2028 |
திருத்தாமரையிலனஞ்சேர்பைஞ்ஞீலிசிறக்கவளர்
கருத்தாமைரயமர்கையாமுகில்கடுக்குங்குழலின்
மருத்தாமரையமிடவேற்றவாவினைவாட்டுதலி
னுருத்தாமரைபடுவேனையின்றாளவுரைத்தருளே. |
1 |
2029 |
அருந்தவரும்பர்குழாம்புடைசூழவரம்பைவனத்
திருந்தவரும்பலுரித்தார்புரத்திடைநாணுமடும்
பெருந்தவரும்பணிவெற்பாக்கொண்டார்பிறங்கும்புயத்திற்
பொருந்தவரும்பணிபூண்டாரின்றென்னைப்புரப்பவரே. |
2 |
2030 |
புரங்காவலரைமுன்செற்றாய்வெண்மேனிபொருந்தும்விடைத்
துரங்காவலர்கொன்றைத்தாராய்பைஞ்ஞீலியெந்தோன்றன்மன
மிரங்காவலநினக்கின்றாதலினின்றெடுத்தவுட
றிரங்காவலமருமுன்னெனையாண்டருள்செய்குவையே. |
3 |
2031 |
செய்யுந்தரம்பைக்கவானுமைக்கண்ணுஞ்செந்தாமரைப்பூங்
கையுந்தரளநகையுமெய்யாகக்கழறும்வெறும்
பொய்யுந்தரங்கொடனமுமுள்ளாரைப்புரிந்துலைவே
னுய்யுந்தரமுமுளதோபைஞ்ஞீலியென்னுத்தமனே. |
4 |
2032 |
உத்தமனேயென்றும்பைஞ்ஞீலியாயென்றுமொண்கனல்சே
ரத்தமனேயென்றும்வாழ்த்தறியேனையின்றாண்டருள்வாய்
நித்தமனேயப்பனேயென்றலறுவர்நெஞ்சுறுவாய்
முத்தமனேகம்பொலிமுலைபாகவென்முன்னவனே. |
5 |
2033 |
முன்னந்தவம்புரிந்தேனலனின்பதமுன்னுவதற்
கன்னந்தவம்பொலில்நெஞ்சேனையோவினியாழ்வினைக
டுன்னந்தவம்புக்கிடனாய்விடாதெனைத்தொண்டுகொள்வாய்
வன்னந்தவம்பிற்பயிலுங்கதலிவனத்தவனே. |
6 |
2034 |
வனக்காரிகையர்கணேற்றாற்குநீலிவனத்தவற்கு
மினக்காரிகைப்பில்பணியணிந்தாற்குவிளம்பிழைகொ
டனக்காரிகைவளைசோர்ந்ததெல்லாமுபசாரஞ்சொல்ல
நினக்காரிகைக்குஞ்சுகப்பரிமாரனெருங்குமுன்னே. |
7 |
2035 |
நெருங்குந்தனத்தியொருபாகனாரநிறைபழன
மருங்குந்தனத்திரள்சூழுங்கதலிவனத்துறைவோன்
பெருங்குந்தனத்திமுகனத்தன்மேற்சொலப்பெற்றனன்யான்
சுருங்குந்தனத்தினரைப்புகழ்ந்தேகவிசொல்லலற்றே. |
8 |
2036 |
சொலற்கரியயனாலுமொண்ணாப்புகழ்த்தொன்மையனே
மல்லற்கரியதள்போர்த்தாய்கதலிவனத்தையனே
வெல்லற்கரியதென்றாலுநின்றாளைவிரும்புமென
தல்லற்கரியவருள்செயின்யானினக்கானவனே. |
9 |
2037 |
ஆனக்கரவம்பரிகலன்கச்சையென்றாதரித்தோய்
வானக்கரவஞ்செலவேதம்வாழ்த்தும்பைஞ்ஞீலிமன்னா
தானக்கரவல்விலங்குரியாய்வினையைத்தவிரா
யானக்கரவகன்றெஞ்ஞான்றுனைவந்தடைகுவதே. |
10 |
2038 |
அடைந்தேனின்றாள்கதியென்றினிமேனினக்காளலன்போ
லுடைந்தெனின்றாலதுநன்றேவினைப்பட்டுழலுமென்முன்
மிடைந்தேனின்றாவென்றதென்றருணீலிவனமெய்யதேன்
குடைந்தேனின்றாதளைந்துண்டேனென்றாடிடுங்கொன்றையனே. |
11 |
2039 |
கொன்றைக்கனியனகூந்தன்மின்னார்கள்குலமடங்க
வென்றைக்கனியமெனத்தள்ளியேநினக்கின்புறுவே
னன்றைக்கனியநன்மாச்சேர்பைஞ்ஞீலியையாவென்மனக்
குன்றைக்கனியவைத்துன்னடியாரொடுங்கூட்டுவையே. |
12 |
2040 |
கூட்டப்படைகொள்புரத்தைவென்றாய்நறுங்கொன்றையனே
வேட்டப்படையுஞ்சடையாய்பைஞ்ஞீலிவிமலமின்னார்
