"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Eelam Tamil Literature > ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி - மு. தளையசிங்கம் முன்னுரை > அரசியல், சமூக, பொருளாதாரப் பின்னணி > பொதுப் பின்னணியைப் பிரதிபலிக்காது முன்னுக்குத் தள்ளப்பட்ட 'முற்போக்கு இலக்கியம்' > சோஷலிச யதார்த்தமும் 'முற்போக்கு' இலக்கியமும் > 'நற்போக்கும்' 'முற்போக்கும்' > 'முற்போக்கு' எழுத்தாளர்களின் அருவருக்கத்தக்க காட்சிகள் > சர்வாதிகாரத்தைக் கண்டு தப்பி ஓடியவர் > சர்வாதிகாரத்தை தனித்து நின்று எதிர்த்தவர் > பொதுப் பின்னணி கண்டுபிடித்த இலக்கியப் போக்கு
20th Century Eelam Tamil Literature at Project Madurai
EzANTu ilakkiya vaLarcci - M. Thalaiyasingam
To view the Tamil text correctly you need to set
up the following: i). You need to have Unicode fonts containing Tamil Block
(Latha, Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on
your computer and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or
Windows XP). and ii) Use a browser that is capable of handling UTF-8 based
pages (Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as
the default font for the UTF-8 char-set/encoding view. The Latha font may be
downloaded from
here] 1. அரசியல், சமூக, பொருளாதாரப் பின்னணி 2. பொதுப் பின்னணியைப் பிரதிபலிக்காது முன்னுக்குத் தள்ளப்பட்ட 'முற்போக்கு இலக்கியம்' 3. சோஷலிச யதார்த்தமும் 'முற்போக்கு' இலக்கியமும் 4. 'நற்போக்கும்' 'முற்போக்கும்' 5. 'முற்போக்கு' எழுத்தாளர்களின் அருவருக்கத்தக்க காட்சிகள் 6. சர்வாதிகாரத்தைக் கண்டு தப்பி ஓடியவர் 7. சர்வாதிகாரத்தை தனித்து நின்று எதிர்த்தவர் 8. பொதுப் பின்னணி கண்டுபிடித்த இலக்கியப் போக்கு 4. 'நற்போக்கும்' 'முற்போக்கும்' எஸ்.பொன்னுத்துரையை அணுகும்போது புதிய பரம்பரைக்கு மட்டுமே உரிய பல கோணங்கொண்ட ஒரு பேர்வழியைச் சந்திக்கிறோம். பல நிறம் காட்டும் பல கோணங்கள். முந்திய பரம்பரையிலிருந்து இவரை ஒத்தவர் ஒருவரைக் காணவே முடியாது. புதிய பரம்பரையின் முந்திய பரம்பரையிலிருந்து சிருஷ்டி இலக்கிய ரீதியில் வேறுபடுத்துவதற்குப் பெரும்பாலும் இவர் ஒருவரையே எடுத்துக்கொண்டால் போதும் என்று கூடச் சொல்லலாம். அதனால் ஓரளவுக்கு 1956 முதல் 63இன் ஆரம்பம் வரையுள்ள நம் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி பற்றிய வரலாறு பொன்னுத்துரையின் வரலாறுமாகும். 56க்குப் பின் வந்த பரம்பரையையும் அதன் சாதனைகளையும் நிரந்தரமாக நிலைத்து நிற்கச் செய்யக்கூடிய ஒரு சிலரில் இவர் முக்கியமானவர். ஆனால் அதேசமயம் புதிய பரம்பரையையும் அதன் சாதனைகளையும் பழுதாக்கிவிடக் கூடியவரும் இவரேதான். அதற்குரிய ஓர் வித்தும் இவரது வளர்ச்சியிலே சேர்ந்து நிற்கிறது என்பதையும் மறந்து விடக் கூடாது. அதோடு பொன்னுத்துரையைப் படிக்கும் போதுதான் 'முற்போக்கு' இலக்கியச் சர்வாதிகாரம் என்பது பெரும்பாலும் வெறும் மேற்பரப்பு விசயம் என்பதும், உள்ளே இலக்கிய சிருஷ்டி ரீதியிலும் தர ரீதியிலும் அந்தச் சர்வாதிகாரத்தின் நிலை மெல்லிதாய் மறைக்கப்பட்ட சூன்யந்தான் என்பதும் தெரியவரும். ஆனால் அதே சூன்யத்தை 'முற்போக்கு'க் கூட்டினர் பொன்னுத்துரையின் செல்வாக்கைப் பிரதிபலிக்கும் சிருஷ்டிகளைக் கொண்டேதான் இப்போ மறைத்து நிரப்ப முயல்கிறார்கள் என்பதை, அடுத்து ஆராயும்போது அது பொன்னுத்துரையின் தரத்திலுள்ள ஓட்டையையும் கூடவே காட்டிவிடும். உண்மையில் பொன்னுத்துரைக்கும் 'முற்போக்கு'க் கூட்டினருக்கும்
அந்தளவு பெரிய வித்தியாசமில்லை. 'நற்போக்கு' என்பது 'முற்போக்கு'க்
கூட்டின் மறுபிறப்புத்தான். பொன்னுத்துரை எழுதியவற்றைத்தான், எழுதிய
மாதிரிதான் 'முற்போக்கு' எழுத்தாளர்கள் இப்போ எழுதுகிறார்கள்.
'முற்போக்கு'க் கூட்டு செய்தவற்றைத்தான் இப்போ பொன்னுத்துரை
செய்கிறார். இன்னும் அதிகமாகச் செய்கிறார். 'முற்போக்கு'ம் சரி,
'நற்போக்கு'ம் சரி அவை செய்யும் இலக்கியத் திருகுதாளங்களைப்
பார்க்கும்போது இரண்டுமே நம் இலக்கிய வளர்ச்சியில் வீழ்ந்துவிட்ட
சாபக்கேடுகளோ என்றுங்கூட சில சமயங்களில் பயப்பட வேண்டியிருக்கிறது.
ஆனால் அந்த பயம் பின்பு வர வேண்டியது. ஏழாண்டுகளுக்குப் பின் வந்த
இரண்டாண்டுகளுக்குரிய பயம் அது. அதோடு அதற்கெதிராக நம்பிக்கை
ஊட்டுபவையும் இல்லாமலில்லை. முன்பைவிட அதிகமாகவும் இருக்கின்றன. எனவே
அதை விட்டு விட்டு ஆரம்பத்துக்குப் போகலாம். அவற்றிலிருந்து அதிகம் எதிர்பார்க்க முடியாது. அச்சு அச்சாகப் பொருந்திப் பார்க்கவும் கூடாது. இப்போ ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப் பின் அதைத் திருப்பிப் பார்க்கும்போது அந்த உவமை விசித்திரமாகப் படக்கூடும். அது அப்போது சிறீதரன் என்ற பெயரில் பொன்னுத்துரை தன்னைப்பற்றித் தானே எழுதி, தான் ஒரு விமர்சகன் என்று நிரூபிக்க முயன்ற காலத்தை நினைவில் வைத்து எழுதப்பட்டது. பொன்னுத்துரை தனக்குப் பொறுப்பாகக் கைலாசபதியையும், கனக ரத்தினாவையும் சுட்டிக்காட்டிய காலம் அது. ஆனால் சிறீதரனின் கட்டுரைகள் வந்துகொண்டிருக்கும்போது பொன்னுத்துரை தேடிய அதே பொறுப்புகள் தளர்ந்துபோய் விழத் தொடங்கிவிட்டன. இன்று நிலை வேறு. அதோடு தெளிவுங்கூட. முதலில் கைலாசபதியை லெனினாக உவமிக்க முடியாது. அந்தளவுக்கு அவரது திறமை சோபிக்கவில்லை என்றாலும், அதைத்தான் ஏற்றுக்கொண்டாலும், கனக ரத்தினாவை ட்றொட்ஸ்கியோடு ஒப்பிட் முடியாது. கனக ரத்தினாவை சும்மா ஒரு வெளிப் பேர்வழி. இலக்கிய ரீதியில் ஒரு fellow traveller. அவரின் திறமையையும் பெயரையும் 'முற்போக்கு'க் கூட்டினரும் சரி, பொன்னுத்துரையும் சரி, தங்களின் நம்மைக்காகத்தான் அதிகம் பாவித்தனர். பொன்னுத்துரையை ஸ்டாலினுக்கு உவமிக்க முடியாது. காரணம், கடைசியில் அவர்தான் வெளியே துரத்தப்பட்டவர். ஒரு ட்றொட்ஸ்கி. எனவே, உவமை முன்னர் பொருந்திய அளவுக்கு இப்போ பொருந்தாது. ஆனால் அதற்காக அதை உதறிவிடவும் முடியாது. 'விமர்சக விக்கிரகங்கள்'ளில் பொன்னுத்துரையையும் கனக செந்தியையும் நான் முக்கியமாக ஆராய முயன்றேன். இருவரையும் நேரடியாகச் சந்தித்துப் பழகும் முன் அவர்களுடைய எழுத்துகள் மூலமே அவதானித்து விடுபட்ட ஒரு நிலையிலிருந்து எடைபோட்ட ஒரு நிகழ்ச்சி அது. ஆனால் இன்று ஒருவரையும் நேரில் கண்டு பழகிய பின்பும் முன்பு தெரியவரும் ஒவ்வொரு நுணுக்கமும் அவர்களைப்பற்றிய என் பழைய கணக்கீட்டில் கொஞ்சமும் பிசகில்லாமல் பொருந்துவதைப் பார்க்கும்போது முன்பு எப்படி என்னால் அப்படி எடைபோட முடிந்தது என்று ஆச்சரியப்பட வேண்டித்தான் இருக்கிறது. 'விமர்சக விக்கிரகங்க'ளில் கனக செந்தியைப்பற்றிய பகுதி வந்ததுபோல் பொன்னுத்துரையைப்பற்றிய பகுதி பூரணமாகப் பிரசுரிக்கப்படவில்லை. அதற்கிடையில் அவருடைய tactics ஒருவேளை குறுக்கிட்டிருக்க வேண்டும். அவரைப் பற்றி அப்போது நான் சொல்லியவற்றை நிரூபிக்க அதுவே விசயம் தெரிந்தவர்களுக்குப் போதுமாக இருந்திருக்கும். 'முற்போக்கு'க் கூட்டிலிருந்து பொன்னுத்துரை வெளியே துரத்தப்பட்டாலும் - அதாவது அவர்களுடைய அந்தரங்க விசயங்களில் பங்குபற்ற இடமளிக்காமல் மெல் மெல்ல வெளியே ஒதுக்கப்பட்டாலும் - அந்தக் கூட்டில் எவராவது ஒரு ஸ்டாலின் இருந்திருந்தால் அது பொன்னுத்துரையாகத்தான் இருக்கவேண்டும். ஸ்டாலின் மட்டுமல்ல, ஹிட்லருங்கூட! ஸ்டாலின் மெல்ல மெல்ல ஹிட்லராக வீழ்கிறார். அதனால் மற்றவர்களுக்கு ஆபத்துவரக் காத்திருக்கிறது என்று 'விமர்சக விக்கிரகங்க'ளில் நான் கணித்திருந்தேன். அதை அதற்கு முன்பே உணர்ந்து தானோ என்னவோ அவர்கள் தங்கள் கூட்டிலிருந்து அவரை ஒதுக்கிவிட்டனர். எனவே, அதற்குப்பின் பொன்னுத்துரை ஒரு ட்றொட்ஸ்கி. ஸ்டாலின், ட்றொட்ஸ்கி ஆகிவிட்டார். ஆனால் ட்றொட்ஸ்கிக்கு முடியாதது ஸ்டாலினுக்கு முடியும். பொன்னுத்துரை இப்போ சாதித்திருப்பது அதைத்தான். ஓர் இடத்தில் இல்லாவிட்டால், ஒர் இடத்திலிருந்து ஒதுக்கப்பட்டால் இன்னோர் இடத்தில் முந்தியதை விட அதிக அதிகாரத்தோடு ஒதுக்கித் தள்ளியவர்களே தொடைநடுங்கும் விதத்தில் மிகப் பயங்கரமாக, அவர்களை விட மிஞ்சிய மாசேதுங் சாணக்கியத்துடன், ஹிட்லேரியன் அதிகாரத்துடன், கோயபெல்ஸின் பிரசாரத்துடன் தன்னை ஸ்தாபித்துக்கொண்டுள்ளார். புதிய
பொன்னுத்துரையிடம், 'நற்போக்கு' பொன்னுத்துரையிடம், பழைய ஸ்டாலின்,
ஹிட்லர் தன்மை மட்டுமல்ல புதிய மாசேதுங்-ட்றொட்ஸ்கி கீற்றுகளும்
சேர்ந்திருக்கின்றன. ஸ்டாலின்+ஹிட்லர்+மாசேதுங்+ட்றொட்ஸ்கி=
அதிகாரத்தின் அதி உச்சம் + பல திசையும் கை நீட்டும் அதன் அதி விரிவு
அல்லது இலக்கிய ரீதியில் ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் 'நற்போக்கு'
பொன்னுத்துரை! 'முற்போக்கு'க் கூட்டினருக்கு இப்போ நித்திரையில்கூட
நிம்மதியிருக்காது. நான்
எழுத்தாளன் பக்கம். எனவே, மேலே வந்தவை உயர்வு நவிற்சியாகிப் போய்
நிதானம் கெட்டுப் போச்சே என்று தனக்கே உரிய மலட்டுத்தனத்தோடு யாராவது
விமர்சகர் முகத்தைச் சுளித்துக்கொண்டால் எனக்குக் கவலை இல்லை. கட்சிப்
பிரியர்களுக்கு என் அனுதாபங்கள். அவர்களுடைய பக்தி கலந்த வார்த்தைப்
பிரயோகங்களின்படி மேலே வந்த பெயர்களுக்கு அர்த்தங்கள் வேறு என்றால்
நான் குற்றவாளி அல்ல. அந்த வார்த்தைச் சுவர்களுக்கு அப்பால் எப்போ
அவர்கள் எழுதுகிறார்களோ அப்போதான் அவர்கள் உண்மையாக இலக்கியத்தை
அணுகலாம். பழைய சரித்திரத்தில் வரும் நெப்போலியன், சீசர் போன்ற
பெயர்கள் பேச்சுவழக்கில் என்ன அர்த்தங்களில் பேசப்படுகின்றனவோ அதேபோல்
தான் மேலே வந்த பெயர்கள் அவற்றுக்கே உரிய சில பொது அர்த்தங்களை இலக்கிய
ரீதியில் எடுக்கின்றன. கேலி கலந்த உயர்வு நவிற்சி. ஓ, பசுவுக்கு நான்கு
கால்கள் உண்டு என்று சொல்வதுபோல் இருக்கின்றன இந்த விளக்கங்கள்.
