"..இசைப்பவன் கருத்தும் கேட்பவன் எண்ணமும் ஒன்றாய்க் கலப்பது
ஓசையால் அன்று. சொல்லே அதற்குத் துணையாய் நிற்பது. அந்தச் சொல்லும்
சொந்தச் சொல்லாம்; தாய்மொழி ஒன்றே தனிச்சுவை ஊட்டும். அவரவர்
மொழியில் அவரவர் கேட்பதே 'இசை' எனப் படுவதன் இன்பம் தருவது.
புரியாத மொழியில் இசையைப் புகட்டல் கண்ணைக் கட்டிக் காட்சி
காட்டுதல்.
தமிழன் சொந்தத் தாய்மொழிச் சொல்லில்
இசையைக் கேட்க இச்சை கொள்வதே
'தமிழிசை' என்பதன் தத்துவ மாகும்.
Nammakal
Kavijnar
18 October 2009
ஏன் என்ற கேள்வி
-இங்கு
கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம் - கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை
பகுத்தறிவு பிறந்தததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே(2)
உரிமைகளைப் பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதினாலே (2)
ஓராயிரம் ஆண்டுகளாக ஆகட்டுமே
நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே (ஓராயிரம்)
வரும் காலத்திலே நம் பரம்பரைகள்
நாம் அடிமை இல்லை என்று முழங்கட்டுமே
(ஏன் என்ற கேள்வி)
நீரோடைகள் கோடையில் காய்ந்திருக்கும்
மழைக்காலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும் (நீரோடைகள்)
நம் தோள்வலியால் அந்த நாள் வரலாம்
அன்று ஏழை எளியவர்கள் நலம் பெறலாம்
முன்னேற்றம் என்பதெல்லாம் உழைப்பவர் உழைப்பதினாலே
கடமைகளை புரிவதெல்லாம் விடுதலை வேண்டுவதாலே
(ஏன் என்ற கேள்வி )
திரைப்படம் :ஆயிரத்தில் ஒருவன்
பாடியவர் : டி. எம். எஸ்
இசை : எம். எஸ் . வி
உலகத்தாயே
பொங்கு பொங்கு தமிழ் உண்மைத்தாயே
பொங்கு பொங்கு தமிழ் தமிழர் தாகம்
பொங்கு பொங்கு தமிழ் தீர்த்து விடு...
உரிமைப்போரில்
பொங்கு பொங்கு தமிழ் தமிழர் தேசம்
பொங்கு பொங்கு தமிழ் விடியும் நேரம்
பொங்கு பொங்கு தமிழ் வாழ்த்தி விடு...
உலகத்துத்தழிழர்
ஒன்றாய் வேகம் பெற்ற
பொங்கு தமிழ் விரைவாக உந்தன் பணியை வேண்டிக்கொள்ளும் பொங்கு
தமிழ்... பொங்கு தமிழ்
எங்கும் பொங்கு தமிழ்...
எங்கள் இனம் வெல்ல
பொங்கு தமிழ் உலகத்தாயே
பொங்கு பொங்கு தமிழ் உண்மைத்தாயே
பொங்கு பொங்கு தமிழ் தமிழர் தாகம் தீர்த்து விடு பொங்கு
பொங்கு தமிழ்...
உரிமைப்போரில்
பொங்கு பொங்கு தமிழ் தமிழர் தேசம்
பொங்கு பொங்கு தமிழ் விடியும் நேரம்
பொங்கு பொங்கு தமிழ் வாழ்த்தி விடு...
எங்கள் வாழ்வு
எம்மைச்சேர
பொங்கு தமிழ் பொங்கு தமிழ் எங்கள் நிலம் நாமே ஆள
பொங்கு தமிழ் பொங்கு தமிழ் துன்பம் யாவும் தூரப் போக
பொங்கு தமிழ் பொங்கு தமிழ் துணிவு ஒன்றே துணையாய் மாற
பொங்கு தமிழ் பொங்கு தமிழ்...
