Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Kamba Ramayanam > பால காண்டம் > அயோத்திய காண்டம் > ஆரணிய காண்டம் > கிட்கிந்தா காண்டம் > சுந்தர காண்டம் > 1 கடல் தாவு படலம்  > 2 ஊர் தேடு படலம் > 3 காட்சிப் படலம் > 4 உருக் காட்டு படலம் >5 சூடாமணிப் படலம்  > 6 பொழில் இறுத்த படலம் > 7 கிங்கார் வதைப் படலம் > 8 சம்புமாலி வதைப் படலம் > 9 பஞ்ச சேனாதிபதிகள் வதைப் படலம் > 10 அக்ககுமாரன் வதைப் படலம் > 11 பாசப் படலம் > 12 பிணி வீட்டு படலம் > 13 இலங்கை எரியூட்டு படலம் > 14 திருவடி தொழுத படலம் > யுத்த காண்டம்

Kamba Ramayanam

கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
சுந்தர காண்டம் - 6. பொழில் இறுத்த படலம்


விடைபெற்ற அனுமனின் உள்ள நிலை

நெறிக் கோடு வடக்கு உறும் நினைப்பினில் நிமிர்ந்தான்,
பொறிக் குல மலர்ப் பொழிலிடைக் கடிது போவான்,
'சிறுத் தொழில் முடித்து அகல்தல் தீது' எனல், தெரிந்தான்;
மறித்தும் ஓர் செயற்கு உரிய காரியம் மதித்தான். 1

'ஈனம் உறு பற்றலரை எற்றி, எயில் மூதூர்
மீன நிலையத்தின் உக வீசி, விழி மானை
மானவன் மலர்க் கழலில் வைத்தும்இலென் என்றால்,
ஆனபொழுது, எப் பரிசின், நான் அடியன் ஆவேன்? 2

'வஞ்சனை அரக்கனை நெருக்கி, நெடு வாலால்
அஞ்சினொடு அஞ்சு தலை தோள் உற அசைத்தே,
வெஞ் சிறையில் வைத்தும்இலென்; வென்றும்இலென்; என்றால்,
தஞ்சம் ஒருவர்க்கு ஒருவர் என்றல் தகும் அன்றோ? 3

'கண்ட நிருதக் கடல் கலக்கினென், வலத்தின்
திண் திறல் அரக்கனும் இருக்க ஓர் திறத்தின்
மண்டவுதரத்தவள் மலர்க் குழல் பிடித்து,
கொண்டு சிறை வைத்திடுதலில் குறைவது உண்டோ? 4

'மீட்டும் இனி, எண்ணும் வினை வேறும் உளதுஅன்றால்;
ஓட்டி இவ் அரக்கரை உலைத்து, என் வலி எல்லாம்
காட்டும் இதுவே கருமம்; அன்னவர் கடும் போர்
மூட்டும் வகை யாவதுகொல்?' என்று முயல்கின்றான். 5

'இப் பொழிலினைக் கடிது இறுக்குவென்; இறுத்தால்,
அப் பெரிய பூசல் செவி சார்தலும், அரக்கர்
வெப்புறு சினத்தர் எதிர் மேல்வருவர்; வந்தால்,
துப்பு உற முருக்கி, உயிர் உண்பல், இது சூதால். 6

'வந்தவர்கள் வந்தவர்கள் மீள்கிலர் மடிந்தால்,
வெந் திறல் அரக்கனும், விலக்க அரு வலத்தால்
முந்தும்; எனின், அன்னவன் முடித் தலை முசித்து, என்
சிந்தை உறு வெந் துயர் தவிர்த்து, இனிது செல்வேன்.' 7

அசோக வனத்தை அனுமன் அழித்தல்

என்று நினையா, இரவி சந்திரன் இயங்கும்
குன்றம் இரு தோள் அனைய தன் உருவு கொண்டான்;
அன்று, உலகு எயிற்றிடை கொள் ஏனம் எனல் ஆனான்;
துன்று கடி காவினை, அடிக்கொடு துகைத்தான். 8

