1899
|
வேத நெறி தழைத்து ஓங்க மிகு சைவத் துறை விளங்கப் பூத
பரம்பரை பொலியப் புனித வாய் மலர்ந்து அழுத சீத வள வயல் புகலித் திருஞான
சம்பந்தர் பாத மலர் தலைக் கொண்டு திருத் தொண்டு பரவுவாம்
|
6.1.1 |
1900
|
சென்னி வளர் மதி அணிந்த சிலம்பு அணி சேவடியார் தம் மன்னிய சைவத்
துறையின் வழி வந்த குடி வளவர் பொன்னி வளம் தரு நாடு பொலிவு எய்த
நிலவியதால் கன்னி மதில் மருங்கு முகில் நெருங்கும் கழுமல மூதூர்
|
6.1.2 |
1901
|
அப் பதி தான் அந்தணர் தம் கிடைகள் அரு மறை முறையே செப்பும் ஒலி வளர்
பூகச் செழும் சோலை புறம் சூழ ஒப்பில் நகர் ஓங்குதலால் உகக் கடை நாள்
அன்றியே எப்பொழுதும் கடல் மேலே மிதப்பது என இசைந்து உளதால்
|
6.1.3 |
1902
|
அரி அயனே முதல் அமரர் அடங்க எழும் வெள்ளங்கள் விரி சுடர் மா மணிப்
பதணம் மீது எறிந்த திரை வரைகள் புரிசை முதல் புறம் சூழ்வ பொங்கு ஓதம் கடை
நாளில் வரி அரவி மந்தரம் சூழ் வடம் போல வயங்குமால்
|
6.1.4 |
1903
|
வளம் பயிலும் புறம் பணைப் பால் வாசப் பாசடை மிடைந்த தளம் பொலியும்
புனல் செந்தாமரைச் செவ்வித தட மலரால் களம் பயில் நீர்க் கடல் மலர்வது ஒரு
பரிதி எனக் கருதி இளம் பரிதி பல மலர்ந்தாற் போல்ப உள இலஞ்சி பல
|
6.1.5 |
1904
|
உளம் கொள் மறை வேதியர் தம் ஓமத் தூமத்து இரவும் கிளர்ந்த திரு நீற்று
ஒளியில் கெழுமிய நண் பகலும் அலர்ந்து அளந்து அறியாப் பலூழி ஆற்றுதலால்
அகல் இடத்து விளங்கிய அம்மூதூர்க்கு வேறு இரவும் பகலும் மிகை
|
6.1.6 |
1905
|
பரந்த விளைவயல் செய்ய பங்கயமாம் பொங்கு எரியில் வரம்பில் வளர்
தேமாவின் கனி கிழிந்த மது நறு நெய் நிரந்தரம் நீள் இலைக் கடையால்
ஒழுகுதலால் நெடிது அவ்வூர் மரங்களும் ஆகுதி வேட்கும் தகைய என மணந்து
உளதால்
|
6.1.7 |
1906
|
வேலை அழல் கதிர் படிந்த வியன் கங்குல் வெண்மதியம் சோலை தொறும்
நுழைந்து புறப்படும் பொழுது துதைந்த மலர்ப் பால் அணைந்து மதுத் தோய்ந்து
தாது அளைந்து பயின்று அந்தி மாலை எழும் செவ்வொளிய மதியம் போல் வதியுமால்
|
6.1.8 |
1907
|
காமர் திருப்பதி அதன் கண் வேதியர் போல் கடி கமழும் தாமரையும்
புல்லிதமும் தயங்கிய நூலும் தாங்கித் தூமரு நுண் துகள் அணிந்து துளி
வருகண்ணீர் ததும்பித் தேமரு மென் சுரும்பு இசையால் செழும் சாமம் பாடுமால்
|
6.1.9 |
1908
|
புனைவார் பொன் குழை அசையப் பூந்தானை பின் போக்கி வினை வாய்ந்த தழல்
