Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Eelam Tamil Literature >ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி - மு. தளையசிங்கம் முன்னுரை > அரசியல், சமூக, பொருளாதாரப் பின்னணிபொதுப் பின்னணியைப் பிரதிபலிக்காது முன்னுக்குத் தள்ளப்பட்ட 'முற்போக்கு இலக்கியம்'சோஷலிச யதார்த்தமும் 'முற்போக்கு' இலக்கியமும்'நற்போக்கும்' 'முற்போக்கும்''முற்போக்கு' எழுத்தாளர்களின் அருவருக்கத்தக்க காட்சிகள்சர்வாதிகாரத்தைக் கண்டு தப்பி ஓடியவர் > சர்வாதிகாரத்தை தனித்து நின்று எதிர்த்தவர் > பொதுப் பின்னணி கண்டுபிடித்த இலக்கியப் போக்கு

20th Century Eelam Tamil Literature at Project Madurai


 
ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி - மு. தளையசிங்கம்
EzANTu ilakkiya vaLarcci - M. Thalaiyasingam


[ Etext Preparation : Mr. R. Padmanabha Iyer, London, UK & Dr. N. Kannan, Kiel, Germany (input);  Mr. Ramanitharan Kandiah, New Orleans, USA (Proof-reading)Web version: K. Kalyanasundaram, Lausanne, Switzerland  � Project Madurai 1999 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.tamil.net/projectmadurai  You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

To view the Tamil text correctly you need to set up the following: i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha, Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).  and ii) Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view. The Latha font may be downloaded from here]
 



0. முன்னுரை - மு.பொன்னம்பலம், சு. வில்வரத்தினம்
1. அரசியல், சமூக, பொருளாதாரப் பின்னணி
2. பொதுப் பின்னணியைப் பிரதிபலிக்காது முன்னுக்குத் தள்ளப்பட்ட 'முற்போக்கு இலக்கியம்'
3. சோஷலிச யதார்த்தமும் 'முற்போக்கு' இலக்கியமும்
4. 'நற்போக்கும்' 'முற்போக்கும்'
5. 'முற்போக்கு' எழுத்தாளர்களின் அருவருக்கத்தக்க காட்சிகள்
6. சர்வாதிகாரத்தைக் கண்டு தப்பி ஓடியவர்
7. சர்வாதிகாரத்தை தனித்து நின்று எதிர்த்தவர்
8. பொதுப் பின்னணி கண்டுபிடித்த இலக்கியப் போக்கு
 

8. பொதுப் பின்னணி கண்டுபிடித்த இலக்கியப் போக்கு:

நம் ஏழாண்டு இலக்கிய வரலாற்றில் கலாநிதி சதாசிவத்தின் வருகை மிகச் சடுதியான வருகை. அடிமனத்தில் அமுக்கப்பட்டவை அறிவுக்குத் தொ�யாமல் திமிறிக்கெம்பி மேலெழுந்து 'கலை'யாட்டம் போட்டுவிட்டுப் போவது போன்ற ஒரு வகை. ஆனால் கலாநிதி சதாசிவத்தின் வருகை 'கலை'யாட்டம் மாதி�� வந்த வேகத்திலேயே போய்விட்டது என்று சொல்லிவிட முடியாது.

ஒரு தெளிவும் நிதானமான பார்வையும் போக்கும் நம் இலக்கியச் சூழலில் சேராதவரைக்கும் கலாநிதி சதாசிவம் பிரதிபலிக்கும் போக்கும் போய்விடாது என்றுதான் சொல்ல வேண்டும். 56உடன் ஒட்டிவந்த இலக்கிய வேகம் 'முற்போக்கு' இலக்கிய வேகமாக மாறத் தொடங்கியபோதே, ஒரு கலாநிதி சதாசிவத்துக்கு இடம் வந்துவிட்டது என்று சொல்லலாம். 56ஐ ஒட்டி இலங்கையில் பண்டாரநாயக்கா கொண்டுவந்த சமூக அரசியல் புரட்சி, சிங்களச் சமூகத்தைப் பொருத்தவரையில், 16ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேற்கத்தையர் வருகையால் நின்றுவிட்ட அவர்களின் மரபு வளர்ச்சியும், அமுக்கப்பட்டுவிட்ட அவர்களுடைய கலாச்சார ஓட்டமும், திரும்பவும் மேலே வருவதற்கு இடம்கொடுத்தது என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

சில சமயங்களில் அந்த 'மறுமலர்ச்சி' நியாயமான எல்லைகளையும் தாண்டிய ஒரு collective psychosis ஆகக் காட்சியளித்தாலும் அதனால் அவர்களுடைய சமூகத்தைப் பொருத்தவரையிலாவது ஓரளவுக்கு வளர்ச்சியும் விடுதலையும் ஏற்படவே செய்தன என்பதை மறுக்க முடியாது. அவர்களுடைய இனத்துக்கும் கலாச்சாரத்துக்கும் அழுத்தம் கொடுத்த அத்தகைய 'மறுமலர்ச்சி' தமிழ்ச் சமூகத்திலும் அதே வகையான ஒரு மறுமலர்ச்சியைத்தான் எதிரொலியாக எழுப்பிற்று. அரசியலில் சமஷ்டிக் கட்சியின் பிரபல்யத்தை அந்த எதிரொலிக்கு ஓர் உதாரணமாகக் காட்டலாம். கலாச்சார, சமூகத் துறைகளில் அதே வகை உதாரணங்களாக தனித்தமிழ் இயக்கம், வேட்டி, சால்வை, தோரணம், கும்பம், சத்தியாக்கிரகம் போன்றவற்றைக் காட்டலாம்.

தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட விறுவிறுப்பும் வேகமும் அப்படிப்பட்டவைதான். ஆனால் உடனடித் தேவைகளும் அப்படிப்பட்டவைதான். அதன் அதே விழிப்பையும் விறுவிறுப்பையும் வேகத்தையும் பயன்படுத்திய இலக்கியப் போக்கும் வளர்ச்சியும் அந்தப் பொதுப் பின்னணிக்கு முரணாக, தமிழ்ச் சமூகத்தின் பெரும்பான்மைத் துடிப்புக்கும் அதன் உடனடித் தேவைகளுக்கும் எதிராக, 'முற்போக்'காக வளரத் தொடங்கியபோது முரண்பாடு ஏற்படத் தொடங்கியது. உண்மையில் கைலாசபதி தூக்கிவிட்ட 'முற்போக்கு'க் கூட்டு பொதுப் பின்னணியின் விழிப்பையும், விறுவிறுப்பையும் இலக்கியா�தியில் பயன்படுத்திக்கொண்டாலும் அவற்றை இலக்கிய ��தியில் பிரதிபலிக்க முயலவில்லை. மாறாக, அவற்றுக்கு முரணாகத்தான் இலக்கியம் படைக்கப்பட்டது.

