Selected Writings
M.Thanapalasingham, Australia
ம. தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா
சிட்னி, அவுஸ்திரேலியாவில்
இடம்பெற்ற
மாவீரர்
விழாவில் ஆற்றிய சிறப்புரை
28 November 2006
"
தந்தை செல்வா தனிநாடு அமைக்க கோரி
31 ஆண்டுகளின் பின்னர் முப்படைகளும் பின்னே நிற்க தனி அரசு
அமைப்போம் என தலைவர் விட்ட அறை கூவலுக்கு வலுச்சேர்பதே நாம்
மாவீரருக்கு செலுத்தக்கூடிய அஞ்சலியாகும். புது யுகம் எமக்காகக்
காத்திருக்கின்றது. எமது மொழியும் பண்பாடும் வாழ்வியலும் மேன்மை
பெறும் காலம் எம் கண்முன்னே விரிகின்றது. அந்த ஒளிமயமான காட்சியில்
எமது மாவீரர்கள் விழி துயிலும் போது
தொழுதுமை வாழ்த்தி வணங்கிட
உம் உறவுகள் பல்லாயிரம் சூழ்ந்து நிற்கின்றோம்
...தூயவரே பள்ளி எழுந்தருள்வீரே
எனப்
பாடுவோம்.ஆடுவோம்."
" வாழ்ந்தவர்
கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார் மாபெரும் வீரர் மானம்
காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார் "
தமிழ் இனத்தின்
வரலாற்றில், வாழும் தமிழர்களின் நெஞ்சங்களில், இனி வரப்போகும்
தலைமுறைகளின் நினைவுகளில் ,
தேசியத்தலைவர் கூறியது போல்
தமிழ் அன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு பெற்றுவிட்ட மாவீரர்களை
வாழ்த்தி வணங்க
வந்திருக்கும்
உறவுகளே உங்களுக்கு என் வணக்கங்கள்.
மானிட விடுதலை என்ற உன்னதமான இலட்சியம்
மாவீரர்களை உருவாக்குகின்றது. ஆரம்பத்தில் ஒரு சில உள்ளங்களில்
சுடர்விட்ட இந்த இலட்சிய நெருப்பு இவர்களது வீரத்தாலும், தோல்வியிலும்
சளைக்காத உறுதியாலும் பல அற்புதங்களை நிகழ்த்துகின்றது. மாவீரரின்
இரத்தத்தை குடித்த மண் ஒரு வகையான தெய்வ வெறிகொண்டு நிற்கின்றது. அந்த
மண்ணின் மடியில் பல மாவீரர்கள் உருவாகின்றார்கள். தம்மால்
வரித்துக்கொண்ட உன்னத விழுமியத்தை அடையும்வரை இவர்கள் உறங்குவது இல்லை.
இந்த இலட்சியத்திற்கு தடையாக இருப்போருக்கோ , அவர்தம் தேசத்திற்கோ
அமைதியோ ஓய்வோ கிட்டப்போவதில்லை. அவலத்தை தந்தவனுக்கு அதை அவனுக்கே
திருப்பி விடுகிறார்கள்.
"
No nation
which oppress another can itself be free "
பதினெட்டாயிரத்திற்கும் மேற்பட்ட இலட்சிய வீரர்கள் களமாடி விதையாகிய
மண்ணில் , அவர்கள் ஈட்டிய வெற்றிகள், புரிந்த சாகசங்கள், வீரங்கள்,
தியாகங்கள் என்பவற்றில் கால் பதித்தே சமாதான முன்னெடுப்புக்களுக்கான
கதவு திறக்கப்பட்டது என்பதை நாம் அறிவோம்.
இந்த மாவீரர்களை வழிநடத்தும்
தலைமையோ "
ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணி ". இவன்
பிறப்பு தமிழர் வரலாற்றில் ஒரு மாபெரும் நிகழ்வு. மலைத்தொடரில்
ஆங்காங்கே சில கொடு முடிகள் எழுந்து நின்று கோலம் காட்டுவதுபோல் எமது
வரலாற்றில் கோலம் காட்டும் அழகான மானிடப்பிறவி.
இன்று சர்வதேசமே எம்மை நின்று ஒருமுறை திரும்பி பார்க்கின்றது என்றால்
அது எம்மேல் கொண்டுள்ள இரக்கத்தால் அல்ல. மாறாக மாவீரரின் இலட்சியம்
முழு இனத்தையும் ஆகர்சித்து விடுமோ என்ற அச்சத்தால். இதனை தடுக்கவே
சமாதான நாடகம் அவர்களால் அரங்கேற்றப்பட்டது என்பதில் நாம்
எல்லோரும் தெளிவாக உள்ளோம்.
