Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Eelam Tamil Literature > ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி - மு. தளையசிங்கம் முன்னுரை > அரசியல், சமூக, பொருளாதாரப் பின்னணிபொதுப் பின்னணியைப் பிரதிபலிக்காது முன்னுக்குத் தள்ளப்பட்ட 'முற்போக்கு இலக்கியம்' >  சோஷலிச யதார்த்தமும் 'முற்போக்கு' இலக்கியமும் >  'நற்போக்கும்' 'முற்போக்கும்''முற்போக்கு' எழுத்தாளர்களின் அருவருக்கத்தக்க காட்சிகள்சர்வாதிகாரத்தைக் கண்டு தப்பி ஓடியவர் > சர்வாதிகாரத்தை தனித்து நின்று எதிர்த்தவர் > பொதுப் பின்னணி கண்டுபிடித்த இலக்கியப் போக்கு

20th Century Eelam Tamil Literature at Project Madurai


 
ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி - மு. தளையசிங்கம்
EzANTu ilakkiya vaLarcci - M. Thalaiyasingam


[ Etext Preparation : Mr. R. Padmanabha Iyer, London, UK & Dr. N. Kannan, Kiel, Germany (input);  Mr. Ramanitharan Kandiah, New Orleans, USA (Proof-reading)Web version: K. Kalyanasundaram, Lausanne, Switzerland  © Project Madurai 1999 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.tamil.net/projectmadurai  You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

To view the Tamil text correctly you need to set up the following: i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha, Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).  and ii) Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view. The Latha font may be downloaded from here]
 


0. முன்னுரை - மு.பொன்னம்பலம், சு. வில்வரத்தினம்
1. அரசியல், சமூக, பொருளாதாரப் பின்னணி
2. பொதுப் பின்னணியைப் பிரதிபலிக்காது முன்னுக்குத் தள்ளப்பட்ட 'முற்போக்கு இலக்கியம்'
3. சோஷலிச யதார்த்தமும் 'முற்போக்கு' இலக்கியமும்
4. 'நற்போக்கும்' 'முற்போக்கும்'
5. 'முற்போக்கு' எழுத்தாளர்களின் அருவருக்கத்தக்க காட்சிகள்
6. சர்வாதிகாரத்தைக் கண்டு தப்பி ஓடியவர்
7. சர்வாதிகாரத்தை தனித்து நின்று எதிர்த்தவர்
8. பொதுப் பின்னணி கண்டுபிடித்த இலக்கியப் போக்கு
 

3. சோஷலிச யதார்த்தமும் 'முற்போக்கு' இலக்கியமும்

'முற்போக்கு' அடிப்படையில் பார்க்கும்போது கைலாசபதி செய்த இலக்கியத் தொண்டின் முக்கியத்துவம் சுருங்கிவிடுகிறது என்று முன்பு கூறினேன். அவருடைய தனிப்பட்ட குறைகளை ஆராய்வதற்கு முன்னர் அதை விளக்குவது நன்று.

'முற்போக்கு' என்ற அடிப்படையில் பார்க்கும்போது முதலில் சுருங்குவது அவர் கொண்டுவந்த இலக்கியப் பார்வையின் ஆழந்தான். ஆரம்பத்தில் வி¡¢ந்து பரந்து தொ¢ந்த ஒரு தரமான இலக்கியப் பார்வை 'முற்போக்கு' இலக்கியப் பார்வையாக மாறியபோது தன்னை ஒரு குறுகிய கட்சிக்குள்ளும் கொள்கைக்குள்ளும் திணித்துத் தானும் குறுகிக்கொண்டது.

பழைய தமிழ் இலக்கிய அறிவு மட்டுமல்ல மற்ற நாட்டு இலக்கியங்களைப் பற்றித் தொ¢ந்திருக்கும் ஓர் ஒப்பிலக்கியப் பார்வையும் தேவை என்ற நல்ல கொள்கையும் அதனால் தேயத் தொடங்கிவிட்டது. பின்பு, அது பின்னர் வந்த பிஞ்சுகளிடம் அகப்பட்டபோது தேய மட்டும் செய்யவில்லை, தேய்ந்து சிதைந்து கோரமாகியும் விட்டது. 'தினகரனி'ல் வெளிவந்த 'நான் விரும்பும் நாவலாசி¡¢யர்' என்ற தொடரை இப்போ நினைத்துப் பார்த்தால் கைலாசபதி கொண்டுவந்த பார்வையின் ஆரம்ப நிலையையும் அது பின்னர் அடைந்த தி¡¢பையும் யூகிக்கலாம். அதோடு, கைலாசபதியும் சா¢, சிவத்தம்பியும் சா¢, அவரோடு ஒட்டிவந்த மற்றவர்களும் சா¢, ஆரம்பத்தில் கட்சி இலக்கியத்தில் அவ்வளவு அக்கறைப்பட்டிருக்கவில்லை என்பதையும் உணர முடியும்.

அந்த வியாதி, அவர்களோடு ஒட்டிக்கொண்ட பழைய 'முற்போக்கு' எழுத்தாளர்களிடமிருந்துதான் தொற்றியிருக்கிறது. கோர்க்கி, சொலொக்கோவ், ஹெரன்பேர்க், கொன்ஸ்ரான்டின் பெடின், லியோனிட் சொபலோவ், லியோனிட் லெனோவ் போன்ற ரஷ்ய சோஷலிஸ்ட் யதார்த்த நாவலாசி¡¢யர்களைப்பற்றியும் 'நான் விரும்பும் நாவலாசி¡¢யர்' தொடா¢ல் எழுதப்படவில்லை. கைலாசபதி, ஜொய்ஸைப்பற்றித்தான் எழுதினார். ஜொய்ஸ.¢ற்கும் 'முற்போக்கு' வாதத்திற்கும் எட்டாம் பொருத்தம். இன்றுவரை அவரை ரஸ்ஸ.¢ய எழுத்தாளர் சங்கம் ஏற்றுக்கொண்டதில்லை. அவர்களின் சுலோகப்படி ஜொய்ஸ் மேற்கத்தைய அழிவின் அல்லது அழியும் மேற்கத்தைய நாகா¢கத்தின் (Decadent West) பிரதிபிம்பம் தான். காவலூர் ராசதுரை எமிங்வேயைப்பற்றித்தான் எழுதினார்.

எமிங்வே பா...¢...த்துக்கு எதிராகப் போராடத்தான் செய்தார். ஆனால், அதற்காகவேதான் அவர் எந்தக் கட்சிக்குள்ளும் தன்னைப் புகுத்திக்கொள்ள விரும்பவில்லை அதுவும் இயந்திரம் போன்று இறுகித் தனிமனிதனைச் சாகடித்துவிடும் அமைப்புக்கும் கட்சிக்கும் எமிங்வே ஒரு முழு விரோதி. அதை ரஸ்ஸ.¢ய 'முற்போக்கு' எழுத்தாளர்களுக்கே ஞாபகமூட்ட அவர் தவறியதில்லை.

I cannot be a communist now because I believe in only one thing; liberty. First I would look after myself and do my work. Then I would care for my family. Then I would help my neighbour. But the state I care nothing.... I believe in the absolute minimum of government.... A writer..... owes no allegiance to any government. If he is a good writer he will never like the government he lives under. His hand should be against it and its hand will be always against him. The minute anyone knows any bureaucracy well enough he will hate it. Because the minute it passes a certain size it must be unjust.*
____________________________________________________
* Soviet Literature, 11-1962

சிவத்தம்பி ஏர்ஸ்கின் கோல்ட்வெல்லைப் பற்றித்தான் எழுதினார். கோல்ட்வெல் அந்தளவு பொ¢ய எழுத்தாளர் அல்ல. யாழ்ப்பாணத்தில் வடபகுதியிலுள்ள வாழ்க்கைப் பிரச்சினைகளின் சாயலைக் கோல்ட்வெல்லின் கதைகளில் காணலாம் என்பது சிவத்தம்பி காட்டிய காரணம். ஆனால் 'முற்போக்கு' கொள்கைக்கிணங்க அதே பிரச்சினைகளையும் அதோடு அதிக கட்சி சார்பையும் தரத்தையும் மற்ற அமொ¢க்க எழுத்தாளரான ஜோன் ஸ்டெயின்பெக்கின் கதைகளில் (The Grapes of Wrath) கண்டிருக்கலாம். அல்லது இன்னும் அதிக 'முற்போக்கை'யும் நல்ல இலக்கியத் தரத்தையும் காண வேண்டுமானால் *பரல், டொஸ் ப§...¡ஸ், சிங்கிளெயர் லுவிஸ் போன்றவர்களை எடுத்திருக்கலாம் அல்லது கட்சியின் முழுக் கொள்கையையே பார்க்க வேண்டுமானால் ஹொவட் பாஸ்ட்டைப் பிடித்திருக்கலாம்.

ஆனால், சிவத்தம்பி அவர்களை விட்டு விட்டு கோல்ட்வெல்லைத்தான் எடுத்தார். அ.ந. கந்தசாமி கூட சோலாவைப்பற்றித்தான் எழுதினார். சோலா இயற்கைவாதியே ஒழிய சோ...லிஸ்ட் யதார்த்தவாதியல்ல. அதோடு அப்படி ஒருவரைத்தான் தேடவேண்டுமென்றால் மார்க்ஸே. புகழ்ந்த பால்சாக்கைப் பிடித்திருக்கலாம். ஆனால் அவர் சோலாவைத்தான் பிடித்தார். பொன்னுத்துரை மொராவியாவைப் பற்றி எழுதினார். க்னேஷியஸ் சைலோனைப் பற்றி அல்ல. சிவகுமாரன் டிக்கன்ஸைப்பற்றி எழுதினார். எனவே கைலாசபதிக்கும் அவரது குழுவுக்கும் ஆரம்பத்தில் திட்டவட்டமான கட்சிக்குள்ளாக லக்கியத்தைப் பார்ப்பதை விடகட்சிக்கு வெளியால் பார்க்கும் ஒரு பார்வைதான் அதிகமாகத் தொ¢ந்திருக்கிறது. சோ...லிஸ்ட் யதார்த்த இலக்கியத்தையும் அந்த ரக எழுத்தாளர்களையும் பற்றி வடிவாக இவர்கள் தொ¢ந்திருக்கவில்லை என்று கூடச் சொல்லாம்.

இப்பவும் கூடதே நிலைதான். அதனால் அப்படி ஒரு மெல்லிய சாயல் தொ¢யும் மேற்கூறிய நாவலாசி¡¢யர்களில் திருப்திப்பட்டிருக்கிறார்கள். இளங்கீரன் மட்டும் (அவர் பழைய 'முற்போக்கு'க் கட்சி எழுத்தாளர், கைலாசபதியோடு வந்த புதிய விமர்சகர் அல்ல என்பது வித்தியாசத்துக்கு¡¢ய காரணத்தை விளக்கும்.) 'முற்போக்கு' என்று சொல்லக்கூடிய தகழி சிவசங்கரம்பிள்ளையைப் பற்றி எழுதினார். ஆனால் மேற்கத்தைய தத்துவம், மனோவியல் போன்றவற்றைத் தொ¢ந்து எழுதும் தகழியை, அவை எதுவும் தொ¢யாத இளங்கீரனால் பு¡¢ந்துகொள்ள முடியவில்லை. 'செம்மீன்'ப்பற்றி இளங்கீரனுக்கு எதுவும் விளங்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ('செம்மீன்', 'நீதியே நீ கேள்', 'குட்டி' ஆகியவற்றைப்பற்றி 'மூன்று முற்போக்கு நாவல்கள்' என்ற தலைப்பில் ஓர் விமர்சனம் எழுத நான் எண்ணியுள்ளேன்.

அப்போ அதை இன்னும் விளக்க முடியும்.) எனவே, கைலாசபதியும் அவரது விமர்சக சகாக்களும் பழைய 'முற்போக்கு' எழுத்தாளர்களுடன் கொள்கைப்பிணைப்பு ஏற்படுத்தியபோது ஒரு பார்வைக் குழப்பத்தைத்தான் ஏற்படுத்தியிருக்கிறார்கள். மேலோட்டமாகவாவது அவர்களுக்குத் தொ¢ந்திருந்த மேற்கத்தைய இலக்கியத்தையும் இலக்கியாசி¡¢யர்களையும் போல், சோஷலிஸ்ட் யதார்த்த இலக்கியாசி¡¢யர்களையும் அந்த ரக எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்கள் தொ¢ந்திருக்கவில்லை.

