Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Tamilnation > Tamilnation Library> Eelam Section >Prabhakaran - A Leader for All Seasons

TAMIL NATION LIBRARY: Eelam

From the Introduction
Book Review by Parasakthi Sundaralingam - பராசக்தி சுந்தரலிங்கம்

"இத்தலைவனின் சொற்களில் ஆவேசமும் உண்டு அன்பும் உண்டு. நிதானமும் உண்டு தீர்க்கதரிசனமும் உண்டு. 'உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாம்" என்று அன்று பாரதி பாடிய கவிதைக்கு இத்தலைவன் இலக்கணமாக விளங்குகிறான்..."

M.Thanapalasingham at Leader for All Seasons Book Release in Melbourne, Australia



 

From the Introduction:

The end of the Second World War spawned many liberation struggles in the Afro-Asia regions. Before the war, the European colonial powers, for administrative convenience, had amalgamated small countries and distinct regions into single administrative units t1e consideration for their racial and cultural sensitivities and histories.

In the island of Sri Lanka too, the British amalgamated the Tamil and Sinhala Kingdoms - which until then had been treated as separate entities by the earlier Portugese an Dutch rulers - into one unit. When independence was granted in 1948, they handed the administration of the whole island to the Sinhalese in Colombo.

For decades, political and peaceful campaigns by the Tamil people for the restoration of their rights were answered with discrimination, intimidation and military oppression by the Sinhaia forces. Ultimately the Tamils resorted to an armed liberation struggle. From this ultimate stand by the Tamils for their self preservation and dignity; rose the Man of Destiny, Prabhakaran.

From Visionary to Leader

Valvettithurai was a famous part of the last Jaffna Kingdom which existed from the early 131 Century to the 171 Century. It was here that Prabhakaran was born on 26`n November 1954. His parents, Veluppillai of Thirumeniyar and Parvathy, daughter of Nagalingam of Pt. Pedro, were bath from orthodox, affluent families. Veluppillai was a Lands Officer for the Sri Lankan Government. Prabhakaran was the youngest of their four children.

"I was brought up in an environment of'strict discipline, from childhood... Great store was laid by personal rectitude and discipline. My father set an example through his own personal conduct... "

His education at Chithambara College in Valvettithurai was nonedescript and he was an average student. He loved history and read avidly of the lives of great leaders like Alexander the Great and Napoleon. The Indian nationalist leaders, Subhas Chandra Bose and Bhagat Singh, were to become sources of inspiration to him. It was the norm for children of affluent families in Jaffna to continue their education in English in preparation to go abroad or to join the Government Service. However, the young Prabhakaran was different.

He became highly sensitive to the harassment and intimidation of the Tamils by the Sinhala armed forces even as a child. The 1958 anti-Tamil riots left him deeply disturbed.

"...I heard horrifying incidents of haw our people had been mercilessly and brutally put to death by Sinhala racists. Once I met a widowed mother, a friend of my family, who related to me her agonizing personal experience of this racial holocaust. A Sinhala mob attacked her house in Colombo. The rioters set f ire to the house and murdered her husband. She and her children escaped with severe burn injuries... When I heard such stories of cruelty, I felt a deep sense or sympathy and love for my people..." As told to Anita Pratap, Sunday Magazine, March 11-17 1984

The discriminatory policy of standardisation which deprived Tamils of fair university and employment opportunities angered him even as a Year 10 student. He and fellow students joined the Tamil Students Organisation (Thamil Maanavar Peravai). Instead of addressing their grievances, the Government arrested and tortured these students. This only served to fuel the indignation of the young Prabhakaran.

In 1972, at the age of 17, he gathered his colleagues and formed the resistance movement, " Tamil New Tigers ", the members coming from friends and relatives. The Movement grew into an armed Liberation movement and changed its name on 5 May 1976 to the Liberation Tigers of Tamil Eelam.

Prabhakaran stressed adherence to a strict code of conduct as the main criteria for membership into the LTTE. When asked once who were his beacons, his reply was characteristic:

"Nature is my friend, Life my philosopher and History my guide."