Truisms. ஆனால் ஈழத்தில் அவைகூட சிலருக்கு விளங்காமல்
போய்விடுகின்றனவே. நிற்க, 'முற்போக்கு'க் கூட்டிலிருந்து பொன்னுத்துரை
ஏன் வெளியே ஒதுக்கப்பட்டார்? அந்தக் கேள்விக்குரிய விரிவான பதில்
பொன்னுத்துரையை மட்டுமல்ல 'முற்போக்கு'க் கூட்டினரையும் விளக்கக்
கூடியது. இனி அதை ஆராயலாம். அப்படிப் பிறந்திருந்தால் அவை பெரும்பாலும் 'முற்போக்கு'க் கூட்டுக்குச் சொந்தமானவையாக இருக்கவில்லை. இப்படிக் கூறுவது முன்னுக்குப்பின் முரணாகக் கூறுவதாகாது. அதாவது இப்படிக் கூறுவதால் 56க்குப் பின் வந்த புதிய பரம்பரை எப்படிப் பழைய பரம்பரையை விடச் சிறந்ததாகும் என்ற கேள்வி எழத் தேவையில்லை. காரணம், முதலில் 56க்குப் பின் வந்த புதிய பரம்பரையை முற்றாக 'முற்போக்கு'க் கூட்டோடு ஒற்றுமைப்படுத்தி அதுதான் இது, இதுதான் அது என்று பார்க்கக் கூடாது. இரண்டாவது, புதிய பரம்பரையோடு ஒப்பிட்டுக் கூறுவதாக நினைப்பது தவறு. பழைய பரம்பரையின் சிருஷ்டிகளோடு ஒப்பிடும்போது புதியவை பெரும்பாலும் தரமும் சுயஉணர்வும் தனித்தன்மையும் கூடியவையே. ஆனால் அதற்காக, தனியே எடுக்கப்படும்போது அவை தங்களுக்குரிய குறைகளைக் காட்ட மாட்டா என்பதல்ல அர்த்தம். பெரும்பாலும் அவை எப்படிக் காட்டவே செய்கின்றன. அவற்றைத்தான் இங்க நான் குறிப்பிடுகிறேன். கைலாசபதி புதிய பரம்பரையைப் பிரித்துக் காட்டும் நிறைவுகளை உடையவராக இருந்தாலும் தனியாக எடுத்து ஒர் விமர்சகன் என்ற முறையில் அவரை ஆராயும் போது அப்படிப் பல குறைகளை உடையவராகத் தெரிந்தாரோ அப்படி. அதாவது எல்லா நாடுகளுக்கும் எல்லாக் காலத்துக்கும் செல்லுபடியாகக் கூடிய ஒரு பொதுவான அடிப்படையில் அளப்பதைக் குறிப்பிடுகிறேன். அத்தகைய அடிப்படையில் பார்க்கும்போதுகூடத் தேறிவிடும் சில கதைகள் புதிய பரம்பரைக்குரியவையாய்ப் பிறந்துதான் இருக்கின்றன. ஆனால் அவை பொதுவாக பொன்னத்துரை போன்ற 'முற்போக்கு'க் கூட்டுக்கு அப்பாற்பட்டவர்களிடமிருந்தே பிறந்திருக்கின்றன. எனவே 'முற்போக்கு'க் கூட்டின் பிரபல்யம் அதன் சிருஷ்டி எழுத்தாளர்களின் தரத்தை விட அதிகமான பார்வை ஆழத்தினாலும் அவர்கள் காட்டிய பிரசுர வசதிகளினாலும் தான் அதிகமாக ஏற்பட்டது என்று கூறினால் அதில் முன்னுக்குப் பின் முரணாக எதுவும் இல்லை. டொமினிக் ஜீவாவையும், டானியலையும், செ.கணேசலிங்கத்தையும் மட்டும் நம்பி, பெரும்பாலும் அவர்கள் மூலமே தங்கள் புதிய பார்வைக்கு இலக்கிய உருவம் கொடுக்க நினைத்த எந்தக் கூட்டும் அதிக நாட்கள் நின்று பிடிக்க முடியாது. ஆனால் அவர்கள்தான் 56க்குப் பின்வந்த 'முற்போக்கு'ச் சர்வாதிகாரத்தின் முக்கிய சிருஷ்டி எழுத்தாளர்கள். எனவே, 'முற்போக்கு'க் கூட்டின் சர்வாதிகாரம் பொதுப் பின்னணியின் விழிப்புக்கேற்ற வகையில் இலக்கிய அக்கறையையும் பார்வை ஆழத்தையும் ஓரளவுக்குக் கொடுத்தாலும் அதே அளவுக்கு ஈடான இலக்கியத் தரமுள்ள சிருஷ்டிகளையும் தனது பொது அம்சமாகப் பிறப்பிக்காமல் இருந்ததில் வியப்பொன்றுமில்லை. அதோடு டொமினிக் ஜீவா, டானியல் போன்றவர்கள் தங்கள் ஆரம்பக் கதைகளின் தோற்றத்துக்கு பொன்னுத் துரைக்குப் பெரிதும் கடமைப்பட்டவர்கள். இங்கு எதையும் ஒளித்து மறைக்க நான் விரும்பவில்லை. எல்லோருக்கும் தெரிந்த ஒன்றை, பொன்னுத்துரை இப்போ போகுமிடமெல்லாம் பறைசாற்றித் திரியும் ஒன்றை, சிலர் சொல்வதுபோல், 'பொன்னுத்துரை ஓர் காலத்தில் இன்றைய பிரபல்ய எழுத்தாளர்களின் புனைபெயர்களில் கதைகள் எழுதினார்' என்று மறைத்துக் கூற நான் விரும்பவில்லை. அதுவும் ஒருவகை மத்தியதர வர்க்க மரியாதை. அதை நான் விரும்பவில்லை. என் மூலமாகவாவது விசயம் பச்சையாக அச்சில் ஏறி, அம்பலமாகி, ஆட்சேபணைகளைக் கொண்டுவந்து எல்லாக் காலத்துக்கும் செல்லுபடியாகும் வகையில் முடிவு கட்டப்படட்டும். டொமினிக் ஜீவா, டானியல் போன்ற சில 'முற்போக்கு' எழுத்தாளர்களுக்கு ஆரம்பத்தில் பொன்னுத்துரைதான் கதைகள் எழுதிக் கொடுத்தாராம். அவர்களின் பிரபல்யமான சில கதைகள் உண்மையில் பொன்னுத்துரையினுடையவைதானாம். என்ன 'தானாம்'? ஆமாம், அவை நிச்சயமாக ஆராயப்பட்டு முடிவு கட்டப்படும்வரை 'தானாம்' என்று இழுப்பது அவசியமாகிறது. அதாவது, எந்தளவு தூரம் என்பதை அறியும்வரை. ஆனால் ஒரு சிறிய அளவுக்காவது அது உண்மைதான் என்பது என் எண்ணம். அந்தளவுக்குத் தான் அதை இங்கே இந்தக் கட்டுரையை விளக்க நான் பாவிக்கிறேன். இந்த காரணமாய் அவற்றைப்பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் பிறந்தால் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களுக்கு நன்மையாய் இருப்பதோடு இனி வரக்கூடிய வேறு புதியவர்களுக்கு எச்சரிக்கையாகவும் இருக்கும். ஆனால், அதற்காக நான் மேற்கூறிய எழுத்தாளர்களைக் கேவலமாகக் கருதுகிறேன் என்று நினைக்கத் தேவையில்லை. இன்று சுயமாக எழுதும் எத்தனையோ பேர்கள் பொன்னுத்துரை போலவே எழுதுவதில் பெருமை கொள்கிறார்கள். வேறு சிலர் பொன்னுத்துரையின் கதைகளையே தங்கள் பெயரில் பிரசுரிக்கிறார்கள். அகஸ்தியரின் 'உணர்வூற்றுச் சித்திரங்கள்' பொன்னுத்துரையினுடையவைதானாம். ஆமாம், 'னாம்.' அந்த 'உணர்வூற்றுச் சித்திரங்கள் 'என்னைப் பொருத்தவரையில், பெரும்பாலும் கீறல் விழுந்த றெக்கோட்டைப்போல் ஒன்றையே திருப்பித் திருப்பி இழுக்கும் அர்த்தமற்ற வெறும் ஒலிக்கூட்டம் நிறைந்த விழல்கள்தான். ஆனால் அவை உண்மையாக யாருடைய விழல்கள் என்பதை முடிவு கட்டுவது அத்தியாவசியமானது. அப்படியிருக்கையில் அன்று கட்சி ஒன்றுமை காரணமாய், இலக்கிய விழிப்பின் ஆரம்பத்தில் சிலர் தவறு செய்ததைப்பற்றி நாம் பெரிதுபடுத்த விரும்பவில்லை. அத்துடன், மேற்கூறிய எழுத்தாளர்கள் தாங்களாகவே கதைகளை மறுபிரதி செய்து எழுதினார்கள் என்று சொல்லப்படும்போது இருந்ததைவிட, இப்போ அவர்களின் தரம் நல்லதுங்கூட. அண்மையில் வெளிவந்த ஜீவாவின் 'படுமுடிச்சு' என்ற கதை கனக செந்திநாதனுக்கு ஓர் ஆரம்பகால எழுத்தாளனின் சிருஷ்டியாகப் படுகிறது. 'கறமுறா' என்ற சொற்கள் வர எழுதினால்தான் அது சிறுகதையாகும் என்பது பொன்னுத்துரையின் கண்கொண்டு பார்ப்பதினால் ஏற்படும் தவறு. என்னைப் பொருத்தவரையில் அது ஓர் நல்ல சிறு கதை. சில மேல்நாட்டு எழுத்தாளர்களின் கதைகளில் வரும் ஒருவகையான பிடிபடாமல் நழுவிவிடும் கலையம்சத்தைப் பிரதிபலிப்பதோடு, வெளியே தெரியாமல் படுமுடிச்சுப் போட்டு யாழ்ப்பாணத்தவர் பதுக்கிவைக்கும் இரண்டு முக்கிய விஷயங்களை வெளிப்படுத்தி நம்மவரின் வெளி வேசத்தைச் சாடவும் செய்கிறது. வெளியே சமஷ்டியும் தமிழும் கேட்கும் யாழ்ப்பாணம் உள்ளே இரகசியமாய் சிங்களம் படிக்கிறது. வெளியே பத்தினி வேசம் போடும் யாழ்ப்பாணப் பெண்மையும் பண்பாடும் உள்ளே 'சிற்றின்பம்' படிக்கிறது. கிழவி மூலம் பிரதிபலிக்கப்படும் நம் பழைய யாழ்ப்பாணக் கலாச்சாரம் இன்று அதனை அறியாமலேயே எத்தனை ஊழல்களை முடிச்சுப்போட்டு மறைத்து வைத்திருக்கிறது. எனவே, அவர்களை நான் கேவலப்படுத்துகிறேன் என்று நினைக்கத் தோன்றவில்லை. ஆனால் அது வேறு. உண்மை வேறு. அதோடு, அதற்காக உண்மையை மறைத்துவிடவுங் கூடாது, முடியாது. ஏதோ, எப்படியோ பொன்னுத்துரை அவர்களுக்குப் பெரிய எழுத்தாளனாய் அப்போது தெரிந்தார். பொன்னத்துரை புதிய பரம்பரைக்குரிய ஓரு பெரிய எழுத்தாளன்தான். ஆனால் அப்படி ஒரு விமர்சகன் அல்லது தன்னம்பிக்கையுள்ள எழுத்தாளன் சொல்வது வேறு, தன்னம்பிக்கையுள்ள திறமையும் அவ்வளவு இல்லாத இரண்டாந்தரப் பேர்வழிகள் சொல்வது வேறு. இந்த இரண்டாந்தரப் பேர்வழிகளுக்கு பொன்னுத்துரையைத் தவிர வேறு ஒருவரும் இல்லை. பொன்னுத்துரைதான் எல்லாம். பொன்னுத்துரைதான் மன்னன். பொன்னுத்துரையின் நடைதான் நடை. மற்றவை எல்லாம் கட்டுரை நடை. கதையென்றால் பொன்னுத்துரையின் கதைதான் கதை! அப்படிச் சிந்திப்பது சுத்த மடத்தனம் மட்டுமல்ல, முழு அடிமை மனப்பான்மையுங்கூட, அல்லது வளரிளம் பருவ அறிவற்ற அபிநயப்போக்கு. ஆனால் அப்படிப்பட்டவர்கள்தான் துரதிர்ஷ்ட வசமாக 'முற்போக்கு'க் கட்சியில் அதிகமாக இருந்தனர். இப்போதும் இருக்கின்றனர். ஜீவா போன்றவர்களும் அப்படித்தான் ஆரம்பத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால் விசித்திரம் என்னவென்றால் பொன்னுத்துரையை வணங்கின அதே பேர்வழிகள் அவரைத் தங்களோடு ஓரே கட்சியில் வைத்திருக்க விரும்பவில்லை. அதன் உள் விவகாரங்களில் அவருக்கு இடமளிக்க விரும்பவில்லை. இடமளித்திருந்தால் அவர்களுக்கு ஆபத்து. அவர்களுக்கு மரியாதை இருந்திருக்காது. அதோடு இரவல் வாங்கிய அவர்களது பொட்டுக்கேடும் தெரியவந்துவிடும். இன்னுமொன்று. தலைமை தாங்கிய கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்கள் சிருஷ்டி இலக்கியம் எழுதத் தெரியாத விமர்சகர்கள்தான். ஆரம்பகாலத்தில் அப்படிப்பட்டவர்கள் தலைமை தாங்கும்போது பள்ளிக்கூடங்களுக்கும் பல்கலைக் கழகங்களுக்குமுரிய ஒரு மலட்டுச் சூழ்நிலை academic சூழ்நிலை ஏற்படுமே ஒழிய சிருஷ்டித் தரம் நிறைந்த வேகம் பிறக்காது. அதோடு சிருஷ்டித் திறமை கொண்ட உண்மையான ஓர் எழுத்தாளனைக் காணும்போது அந்த மலட்டு வாத்திமாருக்குப் பொறாமை கலந்த எரிச்சல் ஏற்பட்டிருந்தால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. பக்தி நிறைந்த வழிபாடு அந்த நிலையில் அவர்களுக்குக் கிடைக்காது. மாறாகத் தலைமைப் போட்டிக்குரிய அறிகுறிகள்தான் வளரத் தொடங்கியிருக்கும். எனவே 'முற்போக்கு'க் கூட்டில் பொன்னுத்துரையின் நிலையை கஷ்டமில்லாமல் விளங்கிக்கொள்ளலாம். அதிலிருந்து மற்றவர்கள் எல்லோருக்கும் அவர் ஓர் முள்ளாகத்தான் இருந்திருப்பார். இரவல் வாங்கிய எழுத்தாளர்களுக்கும் சரி, இரு சாராருக்கும் தங்கள் தங்கள் குறைகளை நினைவூட்டிய ஒரு முள். தங்களுக்குள்ளேயே ஒரு வழிபாடு கலந்த ஒரு மருட்சி நிலையை ஏற்படுத்திக்கொண்டு அதன் சௌகரியத்தைப் பொன்னுத்துரை இருக்கும் வரைக்கும் அவர்களால் சுகமாக அனுபவித்திருக்க முடியாது. எனவே, மறைமுகமாக 'முற்போக்கு'க் கூட்டுக்குரிய சாணக்கியத்தின் சாதனையால் அவர் மெல்ல வெளியே ஒதுக்கப்பட்டார். முதல் கூட்டத்தோடேயே அவருடைய கட்சி அங்கத்துவம் முடிந்துவிட்டது. ஒரு உதை. Expelled. அதன்பின் பொன்னுத்துரை வெளியே. Academic, சர்வாதிகாரத்துக்குரிய சரியான சொல். ஆனால் திறமையும் அறிவும் பொன்னுத்துரையை அவர்களிடமிருந்து வேறுபடுத்தியதால் மட்டும் பொன்னுத்துரை வெளியே ஒதுக்கப்படவில்லை. ராசதுரை, செல்வராசன், நந்தி, சொக்கன் போன்றவர்களிடமும் நியாயமான அளவுக்கு அவை இருக்கின்றனதானே? இருந்தும் அவர்களால் 'முற்போக்கு'க் கூட்டில் ஒட்டிக்கொள்ள முடிந்ததே? ஏற்கனவே இருந்தவர்களுக்கு அவர்கள் ஆபத்தாகப் படவில்லையே? ஆமாம், சர்வாதிகாரத்துக்கு ஆபத்து, திறமையும் அறிவும் மட்டுமல்ல. அவற்றைப்பற்றி அது அதிகமாகக் கவலைப்படுவதில்லை. பிரச்சாரம் என்ற ஒன்றால் அது அவற்றை நலமெடுத்துவிடும் (எத்தனை திறமான எழுத்தாளர்கள் 'முற்போக்கு'க் கூட்டுக்கு வெளியே இருந்தார்கள். இருக்கிறார்கள். அவர்களை அது எழுத்தாளர்கள் என்று ஏற்றுக்கொண்டிருக்கிறதா?) அது பயப்படும் ஒன்றே ஒன்று பலந்தான். பலம், பலம், சர்வாதிகாரம். சிந்திப்பதெல்லாம் அதிகாரத்தின் அடிப்படையில்தான். அது பயப்படுவதும் அதே அடிப்படையில்தான். அதிகாரம், பலம். அடுத்தவர்களிடம் அவை இருந்தால் அதற்கு நடுக்கம். (இப்போ 'நற்போக்கு' வளர்ச்சியில் 'முற்போக்கு'க்கு இருக்கும் பயம் அதைத்தான் அடிப்படையகக் கொண்டுள்ளது.) பொன்னுத்துரையிடம் திறமை மட்டும் இருக்கவில்லை. அவர்களைவிடப் பார்வை ஆழம் மட்டும் இருக்கவில்லை. பலமும் இருந்தது. அதாவது தலைமை வகிக்க வேண்டும் என்று, சர்வாதிகாரம் செய்ய வேண்டும் என்று ஆசையும் இருந்தது. ஸ்டாலினியக் கீற்று விழுந்த ஒரு தணியாத ஆசை. மற்றவர்களைப்போல் கூட்டின் தேவைக்கேற்பக் கூட்டை வளைக்கக் கூடிய ஓர் ஆசை. அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கு 'முற்போக்கு'க் கூட்டுக்குக்கூடத் தெரியாத மாசேதுங்கிய சாணக்கியமும் பொன்னுத்துரையிடம் இருந்தது; இருக்கிறது. 