Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Language & Literature > Project Madurai >Index of  Etexts released by Project Madurai - Unicode & PDF ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு பகுதி 1 (1-133) > பகுதி 2 (செய்யுள் 134-256) > பகுதி 3 (செய்யுள் 722-834) > பகுதி 4 (செய்யுள் (276 -388) > பகுதி 5  (செய்யுள் 389 -497) > பகுதி 6  (செய்யுள் 498 -609) > பகுதி 7 (செய்யுள் 610 -721) > பகுதி 8 ( செய்யுள் 835-946) > பகுதி 9 (செய்யுள் 947 -1048) > பகுதி 10 (1049) > பகுதி 11 (1050-1151) > பகுதி 12 (1705 - 1706) > பகுதி 13 (1152 - 1705) >  பகுதி 14 (2027-2128) >  பகுதி 15 (1709 - 1810) > பகுதி 16 (1925 - 2026) > பகுதி 17 (2129 - 2236) > பகுதி 18 (2237 - 2338) >பகுதி 19 (2339 - 2440) > பகுதி 20 (2441 - 2543) > பகுதி 21 (2544 - 2644) > பகுதி 22 (2645 - 2669) >  பகுதி 23 (2670 - 2770) > பகுதி 24 (2771 - 2809) > பகுதி 25 (2810-2914) > பகுதி 26 (1811 - 1924) > பகுதி 27 (2027 - 2128)


திருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
பிரபந்தத்திரட்டு - பகுதி 1 (1-133)

(திருத்துருத்திக் கச்சி வினாயகர் பதிகம்,
திருத்துருத்திச் சுப்பிரமணியஸ்வாமி பதிகம்,
திருவிடைமருதூர் மருதவாணர் தோத்திரப்பதிகம் &
திருப்பெருமணநல்லூர்த் திருவெண்ணீற்றுமை பிள்ளைத்தமிழ்)

T. Meenakshisundaram Pillai's pirapantat tirattu - part 1 (verses 1-133)


Etext preparation: Mr. Seetharaman Subramaniam (Subu), Dubai, UAE
Proof-reading: Mrs. Sugandham (Subu's mother), Dubai, UAE
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
Source Acknowledgment: T. Meenakshisundaram Pillai's "pirapanntat tirattu", published by U.Ve. CaminAta aiyar, Commercial Press, Chennai, 1926, 2nd edition.
Our sincere thanks go to Dr. Thomas Malten and Mr. Sascha Ebeling of the Institute of Indology & Tamil Studies, Univ of Koeln, Germany for providing us with a photocopy of this work for the etext preparation.

� Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


மூலம்:
திருக்கைலாயபரம்பரைத் திருவாடுதுறையாதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டு, இது மேற்படி ஆதீனத்துத் தலைவர்களாகிய ஸ்ரீலஸ்ரீ வைத்தியலிங்க தேசிகரவர்கள் உதவியைக்கொண்டு, மேற்படி பிள்ளையவர்கள் மாணாக்கரும், சிதம்பரம் மீனாட்சி தமிழ்க்காலேஜ் பிரின்ஸ்பாலுமாகிய உ.வே. சாமிநாதையரால் சென்னை கமர்ஷியல் அச்சுக்கூடத்திற் பதிக்கப்பெற்றது. இரண்டாம் பதிப்பு, 1926.


1. திருத்துருத்திக் கச்சி வினாயகர் பதிகம்

(இது சோழநாட்டிற் காவிரிநதியின்தென்பாலுள்ள திருப்பதிகளுள் ஒன்று. குற்றாலமென இக்காலத்துவழங்கும்)

1.
மாமேவு பவளா சலக்குவட் டுதயமெழு மழவிலங் கதிர்நிகர்த்து
மணிமெளலி பொலியலவ் வரைமுடியி னிருபாலு மணிகொழித் திழியருலியிற்
பமேவு கருஞிமி றிரைப்பக் கபோலம் பருத்துவிடு தானமொழுகப்
பனிமதிப் பிரையொன் றடுத்தமர்ந் தாலெனப் பகரொரு மருப்பிலங்கத்
தேமேவு மலரிறைத் தடியர்சய சயவென்று திசைதொரு முழக்கெடுப்பச்
செறுவலிக் கருமூடி கத்திவர்ந் தியாங்கண்மகிழ் தேக்கவந் தருள் புரிகுவாய்
காமேவு தண்ணளி யமையிந்தடையு நர்ப்பாது காத்தறம் வளர்த்திடுதலாற்
கற்பத் தலத்தினும் விருத்தித் துருத்தியமர் கச்சிக் களிற்று முகனே.

2.
குலவுதவ முனிவரர்க ளமருந் தவச்சாலை குவலயம் படிதராமே
கூறுமச்சாலையுட் சைவா கம்ந்தீட்டு கோசங்கள் சிதைதராமே
நிலவுதழல் படுகுண்டம் வேதிமே கலையொடு நிதம்புதி தியற்றுறாமே
நித்தியமு னா஡யகரு மம்பலவு மத்தவர் நிகழ்த்தலிற் குறைவராமே
புலவுகம ழங்குசம் பாசனமை யேலியது போதுமென் றுவகைமலியப்
பொங்குஞ் சினத்துலவு கருமூடி கத்துப் பொருக்கென விவர்ந்துபலவுங்
கலவுபல வண்டத் துலாவருந் திறலுடைக் கருணையா மறிய வலமோ
கற்பத் தலத்தினும் விருத்தித் துருத்தியமர் கச்சிக் களிற்று முகனே.

3.
ஏதியென வெவ்வள விருப்பன வவற்றா லிருத்தல்செய் யாதவரமுமி
மையவ ருடம்புமுத லெத்துணை யுடம்பவை இரிந்திடற் காயவரமு,
நீதிதரு மட்டாங்க பஞ்சாஇங்க முதலிய நிகழ்த்துவந் தனைவிலக்கு
நிகழுமற் றுள்ளவு நினைந்துமிச் சிரவுருவ நிலவமற் றொன்றமைந்து,
சோதிதரு கோடொன்று கொண்டுகய முகன்வலி தொலைத்துலிற லூர்தியாக்கியிச்
சோர்விலவ னமரர் பாற் பெற்றவையு மேற்றருள் சுரந்துபல் லுயிர்செய்வினையைக்,
காதிநலமேயுதவு நினதுபெரு மாண்பெவர் கருத்தமைத் தொதவல்லார்
கற்பத் தலத்தினும் விருத்தித் துருத்தியமர் கச்சிக் களிற்று முகனே.

4.
ஏற்றமிகு மொருமினிவ னோம்பழற் குழிநாப்ப ணிரியாத கிரியைஞான
மென்னுமிரு சத்திக ளொடுந்தோன்றி யம்முனியொ டேற்றமர் புரிந்துபலருஞ்,
சாற்றொளிர் புரவுமணி கைக்கொண்ட மாற்றலன் றன்வலி யடங்காப்பெருந்
தானைவலி யொடுகவர்ந் தம்மணியும் வாங்கியத் தாபதற் கினிதளிக்கத்,
தேற்றமத னால்வர லுணர்ந்தனைய தவனுஞ் சிறந்தமார் பிற்றரித்துச்
சிந்தா மணிக்குஞ்ச ரப்பிரா னென்றேத்தல் செய்யலவன் வினையனைத்துங்,
காற்றவெழு மருள்பொழிந் தினிதமரு மாடலைக் கண்டுவிண் டிடவல்லரார்
கற்பத் தலத்தினும் விருத்தித் துருத்தியமர் கச்சிக் களிற்று முகனே.

5.
தெள்ளமுத மயமாக வுமையம்மை நல்கிய திருந்துமோ தகந்ஞ்சமாய்த்
தீயகொடு நஞ்சமய மாகவொரு பேதைதரு செழுநாவ லங்கனிகடா
மெள்ளலரு மமுதமாய்த் தான்புரித றவறா தியற்றிடக் கண்டோ மினு
மியலுத்த மாங்கம்வே றாகவும் பார்க்கவு மிருசெவிக ளாற்கேட்கவு
முள்ளபொரு ளிதுவென்று வாய்பேச வும்பிற வுஞற்றவு மியங்கல்செயவு
முண்மையிற் கண்டுளே மென்னினெவர் நின்னாட லுட்கொண் டளக்க வல்லார்
கள்ளமகன் மாதவர்க் கானந்த மாய்ப்பரவு கற்பனை கடந்தவாழ்வே
கற்பத் தலத்தினும் விருத்தித் துருத்தியமர் கச்சிக் களிற்று முகனே.

6.
எந்தவா னவரருள் பெறக்கருதி னாலுமுனை யேத்திவழி படுவரெழுவா
யேத்திவழி படல்செயா ரென்னினவ ரெண்ணிய திழந்துமிடை யூறுறுவரான்
முந்தவார் வம்பெருகு மாறுநி னடிப்ப்பூசை முற்றும் புரிந்துபோற்றின்
முன்னிய வனைத்துமுற் றாதவல வேயிந்த முறைமைநா னுணர்தலாலே
பந்தமா மலகன்ம மாயையொரு மூன்றையும் பாற்றிநின் னறிவுதொழிலாம்
பாதநிழல் புக்கின்ப முறுமாறு நின்னையே பற்றித் துதித்தல்செய்வேன்
கந்தமா மலரிடுக ரெய்ப்பில்வைப் பேபுகழ்நர் களைகணே யமலவாழ்வே
கற்பத் தலத்தினும் விருத்தித் துருத்தியமர் கச்சிக் களிற்று முகனே.

7.
மருவுபல புவனத்து மெந்தவா னலர்வடிவு மண்சிலை வடுத்தாரமொண்
மாசைக ளிவற்றுளொன் றாற்செய்து வயிறளவின் மருவாம லஇஇஃகுமென்னின் ,
வெருவுமிக வாய்ந்த்ந்த வடிவருச் சனைசெயார் விடுவரவ் வாறுதேர்தல்
வேண்டாது பேருதரம் வாய்ந்தநின் றிருவுருவ மேதகப் பூசைபுரித,
லொருவுதல் செயாதவர்கள் யாவரே யெனினுமவ ரும்பர்மக வான்மலரின்மே
லொருவன்முதலோர்களினு மதிகரென் றருமறை யுரைத்தல்சில ரெண்ணாமையென்
கருவுதவிர் மாதவர் கசிந்தேத் தெடுக்கவொளிர் கருணையா னந்த்வாழ்வ்வே
கற்பத் தலத்தினும் விருத்தித் துருத்தியமர் கச்சிக் களிற்று முகனே.

8.
பொங்குங் கருங்கடல் பரந்ததென் னென்றுபல புவனமுமொ ரையமெய்தப்
புக்ககட னின்றுமலை யின்றெழுந் தஃதெனாப் பொருதொழில் வலாரியெண்ணித்,
தங்குந் திறற்கொடிய சதகோடி யொல்லைத் தடற்றுநின் றுருவல்செய்யச்
சகமுழுவ தும்புதை படச்சிறை விரிக்குமொரு தறுகட்கலாபமயின்மே,
லெங்குங் கதிர்க்குமொரு பவளாச லம்பொர லிவர்ந்துபல படையொடுமெதி
ரேற்றமாற் றலனாக வப்பா ரிடைக்கவிழ வெழுகாக மோடுகழுகுங்,
கங்கும் பகழ்ந்தடை லிறற்படைகை தொட்டநின் காமர்விறல் யாவர் புகழ்வார்
கற்பத் தலத்தினும் விருத்தித் துருத்தியமர் கச்சிக் களிற்று முகனே.

9.
துதிகையோ டிருசெவியி னின்றுமொரு மூவரைத் தோற்றினா யண்டமணுவாத்
தோற்றிட வுயர்ந்தாயொர் சனகனிடு முனவெலாந் துய்த்து மிகு பசிதெரித்து,
மதிக்கைகொ டவன்பணிய முப்பொருளி ணுண்மையை வகுத்தவற் குறநவின்றாய்
வையமுதல் யாவுமுமோ ரறுகளவு போதாத வண்ணந் தெரித்தல்செய்தாய்,
விதிக்கைபுரி வானுநிக ராதபுரு சுண்டிமுதன் மேலோர்கள் பலரிறைஞ்ச
விழையுமா னந்தமய மேயாய் விளங்கினாய் வெய்யேனின் னுண்மைதேர்ந்து,
இதிக்கையுறு மாறுபே ரருள்புரிவ தென்றுகலைகாணா வதீதமுதலே
கற்பத் தலத்தினும் விருத்தித் துருத்தியமர் கச்சிக் களிற்று முகனே.

10.
மலையுமொரு பொருளன் றெனக்கறிக் குந்திறல் வயங்குனின் னூர்திவாழ்க
மலர்பொருவு கைத்தலப் பாசாங்கு சப்படை வயங்கியென் நாளும்வாழ்க
நிலைமருவு ஞானமுங் கிரியையு மெனக்கலை நிரம்பின ரெடுத்துரைக்கு
நேயமிகு சித்திபுத் திகளெனுஞ் சத்திக ணிரம்புசீ ரோங்கிவாழ்க
வலைகட லுடுத்தபுவி முழுதுநின தருளடைந் தாதரம் பெருகிவாழ்க
வற்புதம் விராவுநின் னணியல்பூ ணாகிய வருந்தவத் தெவையும்வாழ்க
கலைவழி நினைப்பரவு செங்குந்தர் மரபுங் கதித்துநீ டூழிவாழ்க
கற்பத் தலத்தினும் விருத்தித் துருத்தியமர் கச்சிக் களிற்று முகனே.

திருத்துருத்திக் கச்சிவிநாயகர்பதிகம் முற்றிற்று


 

2. திருத்துருத்திச் சுப்பிரமணியஸ்வாமிபதிகம்

(இது சோழநாட்டிற் காவிரிநதியின்தென்பாலுள்ள திருப்பதிகளுள் ஒன்று. குற்றாலமென இக்காலத்துவழங்கும்)

11.
பூமேவு சமயங்க ளோரா றினுக்கும் புலங்கொளுங் காட்சிநல்கப்
பொலிந்தன வென்ச்சொலுந் திருமுக மொரறும் பொலன்செய்மணி முடியொராறும்
பாமேவு செங்கதி ரிராறுநிக ராமெனப் பகர்மணிக் குழையிராறும்
பன்னிரு தடம்புயப் பெருவரையி னருவியிற் பசுநர வொரழூக்குதொடையு
மாமேவு கானவர் குலக்கோதை யொடுமேலை வானவர் குலக்கோதையும்
வளரொளிய வடிவேலு மார்பினு லும்பொலிய மயில்வர கனத்துவருவா
தெம்மேவு சொலைபுடை குழுந் துருத்தித் திருத்தளியி லமரண்ணலே
சீறும்வெம் பகையோவு மாறுவன் பொடுகூவு சேவலங் கொடியாளனே.

12.
நீடுமக மேருவைத் திசைவரை யொடுங்கொண்டு நிலவுபந் தாடல்செயவுநேமிமால்
வரையையொரு கைக்கடக மாக்கொண்டு நிகரமற் றொன்றாயவு,
மோடுகதி ரைச்சிறு மதாணியென மார்பிடை யுறப்புனைய வுஞ்சலதிக
ளோரேழு மொருவிரற் கொடுதெறித் திலையென வொழிக்கவுந் திசைய்யெட்டிலுங்,
கூடுகளி றேட்டுத் துதிக்கைகண் முடிந்தொருகை கொண்டிழுத் திடவும்வல்ல
குலவீஇர வாகுவைத் தம்பியென மகிழுநின் கொற்றமெவர் முற்ற வுணர்வார்,
சேடுமலி காவிரித் தென்பாற் றுருத்தி திருத்தளியு ளமரண்ணலே
சீறும்வெம் பகையோவு மாறுவன் பொடுகூவு சேவலங் கொடியாளனே.