எனவே, என்னென்ன உணர்ச்சிகளாலும் என்னென்ன தேவைகளாலும் முழுத் தமிழ்ச் சமூகமே உந்தப்பட்டுக்கொண்டிருந்ததோ அதே உணர்ச்சிகளும் தேவைகளும் பொதுவுடமைக் கட்சியைப் பக்கபலமாகக் கொண்ட 'முற்போக்கு' இலக்கியப் பக்கபலமாகக் கொண்ட அமுக்கி மறைக்கப்பட்டபோது அல்லது 'பிற்போக்கு' ஆனவை என்று பிழையாக ஒதுக்கப்பட்ட போது திமிறலும் வெடிப்பும் எங்கிருந்தாவது வரத்தான் செய்யும்.

மு. தளையசிங்கத்தின் எதிர்ப்பும் போக்கும் அந்தப் பொதுப் பின்னணியின் உடனடித் தேவையை ஓரம்சமாகப் பிரதிபலிக்காமலில்லை. ஆனால் ஓரம்சம்தான். மு. தளையசிங்கம் அதற்கும் அதற்கு முரணாக வந்த 'முற்போக்கு'க்கும் அப்பால் போக முயல்கிறார். அதோடு அதே பொதுப் பின்னணியின் விழிப்பில் தவிர்க்க முடியாமல் கலந்து நிற்கும் ஒருவகைப் பிற்போக்குச் சாயலை அவர் எதிர்க்கவும் செய்கிறார். அதனால் அவரைப் பொதுப் பின்னணி பு��ய மறுத்துவிடுகிறது என்றேதான் சொல்ல வேண்டும்.

அதற்கு��ய அவசரமும் துடிப்பும் உணர்ச்சி வசமும் மு.த.வை விளங்குவதற்குத் தேவையான நிதானத்துக்கு இடமில்லாமல் ஆக்கிவிடுகின்றன. நிதானம் இருந்தால்கூட விளங்கக்கூடிய பார்வை இருக்காது. அது எதிர்காலத்தில்தான் ஏற்பட வேண்டும். எனவே, அந்த நிலையில் தமிழ்ச் சமூகத்தின் இலக்கியத் துறையில் இப்போதைக்கு அகப்பட்டவர் கலாநிதி சதாசிவந்தான்.

கலாநிதி சதாசிவம் அதோடு, அதாவது 'முற்போக்கு' வாதத்துக்கு எதிராகத் திமிறி எழும் பொதுப் பின்னணியோடு, சா�யாகப் பொருந்துகிறாரா?

இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பொதுப் பின்னணி அவரை விட வளர்ந்துவிட்டிருக்கிறது. ஆனால் அந்த வளர்ச்சியையும் நிலையையும் பிரதிபலிக்கும்வகையில், அரசியலில் சமஷ்டிக் கட்சியைக் கண்டுபிடித்த அளவுக்கு அது இலக்கியத்தில் வெல்லவில்லையென்றுதான் சொல்ல வேண்டும். கலாநிதி சதாசிவத்தால் 'ஐம்பதுக்கு - ஐம்பது' காலத்தை - அந்தத் தூக்கத்தையும் தேக்கத்தையும் பண்டிதப் போக்கையும் தலைவர் வழிபாட்டையும் - பிரதிபலிக்கலாமே ஒழிய 56க்குப் பின் வந்த சமஷ்டிக் கட்சிக்கு��ய காலத்தைப் பிரதிபலிக்க முடியாது. சிங்களச் சமூகத்தில் 56க்குப் பின் வந்த புரட்சியையும் மறுமலர்ச்சியையும் பிரதிபலிப்பதுபோல் அவர்களுடைய இலக்கிய உலகில் ஒரு 'கொழும்பு வட்டம்' என்ற ஒன்று இருக்கிறதே அதைப்போல் ஈழத் தமிழ் இலக்கிய உலகில் இல்லை.

(அவர்களுடைய 'பேராதனை வட்டம்' 56க்குப் பின் வந்த புரட்சிக்கும் அப்பாற்பட்டது. அதற்குச் சமமாக நம் முற்போக்கு'க் கட்சியைக் காட்ட முடியாது. அது வட்டம். இது கட்சி. அதோடு அவர்களுடைய பார்வை ஆழமும் 'முற்போக்கு'க்கு இல்லை. ஆமாம், சிங்கள இலக்கிய உலகில் 56க்குப் பின் வந்த பொதுப் பின்னணியின் விழிப்புக்கும் அப்பால் செல்லுமளவுக்கு ஒரு இலக்கிய வட்டம் வளர்ந்துவிட்டிருக்க, நம்மிடம் பொதுப் பின்னணியைப் பிரதிபலிக்கக் கூடிய ஒரு வட்டங்கூட இன்னும் செவ்வையாக வளரவில்லை. 1963க்கும் பிறகுதான் அவை இரண்டுக்கும் உ��ய அறிகுறிகள் தொ�கின்றன. 'நற்போக்கு' ஒருவகைக் 'கொழும்பு வட்ட'மாகவும் மு.தளையசிங்கம், சிவகுமாரன், முருகையன், தர்மு சிவராமு போன்றோர் ஒருவகைப் 'பேராதனை வட்டமாக'வும் இப்போ தொ�கிறார்கள் என்று சொல்லலாம்.

