"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Eelam Tamil Literature > ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி - மு. தளையசிங்கம் முன்னுரை > அரசியல், சமூக, பொருளாதாரப் பின்னணி > பொதுப் பின்னணியைப் பிரதிபலிக்காது முன்னுக்குத் தள்ளப்பட்ட 'முற்போக்கு இலக்கியம்' > சோஷலிச யதார்த்தமும் 'முற்போக்கு' இலக்கியமும் > 'நற்போக்கும்' 'முற்போக்கும்' > 'முற்போக்கு' எழுத்தாளர்களின் அருவருக்கத்தக்க காட்சிகள் > சர்வாதிகாரத்தைக் கண்டு தப்பி ஓடியவர் > சர்வாதிகாரத்தை தனித்து நின்று எதிர்த்தவர் > பொதுப் பின்னணி கண்டுபிடித்த இலக்கியப் போக்கு
20th Century Eelam Tamil Literature at Project Madurai
EzANTu ilakkiya vaLarcci - M. Thalaiyasingam
To view the Tamil text correctly you need to set up the following: i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha, Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP). and ii) Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view. The Latha font may be downloaded from here] 0. முன்னுரை - மு.பொன்னம்பலம், சு. வில்வரத்தினம் 1. அரசியல், சமூக, பொருளாதாரப் பின்னணி 2. பொதுப் பின்னணியைப் பிரதிபலிக்காது முன்னுக்குத் தள்ளப்பட்ட 'முற்போக்கு இலக்கியம்' 3. சோஷலிச யதார்த்தமும் 'முற்போக்கு' இலக்கியமும் 4. 'நற்போக்கும்' 'முற்போக்கும்' 5. 'முற்போக்கு' எழுத்தாளர்களின் அருவருக்கத்தக்க காட்சிகள் 6. சர்வாதிகாரத்தைக் கண்டு தப்பி ஓடியவர் 7. சர்வாதிகாரத்தை தனித்து நின்று எதிர்த்தவர் 8. பொதுப் பின்னணி கண்டுபிடித்த இலக்கியப் போக்கு 1. அரசியல், சமூக, பொருளாதாரப் பின்னணி
மற்றைய ஓட்டங்களைப்போல் அதுவும் ஒரு புதிய ஓட்டம்; இன்னும்
முடியவில்லை; ஓடிக்கொண்டேருக்கிறது. சொல்லப்போனால் இன்னும் அது தன்னை
நிச்சயமாகப் பு��ந்துகொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஓர் ஆரம்ப
சலசலப்பு. அதனால், இன்னும் சிதறலாகவே ஓடுகிறது. அதற்கு��ய கால முத்திரை
பதித்த திசையையும் படுகையையும் இனித்தான் அது கண்டுபிடிக்க எவ்வளவோ
காலம் இருக்கிறது. முடிவு என்பதே ஏற்படுமா? அது வேறு பிரச்சினை,
இப்போதைக்குத் தேவையில்லை. ஆனால், ஆரம்பம் நிச்சயம். அது 1956. இன்னும்
இளமையைக் கூட எட்டவில்லையெனினும் ஏறக்குறைய ஏழாண்டு
ஓடிவிட்டிருக்கிறது.
அது முக்கியம். பரவலாகப் பார்த்தால் அவர்கள் தூங்குகிறார்கள்.
நாம்தான் துடித்துக்கொண்டு நிற்கிறோம். இனி, ஓட்டம் நம்முடையதுதான்.
பாரதியும் புதுமைப்பித்தனும் விட்டடத்திலிருந்து நாம்தான்
புதுமையையும், புரட்சியையும் மரபையும் இனி வர்ப்பவர்கள். மெளனியும்
சி.சு. செல்லப்பாவும் மற்றவர்களுங்கூடனி நம் இயக்கத்தின் நிழலில்தான்
அளக்கப்படுவார்கள். இங்கு எனக்குப் பி��யமான ஒரு உவமையைக் கையாள
விரும்புகிறேன். அல்பிரட் காஸ.�ன் என்ற அமொ�க்க விமர்சகர் இப்போக்னர்,
எமிங்வே கால இலக்கியங்களைப் பற்றிக் கூறும்போது ஆண்மையையும்
வீரத்தையும் எதிர்பார்க்கும் ஒரு விரகதாபமுள்ள பெண்ணைப் போல்
ஐரோப்பாவும் இனி அமொ�க்காவை நோக்கித் தான் புதிய வீரமும் ஆண்மையுமுள்ள
இலக்கியத்துக்காக ஏங்கிக் கிடக்கும் என்று உவமித்தார். தமிழ்நாடும்
அப்படியான இலக்கியத்துக்காக இனி நம்மைத்தான் எதிர்பார்க்கும். அதற்கு
