே.
|
32 |
2846
|
பந்தமார் கிளைக ளறத்துணித்
துரிமைப் பண்புடை
மனையைநிற் களித்த, வெந்தையா ரவரோ பிறர்மனை நயக்கும்
யாங்களோ நின்னடிக் கன்பர்,
முந்துமா தவத்து முனிவரே போல
முடிச்சிகை வளர்த்துவன் கிராதர், கந்தமே யுண்டு கலையத ளுடுக்குங்
கற்குடி மாமலைப் பரனே.
|
33 |
2847
|
நண்ணிமுன் னாலங் காட்டிற்குத்
தலையா னடந்திடு மம்மையோ
நினது, புண்ணியத் தலத்திற் காலினா னடந்தும்
புகாப்பெரும் படிறனோ பேயார்,
விண்ணியை யமர ரவியுணா விரும்பி
விரித்திரு கைகளு மேந்தக், கண்ணிய யாக முறுவர்செய் சாரற்
கற்குடி மாமலைப் பரனே.
|
34 |
2848
|
மதித்துனை யுள்ளச் சினகரத்
திருத்தி வாழ்ந்தவர்
வாயிலா ரல்லர், துதித்துனைப் புகழாக் கொடியவெம் மனோரே
துயரும்வா யிலாரிஃ துண்மை, யுதித்தசெங் கதிர்மீச் செல்பொழு தேத்த
வுறுந்திசைப் பாலரோ டுற்ற, கதித்தகூற் றினைமுத் திட்டிட வுயர்ந்த
கற்குடி மாமலைப் பரனே.
|
35 |
2849
|
ஏத்தியன் புறுநின் னடியரை
நின்னை யிகழ்ந்துரை யாடி
யுமத்தி, நாத்தியென் றுரைத்து நான்பர மென்று
நந்துவார் மாட்டெனைக்
கூட்டேல்,
பூத்திரள் சிந்திச் சூழ்பவர் பாவம்
போதல்போற் கயக்கருந் தானங், காத்திர ளுடுத்த சாரனின் றோடுங்
கற்குடி மாமலைப் பரனே.
|
36 |
2850
|
பொருந்திய சாந்தம் பொற்பணி
முனிந்து புண்ணிய நீறுகண்
டிகையே, தருந்திரு வெனவுட் கொள்ளுநா ளென்றோ
சாரலிற் குடாவடி தவழ்த,
லருந்தவ ரியற்றும் பெருமகஞ் சிதைப்பா
னடுத்தவர் சாபத்திற் கஞ்சிக், கருந்தயித் தியர்க ளிரிவது கடுக்குங்
கற்குடி மாமலைப் பரனே.
|
37 |
2851
|
அருந்தலை விரும்பி யணைத்தலைக்
காண லவாவலை யுயிர்த்தலைக்
கேட்க, வருந்தலை யெல்லா நின்னடிக் காக்கி
வருந்தலை மையுமெனக் குளதோ,
முருந்தலை சாரற் றேக்கடிப் படுத்த
மொய்ம்மயி ரெண்கின்மேற் கிராதர், கருந்தலை வைத்து முடங்கத ளுறங்குங்
கற்குடி மாமலைப் பரனே.
|
38 |
2852
|
மன்னுசெங் கதிரோ னன்றியு
மவன்கல் வாய்த்தழ றோன்றுமோ
வதுபோற், பன்னுநின் னருளை யன்றியெவ் வுயிரும்
பளகறு முத்தியிற் புகுமோ,
மின்னிடை யெயிற்றி மாதர்தண் சுனைத்தம்
விளங்குருக் கண்டறற் குடிகொள், கன்னிய ரெனக்கை கூப்பிநின் றழைக்குங்
கற்குடி மாமலைப் பரனே.
|
39 |
2853
|
சந்திரற் றரித்த நின்றிரு
முடியிற் றழலா வையுமுடன்
வைத்தாய், வந்தது புகழே யன்பரோ டெனைநீ
வைப்பினும் வருவதுபுகழே,
யிந்திரன் மயங்க நீன்மணிச் சுடர்மே
லெழீஇயொரு முனிவனே போல்வெண், கந்தடு களிற்றைக் கருங்களி றாக்குங்
கற்குடி மாமலைப் பரனே.
|
40 |
2854
|
தெளியுநின் கருணை மரகதக்
கொழுந்தே
சிவணுமென்பசியபுனேடிக், குளிர்பய னுதவுங் கோவினை யருத்தேன்
கோதினையருத்துவேற் குளதோ,
வொளிசெய்பொன் னுலகிற் கொடுமுடி யுரிஞ
வுதிரும்பொற் றுகளிடை மூழ்கிக், களிறுமா தங்கப் பெயர்ப்பொருள்
விளக்குங் கற்குடி மாமலைப்
பரனே.
