2999
|
வில் பொலி தரளக் கோவை விளங்கிய
கழுத்து மீது பொற்பமை வதனமாகும் பதும நல் நிதியம் பூத்த நற்பெரும்
பணிலம் என்னும் நன்னிதி போன்று தோன்றி அற்பொலிவு கண்டார் தந்த அருட்கு
அடையாளம் காட்ட
|
6.1.1101 |
3000
|
எரியவிழ் காந்தள் மென்பூத் தலை
தொடுத்து இசைய வைத்துத் திரன் பெறச் சுருக்கும் செச்சை மாலையோ தெரியின்
வேறு கரு நெடு கயல் கண் மங்கை கைகளால் காந்தி வெள்ளம் அருகு இழிந்தனவோ
என்னும் அதிசயம் வடிவில் தோன்ற
|
6.1.1102 |
3001
|
ஏர் கெழு மார்பில் பொங்கும் ஏந்து
இளம் கொங்கை நாகக் கார் கெழு விடத்தை நீக்கும் கவுணியர் தலைவர் நோக்கால்
ஆர் திரு அருளில் பூரித்து அடங்கிய அமுதக் கும்பச் சீர் கெழு முகிழைக்
காட்டும் செவ்வியில் திகழ்ந்து தோன்ற
|
6.1.1103 |
3002
|
காம வேள் என்னும் வேடன் உந்தியில்
கரந்து கொங்கை நேமி அம் புட்கள் தம்மை அகப்பட நேரிது ஆய தாம நீள் கண்ணி
சேர்ந்த சலாகை தூக்கியதே போலும்
வாமமே கலை சூழ் வல்லி மருங்கின் மேல் உரோம வல்லி
|
6.1.1104 |
3003
|
பிணி அவிழ் மலர் மென் கூந்தல்
பெண் அமுது அனையாள் செம்பொன் அணி வளர் அல்குல் தங்கள் அரவு செய் பிழையால்
அஞ்சி மணி கிளர் காஞ்சி சூழ்ந்து வனப்புடை அல்குல் ஆகிப் பணி உலகு
ஆளும் சேடன் பணம் விரித்து அடைதல் காட்ட
|
6.1.1105 |
3004
|
வரிமயில் அனைய சாயல் மங்கை பொன்
குறங்கின் மாமை கரி இளம் பிடிக்கை வென்று கதலி மென் தண்டு காட்ட
தெரிவுறும் அவர்க்கு மென்மைச் செழு முழந்தாளின் செவ்வி புரிவுறு பொன் பந்து
என்னப் பொலிந்து ஒளி விளங்கிப் பொங்க
|
6.1.1106 |
3005
|
பூவலர் நறுமென் கூந்தல் பொன் கொடி
கணைக்கால் காமன் ஆவ நாழிகையே போலும் அழகினில் மேன்மை எய்த மேவிய
செம்பொன் தட்டின் வனப்பினை மீதிட்டு என்றும் ஓவியர்க்கு எழுத ஒண்ணாப்
பரட்டு ஒளி ஒளிர் உற்று ஓங்க
|
6.1.1107 |
3006
|
கற்பகம் ஈன்ற செவ்விக் காமரு
பவளச் சோதிப் பொன் திரள் வயிரப் பத்திப் பூந்துணர் மலர்ந்த போலும்
நற்பதம் பொலிவு காட்ட ஞாலமும் விசும்பு எல்லாம்
அற்புதம் எய்தத் தோன்றி அழகினுக்கு அணியாய் நின்றாள்
|
6.1.1108 |
3007
|
எண்ணில் ஆண்டு எய்தும் வேதாப்
படைத்தவள் எழிலின் வெள்ளம் நண்ணும் நான் முகத்தால் கண்டான் அவளினும்
நல்லாள் தன்பால் புண்ணியப் பதினாறு ஆண்டு பேர் பெறும் புகலி வேந்தர்
கண் நுதல் கருணை வெள்ளம் ஆயிரம் முகத்தால் கண்டார்
|
6.1.1109 |
3008
|
இன்னணம் விளங்கிய ஏர் கொள்
சாயலாள் தன்னை முன் கண் உறக் கண்ட தாதையார் பொன் அணி மாளிகைப் புகலி
வேந்தர் தாள் சென்னியில் பொருந்த முன் சென்று வீழ்ந்தனர்
|
6.1.1110 |
3009
|
அணங்கினும் மேம்படும் அன்னம்
அன்னவள் பணம் புரி அரவரைப் பரமர் முன் பணிந்து இணங்கிய முகில் மதில்
சண்பை ஏந்தலை வணங்கியே நின்றனள் மண்ணுளோர் தொழ
|
6.1.1111 |
3010
|
சீர் கெழு சிவ நேசர் தம்மை
முன்னமே கார் கெழு சோலை சூழ் காழி மன்னவர்
ஏர் கெழு சிறப்பில் நும் மகளை கொண்டு இனிப் பார் கெழு மனையில்
படர்மின் என்றலும்
|
6.1.1111 |
3011
|
பெருகிய அருள் பெறும் வணிகர்
பிள்ளையார் மருவு தாமரை அடி வணங்கிப் போற்றி நின்று அருமையால் அடியனேன்
பெற்ற பாவையைத் திருமணம் புணர்ந்து அருள் செய்யும் என்றலும்
|
6.1.1113 |
3012
|
மற்றவர் தமக்கு வண் புகலி வாணர்
நீர் பெற்ற பெண் விடத்தினால் வீந்த பின்னையான் கற்றைவார் சடையவர் கருணை
காண்வர உற்பவிப் பித்தலால் உரை தகாது என
|