வீரப்போராடும்
வேங்கைகள் மீது பொங்கு தமிழ் வெற்றிப்பூச்சுடும்
வேளையின்போது
பொங்கு தமிழ் வெல்லும் தமிழீழத் தலைவன் பேரில்
பொங்கு தமிழ் எங்கள் தாய் நிலமே தனியரசாய் ஆகிடவே
பொங்கு தமிழ்
உலகத்தாயே
பொங்கு பொங்கு தமிழ் உண்மைத்தாயே
பொங்கு பொங்கு தமிழ் தமிழர் தாகம்
பொங்கு பொங்கு தமிழ் தீர்த்து விடு...
உரிமைப்போரில்
பொங்கு பொங்கு தமிழ் தமிழர் தேசம்
பொங்கு பொங்கு தமிழ் விடியும் நேரம்
பொங்கு பொங்கு தமிழ் வாழ்த்தி விடு ���.
உரிமைக் கோசம் உலகம்
அதிர
பொங்கு தமிழ் பொங்கு தமிழ் உலக மனங்கள் எம்மை நெருங்க
பொங்கு தமிழ் பொங்கு தமிழ் வலிமை எங்கள் கையில் சேர
பொங்கு தமிழ் பொங்கு தமிழ் வாழும் நேரம் விடியல் காண
பொங்கு தமிழ் பொங்கு தமிழ்...
ஐ நா மன்றத்தின்
உச்சியின் மீது
பொங்கு தமிழ் அகில உலகெங்கும் காற்றினில் மோதும்
பொங்கு தமிழ் வெல்லும் தமிழீழத் தலைவன் பேரில்
பொங்கு தமிழ் எங்கள் தாய் நிலமே தனியரசாய் ஆகிடவே
பொங்கு தமிழ்
உலகத்தாயே
பொங்கு பொங்கு தமிழ் உண்மைத்தாயே
பொங்கு பொங்கு தமிழ் தமிழர் தாகம்
பொங்கு பொங்கு தமிழ் தீர்த்து விடு...
உரிமைப்போரில் பொங்கு
பொங்கு தமிழ் தமிழர் தேசம் பொங்கு
பொங்கு தமிழ் விடியும் நேரம் பொங்கு
பொங்கு தமிழ் வாழ்த்தி விடு...
உலகத்துத்தழிழர்
ஒன்றாய் வேகம் பெற்ற
பொங்கு தமிழ் விரைவாக உந்தன் பணியை வேண்டிக்கொள்ளும்
பொங்கு தமிழ் பொங்கு தமிழ்
எங்கும் பொங்கு தமிழ் எங்கள் இனம் வெல்ல
பொங்கு தமிழ் உலகத்தாயே
பொங்கு பொங்கு தமிழ் உண்மைத்தாயே பொங்கு பொங்கு தமிழ்
தமிழர் தாகம்
பொங்கு பொங்கு தமிழ் தீர்த்து விடு... உரிமைப்போரில்
பொங்கு பொங்கு தமிழ் தமிழர் தேசம்
பொங்கு பொங்கு தமிழ் விடியும் நேரம்
பொங்கு பொங்கு தமிழ் வாழ்த்தி விடு ���. பொங்கு தமிழ்
எங்கும் பொங்கு தமிழ் எங்கள் இனம் வெல்ல
பொங்கு தமிழ்
23 June 2008
வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர்
கிடையாது
வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது
சாதி மல்லிப்
பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே ஆசையுள்ள ஆசையடி அவ்வளவு
ஆசையடி எங்கெங்கே முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம் கன்னித் தமிழ்த்
தொண்டாற்று அதை முன்னேற்று பின்பு கட்டிலில் தாலாட்டு (சாதி
மல்லிப்)
எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா இருக்கும்
நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா தேசம் வேறல்ல தாயும்
வேறல்லா ஒன்றுதான் தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும்
ஒன்றுதான் காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம் கன்னித்
