"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Tamil Language & Literature > Project Madurai >Index of Etexts released by Project Madurai - Unicode & PDF > கலேவலா - பின்லாந்தின் தேசிய காவியம் - நூல் அமைப்பு, அறிமுகம், சொற்றொகுதி, விளக்கக் குறிப்புகள் > பாடல் 1 & 2 > பாடல்கள் 3-10 > பாடல்கள் 11-18 > பாடல்கள் 19-25 > பாடல்கள் 25-35 > பாடல் 36 - 50 >
கலேவலா - பின்லாந்தின் தேசிய காவியம்
பாடல் 36 - 50
தொகுப்பு: எலியாஸ் லொண்ரொத் தமிழ் மொழிபெயர்ப்பு: ஆர். சிவலிங்கம் (உதயணன்) நூல் அமைப்பும் அறிமுகமும்: டாக்டர் அஸ்கொ பார்பொலா (பேராசிரியர் - இந்திய இயல்) |
Compiled by: Elias Lonnrot Translated into Tamil by R.Sivalingam Edited with an introduction by Asko Parpola |
Etext Preparation (input) : Ms. Sarala Sandirasegarane
Etext Preparation (proof-reading) : Udhayanan
Etext Preparation (webpage) : Kumar Mallikarjunan
© Project Madurai 1999
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted
to preparation of electronic texts of tamil literary works and to
distribute them free on the Internet. Details of Project Madurai are
available at the website http://www.tamil.net/projectmadurai
You are welcome to freely distribute this file, provided this
header page is kept intact.
அடிகள் 1-154 : குல்லர்வோ போருக்கு ஆயத்தமாகித் தன்
குடும்பத்தாரிடம் விடை
பெறுகிறான். அவனுடைய தாய் மட்டும்
அவனைப் பற்றியும் அவன் எங்கே போகிறான்
என்பதைப்
பற்றியும் அவன் இருப்பானா இறப்பானா என்பதைப் பற்றியும்
எண்ணி
வருந்துகிறாள்.
அடிகள் 155-250 : குல்லர்வோ உந்தமோவின் தோட்டத்துக்கு
வந்து எல்லோரையும் வீழ்த்தி எல்லா வசிப்பிடங்களுக்கும் தீ
வைத்து
அழிக்கிறான்.
அடிகள் 251-296 : அவன் வீட்டுக்குத் திரும்பி வந்தபொழுது
வீட்டில் யாருமே இல்லாமல் வெறுமையாக இருக்கிறது.
ஆனால் அங்கே ஒரு கிழட்டுக்
கறுப்பு நாய் மட்டும் நிற்கிறது.
வேட்டையாடி வாழ்வதற்காக அந்த நாயுடன்
காட்டுக்குள்
போகிறான்.
அடிகள் 297-360 : காட்டுக்குச் செல்லும்
வழியில், முன்னொரு
நாள் தனது சகோதரியைச் சந்தித்து அவளுடன் தகாத
முறையில்
நடந்து கொண்ட இடத்துக்கு வருகிறான். அங்கே
மனச்சாட்சியின் உறுத்தலினால் தனது
வாளினாலேயே தனது
உயிரை மாய்க்கிறான்.
இறைவனே, எமக்கு என்றுமே யருளும்!
மெய்யாம் தெய்வமே, மீண்டும் தந்திடும்!
தப்பியோ எக்களம் **தாமெக் களமிட
காட்டுச் குழலும் கலந்துகீச் சொலித்திட
இந்தச் சிறிய இவ்வெளிர் வெளிகளில்
தொடர்குறும் இந்தத் தோட்ட வெளிகளில்.
பகற்போ தெல்லாம் பாடியே மகிழ்வேன்
மாலையில் மகிழ்ச்சியில் மூழ்கிக் களிப்பேன் 640
இந்தப் பகுதியில் இந்நிலங் களிலே
பின்லாந் திந்தப் பெரும்பொழில் வெளிகளில்
எழுச்சி மிகுந்துயர் இளைஞர்கள் மத்தியில்
வளர்ந்திடு தேசீய மக்களின் மத்தியில்."
