"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
ம. தனபாலசிங்கம், சிட்னி. வரலாறு என்பது தன்னியக்கம் உடையதன்று. வரலாற்று மாற்றத்திற்கு தனிமனிதர்களின் குறுக் கீடு அவசியமாகின்றது. இதனால்தான் பெரும் புரட்சிகளை விடுதலைப் போராட்டங்களை சமுதாய மாற்றங்களைப்பற்றி நாம் பேசிக்கொள்ளும் போது அவற்றை முன்னின்று நகர்த்திய ஆற்றல் மிக்க ஆளுமை மிக்க தனித்துவம் மிக்க தனிமனிதர்களைப்பற்றிப் பேசிக்கொள்கிறோம். இன்றும் இங்கு அதற்காகவே கூடியிருக்கிறோம். விதியின் அடிப்படையில் வரலாற்றை காலச்சக்கரமாகக் கற்பிதம் செய்த ஒரு சமூகத்தில் பிறந்த எங்கள் தலைவர் அதை உடைத்து புதிய வரலாற்றை எழுதுகின்றார். மனிதத்தில் அபாரமான நம்பிக்கை கொண்ட தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வரலாற்றிற்கு தரும் விளக்கம் உற்று நோக்கற்பாலது. "வரலாறு என்பது மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வீக சக்தியன்று. அது மனிதனின் தலைவிதியை நிர்ணயித்துவிடும் சூத்திரப்பொருளுமன்று. வரலாறு என்பது மனித செயற்பாட்டுச் சக்தியின் வெளிப்பாடு. மனிதனே வரலாற்றைப் படைக்கின்றான். மனிதனே தனது தலைவிதியை நிர்ணயிக்கின்றான்." என செயல்மூலம் காட்டியபின் கூறுகின்றார். "You can't be neutral in a moving
train! என்னும் நூலை எழுதிய
Howard Zinn
என்னும் அமெரிக்க இதனை இந்த வெளியீட்டிலும் காண்கின்றோம். இவர்கள் சமைக்கும் எதிர்காலம் மானிடத்தின் உயர்ந்த விழுமியங்களை நோக்கிச் செல்கின்றன. கலியை வென்று கிருதயுகம் காணும் யுக புருஷனே வேலுப்பிள்ளை பிரபாகாரன். புதுவையாரின் கவிதை வரிகளில் கூறுவதாயின் "திண்ணையில் ஏறிய அட்டையைத் தட்டக்கூட
அண்ணனைக் கூப்பிட்ட தங்கைளிலிருந்து இந்த படைப்பில் நான் ஒரே ஒரு புகைப்படத்தை மாத்திரம் நேரம் கருதி என் ஆய்வுக்கு உட்கொள்கிறேன்.
கிட்டுவின் மரணம். அந்த மரணத்தால் புத்திர சோகத்தில் தவிக்கும் அவரின் தாய். அந்தத் தாயை அணைத்துக் கொள்ளும் தலைவன். பற்றிப் படரத்தவிக்கும் தாய்மை. நெஞ்சை நெருப்பாக்கி பாசத்தின் பரிணாமத்தின் கொடுமுடியைத் தொட்டு நிற்கும் அணைப்பு அந்த அணைப்பினுள் தப்பித்தவறி விழும் அந்தத் தாயின் கையொன்றை பற்றி அணைக்கும் போராளி. இன்னோரு வகையில் பார்க்கின் அணைத்துக் கொள்வது கிட்டுவின் தாயை மட்டுமல்ல. தமிழர் தேசத்தையே அணைத்து வாரிக் கொள்கிறான். அந்த அணைப்பில் தப்பியவற்றை அவர் வளர்த்த போராளி ஏந்துகிறான். அதே சமயம் அவரது பார்வை இந்தக் கொடுமையைச் செய்தவர்களைச் சுட்டு எரிப்பதைப்பாருங்கள். அந்தப்பார்வை செல்லும் பாதையில் எது வந்தாலும் மிதித்து வெல்லும் உறுதியும் அந்தக் கண்களில் பளிச்சிடுகின்றது. இது புகைப்படம் அல்ல. ஒரு ஓவியம். தியாகம், வீரம், தலைமை, போராளி மாவீரம் யாவும் கோலம் காட்டி நிற்கும் இப் புகைப்படத்தை Rembrandt என்னும் ஒல்லாந்த ஓவியனது கைகளில் மலர்ந்த ஓவியங்களுக்கு ஒப்பிடலாம் எனக்கூறி இந்த வாய்ப்பைத் தந்தவர்களுக்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன்.
|