எனவே, 'கொழும்பு வட்டம்' போல் நம்மிடையே இருக்கவில்லை. பழைய ஈழகேசா�ப் பரம்பரைக்கு அந்தளவுக்கு வேகம் இல்லை. எனவே, கலாநிதி சதாசிவம் நம் இலக்கிய உலகுக்குள் இறங்கியவுடன் வேறு வழியின்றி அதிருப்திப்பட்டுக் காத்திருந்த பொதுப் பின்னணி அவரைச் சுற்றி ஓடத் தொடங்கிவிட்டது. மு.தளையசிங்கம் ஏற்படுத்திய வழியையும் எதிர்பையும் அவரே பயன்படுத்திக்கொண்டார். அதன் பின்னர் பொதுப் பின்னணியின் அதிருப்தியும், தேவையும் அவருக்குத் தாக்குக் கொடுக்க, அதுவரை ஒதுக்கப்பட்டுக் காத்திருந்த பண்டிதர்கள் எல்லோரும் ஓடோடி வந்து அவருக்குக் குடைபிடிக்கத் தொடங்கிவிட்டனர். உண்மையில் இந்தப் பண்டிதர்களின் பிரதிநிதிதான் கலாநிதி சதாசிவம். ஆனால் வேறு வழியில்லாத காரணத்தாலும் தன் தேவைகளைப் பிரதிபலிக்காத 'முற்போக்கு'க் கூட்டின் மீதுள்ள வெறுப்பாலும் பொதுப் பின்னணி அவருக்குத் தாக்குப் பிடித்தது. அதனால்தான 'முற்போக்கு'க்கு எதிரான பெரும்பாலான யாழ்ப்பாணத்துச் சிருஷ்டி எழுத்தாளர்கள் சதாசிவம் பக்கம் சார்ந்தவர்களாய் இருக்கின்றனர்.

இவ்வளவும் கலாநிதி சதாசிவத்தின் வரலாற்றின் முதற்கட்டம் என்று சொல்ல வேண்டும். ஆனால் அடுத்த கட்டத்துக்கு வருமுன் அவருடைய இந்த முதற்கட்டத்துக்கு உ��ய குறைகளை-அவரது மரபுவாதத்தின் குறைகளை-குறித்துக்கொள்வது நல்லது. கலாநிதி சதாசிவம் நம் இலக்கிய உலகில் புகுந்ததற்கு��ய முக்கிய காரணம் இலங்கைப் பல்கலைக் கழகத்துத் தமிழ்த்துறை விவகாரங்களே. அதனால் இன்றைய இலக்கியத்தின் தேவைகளை உணர்ந்து கொண்டோ அல்லது அதில் உண்மையான அக்கறை எற்பட்டதினாலோ அவர் நம் இலக்கிய உலகில் புகவில்லை. அதனால், பா�ச்சயம் இல்லாத ஓ��டத்துக்குள் புகுந்ததினால் 'சிறுகதை, இலக்கியமா?', 'கதைகளில் அதைப் புகுத்தலாமா?, 'இதைச் சேர்க்கலாமா?, என்பன போன்ற பல தடங்களில் தட்டுப்பட்டு, முட்டுப்பட்டு, தலைகப்புற விழுந்து தள்ளாடிக்கொண்டு பலவிதமாக ஆரம்பத்தில் அவதிப்பட்டார்.

கடைசியில் ஒருவாற தெளிவு எற்பட்டபோது எழுத்துப் பிழை இருக்கவில்லை. ஆனால் 'பக்தி' என்பது 'பத்தி'யாக எழுதப்பட வேண்டும் என்று அவர் தன் இலக்கண மரபைத் திணிக்க முயன்றபோது (சிறுகதை, இலக்கியமா? என்று கேட்டபோது காட்டிக்கொண்டதுபோல்) திரும்பவும், இருபதாம் நூற்றாண்டின் இந்த அறுபதுகளுக்கு உ��யவரல்லாதவராகவே தன்னை நிச்சயமாகக் காட்டிக்கொண்டார். கலாநிதி சதாசிவத்தின் மரபு வாதம் வெறும் இலக்கண மரபு பற்றிய வாதமே. ஆனால் அதற்காக அது இலக்கண எல்லையைத் தாண்டி சமூக கலாச்சாரப் பொது மரபை அழுத்துவதாய் இருந்தால் சா�யாகிவிடும் என்பதல்ல. பொது மரபிலிருந்து விடுபட்டு எந்த எழுத்தாளனும் இயங்குவதில்லை. அந்தப் பொது மரபை மீறுவதும் ஆமோதிப்பதும் அதே பொது மரபால் நிர்ணயிக்கப்பட்டே நடைபெறுகிறது.

வெளிச்செல்வாக்குகளை ஏற்காமல் தனித்து எங்கள் மரபு எப்போதும் இருந்ததில்லை. பொதுவாக எல்லா மரபுகளும் இப்படியே. வெளிச் செல்வாக்குகளை ஏற்று தங்கள் தங்களுக்கேற்ற வகையில் அவற்றை ஜீரணித்துக்கொள்வே செய்கின்றன. (ஜீரணம் சா�யாகவிட்டால் நோய் ஏற்படத்தான் செய்யும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பாதிக்குப் பின் சீன நாகா�கத்துக்கு ஏற்பட்ட விளைவையும் இப்போ பொலிவே...�ய மக்களுக்கு ஏற்பட்ட நிலையையும் அதற்கு உதாரணமாகக் காட்டலாம். ஆனால் நம் வரலாறு அப்படியல்ல.) நம் மரபு வெளிச் செல்வாக்குகளை ஜீரணிக்கக் கூடியது. நம் இலக்கிய வரலாறு அதற்கு உதாரணமாக நிற்கிறது.

எனவே, 'முற்போக்கு' இலக்கியம் நம் மரபுக்குப் புறம்பானது என்று சொல்ல முடியாது. 'முற்போக்கு' கொள்கைகளைப் பயன்படுத்தி தமிழில் ஓர் எழுத்தாளன் தரமான கதைகளைச் சிருஷ்டித்துவிட்டால் காலப் போக்கில் அவை நம் மரபு வளர்ச்சிக்கு உதவியவையாகவே நிற்கும். கம்பராமாயணத்தையும் மணிமேகலையையும் போ�லக்கியங்கள் என்று எப்படி நாம் கருதுகிறோம்? கட்சிப் பற்று, ஓர் எழுத்தாளனின் சுதந்தரத்தையும் பார்வை ஆழத்தையும் குறைத்து, தனித்தன்மையைக் கெடுத்து, அவனது திறமைகளைச் சிதைத்துவிடுகிறது; பெரும்பாலான ஒருமைப்பாடுடைய இரண்டாந்தரக் கதைகளையே சிருஷ்டிக்க உதவுகிறது என்ற வாதம் வேறு.