6.1.1114 |
3013
|
வணிகரும் சுற்றமும் மயங்கிப்
பிள்ளையார் அணிமலர் அடியில் வீழ்ந்து அரற்ற ஆங்கு அவர் தணிவில் நீள்
பெருந்துயர் தணிய வேத நூல் துணிவினை அருள் செய்தார் தூய வாய்மையார்
|
6.1.1115 |
3014
|
தெள்ளு நீதியின் முறை கேட்ட
சீர்க்கிளை வெள்ளமும் வணிகரும் வேட்கை நீத்திடப் பள்ள நீர்ச் செலவு
எனப் பரமர் கோயிலன் உள் எழுந்து அருளினார் உடைய பிள்ளையார்
|
6.1.1116 |
3015
|
பான்மையால் வணிகரும் பாவை தன்
மணம் ஏனையோர்க்கு இசைகிலேன் என்று கொண்டு போய் வானுயர் கன்னி மாடத்து
வைத்தனர் தேனமர் கோதையும் சிவத்தை மேவினாள்
|
6.1.1117 |
3016
|
தேவர் பிரான் அமர்ந்து அருளும்
திருக் கபாலீச்சரத்து மேவிய ஞானத் தலைவர் விரிஞ்சன் முதல் எவ்வுயிர்க்கும்
காவலனார் பெருங்கருணை கை தந்த படி போற்றிப் பாவலர் செந்தமிழ் பாடி பன்
முறையும் பணிந்து எழுவார்
|
6.1.1118 |
3017
|
தொழுது புறம் போந்து அருளித்
தொண்டர் குழாம் புடை சூழ பழுதில் புகழ் திருமயிலைப் பதியில் அமர்ந்து
அருளும் நாள் முழுதுலகும் தரும் இறைவர் முதல் தானம் பல இறைஞ்ச அழுதுலகை
வாழ்வித்தார் அப்பதியின் மருங்கு அகல்வார்
|
6.1.1119 |
3018
|
திருத்தொண்டர் அங்கு உள்ளார் விடை
கொள்ளச் சிவநேசர் வருத்தம் அகன்றிட மதுர மொழி அருளி விடை கொடுத்து
நிருத்தர் உறை பிற பதிகள் வணங்கிப் போய் நிறை காதல் அருத்தியோடும்
திருவான்மியூர் பணிய அணைவுற்றார்
|
6.1.1120 |
3019
|
திருவான்மியூர் மன்னும்
திருத்தொண்டர் சிறப்பு எதிர வருவார் மங்கல அணிகள் மறுகு நிரைத்து
எதிர்கொள்ள அருகாக இழிந்து அருளி அவர் வணங்கத் தொழுது அன்பு தருவார்
தம் கோயில் மணித்தடம் நெடுங்கோபுரம் சார்ந்தார்
|
6.1.1121 |
3020
|
மிக்குயர்ந்த கோபுரத்தை வணங்கி
வியன் திருமுன்றில் புக்கருளி கோயிலினைப் புடை வலம் கொண்டு உள் அணைந்து
கொக்கு இறகும் மதிக் கொழுந்தும் குளிர் புனலும் ஒளிர்கின்ற செக்கர் நிகர்
சடை முடியார் சேவடியின் கீழ்த் தாழ்ந்தார்
|
6.1.1122 |
3021
|
தாழ்ந்து பல முறை பணிந்து
தம்பிரான் முன் நின்று வாழ்ந்து களிவரப் பிறவி மருந்தான பெருந் தகையைச்
சூழ்ந்த இசைத் திருப்பதிகச் சொல் மாலை வினா உரையால் வீழ்ந்த பெரும்
காதலுடன் சாத்தி மிக இன்புற்றார்
|
6.1.1123 |
3022
|
பரவி வரும் ஆனந்தம் நிறைந்த துளி
கண் பனிப்ப விரவு மயிர்ப் புளகங்கள் மிசை விளங்கப் புறத்து அணைவுற்று
அரவ நெடும் திரை வேலை அணிவான்மியூர் அதனுள் சிரபுரத்துப் புரவலனார் சில
நாள் அங்கு இனிது அமர்ந்தார்
|
6.1.1124 |
3023
|
அங்கண் அமர்வார் உலகு ஆள் உடையாரை
அரும் தமிழின் பொங்கும் இசைப் பதிகங்கள் பல போற்றிப் போந்து அருளிக்
கங்கை அணி மணி முடியார் பதி பலவும் கலந்து இறைஞ்சிச் செங்கண் விடைக்
கொடியார் தம் இடைச் சுரத்தைச் சேர் உற்றார்
|
6.1.1125 |
3024
|
சென்னி இள மதி அணிந்தார் மருவு
திரு இடைச் சுரத்து மன்னும் திருத் தொண்டர் குழாம் எதிர் கொள்ள வந்து அருளி
நல் நெடும் கோபுரம் இறைஞ்சி உள்புகுந்து நல் கோயில் தன்னை வலம் கொண்டு
அணைந்தார் தம்பிரான் திரு முன்பு
|
6.1.1126 |
3025
|
கண்ட பொழுதே கலந்த காதலால் கை தலை
மேல் கொண்டு தலம் உற விழுந்து குலவு பெரு மகிழ்ச்சி உடன் மண்டிய பேர்
அன்பு உருகி மயிர் முகிழ்ப்ப வணங்கி எழுந்து அண்டர் பிரான் திருமேனி வண்ணம்
கண்டு அதிசயித்தார்
|
6.1.1127 |
3026
|
இருந்த இடைச் சுரம் மேவும் இவர்
