Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Eelam Tamil Literature > ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி - மு. தளையசிங்கம் முன்னுரை > அரசியல், சமூக, பொருளாதாரப் பின்னணி >  பொதுப் பின்னணியைப் பிரதிபலிக்காது முன்னுக்குத் தள்ளப்பட்ட 'முற்போக்கு இலக்கியம்' >  சோஷலிச யதார்த்தமும் 'முற்போக்கு' இலக்கியமும்'நற்போக்கும்' 'முற்போக்கும்''முற்போக்கு' எழுத்தாளர்களின் அருவருக்கத்தக்க காட்சிகள்சர்வாதிகாரத்தைக் கண்டு தப்பி ஓடியவர் > சர்வாதிகாரத்தை தனித்து நின்று எதிர்த்தவர் > பொதுப் பின்னணி கண்டுபிடித்த இலக்கியப் போக்கு

20th Century Eelam Tamil Literature at Project Madurai


 
ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி - மு. தளையசிங்கம்
EzANTu ilakkiya vaLarcci - M. Thalaiyasingam


[ Etext Preparation : Mr. R. Padmanabha Iyer, London, UK & Dr. N. Kannan, Kiel, Germany (input);  Mr. Ramanitharan Kandiah, New Orleans, USA (Proof-reading)Web version: K. Kalyanasundaram, Lausanne, Switzerland  © Project Madurai 1999 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.tamil.net/projectmadurai  You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

To view the Tamil text correctly you need to set up the following: i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha, Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).  and ii) Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view. The Latha font may be downloaded from here]


 
0. முன்னுரை - மு.பொன்னம்பலம், சு. வில்வரத்தினம்
1. அரசியல், சமூக, பொருளாதாரப் பின்னணி
2. பொதுப் பின்னணியைப் பிரதிபலிக்காது முன்னுக்குத் தள்ளப்பட்ட 'முற்போக்கு இலக்கியம்'
3. சோஷலிச யதார்த்தமும் 'முற்போக்கு' இலக்கியமும்
4. 'நற்போக்கும்' 'முற்போக்கும்'
5. 'முற்போக்கு' எழுத்தாளர்களின் அருவருக்கத்தக்க காட்சிகள்
6. சர்வாதிகாரத்தைக் கண்டு தப்பி ஓடியவர்
7. சர்வாதிகாரத்தை தனித்து நின்று எதிர்த்தவர்
8. பொதுப் பின்னணி கண்டுபிடித்த இலக்கியப் போக்கு
 
 
2. பொதுப் பின்னணியைப் பிரதிபலிக்காது முன்னுக்குத் தள்ளப்பட்ட 'முற்போக்கு இலக்கியம்'

இந்தச் சந்தர்ப்ப விபத்தால் வந்த புதிய தனிப் பின்னணி சமூக, பொருளாதார, அரசியல் பொதுப் பின்னணியில் கைலாசபதியால் ஏற்றப்பட்டபோது அந்தப் பொதுப் பின்னணி இலக்கிய உலகத்தில் அளவுகெட்டுப் பிரதிபலிக்கத் தொடங்கியது. எப்படி ஒரு கனகசெந்திநாதன் போன்றவர் இலக்கியத் தலைவராக (அப்படி யாராவது இருந்துதான் ஆகவேண்டுமென்றால்) இருக்க வேண்டிய இடத்தில் ஒரு கைலாசபதி நுழைந்தாரோ அப்படியே விழிப்புப் பெற்ற மத்தியதர வர்க்கத்தைப் பிரதிபலிக்கும் இலங்கையர்கோன் போன்ற எழுத்தாளர்கள் (அரசியலில் சமஷ்டிக் கட்சிபோல) தலைமை தாங்க வேண்டிய இடத்தில் 'முற்போக்கு' எழுத்தாளர்கள் தலைமை தாங்கத் தொடங்கிவிட்டனர்.

