Home >
Tamil Language & Literature >
Project Madurai
>Index
of Etexts released by Project Madurai - Unicode & PDF >
கலேவலா - பின்லாந்தின் தேசிய காவியம் - நூல் அமைப்பு, அறிமுகம், சொற்றொகுதி,
விளக்கக் குறிப்புகள்
> பாடல் 1 & 2 >
பாடல்கள் 3-10
> பாடல்கள் 11-18 >
பாடல்கள் 19-25
> பாடல்கள் 25-35 >
பாடல் 36 - 50 >
Kalevala - A Finland Epic
verses 25-35கலேவலா - பின்லாந்தின் தேசிய காவியம்
பாடல்கள்
25-35
தொகுப்பு: எலியாஸ் லொண்ரொத் தமிழ் மொழிபெயர்ப்பு: ஆர். சிவலிங்கம்
(உதயணன்) நூல் அமைப்பும் அறிமுகமும்: டாக்டர் அஸ்கொ பார்பொலா (பேராசிரியர் -
இந்திய இயல்) |
Compiled by: Elias Lonnrot Translated into Tamil by R.Sivalingam
Edited with an introduction by Asko Parpola
|
|
Etext Preparation (input) : Ms. Sarala Sandirasegarane
Etext Preparation
(proof-reading) : Udhayanan
Etext Preparation (webpage) : Kumar Mallikarjunan
C: Project Madurai 1999
Project Madurai is an open, voluntary, worldwide
initiative devoted
to preparation of electronic texts of tamil literary works
and to
distribute them free on the Internet. Details of Project Madurai are
available at the website http://www.tamil.net/projectmadurai
You are
welcome to freely distribute this file, provided this
header page is kept
intact.
பாடல் 25 - மணமகனும் மணமகளும் வீட்டில் வரவேற்கப்படுதல்அடிகள் 1 - 382 :
மணமகனையும் மணமகளையும் அவர்களுடன் சேர்ந்து வந்தவர்களையும் இல்மரினனின் வீட்டில்
வரவேற்றல்.
அடிகள் 383 - 672 : கூட்டத்தினரைச் சிறப்பாக உபசரித்து உணவும்
பானமும் வழங்குதல்; தலைவன், தலைவி, விருந்து நிகழ்ச்சியின் தலைவன், மணமகளின் தோழி,
விவாகத்தில் கலந்து கொண்டோ ர் ஆகியோரைப் புகழ்ந்து வைனாமொயினன் பாடுகிறான்.
அடிகள் 673 - 738 : விவாகத்தில் கலந்துவிட்டுத் திரும்பும்போது வைனாமொயினனின்
சறுக்கு வண்டி உடைகிறது; அதைத் திருத்திக் கொண்டு அவன் வீடு திரும்புகிறான்.
காத்தே யிருந்தனர் கனநீள் நேரமாய்
காத்தே யிருந்தெதிர் பார்த்தே யிருந்தனர்
பாவையோ டிணைந்த பரிவ()ர வரவை
கொல்லன்இல் மரினனின் இல்லம தற்கு:
முதியவர்
விழிகள் அருவிகள் ஆகின
சாளரத் தருகே தரித்தவ ரிருந்தால்,
இளைஞரின் முழங்கால்
இறங்கிப் பணிந்தன
வாயி லவரெதிர் பார்த்தே யிருந்ததால்,
குழந்தைகள்
கால்கள் குளிரில் விறைத்தன
சுவரின் அருகில் அவர்கள்நின் றிருந்ததால்,
10
காண்நடு வயதினர் காலணி சிதைந்தன
நீர்க்கரை யதிலே நெடிதலைந் திட்டதால்.
அடுத்தடுத் தணைந்த தினத்திலோர் காலை
அடுத்தடுத் தணைந்த தினத்திலோர் பகலில்
மரக்காட் டிருந்து வந்ததோர் சத்தம்
வண்டியின் ஓசை வந்தது புல்வெளி.
கவின்*லொக் காவெனும் கருணைத் தலைவி
கலேவா மகளெனும் அழகார் மனையாள்
உரைத்தாள்
ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"மகனின் சறுக்கு வண்டியே அதுதான்
20
வடநா டிருந்து வருகிறா னென்மகன்
தன்இள மனையாம் பெண்ணவ ளுடனே.
இந்நாடு நோக்கி இப்போ(து) வருகிறான்
இத்தோட் டத்து எழில்வெளி நோக்கி
தந்தையார் அமைத்த தனிவசிப் பிடத்தே
பெற்றவர் கட்டிய பெருவாழ் விடத்தே."
அந்தக் கொல்லன் அவ்வில் மரினன்
விரைந்தே வந்து வீட்டினை யடைந்தான்
தந்தையார்
அமைத்த தனிவசிப் பிடத்தை
பெற்றவர் கட்டிய பெருவாழ் விடத்தை; 30
வனக்கோழி
வடிவ மணிகள் ஒலித்தன
இளமரத் தியைந்த ஏர்க்கால் தம்மிலே,
இன்குயில் வடிவில்
இசைத்தன மணிகள்
மின்னும் வண்டியின் முன்னணி யத்தில்,
செதுக்கிய அணில்கள்
திரிந்தன துள்ளி
**'மாப்பிள்' மரத்து வண்டியின் நுகத்தில்.
கவின்லொக்
காவெனும் கருணைத் தலைவி
கலேவா மகளெனும் அழகார் மனையாள்
இந்தச் சொற்களில்
இயம்பினள் அவளே
இயம்பினள் அவளே இயம்பினள் இவ்விதம்: 40
"ஊர்காத்
திருந்தது ஒளிர்புது மதிக்கு
இளையோர் சூரிய உதய மதற்கு
பிள்ளைகள் **சிறுபழச்
செடியார் தரைக்கு
நீர்காத் திருந்தது கீல்பட குக்கு;
அரைச்சந் திரற்கும்
அதைநான் காத்திலேன்
அல்லது பானுவை அறவெதிர் பார்த்திலேன்
எனதுசோ தரனை
எதிர்பார்த் திருந்தேன்
எனதுசோ தரனையும் என்மரு மகளையும்
காலையில் பார்த்தேன்
மாலையில் பார்த்தேன்
எப்படி மறைந்தான் என்பதை யறியேன், 50
வளர்சிறு பிள்ளையை வளர்க்கின் றானா
அல்லது மெலிந்ததைக் கொழுப்பாக் குவனா
எப்படியும் அவன் இங்குமீ ளாததால்
அவனும் உண்மையாய் அளித்துவாக் ககன்றான்
காண்அடிச் சுவடுகள் கலையுமுன் வருவதாய்
குளிர்ந்த சுவடுகள் அழியுமுன் வருவதாய்.
எப்போதும் காலையில் இருந்தேன் வழிபார்த்(து)
பலநாள் நெஞ்சில் நினைவா யிருந்தேன்
சகோதரன் வண்டி தான்உரு ளாததால்
சகோதரன் வண்டி தான்ஒலிக் காததால் 60
இந்தச்
சிறிய முன்றிலின் பரப்பில்
இந்தத் தோட்டத் தியைகுறு வெளியில்;
வைக்கோல்
ஆனதோர் வனப்பரி இருப்பினும்
வலியஈர்ச் சட்ட வண்டியா யிடினும்
ஒருவண்டி யென்றே
உரைப்பன்நான் அதையும்
சறுக்குவண் டியெனச் சாற்றுவேன் உயர்வாய்
என்சோ தரனையஃ
திங்கு கொணருமேல்
என்அழ கனையஃ தில்லம் கொணருமேல்.
எதிர்பார்த் திருந்தேன்
எல்லாக் காலமும்
பகற்பொழு தெல்லாம் பார்த்துநா னிருந்தேன் 70
எதிர்பார்த் திருந்தேன் என்தலை சாய்வரை
தளர்குழற் குடுமி சரிந்து விழும்வரை
நேர்பார் வைவிழி சோர்வாம் வரையும்
என்சகோ தரன்வரு மெனநம் புகிறேன்
இச்சிறு
முற்ற எழிற்பரப் புக்கு
இத்தோட் டத்து இயல்குறு வெளிக்கு;
இங்குவந் தவனும்
இறுதியில் சேர்ந்தான்
இறுதியில் ஒருதரம் இதைச்செய் திட்டான்
செந்நிற
முகத்தாள் சேர்ந்தரு குள்ளாள்
சிவந்தகன் னத்தாள் திகழ்ந்தரு குள்ளாள்.
80
மாப்பிள்ளை யாரே, மதிப்புள சோதர!
நுதற்சு(ட்)டிப் புரவியை இதம்செ(ல்)ல
விடுவீர்
நல்லினப் பரியதைச் செல்லவிட் டிடுவீர்
பழக்கம் அதற்குள பதவைக் ோற்கு
தகுமதன் வழக்குடைத் **தானியத் துக்கு;
பொருந்தடுத் தெமக்கு விருந்தொன் றளிப்பீர்
ஏனையோர்க் களியும் எமக்கும் தாரும்
அனைத்துக் கிராமத் தவர்க்கும் தாரும்.
விருந்தெலாம் தந்து விரைந்து முடிந்தபின்
உரைப்பீர் எங்களுக் குமது கதைகளை
90
பகர்வதற் கொன்றிலாப் பயணம் முடிந்ததா
நலமாய்ச் சுகமாய் நடந்ததா
வழிச்செலல்?
மாமியார் அவளிடம் போய்ச்சேர் கையிலே,
விரிபுகழ் மாமனார் வீடடை
கையிலே?
அரிவையை யடைந்திரா? ஆட்சியைப் பிடித்திரா?
போர்க்குவந் தவரைப்
புறம்கண் டீரா?
பலகைக் கோட்டையைப் பணிய வைத்தீரா?
எதிர்எழும் சுவரை
இடித்துவீழ்த் தினீரா?
மாமியார் இடத்தடி வைத்தேகி னீரா?
எசமானன் இடத்தில்நீர்
இருந்துகொண் டீரா? 100
இல்லாது வினாவல் இப்போ(து) பார்க்கிறேன்
உசாவல் இன்றியே உளத்தில் உணர்கிறேன்
நலமாய்ச் சுகமாய் நடந்தது வழிச்செலல்
சிறப்பாய் இனிப்பாய் செலவவர்க் கானது
பெற்றனர் வாத்துப் பிடித்தனர் ஆட்சி
போர்க்குவந் தவரைப் புறம்கண் டிட்டார்
பலகைக் கோட்டையைப் பணியவும் வைத்தார்
**பலகைச் சுவரைப் படியில் விழுத்தினார்
மாமியா ரிடத்தினிலே மகிழ்ந்திருக் கையிலே
இணையிலா மாமனார் இல்லத் திருக்கையில்; 110
பொன்னாம் வாத்துப்
போந்தரு கிருந்தாள்
கோழிகக் கத்துக் கொள்அணைப் பிருந்தாள்
அருகிலே தூய
அரிவையு மிருந்தாள்
அவனுடை ஆட்சியில் அமர்ந்தள்வெண் ணிறத்தாள்.
இப்பொ(ய்)யை இங்கு எவர்எடுத் தடுத்தார்?
கொடிய செய்தியைக் கொணர்ந்ததா ரப்பா?
மாப்பி(ள்)ளை வெறுங்கையாய் வருகிறார் என்று,
பொலிப்பரி அங்கே போனது வீணென?
மாப்பி(ள்)ளை வெறுங்கையாய் வரவி(ல்)லை யிங்கு
பொலிப்பரி அங்கே போந்தில துவீண்:
120
ஏதோஇருக் கிறது இழுத்துவ ரப்பரி
**'சணற்சடை' அசைவில் தரித்துள தர்த்தம்
ஏனெனில் வியர்த்து இருக்கிற து(நற்)பரி
நுரைத்துநிற் கிறது தரப்பரிக் குட்டி
**அளகுக் குஞ்சையிங் கழைத்துவந் ததனால்
இரத்த நிறத்தளை இழுத்துவந் ததனால்.
இப்போது வண்டியி லிருந்தெழு, அழகே!
தரமிகு பரிசே, சறுக்குவண் டியிலிருந்(து)!
நீயாய் எழுவாய் நினைக்கரம் தொடாமல்
எழுவாய் உதவிநீ இல்லா தெதுவும்
130
இளங்கண வன்உனை ஏந்திட வரலாம்
இரும்சிறப் புன்னவன் எழுப்பிட வரலாம்.
சறுக்குவண் டியின்மேல் தான்நீ யெழுந்து
வியன்புற வழியாய் வெளியே றுகையில்
பழுப்பு நிறத்துப் பாதையில் அடிவை
ஈரல் நிறத்துப் பூமியில் கால்வை
பன்றியின்
நடையால் மென்மையாம் தரையில்
பன்றிக் கணங்கள் பதம்மிதி பூமியில்
ஆட்டுக்
குழுதிரிந் தமைந்தமென் நிலத்தில்
திகழ்பரிப் பிடர்மயிர் தேய்படு பூமியில்.
140
தாரா அடிபோல் தரைமிசை அடிவை
வாத்தின் பதம்போல் வைப்பாய் வெளிகால்
முழுமையாய்க் கழுவிய முற்றப் பரப்பிலே
மட்டமாய்ப் பரந்தஇவ் வன்னமாம் நிலத்தில்
மாமனார் செய்தவிவ் வன்முற்றப் பரப்பிலே
மாமியார் படைத்தே வைத்தஇவ் விடங்களில்
சகோதரன் செதுக்கிய தன்தொழில் தலத்திலே
சகோதரி நீலத் தண்பசும் புல்நிலம்;
பாதம் மெதுவாய்ப் படிமிசை வைப்பாய்
மண்டபப் பலகைக்(கு) மாற்றுவாய் அதைப்பின்
150
மண்டபத் தூடே மற்றுநீ மேற்செல்
அங்கிருந் துள்ளே அதன்பின் இடம்பெயர்
புகழ்பெறும் கூரைப் புணர்தம் பக்கீழ்
இல்லத் தழகாய் இயைகூ ரையின்கீழ்.
இப்போது நிகழும் இகல்குளிர்க் காலம்
நிகழ்ந்து முடிந்த நேர்கோடை நாட்கள்
தாரா
எலும்பால் தரையெலாம் மிசைத்தது
ஆரேனும் வந்தவ் வகல்தரை நிற்க,
ஒலித்தது
பொன்இயை பொலிமனைக் கூரை
யாரேனும் வந்து நடப்பதற் கதன்கீழ், 160
சாளரம் யாவுமே தனிமகிழ் வுற்றன
ஆரேனும் வந்து அமர்வதற் கவற்றில்.
இப்போது
நிகழும் இகல்குளிர்க் காலம்
நிகழ்ந்து முடிந்த நேர்கோடை நாட்கள்
கதவில்
கிறீச்சென கைப்பிடி ஒலித்தது
மோதிரக் கையினால் மூடப் படற்கு,
களஞ்சியக்
கூடத்தும் கனவொலி எழுந்தது
சிறந்தமே லங்கி திகழழ **காட்கு,
என்றும் கதவுகள்
இருந்தன திறந்தே
வருபவர் திறந்திட, வரவெதிர் பார்த்தே! 170
இப்போது நிகழும் இகல்குளிர்க் காலம்
நிகழ்ந்து முடிந்த நேர்கோடை நாட்கள்
சுழல்காற்று இவ்வறை சுழன்றுவீ சியது
யாரேனும் வந்தே நனிதுகள் துடைக்க,
கூடம்
இடமொதுக்கி ஆயத்தம் கொண்டது
யாரேனும் வந்து நேரிற்சுத் தம்செய,
புத்தில்லக்
குடில் புலம்பித் தவித்தன
யாரேனும் வந்தே நன்றாய்ப் பெருக்கிட.
இப்போது
நிகழும் இகல்குளிர்க் காலம்
நிகழ்ந்து முடிந்த நேர்கோடை நாட்கள் 180
மறைவாய் முன்றில்கள் மாறிவந் தனவிடம்
யாரேனும் வந்து நனிதுகள் பொறுக்கிட,
மாடங்கள் தாமாய் வந்தன கீழே
யாரேனும் வந்து நனியுள் நுழைய,
உயர்வளை வளைந்தது
உத்தரம் பதிந்தது
இளம்மனை ஒருத்தியின் எழில்உடை களுக்கு.
இப்போது நிகழும்
இகல்குளிர்க் காலம்
நிகழ்ந்து முடிந்த நேர்கோடை நாட்கள்
ஒழுங்கைசந் தெல்லாம்
ஒலிசெய் தழைத்தன
யாரேனும் வந்து நடந்திடத் தம்மேல், 190
மாட்டுத் தொழுவுகள் வந்தன நெருங்கி
யாரேனும் வந்து நற்சுத் தம்செய,
களஞ்சிய
முற்றம் நகர்ந்து பின்போனது
வாத்தொன்று வந்து ஆற்றிடஅதில் தொழில்.