கட்சிக் கொள்கைகளைப் பயன்படுத்தி ஓர் எழுத்தாளன் தரமான கதைகளை ஒரு நாளும் எழுதவே முடியாது; எழுதினாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது; அது மரபுக்கு புறம்பானது என்ற வாதம் வேறு. இரண்டையும் மாறாட்டம் செய்துவிடக்கூடாது. கலாநிதி சதாசிவம் நம் பொது மரபைப் பிழையாக அழுத்தி (சில சமயம் இலக்கண மரபை விட்டு அவா மற்றவற்றைக் கூறும்போது) மரபு வாதம் செய்யும் போது அந்த மாறாட்டந்தான் செய்கிறார். அதோடு, ஓர் எழுத்தாளன் தன் மரபை அறிந்திருப்பது அவசியந்தான். பழைய இலக்கியங்கள், பழைய புராணங்கள், பழைய தத்துவங்கள், பழைய பழக்க வழக்கங்கள் எல்லாம் ஓர் எழுத்தாளன் ஆராய்ந்து அறிய வேண்டிய துறைகள்.

ஆனால் கலாநிதி சதாசிவம் கருதுவதுபோல் அவற்றை எழுத்து எழுத்தாக முற்றாக ஆமோதிப்பதற்கல்ல. மாறாக, அவனுக்குச் சா�யானவை என்று படுபவற்றைச் சேர்த்துக் கொள்வதற்கும், இப்போ பிழையாகப் பாவனையில் இருப்பவையாகப் படுபவற்றை ஒதுக்குவதற்கும், மறைந்து போய்விட்டனவற்றைப் புதுப்பிப்பதற்கும், இல்லையென்று படுபவற்றை வெளியே இருந்து இழுத்துச் சேர்ப்பதற்குமே தான் அவன் அதிகமாக மரபைப்பற்றி ஆராய வேண்டியவனாக இருக்கிறார்ன.

மரபுபற்றிய அறிவு, என்னைப் பொருத்தவரையில், அந்த வகையில்தான் அவசியமாகப்படுகிறது. அதோடு இந்து மரபு எல்லாவற்றையும் உள்ளடக்கக் கூடியது. தமிழ் மரபு இந்து மரபாக வி��யக் கூடியது. எனவே, சர்வதேசப் பார்வைக்கும் தேவைக்கும் உ��ய வித்துகள் நம்மிடம் தாராளமாகவே இருக்கின்றன. கலாநிதி சதாசிவம், இவை ஒன்றும் பு��யாத பழைய பண்டிதர்களின் பிரதிநிதியாகவே அவருடைய முதற் கட்டத்தில் காட்சி அளிக்கிறார். அந்தப் பொதுப் பின்னணி, 'முற்போக்கு' சர்வாதிகாரத்தின் மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாய், வேறு வழியின்றி அவருக்குத் தாக்குப் பிடித்தாலும் அதுவரை ஒதுக்கப்பட்டிருந்த பழைய பண்டிதர்களின் குடையின் கீழ்தான் அவர் நின்றுகொண்டிருந்தார். அது முதலாவது கட்டம்.

இனி அடுத்த கட்டம். கலாநிதி சதாசிவத்தால் முதல் கட்டத்துக்கு��ய பண்டிதராய் நின்று அதிக நாள் பொதுப் பின்னணியின் இலக்கியத் தேவையையும் தாகத்தையும் தீர்த்திருக்க முடியாது. பழைய ஈழகேசா�ப் பரம்பரையின் பிரநிதியான கனக செந்திநாதன் போதாமல் போய்விட்ட ஒரு புதிய நிலையில் பழைய பண்டிதர் ஒருவர் அதிக காலம் சமாளித்திருக்க முடியாது.

அதோடு 'முற்போக்கு'க் கூட்டை எதிர்க்கும் பொதுப் பின்னணி, 'முற்போக்கு' இலக்கியத்தால் ஏற்பட்ட முந்தியதை விட ஓரளவு அதிகமான, ஆழத்தையும் வேகத்தையும் அனுபவித்துவிட்டு நிற்கிறது. அதனால் அதன் தேவையும் ரசனையும் இப்போ அதிகம். எனவே, சதாசிவத்தால் அதிக நாள் சமாளித்திருக்க முடியாது. ஆனால் அந்த ஆபத்தான நிலையிலிருந்து சந்தர்ப்பவசத்தால் அவர் காப்பாற்றப்பட்டுவிட்டார்.

கலாநிதியைக் காப்பாற்றியவர் அதோடு ஒட்டிக்கொண்ட எஸ்.பொன்னுத்துரையேதான். அல்லது பொன்னுத்துரையோடு கலாநிதி ஒட்டிக்கொண்ட காரணந்தான். சதாசிவத்தின் பண்டிதப் போக்கை இந்தக் கூட்டு ஓரளவுக்குப் புதிய நிலைக்கேற்ற வகையில் உயர்த்திற்று. அதன்பின் பழைய பண்டிதத்தைப் பிரதிபலிக்கும் கலாநிதி சதாசிவம், எப்.எக்ஸ்.சி.நடராசா போன்றவர்களும் ஈழகேசா�ப் பரம்பரையைப் பிரதிபலிக்கும் கனக செந்திநாதன் போன்றோரும் புதிய வேகத்தையும் அதே சமயம் புதிய பண்டிதத்தையும் காட்டும் பொன்னுத்துரை போன்றோரும் சேர்ந்த 'நற்போக்கு' உருவாகியது. 'நற்போக்கு' உருவாகிய பின்னர்தான் சிங்கள இலக்கிய உலகில் இருக்கும் 'கொழும்பு வட்ட'த்தை ஒத்த ஒரு வட்டம் இங்க வளர ஆரம்பித்தருக்கிறது. 'நற்போக்கு', அரசியல் துறையில் சமஷ்டிக் கட்சியைப்போல் இரண்டுங் கலந்து நிற்கிறது. மத்தியதர வகுப்புப் பிற்போக்குத்தனம், பழமை என்பவற்றோடு இருபதாம் நூற்றாண்டுக்கு��ய (அரசியலில் சமஷ்டிக் கோ��க்கையை ஒத்த) தரமும் சேர்ந்து நிற்கின்றன. பின்னதைப் பொன்னுத்துரையின் தரமான கதைகளும் நல்ல நடையும் (பிழையான நடையல்ல) கொடுக்கிறது.