13.
பொருவரிய மாதவத் தொருநார தப்பெயர் புங்கமுனி புரிமகத்துப்
போந்துபல வண்டமு மிடித்துத் தகர்த்துநுண் புழுதிசெய் துலாவுகின்ற
வெருவரிய செறிமயிர்த் திருகுகோட் டுத்தகரின் விறல்கண்டு நடுநடுங்கி
மேலைவா னவரடைந் தோலமென வருகுபொலி வீரவா குவைநோக்கியப்
பருவமிகு தகரினை பற்றிவரு கென்னப் பணிப்பவவ நுதவவேறிப்
பாரிடம் போதாமை தெரிதரச் செண்டாடு பண்பெவ ரெடுத்துமொழிவார்
திருவமிகு கல்விச்சிறப்புயர் துருத்தி திருத்தளியு ளமரண்ணலே
சீறும்வெம் பகையோவு மாறுவன் பொடுகூவு சேவலங் கொடியாளனே.

14.
வெள்ளியங் கயிலையின் முதற்சிகரி வாய்தலின் விநோதப் பொருட்ட மருநாள்
லித்தகற் சேவைசெய் தஞ்சலி செயாதேகும் விதியினறி யாமை யுள்ளத்,
துள்ளியிவ னைப்பற்றி வாவென வுரைக்கவாங் கொருகுறண்மு னுய்ப்பநோக்கி
யொழிஇயா வகந்தையுளை யெத்தொழில் வலாயென வுஞற்றுதலில் வல்லேனென,
வெள்ளியொ ரிருக்குரை யெனக்குடிலை முன்சொல வியம்பியதனுட்பொருளெவ
னியம்புதி யெனத்தெரி தராமையாற் சென்னியிலிரங்கப் புடைத்தடைத்தாய்,
தெள்ளியரு மென்னுணர்வர் நின்புகழ் துருத்தித் திருத்தளியு ளமரண்ணலே
சீறும்வெம் பகையோவு மாறுவன் பொடுகூவு சேவலங் கொடியாளனே.

15.
பெருகுகொடு வஞ்சநவில் குருகுவரை நிலைதபப் பெருவான் காக்குமாறு
பேரம ருஞற்றுமள வில்லா விறற்றகுவர் பிணவரை யுர்ந்துதோன்றக்,
கருகுநிறம் வாய்ந்துகரை கொன்றிரங் கும்பெருங் கடன்முழுதும் வற்ற வனையார்
காயத்து நின்றும்வெளி வந்தநெய்த் தோரெனுங் கடறிரை யெறிந்துபெருக,
முருகுமலி மாலை் புயத்தனையர் குடிகொண்ட முதுநகர மதுபாழ்பட
முன்னித் துதிக்கும்வா னவர்குடிகொ ணகர்களி முகந்துமேன் மேற்றழைதரத்,
திருகுதவி ரயிறொடுநின் விறலென் றுருத்தித் திருத்தளியு ளமரண்ணலே
சீறும்வெம் பகையோவு மாறுவன் பொடுகூவு சேவலங் கொடியாளனே.

16.
பொருந்திய தமிழ்க்கெல்லை யாகும்வட வேங்கடப் பூதரமு மாதரவி னாற்-
போதுமூன் றும்போது முன்றுதவு வெற்பும் பொலிந்துயர் பரங்குன்றமு,
மருந்திய நறும்பழ முதிர்க்கும் பொழிற்கிரியு மவிர்சந்த னாசலமுமெல்
லலர் பொருஞ் செங்கையிற் றண்டுகொடு மழவடி வமைந்தருள் கொழிக்கும் வரையு,
மருந்தியவு ளார்மாந்தல் போற்பிரா னொருமொழி வயப்பொருண் மனங்கொள்ளுவான்
வாய்மலர்ந் தருளியமர் மால்வரையு மற்றுநீ மருவுமருள் யாவருணர்வார்,
திருந்திய வளம்பல விராவுந் துருத்தித் திருத்தளியு ளமரண்ணலே
சீறும்வெம் பகையோவு மாறுவன் பொடுகூவு சேவலங் கொடியாளனே.

17.
கனிமருவு வேட்டுவர் குலக்கொடி படர்ந்துமகிழ் கலவத் தழைந்ததருவே
கற்பகப் பொழிலாடு தெய்வதப் பிடியைக் கலந்த்விளை யாடுகளிறே
யளிமருவு மாதவ ருளக்கமல மலர்காப்ப ணள்ளூற வூறுதேனே
யாயிரங் கதிரொருங் குதயமெழ லெனவடி யடைந்தவர்க் கரங்காட்சியே
வளிமருவு புடவியி னயர்ந்தோதி லுங்கருணை மழைபொழி செழுங்கொண்டலே
வந்தித் துளாரையெவ் வானவரு மெஞ்ஞான்றும் வந்திக்க வைக்குநிதியே
தெளிமருவு நின்னடிக் கன்பரு டுருத்தித் திருத்தளியு ளமரண்ணலே
சீறும்வெம் பகையோவு மாறுவன் பொடுகூவு சேவலங் கொடியாளனே.

18.
மூவர்முத லாயபர சிவன்மேனி யிற்பாதி முனிவரிய தாக்கவர்ந்து
மூதண்ட புவனப் பரப்பிற் சராசர முகிழ்த்திடக் கருணைசெய்தும்,
யாவரெது கருதினா ரதையப் படிக்கவர்த மிதயத் தமர்ந்தளித்து
மிச்சைஞா னங்கிரியை பரையாதி யைவர்முத லெண்ணில்சத் திகளாகியம் ,
பூவர்முத லோர்தொழிலனைத்துமொரு தன்றொழிற் பொலிவெனச் செய்துமின்னும்
புகலளகில் சத்தியுள துனதுகைச் சத்தியே புகன்நள விடப்படுவதோ,
தேவர்பல முனிவர்க டுதிக்குந் துருத்தித் திருத்தளியு ளமரண்ணலே
சீறும்வெம் பகையோவு மாறுவன் பொடுகூவு சேவலங் கொடியாளனே.

19.
அத்தரொரு மொழியுண்மை யிற்றெனத் தெளியுமா றருளுநின் குரவு புகழ்கோ
வழகிய குறக்கோதை பாற்பொருளி னியல்பறிய வாற்றிபநி னாடல்புகழ்கோ,
முத்தர்கரு நச்சூ செரிந்தமரர் சிறைமீட்ட முனிவினன் வாகைபுகழ்கோ
மூகையென வைகியறி வோங்குநா வலர்கலக முழுதறுத் தருளல்புகழ்கோ,
பத்தர்பல ரெண்ணிய படிக்கவர் முனஞ்சென்று பரிவனீயருளல்புகழ்கோ
பயனுறா நாயினேன் யாதினை யறிந்தொரு பயன்படப் புகழவல்லேன்,
சித்தர்பல முனிவர்க டுதிக்குந் துருத்தித் திருத்தளியு ளமரண்ணலே
சீறும்வெம் பகையோவு மாறுவன் பொடுகூவு சேவலங் கொடியாளனே.

20.
ஓங்குநின் பான்மருவு சத்திமா ரிருவரு முவந்துபொழி கருணைவாழ்க
வுயர்தம்பி மார்வீர வாகுமுத லாயதிற லொன்பதின்மர் மரிகைவாழ்க,
வாம்குகடல் வைப்புமறை யச்சிறை விரிக்குநின் மாமயிற் றோகைவாழ்க
வருமிறுதி நாளுருத் திரனிலும் பொலிநின்னக வடிகொளொண் சத்திவாழ்க,
நீங்குபுக ழமைநிற் புகழ்ந்துபா டும்புலவர் வெற்றியின் விளங்கிவாழ்க
விருப்பொடு நினைப்போற்று செங்குந்தர் தம்மரபு மேன்மேலு மோங்கிவாழ்க,
தேங்குபல் வளம்பொலி விருத்தித் துருத்தித் திருத்தளியு ளமரண்ணலே
சீறும்வெம் பகையோவு மாறுவன் பொடுகூவு சேவலங் கொடியாளனே.

திருத்துருதிச் சுப்பிரமணியஸ்வாமிபதிகம் முற்றிற்று 

3. திருவிடைமருதூர் மருதவாணர் தோத்திரப்பதிகம்

21.
திருவார் நினது திருநீறே தீர்க்கு மார்க்கு முடற்பிணியுங்
கருவார் பிறந்தை யடற்பிணியு மெனல்கண் டடைந்த்தேன் கருதுருவோ
டருவார் கருணைப் பெருங்கடலே யடியார்க் கெய்ப்பில் வைப்பேநன்
மருவார் மலர்சா ரிடைமருத வாணா வடியேற் கிரங்காயே.

22.
ஏழைத் திருமாலயனாதி யிமையோர் பலரு மிறவாது
பாழைக் கருதா லாலநுகர் பரமா பரம கருணையனே
யூழைப் புறங்காண் வலியர்நினை யுணருந் திறலி னாரன்றே
வாழைப் படப்பை யிடைமருதா வாணா வடியேற் கிரங்காயே.

23.
ஊன மளக்குந் திறந்தொழும்பி னொருப்பட் டார்பாற் சிறிதுமிலாஇய்
நான மளக்கும் பெருநலமா முலையோர் பாக நயந்தவனே
யேன மளக்கும் திறமரிதா யிசைப்பார்க் கெளிதாந் திருவடியாய்
வான மளக்கு மிடைமருத வாணா வடியேற் கிரங்காயே.

24.
நீரு புனைவே னைந்தெழுத்து நெஞ்சங் கணிப்பே னின்னாமம்
பேரு பிறிதில் லெனப்புகல்வேன் பிணிக்காட் பட்டு வருந்துவனோ
சீறு பகைவர் புரம்வேவச் சிரித்தாய் தரித்தாய் சூலமழு
மாறு வளமி லிடைமருத வாணா வடியேற் கிரங்காயே.

25.
கூற்றஞ் சிதைய விறைநீண்ட கோக னகத்தா ளாயமர
ரேற்றஞ் சிதைய வெழுந்தவிடத் தேற்றஞ் சிதைய வெடுத்தயின்றாய்
தோற்றஞ் சிதையப் பல்லுயிருந் தொழுது போற்றித் துதிக்குமுயர்
மாற்றஞ் சிதையா விடைமருத வாணா வடியேற் கிரங்காயே.

26.
ஆயா நினையே சரணடைந்தார்க் கன்றி யவ்வா றடையார்க்கு
மேயா தோநின் னருள்பெருவா னிழிந்த களர்க்கும் பொழிதருமே
தாயா யளிசெய் தலைவாமுத் தலைவேல் பரித்தா யெஞ்ஞான்று
மாயா வங்கூ ரிடைமருத வாணா வடியேற் கிரங்காயே.

27.
உணங்கன் மீனுக் குயிருதவி யுயர்நின் னுலகம் புகப்புரிந்தாய்
சுணங்க னரியா தியர்க்கரிய தூமுத் தியிற்சார் தரல்குறித்தா
யணங்கல் லவர்க்கு முறல்கருதா வண்ணா வமுத்தே யருட்கடலே
வணங்கல் புரிவே னிடைமருத வாணா வடியேற் கிரங்காயே.

28.
அந்தோ நினக்கு வரகுணனி லன்பு புரிவா ரொருவரிலர்
முந்தோ தனையற் கருள்வதலான் முயலும் பிறருக் கருளாயோ
நந்தோ வருநீ ரெறும்பலையு நண்ணு நறுவா சனைப்பொதியில்
வந்தோ வரிய விடைமருத வாணா வடியேற் கிரங்காயே.

29.
அண்டர் பரவு நிராமயனி யதனாற் நரணி யெனுனாமங்
கொண்டதுனுகுத் தகுமெனலுட் குறித்த்தே நின்னைச் சரணடைந்த்தேன்
ரோண்டர் துயரஞ் சகியாத ட்டூயா ந்நேயா தாயானாய்
வண்டர் மர்க்கா லிடைமருத வாணா வடியேற் கிரங்காயே.

30.
ஆழி படைச்சூ ழுலகினினை யன்றித் தெய்வம் பிறிதுனத்தோ
பாழி யமைநின் நருட்ககலாப் படரு முளத்தோ பனிவரைவாய்
வீழி புரையும் பெருனலமா முலையாண் ம்மேய விடப்பாகா
வாழி வளஞ்சா லிடைமருத வாணா வடியேற் கிரங்காயே.


4. திருபெருமணநல்லூர்த் திருவெண்ணீற்றுமை பிள்ளைத்தமிழ்


வழித்துணைவிநாயகர்வணக்கம்

31.
பொன்பூத்த முக்குணப் புத்தேளிர் முதலெனப் புவியகத் தெவரு முணரப்
பொலியொரு பிறைக்கோடு மருண்மேனி யும்பொழி கபோலக் கடாமுநாளுங்,
கொன்பூத்த வெண்மையுஞ் செம்மையுங் கருமையுங் கொப்புளிக் கக்கருணையே
கொழித்தமர் வழித்துணைக் குஞ்சரத் தஞ்சரண கோகநக மாகநகவே,
மென்பூத்த கொன்றைச் சடைப்பரன் வலத்துவிழி வெள்ளென விடத்துமருவும்
விழிகா ரெனச்செய்ய வாயிலெழு குறுமுரல் வெண்ணிலவு தவழுந்தொறுந்,
தென்பூத்த வதின்முழுகி மேற்பழுப் பொழியுந் திறங்கருதி முக்கணியெனத்
திகழ்முத்த மேவவமர் மணவைவெண் ணீற்றுமை செழுந்தமிழ்க் கவிதழையுமே.

திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் வணக்கம்

32. பாழிமிகு வைத்திகஞ் சைவந் தழைப்பப் பசித்தழுத பனவரேற்றைப்
பரவுபர ஞானவின் பாலறாச் செய்யவாய்ப் பரசமய கோளரியைவண்,
காழிவரு மொருமுத் தமிழ்க்கடாம் பொழிமழ களிற்றைவே தக்கொழுந்தைக்
குணியக்கன்றைநற் கற்புநிறை பொற்புமலி காதலி யொடுந்துதிப்பா,
மாழியிறை வற்குவெவ் விடமுதவு தன்பிழை யகற்றியுய் வான்குறித்தாங்
களவில்வெண் பணிலமுந் தரளமும் பவளமு மம்பொன்னு மணியுநாளும்,
வாழிநெடு வெண்டிரைக் கையேந்தி வந்துதூய் வழிபட விளங்குதெய்வ
மணவைவெண்ணீற்றுமை யணங்குக் கிணங்குக் கிணங்குதமிழ் மாலையுயர் பாலையுறவே.

1. காப்புப்பருவம்

திருமால்

33. மாமேவு பல்லுயிரும் வாழவணை தற்குரிமை மந்தா கினிக்கில்லைநம்
மார்பினுக் கேயுள்ள தென்றுகுறி யிட்டதென மறைகூறு குறிகடந்தோன்,
பூமேவு மார்பினொண் முலைக்குறி யமைத்துமகிழ் புண்ணியக் கொம்பையெவரும்
போற்றுமண வைத்திருவெண் ணீற்றுமை யெனப்பொலி பொலங்கொடியை யினிதுகாக்க,
காமேவு பேருலகி லாருயிர்ப் பயிரெலாங் கலிவெப் பொழிந்துதழைவான்
கடையரிய தடையிடையி லடைவரிய பெரியதண் கருணைமழை பொழியநாளுந்,
தேமேவு பங்கயச் செல்வியக லொண்கட் செழும் பரவை யுட்படிந்து
திதலைகொண் டெழுமனையள் கொங்கைப் பொருப்பிற் செறிந்துவளர் பச்சைமாலே.

