Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Language & Literature > Project Madurai >Index of  Etexts released by Project Madurai - Unicode & PDF ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு பகுதி 1 (1-133) > பகுதி 2 (செய்யுள் 134-256) > பகுதி 3 (செய்யுள் 722-834) > பகுதி 4 (செய்யுள் (276 -388) > பகுதி 5  (செய்யுள் 389 -497) > பகுதி 6  (செய்யுள் 498 -609) > பகுதி 7 (செய்யுள் 610 -721) > பகுதி 8 (செய்யுள் 835-946) > பகுதி 9 (செய்யுள் 947 -1048) > பகுதி 10 (1049) > பகுதி 11 (1050-1151) > பகுதி 12 (1705 - 1706) > பகுதி 13 (1152 - 1705) >  பகுதி 14 (2027-2128) >  பகுதி 15 (1709 - 1810)

திருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
பிரபந்தத்திரட்டு - பகுதி 8 (835-946)
திருவாவடுதுறை ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ்.

Tiricirapuram makAvitvAn mInATci cuntaram piLLaiyin
pirapantat tiraTTu - part 10 (835-946)
tiruvAvaTuturai srI ampalavANatEcikar piLLaittamiz


Acknowledgements:

Our Sincere thanks go to Dr. Thomas Malten and Colleagues of the Univ. of Koeln, Germany
for providing us with a photocopy of the 1902 edition of the pirapantat tiraTTu, thus enabling the production of the etext. Etext preparation and proof-reading: This etext was produced through Distributed Proof-reading approach
and following persons helped in the preparation and proof-reading of the etext: Subra Mayilvahanan, Durairaj, Vijayalakshmi Peripoilan, S. Karthikeyan, Vassan, Lakshmanan S. Anbumani, Kumar Mallikarjunan & K. Kalyanasundaram DPPM server management and post-processing of etext: Drs. S. Anbumani and Kumar Mallikarjunan. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

� Project Madurai, 1998-2006 .
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


பாயிரம்
விநாயகர்துதி
835 சீர்கொண்ட தகுதியிற் றிரிகுணமு நிறுவிய திறத்தடிக் கருமூடிகந் -
      திகழ்நடுச் செம்மணி யொளிப்பணி முடிச்சிதச் சிறுபிறை வயக்கிடுதலாற்,
றார்கொண்ட மலர்செறி கிழக்குமேக் கொடுபகை தவிர்ந்துதாய் நாப்பணட்டுத் -
      தாப்பிசைப் பொருள்கோளின் மேவவமர் கயமுகத் தம்பிரான் றாள்பரசுவாம்,
பார்கொண்ட தன்பொதுப் பெயரெழுத் தின்றொகைப் படிகொண்ட வாவடுதுறைப் -
      பதிகொண்டு துதிசிறப் புப்பெயரு மத்தொகைப் படிகொண்டு பரவுயிர்கள்பாற்,
கூர்கொண்ட வத்தொகை யதன்றொழி லறக்கருணை குலவியத் தொகையபாசங் -
      கூடா தளிக்குமம் பலவாண தேசிகன் கொழிதமிழ்க் கவிதழையவே.
(1)
ஆன்றோரிலக்கணமுகமாகக் காவற்கடவுளாவா ரிவரெனத் துணிந்து அவ்வழிச் சென்றமை கூறியது.

836 வழிபடுதே வுளுங்கொலைதீர் தெய்வதங்காப்புரைக்கவென
      வகுத்த வான்றோர்,
மொழியுணர்ந்து மவ்வழிச்சென் றிலர்முன்னோ
      ரிரும்புகழ்க்கோ முத்தியெங்கள்,
பொழிகருணைச் சின்மயனம் பலவாண
      தேசிகன்மேற் புகலப்புக்க,
கழிமகிழ்யா மவ்வழிச்சென் றனஞ்சிறக்கு
      மிப்பிள்ளைக் கவியுந் தானே.
(2)

1. காப்புப்பருவம்.
திருநந்திதேவர்.

837 பூமேவு வேதா கமப்பொரு ளடங்கலும் பொங்கொளிக் கைலைப்பிரான் -
      பொற்பத் தெருட்டத் தெருண்டுஞா னக்குரவு பூண்டுமா லயனாதியோர்,
தாமேவு மணிமுடித் தலைவணங் குந்தொறுந் தாங்குந் தொறுந்தழும்பு -
      தாட்புற மகங்கொண்டு பொலிநந்தி நாயகன் றன்பெரும் புகழ்பரசுவாம்,
பாமேவு பேருலகர் கருமவள விற்கருவி பற்றியோ ருழியெய்தலே -
      பாங்கென வுணர்ந்திடத் தொழிலொன்று கோடலிற் பகருநான் முகமொழித்துத்,
தேமேவு முகமொன்று தழுவியா வடுதுறை செழிக்கவதில் வீற்றிருக்குஞ் -
      செல்வனைக் குரவர்தங் கோனையம் பலவாண தேவனைக் காக்கவென்றே.
(1)
சனற்குமாரமுனிவர் - வேறு.
838 எங்கள் பொதியத் திருமுனிவற் கியைந்த பழங்காப் பியக்குடியோ
      னென்னக் கருணைச் சயிலாதிக் கியைந்து பிரமன் மான்முதலோர்
தங்க ளுணர்விற் கப்பலாய்த் தனித்தா ருணர்விற் குள்ளொளியாஞ்
      சனற்கு மார முனிவர்பிரான் சரணாம் புயங்க டலைக்கணிவா
மங்கள் வழியு மாமலர்த்தா ளகத்துப் போகட் டுறத்தேய்த்த
      வதனை முடிக்கொண் டனனெனமண் ணறையா வாறு திருமுடிமேற்
றிங்க ளொழித்து வளர்செல்வத் திருவா வடுதண் டுறைமருவித்
      திகழுங் குருவம் பலவாண தேவன் றனைக்காத் தருள்கவென்றே.
(2)

சத்தியஞானதரிசனிகள் - வேறு.
839 பொய்யாத வேதச் சிரப்பொருளை யாரும் புறங்காண வானநின்றும் -
      பொலிதரு தியாகமணி கொடுவந்த மன்னனும் புந்திநாண் கொளவவித்தை,
தையாத சருவசங் கப்பரித் தியாகமணி தண்பெருங் கைலைநின்றுந் -
      தவாதெங்கு நோக்கக் கொணர்ந்தசத் தியஞான தரிசனிக டாள்பரசுவா,
மெய்யாத மாமலங் கழுநீ ரெனற்கியைய வினியகழு நீருமாயை -
      யெழினிநூ றித்தற்றெரிக்குங்கண் மணியெனற் கியைக்கண் மணியுநீக்கஞ்,
செய்யாத வினைநீறு செயுமெனற் கியையத் திருந்தும்வெண் ணீறுமேனி -
      திகழவா வடுதுறையின் மருவுமம் பலவாண தேவனைக் காக்கவென்றே.
(3)

பரஞ்சோதிமாமுனிவர் - வேறு.
840 அந்த மரூஉஞ்சீர் முசுகுந்த னன்பிற் றந்த மணியேற்ற
      வான்ற நகரங் களுடசிறந்த வாரூ ரெனச்சத் தியஞானி
தந்த மணிகைக் கொண்டுயர்ந்த தக்கோர் பல்லோ ருளுஞ்சிறந்த
      தலைவ னாய பரஞ்சோதி தாட்டா மரைக டலைக்கணிவா
மிந்த வுலகிற் பரிபாக மெய்தார் பேத மபேதமென
      விசைத்துப் பிணங்கா தெய்துவித்தே யியில்பு விளக்க வுருக்கொண்டு
வந்த கருணைப் பெருஞ்செல்வன் வான்றோய் பொழில்சூழ் திருத்துறைசை
      மருவுங் குருவம் பலவாண வள்ள றனைக்காத் தருள்கவென்றே.
(4)

மெய்கண்டசிவாசாரியர்.
841 போந்து புறத்துப் படரிருளைப் போக்குங் கதிரும் பன்னிரண்டே
      பொங்கி யகத்துப் படரிருளைப் போக்குங் கதிரும் பன்னிரண்டே
யேந்து புடவி யிடத்தெனப்பன்னிரு சூத்திரஞ்செவ் வாய்மலர்ந்த
      விணையில் வெண்ணெய் மெய்கண்டா னிணைத்தா மரைத்தா ளிறைஞ்சுவாம்
வாய்நத வடபா லாலவனம் வயங்கு தென்பாற் குருந்தவன
      மருவு வாரு மருள்பெறுவான மன்னு நடுப்பா லரசவனத்
தாய்ந்த சிங்க நோக்கமென வமர்ந்து நோக்குங் குருசிங்க
      மருள்கூர் திருவம் பலவாண வடிக டமைக்காத் தருள்கவென்றே.
(5)

அருணந்திசிவாசாரியர்.
842 போத நவின்ற பெருங்குரவன் பொற்பார் சித்தி கேட்டுமகிழ்
      பூத்துச் சிறப்புப் பாயிரமாப் பொலிய முதலா சிரியன்பேர்
சாத நினக்குத் தகுமென்று சார்த்தச் சிறந்த திருத்துறையூர்த்
      தலைமை யாள னருணந்தி தாட்டா மரைக டலைக்கணிவா
நாத மகன்ற பெருநிலையை நாடு முயிர்கட் கருள்புரிந்து
      நாளும் பசுத்து வந்தீர்ப்போ நாமென் றதனுக் கறிகுறியாச்
சீத மலியும் புனற்றடஞ்சூழ் திருவா வடுதண் டுமறைமருவுஞ்
      செல்வ னருளம் பலவாண தேவன் றனைக்காத் தருள்கவென்றே.
(6)

மறைஞானசம்பந்த சிவாசாரியர் - வேறு.
843 அரியபுக ழாசிரியர் பலருமுடை யவரே
      யாயினும்பங் கயம்போலத் தலைமைதரு வழக்காற்
பிரியமிகு மறைஞான சம்பந்த னெனும்பேர்
      பெற்றுவிளங் கியகடந்தைப் பெரியோனைத் தொழுவாங்
கரியமலப் பிணிகழலக் கழல்சூட்டி யடியேங்
      கன்மனத்தும் வன்மனத்தர் கருதாத கனகப்
பரியமதிற் றுறைசையகத் துங்கழலா தமரம்
      பலவாண தேசிகனைக் காத்தருள்க வென்றே.
(7)

உமாபதிசிவாசாரியர்.
844 விரும்புசிவப் பிரகாசந் தவப்பிரகா சமிலா
      வெய்யயாங் களுமடையச் சிவப்பிரகா சத்தோ
டரும்புபல நூலருளிச் செய்தவருஞ் குரவ
      னண்ணலுமா பதிசிவனை யஞ்சலித்துத் துதிப்பாம்
பெரும்புலவர் பெரியோனென் றறிந்தேத்தப் பட்ட
      பின்னருமம் பலவாணப் பெயர்புனைந்த கள்வன்
கரும்புகமு கெனவோங்கும் வயன்மலிதண் டுறைசைக்
      கண்ணமரண் ணலைநாளுங் காத்தருள்க வென்றே.
(8)

அருணமச்சிவாயர்.
845 இருண்மலமு மாயையுமற் றிருவினையுங் கழிந்தின்
      பெய்திடவெய் திடுமுயிர்கட் கினிதருளுந் திறத்தா
லருணமச்சி வாயனெனக் காரணப்பேர் புனைந்த
      வண்ணலடித் தாமரைக ணண்ணல்குறித் திடுவாம்
பொருண்மலிசெங் கொன்றையொடு வெள்ளெருக்கு மொப்பப்
      பொறுத்தபழங் காரணத்தா னலவர்துதி யொடுமித்
தெருண்மலியா வெந்துதியுங் கொண்டுதுறை சையில்வாழ்
      தேசிகனம் பலவாணன் றனைக்காக்க வென்றே.
(9)

சித்தர் சிவப்பிரகாசர்.
846 தம்மடியர்க் கிருக்குமிடம் வரையறுத்துத் தெரித்துத்
      தமக்கிருக்கு மிடங்குறியா தெவ்விடத்தும் பயிலுஞ்
செம்மனத்தா ராயினுமெஞ் சித்தத்து மமர்ந்த
      சித்தர்சிவப் பிரகாசர் சேவடிக டொழுவாஞ்
செம்மலரும் வெண்மலரு மெடுத்தடியர் தூற்றச்
      சேவடிமேல் வீழ்தலிரு தேசிகரும் பலகா
லம்மவணங் குதல்பொருவக் கோகழிவீற் றிருக்கு
      மம்பலவா ணனைநாள்க டொறுங்காக்க வென்றே.
(10)