History is full of tales of men who rose to meet the need of the time. Here was one such Man; the time of need had come for the Tamil people for such a man. Today, to his followers he is the inspiring object of devotion and respect, their `Annai'.
To the Tamil people in the north and east of Sri Lanka and to the hundreds of thousands of Tamils flung all over the globe, he is the unquestioned Leader, simply, their `Thalaivar'."


 


  • Book Review by Parasakthi Sundaralingam - பராசக்தி சுந்தரலிங்கம்

ஒரு விடுதலை இயக்கத் தலைவனின் கதை இது. இது ஒரு வரலாறு.

பெருந்தலைவர்களின் வரலாற்று நூல்கள் பல உள்ளன. சில வரலாறுகள் சுயசரிதைகள். சில ஒருவரின் சரிதத்தை மற்றவர் எழுதியவை. இந்த வகையில் இந்த நூல் சற்றே வேறுபட்டுக் காணப்படுகிறது. இது ஒரு படத்தொகுப்பு � தனது இனத்தின் விடுதலைப் போராட்டத்தை இயக்கி வழிநடத்தும் ஒரு பெருந்தலைவனின் கதை இது. அத்தோடு போராட்டத்தின் படிப்படியான வளர்ச்சியின் வரலாறும் சேர்ந்து வருவதைப் பார்க்கிறோம். இப்படத்தொகுப்பிலே வரும் உரைகள் யாவும் அத்தலைவனின் கூற்று � அவனது வார்த்தைகள். எனவே ஒரு புறம் சுயசரிதை போலவும் மற்றொரு வகையில் வரலாறாகவும் அமைந்து விடுகிறது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தைப்பற்றிக் கூறும் நூல்கள் பல இன்று வெளிவந்துள்ளன � வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையிலே இந்த நூல் தனித்துவமானது.

படங்களே கதை சொல்கின்றன. படங்களோடு கூடிய நூல்களைப் பார்ப்பதற்கு எந்த வயதினருக்கும் எப்பொழுதுமே பிடிக்கும். பதினேழு வயதுப் பாடசாலைச் சிறுவனின் காலம் முதல்இ இன்றைய ஐம்பது வயது முதிர்ந்த ஆளுமை மிக்கஇ ஒரு இனத்தின் பெரும் தலைவனை இங்கே பார்க்கிறோம். படங்களின் பன்முகப்பட்ட தன்மைஇ கருத்து மனதிலே ஆழமாகப் பதிய உதவுகிறது. படங்களின் பக்கத்திலே உள்ள உரைகள் இத்தலைவனின் நெஞ்சிலிருந்து வரும் தீர்க்கதரிசனமுள்ள வார்த்தைகள். அந்த உரையில் காணப்படும் நேர்மையும் வீரமும் மெய் சிலிர்க்க வைக்கின்றன. தமிழ் மக்கள் மாத்திரம் இதுவரை அறிந்திருந்த வரலாற்று உண்மைகள் பல இன்று ஏனையோரும் அறியும் வகையிலே ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. ஒரு சில நிமிடங்களிலேயேஇ மிக விரைவாக�� ஒரு விடுதலைப் போராட்டத்தின் பரிணாமத்தையும் அதை வழிநடத்தும் தலைவனையும் சகலருமே இனங்கண்டு கொள்ள இந்த நூல் உதவுகிறது.

இப்படிப்பட்ட ஒரு நூலை ஒரு முக்கியமான காலகட்டத்திலே சிந்தித்து தொகுத்தளித்தவர்களுக்கு நன்றி கூற வேண்டும். இந் நூலின் வரவு காலத்தின் கட்டாயம்.

நாம் ஒரு பதினேழு வயது மாணவனின் படத்தை முதலில் பார்க்கிறோம். சாந்தமான தோற்றம். நெற்றியிலே திருநீறு. ஒரு சாதாரண தமிழ் மாணவன் இப்படித்தான் இருப்பான். இப்படியே எமது பிள்ளைகள் பலர் மனதிலே வருகிறார்கள். 33 வருட காலத்தில் இந்த சாதுவான பசுக்கள் எப்படி வேங்கைகளாக மாறினார்கள் என்பதுஇ இங்கே படங்களாக விரிகின்றன.