இன்றைக் கிங்கே இப்பகற் பொழுதில்
நேற்றும்அத் தோடு நேற்று முழுவதும்
வேளைகத்
தியது வியன்பசு மாடு
காலையூண் கொடுப்போர் களைஎதிர் பார்த்து,
குதிரையின்
குட்டிகள் குரல்கொடு கனைத்தன
யாரேனும் வந்து வீசிட வைக்கோல்,
200
வசந்தத்து ஆடு வலிதுகத் தியது
எதிர்பார்த்து மென்மேல் இரைவைப் போரை.
இன்றைக் கிங்கே இப்பகற் பொழுதில்
நேற்றும்அத் தோடு நேற்று முழுவதும்
அமர்ந்தனர் சாளரத் தனைத்து முதியரும்
காண்பிள் ளைகள்நீர்க் கரைகளில் திரிந்தனர்
அரிவைய ரோசுவர் அருகினில் நின்றனர்
நின்றனர் பையன்கள் நெடுங்கடை வாயிலில்
வருமிளம் மனைவியின் வரவினை நோக்கி
மணப்பெண் ஒருத்தியை மகிழ்ந்தெதிர் பார்த்து.
210
இப்போ(து) முன்றிலில் இருப்போர்(க்கு) வாழ்த்துக்கள்!
வெளியில்
நிற்கும் வீரர்கள் யா(வ)ர்க்கும்!
உனக்கும் குடிசையே, உளோர்க்கும்
வாழ்த்துக்கள்!
குடிற்கும், தங்கிக் கொண்டஅன் னியர்க்கும்!
கூடமே, உனக்கும்நீ
கொண்டுளோர் தமக்கும்!
மிலாறுரிக் கூரை(க்கும்), மிகக்கீ ழுளோர்க்கும்!
மாடமே,
உனக்குமுள் வாழ்வோர்(க்கும்) வாழ்த்துக்கள்!
பலகைநூ றி(ல்லிற்கும்,
படிந்துளசிறார்க்கும்!
வான்நிலா வாழ்த்துக்கள், மன்னனே வாழ்த்துக்கள்!
இளையநற் பரிவ()ரம் எல்லோர்க்கும் வாழ்த்துக்கள் 220
ஒருபோ
தும்முன் இருந்தில திங்கே
இருந்தில முன்னும் இருந்தில நேற்றும்
இவ்வித
மொருகுழாம் இங்கிருப் பவர்போல்
எழிலுறும் மனிதர்கள் இங்கிருப் பவர்போல்.
மாப்பிள்ளை யாரே, மதிப்புள சோதர!
சிவப்புச் சிறுதுணி அவிழ்த்துப் போடுக
பட்டு
முகத்திரை அப்பால் நீக்குக
கிளருமும் அன்புடைக் **கீரியைக் காட்டுக
காத்திருந் தீர்இதற் காயைந் தாண்டுகள்
எட்டாண்டு விரும்பி எதிர்பார்த்
திருந்தீர். 230
நீர்முயன் றிருந்தபொற் காரிகை
கொணர்ந்திரா?
குயிலாள் ஒருத்தியைக் கொணர முயன்றிரே!
நீள்புவி வெள்ளை
நிறத்தளைத் தெரிந்திரே!
சிவந்தகன் னத்தளை புனற்பெற இருந்திரே!
எவ்வினா
வும்மிலா திப்போ பார்க்கிறேன்
கேள்வியே யிலாது கிளர்மனத் துணர்கிறேன்
குயிலாள் ஒருத்தியை கொணர்ந்தீர் உம்முடன்
நீலநல் தாரா நிதமும் காப்பினில்
உச்சியில் தளிர்த்தநற் புத்தம் புதுத்தளிர்
பலபசுந் தளிரதில் ஒரேயிளம் தளிரதை
240
சிறுபழச் **செடியிலே மிகப்புதுத் தழையதை
பலபுதுச் செடிகளில் ஒருபுதுச்
**செடியதை."
அங்கொரு பிள்ளை அகல்தரை யிருந்தது
தரையிலே யிருந்தஅப்
பிள்ளைசாற் றியது:
"இழுத்துவந்(த) தென்னநீ இனியஓ, சோதர!
அழகில்கீல் பூசிய
அடிமரக் கட்டையாம்
தார்ப்பீப்(பா) பாதியதாம் சரிநீ ளத்தினில்
நூனாழி அளவாம்
நுதலிய உயரம்.
அப்படி யப்படி அப்பாவி மாப்பிளாய்
இதைக்காத் திருந்தீர்
இந்நாள் முழுதும் 250
தெரிவேன் நூறுபெண் சமன்என் றீரே
கொணர்வேன் ஆயிரத்
தொருத்தி யென்றீரே;
நூறிலே நல்லளாய் நுவலஒன் றடைந்தீர்
அவலட் சணம்சமம் ஆயிரம்
பெற்றீர்
காண்சதுப் புநிலக் **காகம் போலவும்
வேலியி லிருந்திடும்
வெறும்**புள் போலவும்
வயல்களில் வைத்திடும் வெருளியைப் போலவும்
தருசி
நிலக்கரிக் குருவியைப் போலவும்.
இத்தனை நாட்களும் என்னசெய் தாளவள்
கடந்தகோ டையிலே நடந்தது தானெது? 260
வன்னக்கை யுறையெதும் பின்னா
திருந்திடில்
தூயகா லுறையெதும் தொடங்கா திருந்திடில்.
வெறுங்கையை வீசியே வீடு
வருகிறாள்
நவில்மாமன் **இற்கு நற்பரி சின்றியே
அவள்கூடைச் சுண்டெலி சலசலத்
தோடுதாம்
**'பெருஞ்செவி' பெட்டியுள் பரபரத் தோடுதாம்."
கவின்லொக்
காவெனும் கருணைத் தலைவி
கலேவா மகளெனும் அழகிய மனையாள்
அதிசய மாம்இக் கதையது
கேட்டு
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்: 270
"என்னநீ
சொன்னாய்? ஈனப் பிள்ளையே!
பிதற்றிய தென்ன? பதரெனும் பிறப்பே!
அறியலாம் பிறரது
அதிசயச் செய்தி
இகழ்வுறும் செய்தியும் எங்கும் பரவலாம்
எனினுமொன் றரிவையாம்
இவள்சார் பில்லையே
பகர்இவ்வில் வாழ்பவர் பற்றியும் இல்லையே.
தீயதோர்
வார்த்தையை செப்பினாய் இப்போ(து)
வார்த்தையும் இப்போ(தே) வந்தது கொடியதாய்
ஒருநிசி வயதுறும் ஒருகன் றின்வாய்
ஒருபகல் வயதுறும் ஒருகுட் டியின்தலை;
280
மாப்பிள்ளை பெற்றது வன்னநல் நங்கையே
நனி**விழு நாட்டினால் கொணரப் பட்டவள்
பாதியே பழுத்த **சிறுபழம் போன்றவள்
ஒருகுன் றுதித்த **சிறுபழம் அனையவள்
அல்லது மரத்திலே அமர்ந்துள குயிலவள்
**பேரியில் தங்கிடும் ஒருசிறு புள்ளவள்
மிலாறுவின் எழிலுறும் வியன்சிறைப் பறவையாம்
'மாப்பிள்' மரத்தமர் ஒளிர்மார்
புடையவள்.
ஜெர்மனி நாட்டிலும் எவரும் பெறவொணா
எஸ்தோனி யாவுக்
கப்பால்(உம்) பெறவொணா 290
இந்த அரிவையின் இத்தனை அழகையும்
இந்த
வாத்ததின் இனிமையின் தன்மையை
இந்த வதனத்து இதுபோல் எழிலினை
இந்தத்
தோற்றத்தில் தெரிகின்ற மகிமையை
இந்தக் கரங்களில் இருக்கும் வெண்மையை
மென்மைக்
கழுத்தில் வியப்பமை வளைவினை.
அத்துடன் வெறுங்கையாய் அரிவையும் வந்திலள்
கம்பளித் துணிகள் நம்புவிக் கொணர்ந்தவை
மேலங்கி வகைகளும் மிக்கன அவற்றுடன்
அகல்விரிப் புகளும் மிகச்சுமந் துற்றனள். 300
பெண்ணுக்கு இங்கே
திண்ணமாய் நிறைந்துள
சொந்தத் தறியின் தொழிலாம் பொருட்களும்
சொந்தராட்
டினத்தில் விந்தைநெய் துணிகளும்
சொந்த விரல்நுனித் தோன்றிய வகைகளும்
வெள்ளை
நிறத்தில் மிகுவகை ஆடைகள்
குளிர்கா லத்தில் கழுவிய உடைகளும்
வசந்த வெய்யிலில்
வைத்துலர் துணிகள்
கோடை நிலவிலே காய்ந்தது முள்ளன:
நலமார் விரிப்புகள் சலசலத்
தசையும்
தடித்த தலையணை பிடித்தநல் மென்மை 310
பட்டுத் துணிகள்
பளபளத் தாடும்
கம்பளி யாடைகள் பைம்பொனா யொளிரும்.
நல்ல நங்கையே, நவிலெழி
லணங்கே!
அழகிய செந்நிற அரிவையே, கேளாய்!
இல்லில்நீ நிறைவாய் புகழோ டிருந்தவள்
பிதாவின் வீட்டிலே மகளா யிருக்கையில்,
நிறைவாம் புகழோடு நிலைப்பாய் வாழ்வெலாம்
மருமக ளாக மணாளனின் மனையிலே.
துன்பப் படுதலைத் தொடங்கவும் வேண்டாம்
தொல்லைகள்
வருமெனத் துணியவும் வேண்டாம் 320
அழைத்துனை வந்தது சதுப்புத்
தரைக்கல
படர்ந்துனைக் கொணர்ந்தது படுகுழிக் கல்ல,
தானிய மேடிருந்(து)
தனிக்கொணர் பட்டனை
இன்னுமோர் அதிகமாய் இருக்கும்தா னியவிடம்,
நீகொணர் பட்டனை
'பீரு'ள வீடிருந்(து)
'பீர்'இன்னும் மிக்குள வீடொன்று நோக்கியே.
நல்ல
நங்கையே, நவிலெழி லணங்கே!
இப்போ துன்னிடம் இவ்விதம் கேட்கிறேன்:
இங்குநீ
வருகையில் இதுகண் டனைகொல்
கதிர்த்தா னியத்திரள் கட்டிவைத் திருந்ததை
330
செறிகனக் கதிர்களைத் திரட்டிவைத் திருந்ததை?
அவையனைத் தும்மிவ் வகத்தையே
சேர்ந்தவை
உயர்ந்தஇம் மாப்பிளை உழுததால் வந்தவை
உழுததால் வந்தவை விதைத்ததால்
விளைந்தவை.
பாவையே, இளமைப் பருவப் பெண்ணே!
இப்போ துனக்கு இதனைக் கூறுவேன்:
இம்மனை நீவர எவ்வா றறிந்தையோ
அதுபோல் பழகலும் அறிந்தே யுள்ளாய்
இங்கே ஒருபெண்
இருப்பது நல்லது
மருமகள் இங்கே வளர்வதும் நல்லது 340
**நிறைதயிர்ச் சட்டி நின்கரத் துள்ளது
வெண்ணெய்க் கிண்ண மெலாமுன துடமை.
ஒருபெண் ணிங்கே உறைவது நல்லது
ஒருகோழி யிங்கே வளர்வதும் நல்லது
சவுனாப்
பலகையிங் ககலமா யானவை
அகத்தரைப் பலகைகள் அமைவன விசாலம்
தலைவர்கள் இனியர்நின்
தந்தையைப் போல
தலைவிகள் இனியர்நின் தாயார் போல
புத்திரர் நல்லவர் போலநின்
சோதரர்
நல்லவர் புதல்விகள் நின்சகோ தரிபோல். 350
ஏதெனும்
முனக்கு ஆசையேற் பட்டால்
வந்தால்ஏ தெனும் மனதில் விருப்பம்
உந்தை பிடிக்கும்
உயர்மீன் போலோ
வேட்டைச் சோதரன் காட்டுக் கோழியோ
அதைமைத் துனரிடம் அடுத்துப்
பேசேல்
மாமனா ரிடம்போய் மற்றதைக் கேளேல்
மாப்பிள்ளை யிடத்தே வந்துநே
ராய்க்கேள்
உனைக்கொணர்ந் தவரிடம் உகந்ததைப் பெறுவாய்.
எதுவுமே இல்லையே
இருக்குமக் காட்டில்
நான்குகால் களிலே நனிவிரை பிராணிகள், 360
வானப் பறவைகள் மற்றெதும் இல்லையே
வியன்சிறை இரண்டினை விசிறிப் பறப்பவை,
அத்துடன் நீரிலும் மற்றெது மில்லையே
மிகவும் சிறந்திடு மீன்கணக் கூட்டம்,
உன்னைப் பிடித்தவர் பிடிக்கொணா ஒன்று
பிடித்தவர் பிடியா(தது) கொணர்ந்தவர்
கொணரா(தது).
இங்கொரு மங்கை இருப்பது நல்லது
ஒருகோழி யிங்கே வளர்வதும்
நல்லது
திரிகைக் கற்கிங் கவசர மில்லை
உரலைப் பெறற்கும் ஒருகவ லையிலை
370
தண்ணீர் கோதுமை தனையிங் கரைத்திடும்
நீர்வீழ்ச்சி நன்கே **தானியம்
கலக்கிடும்
பாத்திரங் களைஅலை பதமாய்க் கழுவிடும்
அவற்றைக் கடல்நுரை ஆக்கிடும்
வெளுக்க.
ஓ,நீ அன்புடை உயரிய கிராமமே!
விரிந்தஎன் நாட்டில் மிகச்சிறப்
பிடமே!
கீழே புற்றரை மேலே வயல்நிலம்
இடைநடு வினிலே இருப்பது கிராமம்
இயல்கிரா மக்கீழ் இனிதாம் நீர்க்கரை
அந்தநீர்க் கரையில் அருமைநீ ருளது
380
வாத்துக்கள் நீந்த வளமிகு பொருத்தம்
விரிநீர்ப் பறவைகள் விளையாட்
டயர்தலம்."
வந்தோர்க் குப்பின் வழங்கினர் பானம்
வழங்கினர் உணவு வழங்கினர்
பானம்
ஏர()ள மிருந்தன இறைச்சித் துண்டுகள்
அத்தொடு பணிய()ர அழகிய வகைகள்
பார்லியில் வடித்த 'பீரு'ம் இருந்தது
கோதுமை யூறற் பானமு மிருந்தது.
புத்தாக்க உணவு போதிய திருந்தது
போதிய உணவும் போதிய பானமும்
390
தயங்கு செந்நிறச் சாடிகள் பலவிலும்
அழகிய கிண்ணம் அவைகள் பலவிலும்
நனிபிய்த் துண்ணப் பணியா ரங்கள்
விரும்பிக் கடிக்க வெண்ணெய்க் கட்டிகள்
வெட்டி யெடுக்க வெண்ணிற மீன்கள்,
துண்டு துண்டாக்க வஞ்சிர மீன்கள்
வெள்ளியில்
அமைந்த வெட்டுக் கத்தியால்
தங்கத் தமைந்த தனியுறைக் கத்தியால்.
வாங்கப்
படாத'பீர்' வழிந்தோ டிற்று
செலுத்தா **மர்க்காத் தேன்பெரு கிற்று
400
உத்தர உச்சி(யி)ருந் தோடிற் றுப்'பீர்'
பீப்பாவு ளிருந்து பெருகிற்
றுத்தேன்
அருந்து'பீர்' இருந்தது அதரங்க ளூற
தேனங் கிருந்தது சேர்ந்துள
மயங்க.
இங்கே குயில்போல் இனிதுயார் பாடுவார்?
பொருத்தம தான பொற்பா
டகன்யார்?
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
என்றுமே நிலைத்த இசைப்பா டகனவன்
பாடல்கள் அங்கே பாடத் தொடங்கினன்
பாடல்கள் யாத்துப் பாடத் தொடங்கினன்
410
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்
இந்த மொழிகளில் இவ்விதம்
மொழிந்தான்:
"அன்புடைச் சோதர, அரியஎன் சோதர!
என்னொடு இணைந்த இனியசொல் வல்லவ!
நாவன்மை படைத்தவென் நல்லதோ ழர்களே
இப்போநான் புகல்வதை இனிதுகே ளுங்கள்
வாத்துக்கள் சேர்வது **வாய்க்குவாய் அரிது
கண்ணொடு சோதரி கண்ணைநோக் குதலும்
அருகரு கிருப்பதுவும் அரிதுசோ தரர்கள்
தோளொடு **தோள்தாய்த் தோன்றல்கள் நிற்பதும்
420
வறிதாய் வீணே மயங்கிடும் எல்லையில்
தெரியும் வடபால் செழிப்பிலா
நிலத்தில்.
பாடல்கள் இவ்விதம் பாடத் தொடங்கவா?
