3505
|
சென்று தம் பிரானைத் தாழ்ந்து திருமுகம் முறுவல் செய்ய
ஒன்றிய விளையாட்டு ஓரார் உறுதி செய்து அணைந்தார் என்றே அன்று நீர்
ஆட்கொண்ட அதனுக்குத் தகவே செய்தீர் இன்று இவள் வெகுளி எல்லாம் தீர்த்து
எழுந்து அருளி என்றார்
|
6.2.351 |
3506
|
அம் மொழி விளம்பும் நம்பிக்கையர் தாம் அருளிச் செய்வார் நம்மை நீ
சொல்ல நாம் போய்ப் பரவை தம் இல்லம் நண்ணிக் கொம்மை வெம் முலையினாள்க்கு
உன் திறம் எலாம் கூறக் கொள்ளாள் வெம்மை தான் சொல்லி நாமே வேண்டவும்
மறுத்தாள் என்றார்
|
6.2.352 |
3507
|
அண்ணலார் அருளிச் செய்யக் கேட்ட ஆரூரர் தாமும் துண்ணென நடுக்கம்
உற்றே தொழுது நீர் அருளிச் செய்த வண்ணமும் அடியாள் ஆன பரவையோ மறுப்பாள்
நாங்கள் எண்ண ஆர் அடிமைக்கு என்பது இன்று அறிவித்தீர் என்று
|
6.2.353 |
3508
|
வானவர் உய்ய வேண்டி மறிகடல் நஞ்சை உண்டீர் தானவர் புரங்கள் வேவ
மூவரைத் தவிர்த்து ஆட்கொண்டீர் நான் மறைச் சிறுவர்க்காக காலனைக் காய்ந்து
நட்டீர் யான் மிகை உமக்கு இன்று ஆனால் என் செய்வீர் போதா என்றார்
|
6.2.354 |
3509
|
ஆவதே செய்தீர் இன்று என் அடிமை வேண்டா விட்டால் பாவியேன் தன்னை
அன்றுவலிய ஆள் கொண்டபற்று என் நேவும் என் அழிவும் கண்டீர் நுடங்கு இடை
அவள் பால் இன்று மேவுதல் செய்யீர் ஆகில் விடும் உயிர் என்று வீழ்ந்தார்
|
6.2.355 |
3510
|
தம்பிரான் அதனைக் கண்டு தரியாது தளர்ந்து வீழ்ந்த நம்பியை அருளால்
நோக்கி நாம் இன்னம் அவள் பால் போய் அக் கொம்பினை இப்பொழுதே நீ குறுகுமா
கூறுகின்றோம் வெம்புறு துயர் நீங்கு என்றார் வினை எல்லாம் விளைக்க
வல்லார்
|
6.2.356 |
3511
|
மயங்கிய நண்பர் உய்ய வாக்கு எனும் மதுர வாய்மை நயம் கிளர் அமுதம்
நல்க நாவலூர் மன்னர்தாமும் முயங்கிய கலக்கம் நீங்கி உம் அடித் தொழும்பன்
ஏனைப் பயம் கெடுத்து இவ்வாறு அன்றோ பணி கொள்வது என்று போற்ற
|
6.2.357 |
3512
|
அன்பர் மேல் கருணை கூர ஆண்டவர் மீண்டும் செல்லப் பின்பு சென்று
இறைஞ்சி நம்பி பேதுறவோடு மீண்டார் முன்பு உடன் போதா தாரும் முறைமையில்
சேவித்து ஏகப் பொன்புரி சடையார் மாதர் புனித மாளிகையில் சென்றார்
|
6.2.358 |
3513
|
மதி நுதல் பரவையார் தாம் மறையவர் போனபின்பு முதிர் மறை முனியாய்
வந்தார் அருள் உடை முதவர் ஆகும் அதிசயம் பலவும் தோன்ற அறிவுற்றே அஞ்சிக்
கெட்டேன் எதிர்மொழி எம்பிரான் முன் என் செய மறுத்தேன் என்பார்
|
6.2.359 |
3514
|
கண் துயில் எய்தார் வெய்யகை யறவு எய்தி ஈங்கு இன்று அண்டர்
தம்பிரானார் தோழர்க்கு ஆக அர்ச்சிப்பார் கோலம் கொண்டு அணைந்த வரை யான்