வேதி மெழுக்குற வெண் சுதை ஒழுக்கும் கனை வானமுகில் கூந்தல் கதிர் செய்
வடமீன் கற்பின் மனை வாழ்க்கைக் குலமகளிர் வளம் பொலிவ மாடங்கள்
|
6.1.10 |
1909
|
வேள்வி புரி சடங்கு அதனை விளையாட்டுப் பண்ணை தொறும் பூழியுற வகுத்து
அமைத்துப் பொன் புனை கிண்கிணி ஒலிப்ப ஆழி மணிச் சிறு தேர் ஊர்ந்த
அவ்விரதப் பொடியாடும் வாழி வளர் மறைச் சிறார் நெருங்கியுள மணி மறுகு
|
6.1.11 |
1910
|
விடு சுடர் நீள் மணி மறுகின் வெண் சுதை மாளிகை மேகம் தொடு குடுமி
நாசி தொறும் தொடுத்த கொடி சூழ் கங்குல் உடுஎனு நாள் மலர் அலர உறு பகலில்
பல நிறத்தால் நெடு விசும்பு தளிப்பது என நெருங்கியுள மருங்கு எல்லாம்
|
6.1.12 |
1911
|
மடை எங்கும் மணிக்குப்பை வயல் எங்கும் கயல் வெள்ளம் புடை எங்கும்
மலர்ப் பிறங்கல் புறம் எங்கும் மகப் பொலிவு கிடை எங்கும் கலைச் சூழல்
கிளர் எங்கும் முரல் அளிகள் இடை எங்கும் முனிவர் குழாம் எயில் எங்கும்
பயில் எழிலி
|
6.1.13 |
1912
|
பிரமபுரம் வேணுபுரம் புகலி பெருவெம் குரு நீர்ப் பொருவில் திருத்
தோணிபுரம் பூம்தராய் சிரபுரம் முன் வருபுறவம் சண்பை நகர் வளர் காழி
கொச்சை வயம் பரவு திருக் கழுமலமாம் பன்னிரண்டு திருப் பெயர்த்தால்
|
6.1.14 |
1913
|
அப்பதியின் அந்தணர் தம் குடி முதல்வர் ஆசில் மறை கைப்படுத்த
சீலத்துக் கவுணியர் கோத்திரம் விளங்கச் செப்பும் நெறி வழிவந்தார் சீவபாத
இருதயர் என்று இப் புவி வாழத் தவம் செய் இயல்பினார் உளர் ஆனார்
|
6.1.15 |
1914
|
மற்றவர் தம் திரு மனையார் வாய்ந்த மரபின் வரு பெற்றியினார்
எவ்வுலகும் பெறற்கு அரிய பெருமையினார் பொற்புடைய பகவதியார் எனப் போற்றும்
பெயர் உடையார் கற்பு மேம்படு சிறப்பால் கணவனார் கருத்து அமைந்தார்
|
6.1.16 |
1915
|
மரபு இரண்டும் சைவ நெறி வழிவந்த கேண்மையினார் அரவு அணிந்த சடை
முடியார் அடியலால் அறியாது பரவு திருநீற்று அன்பு பாலிக்கும் தன்மையராய்
விரவு மறை மனை வாழ்க்கை வியப்பு எய்த மேவு நாள்
|
6.1.17 |
1916
|
மேதினி மேல் சமண் கையர் சாக்கியர் தம் பொய்ம்மிகுந்த ஆதி அருமறை
வழக்கம் அருகி அரன் அடியார் பால் பூதி சாதன விளக்கம் போற்றல் பெறாது
ஒழியக் கண்டு ஏதமில் சீர் சிவ பாத இருதயர் தாம் இடர் உழந்தார்
|
6.1.18 |
1917
|
. மனை அறத்தில் இன்பம் உறு மகப் பெறுவான் விரும்புவார் அனையநிலை தலை
நின்றே ஆய சேவடிக் கமலம் நினைவுற முன் பர சமயம் நிராகரித்து நீர் ஆக்கும்
புனை மணிப்பூண் காதலனைப் பெறப் போற்றும் தவம் புரிந்தார்