பாடல்கள் யாத்துப் பாடத்
தொடங்கவா?
பாடல்கள் பாடலே பாடகர் தொழிலாம்
கூவுதல் வசந்தக் குயிலின் தொழிலாம்
**நீலமா தர்க்குச் சாயம் அழுத்தலும்
**தறியமர் மகளிர்க்(கு) நெய்தலும் தொழிலாம்.
லாப்பில்வாழ் பிள்ளைக ளெலாம்பா டிடுவர்
வைக்கோற் காலணி மாந்தரு மிசைப்பர்
430
இரும்காட் டருமெரு திறைச்சியுண் நேரம்
சிறுகலை மான்ஊன் தின்றிடும் நேரம்;
நானுமே னிங்கு பாடா திருக்கிறேன்
எமது பிள்ளைகள் ஏன்பா டுகிலர்
உயர்தா
னியத்தில்நல் உணவுண் நேரம்
வாய்நிறை உணவை மகிழ்ந்துண் கையிலே?
லாப்பில்வாழ் பிள்ளைக ளெலாம்பா டிடுவர்
வைக்கோற் காலணி மாந்தரு மிசைப்பர்
ஒருகிண் ணம்நீர் உவந்தருந் துகையில்
**மரப்பட்டை ரொட்டி மகிழ்ந்துமெல் லுகையில்;
440
நானுமே னிங்கு பாடா திருக்கிறேன்
எமது பிள்ளைகள் ஏன்பா டுகிலர்
தானியம் வடித்த பானம் பருகையில்
பார்லியில் செய்த 'பீர்'அருந் துகையில்?
லாப்பில்வாழ் பிள்ளைக ளெலாம்பா டிடுவர்
வைக்கோற் காலணி மாந்தரு மிசைப்பர்
வெளியே புகைபடி கூடார ஒளியில்
படிந்த கறைநிறை படுக்கை யதிலே;
நானுமே னிங்கு
பாடா திருக்கிறேன்
எமது பிள்ளைகள் ஏன்பா டுகிலர் 450
உயர்புக ழுடையஇவ் உத்தரத் தின்கீழ்
குறையா அழகுக் கூரையின் கீழே?
ஆடவர்
இங்கே அமர்தல்நன் றாகும்
இனியபெண் மணிகள் இருப்பதும் நன்றாம்
'பீர்'நிறைந்
திருக்குமிப் பீப்பாப் பக்கம்
தேன்நிறைந் திருக்குமிச் சாடியைச் சூழ்ந்து
எங்கள் அருகில்வெண் மீனின் நீரிணை
அருகில்வஞ் சிரத்தின் அகல்வலை வீச்சிடம்
உண்கையில் உணவெதும் ஒழிந்துபோ னதேயிலை
பபானம் பருகையில் பற்றா நிலையிலை.
460
ஆடவர் இங்கே அமர்தல்நன் றாகும்
இனியபெண் மணிகள் இருப்பதும் நன்றாம்
உறுதுய ரோடிங்(கு) உணல்கிடை யாது
கவனிப்(பு) ஒன்றிலாக் கழியும் வாழ்விலை;
உறுதுயர் இன்றியே உண்ணுதல் இங்குள
கவனிப்பு நிறைந்த கவின்வாழ் விங்குள
இந்தத்
தலைவனின் எல்லாக் காலமும்
இந்தத் தலைவியின் இன்வாழ் நாளெலாம்.
இங்கே
முதலில் எவரைப் புகழ்வேன்?
தலைவர் இவரையா தலைவி இவளையா? 470
வீரர் வழமையாய் மிகுமுன் பொழுதெலாம்
தலைவரைப் புகழ்ந்தே தனிமதித் தார்முதல்
தலைவர் அமைத்தவர் சதுப்பில் வசிப்பிடம்
வனத்தி லிருந்தொரு வசிப்பிட மமைத்தவர்
அகல்பெரு ஊசி(யி)லை அடிமரம் கொணர்ந்தார்
தாருவைத் துணித்துத் தலையுடன்
கொணர்ந்தார்
அவற்றைநல் லிடத்தில் அமைவுடன் வைத்தார்
அவற்றை உறுதியாய்
ஆங்காங்கு நிறுத்தி
உயர்ந்த குடிக்கு உயர்பெரும் வசிப்பிடம்
அழகுறும் தோட்டத்
தமைத்தனர் வீட்டை; 480
கட்டினார் சுவர்மரக் காட்டினி லிருந்து
உத்தரம் பயங்கரக் குன்றிலுண் டானது
பல்குறுக் குமரம் பாறை நிலத்திலும்
சிறந்தசட் டமெலாம் சிறுபழப் புதரிலும்
**சிறுபழச் செடியுள திடரினில் பட்டையும்
உறைந்திடாச் சேற்றினில் பாசியும் பெற்றனர்.
வாழ்விடம் சரியாம் வகைகட்
டியதும்
இருப்பிடம் சரியாம் இடத்தில் அமைந்தது
சுவர்வே லைக்குத் தோற்றினர்
நூற்றுவர்
இல்லக் கூரையில் இருந்தனர் ஆயிரம் 490
இந்தவாழ் விடமதை
இனிதாய் அமைத்திட
பகருமிந் நிலத்தைப் பரப்பி யமைத்திட.
ஆயினும் இவ்வா
றமைந்தஇத் தலைவர்
வாழ்விடம் அமைத்து வருகையில் இவ்விதம்
கண்டது இவர்சிகை
காற்றுப் பலதினை
கொடுங்கால நிலையைக் குழலும் கண்டது
அடிக்கடி இந்தநல் லழகிய
தலைவரின்
கையுறை பாறைக் கல்லில் இருந்தது
தாருவின் கிளையில் தரித்தது தொப்பி
சேற்றில் காலுறை திணிந்து கிடந்தது. 500
அடிக்கடி இந்த அழகுநல்
தலைவர்
காலையில் மிகஅதி காலைவே ளையிலே
மற்றைய மனிதர் வளர்துயி லெழுமுன்
கிராமச் சனங்கள் கேட்பதன் முன்னர்
அனல்வெப்ப மருங்கு அகல்வார் துயிலால்
குச்சியால் கட்டிய குடிசையில் எழுவார்
துரிகைகொண்டு வாரித் தலையை
பனித்துளி
யால்விழி பாங்காய்க் கழுவுவார்.
அதன்பின் இந்த அழகுநல் தலைவர்
அறிந்த
மனிதரை அகத்துள் கொணர்வார் 510
பாடகர் வாங்கில் பலர்மிக் கிருப்பர்
திளைப்போர் களிப்பில் திகழ்வர்சா ளரத்தே
மந்திரம் சொல்பவர் வன்னிலப் பலகையில்
மூலையில் இருப்பர் மாயம் செய்பவர்
சுவரின் பக்கம் தொடர்ந்து நிற்போரும்
வேலியோ ரத்தை மிதித்தகல் வோரும்
முன்றிலில் நீடு நடந்துசெல் வோரும்
நாட்டின்
குறுக்கே நனிபய ணிப்பரும்.
தலைவரை முதலில் தனிப்புகழ்ந் திசைத்தேன்
தருணமிஃ தன்புத் தலைவியைப் புகழ்வேன் 520
தயாராய் உணவைச்
சமைத்துவைத் ததற்கு
நீண்ட மேசையை நிறைத்து வைத்ததற்கு.
தடித்த ரொட்டிகள்
படைத்தவள் அவளே
தகுபெரு மாப்பசை தட்டி யெடுத்தவள்
உவந்தவள் விரையும் உள்ளங்
கைகளால்
அவளது வளைந்த ஐயிரு விரல்களால்
ரொட்டிகள் மெதுவாய்ச் சுட்டே
எடுப்பாள்
விருந்தா ளிகளை விரைந்துப சரிப்பாள்
பன்றி இறைச்சியும் பலதொகை
சேர்த்து
அத்துடன் மீன்பணி யாரமும் கலந்து; 530
கத்தியின்
அலகுகள் மெத்த நழுவிடும்
உறைக்கத்தி முனையும் உடனாய் வழுவும்
வஞ்சிர மீனின்
வன்தலை துணிக்கையில்
கோலாச்சி மீனின் கொழுந்தலை அறுக்கையில்.
அடிக்கடி
இந்த அழகுநல் தலைவி
கவனம் மிகுமிக் கவின்அக மனையாள்
சேவல்இல் லாமலே
தெரிந்தவள் துயிலெழ
கோழிக் குஞ்சுக் குரலிலா தேகுவாள்
உகந்தஇவ் வதுவை
ஒழுங்காம் காலம்
பணியா ரம்பல பலசுடப் பட்டன 540
புளித்த மாவுறை
முழுப்பதப் பட்டது
'பீரு'ம் வடித்துப் புர்த்தியா யிருந்தது.
சிறப்புறும்
இந்தத் திகழ்நல் தலைவி
கவனம் மிகுமிக் கவினக மனையாள்
அறிவாள் 'பீரை'
அரும்பதம் வடிக்க
பெருகவே விடுவாள் பெருஞ்சுவைப் பானம்
நுரைக்கும் முளைகள்
நுண்தளிர் இருந்து
கூலத் தினிக்கும் ஊறலி லிருந்து
கவின்மர அகப்பையால்
கலக்கவும் மாட்டாள்
கிடைத்தகாத் **தண்டினால் கிளறவும் மாட்டாள் 550
கைமுட்டி கொண்டு தானே கலக்குவாள்
தொட்டதன் கரங்களால் மட்டும் கிளறுவாள்
கவினார் புகையில்லாச் சவுனா வறையில்
சுத்தமாய்ப் பெருக்கித் துடைத்த பலகையில்.
இந்தநல் தலைவி என்றுமே செய்யாள்
கவனம் மிகுமிக் கவினக மனையாள்
அடித்து
முளைகள்கூ ழாக்கவும் மாட்டாள்
கூலமா வூறலைக் கொட்டாள் நிலத்தில்
ஆயினும்
சவுனா அடிக்கடி செல்வாள்
நடுநிசி நேரமும் நனிதனிச் செல்வாள் 560
ஓநாய் பற்றி உறாளாம் அச்சம்
வனவிலங் கெதற்கும் மனத்துப் பயப்படாள்.
இப்போ(து) புகழந்து இசைத்தேன் தலைவியை
பொறுங்கள் என் சிறந்த மனிதரைப் புகழுவேன்!
சிறந்த மனிதராய்த் திகழ்ந்தவர் எவரோ?
இன்றைய காட்சியின் இயக்குனர் யாரோ?
சிறந்தவர் கிராமச் சிறந்த மனிதராம்
காட்சியை நடாத்தும் பாக்கியம் பெற்றவர்.
எங்களின் சிறந்த இவரைப் பார்ப்பீர்
அகன்ற துணிமே லாடையில் இருக்கிறார்
570
அவ்வுடை கைக்கீழ் அளவா யுள்ளது
இடுப்பின் பரப்பில் இறுக்கமா யுள்ளது.
எங்களின் சிறந்த இவரைப் பார்ப்பீர்
ஒடுங்கிய நீண்ட உடையி லிருக்கிறார்
ஆடையின் விளிம்பு அதுமண் தொடுமாம்
ஆடையின் பின்புறம் அதுநிலம் படியும்.
மேற்சட்டை சிறிது வெளித்தெரி கிறது
எட்டிப் பார்க்கிற ததிற்சிறு பகுதி
நிலவின் மகளவள் நெய்ததைப் போன்று
ஈயத்து நெஞ்சாள் இயற்றிய தைப்போல்.
580
எங்களின் சிறந்த இவரைப் பார்ப்பீர்
அரையினில் கம்பளி அமைந்தநற் பட்டி
ஆதவன் மகளவள் அமைத்தநற் பட்டி
மிளிர்நக முடையவள் மினுக்கிய பட்டி
தீயில் லாத
காலம் நடந்தது
நெருப்பையே அறியா நேரம் நடந்தது.
எங்களின் சிறந்த இவரைப்
பார்ப்பீர்
கவின்பட் டிழைத்த காலுறை கால்களில்
காலுறைப் பட்டியும் கவின்பட்
டானது
காலதன் பட்டிஒண் கவின்பட் டானது 590
எழிற்பொன்
னாலிவை இழைக்கப் பட்டன
அலங்க()ரம் வெள்ளியால் ஆக்கப் பட்டன.
எங்களின்
சிறந்த இவரைப் பார்ப்பீர்
கவினார் ஜேர்மனிக் காலணி கால்களில்
ஆற்றிலே அன்னம்
அழகாய் மிதத்தல்போல்
வாத்துக் கரைகளில் வந்துநீந் துதல்போல்
தாராக் கிளைகளில்
தரித்திருப் பதுபோல்
மரம்வீழ் காட்டில் இடம்பெயர் புட்போல்.
எங்களின்
சிறந்த இவரைப் பார்ப்பீர்
பொன்னிறத் தினிலே மென்சுருள் தலைமயிர் 600
தங்கப் பின்னலாய்த் தான்மிளிர் தாடி,
தலையில் மிலைந்த தனிநீள் தொப்பியோ
முகிலைத் துளைத்து முன்உயர்ந் திருந்தது
காடுகள் அனைத்தும் கவினொளி விதைத்தது
கொடுத்தும் நூறு கொள்ளவே முடியா
**மர்க்காஆ யிரத்திலும் வாங்கிட முடியா.
இப்போ புகழ்ந்தேன் என்சீர் மனிதரை
பொறுங்கள், மணமகள் தோழியைப் புகழ்வேன்!
மணமகள் தோழி வந்தளெங் கிருந்து
அதிர்ஷ்டக் காரியை அடைந்ததெங் கிருந்து?
610
மணமகள் தோழி வந்தளங் கிருந்து
அதிர்ஷ்டக் காரியை அடைந்ததங் கிருந்து
*தனிக்காக் கோட்டைத் தன்பின் புறத்தால்
*புதிய கோட்டைப் புணர்வெளிப் புறத்தால்.
அங்கிருந் தாயினும் அவளைப் பெற்றிலர்
அங்ஙனம் பெறற்கு ஆதாரம் சற்றிலை
மணமகள்
தோழி வந்தளங் கிருந்து
அதிர்ஷ்டக் காரியை அடைந்ததங் கிருந்து
*வெண்கட
லிருக்கும் வியன் நீரிருந்து
விரிந்து அகன்ற வியநீர்ப் பரப்பிருந்(து).
620
அங்கிருந் தாயினும் அவளைப் பெற்றிலர்
அங்ஙனம் பெறறற்கு ஆதாரம்
சற்றிலை
திகழ்தரை **சிறுபழச் செடியொன்(று) வளர்ந்தது
படர்புதர் செந்நிறப்
பழந்தரு **மொருசெடி
வளர்ந்தது ஒருபுல் வயலில் ஒளியொடு
பூத்தது பொன்னிறத்
தொருபூ காட்டிலே
மணமகள் தோழி வந்தள்அங் கிருந்து
அதிர்ஷ்டக் காரியை அங்கிருந்
தெடுத்தனர்.
மணப்பெண் தோழியின் வாய்அழ கானது
நுவல்பின் லாந்தின் **நூனாழி
போன்றது, 630
உயர்மணத் தோழியின் உயிர்ப்புள விழிகள்
விண்ணகத்
தொளிரும் விண்மீ னனையவை,
மணப்பெண் தோழியின் வளப்புகழ்ப் புருவம்
கடல்மேற்
திகழும் கவின்நிலாப் போன்றவை.
தோன்றுமெம் மணப்பெண் தோழியைக் காண்பீர்
பூக்கழுத் தில்நிறை பொன்னிறச் சுருள்கள்
சென்னியில் நிறைய பொன்னிறக் கூந்தல்
தங்க வளையல்கள் தளிர்க் கரங்களிலே
பொன்னினால் மோதிரம் பூவிரல் களிலே
பொன்னினால் அமைந்த பொன்மணி காதிலே 640
தங்கநூல் முடிச்சுகள்
துங்கவிற் புருவம்
முத்தலங் காரம் வித்தகக் கண்ணிமை.
நனிமதி திகழ்வதாய்
நானும் எண்ணினேன்
பொன்னின் வளையம் மின்னிய போதினில்;
எல்லவன் ஒளிர்வதாய்
எண்ணினேன் நானும்
சட்டையின் கழுத்துப் பட்டி ஒளிர்கையில்;
நாவாய் ஒன்று
நகர்வதா யெண்ணினேன்
தலையில் தொப்பி தளர்ந்தசை கையிலே.
மணப்பெண் தோழியை
வானாய்ப் புகழ்ந்தேன்
பார்க்க விடுங்கள் நோக்குமெல் லோரையும் 650
அனைவரும் இங்கே அழகா னவரா
முதியோர் எல்லாம் அதிமதிப் பினரா
இளைஞர்கள் எல்லாம்
எழிலா னவரா
கூட்டத்தில் அனைவரும் கொள்சிறப் பினரா!