'முற்போக்கு'க் கூட்டுக்கு வேறு வழி இருக்கவில்லை. அவரை வெளியே ஒதுக்குவரைத் தவிர. ஆனால் வெளியே ஒதுக்கப்பட்டார் என்பது பொன்னுத்துரைக்கே தெரியாத விதத்தில் ஒதுக்கப்பட்டார். அது நேரடியாக உதைத்தெறிவதை விடப் பலம் வாய்ந்தது. அதைப்போல் கெட்ட விளைவுகளையும் கொண்டு வராது. நேரடியாக உதைத்துவிட்டால் பொன்னுத்துரை பல ரகசியங்களை அம்பலமாக்கிவிடுவார். அதோடு புதிய பலம் வாய்ந்த கூட்டை போட்டியாக அமைத்துவிடவும் கூடும். எனவே, மறைமுகமாக ராஜதந்திரமாக உதைக்கப்பட வேண்டும். Tactics வேண்டும். ஒதுக்கப்படுகிறேன் என்பதைப் பொன்னுத்துரையே உணராத வகையில் அவர் ஒதுக்கப்பட வேண்டும். அது முதலாவது. மட்டக்களப்புக்கும் (பொன்னுத்துரையின் இடம்) கொழும்பு ('தினகரன்,' கைலாசபதி, 'முற்போக்கு'க் கூட்டு, கூட்டங்கள் எல்லாம் அங்குதான்) யாழ்ப்பாணம் (ஜீவா, டானியல்) போன்ற மற்ற பகுதிகளுக்கும் இருந்த தூரம் அதை இலகுவாக்கும். பொன்னுத்துரைக்குத் தெரியாமல் எத்தனையோவற்றை அந்த நிலையில் செய்யலாம். இரண்டாவது, பொன்னுத்துரை என்பவர் ஓர் எழுத்தாளர் என்பது யாருக்கும் தெரியாமல் அமுக்கப்பட வேண்டும். இது கட்டாயம் கைலாசபதியினடைய ஆசையாய் இருக்க முடியாது. இருக்கவுமில்லை. மாறாக, இரவல் வாங்கிய மற்ற எழுத்தாளர்களுடையது. கைலாசபதி போன்றவர்கள் மீதும் இந்த எழுத்தாளர்களின் செல்வாக்குத்தான் அதிகமாக இருந்தது. எனவே, கைலாசபதி மீதுள்ள இவர்களின் செல்வாக்கு 'தினகரனை'யும் இவர்களின் சார்பாகப் பாதிக்கக் கூடியதாக இருக்கும்போது இந்த இரண்டாவது ஆசையும் ஓரளவுக்கு நிறைவேறக் கூடியதாய் இருந்திருக்கும். ஆனால் தூரத்தையும் வசதிகளையும் மேவிக்கொண்டு பொன்னுத்துரையின் திறமை போட்டியாக நின்றது. திறமைதான் மறைக்கப்பட்டிருந்தாலுங்கூட அவரின் அதிகார பிரபல்ய ஆசையை ஒரு நாளும் அமுக்கிவிட்டிருக்க முடியாது. மற்றவர்களைக் கருவிகளாக வைத்துத் தான் தலைமை தாங்க வேண்டும் என்பது பொன்னத்துரையின் ஒரு தணியாத ஆசை. தலைமையும் அதிகாரமும் மட்டுமல்ல, பெயரும் புகழும் கூட வேண்டும். 'முற்போக்கு'க் கூட்டினர் போட்ட முட்டுக்கட்டைகள் அவற்றை இன்னும் அதிகமாகத்தான் வளர்த்திருக்க வேண்டும். அதோடு அவற்றை அவர் மிக நாசூக்காகத் தேடிக்கொள்கிறார். அந்த விசயத்தில் 'முற்போக்கு'க் கூட்டினர் கூட அவரிடம் பிச்சை
வாங்கத்தான் வேண்டும். கடைசியில் பொன்னுத்துரை வென்றுவிட்டார். ஆனால்
அந்த வரலாற்றுக்கு வருவதற்கு முன் பொன்னுத்துரையிடமுள்ள அந்த அதிகார
பிரபல்ய ஆசையையும் அதை அடையும் சாணக்கியத் திறமையையும் சமூகவியல்,
மனோவியல் ரீதியில் சிறது ஆராய்ந்தால் சுவையாக இருக்கும். மற்ற
'முற்போக்கு' வாதிகளின் கொள்கை நிலையும் விளங்கிக் கொள்ள முடியும். அதே வட்டடத்தைத்தான் பிரதிபலிக்கிறார். தாழ்த்தப்பட்டட சமூகநிலை ஆத்திரத்தையும் வெறுப்பையும் தூண்டி அதிகாரத்தை நாடச் செய்வது இயற்கை. அந்த அதிகாரத் தேடல்இல்லாவிட்டால் அதற்குப் பதிலாக நசிந்த குணமும், நக்கல் கலந்த பேச்சும், தருணத்துக்கு ஏற்றமாதிரிச் சமாளித்துக் கொள்ளும் தந்திரமும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் ஆயுதங்களாக இருக்கும். பொன்னுத்துரையிடம் காணப்படும் அசாதாரண அதிகார விருப்பமும் சாணக்கியத் திறமும் அந்த இரண்டு வகை அடிப்படையில்தான் விளங்கிக்கொள்ளப்பட வேண்டும். அந்த வட்டத்து மற்ற 'முற்போக்கு' எழுத்தாளர்களுடைய நிலையும் அதுவேதான். அதனால்தான் கட்சியில் அவர்களுக்கு அத்தனை பக்தி, பழைய மத நம்பிக்கை,
கட்சி நம்பிக்கையாக மாறிவிடுகிறது. கட்சியிலிருந்து பிரிந்தால்
அவர்களுடைய நிலை ஆதரவு அற்ற நிலை. அதனால்தான் கட்சிக் கொள்கைகளை
அவர்கள் ஆராய முயல்வதுமில்லை; அதன் பிழைகளை மற்றவர்கள் காட்டினாலும்
ஏற்றுக்கொள்ள விரும்புவதுமில்லை. எனவே, இவர்கள் இலக்கியத்தில்
இறங்கும்போது தவிர்க்க முடியாத ஒரு தவறு ஏற்பட்டு விடுகிறது. இலக்கிய
விவகாரங்களும் அதிகாரத்தைப் பெறுவதற்குரிய வழிகளாக மாற்றப்பட்டு
விடுகின்றன. அந்த உண்மைதான், நம் இலக்கிய விவகாரங்கள் அந்தளவுக்கு
இலக்கிய நோக்கையும் நலனையுந் தாண்டி இங்கு பயன்படுத்தப்படுவதற்குக்
காரணமாக இருக்கிறது. அந்தக் கோணத்திலிருந்து பார்க்கும்போது நாம்
பெரும்பாலான எழுத்தாளர்களைப் புரிந்துகொள்வதோடு 1956க்குப் பின் வந்த
இலக்கிய வளர்ச்சியோடு ஒட்டி வந்துள்ள குறைகளையும் விளங்கிக்கொள்ள
முடியும். எனவே அதை இன்னும் விரித்து நோக்குவது நல்லது. இலக்கியத்தின்மூலம் மற்றவற்றை அடையலாம். அடைய முயலலாம். மனிதர்களின் ஆசை, அபிலாசைகளை, சூழலை, வாழ்க்கையை எல்லாவற்றையும் பிரதிபலிப்பதுதானே இலக்கியம்? ஆனால் இலக்கியத்தோடு சேர்க்கப்படும் நோக்கம் எப்படியாய் இருப்பினும் முதலில் அந்த இலக்கியம் இலக்கியமாக இருக்கிறதா, இலக்கியத்தோடு சேர்க்கப்படும் நோக்கமும் பொறுப்பும் இலக்கியத்தின் கலையையும் அழகையும், அதாவது அதன் இலக்கியத் தன்மையையே கெடுக்காமல் இருக்கிறதா என்பவற்றைப்பற்றிக் கவலைப்படுபவர்களாகவும் நாம் இருக்க வேண்டும். இலக்கியத்துக்குக் கொடுக்கும் நோக்கமும் பொறுப்பும் இலக்கியத்தின் இலக்கியத் தன்மையைச் சிதறடித்துவிடக் கூடாது. அந்த அளவுக்கு, சொந்த மனோநிலையின் காரணமாய் அந்தச் சிதைவைப்பற்றிக் கவலைப்படாதவர்களாய் நாம் இலக்கிய விவகாரங்களில் ஈடுபடக் கூடாது. இல்லாவிட்டால் அது உண்மையான இலக்கியத்தைச் சாகடித்துவிட்டு மூன்றாந்தரப் போலிகளாக்கும் வெறும் அரசியல் பிரசுரங்களுக்கும் வர்த்தக விளம்பரச் சாயல் கலந்த விழாக்களுக்கும் குறுகிய நோக்குடன் சுய மேம்பாட்டுக்காகப் போராடும் கூட்டுகளுக்குந்தான் வழிவிடும். உண்மையான, தரமான சிருஷ்டிகளுக்கும், எல்லையைத் தாண்டிய கலைத் தேடலுக்கும் வழி வகுக்காது. ஆனால் அப்படி ஒரு வழிதப்பிய இலக்கியப் போக்கைத்தான் சமூகத்தில் தாழ்த்தப்பட்ட ஒரு நிலையிலிருந்து தாங்கள் வருவதன் காரணமாய் 'முற்போக்கு' எழுத்தாளர்களும் 'நற்போக்கு' பொன்னுத்துரையும் இன்று ஈழத்தில் வளர்க்க உதவுகிறார்கள்? அவர்களை அறியாமலே உதவுகிறார்கள். தங்கள் தங்கள் கட்சிக்குள்ளேயே முழு அதிகாரத்தையும் பிரபல்யத்தையும் அடக்கிவிட முயல்வது, அதற்காக எந்தவிதக் குறுக்கு வழிகளையும் கடைப்பிடிக்க அவர்கள் தயாராக இருப்பது, தங்களுக்குள்ளேயே சுய வழிபாடு நடத்திக்கொண்டு தங்கள் திருஷ்டிகளை இலக்கிய ரீதியில் ஆராயாமல் வழிபாட்டு ரீதியில் நோக்குவது, தங்களைச் சேராத எவரையும் ஏற்க மறுப்பது, தங்கள் கூட்டுக்கு வெளியே பார்க்க மறுத்து ஒரு தீக்கோழிப் பார்வையை வளர்ப்பது போன்றவை எல்லாம் தரமான இலக்கியச் சூழலுக்கு உரிய பண்புகள் அல்ல. வர்த்தகக் கொம்பனிகளுக்கும், அதிகாரத்தை இழக்கவோ பங்கிடவோ விரும்பாத பழைய பிற்போக்கு மேற்சாதிக் கூட்டுகளுக்குந்தான் உரியவை. சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் என்னென்ன நீதி நேர்மையற்ற முறைகளில் மேற்சாதிக்காரர்களால் நசுக்கப்படுகிறார்களோ, நீதிக்கும் தர்மத்துக்கும் புறம்பானவை என்று என்னென்ன அநியாயங்கள் மேற்சாதிக்காரர்கள் மேல் சுமத்தப்படுகின்றனவோ அதே நீதிக்கு மாறான வழிகளையும் முறைகளையும் அநியாயங்களையும் பல மடங்காகப் பாவித்து சமூகத்தில் தாழ்த்தப்பட்ட அதே பேர்வழிகள் இலக்கியத்தில் தங்களை நிறுத்திக்கொள்ள முயல்கிறார்கள். அது வேடிக்கையானது. பல 'முற்போக்கு' எழுத்தாளர்களுக்கும் 'நற்போக்கு' பொன்னுத்துரைக்கும் இருக்கும் இலக்கிய அக்கறை என்பது பெரும்பாலும் இலக்கியத் திறமை அல்லது சிருஷ்டித்தரம் பற்றி அதிகம் கவலைப்படாத அதிகார பிரபல்யப் போட்டியாக இன்று மாறிவிடுவது அதனால்தான். தங்கள் தாழ்த்தப்பட்ட நிலை காரணமாய் சின்ன வயதிலிருந்தே இவர்கள் வளர்த்து வந்த அதிகார, பிரபல்ய ஆசைக்கும் தாழ்வுச் சிக்கலுக்கும் பதிலாகத் தேடப்பட்ட மேம்பாட்டு உணர்வுக்கும் வசதியளிப்பவையாக இலக்கிய விவகாரங்கள் இவர்களைப் பொருத்தவரையில் மாறி விடுகின்றன. அதன் காரணமாய் இலக்கியத் திறமை இல்லாவிட்டாலுங்கூட கயிறு இழுப்பு, முதுகு சொறிதல் போன்ற குறுக்கு வழிகளால் சிலர் தங்களை இலக்கிய உலகில் நிறுவிக்கொள்ள முயல்கின்றனர். அந்த நிலையில் நம் நாட்டு இலக்கிய விவகாரங்கள் துப்பறியும் கதைகளில் வரும் சில நம்ப முடியாத மர்ம நிகழ்ச்சிகளாய் மாறிவிடுகின்றன. 'கூட்டு வழிபாடு'. ஒருவர் தானே மற்றவர்களுக்கு எழுதிக் கொடுத்து தனக்குப் பின்னால் வால்பிடிக்கும் ஒரு கூட்டத்தையும் வழிபாட்டையும் தானே நிறுவிக்கொள்ளல். நீ கவிஞன், நான் சிறுகதை மன்னன், அவன் விமர்சகன், அடுத்தவன் உருவகக் கதை வீரன் என்று தாங்களாகவே தங்களுக்குள்ளேயே பேர் சூட்டிப் பங்கிட்டுக்கொண்டு வெளியே பார்க்காமல், வெளியே விட்டுக் கொடுக்காமல் இலக்கியம் என்ற பெயரில் சமூகத்தில் தாழ்த்தப்பட்ட தங்கள் நிலைக்கு எதிராக அதிகாரத்தை உருவாக்கிக்கொள்ளல் என்பவை எல்லாம் உள்ளே உள்ள இரகசியங்கள் எதுவும் வெளியே தெரியாத வகையில் இவர்களுடைய கூட்டுகளைச் சுற்றி ஒரு மர்மமான இரும்புத்திரையை எழுப்பிவிடுகின்றன. துப்பறியும்
கதைகளில் மட்டும் வரக்கூடிய ஒரு சூழல். இந்த வகையில் செய்கையாக
இலக்கியம் வளர்க்கப்படும்போது இலக்கியமும் இலக்கியத் தரமும் சிதைந்தே
விடுகின்றன. ஆனால் பெரும்பாலும் இவர்களுக்கு அந்தக் கவலை எழுதுவதில்லை.