நமச்சிவாயமூர்த்திகண் முதலிய பதினால்வர். - வேறு.
847 புரவு மிகுவள் ளுவர்குறளுட் புணர்பத் தினுமுள் பொருளிதெனப்
      புகலு மொன்றிற் குருமூர்த்தம் புகல்பத் திலுமுள் பொருளிதென்று
பரவு முலக முணர்ந்தேத்தப் படிவங் கொண்டு வெளிவந்த
      பண்பார் நமச்சி வாயர்முதற் பதினால் வரையுந் தொழுதெழுவாங்
குரவு புனையா வருமிருகை கூப்பப் பொலியு மரசென நூல்
      குறியா வுணர்ச்சி யாளருமுட் கொண்டு தெளிதற் கறிகுறியா
விரவு மரச வனத்தமர்ந்து விளங்கா நின்ற சின்மயனை
      மிக்க புகழம் பலவாண மேலோன் றனைக்காத் தருள்கவென்றே.
(10)

1. - காப்புப் பருவம் முற்றிற்று
2. - செங்கீரைப்பருவம்

848 நீர்பூத்த தாமரை சமழ்ப்புறப் பொலியும்விழி நெடியமா லுபமன்னியர் -
      நின்னா கமத்தின்வழி புரிதீக்கை பெற்றநா ணீக்கின னெனப்புழுங்குந்,
தார்பூத்த கூந்தற் புவிக்கோதை யதுபெறத் தண்ணீரி லசைவிலாது -
      தானின் றருந்தவஞ் செய்வள்களை யாவுடைத் தன்மையளு மாதலாலப்,
பார்பூத்த நாற்றமுட் குறியாம லுட்கொண்ட பருவமொன்றே குறித்துப் -
      பங்கயச் செங்கைதலை மேல்வைத் தெடுத்தொரு பதஞ்சூட்டி முகமலர்ந்து,
சீர்பூத்த பேரருட் டிருமேனி கொண்டவன் செங்கீரை யாடியருளே -
      சிற்பரன் றுறைசையம் பலவாண தேசிகன் செங்கீரை யாடியருளே. (1)
(1)
849 முந்தைமறை யாவையு முணர்ந்தநான் முகமுனிவன் முன்னின்று தாளமொத்த -
      முருகுவிரி பைந்துழாய் மாலைதுயல் வருபுய முகுந்தனெடு முழவதிர்க்க,
வந்தைதவி ராகாவு மூகூவு மேழிசை யமைத்தமிர்த தாரைவாக்க-
      வரகர வெனக்கணங் களிகொண்டு துளிகொண்ட வங்கணர்க ளாகியேத்த,
நிந்தைதவி ரிருமுனிவர் புடைநிற்க வேண்டுமென நினையாதி நினைவையாயி -
      னின்பழைய வுருவமொடு நேர்நிற்றி யாலென நிகழ்த்துதற் கஞ்சமாட்டேஞ் ,
சிந்தைகளி கூரவருள் வடிவாகி நின்றவன் செங்கீரை யாடியருளே -
      சிற்பரன் றுறைசையம் பலவாண தேசிகன் செங்கீரை யாடியருளே. (2)
(2)
850 மும்மையுல கும்புகழும் வேதா கமம்பகர் முழுக்குறி குணங் கடந்து -
      மொழிகின்ற பரநாத பரவிந்து வுங்கழன் முழுத்தபே ரொளியாகிய,
நம்மையொரு மழவிளங் குழவியென வுட்கொடு நயந்துபா ராட்டுமறிவு -
      நன்றா யிருந்த� தெனக்கருதி யையநீ நகையற்க நகைசெய்வையே,
வெம்மையறி யாமையுடை யாரிவர்க ளென்றுநீ யின்றுதான் கண்டனைகொலா -
      மென்றுநினை மென்றுநினையாங்களு நகைத்திடுவ மன்பினர்த மெய்ப்பில்வைப் பாயமுதல்வா,
செம்மை நெறி யாரையு நிறுத்தவெழு கருணையோய் செங்கீரை யாடியருளே -
      சிற்பரன் றுறைசையம் பலவாண தேசிகன் செங்கீரை யாடியருளே. (3)
(3)
851 ஐயசற் றிதுதிரு வுளஞ்செய்து கேட்கவய னரியையெண் ணாதயாங்க -
      ளமைதர நினக்குவழி வழியடிமை யுண்மையென் றாவணம் வரைந்துதவுவோம்,
பொய்யமை தராதுபக லிரவுநின் குற்றேவல் போற்றுவ மதாஅன்று துதியும் -
      புதிதுபுதி தாகப் புரிந்திடுவ மிவைகளும் போதா வெனத்தெரிந்து,
வெய்யவுட லும்பொருளு மாவியு மடங்கா விருப்பிற் கொடுத்துவிடுவே -
      மேலுமினியென் செய்து மிதனின்மேற் செய்பவர்கள் விண்ணுமிலையிது மொழிதலுஞ்,
செய்யதன் றினிநீ செயற்பால தென்கொலோ செங்கீரை யாடியருளே -
      சிற்பரன் றுறைசையம் பலவாண தேசிகன் செங்கீரை யாடியருளே. (4)
(4)
852 காமரு மதிப்பிறையு மறிதிரைக் கங்கையுங் கங்காள மும்பிரமன்மால் -
      கழிதலைத் தொடையலுங் காகோ தரங்களுங் காடுபடு பொற்கொன்றையு,
மாமரு விருஞ்சடையு மாகிய பெருஞ்சுமை யகன்றுயிர்ப் புற்றதிலனா -
      லையநின் றிருமுடி யசைத்திட வருத்தமின் றடன்மிருக மோடுபரசுந் -
தாமரு விலாமையாற் செங்கைநில மூன்றத் தடுக்குமிடை யூறுமின்று,
      தாங்குகுஞ் சிதமின்மை யாலடி பதித்திடத் தடையெவன் புடைவிராலித்,
தேமரு வுறுங்காவி சூடிய புயாசலன் செங்கீரை யாடியருளே -
      சிற்பரன் றுறைசையம் பலவாண தேசிகன் செங்கீரை யாடியருளே. (5)
(5)

வேறு.
853 பிறைபடு பற்குற ளுடனெளி யப்பிணர் பெறுவெரிந் மிசையொருதாள்
      பெயர்வற வூன்றுபு மற்றொரு பொற்றாள் பேண வெடுத்தொளியே
நிறைதரு குஞ்சித மாக்குத லன்று நெடுங்க னடந்தவ
      நிலவொரு பாத மெடுத்து நிமிர்ந்து நிகழ்த்தலு மன்றுபெருங்
கறையடி யானை யுரித்துரி மேனி கலப்புற மூடியொரு
      காலை முடக்கி மடக்குத லன்று கரும்பிர சம்பொழிறோ
றறைதரு மாவடு தண்டுறை நாத னாடுக செங்கீரை
      யறிவுரு வாகிய வம்பல வாண னாடுக செங்கீரை. (6)
(6)
854 துங்கப் பெருமறை யந்தண ராதியர் சூழ்ந்தனர் கொண்டாடத்
      தோலா வாகம முற்றுஞ் சென்னி துளக்கி யெழுந்தாடச்
சங்கத் தமிழெனு மொருதே வுவகை தழைத்துல கத்தாடத்
      தளர்வுறு பரசம யப்பே யஞ்சுபு தலைசுற் றினவாடச்
சிங்கக் குருளை யெதிர்ப்படும் யானைத் திரளென வெங்கண்மலத்
      திரள்குடி வாங்கி நினைக்கரு தாருட் சென்று பதிந்தாட
வங்கத் துறைகெழு மாவடு துறையிறை யாடுக செங்கீரை
      யறிவுரு வாகிய வம்பல வாண னாடுக செங்கீரை. (7)
(7)
855 ஒள்ளிய கந்தர மேவிய கருமை யொழிந்தனை யப்பொழுதே
      யுற்ற மலத்தின் கருமையும் யாங்க ளொழிந்தனம் வெங்கொலைசால்
வெள்ளிய கோட்டுக் கரியுரி போர்த்தல் விலங்கினை யப்பொழுதே
      மேவிய மாயை போர்த்தலும் யாங்கள் விலங்கின மேவுபணப்
புள்ளிய வாளர வத்தொகை பூணுதல் போக்கினை யப்பொழுதே
      பொங்கு வினைத்தொகை பூணுதல் யாமும் போக்கின மலர்நடுவில்
அள்ளிய வாவிய வம்பல வாண னாடுக செங்கீரை யறிவுரு வாகிய
      வம்பல வாண னாடுக செங்கீரை.
(8)
856 பரசம யத்தவர் வாயு ணுழைந்து பயின்றிடு பிருதிவியே
      பற்றிய தொண்டின் வழிப்படு சைவப் பைங்கூழ் பாய்புனலே
விரச வழுத்துநர் வெவ்வினை யடவி வெதுப்பி யெழுங்கனலே
      மெய்யுற நோக்கினர் பாவ மெனுந்துய் விலக்க வுலாம்வளியே
வரசர ணத்தின் மனத்தை நிறுத்தி வயக்கி முயக்குறுவான்
      மாதவ மாற்றுந ருள்ளந் தோறும் வளைந்து விராம்வெளியே
யரச வனத்தம ருங்குரு நாத னாடுக செங்கீரை யறிவுரு
      வாகிய வம்பல வாண னாடுக செங்கீரை.
(9)

வேறு.
857 நாவடுவொன்றநி னாமநவின்றிடு மொண்சீல நாடியவெங்களை
      நீயயலென்றுநி னைந்தாய்கொல்
லோவடுவொன்றிய காளிதமென்பது விண்டேநின்
      னோடுறலென்றுதச் யாநிதியென்றெவ ரும்பேச
மாவடுவென்றகண் மாதரொடுந்திகழ் பைந்தூவி
      வாலெகினம்பல வாவிதொறுங்களி கொண்டாடு
மாவடுதண்டுறை மேவுமிளங்கதிர் செங்கீரை
      யாரருளம்பல வாணசவுந்தர செங்கீரை.
(10)

2. செங்கீரைப்பருவம் முற்றிற்று
3 தாலப்பருவம்.

858 முருந்து முறுவ லிளமாதர் முன்னியாடும் பெருந்தடத்து
      மூழ்கிச் சிறகர் வெள்ளெகின முற்றும் பாசி போர்த்தெழுந்து
பொருந்துங் கரையி லிருந்துதறிப் பொலியும் பழைய
      நிறமடைந்து பொலித லொருங்கு வெண்முகில்கள் புணரி
தோய்ந்து கறுத்தெழுந்து வருந்து திறத்தின் வரையிவர்ந்து மன்னும் பயந்தீர்
      தாவுதறி வயங்கும் பழைய நிறமுறுதன் மானுங் கழனி யுடுத்துவளந்
திருந்து திருவா வடுதுறைவாழ் செல்வா தாலோ தாலேலோ
      சித்திற் பொலியம் பலவாண தேவா தாலோ தாலேலோ.
(1)
859 வான்றோ யடுக்கு மாளிகைமேல் வைகு மாமை மடநல்லார்
      வயங்கு பவனக் குடங்கரைவெள் வாய்வாள் விழியி னுறநோக்கி
யூன்றோய் குலிசப் படைவேந்த னுடைய வமிர்த கடமென்று
      மொருநந் திருமா ளிகைத்தேவ ருயர்த்த வமிர்த கடமென்று
மான்றோய் நின்னை யடையாதா ரபேதம் பேத மெனப்பிணங்கு
      மதுபோற் பிணங்கிப் பெயரநினை யடைந்தார் போலத் தெளியும்வளத்
தேன்றோய் திருவா வடுதுறைவாழ் செல்வா தாலோ தாலேலோ
      சித்திற் பொலியம் பலவாண தேவா தாலோ தாலேலோ. (2)
(2)
860 ஓங்கு நினது திருமுன்ன ருயர்த்த காவிக் கொடிமதன
      னுயர்த்த மீனந் தனக்கினமா யுள்ள வனைத்துங் கீழ்ப்படுத்தி
வீங்கு மமரர் நாட்டினுக்கும் விடுத்த நினது திருமுகம்போல்
      வேந்தன் சுதன்மை கிழித்தெழிந்து மேவ விரைவி னாண்டளப்பா னாங்கு நோக்கி நடுநடுங்கி யந்தோ சாரு வாகநூ
      லறைந்தா மரசன் வினவிலெவ னறைவா மெனவுட் டுயரமகிழ்
தேங்குந் திருவா வடுதுறைவாழ் செல்வா தாலோ தாலேலோ
      சித்திற் பொலியம் பலவாண தேவா தாலோ தாலேலோ. (3)
(3)
861 கூருங் கருணை நின்காவிக் கொடிமீப் போய்க்கற் பகக்கிளையிற்
      கூட நறுஞ்செந் தளிர்கொய்வான் குறித்த தேவ குருவாங்கண்
யாருங் குறுக வடைந்த வன்மற் றிதனை மயங்கித் தீண்டுதலு
      மின்ன தசைய வெழுங்காற்றா லிணர்த்துப் பாங்கர் நின்றசைந்து
தேருங் கவுளி னுறப்புடைத்துச் சிந்தை வெருவி மெய்ந்நடுங்கித்
      தெளியா வனையா னோட்டெடுப்பச் செய்யா நின்ற திருவரசு
சேருந் திருவா வடுதுறைவாழ் செல்வா தாலோ தாலேலோ
      சித்திற் பொலியம் பலவாண தேவா தாலோ தாலேலோ. (4)
(4)
862 அழிக்கு நினது பழம்பகையு ளாய்ந்து வடிவம் பலதாங்கி
      யடுத்த கருவி யொடுமதவே ளமைந்து நிற்கு நிலையென்னக்
கொழிக்குங் கரிய காஞ்சிகளும் கொடியால் வளைந்த பலகரும்புங்
      கூவா நின்ற மாங்குயிலுங் குலவு மருதக் கிள்ளைகளும்
விழிக்குங் கமல முதன்மலரும் விரிந்த கமுகம் பாளைகளு
      மீன மெழுந்து பாய்தலுமாய் விளங்கா நின்ற கருங்கழனி
செழிக்குந் திருவா வடுதுறைவாழ் செல்வா தாலோ தாலேலோ
      சித்திற் பொலியம் பலவாண தேவா தாலோ தாலேலோ. (5)
(5)