மற்றஎல் லோரையும்
இப்போது பார்த்தேன்
அனேகமாய் அனைவரும் அறிந்தவர் தாமே
இங்கிப் படிமுன்
னிருந்தது மில்லை
இருக்கப் போவது மிலையினி நிச்சயம்
கூட்டத்தில் அனைவரும்
கொள்சிறப் பினராய்
அனைவரும் இங்கே அழகா னவராய் 660
முதியோர் எல்லாம் அதிமதிப் பினராய்
இளைஞர்கள் எல்லாம் எழிலான வராய்;
வெளுப்புறு முடையில் முழுப்பே ருமுளர்
உறைபனி மூடிய உயர்காட் டினைப்போல
கீழ்ப்புறம் எல்லாம் கிளர்புல ரொளிபோல்
மேற்பபுற மெல்லாம் மிளிர்வை கறைபோல்.
வெள்ளிக் காசுகள் மிகமலிந் திருந்தன
பொற்காசு விருந்தில் பொலிந்து கிடந்தன
முழுக்கா சுப்பை முன்றிலில் கிடந்தன
பணப்பை பாதையில் பரவிக் கிடந்தன 670
அழைக்கப் பட்ட அயல்விருந் தினர்க்காய்
அழைத்த விருந்தினர் அதிபெரு மைக்காய்."
நிலைபெறும் முதிய வைனா மொயினன்
அழிவிலாப் பாடலின் ஆத()ரத் தூணவன்
வண்டியில்
இதன்பின் வந்தே யேறினன்
திகழ்அகம் நோக்கிச் செய்தனன் பயணம்;
தன்கதை பற்பல
தாழ்விலா திசைத்தான்
மந்திரப் பாடல்கள் மாண்புறப் பயின்றான்
ஒருகதை பாடினான்
இருகதை பாடினான்
மூன்றாம் கதையும் முடிவுறும் போது 680
மோதிற்று
பாறையில் முன்வண்டி விற்கால்
முட்டிற் றடிமரக் குற்றியில் ஏர்க்கால்
நொருங்கிச் சிதைந்தது பெருங்கவி வண்டி
பாடகன் விற்கால் ஊடிற்று வீழ்ந்தது
ஏர்க்கால் வெடித்து இற்றுப் பறந்தது
பலகைகள் கழன்று பரவின பெயர்ந்து.
முதிய வைனா மொயினன் மொழிந்தான்
உரைத்தான் அவனே உரைத்தான் இவ்விதம்:
"இங்கே
இருக்கும் இளைஞர்கள் மததியில்
வளர்ந்திடும் தேசிய மக்களின் மத்தியில்
690
அல்லது முதுமை அடைந்துளார் மத்தியில்
தளர்ந்தரு கிவரும் சந்ததி மத்தியில்
துவோனலா ஏகுவார் எவரெனு முளரோ
சாவுல குக்குப் போவார் உளரோ
துவோனலா விருந்து
துறப்பணம் கொணர
தொல்சா வுலகினால் துளைப்பான் கொணர
சறுக்கு வண்டியைச் சமைக்கப்
புதிதாய்
வண்டியைத் திருத்தி வருபுதி தமைக்க?"
இளைஞரும் அத்துடன்
இவ்விதம் கூறினர்
முதுமையுற் றோரும் மறுமோழி கூறினர்: 700
"இல்லை
யிங்குள இளைஞரின் மத்தியில்
இல்லை முதியவர் எவரிலும் நிச்சயம்
உயர்குடி
மக்களில் ஒருவரு மில்லை
வீரம் நிறைந்த வீரரில் இல்லை
வல்லவன் துவோனலா
செல்லுதற் கொருவர்
இறப்புல குக்கு எழுவோர் ஒருவர்
துவோனலா விருந்து துறப்பணம்
கொணர
தொல்சா வுலகினால் துளைப்பான் கொணர
சறுக்கு வண்டியைச் சமைக்கப் புதிதாய்
வண்டியைத் திருத்தி வருபுதி தமைக்க." 710
முதிய வைனா மொயினன்
பின்னர்
என்றுமே நிலைத்த இசைப்பா டகனவன்
தானே மீண்டும் போனான் துவோனலா
படுமாய் வுலகு பயணம் செய்தான்
துவோனலா விருந்து துறப்பணம் கொணர்ந்தான்
தொல்சா
வுலகினால் துளைப்பான் கொணர்ந்தான்.
முதிய வைனா மொயினன் அதன்பின்
நீல
நிறவனம் நிமிர்ந்தெழப் பாடினான்
அரியசிந் தூரம் அதிலெழப் பாடினான்
உகந்ததாய்ப் பேரி உயர்ந்தெழப் பாடினான் 720
அவற்றிலே யிருந்து
அமைத்தான் வண்டி
அவற்றில் விற்கால் அமைத்தான் வகையாய்
ஏர்க்கால் அவற்றில்
எடுத்தான் பின்னர்
நுகமரம் எல்லாம் இயற்றி முடித்தான்
சறுக்கு வண்டி
திருத்தினான் இவ்விதம்
அப்புது வண்டியை அமைத்து முடித்தான்
புரவிக் குட்டியை
அலங்கா ித்தான்
மண்ணிறப் புரவி வண்டிமுன் நின்றது
ஏறிச் சறுக்கு வண்டியில்
இருந்தனன்
ஏறி வண்டியில் இருந்து கொண்டனன்; 730
சாட்டைவீ சாமல்
தனிப்பரி விரைந்தது
**மணிஅடி யிலாமலே வளர்பரி விரைந்தது
பழகிய சதுப்பு
படர்நிலம் விரைந்தது
இரையுள்ள இடத்தே எழிற்பரி விரைந்தது
முதிய வைனா
மொயினனைக் கொணர்ந்தது
என்றுமே நிலைத்த இசைப்பா டகனை
அவனது சொந்த அகல்கடை
வாயில்
சொந்தக் களஞ்சிய முன்றிலின் முன்னே.
பாடல் 26 - லெம்மின்கைனனின் ஆபத்தான பிரயாணம்
அடிகள் 1 - 382 : தன்னைத் திருமணத்துக்கு அழைக்காத காரணத்தால் ஆத்திரம் கொண்ட
லெம்மின்கைனன் வடநாட்டுக்குப் புறப்படுகிறான். அங்கு அவனுக்கு ஏற்படக்கூடிய
அபாயங்கள் பற்றியும் முன்னர் அங்கு ஏற்பட்ட மரணங்கள் பற்றியும் கூறித் தாய்
தடுத்தும்கூடக் கோளாமல் பயணத்தை மேற்கொள்கிறான்.
அடிகள் 383 - 776 : அவனுடைய
பயணத்தின்போது பல ஆபத்தான இடங்களைக் கடக்க நேர்ந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாகத் தனது
மந்திர அறிவினால் எல்லாவற்றிலும் வெற்றி காண்கிறான்.
அஹ்தி என்பான் அகல்தீ வுறைபவன்
பரந்தகல் வளைகுடாப் பகுதியின் முடிவில்
உழுதுகொண் டிருந்தான் ஒருவயல் அவனே
உழுது புரட்டினான் ஒருவய லையவன்
அவனது
செவிகள் அதிநுண் தகையன
கேட்கும் சக்தியும் கிளர்கூர் மையது.
கேட்டதோர்
கூச்சல் கிராமத் திருந்து
ஏரிக்கு அப்பால் எழுந்தது சத்தம்
பனிக்கட்டி மீதில்
பாதம் ஊன்றொலி
சமபுற் றரைமேல் சறுக்குவண் டியினொலி; 10
அவனுக்
கொருநினை வப்போ துதித்தது
நெஞ்சிலோர் சிந்தனை நேரா யெழுந்தது;
வடபால்
நிலம்திரு மணம்நடந் ததுவோ
எழும்குடி மனிதரின் இரகசியக் கூட்டமோ!
தன்வாய்
கோணித் தலையைத் திருப்பினன்
கறுத்தத் தாடியைக் கையால் முறுக்கினன்
குருதியும்
வடிந்து கொடிதிறங் கிற்று
காண்அபாக் கியவான் கன்னத் திருந்து;
உடனே தனது
உழவினை நிறுத்தினான்
புரட்டலைப் பாதிப் புன்வயல் நிறுத்தினான் 20
எழில்நிலத் திருந்து ஏறினான் குதிரையில்
புறப்பட் டான்இல் போவதற் காக
அன்பு
நிறைந்த அன்னையின் அருகே
பெரும்புக ழுறுதன் பெற்றோர் பக்கம்.
சென்றதும்
அவ்விடம் செப்பினன் இங்ஙனம்
வந்து சேர்ந்ததும் வருமா றுரைத்தனன்:
"ஓ,என்
அன்னையே, உயர்வய தினளே!
உணவினை விரைவாய் உடனெடுத் திடுவாய்
இங்கொரு பசியுளோன்
இருக்கிறான் உண்ண
ஒருகடி கடிக்க உளம்கொள் பவற்கு; 30
அதேகணம் சூட்டை ஆக்கிடு சவுனா
அறையில்தீ மூட்டி ஆக்கிடு வெப்பம்
மனிதனைச்
சுத்தமாய் மாற்றுமவ் விடத்தில்
தனிவிறல் வீரனைத் தயார்செயு மிடத்தில்."
அப்போது லெம்மின் கைனனின் அன்னை
உணவினைக் கொஞ்சம் உடன்விரைந் தெடுத்தாள்
பசியுறு மனிதன் பார்த்துண் பதற்காய்
ஒருகடி கடிக்க உளம்கொளு பவற்காய்
குளியல்
குடிசையும் கொண்டது தயார்நிலை
ஆயத்த மானது அச்சவு னாவறை. 40
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
உணவினைக் கொஞ்சம் உடன்விரைந் தெடுத்தான்
அந்நே ரத்தே அடைந்தான் சவுனா
குளியல் அறையுளும் குறுகினன் அங்ஙனம்;
அங்கொரு
**பறவை அலசிக் கொண்டது
செய்தது சுத்தம் திகழ்**பனிப் பறவை
தலையை ஒருபிடி
சணலைப் போலவும்
கழுத்தையும் வெளுப்பாய்க் கழுவிக் கொண்டது.
வீட்டினுள்
சவுனா விருந்தவன் சென்றான்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
50
"ஓ, என் அன்னையே, உயர்வய தினளே!
குன்றத் திருக்கும் குடிற்கே விரைவாய்
அங்கிருந் தெடுத்துவா அழகிய உடைகளை
மாசிலா ஆடைகள் வாகாய்ச் சுமந்துவா
நானே
அவற்றை நன்கணி வதற்கு
என்னுடல் அவற்றை எடுத்துத் தரிக்க!"
விரைந்து
அன்னையும் வினவுதல் செய்தாள்
மிகுவய துப்பெண் விசாரணை செய்தாள்:
"எங்கே
செல்கிறாய் எந்தன் மகனே
**சிவிங்கிவேட் டைக்கா செல்லப் போகிறாய்
60
அல்லது காட்டெரு ததன்பின் சறுக்கவா
அல்லது எண்ணமா அணிலதை எய்ய?"
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"ஓ,என்
அன்னாய், உழன்றெனைச் சுமந்தாய்!
சிவிங்கிவேட் டைக்குச் செல்லுதற் கில்லை
சறுக்கவு மில்லைத் தனிக்காட் டெருதுபின்
அல்லது இல்லை அணிலையும் எய்தல்:
வடநாட்(டு) விருந்து புறப்படப் போகிறேன்
இரகசியக் குடியர் இடம்போ கின்றேன்;
70
எழிலார் உடைகளை என்னிடம் கொணர்வாய்
கொணர்வாய் என்னிடம் குறைவிலா ஆடை
கடிமண வீட்டில் காட்சியா யிருக்க
விருந்து நிகழ்ச்சிக் கணிந்து நான்செல்ல."
தனது மைந்தனைத் தடுத்தாள் அன்னை
தனது மனிதனைத் தடுத்தாள் பெண்ணவள்
வேண்டாம்
என்றனர் விளங்கிரு பெண்கள்
தடுத்தனர் இயற்கையின் தையலர் மூவர்
புறப்ப(ட்)டு
லெம்மின் கைனன் போவதை
நிகழ்நல் வடபால் நிலவிருந் துக்கு. 80
மாதா இவ்விதம் மகனுக் குரைத்தாள்
பெருவய தினள்தன் பிள்ளைக் குரைத்தாள்:
"அன்பின் மகனே, அகலுதல் வேண்டாம்!
நேசமார் மகனே, தூரநெஞ் சினனே!
வைபவ
விருந்து வடநாட் டுக்கு
குழுவினர் பலபேர் குடிக்கும் வைபவம்!
அங்கே நீயும்
அழைக்கப் பட்டிலை
நீயோ அங்கே தேவைப் பட்டிலை."
குறும்பன் லெம்மின் கைனனப்
போது
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: 90
"அழைப்புக்
கேகுவர் அதிஇழிந் தவர்கள்
அழைப் பில்லாமல் அரியோர் துள்ளுவர்;
அழைக்கப்
பட்டவர் அம்நிலா வயதினர்
ஓய்வே இல்லா உயர்தூ துவராம்
தீப்பொறி சிந்தும்
திகழ்வாள் அலகில்
குவிந்தொளி சிதறும் கூரிய முனையில்."
லெம்மின் கைனனின்
அன்னையப் போது
தடுக்க முயன்றாள் தனையனை இன்னும்:
"வேண்டாம் வேண்டாம் விறல்என்
மதலாய்!
வடபுல விருந்தில் வலிந்தே செல்லல்! 100
பயணத் தறிவாய் பற்பல
அற்புதம்
மாபெரும் அதிசயம் வந்திடும் வழியில்
வன்கொடு மூன்று மரணம்
நேர்ந்திடும்
மனிதனின் இறப்பும் வந்திடும் மூன்று."
குறும்பன் லெம்மின்
கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"வயோதிப மாதர்க்(கு)
மரணம்என் றும்தான்
எல்லா இடத்திலும் இவர்க்கிறப் புத்தான்
இவைசார் அக்கறை
இல்லைவீ ரர்க்கு
இவைபற்றி கவனமும் இல்லைஅ வர்க்கு 110
ஆயினும் அவைஅவை அங்ஙனம் நிகழ்க,
என்றன் காதில்நீ இயம்புவாய் கேட்க
எந்த மரணம்
இனிமுதல் நிகழ்வது
முதலில் நிகழ்வதும் முடிவில் நிகழ்வதும்?"
லெம்மின்
கைனனின் அன்னை மொழிந்தனள்
முதிய மாதவள் மொழிந்தாள் மறுமொழி:
"மரணம் பற்றி
வழுத்துவேன் உள்ளதை
மனிதன் விருப்புபோல் மரணம் நிகழா
முதல்வரப் போகும் மரணம்
மொழிவேன்
மரணம் இதுவே வருமுதல் மரணம் 120
சிறிதுதூ ரம்நீ
செல்வாய் பாதையில்
பாதையில் ஒருநாள் பயணம் முடிப்பாய்
அப்போ(து) நெருப்பு
ஆறொன் றெதிர்ப்படும்
அந்தஆ றுன்னெதிர் வந்தே அடுக்கும்
ஆற்றில்தீ வீழ்ச்சி
அங்கே தோன்றிடும்
படர்தீ வீழ்ச்சியில் பாறைத்தீ வொன்(று)
பாறைத் தீவிலே
பதிந்ததோர் தீமுடி
தீமுடி யதிலே தீக்கழு கொன்று
இரவில் அலகை எடுத்திடும்
தீட்டி
பகலில் நகத்தைப் படுகூ ராக்கிடும் 130
அவ்வழி
வந்திடும் அந்நிய மனிதர்க்(கு)
தன்வழி வந்திடும் தனிநபர் ஒருவர்க்(கு)."
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"இந்த
மரணம் அரிவையர் மரணம்
வல்வீ ரன்தன் மரணமே அல்ல
நல்லது அதற்கோர் நல்வழி
காண்பேன்
ஏதெனும் நல்லதாய் எண்ணுவேன் கருமம்:
பரியொன்று தோன்றநான் பாடுவேன்
**'அல்டரி'ல்
'அல்டரி'ல் மனிதனும் அமையநான் பாடுவேன் 140
என்னுடைய பக்கத் தேகுதற் காக
என்றன் முன்புறம் இனிதுற நடக்க;
தாரா போல்நான்
மூழ்குவேன் அப்போ
அடியில் வாத்தாய் ஆழத் தேகுவேன்
கழுகின் கூரிய உகிர்களின்
கீழாய்
**இராட்சசக் கழுகின் இகல்விரற் கீழாய்;
"ஓ,என் அன்னாய், உழன்றெனைச்
சுமந்தோய்!
இடையில்வந் தெய்தும் இறப்பினை நவில்க!"
