Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Nation without a State> Pongu Thamil  > Pongu Thamil 2008 > Pongu Thamil  Rally in Sydney draws more than 2500

பொங்கு தமிழ் - PONGU THAMIL: 2008

Pongu Tamil  Rally in Sydney draws more than 2500

6 July 2008

"... ஈழத்தில் எம் உறவுகள் மீது இலங்கை அரசாங்கம் நடத்திவரும் இன்னல்களை உலகிற்கு தெரிவிக்கும் விதமாகவும், கண்டிக்கும் விதமாகவும் உலகெங்கும் நடந்து கொண்டிருக்கும் "பொங்கு தமிழ்" சிட்னியிலும் உணர்ச்சிபூர்வமாக நடைபெற்றது... புகழ் பெற்ற சிட்னி ஒலிம்பிக விளையாட்டு கூடல் அருகே இருக்கும் பச்சை பசேலென்ற மேசன் மைதானத்தில் அனைவரும் காலை 11 மணிக்கு கூடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கனடாவில் நடந்தது போலவே, சிட்னியிலும் முன்னர் அறிவிக்கப்பட்ட இடம் மாற்றப்பட்டு, பின்னர் அவசரமவசரமாக இந்த இடம் அறிவிக்கப்பட்டது. சுதந்திர ஒஸ்திரேலியாவிலேயே எமக்கு இந்த நிலை என்பது வருத்தப்பட வேண்டிய விடயம். எம்மில் ஒருவர் போராட எழுந்தால், இலங்கை அரசு தரப்பிலிருந்து இருவர் தடுக்க எழுகின்றனரே!.."  இளைமையான சிட்னி பொங்கு தமிழ் நிகழ்வில் என் அனுபவம்: தூயா, 7 July 2008





 

 

More than 2500 Tamils  gathered at Manson Park  in Homebush, Sydney Australia at Pongu Tamil 2008 

[see also இளைமையான சிட்னி பொங்கு தமிழ் நிகழ்வில் என் அனுபவம்: தூயா, 7 July 2008 and  TamilNet Report]

அவுஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னியில் இன்று (6 - 7 - 08)  நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் 2,000-க்கும் அதிகமானோர் பேரெழுச்சியுடன் பங்கேற்றனர்.
சிட்னி ஹோம்புஸ் பகுதியில் உள்ள அண்டவூட் வீதியில் அமைந்திருக்கும் மேசன் பார்க்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:15 மணிக்கு பொங்கு தமிழ் நிகழ்வு தொடங்கியது.

அவுஸ்திரேலிய தேசியக் கொடியினை சிட்னி தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த ஜனகன் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக் கொடியினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஏற்றி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் தொடங்கின. சிட்னி வாழ் தமிழ் இளையோர்கள் சிவப்பு, மஞ்சள் நிற உடையணிந்து மேடையில் பொங்கு தமிழ் எழுச்சிப் பாடல்களைப் பாடினர். பாடல்களுக்கு இடையில்

"எங்கள் தலைவர் பிரபாகரன்"
"சூரியத் தலைவர் பிரபாகரன்"

"கொல்லாதே கொல்லாதே சிறுவர்களைக் கொல்லாதே"
"கொல்லாதே கொல்லாதே தமிழர்களைக் கொல்லாதே"

"எங்கள் நிலம் எமக்கு வேண்டும்"
"அனைத்துலக சமூகமே சிறுவர்களைக் கொல்வதனை அனுமதிக்காதே"

"பொங்குவோம் தமிழர் எல்லாம் பொங்குவோம்"

"பொங்கு தமிழ் பொங்கு தமிழ்"

ஆகிய முழக்கங்களை மேடையில் இளையோர் முழங்க, கூடியிருந்த அனைத்து மக்களும் சேர்ந்து முழங்கினர்.

நிகழ்வில் பங்கேற்ற அனைத்து மக்களும் தமது கைகளில் தமிழீழ தேசியத் தலைவரின் உருவப்படத்தினையும், தமிழர் தாயக வரைபடத்தினையும், தமிழீழ தேசியக் கொடியினையும் தாங்கியவாறு பொங்கு தமிழ் முழக்கங்கள் மேடையில் முழங்கும் போது எழுந்து நின்று அசைத்தமை எழுச்சிபூர்வமாக காணப்பட்டது.

தொடர்ந்து, தாயகத்திலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஆற்றிய உரை ஒலிக்க விடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை, பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை ஆற்றிய உரை ஒலிக்க விடப்பட்டது.

தொடர்ந்து, சிறுவர்களின் பொங்கு தமிழ் நடனம் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து, தாயகத்திலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோகி ஆற்றிய உரை ஒலிக்க விடப்பட்டது.

தொடர்ந்து, தாயகத்திலிருந்து வருகை தந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சிறப்புரையாற்றினார்.