இந்த முற்போக்கு எழுத்தாளர்கள் ஈழத் தமிழ்ச் சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட சிறுபான்மையினராகிய ஒரு சிறு வட்டத்தைப் பிரதிபலிப்பவர்கள். யாழ்ப்பாணத்தில் சமஷ்டிக் கட்சியின் நிழலில் மறைக்கப் பட்டுவிட்ட கொம்யூனிஸ்ட் கட்சி எப்படியோ அப்படித்தான் அதே கட்சி எழுத்தாளர்களான இவர்களும், தொகைக் கணக்கில் அளவிடும்போது, தமிழ்ச் சமுதாயத்தில் ஒரு சிறு குறுவட்டத்தின் பிரதிபலிப்பு. இங்கே எண்ணிக்கையின் அளவில்தான் குறிப்பிடுகிறேன்; கருத்து ஆழத்தைக் குறிப்பிடவில்லை. 1956 வரை இந்த எழுத்தாளர்கள் பெரும்பாலும் அநாமதேயங்களாகவே இருந்தனர். மற்ற ஈழகேசா¢ப் பரம்பரை என்று சொல்பவர்களும் அதுவரை அப்படித்தான். ஆனால், அவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த 'முற்போக்கு' எழுத்தாளர்கள் ஆகக்கூடிய அநாமதேயங்களாக மட்டுமல்ல, உண்மையாகப் பக்குவப்படாதவர்களாகவுந்தான் இருந்தனர். சிலர் இன்றுகூடப் பக்குவப்படவில்லை. மார்புக் கச்சைக்குள் வெறும் வார்த்தை ஜாலத் துணியைச் செருகுவது சில சமயங்களில் கூழ்முட்டைகள் கூடப் பயன்படுத்தப் படுகின்றன - - பக்குவப்பட்டவர்களாக நடிக்கும் போலிகளாகவே இன்னும் இருக்கின்றனர் சிலர். ஆனால், அவர்கள் இங்கு இப்போதைக்குத் தேவையில்லை. அதோடு அவர்களுக்கு முரணாக நிற்கும் எதிர்க் கட்சியில் - நற்போக்கு? - அதைவிட மோசமானவர்களும் இருக்கிறார்கள். எனவே, பொதுப் பின்னணியில் ஒரு சிறு குறுகிய வட்டத்தைப் பிரதிபலிக்கும் இந்த 'முற்போக்கு' எழுத்தாளர்கள்தான் கைலாசபதியின் வருகைக்குப் பின் கைதூக்கி விடப்பட்டனர். அதற்குப் பின்னர் அவர்களின் பிரபல்ய வளர்ச்சி மைல் பாய்ச்சலில் முன்னேறியது. அவர்களின் சிருஷ்டித் தரம் அந்தப் பிரபல்யப் பாய்ச்சலோடு ஒத்து ஒடமுடியாமல் பின்னுக்கு நொண்டி நொண்டி இழுபட்டு விசித்திரமாகத் தொ¢யும் அளவுக்கு அவர்களின் பிரபல்யம் பாய்ந்து வளர்ந்தது. சீக்கிரம் அது ஒரு இலக்கியச் சர்வாதிகாரமாகவும் மாறிவிட்டது. பிரசு¡¢க்கப்படுபவர்கள் அவர்கள். வாசிக்கப்படுபவர்கள் அவர்கள், விமர்சிக்கப்படுபவர்கள் அவர்கள், பேசப்படுபவர்கள் அவர்கள், அப்படி ஒரு வளர்ச்சி. கூடவே ஈழத் தமிழிலக்கியம் அதுவரை கேட்டிராத புதிய சுலோகங்கள் -பிரதேச இலக்கியம், மண்வளம், மக்கள் இலக்கியம், சோஷலிஸ்ட் யதார்த்தம்! கடைசியில் எல்லாமே கட்சி இலக்கியம் என்ற அளவுக்கு ஒரு கருத்து வளர்ச்சி! வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு ஆக அவர்கள் மட்டுந்தான் நம் நாட்டுத் தமிழ் எழுத்தாளர்கள் என்று நினைக்குமளவுக்கு அவர்கள் முன்னுக்கத் தள்ளப்பட்டனர். அவர்களைக்கொண்டு பார்க்கும்போது நம் சமூக, பொருளாதார, அரசியல் பின்னணியைப் பிழையாக அளவிடச் செய்யுமளவுக்கு வளர்ச்சி. இந்திய எழுத்தாளர்கள் அப்படித்தான் தவறுதலாகக் கணக்கிட்டனர். சென்ற ஆண்டின் ஆரம்பவரை அதுதான் நிலை. இந்த அளவு பிழைத்த வளர்ச்சிக்குக் காரணம் சந்தர்ப்பவசத்தால் உள்ளே வந்த கைலாசபதிதான்.