முடிந்தன் பிளந்தன் முரிந்தன் நெரிந்த்
மடிந்தன் பொடிந்தன் மறிந்தன் முறிந்த்
இடிந்தன் தகர்ந்தன் எரிந்தன் கரிந்த்
ஒடிந்தன் ஒசிந்தன் உதிர்ந்தன் பிதிர்ந்த. 9

வேரொடு மறிந்த சில் வெந்த சில் விண்ணில்
காரொடு செறிந்த சில் காலினொடு வேலைத்
தூரொடு பறிந்த சில் தும்பியொடு வானோர்
ஊரொடு மலைந்த சில் உக்க, சில நெக்க் 10

சோனை முதல் மற்றவை சுழற்றிய திசைப் போர்
ஆனன நுகரக் குளரும் ஆன் அடி பற்றா
மேல் நிமிர விட்டன, விசும்பின் வழி மீப் போய்,
வானவர்கள் நந்தன வனத்தையும் மடித்த. 11

அலைந்தன கடல் திiர் அரக்கர் அகல் மாடம்
குலைந்து உக இடிந்தன் குலக் கிரிகளோடு
மலைந்து பொடி உற்றன் மயங்கி நெடு வானத்து
உலைந்து விழும் மீனினொடு வெண் மலர் உதிர்ந்த. 12

முடக்கு நெடு வேரொடு முகந்து உலகம் முற்றும்
கடக்கும்வகை வீசின, களித்த திசை யானை,
மடப் பிடியினுக்கு உதவ மையின் நிமிர் கை வைத்து
இடுக்கியன ஒத்தன, எயிற்றின் இடை ஞால்வ. 13

விஞ்சை உலகத்தினும், இயக்கர் மலைமேலும்,
துஞ்சுதல் இல் வானவர் துறக்க நகரத்தும்,
பஞ்சி அடி வஞ்சியர்கள் மொய்த்தனர், பறித்தார்,
நஞ்சம் அனையானுடைய சோலையின் நறும் பூ. 14

பொன் திணி மணிப் பரு மரன், திசைகள் போவ,
மின் திரிவ ஒத்தன் வெயில் கதிரும் ஒத்த்
ஒன்றினொடும் ஒன்று இடை புடைத்து உதிர, ஊழின்
தன் திரள் ஒழுக்கி, விழு தாரகையும் ஒத்த. 15

புள்ளினொடு வண்டும், மிஞிறும், கடிகொள் பூவும்,
கள்ளும், முகையும், தளிர்களோடு இனிய காயும்,
வெள்ள நெடு வேலையிடை, மீன்இனம் விழுங்கித்
துள்ளின் மரன் பட, நெரிந்தன துடித்த. 16

தூவிய மலர்த்தொகை சுமந்து, திசைதோறும்,
பூவின் மணம் நாறுவ, புலால் கமழ்கிலாத,
தேவியர்களோடும் உயர் தேவர் இனிது ஆடும்
ஆவி எனல் ஆய, திரை ஆர்கவிகள் அம்மா! 17

இடந்த மணி வேதியும், இறுத்த கடி காவும்,
தொடர்ந்தன துரந்தன படிந்து, நெறி தூர,
கடந்து செலவு என்பது கடந்தது, இரு காலால்
நடந்து செலல் ஆகும் எனல் ஆகியது, நல் நீர். 18

வேனில் விளையாடு சுடரோனின் ஒளி விம்மும்
வானினிடை வீசிய இரும் பணை மரத்தால்,
தானவர்கள் மாளிகை தகர்ந்து பொடி ஆய-
வான் இடியால் ஒடியும் மால் வரைகள் மான. 19

