Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamils - a Nation without a State> பொங்கு தமிழ் - Pongu Thamil > 2008  > 2006 > 2005 > 2004 > 2003 > 2002 > 2001 Struggle for Tamil Eelam
 

Tamils - a Trans State Nation
தமிழன் இல்லாத நாடில்லை -
தமிழனுக் கென்று ஓர் நாடில்லை

Tamils in Many Lands & Across Distant Seas
Rally in Support of Tamil Eelam Struggle for Freedom
பொங்கு தமிழ் - Pongu Thamil: June/July 2008

Belgium
23 June 2008

பெல்ஜியத்தில் பொங்குதமிழ்



பெல்ஜியத்தில் நேற்று திங்கள் (23.06.2008) அன்று புறூசலில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்பாக பெல்ஜியத்தமிழர்களால் பொங்குதமிழ் எழுச்சிநிகழ்வு நடாத்தப்பட்டது.. மதியம் 2மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழின உணர்வாளர் புலவர் புலமைப்பித்தன் அவர்கள் ஏற்றிவைக்க தொடர்ந்து அகவணக்கம் அனைவராலும் செலுத்தப்பட்டது. இவ்சிறப்பு நிகழ்வில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கஜேந்திரன் அவர்களும் புலவர் புலமைப்பித்தன் அவர்களும் சிறப்புரைகளை ஆற்றியிருந்தனர். தொடர்ந்து ஒலிப்பதிவு செய்யப்பட்ட தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர் திரு. நடேசன் அண்ணா அவர்களின் பொங்குதமிழ்உரையும் அங்கு ஒலிக்கவிடப்பட்டது. பொங்குதமிழ்ப்பாடல்களுடன் தொடாந்து நடைபெற்ற இந்நிகழ்வில் அங்குவந்திருந்த மக்களால் பொங்குதமிழ்ப்பிரகடனம் இறுதியாகச் செய்யப்பட்டு மாலை 4மணிக்கு நிறைவுசெய்யபட்டது

 

Denmark
14 June 2008

டென்மார்க் தமிழீழ கலைஞர்களின் இசையமைப்பில் வெளிவந்த 'பொங்கு தமிழ்" பாடல்

டென்மார்க் ஒகுஸ் நகரில் நேற்று சனிக்கிழமை (14.06.08) பிற்பகல் 3:00 மணியளவில் 'பொங்கு தமிழ் - 2008" நிகழ்வு மிகவும் எழுச்சிபூர்வமாக நடைபெற்றது.


டென்மார்க் முழுவதும் இருந்து எண்ணற்ற தமிழர்கள் பெரும் திரளாக பேருந்துகள் மற்றும் சிற்றூர்திகள் மூலம் தமிழீழத் தேசியக் கொடியை தமது வாகனங்களில் பறக்க விட்டபடி உணர்ச்சி பொங்க வருகை தந்திருந்தனர்.

மிகவும் எழுச்சிபூர்வமான முறையில் அமைக்கப்பட்ட மேடை அருகில் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் உருவப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன.

'பொங்கு தமிழ்" எனப் பெரிய எழுத்தில் எழுதப்பட்ட பெயர்ப்பலகையும் பொங்கல் பானையும் இவற்றை அடையாளப்படுத்தும் சிவப்பு, மஞ்சள் வர்ணங்களால்; தொங்கவிடப்பட்ட கொடிகளும் இதில் பங்கெடுத்துக்கொண்ட மக்களின் தேசிய உணர்ச்சியை பொங்க வைத்திருந்தன.

இதன் நடுவே தமிழ் அரசியல்வாதிகளைப் படுகொலை செய்வதனை நிறுத்து, சிறுவர்களை வதைக்குள்ளாக்காதே, பொதுமக்கள் மீதான வான்குண்டுத் தாக்குதல்களை நிறுத்தும்படியும் வலியுறுத்திய பதாதைகளை தாங்கிய வண்ணம் மக்கள் நின்றிருந்தனர்.