வண்ணம் என்னே என்று அரும் தமிழின் திருப்பதிகத்து அலர் மாலை கொடு பரவித்
திருந்து மனம் கரைந்து உருகத் திருக்கடைக் காப்புச் சாத்திப் பெரும் தனி
வாழ்வினைப் பெற்றார் பேர் உலகின் பேறு ஆனார்
|
6.1.1128 |
3027
|
நிறைந்து ஆரா வேட்கையினால் நின்று
இறைஞ்சி புறம் போந்து அங்கு
உறைந்து அருளிப் பணிகின்றார் உமைபாகர் அருள் பெற்றுச் சிறந்த திருத்
தொண்டருடன் எழுந்து அருளிச் செந்துருத்தி அறைந்து அளிகள் பயில் சாரல்
திருக்கழுக் குன்றினை அணைந்தார்
|
6.1.1129 |
3028
|
சென்று அணையும் பொழுதின் கண்
திருத்தொண்டர் எதிர் கொள்ளப் பொன் திகழும் மணிச் சிவிகை இழிந்து அருளி உடன்
போந்து மன்றல் விரி நறும் சோலைத் திருமலையை வலம் கொண்டு மின் தயங்கும்
சடையாரை விருப்பினுடன் பணிகின்றார்
|
6.1.1130 |
3029
|
திருக்கழுக் குன்று அமர்ந்த
செங்கனகத் தனிக் குன்றைப் பெருக்க வளர் காதலினால் பணிந்து எழுந்து பேராத
கருத்தின் உடன் காதல் செயும் கோயில் கழுக்குன்று என்று திருப்பதிகம்
புனைந்து அருளிச் சிந்தை நிறை மகிழ் உற்றார்
|
6.1.1131 |
3030
|
இன்புற்று அங்கு அமர்ந்து அருளி
ஈறில் பெரும் தொண்டர் உடன் மின் பெற்ற வேணியினார் அருள் பெற்றுப் போந்து
அருளி என்புற்ற மணிமார்பர் எல்லை இலா ஆட்சி புரிந்து அன்புற்று
மகிழ்ந்த திரு அச்சிறு பாக்கம் அணைந்தார்
|
6.1.1132 |
3031
|
ஆதி முதல் வரை வணங்கி ஆட்சி
கொண்டார் என மொழியும் கோயில் திருப்பதிக இசை குலாவிய பாடலில் போற்றி
மாதவத்து முனிவருடன் வணங்கி மகிழ்ந்து இன்புற்றுத் தீது அகற்றும்
செய்கையினார் சில நாள் அமர்ந்து அருளி
|
6.1.1133 |
3032
|
ஏறணிந்த வெல் கொடியார் இனிது
அமர்ந்த பதி பிறவும் நீறணிந்த திருத்தொண்டர் எதிர் கொள்ள நேர்ந்து இறைஞ்சி
வேறு பல நதி கானம் கடந்து அருளி விரிசடையில் ஆறணிந்தார் மகிழ்ந்த திரு
அரசிலியை வந்து அடைந்தார்
|
6.1.1134 |
3033
|
அரசிலியை அமர்ந்து அருளும் அங்கண்
அரசைப் பணிந்து பரசி எழு திருப் புறவார் பனம் காட்டூர் முதலாய விரை
செய் மலர்க் கொன்றையினார் மேவு பதி பல வணங்கித் திரை செய் நெடும் கடல்
உடுத்த திருத்தில்லை நகர் அணைந்தார்
|
6.1.1135 |
3034
|
எல்லையில் ஞானத் தலைவர் எழுந்து
அருள எதிர் கொள்வார் தில்லையில் வாழ் அந்தணர் மெய்த் திருத்தொண்டர்
சிறப்பின் ஒடு மல்கி எதிர் பணிந்து இறைஞ்ச மணிமுத்தின் சிவிகை இழிந்து
அல்கு பெரும் காதல் உடன் அஞ்சலி கொண்டு அணைகின்றார்
|
6.1.1136 |
3035
|
திரு எல்லையினைப் பணிந்து சென்று
அணைவார் சேண் விசும்பை மருவி விளங்குஒளி தழைக்கும் வடதிசை வாயிலை வணங்கி
உருகு பெரும் காதல் உடன் உள் புகுந்து மறையின் ஒலி பெருகி வளர் மணிமாடப்
பெரும் திரு வீதியை அணைந்தார்
|
6.1.1137 |
3036
|
நலம் மலியும் திருவீதி பணிந்து
எழுந்து நல் தவர்தம் குலம் நிறைந்த திருவாயில் குவித்த மலர்ச் செங்கையோடு
தலமுற முன் தாழ்ந்து எய்தித் தமனிய மாளிகை மருங்கு வலமுற வந்து ஓங்கிய
பேரம்பலத்தை வணங்கினார்
|
6.1.1138 |
3037
|
வணங்கி மிக மனம் மகிழ்ந்து மால்
அயனும் தொழும் பூத கணங்கள் மிடை திருவாயில் பணிந்து எழுந்து கண் களிப்ப
அணங்கு தனி கண்டு அருள அம்பலத்தே ஆடுகின்ற குணம் கடந்த தனிக் கூத்தர்
பெரும் கூத்து கும்பிடுவார்
|
6.1.1139 |
3038
|
தொண்டர் மனம் பிரியாத
திருப்படியைத் தொழுது இறைஞ்சி மண்டுபெருங் காதலினால் நோக்கி முகம் மலர்ந்து