லெம்மின் கைனனின்
அன்னை கூறினள்:
"இந்த மரணம் இரண்டாம் மரணம் 150
சிறிதுதூ
ரம்நீ செல்வாய் பாதையில்
பயணம் முடிப்பாய் பகரிரண் டாம்நாள்
நெருப்புக்
கணவாய் நேர்ப்படும் அப்போ
அதுஉன் பாதையில் அணுகும் குறுக்கே
வெகுதொலை
கிழக்கில் மிக்குநீண் டிருக்கும்
வடமேல் எல்லையும் முடிவற் றிருக்கும்
கொதிக்கும் கற்களைக் கொண்டது நிறைய
எரியும் பாறைகள் இருக்கும் அதனுள்;
அதனுட்
சென்ற ஆட்கள்பல் நூற்றுவர்
அதனுள் நிறைந்தவர் ஆயிரக் கணக்காம் 160
வாள்விற
லார்எ(ண்)ணில் வரும்ஒரு நூறுபேர்
இரும்புப் பரிகள் இருக்குமோ ராயிரம்."
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"அதுவொரு
மனிதனின் மரணமே அல்ல
அதுவொரு வீரனின் அழிவுமே யல்ல
ந(ல்)லது அதற்கொரு நனிசூழ்
வெண்ணினேன்
நினைத்தேன் சூழ்ச்சியை நேர்வழி கண்டேன்
பாடுவேன் தோன்றிடப்
பனித்திரள் மனிதன்
மிகுபலப் பனித்திரள் வீரனைப் பாடுவேன் 170
அனலின்
நடுவிலே அவனைத் தள்ளுவேன்
அழுத்துவேன் பலமாய் அவனை நெருப்பில்
கொதிசவு னாவில்
குளிப்பதற் காக
அத்துடன் செப்பில் அமைந்த தூரிகை;
மாறியப் போதே மறுபுறம்
செல்வேன்
எரியின்ஊ டாக எனைக்கொடு போவேன்
எனது தாடியாங் கெரியா திருந்திடும்
சுருளுறும் தலைமுடி கருகா திருந்திடும்
ஓ,என் அன்னாய், உழன்றெனைச் சுமந்தோய்!
இறுதிவந் தெய்தும் இறப்பினைப் பகர்வாய்!" 180
லெம்மின் கைனனின்
அன்னை கூறினள்:
"மொழியுமிம் மரணம் மூன்றாம் மரணம்
செல்லுவாய் இன்னும்
சிறுதொலை பாதையில்
முடிந்திடும் இன்னொரு முழுநாள் இதிலிருந்(து)
வடபால்
நிலத்து வாயிலை நோக்கியே
அந்தமா நிலத்து அமைகுறும் பாதையில்
உன்மீ தப்போ
ஓரோநாய் பாய்ந்திடும்
அடுத்ததாய்க் கரடியும் அடித்திடும் உன்னை
வடபால்
நிலத்து வாயில் தலத்தினில்
மிகவும் குறுகிய மிகச்சிறு ஒழுங்கையில்;
190
உண்டது இதுவரை ஒருநூற் றுவராம்
அழிந்து போனவர் ஆயிரம் வீரராம்
உனைஏன்
அவையும் உண்டிட மாட்டா
காப்பில்லா உனைஏன் கடிதழித் திடாவாம்?"
குறும்பன்
லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"செம்மறி யாட்டுக்
குட்டியைத் தின்னலாம்
பச்சையாய்க் கிழித்துப் பலதுண் டாக்கலாம்
ஆயினும்
முடியா அதுபல வீனரை
அல்லது சோம்பேறி யானவீ ரரையும்! 200
மனிதனின் பட்டிநான்
நனிபூட் டியுளேன்
நனிபொருத் தியுளேன் மனிதனின் ஊசிகள்
வலிதுகட் டியுளேன்
மறவரின் வளையம்
ஆதலால் நானும் வீழவே மாட்டேன்
*உந்தமோ என்பான் ஓநாய்
வாய்களில்
பெரிதே சபிப்புறு பிராணியின் அலகில்.
இப்போ தோநாய்க்(கு)
எண்ணினேன் சூழ்ச்சியொன்(று)
கரடிக்கும் கூடக் கண்டுளேன் ஓர்வழி
ஓநாய்
வாய்க்கட் டுண்டிட விசைப்பேன்
கரடிக்கு இரும்புக் கட்டுறப் பாடுவேன்
210
தரைமட்ட மாக்கித் தரிபத ராக்குவேன்
சுளகிலே சலித்துப் துகளாக மாற்றுவேன்
இங்ஙனம் விடுவித் தென்னையே கொள்வேன்
இங்ஙனம் பயணத் தெல்லையை அடைவேன்."
லெம்மின் கைனனின் அன்னை கூறினள்:
"எல்லையை இன்னும்நீ எய்தவே யில்லை!
அப்படிப்
பயணித் தகலும் காலை
மாபெரும் அற்புதம் வரும்பய ணத்தில்
துயர அதிசயம்
தோன்றிடும் மூன்று
மனிதச் சாவுக்கு வந்திடும் முவ்வழி; 220
அவ்விடத் தைநீ அடைந்திடும் நேரம்
நேர்ந்திடும் இன்னும் நெடுந்துயர்ச் சம்பவம்:
பயணித் தொருகுறும் பாதையில் செல்வாய்
வடநாட்டு முற்றம் வந்துநீ சேர்வாய்
அங்கொரு வேலி அமைந்திடும் இரும்பால்
அடைப்பு உருக்கினால் ஆனதும் வந்திடும்
நிலத்தினி லிருந்து நீள்வான் வரையிலும்
விண்ணிலே யிருந்து வியன்புவி வரையிலும்
ஈட்டிகள் செருகி இருந்திடும் அதனில்
வரிச்சுகள் நெளியும் புழுக்களால் ஆனவை
230
பிணைப்புண் டிருந்தன பெரும்பாம் பிணைத்து
கனபல்லிக் **கணத்தால் கட்டிய
வேலியாம்;
வால்கள் இருப்பது வளைந்தசைந் திருக்க
மொட்டந் தலைகள் முழுதசைந் தாட
மண்டை ஓடுகள் வாய்உமிழ்ந் திருக்க
வாலெலாம் உள்ளே வருதலை வெளியே.
பூமியில் இருந்தவை புழுக்கள்வெவ் வேறாம்
வரிசையாய்ச் சர்ப்பம் விரியன் பாம்புகள்
மேலே நாக்குகள் சீறிக் கிடப்பன
கீழே வால்கள் ஆடிக் கிடப்பன;
240
அனைத்திலும் பயங்கர மான ஒன்றுளது
குறுக்கே வாயிலில் படுத்துக் கிடப்பது
நீண்டது வசிப்பிட மரத்திலும் நெடியதாய்
ஒழுங்கைக் கதவத் துயர்தூண் பருப்பம்
மேலே நாவினால் சீறிக் கிடக்கும்
மேலே வாயினால் மிகஇரைந் திருக்கும்
எதிர்பார்த் தல்ல எவரையும் வேறு
ஏழை உனையே எதிர் பார்த்தங்கு."
குறும்பன்
லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்: 250
"அந்த மரணம் அதுகுழந் தையின்சா
அதுவொரு வீரனின் மரணமே யல்ல;
அனலை வசியப்
படுத்தவும் அறிவேன்
தணலை அணைத்துத் தணிக்கவும் அறிவேன்
தடுத்துப் புழுக்களை
நிறுத்தவும் அறிவேன்
அரவைத் திருப்பி அனுப்பவும் அறிவேன்;
நேற்றுத் தானே
நிகழ்ந்த திச்சம்பவம்
விரியன் பாம்பு விளைநிலம் உழுதேன்
பாம்புப் பூமியைப்
பாங்காய்ப் புரட்டினேன்
விளங்கிய எனது வெற்றுக் கைகளால் 260
விரியன் பாம்புகள் விரல்நகத் தெடுத்தேன்
தூக்கினேன் பாம்புகள் துணிந்தென்
கைகளால்
பத்து விரியன் பாம்புகள் கொன்றேன்
அழித்தேன் நூறு கறுத்தப் புழுக்களை
ஆயினும் விரியனின் இரத்தமென் உகிர்களில்
பாம்பின் கொழுப்புப் படிந்தது கைகளில்;
ஆதலால் எனக்கு அதுநிக ழாது
என்றுமே இனிமேல் ஏற்பட மாட்டா
இராட்சசப் புழுவின்
வாய்க்குண வாக
பாம்பொன் றின்வாய்ப் படுமிரை யாக: 270
நீசப்
பிராணிகள் நீள்கரத் தெடுப்பேன்
கழுத்துக்கள் அனைத்தையும் முறுக்கிப் பிழிவேன்
விரியன் பாம்பினை வீழ்த்துவேன் ஆழம்
இழுப்பேன் தெருவின் ஓரம் புழுக்களை
வடநில
முன்றிலால் வைப்பேன் அடிகளை
செல்வேன் முன்னே இல்லத் துள்ளே."
லெம்மின்
கைனின் அன்னை கூறினள்:
"வேண்டாம், எனது வியன்மகன் வேண்டாம்!
வடபுல வசிப்பிட
வழிச்செலல் வேண்டாம்!
வேண்டாம் சரியொலா வில்அமை வீட்டினுக்(கு)! 280
வன்**வார் வாளுறு மனிதர் அங்குளார்
போரின் படைக்கல வீரர்கள் அங்குளார்
குடித்துன் மத்தம் பிடித்த மனிதர்கள்
அதிகம் குடித்து அறக் கெட்டவர்கள்
ஏழையே
உன்னை இனிச்சபித் திசைப்பார்
கூரிய அலகுறும் கொடுவாள் களுக்கு;
பாடப் பட்டனர்
பலசீர் மனிதர்முன்
வெல்லப் பட்டனர் மிகவுயர் மனிதரும்."
குறும்பன்
லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்: 290
"நான்அங்கு
முன்னர் நனிசென் றுள்ளேன்
வாபால் நிலத்து வசிப்பிடத் தாங்கே
எனைப்பா டினரிலை
லாப்பியர் எவரும்
என்னைச்சா டினரிலை எத்துர்யா மனிதரும்
நானே பாடுவேன்
நவில்லாப் பியரை
சாடுவேன் துர்யா மனிதர்கள் தம்மையும்
அவர்கள் தோள்ஊடாய்
அங்குநான் பாடுவேன்
தாடையின் ஊடாய்ச் சரியாய்ப் பேசுவேன்
சட்டைக் கழுத்து
சரியிரண் டாம்வரை
மார்பு எலும்புகள் வலிதுடை படும்வரை." 300
லெம்மின் கைனனின் அன்னை கூறினள்:
"ஓ,என் மைந்தா, அபாக்கிய வானே!
முன்னைய
நிகழ்ச்சியை இன்னமும் நினைவாய்
பழையதைப் பற்றிப் புழுகியே நிற்கிறாய்
நீயங்கு
சென்றது நிசம்தான் முன்னர்
வடபால் நிலத்து வசிப்ிடத் தாங்கே
தேங்கிய
குளங்களில் நீந்திய துண்டுதான் பயின்றாய் **முட்செடி பலவுள குளங்களில்
இரையுநீர்
வீழ்ச்சியில் இறங்கி விழுந்தாய்
பொங்கிப் பாயும் புதுநீ ரோட்டம்
310
துவோனிநீர் வீழ்ச்சியைத் தொட்டே அறிந்தாய்
அளந்தாய் மரண அகிலத் தருவியை
இன்றும் அங்குதான் இருந்திருப் பாய்நீ
ஆயினும் ஏழையுன் அன்னையால் தப்பினாய்.
நெஞ்சில்வை யப்பா நினக்குநான் மொழிவதை
வருகிறாய் நீயே வடபுல வசிப்பிடம்
உண்டு
கழுமரம் குன்றுகள் நிறைய
முன்றில்கள் நிறைய முழுத்தூண் உள்ளன
நிறைய மனிதரின்
தலைகள் அவற்றிலே
கழுமர மொன்றுதான் தலையிலா துளது 320
அக்கழு
மரத்தின் அருங்கூர் முனைக்கு
உன்தலை கொய்தே உடனெடுக் கப்படும்."
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"மடையன்
அவற்றால் மனத்துயர் கொள்வான்
தகுதியற் றவன்தான் தான்கவ னிப்பான்
ஐந்து ஆறுபோ
ராட்டஆண் டுகளில்
கொடும்ஏழ் யுத்தக் கோடைகா லத்தில்
மறவன் அவற்றை மனதில்
கொள்ளான்
தவிர்க்கவ<ம் செய்யான் தான்குறைந் தளவு; 330
என்போ ராடை எடுத்துக்
கொணர்வாய்
பழைய போராடையைப் பாங்காய்க் கொணர்வாய்!
எந்தையின் வாளை இனிநான்
எடுக்கிறேன்
அப்பா வின்வாள் அலகைத் தேடுவேன்;
அதுவும் வெகுநாள் அருங்குளிர்க்
கிடந்தது
இருந்தது மறைவாய் இயைபல் லாண்டு
அங்கே இதுவரை அழுதுகொண் டிருந்தது
தரிப்போன் ஒருவனை எதிர்பார்த் திருந்தது."
அங்ஙனம் யுத்த ஆடையைப் பெற்றனன்
படுபழம் போரின் உடையைப் பெற்றனன் 340
தந்தையின் நித்தியத் தனிவாள்
எடுத்தனன்
தாதையின் போரின் தோழனைக் கொண்டனன்
பலகையில் அதனைப் பலமாய்க்
குத்தினான்
நிலத்தில் குத்தி அலகைத் திணித்தான்:
திருப்பி வாளினைச் செங்கைப்
பிடித்தான்
பழச்செடி முடியில் ஒருபுதுப் பறவைபோல்
அல்லது வளர்**சூ ரைச்செடி
போல;
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"வடபால் நிலத்து மனைகளில் அரிது
சரியொலாப் பகுதியின் தங்ககத் தரிது 350
அரியஇவ் வாளினை அளக்க
முடிந்தவன்
இகல்வாள் அலகை எதிர்க்க முடிந்தவன்."
உருவினன் குறுக்குவில்
உறும்சுவ ரிருந்து
உரமுறு கொளுவியில் இருந்தே ஒருவில்
இனிவரும் சொற்களில்
இவ்விதம் சொன்னான்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்:
"நானொரு மனிதனாய்
நவில்வேன் அவனையே
நானொரு வீரனாய் நம்புவேன் அவனையே
எந்தன் குறுக்குவில்
இழுப்பவன் தன்னை
வளைந்தஎன் வில்லை வளைப்பவன் தன்னை 360
வடபால் நிலத்து
வசிப்பிடத் தாங்கே
அந்தச் சரியொலா அமையகங் களிலே."
குறும்பன் லெம்மின்
கைனன் பின்னர்
எழிலார் தூர நெஞ்சினன் என்போன்
அமர்க்காம் உடைகளை அணிந்து
கொண்டனன்
சமர்க்காம் உடைகளைத் தரித்துக் கொண்டனன்
தன்அடி மைக்குச் சாற்றினான்
இவ்விதம்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"அறவிலைக் கெடுத்த அடிமையே
கேள்நீ!
காசுக்குப் பெற்ற கூலியே, கேள்நீ! 370
அமர்க்காம்
குதிரையை ஆயத்தம் செய்வாய்
போர்ப்பரிக் குட்டிக்குப் பூட்டு அணிகலன்
நான்விருந் துக்கு நலமுடன் செல்ல
கூளிக் குடியரின் கூட்டத் தேக!"
அந்த
அடிமை அமைபணிச் சேவகன்
முன்னேர் விரைந்து முன்றிலை யடைந்து
அம்பரிக் குட்டிக்
கணிகலன் பூட்டி
தீச்செந் நிறத்ததை ஏர்க்கால் பூட்டி
அங்கே யிருந்து அவன்வந்
தியம்பினான்:
"என்வே லையைநான் இனிதே முடித்தேன் 380
ஆயத்த மாக்கினேன்
அரியநும் பரியை
நற்பரிக் குட்டியை நன்கலங் கரித்தேன்."
குறும்பன்
லெம்மின் கைனன் பின்னர்
புறப்பட் டேகப் புணர்ந்தது நேரம்
ஒருகை இணங்க மறுகை
பிணங்க
நரம்புள விரல்பல வந்தம் செய்தன;
நினைத்தவா றவனே நேர்புறப் பட்டான்
அவதான மிலாதே அவன்புறப் பட்டனன்.
சேய்க்குத் தாயவள் செய்தாள் போதனை
மூத்தோள் பிள்ளையை முன்னெச் சரித்தாள் 390
உத்தரத் தின்கீழ் உயர்கத
வருகே
கலயமும் கெண்டியும் கலந்தவைப் பிடத்தில்:
"எந்தன் மகனே, இணையிலா தவனே!
எனது குழந்தாய், இகலுரப் பிள்ளாய்!