நாட்டப்படைதெறவெம்பிநின்றாள்கணண்ணாமலெனை
வீட்டப்படைத்தவிதியார்பொருளிலென்வெஃகினனே. |
13 |
2041 |
இனகரமைந்தர்மடவாரென்றெண்ணியிடைந்தவிவீர்
கனகரமேன்மழுவுள்ளார்கதலிவனத்தமரு
மனகரமாரனைச்செற்றாரெனைத்தடுத்தாண்டவையர்
சினகரமேவித்தொழுவீர்விடுமுங்கள்சென்மங்களே. |
14 |
2042 |
மங்காதசெல்வம்பெருகுங்கதலிவனத்தனைவான
றங்காதவன்பற்புடைத்தவெம்மானைச்சலந்தரடுனன்
வெங்காதகனைத்தடிந்தானையோதவிரும்பிலர்துன்
பங்காதவந்தகற்காளாய்நரகிற்படுபவரே. |
15 |
2043 |
படந்தாங்குவெம்பணிப்பூணாய்பைஞ்ஞீலியப்பாவரிமண்
ணிடந்தாங்குநேடவெட்டாதநின்பாதத்திறைஞ்சியன்பாய்க்
கிடந்தாங்குநாட்டமற்றின்றிக்கதறிக்கிடந்துவினைக்
கடந்தாங்குநீரெனக்கண்ணீர்பெய்யேற்கென்கதியுளதே. |
16 |
2044 |
கதிக்குந்தங்கைக்கொடுலகாண்டுமாற்றலர்கண்பிதுங்க
மிதிக்குந்தடக்கரிமேல்வரும்வேந்தர்பொய்வாழ்வைமெய்யா
மதிக்குந்தரத்தவரென்னாவர்நீலிவனத்தையனே
கொதிக்குந்தழற்கட்பிரானேயெனைப்பணிகொண்டவனே. |
17 |
2045 |
கொண்டற்புரையுங்கருங்குழல்வெண்ணகைக்கோதையரைக்
கண்டற்புறுமனமேகனறூங்குகண்காட்டியன்பு
விண்டற்புடைக்குநிறத்தான்வரினென்விளம்புவையின்
றண்டற்புதனையெம்பைஞ்ஞீலிமேவியவத்தனையே. |
18 |
2046 |
அத்தனைவாம்பரியேற்றனைநீலிவனத்தமர்ந்த
நித்தனைவாவென்றென்குற்றேவலுங்கொணிருமலனைக்
கத்தனைவாய்மனமெய்யாற்றொழார்முற்கருமங்கணூ
லெத்தனைவாசித்திருக்கினுநீங்குவதேதவர்க்கே. |
19 |
2047 |
ஏதென்பணிகொண்டருள்வதின்றோவிரங்காமனமோ
வோதென்பணியதுனக்கியான்மந்தாகினியுற்றசடை
மீதென்பணிந்தவெம்பைஞ்ஞீலியையநல்வெற்பரையன்
மாதென்பணியைமொழியொருபாகமுறைமுதலே. |
20 |
2048 |
முதலிவனத்துச்சடையானெனமுன்னலின்றியைம்பா
லதலிவனத்துக்களந்தனங்கஞ்சவரும்பெனவே
நுதலிவனத்துமடவார்பின்சென்றுறுநோயகலக்
கதலிவனத்துப்பெருமான்றிருவடிகண்டனனே. |
21 |
2049 |
2049.
கண்டலப்போதைமுடிக்கணியாதமுக்கட்பரற்கு
வண்டலப்போதைமலியுங்கதலிவனத்தவற்கு
விண்டலப்போதைநகையுடைத்தாற்குவிருப்பிலைநீ
தொண்டலப்போதையலார்பாலுயிர்த்துணைசூழ்ந்துநெஞ்சே. |
22 |
2050 |
நெஞ்சத்திருக்குமடவார்மயக்கமுநீங்குதல்செய்
தஞ்சத்திருக்குமரன்றாதையைவெள்ளனப்பெடைகள்
கஞ்சத்திருக்குமெம்பைஞ்ஞீலிநாதனைக்கண்டுதொழா
வஞ்சத்திருக்கும்விடுமோபிறப்புமரணமுமே. |
23 |
2051 |
மரணங்கடந்துய்யலாகுங்கண்டீர்முன்வருங்கரியை
முரணங்கடங்கவுரித்தார்பைஞ்ஞீலிமுதல்வரொன்னா
ரரணங்கடங்கலிலாதெரித்தாரெனையாண்டவர்பொற்
சரணங்கடந்திடத்தொண்டாகிவாழுந்தரத்தருக்கே. |
24 |
2052 |
தரங்கந்தரும்பிறவிக்கடன்மூழ்கித்தளர்ந்துமனக்
குரங்கந்தமாதரைப்பற்றநிற்பேன்முன்கொடியகடாத்
துரங்கந்தறுகட்சமனேறிவேகத்திற்றோன்றுவனீ
யிரங்கந்தநாளினிற்பைஞ்ஞீலிமேவியிருப்பவனே. |
25 |