வேறு.
863 உரைதரு தன்மையில் செல்வ மயக்க முறாது பிழைத்தவரு
      மொள்ளிய வேல்விழி மங்கையர் கொங்கை யுவத்த லொழிந்தவரும்
கரையரு கல்வி முயன்று பயின்ற களிப்பி னகன்றவருங்
      காமரு சைவ மலாத மதங்கள் கலத்தல் கழிந்தவரு
மிரைதரு கின்ற தருக்க மகம்பர மென்ப திரித்தவரு
      மென்று நமக்கரு ளுங்கொ லெனப்புடை யெண்ணிலர் சூழ்ந்தேத்தத்
தரையில் விளங்கும் பேரரு ளாளா தாலோ தாலேலோ
      தண்டுறை சைப்பதி யம்பல வாணா தாலோ தாலேலோ.
(6)
864 முளைமதி நாளும் வளர்ந்திருள் சீத்தலின் முன்னு பெருங்கருணை
      மொய்த்தப லுயிர்க ளிடத்தும் வளர்ந்து முருக்க மலக்கருளை
விளைகதிர் ஞாயி றெனச்சுடர் தோற்றி வெளிப்படு மேன்மையனே
      மேவிய கேவல நிலைமலர் பைந்தரு விட்டக லாத்தழலும்
வளைதரு சகல நிலைக்கட் கற்பொலி வன்றழ லுஞ்சுத்தம்
      வாய்ந்த நிலைக்க ணயத்தழ லும்பொர மன்னி வயங்கிடுவோய்
தளையவிழ் செங்குவ ளைத்தொடை யாளா தாலோ தாலேலோ
      தண்டுறை சைப்பதி யம்பல வாணா தாலோ தாலேலோ.
(7)
865 நின்னை யிளங்குழ விப்பரு வத்து நிகழ்ச்சி யுறத்துதிசெய்
      நீர்மையி னெங்களை யையுற லைய நிலாவிய செங்காட்டின்
முன்னை யடைந்தது போலடை வாயெனின் முன்னிய தெய்தாய்நீ
      முற்றிய வெங்களை யேநனி நல்குது மொழிவது மொன்றுளதாற்
பின்னை யெனாதுரை செய்குது நின்னைப் பெட்பொடு பாராட்டும்
      பெற்றி யுணர்ந்தனை மற்றொ ரிடத்தப் பெற்றிகொ டடையற்க
தன்னை யிழப்பின் விரைந்தருள் குரவா தாலோ தாலேலோ
      தண்டுறை சைப்பதி யம்பல வாணா தாலோ தாலேலோ.
(8)
866 புண்ணிய வேத முடிப்பொரு டெளியப் புகறலி னிகரிலதாய்ப்
      பொங்கொளி வெண்குடை நீழலின் வைகப் புவன நடாத்துதலி
னெண்ணிய வெங்களை வாங்கி யுனைத்தந் திடுதலி னெங்களுயி
      ரென்னு நிலத்துணர் வென்புனல் பாய்த்தி யிறாதெழு பேரின்ப
நண்ணிய போகம் விளைத்தலி னொத்தனை நால்வரு மென்பதலா
      னகுவரு ணாதி யொழிந்தொளி ருண்மை நலந்திளி யேமெளியேந்
தண்ணிய மேலவர் கண்ணிய முதல்வா தாலோ தாலேலோ
      தண்டுறை சைப்பதி யம்பல வாணா தாலோ தாலேலோ.
(9)
867 நகைதிக ழாகம வன்றொடர் பூட்டி நலங்கிளர் மாமறையே
      நாடிய தொட்டி லெனச்செறி வித்து நவின்றப லுபநிடத
வகையணை மீமிசை வைகுறும் யாமிம் மடவைசெய் தொட்டிலினும்
      வைகுவ தோவென் றெண்ணலை யெண்ணிடின் வையை யடைத்திடுநாண்
முகைசெறி யோர்தரு நிழலினும் வைகினை முதுமறை யாதிகளு
      முற்றிய வோலவ ணென்றிடின் யாது மொழிந்திடு வாயளவாத்
தகைபடு சுகுணமெய்ஞ் ஞான வினோதா தாலோ தாலேலோ
      தண்டுறை சைப்பதி யம்பல வாணா தாலோ தாலேலோ.
(10)

3. தாலப்பருவம் முற்றிற்று.
4. சப்பாணிப்பருவம்

868 உரைசெயப் புவனத்தி னுங்கைப் பரச்சுமை யொழித்தவர்கடக்கவேலை -
      யொன்றினி தியற்றுதற் கெண்ணா ரதன்றியு முரைக்குமுன் செயவும்வல்லார்
கரைசெயிறு நிற்கமழு மானெடுஞ் சூலங் கபாலம்வெந் தழறமருகள் -
      காணுமிவை முற்சுமை கழித்தலி னுடம்படுதல் கடன்மையே கன்றுமென்னில்
விரைசெய்மலர் செற்றுபொழில் கூற்றுமது ரையில்விறகு வெட்டிமண் வெட்டியங்கம் -
      வெட்டிப் பயின்றவங் கைத்தலங் கொடுநலில வேண்டுமென் போமென்செய்வாய்
தரைசெய்பய னாய்வ்ந்த மெய்ஞ்ஞான பாற்கரன் சப்பாணி கொட்டியருளே -
      தண்டமிழ் துறைசையம் பலவாண தேசிகன் சப்பாணி கொட்டியருளே.
(1)

869 புண்ணிய மலிந்தநின் றிருவார்த்தை யென்னப் பொலிந்தபே ராகமத்திற் -
      போற்றுபெரு நடவைபிற் சமயமும் விசேடமும் பொற்பப் புரிந்துபின்ன,
ரண்ணிய சிரத்தின்மேற் றங்கிமனு முதலாய வத்தவடி வங்களாரு -
      மமைதர்ச் சோதனை புரிந்தபின் விரும்பிநவில பிடேக மாதிகொண்டு,
கண்ணிய நறுந்தா மரைத்திரு வடித்தலங் கருதுமச் சென்னியேறக் -
      கண்டபின் யாவருங் காணநீ றுத்லியெங் கைம்மீது மேறி மிளிருந்.
தண்ணிய மலர்க்கைகொடு ஞானவடி வாயினோன் சப்பாணி கொட்டியருளெ-
      தண்டமிழ் துறைசையம் பலவாண தேசிகன் சப்பாணி கொட்டியருளே.
(2)

870 நின்னையொப் பில்லாத சின்மய னெனக்கலை நிரம்புபா டியமுனிவனா -
      நெடியசிவ ஞானமுனி யாலுண்ர்ந் தேந்துதி நிகழ்த்தலிவ் வாறதென்றே,
யன்னையொப் பாங்கச்சி யப்பமுனி யானன் றறிந்தன மினித்துதித்தற் -
      கஞ்சுறோ மெங்கள்செய லிற்றாக வெங்களி னகப்படா தகல்வையலைநீ,
பின்னைமற் றொன்றெண்ணி யகலநினை வாயெனிற் பெரிதுமகிழ் செய்தல்பாட்டே -
      பேணுகென வனறொண்டார் பாற்பேசி னானெவன் பேசெணி னெவன் பேசுவாய்,
தன்னையொப் பாய்கருணை யுருவாய சின்மயன் சப்பாணி கொட்டியருளே -
      தண்டமிழ் துறைசையம் பலவாண தேசிகன் சப்பாணி கொட்டியருளே.
(3)

871 தூயதிரு வாதவூ ரடிகளின் னுங்கோவை சொற்றிடுத லின்று நன்று -
      சூழுமொரு மூர்த்தியின் னுங்கண்முன் கைமூளை சொரிதர்த் தேய்ப்பதின்று,
மேயவொரு கண்ணப்ப ரின்னுங்க ணப்புவான் விழியிடந் திடுதலின்று -
      மெய்க்குறிப் புத்தொண்ட ரினுமுத்த மாங்கங்கன் மீதுமோ துதலுமின்று,
பாயதிரி புரநீறு பட்டமையின் மாமேரு பற்றிவாங் குதலுமாயப் -
      பகழிகோறாமரை மலர்க்கைகொடு சப்பாணி கொட்டியருளே,
தாயனைய சிற்பரன் றாமரை மலர்க்கைகொடு சப்பாணி கொட்டியருளே -
      தண்டமிழ் துறைசையம் பலவாண தேசிகன் சப்பாணி கொட்டியருளே.
(4)

872 எள்ளருங் கைலாய வரைவீற் றிருந்தநா ளிங்கனம் பாராட்டுதற்
      கேற்புடைய வடிவமென் றென்றுனை விடுத்தன மிருந்தவ்ர்க ணாலவரேத்த,
விள்ளருந் தளிரால நன்னிழலு மொருகுந்த மென்னிழலு மொருவரேத்த -
      வீற்றினி திருந்தநாள் சிலவன்றி யிலையன விடுத்தனம் பல்லோர்தொழு,
வுள்ளரும் பேரருளி னிவ்விடத் துறையுநா ளூழியினு மேலுமேலு -
      முள்ளவென வோர்ந்திது துணிந்தன மகிழ்ச்சியெளி யோங்ட்கு மேன்மேலுறத்,
தள்ளருஞ் சுத்தமேற் சித்தாந்த சைவமணி சப்பாணி கொட்டியருளே -
      தண்டமிழ்த் துறைசையம் பலவாண தேசிகன் சப்பாணி கொட்டியருளே. (5)
(5)