சிவலோகத்தியாகர்

34.
தேமலிக டுக்கைநதி யாரறுகு கொக்கிறகு சீறரவு பூமத்த மாமுடிச் சாத்தினர்
<஠><஠><஠> தேடுமிரு வர்க்கரிய ராகியுமு ரைக்கரிய சீர்கொண்முத னூல்பற்றி யாய்பொதுக் கூத்தினர்
தீர்வரிய மத்தவினி தாவருள னப்பல்பல தேவர் பின்வி டார்செப்பு நீடுதிச் சோத்தினர்
<஠><஠><஠> தேரருநி ருத்தமக லாதுதரி சித்துவகை சேருமர வோடுற்று வாழ்புலிப் போத்தினர்,
நாமலிபு கழ்ச்சியைய வாவியடி யர்க்குறுதி நாடியவர் பாலுற்ற தீமையைப் பாற்றுவர்
<஠><஠><஠> நானெனதெனப்புகலு மூனமத றுத்துயரு ஞானநெறி யோர்பெற்ற பேறெனக் கேற்றுவர்
நாமரன டிக்கடிமை யோமெனநி னைப்பவரை நாகவிமை யோருட்பராவிடத் தூற்றுவர்
<஠><஠><஠> நாடுதிரி யக்கரரு ளாளர்மண வைக்கிறைவர் நாதர்சிவலோகத்தி யாகரைப் போற்றுவ,
மாமலிக துப்பினொளி மேயதர ளப்பிறைவிண் வாழுமுகின் மேலுற்ற வோர்பிறைக் கேய்ப்புற
<஠><஠><஠> வாளவிரு முத்தவட ஞானநிறை வுற்றமுலை மாறில்புக ழேயொத்து மீதுறப் போர்த்தெழ
மாமதிய கத்திலெழு சீதநில வொத்துமுக வாய்முதிர்வி லாசத்து வாளின்மெய்ப் பாற்பொலி
<஠><஠><஠> வாரிசம லச்சரண நூபுரமொ லித்தெழநன் மாதவர்முன் மேவொப்பி லாவருட் பார்ப்பனி,
காமலிபொ ருப்பின்மக ளாயவனை முப்புவன காரணிக லாசத்தி பூரணக் கார்க்குயில்
<஠><஠><஠> காதலகல் பித்தர்குண மேததுசெய் பத்தர்பிழை காமருள மேவக்கொ ளாநலச் சூற்பிடி
காவிமல ரொத்தவிழியோவியநி கர்த்தமயில் காணுலகெ லாமொத்த வாவுமெய்க் கீர்த்தியள்
<஠><஠><஠> காசில்கலை முற்றுமுணர் வோருமுண்ம திப்பரிய காரிகைவி பூதிக்கல் யாணியைக் காக்கவே.

பொய்யாதவிநாயகர்

35.
கலர்மல வாய்ப்படு பேயருட் சேற்றுமோ
கமகல வேட்டமர் தூயர்மெய்ப் பாற்பொலி
யுலர்தலி னார்ப்பெரி யாருளக் காட்டிடை
யுலவுபொய் யாக்களி யானையைப் போற்றுது
மலரமர் சீர்த்திரு மாதர்கட் கார்க்குயி
லடியரை யேற்றிடு பேரளிப் பேட்டன
மலர்மலி நீர்த்தடம் வாரியொப் பாப்பொலி
மணவைவெ ணீற்றுமை யாடனைக் காக்கவே.

சுப்பிரமணியக்கடவுள்

36.
உணர்பெரும்புவன வுயிரெனுங்குகையு ளுறைதருங்குகனை வெள்ளிவெற்பாத்தனு
ளுணரநன்குமொழி யுணர்விறந்தபொரு ளுதவிநின் றவருள் வள்ளலைக்கூர்த்துதி,
புணரலங்கலயில் வலனயந்துபகை பொருதுவென்ற விறன் மெய்யனைப்பூக்கமழ்
புனமடைந்திளைய குறமடந்தைமுலை புணருவந்தமயி லையனைப்போற்றுது,
மிணர்படுங்கனக தருவெழுந்தமல ரிலகுகொம்பரென வள்ளிலைச்சூற்படை
யிறைவனெஞ்சிலினி தமர்பசுங்கிளியை யெழில்கனிந்தமட வெள்ளனப்பேட்டினை,
வணர்நருங்குழலை மலைமருந்தையருள் வடிவையம்பிகையை விள்ளிசைப்பாட்டளி
மருவுபைம்பொழிலின் முகிலுறங்குவள மணவையெங்களுமை யையையைக்காக்கவே.

நான்முகன். வேறு.

37.
வலமலியு மத்திரஞ் சத்திர முதற்பல வயப்படைக் குப்படையெனும்
வாக்காயு தங்கொண்டு தான்கொண்ட வைதிகநன் மாண்பினுக் கேற்பநாளு,
நலமலியும் வெண்மணி வடங்கையிற் றூங்கவெண் ணகையனைய வுருவமேனி
நாயகி மணந்துவெள் ளோதிம நடாத்துமொரு நான்முகக் கடவுள்காக்க,
வுலமலியு மெண்டோ ட் பிரானைப் புணர்ந்துசே யொன்றீன்ற மோகினியெனு
மொருமாது மற்றவன் றிருமடைப் பள்ளியக மோவா துறப்புரிந்து
குலமலியுமனையநா யகனைநீங் காதுமகிழ் கூர்ந்தமர்ந் துலகம்வாழக்
கொழிக்குமரு ளம்மையைச் செம்மைநல் லூர்க்குடிகொள் கோமளக்கிளிமொழியையே.

இந்திரன்

38.
முன்னுசுப் பிரமணிய னோமென்று நன்றுமறை முக்கா லுரைக்கமேவு
முருகனரு மருகனுவர் பருகுபுமெய் கருகுபுகழ் முகில்புரையு மேனியண்ணன்,
மின்னுதன் பின்னெனப் பெற்றுவற் றாதகவுள் வெள்ளவெள் ளானையூர்ந்து
விண்ணாளு மாயிரங் கண்ணாளு மேனியுடை வேந்தன் பரிந்துகாக்க,
பன்னுதிருவுதரம் வருந்துதலிலாதண்ட பகிரண்ட முற்றுமீன்ற
பளகரு தனைப்போல மேனையுந் தனையீன்று பாய்புகழ் படைக்கும்வண்ண,
மன்னுமருள் புரிபசுங் கொம்பைவம் பைப்பொரு மதர்த்தமுலை தாங்கியேங்கி
வாங்கிமெலி தருநுண் மருங்குலை நெருங்குவள மணவைவெண் ணீற்றுமையையே.

திருமகள். வேறு.

39.
பிறந்த மனையில் வாழ்க்கையிலர் பேதை மாத ரென்னுமொழி
பிழையே யாக மணிவண்ணப் பெருமான் றனைத்தான் பிறந்தவள
முறந்த மனைவா யாய்ப்பாடி யுறிப்பால் கரவிற் கவர்சிறுமை
யொழியத் தாபித் துருவாழ்க்கை யுற்று மகிழ்மா மகட்பணிவா
மறந்த வாத மழுப்படைக்கை வள்ளற் பெரியோன் றலைமதிதான்
மாறாக் கலக்க முறமுனியு மலர்த்தா ளெனினு மறத்தொழிலிற்
சிறந்த சிறியேங் கடைமதிதான் றீராத் தெளிவு பெறவுவக்குந்
திறத்தி னமைகுந் திருநல்லூர்ச் செல்வக் கொடியைக் காக்கவென்றே.

நாமகள்

40.
தன்னா யகன்றன் மேனிநிறந் தனையொப் பாய நிறமலர்மேற்
றங்கல் போற்றன் மேனிநிறந் தனையொப் பாய நிறமலரு
மன்னா நிறைவெள் ளறிவுடையேம் வாக்குங் குடிகொண் டமர்கருணை
வண்மைப் பனுவலாட்டியிரு மலர்த்தா டலையால் வணங்குவா
முன்னா நின்ற கங்கைமக ளொடுங்கி யடங்கி யேமாற
வும்பர் பெருமான் றிருமேனி யொருபால் கவர்ந்து மமையாமே
முன்னா வனையன் றிருவுள்ள முழுதுங் கவர்ந்துதுள் ளிறுமாக்கு
முத்த மூரற் றிருமணவை முதல்வி தன்னைக் காக்கவென்றே.

துர்க்கை

41.
மலையா நிற்கும் வெள்விடையும் வான மறைக்குஞ் சிறைப்புள்ளு
மதவெண் பகடுங் கரும்பகடு மானு மீனு மற்றுளவு
முலையா வெனக்கு மெதிரோவென் றுரைக்கும் விறலோ ராண்சிங்க
முகைக்குந் திறலோர் பெண்சிங்க முள்ளக் குகையு ளுறத்துதிப்பா
மலையார் செறுவிற் கோட்டெருமை யங்கட் கருன்பு கறித்தருந்த
வதன்வா யிருபால் வழிதீஞ்சா றவாவி யுண்ணும் பலவண்டர்
விலையா வல்குல் லிற்குமினார் மிளிர்வாயூற லுணும்விடரை
விழையு மணவைத் திருநல்லூர் வெண்ணீற் றுமையைக் காக்கவென்றே.

சத்தமாதர்

42.
பறயோ திமமு மறையுமிமிற் பாழி யேறும் பினாகமும்போர்
பயிலு மயிலு மயிலும்வலி படுபுள் ளரசுந் திகிரியுமொய்
யுறைசீ யமும்வன் கலப்பையும்வெள் ளொருகை வரையும் வச்சிரமு
முழலும் பேயும் சூலமுந்தம் மூர்தி படைசெய் யெழுமாத
ரிறையோ னுள்ளத் தழகொழுக வெழுதி நோக்கு மோவியத்தை
யெண்ணில் புவன மொருங்கீன்று மிளமை வளமைப் பசுங்கிளியை
மறையோ லிடும்பொற் றிருவடியென் மனத்தும் பதிக்கு மனத்தைநகு
மணநல் லூரின் வெண்ணீற்று மயிலைப் பரிந்து காக்கவே.

முப்பத்துமுக்கோடி தேவர்

43.
சீதரன்மலர்த்தவி சிருக்கையனிவர்க்கரிய வொப்பற்றமெய்சோதி பாதியுருவிற்பொலி
தேவியையுருக்கிளர் முருக்கித ழிதழ்க்கிளியை யெப்பற்று மற்றாருண் மேலியவருக்குறு,
காதரமறுத்தவர் பவக்கடல்சுவற்றிமகி ழப்பெற்றிமிக்காளை மூவிருமுகத்தொரு
காளையைமதக்கவு ளுடைக்கயமுகத்தமரனைப்பெற்றநற்றாயை மேதகுகுணத்தியை ,
யோதரதநச்செழு வடத்தொடொளிர்முத்தவட முற்றுச்சி றப்஧பெறு ஞானவமுதக்கட
லூறுகல சத்துணை முலைதுடியிடைக்கொடியை யற்புக்கி னிப்பாளையாரருளொருத்தியை,
யாதரமிகப்பெரு மணத்துமெமனத்துமமர் முத்திக்குவித்தாய தாளுடையசத்தியை -
யாதவருருத்திரர் மருத்துவர்வசுக்களெனு முப்பத்துமுக்கோடி தேவர்கள் புரக்கவே.

காப்புப்பருவம் முற்றிற்று
-----------------------------
2. செங்கீரைப்பருவம் 44.
நீர்பூத்த முப்பத் திரண்டறமு மோம்ஒஉபெரு நிறைவின்மே னோக்கிமலரா -
நீதிகீழ் நோக்கியே மலர்தலென் றியாவரு நிகழ்த்துநின் னிருகைமலரு,
மேர்பூத்த புவியிற் பதித்தொரு முழந்தா ளிருத்தியொர் முழந்தாளெடுத் -
திரவிமண் டலமென்ன விருகுதம் பைக்குழைக ளெங்கும்வில் வீசியாடத்,
தார்பூத்த முச்சியிற் கட்டிவிடு நித்திலத் தண்மணிச் சுட்டியுநலந் -
தழையுநுத லிற்பொலிவெண் ணீறுமொண் டிலதமுந் தளவனைய குறுமூரலுஞ்,
சீர்பூத்த வெண்ணிலவு வீசியா டக்கவுரி செங்கீரை யாடியருளே -
திருப்பெரு மணத்தம ரருட்பெரு மணச்செல்வி செங்கீரை யாடியருளே.

45.
பேசும்புகழ் சால்பெரும் புவனத்தி லாண்மகப் பெறல்சிறப்பென்றுமற்றைப் -
பெண்மகப் பெறலத் துணைச்சிறப் பன்றுதுயர் பெற்றதொப் பாகுமென்று,
மாசுபடு துன்பமே பெண்ணுருவ மாயெந்த வைப்பினும் வருவதென்று -
மதிக்கினொரு மகவுமக வாவென்று மிங்ஙனம் வகுத்துரைப் பார்களேடு,
கூசுத லிலாதக மலர்ந்தாண் மகப்பெறுதி குறைவுதப வென்றாசிமுற் -
கூறுநரு முள்ளநாண் கொள்ளவென் ளப்படாக் குவடுவா னணவவோங்குந்,
தேசுமலி பனிமலைக் கொருபுதல்வி யாயவுமை செங்கீரை யாடியருளே -
திருப்பெரு மணத்தம ரருட்பெரு மணச்செல்வி செங்கீரை யாடியருளே.

46.
தையலர மாதர்முதல் யாருமோ கித்துத் தழீஇக்கொளாத் தடைகருதியோ -
தாமே விரைந்தின்னு மோகினியை முன்போற் றழீஇக்கொளல் விலக்கெண்ணியோ,
வையமிசை யவரிடைத் தான்கொண்ட வார்வத்தை மன்னுயிர்க் கறிவிக்கவோ -
வயங்கருவ மெற்றிவ ரியங்குருவ மற்றெனு மறைப்பொருளை வெளிசெய்யவோ,
வுய்யநெறி தருசைவ சித்தாந்த மோதுமுடி பொன்றியொன்றாமையிற்றென் -
றுணர்த்தவோ வுணர்வரிய வுணர்வுருவ மாகியெம் முணர்வொழித் துணருமொருவர்,
செய்யதிரு மேனியொரு பாதியமர் பைங்கிள்ளை செங்கீரை யாடியருளே -
திருப்பெரு மணத்தம ரருட்பெரு மணச்செல்வி செங்கீரை யாடியருளே.

47.
நிறைசுகுண மருவுநம் மிருகண்மல ரிலமெண்று நினையாம லொன்றழிக்கு
நிலவுநங் கையமரு மலரென்று நினையாம னிதமுநிக ழொன்றழிக்கு
மறைபுகலு நங்காமர் மெய்யிலொன் றிரவுபகன் மாறாத வெப்புறுத்து
மற்றொன்று மாற்றவ ளொடுங்கூடி மற்றதை வயக்குமிவை யன்றியின்யுஞ்
குறைவரிய வுவளகத் தும்புகூஉ நாணநாங் கொளவிரண்டுங் குடிகொளுங்
குலவிவற் றின்றிறமை யென்னையறி வாமென்று குன்றுமா றிருகதிரையுஞ்
சிறைசெய்த தெனவிறை முகக்கண் புதைத்தபெண் செங்கீரை யாடியருளே
திருப்பெரு மணத்தம ரருட்பெரு மணச்செல்வி செங்கீரை யாடியருளே.