பாடல் 47- சூரிய சந்திரர்
திருடப்படுதல்
அடிகள் 1-40 : வைனாமொயினனின் இசையைக் கேட்பதற்காகச் சூ¡¢யனும்
சந்திரனும் கீழிறங்கி வருகிறார்கள். வடநாட்டுத் தலைவி சூ¡¢யனையும்
சந்திரனையும் கைபற்றி ஒரு மலையில் ஒளித்து விடுகிறாள். அத்துடன்
கலேவலாவிலிருந்து நெருப்பும் அணைந்து விடுகிறது.
அடிகள் 41-82 : மாமுது மனிதன் என்று அழைக்கப்பட்ட கடவுள் விண்ணுலகத்தில்
ஏற்பட்ட ஆச்சா¢யமான இருளைக் கண்டு புதிய சூ¡¢ய சந்திரருக்காக நெருப்பை
உண்டாக்குகிறார்.
அடிகள் 83-126 : அந்த நெருப்புப் பூமியில் விழுகிறது; அதைப் பார்ப்பதற்கு
வைனாமொயினன் இல்மா¢னனுடன் செல்கிறான்.
அடிகள் 127-312 : அந்த நெருப்பு `அலுவே` ஏ¡¢யுள் விழுந்ததென்றும் அதனை
ஒருமீன் விழுங்கி விட்டது என்றும் அவர்களுக்கு காற்றின் கன்னி கூறுகிறாள்.
அடிகள் 313-364 : அந்த மீனைப் பிடிப்பதற்கு மரப்பட்டையின் தும்பினால் செய்த
வலையுடன் வைனாமொயினனும் இல்மா¢னனும் புறப்படுகின்றனர்; ஆனால் மீனைப்
பிடிக்க முடியவில்லை.
--------------------------------------------------------------------------------
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
கந்தலே யாழ்வெகு காலம் இசைத்தனன்
அதனை இசைத்தனன் அத்துடன் பாடினன்
உண்மையில் அதுமிக உளமகிழ் வளித்தது.
வளர்மதி வதிவிடம் வரைஇசைக் கேட்டது
கதிரவன் சாளரம் வரைகளிப் பமைந்தது
சந்திரன் தன்இல் தனால்வெளி வந்தது
மிலாறுவின் வளைகிளை மெல்அடி வைத்தது
இரவிதன் கோட்டையி லிருந்தெழுந் திட்டது
ஊசி(யி)லை மரமதன் உச்சிடம் கொண்டது 10
கந்தலே யாழதன் கவினிசை கேட்டிட
இசையின் பத்தை இனிதே நுகர்ந்திட.
வொவ்ஹி என்பவள் வடநிலத் தலைவி
நீக்கல் எயிறுள நீள்வட முதுபெண்
சூ¡¢ய னதனைத் தொடுகரம் பற்றினள்
சந்திரன் தனையும் தன்கைப் பிடித்தனள்
மதியை மிலாறுவின் வளைந்த கிளையினில்
கதிரை ஊசி(யி)லை கவின்மர உச்சியில்;
அவற்றை எடுத்துடன் அவள்இல் ஏகினள்
இருள்நிறை வடபால் இயைநிலத் தாங்கே. 20
தண்மதி திகழ்வதைத் தடுத்து மறைத்தனள்
ஒளிவிடும் மார்புறும் ஒருபா றையினுள்
தகிகதிர் ஒளிர்வதைத் தடுக்கப் பாடினள்
உருக்கினால் இயைந்த ஒருமலை யுள்ளே
இவ்விதம் பின்னர் இயம்பினள் அவளே:
"நீர்இங்கி ருந்து நீங்கவே வேண்டாம்
உதிக்கவும் வேண்டாம் ஒளிர்மதி, திகழ்ந்திட!
எழுந்திட வேண்டாம் இரவியே, ஒளிர்ந்திட!
விரும்பிநான் வந்துமை விடுத்தால் தவிர,
இனிநான் வந்துமை எழுப்பினால் தவிர, 30
ஒன்பது பொலிப்பா¢ யுடனே வந்து,
அவைஒரே பெண்பா¢ அ¡¢தில் ஈன்றவை."
அவள்சந் திரனை அகற்றிய பொழுது
இரவியை எடுத்து ஏகிய பொழுது
வடபுலத் திருந்த மலைக்கற் பாறையுள்
இரும்பினால் இயைந்த இருங்குன் றுள்ளே
திருடினள் உண்மையில் திகழொளி அவளே
திருடினள் வைனோத் திருவகத் தீயை;
இல்எலாம் அதனால் இழந்தன நெருப்பை
வீடுகள் அனைத்தும் வெளிச்சம் இழந்தன. 40
இரவு வந்தது இடைவிடா திருந்தது
இருள் நிறைந்தது இரவதே நீண்டது
கலேவலாப் பகுதியில் கடுமிரு ளானது
வைனோ நாட்டின் வதிவிடங் களிலே
அத்துடன் விண்ணிலும் அங்கே இருளாம்
விண்முது மனிதரும் வீற்றிருக் கும்மிடம்.