பழைய 'முற்போக்கு' எழுத்தாளர்களுக்கும் கூட 'முற்போக்கு' என்ற சுலோகத்தில் இருந்த மோகத்திற்கு ஏற்ப அந்த இலக்கியத்தைப் பற்றியோ எழுத்தாளர்களைப் பற்றியோ எந்தத் தரமான அறிவும் இருக்கவில்லை. அதோடு வேறு வெளிநாட்டு இலக்கியங்களைப் பற்றிய ஞானமும் இவர்களுக்குச் சூனியந்தான். எனவே, கடைசியில் இரு சாரரும் சேர்ந்து 'முற்போக்கு இலக்கியம்' என்று சொல்வதன் மூலம் ஒரு பார்வைக் குழப்பத்தைத்தான் ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஒருவகை வலுவற்ற improvised 'முற்போக்கு' இலக்கியம். அதில் ஆரம்பத்தில் கைலாச பதிக்கும் அவரது சகாக்களுக்கும் தொ¢ந்த கட்சியைத் தாண்டிய ஒரு பரந்த பார்வையுமில்லை; சோஷலிஸ்ட் யதார்த்தவாதம் என்பதற்கு¡¢ய உண்மையான அர்த்தமுமில்லை.

ஆனால், அதேசமயம் இரண்டும் சிதைந்துபோய்க் கலந்தும் காணப்படுகின்றன. ஒருவகைச் சாம்பாறு. அதனால்தான் அவர்களை விட அதிகம் தொ¢ந்த கனக ரத்தினாவை அத்தனை சீக்கிரத்தில் அவர்கள் மறைமுகமாக முற்போக்கு இலக்கியக் கூட்டிலிருந்து துரத்திவிட்டனர். இல்லாவிட்டால் தங்கள் பொட்டுக்கேடு தொ¢ந்துவிடும் என்ற பயம். அதனால்தான் சோஷலிஸ்ட் யதார்த்த வாதத்த்துக்கு¡¢ய முக்கிய ஒரு பண்பான கூட்டுத் தோற்றம் அல்லது கூட்டுப் பிம்பம் (Collective image) என்பது இங்கு கொஞ்சஞ்கூடக் கேள்விப்படாத ஒரு பொருளாகப் போய்விட்டது.

அதனால்தான் எல்லா நாட்டு இலக்கியத்துக்கும் தொ¢ந்த பிரதேச மணம், பிரதேசப் பேச்சு என்பவை இங்கு பொ¢ய கண்டுபிடிப்புகளாகப் போற்றப்படுகின்றன. ஏதோ அவைதான் 'முற்போக்கு' என்பவை போல. அதே நடையை இங்குள்ள அத்தனை பிஞ்சு 'முற்போக்கு' எழுத்தாளர்களாலும் அத்தனை அடிமைத்தனமாக அபிநயிக்க முடிகிறது. அதனால்தான் அதே அபிநயத்தைக் கடைசியில் ஜேம்ஸ் ஜொய்ஷ.¢ன் நடை என்று சொல்லி மற்றவர்களுக்குச் சி¡¢ப்பூட்டவும் அவர்களால் முடிகிறது. தனியனாகவே சோஷலிஸ்ட் யதார்த்தவாதம் இந்தக் காலத்தில் செல்லுபடியாக மாட்டாது. அப்படியிருக்கையில் இந்தச் சாம்பாறுத் தோற்றத்தின் நிலையைச் சொல்லத் தேவையில்லை.

இனி அடுத்த பண்பு. கைலாசபதியின் வருகையோடு இலக்கியத்தின் பொறுப்பும் சேவையும் இங்கு கூடிவிட்டன என்று முன்பு கூறினேன். 'கலை கலைக்காக' என்பது ஈழத்திலும் நிராகா¢க்கப்பட்டுவிட்டது. ஆனால் அதே சமயம் இலக்கியம் 'முற்போக்காக' மாறியபோது கலை கட்சிக்காக என்று மாறிவிட்டது. அதனால் கட்சிக்கு அப்பாற்பட்ட மனிதப் பிரச்சினைகள், உணர்ச்சிகள் எல்லாம் ஒதுக்கப்பட்டன. அவை பிற்போக்காகக் கருதப்பட்டன. அந்தப் போக்கு கடைசியில் கீழ்சாதிக்காரனையோ அல்லது தொழிலாளியையோ வைத்து எழுதினால்தான் இலக்கியமாகும் என்ற கொள்கை வளர்ச்சியாகவும் மாறிவிட்டது.

அதன் காரணமாய் இங்குள்ள கதைகளில் இங்கு இருக்காத ஆலை முதலாளி - தொழிலாளி சண்டை தலைதூக்கியது. அதோடு மனோவியல் தத்துவ ஆழமோ இலக்கியத்தரமோ எதுவுமற்ற பிரசாரக் கதைகளுக்கு இடம் கிடைத்தது. மற்ற நாட்டு இலக்கியங்களைத் தாங்களே படித்திராதபடியால் மற்றவர்கள் சொல்ல மட்டும் கேட்டு எழுதும் பழக்கம், தங்களுக்குத் தொ¢யாதவற்றை 'அமொ¢க்கக் காப்பி' என்று சுலோகம் பாடும் அறியாமைக்கு வித்திட்டுவிட்டது. அதோடு அதே அறியாமை -- வெளிநாட்டவரையும் வெளிநாட்டு விசயங்களையும் கண்டு பயப்படும் பொதுவுடமை நாட்டவர்க்கே உ¡¢ய வெருட்சியைப் போல் (Xenophobia) - இங்குள்ள 'முற்போக்கு' எழுத்தாளர்களிடம், அவர்களை விட முற்போக்கான, அவர்களை விடஆழமும் தரமும் கூடியவர்களான வேறு எழுத்தாளர்களின் கருத்துகளைக் கண்டு வெருண்டு அவர்களைக் கள்ளர்கள் என்று திட்டும் குழந்தைப்பிள்ளைத்தனக் குமுறல்களுக்கும் வழிவிட்டிருக்கிறது.

அடுத்து, கைலாசபதியின் வருகையோடு இலங்கையின் பொதுப் பின்னணியின் ஏற்பட்ட விழிப்பு இலக்கியத்தில் குழந்தைப்பிள்ளைத்தனமான உணர்ச்சிவசம் நிறைந்த அரசியல் கதைகளுக்குத் தடை போட்டது என்று முன்பு கூறினேன். ஆனால், அதே தடை அந்த அரசியல் விழிப்பைப் பிரதிபலிக்கும் தரமான கதைகளுக்கும் இடம் இல்லாமல் ஆக்கிவிட்டது. சிங்களச் சரித்திராசியர்களே 'சிங்கள வகுப்புவாதத்தின் எழுச்சி' என்று உண்மையை ஒப்புக்கொண்டு சரித்திரம் எழுதும் நேரத்தில் இவர்கள் உண்மையை மறைத்து, செயற்கையான 'தேசியக்' கதைகள் எழுத முனைந்தனர். அதனால் இரண்டொரு சிங்களப் பெயர்கள் கதைகளில் இடம் பெற்றனவே ஒழிய நாட்டின் உண்மையான யதார்த்த நிலை தரமாகப் படம் பிடிக்கப்படவில்லை. நடுநிலை நின்று காட்டப்படவில்லை. அதனால் முக்கியமான ஒரு துறைக்கு முன்னால் இந்த 'முற்போக்கு' வாதிகள் கண்களை மூடிக்கொண்டனர்.

இப்படிப் பல்வேறு வகை சிதைவுக்கும் திருகலுக்கும் இடம் கொடுத்தது கைலாசபதியோடு வந்த இலக்கிய விமர்சன முறை. வரதராசனாரையும் ஜனரஞ்சக எழுத்தாளர்களையும் எடைபோட்டு ஒதுக்கிய இலக்கிய விமர்சனம் 'முற்போக்கு' இலக்கிய விமர்சனமாக மாறியபோது தன் கட்சிக்கு அப்பால் வேறு தரமான இலக்கிய விமர்சகர்களும் இலக்கியப் பார்வையும் இல்லை என்று வாதாடத் தொடங்கிவிட்டது. அப்படி ஒரு மூட நம்பிக்கை அந்தக் கட்சி எழுத்தாளர்களிடம் பிழையாக வளர்க்கப்பட்டது. அதனால் அவர்களும் மற்றவர்களைப் பார்க்க மறுத்தனர்.

அந்த மாற்றமும் மறுப்புமே இலக்கிய வளர்ச்சிக்குத் தடையாவதற்குப் போதுமானவை. ஆனால் அதோடு அந்த 'முற்போக்கு' விமர்சனமே, 'முற்போக்கையும்'யும் சரி, மற்றவற்றையும் சரி செவ்வையாகத் தெரிந்துகொள்ளாமல் ஒரு improvised பாணியில் செய்யப்படும்போது, அதோடு அப்படி ஒரு விமர்சனம் வேண்டுமென்றே மற்றவர்களின் கருத்துகளையும் எழுத்துகளையும் கயிறிழுப்புகளாலும் குறுக்கு வழிகளாலும் அமுக்கிவிட்டு நடைபெறும்போது அதில் இலக்கியச் சேவையே இல்லாமல் போய்விடுகிறது. இந்த வீழ்ச்சிக்குக் கைலாசபதி பெரிதும் உதவியிருக்கிறார். அவரின் தனிப்பட்ட குறைகளும் சேர்ந்து அதற்கு உதவியிருக்கின்றன. இலக்கிய விமர்சகர் என்ற அடிப்படையில் அந்தத் தனிப்பட்ட குறைகளை ஆராயும்போது அது நன்கு தெரியவரும். இனி அவற்றை ஆராயலாம்.

நம் இலக்கிய வளர்ச்சியில் கைலாசபதியின் செல்வாக்கு தன்னை நேரடியாகக் காட்டிக்கொள்ள முயன்றதில்லை. மறைமுகமாக நின்றுதான் திசை திருப்பியிருக்கிறது. எதிர் காலத்தில் தமிழ் இலக்கிய மாணவன் ஒருவன் கைலாசபதியின் பெயருக்கும் பிரபல்யத்துக்கும் ஏற்ற வகையில் அவரின் விசயதானங்கள் இல்லையே என்று ஆச்சரியப்பட்டால் தவறு அவனுடையதல்ல, கைலாசபதியினுடையதுதான்.

அவர் எழுதிய விமர்சனம், கட்டுரைகள் மிக மிகச் சொற்பமானவை மட்டுமல்ல, மிக மிக ஆழமற்றவையுங்கூட. திட்டவட்டமாகத் தர்க்கரீதியாகவும் நேர்மையாகவும் கட்டுரை எழுதித் தன்னை விளக்கிக்கொள்ள கைலாசபதி அவ்வளவு தூரம் முயன்றிருக்கிறார். விசயதானங்களின் மூலதனத்தில் அவர் தன் செல்வாக்கை நிறுவிக்கொள்ள முயன்றதில்லை. இதற்குக் காரணம் அவர் சேர்ந்துவிட்டிருந்த கட்சியின் இலக்கியக்கொள்கை தர்க்க ரீதியாகத் தன்னை நியாயமாக்கிக்கொள்ள முடியாதது என்பது மட்டுமல்ல, ஆழமான விமர்சனக் கட்டுரைகள் எழுதினால் அவர் தூக்கிவிட முயன்ற அதே எழுத்தாளர்களின் சிருஷ்டிகளில் ஆழமற்ற தன்மையைத்தான் முதலில் சுட்டிக் காட்ட வேண்டி வரும் என்ற தயக்கம் மட்டுமல்ல, அவையுந்தான். ஆனால் அவற்றுக்கும் மேலாக அவரிடம் உள்ள தனிப்பட்ட குறைகள்தான் முக்கியமாக நிற்கின்றன.