எழுவார் அண்டம் எலாம் நிறைந்து எழுந்த ஆனந்தத்துள் அலைந்து கண்ட பேரின்
பத்தின் கரையில்லா நிலை அணைந்தார்
|
6.1.1140 |
3039
|
அந்நிலைமை அடைந்து திளைத்து ஆங்கு
எய்தாக் காலத்தில் மன்னு திரு அம்பலத்தை வலம் கொண்டு போந்து அருளி பொன்
அணி மாளிகை வீதிப் புறத்து அணைந்து போது தொறும் இன்னிசை வண்தமிழ் பாடிக்
கு்பிட்டு அங்கு இனிது இருந்தார்
|
6.1.1141 |
3040
|
திருந்திய சீர்த் தாதையார் சிவ
பாத இருதயரும் பொருந்து திருவளர் புகலிப் பூசுரரும் மாதவரும் பெரும்
திருமால் அயன் போற்றும் பெரும் பற்ற புலியூரில் இருந் தமிழ் ஆகரர்
அணைந்தார் எனக் கேட்டு வந்து அணைந்தார்
|
6.1.1142 |
3041
|
ஆங்கு அவரைக் கண்டு சிறப்பு
அளித்து அருளி அவரோடும் தாங்கரிய காதலினால் தம் பெருமான் கழல் வணங்க
ஓங்கு திருத் தில்லை வாழ் அந்தணரும் உடன் ஆகத் தேன் கமழ் கொன்றைச் சடையார்
திருச்சிற்றம்பலம் பணிந்தார்
|
6.1.1143 |
3042
|
தென் புகலி அந்தணரும் தில்லை வாழ்
அந்தணர் முன் அன்பு நெறி பெருக்குவித்த அண்டகையார் அடி போற்றி பொன்
புரி செஞ்சடைக் கூத்தர் அருள் பெற்று போந்து அருளி இன்புறு தோணியில்
அமர்ந்தார் தமை வணங்க எழுந்து அருள
|
6.1.1144 |
3043
|
நல் தவர் தம் குழாத்தோடும் நம்பர்
திரு நடம் செய்யும் பொன் பதியின் திரு எல்லை பணிந்து அருளிப் புறம் போந்து
பெற்றம் உயர்த்தவர் அமர்ந்த பிறபதியும் புக்கு இறைஞ்சிக் கற்றவர்கள் பரவு
திருக் கழுமலமே சென்று அடைவார்
|
6.1.1145 |
3044
|
பல் பதிகள் கடந்து அருளிப்
பன்னிரண்டு பேர் படைத்த தொல்லை வளப் பூந்தராய் தூரத்தே தோன்றுதலும்
மல்கு திரு மணிமுத்தின் சிவிகை இழிந்து எதிர் வணங்கி செல்வ மிகு பதி அதன்
மேல் திருப்பதிகம் அருள் செய்வார்
|
6.1.1146 |
3045
|
மன்னும் இசை மொழி வண்டார் குழல்
அரிவை என்று எடுத்து மின்னு சுடர் மாளிகை விண் தாங்குவ போல் வேணுபுரம்
என்னும் இசைச் சொல் மாலை எடுத்து இயம்பி எழுந்து அருளிப் புன்னை மணம் கமழ்
புறவப் புறம்பு அணையில் வந்து அணைந்தார்
|
6.1.1147 |
3046
|
வாழி வளர் புறம்பு அணையின்
மருங்கு அணைந்து வரி வண்டு சூழும் மலர் நறும் தீப தூபங்களுடன் தொழுது
காழி நகர் சேர்மின் எனக் கடை முடிந்த திருப்பதிகம் ஏழிசையின் உடன் பாடி
எயின் மூதூர் உள் புகுந்தார்
|
6.1.1148 |
3047
|
சேண் உயர்ந்த திருத்தோணி வீற்று
இருந்த சிவபெருமான் தான் நினைந்த ஆதரவின் தலைப்பாட்டு தனை உன்னி நீள்
நிலைக் கோபுரம் அணைந்து நேர் இறைஞ்சிப் புக்கு அருளி வாண் நிலவு பெருங்
கோயில் வலம் கொண்டு முன் பணிந்தார்
|
6.1.1149 |
3048
|
முன் இறைஞ்சித் திருவருளின் முழு
நோக்கம் பெற்று ஏறிப் பொன் இமயப் பாவையுடன் புணர்ந்து இருந்த புராதனரைச்
சென்னி மிசைக் குவித்த கரம் கொடு விழுந்து திளைத்து எழுந்து மன்னு பெரு
வாழ்வு எய்தி மனம் களிப்ப வணங்குவார்
|
6.1.1150 |
3049
|
பரவு திருப் பதிகங்கள் பலவும்
இசையினில் பாடி விரவிய கண் அருவி நீர் வெள்ளத்தில் குளித்து அருளி அரவு
அணிந்தார் அருள் பெருக புறம்பு எய்தி அன்பர் உடன் சிரபுரத்துப் பெரும்
தகையார் தம் திருமாளிகை சேர்ந்தார்
|
6.1.1151 |
3050
|
மாளிகையின் உள் அணைந்து
மறையவர்கட்கு அருள் புரிந்து தாள் பணியும் பெரும் கிளைக்குத் தகுதியினால்
தலை அளிசெய்து ஆளுடைய தம் பெருமான் அடியவர் களுடன் அமர்ந்து நீளவரும்
பேரின்பம் மிகப் பெருக நிகழு நாள்
|
6.1.1152 |
3051
|