வேறு.
873 விண்டல ருந்திற மின்றி யெழுந்து விளங்குறு தானவனை
      வெய்யவ னாகிய தங்கொழு நன்புடை மேவு தொறும்பற்றித்
தண்ட லிலாதிடி செய்து பொடித்துத் தாமரை மலரள்ளித்
      தானெறி தரனே ராமென வெள்ளிய தண்ணிய நீறள்ளி
யண்டல்செய் தொண்டர் தமக்கருள் கையா லருணோ தயமெழுவா
      யறுசிறு பொழுது மெருத்துரி போர்த்தி யமைந்தவள் வார்முரசக்
கொண்டன் முழங்குங் கோகழி யூரன் கொட்டுக சப்பாணி
      குரவர் சிகாமணி யம்பல வாணன் கொட்டுக சப்பாணி. (6)
(6)
874 பாலம் பொலிதரு செங்க ணநங்கன் படரா னமர்புரியும்
      பான்மை குறித்தென வோவி யெழுந்தருள் பண்ணாவ நின்னாம
ஞாலம் பொலிதரு குரவர்கள் யாவரு நன்கு நவிற்றலலா
      னாடி வரைந்து விடுத்திடு மாற்ற னமக்கிலை யென்றயரச்
சீலம் பொலிதரு பக்குவ ரஞ்செவி செப்பி விடுத்தலொடுந்
      திசைதிசை செல்ல வரைந்தும் விடுத்திடல் செய்யு மலர்க்கையினாற்
கோலம் பொலிதரு கோகழி யூரன் கொட்டுக சப்பாணி
      குரவர் சிகாமணி யம்பல வாணன் கொட்டுக சப்பாணி. (7)
(7)
875 நீடிய வன்பு நிகழ்த்திடு தொண்டர் நெருங்கி வணங்குதொறு
      நிறைதரு திருவருள் பொங்குற நோக்குபு நிலவுவெ ணகைசெய்து
நாடிய வன்னர் பசிப்பிணி யும்படர் நல்கு முடற்பிணியு
      நாளும் விலங்க லிலாது பவம்புக நாட்டு மலப்பிணியு
மோடி யவிந்திட வுண்கல சேடம துதவு திருக்கையினா
      லுறுவிடை யின்மையி னாமுறு வாமென வுன்னுபு வானிடபங்
கூடிய மதில்சூழ் கோகழி யூரன் கொட்டுக சப்பாணி
      குரவர் சிகாமணி யம்பல வாணன் கொட்டுக சப்பாணி. (8)
(8)
876 பொருவாய் தரினு மிலாதவ னேனும் போற்றி வளர்த்தமுனைப்
      பொய்யில் பழக்கம் விடுத்தில னிங்குப் போந்து மெனப்புகல
வுருவாய் மையுந லொழுக்க விழுப்பமு மொள்ளறி வுங்குணனு
      முண்மையு மோருபு நந்தி குலத்திற் கொருகதிர் நீயென்று
திருவாய் மலருபு குறுநகை கொண்டொளி திகழ்சுப் பிரமணிய
      தேவனை முதுகுதை வருமலர் புரையுஞ் செங்கையி னான்மணிசால்
குருவாய் மாடக் கோகழி யூரன் கொட்டுக சப்பாணி
      குரவர் சிகாமணி யம்பல வாணன் கொட்டுக சப்பாணி. (9)
(9)
877 சேர்ந்தறி யாநங் கைம்மல ரென்றுன் றிருவாய் மலருதியேற்
      றெளியா யாங்க டெளிந்திடு மாறு சிறப்ப நினைப்பூசை
யார்ந்துமு னீயினி தாற்றிய துண்டே யன்று குவித்துளையா
      லன்ன தயர்த்தனை கொல்லோ வின்று மப்பரி சேநினையா
வோர்ந்து முணர்ச்சி யிலாப்பர சமய ருரைத்திடு வார்த்தைகளு
      ளொன்றும் பொருளல வென்றுகை தட்டுத லொப்ப வுவந்தறிவு
கூர்ந்தவர் வாழுங் கோகழி யூரன் கொட்டுக சப்பாணி
      குரவர் சிகாமணி யம்பல வாணன் கொட்டுக சப்பாணி. (10)
(10)

4. சப்பாணிப்பருவம் முற்றிற்று.
5. முத்தப்பருவம்.

878 கருகு மூல மலத்தினுயிர் கலப்புற் றதுவே யகப்பந்தங்
      கவற்று மாயை கன்மமொடு கலந்த பந்த மகப்புறமாம்
பெருகு புறமாந் தனுகரணம் பெற்ற பந்தம் புறப்புறமாம்
      பிறங்கு புவன போகத்திற் பிணைந்த பந்த மெனவிரித்தே
யுருகு மடியர்க் கிரங்கியவை யொழியு மாறு மின்பநிலை
      யுதிக்கு மாறு முண்மையினொன் றுபதே சிக்குந் திருவாயான்
முருகு மலியும் பொழிற்றுறைசை முன்னோன் முத்தந் தருகவே
      முத்தன் குருவம் பலவாண முதல்வன் முத்தந் தருகவே. (1)
(1)
879 தங்கு பருவ மதம்பாகஞ் சத்தி பதிதல் வினையொப்புச்
      சார்ந்து மலக்கட் டற்றுயிர்சு த்ததிற் றசஞ்செய் தத்துவிதத்
தெங்கு நிறைநம் மொடுங்கலத்த லிதுவே யகச்சம் பந்தமரு
      ளிடத்து நிற்ற லகப்புறமவ் விலகு மருளி னுபகாரம்
பொங்கு மருடீர் தரக்காண்டல் புறநாம் பிரம மென்றல்புறப்
      புறமா மிவற்றுண் முன்னையதே பொலியா நின்ற தென்றதனுண்
முங்கும் வகைசெய் தருடுறைசை முன்னோன் முத்தந் தருகவே
      முத்தன் குருவம் பலவாண முதல்வன் முத்தந் தருகவே. (2)
(2)
880 நாடு நிலமுன் னிருபத்து நான்கு நாளம் வித்தையெட்டு
      நறிய விதழ்க ணாலெட்டு நாலெட் டாய கேசரங்க
ணீடு மீசர் சதாசிவரே நிகழுஞ் சத்தி கேசரத்து
      ணிலவும் பொகுட்டு வடிவுசிவ நிலைய வனைய பொகுட்டகத்துட்
கூடு மைம்பத் தொருபீசங் குலாய விதய பங்கயத்திற்
      குறிக்கு நந்தா ணிலையென்று கொண்டா டெங்கட் கருள்வாயான்
மூடும் பொழில்சால் வளத்துறைசை முன்னோன் முத்தந் தருகவே
      முத்தன் குருவம் பலவாண முதல்வன் முத்தந் தருகவே. (3)
(3)
881 உற்ற விதய பங்கயத்தி லோரைந் தெழுத்தா கியவடிவி
      லுனைக்கொல் லாமை முதலெண்பூ வுறவம் மநுவா லருச்சித்தும்
பொற்ற வுந்தித் தலத்தழலைப் பொலிய வெழுப்பி விந்துவகம்
      புணராச் சியத்தை யிருநாடி பொய்தீர் தரக்கொண் டோமித்துஞ்
செற்ற புருவ நடுச்சிவய திகழு மூன்று பதப்பொருளாந்
      திறமை நோக்கி யதனாலே சிவாக மேபா வனைசெய்ய
முற்ற வுணர்ந்தார்க் கருடுறைசை முன்னோன் முத்தந் தருகவே
      முத்தன் குருவம் பலவாண முதல்வன் முத்தந் தருகவே. (4)
(4)
882 நகைசெ யுயிர்க ணசிக்குமெனி னசித்த லாலொன் றுவவில்லை
      நசியா வென்னி லிரண்டுபட்டு நம்மை யொன்று வனவல்ல
வுகைசெ யருத்தா பத்தியா லுப்புத் தனது கண்டிப்பை
      யொழிந்து புனலி னொன்றாமா றொப்பத் தமது சகசமலப்
பகைசெ யாற்றல் கெட்டொழியப் பண்பி னொன்றி நங்கழற்குப்
      பகருஞ் சேட மாமென்று பரிவுற் றெங்கட் கருள்வாயான்
முகைசெய் பொழில்சூழ் தருதுறைசை முன்னோன் முத்தந் தருகவே
      முத்தன் குருவம் பலவாண முதல்வன் முத்தந் தருகவே. (5)
(5)

வேறு.
883 உண்ணீர்மை யுயிருணர்ந் துய்யவே தாகம மொருங்கெடுத் துப்புகன்று -
      மோலமென் றபயமிடு நெடியமான் முதலமர ருய்யநஞ் சமிர்தமுண்டும்,
புண்ணீர்மை யாயஞ ரழுந்துலக முய்யமுப் புரநீறு படநகைத்தும் -
      புலவரொடு வழுதியு மயக்கந் தெளிந்துயப் பொருண்மரபு முழுதுரைத்து,
மெண்ணீர்மை யார்க்குமதி மலிகொங்கு தேரெனு மியற்றமிழ்க் கவிபாடியு -
      மிரும்புகழ் படைத்தநின் செய்யாவா யாங்களுய விதுசெயிற் பழியாகுமோ,
தெண்ணிருடைப்பொன்னி சூழுமா வடுதுறைச் செல்வன்முத் தந்தருகவே -
      சின்மய னருட்பெருங் குரவனம் பலவாண தேவன்முத் தந்தருகவே. (6)
(6)
884 மிக்கதுவர் வாய்ந்தநம் மிதழ்முன் பொருத்திப்பின் மேவக் குவிக்குமாறோர் -
      வேலைவந் ததுகொலென நின்றிரு வுளங்கோளேல் விமலநீ கொள்வாயெனிற்,
றொக்கநின் போதுநாம மாமைந் தெழுத்தினுஞ் சுடருஞ் சிறப்புநாமத் -
      தொகையைந் தெழுத்தினுமொ ரைந்தெழுத் தென்னநவில் சூக்குமத் தினுநினடியார்க்,
கொக்கமுத லயலா மிரண்டா மெழுத்தினை யொழித்தருளு வாய்கொலோசற் -
      றுரையொழித் தருள்வமெனின் முற்றுமுடி யாதிதனை யோர்ந்துபல மாளிகைதொறுஞ்,
செக்கர்மணி யிருள்பருகி யோங்குமா வடுதுறைச் செல்வன்முத் தந்தருகவே -
      சின்மய னருட்பெருங் குரவனம் பலவாண தேவன்முத் தந்தருகவே. (7)
(7)
885 ஒளிவார் திருப்பனந் தாளின்முன் னாளிலுள் ளுருகிநி னடிப்பூசையாற் -
      றொருமாது சூட்டுபூ மாலையை விரும்பிநின் னுருவமிக வுங்குனிந்தா,
யளிவார் மனத்தினெம் பாமாலை வேண்டுமே லவ்வளவு குனியல்வேண்டா -
      வையசற் றேகுனிந் தெண்ணியதை யன்புடனளித்தருள வேண்டுமின்னும்,
வளிவார் பெரும்புவி தெரிக்கவவ் வணநிற்கின் மாண்புடைக் கலயனாரை
      மற்றெங் கியாஞ்சென்று தேடுவே மாதலால் வளமிக்க கழகந்தொறுந்
தெளிவார் குழாங்குழுமி யோங்குமா வடுதுறைச் செல்வன்முத் தந்தருகவே
      சின்மய னருட்பெருங் குரவனம் பலவாண தேவன்முத் தந்தருகவே.
(8)
886 முன்னைநா ணின்னால் வெலப்பட்ட கரிவன்றி முதுமீன முதவுமுத்து -
      முண்டக மலர்த்தாளி லரைபட்ட வெண்மதிய முத்துநஞ் சுணவுதந்த,
புன்னைவாய் நெய்தற் கடற்றோன்று மிப்பிவளை பொறையுயிர்த் திட்டமுத்தும் -
      பொருதிக லழிந்தகொக் குதவுமுத் துங்கொண்டு பூணுத னினக்கேகட,
னென்னையோ துந்திற மெனிற்சின்ன மேற்றதா ரிந்நாளி லில்லையென்னி -
      லிலகுகண் மணிமாலை யிடையிடைக் கோத்திடுக வெண்ணில பழுத்தபாக,
றென்னைமா வாதிபல சூழுமா வடுதுறைச் செல்வன்முத் தந்தருகவே -
      சின்மய னருட்பெருங் குரவனம் பலவாண தேவன்முத் தந்தருகவே.
(9)
887 பல்காலு நின்னைத் துதித்துநின் பதமுட் பதித்துவாழ் வேங்களுக்குப் -
      பயனாக வொருதர மெனுந்தந் திடாயெனிற் பல்வளப் பூவணத்தி,
லல்காத மாமைநிறை பொன்னனையண் முன்னைநா ளள்ளிமுத் தங்கொள்ளுமா -
      றளவளாய் மேயதை வெளிப்பட வுரைத்திடுவ மதனினு மிரங்காயெனி,
னொல்காத மற்றவ ளுகிர்க்குறி கபோலத்தி லுற்றது முரைத்துலிடுவோ -
      மொண்கதிர்ச் செல்வன்மதி யோனெனத் தண்ணென் றுடம்புகூ னிக்கடந்து,
செல்காறும் வளைபொழி லுயர்ந்தவா வடுதுறைச் செல்வன்முத் தந்தருகவே -
      சின்மய னருட்பெருங் குரவனம் பலவாண தேவன்முத் தந்தருகவே.
(10)