நிதக்குடிக் குழுவிடம் நீசெல நேர்ந்தால்
எங்கே யாயினும் அங்ஙனம் நிகழ்ந்தால்
சாடியில் உள்ளதில் பாதியை அருந்து
கலயப்
பாதியே கவனமா யருந்து
பெறட்டும் மற்றவன் அடுத்துள பாதியை
தீயமா னிடர்க்காம்
தீதுறும் பாதி 400
சாடியின் அடியிலே சார்ந்துள புழுக்கள்
ஆழக் கலயத் தமைவன
கிருமி."
போதனை இன்னம் புரிந்தாள் மகற்கு
தன்பிள் ளைக்குச் சாற்றினள்
உறுதியாய்
தூரத்து வயல்கள் தொடுமுடி விடத்தில்
கடைசி வாயிற் கதவத னருகில்;
"நிதக்குடிக் குழுவிடம் நீசெல நேர்ந்தால்
எங்கே யாயினும் அங்ஙனம் நிகழ்ந்தால்
இருக்கையில் பாதி இருக்கையி லிருப்பாய்
அடியிடும் போது அரையடி வைப்பாய்
410
பெறட்டும் மற்றவன் அடுத்துள பாதியை
தீயமா னிடர்க்காம் தீதுறும் பாதி
அவ்விதம் வருவாய் அருமனி தனாய்நீ
நீமா றிடுவாய் நிகரிலா வீரனாய்
மக்கள்மன்
றங்கள் மற்றுநீ செலலாம்
வழக்குகள் ஆய்ந்து வழங்கலாம் சமரசம்
வீரர்கள் நிறைந்த
வியன்குழு மத்தியில்
மனிதர்கள் நிறைந்த கணங்களின் மத்தியில்."
பின்புறப்
பட்டான் லெம்மின் கைனன்
அரும்பரி வண்டியில் அமர்ந்தவ னாக 420
சாட்டையை ஓங்கிச் சாடினான் பரியை
மணிமுனைச் சவுக்கால் மற்றதை அடித்தான்:
இகல்பரி வண்டியை இழுத்துச் சென்றது
உயர்பரி விரைந்து ஓடிச் சென்றது.
சற்றுநே ரம்மவன் சவாரியே செய்தான்
நற்சிறு பொழுதே நடத்தினன் பயணம்
பாதையில்
கோழிப் பல்கணம் கண்டனன்
காட்டுக் கோழியின் கூட்டம் பறந்தது
பறவைகள் கூட்டமும்
பறந்தே வந்தது
ஓடிச் சென்ற உயர்பரி முன்னே. 430
சிறுதொகை மட்டுமே இறகுகள் இருந்தன
காட்டுக் கோழியின் கவின்சிறை வழியில்
எடுத்தனன் லெம்மின் கைனனே அவற்றை
சேர்த்தே வைத்தனன் சிறுபை யொன்றிலே;
என்ன
வருமென எவருமே யறியார்
பயணத் தென்ன நிகழுமென் றுணரார்
பயிலகத் தெதுவும் பயனுள
தாகலாம்
அவசர தேவைக் கவைநலம் தரலாம்.
சிறிதே இன்னமும் செய்தனன் சவாரி
பாதையிற் கொஞ்சம் பயணம் செய்தனன் 440
அப்போ குதிரை நிமிர்த்திற்
றதன்செவி
தழைத்ததன் செவிதாம் பரபரப் பாயின.
குறும்பன் லெம்மின் கைனன் அவனே
அவன்தான் குறும்பன் தூர நெஞ்சினன்
சறுக்கு வண்டியில் தானே எழுந்து
சற்றே
சரிந்து எட்டிப் பார்த்தனன்:
அன்னை சொன்னது அதுபோ லிருந்தது
சொந்தப் பெற்றவள்
சொல்போ லிருந்தது
நிசமாய் அங்கொரு நெருப்பா றிருந்தது
குதிரையின் முன்னே
குறுக்காய் எழுந்தது 450
ஆற்றிலே நெருப்பு வீழ்ச்சிதோன் றிற்று
பாய்வீழ்ச்
சியில்தீப் பாறைத் தீவு
பாறைத் தீவிலே படியும் தீமுடி
நெருப்பு முடியிலோர்
நெருப்புக் கழுகு
கழுகின் தொண்டையில் கனலே மூண்டது
வாயிலே தீவெளி வந்தது சீறி
இறகுகள் அனலாய் எங்கும் ஒளிர்ந்தன
தீப்பொறி சிதறி திசையெலாம் பறந்தது.
தூரநெஞ் சினனை தொலைவிற் கண்டது
லெம்மின் கைனனை நெடுந்தொலை கண்டது:
460
"எங்கப்பா பயணம் ஏ,தூர நெஞ்சின?
லெம்பியின் மைந்தனே, எங்கே எழுந்தனை?"
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"வடபுல
விருந்து, வழிப்புறப் பட்டேன்,
குடிக்கும் இரகசியக் குழுவிடம் போகிறேன்;
சற்று அப்பால் தள்ளியே நிற்பாய்
வழியினை விட்டே விலகியே நிற்பாய்
பயணியைப்
போகப் பாங்குடன் விடுவாய்
லெம்மின் கைனனை விடுவாய் சிறப்பாய் 470
கடந்துசெல் தற்கு கடுகிநின் புறமாய்
உனக்கப் பாலே உடன்நடந் தேக!"
இவ்விதம் ழுகால் இயம்ப முடிந்தது
வியன்தீத் தொண்டையால் மெதுவாய்ச் சொன்னது:
"நானொரு பயணியை நனிசெல விடுவேன்
நிசமதிற் சிறப்பாய் லெம்மின் கைனனை
என்வா
யுடா யேகுவ தற்கு
தொண்டையின் ஊடாய்த் தொடர்செல வுக்கு
அங்குதான் உன்றன்
அகல்வழி செல்லும்
அங்கிருந் ததனுடை அமைநிலத் தேக 480
அந்தநீள்
பெரிய அருவிருந் துக்கு
நிரந்தர மானதோர் நேரமர் வுக்கு."
எதைத்தான்
ஏற்றான் லெம்மின் கைனன்
அதைப்பொறுத் ததிகம் அக்கறை யில்லை
சட்டைப் பையினில்
தன்கை விட்டான்
சுருக்குப் பையினில் தொடுவிரல் நுழைத்தான்
காட்டுக் கோழியின்
கறுப்பிற கெடுத்தான்
சிறிதே அவற்றை மெதுவாய்த் தேய்த்தான்
தன்னிரு உள்ளங்
கைகளின் நடுவே
தன்விரல் பத்தின் தனியிடத் திடையே 490
காட்டுக் கோழியின் கூட்டம் பிறந்தது
காட்டுக் கோழியின் கூட்டம் முழுவதும்
கழுகின் தொண்டையுள் கடிதவை திணித்தான்
பெரும் பட்சணியின் பேரல குக்குள்
கழுகின் நெருப்பு உமிழ்தொண் டைக்குள்
இரையுண் பறவையின் ஈறுகள் நடுவே;
இடுக்கணில் அன்றவன் இவ்விதம் தப்பினான்
அவன் முதல்நாளை அங்ஙனம் கடந்தான்.
சாட்டையை ஓங்கிச் சாடினான் பரியை
மணிமுனைச் சவுக்கால் மற்றதை அடித்தான்; 500
படர்பொலிப் புரவி பாய்ந்தே சென்றது
பரியும் துள்ளிப் பாய்ந்தே சென்றது.
சிறிதே பயணப் பாதையில் சென்றனன்
சிறிது தூரம் சென்றனன் கடந்து
அதிர்ச்சியிப்
போது அடைந்தது குதிரை
பயந்து கத்திப் பாய்பரி நின்றது.
எழுந்தனன் சறுக்கு
வண்டியி லிருந்து
எட்டிப் பார்க்க எடுத்தனன் கழுத்தை
அன்னை சொன்னது அதுபோ
லிருந்தது
சொந்தப் பெற்றவள் சொல்போ லிருந்தது 510
நெருப்புக்
கணவாய் நேரெதிர் வந்தது
அந்தப் பாதையில் அதுகுறுக் கிட்டது
கிழக்கில்
வெகுதொலை முழுக்கநீண் டிருந்தது
வடமேல் எல்லையும் முடிவற் றிருந்தது
கொதிக்கும் கற்களும் கூடவே இருந்தன
எரியும் பாறைகள் தெரிந்தன அதனுள்.
எதைத்தான் ஏற்றான் லெம்மின் கைனன்
மானிட முதல்வனை மனதில் வணங்கினன்:
"ஓ,முது
மனிதனே, உயர்மா தெய்வமே!
விண்ணுல குறையும் வியனார் தந்தையே! 520
வடமேற்கிருந்தொரு மஞ்சினை யெழுப்பு
இன்னொன்றை மேற்கில் இருந்தே யனுப்பு
மூன்றாவ தொன்றை முதிர்கிழக் கிருந்து
வடகிழக் கொன்றினை வாகாய் உயர்த்து
அவற்றின் கரைகளை அமைப்பாய் ஒன்றாய்
ஒன்றொடு அவற்றை ஒன்றில் மோது!
சறுக்கு
மரமாழ் தண்பனி மழைபொழி
ஈட்டி ஆழம் எழட்டும் பொழிந்து
அச்செங் கனலும் அகன்ற
பாறைமேல்
பற்றி எரியுமப் பாறைகள் மேலே!" 530
அம்முது
மனிதர், அதிஉயர் தெய்வம்,
வானகம் வதியும் மாமுது தந்தை,
வடமேற் கிருந்தொரு
மஞ்சினை எழுப்பினார்
இன்னொன்றை மேற்கில் இருந்தே அனுப்பினார்
கிழக்கி
லிருந்தும் கிளர்முகில் படைத்தார்
வடகிழக் கிருந்து வருகாற் றுயர்த்தினார்
அவைகள் அனைத்தையும் அமைத்தார் ஒன்றாய்
ஒன்றொடு அவற்றில் ஒன்றை மோதினார்
சறுக்கு மரமாழ் தண்மழை பொழிந்தது
ஈட்டிஆ ழத்தில் எழுந்தது பொழிந்து
540
அச்செங் கனலும் அகன்ற பாறைமேல்
பற்றி எரியுமப் பாறைகள் மேலே;
ஒருபனி
மழைக்குளம் உதித்தது ஆங்கே
உறுகுழம் பினிலேரி உருவா யிற்று.
குறும்பன்
லெம்மின் கைனன் பின்னர்
பனித்திரள் பாலம் பாடினான் அதன்மேல்
பனிமழை நிறைந்த
படிகுளக் குறுக்கே
ஒருகரை யிருந்து மறுகரை வரைக்கும்
அங்ஙனம் தாண்டினன் அந்தஆ
பத்தை
பகர்இரண் டாம்நாட் பயணம் முடித்தான். 550
சாட்டையை
ஓங்கிச் சாடினான் பரியை
மணிமுனைச் சவுக்கால் மற்றதை அடித்தான்;
விரைந்து
குதிரை பறந்தே சென்றது
பரியும் துள்ளிப் பாய்ந்தே சென்றது.
ஓரிரு **மைல்கல்
ஓடிற் றுப்பரி
சிறந்தநாட் டுப்பரி சிறுதொலை சென்றது
சென்றபின் அப்பரி திடீரென
நின்றது
அசையா(து) நின்றது அந்த இடத்திலே.
குறும்பன் லெம்மின் கைனன் அவனே
துள்ளி யெழுந்தான் துணிந்தே பார்த்தான் 560
வாயிலில் ஆங்கே ஓநாய்
நின்றது
ஒழுங்கையில் கரடி ஒன்றெதிர் நின்றது
வடபால் நிலத்து வாயிலில் ஆங்கு
எதிர்நீள் ஒழுங்கையின் எல்லையில் ஆங்கு.
குறும்பன் லெம்மின் கைனனப் போது
அவன்தான் அழகிய தூர நெஞ்சினன்
சட்டைப் பையில் தன்கை யிட்டான்
சுருக்குப்
பையில் தொடுகை நுழைத்தான்
செம்மறி உரோமம் சிறிதே யெடுத்தான்
சிறிது
மென்மையாய் தேய்த்தான் அவற்றை 570
தன்னிரு உள்ளங் கைகளின் நடுவில்
தன்விரல் பத்தின் தனியிடத் திடையே.
உள்ளங் கையில் ஒருமுறை ஊதினான்
செம்மறி யாடுகள் திசைவிரைந் தோடின
செம்மறிக் கூட்டம் சேர்ந்தெலாம் விரைந்தது
மாபெரும் ஆட்டு மந்தைகள் ஓடின;
ஓநாய் அவ்வழி ஓடின விரைந்து
அவற்றைக் கரடிகள்
தாக்கத் தொடங்கின
குறும்பன் லெம்மின் கைனன் அவன்தான்
தொடங்குதன் பயணம்
தொடர்ந்தே சென்றனன். 580
தன்வழி சிறுதொலை தானே சென்றதும்
அடைந்தனன் வடபால் அகல்நில முற்றம்
அங்கே வேலியும் ஆனது இரும்பால்
அடைப்பும்
உருக்கால் அடைக்கப் பட்டது
அறுநூறு அடிகள் அகழ்மண் ணுள்ளே
ஆறா யிரமடி அகலவிண்
ணோக்கி
ஈட்டிகள் செருகி இருந்திடும் அதனில்
வரிச்சுகள் நெளியும் புழுக்களால்
ஆனவை
பிணைப்புண் டிருந்தன பெரும்பாம் பிணைத்து
பல்லிக் கணத்தால் பிணைத்த
வேலியாம்; 590
வால்கள் இருப்பது வளைந்தசைந் திருக்க
மொட்டந் தலைகள்
முழுதசைந் தாட
நவில்பெருந் தலைகள் நடுங்குதற் காக
வாலெலாம் உள்ளே வருதலை
வெளியே.
குறும்பன் லெம்மின் கைனன் அவனே
தெரிந்தனன் பினனர் சிந்தனை
செய்தான்:
"எந்தன் அன்னை இயம்பிய வாறிது
சுமந்தவள் என்னை, புலம்பிய வாறிது,
அத்தகை வேலி ஆங்கே யுள்ளது
மண்ணி லிருந்து விண்ணுக் கிணைத்தது 600
விரியன் பாம்பு இரிந்தூர் வதுகீழ்
ஆயினும் வேலி அதன்கீழ் உள்ளது
பறவை உயரப்
பறக்கிற தொன்று
ஆயினும் வேலி அதன்மே லுள்ளது."
அந்த லெம்மின் கைனனப் போது
அதிகம் அக்கறை அவன்கொள வில்லை
உறையி லிருந்து உருவிக் கத்தியை
கூரிய
இரும்பைக் கொண்டபை யிருந்து
வேலியை அதனால் வெட்டினான் ஆங்கே
கம்பை இரண்டாய்க்
கத்தி கிழித்தபின் 610
இரும்பு வேலியை இழுத்துத் திறந்தான்
கலைத்தான் பாம்புக் கணத்தை ஒருபுறம்
ஐந்து தூண்இடை அகல்வெளி பெற்றான்
எடுத்தான் கம்புகள் ஏழு அகலம்
முனைந்தான் பயணம் முன்எதிர் நோக்கி
வடபால்
நிலத்தின் வாயிலின் முன்னே.
பாதையில் நெளிந்தது பாம்புதா னொன்று
குறுக்கே
வாயிலில் படுத்துக் கிடந்தது
வீட்டுஉத் தரத்திலும் மிகநீண் டதுஅது
கதவுத்
தூணிலும் கனதடிப் பானது 620
ஊரும் பிராணிக்கு உளவிழி நூறு
அந்தப்
பிராணிக் காயிரம் நாக்குகள்
கண்அரி தட்டின் கண்களை யொத்தவை
ஈட்டியின்
அலகுபோல் இகல்நீள் நாக்கு
வைக்கோல் வாரியின் வன்பிடி போற்பல்
ஏழு தோணிகள்
போல்முது களவு.
குறும்பன் லெம்மின் கைனன் அதன்பின்
துணிந்தா னில்லைத்
தொடுகரம் வைக்க
நூறு விழியுள சீறும் பிராணிமேல்
ஆயிரம் நாக்குகள் உரியபாம்
பதன்மேல். 630
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர
நெஞ்சினன் இயம்பினன்:
"நிலத்துள் வாழும் நீள்கரும் பாம்பே!
மரணச் சாயலை
வாய்த்துள புழுவே!
காய்ந்த புல்லின் கண்நகர் பிராணியே!
பிசாச வேர்களில்
வசிக்கும் பிறவியே!
புல்மே டுகளில் போய்ஊர் சீவனே!
மரவேர் களிலே மறைந்துவாழ்
சன்மமே!
புற்களி லிருந்துனை பற்றினோர் எவரோ?
புல்வே ரிருந்துனைப் பிடித்தவ
ரெவரோ? 640
புமியில் இங்ஙனம் புரள்வதற் காக?
வழியிலே இவ்விதம்
நெளிதற் காக?
உந்தன் தலையை உயர்த்திய தெவரோ?