இந்த இடத்தில் கைலாசபதியையும் அவரது விமர்சன சகாக்களையும் அவர்கள் எந்தளவுக்கு, ஏன் கொம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் என்று திரும்பவும் நோக்குவது பொருந்தும். ஆரம்ப 'முற்போக்கு' எழுத்தாளர்கள் கொம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள். ஆனால், அவர்களுக்குக் கைகொடுத்த ந்த விமர்சகர்களும் பின்பு உள்ளே புகுந்த வேறு எழுத்தாளர்களும் அதே வகையில் கட்சிக்காரர்களா? புதிதாக வந்த இந்த விமர்சகர்களைப் பொதுவாக இடதுசா¡¢கள் என்று சொல்வது பொருந்தும். நான் உட்பட இன்றைய பெரும்பாலான எழுத்தாளர்கள் எல்லோரும் அப்படியேதான். காலம் அதைத் தவிர்க்க முடியாமல் செய்துவிடுகிறது. ஆனால், திட்டவட்டமான கட்சிக் கொள்கையில் மறுப்பற்று பக்தி வைக்கும் கொம்யூனிஸ்ட்களா? ஏற்கனவே சிவத்தம்பியையும் கனகரத்தினாவையும் அந்த ரகத்தில் பார்க்க முடியாது என்று குறிப்பிட்டேன். இவர்களை இடதுசா¡¢களாகப் பார்க்க வேண்டுமானால் சமசமாஜக் கட்சி செல்வாக்குப் பெற்றிருக்கும் நம் சோம்பல் துரைத்தன அறிவாளி வர்க்கத்தில் நிறுத்தித்தான் பார்க்க வேண்டும். இந்த அறிவாளி வர்க்கத்திடம் கட்சிப்பற்றைவிட உத்தியோகப்பற்றும் துரைத்தனச் சோம்பலும் அசிரத்தையுந்தான் அதிகம். பெரும்பாலோர் மா¢யாதைக்காக வேண்டி, தாங்க சிந்தனா வளர்ச்சியுடைவர்கள் என்று மற்றவர்கள் நினைக்க வேண்டுமென்பதற்காக வேண்டி, வெளிப்படையில் இடது சா¡¢களாக நடிப்பவர்கள். இந்தப் பண்பு இலங்கைப் பல்கலைக்கழகத்திலிருந்து வரும் பட்டதா¡¢களிடம் ஒரு பொதுவான பண்பு. அதோடு 1956க்கு முன் பல்கலைக் கழகத்திலிருந்து வெளிவந்தவர்கள் மொழிப்பிரச்சினையில் காரணமாக வந்த மன உறுத்தலை அனுபவிக்கவில்லை. அதனால் இடதுசா¡¢க் கட்சிகளின் வசீகரத்தை எதிர்க்க வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டதில்லை. எனவே, துரைத்தனக் கனவுகளோடு இடதுசா¡¢க் கட்சிகளுடன் அங்கு வைத்திருந்த உரைசலும் உடைபடாமல் வெளியே வர அவர்களால் முடிந்தது. கைலாசபதி, சிவத்தம்பி, கனகரத்தினா போன்றவர்களை அந்த ¡£தியில்தான் பார்க்க வேண்டும். ஆனால் அவ்வளவும் 'முற்போக்கு' எழுத்தாளர்களைச் சார்வதற்கு¡¢ய ஒரு சாய்வை ஏற்படுத்துவதற்குப் போதுமாய் இருந்தது. அதனால், பின்பு பழகப் பழக கைலாசபதிக்குப் பத்தி¡¢கை ஆசி¡¢யர் என்ற காரணத்தால் இருந்த வசதிகளும் அதோடு அவருக்கும் அவரது சகாக்களுக்கும் இருந்த லக்கியம் பற்றிய தரமான அறிவும் பார்வையும் கட்சிப் பற்றுடைய 'முற்போக்கு' எழுத்தாளர்களைத் தூக்கிவிட, முற்போக்கு எழுத்தாளர்களிடமிருந்த கட்சிப்பற்று முன்னவர்களைப் பாதித்து ஒன்றுக்கொன்று முட்டுக் கொடுத்த ஒரு கூட்டாக வளர்ந்திருக்கிறது. அந்தக் கூட்டு கடைசியில் இறுகும் போது உள்ளே ழுக்கப்படக்கூடியவர்களான, ஏற்கனவே அந்தக் கட்சிச் சாய்வுள்ள கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்களை இறுக்கமாகக் கட்சியோடு ணைத்துக்கொண்டு அதிலிருந்து விடுபடக்கூடியவர்களான கனகரத்தினா போன்றோரை வெளியே நழுவவிட்டிருக்கிறது. அதோடு அண்மையில் 'முற்போக்கு'க் கட்சிக்காரர்களுக்கு எதிராக ஒரு இலக்கிய வேகம் எழுந்தபோது அந்தக் கூட்டு இன்னும் இறுகிவிட்டது. அப்படித்தான், கைலாசபதியும், கா.சிவத்தம்பியும் முற்போக்கு எழுத்தாளர்களான இளங்கீரன், டொமினிக் ஜீவா, டானியல் போன்றவர்களின் தலைவர்களானதற்கு¡¢ய காரணத்தைப் பார்க்க வேண்டும். அதோடு லகுவில் வந்த ஒரு தலைமைப் பதவி கைலாசபதிக்கும் சிவத்தம்பிக்கும் தங்களின் இலக்கியப் பங்கில் ஒரு புதிய பற்றை விழுத்தி விடாமலில்லை. ஏற்கனவே கட்சி ¡£தியாக இயங்கிய ஒரு கோஷ்டி பின்னால் வரக்காத்திருக்கிறது என்பது தொ¢ந்தபோது அதை மறுப்பது கஷ்டமாகத்தான் இருந்திருக்கும். அதுவும் எங்காவது ஒரு நல்ல உத்தியோகம் கிடைத்தால் போதும் என்று பல்கலைக் கழகத்தைவிட்டு வெளியே வந்த இந்தத் துரைத்தன அநாமதேய அறிவாளிகளுக்குப் பின்னால் வர ஒரு கோஷ்டியும் வழிபாடும் பிரபல்யமும் காத்திருந்தன என்பது தொ¢ந்தபோது அதை ஆவலோடு வரவேற்காமல் இருந்திருக்க முடியாது. கடைசியில் இரண்டுவகை அநாமதேயங்களின் கலப்பு பிரபல்யமடைந்த கூட்டு ஓன்றைப் பிரசவித்திருக்கிறது. இந்தத் தலைமைப் பதவி ஆசையும் போட்டியுந்தான் ஆரம்பத்தில் 'முற்போக்கு'க் கட்சியின் வளர்ச்சிக்கு அதிகமாக உதவிய எஸ்.பொன்னுத் துரையைக் கடைசியில் கூட்டிலிருந்து வெளியே தள்ளிய காரணம். பொன்னுத்துரைக்கும் அவர்களுக்குமிடையே இப்போது நிலவும் பரஸ்பர வெறுப்புக்குக்கூட அடிப்படைக் காரணம் அதுவேதான். இவ்வளவும் 'முற்போக்கு'க் கூட்டிலிருக்கும் விமர்சனத் தலைவர்களுக்கும் அவர்களைப் பின்பற்றும் எழுத்தாளர்களுக்கும் இடையே கொள்கைப் பிணைப்பு ஏற்பட்டதற்கு¡¢ய காரணம். ஆனால் அவர்களின் பிரபல்யத்துக்கு அது மட்டுமல்ல காரணம். இன்னும் பல இருந்தன.