கைலாசபதி தன் செல்வாக்கைப் பதித்துக் கொள்ள முயன்ற முறையையும் அவர் எழுதிய சொற்பக் கட்டுரைகளையும் பார்க்கும்போது அவர் வேண்டுமென்றே மற்றவர்கள் தன்னில் குறைபிடிக்காமல் தப்பிக்கொள்ள முயன்றவராகவே தெரிகிறார். பிடிபடாமல் நழுவிவிடும் ஒரு முயற்சி. நிரந்தரமாகத் தன் கருத்துக்களை அச்சில் விட்டுவைக்க அவர் விரும்பவில்லை, ஆரம்பத்தில் பத்திரிகாசிரியர் என்றபடியால். ஆனால் கட்சி சார்பற்ற வேறு விஷயங்களில்கூட அந்த நழுவல் வரும்போது அதுவல்ல முக்கிய காரணம் என்பது தெரியவரும். பெரும்பாலும் தன் கருத்துகளை மற்றவர்கள் மூலமாகவேதான் அவர் பரப்ப முயன்றிருக்கிறார். அதனால் மற்றவர்களின் நிரந்தர நன்றியும் கடமைப்பாடும் கூட்டு வழிபாடும் நியாயப்படுத்தப்படும் சமயத்தில் அவரின் கருத்துகளின் குறைகள் வெளியே தெரியவராமல் பாதுகாக்கப்படுவதோடு, அப்படி வரும்போது மற்றவர்களின்மேல் அவை சுமத்தப்படக் கூடியவையாகவும் மாறிவிடுகின்றன. தன் சக்தியையும் உருவத்தையும் விட மிகப் பெரிதான, அவற்றின் குறைகள் தெரியாத, யாருக்கும் பிடிபடாத நழுவலான ஒரு பெருநிழலை கைலாசபதியே மிக ராஜதந்திரமாக வளர்த்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

கட்சி முறையில் பெரும்பாலும் வெளியே தெரிய வராத அந்தரங்கக் கூட்டங்களின் மூலமே இலக்கியம் வளர்க்கப்படும்போது இப்படி ஒரு நழுவலான நிழலையே உருவமாக வளர்ப்பது இலகுவானது. அதற்குத் தடையாக வரக்கூடிய, கைலாசபதியை விடக் கெட்டிக்காரர்களான கனகரத்தினா, பொன்னுத்துரை போன்றவர்கள் மெதுவாகக் கட்சியிலிருந்து அதே ராஜதந்திர முறையில் அகற்றப்பட்ட பின் அதன் வளர்ச்சிக்கு உத்தரவாதம் கிடைத்துவிட்டது. கடைசியில் க.கைலாசபதி என்ற பெயர் கைலாசபதியின் பெருநிழலுக்கு மட்டும் உரித்தாகிவிட்டது. அதாவது அவரிடம் இருப்பதாக மற்றவர்கள் எதிர்பார்ப்பதற்குரிய பெயர், உண்மையாக இருப்பதின் பெயரல்ல. பின்பு கட்சி அங்கத்தவர்கள் விசாரணையற்ற பக்தியோடு அவரின் புகழ் பாடித் திரியத் தொடங்கியபோது கைலாசபதி ஒரு புராணமாகிவிட்டார். அந்தப் புராணப் போர்வைக்குள்ளே கைலாசபதி தன் சொந்த இயலாமையையும் ஆழமின்மையையும் மிகக் கெட்டித்தனமாக மறைத்துக் கொண்டார்.

தன்னைக் காப்பாற்றிக் கொள்ளக் கையாண்ட இந்த நழுவல் நிழல்முறை மற்றவர்களின் இலக்கியக் கருத்துகளைக் கண்டிக்கும்போதுகூட தர்க்கரீதியான யதார்த்த அணுகலுக்கு இடம் வைக்காமல் வெறும் நிழல் போராட்டங்களுக்குத்தான் வழிவிட்டிருக்கிறது. இவர், தான் சாட முயலும் எழுத்தாளர்களையோ அவர்களின் சிருஷ்டிகளையோ பொதுவாகப் பெயர் சொல்லிச் சாட முனைந்ததில்லை. இது ஒரு புதுவகை மரியாதை; பழைய பண்டிதர்களின் மரியாதைக்கும். இந்த மரியாதைக்குமிடையே வித்தியாசம் எவ்வளவோ இருக்கிறது. இந்த மரியாதை, மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பதை விடத் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் ஒரு மறைமுகமான முறையேதான். நியாயமாகப் பெயர் சொல்லி எழுதுவதுகூட Personal என்று கைவிடப்படும்போது, விளக்கமில்லாமல் தரங்குறைந்து பிடிகொடுக்காமல் எல்லாரைப்பற்றியும் எழுதலாம்.

ஆனால் அதே சமயம், எவருடைய எதிர்ப்பும் வெளிக் கிளம்பாது என்று நிச்சயமாகச் சொல்லலாம். கைலாசபதி காட்டிய இலக்கிய விமர்சனத்தின் அடுத்த பண்பு அது. அதாவது அடுத்த குறை. அவரின் தனிப்பட்ட குறை. அதனால் இலக்கிய விமர்சனம் என்பது விளக்கமற்ற நிழல் போராட்டங்களாக இங்கு மாறிவிட்டது. பின்பு அவரைப் பின்பற்றிய அகஸ்தியர் போன்ற விமர்சனக் கற்றுக்குட்டிகளும் (அகஸ்தியரைச் சிருஷ்டி எழுத்தாளர் என்ற ரீதியில் இங்கு குறிப்பிடவில்லை) 'தேசாபிமானி' போன்ற பத்திரிகைகளும் ('தேசாபிமானி'க்கு இலக்கிய விஷயங்களைப்பற்றி மட்டுமல்ல அரசியல் விஷயங்களைப்பற்றிக்கூட எதையும் தரமாகச் சொல்வதற்கு தகுதியில்லை. ஆனால் உதாரணத்துக்காக இங்கே அதைக் குறிப்பிடுகிறேன்.) இந்த நழுவல் முறையை அதன் உச்சத்துக்கே கொண்டுபோய் விட்டார்கள். அதோடு அவர்களுக்குப் போட்டியாக வந்த "நான்தான்" பேர்வழியும் பண்டிதர் பரசுராமனும், பால்ராஜுவும் அதன் அடுத்த உச்சத்தையும் காட்டிவிட்டனர். கடைசியில் இவையெல்லாம் இங்கு விமர்சனமாகி விடுகின்றனவென்றால் அதற்கு முழுக் காரணம் கைலாசபதியேதான்.

ஆனால் அவை பின்பு வந்தவை. அதற்கு முதல், வேறு பல இருக்கின்றன. கைலாசபதி காட்டிய நழுவல் விமர்சனத்தால் அதிக காலம் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது. கடைசியில் கைலாசபதிதான் மற்றவர்களை நேரடியாக நேர்மையாக அணுகத் தயங்கினாலும் மற்றவர்கள் அவரை அணுகத் தொடங்கும்போது அந்த நழுவல் விமர்சனம் தன்னை ஒன்றில் நியாயமாக நிரூபிக்க வேண்டும் அல்லது அது நிர்வாணமாக்கப்பட வேண்டும். அப்படி ஒரு சோதனைக் காலம் அண்மையில், எதிர்பார்த்தபடியே தவிர்க்க முடியாமல் வந்துவிட்டது. அதைச் சமாளிக்க கைலாசபதி கையாண்ட முறை இலக்கிய மாணவர்களுக்கு ஒரு நிரந்தரச் சுவையைக் கொடுக்கக்கூடியது.

முதலில் புதிய போக்கின் முக்கிய நிகழ்ச்சியை எடுக்காமல் ஒரு உபநிகழ்ச்சியை எடுப்பது நல்லது. மரபுபற்றி எழுந்த விவாதம் வெறும் பண்டிதர்களின் கூச்சலாக மாறும்போது அது நான் கூறும் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியின் கடைசிக் கட்டமாகிவிடும். அதையும் கலாநிதி சதாசிவத்தையும் பின்பு ஆராய வேண்டும். இருந்தும் அதை இப்போதைக்கு உதாரணத்துக்காக எடுப்பது இங்கு கைலாசபதியை விளக்குவதற்காகவேதான். மரபுபற்றி 'தினகரனி'ல் கட்டுரைகள் வந்தபோது பொதுவாகத் தாக்கப்பட்ட 'முற்போக்கு'க் கட்சியின் தலைவர் என்ற காரணத்தால் கைலாசபதியின் பதிலை பலர் எதிர்பாத்திருந்தனர். ஆனால் கைலாசபதி அவரின் வழமைக்கிணங்கத் தன்னைக் காட்டிக்கொள்ளவில்லை. அப்படிப்பட்ட மிக இலகுவான தர்க்கத்தில் கூடத் சொந்தக் கருத்துகளை இளங்கீரனிடம் ஒப்படைத்துவிட்டு அவர் தன் பெயரை விவகாரத்துக்குள் விட்டுவிடாமல் வெளியே நழுவிவிட்டார்.

அது ஒரு அற்ப விவகாரம் என்ற நினைவை விட தன் பெயருக்கு ஆபத்து வரலாம் என்ற பயந்தான் அந்த நழுவலுக்கு முக்கிய காரணம் என்று சொல்ல வேண்டும். இதே சந்தர்ப்பத்தில் அண்மையில் எழுந்த எதிர் முற்போக்கு வேகத்திற்குப் பின் கா.சிவத்தம்பியின் பெயர் அதிகமாக அடிபட கைலாசபதி பின்னால் போய்விட்டார் என்பதையும் கவனித்தல் நல்லது. முழுப் பொறுப்பையும் சிவத்தம்பியிடம் ஒப்படைத்துவிட்டு (இங்கிலாந்துக்குப் போகுமுன்பே) கைலாசபதி தப்பிவிட முயன்றிருக்கிறார் போலவே அது உணர்த்துகிறது. அதோடு கைலாசபதியை விடத் துணிவும் தன்னம்பிக்கையும் சிவத்தம்பியிடம் அதிகம் உண்டு என்று அதேவாக்கில் சொல்லவும் இப்போ இடமுண்டு.

இனி முக்கிய உதாரணத்துக்கு வரலாம். கைலாசபதியின் நழுவல் விமர்சனத்துக்கும் அவர் தலைமை தாங்கிய 'முற்போக்கு' இலக்கியத்துக்கும் உண்மையான சோதனை 'கலைச்செல்வி' நடத்திய 'முற்போக்கு இலக்கியம்' என்ற விவாதத்தோடுதான் வந்தது. 'முற்போக்கு' வாதத்தின் வீழ்ச்சியும், அதைவிட முன்னேற்றமும் தரமும் கொண்ட புதிய பார்வையின் எழுச்சியும் ஈழத்து இலக்கியத்தில் அந்த விவாதத்தோடு ஆரம்பமாகிறது என்பதுதான் என் எண்ணம். 'கலைச்செல்வி'யில் நான் எழுதிக்கொண்டிருந்தபோத இந்திய விமர்சக நண்பர் ஒருவர் "நீங்கள் மட்டும் தனியாக எதிர்நீச்சல் போடுகிறீர்களே, வெல்ல முடியுமா" என்று எனக்கு எழுதிக் கேட்டிருந்தார்.

