"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Tamils - a Nation without a State> Pongu Thamil > Pongu Thamil 2008 > Pongu Thamil Rally in Germany draws 8000
பொங்கு தமிழ் - PONGU THAMIL: 2008 Pongu Tamil Rally in Germany draws 8000
|
|
Courtesy: Sankathi மதியம் 2மணியளவில் பிரதான புகையிரநிலையம் முன்பான எழுச்சியுடன் ஆரம்பித்த பொங்குதமிழ் பேரணியில் பொங்குதமிழ் பானையை தாங்கி முன்செல்ல அதனை அடுத்து தமிழீழ மக்களின் தேசியத் தலைவர் எனப் பொறிக்கப்பட்ட தேசியத்தலைவரின் படங்கள் தாங்கிய பாததைகள் மற்றும், எமது நாடு தமிழீழம் எனப் பொறித்த பாததைகள் மற்றும் தமிழீழ மக்களின் ஏகப்பிரதிநிகள் விடுதலைப்புலிகள் எனப்பொறிக்கப்பட்ட பாதைகள் என்பவற்றை பல்லாயிரக்கணக்கில் தமிழீழமக்கள் தாங்கிச்செல்ல இப்பேரணிக்கு நடுவே தமிழர்களின் பாரம்பரிய கலைகளை விளக்கும் காவடியாட்டம், கரகாட்டம், புலியாட்டம், பொய்கால் குதிரையாட்டம், பொய்கால் புலியாட்டம் என்பன நடைபெற்றவாறும் எமது நாடு தமிழீழம், எமது தேசியத் தலைவர் பிரபாகரன், விடுதலைப்புலிகளே எமது ஏக பிரதிநிகள், சர்வதேசமே தமிழீழத்தை அங்கீகரி போன்ற சோசங்களை மக்கள் எழுப்பியவாறு பொங்குதமிழ் நிகழ்வு அரங்கம் நோக்கிச் பேரெழுச்சியுடன் பேரணியாகச் நகர்ந்தார்கள்.
பொங்குதமிழ் அரங்கை பேரணி சென்றடைந்ததும் பொதுச்சுடரினை தமிழீழ உணர்வாளர் கவிஞர் அறிவுமதி ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஐயானந்தமூர்த்தி ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பொங்குதமிழ் பாடல்கள் எழுச்சியுடன் இசைக்கப்பட்டது இதனைத்தொடர்ந்து பொங்குதமிழ் அரங்கம் நிறைந்திருந்த 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழீழ மக்கள் எழுச்சியுடன் ஆர்ப்பரிக்க மக்களால் எடுத்துவரப்பட்ட பொங்கு தமிழ்பானை ஏற்றிவைக்கப்பட்டது.
இதனை அடுத்து சிறப்புரைகளை தமிழ்தேசியக் கூட்டமைப்பின்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.கஜேந்திரன்,
திரு.அரியநேந்திரன், திரு.ஐயானந்தமூர்த்தி தமிழீழ
உணர்வாளர் கவிஞர்அறிவுமதி நிகழ்தினர். அத்துடன் தமிழீழ
சமராய்வுப் பொறுப்பாளர் செ.யோ.யோகி, தமிழீழ அரசியற்துறைப்
பொறுப்பாளர் பா.நடேசன் ஆகியயோரது சிறப்புரைகள் ஒலி வடிவில்
ஒலிக்கப்பட்டது. |