மழையுடனான குளிர் காலநிலையும் எமது மக்களின் தேசிய உணர்வை குழப்ப நினைத்தாலும் இவற்றை எல்லாம் பொருட்படுத்தாது, எமது மக்கள் உலகத்தின் மனச்சாட்சிகளை தட்டி எழுப்ப, எமது தாயகத்தின் உறவுகளின் வாழ்விற்காகவும், எமது போராட்டத்தினை அங்கீகரிக்கும்;படியும் தேசியம், சுயநிர்ணயம், தன்னாட்சி போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தும் தேசியத் தலைவரின் கொள்கைகளை வலியுறுத்துவதற்காக அணிதிரண்டனர்.

எழுச்சிப் பேச்சுக்களை நிகழ்த்த இந்தியாவில் இருந்து வந்த ஓவியர் புகழேந்தி, மட்டக்கள்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி, பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன், மதகுருமார்களும் மற்றும் இவர்களுடன் தமிழீழத்தில் இருந்து விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் தளபதிகளினதும் பேச்சுக்களும் இடம்பெற்றிருந்தன.

வழக்கமான சம்பிரதாய நிகழ்வுகளுடன் பொங்கு தமிழ் ஆரம்பிக்கப்பட்டது.

எழுச்சிப் பாடல்களுக்கான நடனங்களும், சிறப்புப் பேச்சும் இடம்பெற்றிருந்தன.

கழ்வில் மனு ஒன்றும் வாசிக்கப்பட்டது.

மனுவில் தமிழீழம், சிறிலங்கா என இரு தேசம் உண்டு என்றும், தமிழீழத்தை எமது தேசமாக அங்கீகரிக்கும்படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தன.

மனு டென்மார்க் பிரதம மந்திரி அனேஸ் போக் றாஸ் முஸ்சனிடம் கையளிக்கப்படவிருக்கின்றது.

நிறைவாக அங்கு கூடியிருந்த மக்கள் எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் என்றும், எமது நாடு தமிழீழம் என்றும், அனைத்துலக சமூகம் விடுதலைப் புலிகள் மீதான தடைகளை நீக்கி எமது தழிழீழம் தேசத்தை அங்கீகரிக்கும்படியும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

Finland
 

Italy
Milan
15 June 2008
 


Palermo 29 June 2008

இத்தாலி பலெர்மோ மாநகரில் ஞாயிற்றுக்கிழமை (29.06.08) மாலை 5:00 மணியளவில் PIAZZA MONDELLO வில் பொங்கு தமிழ் நிகழ்வு நடைபெற்றது.


உல்லாசப்பயணிகள், இத்தாலிய மக்கள் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த மக்களும் கலந்து கொள்கின்ற பிரசித்தி பெற்ற இடத்தில் எழுச்சிகரமாகவும் உணர்வுபூர்வமாகவும் பொங்கு தமிழ் நிகழ்வு இடம்பெற்றது.

பொதுச்சுடரேற்றலுடனும், அகவணக்கத்துடனும் தொடங்கிய நிகழ்வில் கலை கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் நிகழ்வுடன் நடனம், இத்தாலி மொழியிலான நாடகம், காவடி என சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.

தாயகத்தில் இருந்து வருகை தந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

தமிழீழ தேசியத் தலைவரின் உருவப்படத்தையும், தமிழீழத் தேசியக் கொடியையும் தங்களின் கரங்களில் ஏந்தி உணர்வுபூர்வமாக 1,000-க்கும் அதிகமான தமிழீழ மக்களுடன், இத்தாலிய மக்களும் கலந்துகொண்டு பொங்கு தமிழ் நிகழ்வைச் சிறப்பித்தனர்.

நிகழ்வில் இறுதியாக தமிழீழ மக்களின் அவலநிலையையும், அகதி நிலையையும் இத்தாலிய மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் தமிழ், இத்தாலி மொழியிலான நாடகம் நடைபெற்றது.

தொடர்ந்து தமிழீழ மக்களின் குரலாக ஒலித்த கோரிக்கையாக சர்வதேச சமூகத்திடம் கேட்கும் பொங்கு தமிழ் பிரகடனமும் வாசிக்கப்பட்டது.