எழுந்தாலும் அவர்களால் அதை மன சாட்சியின் குறுகுறுப்பின்றி அடக்கிவிட
முடிகிறது. காரணம், இவர்களைப் பொருத்தவரையில் பெரும்பாலும் இலக்கியம்
என்பது வேறு ஒன்றுக்கரிய ஒரு வெறும் சாதனந்தான். பூரண வளர்ச்சியோடு
தானாகத் தனித்து நின்று திருப்தியளிக்கக் கூடிய ஒரு சாதனையல்ல. ஆனால் அதை அல்ல, நான் இங்கு கூறுவது. அந்தப் பொதுப் பண்பை அல்ல. அவர்கள் கலையைச் சிருஷ்டிக்கிறார்கள். ஆனால் இங்கு நான் கூற முயல்வது என்னவென்றால் பொதுவாக எல்லாக் கலைஞர்களுக்கும் உரிய பிரபல்ய ஆசை கலைகளைச் சிருஷ்டிக்க உதவுகிறதென்றால் இங்குள்ள பல 'முற்போக்கு' எழுத்தாளர்களுக்கும் 'நற்போக்கு' பொன்னத்துரைக்கும் உரிய பிரபல்ய ஆசை அதிகார ஆசை கலைகளைச் சிதைக்க உதவுகிறது. சிருஷ்டிக்க அல்ல. சிதைக்க! (ஆமாம், தாழ்த்தப்பட்ட சமூக நிலையின் காரணமாய் இவர்களுக்கு அதிகாரந்தான் முக்கியம். ஆனால் தொழிலாள வர்க்கத்துக்கு அதிகாரம் தேடுவதை இங்கு நான் குறிப்பிடவில்லை. அதாவது சமுதாய மாற்றத்தை நாடிச் சிருஷ்டிக்கப்படும் தரமான இலக்கியங்களை நான் குறிப்பிடவில்லை. தங்கள் தனிப்பட்ட நலன்களுக்காக இலக்கியத்தையும் சிதைத்து அவர்கள் செய்யும் திருகுதாளங்களையே குறிப்பிடுகிறேன்.) கூட்டுகள் அமைத்து குறுக்கு வழிகளால் தங்களுக்குள்ளேயே அதிகாரத்தைப் பங்கிட்டுக்கொண்டு துப்பறியும் கதைகளுக்குரிய சூழலில் செயற்கையாக இலக்கியம் வளர்த்து உண்மையான இலக்கியத்தைச் சிதைப்பது முதலாவது. அடுத்தது, இயற்கையாக உள்ள திறமையைக் கூட இந்த அதிகார பிரபல்ய விருப்பம் சிதைத்து விடுகிறது. அது இரண்டாவது. பொன்னுத்துரைக்கு இப்போ ஏற்பட்டுள்ள நிலை அதுதான். அவருடைய இலக்கியத் திறமையெல்லாம் இப்போ வெறும் வெளி விவகாரங்களாலும் விழாக்கள் நடத்துவதாலும் அனாவசிய அறிக்கைகளாலும் நடைச் சித்திரங்களாலும் அதிகமாகச் சிதறடிக்கப்படுகிறது. இலக்கியம் என்பது அதிகாரத்துக்காக (தனிப்பட்டவர்களின் அதிகாரத்துக்காக) நடத்தப்படும் போராட்டம் என்ற நிலைக்கு இங்க திருகப்பட்டிருப்பதால், சமூகத்தில் நடத்தப்படும் சாதிப் போராட்டத்துக்குரிய முறைகள்தான் இலக்கியத்திலும் இவர்களால் கையாளப்படுகின்றன. அந்தப் போராட்டத்திலேயே பெரும்பாலும் எல்லாத் திறமையும் நீ ஒப்புக்கொள்ளக் கூடாது. அப்படி ஒத்துக்கொண்டால் உன்னுடைய சாதிக்குக் கௌரவக் குறைவு வந்துவிடும். அடுத்த சாதிக்காரனை முற்றாக நசுக்கிவிட வேண்டும். அதற்காக நீ எந்தவழியையும் கையாளலாம். அடுத்தவனுக்கு விட்டுக்கொடுப்பது, அடித்தவனின் திறமையை ஒப்புக்கொள்வது என்ற கொள்கையெல்லாம் உன் சாதிக்கு இருக்கக் கூடாது. உன் சாதிக்காரனின்
குறையைக் கண்டித்தால் நீ ஒரு துரோகி. கருங்காலி. இதே வகைச்
சுலோகங்களால்தான் இன்று நம் இலக்கிய விவகாரங்கள் பல நடத்தப்படுகின்றன.
சமூகத்தில் அதே வகைச் சுலோகங்களால் தினந்தோறும் அநியாயமாகத்
தாக்கப்பட்டோ, தாக்கியோ வாழ்க்கையை அனுபவித்தவர்கள் இலக்கிய
விவகாரங்களை வேறு முறையில் நடத்த முடியாதுதான். ஆனால் இலக்கியமும்
அவற்றால் மறைமுகமாகச் சிதைக்கப்படுகிறது என்பதை மறுக்க முடியுமா? அந்தளவுக்கு ஈழத் தமிழ்ச் சமூகம் அவர்களுக்குக்
கடமைப்பட்டிருக்கிறது. தாழ்த்தப்பட்டோ பாதிக்கப்பட்டோ ஏதோ ஒரு வகையில்
திருப்தியுறாமல் உள்ள ஒரு மனோநிலைதான் கலை சிருஷ்டிப்புக்கு ஏற்ற நிலை.
எட்மண்ட் வில்சன் (The wound and the bow) கூறும் அந்த நொந்தல்பட்ட
மனோநிலை இவர்களுடையது. தமிழ்ச் சமூகத்தின் முழு மனோநிலையில் இவர்கள்
அந்த நொந்தல்பட்ட ஒரு பகுதியைப் பிரதிபலிப்பவர்கள். எனவே, பொதுப்
பின்னணியில் விழிப்பு ஏற்பட்டபோது அதைக் கலை ரீதியில் மற்றவர்களை விட
அதிகமாகப் பயன்படுத்த முயன்றவர்கள் அவர்கள்தான். புதிய இலக்கிய
அக்கறைக்கும் வேகத்துக்கும் அவர்கள் அந்த வகையில் உதவித்தான்
இருக்கிறார்கள். இன்றைய ஈழத் தமிழ் எழுத்தாளர்களின் பாதிப் பேராவது
அவர்களாய் இருப்பது அதனால்தான். அல்லது மேலே எழுந்த கலை உணர்வை கீழே காத்துக் கிடந்த அதிகார ஆசை தாக்கி விழுங்கிவிட்டு, தானே அதுவாக மாறிவிடுகிறது. (பொன்னுத்துரையைப்பற்றி 'விமர்சக விக்கிரகங்களி'ல் இதே வகையில் விளக்கியதை இப்போ நினைவுக்கு வருகிறது.) அதோடு மார்க்ஸிடம் வைத்திருக்கும் பக்தியும், கட்சியில் வைத்திருக்கும் நம்பிக்கையும் அந்தத் திருகலை சா�க்கட்டல் செய்து நியாயமாக்குகின்றன. இலக்கியம் கட்சியின் கருவி, அதிகாரத் தேடலின் கருவி; அப்படி ஒரு நிலை. ஆனால், அதனால் கட்சி வாழுமே ஒழிய இலக்கியம் வாழாது. இல்லை, கட்சி கூடக் கடைசியில் அதனால் பாதிக்கப்படவே செய்கிறது. கட்சி, சமுதாயம் எல்லாமே வழிதப்பிய இலக்கியத்தால் வழிதப்பிவிடுகின்றன. ஸ்டாலின் கால ரஷ்யாவும் ஹிட்லர் காலத்து ஜெர்மனியும் அதை நிச்சயமாக நிரூபித்துவிட்டன. எனவே, இலக்கிய விவகாரங்கள் அதிகாரப் போராட்டங்களாகத் திருகப்படாமல் தடுக்கப்பட வேண்டும். 1963இன் ஆரம்பத்தோடு ஏற்பட்ட 'முற்போக்கு'க் கூட்டின் வீழ்ச்சி (அதன் அதிகார வீழ்ச்சியைக் குறிப்பிடுகிறேன். முற்போக்கின் உண்மையான சிருஷ்டி ஆரம்பம் அதற்குப் பின்னர்தான் வரும். வருவதாகத் தொ�கிறது என்பது என் எண்ணம்.) அப்படி ஒரு பிழையான திருகல் வளர்ச்சியைத் தடுக்க உதவியது. ஆனால் பொன்னுத்துரை 'நற்போக்கு'க் கூட்டை ஆரம்பித்து பழைய அதிகாரப் போராட்டத்தைத் திரும்பவும் தொடங்கிவிட்டார். திரும்பவும் பழைய சுலோகங்கள். சாதிச் சண்டைக்கு��ய சுலோகங்கள். நாம் மட்டுந்தான் எழுத்தாளர்கள், மற்றவர்கள் எழுத்தாளர்கள் அல்ல. நான் படைப்பதுதான் இலக்கியம், மற்றவை இலக்கியமல்ல. திரும்பவும் சுலோகங்கள். சின்ன வயதிலிருந்தே சாதிப் பி��வினைகளின் விளைவுகளால் அநியாயமாகப்
பாதிக்கப்பட்டு வளர்ந்த ஒருவா�டமிருந்து நீதியையும் நடுநிலையையும்
கேட்பது முன்னுக்குப் பின் முரண் மட்டுமல்ல, முறையும் அல்லதான். ஆமாம்,
அவரிடமிருந்து வேறு எதையும் எதிர்பார்க்கக் கூடாது. 'முற்போக்கு'க்கும்
'நற்போக்கு'க்கும் அப்பாற்பட்டவர்களால்தான் அதைச் செய்ய முடியும்.
ஆனால் அதைப்பற்றிக் கூறுவதை இக்கட்டுரைத் தொடா�ன் கடைசிப் பகுதிக்கு
ஒதுக்கிவிட்டு, திரும்பவும் பொன்னுத்துரையைப்பற்றி முன்புவிட்ட
இடத்துக்கு வரலாம். அதேபோல் அது ஒரு பலமான ஆயுதமுங்கூட. எனவே, அவர்களுக்கும் அதிகார ஆசைதான். ஆனால் பின்பு வந்த கைலாசபதி, சிவத்தம்பி போன்றோர்களே அந்த அதிகார ஆசைக்கு உதவுபவர்களாக இருக்க, பொன்னுத்துரை அதற்குத் தடையாக நின்றார். எங்கு தாழ்வு மனப்பான்மையிலிருந்து தப்பி பலத்தையும், அதிகாரத்தையும், மேம்பாட்டு உணர்வையும் அவர்கள் தேட முயன்றார்களோ அங்கு, அதே இடத்தில், அதே கூட்டில் பொன்னுத்துரையின் இருக்கை அவர்களைப் பொருத்த வரையில் புதுமையான ஒரு தாழ்வு மனப்பான்மையைப் புகுத்தியது. பொன்னுத்துரை தங்களின் குரு என்ற குறு குறுப்பு, கைலாசபதி, சிவத்தம்பி போன்றோர் அவர்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்துடன் பொருந்தியிருக்காது. எனவே, பொன்னுத்துரை உள்ளே இருப்பதை அவர்கள் விரும்பவில்லை.