2053 |
இருந்தனமீதெனவீட்டிமின்னார்களியம்புமொழி
மருந்தனமென்னடையென்றுழல்வீர்நமன்வந்துவிட்டான்
முருந்தனவெண்ணகைபங்கனைநீலிவனமுதலைப்
பொருந்தனன்னெஞ்சமுறுமோவுறுதல்பொல்லாத்தரமே. |
26 |
2054 |
தரத்தருக்கன்றனகர்சூழ்தரவச்சந்தந்தபத்துச்
சிரத்தருக்கன்வலிதேய்த்தார்க்கரம்பைசெறியுஞ்சிவ
புரத்தருக்கன்மலிகண்டர்க்குத்தொண்டர்புகழவருள்
வரத்தருக்கன்புடையேற்கேதிருவினைவாட்டுதலே. |
27 |
2055 |
வாடாதிசைமலர்க்கண்மடவார்வலைப்பட்டுழன்று
நீடாதிசைவநெறிச்செல்கிலாதுநினதடிக
டேடாதிசைபகராதிருந்தாலுமென்றீமைகெடத்
தாடாதிசைதொழும்பைஞ்ஞீலிமேவியசங்கரனே. |
28 |
2056 |
சங்கரனேசம்புவேயிறையேபொற்றனவமலை
பங்கரனேயெனப்பாடாவெனக்கருள்பாதமணிப்
பொங்கரனேசத்தணிந்தவனேமுக்கட்புண்ணியனே
செங்கரனேதிருப்பைஞ்ஞீலிமேவுஞ்சினகரனே. |
29 |
2057 |
சினனாதனையில்வழியேசெலுஞ்சிறியேன்சிறிது
மனனாதனைச்சுத்தஞ்செய்யேன்பொல்லாமடவார்மயலா
மினனாதனைவிலனானாலுமோங்குமிருங்கதலி
வனனாதனைத்தொழுவேற்கில்லையோசிவமாநகரே. |
30 |
2058 |
மானாடும்வாசவன்வானாடுமற்றயனாடுமினி
யானாடும்வண்ணமிலையேனென்றாலருளெம்பெருமான்
றேனாடும்பொங்கர்மலியும்பைஞ்ஞீலிச்சிவனுமையாள்
கோனாடுமஞ்ஞையுமூர்ந்தானுக்கத்தன்கொடுத்தனனே. |
31 |
2059 |
கொடுக்குந்தருநன்னிழலிருந்தேயிகல்கொண்டடல்வே
லெடுக்குந்தருக்கர்குறும்போட்டிவாழ்தலுமெண்ணுகிலேன்
முடுக்குந்தருமன்சினந்தெதிராமுனையக்கரங்கா
னடுக்குந்தருணத்தில்வந்தாள்பைஞ்ஞீலியென்னாயகனே. |
32 |
2060 |
அகத்தாசையற்றிலனின்னடியார்க்கன்பனாகிலனிச்
சகத்தாசையெங்குந்திரிந்துழன்றேசலித்தேனதனா
லுகத்தாசைநீக்கியெனையாளவேண்டினனுன்னையைந்து
முகத்தாசையிலச்சிலையாய்பைஞ்ஞீலியின்முக்கண்ணனே. |
33 |
2061 |
கண்னுதலிக்குப்பணைசேர்பைஞ்ஞீலி்க்கடவுண்மலைப்
பெண்ணுதலி்க்குறிக்கும்பாகமீந்தபெருமநினை
யெண்ணுதலிக்குமற்றங்கேனெனலன்றியேங்கிடுமென்
னொண்ணுதலிக்குமனமிரங்காததென்னுத்தமனே. |
34 |
2062 |
உத்தமனத்தனமலைபங்காளனொளிர்சடையா
னித்தமனத்தன்முகிலூர்புரந்தரனேமியொடு
சுத்தமனத்தன்பணியும்பைஞ்ஞீலியெஞ்சுந்தரனிம்
மத்தமனத்தன்மடனென்றெண்ணாதென்னுள்வந்தனனே. |
35 |
2063 |
வந்தானைசீறிப்பொரும்போதுரித்ததன்மாவதளை
நந்தானையென்றரைமீதுடுத்தானைநஞ்சுண்டவனைப்
பந்தானைகொங்கைவயினுமைபாகனைப்பங்கயனைத்
தந்தானையம்பனைப்பைஞ்ஞீலியானைச்சரண்புகுமே. |
36 |
2064 |
சரமாரனைச்செற்றவனைப்பைஞ்ஞீலிச்சயம்புவைமுப்
புரமாரனைவின்றியுண்ணக்கண்டானைப்பொருவில்பல்
சிரமாரனைத்தொழுதேத்தீர்நுஞ்சென்மங்கடீர்வதற்கா
தரமாரனையர்கருப்பாழ்படாதங்கடுப்பவரே. |
37 |
2065 |
அடுவாரணபுரிபோர்த்தபிரானையணிகளத்திற்
கடுவாரணலையெம்பைஞ்ஞீலியானைக்கனதனத்திற்
றொருவாரணங்கொருபாகனையேத்தித்தொழார்களெல்லாம்