உட்கெண்டிலேன் பாவியேன் என்று ஒண் சுடர் வாயிலே பார்த்து உழைய ரோடு
அழியும் போதில்
|
6.2.360 |
3515
|
வெறியுறு கொன்றை வேணி விமலரும் தாமாம் தன்மை அறிவுறு கோலத் தோடும்
அளவில் பல் பூத நாதர் செறிவுறு தேவர் யோக முனிவர்கள் சூழ்ந்து செல்ல
மறுவில் சீர் பரவையார் தம் மாளிகை புகுந்தார் வந்து
|
6.2.361 |
3516
|
பாரிடத் தலைவர் முன்னம் பல் கண நாதர் தேவர் நேர்வுறு முனிவர் சித்தர்
இயக்கர்கள் நிறைதலாலே பேரருளாளர் எய்தப் பெற்ற மாளிகைதான் தென்பால்
சீர் வளர் கயிலை வெள்ளித் திருமலை போன்றது அன்றே
|
6.2.362 |
3517
|
ஐயர் அங்கு அணைந்த போதில் அகில லோகத்து உள்ளாரும் எய்தியே செறிந்து
சூழ எதிர் கொண்ட பரவையார் தாம் மெய்யுறு நடுக்கத் தோடு மிக்கு எழும்
மகிழ்ச்சி பொங்கச் செய்யதாள் இணை முன் சேர விரைவினால் சென்று வீழ்ந்தார்
|
6.2.363 |
3518
|
அரி அயற்கு அரியர் தாமுமாய் இழையாரை நோக்கி உரிமையால் ஊரன் ஏவ
மீளவும் உன் பால் வந்தோம் முருகலர் குழலாய் இன்னம் முன் போல் மாறாதே
நின்பால் பிரிவுற வருந்து கின்றான் வரப் பெற வேண்டும் என்றார்
|
6.2.364 |
3519
|
பெரும் தடம் கண்ணினாரும் பிரான் முன்பு மிகவும் அஞ்சி வருந்திய
உள்ளத்தோடு மலர்க்கரம் குழல் மேல் கொண்டே அரும் திரு மறையோர் ஆகி
அணைந்தீர் முன் அடியேன் செய்த இரும் தவப் பயனாம் என்ன எய்திய நீரோ
என்பார்
|
6.2.365 |
3520
|
துளிவளர் கண்ணீர் வாரத் தொழுது விண்ணப்பம் செய்வார் ஒளிவளர் செய்ய
பாதம் வருந்த ஓர் இரவு மாறாது அளிவரும் அன்பர்க்காக அங்கு ஒடிங்கி உழல்
வீராகி எளி வருவீரும் ஆனால் என் செய் கேன் இசையாது என்றார்
|
6.2.366 |
3521
|
நங்கை நின் தன்மைக்கு ஏற்கும் நன்மையே மொழிந்தாய் என்று மங்கையோர்
பாகம் வைத்த வள்ளலார் விரைந்து போக திங்கள் வாள் நுதலினாரும் சென்று பின்
இறைஞ்சி மீண்டார் எங்களை ஆளும் நம்பி தூதர் மீண்டு ஏகுகின்றார்
|
6.2.367 |
3522
|
ஆதியும் மேலும் மாலயன் நாடற்கு அருளாதார் தூதினில் ஏகித் தொண்டரை
ஆளும் தொழில் கண்டே வீதியில் ஆடிப் பாடி மகிழ்ந்தே மிடை கின்றார்
பூதியில் நீடும் பல் கண நாதப் புகழ் வீரர்
|
6.2.368 |
3523
|
அன்னவர் முன்னும் பின்னும் மருங்கும் அணைவு எய்த மின் இடையார் பால்
அன்பரை உய்க்கும் விரைவோடும் சென்னியில் நீடும் கங்கை ததும்ப திருவாரூர்
மன்னவனார் அம்மறையவனார் பால் வந்துற்றார்
|
6.2.369 |
3524
|
அன்பரும் என்பால் ஆவி அளிக்கும் படி போனார் என் செய்து மீள்வார்
இன்னமும் என்றே இடர் கூரப் பொன் புரி முந்நூல் மார்பினர் செல்லப்