இலங்கைத் தீவு விடுதலை பெற்ற காலத்தில் இருந்து தமிழ் இனத்தின்
அடையாளத்தை அழித்து ஒழிப்பதற்காக சிங்கள ஆட்சியாளர் செய்த கொடுமைகளை
கண்டும் சர்வதேசம் வாளாவிருந்த சோக வரலாறு எம் கண்முன்னே விரிகின்றது.
48 ஆண்டுகளுக்கு முன்னர், எமது தலைவருக்கு நான்கு வயதாக இருந்தபோது
1958 இல் நிகழ்ந்த தமிழ் இன அழிப்பை உலகின் முன் வைத்த சிங்கள
மனிதாபியான
Tarzie Vittachi, Emergency '58 �The story of the Ceylon Race Riots
என்னும் நூலில் குளித்த தண்ணீருடன் பிள்ளையையும் வீசி விட்டோம்
என்கிறார்.
"The Government made the
mistake of throwing the baby away with the bath water. The
terror and the hate that the people of Ceylon experienced in May
and June 1958 were the outcome of that fundamental error. What
are we left with ? A nation in ruins, some grim lessons, which
we cannot afford to forget and a momentous question � Have
the Sinhalese and the Tamils reached the parting of the ways?"
பெரும் விளைவுகளை உண்டாக்கவல்ல கேள்வி. சிங்களவரும் தமிழரும்
பிரிந்து தனிவழி செல்லும் நிலைக்கு வந்து விட்டனரா?
கேள்வியை எழுப்பியவர்
ஒரு சிங்களவர். எழுப்பப்பட்டது 48 ஆண்டுகளுக்கு முன்னர்.
1958 இன்
பின்னர் இடம்பெற்ற தமிழர்களின் அகிம்சைவழிப் போராட்டங்களை நான்
கூறத்தேவையில்லை. அவற்றின் விளைவுகள் படு தோல்வியல் முடியவே, 30
ஆண்டுகளுக்கு முன்னர், ஆயதம் போராட்டம் கருக்கட்ட முன்னர் டிசம்பர்
1976 இல் சிங்கள பாராளுமன்றத்தில்
தந்தை
செல்வா
"We have completely
abandoned the Federal concept, we have decided to separate. If
we don't separate we can never win back our lost rights. We will
try in every way to set up a Separate State. This is certain. As
the voice of my people I tell this to Srilanka and the world
from this house. We know this is not an easy task. We know it is
a difficult path. But either we must get out of the rule of the
Sinhalese or perish. This is our ideal ."
எனக் கூறியுள்ளார். கிழவனாரின் தீர்க்கதரிசன வாக்குகள் எம்
காதில் ஒலித்தபோதும் ,அந்த கரடு முரடான பாதையில் பயணித்தவர்கள் எம்
மாவீரர்களே.
In the long history of
the world only a few generations have been granted the role of
defending freedom in its hour of maximum danger � JFK
ஆபத்தான சூழலில் எம்
இனத்தை அழிவில் இருந்து காப்பாற்றி, எம் மண்ணின் பெரும் பகுதியை
விடுவித்து அதில்
ஒரு
அரச கட்டுமானத்தை உருவாக்கி " புல்லை நகையுறுத்தி, பூவை
வியப்பாக்கி இகல்லை வயிர மணியாக்கி வெறும் செம்பை கட்டித்தங்கமாக்கிய "
வித்தைகளை செய்தவர்களே எம் மாவீரர்.
இன்று ஆண்களுக்கு சமனாக
பெண்களும்
போர் தொழில் செய்வதையும், அவர்கள் பின்னால் மக்கள் படை அணிவகுத்து
நிற்பதையும் அவர்களுக்கு அரணாக பொங்கு தமிழர் அணிதிரள்வதையும் அவர்
பின்னே புலம் பெயர்ந்த உறவுகள் திரள்வதையும் கண்ட உலக வல்லரசு எம்மை
மிரட்டுகின்றது.
ருசிய அறிஞன் றொட்ஸ்கி
கூறினான்
"
you may not be interested in war but the war is
interested in you " என்று. எம்மீது யுத்தத்தை திணிப்பது சிங்கள
தேசம் மட்டுமல்ல
அமரிக்க
வல்லருசும்தான். போரை நிறுத்தும் சகல வல்லமையும் கொண்டவர்கள் தமது
நலன்களைப் பேண தமிழ் மக்களின் தலைகளில் குண்டுகளை வீசும் போரை தூண்டி
விடுகிறார்கள்.