அடக்கி வைக்கப்பட்ட ஒரு இனம் எரிமலையாக வெடிப்பதைப் பார்க்கிறோம். தொடர்ந்து வரும் பக்கங்களிலே இந்தத் தலைவனின் வீரம் மிக்க வார்த்தைகள் - தனது மக்களின் சுதந்திர வேட்கையை�� நியாயமான போராட்டத்தை�� நியாயப்படுத்தும் இத்தலைவனின் உறுதியைக் கண்டு தமிழினமே தலை நிமிர்கிறது. 'என்னுடைய மக்கள் என்னுடைய மக்கள்" என்று வார்த்தைக்கு வார்த்தை பாசத்தோடு சொல்லுவதைப் பார்க்கிறோம்.

அந்த வார்த்தை பெரும்பான்மை சிறுபான்மை என்ற பேதத்தை ஒழித்து சமத்துவம் என்று நீதி கேட்கிறது. அரசியலிலிருந்து மாத்திரமல்ல பொருளாதார விடுதலையும் சமமாக வேண்டும் என்னும் தொலைநோக்குப் பார்வையை அந்த வார்த்தைகளிலே பார்க்கிறோம். ஏற்றத் தாழ்வில்லாத ஒரு சுதந்திரமான சமூகத்தை அமைப்பதன் அவசியத்தை வற்புறுத்துவதைக் கேட்கிறோம். 'மானிடத்தை நோக்கி நாம் பயணிக்கிறோம். இங்கே ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லை" என்று மனிதத்தின் மாண்பைச் சிறப்பிப்பதைப் பார்த்து புளகாங்கிதம் அடைகிறோம். பெண்விடுதலை பற்றிப் பேசுவோர் பலர் ஆணாதிக்கம் பற்றியே அதிகம் பேசுவார்கள். ஆனால் இங்கே ஆதிக்கம் பற்றிப் பேசும் ஒலி இல்லை. 'பெண்களைப் பற்றிய ஆண்களின் அறியாமையிலிருந்து பெண்கள் விடுதலை பெறவேண்டும்" என்ற உயர்ந்த கருத்து சிந்திக்கப்பட வேண்டியது.
(The struggle against male chauvinism is not a struggle against men but a struggle against the ignorance of man.)

இந்தமாதிரியான சிந்தனை ஆழமான தொலை நோக்கு இருப்பதாலேயே துணிச்சல் மிக்க வீராங்கனைகளை இத்தலைவனால் தமது இயக்கத்திலே வளர்த்தெடுக்க முடிந்திருக்கிறது.

'நாங்கள் சிங்கள மக்களின் எதிரிகளல்லசிங்கள அரசின் கொடுமைகளுக்கு எதிராகவே போராடுகிறோம்" என்பதை தனது ஒவ்வொரு மாவீரர் தின உரையிலும் வற்புறுத்தியிருப்பதை இந்நூல் வரிசைப்படுத்தியுள்ளது. அவர் கொண்டகொள்கையிலிருந்து மாறவில்லை. இது ஒரு சிறந்த தலைமைக்கே உரிய பண்பு.

படங்களில் குழந்தைகளை அணைத்தபடி�� மலர்ந்த முகத்துடன் நிற்கும் அந்தத் தலைவனின் கனிந்த பார்வையில் மனிதாபிமானம் தெரிகிறது.

'நான் ஏற்றுக்கொண்ட பணியை முடிக்கவேண்டும். இச்சிறுவர்கள்தான் வருங்காலத்தில் இந்த விடுதலைப் போரின் பயன்களை அனுபவிக்கவேண்டும்" என்ற வேட்கை அவ்வார்த்தைகளில் ஒலிக்கிறது.