அதே காரணத்தால் இது சிங்கள இலக்கியத்தின் கொழும்பு வட்டத்தை விட இடைக்கிடை உயர்ந்தும் நிற்கிறது. எனவே, கடைசியில் 'முற்போக்கு' சர்வாதிகாரத்திலிருந்து திமிறித் தப்பிய பொதுப் பின்னணியின், பொதுப் பின்னணியினுடைய பெரும்பான்மையினராய் இருப்பவா�ன், இலக்கிய அக்கறைகளும் தேவைகளும் தங்களுக்கேற்ற ஒரு போக்கையும் வட்டத்தையும் கண்டுபிடித்துவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும். 'நற்போக்கு' அரசியலில் சமஷ்டிக் கட்சி எப்படியோ அப்படி இலக்கியத் துறையில் இன்று ஒரு 'நற்போக்கு'. அதாவது தமிழ்ச் சமூகத்தின் பெரும்பான்மைத் தேவைகளைப் பிரதிபலிக்கும் வகையில் நம் இலக்கிய வளர்ச்சியில் ஏழாண்டு எல்லை, 'நற்போக்'கின் ஆரம்பத்தோடு முடிவடைகிறது என்று சொல்ல வேண்டும்.

'நற்போக்கு' என்ற பெயர் மிகக் குழந்தைப்பிள்ளைத் தனமானது. ஓர் இலக்கியப் போக்கு அப்படி ஒரு பெயரை வேறு எந்த நாட்டிலும் சூட்டியிருக்க மாட்டாது என்றே நான் நினைக்கிறேன். 'முற்போக்கு' என்றதோர் இலக்கியக் கட்சி இருப்பதால் அதற்கு எதிராக வேறு ஓர் இலக்கியக் கட்சியை அமைக்க வேண்டுமென்பதே அனாவசியமானது. 'முற்போக்கு' எழுத்தாளர்கள்தான் ஓர் இலட்சியத்தோடு ஒர் இலட்சியத்துக்காக எழுதுகிறார்கள் மற்றவர்களுக்கு அப்படி எந்த ஒரு இலட்சியமும் இல்லையென்று சில 'முற்போக்கு' அனுதாபிகள் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன்.

ஆனால் உண்மையில் அப்படிக் கூறுபவர்கள் கட்சியையும் இலட்சியம் என்ற ஒன்றையும் ஒரே பொருளாக்கி மாறாட்டந்தான் செய்கிறார்கள். கட்சியில் இருப்பவனுக்குத்தான் இலட்சியம் இருக்கும் என்ற கட்டாயம் இல்லை. கட்சி ஒன்றில் சேராமலேயே இலட்சியத்தோடு வாழலாம். எழுதலாம். அதோடு உண்மையான இலட்சியத்துக்கு கட்சி என்பது தடையாகவே இருக்கும். உண்மை என்பது உலகளவும், உலகத்துக்கு அப்பாலும் நிற்கிறது; அதனை எந்த ஒரு திட்டவட்டமான கொள்கையாலும் சிறைப்படுத்த முடியாது என்பதை உணர்ந்த ஒருவனுக்கு கட்சி எப்படி இலட்சியமாக முடியும்?

 கட்சி சாதாரண மக்களின் பார்வையையும் உயர்த்திவிடுகிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். சில எழுத்தாளர்களுக்கு அது அதே வகையில் உதவக் கூடும். ஆனால் அதே சமயம் முதிர்ச்சியடைந்த ஒருவனுக்கு அதுவே தடையாகவும் பார்வைக் குறுக்கமாகவும் பைத்தியக்காரத்தனமாகவும் இருக்கும் என்பதையும் மறந்துவிடக் கூடாது. பொன்னுத்துரைக்கு இந்த விசாரணைகள் கிடையாது. எனவே, செளகா�யமாக 'நற்போக்கு' என்று நாமம் சூட்டிய அவர் ஓர் தரமான 'நற்போக்கு' என்று நாமம் சூட்டிய அவர் ஓர் தரமான பெயரையாவது சூட்டினாரா என்றால் அதுவுமில்லை. உண்மையில் 'நற்போக்கு' திரும்பவும் அவருடைய பார்வை ஆழமின்மையின் முத்திரையான அவருக்கே உ��த்தான வார்த்தை வித்தையேதான்.

முற்போக்கு என்பதற்குப் போட்டியாக இவர் 'நற்போக்கு'என்கிறார். அப்படிச் சொல்வதால் வரும் ஓசை மயக்கத்தைத் தவிர அதில் அர்த்தமெதுவுமில்லை. ஆனால் ஓசைக்காகவேதான் அதை அவர் தேர்ந்தெடுத்திருப்பதாகத் தொ�கிறது. உண்மையில் 'நற்போக்கு' என்பது நல்லவை, கூடாதவை என்ற பாகுபாட்டைக் குறிக்கிறது. அப்படி என்றால் என்ன அடிப்படையில் ஒன்றை நல்லது, கூடாதது என்று நிர்ணயிப்பது? நல்லவை, கூடாதவை என்பவை சா�யானவை, பிழையானவை (right and wrong) என்பவற்றைக் கருதினால் அந்த அர்த்தங்கள் தற்காலிகமானவை ஆகிவிடும். காலத்துக்குக் காலம் இடத்துக்கு இடம் மாறுபடுவகையாகிவிடும்.

இன்று சா� என்று படுபவை நாளையும் சா�யாகத் தொ�யவில்லை. முன்பு ஓர் ஆடவன் பல பெண்களை மணந்துகொள்ளலாம். இப்போ நம் சமூகத்தில் அது பிழையாகக் கருதப்படுகிறது. அப்படிப் பல உதாரணங்களைக் காட்டலாம். எனவே சா�யானவை, பிழையானவை என்ற அடிப்படையில் 'நற்போக்'கை நிறுவ முடியாது. அவற்றுக்கு மாறாக நல்லவை, கூடாதவை என்பவை தர்மம், அதர்மம் என்ற அர்த்தத்தில் எடுக்கப்படலாம் (good and bad). அப்படியென்றால் அது ஆத்மீக அடிப்படையில் எழுந்த வித்தியாசம்.