|
6.1.19 |
1918
|
பெருத்து எழும் அன்பால் பெரிய நாச்சியார் உடன் புகலித் திருத்தோணி
வீற்று இருந்தார் சேவடிக் கீழ் வழிபட்டுக் கருத்து முடிந்திடம் பரவும்
காதலியார் மணி வயிற்றில் உருத் தெரிய வரும் பெரும் பேறு உலகு உய்ய உளதாக
|
6.1.20 |
1919
|
ஆள் உடையாளுடன் தோணி அமர்ந்த பிரான் அருள் போற்றி மூளும்
மகிழ்ச்சியில் தங்கள் முதல் மறைநூல் முறைச் சடங்கு நாள் உடைய ஈரைந்து
திங்களினும் நலம் சிறப்பக் கேளிர் உடன் செயல் புரிந்து பேர் இன்பம்
கிளர்வ்வுறுநாள்
|
6.1.21 |
1920
|
அருக்கன் முதல் கோன் அனைத்தும் அழகிய உச்சங்களிலே பெருக்க வலியுடன்
நிற்கப் பேணிய நல்லோரை எழத் திருக்கிளரும் ஆதிரை நாள் திசை விளங்கப்
பரசமயத் தருக்கொழியச் சைவம் முதல் வைதிகமும் தழைத்து ஓங்க
|
6.1.22 |
1921
|
தொண்டர் மனம் களி சிறப்பத் தூய திருநீற்று நெறி எண் திசையும் தனி
நடப்ப ஏழ் உலகும் குளிர் தூங்க அண்டர் குலம் அதிசயிப்ப அந்தணர் ஆகுதி
பெருக வண் தமிழ் செய்தவம் நிரம்ப மாதவத்தோர் செயல் வாய்ப்ப
|
6.1.23 |
1922
|
திசை அனைத்தின் பெருமை எலாம் தென் திசையே வென்று ஏற மிசை உலகும்
பிறவுலகும் மேதினியே தனி வெல்ல அசைவில் செழும் தமிழ் வழக்கே அயல்
வழக்கின் துறைவெல்ல இசை முழுதும் மெய் அறிவும் இடம் கொள்ளும் நிலை பெருக
|
6.1.24 |
1923
|
தாளுடைய படைப்பு என்னும் தொழில் தன்மை தலைமை பெற நாளுடைய நிகழ்காலம்
எதிர்காலம் நவை நீங்க வாளுடைய மணிவீதி வளர்காழிப் பதிவாழ ஆளுடைய
திருத்தோணி அமர்ந்த பிரான் அருள் பெருக
|
6.1.25 |
1924
|
அவம் பெருக்கும் புல் அறிவின் அமண் முதலாம் பரசமயப் பவம் பெருக்கும்
புரை நெறிகள் பாழ்பட நல் ஊழி தொறும் தவம் பெருக்கும் சண்பையிலே தாவில்
சராசரங்கள் எலாம் சிவம் பெருக்கும் பிள்ளையார் திரு அவதாரம் செய்தார்
|
6.1.26 |
1925
|
அப்பொழுது பொற்புறு திருக்கழு மலத்தோர் எப்பெயரினோரும் அயல் எய்தும்
இடையின்றி மெய்ப்படு மயிர்ப் புளகம் மேவி அறியாமே ஓப்பில் களி
கூர்வதோர் உவப்புற உரைப்பார்
|
6.1.27 |
1926
|
சிவன் அருள் எனப் பெருகும் சித்தம் மகிழ் தன்மை இவண் இது நமக்கு வர
எய்தியது என் என்பார் கவுணியர் குலத்தில் ஒரு காதலன் உதித்தான் அவன்
வருநிமித்தம் இது என்று அதிசயித்தார்
|
6.1.28 |
1927
|
பூ முகை அவிழ்ந்து மணம் மேவும் பொழில் எங்கும் தே மருவு தாதோடு
துதைந்த திசை எல்லாம் தூ மருவு சோதி விரியத் துகள் அடக்கி மா மலய