அறிகுறியாக 1956க்குப் பின் வந்த வளர்ச்சியே நிற்கிறது. அன்றுதொட்டு வளர்ந்த அவரது செல்வாக்கு இன்றுவரை நம் இலக்கிய உலகில் பலவித விளைவுகளை உண்டாக்கும் வகையில், நிழல் வி��த்து, சிலசமயம் மிகப் பயங்கரமாகப் பேய் நிழல் வி��த்து நிற்கிறது. 63ன் முடிவில் அவர் இங்கிலாந்துக்குப் போன பின்பும் அது தொடர்ந்து நிற்கவே செய்கிறது. என்றாலும், அவரது தற்காலிகமான பி��வைச் சாட்டாக வைத்து நம் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியோடு சேர்த்து அவரது செல்வாக்கின் விளைவுகளையும் கணக்கெடுப்பது நியாயமாக்குந்தானே? நான் கைலாசபதியை வழிபடும் ஓர் பேர்வழியல்ல. என்றாலும், நேர்மையான ஒரு இலக்கியக் கணக்கெடுப்பில் நியாயமான இடம் யார் யாருக்கெல்லாம் கொடுக்கப்படவேண்டுமோ அவர்களை வேண்டுமென்றே புறக்கணிப்பவனுமல்ல. கைலாசபதி தோற்றுவித்த போக்குக்கும் அவரது இலக்கிய விமர்சனப் பார்வைக்கும், இந்தப் பாரபட்சமற்ற, புறக்கணிக்காத, நியாயமான கணக்கெடுப்பு என்ற என் கொள்கைக்குமிடையே மைல் கணக்கான தூரம் இருக்கிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அதற்காக நாமும் திருப்பி அதே வகையில் ஒரு எதிர்ப்புறக்கணிப்புக் காட்டுவதை நான் விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரையில் இந்த ஏழாண்டு இலக்கியப் போக்கோடு
கைலாசபதியின் செல்வாக்கும்- அது பலரக விளைவுகளை உண்டாக்கினாலும்-
பின்னிக் கிடக்கிறது என்பதே என் எண்ணம். எனவே 1956-63 எல்லைக்
கணக்கெடுப்புக்கு என்னைப் பொருத்த வரையில் இரண்டு வித முக்கியத்துவம்
உண்டு. நம் லக்கியப் பொதுப்போக்கை அளவிடும் அதே சமயம் மறைமுகமாகக்
கைலாசபதியின் செல்வாக்கையும் அதன் விளைவுகளையும் அளவிடும் ஒரு
ரட்டைமுயற்சி. அந்தச் சோம்பலுக்கம் அசிரத்தைக்கும் ஏற்ற வகையில் அவர்கள் தந்த ஜனநாயக முறையும் இருந்தது. சுதந்திரத்துக்காக இரத்தம் சிந்திப் போராடும் நிலை நமக்கு ஏற்படவில்லை. போர்த்துக்கேய அல்லது ஒல்லாந்த ஆட்சி தொடர்ந்து இருந்திருந்தால் நாம் ஆபத்தோடு சதா வாழ்ந்திருப்போம். அதனால் ஆள்பவர்களிடம் சர்வாதிகாரம் இருக்கின்ற அதே சமயத்தில் மக்களிடம் சோம்பலும் அசிரத்தையும் கலவாத ஒரு புரட்சி மனப்பான்மையும் கடைசி அடியோடிய நிலையிலாவது இருந்திருக்கும். ஓர் அங்கோலா அல்லது அல்ஜீ��யாவின் நிலை. ஆனால், ஒல்லாந்தாரோ, போர்த்துக்கேயரோ தொடர்ந்து இருக்கவில்லை. பின்பு வந்த ஆங்கிலேயரும் இந்தியாவில் நடந்து கொண்டதுபோல் இங்கு நடந்துகொள்ளவில்லை. நம்மை அடக்குவதற்குப் பதிலாக அவர்கள் இந்தியர்களை அடக்கினார்கள். நமக்குப் பதிலாக இந்தியர்கள் போ��ட்டார்கள். கொலை செய்யப்பட்டார்கள். அடுத்த நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நமக்கு கோல்புரூக்கும், டொனமூரும், சோல்பா�யும் கேட்காமலே வருபவர்கள் போலவே வந்தார்கள். வாக்கு��மையும் மற்ற உ��மைகளும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அவர்களாகத் தருவன போலவே கிடைத்தன. அதனால், நம்மிடையே ஆபத்தைச் சந்திக்கும் �தா�யம் தூண்டப்படவில்லை. புரட்சிப் போக்கு வளர்க்கப்படவில்லை. காலத்தையுணர்ந்த ஒரு புதிய பார்வை நேரவில்லை. எல்லா இனங்களுக்குமிடையே ஒரு இறுகிய ஒற்றுமை பிறக்கவில்லை. காந்தி படங்களும் நேரு படங்களும் இனவேலியைத் தாண்டி இந்தியாவில் எல்லா வீடுகளிலும் தொங்கியதைப்போல் இங்கு ஒரு ராமநாதனும், ஜயதிலகாவும், அருணாசலமும், செனநாயகாவும் தொங்கவில்லை. தமிழர்களின் வீடுகளில் கூட ராமநாதனின் படம் தொங்கவில்லை. ராஜாஜி, காந்தி, நேரு, சுபாஷ் போன்றவர்கள்தான் தொங்கினார்கள். கடைசியில் புரட்சி மனப்பான்மையையும், ஆபத்தைச் சந்திக்கும் �தா�யத்தையும், உ��மைகளைக் கோரும் உணர்ச்சியையும், அடுத்த நாடான இந்தியாவிடம் ஒப்படைத்துவிட்டு வர்கள் இங்கு சோம்பலையும் அசிரத்தையையும் துரைத்தனத்தையும்தான் வளர்த்தார்கள். படித்ததெல்லாம் உத்தியோகத்துக்காக. பாடுபட்டதெல்லாம்
பொருளீட்டுவதற்காக. அவற்றுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் அதனால்
நடந்துகொள்ள விரும்பவில்லை. ஆங்கிலேயரை அபிநயித்த ஓர் துரைத்தனந்தான்
தமிழர்களிடையே அறிவாளி வர்க்கமாக இருந்தது. அதனால், அரசியல் சமூக
கலாச்சார நிலையைப்பற்றி அந்த அறிவாளி வர்க்கத்துக்குக் கவலையில்லை.