நெருப்பிலா திருப்பது நிகா¢லா இன்னல்
கனல்இலா திருப்பது கடுந்துய ரானது
மனிதர்சா தாரணர்(க்கு) மற்ற·தோர் தொல்லை
மாமுது மனிதர்க்கும் மற்றது தொல்லையே. 50
அம்முது மனிதர் அதிஉயர் தெய்வம்
விண்ணுறை அவரே வியன்பெரும் கர்த்தர்
நிலைமை அந்நியம் நேர்ந்ததாய் உணர்ந்தார்
சிந்தனை செய்தார் சீருற நினைத்தார்
மதியின்முன் வந்த மாயம· தென்ன!
கதி¡¢ன் பாதைநேர் கடும்புகார் என்ன!
திங்களும் இப்போ திகழா தமைந்ததே!
ஒண்கதிர் கூட ஒளிரா நின்றதே!
முகிலின் பாதையில் முன்அவர் நடந்தார்
விண்ணின் கரையிலும் விரைந்தே ஏகினார் 60
நீல நிறத்தில் காலுறை அணிந்து
உயர்ந்த காற்குதி ஒளிர்ந்தகா லணியில்
திங்களைக் காணத் தேடித் தி¡¢ந்தார்
இரவியை அவரும் எதிர்கொளச் சென்றார்
காய்நிலா அவரும் காணவே யில்லை
இரவியை அவரும் எதிர்கொள வில்லை.
அவ்விண்மா முதியர்தீ அறைந்தே எழுப்பினர்
வெந்தீச் சுடரை மின்னிடச் செய்தனர்
ஒளிச்சுடர் அலகுறும் ஒளிர்வாள் ஒன்றினால்
சிந்திப் பொறிஅகல் திகழ்அல கொன்றினால்; 70
ஒருவிரல் நகத்தில் ஒளிர்நெருப் பறைந்தனர்
உடலின் உறுப்பினில் ஒளிவிடச் செய்தனர்
மீமிசைச் சுவர்க்க வியனார் இடத்தில்
தாரகைக் குலத்தின் தவழ்விண் வெளியில்.
ஆமாம், அறைந்தெழுப்(ப) அனல்எழுந் ததுவாம்
நெருப்பின் பொறியினை மறைத்தே வைத்தனர்
பொன்னிலே புனைந்த பொற்பை ஒன்றிலே
வெள்ளியில் புனைந்த வெண்சிமிழ் ஒன்றிலே
பொறிதா லாட்டவோர் பூவையைக் கொண்டனர்
அதனைஆ ராட்டிட அழகுவிண் கன்னியை 80
உருவாக்கி யெடுக்கவோர் ஒளிர்புதுத் திங்களை
தோன்றவைத் திடப்புதுச் சூ¡¢ய னொன்றையே.
உயர்நீள் முகிலின் உச்சியி லிருந்தபெண்
அகல்விண் விளிம்பில் அமர்ந்தவக் கன்னி
அந்தப் பொறியை அவள்தா லாட்டினள்
அந்த ஒளியை அவள்ஆ ராட்டினள்
தங்கத் தியைந்த தனியொரு தொட்டிலில்
வெள்ளியில் இயைந்த வெண்நாண் பூட்டியே.
வெள்ளியில் இயைந்த வெண்நாண் அசைந்தது
தங்கத் தொட்டிலும் தனியா டிற்று 90
அசைந்தன முகில்கள் அதிர்ந்தது வானம்
வானக மூடியும் வளைந்தே வந்தது
தையலும் தீயைத் தாலாட் டுகையில்
அனலைப் பாவை ஆராட் டுகையில்.
தையலும் பொறியைத் தாலாட் டினளாம்
அனலைப் பாவை ஆராட் டினளாம்
கனலினை விரல்களால் காத்து வளர்த்தனள்
அதனைக் கைகளால் அணைத்து வளர்த்தனள்,
மூடமா தங்கையால் ஆடொ¢ **வீழ்ந்தது
கவன மிலாதவள் கரங்களால் கனலும் 100
காத்து வளர்த்தவள் கைகளி லிருந்து
கிளறிய பெண்ணவள் விரல்களி லிருந்து.