48.
பொருந்துபசி யால்விழி யிரண்டும் பிசைந்தழு புலிக்குருளை யொன்றுவப்பப் -
பொங்குபா லாழியை யழைத்துக் கொடுத்தசிவ புண்ணியன் புகழ்சமழ்ப்ப,
மருந்துநல் விருந்திஃ தருந்துக பொருந்தவென மறையுணர வரிய பெரிய -
மாதேவன் வின்மணிக் குழைதழை செவிக்கண் மறைத்தமிழ் நிறைத்தூட்டுமா,
குருந்துமழ களிறொளி விளக்கெனச் சண்பையிற் குலவுபர சமயசிங்கக் -
குருளையு ளுவப்பமெய்ஞ் ஞானவின் பான்முன் கொடுத்தபைங் கோலமயிலே,
திருந்துந லருந்தவ ருளம்புகு விளக்கமே செங்கீரை யாடியருளே -
திருப்பெரு மணத்தம ரருட்பெரு மணச்செல்வி செங்கீரை யாடியருளே.

வேறு

49.
சூழியமுஞ்சிறு சுட்டியும் விட்டொளிர் சோதிவிரிந்தாடச்
சூடுதுதிச்செவி நீடுங்குழையுந் தோடு மசைந்தாட
வீழியவாவுசெவ் வாயினெழுங்குறு வெண்ணகை நிலவாட
வெள்ளியபிறைநுத லென்பது மெய்யென வெண்ணீற் றொளியாட
வாழியவாழிய வென்றுமுனின்று வழுத்தும் பேரடியார்
மாறாவன்பென்னும் வாரிகுடைந்து மகிழ்ந்த்வர் சன்மமெனு
மாழியவாழி சுவற்றுமடப்பிடி யாடுக செங்கீரை
யல்லூர்பொழிலமை நல்லூரெழிலுமை யாடுக செங்கீரை.

50.
நிறைதருமம்பல வுறைதருகரமலர் நிகழ்சிறு வண்டாட
நிலவெழுதிருமுக மதிவாயூற னிரம்புஞ் சுதையாடப்
பொறைதரு கருணையின் முழுகியகயல்கள் பொலிந்து புரண்டாடப்
பூவனம்பலவு மடங்கியவுதரம் பொற்பு மலிந்தாடக்
கறைதருகண்டர் கருப்புவின்மாரர் காய்ந்த துளத்தோர்ந்து
கரைதருநும்வலி காண்குவலின்னே காண்கென வறைவதுபோ
லறைதருசென்னி யசைந்தாடத்தனி யாடுக செங்கீரை
யல்லூர்பொழிலமை நல்லூரெழிலுமை யாடுக செங்கீரை.

51.
விண்ணலைபிறையு நிறையுந்துறையும் மேவிய சடையாட
மிளிர்பொன்னாடைய னேத்துந்திருவரை வெம்புலி யுடையாடக்
கண்ணலைநீரொடு நெக்குருகன்பர்கள் கைகள் குவித்தாடக்
காமருகொன்றை யொடுந்தலைமாலை கலந்து புயத்தாடப்
பண்ணலையாம லெழுப்பிசைவல்லவர் பாடிசை யூடாடப்
பதினாலுலகு மசைந்தாடக்கழல் பற்று சிலம்பாட
வண்ணலைமன்றிடை யாட்டுஞ்சூட்டன மாடுக செஞ்கீரை
யல்லூர்பொழிலமை நல்லூரெழிலுமை யாடுக செங்கீரை.

வேறு

52.
இகழ்தலிறவமுயல் பவர்வினைநினைமுனி கந்தேநின்றார்யா
மினையமுனடிமைய மருள்கெனவிமையவ ரென்பாரன்பாரா
யகழ்மலமெனவனு தினமுறையிடவடி யன்பானன்றேயா
யருண்மழையிடையொழி வதுதவிர்வகைபொழி யஞ்சேருங்காரே
புகழ்மிகுகவுணிய மதலைமுனழுகைத விர்ந்தார்வங்கூர்சீர்
புனைதரநினைதரு மமுதுதவியமுலை நங்காய்செங்கேழே
திகழ்பவர்திருவுரு வொருபயலமர்மயில் செங்கோசெங்கீரை
திருவளர்மணவையின் மருவளர்குழலுமை செங்கோசெங்கீரை.

வேறு

53.
வேலைமருட்டிய வாள்விழியற்புத நங்காய்சந்தாதி
மேருவளைத்தவர் மார்புதுளத்தத னம்பூசுந்தாயே
பாலையினித்தெழு தேனையகற்றுசொல் கெண்டாய்வண்டாயும்
பான்மைமலர்க்குழ லாய்மலைபெற்றம ருந்தேசெந்தேனூர்
சோலைநலக்கிளி யேயமுதொத்தக ரும்பேசெம்பாகே
சூழுபவர்க்கிக லாயவொழித்தவர் தம்பாலொன்றீவாய்
சேலையெடுத்தகை வேளைநிறுத்தினள் செங்கோசெங்கீரை
சீர்மணவைப்பதி வாழுமடப்பிடி செங்கோசெங்கீரை.

செஙக்ணரைப்பருவம் முற்றிற்று
-----------------------------
3. தாலப்பருவம் 54.
வாங்குங் கொடி நுண் ணுசுப்பொசிய வார்க்குங் குமவன் முலைசுமந்த
மடவ நடைமங் கையர்நறிய மாலைக் குழல்கட் டவிழ்க்கவது
தாங்கும் விரைமென் றுகள்வீழ்ந்து தவழ்ந்தம் மடவார் முலைகழித்த
சாந்தும் புழுகுங் குங்குமமுந் தணவா தழுந்து சேறாகித
தேங்குந் திருவீ தியிற்படிந்து செறியு மீரம் புலர்த்தலினத்
தெரிவை மாரு மைந்தர்களுஞ் சிந்தைக் கவற்சி யறுத்தியங்க
வோங்குந் திருவத் தமிழ்மணவை யுறைவாய் தாலோ தாலேலோ
யுலக முவக்குந் திருவெண்ணீற் றுமையே தாலோ தாலேலோ.

55.
வண்கா லென்ன வாயென்ன வாய்க்கா லெனக்கால் வாயெனப்பேர்
மருவி மாறா வனங்கொணமை மான நல்லூர் பெருமணம்வா
னெண்கா நல்லூர்ப் பெருமணமே ரேய்பெ ருமண நல்லூரென்
றிலகு பெயர்பூண் டுறுவனமேய்ந் தென்றும் விளங்கு மிந்நகரைத்
தண்கா லறிஞர் பலர்குழுமித் தவாது சூழ்ந்து மருவுதலாற்
றாவா நாமு மெஞ்ஞான்றுந் தவாது சூழ்த றகுதியென
வொண்கால் பலசூழ் சிவலோகத் துறைவாய் தாலோ தாலேலோ
வுலக முவக்குந் திருவெண்ணீற் றுமையே தாலோ தாலேலோ.

56.
காரார் கலிநீர் முகந்தெழுந்த கமஞ்சூற் கொண்டல் கருக்கலங்கக்
கலைவான் மதியத் துடல்போழக் கற்பத் தருவின் கழுத்தொடிய
நீணரார் தடத்துத் தகட்டகட்டு நெடிய வாளை மேற்பாய
நிகழ்கார் மேதி படிந்துழக்கி நெல்லின் கற்றைக் கதிர்மேய்ந்து
சீரார் நறுந்தா மரைகுதட்டிச் செங்கட் கரும்பு கறித்தருந்தித்
தேமா நிழலிற் பேருணவு செறித்துண் டிடலே பொருளெனக்கொ
ளோரார் போலத் துயின்மணவை யுறைவாய் தாலோ தாலேலோ
வுலக முவக்குந் திருவெண்ணீற் றுமையே தாலோ தாலேலோ.

57.
நிலவு தமைநன் கினிதுயிர்த்த நிலமா கியநற் றாய்மகிழ
நிரம்பு பயமூட் டுபுவளர்த்து நிகழ்கா ராய செவிலித்தாய்
குலவு பசிதீர் தரவுணவு கொள்ளுங் கலத்தி னுவர்விரவுங்
கொள்கை தீதென் றதுகடிவான் குறித்த பொழில்கள் பலவுநிறை
பலவு மினிய தேமாவும் படர்நெட் டிலைய கதலிகளும்
பண்பி னுயிர்த்த கனிச்சாறு பாய்ச்சி நிற்ற லாற்றிசைபோ
யுலவு புகழ்சால் வளமணவை யுறைவாய் தாலோ தாலேலோ
வுலக முவக்குந் திருவெண்ணீற் றுமையே தாலோ தாலேலோ.

58.
கத்துந் தரங்கக் கடலெழுந்து கழியின் வழிவந் திழிவிலழல்
காலு மொளியுங் கருகவொளி காட்டுந் துகிரும் வளையீன்ற
முத்தும் பரப்ப வதற்கெதிரே முகில்வந் துறங்கு முயர்பொழில்கண்
முனிவின் றேற்றுக் கனிவினொடு முகந்து பரிவர்த் தனைசெயல்போற்
கொத்து மலியும் பைங்கமுகின் குலைச்செம் பழமும் வெண்முகையுங்
கொட்டி நிற்ப வதுகண்டு குளிர்வா னாதி யெவ்வுலகு
மொத்து நவிலும் புகழ்மணவை யுறைவாய் தாலோ தாலேலோ
வுலக முவக்குந் திருவெண்ணீற் றுமையே தாலோ தாலேலோ.

வேறு

59.
கருணைததும்பி வழிந்துபரந்த சடைக்கட் செந்தேனே
கடயேன்மூல மலத்தைவிளர்க்கக் காணுங் குழலமுதே
மருமலிபைந்துள வத்தொடைமாமுகில் வந்தபின் வந்தமினே
மாறாவன்ப ருளத்துமுளைத்து வளர்ந்தெழு பைங்கொடியே
பொருவருபைங்கிளி தாங்கியசெங்கைப் பொற்புயி ரோவியமே
புயறவழ்சிமயத் திமயப்பிடியே பொலிமலர் மாளிகைவாழ்
தருணமடந்தையர் தாழுங்குயிலே தாலோ தாலேலோ
தண்ணியமணவைப் புண்ணியமயிலே தாலோ தாலேலோ.

60.
உழைதருகையுடை யெந்தைபிரானுக் குடனொழி யாதமரா
வோங்குசிருட்டிமு னோரைந்தொழிலு மொருங்கு முடித்திடுவாய்
குழந்தருசிந்தையி னெக்குருகிக்கசி கொண்டுகை கூப்பிடுவார்
குவிதலிலாத வுளக்கோயிற்கிடு கோலம் பொலிசுடரே
மழைதருமுகிலும் விளர்ப்பவிருண்ட மலர்க்குழ லோதிமமே
மாறாவினையேங் குடிமுழுதாண்டுற வாழ்வித் திடுமமுதே
தழைதருமறையெனு மாவிற்குயிலே தாலோ தாலேலோ
தண்ணியமணவைப் புண்ணியமயிலே தாலோ தாலேலோ.

வேறு

61.
உணர்பவருட்பொலி மழகதிரொத்தொளிர் தாயே நாயேனா
யுழலுமெனக்குந லருள்பொழியித்தம மாதே போதேவாழ்
புணர்முலையற்புத மகளிர்பழிச்சிடு தாளாய் வேளாயே
புவனமனைத்தையு முதரமடக்கிய மாதா வேதாவே
யிணர்மலரிற்குதி கொளுநறவொத்தமெய் வாழ்வே தாழ்வேக
வெனவயன்முற்பல வாமரரிக்குமு னீவாய் பூவாயேர்
வணர்கொண் முகிற்குழல் வதிபிறைமெய்க்கவு மாரீ தாலேலோ
மணவைநகர்த்தலை மருவுமகத்துவ மானே தாலேலோ.

வேறு

62.
வந்திப் பவர்பெரு வாழ்வேதாழ்வே யாழ்வேனாம்
வஞ்சக் கொடுவினை நாயேனோயா தேயாயா
முந்தித் திருவருள் சாராவோரா வேராரா
மொய்ம்புற் றிடவருண் மானேதேனே கோனேயா
நந்திப் பொலிமலை மாதேசூதே யோதேர்சா
னன்றற் புதமுலை யாளேவாளே நீளேவே
சிந்தித் திருவிழி யோராய்தாலோ தாலேலோ
திண்பொற் புரிசைநல் லூராய் தாலோ தாலேலோ.

வேறு

63.
கரிகணாயவை யேவாய் தாலோ தாலேலோ
கருதுநர்பாலொளி யாவாய் தாலோ தாலேலோ
வரியபெமானிட மோவாய் தாலோ தாலேலோ
வருள்வரமேபொழி நாவாய் தாலோ தாலேலோ
வுரியரலாருயிர் காவாய் தாலோ தாலேலோ
வொளிர்முலையாமத மாவாய் தாலோ தாலேலோ
பிரியமுறாருள மேவாய் தாலோ தாலேலோ
பெருமணமேவிய பாவாய் தாலோ தாலேலோ.

தாலப்பருவம் முற்றிற்று
-----------------------------
4. சப்பாணிப்பருவம் 64.
பார்வளர் மதிக்குழ வெனக்கழு மலத்துற் பாவித்தென் பவந்துடைத்த
பரசமய சிங்கமென் றுரைசெயும் பாலறாய் பவளவா யார்மணத்துக்
கார்வளரொ ராணவமு மிருவினையு மும்மலக்கட்டுமுட லாதிநான்குங்
கருதுசாக் கிரமாதி யைந்துமந் திரமாதி கரையாறு நீந்தியெழுமா
றார்வமுற மூழ்கிப் புறத்தடையுமாசென வகத்தடையு மாசுமண்ணி
யான்றபஞ் சாக்கரப் புனலகன் கரைமேவு மாருயிர்க் கருள்சுரந்து
சார்வரிய வெண்ணீறு நல்குந் திருக்கைகொடு சப்பாணி கொட்டியருளே
தருமணந் தவழவமை பெருமணங் கமழுமுமை சப்பாணிகொட்டியருளே.

65.
வேயெனப் பொலிபசுந் தோளுடைய மலர்மாதர் மென்கையங் காத்த டாங்கு -
மிளிர்கமல மலர்பகலு மிரவுமெழு மிருசுடர் விராவுற விழுங்குமரவு,
மாயெனப் பொலிகருணை யம்மான் றிருக்கையொ டளாவுங் கெளிற்றுமூல -
மன்புபுரி வழியடியார் பவவாரி முழுமையு மலைத்துச் சுவற்றுவடவை,
சேயெனப் பொலிவரைக் கிழவன்விழி வளருந் திருந்தலர் படுத்தவமளி -
தெய்வவற முப்பத் திரண்டையும் வளர்க்குநற் செம்மையான் மிக்கசெவிலித்
தாயெனப் பொலிநின்கை மலர்முகிழ்த் தம்மையொரு சப்பாணி கொட்டியருளே
தருமணந் தவழவமை பெருமணங் கமழுமுமை சப்பாணிகொட்டியருளே.

66.
குழைதரச் சுவைமதுப் பொழிதண்டு வாங்கிக் குலாவுஞ் சுருப்புநாணுங்-
கூட்டியதின் மலரொன்று நாட்டிவலி காட்டியெதிர் கொற்றவேள் பொற்ற காமர்,
விழைதரப் பொலியுருவு முற்றுமழல் பற்றுமொரு வெவ்விழிக் குணவு செய்த-
மெய்யர்சிவ லோகத் தியாகர்பனி மால்வரை விருப்பிறு மணப்பந்தரி,
னிழைதரத் தக்கவிடை யொசியவன முலைசுமந் திணர்மலர்க் கொம்பினிற்கு-
மேந்தெழினி னருகுற்று மறைமுழங் கப்பல வியங்கலிப் பப்பல்புவனந்,
தழைதரப் பற்றுகைத் தாமரை முகிழ்த்தம்மை சப்பாணி கொட்டியருளே -
தருமணந் தவழவமை பெருமணங் கமழுமுமை சப்பாணி கொட்டியருளே.