இன்னுமொன்று, மிக முக்கியமான ஒர் மனோவியல் உண்மை. தாழ்த்தப்பட்டோர்
மேல் சாதிக்காரன் ஒருவனைத் தங்கள் தலைவனாக வைத்திருக்க விரும்பினாலும்,
தங்களுடைய வர்க்கத்திலிருந்தே வரும் ஒருவனைத் தலைவனாக வைத்திருக்க
விரும்ப மாட்டார்கள். மேல் சாதிக்காரர்கள் கீழே இறங்கிவரத் தயாராக
இருந்தால்கூட தாழ்த்தப்பட்ட பிரிவினர் தங்களுக்குள்ளேயே ஓற்றுமையைக்
காணவோ கலந்துகொள்ளவோ விரும்பார். விரும்புவது கஷ்டம். எனவே,
பொன்னுத்துரை அந்த ரீதியில் பொருந்தவே இல்லை. அதோடு பொன்னுத்துரைக்கு
இருக்கும் அதிகார ஆசை அவர்களுக்கு இருப்பதை விட அதிகமானது. கைலாசபதி,
சிவத்தம்பி போன்றோர் தங்களை இன்னும், தாழ்த்திக்கொள்ள வேண்டும் என்ற
மத்தியதர அறிவாளி வர்க்கத்துக்கே உ��ய குற்ற உணர்வோடு அவர்களுக்கு
(ஜீவா, டானியல் போன்றோருக்க) வெறும் வழிகாட்டிகளாக மட்டும் இருந்து
உதவவிரும்பியபோது, பொன்னுத்துரை தன்னை ஒரு மன்னனாகக் கருதிக்கொண்டு தன்
எண்ணங்களை அவர்கள் மேல் நசிந்தோ, நசியாமலோ திணிப்பவராக அவர்களுக்குத்
தொ�ந்திருப்பார். எனவே, பொன்னுத்துரை அவர்களைப் பொருத்தவரையில் வெளியே
இருப்பதுதான் நல்லது. சமூகத்தில் ஒரு proletarian ஆக இருப்பினும் இலக்கியத்தில், சிருஷ்டித் திறனில், தான் ஒர் aristocrat என்ற எண்ணம் அவருக்கு. அது ஓரளவுக்கு நியாயமானதுங்கூட. சமூகத்தில் தாழ்த்தப்பட்ட நிலையினால் வந்த ஆத்திரத்தோடு தன் திறமையைப்பற்றிய உணர்வும், அதனால் வரும் நம்பிக்கையும் பொன்னுத்துரைக்கு இருந்தன. இருக்கின்றன. எனவே, மற்றவர்களை விட அவருக்கு அந்த அதிகார ஆசை அதிகம். அதோடு கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்களோடு பழகும்போது மற்ற 'முற்போக்கு' எழுத்தாளர்களுக்கு இருக்கும் மா�யாதை இவருக்கு இருக்கத் தேவையில்லை. பட்டப் படிப்பும், ஆங்கில அறிவும் பொன்னுத்துரையை அவர்களோடு ஒத்தவராக்க, அவரது இலக்கியத்திறமை அவர்களையும்விட மேம்பாடு உடையவராகவே அவருக்குக் காட்டச்செய்யும். எனவே, 'முற்போக்கு'க் கூட்டுக்கு உள்ளே இருந்தால், கடைசி மும்மூர்த்திகளில் ஒருவனாக இருந்தால் மட்டும் போதாது. அவரே பிரம்மாவாகவும் அவரே சிவனாகவும் இருக்க வேண்டும். அது கிடைக்காதவரைக்கும் பொன்னுத்துரைக்கே உள்ளே இருப்பது
பிடிக்காமல் இருந்திருக்கலாம். எனவே வெளியே ஒதுக்கப்பட்டது.
பொன்னுத்துரையின் இயற்கையான ஆசைகளுக்கும் திறமைக்கும் ஒத்துப்போவதாகவே
இருந்தது. வெளியே நின்று அவர் செய்தவை சா�த்திரத்தில் வேறு ஒர்
சகாப்தத்துக்கு உ��யவை. இனி அவற்றை ஆராயலாம். அவர் பிறந்து வளர்ந்து சமூக நிலை தனிநிலைக்கு இடங் கொடுக்காது.
கூட்டமாக வாழ்ந்துங்கூட தனிமையையும், தாழ்வையும் உணர்த்தும் ஒரு சமூக
நிலையில், அந்தத் கூட்டுவாழ்க்கை ஒன்றை மட்டுமே ஆயுதமாகப் பாவிக்கும்
ஒரு சமூக நிலையில் பிறந்தவர்களுக்கு தனித்து நிற்பது என்பது
தற்கொலைக்குச் சமமாகும். பொன்னுத்துரை ஒரு எழுத்தாளராக இருந்தும் ஒரு
extravert ஆகவும், organization man ஆகவும், டொனவன் அன்ட்��யின்
கீற்றுகள் வெளியே தொ�ய விழாக்கள் நடத்தும் நிர்வாகியாகவும் இப்போ
விளங்குவதற்குரிய காரணங்களை, அவர் பிறந்த சமூக நிலை கொடுத்த ஆரம்பத்
தூண்டுதலிலிருந்து வந்தவையாக விளங்கிகொள்ள வேண்டும். 'முற்போக்கு'க்
கூட்டாலும் ஒதுக்கப்பட்டு மற்ற யாழ்ப்பாண மட்டக்களப்பு
எழுத்தாளர்களாலும் புறக்கணிக்கப்பட்டு 'பிரச்சினைக்குரிய' எழுத்தாளராக
நின்ற ஒரு நிலை, பொன்னுத்துரையைப் பொருத்த வரையில் ஓரளவுக்குப்
பரிதாபமானதுதான். ஆனால் அந்தப் 'பிரச்சினைக்குரிய நிலை'
பொன்னுத்துரையிடம் பின்பு மூன்று முக்கிய பண்புகளை வளர்க்க உதவிற்று.
அவற்றுள் இரண்டு, இன்று பொன்னுத்துரையின் வளர்ச்சிக்குப் பொறுப்பாக
இருக்க, மூன்றாவது, அவரையும் இனிவரும் பரம்பரையையும் பழுதாக்கக்கூடிய
பண்பாக மாறிவிட்டிருக்கிறது. அது பொன்னுத்துரையைப் பொருத்தவரையில் ஒரு வளர்ச்சி. (ட்றொட்ஸ்கியின் புரட்சிக்குரிய நல்ல பக்கம்.) கட்சியிலிருந்து தன்னைப் பிரித்துக்கொள்பவன் அடையும் பக்குவ உணர்வு அந்த வகையானது. கட்சி ஒன்றில் இருப்பதால் ஒருவனுக்கு இல்லாமல் போய்விடும் நிறைவு அந்தப் பக்குவ உணர்வுதான். இனிமேல் எந்த ஊழல்களையும் அமுக்கி மறைக்கத் தேவையில்லை. மாறாக, இனி பயம் இல்லாமல் மனசாட்சிக்கு ஏற்ப வெளிப்படுத்தலாம். அதில் தனிப்பட்ட ஆத்திரங்களும் வெறுப்பும் கலந்திருக்கும் என்பது உண்மைதான். அதை நான் மறுக்கவில்லை. ஆனால் அதே போன்று அதில் கூட்டு வழிபாடும், முகஸ்துதியும், முதுகுசொறிதலும் அதற்குப் பின் கிடையா. இலக்கிய வளர்ச்சிக்கு அந்தப் பண்பு மிகத் தேவையானது. ஆனால் கட்சி
உறவு அதைத்தான் சாகடித்துவிடுகிறது. அதாவது, ஒரு வட்டத்துக்குள்ளேயே
இருந்தாலும் தங்கள் வேறுபாடுகளைக் காட்டிக்கொள்ளத் தேவையான,
மணிக்கொடிப் பரம்பரைக்கு��ய, சுதந்திரமும், தனித்தன்மையும் இல்லா
யந்திரக் கட்சி இறுக்கம் அந்தப் பண்பை நசுக்கிவிடுகிறது. எனவே, அந்த
வகையில் பொன்னுத்துரை வெளியே விலகியது அவா�டம் ஒரு வளர்ச்சியைத்தான்
கொண்டு வந்தது. 'கலைச்செல்வி'யில், 'நான் நினைப்பவை' தொடா�ல்
கட்சியையும் ஜீவா, டானியல் போன்ற எழுத்தாளர்களையும் பற்றிப்
பொன்னுத்துரை எழுதியவற்றுள் தனிப்பட்ட விரோதங்கள் கலந்திருக்கலாம்.
ஆனால் அவற்றை விட அவை, அந்நிலையில் கட்சிப் பற்றற்று உண்மைகளைக் கூறவே
பொன்னுத்துரைக்கு அதிகமாக உதவியிருக்கின்றன. ஒரு objective பார்வை. அது
முதலாவது. ரிஷிகளின் ஞானத்துக்கும் ஆத்ம உணர்வுக்கும் திசை திருப்பும் ஒரு படிக்கட்டு. 'முற்போக்கு' எழுத்தாளர்கள் தாங்கள் எழுத்தாளர்களாய் இருப்பதன்மூலம் தங்கள் பலத்தைக் காணாமல், தங்களை உணராமல், கட்சியில் சேர்ந்திருப்பதன் மூலந்தான் தங்களையும் தங்கள் பலத்தையும் அதிகமாக உணர்கிறார்கள். Self realisation என்பது அவர்களுக்குக் கட்சிமூலந்தான் வருகிறது. இலக்கியத்தின்மூலம் அல்ல. கட்சியிலிருந்து விலகிவிட்டால் சமூக நிலை கொடுக்கும் அவர்களது தாழ்வுச் சிக்கலை எதிர்க்க அவர்களால் முடியாது. தங்கள் எழுத்துத் திறமையால் மட்டும் அதை அவர்களால் எதிர்க்க முடியாது. அந்த அளவுக்கு அவர்களுக்குப் பெரும்பாலும் தங்கள் எழுத்துத் திறமையில் நம்பிக்கை இல்லை. எனவே, அவர்களைப் பொருத்தவரையில் கட்சி முதலில், பின்னர் இலக்கியம் என்று தராசு ஏறி இறங்கி நிற்கிறது. அதனால் முழு உலகத்தையும் முழு உண்மையையும் கட்சிக்குள்ளேயே பார்க்க வேண்டியவர்களாய் அவர்கள் இருக்கிறர்கள். அந்தப் பொறியிலிருந்து பொன்னுத்துரை தப்பிவிட்டார். அரசியல் துறையில் செயலுக்காகவும் வசதிக்காகவும் திட்டவட்டமான கொள்கைகளுடன் இயங்கும் கட்சிகளில் அவருக்கு நம்பிக்கை இல்லாமலில்லை. இன்னும் பொன்னுத்துரை மார்க்ஸை உதறவில்லை. அதோடு இப்போ ஏற்பட்டுள்ள புதிய கட்சிப் பிளவில் அவர் சீனர் பக்கம்தான் சேர்ந்து நிற்கிறார். ஆனால் அந்த வகை அரசியல் அபிப்பிராயங்கள் இன்றைய ஜனநாயகத்தில் எல்லாருக்கும் இருக்கவே செய்கிறது. இருக்க வேண்டும். ஆனால் அதற்காக இலக்கியத்தில் தன் பார்வையைக் கட்சி காட்டும் ஓட்டைக்குள் மட்டும் நிறுத்திவிட அவர் விரும்பவில்லை. எல்லா திட்டவட்டமான தத்துவங்களும் கட்சிகளும் உலகத்தையும் முழு உண்மையையும் அளப்பதற்குப் பதிலாகச் சிதைக்கத்தான் செய்கின்றன. ஆகக் கூடுதலாக அவற்றால் ஏற்படும் பயன், செயல் நடை பெறுவதற்குத் தேவையான ஓர் அடிப்படையைக் கொடுப்பதற்குத்தான். ஆனால் அதற்காக முழு உண்மையையும் பிரதிபலிப்பதாக நினைக்கக் கூடாது. முழு உண்மை பிரபஞ்சமானது, பிரபஞ்சத்துக்கும் அப்பாலானது. எனவே, நாம் போடும் தத்துவங்களெல்லாம் சார்பானவை, முற்றாகச் சா�யானவையல்ல. விஞ்ஞான ��தியான தத்துவம் என்று சொல்லப்படும் மார்க்ஸீயமும் அப்படியேதான். ஏன் விஞ்ஞான உண்மைகளே நிரந்தரமானவையா? நியூட்டனின் கொள்கைகள் ஐன்ஸ்டீனால் மாற்றப்படவில்லையா? இப்போ ஐன்ஸ்டீன் கொள்கைகள் ப்ரெட் ஹொய்லால் வி��த்து விளக்கப்படப் போவதாகத் தொ�யவில்லையா? விஞ்ஞான உண்மைகள் நிரந்தரமானவை என்று விஞ்ஞானிகள் சொல்வதில்லை. சாதாரண அரை வேக்காட்டுப் பேர்வழிகள்தான் அப்படி
நினைத்துக்கொள்கிறார்கள். நம் கட்சிப் பி��யர்கள் பெரும்பாலும் அத்தகைய
அரைவேக்காடுகளே. எனவே, பொன்னுத்துரை கட்சிப் போர்வையிலிருந்து தன்னை
விலக்கிக் கொண்டது ஒரு பொ�ய வளர்ச்சியையே குறிக்கிறது. இயற்கையிலும்
வாழ்க்கையிலுமுள்ள அந்தப் புதிரை, மர்மத்தை, புலன்களுக்கு அப்பால்
நின்று பிடிபடாமல் நழுவி நழுவி கணப்பொழுதுக்குள் முகத்தில்
அறைந்துவிட்டு மறைவதுபோல் உணர்வை எழுப்பும் அந்த நிரந்தர ஓட்டத்தைக்
காட்ட விரும்பும்போது கலைஞன் ஒருவன் கட்சி காட்டும் குறுகிய ஓட்டையில்
மட்டும் தொங்கிக்கொண்டிருக்க மாட்டான். அவை பூரணமாக வளர்வதற்குத் தடையாக நின்று பொன்னுத்துரையின் பார்வையையும் திறமையையும் திருகிவிட்டு இப்போதுள்ள 'நற்போக்கு' பொன்னுத்துரைக்கு��ய நிசமான உருவத்துக்குக் காரணமாக நிற்கிறது அந்த அதிகார பிரபல்ய ஆசை. இந்த ஆசையை முன்பு அவா�ன் சமூக நிலையின் அடிப்படையிலும் தனிப்பட்ட அவா�ன் திறமையின் அடிப்படையிலும் விளக்க முயன்றிருக்கிறேன். அவற்றின்படி பொன்னுத்துரை சதா தன்னை ஒரு கூட்டத்தின் மையமாக வைத்துக்கொண்டு அதற்குத் தலைமை தாங்கவே அதிகம் விரும்புவார் என்றும் குறிப்பிட்டேன். அப்படிப்பட்ட ஒரு ஆசை 'முற்போக்கு'க் கூட்டிலிருந்து அவர் ஒதுக்கப்பட்ட பின் ஏற்பட்ட தனிமை நிறைந்த 'பிரச்சினைக்கு��ய நிலை'யில் தன்னை அதிகமாகக் காட்டிக்கொள்ளத் தொடங்கியது. அதோடு 'முற்போக்கு'க் கூட்டை விட்டு விலகியதனால் அவருக்கு ஏற்பட்ட மற்ற இரண்டு நல்ல பண்புகளையும்கூட அது பூரணமான வளரவிடாமல் தடுத்ததோடு அவற்றையும் தன் நோக்கங்களுக்கேயு��ய கருவிகளாகவும் அமர்த்திக்கொண்டது. பொன்னுத்துரையின் இன்றைய 'நற்போக்கு'க் கொள்கையில் மற்றவர்களின் சார்பு நிலைகளை உணர்ந்த, பரந்த பார்வைக்கு��ய ஒரு நல்ல சாயல் தொ�ந்தாலும் அது முற்றிலும் ஒரு புதிய குறுகிய வட்டத்தின் ஆதிக்கத்துகு��ய பிரகடனமாகத் திருகப்பட்டிருப்பது அதனால்தான். 'முற்போக்கு'க் கூட்டிலிருந்து ஒதுக்கப்பட்ட பொன்னுத்துரையிடம்