படுவாரணங்கிலெனமறைநான்கும்பகர்தருமே. |
38 |
2066 |
தருமந்தகவின்றியேமடமாதர்தருமயல்பட்
டருமந்தகல்வியிழப்பீர்பைஞ்ஞீலி்யனைப்பணியீர்
தெருமந்தகன்றுதிரிந்தால்வெம்போத்தைச்செலுத்தியெதிர்
வருமந்தகன்விடமாட்டானெங்கோடிமறையினுமே. |
39 |
2067 |
மறைவாயவர்புகழ்ந்தேத்துங்கதலிவனத்தினமர்ந்
துறைவாயன்றாழிமதித்திடுங்காலத்துதித்தவிடக்
கறைவாய்மணிமிடற்றெம்மையனேநினைக்காண்டலின்றித்
தறைவாயடியன்வருந்துவனோவினித்தாங்கிக்கொள்ளே. |
40 |
2068 |
தாங்கரும்பாரமெனயான்பெறும்வினைதன்னொடென்று
போங்கரும்பாரமயக்கமெல்லாமுக்கட்புண்ணியனே
கோங்கரும்பாரமுலைபங்கனேகுற்றமற்றவனே
தீங்கரும்பாரஞ்செறியும்பைஞ்ஞீலிச்சிவபரனே. |
41 |
2069 |
சிவசம்புசங்கரநின்மலதீஞ்செங்கழைநட்குமீ
துவசம்புமஞ்சளுமோங்கும்பைஞ்ஞீலியுறைபவபொற்
கவசம்புயங்கத்தநின்மேற்கவிபகரத்தலைவி
திவசம்புன்மைச்சிறியேனுக்குண்டாயதுன்செவ்வருளே. |
42 |
2070 |
அரும்பன்னமென்முலைமேற்சாந்திடாவெனதாசைமுற்றும்
விரும்பன்னமேதிருப்பைஞ்ஞீலிமேவும்விமலற்கெதிர்
பொரும்பன்னகப்புலித்தோலணிந்தாற்குப்புகைந்துழலா
வரும்பன்னகப்பணியாற்கோதியிங்குவரச்சொல்வையே. |
43 |
2071 |
வரந்தந்துதொண்டனையாளுங்கதலிவனத்தரனை
நரந்தந்துதைகொன்றைத்தாரனைவாழ்த்தியெஞ்ஞான்றுமிரு
கரந்தந்துயர்கெடச்சென்னிவையார்கள்கணக்கில்பல்லா
யிரந்தந்துகற்றிருந்தாலும்விடாவினையீட்டங்களே. |
44 |
2072 |
ஈட்டமரப்பனையேட்டைவிடாதெடுத்தேயெழுதும்
பாட்டமரப்பனையார்மீதன்பாகப்பகர்ந்தென்பெற்றீர்
வாட்டமரப்பனைவிக்குநஞ்சுண்டவனைக்கதலிக்
காட்டமரப்பனைப்பாடாதுழலுங்கவிஞர்களே. |
45 |
2073 |
கவிக்குமகுடம்புனைந்துசெங்கோலொன்றுகையிற்கொண்டு
புவிக்குமனாகவிருக்கினும்வானம்புரக்கினுமெ
னவிக்குமகிழுஞ்சுரர்சூழரம்பைவனத்தனைக்கே
குவிக்குமனத்தன்புகொண்டிலராயிற்குறித்திடினே. |
46 |
2074 |
குறித்தேனினியபைஞ்ஞீலியென்பார்முன்னுங்குற்றமற
முறித்தேனினித்திலப்பல்லார்மயலென்பர்முன்னுநிற்பாய்
வெறித்தேனினின்னருளாலடியேன்வினைவேரொடுங்கப்
பறித்தேனினியந்தகற்கொருநாளும்பயமிலையே. |
47 |
2075 |
இலையம்புயனெடுமாற்குமெட்டாதபைஞ்ஞீலியெம்மான்
றலையம்புயங்கமணிந்தோனைப்பாடித்தழைமினிப
மலையம்புயர்கழையான்செயும்போரினறிவழிந்து
மலையம்புயவெனமூடரைப்பாடிவருந்துவிரே. |
48 |
2076 |
வருந்தத்தைகாள்கைவளைசோர்ந்தனையர்மனம்வெறுக்க
விருந்தத்தையின்றறியீரோபைஞ்ஞீலியிறையவற்குப்
பொருந்தத்தையற்கொருபாகந்தந்தாற்கின்றுபோயெனது
பெருந்தத்தையோதிவருவீர்மதியம்பிறக்குமுன்னே. |
49 |
2077 |
முன்னும்படியறிவில்லாதவென்முழுமூடநெஞ்சை
மின்னும்படிகமெனவாக்கிவெவ்வினைவேரறுத்தான்
மன்னும்படியெங்குங்கொண்டாடவாணிமலர்மகளுந்
துன்னும்படிக்குளப்பைஞ்ஞீலிமேவியசுந்தரனே. |
50 |
2078 |