யார் ஆண்டால் என்ன? எப்படியோ இருக்கிற நிலைக்கு ஆபத்தில்லாமல்
இருந்தால் போதும். அதோடு எல்லாம் நல்லாக வரும் என்ற சோம்பல் நம்பிக்கை.
எனவே நல்லாகத் தூங்கினார்கள். ஆமாம் அதைத் தூக்கம் என்றுதான் சொல்ல
வேண்டும். சமூகக் கலாச்சாரத் தூக்கம். எப்படி தமிழர்களின் அறிவாளி வர்க்கம் ஆங்கிலேயரை அபிநயித்து அவர்களிடமிருந்து 'சபாஷ்' வாங்கும் துரைத்தனமாக மாறியதோ அப்படியேதான் அரசியலிலும் தமிழர்கள் காலத்தின் நிலையையும் தேவையையும் உணராது வெறும் பேச்சு வன்மையாலும், தோற்றத்தாலும், பழகும் முறையாலும் 'சபாஷ்' வாங்கும் ஒரு தலைவரை வழிபட்டார்கள். அதனால், ஐம்பதுக்கைம்பது கேட்ட தலைவரால் ஐக்கிய தேசியக் கட்சியோடு
இணைய முடிந்தது. பிரஜா உ��மைச் சட்டத்துக்கும் குறுகுறுப்பில்லாமல் கை
உயர்த்த முடிந்தது. அவரை அனுப்பிய மக்களும் அவற்றில் எந்த ஆபத்தையும்
காணவில்லை. செல்வநாயகம் பி��ந்ததும், சமஷ்டிக் கட்சி தோன்றியதுங் கூட
பொதுவாக அவர்களுக்கு ஒரு சினத்தைத்தான் கொடுத்திருக்க வேண்டும்.
நிம்மதியாகக் தூங்கவிடாமல், பேச்சு வன்மையாலும் தோற்றச் சிறப்பாலும்
தாலாட்டப்பட்டுத் தூங்கிவிடாமல், நிலையை உணர்த்திச் செயலுக்கு
அழைக்கும் குரல் அவர்களுக்கு ஒரு தொந்தரவாகத்தான் பட்டிருக்க வேண்டும்.
எனவே சினம். அம்முறை காங்கேசன்துறையில் செல்வநாயகத்தின் தோல்வி, அதன்
அறிகுறி. தமிழகத்தில் நேரடியாக ஒரு பாரதியையும் மறைமுகமாக ஒரு மணிகொடிப்
பரம்பரையையும் தோற்றுவித்ததுபோல் இங்கும் தோற்றுவிக்க, ஒரு சுதந்திரப்
போராட்டம் இங்கு இருக்கவில்லை. எனவே, இங்கு பண்டிதர்கள்தான் இலக்கியப்
பாதுகாவலர்கள். இங்குள்ள இலக்கியத்தை வளர்க்கவிருந்த சுதேச சக்திகள்
அவர்கள் மட்டும்தான். ஆனால், அவையும் தூக்கத்தில் வந்த சில உளறல்கள்தான். சிறுகதை என்பதுவும் அவற்றைப் பற்றிய சீ��ய விமர்சனம் என்பதுவும் நித்திரைக்குப் பின் வேறு எங்கோ வந்துபோன விசயங்கள். இங்கு கேட்கவில்லை. அதனால், அவை இலக்கியமாக ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவை. ஒரு சிலர் எப்படியோ இடையில் விழித்துவிட்டு மூடிக்கொண்டார்கள். எது எப்படி என்று ஒன்றும் தொ�யாமல் இரண்டொரு புதிய பேர்களை மட்டும் பாடமாக்கிக் கொண்டார்கள். புதுமைப்பித்தன், மெளனி! மற்றபடி பொதுவான நிலை ஒரே தூக்கந்தான். சங்ககாலம் தொட்டு அவிவேக பூரணகுரு வரையும் சிவராத்தி�� விழித்தது போதாதா? ஆமாம், இனி வருபவை மட்டியும் மடையர்களுந்தான். படு, சும்மா உன்
பாட்டில் - அப்படி ஒரு தூக்கம். ஈழகேசா�ப் பொன்னையாவும் ராஜ அ��ய
இரெத்தினமும் இருந்தார்களாம். பித்தனும் இலங்கையர் கோனும் சம்பந்தனும்
எழுதினார்களாம். ஆனால், அவர்களின் சத்தம் கேட்டு வர்கள், இந்தப்
பண்டிதப் பாதுகாவலர்கள், எழும்பவில்லை. அவர்களும் இவர்களை எழுப்பக்
கூடாது என்ற ஒரே நோக்கத்தோடேயே 'மா�யாதையாக' இலக்கியம் எழுதினார்கள்.