|
41 |
2855
|
தேகமே நானென் றுனியிரு
சார்புந் திடமுறக்
கொண்டவத் தைகளுள், ளேகியே யுழன்று திரியுநா ளொழிந்துன்
னிணையடிவணங்குநா ளுளதோ,
போகுயர் குடுமிக் கருகிருந் தெயினர்
பொன்னுல கத்தவ ரிசைக்குங், காகுளி துத்தந் தாரங்கேட் டுவக்குங் கற்குடி
மாமலைப் பரனே.
|
42 |
2856
|
பணியும்வெள் ளெலும்பு
நரம்பும்பூண் டதற்குன்
பாலெவர் வினாவினர் தகாதென், றணிதர விடையார்க் கருளினை யெனையுமாளினத்
தன்மையாய் விடுமால், பிணிமுகச் சாயற் கொடிச்சியர்வதுவைப்
பெருநல நுகரமங் கலநாள், கணியெனக் கணிக ளேடவிழ்த் துரைக்குங்
கற்குடி மாமலைப் பரனே.
|
43 |
2857
|
மல்லலம் புவியிற் கூற்றினைக்
கடத்தல் வயங்குநின்
றிருவடித் துணையே, புல்லிய நெறியார்க் கன்றிமற் றல்லாப்
புல்லிய நெறியினர்க் காமோ, வல்லியங் குழலா ருறுவெறி யாட்டி
லணிகெழுமுருகியந் துவைக்கக், கல்லெனு மொலியே செல்லொலி மழுக்குங்
கற்குடி மாமலைப் பரனே.
|
44 |
2858
|
பஃறலைப்பாய லான்முதற் றேவர்
பகுத்தொதுக் கிடநந்தியோச்சுஞ், சுஃறொலிச் சூரல் கண்டுகை யேந்தித்
துதிக்குநின் றிருமுனென்
றுறுவேன்,
சிஃறொழில் களுஞ்செய் யாதுசெய் நின்னைத்
தெளிதவர் புரிமகப் புகைபாற், கஃறெனுங் கானிற் குயினொடு தவழுங்
கற்குடி மாமலைப் பரனே.
|
45 |
2859
|
மையினுங் கழிந்த கருங்குழன்
மடவார் மயக்கினை நயந்து
மட் சுமையா, மெய்யினுட் புகுந்து பொய்யினுட் சுழலும்
வீணனுக்கெங்ஙன மருள்வாய்,
வையினுட் பழகு நெடுங்கணைக் கிராதர்
வயங்கெழு தொண்டகந் துவைப்பக், கையினுட் குணிலென் றொளிர்பிறையெடுக்குங்
கற்குடி மாமலைப் பரனே.
|
46 |
2860
|
கொடும்பசித் தழலு ணனிமுழு
கயும்பொற்
குடமெடுத்தாட்டினா ரன்ப, ரடும்பலூ ணுண்டுங் கைதொழ வருந்து
மடியனுக்கெங்ஙன மருள்வாய்,
விடுஞ்சுடர்க் கற்ப மாமலர் பறித்து
மேலவர்கண்வழி விரும்பிக், கடும்புட னிறங்க வேரல்க ளோங்குங்
கற்குடி மாமலைப் பரனே.
|
47 |
2861
|
மறையவர் திருவை வைதிகர்
துணையை வருபர சமயகோ
ளரியைக், குறைவிலா வமுதைக் காழியுண் ஞானக்
கொழுந்தினைத் துதிக்குமா
றருள்வாய்,
நறைகம ழலங்கற் கதுப்பரம் பையர்க
ணன்குமை திலகந்தீட் டுதற்குக், கறைதபு சுனைக ளாடியிற் பொலியுங்
கற்குடி மாமலைப் பரனே.
|
48 |
2862
|
மைக்கருங் கடலிற் கன்மிசை
மிதந்து மாறினின் னருட்கட
லழுந்து, மெய்க்கணெம் பெருமா னாவினுக் கரசை
விளம்பிலேனெங்ஙன முய்வே,
னைக்கரு நெடுங்க ணாய்ச்சிய ருறிக்க
ணளையெடுத் தவனென நிலவைக், கைக்கருங் களிறு கவளமென் றெடுக்குங்
கற்குடி மாமலைப் பரனே.