ஆனால் அதே அடிப்படையில் பார்க்கும்போது 'முற்போக்கு'ம் ஓரளவுக்கு 'நற்போக்'காகவே படும். பொன்னுத்துரை செய்ததுபோல் அதை முற்றாக ஒதுக்கிவிட முடியாது. 'நற்போக்கு'க்கு 'முற்போக்கு' முழு எதிரான ஒன்று என்று காட்ட முடியாது. அதே போல் 'நற்போக்கு' என்பதை சா�. பிழை என்ற அடிப்படையில் பார்க்கும் போது 'முற்போக்கு' என்பது ஆளுக்கு ஆள், இடத்துக்கிடம் சா�யாகவும் பிழையாகவும் படும்.

அது முதலாவது. இரண்டாவது, இலக்கியத்தை 'நல்லது', 'கூடாதது' என்ற அடிப்படையில் அளக்கத் தொடங்கினால், அது 'பாடங்கள்' (lessons) அல்லது உபதேசங்கள் கூறும் பழைய சமயக்கதைகளுக்கும் ஈசாப் கதைகளுக்குந்தான் வழிவகுக்கும். அப்படிப் பார்த்தால் யதார்த்தப் படைப்பு என்பதும் கூடாததாகிவிடும். 'நற்போக்கு' என்ற அடிப்படையில் அளந்தால் முதலாவதாக ஒதுக்கப்படும் கதைகள் 'தீ', 'பங்கம்' போன்ற பொன்னுத்துரையின் கதைகளாகத் தான் இருக்கும். பொன்னுத்துரையின் கதைகளாகத் தான் இருக்கும். பொன்னுத்துரைக்கு இந்த விசாரணைகள் எதுவும் தொ�வதில்லை. அவர், ஓசை ஒன்றுக்காக மட்டும் பெயர் சூட்டியிருக்கிறார்.

திரும்பவும் முன்பு விட்ட இடத்துக்கு வரலாம். இன்று 'முற்போக்கு', 'நற்போக்கு' என்று இரண்டு கூட்டுகளாக நம் இலக்கியச் சூழல் பிளவுபட்டுக் கிடக்கிறது. கடைசியில் நம் இலக்கிய விவகாரங்களின் நிலை நம் அரசியல் நிலையைத்தான் ஒத்திருக்கிறது. இக்கட்டுரைத் தொடா�ல் ஆரம்பத்தில் பொதுப் பின்னணியைப்பற்றிக் கூறும் போது குறிப்பிட்டவற்றைத் திரும்பவும் நினைவுபடுத்திக் கொள்வது நல்லது. பிளவுபட்ட மனோநிலையை உடைய ஒருவனைப்போல் ஈழத்துத் தமிழ் இனம் அரசியல் சமூகத்துறைகளில் இடதுசா��களுக்கிடையேயும் சமஷ்டிவாதிகளுக்கிடையேயும் பிளவுபட்டுக் கிடக்கிறது என்று கூறினேன்.

இப்போ இலக்கியத் துறையிலும் அதே நிலைதான். 'முற்போக்கு', 'நற்போக்கு'. அதனால் இரண்டும் தனித்தனியே நம் ஈழத் தமிழினத்தின் உண்மையான தேவைகளையும் நிலையையும் பிரதிபலிக்க முடியாதவையாக நிற்கின்றன. உண்மையான தேவையும் வளர்ச்சியும் இரண்டிலுமுள்ள தரமானவற்றை இணைத்துக் கொண்டு இரண்டுக்கும் அப்பால் போவதுதான். எப்படி பண்டா, செல்வா ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்படும் ஒரு சமஷ்டி ஆட்சியாலும், இடது சா��கள் காட்டும் பொருளாதார வளர்ச்சியாலும் சமத்துவத்தாலும்தான் நம் அரசியல் பொருளாதாரத் தேவைகளைத் தீர்க்க முடியுமோ அப்படியேதான் 'முற்போக்கு, 'நற்போக்கு' என்பவற்றிலுள்ள தரமானவற்றை எடுத்துக்கொண்டு, இணைத்துக்கொண்டு அவற்றுக்கு அப்பாலும் போக்கும் ஓர் இலக்கியப் போக்கு ஒன்றால்தான் நம் இலக்கியத் தேவைகளைத் தீர்க்க முடியும். அந்தப் போக்கை நான் தற்காலிகமாக 'மூன்றாம் பக்கம்' என்று குறிப்பிட்டிருந்தேன். 'மூன்றாம் பக்கம்' என்பது முதல் இரண்டையும் ஒதுக்கிய மூன்றாம் பக்கம் என்றில்லாமல் முதல் இரண்டையும் இணைத்து அவற்றுக்கு அப்பாலும் போக்கும் மூன்று பக்கங்களும் என்பதையே குறிக்கும்.

இலக்கிய உலகில் வட்டங்களும் கூட்டுகளும் ஏற்படுவது இயற்கையே. ஓரளவுக்கு அவசியமுங்கூட. அவற்றுக்கிடையே ஏற்படும் மோதல்கள் ஒரு வேகத்தையே பிறப்பிக்கின்றன. ஆனால் மற்ற நாடுகளில் அப்படி இருக்கும்போது அதற்கேற்ற வகையில் அங்கெல்லாம் ஏற்கனவே இருந்து தொடர்ந்து வளர்ந்து வரும் ஒரு நீண்ட கால வரலாற்றும் மரபும், இலக்கியத் தேர்ச்சியும், ஆழமான பார்வையும் பக்கபலமாக நிற்கின்றன; பின்னணியாக இருக்கின்றன. ஈழத்தில் அப்படி இல்லை. அதோடு நாம் இன்று ஈடுபடும் புதுத் துறைகளைப்பற்றி நம்மிடையே ஆழமான பார்வையும் இல்லை; பயிற்சியும் இல்லை.