இலக்கியத் தரம் கருத்திலும் கலையிலும் தங்கியுள்ளது. எழுதும் எழுத்தாளர்களின் எண்ணிக்கையிலல்ல. அப்படியென்றால் 1956க்குப் பின் வந்த பொது விழிப்பைப் பயன்படுத்துவதற்கு இந்தப் பட்டதா¡¢ அறிவாளி வர்க்கத்துக்கும் 'முற்போக்கு' எழுத்தாளர்களுக்குமிடையே வந்த இலக்கியக் கூட்டு பிறப்பித்த கருத்துகளைவிட வேறு தரமானவை அப்போதைக்கு இருக்கவில்லை. அதுதான் சமஷ்டிக் கட்சி அரசியலில் பெற்ற ஆதிக்கத்துக்கு ஏற்ப இலக்கியத்தில் தன் ஆதிக்கச் சாயலைப் பிரதிபலிக்க முடியாமல் போனதற்கு¡¢ய அடுத்த காரணம். இலக்கிய உலகத்தைப் பொதுப் பின்னணியிலிருந்து, அளவுபிழைத்து அளவு கெட்டுப் பிரதிபலிக்கச் செய்வதற்கு கைலாசபதிக்கு உதவிய அடுத்த காரணம் அது. புதிய இலக்கிய கூட்டு நிச்சயமாக ஒரு தரமான கருத்தைக் கொண்டு வரவே செய்தது. அதன் குறைகள் அதிகம். ஆனால், அதை எதிர்த்தவர்களின் குறைகள் அதைவிடஅதிகம். இலக்கியத்தில் கருத்துகள் அவற்றின் வன்மையின் காரணமாகவே ஒழிய எண்ணிக்கையின் காரணமாய் நிலைப்பதில்லையாதலால் 'முற்போக்கு' கூட்டின் கருத்துகள் பொதுப் பின்னணியைப் பிரதிபலிக்காத ஒரு குறுகிய வட்டக் கருத்துகளாய் இருந்தாலும் அப்போதைக்கு முற்போக்காகவே தொ¢ந்தன. கனக செந்திநாதன் போன்றவர்கள் ஆரம்பத்தில் அந்தக் கூட்டுக்குள் நுழைந்ததற்கு அதுதான் காரணம். ஈழகேசா¢ பரம்பரைக்குத் தனித்து நிற்க வலுவிருக்கவில்லை. அதற்கு இலக்கிய அறிவும் பார்வை ஆழமும் போதா. ஆதனால் பொதுப் பின்னணியின் விழிப்பைப் பயன்படுத்த அதனால் முடியவில்லை. ஆனால் அதனிடம் அதேசமயம் ஆழமான லக்கியத்தைத் தேடும் ஒரு தாகம் இருக்கவே செய்தது. எனவே அதற்கு வேறு வழி இருக்கவில்லை. அதுவும் சேர்ந்து புதிய கூட்டோடு ஆரம்பத்தில் இழுபட்டதற்கு அதுதான் காரணம். கடைசியில் 'முற்போக்கு'க் கூட்டைவிட ஆழமான, அகலமான இலக்கிய உலகைக் காட்டக் கூடியவர்கள் அப்போது இருக்கவில்லையாதலால் இலக்கியத் தலைமை அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. அது அப்போதைக்குத் தவிர்க்க முடியாதது மட்டுமல்ல, ஓரளவுக்கு நியாயமானதுங்கூட.