மாருதமும் வந்து அசையும் அன்றே
|
6.1.29 |
1928
|
மேலை இமையோர்களும் விருப்பொடு கரப்பில் சோலை மலர் போல மலர் மா மழை
சொரிந்தே ஞாலம் மிசை வந்து வளர் காழி நகர் மேவும் சீல மறையோர்கள்
உடன் ஓம வினை செய்தார்
|
6.1.30 |
1929
|
பூத கண நாதர் புவி வாழ அருள் செய்த நாதன் அருளின் பெருமை கண்டு நலம்
உய்ப்பார் ஓதும் மறையோர் பிறிது உரைத்திடினும் ஓவா வேத மொழியால் ஒலி
விளங்கி எழும் எங்கும்
|
6.1.31 |
1930
|
பயன் தருவ ப?றருவும் வல்லிகளும் மல்கித் தயங்கு புனலும் தெளிவ
தண்மையுடன் நண்ணும் வயங்கு ஒளி விசும்பு மலினம் கழியும் மாறா நயம்
புரிவ புள் ஒலிகள் நல்ல திசை எல்லாம்
|
6.1.32 |
1931
|
அம்கண் விழவில் பெருகு சண்பை அகல் மூதூர்ச் சங்கம் படகம் கருவி தாரை
முதலான எங்கணும் இயற்றுபவர் இன்றியும் இயம்பும் மங்கல முழக்கு ஒலி
மலிந்த மறுகு எல்லாம்
|
6.1.33 |
1932
|
இரும் புவனம் இத்தகைமை எய்த அவர் தம்மைத் தரும் குல மறைத் தலைவர் தம்
பவன முன்றில் பெரும் களி வியப்பொடு பிரான் அருளினாலே அரும் திரு மகப்
பெற அணைந்த அணி செய்வார்
|
6.1.34 |
1933
|
காதல் புரி சிந்தை மகிழக் களி சிறப்பார் மீது அணியும் நெய் அணி
விழாவொடு திளைப்பார் சூத நிகழ் மங்கல வினைத் துழனி பொங்கச் சாதக
முறைப் பல சடங்கு வினை செய்வார்
|
6.1.35 |
1934
|
மா மறை விழுக்குல மடந்தையர்கள் தமில் தாம் உறு மகிழ்ச்சியோடு சாயல்
மயில் என்னத் தூ மணி விளக்கொடு சுடர்க் குழைகள் மின்னக் காமர் திரு
மாளிகை கவின் பொலிவு செய்வார்
|
6.1.36 |
1935
|
சுண்ணமொடு தண் மலர் துதைந்த துகள் வீசி உண்ணிறைந்த விருப்பின் உடன்
ஓகை உரை செய்வார் வெண் முளைய பாலிகைகள் வேதி தொறும் வைப்பார் புண்ணிய
நறும் புனல் கொள் பொன் குடம் நிரைப்பார்
|
6.1.37 |
1936
|
செம் பொன் முதலான பல தான வினை செய்வார் நம்பர் அடியார் அமுது செய்ய
நலம் உய்ப்பார் வம்பலர் நறும் தொடையல் வண்டொடு தொடுப்பர் நிம்பம்
முதலான கடி நீடு வினை செய்வார்
|
6.1.38 |
1937
|
ஐயவி உடன் பல அமைத்த புகையாலும் நெய் அகில் நறுங்குறை நிறைத்த
புகையாலும் வெய்ய தழல் ஆகுதி விழுப் புகையினாலும் தெய்வ மணம் நாறவரு
செய் தொழில் விளைப்பார்
|
6.1.39 |
1938
|
ஆய பல செய் தொழில்கள் அன்று முதல் விண்ணோர் நாயகன் அருள் பெருமை
கூறும் நலம் எய்த தூய திரு மா மறை தொடர்ந்த நடை நூலின் மேய விதி
ஐயிரு தினத்தினும் விளைத்தார்
|
6.1.40 |