|
49 |
2863
|
நின்னுடைத் தோழப் பெருந்தகைப்
பிரானை நிகரறுமுதுகிரிச் செம்பொன், மன்னுமாற் றிட்டுக் குளத்தினி
லெடுத்தவள்ளலைப் பரசுமா றருள்வாய், துன்னுசெந் தினையின்
குரல்கவர்குருகின்
றொகுதியைக் கவண்கயிற் றெயினக், கன்னியர் மணிவைத் தெறிந்தெறிந் தோட்டுங்
கற்குடி மாமலைப் பரனே.
|
50 |
2864
|
துதிகரைந் துனக்குன் னடியருக்
கன்பு துறுத்தலே
முத்தியென் றெண்ணேன், மதிசெயு நானே பரமெனு மாயா
வாதியு மாயின னழகே, திதியவன் பிரம னின்னமுந் தேடத்
திகழுநின்னுருவென வோங்கிக், கதிரொளி மழுக்குங் கோபுரம் பலசூழ் கற்குடி
மாமலைப் பரனே.
|
51 |
2865
|
ஆணவ மகன்ற வறிவன்றி யுருவி
லையநீ பல்லுருக் கொண்டு, பேணுபன் னாமம் புனைந்துபல் லிடத்தும்
பிறங்குத லுயிர்கட்கென்
றறியேன்,
மாணநின் னடியு முடியுங்காண் கினுமம்
மாலயனிவற்றடி முடியுங், காணரி தெனச்செய் பொன்மதில் பலசூழ்
கற்குடி மாமலைப் பரனே.
|
52 |
2866
|
தினகரன் பூத விருள்விடக்
கிரணஞ் செலுத்தல்போற்
சிறியன்மும் மலமா, மினவிருள் விடநீ யருள்செலுத் திடினுண்டின்றெனின்
விடலென்று மின்றாந்,
தனபதி நகரி லதிகமீ தென்னத்
தவழ்சுடர் மணிபல பதித்த, கனகமா ளிகைகள் பலவுடுத் தோங்குங் கற்குடி
மாமலைப் பரனே.
|
53 |
2867
|
நவையறு மாசி னாமமப் பூதி
நாயனார் தாஞ்செயு மறங்க,
ளவையினன் கெழுதி யுய்ந்தனர் யானின்
றளவுஞ்சொல் லியுமறியேனாற், சுவைதரும் பல்பூக் கறித்துவாய் குதட்டித்
துணர்த்தபைஞ்சூதமா நீழற், கவையடி மேதி துயில்வய லுடுத்த
கற்குடி மாமலைப் பரனே.
|
54 |
2869
|
தாலிகொண் டுறுநெற்
கொளச்செலும் பொழுது
தக்ககுங் கிலியங்கொள் புனிதர்க், கேலுமன் பனந்தங் கோடிகூற்
றொருகூறெய்தினு மையமின்
றுய்வேன், மாலிருங் கடந்த களிற்றின மறைய
வளர்கதிர்க் குலைச்செழுஞ் சாலிக், கால்கள்பாய் பழனம் பலவுடுத் தோங்குங்
கற்குடி மாமலைப் பரனே.
|
55 |
2869
|
தூரமாஞ் செல்வச் செருக்கர்பி
னடந்து தொடர்ந்துளந்
திகைப்பதை யொழிந்து, சீரிய நின்மெய் யன்பரைத் தொடர்ந்து
திகைப்பறச் செல்லுநா ளுளதோ, வாரிசத் தடத்தை யுழக்கிய பகட்டு
வாளைபாய்ந் துறுகருக் கலங்கக், காரினைக் கலக்குங் கணியுடுத் தோங்குங்
கற்குடி மாமலைப் பரனே.
|
56 |
2870
|
கூற்றினை யுதைத்துங் காமனை
விழித்துங் கொன்றநின்
றனக்கன்பு செய்யார், மாற்றறுங் கூற்றின் றண்டமுங் காம
வருத்தமு மெங்ஙன மொழிவார்,
தாற்றிளங் கமுகின் கழுத்திறப் பாயுந்
தகட்டகட் டிளநெடு வாளைக், காற்றடம் பணைக ணனியுடுத் தோங்குங்
கற்குடி மாமலைப் பரனே.
|
57 |
2871
|
மின்னுசெந் தழலாய் நின்றுமென்
பாதி மிலைந்துமல் லறநுதல்
விழித்து, முன்னுநஞ் சயின்றுந் தெரிக்குநிற் கயன்மா
லொப்பெனக் கரைநரும் வாழ்க, பன்னுகூன் குலைய குறுங்கழுத் தரம்பைப்
பழங்கனிந் தொழுகிய செழுந்தேன், கன்னலின் படப்பை நனைக்குந்தண் பணைசூழ்
கற்குடி மாமலைப் பரனே.