ஏற்பட்ட அதிகாரத் துடிப்பின் திருப்தி பெற்ற உருவந்தான் இன்றைய
'நற்போக்கு'க் கூட்டு. அதில் 'முற்போக்கு'க் கூட்டிலிருந்து
வெளியேற்றப்பட்ட பின் பொன்னுத்துரைக்கு ஏற்பட்ட வளர்ச்சிக்கு��ய நல்ல
பண்புகள் அவா�டம் தனிமையாக நிற்கும் அதிகார ஆசைக்கு��ய கருவிகளாக
மாற்றப்பட்டு வெறும் கீறல்களாகத்தான் தொ�கின்றன. ஆனால், 'முற்போக்கு'க்
கட்டத்துக்கு வருமுன் அந்த அதிகார ஆசையின் வெளிக்காட்டல்களைப்
படிப்படியாக, ஆனால் அதே சமயம் சுருக்கமாகப் பார்ப்பது நல்லது. அவர் கொடுத்த பட்டியலில் சில புதிய பெயர்களும் இருந்தன. அந்தப்
புதியவர்கள் பொன்னுத்துரையிடமே கதைகளை இரவல் வாங்கியவர்களாகவும்
இருந்தால் அதில் ஆச்சா�யப்பட ஒன்றுமில்லை. பொன்னுத்துரையின் விமர்சனம்
எல்லாம் அப்படிப்பட்டதுதான். பட்டியலில் உள்ள பழைய பெயர்கள் வரும்
இடங்களில் அவர்களுடைய கதைகளாக அதுவரை யாரும்
முக்கியத்துவப்படுத்தாதவற்றையே அவர் தந்திருந்தார். அதன் நோக்கம்
முற்றிலும் புதிதாக ஒரு பட்டியல் தன்னால் கொடுக்கப்பட வேண்டும் என்பதே
ஒழிய, தரத்தின் அடிப்படையில் தரப்பட வேண்டும் என்பதல்ல. தன்னைத்
திணிக்கும் ஒரு சர்வாதிகாரம். வியாகேசதேசிகர் படலம் பொன்னுத்துரையின்
சர்வாதிகார அவதாரப் படலமாகும். அத்தியாயம் ஒன்று. எனவே, பொன்னுத்துரையின் அவதாரங்களை ஹிட்லா�ன் பா�வாரங்களோடு 'விமர்சக விக்கிரகங்களி'ல் நான் ஒப்பிட்டபோது பின்னதைத்தான், கோமாளித்தனத்தைத் தான், அதிகமாக அழுத்த விரும்பினேன். ஆனால் இப்போ அதைவிட பொன்னுத்துரையை ஒரு வேடிக்கையான Ventriloguist விமர்சகர் என்றால் விளக்கமாக இருக்கும் என்று நினைக்கிறேன். பொன்னுத்துரையின் குரல் எத்தனை எத்தனை பேர்களின் வாய்களிலிருந்து வெளிவருகிறது. பத்தி��கையில் அவர் ஒரு Ventriloguist விமர்சகர். (அதை நெருப்புப் பார்வை என்று சொல்வதை நினைத்துப் பாருங்கள்.) விழாக்களில் அவர் ஒரு பொம்மையாட்டம் நடத்துபவர். ஒரு டைரக்டர். ஆனால் இரண்டுக்குமு��ய பின்னணிப் பாடல் ஒன்றே ஒன்றுதான்! 'குவாய் நதிப்பாலம்' என்ற ஆங்கிலப் படத்தில் வரும் சீட்டி இருக்கிறதே அதுவேதான். Hitler, had only one big.... இந்த இடத்தில் சுருதி கெட்டுவிடாமல், விமர்சக விக்கிரகங்கள் மன்னிக்க வேண்டும், இரண்டு குட்டு, ஒரு தோப்புக்கரணம். இனி, அடுத்த கட்டத்துக்கு வரலாம். அடுத்த கட்டம் இரவல் படலம். மற்றவர்களக்குத் தன் எழுத்துகளை இரவல் கொடுப்பது பொன்னுத்துரையைப்
பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்தே வந்திருக்கிறது. அந்தப் பண்பை இந்தக்
காலகட்டத்துக்கு மட்டும் சொந்தமாகப் பார்க்கத் தேவையில்லை. ஆனால் இந்த
இடத்தில் அதை ஆராய்வது பொருத்தமாக இருக்கும். பொன்னுத்துரைக்கேன்
அந்தளவு தாராள மனப்பான்மை? அது பிழையான கேள்வி. தாராள மனப்பான்மையை விட
சாணக்கியம்தான் அதில் அதிகம். அவருடைய அதிகார ஆசையோடு ஒட்டிய நசிந்த
ராஜதந்திர சாணக்கியம். பொன்னுத்துரையின் புதிய tactics.
அடுத்தவர்களுடைய மனசாட்சியை வாங்கிவிடுவதற்கு அவர் கொடுக்கும்
லஞ்சம்தான் அது. பின்பு அதுவே blackmail ஆகிவிடுகிறது. தன்னைச் சுற்றி,
தனக்குக் கடமைப்பட்ட, தன்னை வழிபடக்கூடிய ஒரு பா�வாரத்தை வைத்திருக்க,
பொன்னுத்துரை கொடுக்கும் ஒரு இலக்கிய லஞ்சம் அது. புதிய பரம்பரையைப்
பழுதாக்கக் கூடிய வித்தின் பல வேர்களில் அதுவும் ஒன்று. ஆனால்
புதியவர்களாக வரக்கூடியவர்கள் மட்டுமல்ல பழைய பேர்வழிகளுங்கூட அதனால்
பழுதாக்கப்பட்டுவிடுகிறார்களே! அந்த வகையில் பார்க்கும்போது 'முற்போக்கு'க்குப் போட்டியாக ஒரு சங்கத்தை அவர் நிர்வகிக்கத் தொடங்கியது, அவருடைய தனிமையையும் 'பிரச்சினைக்கு��ய நிலை'யையும் போக்கின என்பவை இரண்டாந்தர விசயங்களே. இங்க அவை தேவையற்றவையுங்கூட என்றாலும், வேறு ஒரு காரணத்தால் அவற்றையும் சேர்க்க வேண்டி இருக்கிறது. இந்தக் கட்டத்தில்தான் பொன்னுத்துரை தன் எழுத்துத் திறமையின் பூரண வலுவை உணரத் தொடங்கினார் என்பதுதான் அந்தக் காரணம். இலக்கிய ��தியில் தான் ஓர் aristocrat என்ற எண்ணம் ஏற்கனவே அவா�டம் இருந்தாலும், அது, சமூக நிலையின் காரணமாய் இருந்துவந்த தாழ்வுணர்வுக்குப் பதிலாக இந்தக் கட்டத்தில் வைத்துத்தான் அவா�டம் முற்றாக இடம் மாறிக்கொண்டது. மற்ற 'முற்போக்கு' எழுத்தாளர்களுக்கு இருப்பதுபோல் அரசியல் கட்சி முதலாவது, இலக்கியம் இரண்டாவது என்ற நிலை அவருக்கு அதற்குப் பின் இருக்கவில்லை. அரசியல் சார்பற்ற ஒரு எழுத்தாளர் சங்கத்தின் மூலமே தன்னை உணரக்கூடிய வலுவை அதற்குப் பின் அவர் பூரணமாக உணர்ந்து கொண்டார் என்பதுதான் என் அபிப்பிராயம். கிழக்கிழங்கையில் அதுவரை அவருக்கிருந்த கட்சி அக்கறையும் அதற்குப் பின் தேவையற்று மறையத் தொடங்கிவிட்டது என்பதையும் இங்கு கவனிப்பது நல்லது. இந்தக் கட்டத்தில் பொன்னுத்துரை வெறும் நினைவில் மட்டும் அல்ல செயலிலும்கூட ஒரு ஒரு aristocrat ஆக மாறிக் காட்சி தருகிறார். பண்டிதங்களுக்கும் ஒரு பண்டிதர். ஆனால் பண்டிதம் என்பது அதிகாரத்தை விட்டுக் கொடுக்காத dogmatic பார்வை கலந்த ஒரு போக்கையும் குறிக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். அந்த நிலையில் புதிய மாற்றம் பழைய அதிகார ஆசையோடு ஒத்துப்போவதாகவே
இருந்தது. தாழ்த்தப்பட்ட நிலையில் உள்ளவர்களும் அதிகாரத்தைத் தாங்கள்
பெற்றக் கொண்ட பின் அப்படி ஒரு விட்டுக்கொடுக்காத பண்டிதப்
போக்கைத்தான் கடைப்பிடிக்க விரும்புகின்றனர். இங்கே பண்டிதம் என்பதன்
மூலம் dogmatism என்பதைக் கருதுகிறேன் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள
வேண்டும். ஆனால் அரசியல் கட்சியை முதலில் நம்பும் 'முற்போக்கு'வாதிகள்
அரசியல் கொள்கைகளில் அந்தப் பண்டிதத்தைக் கடைப்பிடிக்க, இலக்கியத்தை
முதலில் நம்பத் தொடங்கிவிட்ட பொன்னுத்துரை இந்த கட்டத்துக்குப் பின்
இலக்கியத்தில் அதே வகைப் பண்டிதத்தை விரும்பத் தொடங்கியதில்
ஆச்சா�யப்பட ஒன்றுமில்லை. எனவே, அதற்குப் பின் பழைய பண்டிதர்களே அவரை
விரும்பும் வகையில், அவரும் அவர்களையே நாடும் வகையில் பொன்னுத்துரை ஒரு
புதுப் பண்டிதராகவே மாறிவிட்டார். இலக்கியத்தின் கதி? Dogmatism. அதிகாரத்தைத் தனக்குள்ளேயே, தனக்குள் மட்டுமே, திணிக்க முயலும் எந்தக் கூட்டுக்குள்ளும் அகப்படும் இலக்கியத்தின் கதி அதோ கதிதான். எனவே, இந்தக் கட்டத்தில்தான் 'மூன்றாம் பக்கம்' என்ற ஒன்று தேவைப்படுகிறது. மூன்றாம் பக்கம் முதலிரண்டு பக்கங்களையும் நசுக்குவதாக இல்லாமல் (நசுக்க நினைக்கும் போக்க, அதிகாரத்தை நாடும் போக்காக மாறிவிடும். எனவே அது கூடாது) அவை இரண்டிலுமுள்ள தரமானவற்றை எல்லாம் தன்னோடு சேர்த்துக்கொண்டு அவற்றுக்கப்பாலும் வி��ய வேண்டும். 'நற்போக்கு' அதைத்தான் செய்யத் தவறிவிட்டது. 'முற்போக்கு'க் கூட்டை விட அது பார்வையில் ஓரளவுக்கு வி��வானதாக
இருப்பினும் 'முற்போக்கு'க் கூட்டைப் போலவே அது அதிகாரத்தைத்
தனக்குள்ளேயே திணித்துக்கொள்ள விரும்புவதால், அடுத்த பக்கம் பார்க்க
மறுப்பதால், 'முற்போக்கு'வைப் போலவே அதுவும் தன் எல்லையையும்
பார்வையையும் குறுக்கிவிடுகிறது. எதிர் 'முற்போக்கு' வேகத்தோடு பிறந்த
புதிய தேவைக்கு ஏற்ற வகையில் அது தன்னை வி��த்துக்கொள்ளத்
தவறிவிடுகிறது. தவறிவிட்டது. அதன் பார்வையையும் கொள்கையையும்
பொருத்தவரையில் அது இன்று மூன்றாம் பக்கமாக இல்லை. புதிதாகத்
தலைகாட்டிய பண்டிதமாகவும் இல்லை. எனவே, கா.சிவத்தம்பி அண்மையில்
குறிப்பிட்டதுபோல் அந்தக் கொள்கைப் பலவீனத்தைப் போக்குவதற்காக பயனற்ற
நடைச்சித்திரங்களில் தன்னை நிறுத்திக்கொண்டு ('முற்போக்கு' விமர்சனம்
கடைசியில் தொழிற்சங்க விவகாரமாக மாறியதுபோல்) செயலளவில் சில
பண்டிதர்களின் உதவியோடு பொன்னுத்துரை செய்யும் சர்வாதிகாரமாக
'நற்போக்கு' இப்போ மாறிவிட்டிருக்கிறது. புதிய பரம்பரையைப் பழுதாக்கும்
வித்தின் அடுத்த வேர் அது. பல கிளைகள் விட்டு பல பக்கங்களைப்
பழுதாக்கக்கூடிய வேர். அதன் விழிப்பைப் பயன்படுத்தி வந்தது. எனவே, நம் இலக்கிய விவகாரங்களில் பொதுப் பின்னணியின் சாயல் ஏற்படுத்திய மாற்றங்களை ஆராய்வது மிகத் தேவையான ஒன்றே. சமூக நிலைகளைக் காரணங்களாகக் காட்டியது இங்க யாரையும் புண்படுத்தும் நோக்கத்தினாலல்ல. அப்படி நினைப்பவர்கள் என் நோக்கத்தை மட்டுமல்ல, தரமான கலை ஆராய்ச்சிகளையும் பு��யதவர்களாகவே இருக்க வேண்டும். அதோடு பொன்னுத்துரையைப்பற்றிய ஆராய்ச்சி தனிப்பட்ட முறையில் personal ஆகச் செய்யப்படும் கண்டனமும் அல்ல. இன்னும் சிலருக்கு இந்த வித்தியாசம் பு��யாமல் இருப்பதாகவே தொ�கிறது. இங்கு எஸ். பொன்னுத்துரை என்ற ஓர் எழுத்தாளா�ன் முழு எழுத்தாளப் போக்கையும் அவர் நடத்தும் இலக்கிய இயக்கத்தையுமே ஆராய்ந்தேன். அதனால் இத்தகைய பார்வை நியாயமானது மட்டுமல்ல, கட்டாயம் தவிர்க்க
முடியாத ஒரு தேவையுங்கூட. தனிப்பட்ட ஒரு சிருஷ்டியை ஆராய்ந்தால் அங்கே
இந்தப் பார்வை ஒருவேளை தேவையற்றதாக இருந்திருக்கும். 'எழுத்து'வில்
நான் எழுதிய 'தீ'யைப் பார்த்தால் வேற்றுமை தொ�யவரும். தனிப்பட்ட
முறையில் personal ஆக எழுதுவது என்பதற்கு உதாரணம் வேண்டுமானால்
'தேசாபிமானி'யில் வரும் சில உளறல்களைப் பார்க்கலாம். பொன்னுத்துரையின்
நடைச் சித்திரங்களைப் பார்க்கலாம். பழைய மரபு முழுவதையும் கண்மூடித்தனமாக ஏற்றக்கொள்பவர்களை விட இந்த
'முற்போக்கு'வாதிகள்தான் பொ�ய dogmatists. பொ�ய வைதீகங்கள். பழைய மரபை
விட இவர்கள் திணிக்கும் புதிய மரபு அதிக யந்திரமானது. இறுக்கமானது.
தனிமனிதனைச் சாகடிக்கக் கூடியது. எனவே, பழைய பண்டிதர்களையும், புதிய
'முற்போக்கு'வாதிகளையும் எதிர்க்கும் ஒரு புரட்சிவாதிபோலத்தான்
பொன்னுத்துரை ஆரம்பத்தில் தொ�ந்தார். ஆனால் பின்னர் அவரும் ஒரு புதிய
வைதீகமாக, ஒரு புதிய dogmatist ஆக, ஒரு புதிய பண்டிதராக மாறிவிட்டார்.