4. முத்தப்பருவம் முற்றிற்று.
6. வாரானைப்பருவம்

888 உறந்தகதிர் மண்டிலத் துறைவது தெரிப்பதென வொண்மேனி சேயொளிசெய -
      வோங்குமதி மண்டிலத் துறைவது தெரிப்பதென வொளிர்நீறு வெள்ளொளிசெய,
வறந்தலை யெடுப்பவொளி ரிவ்வொளிக ணோக்குதொறு மடியர்மல பந்தமுழுது -
      மடலற வழித்தழி லிலாதபே ரின்பநிலை யருளிற் கொடுத்திடுதலாற்,
பிறந்தபிர தாபமும் புகழுமே யென்றறிஞர் பேசிமகிழ் தூங்கவளவை -
      பேசிய துணர்ந்துநகை செய்தென முகத்துப் பிறங்குபுன் மூரறோன்றச்,
சிறந்ததிரு வாவடு துறைக்கண்வளர் திருவருட் செல்வப்பிரான் வருகவே -
      செம்மைதிகழ் சிவஞான வடிவனம் பலவாண தேசிகோத் தமன்வருகவே.
(1)
889 உற்றபெரு மாதவ முஞற்றுநர்க் கல்லா துஞ்ற்றுதவ மொன்றுமில்லா -
      வுவர்வருக வென்றழைத் திடநா மடைந்திடுத லுரிமையன் றென்றுநினையல்,
பொற்றமதி நிலவுநக ரன்றிவெங் காட்டிலும் புணரிவா யுண்டெழுந்த -
      புயன்மழை செழும்பணை நிலத்தன்றி யுவர்பற்று புவியகத் தும்பொழியுமே,
துற்றமலர் தளிர்மெத் தெனப்பரப் பினமுளத் தூயர்கை கொடுக்கநின்றார் -
      தோலாத விருதுகளு மெதிரெடுத் தேநின் றுணைத்தாள் பெயர்த்துவளமே,
செற்றதிரு வாவடு துறைக்கண்வளர் திருவருட் செல்வப் பிரான்வருகவே -
      செம்மைதிகழ் சிவஞான வடிவனம் பலவாண தேசிகோத் தமன்வருகவே.
(1)
890 வருந்துத லிலாதுநின் றாள்பெயர்க் குந்தோறும் வயக்கொடுங் கூற்றமுன்போன் -
      மார்பிடைத் தாக்குங்கொ லென்றஞ்ச நந்தலையில் வைக்குநந் தலையில்வைக்கும்,
பொருந்துவித மென்றுசில ருண்மகிழ் தரச்சிலர் பொருந்து மென் பூத்தூவவப் -
      பூவினை மிதித்தலவேள் கணையடிக் கீழ்ப்படப் போகட் டடர்த்தலேய்ப்பக்,
குருந்துநிழ லாளிவந் தானருட் சயிலாதி குலமணி நமச்சி வாய -
      குரவன்வந் தானென்று சின்னங்க ணின்பெயர் குறித்தூத வளவிலறமே,
திருந்துதிரு வாவடு துறைக்கண்வளர் திருவருட் செல்வப் பிரான் வருகவே -
      செம்மைதிகழ் சிவஞான வடிவனம் பலவாண தேசிகோத் தமன்வருகவே.
(3)
891 பாங்குபெற வீரடி நடந்துநா லடியெனப் படிறுரைத் தனைதக்கதோ -
      பார்முழுது நின்விடைக் கோரடி யெனப்பகர்தல் பட்டாங்கு நீயுமுணர்வா,
யோங்குமகிழ் வெய்தவினு மோரடிநடந்திடுக வுள்ளடிகள் கன்றுமென்னி -
      லொருநாவ லூர்நம்பி வாட்டந் தவிர்ப்பதற் கோரிராப் பொழுதினாப்பண்,
வீங்கு மிள முலையுடைப் பரவையார் மாளிகை விழைந்துதிரு வாரூர்ப்பெரு -
      வீதியிற் பலகா லுழன்றதறி யேங்கொலோ வேதா கமத்துநெறியே,
தேங்குதிரு வாவடு துறைக்கண்வளர் திருவருட் செல்வப் பிரான்வருகவே -
      செம்மைதிகழ் சிவ ஞான வடிவனம் பலவாண தேசிகோத் தமன்வருகவே.
(4)
892 கள்ளுமண மும்பரவு மென்மலரில் வைக்கவுங் கன்றுநம் மடிகளென்னிற் -
      கல்லுமுரு டும்பொருவு மெங்கடலை வைத்திடல் கருத்திற் பொருத்திலாயென்,
றுள்ளுதொறும் வெய்துயிர்ப் போங்குமது தீர்பொருட் டுன்னடிபெயர்த்துவைக்க -
      வோரடி யெடுத்துவைத் திடுவமெனி லெங்களுக் குதுபோது மிரு திறத்துந்,
துள்ளுமகிழ் கொண்டியா மீரடி முதற்பலடி தொக்கபா மாலையோடு -
      தோன்றவோ ரடியெனு மிலாதபூ மாலையுஞ் சூட்டுவேந் துறைகொள்பலநூ,
றெள்ளுதிரு வாவடு துறைக்கண்வளர் திருவருட் செல்வப் பிரான்வருகவே -
      செம்மைதிகழ் சிவஞான வடிவனம் பலவாண தேசிகோத் தமன்வருகவே.
(5)

வேறு.
893 ஒருவா ஞானங் கிரியையென்று முடங்கு மறைக்குந் திரோதான
      முவப்பப் பொலியு மனுக்கிரக வுண்மை யென்று மிவ்விரண்டா
மருவா நிறைநின் றிருவடியை வகுப்பர் யாமு மிவ்விரண்டா
      வருக வருக வெனவடுக்கி மகிழ்ந்து விளிப்போ மாமேதி
பெருவாய் பாய விளவாளை பிறங்கு கமுகிற் பாயவதிற்
      பெயர்ந்து கருவா னரமெழுந்து பெருங்கற் பகமேற் பாயவொளிர்
திருவா வடுதண் டுறையமருஞ் செல்வன் வருக வருகவே
      திகழ்சீர்க் குருவம் பலவாண தேவன் வருக வருகவே
(6)
894 ஒன்று நிறுவி யொன்றெடுத்தே யூழி பலகண் டம்பலத்து
      ளொருவா தொருநீ நின்றமையி னுற்ற வருத்தஞ் சிறிதுயிர்ப்பா
னன்று புகறு மடிகள் சற்று நடத்தல் வேண்டு மதின்வருத்த
      நண்ணிற் றாயிற் றடையின்றி நாயே முள்ளத் திருந்திடலாந்
துன்று கதிரோன் றேர்ப்பரிக டுனைந்து படர்வான் மணிமாடந்
      தொறுநின் றிலகு துகிற்கொடிக டுளக்கும் வளியி னசைந்தசைந்து
சென்று புடைக்குந் துறைசையமர் செல்வன் வருக வருகவே
      திகழ்சீர்க் குருவம் பலவாண தேவன் வருக வருகவே
(7)
895 நல்லார் புகழுந் திருநாவ னல்லூ ரகத்தி லவதரித்த
      நம்பி யியற்று திருமணத்தி னாடி நின்னை யழைத்தவரா
ரல்லார் கண்ட மறைத்தெழுந்தா யழையா திருக்க வடைந்தமையா
      லாங்கு நிகழ்ந்த பெருஞ்சிறப்பு மடியோ மறைய வேண்டுவதோ
வல்லா ராய யாம்பலகால் வருந்தி யழைக்க வாராமை
      வழக்கோ வழைத்த படிவந்தால் வாழ்த்தே பெறலா மையமிலை
செல்லார் பொழில்சூழ் துறைசைவளர் செல்வன் வருக வருகவே
      திகழ்சீர்க் குருவம் பலவாண தேவன் வருக வருகவே
(8)
896 தந்தைக் கொலைசெய் திட்டவர்க்குந் தாயைக் கொலைசெய் திட்டவர்க்குந்
      தாரக் கொலைசெய் திட்டவர்க்குந் தனயற் கொலைசெய் திட்டவர்க்கு
முந்தைத் தொடர்பி னுறுங்கடும்பு முழுதுங் கொலைசெய் திட்டவர்க்கு
      முந்தி முந்திச் செல்வையெம்பான் முந்தி வருதற் கென்செய்தோங்
கந்தைக் கறுத்த காடமதக் களிற்றீ ருரியுண் மறைந்துகருங்
      கடலுண் மறைந்த கதிர்கடுக்குங் காட்சி கரந்து வெளிவந்து
சிந்தைக் களிப்பார் துறைசையமர் செல்வன் வருக வருகவே
      திகழ்சீர்க் குருவம் பலவாண தேவன் வருக வருகவே
(9)
897 முத்தன் வருக யாவருக்கு முன்னோன் வருக முப்புவன
      முதல்வன் வருக முன்னாரை முன்னான் வருக மறைமுடிவி
லத்தன் வருக வகரவுயி ரனையன் வருக நமவொழிக்கு
      மையன் வருக வகரமளித் தருள்வான் வருக வாகமநூற்
கத்தன் வருக கருதுநர்தங் கருத்தன் வருக கலப்புணர்த்துங்
      கையன் வருக வருளுருவக் காளைவருக கவின்றுபொலி
சித்தன் வருக கோமுத்திச் செல்வன் வருக வருகவே
      திகழ்சீர்க் குருவம் பலவாண தேவன் வருக வருகவே
(10)