'மா�யாதையாகவே' விமர்சனம் செய்தார்கள். பொன்னுத்துரையின் 'வானம் பார்த்த பூமி' இன்னும் வரவில்லை. டொமினிக்
ஜீவா 'கலைச்செல்வி'யில் 'எல்லாரும் இந்நாட்டு மன்னர்' எழுதிக்
குட்டுப்பட்டு ஞானஸ்நானம் பெறுவதற்குக்கூட இன்னும் காலம் எவ்வளவோ
இருந்தது. இளங்கீரனும் டானியலும் இன்னும் தங்களை நன்றாக
உணர்ந்துகொள்ளவில்லை. அதுவரை அறிந்திராத வகையில் கனகசெந்தி 'தினகரனி'ல்
ஒரு முறையான கணக்கெடுப்பு நடத்த இன்னும் மூன்று வருடங்கள் இருந்தன.
அந்தக் காலத்துக்கு��ய ஒரு சில விளைச்சல்கள் என்று சொல்லப்படும்
சம்பந்தனும், பித்தனும், இலங்கையர் கோனுங்கூடன்று அடைந்திருக்கும்
பிரபல்யத்தை அன்று பெற்றிருக்கவில்லை. ஆமாம், ஈழகேசா� ஆழமாகச்
செல்லவில்லைதான். ஆனால், அது அந்த அந்தளவுக்குச் சென்றது கூட
அதிசயந்தான். அது காலத்தை எதிர்த்த ஒரு போக்கு. காலம், தூக்கத்தை
வளர்த்த காலம். ஆனால் நல்ல காலம் அது தொடர்ந்து நிரந்தரமாக
நீடித்துவிடவில்லை- எப்படியோ 1956 வந்துவிட்டது. அவற்றோடு, கதாபாத்திரங்களும் இப்போ வேறு. பிக்குகள் மட்டுமல்ல;
தானுண்டு தன் வேலையுண்டு என்று அதுவரை கிடந்த கிராமத்து விவசாயி கூட
முதல் முதலாக அரசியலிலும் அடுத்த விசயங்களிலும் அக்கறை
எடுத்துக்கொண்டான். கிராமத்து வைத்தியன், கிராமத்து வாத்தி, கிராமத்து
விவசாயி அவர்கள்தான் புதிய கதாநாயகர்கள். மானிய முறை அழியாத ஒரு
நாட்டில் அது சமுதாயத்தின் அடித்தளத்தையே தொட்டுவிட்ட ஒரு புரட்சி
என்பது அர்த்தம். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக இருபத்தி நான்கு
மணித்தியாலத்துக்குள் சிங்களம் மட்டும் என்ற சுலோகம் நின்றது.
காந்தியும் நேருவும் இந்தியத் தேசியத் தந்தைகள் என்றால் கட்டாயம்
பண்டாரநாயக்காவும் சிங்களவர்களின் தந்தைதான். பழைய தேசியப்பிதா
சேனநாயக்காவின் படத்தில் தூசி படிந்துவிட்டது. இப்போ எங்குமே
பண்டாரநாயக்காவின் படங்கள்தான். தேசியப்பிதா சின்னப்பெயர். பண்டா ஒரு
தியசேன குமாரயா! அவதாரம்! 450 ஆண்டுகளுக்கு மேலாக அந்நிய ஆட்சியின்
காரணமாய் அடிமனதில் அமுக்கி நசுக்கப்பட்டிருந்த ஒரு கலாச்சார ஓட்டம்
திடீரென்று தடைகளை உடைத்துக்கொண்டோடும் வெள்ளமாய் மேலெழுந்து
'கலை'யாடத் தொடங்கிவிட்டது. பண்டா நிச்சயமாக ஒரு மந்திரவாதிதான்.