67.
செய்யகம லம்பொருவு மென்பது திறம்பச் செயற்கைச் சிவப்பெழுந்து
செறிதரக் கன்றுமென் றெண்ணாது பதுமுனுஞ் சேர்ந்தறி தராதவிவைகள்,
வையமிசை யிவர்முனஞ் சேர்வதோ வென்றுள மதித்திடா தண்டரண்ட-
மாண்டபகி ரண்டமுற் றீன்றளிக் குங்கருணை வாஞ்சைநற் றாயாதலான்,
மையவிரு மெங்கள்கண் மலரோடு வதனமு மலருமா றுளமிரங்கி -
வளமொழிப் பைங்கிள்ளை தாங்கியத னிறகுதை வந்துநந் துவகையுறுநின்,
றையலமர் கைம்மலர் முகிழ்த்தம்மை யம்மையொரு சப்பாணி கொட்டியருளே-
தருமணந் தவழவமை பெருமணங் கமழுமுமை சப்பாணி கொட்டியருளே.

68.
உரவுமறை பாடுசிவ லோகத் தியாகரென் றுரைசெய்நின் கொழுநர்மகிழ -
வுள்ளங் கசிந்துநெக் குருகியுரு கிக்குழைந் தோங்குதுதி பலபாடுவோங்,
கரவுதவிர் மூத்தநின் மகற்கினிய மோதகங் கைதொடப் பலபடைப்போங் -
கருதிள மகற்குநறு மான்மதஞ் சாந்தங் கருப்பூர மப்பிவிடுவோம்,
பரவுமந் தாகினி நினக்கடிமை செய்யுமொரு பாவையென் றேநாட்டுவோம்-
பரிந்துனைத்துதிபுரிதல் சொல்லவேண் டுங்கொலெம் பாலருள் சுரந்துமிக்கா,
தரவுபெருகக்கர முகிழ்த்தம்மை யம்மையொரு சப்பாணி கொட்டியெருளே
தருமணந் தவழவமை பெருமணங் கமழுமை சப்பாணி கொட்டியருளே.

வேறு

69.
வேட்டுப் புயறவழ் சியமத் திமய விலங்க லிடைத்தோன்றி
விண்ணவர் மண்ணவ ரெண்ணுமொர் வெள்ளி விலங்க லிடைத்தனியே
பாட்டுப் பிரமர முளருங் கொன்றைப் பைந்தார் வேய்ந்துலவும்
பண்பார் பிரணவ குஞ்சர மேவிப் பாரொடு விண்வெருவு
மோட்டுத் திறல்கொ டுலாவிரு கோட்டொரு மூரிச் சினவேழ
முனைமுதன் மாய்ந்தொரு வரைபோற் சாய்தர முனிவிற் பொருமொருவெண்
கோட்டுக் களிரு பயந்த மடப்பிடி கொட்டுக சப்பாணி
குணவைப் பெனவமை மணவைப் பதியுமை கொட்டுக சப்பாணி.

70.
தமரத் திரைபடு தொடுகட லுலகிற் றண்ணிய பிரமபுரந்
தழைதரு வேணு புரப்பெயர் பூணத் தாவில் வரங்கொண்டே
யமரர்க் கதபதி முதலியர் திருவனை யார்புக ழொடுகூட்டுண்
டண்ட மடங்க நடாவு கொடுங்கோ லாளியு மவனிளைய
பமரத் தொடைநெடு முடிவலி யினரும் பன்மைந் தருமிடையும்
படையும் முடையும் படிதடி கடிவடி பயிலயில் வலனேந்து
குமரக் கடவுளை யீன்ற கருங்குயில் கொட்டுக சப்பாணி
குணவைப் பெனவமை மணவைப் பதியுமை கொட்டுக சப்பாணி.

71.
பிறைமதி நிறைபுன லுறைதரு சடிலப் பெருமா னொருமான்வாய்ப்
பெருகொலி யொருசெவி யருகுற நிறுவு பிரானொரு பாலமர்வாய்
கறைதப மறைமுடி போதுமொர் கிள்ளை கலந்தமர் கைக்கிளியே
கடையேன் குடிமுழு தாண்டு விரும்பிக் காக்கும் பைங்கொடியே
மறைமுழு வதுமே கலைசெய் தரையணி மாதே மாதரசே
மலையி லுதித்த மருந்தே வெள்ளிய வாணகை யோதிமமே
குறையற வடியவர் பார்பொலி சுடரே கொட்டுக சப்பாணி
குணவைப் பெனவமை மணவைப் பதியுமை கொட்டுக சப்பாணி.

வேறு

72.
சிறுமதி நதிபொதி மிடைசடை யுடைய ரிடத்தும டப்பாவாய்
செறிதவர் மனவிருண் முழுதற வவணொளிர் பத்மப தத்தோயே
மறுவறு கதிரொடு மதியுற வூறுமிரு ளொத்தகு ழற்கோதாய்
மறுகுறு சிறுகிடை யொசிதர வளரிள முத்தமு லைத்தாயே
கறுவொடு மொழுகொடு விடமமிர் துறவிடு கட்கடை நற்றோகாய்
கதிர்விழி யொனவொரு தமியனொள் ளொளிமுழு கத்தயை வைப்போயே
குறுமுனி தொழுதெழு பனிமலை வருமயில் கொட்டுக சப்பாணி
குளிர்மலி பொழிலெழின் மணவையி லமர்குயில் கொட்டுக சப்பாணி.

வேறு

73.
படவர வச்சுமை முழுது முணப்பசி யுற்றவ னத்தாரர்
பதும மலர்த்தலை யமர்மறை வித்தக ரட்டதி சைப்பாலர்
கடவுளர் மற்றையர் முனிவரர் பத்திசெ யப்படு மெய்த்தேவே
கமலம லர்த்தலை மகளிர்மு தற்பல ரற்புறு கற்போயே
மடமை யறுத்தென திதயம லர்க்கணி ருக்கும னப்பேடே
மதியமு டித்தவர் நிதிய மெனத்தமு ளத்துற வைப்போயே
குடவளை மொய்த்தசெய் மணவை மடப்பிடி கொட்டுக சப்பாணி
குலவிம யத்தனி வரைவரு முத்தமி கொட்டுக சப்பாணி.

சப்பாணிப்பருவம் முற்றிற்று
-----------------------------
5. முத்தப்பருவம் 74.
கொழுதும் வரிவண் டுழுதுழக்கிக் கொழுந்தே னிரம்ப வாய்மடுத்துக்
குமட்டிக் கவிந்தாங் கெதிரெடுக்குங் களிர்மென் மலர்ப்பூங் குழற்கொம்பே
தொழுது மழுதும் புகழ்பாடித் துதித்து முருகி யுருகிநிகழ்
தொண்ட ருளக்கோ யிலுக்கமைந்த தூண்டா விளக்கே சுயங்சோதி
யெழுது முயிரோ வியக்கொழுந்தே யெழுதா வுருவத் திளங்கொடியே
யெழுபேருலகு நினைந்துதொழு தொழுகோ மளமே யிலவாதி
முழுதுமிணையி னின்கனிவாய் முத்தந்தருக முத்தமே
முதுசீர் மணவைப் பெருமாட்டி முத்தந் தருக முத்தமே.

75.
நனியா தரஞ்செய் துள்ளுருகி நைந்து குழைந்து நாத்தழும்ப
நாளும் வழுத்தும் பேரடியார் நலஞ்சா லுள்ளத் தூற்றரும்பி
யினியா நிற்குஞ் சுவையமிழ்தே யேழைத் தொழும்பு பூண்டொழுகு
மெங்கள் குடிக்கு மொருமுதலே யெல்லா வுயிரு மினிதீன்று
கனியா நின்ற பேரருளிற் கசிந்து நோக்கி மகிழ்விக்குங்
கரும்பே புவிமு னாறாறுங் கடந்த முதலி லாமுதல்வன்
முனியா தவாவுஞ் செங்கனிவாய் முத்தந் தருக முத்தமே
முதுசீர் மணவைப் பெருமாட்டி முத்தந் தருக முத்தமே.

76.
விளக்கு மரவிச் செங்கரும்பு விரும்பு சுரும்பு நாண்பூட்டி
விரைக்கோ றொடுத்த வேளுடலம் விழித்தீக் குணவாக் கியதுமறந்
திளைக்குங் கொடிநுண் மருங்குல்கவன் றேங்க வீங்கு மிளமுலையு
மிளகு பசிய வேய்த்தோளு மெழில்கொப் புளிக்குந் திருமுகமுந்
திளைக்குங் காதல் கொடுநோக்குஞ் செய்ய சடைவெண் பிறைமுடித்த
தேவ தேவன் முககமலஞ் செவ்வே மலர வெண்ணிலவு
முளைக்கும் பவளச் செங்கனிவாய் முத்தந் தருக முத்தமே
முதுசீர் மணவைப் பெருமாட்டி முத்தந் தருக முத்தமே.

77.
நத்தங் கமழும் குழற்கோதை நல்லா ரறுவர் திருமுலைப்பா
னன்கு தெவிட்ட வுண்டுபசு நறும்புற் புனற்றொட் டிலினமர்போ
தத்தங் கமழும் படியெடுத்தாங் கணைத்து மார்பி னுச்சிமோந்
தார்வம் பெருக நோக்குதொறு மருளாற் பெரிய யோகியர்தஞ்
சித்தங் கமழுங் கிண்கிணிப்பொற் சிலம்பு புலம்பு சேயிதழ்த்தாட்
டெய்வச் சைவச் சிறுகுழவி திருவா யாறு முவந்தளிக்கு
முத்தங் கமழு நின்கனிவாய் முத்தந் தருக முத்தமே
முதுசீர் மணவைப் பெருமாட்டி முத்தந் தருக முத்தமே.

78.
இழியும் புவனச் சிடுவாழ்வு மமரர் புவனப் பெருவாழ்வு
மம்ம நாளு மருவருக்கு மார்வம் பூண்ட மலபாகர்
விழிய மனமுங் குளிதூங்க விதிகா ணரிய திருவுருவ
மேவி யாவி முதன்மூன்றும் விருப்பின் வாங்கி யெவ்வினையு
மொழியும் படிசெய் நோக்காதி யொன்றப் புரிந்து சிவானந்த
மூறிப் பெருகித் ததும்பியெழ வொன்று மொழிவா ருளங்குளிர
மொழியும்பவளச் செங்கனிவாய் முத்தந்தருக முத்தமே
முதுசீர் மணவைப் பெருமாட்டி முத்தந் தருக முத்தமே.

வேறு

79.
மதிமுத்தம் விரன்வயி ரக்கழற் காறேய்க்க மண்ணிடைத் தேய்ந்த துயர்வேய் -
வருமுத்த மதிலெழுந் தழலால் வெதுப்புண்டு மாமைகரு கியது செஞ்சொற்,
பொதிமுத்தம் வன்பகடு காலுழக் கப்பிளவு பூண்டதா லிப்பிவளைமீன் -
பொலி முத்தம் வெய்யபுல வொழியாது நாறுமொண் பூவையர் களத்துமேவுந்,
துதிமுத்த மவர்மகிழ்நர் கைபட் டதுக்குண்டு தோன்றாது மறையுமிக்குச் -
சுடர்முத்த மாலையி னெரிந்ததிவை வேண்டேந் தொடுத்தபற் பலவுயிர்க்கும்,
பதிமுத்த மேற்றுமகிழ் நிதிமுத்த மன்னசெம் பவளமுத் தந்தருகவே
பல்லூர் விரும்புமெயி னல்லூரரும்புமயில் பவளமுத்தந் தருகவே.

80.
அடரிருட் பொலிவழிய வாயிரங் கதிர்விரித் தாதித்த னுதயமெழுமோ -
ரருவரைச் சிந்தூர வருவியிற் பன்னாளு மாழ்ந்தொளி பரப்பு மணியுஞ்,
சுடர்விரித் தெழுவசிச் சுதரிசன முந்தனித் தொல்வளையு மேந்து மொருவன் -
றுழாய்ப்படலை மறுமார்பி னுக்கழகு செயும்விலைத்தொகையிலா வரியமணியு,
மிடர்கெடத் தகுவரொடு சதகோடி கொண்டுபொரு மேந்தலூர் மணியுமற்று
மியம்புமைந் தலைநாக மணியும்யாம் வேண்டல மெமக்கம்மை செந்துகிரெனப்,
படர்சடை தரித்தபொல் லாமணி யவாவுநின் பவளமுத் தந்தருகவே
பல்லூர் விரும்புமெயி னல்லூ ரரும்புமயில் பவளமுத் தந் தருகவே.

81.
கரவுதீர் பேரருள் விழிக்குடையு மீனுங் கலந்துபர ஞானமூறுங் -
கதிர்முலைக்குடையுங் களிற்றிகன் மருப்புங் களத்தினுக் குடையும் வளையும்,
விரவுபா கெனுமொழிக் குடையுங் கரும்புமெழின் மேயதோட் குடையும்வேயு-
மிளிர்கவா னுக்குடையும் வாழையு முகத்திற்கு மேன்மேலு முடையுமதியும்,
புரவுசால் கைக்குடையு நளினமுநறுங்குழற் பொலிவினுக் குடையு முகிலும்-
பொற்புறத் தருமுத்தம் வேண்டலங் கண்டம் பொலிந்தொளிர நீலம்வைத்த,
பரவுமா ணிக்கமொரு பால்வைத்த மரகதம் பவளமுத் தந்தருகவே-
பல்லூர் விருன்ம்யுமெயி னல்லூரரும்புமயில் பவளமுத்த்ந் தருகவே.

வேறு

82.
மறையின் முடியு மெனது ளகமு மனமு ளுருக நித்தமு
மதுர மொழியி னினிய துதிசெய் மறுவி லடியர் சித்தமு
மறையு மழிவில் கருணை பெருகி யலைய தெறியு மக்கமு
மளவில் பிறவி யுததி சுவற வலர்செய் சரண பத்மமு
நிறையு மழகு பொழியு முகமு மபய வரத வத்தமு
நிகரில் பிறவு மிலக வமரு நிலவு மமல வுத்தமி
கறையில் சிமய விமய முதவு புதல்வி தருக மத்தமே
கரையில் வளமை யளவு மணவை முதல்வி தருக முத்தமே.

வேறு

83.
வஞ்ச மருவு நெஞ்ச மருவு வஞ்சி விலகு சத்தியே
வம்பு தழுவு மென்பு லுரையு நம்பி யருள்செய் பித்தியே
கஞ்ச மருவு மஞ்சன் விறன்மு குந்தன் வெளிய வத்தியூர்
கந்த மலர வங்க வணிபு யன்பன் முறைது தித்துநீ
தஞ்ச மெனவு வந்த னையர்மு னின்ற வொளிரொ ருத்தியே
சங்கு குழையர் திங்கண் முடியர் பங்கி னமர்தி றத்தியே
யஞ்ச முலவு நன்செய் மணவை யம்பை தருக முத்தமே
யன்பர் மனமு வந்த வருள ணங்கு தருக முத்தமே.