6. வாரானைப்பருவம் முற்றிற்று
7. - அம்புலிப் பருவம்

898 கலையமைதி கொடுகடுங் காரிருள் கடிந்துபைங் கழுநீ ருவந்திடுதலாற்
      காகோ தரத்துதர பந்தங் கழிந்துகதிர் காலுரு வமைந்திடுதலா
லிலையமக றண்ணளி யமைந்தெவரு மாலோ னெனப்பொலி தருந்திறத்தா
      லெழிம்பு யங்கவிழ் தரக்கரந் தலைவைத் திலங்குயிர்ப் பயிரருடலான்
மலைவரு கதிர்ப்பருதி மண்டிலத் தெய்தலான் மதியோ னெனப்பொலிதலான்
      மானேந்தி யாகலா னெங்கள்குரு சாமிதனை மானுவா யாதலாலே
யலைவிலா வடுதுறைச் சித்தாந்த சைவனுட னம்புலீ யாடவாவே
      யருணெறி நடாத்துமம் பலவாண தேசிகனொ டம்புலி யாடவாவே.
(1)
899 வண்ணமா மேருவை வளைத்தலாற் பன்னாளு மகிழப் பொலிந்திடுதலால்
      வான்புலவர் பலர்சூழ் தரப்புது விருந்தாக வாய்ச்சுவை மருந்துதவலா
லெண்ணலா காதசத் துவகுணப் பிரதான னென்னத் திகழ்ந்திடுதலா
      லெக்காலு மிவருரிமை யாயவெறுழ் மிக்கவிமி லேறுபுகர் கொளவிடுதலான்
மண்ணலால் வானகமு மேத்தவுய ரரசுநிழல் வைகலா லெங்கள்குரவன்
      வானகத் துலவுநினை நமையொப்ப னென்றாட வருகவென் றானாதலா
லண்ணலா வடுதுறைச் சித்தாந்த சைவனுட னம்புலீ யாடவாவே
      யருணெறி நடாத்துமம் பலவாண தேசிகனொ டம்பூலி யாடவாவே.
(2)
900 கூடுநாண் முப்பத்து மூவருக் கமுதுதவு கொள்கையுடை யவனீயிவன் -
      குலவுபல நாள்கடொறு மெண்ணிலார்க் கமுதுதவு கொள்கையுடையவ னிதுவலான்,
மூடுபுற விருடபச் சிறிதுசிறி தாச்சில முருக்கிவரு வாய்நீயிவன் -
      மொய்த்தவக விருள்வலி யொருங்குகெட் டொழிதர முருக்கிவரு பவனுடலிலா,
நாடுமொரு பணிகொளப் பட்டுழல்வை நீயளவி னகுவலிப் பாம்புபூண்டு -
      நவையிலா னிவனிவனை நீயொப்ப தெங்ஙனமதி னட்டகொடி வானளாவி,
யாடுமா வடுதுறைச் சித்தாந்த சைவனுட னம்புலீ யாடவாவே -
      யருணெறி நடாத்துமம் பலவாண தேசிகனொ டம்புலீ யாடவாவே.
(3)
901 துன்னவரு மடவார் குழர்த்தனீ யிவனளவி றூயமா தவர்குழாத்தன் -
      றொக்கவொரு வருணமுடை யவனீ யிவன்கருணை சூழுமை வருணமுடையா,
னன்னரீ ரெண்கலைய னீயிவனொ ரறுபத்து நான்குகலை யுடையனீயோர் -
      நகுமுய லுளாயிவன் விருதுமுதல் யாவையினு நண்ணுபல சிங்கமுடையான்,
முன்னவுங் கூடாக் களங்கனீ யெவருளமு முன்னுமக ளங்கனிவனான் -
      முத்தனிவ னுக்குநினை யொப்பென மொழிந்திடார் மூடருஞ் சிவலோகமே,
யன்னவா வடுதுறைச் சித்தாந்த சைவனுட னம்புலீ யாடவாவே
      யருணெறி நடாத்துமம் பலவாண தேசிகனொ டம்பூலி யாடவாவே.
(4)
902 துலங்குபே ரருள்கொளுவி மலமாயை கன்மந் தொலைத்தள விலாதவின்ப -
      சுகவாரி யெவ்வுயிரு மூழ்கச் செயுங்குரவர் சூளா மணிக்குநாளுங்,
கலங்குநிலை யுடையையாய்க் குரவனில் விழைந்துபழி கைக்கொண்ட பாவியாய -
      காமுகா நின்னையொப் பென்றவெம் வாய்க்குமொரு கழுவா யியற்றல்வேண்டு,
மிலங்குநெடு மாதவர்கள் பல்லா யிரங்கோடி யென்னவய னிற்கநின்னை -
      யிவன்வருக வென்றுகட் டளையிட்ட னன்கருதி னெத்தவ மியற்றினாய்மு,
னலங்குமா வடுதுறைச் சித்தாந்த சைவனுட னம்புலீ யாடவாவே
      யருணெறி நடாத்துமம் பலவாண தேசிகனொ டம்பூலி யாடவாவே.
(5)
903 செய்யநங் குருநாத னினையாட வாவென்று திருவாய் மலர்ந்த பொழுதே
      திருந்தக் குடந்தமுற் றடியனேன் வந்தனென் றிருவுள மெவன் கொலென்று,
நையவுளம் விரையவந் தான்றதிரு வடிபணியி னகுகருணை பூத்துநீறு -
      நளினத் திருக்கரத் தள்ளியுன் னுதலிடுவ னாடுமப் பெரியபேற்றால்,
வெய்யநின் கயரோக மும்பழியு மாறியுயர் மேன்மையும் பெறுவைமுன்போன் -
      மேவமுடி வைத்திடினும் வைக்கும் பெருங்கருணை விள்ளத் தெரிந்தவர்கள்யா,
ரையனா வடுதுறைச் சித்தாந்த சைவனுட னம்புலீ யாடவாவே
      யருணெறி நடாத்துமம் பலவாண தேசிகனொ டம்பூலி யாடவாவே.
(6)
904 போற்றுநாம் வருகென் றழைத்தபொழு தெய்திலான் புகலிவனெனத்திருக்கண் -
      போதச் சிவந்துழிக் குரவற்பிழைத்ததன் புகரெண்ணி யிருவினைகளுங்,
காற்றுதிரு முன்னர்வர வஞ்சினா னென்றருகு கவினமே வுற்றவனையான் -
      கண்மணியை யனையசுப் பிரமணிய தேவனக் கண்சிவப் பாற்றுவித்தான்,
மாற்றுவா னின்னமு மெனத்தா மதிப்பையேன் மற்றவனு மனையனாவன் -
      வாழ்வகை நினக்குமப் பாலுமுண் டோசெம்பொன் மாடமுடி மேலண்டம்வைத்,
தாற்றுமா வடுதுறைச் சித்தாந்த சைவனுட னம்புலீ யாடவாவே
      யருணெறி நடாத்துமம் பலவாண தேசிகனொ டம்பூலி யாடவாவே.
(7)
905 தீட்டுமா புகழுடைச் சின்மய னிவன்கலச் சேடமுகி லினுமுன்னைநாட் -
      சேர்ந்துநீ ருவரகற் றியபழங் கதையமரர் செப்பத் தெரிந்திலாயோ,
கூட்டுமிப் போதுமச் சேடமணு வத்தனை கொடுத்திடப் பெற்றாயெனிற் -
      கொடியகய நோயொழிவ தற்கைய மில்லையிக் கூற்றுண்மை யென்றுணர்தியா,
லீட்டுமா பாதகமும் வேறிடம் பார்க்குமினி யாஞ்சொன்ன வழிவருதியே -
      லெய்தாத மேன்மையிலை மாடத் துகிற்கொடி யெழுந்தசைந் தைந்தருவையு,
மாட்டுமா வடுதுறைச் சித்தாந்த சைவனுட னம்புலீ யாடவாவே
      யருணெறி நடாத்துமம் பலவாண தேசிகனொ டம்பூலி யாடவாவே.
(8)
906 எங்கணா யகன்வருதி யென்றபடி வாரா திருத்தியேல் வெய்யசாப -
      மிடுவனச் சாபநின் குரவனிடு சாபமென் றெண்ணாதி யதுவாழ்த்ததால்,
வெங்கணா டரலிவ னணிந்தவைகள் பலவுண்டு வெய்துயிர்த் தொன்றைநோக்கின் -
      விரையவந் துன்னைப் பிடித்துக் கடித்துடன் விழுங்கியிடு மீளாமலே,
திங்கணா யகயா முரைப்பதுவும் வேண்டுமோ சிறுவிதி மகச்சாலையிற் -
      றேய்ப்புண்ட தத்தனையு மின்றயர்த் தாய்கொலோ செங்கண்மால் கைகுவிக்கு,
மங்கணா வடுதுறைச் சித்தாந்த சைவனுட னம்புலீ யாடவாவே
      யருணெறி நடாத்துமம் பலவாண தேசிகனொ டம்புலி யாடவாவே.
(9)
907 வார்க்குங்கு மக்கொங்கை யுமையாள் பசுக்கோல மாற்றிமுற் கோலமுதவு -
      மாத்தல மிதன்கணொளிர் குருதரிச னங்கருது வார்க்குமள வாதவின்பம்,
போர்க்குமொரு சிவலிங்க தரிசன மருட்பெருமை பூண்டசங் கமதரிசனம்,
      பொற்பக் கிடைக்குமித் தலமனைய தலமெவண் போய்ப்பெறுவ தோதுமதியே,
சீர்க்குமொரு நவகோடி சித்தபுர மென்பதுந் தேர்ந்திலாய் தேருமாறு -
      செப்பவுந் தேர்கிலா யிதுநன்மை யன்றெழு திரைக்கட லெனப்பன்முரச,
மார்க்குமா வடுதுறைச் சித்தாந்த சைவனுட னம்புலீ யாடவாவே
      யருணெறி நடாத்துமம் பலவாண தேசிகனொ டம்பூலி யாடவாவே.
(10)

7. அம்புலிப்பருவம் முற்றிற்று.
8. சிற்றிற்பருவம்.

908 உருவார் மதிய மிளங்காலை யுதிப்ப தெவனென் றுன்னிமயங்
      குற்றுக் கணப்போ திருந்தனம்பி னுணர்ந்தோம் வேடப் பொலிவதன்பின்
மருவா ராத்த மாலைதுயல் வருதோ ளொருநீ யெனத்தெளிந்தோ
      மற்றப் பொழுதே விரைந்தெழுந்து மகிழ்ந்து பணிந்தோ நீறளித்தாய்
வெருவார் கண்ட வுடனெழுதன் மேவா ரென்று திருவுளத்து
      மிக்க சினங்கொண் டிதுசெய்தன் மேலாம் பெருமைக் கழகேயோ
திருவார் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே
      சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.
(1)
909 ஒளிசா னினது வருகையுளத் துவந்தோம் யாங்கள் வகுத்தவறை
      யொன்று ளிருத்தி யெனமுகம னுரைத்தோ மதனுக் கெங்கள்சித்த
ரளிசா லருளின் வகுத்தவறை யன்றென் றொழித்தா யடுமணற்சோ
      றைய வுண்க வெனநமக்கிங் காகா தாநம் விடைக்கென்றாய்
களிசால் யாங்க ளினிச்செய்யக் கடவதொன்று மிலையடிகள்
      கருத்தி லென்னோ நினைந்தீது கருதின் யாங்கள் செயலென்னே
தெளிசா றுறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே
      சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.
(2)
910 ஆரும் புழுதி யறப்புனல்கொண் டாட்டித் திருவொற் றாடையிடற்
      கடியார் பலரு ளாரெனின்வே றளைந்து சென்றா லாகாதோ
பேருங் சிறியோ மியற்றுவது பேணாச் சிறுவீ டாதலினாற்
      பெரியோ யொருநீ யியற்றுவது பேணும் பெருவீ டாகியதா
லோரு மிதுவு நின்னடிம ணுரி� மதனாற் கன்றுவது
      மொருங்கி யாங்கள் வருந்துவது முணரா திருத்த லருளன்றே
தேருந் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே
      சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.
(3)
911 அருந்து பதம்பார்த் தோருவேட னமைத்துக் கொடுத்த வூனெச்சி
      லடங்க நுகர்ந்து முடியிலவ னடிசூட் டிடவு மமைதரவேற்
றிருந்த துரையா தினையவனுண் டிட்ட சேட மெடுத்துதவி
      யெல்லார் முடிக்கு மடிசூட்டு மென்று புகன்றோ மிதுபிழையோ
வருந்து மெமது விண்ணப்ப மறாம லேற்க வேலாயேன்
      மன்னு மருளி லானெனநின் மாணாக் கருக்கெல் லாமுரைப்போந்
திருந்து துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே
      சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.
(4)
912 ஐய முன்னைப் பழக்கநினைந் தழிப்பே னென்னி லுலகுயிர்கட்
      கமைந்த மலமா தியமூன்று மடங்க வழித்தி யடுகாமம்
வெய்ய குரோத முதலாறும் வீட வழித்தி நினையன்றி
      வேறும் பொருளுண் டென்றுரைக்கும் வீணர் மதமு மறவழித்தி -
வைய முவக்கு மிவையன்றி மதியா யாங்க ளாடிடத்து
      வந்து வகுப்ப தழித்தனையேல் வருவ தறமோ மாப்புகழோ
செய்ய துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே
      சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.
(5)
913 எல்லார் தமக்கு மனுக்கிரக மியற்று லோமென் றொருபெயரிட்
      டிங்கு மேவி யெங்களிடத் தென்னோ வழித்தற் றெழில்பூண்டாய்
வல்லா ரெதுசெய் யினுஞ்செயலா மறுப்பா ரொருவ ரின்மையினால்
      வல்லார் லாளா விருப்பதலால் வாய்பே சுதற்கும் வழக்குண்டோ
வில்லார் மணிமா ளிகைகடொறும் விளங்கா நின்ற நலநோக்கி
      விண்ணோர் கண்ணே றுறாவண்ணம் விரித்துப் பொருத்து முறையே போற்
செல்லார் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே
      சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.
(6)
914 கூறு முலகர் விரும்புபெருங் குரவர் பெருமா னீயென்னிற்
      குலவ நினைக்காண் டொறும்யாங்கள் கும்பிட் டிடுவோ மதுவன்றி
வேறு தனித்து மொழிந்திடினும் விரும்பிக் கேட்போ மினிதியற்றும்
      வீட்டை யழிப்பான் றொடங்கினையேல் விதியா காது பொறுத்திருத்த
னாறு மலர்ப்பைம் பொழிறோறு நகுபைங் கிளியா கமங்கூற
      நச்சு பூவை யுணர்ந்துகற்ப நண்ணுங் குயில்கட் கினிதோதத்
தேறுந் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே
      சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.
(7)
915 கோணார் பிறையுங் கழிதலையுங் கொன்றைத் தொடையும் புலித்தோலுங்
      குலவு நுதற்க ணொடுபிறவுங் கூடா தொழித்துச் சுவேச்சையினோ
ரேணா ருருக்கொண் டிங்கடைந்த திறைஞ்சு மவர்கட் கருள்வதற்கோ
      வெங்கள் சிறுவீ டழிப்பதற்கோ வியம்பல் வேண்டு மிறையோனே
பூணார் முலைநன் மடமாதர் புணர்மா ளிகையிற் சூளிகையிற்
      பொருத்து மணிச்செங் கதிரெழுந்து போய்வெங் கதிர்க்கு மாறாகச்
சேணார் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே
      சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.
(8)
916 மாலா ரிளைய மகனாய மதவே ளுடம்போ கற்பகஞ்சால்
      வான்கூட் டுண்ணுந் திறலவுணர் வாழ்ந்த கொடிய முப்புரமோ
பாலா ரயன்மா லொடுங்கவரும் படர்பே ரூழிப் புவனமோ
      பரவு மடிகள் பொருளாகப் பற்றி யழித்தல் செய்வதற்குக்
கோலார் வளைக்கை மடவார்யாங் குழுமி யியற்று மிதுகுளிர்பூங்
      கோலப் பொழில்சூழ் வாவியினுங் குளிரோ டையினுந் தாயெழுந்து
சேலார் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே
      சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.
(9)
917 வீங்கும் விருப்பின் யாங்களணி வீதி யிடத்தி லியற்றுமிதின்
      மேவுஞ் சுவரச் சிறுவிதிசெய் வேள்விக் களமே கலையன்று
தாங்கு மிதனுட் செம்மணிக டயங்கு மதனுட் டழலன்று
      தழையா நின்ற வெங்குழுவத் தக்கன் மகத்திற் குழுவன்றே
பாங்கு பெறவா லடிக்குரவு பயின்றாற் போல வடுதொழில்யாம்
      பயில்வோ நினையாந் தடுத்திலமிப் பண்பு தகவோ பலவளமுந்
தேங்குத் துறைசை வளர்ஞானச் செல்வா சிற்றில் சிதையேலே
      சிந்தா மணியம் பலவாண தேவா சிற்றில் சிதையேலே.
(10)

8. சிற்றிற்பருவம் முற்றிற்று.
9. சிறுபறைப்பருவம்.