நிகழ்வின் முக்கிய அம்சமாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தமிழினத் துரோகிகளுடன் வைத்திருக்கும் கூட்டணியைச் சித்தரிக்கும் நாடகம் இடம்பெற்றது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் ம.தனபாலசிங்கம் பொங்கு தமிழ் பிரகடனத்தினைப் படிக்க, அங்கு கூடியிருந்த அனைத்து மக்களும் பிரகடனத்தினை முழங்கினர்.

தொடர்ந்து பொங்கு தமிழ் பாடல்களுடன், எழுச்சி நடனமும் இடம்பெற்றது.

இந்த நடனம் அங்கு கூடியிருந்த மக்களை பெரிதும் கவர்ந்திருந்தது.

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" எனும் உறுதிமொழியுடனும் "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்" பாடலுடனும் நிகழ்வு நிறைவடைந்தது.

சிட்னி தமிழ் இளையோர் அமைப்பினர் சிறப்பாக ஒழுங்கு செய்திருந்த இந்நிகழ்வினை தாயகத்திலிருந்து ஒலிபரப்பாகும் புலிகளின் குரல் வானொலி நேரடியாக ஒலிபரப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இளைமையான சிட்னி பொங்கு தமிழ் நிகழ்வில் என் அனுபவம்: தூயா, 7 July 2008 Courtesy: http://thooya.blogspot.com/2008/07/blog-post.html

ஈழத்தில் எம் உறவுகள் மீது இலங்கை அரசாங்கம் நடத்திவரும் இன்னல்களை உலகிற்கு தெரிவிக்கும் விதமாகவும், கண்டிக்கும் விதமாகவும் உலகெங்கும் நடந்து கொண்டிருக்கும் "பொங்கு தமிழ்" சிட்னியிலும் உணர்ச்சிபூர்வமாக நடைபெற்றது. பல்வேறு ஊடகங்கள் மூலம் இந்நிகழ்வு பற்றி அறிந்திருப்பீர்கள். நிகழ்வில் பங்கெடுத்த எனது நேரடி அனுபவம் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

புகழ் பெற்ற சிட்னி ஒலிம்பிக விளையாட்டு கூடல் அருகே இருக்கும் பச்சை பசேலென்ற மேசன் மைதானத்தில் அனைவரும் காலை 11 மணிக்கு கூடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கனடாவில் நடந்தது போலவே, சிட்னியிலும் முன்னர் அறிவிக்கப்பட்ட இடம் மாற்றப்பட்டு, பின்னர் அவசரமவசரமாக இந்த இடம் அறிவிக்கப்பட்டது. சுதந்திர ஒஸ்திரேலியாவிலேயே எமக்கு இந்த நிலை என்பது வருத்தப்பட வேண்டிய விடயம். எம்மில் ஒருவர் போராட எழுந்தால், இலங்கை அரசு தரப்பிலிருந்து இருவர் தடுக்க எழுகின்றனரே!

நிகழ்ச்சி அறிவிக்கப்பட்ட நேரத்தில் சரியாக 11 மணியளவில், தமிழீழ தேசியக்கொடியை ஏற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது. தாயகக்கொடியை ஏற்றிவதற்கு ஈழத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் வருகை தந்திருந்தார்கள். தொடர்ந்து ஒஸ்திரேலியா நாட்டு கொடியும் ஏற்றப்பட்டது. நிகழ்வின் ஆரம்பத்தில் மக்கள் கூட்டம் சற்றே குறைவாக காணப்பட்டது. நேரம்தவறாமை என்பது எத்தனை முக்கியம் என்று ஒரு உரை ஆற்றினால் என்ன என எனக்கு தோன்றியது. ஆனால் 12 மணியளவில் மைதானத்தில் 2500 - 3000 வரையிலான மக்கள் உணர்ச்சியுடன் "சூரியத்தேவன் பிரபாகரன்" என கூறிக்கொண்டிருந்தனர். அதை பார்த்தவுடன் என்னுடைய "நேரம் தவறாமை உரை" வேறொரு நாளில் அரங்கேறட்டும் என விட்டுவிட்டேன்.

மைதானத்தில் ஒரு சிறிய மேடை அமைத்து, அதில் இளைஞர் படை தம் கடமையை தவறாது செய்தார்கள். உற்சாகத்துடன் தங்கள் குரல்கள் தொலையும் வரை ஈழம் வேண்டி சத்தம் போட்ட பல இளைஞர்களும், சிறுவர்களும் ஒஸ்திரேலியாவிலே பிறந்து வளர்ந்தவர்கள் / சிறுவயது முதல் ஒஸ்திரேலியாவில் இருப்பவர்கள். புலத்து இளைஞர்கள் வெறும் பொழுதுபோக்கு விடயங்களோடு வாழ்பவர்கள் அல்ல என ஆணித்தரமாக கூற கிடைத்த சந்தர்ப்பத்தை புத்திசாலித்தனமாகவே பயன்படுத்தியிருந்தார்கள் என்றே கூற வேண்டும்.