கடைசிவரை, சிங்களவர்கள் கை கூப்பத்தான் செய்வார்கள். பதினாறாம் நூற்றாண்டின் இன கலாச்சாரத் துடிப்பை நோக்கி ஓடிவிட்ட
அவர்கள் பதினாறாம் நூற்றாண்டிலிருந்த அரசியல் அதிகாரத்தை விட பன்மடங்கு
அதிக அதிகாரம் பெற்றவர்களாக மாறிவிட, இவர்கள், தமிழர்கள், முன்பிருந்த
அரசியல் பலத்தையெல்லாம் முற்றாக இழந்தவர்களாக நின்றார்கள். அத்துடன்
அண்மையில் மணித்தியாலக் கணக்காகப் பேசம் தலைவரை மட்டுமல்லவா முழுக்க
முழுக்க நம்பியிருந்தார்கள்? இப்போதான் தலைவா�ன் வெறும் பேச்சு
பாராளுமன்ற 'ஹன்சாட்'டுக்கு மட்டும் உதவினதே ஒழிய தங்கள் சமூகத்துக்கு
உதவவில்லை என்பது தொ�ய வந்தது. இனி என்ன வழி? இரண்டாவது, அதைவிட முக்கியம் வாய்ந்தது. உளுத்துவிட்ட நம் தமிழ்ச் சமுதாய அமைப்பை எதிர்ப்பதற்கு அதைவிட வேறு கட்சி இல்லை என்று தங்களின் தாழ்த்தப்பட்ட நிலையின் காரணமாக ஏற்பட்ட உணர்ச்சியால் மட்டும் உந்தப்பட்ட சிறு பான்மைத் தமிழர்களுக்கு, அந்தக் கட்சிதான் கோட்டையாக மாறிவிட்டது. பெரும்பான்மைத் தமிழர்களுக்கு ஏற்பட்ட ஓர் இக்கட்டான நிலையில் அவர்களைப் பழிவாங்குவதற்கு சிறுபான்மைத் தமிழர்களுக்கு கொம்யூனிஸ்ட் கட்சியில் சேர்வதைவிட வேறு சிறந்த வழி இருக்கவில்லை. உடலில் பொ�ய நோய் தீண்டும்போது பழைய சின்னக் காயங்களும் தங்களை அதிகமாக உணர்த்திக்கொள்ளும். சிறுபான்மைத் தமிழர்களின் நிலை சின்னக் காயமில்லை; அது முழுத்தமிழர்களும் வெட்கப்பட வேண்டிய ஒரு அழுகல், குஷ்டம். ஆபத்தான நேரத்தில் அதனால் வரும் வேதனை அதிகம். ஆனால், அதற்காகச் சிறுபான்மைத் தமிழர்களின் செயலைக் குறை கூறவே முடியாது. ஆனால், அவர்களின் செயலால் கொம்யூனிஸ்ட் கட்சி யாழ்ப்பாணத்தில் சிறிய அளவில் பலம் வாய்ந்ததாக இருப்பினும் பெரிய அளவில் பெரும்பான்மை பலத்தைப் பெற முடியாததாகி விட்டது. மொழிப் பிரச்சினை தீரும்வரைக்கும் அது முடியாது. மேல் நாட்டவர் வந்தபோது மதம் மாறிக் காட்டிக் கொடுத்த ஓர் ஐந்தாம் படையினரைத்தான் அந்தக் கட்சியில் சேருபவர்கள் பெரும்பான்மைத் தமிழர்களுக்கு நினைவூட்டுகிறார்கள். அதுதான் காரணம். அந்த நிலையில் இடதுசா��களின் முன்னணி என்ற ஓன்று ஏற்படாதவரைக்கும் தனித்த பொதுவுடமைக் கட்சியின் நிலை தமிழர்களிடையே அப்படித்தான் இருக்கும். அது காலத்தின் கோளாறு. எனவே, 1956க்குப் பின்வந்த நிலையைப்
போக்குவதற்கு கொம்யூனிஸ்ட் கட்சி போதாது. அது தமிழ்ச் சமுதாயத்தின்
பழைய ஓர் அழுகலுக்குத் தேவையான ஒரு பா�காரத்தைத்தான் பிரதிபலிக்கிறது.
இனி வரவேண்டிய விமோசனம் மொழி, பிரதேச உ��மைகளாய் மட்டுமல்ல; சமூகப்
புரட்சியாயும் இருக்க வேண்டும் என்பதற்கு அது ஓர் அறிகுறி.
அவ்வளவுதான். ஆனால், உடனடித் தேவையைத் தீர்ப்பதற்கு ஒரு சிறந்த வழியாக
அது பெரும்பான்மைத் தமிழர்களுக்குப் படவில்லை. உடனடித் தேவை மொழி