காழி நாடு உடைய பிரான் கழல்
வணங்கி மகிழ்வு எய்த ஆழியினும் மிகப் பெருகும் ஆசையுடன் திருமுருகர்
வாழி திரு நீல நக்கர் முதல் தொண்டர் மற்று எணையோர் சூழும் நெடும் சுற்றம்
உடன் தோணிபுரம் தொழுது அணைந்தார்
|
6.1.1153 |
3052
|
வந்தவரை எதிர் கொண்டு மனம்
மகிழ்ந்து சண்பையர்கோன் அந்தமில் சீர் அடியார்கள் அவரோடும் இனிது அமர்ந்து
சுந்தரவார் அணங்கின் உடன் தோணியில் வீற்று இருந்தாரைச் செந்தமிழின்
பந்தத்தால் திருப்பதிகம் பல பாடி
|
6.1.1154 |
3053
|
பெரு மகிழ்ச்சியுடன் செல்லப்
பெரும் தவத்தால் பெற்றவரும் மருவு பெரும் கிளையான மறையவரும் உடன் கூடித்
திருவளர் ஞானத்தலைவர் திருமணம் செய்து அருளுதற்குப் பருவம் இது என்று எண்ணி
அறிவிக்கப் பாங்கு அணைந்தார்
|
6.1.1155 |
3054
|
நாட்டு மறை முறை ஒழுக்கம் ஞான
போனகருக்கும் கூட்டுவது மனம் கொள்வார் கோதில் மறை நெறிச் சடங்கு
காட்டவரும் வேள்வி பல புரிவதற்கு ஓர் கன்னிதணை
வேட்டருள வேண்டும் என விண்ணப்பம் செய்தார்கள்
|
6.1.1156 |
3055
|
மற்றவர் தம் மொழி கேட்டு
மாதவத்தின் கொழுந்து அனையார் சுற்றம் உறும் பெரும் பாசத் தொடர்ச்சி விடும்
நிலைமையராய் பெற்றம் உயர்த்தவர் அருள் முன் பெற்றதினால் இசையாது
முற்றியது ஆயினும் கூடாது என்று அவர் முன் மொழிந்து அருள
|
6.1.1157 |
3056
|
அருமறையோர் அவர் பின்னும் கை
தொழுது அங்கு அறிவிப்பார் இருநிலத்து மறை வழக்கம் எடுத்தீர் நீர் ஆதலினால்
வருமுறையால் அறுதொழிலின் வைதிகமாம் நெறி ஒழுகும் திருமணம் செய்து
அருளுதற்குத் திரு உள்ளம் செய்யும் என
|
6.1.1158 |
3057
|
மறை வாழ அந்தணர் வாய்மை ஒழுக்கம்
பெருகும் துறை வாழச் சுற்றத்தார் தமக்கு அருளி உடன் படலும் பிறை வாழும்
திருமுடியில் பெரும் புனலோடு அரவு அணிந்த கறை வாழும் கண்டத்தார் தமைத்
தொழுது மனம் களித்தார்
|
6.1.1159 |
3058
|
திரு ஞான சம்பந்தர் திரு உள்ளம்
செய்த அதற்குத் தருவாய்மை மறையவரும் தாதையரும் தாங்க அரிய பெருவாழ்வு
பெற்றார் ஆய்ப் பிஞ்ஞகனார் அருள் என்றே
உருகா நின்று இன்பம் உறும் உள மகிழ்ச்சி எய்துவார்
|
6.1.1160 |
3059
|
ஏதமில் சீர் மறையவரில் ஏற்ற
குலத்தோடு இசைவால் நாதர் திருப் பெருமணத்து நம்பாண்டார் நம்பி பெறும்
காதலியைக் காழி நாடு உடையபிரான் கைப்பிடிக்க போதும் அவர் பெரும் தன்மை எனப்
பொருந்த எண்ணினார்
|
6.1.1161 |
3060
|
திருஞான சம்பந்தர் சீர் பெருக
மணம் புணரும் பெருவாழ்வு திருத்தொண்டர் மறையவர்கள் மிகப்பேணி வருவாரும்
பெரும் சுற்றம் மகிழ் சிறப்ப மகள் பேசத்
தருவார் தண் பந்தணை நல்லூர் சார்கின்றார் தாதையார்
|
6.1.1162 |
3061
|
மிக்க திருத்தொண்டர்களும்
வேதியரும் உடன் ஏகத் திக்கு நிகழ் திருநல்லூர் பெருமணத்தைச் சென்று எய்தத்
தக்க புகழ் நம்பாண்டார் நம்பிதாம் அது கேட்டுச் செக்கர் சடைமுடியார் தம்
திருப்பாதம் தொழுது எழுவார்
|
6.1.1163 |
3062
|
ஒப்பரிய பேர் உவகை ஓங்கி எழும்
உள்ளத்தால் அப்பு நிறை குடம் விளக்கு மறுகு எல்லாம் அணி பெருக்கிச்
செப்பரிய ஆர்வம் மிகு பெரும் சுற்றத்து ஒடும் சென்றே எப்பொருளும் எய்தினேன்
எனத் தொழுது அங்கு எதிர் கொண்டார்
|
6.1.1164 |
3063
|
எதிர் கொண்டு மணி மாடத்தினில்
எய்தி இன்பமுறு மதுர மொழி பல மொழிந்து வரன் முறையால் சிறப்பு அளிப்ப
சதுர் முகனின் மேலாய சண்பை வரு மறையவரும்
முதிர் உணர்வின் மாதவரும் அணைந்த திறம் மொழிகின்றார்.