'எங்கள் மக்களைப் பெரும்பான்மையினர் கொன்றுகுவிக்கும்போது பிறர் எம்மீது இரக்கப்படுகிறார்கள் பத்திரிகைகளிலும் வானொலிகளிலும் எழுதுகிறார்கள் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் வந்து எங்களுடைய பிரச்சனையைத் தீர்த்து வைப்பார்கள் என்று பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம். எங்களுடைய பிரச்சனையை நாங்கள்தான் தீர்க்கவேண்டும். பிரச்சனை எங்களுடையது" என்று தீர்மானமாகக் கூறுகிறார்.

'போராட்டத்தை நாங்கள் விரும்பவில்லை, சமாதானத்தையே விரும்புகிறோம். ஆனால் எங்கள் உரிமைகளை நாங்கள் போராடிப் பெறவேண்டிய நிலமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்" என்று கூறுவதைப் பல இடங்களில் பார்க்கிறோம்.

'இது ஒரு வேள்வி. இந்தத் தீயிலே எங்கள் இளைஞர் தங்கள் இன்னுயிரை ஆகுதியாக்கிவிட்டார்கள். இந்த நெருப்பு என்னுள் கனன்றுகொண்டிருக்கிறது" என்று வேதனையோடும் ஆதங்கத்தோடும் அந்தத் தலைவன் கூறும்போது நாமும் அந்தச் சோகத்தை அனுபவிக்கிறோம்.

'எந்த ஒரு இயக்கமும் மக்களின் ஆதரவின்றி வெற்றிபெற முடியாது. மக்கள் எத்தனை இன்னல்களுக்கிடையிலும் எங்களுக்குப் பக்கபலமாக இருக்கிறார்கள்." இங்கே இந்த விடுதலைப் போராட்டத்தினால் பாதிக்கப்பட்ட தனது மக்களுக்காகத் துயரப்படுவதையும் அதேவேளை தனக்கு ஆதரவு தரும் மக்களை நன்றியுடன் நினைவு கூர்வதையும் பாரக்கலாம்.

'இந்தப் புதிய சுதந்திர பூமியைக் கட்டியெழுப்பும் இளம் சமூகம்�� சுதந்திர வேட்கைகொண்ட சுயமரியாதையுள்ள�� மானங்காக்கும் வீரர்கள் மாத்திரமல்ல�� அவர்கள் விஞ்ஞான நோக்குடைய நவீன உலகச் சிற்பிகள். சமூகவியலாளரும்�� எழுத்தாளரும்�� படைப்பாளிகளும்�� கலைஞர்களும்�� எல்லோருமே சேர்ந்து இந்தப் புதிய உலகைப் படைக்க வேண்டும்" என்ற வேண்டுகோளில் 'புதியதோர் உலகம் செய்வோம்" என்ற தொலைநோக்குப் பார்வைகொண்ட ஒரு தலைவனை தரிசிக்கிறோம்.

இத்தலைவனின் சொற்களில் ஆவேசமும் உண்டு அன்பும் உண்டு. நிதானமும் உண்டு தீர்க்கதரிசனமும் உண்டு. 'உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாம்" என்று அன்று பாரதி பாடிய கவிதைக்கு இத்தலைவன் இலக்கணமாக விளங்குகிறான்.

பிரபாகரன் ஒரு தீர்க்கதரிசி ஒரு சிறந்த தலைவன் என்பதை இந்நூல் உலகோருக்கு எடுத்துரைக்கிறது.

'இயற்கையே எனது நண்பன். வாழ்க்கையே எனது தத்துவம். வரலாறே எனக்கு வழி காட்டி". இதுதான் இந்தத் தலைவனின் தாரக மந்திரம்.

விடுதலைப் போரை விடுதலை வீரர்களை உருவகித்து 'காத்தவன் கூத்து" என்று அவுஸ்திரேலியாவிலே அரங்கேறிய ஒரு கூத்து இவ்வேளை ஞாபகத்திற்கு வருகிறது. தனது மண்ணை�� தனது மக்களை�� அவர் மொழியை�� அவர் பண்பாட்டை�� அவர் மானத்தை�� மரியாதையை காத்த ஒருவனின் கதை இது.

இவன் 'காத்தவன்".

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home