உ��மை, பிரதேச உ��மை. தனியே தமிழகரசுக் கட்சியை மட்டும் சாடுவது பிரச்சினையைத் தீர்க்கப்போவதில்லை. தமிழரசுக் கட்சி என்பது நம் இலங்கை அரசியல் உடலில் ஏற்பட்ட ஒரு காய்ச்சல். ஆனால் காய்ச்சல் ஒரு நோய் ஆகாது. காய்ச்சல் நோயின் அறிகுறி மட்டுந்தான் நோய், சிங்களம் மட்டும் சட்டமும் அதைக் கொண்டு வரும் கட்சியுந்தான். நோய் தீர்ந்தால்தான் அதன் அறிகுறியும் தீரும். அதுவரை அறிகுறியும் நிற்கவே செய்யும். சமசமாஜிக் கட்சிக்கு அந்த நோய்க்கு��ய பா�காரம் ஓரளவுக்குத் தொ�யும். ஆனால் முழுக்கத் தொ�யாது. அதோடு எதையும் உடனடியாகச் செய்து காட்டவும் அதற்குத் தொ�யாது. துணிவும் இல்லை. கட்சியின் போக்கில் ஒரு மந்த நிலை. பிரஜா உ��மைப் பிரச்சினை போன்றவை அந்த மந்தப் போக்கின் காரணமாய் எப்படிப் போராட்டமற்று மறக்கப்பட்டனவோ அப்படியே அதனிடம் ஒப்படைக்கப்படும் புதிய பிரச்சினைகளும் மறக்கப்பட்டுவிடும் என்ற ஒரு நியாயமான பயம் தமிழர்களிடம் இருக்கிறது. அது இருக்கும்வரைக்கும் இந்தக் கட்சியும் பிரச்சினையைத் தீர்க்க ஒரு
சிறந்த வழியாய் தமிழர்களுக்குப் படாது. இப்போதைக்கு, தமிழர்களின் பழைய
சோம்பல் துரைத்தன அறிவாளி வர்க்கத்துக்கு மட்டுந்தான் அது ஒரு
புகலிடமாக இருக்கிறது. ஆபத்தைச் சந்திக்க விரும்பாமல் தேசியம் தேசியம்
என்று சொல்லி செயலைக் கடத்திப் போடும் ஒரு மந்தப் போக்கு, இந்தக்
கட்சிக்குள் புகுந்துவிட்டிருக்கம் துரைத்தன அறிவாளி வர்க்கத்தின்
போக்கு. அதனால் சாதாரணத் தமிழனை இன்னும் அது தொடவில்லை. காந்தியையும் அகிம்சையையும் சத்தியாக்கிரகத்தையும் இடந் தவறிப்
புகுத்திய ஒரு மத்தியதர வகுப்பு, பண்டித முதலாளித்துவப் பிற்போக்குச்
சாயல். ஆனால், பாராட்டப்படக்கூடியவையும் இரண்டு அதனிடம் இருக்கின்றன.
மொழி, பிரதேச உ��மைகளுக்கு விட்டுக்கொடுக்காமல் குரல் கொடுப்பதுவும்,
அவற்றைத் தீர்ப்பதற்கு இருபதாம் நூற்றாண்டுக்குத் தொ�ந்த நியாயான,
நாகா�கமான சமஷ்டி முறையைக் காட்டியதும் அவையாகும். அதை பண்டாரநாயக்காவே
உணர்ந்து ஒப்புக்கொண்டதை பண்டா-செல்வா உடன்படிக்கை நிரூபிக்கிறது.
ஆனால், குறை என்னவென்றால் சமஷ்டிக் கட்சி காட்டும் பா�காரம் வெறும்
அரசியல் திட்டப் பா�காரந்தான். சமூக, பொருளாதாரப் பா�காரமல்ல. அதனால்
சமஷ்டி ஆட்சி கிடைத்தபின் முற்போக்கான தமிழர்களின் முதல் எதி��,
சமஷ்டிக் கட்சியாகவே மாறிவிடும். ஆட்சித் திட்டம் ஒன்று தருவதுடன் அதன்
தேவை தீர்ந்துவிடும். எனவே சமஷ்டிக் கட்சியும் பூரணமான வழி அல்ல. சமஷ்டிக் கட்சி. அடிமனத்தின் ஊழல்களையும் பிற்போக்குச் சாயலையும்
எதிர்ப்பதால் அது காட்டும் நியாயமான வழிகளையும் உ��மைகளையுங் கூட
மறுத்துவிட்டு அதனுடன் சமரசம் செய்ய விரும்பாமல் பிளவுபட்டு நிற்கும்
துரைத்தனச் சோம்பல் அறிவாக, மேல்மனமாக நிற்கின்றன இடதுசா��க் கட்சிகள்.
எனவே, ஆபத்து ஏற்பட்டுள்ள ஓர் இக்கட்டான நிலையில் ஆபத்தை உணர்ந்த
பின்பும் தனக்குள்ளேயே பிளவுபட்டு விவாதித்துக்கொண்டு தடுமாறி
நிற்கிறது தமிழ்ச் சமூகம். ஆபத்தால் ஏற்பட்ட புதிய வேகம்,
விறுவிறுப்பு, உணர்ச்சிப் பெருக்கம், விழிப்பு எல்லாம் இருக்கின்ற அதே
சமயத்தில் தனக்குள்ளேயே உள்ள பிளவால் ஏற்பட்டுள்ள சச்சரவு, தடுமாற்றம்,
செயலற்ற பேச்சுக்கள். இன்று நம் இலக்கியத்தில் வளர்ச்சி
ஏற்பட்டிருக்கிறதென்றால், அதே வளர்ச்சியில் அதே சமயத்தில் பிளவும்
தேக்கச் சூழலும் விழுந்துவிட்டிருக்கின்றனவென்றால் காரணம், இந்தப்
பொதுப் பின்னணிதான்.