முத்தப்பருவம் முற்றிற்று.
-----------------------------
6. வாரானைப்பருவம். 84.
விற்கொண்ட வாணுதற் பட்டமுஞ் சுட்டியும் விளங்கொளி துளும்புசூட்டும்
விரைநறுங் குழலிற் கவிழ்த்திடு தகட்டணி விராயசெம் மணியினொளியுஞ்
சொற்கொண்டவள்ளைச் செவிக்கணமர் தோடுமிரு தோள்வருடி யாடுநீடு
சோதிக் குதம்பையு மிளஞாயி றுதயஞ் சுரப்பமார் பத்துவயிரக்
கற்கொண்ட பணியுமுத் தாரமும் வெண்ணிலாக் கற்றைகால் சந்த்ரோதயங்
காட்டவிரு கைவனை கலிப்பச் சிலம்புகள் கலின்கலி னெனப்புலம்ப
வெற்கொண்ட தளிரடி பெயர்த்துமண வைப்பதி யொழிற்பரா பரைவருகவே
யேகர்சிவ லோகத்தி யாகரொரு பாகத் திருக்குமுமை யாள் வருகவே.

85.
ஆறாறு தத்துவமும் வேதாந்த முங்கடந் தவிர்வனவிண் முழுதுமாளி
யாதிப்பல் வானவரு மாதரிப் பனவுந்தி யன்னமின் னமுமுணர்தரா
நாறாறு தங்குமுடி யொண்மதிப் பிறையஞ்சநகுவன களங்கமொழிமெய்ஞ்
ஞானயோ கியருளங் குடிகொள்வன நைந்துருகி நாத்தழும் பத்துதிப்பார்
கூறாறு காலுழக் காமல ரிடுந்தொறுங் கொண்டவப் பனவென்றுபல்
கூர்த்தமதி யாளர்புகழ்மெல்லடி பெயர்த்தழகுகுலவவிரு பத்தாறினோ
டேறாறு புண்ணியமு மணவுமண வைப்பதி யொழிற்பரா பரைவருகவே
யேகர்சிவ லோகத் தியாகரொரு பாகத் திருக்குமுமை யாள் வருகவே.

86.
திங்களரவங்கண்மலிகொன்றைமலர் துன்றுசடைதேடிமுன்கண்டறிதராச்
செஞ்சூட்டு வெள்ளோதி மந்தொடர வாயிரந் தெய்வத்திறத்துந்஢கழ்வே
தங்கள்பெரு கோலமிட் டுத்தொடர நறியசெந் தாமரை யுயிர்த்தமாதுந்
தாதுசெறி வெண்சத தளக்கமல மாளிகைத் தலையமரு மாதுமிகுபோ
கங்கண்மலி வாலிகத் தயிராணி யும்பல கருங்குழ லரம்பைமாருங்
கைகுவித் துத்தொடர மெய்ஞ்ஞான யோகரிரு கண்களுந் தொடரவிடர்தீர்ந்
தெங்கண்மன முந்தொடரமெல்லடி பெயர்த்தினிதொழிற்பரா பரைவருகவே
யேகர்சிவ லோகத் தியாகரொரு பாதத் திருக்குமுமை யாள் வருகவே.

87.
பன்மலர் முகந்திரு கரங்கொண்டு தூய்நெடும் பனிவிசும் பமருமடவார்
பணிதோறு மவர்குழ லளாயதர ளப்பிறை பதிந்திடத் தோன்றுசுவடுங்
கன்மலர்மனத்தைவண்கருணை புரியாய் கொலென்காதற்கிதழகுகொலெனாக்
கற்பனை கடந்தவர் தொழுந்தோறுமவர்முடிக் கட்பிறையையெற்றலாலே
முன்மலர் தருஞ்சுவடு மேல்கீ ழுறப்பெற்று மோகநீத் தவருளத்தான்
மூடிடப் பட்டுமய லாழ்ந்தா ருளம்பதிய முழுதுமச் சுற்றுவிலகு
மென்மலரு நின்மல ரடித்துணை பெயர்த்துந லெழிற்பராபரை வருகவே
யேகர்சிவ லோகத் தியாகரொரு பாதத் திருக்குமுமை யாள் வருகவே.

88.
ஆலக் கருங்களத் திறைவருட னீங்கா தமர்ந்துபரை யாதியிச்சை
யறிவுதொழி லாகியுயிரைம்பாச மற்றுய்ய வைந்தொழி னடாத்துமயிலே
சாலக் கருங்கொண்ட லோமர கதங்கொலோ தக்கவிந் திரநீலமோ
தழைதரும் பூவையோ வெனுமேனி வாய்ந்தமாதவனுடைத் தங்கையே கார்
நீலக் கருங்கட் டிருக்கோதை மாதொடு நிலாவுகலை மாதுநாளு
நிகழத் துதிக்கும் பெருஞ்செல்வி யேகல்வி நேயமிக் கார்வாழக்கையே
யேலக் கருங்குழற் செய்யவாய் வெண்ணகை யெழிற்பரா பரைவருகவே
யேகர்சிவ லோகத் தியாகரொரு பாதத் திருக்குமுமை யாள் வருகவே.

வேறு

89.
மின்னிப் பொலியுங் கருங்கொண்மூ விளர்க்குங் குழலார் மைந்தரொடும்
விளையாட் டயர வினிதமைத்த வியன்மா ளிகைமேற் செய்குன்றிற்
றுன்னிப் பொலியும் படிபதித்த தொகுசெம் பதும ராகமணிச்
சுடர்மீ தெழுந்து வானளவுந் தோன்றநிற்ற றமிழ்வேதம்
பண்ணிப் பொலியுஞ் சம்பந்தர் பரவு மணத்தி லெம்பெருமான்
படர்பே ரொளியாய் நின்றதிறம் பாரா ரறியத் தெரிவிக்க
மன்னிப் பொலியும் வளநல்லுர் வாழ்வே வருக வருகவே
மாறக் கருணை சூற்கொண்ட மயிலே வருக வருகவே.

90.
மோன மோங்குஞ் சிவயோக முத்த ருள்ள முமிழாத
மும்மைத் தமிழ்தேர் விரகர்மண முடித்துப் பொறுபேற்றின்புகழ்போற்
கான மோங்கு மறைமுழங்கக் கங்கு லழிந்து கழிந்தோடக்
கதிர்வெண் மதியோ டு வொளிப்பக் கமல முகைகண் முறுக்குடையத்
தான மோங்குங் கூகைதுயர்ச் சலதி மூழ்கக் கொடியுவப்பத்
தண்டா துதய மெழுங்கதிரோன் றடந்தேர்ச் செலவு தனைத்தடுத்து
வான மோங்கு மதினல்லூர் வாழ்வே வருக வருகவே
மாறக் கருணை சூற்கொண்ட மயிலே வருக வருகவே.

91.
சந்து தவழு முலையாருந் தாமந் தவழும் புயத்தாருந்
தவாது தழுவு மாளிகையுந் தனிமே னிலையு மாடரங்கு
மிந்து தவழுஞ் செய்குன்று மொழில்கொப் புளிக்கு மரமியமு
மின்பங் குடிகொள் வேதிகையு மிடங்கொண் மணிமுன் றிலுமறுகு
நந்து தவழுந் தடம்படிந்து நறும்பூஞ் சோலை யகத்துறங்கி
நகுபே ரந்தி மாலையிற்பன் னலஞ்சால் பொதிய வரையுதித்த
வந்து தவழுந் திருநல்லூர் வாழ்வே வருக வருகவே
மாறாக் கருணை சூற்கொண்ட மயிலே வருக வருகவே.

92.
மூரி யெருமைக் கரும்போதுத்து மோட்டுப் பியலி னுகங்கிடத்தி
முடங்கூர் நாஞ்சி லோர்க்காலம் முரியா நுகத்தி னடுப்பொருத்தி
வேரி கடைவாய் வழியிழிய விரும்பு முழுவ ரெறுழிடக்கை
மேழி தழுவ மற்றொருகை வெய்ய விருப்ப முட்கோல்கொண்
டாரி தழியா ரடியும்வெளி யாமே யெனமண் பிளவுபட
வாங்காங் குரப்பி யுழுமோதை யம்ம பரத்த லாற்பகல்வாய்
வாரி யடங்கும் வளநல்லூர் வாழ்வே வருக வருகவே
மாறாக் கருணை சூற்கொண்ட மயிலே வருக வருகவே.

93.
பணியே விரும்பு துணி பினர்தம் பற்றே வருக முற்றுணர்ந்த
பரம யோக ருடன்பிரியாப் பரையே வருக வவர்புனைய
மணியே வருக வவரினிய வமுதே வருக வவர்திருப்பே
ரருளே வருக வவருளங்கொ ளனமே வருக வவர்முடிக்குங்
கணியே வருக மெய்ஞ்ஞானக் கனியே வருக வானந்தக்
கடலே வருக வெங்களிரு கண்ணே வருக கண்ணினுள்வாய்
மணியே வருக திருநல்லுர் வாழ்வே வருக வருகவே
மாறாக் கருணை சூற்கொண்ட மயிலே வருக வருகவே.

வாரானைப்பருவம் முற்றிற்று
-----------------------------
7. அம்புலிப்பருவம் 94.
திகழ்தரு கடுக்கைமலர் சூடுசிவ லோகத்தியாகர்த முடிக்கலத்துட்
சிறந்தவொன் றாயனையர் கண்ணுளொன் றாயனையர் திருமேனி யெட்டுளொன்றாய்ப்
புகழ்தரு வலத்தவ ரியக்குமறை வாம்புரவி பூண்டதேர்க் காலு ளொன்றாய்ப்
பொலிவதன் றியுமனையர் புண்ணியப் பொடியெனப் பொங்குகதி ரெங்குமுமிழ்வா
யிகழ்தரு பவந்தவிர்த் தருளனை யரைப்பல விடத்தினும் போற்றல்செய்வா
யித்தகுசிறப்புணர்ந் துன்னொடுகலந்தாட லெண்ணினா ளெங்கள்வினைமுற்
றகழ்தரு திருப்பெரு மணத்தமரருட் பரையொ டம்புலீ யாட வாவே
யலகில்புவ னங்கண்முற் றீன்றதாய் காணிவளொ டம்புலீ யாடவாவே.

95.
எண்ணுமதி யினர்மதிக் கடவுளென நுவலுதற் கேற்பவொண் கலையாளனு
மிரியாத தண்மையா ளனுமாயி னாயின்னு மிருளிலொளி யோனுமானாய்
நண்ணுமொரு பாந்தளொரு புடைகொளினு மொருபுடையி னானில விளக்காகுவாய்
நாயனார் திருமுடிக் கங்கையிற் சங்கையற நாடோ று மூழ்கி யெழுவாய்
மண்ணுலகி லளவில்பைங் கூழ்தழையுமாறருள் வழங்குவா யுனது செய்கை
மதித்துநன் றென்றாட வாவென் றழைத்தனள் வழைத்தடஞ் சேலை முகின்மே
லண்ணுவள மேவுந் திருப்பெரு மணத்துமையொ டம்புலீ யாடவாவே
யலகில்புவ னங்கண்முற் றீன்றதாய் காணிவளொ டம்புலீ யாடவாவே.

96.
சுரும்புசெறி கழுநீர் மலர்த்துவாய் நறவமிகு தொகுகமல மலர்குவிப்பாய்
சுகமிக மணந்தவர்க்கின்பாமா வாய்துன்ப மாவாய் தணந்த வர்க்குப்
பெரும் புவிவிரும்பநிறை வாயது வெறுப்பநோய் பெற்றார் மெய்போன்று குறைவாய்
பேராழி மிகமுழுங் கத்தோன்று வாயஃது பேசா தடங்க மறைவா
யிரும்புவன மேத்துநடு நிலையொடொரு தன்மையே யெஞ்ஞான்று மெய்தி நிலவு
மெங்கள்கரு ணாம்பிகைநி னியன்முழுது மெய்த்துமுள் ளெய்யாரின்வருகவென்றா
லரும்புநல மார்பெரு மணத்தம ரருட்பரையொ டம்புலீ யாட வாவே
யலகில்புவ னங்கண்முற் றீன்றதாய் காணிவளொ டம்புலீ யாடவாவே.

97.
சங்கநக வுரும்வெண் டிரையொரி தடங்கட றவாதே யெழுந்து பொங்கத்
தண்கலைகண் முழுமையு நிரம்பிமுழுமதியெனத் தழைதரவெழுந்த போது
பொங்கனக மாருநந் திருமுக மெனக்கருணை பூத்தினி தெழுந்த தென்றும்
பொலியூருப் பாதியா யெழுபோது திருநுதற் பொலிவுற் றெழுந்த தென்று
மங்கனக வுருவின்றி மறைதரும் போதுந மருங்குலே யொத்த தென்று
மகிழுமா தேவியிவள் வாவெனக்கூவினீ வாரா திருப்பதழகோ
வங்கனக மணிமாளிகைப்பெரு மணத்துமையோ டம்புலீ யாடவாவே
யலகில்புவ னங்கண்முற் றீன்றதாய் காணிவளொ டம்புலீ யாடவாவே.

98.
பேராழி சூழ்திருக் காழியிற் பாலுண்ட பிள்ளையார் திருமணத்துப்
பெருகவந் தடையுமா தவரொடுங் கூடிப் பிறங்கவந் தாயல்லையன்
றேராழி யேழ்புரவி வையத் திவர்ந்திரு ளொருங்கற முருக்கு மொருவ
னுன்னையொத் தவனொருகளங்கமு மிலானஃதுணர்ந்திலான் போற்றிரிதலென்
பாராழி வட்டம்வி ணுவப்பவின்றேனும்பரிந்திங்கு வந்தாயெனிற்
பாடுசா னின்பெருமை பாடவெளி தாகுங்கொல் பாசாங் குசத்தினொடு
மாராழி சங்கங்கொள் கைப்பெரு மணத்துமையொ டம்புலீ யாடவாவே
யலகில்புவ னங்கண்முற் றீன்றதாய் காணிவளொ டம்புலீ யாடவாவே.

99.
உலகுபுகழ் பஞ்சாக்கரப்பெருந் தீர்த்தமென் றான்றுண்டு மூழ்கி னோருக்
கொழியாத பிணிமுழு தொழிப்பததன் மான்மியமுரைக்கரிது முகமனன்றா
லிலகுமிஃதன்றியுங் கூபவடி வாய்க்கங்கை யென்பதொன்றுண்டதன்சீ
ரெம்மனோர் பேசுதற் கரியதரியதுபெரிய தித்தலப் பெருமை கண்டாய்
விலகுகொடு வஞ்சமுடை நெஞ்சரல் லாரென்று மேவரிய வித்தலத்து
விளையாடல் கருதிவா வென்றிறைவி யேயுனை விளிக்கநீ செய்ததவமெ
னலகுதவிர் பெருவளம் பொலிபெரு மணத்துமையொ டம்யுலீ யாடவாவே
யலகில்புவ னங்கண்முற் றீன்றதாய் காணிவளொ டம்புலீ யாடவாவே.

100.
சிறந்தமா ணாக்கனீ யேயென்று பலருஞ் சிரிக்கவா சாரி யன்றன்
றேவியிள வனமுலை ஞெமுங்கவகன் மார்பிற்றிளைத்துநீங் காதபழியோ
டுறந்தபே ரரியவெங் கவலையுந் தவலிலா வொருசாப மும்பூண்டுளா
யொழியாது தக்கனிடு சாபத் தொடக்குண் டுழன்றுவா னலைதறவிரா
யிறந்தமா மலமுடைய ரேயடையுமித்தலத் தெய்தியிக் கருணாம்பிகை
யிணையிலரு ணோக்கமும் பெறினினக் கெத்துயர மெய்துநினை யாவர்நிகர்வா
ரறந்தவா தோங்குந் திருப்பெரு மணத்துமையொ டம்புலீ யாடவாவே
யலகில்புவ னங்கண்முற் றீன்றதாய் காணிவளொ டம்புலீ யாடவாவே.