சுவர்க்கம் பிளந்து துவாரம் விழுந்தது
வானகம் முழுவதும் சாரளம் வந்தது
தீப்பொறிச் சுடரும் சிதறித் தெறித்தது
சென்னிறப் பொறியாய்ச் சிந்திப் பறந்தது
சீறிச் சுவர்க்கத் தூடாய்ச் சென்றது
தொடர்முகில் ஊடாய்த் துளைத்து விரைந்தது
விண்ஒன் பதுவாம் விரைந்தவற் றூடாய்
ஆறு ஒளிறும் மூடிகள் ஊடாய். 110
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"சகோதர, கொல்ல தகைஇல் மா¢ன!
புறப்படு வோம்நாம் போய்ப்பாரப் பதற்கு
புறப்பட்டுப் போவோம் போய்ப்படிப் பதற்கு
எவ்வகை நெருப்பவ் விழிந்தவந் நெருப்பு
புதுமையாய் வீழ்ந்த பொறியது எவ்வகை
மேலே இருக்கும் விண்ணிலே யிருந்து
கீழே யிருக்குமிவ் கிளர்புவி மீது
வண்ண நிலவின் வளையமாய் இருக்குமோ!
அல்லது சூ¡¢யன் அதன்சக் கரமோ! 120
இருவரும் புறப்பட் டேகினர் நாயகர்
ஏகினர் அடிவைத் தினிதுசிந் தித்தனர்
அவ்விடம் எங்ஙனம் அடையலாம் என்று
எவ்வழி அங்குபோய் இறங்கலாம் என்று
செந்தீ யேகிச் சேர்ந்தஅவ் விடத்தே
பொறியனல் வீழ்ந்து போனஅவ் விடத்தே,
அவர்களின் எதிரே ஆறொன் றடுத்தது
பெருங்கட லொன்று பெருக்கெடுத் ததுபோல்;
முதிய வைனா மொயினனு மாங்கே
படகு ஒன்றினை படைக்கத் தொடங்கினன் 130
காட்டிலே ஒன்றைக் கட்டத் துணிந்தனன்
அடுத்தவன் கொல்லன் அவன்இல் மா¢னன்
ஊசி மரத்திலே உயர்துடுப் பமைத்தனன்
தேவ தாருவில் செய்தனன் தண்டுகள்.
இப்போ தயார்நிலைக் கிருந்ததோர் தோணி
வேண்டிய துடுப்புகள், மிண்டுக் குவட்டுடன்,
தண்ணீர் மேலே தள்ளினர் தோணியை
வலித்துச் சென்றனர் வலுவிரைந் தேகினர்
சுற்றியே சென்றனர் தொடர்*நெவா நதியினை
எழில்நெவாக் கடல்முனை எல்லையை அடைந்தனர். 140
*வாயுவின் மகளவள் வனிதை இன்கன்னி
இயற்கை மகளி¡¢ல் இவள்வய துயர்ந்தவள்
அவர்களின் எதிரே அப்பெண் வந்தனள்
இவ்விதம் மொழிந்தனள் இயம்பினள் இவ்விதம்:
"மனிதா¢ல் எவ்வகை மனிதரோ நீங்கள்
ஆம்உங் களைநான் அழைப்பது எவ்விதம்?"
முதிய வைனா மொயினன் மொழிந்தான்:
"நாங்களோ இங்கே நற்கட லோடிகள்
முதிய வைனா மொயினனே நான்தான்
அடுத்தவன் கொல்லன் அரும்இல் மா¢னன்; 150
உன்னுடை இனத்தை உரைப்பாய் இப்போ
அ¡¢வையே நின்னைநாம் அழைப்பது எவ்விதம்?"
பின்வரும் சொற்களில் பேசினள் பாவையும்:
"பெண்களில் முதிர்ந்த பெண்ணும் நானே
காற்றின் மகளி¡¢ல் மூத்தவள் நானே
அன்னை யா¢ல்முதல் அன்னையும் நானே
ஐந்து மகளி¡¢ன் அம்சம் கொண்டவள்
ஆறு மணமகள் அழகு படைத்தவள்;
எங்கே பயணம் எடுத்தீர் மனிதர்காள்?