'முற்போக்கு' வாதத்தை எதிர்த்தவர்கள் அதற்கு முன்பே இங்கு பலபேர் இருந்தாலும் ஈழத்தில் முதல் முறையாக தரத்தோடு நியாயமாக அச்சில் ஏறிய எதிர்ப்பு அதுவேதான். அதற்குப் பின்புதான் மற்றவர்களுக்குத் தைரியம் பிறந்தது. நேரடியாக இப்போ பெரும் துணிச்சலோடு பலர் எதிர் 'முற்போக்கு'க் கட்டுரைகள் எழுதுகிறார்கள் என்றால் அதற்கு வழிகாட்டி, 'கலைச்செல்வி'யில் வந்த 'முற்போக்கு' இலக்கியம் என்ற விவாதமேதான். அந்த விவாதத்தில் கைலாசபதியும் பங்கு பற்றுவதாக உறுதியளித்திருந்தார். ஆனால் நேரம் வந்தபோது அவர் மறுத்துவிட்டார். அதற்கு அவர் காட்டிய காரணம் பின்பு அந்த விவாதத்தில் பங்கு பற்றிய சோ. நடராசா personal ஆக எழுதிவிட்டார் என்பதுதானாம். ('கலைச்செல்வி' ஆசிரியர் கூறினார்) கைலாசபதியின் இலக்கியக் கொள்கைக்கும் அவரின் கட்சிக்கும் முதல் முதலாக ஒரு தரமான எதிர்ப்புக் கிளம்பியபோது அதைச் சமாளிக்க அவர் கையாண்ட இந்த முறை பரிதாபமானது.

ஆனால் அவரைப் பொருத்தவரையில் அது வழக்கமான ஒன்றே. Personal என்று சொல்லி விசயத்தை விட்டு நழுவுவது அவருக்குரிய ஒரு பண்பு. அந்தக் கட்டத்தில் அதன் அர்த்தம் நிழல் போராட்டம் ஆட முடியவில்லை என்பதுதான். ஆனால் 'கலைச்செல்வி'யில் நிழல் போராட்டம் ஆடாவிட்டாலும் அதற்குப் பின் 'தினகரனி'ல் அவர் ஆடாமல் இல்லை. முன்பு கூறிய அதே இந்திய விமர்சகரின் வார்த்தைகளில் சொல்லப்போனால், இன்றுங்கூடத் 'தினகரனு'க்கு கைலாசபதிதான் ஒரு father figure. எனவே, அதில்தான் அவர் பதிலளித்தார். 'எழுத்தாளர்களும் சதந்திரமும்' என்பது அந்தக் கட்டுரை. என் பெயர், ஊர் சொல்லாமல் நான் 'கலைச்செல்வி'யில் பாவித்த இரண்டொரு சொற்களை மேற்கோள்குறிக்குள் மாட்டி 'தனித்தன்மை' என்பதைச் 'சுதந்திரம்' என்று திரித்து அதைச் சூனியத்துள் புகுத்தி குழந்தைப்பிள்ளைத் தனமாய் எழுதினார்.

கடைசியில் கைலாசபதியின் கொள்கைப் பிரகடனம் என்றாகிவிட்டது! அதைப் படித்த போதுதான் நான் 'கலைச்செல்வி'யில் 'முற்போக்கு இலக்கியம்' பற்றி எழுதி அதுவரை ஒரு செத்த பாம்பை அடித்துக்கொண்டிருக்கிறேன் என்பது எனக்குத் தெரிய வந்தது. ஆனால் அந்தச் செத்த பாம்புதான் அதுவரை ஒரு பெரு நிழலாக, ஒரு புராணமாக நின்றிருக்கிறது. கைலாசபதியின் நிழல் போராட்டமும் நழுவல் விமர்சனமும் அப்போதுதான் விசயத்தில் அககறை கொண்ட மற்றவர்களுக்கும் தெரியவந்திருக்க வேண்டும். கடைசியில் கைலாசபதி காட்டிய நழுவல் விமர்சனத்தால் தன்னை நியாயமாக்கிக்கொள்ள முடியவில்லை. அது நிர்வாணமாக்கப்பட்டுவிட்டது.

அதற்குப் பின் கைலாசபதிக்கும் அவருடைய சகாக்களுக்கும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள ஒரே ஒரு வழிதான் இருந்தது. எதிர் 'முற்போக்கு' வேகம் அதிகரிக்க அதிகரிக்க, அதில் அதுவரை பேசாதிருந்தவர்கள் எல்லோரும் சேர்ந்துகொள்ள அந்த வழியைத்தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை என்றாகிவிட்டது. உண்மை முழுவதையும் ஒரே கட்சிக்குள்ளேயே காட்ட முயன்று அதனால் தர்க்கத்தையும் நியாயத்தையும் அறிவையும் மறுப்பற்ற பக்தியின் தலைமைக்குள் ஒப்படைத்துவிட்டு இயங்க முயலும் எந்தவகைக் கூட்டும் கடைசியில் தனக்கு எதிர்ப்பு வரும்போது வெறும் உடல்பலத்தைத்தான் கையாளும். அறிவாலும் தர்க்கத்தாலும் தன்னை நியாயமாக்கிக்கொள்ள முடியாமல் போகும்போது அதற்கு அதுதான் ஒரே வழி. அதற்குப் பின் பக்தி சரிவராது. பலந்தான் பாவிக்கப்படும்.

கடைசியில் கைலாசபதியும் 'முற்போக்கு'க் கூட்டும் அதைத்தான் பாவிக்கத் தொடங்கினர். பத்திரிகைகளில் எழுதப்படும் கட்டுரைகளால் முடியாமற்போன ஒன்றைக் கைலாசபதி கூட்டங்களில் வெறும் ஆள்பலத்தால் செய்யத் தொடங்கினார். தன் எதிரிகளைத் தோற்கடிப்பதற்காக கூட்டங்களில் ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டு வந்திருக்கும் அவரின் கையாட்கள் பாவிக்கப்பட்டனர். அவரின் கருத்துவன்மையும் விமர்சனமும் செய்ய முடியாத ஒன்றை அதற்குப் பின் அவரின் கையாட்கள் செய்ய முயன்றனர். இலக்கிய விமர்சனத்தை அதற்குப் பின் கைலாசபதி ஒரு தொழிற்சங்க அலுவலாகவும் விவகாரமாகவும் ஆக்கிவிட்டார். விமர்சகராக இருந்த அவரும் அதற்குப் பின் ஒரு மூன்றாந்தர தொழிற் சங்கத் தலைவராகிவிட்டார்.

கொழும்புத் தமிழ் மன்றம் விவேகானந்தா கல்லூரியில் நடத்திய கூட்டத்தில், கைலாசபதி நடந்துகொண்ட விதத்தையும் அவருக்குக் கிடைத்த பக்கபலத்தையும் அப்படித்தான் பார்க்க வேண்டும். அதே போக்கின் வளர்ச்சிதான் யாழ்ப்பணத்தில் நடந்த கூட்டங்குழம்பலும் முட்டை எறியும். அதற்குப்பின் 'முற்போக்கு'க் கூட்டு கருத்துவன்மையில் நிற்க முடியாத ஒன்றென்பது நிச்சயமாகிவிட்டது. அதற்குப் பின் வெறும் ஆள் பலத்தில்தான் அதன் செல்வாக்கு. ஆனால் இலக்கியத்தை நியாயமாகக் கருத்துவன்மையில் நிலைநாட்ட முயன்ற ஒரு கூட்டு, கடைசியில் உடல் பலத்தால் நிலைநாட்ட முயன்றதென்றால் அது ழுமு வீழ்ச்சியையும் தொட்டுவிட்டது என்பதுதான் அர்த்தம். கைலாசபதியின் செல்வாக்குக்கும் அதற்குப் பின் அதே கதிதான். கைலாசபதி என்ற புராணம், அதற்குப் பின் கிழிந்துவிட்டது.

புராணம் போய்விட்டது. ஆனால் அதன் வடு இன்னும் முற்றாகப் போய்விடவில்லை. கைலாசபதி காட்டிய நழுவல் நிழல் போராட்ட விமர்சனத்தின் விளைவுகள் பல. அவற்றுள் ஒன்று, அது 'முற்போக்கு'க் கட்சிக்காரர்களின் இலக்கியத்தரத்தையே. குறைத்ததுதான். அவர்களின் சிருஷ்டிகளை அது ஆராய முய்ன்றதில்லை. அதோடு, அச்சில் ஏற்றப்பட்டு நிரந்தரமாக விளக்கங்களுக்கும், கருத்துகளுக்கும் விடப்படாமல் வெளி எதிர்ப்பற்ற பக்திச்சூழல் நிறைந்த கட்சிக் கூட்டங்களில் மட்டும் பேசப்பட்டுக் காற்றில் விடப்படும்போது 'முற்போக்கு' எழுத்தாளர்களுக்கே தங்கள் கருத்துகள் பிழையாகவும் தெளிவற்றும் நிற்பது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. கடைசியில் அதே தெளிவற்ற கருத்துகள் புதிதாக வந்த இளம் எழுத்தாளர்களாலும் பத்திரிகாசிரியர்களாலும் பின்பற்றப்படும்போது இலக்கியதரம் வெறும் பக்தி மார்க்கத்தில் நிறுத்தப்பட்ட அறிவற்ற கேலி நிலையை அடைந்துவிடுகிறது. அண்மையில் 'தினகரனி'ல் யோ. பெனடிக்ற் பாலனால் 'உருவகச் சித்திரம்' என்ற பெயரில் எழுதப்பட்ட 'தத்துவம்' என்ற கதையைப் படித்தால் 'முற்போக்கு'க் கட்சிக்காரர்களின் இன்றைய ஞானம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை உணர முடியும்.

கதையில் வரும் ரிஷி சிருஷ்டியின் காரணத்தை 'ஏன்' (Why) என்ற ஆத்மீக அடிப்படையில் கேட்கிறான். சிஷ்யர்கள் 'என்ன?'(What) 'எப்படி?' (How) என்ற விஞ்ஞானக் கேள்விகளுக்குரிய 'பரிணாமம்' என்ற பதிலைக் கொடுத்துவிட்டு மதங்களுக்கு மட்டும் சொந்தமான ஆழ்ந்த 'ஏன்' என்ற கேள்விக்கும் பதிலளித்துவிட்டதுபோல் திருப்திப்படுகிறார்கள். விஞ்ஞானிகளே தங்கள் இயலாமையை ஒப்புக்கொள்ளும் ஓர் துறையிலும் அதன் கேள்வியிலும் நம் பெனடிக்ற் பாலனும் சரி, அவரைப் போன்ற மற்ற 'முற்போக்கு' எழுத்தாளர்களும் சரி, கைலாசபதியின் வாரிசுகள்தான். இன்றைய ஈழத்து 'முற்போக்கு' வாதிகள் `prep` வகுப்பில் முதல் முதலாக விஞ்ஞானம் படிக்க ஆரம்பித்துவிட்டுத் தாங்கள் ஏதோ மேதாவிகள் என்ற நினைவில் கத்தும் வளரிளம் பருவப் பையன்களாகத்தான் தெரிகிறார்கள். இவர்களின் 'prep' வகுப்பு விஞ்ஞான ஆசிரியர் வேறு யாருமில்லை, கைலாசபதியேதான்! இதன் பிரதிபலிப்பு 'நற்போக்கு'க் கட்சியிலும் இல்லாமலில்லை. மார்க்ஸைத் தாக்குகிறோம், மார்க்ஸீயத்தைக் கேலி செய்கிறோம் என்ற நினைவில் மார்க்ஸையோ, மார்க்ஸீயத்தையோ கொஞ்சமும் தெரிந்து கொள்ளாமல் கதை எழுதுபவர்களும் அதில் தாராளமாய் உள்ளனர். உதாரணத்துக்கு செம்பியன் செல்வன் 'கலைச்செல்வி'யில் எழுதிய 'சமத்துவம்' இங்கு போதும்.

கைலாசபதியைப் பற்றி இவ்வளவும் சொன்ன பின் திரும்பவும் ஒன்றை ஞாபகப்படுத்துவது நல்லது. கைலாசபதியின் குறைகள் பெரிதாய்த் தெரிகின்றனவென்றால் அது அவரைப் பற்றிய புராணம் பெரிதாய் வளர்க்கப்பட்டதினாலேதான் என்பதை மறந்துவிடக் கூடாது. அந்த அடிப்படையில் பார்க்கும்போதுதான் பெயருக்கேற்ற வகையில் அவர் எதையும் செய்யவில்லையே என்று குறைபட வேண்டியிருக்கிறது. அதனால்தான் அவரின் குறைகள் அத்தனை பெரிதாய்த் தெரிய வந்திருக்கின்றன. ஆனால் புராணம் இனி மறையத் தொடங்கிய பின் அவரின் நிறைவுகள் அவைக்குரிய நியாயமான பின்னணியில் நிறுத்தப்படும். அப்போது கைலாசபதி நம் இலக்கிய வளர்ச்சியை நிச்சயமாக ஒரு படி உயர்த்தவே செய்திருக்கிறார் என்பது வழிபாடற்ற நன்றியோடு ஒப்புக்கொள்ளப்படும். கனக செந்திநாதன்போல் கைலாசபதியும் ஒருவகை யுகசந்தி. 'ஈழகேசரி' பரம்பரை விட்ட இடத்திலிருந்து நம் இலக்கிய வளர்ச்சியை இன்னுமொரு படி உயர்த்திய பங்கு அவருடையது. அதற்கு மேல் நாம் அவரிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கக் கூடாது. எதிர்பார்க்கும்போதுதான் நாம் அவர்களைப் புராணங்களாக்கி விடுகிறோம்.