கூறிய தெவரோ, வேறெவர் ஆணையோ?
விறைப்பாய்த் தலையை உயர்த்திய தெவரால்?
கழுத்தைப் பலமாய் நிறுத்தியது எவரால்?
உந்தன் தந்தையா, அல்லது அன்னையா?
உனக்கு முன்பிறந்த உயர்அண் ணன்களா?
அல்லது
பின்வரும் அருத்தங் கைகளா?
அல்லது வேறு அமையுற வினரா? 650
வாயை மூடிப்போ மறைப்பாய் தலையை
உள்ளே ஒளிப்பாய் உன்சுழல் நாக்கை
சுருண்டு
சுருண்டு சுருளாய்க் கிடப்பாய்
வளைந்து வளைந்து வளையமாய்ப் படுப்பாய்
பாதையைத் தருவாய் பாதிப் பாதையை
பயணியை மேலும் பயணிக்க விடுவாய்
அல்லது
வழியைவிட் டகல்வாய் நீயே
இழிந்த பிறப்பே ஏகுக புதருள்
புற்பற் றைக்குள்
போய்நீ மறைவாய்
பாசி நிலத்திற் படர்ந்துநீ ஒளிவாய் 660
கம்பிளிக் கட்டுபோல் கடுகிநீ நழுவுவாய்
அரசங் குற்றிபோல் உருண்டுநீ செல்லுவாய்
புற்புத ருள்தலை போகத் திணிப்பாய்
புற்பற் றையுளே போவாய் மறைந்து
புற்புத
ருள்ளே உள்ளதுன் வீடு
புற்பற் றையுளேயுன் இல்லம துள்ளது;
நீஅங் கிருந்து
நேர்தலை தூக்கினால்
இறைவன் உன்தலை இன்றே நொருக்குவான்
உருக்கு முனைகொள் ஊசிக
ளாலே
இரும்பினா லான எறிகுண் டுகளால்." 670
அப்படிச்
சொன்னான் லெம்மின் கைனன்
ஆயினும் பாம்போ அதைக்கணித் திலது
உமிழ்ந்து கொண்டே
நெளிந்தது பாம்பு
நாக்கைச் சுழற்றி நனிசீ றியது
வாயை உயர்த்தி வலிதே ஒலித்தது
லெம்மின் கைனனின் சிரசிலக் கானது.
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
நிகழ்பழஞ் சொற்களை நெஞ்சிற் கொண்டான்
முதுதாய் முன்னர் மொழிந்த சொற்களை
தாயின் முந்திய போதனைச் சொற்களை; 680
குறும்பன் லெம்மின் கைனன்
கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"இதற்கும்நீ கவனம் எடுக்கா
திருந்தால்
கணிப்புக் கொஞ்சமும் காட்டா திருந்தால்
நோவால் உன்னுடல் ஊதிப்
போகும்
வெந்துயர் நாட்களால் வீங்கிப் போகும்
கொடியநீ வெடிப்பாய் இரண்டாய்ப்
பிளப்பாய்
நீசநீ மூன்று நெடுந்துண் டாவாய்
உன்தாய் அவளைநான் உரப்பி அழைத்தால்
அழைத்தால் உன்புகழ் அரும்பெற் றோரை; 690
சுருண்ட பிராணிஉன்
தொல்பிறப் பறிவேன்
நிலத்தின் அழுக்குன் வளர்ப்பையு மறிவேன்
உன்அன் னைபெரும்
ஊணே **உண்பவள்
உன்னைப் பெற்றவள் புனற்பெருஞ் சக்தி.
பெருமூண் உண்பவள்
விரிபுனல் துப்பினாள்
எச்சிலை நீரின் எழும்அலை யிட்டனள்
காற்றுவந் ததனை ஆட்டி
யசைத்தது
நீரின் சக்திதா லாட்டிச் சென்றது
ஆறு வருடமும் அதுதா லாட்டிய(து)
ஏழு கோடையும் இதுவே நிகழ்ந்தது 700
தெளிந்த கடலின் செறுமுய
ரலைகளில்
நுரைத்து எழுந்த நுடங்கலை நடுவே;
இரும்தொலை நீரதை இழுத்துச் சென்றது
வெங்கதிர் காய்ச்சி மென்மையா யாக்கினன்
தவழ்அலை அதனைத் தரைதள் ளியது
கடலலை
அதனைக் கரைவிரட் டியது.
மூவர் இயற்கைப் பாவையர் நடந்தனர்
திரையெறி கடலின்
கரையில் நடந்தனர்
இரையும் கடலதன் கரைதனில் நடந்தனர்
நடந்தவர் அதனை நனிகரைக்
கண்டனர் 710
கண்டதும் இங்ஙனம் களறினர் கன்னியர்:
'இதிலே
யிருந்து எதுதான் தோன்றலாம்
கர்த்தர் சுவாசம் கடிதிதற் கீந்து
கண்களைக்
கொடுத்துக் கருணையும் காட்டினால்?'
கர்த்தர்இக் கூற்றைக் கேட்கவும்
நேர்ந்தது
உரைத்தார் ஒருசொல் உரைத்தார் இவ்விதம்:
"தீயதி லிருந்து தீயதே
தோன்றும்
கொடியதன் உமிழ்நீர் கொடியதே ஆகும்
நானும் சுவாசம் நன்கிதற்
கூட்டினால்
கண்வைத் துத்தலை கருணையும் காட்டினால்." 720
கெட்ட பிசாசிதைக் கேட்கவும் நேர்ந்தது
கருங்கொடு மானுடம் கவனிக்க லானது
வலிந்துதான் கர்த்தராய் மாறவும் நினைத்தது
சுவாசத்தை ஊட்டிப் பிசாசம் வைத்தது
உறுதீக் கொடியாள் உமிழ்நீ ருக்கு
இரும்ஊண் உண்பவள் எச்சில் அதற்கு
பின்னர்
அதுஒரு பெரும்பாம் பானது
மாகரும் புழுவாய் மாற்றம் பெற்றது.
எங்கிருந்
தந்தச் சுவாசமும் வந்தது?
பிசாசின் எரிதழற் பிறந்தே வந்தது;
730
எங்கிருந் திதயம் அதற்கும் வந்தது?
பெருமூண் உண்பவள் பெற்றிட்ட இதயமாம்;
கொடியவிம் மூளையும் கொண்டது எவ்விதம்?
பயங்கர அருவியின் பறிநுரை யதனில்;
வந்தது எவ்விதம் வன்கொடுங் குணங்குறி?
பெரியநீர் வீழ்ச்சியின் நுரையிலே
யிருந்துதான்;
தீயஇச் சக்தியின் திகழ்தலை எதனினால்?
அதன்தலை அழுகிய பயற்றம்
விதையினால்.
அதற்கு விழிகளும் ஆனது எதனினால்?
ஆனது பிசாசதன் அரிசணல்
விதைகளால்; 740
கெட்டதன் காதுகள் கிட்டிய தெதனினால்?
பிசாசதன்
மிலாறுவின் பிஞ்சிலை யவைகளால்;
எதனினால் வாயும் இதற்கமைந் திட்டது?
பேருண்டி
யாள்**வார்ப் பிரிவளை யத்தினால்;
இழிந்ததன் வாய்நாக் கெவ்வித மானது?
தீயஇச்
சக்தியின் தெறிஈட்டி அதனினால்;
கொடியஇப் பிராணியின் கூர்எயி றெவ்விதம்?
துவோனியின் பார்லியின் சோர்உமி அதனினால்;
தீயஇச் சக்தியின் செவ்வீறு எதனினால்?
கல்லறைக் கன்னியின் கழலீறு அதனினால். 750
முதுகினைக் கட்டி
முடித்தது எதனால்?
கடும்பிசா சின்தீக் கரிகளி லிருந்து;
ஆடும் வாலையும்
அமைத்தது எதனால்?
பெரும்தீச் சக்தியின் பின்னிய கூந்தலால்;
குடல்களைப்
பிணைத்துக் கொண்டது எதனால்?
அந்திம காலச் சங்கிலிப் பட்டியால்.
இவ்வள
வேஉன் இனத்தவ ராவார்
பேர்பெறும் கெளரவப் பெருமையிவ் வளவே
நிலத்தின் கீழ்வாழ்
பிலங்கரும் புழுவே
மரண(த்து) நிறம்கொள் வலிய பிராணியே 760
பூமியின் நிறமே, **பூண்டின் நிறமே,
வானத்து வில்லின் வர்ணம் அனைத்துமே
இப்போது பயணியின் இடம்விட் டகலு
இடம்நகர் மனிதனின் எதிர்புற மிருந்து
இப்போ
பயணியை ஏக விடுவாய்
லெம்மின் கைனனை நேர்செல விடுவாய்
வியன்வட பால்நில
விருந்தத னுக்கு
நற்குடிப் பிறந்தார் நல்விருந் துக்கு."
இப்போ(து)
பாம்பு இடம்விட் டகன்றது
விழிநூ றுடையது விலகிச் சென்றது 770
தடித்த பாம்பு தான்திரும் பியது
ஓடும் பாதையில் இடம்மா றியது
பயணியை அவன்வழி
படரவும் விட்டது
லெம்மின் கைனனை நேர்செல விட்டது
வியன்வட பால்நில விருந்தத
னுக்கு
குடிக்கும் ரகசியக் குழுவி னிடத்தே.
பாடல் 27 - வடநாட்டில் போரும் குழப்பமும்
அடிகள் 1 - 204 : வடபால் நிலத்துக்கு வந்த லெம்மின்கைனன் பல வழிகளிலும்
முரட்டித்தனமாக நடக்கிறான்.
அடிகள் 205 - 282 : வடநாட்டுத் தலைவன் கோபங்
கொண்டு லெம்மின்கைனனை மந்திர சக்தியால் தோற்கடிக்க முயற்சித்து, முடியாத கட்டத்தில்
வாட் போருக்கு வரும்படி சவால் விடுகிறான்.
அடிகள் 283 - 420 : இந்தப்
போரின்போது லெம்மின்கைனன் வடநாட்டுத் தலைவனின் தலையைச் சீவி எறிகிறான். அதனால்
ஆத்திரம் கொண்ட வடநாட்டுத் தலைவி ஒரு படையைத் திரட்டி லெம்மின்கைனனை எதிர்க்கிறாள்.
கொணர்ந்தேன் இப்போ தூர நெஞ்சினனை
அஹ்தி தீவினன் அவன் வருவித்தேன்
மரணப்
பற்பல வாயில்கள் கடந்து
கல்லறை நாக்கின் கனபிடி கடந்து
வடபால் நிலத்து
வசிப்பிடத் தாங்கே
இரகசியக் குடியர் எலாம்கூ டிடத்தே;
இனிநான் புகலும் விடயம்
எதுவெனில்
எனது நாவினால் இயம்புவ தெதுவெனில்
குறும்பன் லெம்மின் கைனன்
எவ்விதம்
அவனே அழகிய தூர நெஞ்சினன் 10
வடபால் வசிப்பிடம்
வந்தான் என்பது
சரியொலா இருப்பிடம் சார்ந்தான் என்பது
அமையும் விருந்துக்
கழைப்பில் லாமல்
குடிக்கும் நிகழ்வுக் கொருதூ தின்றி.
குறும்பன் லெம்மின்
கைனனப் பாது
பையன் செந்நிறப் படுபோக் கிரிபின்
வந்து உடனே வசிப்பிடம்
சேர்ந்ததும்
தரைமத் திக்கு அடிவைத் தேகினன்
ஆட்டம் கண்டது **அப்பல கைத்தளம்
எதிரொலி செய்தது தேவதா ரின்மனை. 20
குறும்பன் லெம்மின் கைனன்
கூறினன்
உரைத்தான் அவனே உரைத்தான் இவ்விதம்:
"நானிங் குற்றதால் நலமார்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் கூறவந் தோர்க்கும் வாழ்த்துக்கள்
கேளாய்,
வடபுலக் கீர்த்திகொள் தலைவனே!
இங்கே இந்த இல்லத் துளதா
பாய்பரி கடிக்கப்
பார்லித் தானியம்
அருந்த வோர்வீரன் அரும்'பீர்'ப் பானமும்?"
அவன்தான்
வடபுல அந்நாட் டதிபன்
நீள்மே சையின்முனை நிமிர்ந்தே யிருந்தான் 30
அவனும் அவ்விடத் தமர்ந்தே கூறினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"எங்கெனும் இந்த இல்லத் திருக்கலாம்
குதிரை தங்க இடமும் இருக்கலாம்
இங்கே
தடையெதும் இல்லை உனக்கும்
இந்த மனையில்நற் பண்போ டிருந்தால்
நற்கடை வாயிலின்
பக்கமும் நிற்கலாம்
உயர்கடை வாயில் உத்தரத் தின்கீழ்
இரண்டு கலயத் திடைநடு
வினிலே
மூன்று **முளைகள் முட்டும் இடமதில்." 40
குறும்பன்
லெம்மின் கைனன் அதன்பின்
கறுத்தத் தாடியைக் கையால் முறுக்கினன்
சட்டியின்
நிறத்தில் தானிருந் த(அ)தனை
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"பிசாசுதான் இந்த வசிப்பிட மடைய,ம்
நற்கடை வாயிலின் பக்கலில் நிற்க
படிந்த
ஓட்டடை துடைத்திட இவ்விடம்
பெருக்கியே யெடுக்க புகைச்சுடர்க் குப்பை.
எந்தன்
தந்தையும் இதைச்செயார் என்றும்
இசையுறும் எந்தன் ஈன்றவர் செய்யார்
50
அந்த இடத்தில் அவ்விதம் நிற்பதை
உயர்கடை வாயில் உத்தரத் தின்கீழ்
ஏனெனில் அப்போ திடமும் இருந்தது
கவினார் பரிக்குக் களஞ்சிய முன்றிலில்
கழுவிய அறைகள் வரும்மனி தர்க்கு
கையுறை வீசிடற் கமைந்தன கொளுவி
மனிதரின்
கையுறை முளைகளும் இருந்தன
சுவர்களும் வாள்களைச் சொருகிட விருந்தன
எனக்கு
மட்டுமே ஏனது இங்கிலை
இதன்முன் எந்தைக் கிருந்தது போலவே?" 60
அடுத்ததாய் மேலும் அவன்முன் னேறினான்
மேசையின் ஒருபுற வெறுமுனைக் கேகினன்
ஆசன
ஓரத் தவனுட் கார்ந்தனன்
அமர்ந்தனன் தேவதா ரரும்பல கையிலே
அடிப்புறம் வெடித்த
ஆசனத் தமர்ந்தான்
ஆடிய தேவரா ரதன்பல கையிலே.
குறும்பன் லெம்மின் கைனன்
கூறினன்:
"வரவேற் புடைய பெருவிருந் தலநான்
'பீர்'க்குடி பானம் நேர்க்கொண
ராவிடின்
வந்து சேர்ந்தவிவ் வளவிருந் தினற்கு." 70
*இல்போ
மகளவள் நல்லெழில் தலைவி
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"ஓஹோ பையனே
உறுலெம்பி மைந்தனே
எவ்வகை விருந்தினன் இயம்புக நீயே
வந்தனை எந்தன் மண்டையை
மிதிக்கநீ
எந்தன் மூளையை இழிவு படுத்தநீ;
எங்கள்'பீர்' பார்லியாய் இன்னமும்
உள்ளது
சுவைப் பானம்மா வூறலா யுள்ளது
சுடப்படா துள்ளன துண்டிலாம் ரொட்டிகள்
தகுந்தமா மிசக்கறி சமையாது உள்ளன. 80
ஓர்நிசி முந்திநீ யுவந்துவந்
திருக்கலாம்
அல்லது அடுத்தநாள் அன்றுவந் திருக்கலாம்."
குறும்பன்
லெம்மின் கைனன் அதன்பின்
தன்வாய் கோணித் தலையைத் திருப்பினன்
கறுத்தத்
தாடியைக் கையால் முறுக்கினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"ஆகவே
விருந்திங் கருந்தப் பட்டது
விவாகக் குடியும் விருந்தும் நிகழ்ந்தது
பருகு'பீர்'ப் பானம் பங்கிடப் பட்டது
அருநறை மனிதர்க் களவிடப் பட்டது
90
சாடிகள் அனைத்தும் சரிசேர்ப் புண்டன
வைக்கப் பட்டன வன்கல யம்மெலாம்.
ஓ,நீ வடபால் உயர்நிலத் தலைவியே!
இருண்ட நாட்டின் எயிறுநீள் பெண்ணே!