|
58 |
2872
|
இயல்புடை யோகத் திருந்தநா
ளெவரு மெவையுமின்
புணர்ப்பற விருந்த, செயலுணர்ந் துமையைப் புணர்ந்தரு ணீயே
தெளிபர மென்பது தெளிந்தே, னயலுறு முளரி மணந்தமக் கிலாத
தறிந்துநெற் கதிர்தலை வணக்குங், கயலுடைப் பழனக் கணியுடுத் தோங்குங்
கற்குடி மாமலைப் பரனே.
|
59 |
2873
|
பராபர நினது மேனியிற் பட்ட
பாண்டியன் கைப்பிரம் படிதான், சராசர மனைத்தும் படுதலா னீயே
தறபர னெனவுளந் துணிந்தே, னிராவெனத் திரியுங் கவையடிக் கயவா
யெருமைகள் கன்றுளிப் பொழிபால், கராமலை மடுக்க ணிறைதரும் பணைசூழ்
கற்குடி மாமலைப் பரனே.
|
60 |
2874
|
பங்கயா சனனுந் திருநெடு
மாலும் பாகசா தனனும்வா
னவரு, மெங்குநா டியுங்கா ணரியநின் பாத
மெளியதன் பருக்கென
வுணர்ந்தேன்,
கொங்குலாந் தடத்திற் சலஞ்சல முகுத்த
கொழுங்கதிர் முத்தம்வில் வீசிக், கங்குலை மழுக்கும் பணைமருங் குடுத்த
கற்குடி மாமலைப் பரனே.
|
61 |
2875
|
ஐயவென் னுள்ள வெள்ளமிந் திரிய
வடற்குலை யுடைத்ததி விரைவிற, செய்யநின் பாத பங்கயக் கடலிற்
சேர்தரப் படருநா ளென்றோ,
நெய்யணி கூந்த லுழத்தியர் நெடுங்க
ணிழலற லிடைக்கண்டு மள்ளர், கையினாற் கயலென் றரித்திடுங் கணிசூழ்
கற்குடி மாமலைப் பரனே.
|
62 |
2876
|
கட்டுவீ டருள்வோ னீயெனத்
தெளிந்து கரிசுறு
புன்றெய்வப் பற்று, விட்டுனை யடைந்தேற் கெப்பற்று மறுத்துன்
மெய்ப்பற்றைப் பற்றுமாறருள்வாய், வட்டவாய்க் கமல மதுமடை யுடைக்க
மள்ளர்கள் கரும்படு மினிய, கட்டியா லடைக்குங் கணிமருங் குடுத்த
கற்குடி மாமலைப் பரனே.
|
63 |
2877
|
விரிதனு கரண புவனபோ கங்கள்
வினைவழிக் கொடுத்தவை துய்த்த, பரிவுயி ரறப்பி னொடுக்கிமீட் டாக்கும்
பரிவினுங் கதிதர லெளிதே,
நெரிமருப் பெருமை கரும்பினைக்
குதட்ட நேரிழி சாறவ னிரப்புங், கரிசறு மகணி மருங்குடுத் தோங்குங்
கற்குடி மாமலைப் பரனே.
|
64 |
2878
|
செறிபிறப் பென்னும் பேதைமை
நீங்கச் சிறப்பெனுஞ்
செம்பொருள் காண்ப, தறிவெனத் தெரிக்குங் குறட்பொரு ளறிந்து
மறிகிலன் போற்பிற காண்பேன்,
வெறிமலர்ப் பணைநெற் பச்சிளங் கதிர்கள்
விண்ணகத் தேனுநா நீட்டிக், கறிசெய வளரும் படுகர்சூழ் பழனக்
கற்குடி மாமலைப் பரனே.
|
65 |
2879
|
வெம்பிய காமம் வெகுளியுண்
மயக்கம் வேரறப்
பறித்துநின் பதமே, நம்பியென் புருக வனபுசெய் நாளு
நாயினேற் குள்ளதோ
வருள்வாய், பம்புபன் மலர்கண் மருதவேந் துறையப்
பன்மணி குயிற்றிய பைம்பொற், கம்பலம் விரித்தாற் போலடர் பணைசூழ்
கற்குடி மாமலைப் பரனே.