|
6.1.1165 |
3064
|
ஞான போனகருக்கு நல்தவத்தின்
ஒழுக்கத்தால் ஊனமில் சீலத்து உம்பால் மகள் பேச வந்தது என ஆன பேர்
அந்தணர்கள் பால் அருள் உடைமை யாம் என்று
வான் அளவு நிறைந்த பெரு மனம் மகிழ்ச்சி ஒடு மொழிவார்
|
6.1.1166 |
3065
|
உம்முடைய பெரும் தவத்தால் உலகு
அனைத்தும் ஈன்ற அளித்த அம்மை திருமுலைப் பாலில் குழைத்த ஆர் அமுது
உண்டார்க்கு எம்முடைய குலக் கொழுந்தை யாம் உய்யத் தருகின்றோம் வம்மின்
என உரைத்து மனம் மகிழ்ந்து செலவிடுத்தார்
|
6.1.1167 |
3066
|
பேர் உவகையால் இசைவு பெற்றவர்
தாம் மீண்டு அணைந்து கார் உலவு மலர்ச் சோலைக் கழுமலத்தை வந்து எய்திக்
சீர் உடைய பிள்ளையார்க்கு அவர் நேர்ந்தபடி செப்பிப் பார் குலவும்
திருமணத்தின் பான்மையினைத் தொடங்குவார்
|
6.1.1168 |
3067
|
திருமணம் செய் கலியாணத்
திருநாளும் திகழ் சிறப்பின் மருவிய ஓரையும் கணித மங்கல நூலவர் வகுப்பப்
பெருகு மண நாள் ஓலை பெரும் சிறப்பினுடன் போக்கி அருள் புரிந்த நன்னாளில்
அணிமுளைப் பாலிகை விதைத்தார்
|
6.1.1169 |
3068
|
செல்வம் மலி திருப்புகலி செழும்
திரு வீதிகள் எல்லாம் மல்கு நிறை குடம் விளக்கு மகர தோரணம் நிரைத்தே
எல்லையிலா ஒளி முத்து மாலைகள் எங்கணும் நாற்றி அல்கு பெரும் திரு ஓங்க அணி
சிறக்க அலங்கரித்தார்
|
6.1.1170 |
3069
|
அருந்தவத்தோர் அந்தணர்கள் அயல்
உள்ளோர் தாம் உய்ய பொருந்து திரு நாள் ஓலை பொருவு இறந்தார் கொண்டு அணையத்
திருந்து புகழ் நம்பாண்டார் நம்பி சிறப்பு எதிர் கொண்டு வருந்தவத்தான் மகள்
கொடுப்பார் வதுவை வினை தொடங்குவார்
|
6.1.1171 |
3070
|
மன்னும் பெரும் சுற்றத்தார்
எல்லாரும் வந்து ஈண்டி நன்னிலைமைத் திருநாளுக்கெழுநாளாம் நல் நாளில்
பன்மணி மங்கல முரசம் பல்லியங்கள் நிறைந்து ஆர்ப்ப பொன் மணிப் பாலிகை மீது
புனித முளை பூரித்தார்
|
6.1.1172 |
3071
|
சேண் உயரும் மாடங்கள் திருப்
பெருகு மண்டபங்கள் நீணிலைய மாளிகைகள் நிகரில் அணி பெற விளக்கிக் காண
வரும் கை வண்ணம் கவின் ஓங்கும் படி எழுதி
வாண் நிலவு மணிக் கடைக் கண் மங்கலக் கோலம் புனைந்து
|
6.1.1173 |
3072
|
நீடு நிலைத் தோரணங்கள் நீள் மருகு
தொறும் நிரைத்து மாடுயரும் கொடி மாலை மணி மாலை இடைப் போக்கிச்
சேடுயரும் வேதிகைகள் செழும் சாந்து கொடு நீவிப் பீடு கெழு மணி முத்தின்
பெரும் பந்தர் பல புனைந்தார்
|
6.1.1174 |
3073
|
மன்றல் வினைத் திரு முளை நாள்
தொடங்கி வரும் நாள் எல்லாம் முன்றில் தொறும் வீதி தொறும் முக நெடுவாயிகள்
தொறும் நின்று ஒளிரும் மணி விளக்கு நிறைவாசப் பொன் குடங்கள் துன்று
சுடர்த் தாமங்கள் தூபங்கள் துதைவித்தார்
|
6.1.1175 |
3074
|
எங்கணும் மெய்த் திருத்தொண்டர்
மறையவர்கள் ஏனையோர் மங்கல நீள் மணவினை நாள் கேட்டு மிக மகிழ்வு எய்திப்
பொங்கு திருப்புகலிதனில் நாள்தோறும் புகுந்து ஈண்ட அங்கண் அணைந்தவர்க்கு
எல்லாம் பெரும் சிறப்பு மிக அளித்தார்
|
6.1.1176 |
3075
|