எண் இல் தரு கோடிகள் எறிந்தன செறிந்தே,
தண்ணென் மழைபோல் இடை தழைந்தது; சலத்தால்,
அண்ணல் அனுமான், 'அடல் இராவணனது, அந் நாள்,
விண்ணினும் ஓர் சோலை உளது ஆம்' என, விதித்தான். 20

தேன் உறை துளிப்ப, நிறை புள் பல சிலம்ப,
பூ நிறை மணித் தரு விசும்பினிடை போவ,
மீன் முறை நெருக்க, ஒளி வாளொடு வில் வீச,
வானிடை நடாய நெடு மானம் எனல் ஆன. 21

சாகம் நெடு மாப் பணை தழைத்தன் தனிப் போர்
நாகம் அனையான் எறிய, மேல் நிமிர்வ-நாளும்
மாக நெடு வானிடை இழிந்து, புனல் வாரும்
மேகம் எனல் ஆய-நெடு மா கடலின் வீழ்வ. 22

ஊனம் உற்றிட, மண்ணின் உதித்தவர்,
ஞானம் முற்றுபு நண்ணினர் வீடு என,
தான கற்பகத் தண்டலை விண்தலம்
போன, புக்கன, முன் உறை பொன்னகர். 23

மணி கொள் குட்டிமம் மட்டித்து, மண்டபம்
துணி படுத்து, அயல் வாவிகள் தூர்த்து, ஒளிர்
திணி சுவர்த் தலம் சிந்தி, செய்ற்கு அரும்
பணி படுத்து, உயர் குன்றம் படுத்துஅரேர் 24

வேங்கை செற்று, மராமரம் வேர் பறித்து,
ஓங்கு கற்பகம் பூவொடு ஒடித்து உராய்,
பாங்கர் சண்பகப் பத்தி பறித்து, அயல்
மாங்கனிப் பணை மட்டித்து மாற்றியே; 25

சந்தனங்கள் தகர்ந்தன-தாள் பட,
இந்தனங்களின் வெந்து எரி சிந்திட,
முந்து அனங்க வசந்தன் முகம் கெட,
நந்தனங்கள் கலங்கி நடுங்கவே. 26

காமரம் களி வண்டு கலங்கிட,
மா மரங்கள் மடிந்தன, மண்ணொடு;
தாம், அரங்க அரங்கு, தகர்ந்து உக,
பூ மரங்கள் எரிந்து பொரிந்தவே. 27

குழையும், கொம்பும், கொடியும், குயிற்குலம்
விழையும் தண் தளிர்ச் சூழலும், மென் மலர்ப்
புழையும், வாசப் பொதும்பும், பொலன் கொள் தேன்
மழையும், வண்டும், மயிலும், மடிந்தவே. 28

பவள மாக் கொடி வீசின, பல் மழை
துவளும் மின் என, சுற்றிட் சூழ் வரை,
திவளும் பொன் பணண மா மரம் சேர்ந்தன,
கவள் யானையின் ஓடையின் காந்தவே. 29

பறவை ஆர்த்து எழும் ஓசையும், பல் மரம்
இற எடுத்த இடிக் குரல் ஓசையும்,
அறவன் ஆர்த்து எழும் ஓசையும், அண்டத்தின்
புற நிலத்தையும் கைம்மிகப் போயதே. 30

பாடலம் படர் கோங்கொடும், பண் இசைப்
பாடல் அம் பனி வண்டொடும், பல் திரைப்
பாடு அலம்பு உயர் வேலையில் பாய்ந்தன,-
பாடு அலம் பெற, புள்இனம், பார்ப்பொடே. 31

வண்டு அலம்பு நல் ஆற்றின் மராமரம்,
வண்டல் அம் புனல் ஆற்றின் மடிந்தன்
விண்டு அலம்பு கம் நீங்கிய வெண் புனல்,
விண்தலம் புக நீள் மரம், வீழ்ந்தவே. 32