தமிழ்த் தொண்டாற்று அதை முன்னேற்று பின்பு கட்டிலில் தாலாட்டு
(சாதி மல்லிப்)
உலகமெல்லாம் உண்ணுப்போது நாமும் சாப்பிட எண்ணுவோம்
உலகமெல்லாம் சிரிக்கும்போது நாமும் புன்னகை சிந்துவோம் யாதும்
ஊரென யாரு சொன்னது சொல்லடி பாடும் நம் தமிழ்ப்பாட்டன் சொன்னது
கண்மணி படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பார்த்தோமா படிச்சத
புரிஞ்சு நாம் நடக்கத்தான் கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு
இந்த நாட்டுக்கு நாமாச்சு (சாதி மல்லிப்)
கொடுமைக்கு முடிவு கட்டி, கொடுங்கோலார் கொடி இறக்கி நாம் தமிழர், நம் நாடு நமக்கென்று ஈழம், தமிழ் ஈழம்
இனம் ஒன்று அழிவதா, இதை
நாம் பொறுப்பதா இனம் ஒன்று அழிவதா, இதை நாம் பொறுப்பதா சதை கொண்ட மனிதர் அல்ல சரித்திரம் படைத்திட வா தமிழா சதை கொண்ட மனிதர் அல்ல சரித்திரம் படைத்திட வா தமிழா இனம் ஒன்று அழிவதா, இதை நாம் பொறுப்பதா இனம் ஒன்று அழிவதா, இதை நாம் பொறுப்பதா
காட்டு விலங்கை சுட்டாலும்,
அட கரடி கழுதை சுட்டாலும் தப்பென்னு சொல்லுது சட்டம், இது உலகத்திலே பொது சட்டம் காட்டு விலங்கை சுட்டாலும், அட கரடி கழுதை சுட்டாலும் தப்பென்னு சொல்லுது சட்டம், இது உலகத்திலே பொது சட்டம் தமிழன்
உயிரை கீழே மிதித்து அழிப்பது முறையா மனித உரிமையை மீறுதல் முறையா (இனம் ஒன்று அழிவதா...)
உலகத்திலே பல நாடுகள், அவை
விடுதலை அடைந்த காட்சிகள் சின்ன தேசங்கள் கூட கொடி கட்டி பறக்கிற காலம் யாகத்தில் சிறந்த ஈழத்தமிழன் மொத்ததில் விதைப்பது சரியா மனித உரிமையை மீறுதல் முறையா (இனம் ஒன்று அழிவதா...)
தவிழ்ந்த குழந்தை கூட தலை
வெடித்து சிதறிய கோலம் பதறித் துடித்து பார்ப்போம் உதவி கூட கேட்டோம் தமிழன் உயிரை கீழே மிதித்து அழிப்பது முறையா மனித உரிமையை மீறுதல் முறையா (இனம் ஒன்று அழிவதா...)
உன்னை
அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
(உன்னை)
மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா
தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா
(உன்னை)
பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர் இல்லையா
பிறர் தேவை அறிந்து கொண்டு
வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா
(உன்னை)
மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு
மாலைகள் விழவேண்டும் - ஒரு
மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்
உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
3 September 2005
எங்கும்
எதிலும் தமிழோசை
Lyric: Kannadasan, Singer: Padmashri Isai Mani Dr. Sirkali Govindarajan in
London
எங்கும் எதிலும் தமிழோசை