சுந்தரத்தார்நின்பதத்தணிந்தாடித்துதித்துவிடக்
கந்தரத்தாவெனப்போற்றறியேற்குன்கழறருவாய்
குந்தரத்தாவெங்கொடுங்காலற்செற்றகுரைகழலா
யந்தரத்தார்தொழும்பைஞ்ஞீலில்மேவியமரத்தனே. |
51 |
2079 |
அத்தத்திலங்குசபாசமுள்ளாற்கத்தனைவினையேன்
சித்தத்திலங்கும்பரனைப்பைஞ்ஞீலியிற்சென்றுதொழார்
கத்தத்திலங்குழைப்பார்போல்யமன்கசக்கத்திரிபட்
டுத்தத்திலங்குமழிந்திங்குந்தோன்றியுலைபவரே. |
52 |
2080 |
உலகஞ்சவெம்மைகொண்டோங்குஞ்சமனையுதைத்தவனே
பலகஞ்சமீதுபொற்றூவிசெங்கால்பசுஞ்சூட்டுடனே
யிலகஞ்சமேவும்பைஞ்ஞீலியசற்றுமிரக்கமிலேன்
கலகஞ்சங்கேந்தியுங்காணாநின்றாள்கொளக்கண்டனனே. |
53 |
2081 |
கண்டனஞ்சத்திவரைகடுப்பாள்பங்கனேகொதிப்புக்
கொண்டனஞ்சத்திறல்குன்றவுண்டாய்குளத்தாமரையில்
வண்டனஞ்சத்திக்கும்பைஞ்ஞீலிநாதமனமயங்கு
தொண்டனஞ்சத்தினம்வாட்டிடுமோவினைத்தொல்லைகளே. |
54 |
2082 |
தொல்லையிலாயவினையாற்சுழன்றடைந்தேன்மனத்தை
யொல்லையிலாக்குடிகொள்வாய்பைஞ்ஞீலியென்னுத்தமனே
வெல்லையிலாதரன்றந்தாய்பொற்கோபுரமேவுதிருத்
தில்லையிலாடியதாளாயத்தீவினைதீர்வதற்கே. |
55 |
2083 |
தீராக்கவலையுடையேனையன்பரிற்சேர்த்தருளிச்
சீராக்கவலைப்புனல்வாவியிலுகள்சேலைக்கண்டு
சாராக்கவலைச்சிரல்கொள்பைஞ்ஞீலித்தலைவகைக்குப்
பேராக்கவலையொப்பாமென்னகந்தையைப்பேர்த்தருளே. |
56 |
2084 |
பேரரம்பைக்குலமோங்கும்பைஞ்ஞீலியர்பெய்மதுவார்த்
தாரரம்பைச்சடைவைத்தவர்முப்புரந்தம்மைவென்ற
வீரரம்பைப்பணிபூண்டவர்மேவவிரும்பியவென்
னோரரம்பைக்கனையாளையின்றாளவந்துற்றிலரே. |
57 |
2085 |
உற்றவர்தொண்டர்வினைவேரறுப்பதற்கும்பருட
னற்றவர்சூழ்திருப்பைஞ்ஞீலிமேவியநாயகர்பொற்
கற்றவர்கொண்டருள்புண்ணியர்தாளையென்கன்னெஞ்சமே
பற்றவரன்றிமற்றாரேகொடுப்பர்பரகதியே. |
58 |
2086 |
பரமனையன்புசெறிநெஞ்சியற்பகையார்க்குமுத்தி
தரமனையிற்சென்றவனையெம்மானைத்தழங்குகனற்
கரமனையோங்குங்கதலிவனத்துமுக்கண்ணனைநல்
வரமனைவர்க்கும்கொடுப்பானைவாழ்த்திவரங்கொணெஞ்சே. |
59 |
2087 |
வருந்தாரெனமகிழ்ந்தேனிற்றைஞான்றுவரையுஞ்சும்மா
விருந்தாரனுப்புதலின்றிவண்டீரின்றுபோய்ச்சொலுங்கோள்
பெருந்தாரணிபுகழ்ந்தேத்தும்பைஞ்ஞீலிப்பெம்மானுக்குத்தேன்
றிருந்தார்முடியுடையாருக்குத்தேவர்தந்தேவருக்கே. |
60 |
2088 |
தேவிக்குருவம்பகிர்ந்தார்பைஞ்ஞீலிச்சிவபுரர்க்குப்
பாவிக்குருகுமனமிலராயபரமருக்குத்
தூவிக்குருமணிநந்தினஞ்சிந்துந்துறைமலியும்
வாவிக்குருகினங்காள்சொல்லுவீரென்றன்மையலையே. |
61 |
2089 |
மையற்கடாக்களிறல்லாநடத்திவருமதனப்
பையற்கடாததென்செய்தேனெஞ்ஞான்றும்பகைத்துவெங்கோன்
மொய்யற்கடாவினனாகப்பைஞ்ஞீலிமுழுமுதலென்
னையற்கடானையுரித்தாற்குறுமையலாயினனே. |
62 |
2090 |
ஆயனையம்பனுமையொருபாகனரம்பைவனத்