புறப்பட்ட தெங்குநீர் புகலுக வீரரே!" 160
முதிய வைனா மொயினன் மொழிந்தான்
உரைத்தான் அவனே உரைத்தான் இவ்விதம்:
"அணைந்து போனது அ¡¢யஎம் நெருப்பு
தொலைந்து போனது சுடருமெங் களலனல்
நெடுநாள் நாங்கள் நெருப்பிலா திருக்கிறோம்
இருட்டில் நாங்கள் இருக்கிறோம் மறைந்து;
இப்போ தெம்மனத் திருப்பது எதுவெனில்
அனலைப் பற்றியே அறியச் செல்வதாம்
அவ்வனல் சுவர்க்க மதிலிருந் திழிந்தது
மேகத் திருந்து வீழ்ந்தது அவ்வனல்." 170
பின்வரும் சொற்களில் பேசினள் பாவையும்
உரைத்தாள் அவளே உரைத்தாள் இவ்விதம்:
"தீகொடி ததனைத் தொ¢வது கடினம்,
அனலோ கொடியது அறிவது சிரமம்;
செய்கைகள் முன்னரே செய்தது நெருப்பு
ஆற்றிய தணலும் அனேகம் சேதம்:
சுடர்விட் டொ¢ந்தன சுடர்தீப் பொறிகள்
சென்னிறப் பந்தாய்த் திகழ்ந்துகீழ் வீழ்ந்தது
இறைவனார் படைத்த பெருவெளி யிருந்து
முதியவர் படைத்த முழுவா னிருந்து 180
மென்மையாம் சுவர்க்க வெளிப்பரப் பிருந்து
கிளர்சீர் வானைக் கிழித்துக் கொண்டே
ஒட்டடை படிந்த உயர்புகைக் குழல்வழி
வற்றிய கூரை மரத்தினைக் கடந்து
*தூ¡¢யின் புதிய தூய வதிவிடம்
வணங்குதற் கு¡¢யவன் வயங்குமில் லுள்ளே.
அங்ஙனம் அவ்விடம் அதுவந் துறுகையில்
தூ¡¢யின் புதிய தூயஇல் லுக்கு
செயல்கள் கொடிதாய்ச் செயத்தொடங் கிற்று
தீயவை அங்கே செயத்தயா ரானது: 190
ஒண்தொடி யார்மார் புடைத்துப் போட்டது
கன்னியர் மார்பின் காம்பைத் தொட்டது
பையன்கள் முழங்கால் பலவு மழிந்தது
தலைவா¢ன் தாடியை தகித்து முடித்தது.
ஒருதாய் குழந்தைக் கூட்டினள் பாலினை
துரதிர்ஷ்ட மான தொட்டில் ஒன்றிலே
வன்னெருப் பவ்விடம் வந்தே சேர்ந்ததும்
அதன் கொடுஞ்செயலை ஆற்றி முடித்தது
தொட்டிற் குழந்தையைத் துடிக்க எ¡¢த்தது
தாயின் மார்பையும் தாக்கி எ¡¢த்தது; 200
குழந்தை மரணக் கொடுமுல கடைந்தது
உண்மையில் பையன் உற்றனன் துவோனலா
இறப்பதற் கென்றவன் இயற்றப் பட்டவன்
அழிவதற் கென்றே ஆக்கப் பட்டவன்
செந்நிறத் தீயினால் சேர்ந்தமாத் துயரால்
கனலால் நேர்ந்த கடும்வா தையினால்.
ஆயினும் அன்னை அறிந்தது அதிகம்
அதனால் இறப்புல கவள்சென் றிலளாம்
தீயைத் தடுக்கத் தொ¢ந்தனள் அவளும்
அனலை அடக்கவும் அறிந்தனள் அவளே 210
தையல் ஊசியின் தன்சிறு கண்வழி
கோடா¢ முடியில் கொள்ளும் புழைவழி
உறுகொதித் திண்பனிக் **கருவியின் துளையில்
வயல் வெளிஎல்லைகள் வழியத னாலே."