|
66 |
2880
|
வையமும் வானு முய்யவன்
புருவாய் வாதவூர் வந்தவ தரித்த, வையனன புரையை நயந்துபா ராட்டு
மவ்வள வாவதெற் கருள்வாய்,
செய்யதா மரையின் பன்மல ரொளிர்த
றிகழ்தர விழித்துவச் சிரத்த, கையினான் கிடத்தல் போன்மெனும் பணைசூழ்
கற்குடி மாமலைப் பரனே.
|
67 |
2881
|
ஒழுக்கமன் பருளா சாரநற் சீல
முறவுப சாரம்வந் தித்த, லிழுக்கிலா வாய்மை தவந்துற வடக்க
மிவைகளி லொன்றும்யா னறியே, னழுக்கிலா வமுத முடுக்கள போற்
சிதற வணிமதி மேற்பெரு வாளை, கழுக்கடை யெனப்பாய் படுகர்சூழ் தெய்வக்
கற்குடி மாமலைப் பரனே.
|
68 |
2882
|
நின்னுரை வழியே நிற்பவர்
நில்லார் நீளற மறஞ்சுவர்க்
காதி, மின்னுபோ கத்தா னரகத்தாற் றொலைத்து
வீட்டுய்ப்போ னீயெனத்
தெளிந்தேன்,
மன்னிய தென்னம் பழம்பல வீழ
வருக்கையின் பழங்கிழிந் திழிதேன், கன்னலங் கழனி பாய்தரும் பணைசூழ்
கற்குடி மாமலைப் பரனே.
|
69 |
2883
|
மானிடப்பிறவி வந்தது மனத்தால்
வாக்கினாற் காயத்தாற் பணிசெய், தானிடத் தைந்து மாடுநின் னடிக்கீ
ழமரவென் றறிந்திலன்
சிறியேன்,
கூனுடைக் குலைய குறுங்கழுத் தரம்பைக்
கொழுங்கனி யிழிந்ததேன் கருப்பங், கானிடைப் பாயும் படுகர்சூழ் தெய்வக்
கற்குடி மாமலைப் பரனே.
|
70 |
2884
|
பொருள்செய்சன் மார்க்க
நெடுஞ்சக மார்க்கம்
புத்திர மார்க்கமின் பாக்கு, மிருமைசெய் தாத மார்க்கமிம் மார்க்கத்
தியானொரு மார்க்கமு மறியேன், பருமர கதமுத் தந்துகிர் கண்டம்
பாளைசெம் பழத்தினாற் காட்டிக், கருமுகி லணவுங் கமுகடர் கணிசூழ்
கற்குடி மாமலைப் பரனே.
|
71 |
2885
|
கொச்சையர்க் குயர்மா னியுமர
சினுக்குக் குலவுமப்
பூதியுமுலக, நச்சுசுந் தரருக் குதியரும் போல
நான்சிறந் துய்வதெந் நாளோ,
வச்சணங் கயில்வேற் கண்ணுழத் தியர்நெல்
லரிதருங் கொடும்புற விரும்பைக், கச்சப வெரிநிற் றீட்டிடுங் கணிசூழ்
கற்குடி மாமலைப் பரனே.
|
72 |
2886
|
படர்புகழ்க் காழிப்
பிள்ளையார்க் கிவனைப்
பாரெனச் சற்றுநீ மொழிந்தாற், பிடகன்மாத் தலையி லுருமுவீழ்த் தவரென்
பெருவினைக் கும்மது வீழ்ப்பா, ரடுமடைப் பள்ளி யுலைக்கழு நீர்செய்
யாவிகால் குளம்பல நிரம்பக், கடலுடைத் தென்னப் பாயுமென் பால்சூழ்
கற்குடி மாமலைப் பரனே.
|
73 |
2887
|
நயந்தரு நாவுக் கரசருக்
கிவன்பா னாட்டம்வை
யென்னினப்பூதி, பயந்தசேய்க் குற்ற விடந்தொலைத் தவரென்
பாசவல்விடத்தையுந்
தொலைப்பார்,
வயந்தரு மள்ள ருடைப்பினை யூரு
வரைகுவி நவமணி வாரிக், கயந்தலை யெனநின் றடைத்திடுங் கணிசூழ்
கற்குடி மாமலைப் பரனே.
|
74 |
2888
|
பழிதபு குணவன் றொண்டருக்
கிவன்பாற் பார்வைசெ
யென்பையேற் கராவாய்க், குழியினின் றொருசேய் மீட்டவர் சனனக்
குழியினின் றென்னையு மீட்பார்,
வழிமதுப் பொழிபூங் கொடிகடாய் வளைப்ப
வளைந்துபைங் கழைகணின் றிடுதல், கழிவில்கைக் கொடுவேள் பொரல்பொருங்
கணிசூழ் கற்குடி மாமலைப்
பரனே.