பொலிவீதி முன்புற நேரும் கண் இணை தானும் முகிழாரால்
|
6.2.370 |
3525
|
அந் நிலைமைக் கண் மன்மதன் வாளிக்கு அழிவார் தம் மன் உயிர் நல்கும்
தம் பெருமானார் வந்து எய்த முன் எதிர் சென்றே மூவுலகும் சென்று அடையும்
தாள் சென்னியில் வைத்து என் சொல்லுவார் என்றே தெளியாதார்
|
6.2.371 |
3526
|
எம் பெருமான் நீர் என் உயிர் காவாது இடர் செய்யும் கொம்பு அனையாள்
பால் என் கொடுவந்தீர் குறை என்னத் தம் பெருமானும் தாழ் குழல் செற்றம் தணி
வித்தோம் நம்பி இனப் போய் மற்று அவள் தன்பால் நணுகு என்ன
|
6.2.372 |
3527
|
நந்தி பிரானார் வந்து அருள் செய்ய நலம் எய்தும் சிந்தையுள் ஆர்வம்
கூர் களி எய்தித் திகழ்கின்றார் பந்தமும் வீடும் நீர் அருள் செய்யும் படி
செய்தீர் எந்தை பிரானே என் இனி என் பால் இடர் என்றார்
|
6.2.373 |
3528
|
என்று அடி வீழும் நண்பர் தம் அன்புக்கு எளிவந்தார் சென்று அணை நீ அச்
சே இழை பால் என்று அருள் செய்து வென்று உயர் சே மேல் வீதி விடங்கப்
பெருமாள் தம் பொன் திகழ் வாயில் கோயில் புகுந்தார் புவி வாழ
|
6.2.374 |
3529
|
தம்பிரான் ஆனார் பின் சென்று தாழ்ந்து எழுந்து அருளால் மீள்வார்
எம்பிரான் வல்லவாறு என்று எய்திய மகிழ்ச்சி யோடும் வம்பலர் குழலார்
செம்பொன் மாளிகை வாயில் நோக்கி நம்பி ஆரூரர் காதல் நயந்து எழுந்து
அருளும் போது
|
6.2.375 |
3530
|
முன் துயில் உணர்ந்து சூழ்ந்த பரிசனம் மருங்கு மொய்ப்ப மின் திகழ்
பொலம் பூ மாரி விண்ணவர் பொழிந்து வாழ்த்த மன்றல் செய் மதுர சீதம் சிகரம்
கொண்டு மந்தத் தென்றலும் எதிர் கொண்டு எய்தும் சேவகம் முன்பு காட்ட
|
6.2.376 |
3531
|
மாலை தண் கலவைச் சேறு மான் மதச் சாந்து பொங்கும் கோல நல் பசும்
கர்ப்பூரம் குங்குமம் முதலாய் உள்ள சாலும் மெய்க் கலன்கள் கூடச் சாத்தும்
பூண் ஆடைவர்க்கம் பாலனம் பிறவும் ஏந்தும் பரிசனம் முன்பு செல்ல
|
6.2.377 |
3532
|
இவ்வகை இவர் வந்து எய்த எய்திய விருப்பினேடும் மை வளர் நெடுங்கணாரும்
மாளிகை அடைய மன்னும் செய்வினை அலங்கரத்துச் சிறப்பு அணி பலவும் செய்து
நெய்வளர் விளக்குத் தூபம் நிறை குடம் நிரைத்துப் பின்னும்
|
6.2.378 |
3533
|
பூ மலி நறும் பொன் தாமம் புனை மணிக் கோவை நாற்றிக் காமர் பொன்
சுண்ணம் வீசிக் கமழ் நறும் சாந்து நீவித் தூ மலர் வீதி சூழ்ந்த தோகையர்
வாழ்த்தத்தாமும் மா மணி வாயில் முன்பு வந்து எதிர் ஏற்று நின்றார்
|
6.2.379 |
3534
|
வண்டுலாம் குழலார் முன்பு வன்தொண்டர் வந்து கூடக் கண்ட போது உள்ளம்