1939
|
நாம கரணத்து அழகு நாள் பெற நிறுத்திச் சேம உதயப் பரிதியில் திகழ்
பிரானைத் தாமரை மிசைத் தனி முதல் குழவி என்னத் தூ மணி நிரைத்து அணி
செய் தொட்டில் அமர்வித்தார்
|
6.1.41 |
1940
|
பெரு மலை பயந்த கொடி பேணும் முலையின் பால் அரு மறை குழைத்த அமுது
செய்து அருளுவாரைத் தருமிறைவியார் பரமர் தாள் பரவும் அன்பே திருமுலை
சுரந்து அமுது செய்து அருளுவித்தார்
|
6.1.42 |
1941
|
ஆறுலவு செய்ய சடை ஐயர் அருளாலே பேறு உலகினுக்கு என வரும்
பெரியவர்க்கு வேறு பல காப்பு மிகை என்று அவை விரும்பார் நீறு திரு
நெற்றியில் நிறுத்தி நிறைவித்தார்
|
6.1.43 |
1942
|
தாயர் திரு மடித்தலத்தும் தயங்கு மணித் தவிசினிலும் தூய சுடர்த்
தொட்டிலினும் தூங்கு மலர்ச் சயனத்தும் சேய பொருள் திருமறையும் தீம்
தமிழும் சிறக்க வரு நாயகனைத் தாலாட்டும் நலம் பல பாராட்டினார்
|
6.1.44 |
1943
|
வரும் முறைமைப் பருவத்தில் வளர் புகலிப் பிள்ளையார் அரு மறைகள் தலை
எடுப்ப ஆண்ட திருமுடி எடுத்துப் பெரு மழுவர் தொண்டு அல்லால் பிரிது
இசையோம் என்பார் போல் திருமுக மண்டலம் அசையச் செங்கீரை ஆடினார்
|
6.1.45 |
1944
|
நாம் அறியோம் பர சமயம் உலகிர் எதிர் நாடாது போம் அகல என்று அங்கை
தட்டுவதும் புனிதன் பால் காமரு தாளம் பெறுதற்கு ஒத்துவதும் காட்டுவ போல்
தாமரைச் செங்கை களினால் சப்பாணி கொட்டினார்
|
6.1.46 |
1945
|
விதி தவறுபடும் வேற்றுச் சமயங்கள் இடை விழுந்து கதி தவழ இரு விசும்பு
நிறைந்த கடிவார் கங்கை நதி தவழும் சடை முடியார் ஞானம் அளித்திட உரியார்
மதி தவழ் மாளிகை முன்றின் மருங்கு தவழ்ந்து அருளினார்
|
6.1.47 |
1946
|
சூழ வரும் பெருஞ்சுற்றத்துத் தோகையரும் தாதியரும் காழியர் தம் சீர்
ஆட்டே கவுணியர் கற்பகமே என்று ஏழ் இசையும் எவ் உலகும் தனித் தனியே
வாழ வரும் அவர் தம்மை வருக வருக என அழைப்ப
|
6.1.48 |
1947
|
திரு நகையால் அழைத்து அவர் தம் செழு முகங்கள் மலர்வித்தும்
வருமகிழ்வு தலை சிறப்ப மற்றவர் மேல் செலவுகைத்தும் உருகி மனம்
கரைந்து அலைய உடன் அணைந்து தழுவியும் முன் பெருகிய இன்புற அளித்தார்
பெரும் புகலிப் பிள்ளையார்
|
6.1.49 |
1948
|
வளர் பருவ முறை ஆண்டு வருவதன் முன் மலர் வரிவண்டு உளர் கரு மென்
சுருள் குஞ்சியுடன் அலையச் செந்நின்று கிளர் ஒலி கிண்கிணி எடுப்பக்
கீழ்மை நெறிச் சமயங்கள் தளர் நடை இட்டு அறத் தாமும் தளர் நடை இட்டு
அருளினார்
|
6.1.50 |