|
75 |
2889
|
அருவமா யுருவ மாயரு வுருவா
யனைத்துயிர்க் குயிருமா
யறிவாய்ப், ொருள்படு மறைக்குந் தெரிவரி யாயாம்
புராணநிற் றெரிதலெற்
கெளிதோ,
சுருள்விரி யரம்பைக் குருத்துமீ யசைந்து
சுரர்மினார் கலவியெய்ப் பாற்றுங், கருள்படு பொதும்பர்ப் படுகர்சூழ்
தெய்வக் கற்குடி மாமலைப்
பரனே.
|
76 |
2890
|
செவியினாற் கேட்டு மறிகிலே
னின்னைத் தெரிந்தவர்
போற்பல பிதற்றிக், குவிதரக் கவியும் புனைவனுன் னிடினென்
குணமெனக் கேநகை தருமா,
லவிருநெற் பணையின் ஞெண்டுகள் கிளைத்த
வளவில்பல் வளையெலா நிரம்பக், கவிழிணர்ச் சூதத் தாதுகுங் கணிசூழ்
கற்குடி மாமலைப் பரனே.
|
77 |
2891
|
அருமறை தெரிதண் டீசர்பா
லென்னை யடைக்கலம்
புகுத்துவையானால், வெருவறத் தந்தை தாடுணித் தவரென்
வெம்பவத் தாளையுந்
துணிப்பார், மருவிய வுணவு கொடுவரச் சென்ற
மடவனச்சேவலை நோக்கிக், கருவுயிர்த் துறைபே டலமருங் கணிசூழ்
கற்குடி மாமலைப் பரனே.
|
78 |
2892
|
நானவார் கூந்தற் பரவையார்
மனைக்கு நள்ளிரு ணாப்பணீ
தூது, போனநா ளாரூர் மறுகிலோ ரெறும்பாய்ப்
பொருந்தினும் வருந்திடா
துய்வேன்,
கூன்முது கிப்பி யுயிர்த்தவெண் முத்தங்
குவிதரக் கயிலையே யென்று, கான்மலர் தூவிச் சுரர்தொழுங் கணிசூழ்
கற்குடி மாமலைப் பரனே.
|
79 |
2893
|
கெடுத்திடு முலோகா யதன்முத
லான கீழ்ப்படுஞ் சமயர்
பொய் யுரையை, யடுத்திடும் படியெப் பிறப்பெனக் குறினு
மருளனின் னடிக்கன்பே யருள்வாய்,
மடுத்தவெண் குருகோர் முடக்கிழ நாரை
வாய்க்கொளு முணவினைத் தட்டக், கடுத்திடா தறவோர் போலுறை கணிசூழ்
கற்குடி மாமலைப் பரனே.
|
80 |
2894
|
தரிசனங் கொடுத்தா ளுயர்ந்தவ
னீயான் றாழ்ந்தவ
னியல்பினெப்பொருளுந், தெரிபவ னீயா னீதெரி விக்கத் தெரிபவ
னின்னடிக் கடியே, னரிசிதர்ந் தயில்கொன் றாள்வழக்
கறுக்கு மங்கணார் முகமதி கண்டு, கரிசறக் குமுத மலருமென் பால்சூழ்
கற்குடி மாமலைப் பரனே.
|
81 |
2895
|
பொருவினின் பூசை யென்னும்புண்
ணியத்தாற் பொலிசிவ
ஞானம்பெற் றடங்கி, மருவுற மேல்கீழ் தருமறம் பாவ மாற்றிநின்
னடிக்கணென் றுறுவேன்,
குருமலர்ச் செந்தேன் புலியடிப் பைங்காய்க்
கோழரை யரம்பையைச் சாய்த்துக், கருநிறக் கவரி நீந்தப்பாய் கணிசூழ்
கற்குடி மாமலைப் பரனே.
|
82 |
2896
|
யானது செய்தேன் பிறரிது
செய்தார் யானென தென்னுமிக்
கோணை, ஞானவா ரழலால் வெதுப்புபு நிமிர்த்து
நான்செவ்வே நிற்கவென்
றருள்வாய்,
மீனுண வளித்து விரிசிறை நாரை
மென்மடப் பெடையொடு திளைக்குங், கானகன் மென்பூந் தடத்தமென் பால்சூழ்
கற்குடி மாமலைப் பரனே.