அது முன்னுக்குப் பின் முரணானது. பொன்னம்பலத்தின் நிலையைப்போல்
இடதுசா��களின் நிலை மோசமானதல்ல என்பது உண்மைதான். அவர்கள், நான் முன்பு
குறிப்பிட்டதுபோல், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நியாயமான
வழிகாட்டுபவர்களாக ஓரளவுக்குத் தொ�ந்தனர். குறுகிய அளவில் ஓரளவுக்கு
யாழ்ப்பாணத்தில் அவர்கள் பலம் வாய்ந்தவர்களாகவே இருந்தனர். ஆனால்
அந்தளவு பலமுங்கூட சமஷ்டிக் கட்சியின் நிழலில் முற்றாக
விழுங்கப்பட்டேதொ�ந்தது. எனவே, இலக்கியத்திலும் கலையிலும் இடதுசா��க்
கருத்துகள் மற்றவற்றை அமுக்கிக் கொண்டு சர்வாதிகாரம் செய்ய
நியாயமில்லை. அது பின்னணிக்கு முரணானது. இருந்தும் அப்படி முன்னுக்குப்
பின் முரணாகவேதான் நடந்துவிட்டது! 'அளவு கெட்டு' என்று கூறுவதன் மூலம்
அதைத்தான் நான் குறிக்கிறேன். அரசியல் விவகாரங்களில் ஆயுதங்களாக மாறிய அகிம்சை, சத்தியாக்கிரகம், சட்டமறுப்பு போன்றவற்றின் சாயல் வி��க்கும் ஓர் இடைப்பட்டபோக்குத்தான் லக்கியப் போக்காகவும் வந்திருக்க வேண்டும். ஆகப் பண்டிதப் பழமை வாதமுமல்ல, ஆகப் பிழைத்துவிட்ட புரட்சிவாதத்துக்கு��ய சோஷலிஸயதார்த்தமுமல்ல, ஓர் இடைப்பட்டபோக்கு. அத்தகைய போக்குக்கிணங்க புதிய வழிகாட்டும் இலக்கிய விமர்சகராக கைலாசபதிக்குப் பதிலாக கனகசெந்திநாதன் வந்திருக்கவேண்டும். ஆனால், கனகசெந்திநாதன் கைலாசபதியின் தலைமைக்கு ஒத்துழைக்கும் Collaborator ஆகத்தான் வந்தார். காரணம் இடதுசாரிகளின் கருத்துவன்மையல்ல. அதுவுந்தான், ஆனால் அதுவல்ல முக்கிய காரணம். அதே கருத்து
வன்மையோடுதான் இடதுசா��க் கட்சிகளிலிருக்கும் அறிவாளி வர்க்கத்தைச்
சேர்ந்த பெரும்பாலான மற்ற துரைத்தனச் சோம்பல் பேர்வழிகளும்
இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எந்தத் துறையிலும் பொ�தாகச்
சாதிக்கவில்லை. கைலாசபதியும், சிவத்தம்பியுங்கூட அப்படித்தான்.
சந்தர்ப்பம் கிடைக்காவிட்டால் தங்கள் பாட்டில் தங்கள் கருத்துகளோடு
இடைக்கிடை பலமற்றுக் கறுவிக்கொண்டு, இல்லை வெறும் பாவனைக்காகக்
கறுவிக்கொண்டு, உத்தியோகமே பொ�தென்று நினைத்த வண்ணம் சோம்பல் துரைகளாய்
எங்கோ ஒரு மூலையில் கிடந்து திருப்திப்பட்டிருப்பார்கள்.
இலக்கியத்துக்குள் பிரவேசித்திருக்க மாட்டார்கள். இருந்தும்
பிரவேசித்துவிட்டார்கள்! அதற்கு முழுக் காரணம் கைலாசபதி 'தினகரன்'
ஆசி��யர் ஆனதுதான். அதுவேதான் நான் கூறிய சந்தர்ப்ப விபத்து! கூடவே, அதே வண்டியில் கா.சிவத்தம்பி, ஏ.ஜே.கனகரத்தினா போன்ற இலக்கியம்பற்றிய தரமான கருத்துக்களையுடைய வேறு பலா�ன் செல்வாக்கையும் பக்கபலத்தையும் சேர்த்துக்கொண்டும் வந்தார். சிவத்தம்பியும் கனகரத்தினாவும் நம் துரைத்தன அறிவாளி வர்க்கத்தின் சிறந்த பிதிநிதிகள். இருவரையும் திட்டவட்டமான கட்சிப் பற்றும் கொள்கையுமுடைய இடதுசா��கள் என்றுகூடச் சொல்ல முடியாது. கனகரத்தினா கட்டாயம் அந்த ரகம் இல்லை. சிவத்தம்பிகூட அடிப்படையில் ஒரு தமிழ்ப் பற்றுடைய தேசியவாதியே ஒழிய அகில உலகப் புரட்சியை விரும்பும் ஒரு பொதுவுடமைவாதியல்ல. பக்கத் துணையாக வேறு திசைகளிலிருந்து வந்த காவலூர் ராசதுரை, சில்லையூர் செல்வராசன் போன்றோர்கூட அப்படித்தான். சந்தர்ப்ப விபத்தால் உள்ளே புகுந்தவர்கள். எல்லோரும் எங்காவது நல்ல