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
விரைவாய் அவனும் வினவினன் இவ்விதம்:
"அங்கிருந் தெங்கே அனலும் சென்றது
பறந்தது எங்கே படர்நெருப் பின்பொறி
தூ¡¢யின் வயல்வெளி தொடுஎல் லையினால்
அடவிசென் றதுவா அல்லது கடலா?" 220
மங்கையும் இவ்விதம் மறுமொழி கூறினள்
உரைத்தாள் அவளே உரைத்தாள் இவ்விதம்:
"அவ்விட மிருந்து அனல்செல் கையிலே
நெருப்பும் விரைவாய் நேராய்ச் செல்கையில்
எ¡¢த்தது முதலில் எல்லையி லாநிலம்
அதிக நிலங்கள் அதிக சதுப்புகள்
இறுதியில் அதுவும் இருநீர்ச் சென்றது
*அலுவே ஏ¡¢யின் அலைகளுள் சென்றது
எ¡¢யும் போலது இருந்தது தீப்பிடித்(து)
தீப்பொறி பரவும் சிதறியென் றிருந்தது. 230
கோடைகா லத்து குதிர்முந் நிசிகளில்
இலையுதிர் காலத் திரவுகள் ஒன்பதில்
ஊசி(யி)லை மரத்து உயர்நுரை எழுந்தது
அதன்விளிம் புவரை அதுஇரைந் தெழுந்தது
அந்தப் பயங்கர அனலதன் தன்மையால்
கொதிக்கும் அந்தக் கொடுங்கனற் சக்தியால்.
மீன்கள் காய்ந்த வெந்தரை வீழ்ந்தன
ஒருவகை**மீன்கள் உடன்வெளி வந்தன;
அப்போ மீன்கள் அவற்றைக் கண்டன
இவ்விதம் ஓ¡¢ன மீன்கள் எண்ணின 240
எவ்விதம் இருப்பது எங்ஙனம் வாழ்வது;
ஓ¡¢ன மீன்தன் உறுகுடிற் கழுத்து
தோட்டத்துக் கழுதன துன்னுவே றினமீன்
அழுதது **வெண்மீன் அதன்கற் கோட்டைக்(கு).
வளைந்த கழுத்து **மச்சமொன் றேகிற்(று)
நெருப்புப் பொறிக்கு நேரெதிர் சென்றது
அம்மீன் நெருப்பை அடைந்திட வில்லை
அதன்பின் சென்றது அழகுநீல் **வெண்மீன்;
வெங்கன லதையும் மீன்விழுங் கிற்று
அனலின் பொறியை அம்மீன் உண்டது. 250
நீராய் மீண்டும் மாறிற் றலுவே
அதன்கரை மீண்டும் அதற்கு வந்தன
முந்திய இடத்தில் முன்போ லிருந்தன
ஓர்நாள் கோடை உறுபொழு திரவில்.
காலம் சற்றுக் கரைந்துசென் றிட்டது
உண்டமீ னுக்கு உடல்நோ வந்தது
விழுங்கிய மீற்கு மிகுந்தது துன்பம்
பொ¢தயின் றதற்குப் பொ¢யதோர் துயரம்.
நீந்தி யலைந்தது நீந்தித் தி¡¢ந்தது
நீந்திற் றொருநாள் நீந்திற் றிருநாள் 260
வெண்மீன் இடங்களில் வந்தது நீந்தி
வஞ்சர மீனின் வளைகளின் நடுவே
காண்ஆ யிரங்கூர்க் கடல்முனை கடந்து
நூறுதீவுகள் நுழைந்தடிச் சென்று;
ஒவ்வொரு கடல்முனை உரைத்தது அறிவுரை
தீவொவ் வொன்றும் செய்தியைச் சொன்னது:
'அமைதியாம் இந்த அகல்நீ¡¢ லில்லை
இன்னலார் அலுவேயில் எதுவுமே யில்லை
இழிந்த இம்மீனை விழுங்குவ தற்கு
துயருற்ற மீனைத் தொட்டுவீழ்த் துதற்கு 270
எ¡¢யும் நெருப்பினால் இடர்படு மீனை
அனலால் இன்னல் அடைந்த மீனினை.'
கேட்டதிச் செய்தி கிளர்வெளு வஞ்சிரம்
விழுங்கிற் றுவது வெண்ணீல் மீனினை
காலம் சற்றுக் கரைந்துசென் றிட்டது
உண்டமீ னுக் குடல்நோ வந்தது
விழுங்கிய மீற்கு வெந்துயர் வந்தது
பொ¢தயின் றதற்குப் பொ¢யதோர் துயரம்.