கைலாசபதியைப் பற்றிய ஆய்வு இத்துடன் முடிவடைகிறது. ஆனால் அதற்காக நம் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியைப் பற்றிய ஆய்வு முடிவடைந்துவிடாது. ஏழாண்டின் முடிவில், 1963இன் ஆரம்பத்தில் எப்படி கைலாசபதியும் அவர் தலைமை தாங்கிய 'முற்போக்கு'க் கூட்டினரும் திடீரென்று வீழ்ச்சி அடைந்தனர்? எப்படி ஒரு புதிய பார்வையின் தேவை தெரியவந்தது? யார் யார் அதைக் கொண்டு வந்தனர்? அப்படிப்பட்ட பல கேள்விகளுக்கு விடை காண்வேண்டும். அதோடு 1956க்குப் பின் 'முற்போக்கு'க் கூட்டின் இறுகிய சர்வாதிகாரத்துக்கும் - அப்படி அதைச் சொல்ல முடியுமானால் - பிரபல்யத்துக்கும் பின்னால், வேறு பல ஓட்டங்களும் மறைமுகமாக இருந்தே வந்திருக்கின்றன. அவற்றைத் தெரிந்துகொண்டால்தான் மேலே எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விடைகாண முடியும். எனவே, வசதிக்காக அவற்றை எல்லாம் விளக்குவதற்கு வேறு சில பிரமுகர்களை எடுத்து ஆராயலாம். கனக செந்திநாதன், எஸ்.பொன்னுத்துரை, தர்மு சிவராமு, மு.தளையசிங்கம், கலாநிதி சதாசிவம். இவர்கள் ஒவ்வொருவரும் நம் இலக்கியச் சூழலில் ஒரு தனி வகை ஓட்டத்தைப் பிரதிபலிக்கின்றனர். அவையெல்லாம் மிக அண்மையில்தான் நிச்சயமாகத் தெரிய வந்தாலும் அதுவரையும் 'முற்போக்கு'க் கூட்டால் மறைக்கப்பட்டிருந்தாலும் 'முற்போக்கு'க் கூட்டின் வளர்ச்சியின் ஆரம்பத்தோடு சேர்ந்தே அவையும் மறைமுகமாக வளரத் தொடங்கிவிட்டன. இனி அவற்றை ஆராயலாம்.

'நற்போக்கின்' ஆரம்பப் பின்னணி

1956க்குப் பின் கைலாசபதியால் தூக்கிவிடப்பட்ட 'முற்போக்கு'க் கூட்டு 60, 61இல ஏறக்குறைய ஒரு இலக்கியச் சர்வாதிகாரமாகவே வளர்ந்து 63இன் ஆரம்பம் வரை அப்படியே நின்று பிடித்தது. சர்வாதிகாரம் என்ற சொல் இங்கு சரியானதா என்று சிலர் சந்தேகிக்கலாம். ஆனால் அதை விட அக்கால இலக்கிய நிலையை விளக்குவதற்கு வேறு நல்ல வார்த்தை இல்லை. அந்த வகையில் ஈழத்து இலக்கிய உலகை அவர்கள் ஆக்கிரமித்துவிட்டிருந்தனர். அந்த ஆக்கிரமிப்புக்கு எற்ற வகையில் அவர்களின் சிருஷ்டிகள் தரம் நிறைந்தனவாய் இருந்தனவா, அவர்களிடையே தரமான சிருஷ்டி எழுத்தாளர்கள் இருந்தார்களா என்பவை எல்லாம் வேறு விசயங்கள். இலக்கியச் சர்வாதிகாரம் என்பது இலக்கியத் தர உச்சத்தைக் குறிக்கத் தேவையில்லை.

இங்கு அவர்களுக்குக் கிடைத்த பிரபல்யத்தையும் பிரசுர வசதிகளையுந்தான் அது குறிக்கிறது. ஒரு கூட்டு அடிப்படையில் அவர்கள் இயங்கியதும், அவர்களுக்குச் சார்பான கைலாசபதி 'தினகரனு'க்கு ஆசிரியராக வந்து அந்தப் பத்திரிகைக்குத் தரமான ஒர் இலக்கிய அக்கறையைக் கொடுத்ததும், அதோடு அந்தப் பத்திரிகைக்குப் போட்டியாக வேறு தரமான சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் இங்கு இல்லாமல் இருந்ததும் அந்த இலக்கிய ஆக்கிரமிப்புக்கு ஒத்து உதவின. ஆனால் எந்தச் சர்வாதிகாரமும் பெரும்பாலும் அதன் வெளித்தோற்றத்துக்கு ஏற்ற வகையில் உள்ளேயும் இயங்குவதில்லை. உள்ளே அதன் அதிகாரத்துக்கு முரணான பல எதிர் ஓட்டங்களும் எதிர் இயக்கங்களும் இருந்துகொண்டே இருக்கும். கனக செந்திநாதன், எஸ். பொன்னுத்துரை, தர்மு சிவராமு, மு. தளையசிங்கம், கலாநிதி சதாசிவம் ஆகியவர்கள் அப்படிப்பட்ட எதிர் ஓட்டங்களை நம் இலக்கிய உலகில் பிரதிபலிப்பவர்கள் என்பதனாலேயே அவர்களைத் தனித்தனியாக ஆராயலாம் என்று முன்பு கூறினேன்.

அது நம் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியின் அடுத்த பக்கங்களை, பொதுவாக வெளியே தெரியவராத வேறு பக்கங்களை, அதன் உள் ஓட்டங்களை எல்லாம் அலசி, ஒரு பூரணமான பொதுக் கணக்கெடுப்பு செய்ய உதவும். அதேசமயம் 'முற்போக்கு'க் கூட்டினரின் வீழ்ச்சிக்குரிய காரணங்களை ஆராய்வதாயும் அது இருக்கும்.

1956க்குப் பின்னர் 'முற்போக்கு'க் கூட்டினர் இலக்கியச் சர்வாதிகாரம் செய்தனர் என்றால் கனக செந்திநாதன் ஆரம்பத்தில் அதற்கு ஒத்துழைப்பவராகத்தான் இருந்தார். ஒரு Collaborator. வெகு காலத்துக்குப் பின்னர்தான் வெளிப்படையாக அதற்குத் தன் எதிர்ப்பைக் காட்டுபவராக மாறினார். மிக மிக அண்மையில்தான். ஆனால் அதுவும் பொது இலக்கியச் சூழல் 'முற்போக்கு'க் கூட்டினருக்கு எதிராக ஓடத் தொடங்குகிறது என்பதை உணர்ந்த பின்பு மட்டுமல்ல, பக்கபலமாக வேறு பலர் நிற்கிறார்கள் என்பதையும் நிச்சயமாகத் தெரிந்துகொண்ட பின்னர்தான். அந்த உண்மை தனிப்பட்ட ஒரு கனக செந்தியை மட்டும் விளக்குவதாய் இல்லை. ஒரு பரம்பரையையே விளக்குவதாய் நிற்கிறது. கனக செந்திநாதன் வெறும் தனிப்பட்ட ஒரு கனக செந்திநாதன் அல்ல, ஒரு பரம்பரையின் பிரதிநிதி; அவர் ஒரு பரம்பரை. தான் எழுதிய 'ஈழத்து இலக்கிய வளர்ச்சி' என்ற நூலில் கனக செந்தியே எல்லை பிரித்த 1920க்குப் பிந்திய 1930க்கு முந்திய இடைவெளிக்குரிய, புதிய இலக்கியத்துறைகளில் அக்கறை கொண்ட எழுத்தாளர்களின் பார்வை ஆழத்தையும் சிருஷ்டித் தரத்தையும் எடைபோடுவதற்கு கனக செந்தையையே எடுத்துக்கொண்டால் போதும்.

அவர் அவருடைய எல்லைப்படி 1950க்கு முந்தியவர். என்னுடைய கணக்குப்படி 1956க்கு முந்தியவர். பழைய ஈழகேசரிப் பரம்பரை. புதிய இலக்கியத் துறைகளில் அக்கறை கொண்ட அந்தப் பழைய பரம்பரையின் பிரதிநிதிதான் அவர். அந்தப் பிரதிநிதி 1956க்குப் பின் எப்படி இயங்கினார் என்பதை ஆராயும்போது அவர் பிரதிபலிக்கும் பரம்பரையும் எப்படி இயங்கிற்று, அது எப்படிப்பட்டது, புதிதாக வந்த விழிப்புக்கு முன்னால் அதன் தரம் எத்தனை ஆழம் வாய்ந்தது என்பவை எல்லாவற்றையுங்கூட மறைமுகமாக ஆராய்ந்துவிடலாம்.

இந்த இடத்தில் அதிக விளக்கத்துக்காக வேண்டி மெல்ல வழி தப்பிப் போகவேண்டியிருக்கிறது. 'முற்போக்கு'ச் சர்வாதிகாரத்தின் பின்னணியில் வைத்துக் கனக செந்தியையும் பழைய பரம்பரையையும் எடைபோடும் முன்னர் வேறு ஒன்றைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். புதிய விழிப்பின் ஆரம்பமாக 1956ஐ எடுத்து அதிலிருந்து நம் ஈழத்து இலக்கிய வளர்ச்சியை ஆராய்வதற்குரிய காரணத்தை எல்லாரும் விளங்கிக்கொண்டவர்களாக இல்லை. கனக செந்திநாதன் அதையே என் முக்கியக் குறையாகவும் கருதுகிறார். கனக செந்திநாதன் பழைய பரம்பரையின் பிரதிநிதி என்ற காரணத்தால் அந்தப் பரம்பரைக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்க முயல்வதை விளங்கிக்கொள்ளலாம். ஆனால் எந்தளவுக்கு நம் இலக்கிய வரலாற்றின் உள்துடிப்பு வித்தியாசங்களை அவர் புரிந்துகொள்ளார்.

1956ஐ எல்லையாக வைத்து நம் இலக்கிய வளர்ச்சியை ஆராய்கிறேன் என்றால் அதற்கு முன்னர் எதுவும் இல்லை என்பதல்ல அர்த்தம். அப்படி நான் எப்பவும் குறிப்பிட்டதில்லை. 1956ஐ நான் ஓர் எல்லையாகத்தான் பாவிக்கிறேன். எனவே, அந்த எல்லை ஏற்கனவே உள்ள ஒன்றைப் பிரித்துக் காட்டிய பின்பே ஒரு புதிய வளர்ச்சியின் ஆரம்பமாக நிற்கிறது. 1956க்குப் பின்பு வந்த காலத்தின் முக்கியத்துவத்தை இக்கட்டுரைத் தொடரின் ஆரம்பத்திலேயே விளக்கியிருக்கின்றேன். அதை இங்கு ஞாபகப்படுத்திக்கொள்வது நல்லது. 56க்கு முன்னிருந்த நம் பொதுச் சமூக, பொருளாதார, அரசியல் பின்னணி தனித்தன்மை நிறைந்த தரமான ஒரு சுதேச இலக்கிய வளர்ச்சிக்குச் சாதகமாக அமையவில்லை. அதனால் அப்போ இருந்த இலக்கிய முயற்சி காலத்தை எதிர்த்த ஒரு முயற்சியாகவே இருந்தது.