மாறிவிட்டார் என்றுகூட சொல்லிவிட முடியாது. ஆரம்பத்திலிருந்தே அவர்
அப்படித்தான் என்றுதான் சொல்ல வேண்டும். இப்போ அந்தப் பண்பு முன்பை
விடக் கூடுதலாகத் தொ�கிறது. வித்தியாசம் அவ்வளவுதான். சட்ட திட்டங்கள்,
கொள்கைகள், சுலோகங்கள் என்று திட்டவட்டமாகப் போட்டுக் கொண்டு முழு
உண்மையும் அவற்றுக்குள்தான் இருக்கிறது என்று சாதிக்க முயலும்போது
அங்கே dogmatism, வைதீகம், பண்டிதம் எல்லாம் பிறந்துவிடுகின்றன.
உண்மையைப் பற்றிய விசாரணைக்குப் பதிலாக அதிகாரத் தேடல்தான் அவற்றுக்கு
அடிப்படையாக நிற்கிறது என்றும் சொல்லலாம். பொன்னுத்துரையின் எழுத்துகள்
பெரும்பாலும் - பெரும்பாலும் என்பது கவனிக்கத்தக்கது - அந்த ரகத்தைச்
சேர்ந்தவை. சமூக அமைப்பு, ஸ்தாபனங்கள், பழக்க வழக்கங்கள், சமயக் கொள்கைகள் எல்லாம் யந்திரமயமாகி வாழ்க்கையின் அர்த்தமும் சுதந்திரமும் கெட்டுப்போகிறபோது வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தையும் விடுதலையையும் உண்மையையும் காண்பதற்கு எடுக்கும் முயற்சிதான் என்னைப் பொருத்தவரையில் புரட்சியாகிறது. அந்த நிலையில் ஒருவன் பால் விவகாரங்களில் வாழ்க்கையின் மற்ற துறைகளில் காண முடியாத விடுதலையையும் சுதந்திரத்தையும் உண்மையையும் காண முயலலாம். ஆனால் அந்தப் பார்வையில் பொன்னுத்துரை பால் விவகாரங்களைப் பாவிப்பதாகத் தொ�யவில்லை. வெறும் யதார்த்தம் என்ற பார்வை மட்டுந்தான் அவருக்கு��யது. வெறும் யதார்த்தத்தில் பால் விவகாரங்கள் கூட யந்திர விசயங்களாக மாற்றப்பட்டு விடுகின்றன. அந்த வித்தியாசத்தைப் பொன்னுத்துரை உணர்ந்ததாகத் தொ�யவில்லை. அதனால் பொன்னுத்துரையின் கதைகள் நம் மரபின் தணிக்கையை மீறி யதார்த்தமாக எழுதப்படுமளவுக்குத்தான் புரட்சிகரமாக இருக்கின்றன. யந்திரமாகிவிட்ட வாழ்க்கையின் மற்ற துறைகளை விட பால் விவகாரங்கள் கொடுக்கும் வித்தியாசத்தையும் விடுதலையையும் உணர்த்துமளவுக்கு அவை புரட்சிகரமானவை அல்ல. எனவே, பாதிப்புரட்சி மட்டுந்தான். ஆனால் மற்ற விசயங்களில் எல்லாம் ஒரு பண்டிதராகவும் ஒரு வைதிகமாகவும் ஒரு dogmatist ஆகவும் மாறிவிட்ட பொன்னுத்துரை இன்னும் ஓரளவுக்கு ஒரு புரட்சிவாதியாகவும் முரளியாகவும் (rebel) தொ�கிறார் என்றால் இந்தப் பாதிப்புரட்சி காட்டும் அவருடைய பால் விவகாரக் கதைகளினால்தான் என்பதையும் மறந்துவிடக் கூடாது. அதோடு அந்தப் பண்பு பாதிப் புரட்சியாக மட்டும் தொ�வது நம் அளவுகோல் பொ�தாகிவிட்டதனாலேயே என்பதையும் மறந்துவிடக் கூடாது. யதார்த்தமாகப் பால் விவகாரங்களைப்பற்றி எழுதுவது பாதிப் புரட்சியாய்
இருப்பினும் நம் இப்போதைய சமூக நிலையில் அதன் விளைவுகள் பொ�ய
விடுதலையையும் சுதந்திரத்தையும் ஏற்படுத்தக் கூடியவை என்பதை ஞாபகத்தில்
இருத்திக்கொள்ள வேண்டும். பொன்னுத்துரையின் 'தீ'யின் முக்கியத்துவம்
அந்த வகையானது. Tropic of Cancer போன்ற ஆங்கில நாவல்கள் எப்படியோ
அப்படி. என்னென்ன வகையான பிழைகள் அதில் இருப்பினும் 'தீ' நம்
எழுத்தாளர்களின் முயற்சிகளை நசுக்கி அமுக்கிக்கொண்டு, நம் இலக்கிய
உலகில் நிற்கும் அந்தப் பிற்போக்கு 'மா�யாதை'ப் பார்வையை
உடைத்திருக்கிறது. அதனால் ஏற்பட்டுள்ள விடுதலையும், சுதந்திரமும்,
புதிய மரபும் ஒரு புதிய சகாப்த்துக்கு, அவற்றைச் சா�யாகப் பயன்படுத்த
நம் எழுத்தாளர்கள் முயன்றால் வழி வகுத்திருக்கின்றன. எனவே,
பொன்னுத்துரைக்கு��ய புரட்சி அம்சம்-அது பாதிப் புரட்சியாய்
இருப்பினும்-இந்தத் துறையில்தான் தொ�கிறது. முக்கியமாக அவருடைய கட்டுரைகளில் காணக் கிடைக்கும் பண்பு இந்த வகையானது. ஆனால் இந்த வார்த்தை வித்தை ஈழத்து இன்றைய இலக்கியச் சூழலில் செல்லுபடியாகிறதாகவே தொ�கிறது. காரணம், இங்கே எல்லோரும் அதைத்தான் இலக்கியத் திறமையாகக் கணிக்கிறார்கள். இலக்கியப் போராட்டங்கள் பெரும்பாலும் இத்தகைய விசயத்தை நழுவவிட்ட வார்த்தைப் போராட்டங்களாகவே இருக்கின்றன. பொதுவாக 'முற்போக்கு' எழுத்தாளர்களுக்குப் பு��யக் கூடியவை அவையாகத்தான் தொ�கின்றன. ஆனால் அந்த வித்தை உண்மையில் பொன்னுத்துரையின் கட்டுரைகளைப் பயனற்றவையாகத்தான் ஆக்கிவிடுகிறது. தர்மு சிவராமுவுக்குப் பதிலாக 'எழுத்து'வில் அந்தளவுக்கு அழகாக எழுதப்பட்ட கட்டுரையில் கூட விசயம் விடுபட்டுப்போய் வார்த்தைகள்தான் மிஞ்சி நிற்கின்றன. உண்மையில் பொன்னுத்துரை தர்மு சிவராமுவின் கட்டுரைக்குப் பதிலளிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும. எப்படி தர்மு சிவராமுவின் 'தீ' பற்றிய கட்டுரையில் அவசரத்தாலும், ஆத்திரத்தாலும், யதார்த்தத்தைப்பற்றிய அறிவின்மையாலும் விசயங்கள் விடுபட்டுப்போய் விடுகின்றனவோ அப்படியே பொன்னுத்துரையின் கட்டுரையில் குதர்க்கத்தால் விசயங்கள் விடுபட்டுப்போய் விடுகின்றன. தர்மு சிவராமுவின் அவசரமும் ஆத்திரமும் கலந்த கட்டுரையை அங்கம் அங்கமாகக் கிழித்திருக்கலாம். ஆனால், அந்தக் கட்டுரையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப்
பதிலளிக்காமல் பொன்னுத்துரை வேறு விசயங்களைப்பற்றித்தான் பெரும்பாலும்
பேசுகிறார். ஐன்ஸ்டீன் Atman - Energy எனச் சமப்படுத்தினாரா என்று
பொன்னுத்துரை எழுப்பிய கேள்வி மிகக் குழந்தைத்தனமானது. ஐன்ஸ்டீனுக்கேன்
ஆத்மனைப் பற்றிய அக்கறை இருக்க வேண்டும்? எனவே, அது வெறும் அர்த்தமற்ற
குதர்க்கம். ஆனால் அதன் வார்த்தை வித்தை ஏற்படுத்திய மருட்சியில், மற்ற
துறைகளுக்கு ஏற்ப விஞ்ஞானிகள் equations போடுவதில்லை, மாறாக மற்ற
துறையிலுள்ளவர்கள் விஞ்ஞான உண்மைகளைத் தாங்களே பயன்படுத்திக்கொள்வர்
என்ற உண்மைகள் எல்லாம் மறைந்துவிடுகின்றன. அதைப் பொன்னுத்துரை தவறவிட்டுவிடுகிறார். அதோடு பிழையான எதிர்க் கேள்வி ஒன்றையும் எழுப்புகிறார். மேற்கே பார்க்க வேண்டுமென்றால் கிழக்கே ஒன்றுமில்லை என்பதல்ல அர்த்தம். கிழக்கே எவ்வளவோ இருக்கிறது. அதிகமாகவும் இருக்கிறது. கலாநிதி சரத்சந்திரா கிழக்கால்தான் அதிகமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறார். ஜப்பானிய கலாச்சாரத்தை வைத்து அவர் ஒர் நாவலே எழுதியிருக்கிறார். அதோடு நம் நாட்டு நாடக முறையை மேற்கின் உதவியோடு, அவர் மெருகூட்டி புதுப்பித்துமிருக்கிறார். அவரைப் பின்பற்றித் தயா��க்கப்பட்ட 'நா�பானா' என்ற நாடகத்துக்கு பொன்னுத்துரையே மட்டக்களப்பு விழாவில் இடங்கொடுக்கவில்லையா? (இந்த முறையைப் பயன்படுத்தும் கலாநிதி வித்தியானந்தனைப் பின்னர் 'நற்போக்கு இலக்கியம்' கட்டுரையில் பொன்னுத்துரை குறை கூறுவதும் அதேவகையான குதர்க்கந்தான்.) எனவே, அவை வேறு, மேற்கே பார்க்க வேண்டும் என்பது வேறு. மேற்கே பார்த்தால்தான், நம்முடைய செல்வங்களையும் நாம் அறிகிறோம். நம்முடைய குறைகளையும் தேவைகளையும் உணர்கிறோம். அதைத்தான் கலாநிதி சரத்சந்திரா கூறுகிறார். அதோடு மேற்கிலுள்ளவர்கள் கிழக்கைப் பார்க்க வேண்டும் என்று சொல்லாமலுமில்லை. எஸ்ரா பவுண்டின் புது முயற்சிகள் கிழக்கே பார்த்ததின் காரணமாகத் தானே பிறந்தன? ஜங் (Jung) கிழக்கின் ஆழத்தைக் கூறவில்லையா? ஹக்ஸ்லி வேதாந்தத்தை நம்மை விட அதிகமாக அழுத்தவில்லையா? இப்படிப் பல உதாரணங்களை மற்ற துறைகளிலும் காட்டலாம். நம் மொழி வரலாற்றின் மகிமையையே மேற்கத்தையவர்கள்தான் நமக்குக் காட்டிக்கொடுத்தார்கள். எனவே, சரத்சந்திராவின் பார்வை ஒரு உலகப் பார்வை. நம்முடைய பார்வை குறுகிய பார்வை. அதனால் நம்மைப்பற்றியே நாம் அறிய முடியாமல் இருக்கிறோம். வெறும் மரபுக் கூச்சல். ஆனந்த குமாரசாமியின் பார்வை உலகப்பார்வை. வெறும் மரபுக் கூச்சல் அல்ல. ஆனால் பொன்னுத்துரையின் குதர்க்கத்தில் இத்தகைய உண்மைகளுக்கு
இடமில்லை. குதர்க்கம் என்பதே உண்மையைப்பற்றிய சர்ச்சை அல்ல. அது,
தாங்களே சா�யானவர்கள் என்று எப்படியாவது நிரூபித்துவிட வேண்டும்
என்பதற்காக செய்யப்படும், உண்மையைக் கூறுவது போன்ற ஒரு பாவனை
மட்டுந்தான். வெறும் வார்த்தை வித்தைகளுக்கு��ய dogmatism இன் ஒரு தனி
ஆயுதம் இந்தக் குதர்க்கந்தான். அதிகாரத்தைப் பங்கிட விரும்பாத
காரணத்தால் இது கையாளப்படுகிறது. இன்றைய சர்வதேச அரசியல் கூடாரங்களில்,
முக்கியமாக சீன-ரஷ்ஷிய தகராறில், இதே குதர்க்கந்தான் கையாளப்படுகிறது.