101.
வையமுழு துய்யவொரு வாவியங் கரைநின்று வாய்மலர்ந் தழுத பிள்ளை
மதுரமிகு செவ்வாய்க் கருங்குழற்காதலியை மாமணஞ் செய்தஞான்று
செய்யமலர் மீதனந் துஞ்சுபஞ் சாக்கரத் தீர்த்தக் கரைக்க ணின்று
சேர்ந்தார் களங்கமுற் றொழியவெண் ணீறுதன் செங்கரத் தாலளித்தா
ளூய்யவிவள் வாவென் றுரைத்தபடியேவிரைந் தொருவனீ வந்து சேரி
னுன்களங் கந்தவிர வெண்ணீறு நல்காள்கொ லோவிதனை யுணராததெ
னையமன மோவித் திருப்பெரு மணத்துமையொ டம்புலீ யாடவாவே
யலகில்புவ னங்கண்முற் றீன்றதாய் காணிவளொ டம்புலீ யாடவாவே.

102.
குறைவடிவி னோடுசிவ லோகத் தியாகர்தங் கோடீர மாமுடிக்கட்
குலவுகங்கையின்மூழ்கி யவ்வடிவ மேறாது குறையா திருத்தல் பெற்றாய்
நிறைவடிவினோடிங்கடைந்துகங் காகூப நிறைபுனலின் மூழ்கினினைய
நிகழ்வடிவ மொருதன்மை யாய்மருவ வருவவள நிமலையருள் பெறுவ துண்மை
பொறைவடிவம் வாய்ந்துவினை காய்ந்து மலமாய்ந்தொளிர் புகழ்த்தரும நெறியி னிற்போர்
பொருவரு மனப்பெருங் கோயிலக மேவியெம் புந்திக்கு மந்திக்குமோ
ரறைவடிவ மேவிய திருப்பெரு மணத்துமையொ டம்புலீ யாடவாவே
யலகில்புவ னங்கண்முற் றீன்றதாய் காணிவளொ டம்புலீ யாடவாவே.

103.
வாவென்ற போதுவா ராதுபா ணித்ததெம் மதிகதி யுனக்குவேறென்
மாற்றிவட வார்க்குமுடி முதலடி வரைக்குமுள வாளராத் தொகைகணக்கில்
சோவென்ற நசையுண்டு தக்கன்வேள் விக்களந் தோய்ந்ததா ளுண்டுநின்னோர்
சுடர்நகை தகர்த்தசெங் கரமுண்டு மாரற் றொலைத்தவிழி யுண்டுகண்டாய்
காவென்ற கைத்தலத் திவண்முனிவு செயினினைக் காப்பவரு மிலரிவையெலாங்
கருதிவந் தருள்பெறுதி கடலுலக முழுவதும கட்டிற் கலக்குமாவா
யாவென்ற வன்புகழ் திருப்பெரு மணத்துமையொ டம்புலீ யாடவாவே
யலகில்புவ னங்கண்முற் றீன்றதாய் காணிவளொ டம்புலீ யாடவாவே.

அம்புலிப்பருவம் முற்றிற்று
----------------------------------------------------
8. அம்மானைப்பருவம் 104.
செல்லூர் வயத்தசிவ லோகத் தியாகர்தந் தோட்டுணை குழைக்கநாளுந்
தோலா தெழுந்தநின் றுணைமுலைக் குவடுநேர் தோற்றியெழுதோற்றநோக்கி
வில்லூர்நெடுஞ்சிகரமேருவென் றுரைசெய்வடவே தண்டமுற்றகொற்ற
வீறுமுற் றுந்தபப் பொடிசெய்து கடிசெய்து மேவுப லுருண்டையாக்கி
யெல்லூர் மணிக்கங்க ணக்கரத் தேந்திமே லெறிவது கடுப்பவறமுற்
றெறுமங் கைத்தலத் துறுசிவப் பேறுவதை யெண்ணாது விண்ணாடளா
மல்லூர்பொழிற்பெரு மணத்தமர்பராபரை பொன்னம்மானை யாடியருளே
யருளினெங்குடி முழுதுமடிமை கொண்டருளுமுமை யம்மானை யாடி யருளே.

105.
மறமணக் குன்கனன் மழுப்படைத் தம்பிரான் மலர்பொரு திருக்கையுலகம்
வாழ்தரக் கோத்துமவ் வுலகமஞ் சாதுய்ய வரதாப யங்கொடுத்து
நிறமணக் குந்தரும முப்பத் திரண்டுநனி நெடுநாளு மமரவைத்து
நிலவுஞ் சிருக்குமணி வடநேமி வளைசூல நிலவுவே றாங்கிமூவர்
புறமணக் குந்தொழிற்கேதுநீயென்பது புலப்படுத் தியுமொளிருநின்
பூங்கரபுகழ் திரண்டொன்றன்பினொன்றுமேற்போயடைவெழுவதொருளே
வறமணக்குந் திருப்பெருமணத்தம்மைமுத்தம்மானை யாடியருளே
யருளினெங்குடிமுழுது மடிமைகொண்டருளுமுமை யம்மானை யாடி யருளே.

106.
இறைதிருமுகத்தகத் துந்திரூ நுதற்கணு மிலங்குமிச் சுடருநோக்கி
யிருளப் பொலிந்தநமிருங்குழற் கெர்திராவ திவ்விருள்கொ லெனமுனிந்து
கறைமருவுபூதவிருண்முழுதுங் கலங்கக் கலக்கித் துவைத் தவைத்துக்
கச்சமிலுருண்டையார்ச்செய்து நீவாய்ப்பெயுங் கவுளமிவை கோடியென்னா
நிறைyaவெளி யாயகா னுலவுகர மதமுமிழ் நெடுங்கதிர்க் குஞ்சரத்தி
னேர்செல்ல வீசுதல் கடுப்பவெ திர்காண்குநர் நிலாவுபொன்னுலகமென்றே
யறைதருதிருப்பெரு மணத்தம்மை மாநீல வம்மானை யாடியருளே
யருளினெங்குடிமுழுது மடிமைகொண்டருளுமுமை யம்மானை யாடி யருளே.

107.
பன்னரிய திருமறைச் சிரமீது மருவும் பரம்பொரு டனைப்பகர்ந்து
பங்கையச் செங்கையமர் பைஞ்சிறைக் கிள்ளைமீப் பலகாற் பறந்தெழுந்து
நன்னய மிகுந்தத் திருக்கரத் துறைவதென நாட்டத் தெழுந்த பார்வை
நக்கபே ரன்பர்பாற் செல்வது கடுப்பநனி நாடிமேற்சென்றுலாவ
வன்னமிகு வெண்டரள மணிவடஞ் சூழ்ந்தமணி மாமுலை குலுங்க நுழைநுண்
மருங்குலையெடுத்தெடுத்துந்திநிறைநீர்த்தட மலர்ந்ததாமரைமலர்தொறு
மன்னமரு வும்பெருமணத்தம்மைமரகதத் தம்மானை யாடியருளே
யருளினெங்குடிமுழுது மடிமைகொண்டருளுமுமை யம்மானை யாடி யருளே.

108.
கருகாத பததிமை கொழுந்துகொண் டெழவுட் கசிந்துருகு மன்பர்நிதியே
கருதுபொழு தாறுமலர் மாலைசந் தாதிபல கைக்கொண்டு பூசையாற்றும்
பெருகாத காமத்தர் செல்வமே மாதவப் பெரியோர்கள் பெற்றபேறே
பிழையறப் பாமாலை பெருநய முறப்பாடு பெற்றியோ ருற்றவாழ்வே
திருகாத சிந்தைகொடு சகமுழது நீயெனத் தேர்ந்துணர்ந் தாரின்பமே
தெள்ளமிர்த மேயினிய கனியே தெவிட்டாத தேனே யறங்கணாளு
மருகாத நற்பெரு மணத்தளி விளக்கமே யம்மானை யாடியருளே
யருளினெங்குடிமுழுது மடிமைகொண்டருளுமுமை யம்மானை யாடி யருளே.

வேறு

109.
அன்ன மலிதண் டுறையுமணங் கனையார் மொழியும் பானலமோட்
டாமை யுறங்கும் வாவியுமற் றனையார் முலையுங் கோகநக
முன்ன வினிய பொழிலுமவர் முடிக்குங் கூந்தற் பகுப்புமஞ்சு
முகிறோய் மதிலோ வமுமனையார் முழுமேனியுநல் லஞ்சுவணம்
பன்ன முடியா மனையுமவர் பாதத் தணியுஞ் சிலம்புநெடும்
பழன மெங்கு மத்தகைய பாவை மாருஞ் செஞ்சாலி
யென்ன வளங்கூர் பெருமணப்பெண் ணெடுத்தா டுகபொன் னம்மனையே
யெங்கள் குடிக்கோர் வாழ்முதல்கை யெடுத்தா டுகபொன் னம்மனையே.

110.
காலா தரிக்குங் கழனிதொருங் கமஞ்சூ லுயிர்ப்ப வயிறுளைந்து
காண்டற் கினிய சலஞ்சலநீணர் காலு மடைவாய் முத்துகுப்பக்
கோலா வொளிரவ் வெண்டரளக் குவையா லடைபட் டறறேங்கக்
குலவ விளைந்த செஞ்சாலிக் கொடுவெண் கதிர்மூழ் கும்பொழுது
மாலா வெழுவெள் ளோதிமந்தம் வயங்கு சினையென் றவைகவர்ந்தம்
மடையைத் திறந்து பெருகியநீர் வடியச் செயலாற் பலருவக்குந்
தோலா வளமை நல்லூராய்தொட்டா டுகபொன் னம்மனையே
சூழும் பிறவி யெனக்கொழிப்பாய் தொட்டா டுகபொன் னம்மனையே.

111.
மதிக்குங் கடவுட் பஞ்சதரு வயங்கு நிழவில் வீற்றிருந்து
மாறாக் கருவி பலகொண்டு வண்ட லாடு மடவாருந்
துதிக்கு மருத நன்னிழலிற் றோலிற் கிடத்தி யிளங்குழவி
துஞ்ச வுறக்கிக் களைகடியுந் தெழின்மேற் கொளன்மே வரிவையாரும்
பதிக்கும் பயமுட் புகக்கொண்டு பலகா லிரிய மேலெழுந்து
பற்றுங் கொடிய கழுக்கடைபோற் பாய்ந்து பாய்ந்து பருவாளை
குதிக்கும் புனனல் லூரமுதே கொண்டா டுகபொன் னம்மனையே
கோலம் பொலிவெண் ணீற்றுமையே கொண்டா டுகபொன் னம்மனையே.

112.
ஆண்டா தரித்து நாயேனை யல்லற் பிறவி யறுத்தருளு
மருளா னந்தக் கடற்பிறந்த வளவா வின்பச் சுவையமுதே
யீண்டார் கலிசூழ் புடவிமுத லெப்பு வனத்து முறையுயிர்க
ளெல்லாம் பிறவிப் பிணியறுமா றிமய முயிர்த்த வருமருந்தே
வேண்டா நிற்கு மெய்யடியார் விரும்பு முள்ளக் கோயிலகம்
விருப்ப றாது நாணாளு மேவி யமர்சிந் தாமணியே
தூண்டா விளக்கே நல்லூராய் தொட்டா டுகபொன் னம்மனையே
தேன்றாத் துணைக்கோர் துணையானாய் தொட்டா டுகபொன் னம்மனையே.

113.
குணத்தே பொலியு மெய்யடியார் கோலம் பொலியுங் குளிர்சிந்தைக்
கோயில் பொலியு மாறுகுடி கொண்டு பொலியுங் கோமளமே
யணத்தேர் வரிய மறைமுயன்று மணுகற் கரிய பேரொளியே
யறிவி லார்க்கு முனிவரிதா யள்ளு றினிய பசுந்தேனே
கணத்தே மலர்செற் றியபொழிலிற் கனிந்த தேமாம் பழச்சாறு
கால்கொண் டோ டிக் கடல்புகுந்து கழியா வுவரைக் கடத்துபெரு
மணத்தே யமர்வெண் ணீற்றுமையே மகிழ்ந்தாடுகபொன் னம்மனையே
மலையிற் பிறந்த மடப்பிடியே மகிழ்ந்தா டுகபொன் னம்மனையே.

அம்மானைப்பருவம் முற்றிற்று
---------------------------
9. ந்ணராடற்பருவம் 114.
எள்ளுதற் கரியகுழல் சைவல மெனச்சுழல வினைவிழிகள் சேலினிலக -
வெழில்வளர் குழைச்செவிகள் வள்ளையிர் பொலியமுக மிலகுதா மரையின்மலர,
வுள்ளுதற் கரியவிரு கொங்கையும் புற்புதத் தொளிரமல ருந்திசுழியி
னுறமுழந் தாளலவ னிற்கவின மற்றுள வுறுப்புமொவ் வொன்றி னிகழக்
கொள்ளுதற் கரியவொளி வயிரமுந் தரளமுங் குருமணியு மொலிதிரைக்கை
கொண்டிரு கரக்கணு மெறிந்தரம் பைச்செழுங் கூன்குலைமுறித்து நிகழும்
விள்ளுதற் கரியவொரு கொள்ளிடத் திருநதியின் வெள்ளநீ ராடியருளே
விண்ணேத்து சீர்மேவு வெண்ணீற்று மாதேவி வெள்ளநீ ராடியருளே.

115.
புள்ளாரு காலுழக் குங்குழ லனிந்திதை பெருங்கணை யனுக்கு மொண்கட்
பொற்புமலி கமலினி முதற்றோழி மார்பலர் புரிந்துசூழ் நிற்பநடுவ
ணுள்ளாறு பகையற வொழித்த்மா தவருளத் துள்ளொளிய தாகிநாளு
முறைபரா பரைநின்ற செவ்வாய் விளர்ப்பவரி யுறுகருங் கண்சிவப்ப
நள்ளாரு பழையாறு கஞ்சாறு கோட்டாறு நல்லாறு தருமையாறு
நாவலா றொழுகுவட மேருமுற் பலதே நயந்தவர் சடைக்குமஞ்சா
வெள்ளா றெனப்பரவு கொள்ளிடத் திருநதியின் வெள்ளநீ ராடியருளே
விண்ணேத்து சீர்மேவு வெண்ணீற்று மாதேவி வெள்ளநீ ராடியருளே.

116.
முண்ணாறு பங்கயச் சேக்கையம ரொருநான் முகப்பிரம னாவுமோவா
முரண் மிக்கமுரனுயிர் முருக்குமுழுவலியிடை முகுந்தனகன் மார்புமேவு
பண்ணாறு மொழிமாத ரிருபாலு நின்றுதம் பங்கயச் செங்கையுதவப்
பற்றுபு சிலம்பொலித் திடநடந் திடுகிடைப் பட்டறலு ணனையநின்று
கண்ணாறு கொன்றையுந் தும்பையும் பாசொளிக் காமாறு குங்கமழ்ந்து
ககனத் துலாம்பிறைச்சிறும தியைவெண்டிரைக்கையாலலைத்துவரலால்
விண்ணா றெனப்பரவு கொள்ளிடத் திருநதியின் வெள்ளநீ ராடியருளே
விண்ணேத்து சீர்மேவு வெண்ணீற்று மாதேவி வெள்ளநீ ராடியருளே.