ஆனால் அந்தத் தலைமை ஈழத் தமிழ் இலக்கிய உலகம் முழுவதும் விரும்பியோ விரும்பாமலோ பரவிவிட்டதற்கு வேறு ஒரு காரணமும் உதவியது. அதாவது, அவர்களின் பரவலான பிரபல்யத்துக்கு¡¢ய காரணமாக வேறு ஒரு வசதியும் இருந்தது. தமிழ்நாட்டில்போல் கல்கி, ஆனந்தவிகடன், குமுதம் என்று இங்கு பத்தி¡¢கைகள் இலக்கிய உலகத்தை ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கவில்லை, இருந்திருந்தால் சமஷ்டிக் கட்சி தன் சாயலை இலக்கிய உலகத்திலும் செவ்வையாகப் பிரதிபலித்திருக்கவே செய்யும். தமிழ்நாட்டில் எந்தவகையான ஆழமான இலக்கியக் கருத்துகளும் தரமான எழுத்தாளர்களும் சாதாரண மக்களைத் தொடாமல் இருப்பதற்கு இந்தப் பத்தி¡¢கைகள் தான் காரணம். ஆனால் இங்கு, இங்குள்ள இலக்கியத்தைப் பிரதிபலிப்பதாகப் போலித்தனம் செய்து இலக்கிய உலகை ஆக்கிரமிப்பதற்கு அப்படி ஒன்று இல்லை. எனவே, புதிய கூட்டின் கருத்துகளும் எழுத்தாளர்களும் இங்கே பரவலாகத் தொ¢ய வந்தனர். அதே காரணம் புதிய கூட்டு ஒரு புதிய இலக்கியச் சர்வாதிகாரம் செய்வதற்கும் கடைசியில் சாதகமாக அமைந்துவிட்டது. அதோடு பிரசுர வசதியாலும் பிரபல்ய ஆசையாலும் பிரச்சார இழுப்பாலும் அதே சமயத்தில் ஆழமான இலக்கியக் கருத்தில் ஆசை கொண்டதினாலும் இழுபடும் வேறு பல புதிய எழுத்தாளர்களையும், வேறு பத்தி¡¢கைகளின் ஆக்கிரமிப்பு இங்கு இல்லாமல் இருந்ததினால், புதிய 'முற்போக்கு'க் கூட்டு தன்னகத்தே இலகுவில் இழுத்துக்கொண்டது. வேறு தரமான வழிகளும் வேறு தரமான பத்தி¡¢கைகளும் இருந்திருந்தால் இவர்கள் 'முற்போக்கு'க் கூட்டுக்குள் புகுந்துதான் இருப்பார்கள் என்பது நிச்சயமாக இருந்திருக்காது. சொக்கன், நந்தி, யோகநாதன் போன்றோர் அந்த ரகம். காவலூர் ராசதுரை, சில்லையூர் செல்வராசன்கூட அப்படித்தான். அப்படிச் சேர்ந்தவர்களும் எதிர் 'முற்போக்கு' யக்கம் ஒன்று அண்மையில் எழுந்தபின் உண்மையிலேயே கட்சிக் கொள்கையிலும் பற்றுடையவர்கள்போல் 'முற்போக்கு' கூட்டில் இறுக்கமாக ஒட்டிக்கொண்டனர்.

மொத்தத்தில் பொதுவிழிப்பு, சந்தர்ப்பம், சகாக்கள், வசதிகள் என்று எல்லாம் சேர்ந்து பொது விழிப்புக்கே புறம்பான, பொதுப் பின்னணியை அளவு கெட்டுப் பிரதிபலித்திருக்கும் ஒரு இலக்கியப் போக்கை ஓடவிடுவதற்குக் கைலாசபதிக்கு உதவின. கைலாசபதியின் குறைகளையும் நிறைவுகளையும் இனிப் பார்க்கும்போது அந்த இலக்கியப் போக்கின் விளைவுகளும் சேர்ந்து தொ¢யவரும்.

இன்று எழுந்துள்ள 'நற்போக்கு'க் கூடாரம் கைலாசபதியின் பெயரை முற்றாக ஒதுக்கிவிட முயல்கிறது. 'முற்போக்கு'க் கட்சி எப்படி அவரையே முழு முதல் இலக்கியக் கடவுளாக வழிபட விரும்பிற்றோ அப்படியே 'நற்போக்கு' அவா¢ன் பெயரை முற்றாக அழித்துவிட முயல்கிறது. அதனால் இரண்டும் பிழைத்து விடுகின்றன. உண்மை இரண்டிலும் இல்லை. இரண்டுக்குமிடையில்தான். கைலாசபதி கட்டாயம் நம் இலக்கியப் பார்வையை ஒரு படி உயர்த்தியேதான் இருக்கிறார். முதலில் அதை ஒப்புக்கொண்டுதான் கைலாசபதியின் செல்வாக்கைப் பற்றிய ஒரு ஆராய்ச்சி ஆரம்பமாக வேண்டும். அதன் முக்கியத்துவம் பல வகையானது. 1956க்கு முன்னிருந்த பார்வையை விட இவரோடு வந்த இலக்கியப் பார்வை ஆழமானது. நம் உடனிகழ்கால இலக்கிய வளர்ச்சிக்கு உதவ வேண்டுமானால், வெறும் பழைய இலக்கியங்களைப் பற்றிய அறிவு மட்டும் போதாது. கூடவே, உலக இலக்கியத்தைப் பற்றியும் முக்கியமாக மேற்கத்தைய இலக்கியத்தைப் பற்றியும் தொ¢ந்திருக்கும் ஓர் ஒப்பிலக்கியப் பார்வையும் தேவை என்ற உணர்வு முதன் முதலாக ஈழத் தமிழ் இலக்கியத்தில் நியாயமான அழுத்தம் பெறத் தொடங்கியது. அதனால் புதிய பார்வை ஆழமானது.