எனவே, அது பொன்னுத்துரையின் ஆயுதமாகவும் 'முற்போக்கு'க் கூட்டினர்
விளங்கிகொள்ளக்கூடிய ஒரு முக்கிய சாதனமாகவும் இங்கு
மாறிவிட்டிருப்பதற்கு��ய காரணத்தை விளங்கிக்கொள்வது கஷ்டமானதல்ல. எனவே, அவர்களைக் கொண்டு அளப்பதைப் பொன்னுத்துரை பொ�தாகக் கருதக்கூடாது. மற்ற நாடுகளில் உள்ள சராசா� எழுத்தாளனுக்கு இருக்கும் பார்வை ஆழம்கூட நம் நாட்டு எழுத்தாளர்களுக்கு இன்னும் ஏற்படவில்லை. அந்த அடிப்படையில் பார்க்கும்போது பொன்னுத்துரையின் நிலை திருப்திகரமாக இல்லை. எழுதும் திறமையும் சக்தியும் இருந்தால் மட்டும் போதாது. பார்வை ஆழமும் அதே அளவுக்கு வேண்டும். Romanticism, extrovert, introvert என்பவை எல்லாவற்றையும் வேண்டாத மேற்கத்தைய விசயங்கள் என்று அவர் முற்றாக ஒதுக்கிவிடுவதைக் கொண்டே பொன்னத்துரையின் பார்வை ஆழம் எப்படிப்பட்டது என்பதை பு��ந்துகொள்ளலாம். Extrovert introvert என்பவை தாங்களாகவே எழுப்பும் பார்வை. வி��வோடு ஞானயோகம், கர்மயோகம், பக்தியோகம் போன்ற நம் நாட்டு விசயங்களையும் இன்னும் அதிகமாக விளக்குவதற்கும் உதவுகின்றன என்பன போன்றவற்றைப் பொன்னுத்துரை தவறவிட்டிருக்கிறார். அவருடைய பார்வையின் தரத்துக்கு அது ஓர் உதாரணம். இன்னுமோர் உதாரணமாக அவருடைய 'நூறு மலர்கள் மலரட்டும்' என்ற மாசே துங்கிய கொள்கையைக் காட்டலாம். சீனாவில் 'நூறு மலர்கள்' நடைமுறைக்கு வராத வெறும் சுலோகமாகத்தான் மாறிவிட்டிருக்கிறது என்பதைப் பொன்னுத்துரை உணரத்தவறிவிடுகிறார். அதோடு 'நூறு மலர்கள்' என்பது உள்ளடக்க வித்தியாசங்களையும் கருத்து வித்தியாசங்களையும் மட்டும் குறிப்பதாய் இருந்தால் அதன்மூலம் இலக்கிய வளர்ச்சி பிறக்காது என்பதையும் அவர் தவறவிட்டிருக்கிறார். அது வெறும் ஏமாற்றுவித்தை, வார்த்தை வித்தை. ஆமாம். பொன்னுத்துரைக்குப் பார்வை ஆழம் போதாது என்றுதான் சொல்ல வேண்டும். ஒப்பிட்டுப் பார்க்கும் ஓர் உலகப் பார்வை அவா�டம் இன்னும் திருப்திகரமாக வளரவில்லை. அவா�டம் இருக்கும் எழுத்துத் திறமைக்கும் சக்திக்கும் ஏற்ப அவருடைய பார்வை ஆழம் வளரவில்லை. அதனால்தான் பெரும்பாலும் அவர் செய்யும் சோதனைகள் எல்லாம் 'வண்ணமலர்'களாகவும் 'மத்தாப்பு'களாகவும் செயற்கையாக மாறிவிடுகின்றன. அதனால்தான் அவருடைய கதைகளில் பல, எல்லாமல்ல, அது முக்கியம் - கீறல்
விழுந்த கிராமபோன் நடை போன்றாகிவிட்ட ஒரு செயற்கையான எழுத்து நடையையே
தங்கள் முழு பலமாகவும் ஆயுதமாகவும் ஆக்கிக்கொள்கின்றன. ஆனால், நடையைப்
பற்றிய இந்தக் கடைசிப் பண்பு பொன்னுத்துரைக்கு மட்டும் உ��ய ஒன்றாக
இருக்காமல் இன்று நம் ஈழத்து இலக்கிய உலகுக்கே உ��ய ஒரு பொதுப் பண்பாக
மாறியிருப்பதால் அதை இன்னும் வி��வாக விளக்குவது நல்லது. பொன்னுத்துரையின் உண்மையான முத்திரையைக் காட்டும் நடை, அவருடைய சிறுகதைகளான 'ஒளி', 'நிழல்', 'பங்கம்', 'மேய்ச்சல்' போன்றவற்றில் கையாளப்பட்டுள்ளதுதான். அவருடைய பழைய கட்டுரைகளில் வரும் அவருக்கே உ��ய நடைவன்மையைப் போல் (கட்டுரைகளில் குதர்க்கம் வேறு, நடை வேறு) சிருஷ்டி இலக்கியத்துக்கு��ய அவருக்கே சொந்தமான இயற்கையான கலையும் கட்டுக்கோப்பும் நிறைந்த நடை இந்தக் கதைகளில் இருக்கிறது. 'பங்கம்' பொன்னுத்துரையின் உச்சங்களில் ஒன்று. இதற்கு மாறாக 'தீ', 'வீடு' போன்றவற்றில் வரும் எழுத்து நடை செயற்கையாகவே நிற்கிறது. ஆனால் இந்தச் செயற்கையான நடையில்தான் பொன்னுத்துரைக்கு அதிக விருப்பமும், தன் முழு பலமும் தங்கியிருக்கிறது என்ற எண்ணமும். அதனால் அதன் சாயல் இல்லாத எந்தக் கதையுமே அவர் எழுதவில்லை என்று கூடச் சொல்லலாம். ஆனால் அது அதிகமாகப் போய் அதுவே முழுக் கலையாகவும் கெட்டித்தனமாகவும் கருதப்படும் கதைகளைத்தான் நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இப்போ அவரது கட்டுரைகளில்கூட இந்த நடை தொற்றிவிட்டிருப்பதாகத் தொ�கிறது. 'மரபுபற்றி ஒரு நோக்கு' அந்த வகையானது. பொன்னுத்துரையின் பலமும்
பலவீனமும் அவருடைய நடையில்தான் இருக்கின்றன என்று சிவகுமாரன்
எழுதியபோது இந்த நடையைத்தான் கருதுகிறார் என்று நினைக்கிறேன். ஆனால்
இந்த நடையில் அவருடைய முழுப் பலவீனந்தான் தொக்கி நிற்கிறது.
பொன்னுத்துரையின் பலம் அவருடைய நடையில் இருக்கிறதென்றால், அது 'பங்கம்'
போன்ற சிறுகதைகளில் கையாளப்பட்டுள்ள நடையிலாகத்தான் இருக்க வேண்டும்.
மற்றதில் அல்ல. 'வீடு' என்ற குறுநாவலில் வரும் நடை அவருடைய முழுப்
பலவீனத்தின் முத்திரை. எனவே, இத்தகைய நடை வரும் கதைகளில் கதைக்கேற்ற வகையில் பொன்னுத்துரை தன் நடையை மாற்றுகிறார் என்பதை விட இந்த வகையான நடையைத்தான் தன் சிறந்த நடையாகக் கருதுகிறார் என்பதுதான் நிச்சயமாகிறது. இது ஒரு செய்கையான கற்பனாவாத நடை. சிவகுமாரன் குறிப்பிட்டதுபோல் குறியீடுகளையும், மனோவியல் ��தியில் வரும் அடிமன வெளியீடுகளையும் காட்டுவதற்காகக் கையாளப்படாமல், வெறும் வார்த்தை ஜோடனையாகவே கையாளப்படுகிறது. பொன்னுத்துரையின் கட்டுரைகளில் வரும் குதர்க்கத்துக்கும் இந்த நடைக்கும் ஒரு பொதுவான பண்புண்டு. அவை இரண்டும் அவருடைய புதுப் பண்டிதத்துக்கு��ய முத்திரைகள். விசயங்களை நழுவவிட்டு வார்த்தைகளில், வார்த்தை வித்தையில் தொங்கும் ஒரு பண்பு. சிந்தனையில் ஆழத்தால், பார்வையின் புதிய கோணத்தால், தன்பாட்டிலேயே நடை கலையை எடுக்காமல், சிந்தனையின் ஆழமின்மையும், பார்வையின்மையும், புதுமையின்மையும் தங்களை மறைக்கு முகமாக இந்த வார்த்தை ஜோடனை நடையைக் கையாள்கின்றன. 'தீ'யில் வரும் இந்த வார்த்தை ஜோடனையை ஒருவாறு பொறுத்துக்கொள்ளலாம். முதல் முதலாகப் பால் விவகாரங்களை அந்தளவுக்குப் பயன்படுத்தி ஒரு நாவல் எழுதிப் புரட்சி செய்யும் முயற்சி, தணிக்கையின் பிடியிலிருந்து தப்புவதற்காக, அப்படி ஒரு கலை மருட்சியைக் கையாண்டதில் காரணம் இருக்கிறது. ஆனால் இப்போ பொன்னுத்துரையின் 'பங்கம்' என்ற கதையைப் படிக்கும்போது 'தீ'யின் நடை தணிக்கையிலிருந்து தப்புவதற்குக் கூடத் தேவையற்றதாகவே தொ�கிறது. 'பங்கத்'தின் நடையில் 'தீ' எழுதப்பட்டிருப்பின் அதன் தரம் இன்னும் உயர் இன்னும் உயர்ந்திருக்கும். என்றாலும் 'தீ' உள்ளடக்கத் தன்மையால் ஒரு மரபு உடைப்பு. அதோடு அதன் எழுத்து நடையும் அதோடேயே நின்றுவிட்டிருந்தால் அதன் குறை பொ�தாகத் தொ�ந்திருக்காது. ஆனால் பொன்னுத்துரை அந்த நடையையே தன் முழு முத்திரை பொதிந்த நடையாகக் கருதி வேறு கதைகளை எழுதும்போதுதான் விவகாரம் முகத்தில் அறைவதுபோல் முன்னுக்குத் தொ�யவருகிறது. 'வீடு' ஓர் உதாரணம். 'வீடு' பொன்னுத்துரையின் பல்வேறு அக்கறைகளின் பரப்பு வித்தியாசத்தைக் காட்டும் ஒர் கதை. பால் விவகாரங்கள் தொட்டு பெளத்த தத்துவங்கள் வரை எல்லை தாண்டும் ஒரு பரப்பு. அந்த வகையில் அது முக்கியமானது. ஆனால் பழைய கதைப் பொருளைப் பழைய மாதி��யே தரும்போது உள்ளடக்கத்தில் புதுமைக்குப் பதிலாகப் புளிப்புதான் மிஞ்சுகிறது. ஓர் உள்ளடக்க வரட்சி. ஆனால் அந்த வரட்சி வேறு பலவற்றை வெளிவந்த உதவுகிறது. 'தீ'யில் வரும்
உள்ளடக்கப் புரட்சி நடையின் குறையை மேவி நின்று மறைத்துவிடுகிறதென்றால்
'வீடு'வில் வரும் உள்ளடக்க வரட்சி எழுத்து நடையின் குறையையும்
விளம்பரப்படுத்துவதோடு அத்தகைய செயற்கையான வார்த்தை ஜோடனையில்
பொன்னுத்துரை தன் கதைகளை நிறுவ முயல்வதற்கு��ய காரணத்தையும்
காட்டிவிடுகிறது. இது முழுப் பிழையான வாதம். ஆனால் பொன்னுத்துரையின் நோக்கத்தைக் கூறும் வகையில் அது சா�யானதாகவே இருக்கிறது. பொன்னுத்துரையின் தவறும் பலவீனமும் அவையேதான். பொன்னுத்துரையின் பார்வை ஆழம் போதாது என்று முன்பு குறிப்பிட்டேன். அந்தப் பண்புதான் இந்தக் குறைகளுக்கு��ய காரணம். பார்வை ஆழமோ மனோவியல் உண்மைகளைப்பற்றிய பா�ச்சயமோ போதாதபடியால் புது வியாக்கியானத்தில், புதுக்கோணங்களில் பொன்னுத்துரையால் எழுத முடிவதில்லை. ஆதனால் அவர் அவற்றை மறைப்பதற்கு இத்தகைய வார்த்தை ஜோடனையைக் கையாள்கிறார். பழைய கதைகளைப் பழைய மாதி��யே தந்து இந்த வார்த்தை ஜோடனையால் அவற்றுக்குப் புதுமை கொடுக்க முயல்கிறார். இது டெக்னிக் கலா�ல் பிரமாண்டமான காட்சிகளோடு படம் எடுப்பதால் மட்டும் படத்தில் கலையைப் புகுத்திவிடலாம் என்று நினைப்பதை ஒக்கும். ஆனால் உண்மையில் இந்த முறை சாதாரண மக்களைப் பிரமிக்க வைக்குமே ஒழிய கதைகளின் கலையை உயர்த்துவதில்லை. The Commandments, Ben Hur எப்படியோ அப்படி. அதே வகையான வெறும் ஜாலம். வித்தை. பொன்னுத்துரையின் கதைகளில் வார்த்தை ஜாலம் - இந்தப் படங்களில் கலர் ஜாலம், காட்சி ஜாலம் அவ்வளவுதான். ஆனால் சாதாரண மக்களை அவைதான் பிரமிக்கவைக்கின்றன! Breathless, Savage Eye, La Dalce Vita. Judgement at Nuremburg, Apparajito போன்றவற்றிலுள்ள கலைத்தேக்கமும் உருவ அமைப்பும் புரட்சிகளும் உள்ளடக்கச் செறிவும் Ten Commandments Ben Hur போன்றவற்றில் இல்லை என்பது சாதாரண மக்களுக்குத் தொ�வதில்லை. பொன்னுத்துரை இந்த இரண்டு வகையான கதைகளையும் எழுதுகிறார். ஆனால் உண்மையான கலை எங்கே இருக்கிறதென்று அவருக்கே தொ�வதில்லை. அவருக்கு டெக்னிக் கலா�ல் மோகம், 'சிங்கமுகக் காதலா�ல் கொங்கை சார்த்தி நின்றாள்' என்ற தொடரைப் பொன்னுத்துரையின் எழுத்து நடைக்கு உதாரணம் என்று ரசிக்கிறார் கனக செந்தி. எவ்வளவு பக்குவப்படாத ரசனை! வளா�ளம் பருவத்தில் நான் எழுதி எனக்குள்ளேயே மகிழ்ந்த காதல் கவிதைகளைத்தான் அந்த அடி எனக்கு நினைவூட்டுகிறது. அதே வளா�ளம் பருவத்து ரசனை! இந்தச் செயற்கையான நடைக்கு அடிப்படைக் காரணம் பொன்னுத்துரையின்
பார்வை ஆழம் போதாது என்பதே. அதனால்தான் சாதாரண அன்றாட வாழ்க்கை
விசயங்களைப்பற்றி அவர் எழுதும் கதைகள் ('ஒளி,' நிழல்,' 'பங்கம்,'
மேய்ச்சல்') பொன்னுத்துரைக்கே உ��ய முத்திரை பெற்று கலைச் செறிவு
மிகுந்த நடையோடு மிளிர, பார்வை ஆழத்தையும் புதிய வியாக்கியானங்களையும்
கோரும் மனோவியல், தத்துவக் கதைகள் வார்த்தை ஜோடனையை மட்டுமே நம்பி
வெறும் செயற்கையானவையாய் வீழ்ந்துவிடுகின்றன. எனவே, திசை காட்டும் முகமாக, மாதி��க்காகச் சில உதாரணங்களை இங்கு தர
விரும்புகிறேன். ஆனால் இங்கு இவ்வளவு போதும். இவையெல்லாம் ஒரே
மாதி��யாக இருப்பினும் இவற்றை எழுதியவர்கள் பலர். வேண்டுமென்றே
பந்திகளோடு சேர்த்து அவற்றை எழுதியவர்களின் பெயர்களைப் போடாமல்
விட்டுவிடுகிறேன். அவற்றுக்கு��ய ஒற்றுமையை அப்படிக் காட்டலாம் என்பது
என் எண்ணம். இவற்றை எழுதியவர்கள் பொன்னுத்துரை ('தீ,' மரபுபற்றிய ஒரு
நோக்கு'), நீர்வைப் பொன்னையன் ('நிறைவு'), யோ.பெனடிக்ற் பாலன்
('குட்டி') மருதூர் கொத்தன் ('ஒளி'), எம்.ஏ.ரகுமான் ('பலம்'),
கா.மகேந்திரன் ('வடிகால்'), செ. யோகநாதன் ('கலைஞன்'), அகஸ்தியர்
('ஞானோதயம்'). பொன்னுத்துரையின் பந்திகள் மூன்று இடைக்கிடை
செருகப்பட்டுள்ளன. அவற்றுள் இரண்டு ஒரு கதையில் வருபவை. ஒன்று ஒரு
கட்டுரையில் வருவது. இந்த வகையான எழுத்து நடையின் 'சூட்சும'த்தை
விளக்கக் கடைசியாகக் காட்டப்பட்டுள்ள பந்தியில் வரும் ஒரு வார்த்தை
மட்டும் போதுமானது - 'ஊற்றை.' |