அதோடு அதே காரணத்தால் அது இந்தியச் செல்வாக்கு நிரம்பியதாகவும் இருந்தது. எப்படி அரசியல் சமூகத்துறைகளில் இங்குள்ள தமிழர்கள் தமிழ்நாட்டிலுள்ள நிலைகளால் வசீகரிகப்பட்டு அவர்களை அபிநயித்து வழிபட்டார்களோ அப்படியேதான் இலக்கியத்துறையிலும் இயங்கினார்கள். நேருவின் படத்தையும் காந்தியின் படத்தையும் தங்கள் வீடுகளில் தொங்கப்போட்டுவிட்டு, தங்கள் பொறுப்பையும் கடமைகளையும் இந்தியாவிலுள்ளவர்களிடம் இடம் மாற்றிவிட்டு சும்மா இருந்தார்கள். அல்லது அவர்களைப்போல் இவர்களும் கதர் ஆடை அணிந்தார்கள். 'ஜெய் ஹிந்த்' கோசம் போட்டார்கள். அது அரசியல் சமூகத்துறைகளில். அதேபோல் இலக்கியத்துறையிலும் தங்கள் பொறுப்பை இந்திய எழுத்தாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு ஒன்றுந் தெரியாமல் பழைய இலக்கியங்களோடு தூங்கினார்கள் அல்லது அவர்களையே அபிநயித்தார்கள். காலம் அப்படி. தங்கள் நிலை, பிரச்சினைகள் எல்லாம் வேறானவை, தாங்களும் வேறானவர்கள் என்ற எண்ணமும் எழவில்லை. அதற்கேற்ற இலக்கியமும் படைக்கப்படவில்லை.

1956க்கு முன்பிருந்த ஈழகேசரி, மறுமலர்ச்சிப் பரம்பரை எழுத்தாளர்களைப்பற்றி கனக செந்திநாதனே கூறுகிறார்.

"தமிழ்நாட்டு எழுத்தாளர்களான கு.ப.ரா. 'கல்கி' ஆகியோரது எழுத்தின் ஆதிக்க நிழல் இவர்களுடைய எழுத்துகளில் மலிந்திருக்கிறது. 'கலைமகளை'யும் 'ஆனந்தவிகடனை'யும் இலட்சியப் பத்திரிகைகளாக வைத்துக்கொண்டு எழுதிய தன்மையைக் கவனிக்க முடிகிறது"*

"மறுமலர்ச்சி வட்டச் சிறுகதை ஆசிரியர்களை மொத்தமாக நோக்குமிடத்து வாசகர்கள் அதிகம் பரவியிராத ஒரு காலத்தில், சிறுகதை இலக்கியத்தைப்பற்றி அலசி ஆராய்ந்து அதன் இலட்சணங்கள் தமிழில் வரையறுக்கப்படாத ஒரு நிலையில், மிக இளம்வயதில் தமக்குத் தெரிந்தவற்றை வைத்துக்கொண்டு, ஏதாவது எழுத்துலகில் செய்யவேண்டமென்ற துடிப்புடன் எழுத வந்தவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது."+

மேற்கூறிய பண்புகள்தாம் 1956க்குப் பின் வந்த பரம்பரையை வேறுபடுத்துபவை. 56க்குப் பின் வந்தவர்கள் அவற்றிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள மட்டும் செய்யவில்லை; முதல் முதலாகத் தங்கள் சமூகநிலை, வாழ்க்கை, பிரச்சினைகள் எல்லாம் தமிழ்நாட்டில் உள்ளவற்றை விட வேறானவை என்பதை உணர்ந்து தங்கள் பிரவேசப் பிரச்சினைகளைப் பிரதிபலிக்கும் தனித்தன்மை வாய்ந்த இலக்கியத்தை (முழுச் சுயஉணர்வுடன் படைக்கவும் தொடங்கினர். 56வரை நம் இலக்கிய எண்ணங்கள் எல்லாம் மற்ற துறைகளில் இருந்ததுபோல் இந்தியப் போக்கின் ஒரு குடல்வால் (appendix) ஆகவே இருந்தன. அந்த நிலையை அறுத்துக்கொண்டு நம் இலக்கியம் ஒரு புது உயிரையும் உடலையும் பெறத் தொடங்கியது. 56க்குப் பின்னரேதான். அந்த அடிப்படையில்தான் 56ஐ நம் இலக்கிய வளர்ச்சியில் ஓர் எல்லையாகவும் புதிய போக்கின் ஆரம்பமாகவும் நான் கருதுகிறேன். விழிப்படைந்த நம் பொதுச் சமூக, பொருளாதார, அரசியல்நிலை சுய
_________________________________________________________________________________________________
* ஈழத்து இலக்கிய வளர்ச்சி, பக்கம் 36
+ ஷை - பக்கம் 44

உணர்வுபெற்ற ஓர் தனித்துவ இலக்கியத்துக்கு 56க்குப் பின்புதான் உதவிற்று. சுதந்திரம் பெற்றபின்பு கூட அப்படி ஒரு சாதகமான பின்னணி ஏற்படவில்லை. 56க்குப் பின் பண்டாரநாயக்காவோடுதான் ஆரம்பமாயிற்று. எனவே, 56 வரையும் நடந்த இலக்கிய முயற்சி காலத்தின் ஒத்துழைப்பற்ற முயற்சி. அதனால் வலுவற்றது. தனித்தன்மை குறைந்த ஒன்று. சுயஉணர்வு அற்றது. கனக செந்திநாதனே தனது நூலில் 50க்குப் பிந்திய வளர்ச்சிக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். கொடுக்க வேண்டியவராக இருக்கிறார். 50 என்று அவர் வசதிக்காகப் பிரிக்கிறார். 56 என்று நான் சரித்திர, அரசியல், சமூக மாற்றங்களைக் காரணங்களாக வைத்துப் பிரிக்கிறேன். ஆனால், 56க்குப் பின்னர் ஏற்பட்ட மாற்றங்களில் பாதிப்பு கூட 59,60களில்தான் உண்மையாகத் தெரியவந்தது. நம் இன்றைய இலக்கிய வேகம் அப்போதுதான் ஆரம்பமாகியது.

50க்குப் பின்னரல்ல, 50க்கு முன்னரே இருந்து எழுதத் தொடங்கி இன்று வரை நின்றுபிடிப்பவர்கள் கூட மிக அண்மையில்தான் - 59,60க்குப் பின்னர்தான்- பிரபல்யம் பெறத் தொடங்கினர். தங்களை உணரவும் ஆரம்பித்தனர். வைத்திலிங்கம், சம்பந்தன், இலங்கையர்கோன் போன்று ஏற்கனவே எழுதி முடித்தவர்களுக்குக் கிடைக்கவேண்டிய கணிப்பு இப்போதுதான் கிடைக்கிறது. அதுபோல சொக்கன், சு.வே. போன்று முன்பே ஆரம்பித்தவர்கள் கூட இப்போதுதான் தங்களை உண்மையாக உணர்ந்து எழுதுகிறார்கள். 56க்கு முன்பே எழுதியவர்களின் ஆக்கங்கள் இப்போதுதான் நூல்வடிவம் பெறுகின்றன.

 அப்படி இருந்தும் ராஜமய்யரின் நாவலைப்போல், புதுமைப்பித்தனின் கதைகளைப்போல் முந்திய பரம்பரைகளுக்குச் சொந்தமாய் இருந்தும் இன்றும் தங்களுக்கு நிகரில்லாமல் நிற்கும் எந்த ஆக்கமாவது கனக செந்திநாதன் கூறும் 50க்கு முந்திய பரம்பரையிலிருந்து இன்றுவரை நின்று பிடிக்கிறதா? கவிதைத்துறை ஒரு புறநடை. அந்தத் துறை தமிழர்களுக்குப் பழக்கமான ஒரு பழைய துறை என்ற காரணத்தால் 50க்கு முந்தியே தரம் வாய்ந்தவை அந்தத் துறையில் வந்துவிட்டிருந்தன. ஆனால் அப்படி இருந்தும் அந்தத் துறையில்கூட புதிய வேகத்தைக் காட்டும் ஒரு பாரதியை, 50க்கு முந்திய பரம்பரையால் காட்ட முடிந்ததா? முந்திய சோமசுந்தரப் புலவரையும் இன்றுவரை வாழும் மஹாகவியையும் இன்னும் வடிவாய்க் கண்டுபிடிக்கவில்லை என்பது உண்மையாய் இருப்பினும் அவர்களைப் பாரதியோடு ஒப்பிட முடியுமா? பாரதிக்கேற்ற சூழல் நம் நாட்டில் அப்போது இருக்கவில்லை. கனக செந்திநாதனது நூலில் முதல் அறுபத்தெட்டு பக்கங்களுடன் முடிந்துவிடும் பழைய பரம்பரையின் வரலாற்றைப் படிக்கும்போது ஏதோ முன்பு தொட்டே நாங்களும் புதுத்துறைகளில் அக்கறைப்பட்டிருக்கிறோம் என்று நம்மையே நாம் திருப்திப்படுத்திக்கொள்ளும் ஒரு மருட்சி ஏற்பட்டிருக்கிறதே ஒழிய பெரும் சாதனையாகக் காட்டுவதற்கு ஏதாவது கிடைத்திருக்கிறதா?

உண்மை, பாரதியோடும் புதுமைப்பித்தனோடும் ராஜமய்யரோடும் ஒப்பிடக்கூடியவர்களை 56க்குப் பின்னர் கூட நான் இன்னம் முடிவாகக் கண்டுபிடிக்கவில்லைதான். ஆனால் 56க்குப்பின் ஏற்பட்ட ஓட்டங்கள் முடிவடைந்துவிட்டனவா, எதையும் முடிவாகச் சொல்வதற்கு? இப்போதுதான் புதிய பரம்பரை வளரத் தொடங்கியிருக்கிறது. ஆனால் ஆரம்பத்திலேயே அது தன்னை நிச்சயமாகப் பிரித்துக் காட்டிக்கொண்டே ஆரம்பித்திருக்கின்றது. இப்போ சாகித்தியப் பரிசு வென்ற எழுத்தாளர்கள் அதன் சாதனைகள் அல்ல. அதன் விளைச்சல்கள் இனித்தான் வரவேண்டும்.

அதற்குரிய நம்பிக்கை அதனிடம் இருக்கிறது. ஐரோப்பாவின் கலை ஆதிக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தனக்கே உரித்தான, மற்றவர்கள் தன்னை அபிநயிக்கக்கூடிய, ஆக்கங்களைப் படைக்கத் தொடங்கிய ஒரு புதிய பரம்பரை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து அமெரிக்காவில் வளரத் தொடங்கியது. அப்படி ஒன்று 'இப்போ ஈழத்தில் ஆரம்பித்திருக்கிறது. தமிழ்நாட்டின் கலை ஆதிக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தனித்தன்மையோடு தானாகவே இயங்கும் ஒரு போக்கும் புதிய பரம்பரையும்! 1956 அவற்றின் ஆரம்ப எல்லை. 56க்கு நான் முக்கியத்துவம் கொடுப்பது அந்த அடிப்படையில்தான்.

இவ்வளவும் வழிதப்பிய விளக்கங்கள். கட்டுரைத் தொடரின் ஆரம்பத்திலேயே இவற்றைக் கூறவில்லையா? இருந்தும் கனக செந்திநாதனை ஆராயும்போது இந்த எல்லை முக்கியத்துவத்தைப்பற்றிய சரியான உணர்வு இருப்பது நல்லது. புதிய விழிப்பின் புதிய பரம்பரையின் பின்னணியில் வைத்து அவரை ஆராயும்போது வித்தியாசத்தை அறிவதற்கு அந்த உணர்வு அவசியம். இனி அவரிடம் வரலாம்.