தூயனையம்பன்மினாரிடத்தேற்றவன்றூத்திரையான்
சேயனையம்பகத்தாலெரித்தானைச்சிலகவிதந்
தாயனையம்பதவென்றோதிடவென்றளர்விலையே. |
63 |
2091 |
இல்லாதவாதனையீராகவையனிரும்புகழைக்
கல்லாதவாவுற்றுழல்வீர்கதலிவனத்தமர்ந்தோன்
பல்லாதவாவற்றனையோவென்றியாரும்பகரச்செய்தோ
னல்லாதவானவனுண்டோநுந்தீமையறுப்பதற்கே. |
64 |
2092 |
அறுகாரணிசடையாற்குமரோங்கலரையனன்பாய்ப்
பெறுகாரணியொருபாகற்குத்தேவர்பிராற்கிலங்கு
மறுகாரணிதிருப்பைஞ்ஞீலியாற்கென்வருத்தஞ்சொல்லி
யுறுகாரணியலகொணர்ந்தாலென்னாங்கொலிவ்வொண்மதியே. |
65 |
2093 |
மதித்தலையாழிகடைவேலைவந்தநஞ்சுண்டவனே
விதித்தலையார்கரத்தோனேபைஞ்ஞீலியெம்வித்தகனே
துதித்தலையான்செய்திலனேனுமின்னந்தொடர்ந்தனைபா
லுதித்தலையாமலெனையாளநீயென்றுடம்படலே. |
66 |
2094 |
படப்பணிபூண்டபுயத்தபைஞ்ஞீலிப்பரம்பரபூங்
கடப்பணிவேளத்தசெங்கையின்வண்டுகழலமுத்து
வடப்பணிசிந்திமலர்ப்பாயனீத்துமருவவெண்ணி
நடப்பணிற்பாடிகைப்பாளுயிர்ப்பாளெங்கணன்னுதலே. |
67 |
2095 |
நன்னத்தனேடும்பொற்பாதத்தனேநல்லரம்பைவன
மன்னத்தனேரில்பைஞ்ஞீலியனேமருவாரைவெல்வோன்
மின்னத்தனேகமருப்பன்விரும்பும்விருப்பத்தனே
யென்னத்தனேநினையல்லான்மற்றியாரையுமெண்ணலனே. |
68 |
2096 |
எண்ணாதவனன்பொடுநின்பதத்தையென்றாலுமெனை
யுண்ணாதவன்னஞ்சமுண்டதுபோலவுவந்தருள்வாய்
விண்ணாதவன்கதிர்தோற்றாவரம்பைவியன்வனமுக்
கண்ணாதவனன்குடையார்மனத்துறைகாரணனே. |
69 |
2097 |
காராழியொக்குநிறத்தான்செய்பூசனைகண்டினிதா
வாராழிமுன்னமளித்தாய்பைஞ்ஞீலியமர்ந்தவனே
பாராழிக்கேருடையாய்மடவார்மயல்பட்டுழலும்
பேராழியவினையேனுன்னருளென்றுபெற்றுய்தலே. |
70 |
2098 |
பெற்றனடாவும்பெருமான்பைஞ்ஞீலிப்பெம்மானிலங்கும்
போற்றனடாவுழைக்கண்ணிபங்கானன்புபூண்மனத்திற்
குற்றனடாமற்குணநடுமூன்றுகட்சோவைத்தொழக்
கற்றனடாவந்தகாவந்துபாரொருகையினியே. |
71 |
2099 |
கையத்தியங்கலறத்தோலுரித்தவன்காலற்செற்றோன்
மொய்யத்தியங்குஞ்சடையான்பைஞ்ஞீலிமுழுமுதல்வன்
வையத்தியங்கொள்பொற்றேரானையன்றிவருத்தம்வினை
செய்யத்தியங்கினும்பாடேனினிமற்றொர்தேவரையே. |
72 |
2100 |
தேவாகருங்குழல்பாகாபைஞ்ஞீலிச்சிவபுரனே
மாவாகருங்குலவேதருந்தேடுமறைமுதலே
பூவாகருங்குன்றுபன்னிரண்டாற்குப்பொருந்தத்தனே
நீவாகருங்குண்டைமேலம்மையோடென்முனேயமுற்றே. |
73 |
2101 |
உற்பத்தியாவதுஞ்சாவதுமன்றியுன்றாண்மலர்க்கு
நற்பத்திகொண்டுய்ந்தறியேன்பைஞ்ஞீலியென்னாயகனே
கற்பத்தினான்சக்கரத்தானின்றேத்தக்கடும்புரம
திற்பத்திவேவச்செற்றாயுய்யுமாறருள்செய்தருளே. |
74 |
2102 |
செய்க்குவளைக்குநிகர்நேத்திரம்புனல்சிந்துவதுங்
கைக்குவளைக்குலஞ்சேராததுஞ்சுகங்காள்சொலுநன்
மைக்குவளைக்குங்கடல்சீறிடுமுன்மதியெழுமு
னைக்குவளைக்குழைபாகற்கரம்பையடவியற்கே. |
75 |
2103 |