918 விரைவீசு தாமரைப் பூவொத்த செங்கரம் விளங்குமொரு தமருகத்தை -
      மேவத் திரித்துவடி வொடுநிறமு மொத்தலான் மேதினி யெலாம்பரந்து,
நுரைவீசு கங்கையொடு நட்புற் றுறும்பிறையை நோன்மையரு ளிற்றிரித்து -
      நுவலுமிப் பறைகுணி லெனக்கொண் டுளாய்கொலென நோக்கியுல கேத்தெடுப்ப,
வரைவீசு வெள்ளொளிய வயிரமும் பாசொளிய மரகதமும் வாரிவாரி -
      வண்குலைப் படுகரிடை மேயும்வளை கோட்டெருமை வாய்வெரீஇ யோட்டெடுப்பத்,
திரைவீசு பொன்னிவளை சென்னிவள நன்னாட சிறுபறை முழக்கியருளே -
      சித்தர்பலர் மொய்த்தகோ முத்தியம் பலவாண சிறுபறை முழக்கியருளே.
(1)
919 அறிவிலே மிந்திரிய மாவேட்ட மாடுதற் கமைகுறிஞ் சிப்பறையுமா -
      யடங்காத மனமென்னு மிமிலேறு கோடற் கடுத்தமுல் லைப்பறையுமாய்,
முறிவிலுடல் பொருளாவி கொள்ளைகோ டற்குற முழக்குபா லைப்பறையுமாய் -
      மூதுணர் வெனும்புன லறாதுற வொழுக்கற்கு மொய்த்தமரு தப்பறையுமாய்,
மறிவிலெம ரொடுமாறு கொண்டபர சமயர்கோண் மாய்க்குநெய் தற்பறையுமாய்,
      மாறாது பொலியவரை நின்றிழிந் தெஞ்ஞான்றும் வற்றுத லிலாதுவெப்பச்,
செறிவிலுயர் பொன்னிவளை சென்னிவள நன்னாட சிறுபறை முழக்கியருளே -
      சித்தர்பலர் மொய்த்தகோ முத்தியம் பலவாண சிறுபறை முழக்கியருளே.
(2)
920 ஓங்குபல புவனத் திளைப்பாற்று முன்னி� தொலிப்பதெவ னென்றுகருதி -
      யுணர்வுடைய ருண்மயங் கினுமயங் குகபின் புணர்ந்தி� தெனத்தெளிவரால்,
வீங்குபே ரறிவுடைப் பாணினியு முன்போல் வியாகரண வாஞ்சையுற்று -
      மேவிடினு மவனுமி� திற்றெனத் தேர்குவன் விளங்குகுணில் கைப்பற்றியே,
வாங்குதிரை மால்யானை பற்பல வெடுத்துநால் வாயரற் றிடவெறிந்து
      வரைபல வுருட்டிக் கடுத்துப் புகுந்துவரு மறிதிரைக் கடல்கலக்கித்,
தேங்குநீர்ப் பொன்னிவளை சென்னிவள நன்னாட சிறுபறை முழக்கியருளே -
      சித்தர்பலர் மொய்த்தகோ முத்தியம் பலவாண சிறுபறை முழக்கியருளே.
(3)
921 இருளின்விழி போற்கேவ லத்திற் கிடந்தநுமை யின்னருளி னுடல்விளக்க -
      மேய்ப்பவது வாய்வினை வயிற்படர்ந் தீர்பின்னு மெய்த்துமெய் யாதுநாளும்,
பொருளற முஞற்றப் புரிந்திரு தளைச்செறிவு பூணாது கீழ்ப்படுத்தப் -
      புகறத்து வத்துருக் காட்சிசுத் தியுமுறப் பொலிதரு நுமைக்கண்டுநீர்,
மருளமை செருக்குறுதன் மாற்றவரு ணோக்கிவினை மற்றைந்தி னெழுதறவிர -
      மன்னுமருண் முதலெனக் கண்டொன் றுறாதொன்ற வம்மினென் றறிவித்தல்போற்,
றெருள்விரவு பொன்னிவளை சென்னிவள நன்னாட சிறுபறை முழக்கியருளே -
      சித்தர்பலர் மொய்த்தகோ முத்தியம் பலவாண சிறுபறை முழக்கியருளே.
(4)
922 மதிசெயுஞ் சித்தாந்த சைவவசு ணங்கட்கு வரியாழ் முழக்கமெனவும் -
      வளமருவு சுத்தசை வப்பயிர் களுக்குநெடு மாமழை முழக்கமெனவும்,
விதிசெயுங் கிரியா குருக்களர வங்கட்கு விழைமயின் முழக்கமெனவும் -
      வெய்யபர சமயப் பருத்திப் பொதிக்கழலும் வெவ்வழன் முழக்கமெனவு,
நிதிசெயு மணிக்குவை களுஞ்சந் தனக்குறடு நீளகிற் றுணியும்யானை -
      நிகரில்வெண் கோடுகளும் வரைநின்று வாருபு நிலந்தொறு மெறிந்தியாரையுந்,
திதிசெயும் பொன்னிவளை சென்னிவள நன்னாட சிறுபறை முழக்கியருளே -
      சித்தர்பலர் மொய்த்தகோ முத்தியம் பலவாண சிறுபறை முழக்கியருளே.
(5)

வேறு.
923 புத்தமு தோவென மெய்த்துதி பாடிப் புந்தி விரும்புநரும்
      புகரற வோரறு காலமு மெண்ணிப் போற்றி வணங்கநரும்
சித்த மிருத்தி விடாம லருச்சனை செய்து மதிப்பவருஞ்
      செங்கை குவித்தரு கெய்தி யடிப்பணி செய்யும் விருப்பினரும்
மத்த வருட்கண் வழங்கென நின்றெதி ராடி வழுத்துநரு
      மாகிய பற்பல செந்தா மரைக ளலர்த்து மிளங்கதிரே
முத்தமிழ் தேர்துறை சைப்பதி வாணன் முழக்குக சிறுபறையே
      முத்தி முதற்குரு வம்பல வாணன் முழக்குக சிறுபறையே.
(6)
924 மருவிய வாசைப் பேயை யொழித்திட மந்திர வாதியுமாய்
      மாறாப் புண்ணிய மகவு வளர்த்திட வாய்ப்புறு மன்னையுமாய்ப்
பொருவி லிடும்பைச் சேறு புலர்த்தப் பொலிதரு பருதியுமாய்ப்
      போர்த்திடு பரசம யக்களி றொழியப் போதரு சிங்கமுமாய்
வெருவரு வெய்ய வினைக்கா டொழிதர வெய்தெழு வன்னியுமாய்
      விடாத பவக்கட் செவியொழி யப்புள் வேந்தனு மாய்ப்பொலிவாய்
முருகலர் நீர்த்துறை சைப்பதி வாணன் முழக்குக சிறுபறையே
      முத்தி முதற்குரு வம்பல வாணன் முழக்குக சிறுபறையே.
(7)
925 மன்னிய நாமே பரசிவ மென்றும் வயங்கும் மடியாரை
      வழிபடு மதுவே நம்மடி யடைதரு வழியென் றுங்கருணை
துன்னிய நந்திரு நாமம தேயரு டொகுமந் திரமென்றுந்
      துயரம் வருத்து மவாமுத லடலே தோலா வலியென்றும்
பின்னிய நந்திரு வருளர னம்மொடு பெயரா தொன்றுதலே
      பேரின் பென்று மெமக்கரு ளிப்பணி பேணிக் கொண்டருள்வோய்
முன்னிய வண்டுறை சைப்பதி வாணன் முழக்குக சிறுபறையே
      முத்தி முதற்குரு வம்பல வாணன் முழக்குக சிறுபறையே.
(8)
926 பெய்வள மாரி யெழுங்குமி ழிக்கிணை பெற்ற வுடற்கணறாப்
      பெட்பினர் வெய்ய சினக்கனல் பொங்கப் பெறுகொடு மனமுருடர்
பொய்வள நாடுபு செந்நில நீரிற் போர்த்த மயக்கமுளார்
      பொல்லா ரிவர்தமை யாளுத லாலாம் புகழென வுட்கொண்டு
மெய்வள மார்கரு ணைத்திறம் யாரும் வெளிப்படை யாலுணர்வான்
      வெய்யே மையுமினி தாண்டருள் குரவா மேலோர் பலர்சூழு
மொய்வள மார்துறை சைப்பதி வாணன் முழக்குக சிறுபறையே
      முத்தி முதற்குரு வம்பல வாணன் முழக்குக சிறுபறையே.
(9)
927 வாரி யுடுத்த புலிக்கண் விபூதி வயக்குத லிலராயு
      மன்னிய புண்ணிய மேய்க்குங் கண்மணி வாஞ்சை யுறாராயுஞ்
சீரிய வக்கர மைந்து நவிற்றுத றேறா தொழிவாருந்
      திகழ்தரு நின்னடி யார்த மடிப்பணி செய்யா தகல்வாரு
மாரியர் கோவென நின்னடி சார்ந்துநி னருண்முக மேலாரு
      மாகிய முருடர் கவுட்புடை யொப்ப வலங்குபொ னாலாய
மூரி மதிற்றுறை சைப்பதி வாணன் முழக்குக சிறுபறையே
      முத்தி முதற்குரு வம்பல வாணன் முழக்குக சிறுபறையே.
(10)

9. சிறுபறைப்பருவம் முற்றிற்று.
10. சிறுதேர்ப்பருவம்.