தாமரைத் தடம் பொய்கை, செஞ் சந்தனம்-
தாம் அரைத்தன ஒத்த் துகைத்தலின்,
காமரம் களி வண்டொடும், கள்ளொடும்,
காமர் அக் கடல் பூக் கடல் கண்டவே. 33

சிந்துவாரம் திசைதொறும் சென்றன,
சிந்து வார் அம் புரை திரை சேர்ந்தன்
தந்து, ஆரம், புதவொடு தாள் அற,
தம் துவாரம் துகள் பட, சாய்ந்தவே. 34

நந்தவானத்து நாள் மலர் நாறின,
நந்த, வானத்து நாள் மலர் நாறின்
சிந்து அ(வ்) வானம் திரிந்து உக, செம் மணி
சிந்த, வால் நந்து இரிந்த, திரைக் கடல்; 35

புல்லும் பொன் பணைப் பல் மணிப் பொன் மரம்,
'கொல்லும் இப்பொழுதே' எனும் கொள்கையால்,
எல்லில் இட்டு விளக்கிய இந்திரன்
வில்லும் ஒத்தன, விண் உற வீசின. 36

ஆனைத் தானமும், ஆடல் அரங்கமும்,
பானத் தானமும், பாய் பரிப் பந்தியும்,
ஏனைத் தார் அணி தேரொடும் இற்றன-
கானத்து ஆர் தரு அண்ணல் கடாவவே. 37

மயக்கு இல் பொன் குல வல்லிகள், வாரி நேர்
இயக்குறத் திசைதோறும் எறிந்தன,
வெயில் கதிர்க் கற்றை அற்று உற வீழ்ந்தன,
புயல் கடல்தலை புக்கன போல்வன. 38

பெரிய மா மரமும், பெருங் குன்றமும்,
விரிய வீசலின், மின் நெடும் பொன் மதில்
நெரிய, மாடம் நெருப்பு எழ, நீறு எழ,
இரியல்போன, இலங்கையும் எங்கணும். 39

'"தொண்டை அம் கனி வாய்ச் சீதை துயக்கினால் என்னைச் சுட்டாய்;
விண்ட வானவர் கண் முன்னே விரி பொழில் இறுத்து வீசக்
கண்டனை நின்றாய்" என்று, காணுமேல், அரக்கன் காய்தல்
உண்டு' என வெருவினான்போல், ஒளித்தனன், உடுவின் கோமான். 40

காசு அறு மணியும், பொன்னும், காந்தமும், கஞல்வது ஆய
மாசு அறு மரங்கள் ஆகக் குயிற்றிய மதனச் சோலை,
ஆசைகள்தோறும், ஐயன் கைகளால் அள்ளி அள்ளி
வீசிய, விளக்கலாலே, விளங்கின உலகம் எல்லாம். 41

கதறின வெருவி, உள்ளம் கலங்கின, விலங்கு; கண்கள்
குதறின பறவை, வேலை குளித்தன் குளித்திலாத
பதறின் பதைத்த் வானில் பறந்தன் பறந்து பார் வீழ்ந்து
உதறின, சிறையை; மீள ஒடுக்கின உலந்து போன. 42

தோட்டொடும் துதைந்த தெய்வ மரம்தொறும் தொடுத்த புள்தம்
கூட்டொடும் துறக்கம் புக்க, குன்று எனக் குலவுத் திண் தோள்
சேட்டு அகன் பரிதி மார்பன் சீறியும் தீண்டல்தன்னால்;
மீட்டு, அவன் கருணைசெய்தால்; பெறும் பதம் விளம்பலாமோ? 43

சீதை சிறை இருந்த மரம் மட்டும் அழியாது திகழ்தல்

பொய்ம் முறை அரக்கர் காக்கும் புள் உறை புது மென் சோலை,
விம்முறும் உள்ளத்து அன்னம் இருக்கும் அவ் விருக்கம் ஒன்றும்,
மும் முறை உலகம் எல்லாம் முற்றுற முடிவது ஆன
அம் முறை, ஐயன் வைகும் ஆல் என, நின்றது அம்மா! 44