அதோடு புதிய பார்வை இலக்கியத்திடம் அதிகப் பொறுப்பை ஒப்படைத்து அதிக சேவையையும் கோ¡¢யது. நேரத்தைப் போக்குவதற்காகவும் கவலைகளிலிருந்து தப்புவதற்காகவும் எழுதப்படும் ஜனரஞ்சகமான கதைகள் அல்ல இலக்கியம். இலக்கியம் மக்களை விழிக்கச் செய்வது; சிந்திக்கச் செய்வது; அதனால் வரும் விழிப்பும் சிந்தனையும் மற்ற துறைகளில் ஒரு தொடர் விழிப்பையும் சிந்தனையையும் கிளற வேண்டும், மற்ற துறைகளில் ஏற்கனவே எழுந்துள்ள சிந்தனைக்கும் விழிப்புக்கும் உதவ வேண்டும் என்ற ஒரு பொறுப்பைப் போடும் பார்வை. அதனால் ஒரே விறாண்டலில் கல்கி, குமுதக் கதைகள் மட்டுமல்ல அதுவரை பொ¢ய எழுத்தாளர்களாகக் கருதப்பட்ட கல்கி, அகிலன் போன்றோர்களும் ஒரு மூலைக்கு ஒதுக்கப்பட்டனர். ராஜமய்யரோடு ஆரம்பமாகிய நாவல் ஊற்றையும் புதுமைப்பித்தனோடு வந்த சிறுகதை ஊற்றையும் பாரதியோடு ஓடிவந்த கவிதை ஊற்றையும் தடைசெய்து தடம் புரட்டிய அழுக்குகள் நீக்கப்பட்டன. புதிய ஓட்டத்தின் தேவை தொ¢ய வந்தது. அழுக்குக்கும் அழுக்கு அல்லாதவற்றுக்குமுள்ள வித்தியாசம் உணர்த்தப்பட்டது. இலக்கியத்தின் பொறுப்பு அதனால் கூடிவிட்டது.

அடுத்த பண்பு, அவற்றைவிட முக்கியமானது. இந்த ஆழமான அதிகப் பொறுப்பு கலந்த இலக்கியப் பார்வை வேறு நாடுகளில் இருப்பதுபோல் இங்கு மிகக் குறுகலாக இருக்கவில்லை. மேல்வட்ட, மேல்புருவக் கலைஞர்களுக்கும் ஒரு குறுகிய அறிவாளி இவர்க்கத்திற்கும் மட்டும் உ¡¢யதாக இருக்கவில்லை. ஈழத் தமிழ் இலக்கியத்துறையில் இப்பார்வை மிகப் பரவலாகப் பிரபல்யம் பெறத் தொடங்கியது. அதற்குக் காரணம் நம் சமூக, அரசியல், பொருளாதாரப் பின்னணியில் வந்து விட்டிருந்த பொது விழிப்புத்தான். ஆனால் அது மட்டுமல்ல, பின்னணியின் பொது விழிப்பிலுங்கூட அதற்கேற்ப ஆழமான இலக்கியப் பார்வை முன்பைப் போலவே ஒரு 'ஈழகேசா¢'யிடமும், ஒரு 'சுதந்திரனி'டமும் மட்டும் ஒப்படைக்கப்பட்டுக் குறுகலாகவே நின்றிருக்கலாம். முக்கியமான வாரப் பத்தி¡¢கைகளில் பழைய பிரகிருதிகள் இருந்திருந்தாலோ அல்லது இலக்கிய உலகை ஆக்கிரமித்துவிட்ட தரமற்ற வேறு இதழ்கள் இருந்திருந்தாலோ கட்டாயம் அப்படியே தான் நடந்திருக்கும். ஆனால் நல்லகாலம் அப்படி இருக்கவில்லை. அதனால் 'தினகரனு'க்கு ஆசி¡¢யராக வந்த கைலாசபதி புதிய, ஆழமான, பொறுப்பு கலந்த இலக்கியப் பார்வை ஒன்றை அல்லது கடைசி அதன் தேவையையாவது வெகு குறுகிய காலத்துக்குள்ளேயே பரவலாகப் பிரபல்யப்படுத்திவிட்டார். அது சந்தர்ப்ப விபத்துதான். ஆனால் அதனாலேயேதான் கைலாசபதியின் பங்கும் மதிப்பும் உயர்ந்து விடுகின்றன. வேறு யாராவது என்றால் அந்தச் சந்தர்ப்ப விபத்தால் வரவிருந்த பயன்களைச் சிதைத்திருக்கக் கூடும். கைலாசபதியும் பின்பு கட்சியைப் புகுத்தி அவற்றைச் சிதைத்துத்தான் விட்டார். ஆனால் புதிய ருசியைப் பரவலாகக் காட்டிய பின்புதான். அதற்குப் பின்பு அவர் பிழைத்துவிட்டபோது ஒதுக்கப்பட்டது புதிய தேவையைப் பற்றிய உணர்வல்ல. ஒதுக்கப்பட்டவர் அவரேதான். காரணம், அதற்குப் பின்பு இடத்தை நிரப்ப வேறு பலர் வந்துவிட்டனர்.