இந்த நிலையில் கட்சிகள் வெறும் fanaticism ஐத்தான் வளர்க்கின்றன. அதன் காரணமாய் அடுத்தவனின் திறமையும் சாதனையும் ஒன்றில் முற்றாக மறுக்கப்படுகிறது அல்லது குறைகளைக் காட்டாமல் முற்றாக அடிமைத்தனமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது, போற்றப்படுகிறது, அபிநயிக்கப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் 56க்குப் பின் ஏற்பட்ட வேகமும் அக்கறையும் அவைக்கேற்ற சாதனைகளைப் பிறப்பிக்காமலே ஒருமைப்பாட்டுக்குள் முற்றாக ஓடி விழுந்து மந்தடைந்து செத்துவிடும், சிதைந்துவிடும். அதோடு இனி வரும் எதிர்காலப் பரம்பரைக்கு ஆங்கிலமும் வேறு மேற்கத்தைய மொழிகளும் அத்தனை அன்னியோன்னியமானவையாக இல்லாமல் போய்விடக்கூடும் என்ற ஆபத்தும் எற்படுவதாகத் தொ�கிறது. அப்படியானால் பார்வை இன்னும் குறைந்துவிடும். அந்த நிலையில் இப்போதுள்ள பரம்பரை செய்பவைதான் எல்லாவற்றையும் திசை திருப்புவதாக நிற்கும். எனவே, நாம் அதற்கேற்ற வகையில் நடந்துகொள்ள வேண்டும்.

அதற்கேற்ற வகையில் நடந்துகொள்ள வேண்டுமானால் நாம் அடுத்தவர்களின் திறமையையும் சாதனையை ம் ஒப்புக்கொள்ள வேண்டும். நம் கொள்கையும் கட்சிப் பற்றும் நம் கண்களை மறைத்துவிடக் கூடாது. கட்சிகளை மீறிய ஒரு கலப்புத் தேவை. கட்சிப் பற்றும் அவரவர் தேவைக்கேற்ற வகையில் இருக்கலாம். ஆனால் அடுத்தவனின் திறமையையும் சாதனையையும் மறுக்கக்கூடிய வகையில் வளர்க்கப்படக் கூடாது. மாறாக, கட்சிப் பற்று இருக்கிற அதே சமயத்தில் இலக்கிய ��தியில் ஒரு கலப்பு ஏற்படுவதற்கு இடமும் கொடுக்க வேண்டும். அதற்கு வழிவகுக்கப்பட வேண்டும்.

பத்தி��கையில் வந்த என் பழைய கட்டுரை ஒன்றில் துரதிஷ்டவசமாகப் பிரசுரமாகாமல் விடுபட்டுப் போய்விட்ட ஓர் பந்தியை இங்கு திரும்பவும் சேர்க்க விரும்புகிறேன். 1963இல் 'முற்போக்கு' எழுத்தாளர்களுக்கு எதிராக ஏற்பட்ட எதிர் வேகத்தின் உச்ச காலத்தில் எழுதப்பட்ட ஒரு கட்டுரையின் பகுதி இது:

"நேற்று வரையும் நம் இலக்கிய உலகின் சதுக்கங்களிளெல்லாம் உயர்த்திவைக்கப்பட்டிருந்த ஸ்டாலின் உருவங்களும் தொழுது பாடப்பட்ட சடனோவ் விக்கிரகங்களும் இன்று உடைக்கப்பட்டு இலக்கியத் தெருக்களிலெல்லாம் கொர கொர என்று இழுக்கப்படுகின்றனவென்றால் நேர்மையையும் திறமையையும் நியாயத்தையும் தனித்தன்மையையும் சுதந்திரத்தையும் விரும்பும் எல்லா எழுத்தாளர்களுக்கும் சந்தேகமாகத்தான் இருக்கும். அது ஒரு புரட்சி, பெரும் புரட்சி. ஆனால் அங்குதான் ஆபத்தும் முளைக்கிறது......"

புரட்சி, வளர்ச்சியை மறந்துவிடும்போது புதிய ஒரு கூடாரத்தைத்தான் அமைக்கும். புரட்சி புதிய ஒரு கூடாரம் போடும்போது பலரகப் பேர்வழிகள் உள்ளே நுழைந்து பதுங்கிவிடுவர். அது ஒரு மறைவிடம். அதற்குப் பின் அவர்கள் எல்லோரையும் பாதுகாக்கத்தான் வேண்டும். பின்னர் தனித்துவம் இருக்காது. நேருக்கு நேர் நிறைகுறைகளைப் பேசும் நோ�ய நோக்கம் இருக்காது. காரணம், நோக்கம் எல்லாம் எதிர் கூடாரத்தைத் தாக்குவதாகத்தான் இருக்கும்.

அதனால் நம் கூடாரத்துக்குள்ளே நுழையும் விழல்களை எல்லாம் விழுங்கித்தான் ஆகவேண்டும். நியாயமாக்கித்தான் தீரவேண்டும். பண்டிதர் பரசுராமர்களையும் நாம் விமர்சகர்களாக்கி மகிழத்தான் வேண்டும். கடைசியில் மிஞ்சுவது தேக்கந்தான், வளர்ச்சியல்ல. அதை நாம் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இலக்கியத்தில் புகுத்தப்படும் கட்சி முறையையும் கொள்கைக் கட்டுப்பாட்டையும் எதிர்க்கலாமே ஒழிய தனிப்பட்ட ��தியில் 'முற்போக்கு'வாதிகளை முற்றாக மறுத்துவிட முடியாது. தனித்தன்மையையும் சுதந்திரத்தையும் கோரும் நாம் அடுத்தவர்களுக்கிடையே இருக்கும் கட்சி முறையை எதிர்க்கலாமே ஒழிய அங்குள்ள தனிப்பட்டவர்களின் திறமையையும் அதற்காக மறுத்துவிட முடியாது.

நம் புரட்சி இன்னும் ஒரு படி மேலே செல்லும் வளர்ச்சியே ஒழிய அதே பழைய படியில் இன்னோர் கூடாரமல்ல. அப்படி இருக்கக் கூடாது. கைலாசபதிக்கு அவா�ன் செயலாலும் திறமையாலும் நியாயமாக்க முடியாத வழிபாட்டையும், மா�யாதையையும் முதுகு சொறிதலையுந்தான் நாம் செய்யக்கூடாது. ஆனால் அதற்காக அவர் ஒரு காலத்தில் தனக்குத் தொ�ந்த ஏதோ ஒரு விதத்தில் நம் இலக்கிய வளர்ச்சிக்குச் செய்த சிறு உதவியையுங்கூட முற்றாக மறந்துவிட வேண்டுமென்பதல்ல அர்த்தம். 'முற்போக்கு'க் கட்சி என்பதற்காக முருகையனை நாம் முற்றாக ஒதுக்கிவிட முடியுமா? தனிப்பட்ட முறையில்கூடப் பிடித்துக்கொள்ளாவிட்டாலும் தான்தோன்றியின் ஒரு சில கவிதைகளைக் கூடவாவது நாம் வி��த்துச் சுவைக்கக் கூடாதா?