மங்கல தூரிய நாதம் மறுகு தொறும்
நின்று இயம்பப் பொங்கிய நான்மறை ஓசை கடல் ஓசை மிசைப் பொலியத் தங்கு
நறும் குறை அகிலின் தழைத்த செழும் புகையின் உடன் செங்கனல் ஆகுதிப் புகையும்
தெய்வ விரை மணம் பெருக
|
6.1.1177 |
3076
|
எண் திசையில் உள்ளோரும் ஈண்டு
வளத்தொடு நெருங்கப் பண்ட நிறை சாலைகளும் பல வேறு விதம் பயில மண்டு பெரு
நிதிக் குவைகள் மலைப் பிறங்கல் என மலிய உண்டி வினைப் பெரும் துழனி ஓவாத ஒலி
ஓங்க
|
6.1.1178 |
3077
|
மா மறை நூல் விதிச் சடங்கில்
வகுத்த முறை நெறி மரபின் தூ மணம் நல் உபகரணம் சமைப்பவர் தம் தொழில்
துவன்றத் தாமரையோன் அனைய பெரும் தவ மறையோர் தாம் எடுத்த பூமருவு பொன்
கலசப் புண்ணிய நீர் பொலிவு எய்த
|
6.1.1179 |
3078
|
குங்குமத்தின் செழும் சேற்றின்
கூட்டு அமைப்போர் இனம் குழுமப்
பொங்குவிரைப் புதுக் கலவைப் புகை எடுப்போர் தொகை விரவத் துங்க நறும்
கர்ப்பூரச் சுண்ணம் இடிப்போர் நெருங்க எங்கும் மலர்ப் பிணை புனைவோர்
ஈடங்கள் மிகப் பெருக
|
6.1.1180 |
3079
|
இனைய பல வேறு தொழில் எம்மருங்கும்
நிரைத்து இயற்றும் மனை வளரும் மறுகு எல்லாம் மண அணி செய் மறை மூதூர்
நினைவு அரிய பெரு வளங்கள் நெருங்குதலால் நிதிக் கோமான் தனை இறைவர் தாம்
ஏவச் சமைத்தது போல் அமைந்து உளதால்
|
6.1.1181 |
3080
|
மாறிலா நிறை வளம் தரும் புகலியின்
மணம் மீக் கூறு நாளின் முன் நாளினில் வேதியர் குழாமும் நீறு சேர்
திருத்தொண்டரும் நிகர் இலாதவருக்கு
ஆறு சூடினார் அருள் திருக்காப்பு நாண் அணிவார்
|
6.1.1181 |
3081
|
வேத வாய்மையின் விதி உளி
வினையினால் விளங்க ஓத நீர் உலகில் இயன் முறை ஒழுக்கமும் பெருகக் காதல்
நீள் திருத்தொண்டர்கள் மறையவர் கவின் ஆர்
மாதர் மைந்தர் பொன் காப்பு நாண் நகர் வலம் செய்தார்
|
6.1.1183 |
3082
|
நகர் வலம் செய்து புகுந்த பின்
நவமணி அணைந்த புகரில் சித்திரவிதன மண்டபத்தினில் பொலியப் பகரும் வைதிக
விதிச் சமாவர்த்தனப் பான்மை திகழ முற்றிய செம்மலார் திரு முன்பு சேர்ந்தார்
|
6.1.1184 |
3083
|
செம் பொனின் பரிகலத்தினில்
செந்நெல் வெண்பரப்பின் வம்பு அணிந்த நீள் மாலை சூழ் மருங்குற அமைத்த
அம் பொன் வாச நீர்ப் பொன் குடம் அரசு இலை தருப்பை பம்பு நீள்சுடர் மணி
விளக்கு ஒளிர் தரும் பரப்பில்
|
6.1.1185 |
3084
|
நாத மங்கல முழக்கொடு நல் தவ
முனிவர் வேத கீதமும் விம்மிட விரை கமழ் வாசப் போது சாந்தணி பூந்துகில்
புணைந்த புண்ணியம் போல் மீது பூஞ்சயனத்து இருந்தவர் முன்பு மேவி
|
6.1.1186 |
3085
|
ஆர்வம் மிக்கு எழும் அன்பினால்
மலர் அயன் அனைய சீர்மறைத் தொழில் சடங்கு செய் திருந்து நூல் முனிவர்
பார் வழிப்பட வரும் இரு வினைகளின் பந்தச் சார்பு ஒழிப்பவர் திருக்கையில்
காப்பு நாண் சாத்த
|
6.1.1187 |
3086
|
கண்ட மாந்தர்கள் கடி மணம் காண
வந்து அணைவார் கொண்ட வல்வினையாப்பு அவிழ் கொள்கைய ஆன தொண்டர்
சிந்தையும் வதனமும் மலர்ந்தன சுருதி மண்டு மாமறைக் குலம் எழுந்து ஆர்த்தன