ஆனால் அது பின்பு வரவேண்டியது. இன்னும் கைலாசபதியின் முக்கியத்துவம் முடியவில்லை. அது பல வகையானது. பொதுப் பின்னணியின் விழிப்பு ஓரளவுக்குப் பழைய மான்ய முறையின் பிற்போக்குச் சாயல் கலந்தது என்று முன்பு குறிப்பிட்டிருந்தேன். சமஷ்டிக் கட்சியின் சமூக, பொருளாதாரப் பார்வையில் நிழல் வி¡¢த்து நிற்கும் சாயல் அதுதான். அது இலக்கியமாகப் பிரதிபலிக்கத் தொடங்கியிருந்தால் நம் சமூக, பொருளாதார மரபையும் அதிலுள்ள ஊழல்களையும் கண்டிக்காத (இங்கு இலக்கண மரபைக் குறிக்கவில்லை. அது பின்பு வந்த ஒன்று,) யதார்த்தப் பக்கபலம் இல்லாத லட்சியக் கதைகளும் ஜனரஞ்சகக் கதைகளும் அதிகமாக வெளிவந்திருக்கும். அவற்றுக்கும், உண்மையான தரமான இலக்கியத்துக்குமுள்ள வித்தியாசத்தைக் காட்டுவதற்குப் பழைய ஈழகேசா¢ப் பரம்பரையின் வா¡¢சுகள் அவ்வளவு உதவியிருக்க மாட்டார்கள். அவர்களே தடுமாறிப்போய் அவற்றை இலக்கியமாக ஏற்றுக்கொண்டிருப்பார். அதோடு புதிய அரசியல் விழிப்பு குழந்தைப்பிள்ளைத்தனமான பிரசாரக் கதைகளையும் இலக்கிய நிலைக்குப் பிழையாக உயர்த்தியிருக்கும். பொதுப் பின்னணியில் புதிதாகக் கிளறப்பட்ட உணர்ச்சிவசம் நிறைந்த போக்கு எல்லாவற்றுக்கும் வித்தியாசமின்றி இடமளித்திருக்கும். நல்லகாலம் அதைத்தடுத்து ஓரளவுக்கு - ஓரளவுக்குத்தான் அது கவனிக்கப்பட வேண்டும் - வித்தியாசம் காட்டியது கைலாசபதி கொண்டுவந்த இலக்கியப் பார்வையேதான்.

ஆனால் அவை எல்லாவற்றையும் விட முக்கியமானது வேறொன்று; அதுதான் விமர்சனம். இலக்கிய வளர்ச்சிக்கு விமர்சனம் அத்தியாவசியமானது என்பது கைலாசபதிக்கு முன்பும் இங்கு தொ¢ந்திருக்கலாம். ஆனால் செயலில் காட்டப்பட்டது கைலாசபதியின் வருகைக்குப் பின்னரே தான். இன்றும் நம் ஈழத்தில் தரமான விமர்சகர்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் விமர்சனத்தின் தேவையை உணர்ந்து அதைத் தேடும் ஒரு போக்கு தாராளமாகப் பிறந்துவிட்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. 'மு.வ. நாவலாசி¡¢யரா?' என்ற ஆராய்ச்சி ஈழத் தமிழிலக்கியத்தின் புதிய விழிப்பை மட்டும் பிரதிபலிக்கவில்லை, கைலாசபதியின் வருகையையுந்தான் பிரதிபலிக்கிறது. உண்மையில், அதைக் கைலாசபதி எழுதவில்லை. பின்பு வந்த அவரது பிரபல்யத்துக்கேற்ப அவர் எதையும் அவ்வளவு எழுதவில்லைதான். அந்தத் தன்மையைப் பின்பு ஆராய வேண்டும். ஆனால் இன்றுங்கூடகாவலூர் இராசதுரையின் கட்டுரைக்குப் பின்னால் கைலாசபதியைக் காணாமல் இருக்க முடியாது. அது ஒரு மரபு உடைப்பு. வழமைக்காக, மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக ஏற்றுக்கொள்ளாமல், எடைபோட்டுத்தான் இலக்கியம் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்ற பார்வை அதற்குப்பின் அழுத்தம் பெறத் தொடங்கியது. 'மெளனி வழிபாடு' அடுத்த மைல்கள். அதற்குப்பின் அந்தப் போக்கை ஆரம்பித்தவர்களே அளக்கப்படுவதற்கு, எடை போடப்படுவதற்கு நேரம் செல்ல நியாயமில்லை. 'விமர்சன விக்கிரகங்கள்','முற்போக்கு லக்கியம்' என்பவை வந்தபோது அந்தப் போக்கு ஒரு முழுவட்டம் சுற்றிவிட்டது. அதற்குப் பின் யாரையும் பெயருக்காக ஏற்றுக்கொள்ள முடியாது என்றாகிவிட்டது. தரத்துக்காகத்தான். பழைய 'மா¢யாதை' விமர்சனத்தோடும் 'விதானைமார்களின் முகஸ்துதியோடும்' ஒப்பிடும்போது புதிய போக்கின் தரத்தை அளவிடலாம். புதிய கட்டுரைகள் பொ¢ய அளவில் எதையும் சாதிக்கும் தரமற்றவையாக இருக்கலாம். ஆனால், புதிய போக்கை அவை நிச்சயமாக நிர்ணயித்துவிட்டன. தரமான விமர்சனமாக அவை இல்லாவிட்டாலும் அதற்கு முன்னோடிகளாய் அவை கட்டாயம் நின்றன. அதை ஆரம்பித்துவைத்த பங்கு கைலாசபதியினுடையது.