கட்சி முறையை நாம் விரும்பாவிட்டால் நந்தியையும் சொக்கனையும் நல்ல முறையிலாவது ஆராயக் கூடாதா? 'நான்தான்' என்ற பெயா�ல் மறைந்திருந்து விசர் பிடித்த ��தியில் சித்திரவதையா செய்ய வேண்டும்? எழுத்தாளனின் தனித்தன்மையையும் திறமையையும் சுதந்திரத்தையும் கட்சிமுறை நசுக்கிவிடுகிறது என்ற வாதம், அடுத்த எழுத்தாளன் தன் கட்சிக் கொள்கைகளை இலக்கியத் தரத்திற்கு உயர்த்திவிடும்போதுகூட அதைப் பார்க்காமல் ஒதுக்கிவிட வேண்டும் என்று மாறிவிடக் கூடாது. அப்படி எற்பட்டால் அது வளர்ச்சி அல்ல. அது புதிய கட்சி மனப்பான்மை. எனவே, திரும்பவும் தேக்கம். அவர்கள் குருடர்களென்றால், ஏட்டிக்குப் போட்டியாக நாமும் இறுக மூடிக்கொள்ளவா வேண்டும்? அதுதான் நான் கூறும் தனித் தன்மை, நம்மவர்க்கு இருக்கவேண்டிய போக்கு.

இதே கேள்விகளை 'முற்போக்கு' எழுத்தாளர்களிடமும் கேட்கலாம். சாதாரண இளம் 'வெறி'களுக்கு இது விளங்கும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் கா.சிவத்தம்பி, கைலாசபதி, கந்தசாமி, போன்றவர்களுக்கு விளங்கும் என்றே எதிர்பார்க்கிறேன். அவர்களிடம் அன்பாகக் கேட்கிறேன். ஏன் மெல்ல மெல்ல ஒரு கலப்புக்கு, ஒரு மேல் வட்டத்துக்கு வழிவகுக்கக் கூடாது? பொன்னுத்துரையிடம் நான் கேட்கும் அன்பான கேள்வியும் அதுவேதான்.

இப்போதுள்ள மனக் குறைகளை ஒதுக்கிவிட்டு எதிர்காலத்தையாவது மனத்தில் வைத்து ஒரு கலப்புக்கு இடம் வகுத்தால் என்ன? இன்றைய குரோதங்களும் விரோதங்களும் எதிர்காலத்தில் சாதனைகளாக நிற்குமா? ஏற்கனவே எழுதத் தொடங்கியுள்ள இளம் எழுத்தாளர்களான செம்பியன் செல்வன், செங்கையாழியான், அகஸ்தியர், பெனடிக்ற் பாலன், யோகநாதன் போன்றவர்களையே நம் விரோதங்களும் கண்மூடித்தனமும் திருகி, நசுக்கி, திசை மாற்றிப் பழுதாக்கிவிட்டதென்றால் எதிர்காலத்தில் வருபவர்கள் எப்படி இருப்பார்கள்? இப்போதே நம் சாதனைகள் எல்லாம் 'தத்துவங்க'ளாகவும், 'சமத்துவங்க'ளாகவும் 'குட்டி'களாகவும் 'உணர்வூற்றுச் சித்திரங்க'ளாகவும் பழுதாகத் தொடங்கிவிட்டனவென்றால் எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்பார்க்கலாமா?

இக்கேள்வியோடேயே என் கட்டுரையை முடித்துக்கொள்வது நல்லது இந்த முழுக் கட்டுரைத் தொடரே ஒரு கேள்விதான். ஒரு தேடல். சுய விசாரணையையும் சூழல் விசாரணையையும் தேடலையும் காட்டுபவை. அதே காரணத்தால் தான் இக்கட்டுரைத் தொடரை ஒரு 'சுய விளம்பரம்' என்று கூறினேன்.

விளம்பரமும் ஏதோ ஒன்றைத் தேடித்தான் செய்யப்படுகிறது. (ஆனால் இந்த விளம்பரம் 'கடில்' கலந்த கோப், 'கோல்வ்-எக்ஸ்' கலந்த மை என்பவற்றின் ரகத்துக்கு அப்பாற்பட்டது) இக்கட்டுரைத் தொடரை எழுதுவதற்கு��ய காரணங்களாய் நிற்கும் தேடல் விசாரணையுந்தான் இது 'செய்தி'யில் பிரசுரமாவதற்கு��ய காரணங்களாகவும் நின்றன. என் அனுபவத்தைப் பொருத்தவரையில் இன்று ஈழத்திலுள்ள எந்தத் தினப்பத்தி��கைகளிலும் எந்த வாரப் பத்தி��கைகளிலும் ஓர் தரமான எழுத்தாளன் தன் கருத்துகளைக் குறுக்கீடு இன்றி எழுத முடியாமல் இருக்கிறான். கட்சிப் பற்றும் கட்சிக் கருவிகளும் குறுக்கிட்டு கட்டுரைகளைப் பந்தி பந்தியாய் அமுக்கிவிடுகின்றன.

 நம் இலக்கிய நிலை அப்படிப்பட்டது. எனவே, அந்த நிலையிலிருந்து தப்பி சுதந்திரத்தோடும் சுய கெளரவத்தோடும் எழுத இடந்தேடியே 'செய்தி'யில் இதைப் பிரசு��க்க விரும்பினேன். ஆமாம் இதுவும் ஒரு தேடலேதான். தேடல், பிரசுரத்தைப் பொருத்தவரையிலாவது வெற்றிகரமாக முடிவதற்கு உதவிய 'செய்தி'க்கும் அதன் ஆசி��யருக்கும் என் நன்றியைத் தொ�வித்துக்கொண்டு இதை முடித்துக்கொள்கிறேன். கடைசியாக ஒன்று, நம் கட்சிப் பற்றும் விளக்கங்களும் குறுக்கீடுகளும் எதிர்காலத்தில் நின்று பிடிக்க மாட்டா. நின்று பிடிப்பவை தரமான இலக்கியங்கள்தான். அவற்றை நாம் சிருஷ்டிக்கிறோமா? அதுதான் முக்கிய கேள்வியாக இருக்க வேண்டும்.


**ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி** முற்றும்.

.... மு. தளையசிங்கம்.
 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home