உத்தியோகம் கிடைத்தால் நிம்மதியாக எங்கள் பாட்டில் உறங்கி விடுவோம் என்று நினைக்கும் துரைத்தனக்காரர்கள்தான். கைலாசபதிகூட அப்படித்தான். சிவில் சேவையில் சேர்ந்திருந்தாலோ அல்லது ஆரம்பத்திலேயே சர்வகலாசாலை வி��வுரையாளராக வந்திருந்தாலோ கைலாசபதியில் பெயரை இன்றைய இலக்கிய வட்டாரத்தில் சில சமயம் கேள்விப்பட்டிருக்கக் கூடமாட்டோம். ஆனால், பத்தி��கை ஆசி��யராக வந்த பின்பு கட்டாயம் அவா�ன் தனித்தன்மையும் தலைமையும் வேலை செய்யத் தொடங்கிவிட்டன. பல்கலைக் கழகத்தில் பழக்கமான அவரது சகாக்கள் அதற்குப் பின்னர் அவரால் திறமையாகப் பயன்படுத்தப்பட்டனர். அதனால், இலக்கியத்தில் அவர்களுக்கிருந்த ஈடுபாட்டைவிட கைலாசபதிக்கு அவர்கள் பழக்கமானவர்களாய் இருந்ததுதான் அவர்கள் ஈழத்தமிழ் இலக்கிய உலகில் பிரவேசித்ததற்கு முக்கிய காரணம் என்று சொல்லவேண்டும். இலக்கியத்தில் அவர்களுக்கு ஈடுபாடில்லை என்பதை எந்த ��தியில் குறிக்கிறேன் என்பதும் இங்கு கவனிக்கப்படவேண்டும் அதுவரை நம் ஈழத் தமிழிலக்கியத்தில் ஈடுபட்டிருந்த மற்றவர்களைவிட இவர்களுக்கு நிச்சயமாக இலக்கியத்தைப் பற்றிய ஒர் ஆழமான பார்வை இருக்கத்தான் செய்தது. அதோடு இவர்கள் பட்டதா��கள். கைலாசபதி எப்படி தமிழிலக்கியம் படித்த ஓரு சிறப்புப் பட்டதா��யோ அப்படித்தான் கனகரத்தினா மேற்கு இலக்கியங்களைப் படித்த ஒரு சிறப்புப் பட்டதா��. சிவத்தம்பியும் கைலாச பதியை ஒத்தவர். எனவே, இலக்கியம் பற்றிய ஆழமான பார்வை இவர்களிடந்தான் இருந்தது. முதன்முதலாகப் பல்கலைக் கழகப் பட்டதா��கள் உடன்நிகழ்காலத் தமிழிலக்கியத்தில் அத்தனை கவனம் செலுத்தியது இவர்களோடு தான் ஆரம்பமாகிறது. அதனால் ஏற்பட்டபுதிய வளர்ச்சியின் ஆழம் இன்று வடிவமாகத் தன்னைக் காட்டி நிற்கிறது. எனவே,இ வர்களுக்கு அந்த வகையில் இலக்கிய அறிவு ருக்கவே செய்கிறது. ஆனால் நான் குறிப்பிடுவது வேறு. சந்தர்ப்ப விபத்து. கைலாசபதி 'தினகரன்' ஆசி��யரான சாட்டில் இவர்களை உடன்நிகழ்கால ஈழத் தமிழிலக்கியத்துக்குள் வருந்தி அழைத்திருக்காவிட்டால் இவர்கள் அங்கு வந்திருக்கவே மாட்டார்கள் என்று ஓரளவுக்கு நிச்சயமாகக் கூறலாம். அதைத்தான் நான் இங்கு குறிப்பிடுகிறேன். சந்தர்ப்பம் சாதகமாக அமையாமல் பாதகமாக அமைந்தால்கூட அதை எதிர்த்து இலக்கியமே மூச்சு என்று ஈடுபடும் நோக்கமுடையவர்களல்ல இவர்கள். பல்கலைக் கழகத்திலிருந்து வெளிவந்த போது இலக்கியக் கனவுகளோடு வெளிவந்த 'பிறவி' இலக்கிய ஆசி��யர்களல்ல இவர்கள். கார், பங்களா, உத்தியோகம் என்று துரைத்தனக் கனவுகளோடு வெளிவந்த பேர்வழிகள்தான். சந்தர்ப்ப வசத்தால் நல்லகாலமாக, ஆமாம், நல்லகாலமாகத்தான், இலக்கிய வழிகாட்டிகளாகவும் மாறிவிட்டனர். காவலூர் ராசதுரையையும் சில்லையூர் செல்வராசனையுங்கூட - ஏன் அ.முத்துலிங்கமும் அதே ரகந்தான் - சந்தர்ப்ப விபத்தால் உள்ளே இழுக்கப்பட்டவர்களென்றுதான் சொல்ல வேண்டும். எனவே, 1956க்குப் பின் ஏற்பட்டபொதுப் பின்னணியின் விழிப்பிலிருந்து வேறுபட்ட ஒரு தனிப் பின்னணி இது. வெறும் சந்தர்ப்ப விபத்து. ஆனால் சந்தர்ப்ப விபத்தும் சா�த்திரம் செய்யத்தான் செய்கிறது. அதோடு அதை பாவிக்கக் கூடிய ஒரு தனித்தன்மை வாய்ந்த தலைவரும் ருந்தால் அதன் விளைவு அதிகமாகி விடுகிறது. கைலாசபதி அப்படி ஒருதலைவர். |