 

   
Netherlands
22 June 2008

Netherlands பேரெழுச்சியுடன் நெதர்லாந்தில் பொங்குதமிழ்

New Zealand
14 June 2008 Pongku Thamizh in Auckland, New Zealand


More than 350 Tamils of the 400 Tamil families in Auckland, wearing T-shirts marking the traditional Tamil homeland and carrying the portrait of Velupillai Pirapaharan, the leader of the Liberation Tigers of Tamileelam, called for the recognition of Eezham Tamils Right to Self-determination and marked the upsurge event with cultural programmes and speeches. Tamils gathered at Potters Park in Auckland for two hours on 14 June Saturday between 1:30 and 3:30 p.m. A dance programme in Auckland Pongku Thamizh event.


Maire Leadbeater of Indonesia Human Rights Committee, a former East Timor solidarity activist and author of "Negligent Neighbour: New Zealand's complicity in the invasion and occupation of Timor Leste," addressed the audience.  Mrs. Narmatha, a former lecturer at the University of Jaffna, who witnessed the emergence of the Pongku Thamizh movement under the SLA occupation in Jaffna in 2001, and a representative of Pax Christi International also spoke at the event.

Norway
14 June 2008

நோர்வே தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தின் வெளியீட்டில், பாவலர் அறிவுமதியின் வரிகளில், மருதனின் இசையமைப்பில், கார்த்திக் பாடிய உறுதி சூட்டில் பொங்கு தமிழ்...


Pulamaipittthan Speech in Norway


Arivumathi Speech in Norway

Pongku Thamil in Oslo, Norway

Around 3,000 Tamils attended the Pongku Thamizh event that lasted for more than 4 hours. The special guests on the occasion were Pulamaippiththan and Arivumathy, well known poets and cine lyrists from Tamil Nadu, India. Poet Arivumathy, while speaking said that he was clearly aware of what the Eezham Tamils want. But, he wanted the audience to demonstrate it to the media and to the world. When he asked who among the audience wanted to resolve the Sri Lankan crisis under a unitary state, no one stood up. But, when he called for the response for a separate Thamizh Eezham, all the audience stood up.


"The International Community, stamped out all important Tamil organisations by branding them as terrorists, while remaining passive to the misdeeds of the Sinhala government. By doing so, the IC has acted irrationally", said Trond Jensrud, a ruling Labour Party (AP) politician of the Oslo Municipal Council while addressing the Pongku Thamizh rally held at Valle Hovin stadium in Oslo, the capital of Norway, on Saturday. The Norwegian government should seriously consider the Tamil stance stated clearly in this rally and take it up with the International forum, he further said.

Trond Jensrud, Labour Party (AP), Oslo "The Norwegian government representatives made an attempt to visit the Tamil areas for a dialogue, which I am glad about. But, the Sri Lankan government has turned down their request. The IC was too mild in its responses to such rebukes from the Sri Lankan government," Mr. Jensrud said.

"Your declaration is crystal clear that the Tamil struggle is not against the Sinhala people, but against an oppressive government that has killed and displaced Tamil people. The whole world should get this message."

"Even though you are happy hear in Oslo, you dream about getting back to your home. What is happening there to your kith and kin pre-occupy your minds. Very few in Norway understand this."

"Only a few Norwegian politicians come forward to say what they mean on the situation in Sri Lanka. I have no hesitation in categorically stating that the Tamil people deserve a free and independent country, a free Thamizh Eezham," he concluded with a thundering applause of the audience.

Mr. Sam Jared, representing an Eritrean organisation in Oslo, in his speech compared the similarities between the cause of the Eritreans and Tamils, and stated that the victory of Tamils is a logical conclusion as their struggle is based on the principle of the right of self-determination.

South Africa
21 June 2006

Pongu Thamil - South Africa

தென்னாபிரிக்காவில் சனிக்கிழமை (21.06.08) பேரெழுச்சியுடன் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் அனைத்துலக சமூகத்தின் பாரபட்சமான அணுகுமுறைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு டேர்பன் நகரின் சர்ஸ்வேர்த் பிராந்தியத்தில் உள்ள அரீணா பார்க் மண்டபத்தில் இடம்பெற்றது.

தென்னாபிரிக்க தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் நூற்றுக்கணக்கான இந்திய வம்சாவழித் தமிழர்கள் பங்கேற்று தமது உணர்வலைகளை வெளிப்படுத்தினர்.