|
83 |
2897
|
மூதறி வுடையோர் புகழ்சிறுத்
தொண்டர் முளரித்தா
ளடைந்திலே னடைந்தான், மேதகு சேயை யறுத்தவர் வெறுத்தென்
வினையினை யறுக்கவஞ் சுவரோ,
மாதர்மென் றடத்தில் வெள்ளிதழ்க் கமல
மலரினை மடவனச் சேவல், காதலி னணைக்கப் பெடைதுயர் பணைசூழ்
கற்குடி மாமலைப் பரனே.
|
84 |
2898
|
பெருகிய வெள்ளந் திரைக்கட
லன்றிப் பிபீலிகை யளையினும் புகல்போ, லுருகிய வன்ப ரன்றியென் பாலு
முன்னருள் புகுவது வழக்கால்,
பருதிய யிரமோர் கடலிடைத் தோன்றும் பானமைபோ லொவ்வொரு மடுவிற்,
கருதுசெங் கமலம் பலமலர் பணைசூழ் கற்குடி மாமலைப் பரனே.
|
85 |
2899
|
உயிரெலா நின்ன தடிமையெப்
பொருளு முன்னுடை மைப்பொரு
ளென்னச், செயிரற வுணர்ந்த நின்னடி யவாதாள்
சிறியனே னடைந்துய்வ
தென்றோ, குயிலெனப் பேசுங் கடைசியர் வதனக்குறுநகை
மதிநில வென்னக், கயிரவங் கருதி மலர்பணை யுடுத்த
கற்குடி மாமலைப் பரனே.
|
86 |
2900
|
பாவியேன் சிந்தை நின்னடிக்
காக்கிப் பணிவிடைக்
கிருகையுமாக்கி, நாவினைத் திருவைந் தெழுத்தினுக் காக்கி
நவையற வுய்யுநா ளுளதோ, வாவியிற் பொலிவெண் டாமரை மலர்போன்
மதியுறப் பெருக்கெடுத் தொழுகுங், காவிரிப் புனல்பாய் நெடும்பணை யுடுத்த
கற்குடி மாமலைப் பரனே.
|
87 |
2901
|
மிடைத்தம ருடற்றும் பலகுண
மறுத்து மிகுசிவா னந்தமூற்
றெடுப்பக், கிடைத்துனைக் காண வாணவ வெழினி
கீழயான் பெறுவதெந் நாளோ,
வுடைப்பினை மள்ள ரடைக்குமுன் வராலவ்
வுடைப்படை படவுடை மடையின், கடைத்தலை வெடிபோய் விழும்பணை யுடுத்த
கற்குடி மாமலைப் பரனே.
|
88 |
2902
|
ஐந்துபே ரறிவும் பார்வையாய்
முடிய வடுத்திடு கரணமீ
ரிரண்டுஞ், சிந்தையாய் முடிய நின்றிரு ந்டனந்
தரிசிக்கு நாளுமெற் குளதோ,
விந்திர தருவோ ரளிக்குந்தே னளியா
வியல்பினை நோக்கிவெண் மலராற், கந்தவார் பொழில்க ணகைக்குமென் பால்சூழ்
கற்குடி மாமலைப் பரனே.
|
89 |
2903
|
பூப்பயி னந்த வனம்பல
வியற்றேன் பொருந்தல
கிடேனினா லயத்தி, லாப்பிகொண் டைதா மெழுகிடே னெங்ங
னடியனே னுய்யுமா
றருள்வாய், வீப்பயி லளிகண் மூக்குழ வழிதேன்
விரிகடற் படுமுவ ரகற்றுங், காப்பயின் மென்பான் மருங்குடுத் தோங்குங்
கற்குடி மாமலைப் பரனே.
|
90 |
2904
|
அவாவெனப் படுவ வெவ்வகை
யுயிர்க்கு மணியவெவ்
விடத்து மெஞ்ஞான்றுந், தவாவரு பிறப்பின் வித்தென வுணரேன்
றண்ணரு ளெங்ஙனம் பெறுவே,
னுவாமதி தவழுஞ் சோலையி லிளைஞ
ரொளிர்கத லியைமறை மாதர், கவானென வணைக்கு நெடும்பணை யுடுத்த
கற்குடி மாமலைப் பரனே.
|
91 |
2905
|
மலைக்கொடி படருங் கற்பக தருவே
வயங்கருண் மழை பொழி முகிலே, புலைக்கொடி யனையா ளென்றுமெய் யாவிப்
பொய்யினே னடையுநா ளென்றோ,
நிலைக்கொடி யாட வுலகங்கொண் டாட
நிறைமலர்ச் செங்கொடி யாடக், கலைக்கொடி யாடு மாளிகை பலசூழ்
கற்குடி மாமலைப் பரனே.