எனவே, கைலாசபதியின் முக்கியத்துவம் பல பக்கங்களைக் கொண்டது. அதன் முழுத் தாக்கங்கூட அப்படித்தான். முதன் முதலாக ஈழத்தில் தமிழ் எழுத்தாளன் தன்னைப் பற்றி, தன் தொழிலைப்பற்றிக் கர்வப்படமுடிந்தது. தன்னில் நம்பிக்கை வைக்க முடிந்தது. பத்தி¡¢கைகளுக்கேற்ற விதத்தில் கதைகள் எழுதவேண்டிய நிலை போய் அவனது தனித்தன்மையைப் பத்தி¡¢கைகள் வரவேற்கும் நிலை ஏற்பட்டது. தரமான கதைகள் சுதந்திரனுக்கு, ஹாஸ்ய ஜனரஞ்சகக்கதைகள் 'வீரகேசா¢'க்கு, அபாரமான, அதனால் யதார்த்தத்தில் நடைபெறாத 'ப்ளட்' கதைகள் 'தினகரனு'க்கு என்று நான் திட்டம் போட்டு எழுதிய காலம் இப்போ எனக்குச் சி¡¢ப்போடு நினைவுக்கு வருகிறது. 1956 ஐ ஒட்டிய காலம் அது. எழுத்தாளன் பத்தி¡¢கைகளால் பழுதாக்கப்பட்டகாலம் அது. ஆனால் அது கைலாசபதியின் வருகையோடு நின்றுவிட்டது. அதற்குப்பின் தன்னை உணரத் தொடங்கிய எழுத்தாளன் தன் சூழலின் முக்கியத்துவத்தையும் உணரத் தொடங்கி விட்டான். அவனது சூழலுக்கு¡¢ய பிரச்சினைகள், பேச்சு வழக்கு எல்லாம் இலக்கியத்தில் ஏற வாய்ப்பு பிறந்தது. அதுவரை நின்ற இந்திய அபிநயம் திடீரென்று வெட்கப்படுமளவுக்கு நிர்வாணமாக்கப்பட்டது. 1956க்குப் பின் ஈழத் தமிழன் தன் உ¡¢மைகளுக்காகத் தானே போராடத் தொடங்கிய நேரத்தில் இலக்கியத்திலும் தன் தனித்தன்மையைக் காட்டத் தொடங்கினான். பகீரதனும் பார்த்தசாரதியும் இங்கு வருதற்கு முன்பே நாம் அவர்களுக்குப் பதிலளிக்கத் தயாராகிவிட்டிருந்தோம். கைலாசபதி செய்த தொண்டு அது. பகீரதன் வந்தபின்தான் நாம் விழித்தோம் என்பது பிழை. நாம் அவர்களைச் சாடுவதற்குக் காத்துக் கொண்டிருந்தோம் என்பதுதான் சா¢. ஏற்கனவே சாடத் தொடங்கிவிட்டோம். 'மு.வ. நாவலாசி¡¢யரா?' என்று முதன்முதலாகக் கேட்டது நாம்தானே? அப்படி இருந்திருக்காவிட்டால் அவர்கள் இங்கு வந்து சொன்னவற்றில் எந்தத் தவறையும் கண்டிருக்க மாட்டோம். இன்றுங்கூட யாழ்ப்பாணத்தில் சிலர் அவர்களைத் தூக்கித் தலையில் வைக்கக் காத்திருப்பதுபோல் எல்லா எழுத்தாளர்களும் அன்றும் ஆமாம் போட்டிருப்பார்கள். எனவே, பகீரதன் பேசினதால் விழிப்பு ஏற்பட்டது என்பது பிழை. அவர்களை 'வரவேற்க' நாம் காத்திருந்தோம். அவர்களுக்கு எதிராக வந்த முழு எதிர்ப்பும் 'தினகரனி'ல் தான் வெளிவந்தது. எழுதியவர்களும் கைலாசபதியைச் சார்ந்தவர்களேதான். அந்தளவுக்காவது கட்டாயம் நாம் கைலாசபதிக்குத் தலை சாய்க்கத்தான் வேண்டும்.

அப்படி ஒரு தலை சாய்ப்புடன்தான் அவர் செய்த தொண்டின் அடுத்த பக்கத்தை ஆராயத் தொடங்குகிறேன். அடுத்த பக்கம் 'முற்போக்கு'க் கட்சி, 'முற்போக்கு' லக்கியம், அதோடு அவருடைய தனிப்பட்டகுறைகள். அங்கே கைவைக்கும்போதுதான் அவரது தொண்டைப் பற்றித் திருப்திப்படமுடியாது என்பது நிச்சயமாகத் தொ¢யவரும். அதோடு மேலே சொன்ன ஒவ்வொரு நிறைவும் பா¢தாபமாகச் சுருங்கிவிடும்.
 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home