56க்குப் பின் 'முற்போக்கு'க் கூட்டினரின் சர்வாதிகாரம் எற்பட்டபோது கனக செந்திநாதன் அதற்குக் கைகொடுத்து உதவவே செய்தார். ஒரு collaborator. அது அவருக்கும் அவருடைய பரம்பரைக்கும் உரிய இரண்டு முக்கிய பண்புகளை விளக்குகிறது. ஒன்று, அவருக்கும் அவருடைய பரம்பரையினருக்கும் உண்மையாகத் தரமான இலக்கியத்தில் அக்கறை இருந்தது. அதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஒருவகைத் தேடல். ஆனால் அந்த அக்கறை, பார்வை ஆழத்தையோ பார்வை வலுவையோ பக்கபலமாகச் சேர்ந்திருக்காத ஒன்று. அது இரண்டாவது. அது அவருடைய, அவர் பரம்பரையினுடைய குறை.

அதனால் கனக செந்திநாதன் தானே தனியாக நிற்க முடியாதவராகி விடுகிறார். ஏதாவது ஒரு துணையில் பற்றிப் படரத்தான் அவரால் முடியும். ஆரம்பத்தில் முற்போக்குக் கூட்டும், பொதுப் பின்னணியில் ஏற்பட்ட விழிப்பை இலக்கிய ரீதியாக அது பயன்படுத்திய விதமும் கனக செந்திக்கு ஒரு புதிய இலக்கிய ஆழத்தை மட்டும் காட்டவில்லை. பற்றிப் படர்வதற்கு ஒரு துணையையுந்தான் காட்டின. மிக ஆவலோடு அவர் சுற்றிக்கொண்டார். ஆனால் ஒத்துழைக்கும்போது விட்டுக்கொடுக்க வேண்டி மட்டுமல்ல தூக்கிக்கொடுக்க வேண்டியும் வரும் 'தினகரனி'ல் அவர் ஈழத்து இலக்கிய வளர்ச்சிபற்றிக் கட்டுரை எழுதியபோது அவை இரண்டையும் செய்ய அவர் தவறவில்லை. 'முற்போக்கு'க் கூட்டின் சர்வாதிகாரம் பின்னர் வளரத் தொடங்கியபோது, அவர்களின் உள் விவகாரங்கள் ஒத்துழைப்பவருக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டிருக்க வேண்டும். Tacticsஐ அடிப்படையாகக் கொண்ட அரசியல் பார்வையுள்ள ஓர் இலக்கியக் கூட்டின் கைக்கருவியாகிவிட்ட ஓர் அவல நிலையையும் அவர் உணரத் தொடங்கியிருக்க வேண்டும்.

அதோடு உண்மையாகவே அவர்களின் கொள்கைகளும் நடத்தைகளும் வர வரத் தெரியவரும்போது அவருக்குப் பிடிக்காமல் போயிருக்க வேண்டும். கொழும்பில் 'முற்போக்கு'க் கூட்டினர் எழுத்தாளர் மகாநாடு நடத்தியபோது நடத்தியபோது அந்தத் திருப்பம் எற்பட்டதாம். கனக செந்தி அதை மிக ஆர்வத்தோடும் உணர்ச்சியோடும் சொல்வார். இருபத்தைந்து வருடங்களாக இலக்கிய விவகாரங்களில் ஈடுபட்ட ஒருவரின் தணியாத ஆர்வம் அது. கேட்கும்போது அவரில் மரியாதையும் அபிமானமும் ஏற்படவே செய்யும். என்றும் நம் ஈழத் தமிழுலகம் அவருக்கு அந்த அபிமானத்தைக் காட்டவே செய்யும் ஆனால், என்றுமே அது ஓர் அடைமொழி சேர்க்கப்பட்ட அபிமானமாகவே இருக்கும் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

காரணம் அவர் 'முற்போக்கு'க் கூட்டுக்கு எதிராகத் தன்னைத் தயாரித்தது இன்னுமொரு கூட்டில் தன்னை இழப்பதற்குத்தான். பொன்னுத்துரை குழந்தைப்பிள்ளைத்தனமாக 'நற்போக்கு' என்று அதற்கு இப்போ நாமம் சூட்டியிருக்கிறார். 'முற்போக்கு'க் கூட்டில் ஏற்பட்ட தனது அதிருப்தியையோ வெறுப்பையோ கனக செந்திநாதன் ஒரு தரமான கட்டுரை எழுதி வெளிப்படுத்தவில்லை. அப்படி எழுதித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் கனக செந்திநாதனைப் பொருத்தவரையில் அப்படித் தன் கருத்தை வெளிப்படுத்தாது அவருடைய வேறு ஒரு தன்மையை வெளிப்படுத்துகிறது.

 அனாவசியமாகத் தன் செல்வாக்கைக் குறைத்துக்கொள்ள விரும்பாமல் காற்று வீசும் திசையை நிச்சயமாக உணரும் வரைக்கும் மதில்மேல் பூனைபோல் மௌனமாகக் காத்திருக்கலாம். ஆனால் அதுமட்டும் அவருடைய மௌனத்துக்குக் காரணமாகாது. முக்கியமான காரணம் தர்க்கத்தாலோ கட்டுரைகளாலோ 'முற்போக்கு'க் கூட்டினரைத் தாக்கும் திறமையும் வலுவும் கனக செந்திநாதனுக்கு இல்லை. அவருக்கு மட்டுமல்ல, பொதுவாக அவர் பிரதிபலிக்கும் பரம்பரைக்குமே கிடையாது. இல்லாவிட்டால், 'முற்போக்கு'க் கூட்டினரால் நம் இலக்கிய வரலாற்றில் ஒரு புது வளர்ச்சியைப் பிரதிபலிப்பவர்களாக வந்திருக்க முடியாது.

முந்திய பரம்பரையின் வலுவற்ற இயலாத் தன்மைதான் புதிய பரம்பரையை அந்தளவு வேறுபடுத்திக் காட்டுகிறது. கனக செந்திக்கு கைவந்த விசயம், எழுத்தாளர்களையும் அவர்களின் சிருஷ்டிகளையும் பற்றிப் பட்டியல் எழுதுவதுதான். ஆனால்அந்தக் கெட்டித்தனம் ஒன்று மட்டும் 'முற்போக்கு'க் கூட்டினரை முறியடிக்க உதவியிருக்காது. எனவே, தனித்து நின்று தன் அதிருப்தியையோ, வெறுப்பையோ, தன் சொந்தக் கருத்துகளையோ அவரால் காட்ட முடியவில்லை. மாறாக, சுற்றிப் படர்வதற்கு வேறு ஒரு பொறுப்பு கிடைக்கும் வரைக்கும் அவர் தருணம் பார்த்துக் காத்திருந்தார். தருணம் வராமல் போய்விடவில்லை. புதிய எதிர் - 'முற்போக்கு' வேகம் பிறந்தபோது தருணமும் வந்தது.

 காற்று எந்தப் பக்கம் வீசுகிறது என்பதும் நிச்சயமாகத் தெரியவந்தது. அவர் கண்டுபிடித்த புதிய பொறுப்பு எஸ். பொன்னுத்துரை. மட்டக்களப்பு விழா, பொன்னுத்துரையின் பேரவாவை மட்டும் தீர்க்கவில்லை. கனக செந்தியின் சபலத்தையும் தீர்த்துவைத்தது. ஆனால் கனகசெந்தி எந்தளவுக்கு அதற்குப் பின் தன்னை காப்பாற்றிக் கொண்டார்?

அந்தக் கேள்வி எழும்போதுதான் கனக செந்தியின் மீதுள்ள நம் அபிமானம் குறைந்துவிடுகிறது. அதற்கு அடைமொழி சேர்க்க வேண்டிய நிலை தவிர்க்க முடியாமல் வந்துவிடுகிறது. உண்மையில் அவருக்காக அனுதாபப் படாமல் இருக்க முடியாது.

பொன்னுத்துரையையும் 'நற்போக்கு'க் கூட்டையும் பற்றிக் கொண்ட பின் கனக செந்தியின் இருபத்தைந்து வருட இலக்கிய அக்கறையின் சின்னமாக வெளிவந்திருக்கிறது அவருடைய 'ஈழத்து இலக்கிய வளர்ச்சி' என்னும் நூல். 'தினகரனி'ல் ஈழத்திலக்கிய வளர்ச்சிபற்றி எழுதிய கட்டுரைத் தொடர் காலத்துக்கேற்றவகையில் விரித்து நூலாக்கப்பட்டிருக்கிறதாம். அதன் மூலம் ஈழத்து இலக்கிய வளர்ச்சியை விட கனக செந்திநாதனின் வளர்ச்சியை, இல்லை வீழ்ச்சியைத்தான், அதிகமாகப் படிக்கலாம். படிக்க வேண்டும். 'தினகரனி'ல் வந்த கட்டுரைத் தொடரையும் அதையும் ஒப்பிட்டு யாராவது அக்கறைப்பட்டவர்கள் விரிவாக ஒரு தனிக் கட்டுரையே எழுத வேண்டும். இலக்கிய மாணவனுக்கு அது ஒரு சுவையான விருந்தாக இருக்கும்.

 நம் எதிர்கால இலக்கிய வளர்ச்சிக்கு அது கட்டாயம் தேவையுங்கூட. இக்கட்டுரைத் தொடரை இடையில் வேண்டுமென்றே தேவைக்கதிகமாக நிறுத்தித் தாமதிக்க வைத்துங்கூட 'தினகரனி'ல் வந்த கனக செந்தியின் பழைய கட்டுரைகளைப் பெற முடியாமல் போனதால் அப்படி ஒரு அலசலை இங்கு செய்ய முடியாமல் இருக்கிறது. 'முற்போக்கு'க் கூட்டுக்கு ஒத்துழைத்தபோது கனக செந்தி எவ்வளவு தூரம் தன்னை இழந்தார் என்பதையும் பின்பு 'நற்போக்கு'க் கூட்டில் சேர்ந்த பின் எவ்வளவு தூரம் தன்னைப் பறிகொடுத்திருக்கிறார் என்பதையும் அவை இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தான் வடிவாகப் படிக்கலாம். இங்கு அது முடியாமல் இருக்கிறது. எனவே, 'நற்போக்கி'ல் சேர்ந்த பின் எவ்வளவு தூரம் அவர் தன்னை இழந்திருக்கிறார் என்பதை மட்டும் இங்கு பார்க்கலாம். ஆனால் இப்போ அது பலருக்குத் தெரிந்த இரகசியமாகப் போய்விட்டது. இருந்தும் நம் இலக்கிய வளர்ச்சியை வரலாற்று ரீதியில் இங்கு ஆராய முயல்வதால் ஒரு சில உதாரணங்களையாவது அச்சில் ஏற்றுவது தேவையாகிறது.

'ஈழத்து இலக்கிய வளர்ச்சி'யைப் படிக்கும்போது முதலில் எழும் பிரச்சினை எங்கே அதில் கனக செந்திநாதன் இருக்கிறார் என்பதைத் தேடிப் பிடிப்பதுதான். எவ்வளவு தூரம் தேடத் தொடங்குகிறோமோ அவ்வளவு தூரம் அவர் காணாமல் போய்விடுகிறார். கனக செந்திநாதனது பெயரை யாராவது இரவல் வாங்கிக்கொண்டார்களா? அல்லது கனக செந்தி தன் பெயரை நம் இலக்கியச் சந்தையில் விற்கவும் செய்கிறவரா? கனக செந்தியிடம் பல குறைகள் இருக்கலாம். ஆனால் போற்றிக் காப்பாற்றுவதற்கும் அந்தப் பெயரில் நிறைவுகள் இல்லாமலில்லை. நம் இலக்கியத்தில் அக்கறையுள்ள எவரும் அதைத் துஷ்பிரயோகம் செய்யக் கூடாது. கனக செந்திககுக்கூட அந்த உரிமை இல்லை.