|
92 |
2906
|
அற்குடி கொண்ட விரைநறுங்
கூந்த லணிமுலை
யெம்பிராட்டி யையான், சொற்குடி கொண்ட யாப்பினா லன்பாற் றுதித்திடப்
பெறுநன்னா ளென்றோ,
விற்குடி கொளும்பொன் னுலகமேத் தெடுப்ப வியனொளி
குடிகொள்பன் மணியென், கற்குடி கொளச்செய் நற்குடி மலைதாழ்
கற்குடி மாமலைப் பரனே.
|
93 |
2907
|
பல்லெலாந் தெரித்துச்
சொல்லெலாந் துறுத்துப்
பாட்டெலாம் பாடினீர் யாமு, மில்லெலா மாய்ந்தோங் கொடுப்பதற் கிலையென்
னிவர்கள்பாற் புலவரென் பெறுவார், சொல்லெலாந் திருவைந்தெழுத்திவண்
வாழ்வோர்
தொழிலெலாம் பணிவிடை
யென்றுங், கல்லெலாஞ் சிவலிங் கம்மெனச் சுரர்தாழ்
கற்குடி மாமலைப் பரனே.
|
94 |
2908
|
பொற்பக மலர்ந்த மாதரர் மையற்
புணரியி லழுந்திடா துனக்கே, யற்பக மலர்ந்து சிவானந்தப் புணரி
யழுந்திடு மாறெனக்
கருள்வா, யெற்பக மலர்ந்த குவட்டுறும் யானை
யீர்ங்கவு ளளிகளைக் கையாற், கற்பக மலர்ந்த குழையெடித் தோச்சுங்
கற்குடி மாமலைப் பரனே.
|
95 |
2909
|
புவிமுழு தளந்தோ னேடியுங்
காணாப் பொன்னடித் தாமரை
காண்பான், குவிமனத் தோடு மகம்படித் தொண்டு
கொண்டியா னுய்வதெந் நாளோ,
வவிர்தரு பிறையைக் கண்டவில் வேட
ரவாவொடு கொடிச்சியர் தமது, கவினுத லென்னப் பொட்டணிந் துவக்குங்
கற்குடி மாமலைப் பரனே.
|
96 |
2910
|
மன்றினின் னடனங் கண்டகண்
கொண்டு மற்றினிக் காண்பதி
யாதென், றொன்றிய சிந்தை யுறுதிகொள் ளுவனே
லுய்குவே னெனக்கது போதுங்,
குன்றவ ரேனற் குரல்களை யறைக்கட்
கொண்டுபோய்க் குவித்தடும் யானைக், கன்றினான் மிதிப்பித் துதிர்தினை
யளக்குங்
கற்குடி மாமலைப் பரனே.
|
97 |
2911
|
நனியிடை யறாம லுன்னடி நினைக்க
நாயினேற் கருளுவை யாயி, னினிவரு கதிரெங் கெழினுமெண் ணேன்யா
னிருப்பனீ தருளிட
வேண்டுந், துனியறு களிற்றின் கோடுபட் டுடைந்து
சுட்டபொன் போற்பல வருக்கைக், கனிபழங் கீண்டு சுளைபல வுதிருங்
கற்குடி மாமலைப் பரனே.
|
98 |
2912
|
நீதிசேர் சைவத் தடைந்தவ ரடையா
நின்றவ ரடைபவர் தமக்கியான், பாதகக் குழிசித் தொடர்பற வடிமைப்
படும்பரி சென்றுநீ
யருள்வாய்,
கோதில்கற் பகத்தி னறுங்குள கருத்திக்
கொழுமத யானையங் கூந்தற், காதலம் பிடியைப் புலவிதீர்த் தணைக்குங்
கற்குடி மாமலைப் பரனே.
|
99 |
2913
|
சைவமே பொருண்மற் றவையல வென்று
சார்திரு நீறுங்கண் டிகையுந், தெய்வவைந் தெழுத்தும் பற்றறப் பற்றத்
திருவரு ளென்றெனக் கருள்வாய்,
பைவளர் மணியைத் தழலென நினைந்து
பாவடிப் பருமநல் வேழங், கைவளர் கடநீர் மழையெனப் பொழியுங்
கற்குடி மாமலைப் பரனே.
|
100 |
2914
|
வெண்பா. நிலமாலை கொண்ட
நெடுஞ்சடையி லென்பின் குலமாலை யுஞ்சேர்த்துக் கொண்டாய் -- பலமேலோர்
சொன்மாலை கொள்செவியிற் றூக்கற் குடியாயென் புன்மாலையுங் கொளது போல்.
|
101 |