அடவிக்கதலிப்பசுங்குரு்த்தோடியகல்விசும்பைத்
தடவிக்கதறக்கதிரோன்குரகதத்தைத்தகர்த்துக்
கடவிக்கதனஞ்செய்பைஞ்ஞீலிமேவுங்கடவுண்மதன்
படவிக்கதமுறச்சேற்றாயருணின்பொற்பாதத்தையே. |
76 |
2104 |
பாதம்பணியும்வகையறியேற்குன்பதம்பணியும்
போகம்பணியுமைபாகபைஞ்ஞீலியபொற்சடையின்
மீகம்பணியும்விமலமன்றேறிவிமலையுடன்
வாதம்பணியும்பரேத்தநின்றாடுமறைமுதலே. |
77 |
2105 |
மறைவழியேநின்றிருப்புகழோதிமனங்கனிந்து
முறைவழிபாடுபுரியமுன்னாதிருப்பேற்குமனக்
குறைவழியத்தயைசெய்தாண்டருள்வைபொற்குன்றுவில்லாய்
நறைவழியுங்கதலிச்சோலைமேவியநாயகனே. |
78 |
2106 |
அகலப்படவரவாய்த்தேரைபோலுமம்மாதர்விழி
யிகலப்படவரந்தைக்கிடனாய்க்கொடியேய்கடன்மே
வுகலப்படவரவந்தீர்ந்தபோலுமுள்ளேற்குளத்தா
சுகலப்படவரம்பைக்காடவோடத்துரத்துதியே. |
79 |
2107 |
உதிக்கின்றவம்புலிவெம்புலியாகியுறவவ்வுடு
பதிக்கினறவம்புரிந்தேன்சந்தம்பூசப்பருமுலைமேற்
கொதிக்கின்றவம்பல்செய்வேனோபெண்காளென்குறையுரையீர்
மதிக்கின்றவம்பலத்தாடும்பைஞ்ஞீலிவரனுக்கின்றே. |
80 |
2108 |
வரம்பலமாவொன்றுநாயேற்குதவுமருமலர்ச்செ
யிரம்பலமாமொய்யனைச்செற்றவாநல்லிருங்கதலி
மரம்பலமாப்பலசேரும்பைஞ்ஞீலிமறைமுதலே
சிரம்பலமாலையணிந்தாய்நின்றாட்கன்புசெய்வதற்கே. |
81 |
2109 |
செல்லைக்கடுத்தகுழலார்பிறையைச்செயித்துவரி
வில்லைக்கடுத்தநுதலார்மயக்கைவிரும்பிவினைத்
தொல்லைக்கடுத்தவுடம்பெடுத்தேனைநின்றொண்டரிற்சே
ரொல்லைக்கடுத்தருக்கோட்டீபைஞ்ஞீலியுறைபவனே. |
82 |
2110 |
பவனாசனப்பனெம்பைஞ்ஞீலிநாதன்பருப்பதவிற்
சிவனாசனங்கயிலாயவெற்பான்செஞ்சடைப்பெருமா
னிவனாசன்மக்கடனீத்தேறுவனென்றியம்பவமைந்
தவனாசன்வஞ்சனென்றென்னையெண்ணாதினிதாண்டனனே. |
83 |
2111 |
ஆண்டலைப்பத்திரக்கேதனத்தாற்கத்தனேயணிகொள்
பூண்டலைப்பத்திரியேற்றாய்பைஞ்ஞீலியனேநின்பொற்றாள்
காண்டலைப்பத்தியினாலறியாக்கள்வனேற்குவினை
யீண்டலைப்பத்தியங்கித்திரிவேற்கென்றிரங்குவையே. |
84 |
2112 |
இரக்கஞ்சற்றுங்கிடையாமனத்தேற்கஞ்சலென்றுநின்செங்
கரக்கஞ்சங்காட்டிநின்றொண்டர்குழாத்திற்கலக்கவைப்பாய்
தரக்கஞ்சமுன்னமுரித்தாய்பைஞ்ஞீலித்தலைவமிக்க
விரக்கஞ்சர்ப்பந்தரித்தாய்மழுவேந்தும்விடையவனே. |
85 |
2113 |
அவனிவனெற்றலையாமனெஞ்சேயென்னையாளுடைய
சிவனிவரேறுடைப்பைஞ்ஞீலிநாதன்றிசைமுகத்தோன்
புவனிவனிதைபுணர்வோன்கிளைத்தபுரனுமைக்கோர்
தவனிவரும்பவந்தீர்ப்பான்பொற்றாளிணைசாருவையே. |
86 |
2114 |
சாருக்கனையமொழியாதிரதிதவனடத்தும்
போருக்கனையர்பகைக்கினிச்செய்வதென்பூங்கதலித்
தாருக்கனையடர்பைஞ்ஞீலிமேவுந்தலைவனெம்மான்
மேருக்கனையக்குழைத்தானிங்கெய்தின்மிகவுநன்றே. |
87 |
2115 |
நன்றத்தம்வேண்டினனீகெனமூடரைநண்ணியம்பொற்
குன்றத்தடம்புயனேயெனப்பாடிக்குறைந்தலைந்து