மட்டக்களப்பு விழாவில் கனக செந்தியைச் சந்திக்கும்போது தர்மு சிவராமுவைப்பற்றி அவர் என்னிடம் சொன்னதை இங்கு உதாரணமாகக் காட்டலாம். தர்மு சிவராமுவைப் போன்று புதிய பார்வையோடு நல்ல தரமான இலக்கியக் கட்டுரைகள் எழுதுவபவர்கள் அதிகம் பேர் நம் நாட்டில் இல்லையென்றும் அவரைப் போன்று இன்னும் பலர் நமக்குத் தேவையென்றும் அவர் என்னிடம் கூறியபோது உண்மையான கனக செந்தியை என்னால் காண முடிந்தது. பழைய பரம்பரைக்கும் புதிய பரம்பரைக்குமுள்ள வித்தியாசத்தை ஒப்புக்கொள்ளும் ஒரு பாவம் மட்டும் அவரிடம் தொனிக்கவில்லை. பழைய பரம்பரைக்குள்ள நேர்மையும் (அரசியல் காரணங்களுக்காக உண்மையை ஒப்புக்கொள்ளாமல் எல்லாவற்றையும் திருகும் புதிய tactics என்ற ஓன்று புதிய பரம்பரைக்கு மட்டுந்தான் உரியது.)

 கனக செந்திக்குள்ள உண்மையான இலக்கிய அக்கறையும் கூடவே தொனித்தன. அதோடு அது உண்மையுங்கூட. தர்மு சிவராமுவிடம் குறைகள் பல இருந்தாலும் நிறைவுகள் எவ்வளவோ இருக்கின்றன. 'முற்போக்கு'க் கூட்டுக்குப் பின் வந்த அதிக ஆழங்கூடிய புதிய வேகத்தைப் பிரதிபலிப்பவர்களில் அவரும் ஒருவர். எனவே, கனக செந்தியின் கூற்று நியாயமானதே. ஆனால் அந்தக் கனக செந்தியை அவரது நூலில் காணவில்லை. திடீரென்று தர்மு சிவராமு, அவருடைய கண்களில் ஒன்றுந் தெரியாத ஒரு குழந்தைப்பிள்ளையாக மாறிவிட்டார். அது மட்டுமல்ல. விஞ்ஞான விஷயங்களைப் பற்றி அதிகம் தெரிந்தவராக கனக செந்தியும் அத்தனை சீக்கிரம் வளர்ந்துவிட்டார்.

 ஐன்ஸ்டீனின் சார்புத் தத்துவத்துக்குப் பின் பழைய லோகாயுதவாதிகளின் ஜடம் பற்றிய கொள்கைகள் பிழைத்து விடுகின்றன என்பதுவும் வேதாந்தத்தின் 'எல்லாம் சக்தி' என்ற கொள்கை நியாயமாக்கப்படுகிறதென்பதுவும் உண்மை. அதைத்தான் தர்மு சிவராமு 'தீ' பற்றி எழுதிய கட்டுரையில் ஞாபகப்படுத்த முயன்றார். பொன்னுத்துரை அதைப் புரிந்து கொள்ளாமல் விதண்டாவாதம் செய்தார். (அதைப் பின்பு விளக்க வேண்டும்.)

ஆனால் திடீரென்று எப்படி கனக செந்தியின் நூலிலும் அதே அறியாமையும் விதண்டாவாதமும் உள் நுழைந்தன? கனக செந்திக்குச் சொந்தமாக அபிப்பிராயம் தெரிவிக்கப் பயமென்றால், முடியாதென்றால் எந்தவித நடிப்புமின்றி சும்மா ஒரு எழுத்தாளர் பட்டியலை மட்டும் தந்திருக்கலாம். இப்படி இரவல் வாங்கப்போய் தன்னையே இழந்திருக்கக் கூடாது. வரலாற்றுக்காக இன்னமொரு உண்மையை அச்சில் ஏற்றிப் பதித்துவைக்க விரும்புகிறேன். காரணம், அதன் மூலம் கனக செந்தியின் நூலில் காணப்படும் கருத்துகளுக்குரிய ஊற்றைக் கண்டுபிடிக்கலாம் என்பதோடு இன்றுமோர் ஒப்பு ஆராய்ச்சிக் கட்டுரைக்கு அது உதவவும் கூடும் என்பதே. உதவ வேண்டும்.

ஆங்கிலத்தில் poetry என்பதை recite பண்ணுவார்கள். (செய்யுள்களை ஒப்புவிப்பார்கள்) song என்பதைப் பாடுவார்கள். இவற்றினை ஒன்று சேர்த்து பாட்டை 'ஓதல்' என்று குழப்புவதிலே அர்த்தமிருப்பதாக எனக்குப் படவில்லை.*

'ஆங்கிலத்தில் poetry எழுதுகிறார்கள்......... அதை recite பண்ணுவார்கள். இதைக் கொண்டுவந்து தமிழிற் புகுந்தி 'பா ஓதல்' என்று மோசஞ் செய்கிறார்கள்.'+
_____________________________________________________________________

*கனக செந்திநாதன் 'ஈழத்து இலக்கிய வளர்ச்சி' பக்கம் 198
+ எஸ்.பொன்னுத்துரை, 'நற்போக்கு இலக்கியம்' - 'வீரகேசரி'.

இவ்வளவும் கூறிய பின் கனக செந்தியையும் அவர் பிரதிபலிக்கும் பரம்பரையையும் புதிய விழிப்பின் பின்னணியில் வைத்து முடிவாக எடைபோட்டுத் தீர்ப்புக் கூறுவது நல்லது. ஏன் இப்படி கனக செந்திநாதன் தானாகவே வலியத் தன்னைப் பறிகொடுத்துவிட்டிருக்கிறார்? காரணம், அவரின் பார்வை ஆழமின்மையே.

அவர் பிரதிபலிக்கும் பரம்பரையின் பொதுவான இலக்கியக் குறை அது. 1956ஐப் புதிய எல்லையாக எடுப்பவர்களைச் சாட முயலும் கனக செந்திநாதன் எந்த நூலில் சாட முயலுகிறாரோ அந்த நூலாலேயே தோற்றுவிடுகிறார். அந்த நூலிலேயே அவர் கூறும் இலக்கியப் பரம்பரையின் ஆழமின்மையை அச்சில் ஏற்றி நிரூபித்து விடுகிறார். பழைய பரம்பரையின் குறைகள் தவிர்க்க முடியாதவை. ஆனால், அதனிடம் சில நிறைவுகளும் இருந்தன. அந்த நிறைவுகளைத்தான் நம் இலக்கிய உலகம் கனக செந்தி மூலம் அனுபவிக்க விரும்புகிறது. அவற்றைக் கொடுக்கக் கூடியவர் என்பதினால்தான் கனக செந்தி நம் இலக்கிய உலகில் ஒரு முக்கியமானவர் ஆகிறார்.

அவருடைய நூல் அந்தப் பொறுப்பைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். ஆனால் தனக்கும் தன் பரம்பரைக்குமுரிய அதே குறைகளை, எல்லோருக்கும் தெரிந்த அந்தக் குறைகளை, மறைப்பதற்காக நம் இலக்கிய உலகம் அவரிடமிருந்து எதிர்பார்க்கும் நிறைவுகளையுமே அழித்துவிடுகிறார். 'ஈழத்து இலக்கிய வளர்ச்சி'யில் அவர் அதைத்தான் பார்வை ஆழமின்மையை மறைத்து, புதிய பரம்பரையின் வளர்ச்சிக்கேற்றவாறு நடிக்க முயன்று (அதனால் புதிய பரம்பரையின் பார்வை அப்படி ஒன்றும் பெரிதல்ல என்று நிரூபிக்க முயன்று) தன்னையே இழந்ததுமல்லாமல் மற்றவர்களின் கருவியாகவும் அவர் மாறிவிட்டிருக்கிறார். அவரது பரம்பரையின் குறைகள் பெரியவைதான்.

ஆனால் அந்தளவுக்கு, தன்னை இழக்குமளவுக்கு, அவை ஒருவரைத் தூண்டத் தேவையில்லை. கனக செந்தியே வலிந்து தன்னை விற்றுச் சிலரைத் திருப்திப்படுத்த முயன்றிருக்கிறார் என்பதுதான் பாதிக் காரணம். இருபத்தைந்து வருடங்களாக இலக்கியத்தில் அக்கறைப்பட்டுவரும் ஒருவர் எதிர்காலத்தைப் பற்றிய எண்ணம் கொஞ்சமுமற்று இரண்டொருவரைத் திருப்திப் படுத்துவதற்காக வேண்டித் தன்னைப் பறிகொடுத்திருக்கக் கூடாது. ஒரு பெரிய எழுத்தாளர் பட்டியலை நூல் வடிவில் கொடுத்திருக்கிறார் என்பதல்ல கனக செந்தியின் குறை. பல்வேறு ஓட்டங்களையும் ஆராயாமல் விட்டுவிடுகிறார் என்பதல்ல அவரின் குறை.

அவரின் சொந்த இலக்கிய அபிப்பிராயங்கள் நீடித்து நிற்கும் வலுவற்றவை, ஆழமற்றவை என்பதல்ல குறை. கனக செந்திநாதனிடமிருந்தோ அவர் பிரதிபலிக்கும் பரம்பரையிடமிருந்தோ நம் இலக்கிய உலகம் அவற்றுக்கப்பால் வேறு எதையும் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் குறை என்னவென்றால், அவற்றைக் கூட அவரால் இப்போ சீராகத் தர முடியவில்லை என்பதுதான். ஆழமற்றதாய் இருந்தாலும் அவரிடமிருந்து நாம் எதிர்பார்த்த இந்த நேர்மையான சொந்த அபிப்பிராயங்களையும் அவருக்கே உரிய அந்த நீண்ட பட்டியல் முறையையுங் கூட இப்போ அவர் சிதைத்துத்தான் தந்திருக்கிறார்.

இத்தனையும் கூறிய பின் இங்கு ஒன்றைத் திரும்பவும் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும். கனக செந்திநாதனைத் தனியே இங்கு எடுத்து ஆராய்ந்தது அவர் ஒரு தனியான ஓட்டத்தைப் பிரதிபலிப்பதோடு பழைய பரம்பரையின் பிரதிநிதியாகவும் இருக்கிறார் என்பதனாலேயே. அந்த அடிப்படையிலேயே மேலே கூறப்பட்டவை விளங்கிக்கொள்ளப்பட வேண்டும். கனக செந்தியை நாம் அதிகமாகக் கண்டிக்கிறேன் என்று முன்பு சிலர் குறைபட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் குறை என்னவென்றால் அரசியல், சமூகத்துறைகளை அணுகுவதுபோல் இலக்கியத்துறையையும் அவர்கள் அணுகுவதுதான்.

எல்லோருக்கும் சம அந்தஸ்து, எல்லோருக்கும் சம உரிமைகள் என்ற கொள்கைக்கு இலக்கியத்தில் இடமில்லை. இலக்கியத்தில் திறமைக்குத்தான் இடமுண்டு. இலக்கியத்தில் இலக்கிய நொண்டிகளுக்கும், குருடுகளுக்கும் சம உரிமை கிடையாது. எனவே, இலக்கியக் கண்டனம் தெரிவிக்கப்படும்போது அதைத் தனிப்பட்ட முறையில் கண்டிப்பதாகத் திரித்துக் கூறுவது முட்டாள்தனமாகும். தனிப்பட்ட முறையில் எனக்கு கனக செந்தியிடம் அதிகமான அக்கறையும் அன்பும் உண்டு. (ஒரு சிலவேளை அதன் காரணமாகத்தான் அவரை நான் அதிகம் ஆராய முயல்வதாயும் இருக்கலாம்.

சொந்த அண்ணனை தம்பி நல்ல எண்ணத்துடன் கண்டிப்பதுபோல்) தனிப்பட்ட முறையில் அவர்மேல் எனக்கு அதிக அபிமானம் உண்டு. ஆனால் அது வேறு. என்னைப் பொருத்தவரையில், என்று நாம் கனக செந்தியை ஆராயத் தொடங்கினோமோ அன்றுதொட்டே விமர்சகர்களைப்பற்றிய நமது பார்வையில் மட்டுமல்ல இலக்கியத்தைப்பற்றிய நம் பார்வையிலும் கூட ஆழம் விழுந்துவிட்டது என்பதுதான் எண்ணம். அந்த நினைவில்தான் திரும்பவும் கனக செந்தியைப்பற்றி, அவருக்குக் காட்டவேண்டிய அபிமானத்தோடு, இங்கு குறிப்பிட முயன்றிருக்கிறேன்.

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home