லண்டன் எதிரொலிக்கும் அந்த மணியோசை
பொங்கும் தமிழ்ப்பாட்டின் இன்னோசை
மனம் பூரித்துப் பாடுதம்மா என்னாசை
சங்கம் வளர்த்த தமிழ்
உலகமெங்கும் இங்கு தனிநடை போடுதம்மா
வீறுகொண்டு சங்கக்குலவிளக்கை தமிழ்த்தாயை
இந்த தலைநகர் பாடுதம்மா ஆவல் கொண்டு
முருகன் கழுத்துக்கொரு மணியாரம்
அவன் முன்னின்று பாடுதற்கு தேவாரம்
நிறுமித்த நெஞ்சினிற்குப் புகழாரம்
இந்த நேரத்தில் நான் இசைக்கும் தமிழாரம்
ஆக்கத்திரைக் கடலும் தமிழ் ஒலிக்கும்
அதில் ஆடிடும் மீன்களெல்லாம் தமிழ்ப்படிக்கும்
தீர்த்தக்கரையில் பெண்கள் குரல் ஒலிக்கும்
அது திரும்பிய பக்கமெல்லாம் எதிரொலிக்கும்
எங்கும் எதிலும் தமிழோசை
உலகம் முழுதும் சென்றான் தொழில் நடத்த
தமிழன் உள்ளமும் சென்றதம்மா தமிழ் நடத்த
கலையில் சிறந்த இசைக்கலை நடத்த
நானும் கடலைக் கடந்து வந்தேன் தமிழ் வளர்க்க
எங்கள் குலத்துதித்த சோதரரே
தினம் இன்முகம் காட்டி வரும் அன்னையரே
உம்மை நினைத்திருக்கும் தாயகமே
இந்த உலகத்திலே சிறந்த தமிழகமே தமிழகமே
அன்றொரு நாள் நம்மை அடிமைகொண்டார்
முருகன் அவரையும் சேர்த்து இன்று அடிமை கொண்டார்
இன்பத்தமிழர் தங்கள் கடமை கண்டார்
கோவில் எழுப்பிவிட்டார் தமிழை ஏற்றிவைத்தார்
மலைக்குடி வேலன் இன்று கடல் தாண்டினான்
லண்டன் மாநகரில் வந்து குடியேரினான்
சிலைவடிவாக வந்து வரம் நல்கினான்
தமிழர் திருவருள் கொள்வதற்குத் துணையாகினான்
எங்கிருந்தும் அவனை மறப்பதில்லை
தமிழர் ஏற்றும் திருவிளக்கு அணைவதில்லை
பொங்கும் தரும வெள்ளம் குறைவதில்லை
தமிழர் புகழும் பொருளும் என்றும் அழிவதில்லை
நாகரீகம் வளர்ந்த மேற்கினிலே
குமர நாயகன் கோவில் கண்டார்
ஆசையிலே தேக உழைப்பை சிலர் உவந்தளித்தார்
சிலர் திரவியம் தந்ததுடன் தம்மை தந்தார்
அறுபடை வீடு என்று அழைத்துவந்தோம்
ஒரு அற்புத வீட்டை இங்கே படைத்துவிட்டோம்
ஏழுபடைவீடு என்று தொடர்ந்து சொல்வோம்
லண்டன் எழுப்பிய கோவிலையும் சேர்த்துக்கொள்வோம்
இலங்கை முருகனுக்கோர் கதிர்காமம்
பொருள் இலங்கும் மலேசியாவில் பலகிராமம்
துலங்கிடும் லண்டனுக்கும் தொடர்ந்துவந்தார்
எங்கள் சுவாமிநாதன் அருளை சுரக்க வந்தார்
அருணகிரி ஒரு நாள் வரைந்துவைத்தார்
அவர் அடிச்சுவட்டில் பலபேர் புகழ்ந்து வைத்தார்
கருணை முருகன் தன்னை ஏற்றிவைத்தார்
கவிஞர் கண்ணதாசன் இதனை பாட்டில் வைத்தார்
உங்கள் சிர்காழி நானும் இங்கே பாடிவைத்தேன்
தூங்காதே தம்பி
தூங்காதே - நீயும்
சோம்பேறி என்ற பெயர்
வாங்காதே!
(தூங்....) நீ - தாங்கிய உடையும்
ஆயுதமும் - பல
சரித்திரக் கதை சொல்லும்
சிறைக்கதவும்,
சக்தியிருந்தால்
உன்னைக்கண்டு சிரிக்கும்
சத்திரந்தான் உனக்கு
இடம் கொடுக்கும் (தூங்.....)