மகிழ்ந்தே
|
6.1.1188 |
3087
|
நிறைந்த கங்குலின் நிதிமழை விதி
முறை எவர்க்கும் புரந்த ஞான சம்பந்தர் தாம் புன் நெறிச் சமய அரந்தை
வல்லிருள் அகல வந்து அவதரித்தால் போல் பரந்த பேர் இருள் துரந்து வந்து
தொழுதனன் பகலோன்
|
6.1.1189 |
3088
|
அஞ்சிறைச் சுரும்பு அறை பொழில்
சண்பை ஆண் தகையார் தஞ்சிவத் திருமணம் செயத் தவம் செய் நாள் என்று
மஞ்சனத் தொழில் புரிந்து என மாசு இருள் கழுவிச் செஞ்சுடர்க் கதிர் பேரணி
அணிந்தன திசைகள்
|
6.1.1190 |
3089
|
பரம்பு தம் வயின் எங்கணும் உள்ள
பல் வளங்கள் நிரம்ப முன் கொணர்ந்து எண் திசையவர் நெருங்குதலால் தரம்
கடந்தவர் தம் திருக் கல்லி யாணத்தின்
வரம்பில் தன் பயன் காட்டுவது ஒத்தது வையம்
|
6.1.1191 |
3090
|
நங்கள் வாழ்வு என வரும் திருஞான
சம்பந்தர் மங்கலத் திருமண எழுச்சியின் முழக்கு என்னத் துங்க வெண்திரைச்
சுரிவளை ஆர்ப்பொடு சூழ்ந்து
பொங்கு பேர் ஒலி முழக்குடன் எழுந்தது புணரி
|
6.1.1192 |
3091
|
அளக்கர் ஏழும் ஒன்றாம் எனும்
பெருமை எவ்வுலகும் விளக்கு மாமண விழாவுடன் விரைந்து செல்வன போல்
துளக்கில் வேதியர் ஆகுதி தொடங்கிடா முன்னம் வளர்க்கும் வேதியல் வலம்
சுழித்து எழுந்தது வன்னி
|
6.1.1193 |
3092
|
சந்த மென் மலர்த் தாது அணி நீறு
மெய் தரித்துக் கந்தம் மேவும் வண்டு ஒழுங்கு எனும் கண்டிகை பூண்டு
சிந்தை தூய அன்பர்களுடன் திருமணம் போத
மந்த சாரியின் மணம் கொணர்ந்து எழுந்தது மருத்து
|
6.1.1194 |
3093
|
எண் திசை திறத்து யாவரும் புகலி
வந்து எய்தி மண்டும் அத்திருமண எழுச்சியின் அணிவாய்ப்பக் கொண்ட வெண்
நிறக் குரூஉச் சுடர்க் கொண்டல்கள் என்ன வெண் துகில் கொடி நிரைத்தது போன்றது
விசும்பு
|
6.1.1195 |
3094
|
ஏல இந்நலம் யாவையும் எழுச்சி முன்
காட்டும் காலை செய்வினை முற்றிய கவுணியர் பெருமான் மூலம் ஆகிய தோணி
மேல் முதல்வரை வணங்கிச் சீலமார் திரு அருளினால் மணத்தின் மேல் செல்வார்
|
6.1.1196 |
3095
|
காழி மாநகர் வேதியர் குழாத்தொடும்
கலந்து சூழும் அன்பர்கள் ஏனையோர் துதைந்து முன் செல்ல வாழி மா மறை
முழங்கிட வளம்பதி வணங்கி நீழல் வெண் சுடர் நித்திலச் சிவிகை மேற்கொண்டார்
|
6.1.1197 |
3096
|
யான வாகனம் ஏறுவார் யாரும் மேல்
கொள்ளக் கானம் ஆகிய தொங்கல் பிச்சம் குடை கவரி மேல் நெருங்கிட
விசும்பினும் நிலத்தினும் எழுந்த வான துந்துபி முழக்குடன் மங்கல இயங்கள்
|
6.1.1198 |
3097
|
சங்கொடு தாரை சின்னம் தனிப்
பெரும் காளம் தாளம் வங்கியம் ஏனை மற்று மலர் துளைக் கருவி எல்லாம்
பொங்கிய ஒலியின் ஓங்கிப் பூசுரர் வேத கீதம்
எங்கணும் எழுந்து மல்கத் திருமணம் எழுந்தது அன்றே
|
6.1.1199 |
3098
|
கோதையர் குழல் சூழ் வண்டின்
குழாத்து ஒலி ஓர் பால் கோல வேதியர் வேத வாய்மை மிகும் ஒலி ஒரு பால் மிக்க
ஏதம் இல் விபஞ்சி வீணை யாழ் ஒலி ஒரு பால் ஏத்தும் நாத மங்கலங்கள் கீத
நயப்பு ஒலி ஒரு பாலலாக
|
6.1.1200 |