வன்றத்தளாவித்திரியாமனீலிவனத்தவபொன்
மன்றத்தயானினக்கேகவிபாடமனந்தந்ததே. |
88 |
2116 |
தந்தக்கரியதள்போர்த்தான்பைஞ்ஞீலித்தலைவனுள்ளு
வந்தக்கரியணிந்தான்கோலமாகிமலரடியை
முந்தக்கரியவன்றேடநின்றானென்முழுவினைநோய்
சிந்தக்கரியப்புரிந்தாண்டருடருந்தேசிகனே. |
89 |
2117 |
கனத்துப்புடைகொடனமதர்நோக்கங்கறுத்தகுழல்
வனத்துப்புடையிதழம்மைபங்காகஞ்சவாவிகளி
னனத்துப்புடைமலங்குந்துபைஞ்ஞீலிநம்பாநிற்றொழ
மனத்துப்புடையவனோவாதலாலெற்குவந்தருளே. |
90 |
2118 |
வந்தித்தலையுடையார்க்கன்பனீலிவனத்துறைவோன்
பந்தித்தலையன்வரைக்கீழலறும்படிநெரித்தோன்
சிந்தித்தலைகடல்போலேகண்ணீர்மிகச்சிந்துமென்முன்
னிந்தித்தலைவருமுன்வருமாறியம்பெய்திமஞ்சே. |
91 |
2119 |
மஞ்சனகண்டனைப்பைஞ்ஞீலிவாழுமறைமுதலை
வஞ்சனமன்புரளக்கழறூக்குமெம்மானையொண்கண்
ணஞ்சனமாதர்மயல்வீழ்ந்தறிவற்றழிந்துழல்வீர்
வெஞ்சனனங்களைந்தீடேறியுய்யவிரும்புமினே. |
92 |
2120 |
விருப்பன்னமீதில்லைபாலினுமில்லைவெண்முத்தணிகொ
ளருப்பன்னமென்முலைகாந்துவதாலவ்விருப்பமெங்ங
னிருப்பன்னமுண்டகஞ்சேரும்பைஞ்ஞீலியினெம்மிறைவர்
திருப்பன்னகந்தரித்தார்புயத்தேறுந்தெரியலினே. |
93 |
2121 |
அலம்புகுவால்வினையெஞ்ஞான்றும்வாட்டவயர்ந்திருகண்
ணிலம்புகுமாறலறித்திரிவேனையென்றாண்டருள்வாய்
விலம்புகுலாநுதற்கண்ணிபங்காமிகுமென்கதலிக்
குலம்புகுகோயிலிருப்பாயடியன்குலதெய்வமே. |
94 |
2122 |
குலமலையாவுந்தொழநின்றபொன்மலைக்கோனருளு
நலமலைபாகபைஞ்ஞீலியனேநதிபோலுமத
சலமலையுங்கவுட்டோலுரித்தாயென்னைச்சார்ந்துவினை
வலமலையாமலினிதாவென்றோதயைவைப்பதுவே. |
95 |
2123 |
பதுமத்தனங்குடிகொள்ளும்பைஞ்ஞீலிப்பரசிரத்தில்
விதுமத்தனங்கையொருபாகவெள்ளைவிடையநினை
முதுமத்தனங்கம்வருந்தலுந்தேடலுமுன்னலைச்செய்
வதுமத்தனங்கொண்மடவார்க்கென்றாலெங்ஙன்வாழ்த்துவனே. |
96 |
2124 |
வனத்தனையன்றொழும்பைஞ்ஞீலிமேவுமறைமுதலை
யெனத்தனையன்றுபுரமெரித்தானையிலங்கிலைவேற்
சினத்தனையன்குகனாகப்பெற்றானைச்செம்மான்மழுவாண்
மினத்தனையன்றிப்புகழேன்புறஞ்சிலவீணரையே. |
97 |
2125 |
வீணாகவம்பரைக்கொண்டாடிப்பாடும்வெறும்புலவீர்
நாணாகவம்பலகோடலல்லாற்சற்றுநன்மையுண்டோ
பூணாகவம்பலர்கொன்றையவோங்குகதலிப்பொங்கர்
வாணாகவம்பற்றுமுன்வாவென்றோதும்வருந்தலின்றே. |
98 |
2126 |
வருத்தத்தையாற்றுதல்செய்யேனினியத்தைமாற்றிவருங்
கருத்தத்தையுந்தவிர்த்தாள்வாய்கடற்கட்டுகிரினிறப்
பொருத்தத்தைமேவுஞ்சடையாய்பைஞ்ஞீலியெம்புண்ணியனே
மருத்தத்தையார்கொன்றைத்தாராய்புரத்தொருமாதினனே. |
99 |
2127 |
மாதப்புனற்குமனஞ்சேரொட்டாததைமாற்றுதல்செய்
தேதப்புனற்பரிற்கூட்டாதெனையுய்யவைத்ததுபூந்
தாதப்புனற்கொன்றைத்தாரானென்னம்மைதழுவிடத்தான்
சீதப்புனற்பணைப்பைஞ்ஞீலிநாதன்றிருவடியே. |
100 |