நீந்தி அலைந்தது நீந்தித் தி¡¢ந்தது
நீந்தற் றொருநாள் நீந்திற் றிருநாள் 280
வஞ்சிர மீனின் வளைகளின் நடுவே
கோலாச்சி மீனின் கொழுந்தோட் டவெளி
காண்ஆ யிரங்கூர்க் கடல்முனை கடந்து
நூறு தீவுகள் நுழைந்தடிச் சென்று;
ஒவ்வொரு கடல்முனை உரைத்தது அறிவுரை
தீவொவ் வொன்றும் செய்தியைச் சொன்னது:
'அமைதியாம் இந்த அகல்நீ¡¢ லில்லை
இன்னலார் அலுவேயில் எதுவுமே யில்லை
இழிந்த இம்மீனை விழுங்குவ தற்கு
துயருற்ற மீனைத் தொட்டுவீழ்த் துதற்கு 290
எ¡¢யும் நெருப்பினால் இடர்படு மீனை
அனலால் இன்னல் அடைந்த மீனினை.'
நரைக்கோ லாச்சியந் நளிர்வழி வந்தது
விழுங்கிற் றுவது வெளுறுவஞ் சிரத்தை
காலம் சற்றுக் கரைந்து சென்றிட்டது
உண்டமீ னுக்கு உடல்நோ வந்தது
விழுங்கிய மீற்கு வெந்துயர் வந்தது
பொ¢தயின் றதற்குப் பொ¢யதோர் துயரம்.
நீந்தி அலைந்தது நீந்தித் தி¡¢ந்தது
நீந்திற் றொருநாள் நீந்திற் றிருநாள் 300
பலகடற் புள்ளுறை பாறைகள் நடுவே
கடற்பற வைகளின் கற்குவைப் பக்கம்
காண்ஆ யிரங்கூர்க் கடல்முனை கடந்து
நூறு தீவுகள் நுழைந்தடிச் சென்று;
ஒவ்வொரு கடல்முனை உரைத்தது அறிவுரை
தீவொவ் வொன்றும் செய்தியைச் சொன்னது:
'அமைதியாம் இந்த அகல்நீ¡¢ லில்லை
இன்னலார் அலுவேயில் எதுவுமே யில்லை
இழிந்த இம்மீனை விழுங்குவ தற்கு
துயருற்ற மீனைத் தொட்டுவீழ்த் துதற்கு 310
எ¡¢யும் நெருப்பினால் இடர்படு மீனை
அனலால் இன்னல் அடைந்த மீனினை.' "
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
அடுத்தவன் கொல்லன் அவன்இல் மா¢னன்
மரவு¡¢த் தும்பில் வலையொன் றியற்றினர்
திகழ்சூ ரைச்செடி சேர்த்துச் செய்தனர்
தகுமல ¡¢ப்புனற் சாயம் தோய்த்தனர்
மிகுமல ¡¢மர வு¡¢யிற் செய்தனர்.
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
வலைவே லைக்கு வைத்தனன் பெண்களை 320
வலையின் பக்கமாய் மகளிரை அனுப்பினன்
ஏகினர் வலையை இழுக்கச் சோதா¢(கள்)
அவர்கள் இழுத்தனர் அவர்கள் அசைத்தனர்
தீவதன் பக்கம் செறிகடல் முனைத்திசை
வஞ்சிர மீனின் வலைகளின் நடுவே
வெண்மீன் வாழும் வியன் தீ வருகே
பழுப்புப் புல்வளர் படுக்கைகள் பக்கம்
மிகுமெழில் நாணல் மேடையின் பக்கம்.
அவர்கள் முயன்றனர் அவர்கள் பிடித்தனர்
அவர்கள் இழுத்தனர் அவர்கள் இயங்கினர் 330
தலைகீ ழாக வலையைப் புரட்டினர்
வலையை இழுத்தனர் பிழையாம் பக்கம்
அவர்களம் மீனினை அங்கே பெற்றிலர்
எதுவும் அகப்பட வில்லையம் முயற்சியில்.
நின்ற சகோதரர் நீ¡¢ல் இறங்கினர்
மனிதர்கள் சென்றனர் வலையின் பக்கமாய்
வலையை அலம்பினர் வலையால் பிடித்தனர்
அவர்கள் இழுத்தனர் அவர்கள் வீசினர்
கற்பாறை உச்சியில் கடற்குடா வாயிலில்
கலேவாப் பகுதியின் கற்குன் றதனில். 340
அவர்க