டேர்பன் நகர பிரதி மேயர் லோகி நாயுடு மற்றும் நட்டால் மாகாணத்துக்குரிய விளையாட்டுத்துறை அமைச்சர் அ.ராஜ்பன்சி ஆகியோர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

நிகழ்வில் உரையாற்றிய இருவரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீது அனைத்துலக சமூகம் காண்பிக்கும் பாரபட்சமான அணுகுமுறையைக் கண்டித்துப் பேசினர்.

அவுஸ்திரேலியாவில் இருந்து சென்றிருந்த வரும், தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு தனது ஆதரவுக்குரலை தெரிவித்து வரும் சிங்களவரான மருத்துவர் பிறையன் செனிவிரட்ன முக்கிய பேச்சாளராக பங்கேற்றார்.

ஈழத்தில் தமிழர்கள் அடக்கப்படுவதனையும், தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை ஒளிப்படங்கள் மூலம் அகலத்திரையில் காண்பித்து உரையாற்றிய இவரின் உரையானது ஈழத் தமிழர்களின் பிரச்சினையை மிகவும் தெளிவாக எடுத்துக்கூறியது.

பிறையன் செனிவிரட்ன தனதுரையில், 'துரதிர்ஸ்டவசமாக பண்டாரநாயக்க குடும்பத்தில் தான் பிறந்து விட்டதாகவும், பண்டாரநாயக்க குடும்பமே இந்து சமுத்திரத்தின் முத்தாக விளங்கிய இலங்கைத் தீவை கொலைக்களமாக மாற்றியது" என்றார்.

உரையினைத் தொடர்ந்து மண்டபத்தில் கூடியிருந்த மக்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

அங்கு கூடியிருந்த ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது, 'தமிழ் மக்களுக்கு ஆதரவான பிரச்சாரத்தில் அனைத்துலக சமூகத்தால் தனக்கு சிறிதளவு ஆதரவே வழக்கப்பட்டதாக" மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தார்.

நிகழ்வில் அமைச்சர் மற்றும் மேயர் உட்பட கூடியிருந்த மக்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்தனர்.

உறுதிமொழியின் போது, தமிழர் தாயகம், தேசியம் தன்னாட்சி உரிமை ஆகியவற்றினை ஆதரித்தும், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் எனவும் வலியுறுத்தினர்.

Sweden
28 June 2008 சுவீடனின் தலைநகரான ஸ்டொக்ககோம் நகரில் சனிக்கிழமை (28.06.08) பொங்கு தமிழ் நிகழ்வு எழுச்சிபூர்வமாக நடைபெற்றது 


இந்நிகழ்வில் தமிழகத்திலிருந்து வருகை தந்த தமிழின உணர்வாளர் புலமைப்பித்தன், ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு தனது தீவிர ஆதரவினை வழங்கி வரும் சுவீடன் நாட்டில் உள்ள உப்சாலா பல்லைக்கழகத்தின் பேராசிரியர் பீற்றர் சால்க் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  நிகழ்வில் நடனங்கள், கவிதைகள், பாடல்கள் போன்ற எழுச்சி நிகழ்வுகளும் இடம்பெற்றன

Tamil Eelam
 

எமக்காக பொங்கு தமிழ் நிகழ்வில் ஓங்கிக் குரல் கொடுங்கள்: தாயகக் கவிஞன் புதுவை இரத்தினதுரை

புலம்பெயர் தமிழர்களே பொங்கி எழுங்கள்: உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்

தாயகத்திலிருந்து வெளியிடப்பட்ட 'பொங்கு தமிழ்" பாடல் -  எங்கள் நிலம் நாங்கள் ஆழ... பொங்கு தமிழ்...


Thenisai Chellappa -
கொட்டு முரசே...உரிமை கொட்டு முரசே
எட்டுத் திசையும் உலகை எட்டு முரசே...
சொல்லுக்கு செயல் வேண்டும் பொங்கு தமிழே...

Tamil Nadu
 

பொங்கு தமிழில் பொங்கி எழுங்கள்: தமிழீழ ஆதரவாளரும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ

விடுதலையை விரைவுபடுத்த புலம்பெயர் தமிழர்களே பொங்கி எழுங்கள்: தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பழ.நெடுமாறன்

வெற்றிகள் சேர்க்கும் பொங்கு தமிழ்: தமிழகத்தில் இருந்து பாவலர் அறிவுமதி

 

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home