காதல் வெள்ளத்தின் கரை காணாது கொண்ட நாண் அச்சம் கூர வணங்க அக்
குரிசிலாரும் தண் தளிர் செங்கை பற்றிக் கொண்டு மாளிகையுள் சாந்தார்
|
6.2.380 |
3535
|
இருவரும் தம் பிரானார் தாம் இடை ஆடிச் செய்த திரு அருள் கருணை
வெள்ளத் திறத்தினைப் போற்றி சிந்தை மருவிய இன்ப வெள்ளத்து அழுந்திய
புணர்ச்சிவாய்ப்ப ஒருவருள் ஒருவர் மேவும் நிலைமையில் உயிர் ஒன்று ஆனார்
|
6.2.381 |
3536
|
ஆரணக் கமலக் கோயில் மேவிப் புற்றிடங்கொண்டு ஆண்ட நீரணி வேணியாரை
நிரந்தரம் பணிந்து போற்றி பாரணி விளக்கும் செஞ்சொல்பதிக மாலைகளும் சாத்தி
தாரணி மணிப்பூண் மார்பர் தாம் மகிழ்ந்து இருந்த நாளில்
|
6.2.382 |
3537
|
நம்பி ஆரூரர் நெஞ்சில் நடுகம் ஒன்று இன்றி நின்று தம் பிரானாரைத்
தூது தையல் பால் விட்டார் என்னும் இம்பரின் மிக்க வார்த்தை ஏயர்
கோனார்தாம் கேட்டு வெம்பினார் அதிசயித்தார் வெருவினார் விளம்பல் உற்றார்
|
6.2.383 |
3538
|
நாயனை அடியான் ஏவும் காரியம் நன்று சால ஏயும் என்று இதனைச் செய்வான்
தொண்டனாம் என்னே பாவம் பேயனேன் பொறுக்க ஒண்ணாப் பிழையினைச் செவியால்
கேட்பது ஆயின பின்னும் மாயாது இருந்தது என் ஆவி என்பார்
|
6.2.384 |
3539
|
காரிகை தன்பால் செல்லும் காதலால் ஒருவன் ஏவப் பாரிடை நடந்து செய்ய
பாததாமரைகள் நோவத் தேரணி வீதியூடு செல்வது வருவது ஆகி ஓரிரவு எல்லாம்
தூதுக்கு உழல்வராம் ஒருவர் என்று
|
6.2.385 |
3540
|
நம்பர் தாம் அடிமை ஆற்றார் ஆகியே நண்ணினாரேல் உம்பரார் கோனும் மாலும்
அயனும் நேர் உணர ஒண்ணா எம்பிரான் இசைந்தால் ஏவப் பெறுவதே இதனுக்கு உள்ளம்
கம்பியாது அவனை யான் முன் காணும் நாள் எந் நாள் என்று
|
6.2.386 |
3541
|
அரிவை காரணத்தினாலே ஆளுடைப் பரமர் தம்மை இரவினில் தூது போக ஏவி
அங்குஇருந்தான் தன்னை வரவு எதிர் காண்பேன் ஆகில் வருவது என்னாம் கொல்
என்று விரவிய செற்றம் பற்றி விள்ளும் உள்ளத்தர் ஆகி
|
6.2.387 |
3542
|
ஈறிலாப் புகழின் ஓங்கும் ஏயர் கோன் ஆர் தாம் எண்ணிப் பேறிது பெற்றார்
கேட்டுப் பிழை உடன்படுவர் ஆகி வேறினி இதற்குத் தீர்வு வேண்டுவார்
விரிபூங்கொன்றை ஆறிடு சடையனாருக்கு அதனை விண்ணப்பம் செய்து
|
6.2.388 |
3543
|
நாள் தொறும் பணிந்து போற்ற நாதரும் அதனை நோக்கி நீடிய தொண்டர்
தம்முள் இருவரும் மேவும் நீர்மை கூடுதல் புரிவார் ஏயர் குரிசிலார்
தம்பால் மேனி வாடுறும் சூலை தன்னை அருளினார் வருந்தும் ஆற்றால்
|
6.2.389 |
3544
|
ஏதமில் பெருமைச் செய்கை ஏயர்தம் பெருமான் பக்கல் ஆதியார் ஏவும் சூலை
அனல் செய் வேல் குடைவது என்ன வேதனை மேல் மேல் செய்ய மிக அதற்கு உடைந்து