நிகழ்ச்சியில் தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன், புதுவை இரத்தினதுரை மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வுமையப் பொறுப்பாளர் யோகி ஆகியோரின் உரைகள் ஒலிபரப்பப்பட்டது. இளைஞர்களின் பொங்குதமிழ் நடனமும் மகிந்தவின் கள்ளநரித்தனத்தை எடுத்துக்காட்டும் நாடகமும் சிறப்பம்சமாக அமைந்தன.

ஆரம்பத்தில் இளைஞர்கள் குரல் மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்தது, இறுதி நேரத்தில் பெரியவர்கள் குரல்களும் சேர்ந்து கொண்டன. ஆரம்பத்திலிருந்தே குரல் கொடுத்திருக்கலாமோ என எனக்கு தோன்றியது. அனைவரும் சேர்ந்து முழங்கிய போது உடம்பில் ஒரு உணர்ச்சி எங்கும் பாய்ந்தது.

தேசியத்தலைவரின் படம், தமிழீழ வரைபடம், பாயும் புலிப்படம் பதித்த பதாகைகளை மக்கள் தாங்கியபடி "எங்கள் நிலம் எமக்கு வேண்டும்" என கேட்ட போது, அங்கிருந்த ஒவ்வொரு தமிழனும் உணர்ச்சிவசப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. மேடை அருகில் அமைக்கப்பட்டிருந்த பெரிய பானை பொங்கியது மிகவும் அழகாகவும், உணர்ச்சியை அதிகப்படுத்தும் ஒரு ஊண்டு கோலாகவும் இருந்தது.

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இப்படியான தாயக நிகழ்வுகளில் பங்கெடுத்துள்ளேன். முன்னர் வந்த மக்களை விட இப்போது அதிக மக்கள் வருகின்றார்கள். சிட்னியில் ஒரு குறிப்பிட்ட மக்கள் தான் தாயக நிகழ்வுகளில் பங்கெடுப்பார்கள். அது இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றது. எப்போதும் வராத பலர் நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.

நிகழ்வில் இறுதியில் பொங்குதமிழ் பிரகடனம் செய்த போது, மக்கள் அனைவரும் வலது கையை நெஞ்சில் வைத்து நின்ற போது, நெஞ்சில் வீரம் சற்றே அதிகமாகி தான் போனது. ஈழப்போராட்டத்தில் எம்முடைய பங்கும் உள்ளது, எம் கடமையை நாம் செய்ய வேண்டும் என்பது அங்குள்ள பலருக்கு நிச்சயம் புரிந்திருக்கும்.

காலை 11 இல் இருந்து மதியம் 2 மணிவரை ஒழுங்கமைக்கப்பட்டிருந்த நிகழ்வு 3.30 வரை சென்றது. இத்தனை நேரத்தில் நான் அவதானித்த ஒரு விடயம் "ஈழம், புலிகள், தமிழீழம், எங்கள் நாடு, தமிழர்கள்" போன்ற சொற்களுக்கு கிடைக்காத குரல்கள் "பிரபாகரன்" என்ற ஒரு பெயருக்கு கிடைத்தது தான். பொங்குதமிழ் பாடல்கள் பாடும் போது தலைவர் பெயர் வரும் போதெல்லாம் மைதானத்தில் குரல்கள் அதிகமாகவும், பலமாகவும் ஒலித்தது.

கொடியிறக்கத்துடன், "தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்" என அனைவரும் கூற நிகழ்வு நிறைவு பெற்றது. எண்ணிக்கையில் நாம் குறைந்தாலும், உணர்வில் குறைந்தவர்கள் இல்லை என சிட்னி தமிழர்கள் மீண்டும் திடமாக நிரூபித்திருந்தனர்.

அதென்ன "இளைமையான" சிட்னி பொங்குதமிழ் என கேட்பவர்களுக்கு: இளைஞர்கள் அதிகம் பங்கெடுத்தமையால் தான் இந்த தலைப்பு.
 


Tamilnet Report, 7 July 2008

Let the International Community hold a referendum to get the will of Eezham Tamils for an independent homeland if it is not convinced of their sentiments shown explicitly through the events of Pongku Thamizh all over the world. Australia supported such a referendum in East Timor, said Tamil National Alliance MP, Sivajilingkam to TamilNet, when he came to address the Pongku Thamizh event held at Sydney on Monday.

Speaking at the event, Mr. Gnanam Sivathamby, a former principal said that the International community is ignorant of the fact who are the terrorists and who are the terrorized in Sri Lanka.

"We do not want war. The Tamils are a peace-loving people. We want a peaceful solution. But, we want peace with justice and freedom", said a young member who spoke at the event.

"We have witnessed too much discrimination, too much blood shed and too little justice. It is too late and we have come too far to compromise on Thamizh Eezham" spoke another young member.

Over 3000 Tamil Australians gathered at Mason Park in Sydney Sunday afternoon for the event, which was largely organized and addressed by the Tamil youth of Australia.

Many of them attended were clad in Red and Yellow and carried pictures of the LTTE leader Pirapaharan.

Pongu Thamizh - Sydney 2008

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home