117.
பாலைநிகர் சொற்பலமி னார்தகவடித்தவிரை பான்மையி னொருத்துதவநீள்
படைவிழிக் கமலமட வார்தங்கைகொண்டுநின் பசுமேனி யிற்றிமிர்ந்து
சோலைமயிலொத்தவிய லாயருள்விளக்கியெந்தொல்வினைக்கழிவுதோன்றச்
சூட்டோ திமத்தினின் றினிதாடு வாயென்று தொலைவின்முக மன்பலசொல்
மாலைமதிவைத்தமுடியாரொடுபகைத்ததெனமதமலையெடுத்தடுத்து
வருமீனம் வாய்க்கொள வெறிந்துவிட முன்றந்த மாபாதகந் தெரிந்தவ்
வேலைய யுடைக்குமொரு கொள்ளிடத்திருநதியின் வெள்ளநீராடியருளே
விண்ணேத்து சீர்மேவு வெண்ணீற்று மாதேவி வெள்ளநீ ராடியருளே.

118.
பற்றியர மாதர்முத லாயபல மாதரும் பன்மலர்க் கொடியினின்று
பணிதலைக் கொள்ளவவர் நாப்பணொருபைங்கொடிப் பண்பினுல கேத்த
முற்றியறியாதமுலை முத்தமோடெதிர்வருவெண்முத்தமிக் குறவுகொள்ள
முரிநுசுப் பணியுமே கலைமணியி னோடுபன் முழுமணியுமளவளாவச்
செற்றிய கடுக்கைமலர் சூடிமா னேந்தியெண் டிசைநடுங் கரவத்தொடு
சினக்கோல வெண்மருப் புப்புனைந் தடுபுலிச் சிறுதோல் விரித்துடுத்து
வெற்றிவிடை யானில்வருகொள்ளிடத்திருநதியின் வெள்ளநீராடியருளே
விண்ணேத்து சீர்மேவு வெண்ணீற்று மாதேவி வெள்ளநீ ராடியருளே.

வேறு

119.
உன்னு மனவாக் குடன்மூன்று மொன்றா துடற்ற லொழிதரவுள்
ளுருகி யுருகி நெகிழ்ந்து நெகிழ்ந் துடையு மிடையும் பேரடியார்
துன்னு முழுவற் பேரன்பிற் றுளைந்து துளந்தா டுதல்பொருவத்
தோன்றாத் துணைக்கோர் துணையாய சூட்டோ திமமே நடுநின்று
மன்னுந் தனக்குத் துணையாகி வன்காப் பியற்றும் பெருங்குலைக்கு
மகிழ்ந்து கொடுக்கும் பரிசென்ன மருங்கு முளரிக் கைநிறையப்
பொன்னு மணியு மெறியும்வட பொன்னிப் புதுநீ ராடுகவெ
பொற்பார் மணவை யம்மைவட பொன்னிப் புதுநீ ராடுகவே.

120.
சேலே பொருவப் பிறழ்கருங்கட் செவ்வாய் வெண்பற் றோழியருட்
செய்ய வெளிய மடமாதர் தெண்ணீர் முழுகிச் சிலம்பணிபூங்
காலே வருட வெளிசெய்தவர் கமல முகத்தின் முகந்ததுணைக்
கைநீர் கடுகி யிறைப்பநறுங் கங்கா சலமென் றுன்னுபுதீம்
பாலே புரைசொ லனையர்சிரம் பரவக் கவிழ்ப்ப வரையுதித்துப்
பலவா முயிர்ப்பைங் கூழ்தழையப் பண்ணித் தண்மை வாய்ந்துநினைப்
போலே சிறப்ப நிகழும்வட பொன்னிப் புதுநீ ராடுகவே
பொற்பார் மணவை யம்மைவட பொன்னிப் புதுநீ ராடுகவே.

121.
தென்னங் குரும்பை யனையமுலைச் செவ்வாய்க் கருங்க ணரமாதர்
தேம்புநுழைநுண் ணுசுப்பொசியத் தெற்கும் வடகுந்திரிந் துலவ
வன்னங் குலவு மொலிச்சிலம்பி னனிச்ச மருட்டு மடிகள்பெயர்த்
தம்பொற் சிவிறி பந்துகள்கொண் டவர்மேன் முகந்து நறும்புனறூ
யின்னம் பிறவிக் கடலழுந்த வெங்கட் கியல்போ வருள்பொழிவா
யென்பா ரின்பார் கடன்முழுகி யென்று மாட வினிதாட்டும்
பொன்னங் கொடியே நெடியவட பொன்னிப் புதிநீ ராடுகவே
பொற்பார் மணவை யம்மைவட பொன்னிப் புதுநீ ராடுகவே.

வேறு

122.
நீடுந லாகம மோதிய வாறருள் புல்லா ராயினுநன்
னேயம றாததொர் ஞானமு ளார்மன முள்ளால் வாழ்மயிலே
பாடுன லோனுவ னாகுவ னோவென வெள்ளா தேயடியேன்
பாடுபல் பாடல்வி ராவிய தார்புனை பொன்னே கோமளமே
யாடுந லார்மதி யாள்சடை யார்மலை வில்லார் மேனியினே
ராகிய பாதியில் வாழ்குயி லேவரை மின்னே யூர்பலவு
நாடுந லூரமர் வாய்வட காவிரி நன்னீ ராடுகவே
நான்மறை மேகலை யாய்வட காவிரி நன்னீ ராடுகவே.

123.
பூமக ணாமக ளாதிமி னார்தொழு பொன்னே கோகிலமே
போதமு றாவெளி யேனவில் பாடலு மெள்ளா தேபுனைவாய்
தேமரு மாலைய ளாவிய வார்குழ னல்லாய் கார்மயிலே
தேவர்பி ரானியன் மேனியி லோர்பயல் விள்ளா தேபொலிவாய்
காமரு சோலையு ணீர்நிறை வாவியி னெல்லே கூர்செறுவிற்
காலில்வி ராவிய வோடையி னீள்கயல் புள்ளா ராய்வளனார்
நாமந லூரமர் வாய்வட காவிரி நன்னீ ராடுகவே
நான்மறை மேகலை யாய்வட காவிரி நன்னீ ராடுகவே.

நீராடற்பருவம் முற்றிற்று
-------------------------
10. பொன்னூசற்பருவம் 124.
கொன்செய்த வயிரக் கொழுங்கா னிறுத்தியொளி கூர்பவள விட்டமிட்டுக் -
குளிர்மருவு நித்திலத் தொடர்பூட்டி நவமணி குயிற்றுபொற் பலகை மாட்டி
மின்செய்த சிற்றிடைப் பெருமுலைக் கோகனக மீதுமொண் புண்டரீக -
மீதுமுறை மாதரிரு பாலுநின் றார்வடம் விரும்புதங் கைகள்பற்றத் ,
தென்செய்த தமிழ்முனியை யெண்ணாது மீட்டுஞ் சிலம்பெழுந்ததுகொலென்று -
செங்கதிரும்வெண்கதிரு நின்றுன்னி யுள்ளந திகைப்பவான் கீண்டெழுந்து ,
பொன்செய்த மதில்சூழ் திருப்பெரு மணத்தம்மை பொன்னூச லாடியருளே -
பொருவின்மந் திரசொரூ பத்தனி விமானத்தி பொன்னூச லாடி யருளே.

125.
தேமணக் குங்குழற் செய்யவாய் வெண்ணகைச் சேல்விழிப் பனுவலாட்டி -
திரைவீசு சுவையமு தொழுக்கியது போன்மெனத் திருவூச லினிது பாடப்,
பாமணக் கும்புகழ்ச் செஞ்சடைத் தம்பிரான் பார்த்துளத் துவகைபூப்பப் -
பல்லா யிரங்கோடி யண்டமு மவற்றுள்ள பலசரா சரமு மாட,
வாமணக் குங்கரு முகிற்படாங் கீண்டுமே லாயவுல கம்பு குந்தாங் -
கமர்வார் செழுங்கற்ப கத்தினின் றும்பிரித் தறிதரா வண்ண நாளும்,
பூமணக் கும்பொழில் வளப்பெரு மணத்தம்மை பொன்னூச லாடி யருளே -
பொருவின்மந் திரசொரூ பத்தினி விமானத்தி பொன்னூச லாடி யருளே.

126.
கொங்குமலி தேமாந் தளிர்ப்பொழி னடுக்கணமர் கோகிலப்பேடு பொருவக் -
கோகனக ராகமணி யேசுற்று முற்றுங் குயிற்றுபொற் பலகையேறிச்,
செங்குமுத வாயர மடந்தையர் விரைக்குமலர் செங்கைநிறை யக்கொண்டு நின் -
றிருமுனர்த் தூவுபு குடந்தமுற் றகலாது சேவித்து வந்து நிற்கச்,
சங்கு பல வெங்குங் கரும்பரம் பைக்குலஞ் சாலியா யுறலு ணர்ந்து -
தாவாத வேதனை யொடுந்தவழ்ந் தேறியந் தாமரையின் முத்து யிர்க்கும்,
பொங்குபுனல் வாவித்திருப்பெரு மணத்தம்மை பொன்னூச லாடி யருளே -
பொருவின்மந் திரசொரூ பத்தினி விமானத்தி பொன்னூச லாடி யருளே.

127.
மேலாயசத்துவ மெனப்பகர் குணத்துநடு வீற்றிருந்தருளலென்கோ -
மெய்யடியர் முன்செல நடாத்துவா னோதிம மிசைபொலிந் தமர்வ தென்கோ,
நாலாய மறைபுகழும் வெள்ளிவெண் கயிலைவரை நாப்பணமர் தோகையென்கோ -
நானென்று கலைமகள் வியந்து பாடச்சுர்க ணன்குகண் டுவகை நீடப்,
பாலாய வொள்வயிர முற்றுங் குயிற்றகன் பலகையி லிவர்ந்திருந்து -
பைம்பொன்செய் கோபுர மெழுந்தொளி பரப்பியிருள் பாற்றிவட மேருவெற்பைப்,
போலாய வளமைத் திருப்பெரு மணத்தம்மை பொன்னூச லாடி யருளே -
பொருவின்மந் திரசொரூ பத்தினி விமானத்தி பொன்னூச லாடி யருளே.

128.
கயறங்கு நின்றிருக்கட்கடை யுதித்துமிசை காணப்பரந்தெழுந்து
கருதுவா ரிருவினை மரங்கள்கால் சாயவலை கான்றனையர் பிறவிவாரி
மயறங்குவன்கரை யுடைந்தடி யறப்பொங்கும் வான்பெருங் கருணை வெள்ளம்
வற்றாது நின்கைக் கடைப்பிறந் தெழுவெள்ள மனமஞ்சி யுட்கி வட்கி
யயறங்கு மொருதிவலை யாகப்ரவாகமுற் றகிலநிகி லமும்விராவ
வமரா வதிக்கற்ப கத்தோ டமர்க்கும தகற்றுவான் மேற்படுத்துப்
புயறங்கு சோலைத் திருப்பெரு மணத்தம்மை பொன்னூச லாடி யருளே
பொருவின்மந் திரசொரூ பத்தினி விமானத்தி பொன்னூச லாடி யருளே.

129.
நன்னயம் விராவியுள நெக்குநெக்குருகுநர் நயக்குநின் றாமரைத்தா
ணகுபொழிற்பிண்டியை யுதைந்தாடு தொறுமதுநகத்தளிர்த்தினிதுபூத்தல்
பன்னயம் விராவுமச் சிற்றடிப் பெருமையுட் பதிதர வுணர்ந்து பூசை
பண்ணுவா னிற்குநிலை காட்டவது கண்டவை படுந்தொறு மருக்கமலர்தூ
மின்னியல் பிரான்சடை யழுக்காறு மேவநன் மேகமு முடுக்கூட்டமும்
விராவிய வெனக்கா ரடைத்திர ளரும்புகள் விளங்கச் சுமந்து சூழ்ந்த
புன்னையங் கானற்றிருப்பெரு மணத்தம்மை பொன்னூச லாடி யருளே
பொருவின்மந் திரசொரூ பத்தினி விமானத்தி பொன்னூச லாடி யருளே.

130.
ஆதார பங்கயந் தொறும்வன்ன ரூபியா யமர்வதுங் கருணையே மெய்
யாயபெரு மான் பெறற் கரியவா மத்தலினி தமர்வதுங் கருணைமிகையாற்
பாதார விந்தம் பதித்திருங் கயிலைமுற் பஃறலத் தமர்வதும்விடார்
பற்றினாருள்ளகத் தமர்வதும் பொரவொளி படுந்துகிர்ப் பலகையினம்ர்ந்
தோதாரம் வில்லிடக் குறுமூர னிலவெழ வுறுங்கருணை பொங்கச்சிறை
யோதிமஞ்சிறையிலோ திமநிகர விரைதேர்ந் துருங்குறிப் பிற்கமலமென்
போதார வமருந் திருப்பெரு மணத்தம்மை பொன்னூச லாடி யருளே
பொருவின்மந் திரசொரூ பத்தினி விமானத்தி பொன்னூச லாடி யருளே.

131.
வலியவர னாலமரர் வானகங் கூட்டுண்டு மகிழ்முரட் சூரனிளவன்
மக்களொடு வாழ்கின்ற பேரிலழி யச்சிற்றின் மறுகூடு லாயழித்தும்
கலியவவன் வாய்தற் பெரும்பறை முழக்கறக் காமர்சிறு பறை முழக்கங்
கண்டுமவ னூருமிந் திரஞால மென்றுரை கதிர்ப்பொலந் தேருருளுறா
தொலியசிறு தேரினி துருட்டியும் விளையாடு மொண்சதங் கைச்சிறியதா
ளொருகுழலி யைத்தனி யுவந்தெடுத் துப்புல்லி யொண்மணித் தொட்டிலேற்றிப்
பொலியவினி தாட்டுந் திருப்பெரு மணத்தம்மை பொன்னூச லாடி யருளே
பொருவின்மந் திரசொரூ பத்தினி விமானத்தி பொன்னூச லாடி யருளே.

132.
ஆதரம்பெருக கசிந்துநெக் குருகுபழ வடியர்மன மாயதூய
வாலயத் தினிதமர்ந் தாடுதலையொப்பமுத் தவிர்செழும் பலகையேறிக்
காதரங்கடையேங் கழிந்துய்ய வெவ்வினை கழீஇப்பொங் கிடுங்கடைகட்
கருணைவெள்ளம்பெருக வெம்பிரான் சடைமுடிக் கங்கைவெள் ளஞ்சுருங்க
மீதரம்பையர மர ரொடுகீ ழிறங்கவன் மேதினியு ளாரவ்வாறு
மேலேற வைத்தநெட்டேணியே யாமென விளங்குகோபுரம் வடாது
பூதரம் பொருவுந் திருப்பெரு மணத்தம்மை பொன்னூச லாடி யருளே
பொருவின்மந் திரசொரூ பத்தினி விமானத்தி பொன்னூச லாடி யருளே.

133.
அற்புமலி யுள்ளம் புகும்பரி புரத்தாளு மறைவிலை யிலாதசெம்பட்
டாடைபுனை மேகலை மருங்குலு நெருங்குபே ரண்டமுற் றீன்றவயிறும்
வற்புமலி பரஞான மூறுமிரு கொங்கையும் மங்கலம் பொலிகழுத்து
மாறாதிரண்டு தலை யிட்டமுப் பஃதறமும் வளர்பங் கயச்செங்கையும்
வெற்புமலி பசுவேய் சுட்டுமிரு தோளுமிள வெண்மூரலுஞ் செவாயு
மிளர்குழையு மலர்முகமு மணிநாசி யுங்கருணை விழியுங் கருங்கூந்தலும்
பொற்புமலி யப்பொலி திருப்பெரு மணத்தம்மை பொன்னூச லாடி யருளே
பொருவின்மந் திரசொரூ பத்தினி விமானத்தி பொன்னூச லாடி யருளே.

பொன்னுசற்பருவம் முற்றிற்று


திருப்பெருமணநல்லூர்த் திருவெண்ணீற்றுமை பிள்ளைத்தமிழ் முற்றிற்று


 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home