நல்ல பொழுதையெல்லாம்
தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன்
தானுங்கெட்டார், சிலர்
அல்லும் பகலும்
தெருக்கல்லா யிருந்துவிட்டு
அதிர்ஸ்டமில்லையென்று
அலட்டிக் கொண்டார்
விழித்துக் கொண்டோரெல்லாம்
பிழைத்துக் கொண்டார் - உன்போல்
குறட்டை விட்டோரெல்லாம்
கோட்டைவிட்டார்! (தூங்....)
போர்ப் படைதனில் தூங்கியவன்
வெற்றியிழந்தான் - உயர்
பள்ளியில் தூங்கியவன்
கல்வியிழந்தான்!
கடைதனில் தூங்கியவன்
முதல் இழந்தான் - கொண்ட
கடமையில் தூங்கியவன்
புகழ் இழந்தான் - இன்னும்
பொறுப்புள்ள மனிதரின்
தூக்கத்தினால் - பல
பொன்னான வேலையெல்லாம்
தூங்குதப்பா! (தூங்....)
கோடி மக்கள்
சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பான் தமிழன்னை
ஆ...ஆ...ஆ....ஆ...ஆ.....
கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை
சிலர் சிரிப்பார்
சிலர் அழுவார் - நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன் சிலர்
அழுவார் சிலர் சிரிப்பார் - நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
(சிலர் சிரிப்பார்)
பாசம் நெஞ்சில் மோதும் அந்தப்பாதையை பேதங்கள் மூடும்
உறவை எண்ணி சிரிக்கின்றேன் உரிமையில்லாமல் அழுகின்றேன் சிலர்
அழுவார் சிலர் சிரிப்பார் - நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
(சிலர் சிரிப்பார்)
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் கருணை
மறந்தே வாழ்கின்றார் கடவுளைத்தேடி அலைகின்றார் சிலர் அழுவார்
சிலர் சிரிப்பார் - நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
(சிலர் சிரிப்பார்)
காலம் ஒருனாள் மாறும் - நம் கவலைகள் யாவும் தீரும்
வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர்
அழுவார் சிலர் சிரிப்பார் - நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
செந்தமிழ் நாடெனும்
போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)
வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல் - இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)
காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி - என
மேவிய யாறு பலவோடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்)
முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று
மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம்
எத்தனையுண்டு புவிமீதே - அவை
யாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)
நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு (செந்தமிழ்)
கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
பல்விதமாயின சாத்திரத்தின் - மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்)
வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி
யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)
சிங்களம் புட்பகம் சாவக - மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்)
விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்)
சீன மிசிரம் யவனரகம் - இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை
ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்)
தமிழுக்கும்
அமுதென்று பேர்! - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு
நேர்! தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள்
சமுகத்தின் விளைவுக்கு நீர்! தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! தமிழுக்கு மதுவென்று
பேர்! - இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத் தமிழ் நல்ல
புகழ்மிக்க புலவர்க்கு வேல்! தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! -
இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்! தமிழ்
எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு
வயிரத்தின் வாள்! தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அது தாண்டா வளர்ச்சி - உன்னை
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி நாளும்
ஒவ்வொரு பாடம் கூறும் நாலும் தரும் பயிற்சி - உன் நரம்போடு
தான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சி (சின்னப் பயலே )
மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா - தம்பி மனதில்
வையடா வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா - நீ
வலது கையடா தனி உடைமை கொடுமைகள் தீர
தொண்டு செய்யடா - நீ தொண்டு செய்யடா தானாய் எல்லாம்
மாறும் என்பது பழைய பொய்யடா - எல்லாம் பழைய பொய்யடா (சின்னப்
பயலே)
வேப்ப மர உச்சியில் நின்னு பேய் ஒன்னு ஆடுதுன்னு
விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க - உந்தன் வீரத்தை
கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க - அந்த வேலையற்ற வீணர்களின்
முளையற்ற வார்த்தைகளை வேடிக்கை யாகக் கூட நம்பி விடாதே
-உந்தன் வீட்டுக் குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே - நீ
வெம்பி விடாதே (சின்னப் பயலே)