வீழ்ந்து பூத நாயகர் தம் பொன் தாள் பற்றியே போற்றுகின்றார்
|
6.2.390 |
3545
|
சிந்தையால் வாக்கால் அன்பர் திருந்து அடி பேற்றி செய்ய எந்தமையாளும்
ஏயர் காவலர் தம்பால் ஈசர் வந்துனை வருத்தும் சூலைவன் தொண்டன் தீர்கில்
அன்றி முந்துற ஒழியாது என்று மொழிந்து அருள் செய்யக் கேட்டு
|
6.2.391 |
3546
|
எம்பிரான் எந்தை தந்தை தந்தை எங்கூட்டம் எல்லாம் தம் பிரான் நீரே
என்று வழி வழி சார்ந்து வாழும் இம்பரின் மிக்க வாழ்க்கை என்னை நின்று
ஈரும் சூலை வம்பு என ஆண்டுக் கொண்டான் ஒருவனே தீர்ப்பான் வந்து
|
6.2.392 |
3547
|
மற்றவன் தீர்க்கில் தீராது ஒழிந்து எனை வருத்தல் நன்றால் பெற்றம்
மேல் உயர்த்தீர் செய்யும் பெருமையை அறிந்தார் யாரே உற்றவன் தொண்டற்கே ஆம்
உறுதியே செய்தீர் என்னக் கற்றைவார் சடையார்தாமும் அவர் முன்பு கரந்தார்
அன்றே
|
6.2.393 |
3548
|
வன் தொண்டர் தம்பால் சென்று வள்ளலார் அருளிச் செய்வார் இன்று நம்
ஏவலாலே ஏயர்கோன் உற்ற சூலை சென்று நீ தீர்ப்பாய் ஆக என்று அருள் செயச்
சிந்தையோடு நன்று மெய்ம் மகிழ்ந்து போற்றி வணங்கினார் நாவல் ஊரர்
|
6.2.394 |
3549
|
அண்ணலார் அருளிச் செய்து நீங்க ஆரூரர் தாமும் விண்ணவர் தம்பிரான் ஆர்
ஏவலால் விரைந்து செல்வார் கண்ணிய மனத்தின் மேவும் காதலால்
கலிக்காமர்க்குத் திண்ணிய சூலை தீர்க்க வரும்தி செப்பி விட்டார்
|
6.2.395 |
3550
|
நாதர் தம் அருளால் நண்ணும் சூலையும் அவர்பால் கேட்ட கேதமும் வருத்த
மீண்டும் வன்தொண்டர் வரவும் கேட்டு தூதனாய் எம்பிரானை ஏவினான் சூலை
தீர்க்கும் ஏதம் இங்கு எய்த எய்தில் யான் செய்வது என்னாம் என்பார்
|
6.2.396 |
3551
|
மற்றவன் இங்கு வந்து தீர்பதன் முன் நான் மாயப் பற்றி நின்று என்னை
நீங்காப் பாதகச் சூலை தன்னை உற்ற இவ் வயிற்றினோடும் கிழிப்பன் என்று
உடைவாள் தன்னால் செற்றிட உயிரினோடும் சூலையும் தீர்ந்தது அன்றே
|
6.2.397 |
3552
|
கருதரும் பெருமை நீர்மைக் கலிக்காமர் தேவியாரும் பொருவரும் கணவரோடு
போவது புரியும் காலை மருவி இங்கு அணைந்தார் நம்பி என்று முன்வந்தார் கூற
ஒருவரும் அழுதல் செய்யாது ஒழிக என்று உரைத்துப் பின்னும்
|
6.2.398 |
3553
|
கணவர் தம் செய்கை தன்னைக் கரந்து காவலரை நம்பி அணைவுறும் பொழுது சால
அலங்கரித்து எதிர் போம் என்னப் புணர் நிலை வாயில் தீபம் பூரண கும்பம்
வைத்துத் துணர் மலர் மாலை தூக்கித் தொழுது எதிர் கொள்ளச் சென்றார்
|
6.2.399 |
3554
|
செம்மை சேர் சிந்தை மாந்தர் சென்று எதிர் கொண்டு போற்ற நம்மை ஆளுடைய