கதிரவன் தோன்றுதல்

உறு சுடர்ச் சூடைக் காசுக்கு அரசினை உயிர் ஒப்பானுக்கு
அறிகுறியாக விட்டாள்; ஆதலான், வறியள் அந்தோ!
செறி குழல் சீதைக்கு அன்று, ஓர் சிகாமணி தெரிந்து வாங்கி,
எறி கடல் ஈவது என்ன, எழுந்தனன், இரவி என்பான். 45

வனத்தின் பொழில் அழித்து நின்ற அனுமனின் நிலை

தாழ் இரும் பொழில்கள் எல்லாம் துடைத்து, ஒரு தமியன் நின்றான்,
ஏழினொடு ஏழு நாடும் அளந்தவன் எனலும் ஆனான்;
ஆழியின் நடுவண் நின்ற அரு வரைக்கு அரசும் ஒத்தான்;
ஊழியின் இறுதிக் காலத்து உருத்திரமூர்த்தி ஒத்தான். 46

அனுமனைக் கண்டு அஞ்சிய அரக்கியர் வினாவும், சீதையின் மறுமொழியும்

இன்னன நிகழும் வேலை, அரக்கியர் எழுந்து பொங்கி,
பொன்மலை என்ன நின்ற புனிதனைப் புகன்று நோக்கி,
'அன்னை! ஈது என்னை மேனி? யார்கொல்?' என்று, அச்சம் உற்றார்,
நன்னுதல்தன்னை நோக்கி, 'அறிதியோ நங்கை?' என்றார். 47

'தீயவர் தீய செய்தல் தீயவர் தெரியின் அல்லால்,
தூயவர் துணிதல் உண்டோ , நும்முடைச் சூழல் எல்லாம்?
ஆய மான் எய்த, அம்மான், இளையவன், "அரக்கர் செய்த
மாயம்" என்று உரைக்கவேயும், மெய்என மையல் கொண்டேன். 48

அனுமன் வேள்வி மண்டபத்தை அழித்தல்

என்றனள்; அரக்கிமார்கள் வயிறு அலைத்து, இரியல்போகி,
குன்றமும், உலகும், வானும், கடல்களும், குலையப் போனார்;
நின்றது ஓர் சயித்தம் கண்டான்; 'நீக்குவன் இதனை' என்னா,
தன் தடக் கைகள் நீட்டிப் பற்றினன், தாதை ஒப்பான். 49

கண் கொள அரிது; மீது கார் கொள அரிது; திண் கால்
எண் கொள அரிது; இராவும் இருள் கொள அரிது; மாக
விண் கொள நிவந்த மேரு வெள்குற, வெதும்பி உள்ளம்
புண் கொள, உயர்ந்தது; இப் பார் பொறை கொள அரிது போலாம். 50

பொங்கு ஒளி நெடு நாள் ஈட்டி, புதிய பால் பொழிவது ஒக்கும்
திங்களை நக்குகின்ற இருள் எலாம் வாரித் தின்ன,
அம் கை பத்து-இரட்டியான்தன் ஆணையால், அழகு மாணப்
பங்கயத்து ஒருவன் தானே, பசும் பொனால் படைத்தது அம்மா! 51

தூண் எலாம் சுடரும் காசு; சுற்று எலாம் முத்தம்; செம் பொன்
பேணல்ஆம் மணியின் பத்தி, பிடர் எலாம்; ஒளிகள் விம்ம,
சேண் எலாம் விரியும் கற்றைச் சேயொளிச் செல்வற்கேயும்
பூணலாம்; எம்மனோரால் புகழலாம் பொதுமைத்து அன்றே. 52