928 பருந்துபல சூழப் புலால்கமழும் வெம்படைப் பருவலித் தகுவர்மூவர் -
      பற்றியமர் சூக்கும வுடம்பனைய திரிபுரப் பாழிமுற் றுங்கெடுப்பான்,
பொருந்துவட மேருவில் வளைத்தரவு நாண்கொளீஇப் பொருகடல் சுவற்றுவாளிப் -
      பொருகணை கரங்கொண்டு நான்மறைப் பரிமலர்ப் புத்தேள் கடாவிநிற்ப,
மருந்துபடு மதியமும் பருதியுஞ் சகடாய் வயங்கக் கொடிஞ்சிமுதலா -
      மற்றுள வுறுப்புமற் றுளதேவ ராகநெடு வாழ்த்துமல் குறவிவர்ந்து,
திருந்துபுவி யாகிய பெருந்தே ருருட்டினோன் சிறுதே ருருட்டியருளே -
      செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே.
(1)
929 வெய்யவெங் கானந் திரிந்துழன் றுங்கரு விழிச்செய்ய வாய்த்
      .... .... ..... ......
வையமிது வெள்ளனக் கட்டுண்டு முட்டுண்டு மத்தின்மொத் துண்டுவண்டு
      வார்திரை யெடுத்தெறியு மார்களி னோடி வெளி வான நோக்காது வீழ்ந்தே,
யெய்யவவ ணின்றின்னு நீங்கா துறங்குமோ ரெருதேறி யதுவன்றியு -
      மென்சொல்வ லதுவுண்ட மண்ணாய தேரேறி யென்னுமோர் சிறுமைதீரச்,
செய்யபொன் செய்துபல மணிவைத் திழைத்திட்ட சிறுதே ருருட்டியருளே -
      செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே.
(2)
930 உருகுமன முடையராய்ப் பல்லோர் நடாத்துவதி னுறுமழகு நோக்கநின்றா -
      ருற்றவவர் கட்குமெங் கட்குமகிழ் பூப்பநீ யொள்ளிதி னடாத்தல்வேண்டும்,
பெருகுமெழி லோடிவர்ந் தினிநடத் தோமெனிற் பேசுபல் வடங்கழற்றிப் -
      பெருந்தேர் நடாத்தியரு டிருமாளி கைத்தேவர் பேணுசந் நிதியடைந்தே,
யருகுசில விண்ணப்பம் யாங்கள்செய் வோமென்னி லவர்தா நடாத்துதற்கோ -
      ரையமிலை யாமே நடத்தின மெனும்புக ழடைந்திடுவை சொற்றபடிகே,
டிருகுதவிர் பவருளத் தறிவுருவின் மேவுவோன் சிறுதே ருருட்டியருளே -
      செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே.
(3)
931 துணைவந்த குஞ்சரமு மழகிய வுவாவுந் துலங்குமிந் நகரிடத்துத் -
      துண்ணெனமு னச்சிறுத் திட்டகளி றிலையது துணிந்திங்கு வருவதுமிலைப்,
பணைவந்த கைத்தலத் ததுவந்து மேவினும் பனிமல ரிறைத்தெண்முதலாப் -
      பலவுற்ற சுவையமோ தகமாதி வீசிப் பணிந்துவச மாக்கிவிடுவோ,
மிணைவந்த பொருளென்று நீயுப சரிப்பதொன் றில்லாமல் யாமாதலா -
      லிடையூறு வேறின்று சிறுவீ டியற்றுமத னினமாகு மாதர்விலகத்,
திணைவந்த வளமல்கு சோணாடளிப்பவன் சிறுதே ருருட்டியருளே -
      செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே.
(4)
932 வானாடு மேவும் புறத்தொண்டர் சொற்றபடி வையமு நடாத்தினாயிம் -
      மண்ணாடு மேவிய வகத்தொண்ட ரேம்யாம் வகுத்தபடி கேளாமையென்,
கானாடு மதுசொற்ற படிநடத் தோமெனிற் கைகுவித் தெய்திநினது -
      கண்மணியை யனையசுப் பிரமணிய தேவன்முன் கரைவோங் கரைந்தபொழுதே,
பானாடு மனையனின் பால்வந் துரைக்கினெப் படிமறுத் திடுவையனைய -
      பக்கநீ தவிர்தே யிலையாத லால்யாம் பகர்ந்தபடி கேட்டல்வேண்டுந்,
தேனாடு பூம்பொழிற் சோணா டளிப்பவன் சிறுதே ருருட்டியருளே -
      செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே.
(5)
933 முதையாய வெங்கண்மன மாம்புலத் திற்காம முதலாய பெருமரங்கண் -
      முழுதுமற வருளாய தழல்கொளுவி யைந்தென முழங்குமக் கரமனுவெனு,
மதையா யலப்படை யெனக்கொண் டுழச்செயா வன்பெனும் வித்துவித்தி -
      யார்வநீர் பாய்த்தியன் னியசமய மாக்களட ராதுபொறை வேலிகோலிப்,
பதையாத தவமெனும் பைம்பயிர் வளர்ந்துபொய் படாதசிவ போகம்விளையாப் -
      பண்பினுகர் காறும்விட யக்கரவர் கவருதல் படாதுகாத் தருள்சின்மயன்,
சிதையாத வளமல்கு சோணா டளிப்பவன் சிறுதே ருருட்டியருளே -
      செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே.
(6)
934 முந்தைமறை யாகம நவினறணு ணினிக்கியா முந்துபு நடத்தல் செய்யே -
      முந்துபு நடப்பவர் நடந்திடுக விதுகாறு முந்துபு நடத்தாலாலே,
யந்தைபடு பிறவித் துயர்க்கட லழுந்தின மதாஅன்றுபுற முதன்மையேபோ -
      லையவக முதன்மையு நினக்காக நல்குவா னடியே மமைந்துநின்றே,
நிந்தையறு மெங்கள்செய லிற்றாக லாற்பின்பு நேயத் தொடுந்தொடருவே -
      நிறைகருணை பூத்தியா வருமன மகிழ்ச்சியுற நிகழ்காம மாதிதீர்ந்த,
சிந்தைகுடி கொண்டு சுடர் விட்டோங்கு சின்மயன் சிறுதே ருருட்டியருளே -
      செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே.
(7)
935 அணிகொண்ட முன்னா ணடாத்தியது பொன்னிற மமைந்ததிது முழுமையும்பொ -
      னாழிநின் கைகா லடர்ப்புண்ட விதனின்மரு வாழியத் தகையவலவான்,
மணிகொண்ட வச்சுமுறி பட்டதது விதுவன்மை மாறாத தென்றுமத்தேர் -
      வண்மையிற் றாகவு முளஞ்செருக் கிக்கடினம் வாய்ந்தன மெனப்பொலியுமாற்,
பணிகொண்ட வதனுட் செருக்ககலும் வழியெனப் பகருமதன் மார்புகீண்டு -
      படரும்வெளி யாகவிது நோக்கிமகிழ் தருமெங்கள் பாழிமல மாயைகன்மத்,
திணிகொண்ட மும்மதிலு நீறெழச் சின்மயன் சிறுதே ருருட்டியருளே -
      செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே.
(8)
936 ஒருநாம மும்பெறுவ தில்லைநா மென்றுமு னுரைத்தனை யதற்குமாறா -
      வுலவாப் பெருங்கருணை வெள்ளமலை யெறிதலா லுணர்விலெளி யேமுமுய்வான்,
றருநாம நந்தியங் குமரர்சத் தியஞான தரிசனி பரஞ்சோதியார் -
      தழைதருமெய் கண்டவர்ந லருணந்தி மறைஞான சம்பந்தர் கொற்றவனெனும்,
பெருநாம நல்லூ ருமாபதி சிவன்கருணை பெருகரு ணமச்சிவாயர் -
      பிரகாச ரைந்தெழுத் திறைமுனிரு பத்தைந்து பெயர்கொண்ட தன்றியின்னுந்,
திருநாம மெண்ணில புனைந்துவரு சின்மயன் சிறுதே ருருட்டியருளே -
      செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே.
(9)
937 ஆவாழ்க மாமறைக் குலம்வாழ்க நலமாரு மாகமத் திரள்கள்வாழ்க -
      வருண்மல்கு சித்தாந்த சைவநலம் வாழ்கநினை யன்பிற் புகழ்ந்துபாடு,
நாவாழ்க நின்றிரு வடிப்பணி புரிந்திடு நன்மலர்க் கைகள்வாழ்க -
      நண்புற விராப்பக னினைக்குமனம் வாழ்கவிறை நடவுசெங் கோலும்வாழ்க,
மாவாழ்க வெவ்விடனு மேவிமதி தோறுமும் மழைபொழிய மேகம்வாழ்க -
      மன்னுபைங் கூழ்வாழ்க வெவ்வுயிரும் வாழ்கநின் வயங்கூர்தி யாயதருமச்,
சேவாழ்க சைலாதி சந்தானம் வாழ்கநீ சிறுதே ருருட்டியருளே -
      செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே.
(10)

10. சிறுதேர்ப்பருவம் முற்றிற்று.

அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ் முற்றிற்று.

சிறப்புப்பாயிரம்

இந்நூலாசிரியர் மாணாக்கரும், சங்கரம்பிள்ளையவர்கள் குமாரருமாகிய
தெய்வநாயகம்பிள்ளையவர்களியற்றியது.
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
938 பொன்பூத்த திரைப்பொன்னிப் புண்ணியமா நதிபுணரிப் புனல்கலந்த,
கொன்பூத்த வுவரகற்றி யிழிந்தவரைக் கலந்தபெருங் குற்றம் போக்கு,
மின்பூத்த பேரறிவா னமைந்தவான் றோர்நிகர்த்து மேவ லாலே,
தென்பூத்த வளமன்னு பொன்னிநா டென்னுமுயர் சென்னி நாட்டில்.
(1)
939 தேன்கலந்த மலர்நிறையக் கலந்தும்வரி யளிக்கூட்டாச் செழும் பூந் தெய்வக்,
கான்கலந்த விண்கலந்தவ் வளிக்கினிய மதுவூட்டிக் கவின்ற செல்வந்,
தான்கலந்தும் வறியவர்க்கூட் டார்நகரங் கலந்தன்னஞ் சலிக்க வூட்டும்,
வான்கலந்த வள்ளனிகர் பொழில்கலந்து சூழ்துறைசை மாத்த லத்தில்.
(2)
940 துலங்குதிரு வெண்ணீறுங் கண்மணியும் பூங்காவித் துகிலு மோவா,
நலங்குலவு சிவார்ச்சனையு நயந்தபெரு முனிவர்பலர் நண்ணி யெங்கு,
மிலங்குசிவா கமமுதல விசைப்போர்கேட் போர்சிந்தித் திருப்போர் மற்றை,
வலங்குலவத் தெளிவோர்க ளாயென்றும் வயங்குதிரு மடத்தின் மாதோ.
(3)
941 சடைகரந்த திருமுடியும் விழிகரந்த தனிநுதலுங் தழைபூங் கொன்றைத்,
தொடைகரந்த திருத்தோளும் விடங்கரந்த மணிமிடறுந் துலங்கு சூலப்,
படைகரந்த திருக்கரமுங் குழைகரந்த வார்செவியும் பாய்பு லித்தோ,
லுடைகரந்த திருவரையு மறைமணிநூ புரங்கரந்த வொளிர்பொற் றாளும்.
(4)
942 உற்றுநனி யழகெறிப்ப விளங்குதிரு வருளுருவ மொன்று தாங்கிக்,
கற்றவர்வெம் மலக்கருளை விழுங்குறுமெய்ஞ் ஞானபாற் கரனே குற்ற,
மற்றகதிர் மாமணியே யாரமுதே யெய்ப்பினில்வைப் பனையா யென்று,
சொற்றிடலீற் றிருந்தருளம் பலவாண தேசிகன்பூந் துணர்ப்பொற் றாளில்.
(5)
943 பிறந்துபல நாளி�ருந்து தரிசித்தோர்ச் *சொல்லெண்ணோ பேணியோர்நாட்,
சிறந்தொருகா லடைந்தன்பிற் றரிசித்தோர் தமக்குமருள் சிறப்ப நல்கி,
மறந்தகலா வணம்புரியுந் தாயான மாதேவன் வைக லாலே,
நிறந்தழையும் பெருஞ்சீர்த்தித் திரிசிராப் பள்ளியில்வாழ் நெடிய சீலன்.
(6)
944 விண்ணுலகத் தமர்ந்துதனை யடைந்தோர்க்கு விரைந்தழியு&ம் வெறுக்கை நல்கிக்
கண்ணுறுசிற் றின்புறச்செய் தறக்கழிவு கண்டிடுகற் பகம்போலாது
மண்ணுலகத் தமர்ந்தடைந்தோர்க் கழிவில்கல்விப் பொருள்வழங்கி வனைபேரின்ப
நண்ணுறச்செய் தறம்பெருக்கு மீனாட்சி சுந்தரப்பேர் நல்லோனன்பால்.
(7)
945 என்னறிவா லின்னவென வறிந்தறிந்து வகுத்துவத் திசைத்தல் கூடாப்
பன்னலமு நனிசிறந்து விளங்கவனைந் தணிந்தபா மாலை யாய
நன்னலஞ்சே ரொருபிள்ளைத் தமிழினைவார் திரைசுருட்டு நரலை சூழ்ந்த
மன்னுலகங் கொளுமாறு வயங்குறுமச் சிற்பதித்து வழங்கி னானால்.
(8)
946 அனையனுய ரிந்நூலா சிரியன்பாற் கற்றவனென் னருமை நண்பன்
வினையமலி நூல்களெலா முணர்ந்துணர்த்து நுண்ணறிவான் மிக்க சீலன்
றனைநிகரு மணிமன்று ணடநவில்குஞ் சிதகமலந் தணவா துள்வோ
னனையலர் தார்ப் புயத்தியாக ராசநா வலவனெழி னலமிக் கோனே.
(9)
அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ்
சிறப்புப்பாயிரம் முற்றிற்று.
 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home