சதந்திரத்தையும்,
சமாதானத்தையும அவற்றால் வரும் இயல்பான வாழ்க்கையையும் சர்வசாதாரணமாக
சுகித்துக்கொண்டிருப்போர் எமக்கு கூறும் புத்திமதிகளையும் விடுக்கும்
மிரட்டல்களையும் அதன் பின்னால் உள்ள அரசியல் சதிகளையம்
அறியாத
முட்டாள்களல்ல நாம். பரம சிவன் கழுத்தில் இருந்து கருடனின் சுகம்
விசாரித்த பாம்பு போல் இவர்கள்.
" Nothing in history worth the winning came
without a struggle "
என்பது நாம் பட்ககடறிந்த பாடம். இதில் வேதனை என்னவென்றால்
முரண்பாடுகளை தீர்ப்போர் தமது நலன்களை பேணும் அதே சமயத்தில்
சிங்களவரும் தமிழரும் தம்மை தாமே ஆளும் கட்டமைப்புக்களையும்
ஏற்படுத்தும் அணுகு முறையை கையாள மறுப்பதாகும்.
இன்றைய உலக
ஒழுங்கு தர்மச் சக்கரத்தில் சுழலவில்லை என்பதை நாம் அறிவோம்.
இருந்தபோதும் குண்டுகளுக்கும் பீரங்கிகளுக்கும் இல்லாத உள்ளார்ந்த
ஆத்மபலம் எமது போராட்டத்திற்கு உண்டு. ஏனெனில் இது ஒரு தர்ம யுத்தம்.
சிட்னியில் கீதா உபதேசம் செய்யும் சுவாமி யோகேஸ்வரானந்தா
(Swami Yogeswarananda ) Wisdom in Action
என்னும் தமது நூலில்
We see this phenomenon
of ' ethnic cleansing ' of the minority race by the majority
race in State �sponsored terrorism and brute armed force
occuring even today in certain nations. In such a situation ,
the victim race has no other recource left except to either
perish or fight back the State and obtain its right to live with
honour and dignity. Then it becomes a righteous war for the
victim race to fight back the evil of the State .
எனக் கூறுகின்றார். அடிபணிய மறுத்த ஓர்மத்தால்
கிழவனார் செல்வநாயகம் தனிநாடு அமைப்போம் என்றார். அது அற வழி எனவே
போராடு என்கிறார் சுவாமி.
எமது மாவீரர்
அருச்சுனனைப் போல் மயக்கம் கொள்ளவில்லை. அவர்கள் ஏந்திய
காண்டீபத்தையும் கை நழுவ விடவில்லை. அவர்கள் ரோமமும் சிலிர்க்கவில்லை.
"மானுடனை கட்டிய தளையெல்லாம் சிதறுக " என்ற பிரமதேவனின் கட்டளைக்கும்
அவர்கள் காத்திருக்கவில்லை. தெளிந்த சிந்தனையும் தூய உள்ளமும் கொண்ட
ஒரு தலைமையின் வழி நடத்தலே இதற்கு காரணம். தமது இலட்சியம், செல்லும்
வழி, சென்றடையவேண்டிய இடம் யாவும் இவர்களுக்கு துலாம்பரம்.
தந்தை செல்வா தனிநாடு அமைக்க கோரி
31 ஆண்டுகளின் பின்னர் முப்படைகளும் பின்னே நிற்க தனி அரசு அமைப்போம்
என
தலைவர்
விட்ட அறை கூவலுக்கு
வலுச்சேர்பதே நாம் மாவீரருக்கு செலுத்தக்கூடிய அஞ்சலியாகும். புது
யுகம் எமக்காகக் காத்திருக்கின்றது. எமது
மொழியும்,
பண்பாடும்
வாழ்வியலும் மேன்மை பெறும் காலம் எம் கண்முன்னே விரிகின்றது. அந்த
ஒளிமயமான காட்சியில் எமது
மாவீரர்கள் விழி துயிலும் போது
தொழுதுமை வாழ்த்தி
வணங்கிட
உம் உறவுகள் பல்லாயிரம் சூழ்ந்து நிற்கின்றோம் ...தூயவரே
பள்ளி எழுந்தருள்வீரே
எனப்
பாடுவோம். ஆடுவோம். |