'வெள்ளியங்கிரியை, பண்டு, வெந் தொழில் அரக்கன், வேரோடு
அள்ளினன்' என்னக் கேட்டான்; அத் தொழிற்கு இழிவு தோன்ற,
புள்ளி மா மேரு என்னும் பொன்மலை எடுப்பான் போல,
வள் உகிர்த் தடக் கைதன்னால் மண்நின்றும் வாங்கி, அண்ணல், 53

விட்டனன், இலங்கைதன்மேல்; விண் உற விரிந்த மாடம்
பட்டன, பொடிகள் ஆன் பகுத்தன பாங்கு நின்ற்
சுட்டன பொறிகள் வீழத் துளங்கினர், அரக்கர்தாமும்;
கெட்டனர் வீரர், அம்மா!-பிழைப்பரோ கேடு சூழ்ந்தார்? 54

சோலை காக்கும் பருவத் தேவர் இராவணனிடம் செய்தி தெரிவித்தல்

நீர் இடு துகிலர்; அச்ச நெருப்பு இடு நெஞ்சர்; நெக்குப்
பீரிடும் உருவர்; தெற்றிப் பிணங்கிடு தாளர்; பேழ் வாய்,
ஊர் இடு பூசல் ஆர உளைத்தனர்; ஓடி உற்றார்;-
பார் இடு பழுவச் சோலை பாலிக்கும் பருவத் தேவர். 55

அரி படு சீற்றத்தான்தன் அருகு சென்று, அடியின் வீழ்ந்தார்;
'கரி படு திசையின் நீண்ட காவலாய்! காவல் ஆற்றோம்!
கிரி படு குவவுத் திண் தோள் குரங்கு இடை கிழித்து வீச,
எரி படு துகிலின், நொய்தின் இற்றது கடி கா' என்றார். 56

'சொல்லிட எளியது அன்றால்; சோலையை, காலின், கையின்,
புல்லொடு துகளும் இன்றி, பொடிபட நூறி, பொன்னால்
வில் இடு வேரம்தன்னை வேரொடு வாங்கி வீச,
சில் இடம் ஒழிய, தெய்வ இலங்கையும் சிதைந்தது' என்றார். 57

இராவணன் இகழ்ந்து நகுதலும், காவலர் அனுமன் செய்லை வியந்து கூறலும்

'ஆடகத் தருவின் சோலை பொடி படுத்து, அரக்கர் காக்கும்
தேட அரு வேரம் வாங்கி, இலங்கையும் சிதைத்தது அம்மா!
கோடரம் ஒன்றே! நன்று இது! இராக்கதர் கொற்றம்! சொற்றல்
மூடரும் மொழியார்' என்ன மன்னனும் முறுவல் செய்தான். 58

தேவர்கள், பின்னும், 'மன்ன! அதன் உருச் சுமக்கும் திண்மைப்
பூவலயத்தை அன்றோ புகழ்வது! புலவர் போற்றும்
மூவரின் ஒருவன் என்று புகல்கினும், முடிவு இலாத
ஏவம், அக் குரங்கை, ஐய! காணுதி இன்னே' என்றார். 59

அனுமனின் ஆரவாரம்

மண்தலம் கிழிந்த வாயில் மறி கடல் மோழை மண்ட,
எண் திசை சுமந்த மாவும், தேவரும் இரியல்போக,
தொண்டை வாய் அரக்கிமார்கள் சூல் வயிறு உடைந்து சோர,
'அண்டமும் பிளந்து விண்டது ஆம்' என, அனுமன் ஆர்த்தான். 60

மிகைப் பாடல்கள்

எனப் பதம் வணங்கி, அன்னார் இயம்பிய வார்த்தை கேளா,
கனக் குரல் உருமு வீழ, கனமலை சிதற, தேவர்
மனத்து அறிவு அழிந்து சோர, மாக் கடல் இரைப்புத் தீர
சினத்து வாய் மடித்து, தீயோன், நகைத்து, இவை செப்பலுற்றான். 57-1



 

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home