நம்பி நகை முகம் அவர்க்கு நல்கி மெய்மையாம் விருப்பின்னோடும் மேவி உள்
புகுந்து மிக்க மொய்ம் மலர்த் தவிசின் மீது முகம் மலர்ந்து இருந்தபோது
|
6.2.400 |
3555
|
பான்மை அர்ச்சனைகள் எல்லாம் பண்பினில் வழாமை ஏய்ந்த நான் மறை
தொடர்ந்த வாய்மை நம்பி ஆரூரர் கொண்டு இங்கு யான் மிக வருந்து கின்றேன்
ஏயர் கோனார் தாம் உற்ற ஊன வெஞ்சூலை நீங்கி உடன் இருப்பதனுக்கு என்றார்
|
6.2.401 |
3556
|
மாதர் தம் ஏவலாலே மனைத் தொழில் மாக்கள் மற்று இங்கு ஏதம் ஒன்று இல்லை
உள்ளே பள்ளி கொள்கின்றார் என்னத் தீது அணை வில்லை ஏறும் என் மனம்
தெருளாது இன்னம் ஆதலால் அவரைக் காண வேண்டும் என்று அருளிச் செய்தார்
|
6.2.402 |
3557
|
வன் தொண்டர் பின்னும் கூற மற்றவர் தம்மைக் காட்டத் துன்றிய குருதி
சோரத் தொடர் குடர் சொரிந்து உள்ளாவி பொன்றியே கிடந்தார் தம்மைக் கண்டபின்
புகுந்தவாறு நன்று என மொழிந்து நானும் நண்ணுவேன் இவர் முன்பு என்பார்
|
6.2.403 |
3558
|
கோளுறு மனத்தர் ஆகிக் குற்று உடைவாளைப் பற்ற ஆளுடைத் தம்பிரானார்
அருளினால் அவரும் உய்ந்து கேளிரே ஆகிக் கெட்டேன் என விரைந்து எழுந்து
கையில் வாளினைப் பிடித்துக் கொள்ள வன் தொண்டர் வணங்கி வீழ்ந்தார்
|
6.2.404 |
3559
|
மற்றவர் வணங்கி வீழ வாளினை மாற்றி ஏயர் கொற்றவனாரும் நம்பி குரைகழல்
பணிந்து வீழ்ந்தார் அற்றை நாள் நிகழ்ந்த இந்த அதிசயம் கண்டு வானோர்
பொன் தட மலரின் மாரி பொழிந்தனர் புவனம் போற்ற
|
6.2.405 |
3560
|
இருவரும் எழுந்து புல்லி இடைவிடா நண்பினாலே பொருவரும் மகிழ்சி
பொங்கத் திருபுன் கூர் புனிதர் பாதம் மருவினர் போற்றி நின்று வன் தொண்டர்
தம்பிரானார் அருளினை நினைந்தே அந்தணாளன் என்று எடுத்து பாடி
|
6.2.406 |
3561
|
சில பகல் கழிந்த பின்பு திருமுனைப் பாடி நாடர் மலர் புகழ்த்
திருவாரூரில் மகிழ்ந்துடன் வந்த ஏயர் குல முதல் தலைவனாரும் கூடவே குளிர்
பூங்கோயில் நிலவினார் தம்மைக் கும்பிட்டு உறைந்தனர் நிறைந்த அன்பால்
|
6.2.407 |
3562
|
அங்கு இனிது அமர்ந்து நம்பி அருளினால் மீண்டும் போந்து பொங்கிய
திருவின் மிக்க தம்பதி புகுந்து பொற்பில் தங்கு நாள் ஏயர் கோனார் தமக்கு
ஏற்ற தொண்டு செய்தே செங்கண் மால் விடையார் விடையார் பாதம் சேர்ந்தனர்
சிறப்பினேடும்
|
6.2.408 |
3563
|
நள்ளிருள் நாயனாரைத் தூது விட்டு அவர்க்கே நண்பாம் வள்ளலார் ஏயர்
கோனார் மலர் அடி வணங்கிப்புக்கேன் உள்ளுணர்வான ஞானம் முதலிய ஒரு நான்கு
உண்மை தெள்ளு தீந்தமிழால் கூறும் திருமூலர் பெருமை செப்ப
|
6.2.409 |