பொல்லா
தவருடன் புரிந்தனை திருமணம்
நாய்மதிப் புடையரை நாடியே அழைத்தனை
தொடுபெரும்
ரொட்டித் துண்டுகள் சுட்டனை
பார்லி மணியில் 'பீர்'ப்பானம் வடித்தனை
ஆறு
வழிகளில் அனுப்பினை அழைப்பு
அழைப்பவர் ஒன்பது அகல்வழிச் சென்றனர்
100
இழிஞரை அழைத்தனை ஏழையை அழைத்தனை
அழைத்தனை ஈனரை அழைத்தனை அற்பரை
குடிசைவாழ் மெலிந்த குழுவினர் தம்மையும்
நன்கிறு கியவுடை நாடோ டி தம்மையும்
அழைத்தனை பலவகை ஆட்கள்எல் லோரையும்
அதிலெனை மாத்திரம் அழையாது விட்டனை.
எதற்காய் இதனை எனக்குநீ செய்தனை,
தந்துமா எந்தன் சொந்தப் பார்லியை?
அகப்பை
அளவிலே அடுத்தோர் கொணர்ந்தனர்
பார்லியைக் கொட்டினர் பாத்திரத் தொருசிலர், 110
**பறையிலே அளந்து பார்த்துக் கொணர்ந்தனே
அரையரை **மூடையாய் அள்ளி யெறிந்தனே
பார்லிஎன் சொந்தப் பயன்தா னியத்தை
உழுதுநான் விளைத்த உயர்தா னியத்தை.
லெம்மின் கைனன்நா னிப்போ தலவோ,
மிகுநற் பெயருடை விருந்தின னலவோ,
'பீரி'னைக்
கொணராப் போனதால் இங்கு
அடுப்பில் கலயம் இடாதே போனதால்
கலயத் துள்ளே கறியு
மிலாததால்
பன்றி யிறைச்சிகாற் **பங்கு மிலாததால் 120
நானுண் பதற்கும் நான்குடிப் பதற்கும்
நீண்டஎன் பயண நிகழ்வின் முடிவில்."
இல்போ மகளவள் நல்லெழில் தலைவி
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே:
"ஏய், யா
ரங்கே, இளஞ்சிறு பெண்ணே!
எந்தன் நிரந்தர இணையில் அடிமையே!
கலயத் துள்ளே
கறியதை வைப்பாய்
விருந்தாளிக்கு வியன்'பீர்' கொணர்வாய்!"
சிறிய அப்பெண்
வெறுமைப் பிள்ளை
கலயம் ஒழுங்கறக் கழுவி எடுப்பவள் 130
குறையாய் அகப்பையைத் துடைத்து வைப்பவள்
கரண்டியைச் சிறியதாய்ச் சுரண்டு கின்றவள்
கலயத்தி னுள்ளே கறியதை வைத்தாள்
மாமிச எலும்பையும் மற்றுமீன் தலையையும்
**கிழங்கின் பழைய கீழ்த்தண் டுகளையும்
தொடுகன ரொட்டியின் துண்டு துகளையும்;
சாடியில் அடுத்துப் 'பீரை'க் கொணர்ந்தனள்
தரமிலாப் பானம் தனைக்கல யத்தில்
குறும்பன் லெம்மின் கைனன் குடிக்க
பெருங்குடி கேட்டவன் பெரிதுங் குடிக்க. 140
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே:
"உண்மையில் நீயொரு உயர்சரி மனிதனா
இப்'பீர்'ப் பானம் எடுத்தருந் துதற்கு
இம்முழுச் சாடியும் ஏற்றுக் குடிக்க?"
குறும்புப் பையன் லெமம்மின் கைனன்
அப்போ பார்த்தனன் அந்தச் சாடியுள்:
அடியா
ழத்தில் கிடந்தன புழுக்கள்
பாதி வழிவரை பாம்புகள் மிதந்தன
விளிம்புப்
பகுதியில் நெளிந்தன ஊர்வன
பல்லி யினங்களும் பதிந்துட னூர்ந்தன. 150
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
தூர நெஞ்சினன் சொல்லினன் திடீரென
"சாடியைக்
கொணர்ந்தோர் ஏகுவர் துவோனலா
கலயம் சுமந்தோர் கடுமிறப் புலகு
சந்திர உதயம்
தான்வரு முன்னர்
இன்றையப் பொழுது ஏகி முடியுமுன்!"
பின்வரும் சொற்களில்
பின்அவன் சொன்னான்:
"ஓ,நீ 'பீர்'எனும் உரமுள பானமே!
இங்கே வீணாய் இப்போ
வந்தனை
வந்தாய் பொருளிலா வழிகள்பின் பற்ற; 160
வாயால் குடிப்பது
வடித்த'பீர்'ப் பானம்
கழிவைப் பின்னர் எறிவது நிலத்தில்
மோதிர விரலின்
முழுத்துணை கொண்டு
அத்துடன் இடது கட்டை விரலினால்."
சட்டைப் பையில் தன்கை
நுழைத்தனன்
சுருக்குப் பைக்குள் துழாவிப் பார்த்தான்
தூண்டிலைப் பையினால்
தூக்கி எடுத்தான்
இரும்பு கொளுவியை எடுத்தான் பையிருந்(து)
சாடிக் குள்ளே
தாழ்த்தினன் அதனை
'பீர்'ப் பானத்தில் போட்டனன் தூண்டில் 170
தூண்டிலில் தடக்கித் தொங்கின புழுக்கள்
வெறுப்புறு விரியன் விழுந்தன ஊசியில்
பிடித்தான் தூண்டிலில் பெருநுணல் நூறு
ஓரா யிரம்கரும் ஊர்வன வந்தன
புமியில்
வீசினன் புவிநலத் துக்காய்
அந்தத் தரையிலே அனைத்தையும் போட்டான்;
உருவினான்
தனது ஒருகூர்க் கத்தியை
பதவுறை யிருந்த பயங்கர இரும்பை
வெட்டினான் பின்னர்
வியன்புழுத் தலைகளை
முறித்தான் பாம்புகள் அனைத்தையும் கழுத்தில் 180
போதிய வரைக்கும் 'பீரை'க் குடித்தான்
கறுத்தத் தேனைத் தன்மனம் நிறைய
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"மிகமன மவந்துகொள் விருந்தாளி யல்லநான்
'பீர்'ப்பானம் கொணரும் பேறிலாப் படியால்
தரமான பானம் தரவும் படாமையால்
தாராள
மான தரும்கரங் களினால்
இன்னமும் பெரிதாம் எழிற்கல யங்களில்
கொல்லப் படவிலை
கொழும்நற் செம்மறி
வெட்டப் படவில்லை மிகப்பெரும் எருது 190
கொணரப் படவில்லை
கொழும்எரு தில்லம்
குளம்புறும் கால்நடை விளம்பறைக் குள்ளிலை."
அவன்தான்
வடபுல அந்நாட் டதிபன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"ஆதலால்
எதற்குநீ அடைந்தனை இவ்விடம்
உன்னையார் அழைத்தார் உவந்துஇக் கூட்டம்?"
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"அழைப்புள்ள விருந்தினன் ஆவான் சிறந்தவன்
அழைப்பிலா விருந்தினன் அவனிலும்
சிறந்தவன்; 200
வடநில மைந்தநீ வருவிப ரம்கேள்
வடபால் நிலத்திடை
வன்எச மானன்நீ
விலைக்குப் 'பீரை' விடுவைநீ வாங்க
பணத்துக்குக் கொஞ்சம் பானம்
பெறுவேன்."
அப்போது வடபுல அந்நாட் டதிபன்
சினமே கொண்டான் சீற்றமும்
கொண்டான்
கடுமையாய்க் கோபமும் காய்தலும் கொண்டான்
தரையிலே ஓர்குளம் தான்வரப்
பாடினான்
லெம்மின் கைனனின் நேர்எதிர் ஆங்கே
உரைத்தான் ஒருசொல் உரைத்தான்
இவ்விதம்: 210
"அதோஓர் அருவி அருந்துதற் கேநீ
குளமும் ஒன்றதோ
குடிக்கநீ நக்கி."
எதைத்தான் ஏற்றான் லெம்மின் கைனன்
உரைத்தான் ஒருசொல்
உரைத்தான் இவ்விதம்:
**"மனைவியர் வளர்த்த வளர்கன் றல்லநான்
வாலொன் றுடைய
வல்லெரு தல்லநான்
அருவியில் ஓடும் அந்நீர் குடிக்க
குளத்திலே யுள்ள கொடுநீர்
குடிக்க!"
பாடத் தொடங்கினன் மந்திரப் பாடல்கள்
பாடத் தொடங்கினன் அவனே
பாடல்கள் 220
எருதொன்(று) தரையிலே ஏற்படப் பாடினான்
மாபெரும்
காளை வளர்பொற் கொம்புகள்;
குளத்திலே இறங்கிக் கலக்கிக் குடித்தது
அருவியில்
மனம்போல் அருந்திய ததுநீர்.
வடநிலத் தான்அம் மனிதன் உயர்ந்தவன்
வாயி
லிருந்தொரு ஓநாய் **அழைத்தனன்
தரையிலே வந்தது தரிக்கப் பாடினான்
கொழுத்த
காளையைக் கொல்வதற் காகவே.
குறும்புப் பையன் லெம்மின் கைனன்
வெண்ணிறத்
தொருமுயல் வெளிவரப் பாடினான் 230
தரையிலே துள்ளித் தானது குதிக்க
அவ்வோ நாயின் அகல்வாய் முன்னால்.
வடநிலத் தான்அம் மனிதன் உயர்ந்தவன்
கோணல் அலகுறும் நாய்வரப் பாடினன்
குறித்தவம் முயலைக் கொல்வதற் காக
வாக்குக்கண் பிராணியை வாயால் கிழிக்க.
குறும்புப் பையன் லெம்மின் கைனன்
அவ்வுத் தரம்மேல் அணில்வரப் பாடினன்
உத்தரம் மீதிலே ஓடித் திரியவே
அதனைப்
பார்த்து அந்தநாய் குரைக்க. 240
வடநிலத் தான்அம் மனிதன்
உயர்ந்தவன்
பொன்னெஞ்(சுக்) கீரி புதிதெழப் பாடினன்
அந்தக் கீரிபாய்ந் தணிலைப்
பிடித்தது
உத்தரம் மீது உற்றிடும் அணிலை.
குறும்புப் பையன் லெம்மின்
கைனன்
நற்பழுப் புநிற நரிவரப் பாடினன்
பொன்னெஞ்(சுக்) கீரியைப் போய்ப்பிடித்
துண்டது
கவினார் **உரோமம் காணா தொழிந்தது.
வடநிலத் தான்அம் மனிதன்
உயர்ந்தவன்
வாயி லிருந்தொரு கோழியை **எடுத்தனன் 250
படர்தரைக்
கோழியும் படபடத் தோடவே
அந்த நரியின் அகல்வாய் எதிரிலே.
குறும்புப் பையன்
லெம்மின் கைனன்
வாயிலே பருந்து வந்திடப் பாடினன்
நாவிலே யிருந்து நனிவிரை
**நகப்புள்
வந்தது கோழியை வலிப்பாய்ந் தெடுத்தது.
வடநிலத் தலைவன் வருமா
றுரைத்தனன்
இயம்பினன் அவனே இயம்பினன் இவ்விதம்:
"இங்கே விருந்து நன்கமை யாது
விருந்தினர் அளவு மிகக் குறையா விடின்; 260
வேலைக்கு வீடு விருந்தினர்
வழிக்கு
நல்ல குடியரின் நாள்நிகழ் விருந்தும்.
பேய்வெளிப் பாடே, போஇங்
கிருந்துநீ!
மனித வர்க்க வருபுணர்ப் பிருந்து
நீசனே, இழிந்தோய், நின்வீட்
டுக்கு!
தீயனே, உடனே செல்கநின் நாடு!"
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"சபித்தலால் ஒருவனைச் சமைத்திடல் முடியா
எத்துணை தீயவன் என்றபோ திலுமே 270
அவனது இடந்திருந் தகற்றிட அவனை
அவனது நிலையிருந் தவனைத் துரத்திட."
அப்போது வடபுல அந்நாட் டதிபன்
சுவரி
லிருந்தொரு சுடர்வாள் பெற்று
பயங்கர அலகைப் பற்றிக் கரத்தினில்
உரைத்தான்
ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"ஓ,நீ அஹ்தி, தீவில்வாழ் பவனே!
அல்லது அழகிய
தூரநெஞ் சினனே!
எங்களின் வாள்களால் எங்களை யளப்போம்
எங்களின் அலகால் எங்களைக்
கணிப்போம் 280
என்வாள் சிறந்ததா இல்லையா என்பதை
அல்லது தீவினன்
அஹ்தி வாள் என்பதை!"
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"என்வாள் பற்றி
இயம்புவ தானால்
எலும்புக ளதனை என்வாள் பிளந்தது
என்வாள் நொருக்கிய தெல்லா
மண்டையும்!
அங்ஙனம் அதுவும் அமையும் போதிலே
இங்கே விருந்து நன்கமை யாது
ஆதலால் வாள்களால் அளப்போம் கணிப்போம்
எவரது வாள்தான் கூரிய தென்பதை!
290
முன்னொரு போதும் எந்தன் தந்தை
அளக்க வாளால் அஞ்சிய தில்லை
மைந்தனின்
சந்ததி மாறியா போகும்
பிள்ளையின் தலைமுறை பிறவே றாகுமா?"
எடுத்தான் வாளை
இரும்பை உருவினான்
அனற்பொறி சிந்தும் அலகைப் பற்றினான்
தோலினா லான தொடுமுறை
யிருந்து
தோலினால் இயைந்த தொடர் பட்டியினால்;
அவர்கள் கணித்தனர் அளந்தனர்
அவர்கள்
அந்த வாள்களின் **அளவுநீ ளத்தை: 300
சிறிதே
நீளமாய்த் தெரிந்தது ஒன்று
வடபுலத் தலைவனின் வாளே அதுதான்
விரல்நக மேற்கரும்
புள்ளியின் நீளம்
பாதி விரலின் பகுகணு வளவு.
தீவினன் அஹ்தி செப்பிட
லாயினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"உன்றன் வாள்தான் உயர மானதால்
உன்முறை வீசி உடன்முதல் அறைதல்."
அதன்பின் வடபுல அந்நாட் டதிபன்
வீசி
அறைந்தனன் விறற்குறி நெருங்கினன் 310
குறியை நெருங்கிக் குறுகினும்
தவறினன்
லெம்மின் கைனனின் நேர்தலைக் குறியை;
அடித்தனன் ஒருமுறை அங்குள
உத்தரம்
கூரை மரத்தின் மீதும் மோதினன்
ஓசை யெழுப்பிய உத்தர முடைந்தது
கூரை
மரமும் கூறிரண் டானது.
தீவினன் அஹ்தி செப்பிட லாயினன்
எழிலார் தூர
நெஞ்சினன் இயம்பினன்:
"உத்தரம் செய்த உயர்பிழை என்ன
கூரை மரத்தின் குற்றமும்
என்ன 320
உத்தரம் மீது ஓங்கி அறைந்தனை
கூரை மரத்தைக்
குறிபார்த் தடித்தனை?
வடபால் வாழும் மைந்தனே, கேள்நீ!
வடபால் நிலத்தின்
வன்தலை வன்நீ!
மிகவும் சிரமம் வீட்டினுள் பொருதலும்
முதுமா தரிடம் மிகுதுணிச்
**செயலும்;
புதியஇவ் வில்லினை அதிபழு தாக்குவோம்
தரையைக் குருதியால் கறையாக்
கிடுவோம்;
முற்றம் நோக்கிநாம் முன்வெளிச் செல்லலாம்
போரிட வெளியே போகலாம்
வயற்புறம் 330
புற்திடர் நோக்கியே போகலாம் சமர்க்கு;
இருந்திடும்
நன்கே இரத்தம் முன்றிலில்
அழகாய் அமைந்திடும் அயல்தோட் டவெளி
இயற்கையாய்
தெரிந்திடும் இதுபனி மழைமேல்."
அவர்கள் வந்தனர் அவ்வெளி முற்றம்
பசூசுவின் ஒருதோல் நனிகொணர் பட்டது
அதுவும் முற்ற மதில்விரி பட்டது
இருவரும்
அதன்மேல் இனிதுநிற் பதற்கு.
தீவினன் அஹ்தி செப்பிட லாயினன்
"வடபால்
நிலத்தின் மைந்தனே கேட்பாய்! 340
உந்தன் வாள்தான் உயர்நெடி தானது
உந்தன் வாளே உயர்பயங் கரமாம்
ஆயினும் தேவை அதுஉனக் காகலாம்
இருவரும் நாங்கள்
இங்கு பிரியுமுன்
உந்தன் கழுத்து உடைவதன் முன்னே
வடநில மைந்தா வாமுதல் வீசு!"
வடநில மைந்தன் வந்துமுன் வீசினன்
ஒருமுறை வீசினன் இருமுறை வீசினன்
அறைந்தனன்
மூன்றாம் முறையும் விரைந்து
ஆயினும் இலக்கில் அறைவிழ வில்லை 350
அதுசீவ வில்லை அவன்சதை கூட
அதுதொட வில்லை அவன்தோல் கூட.
தீவினன் அஹ்த
செப்பிட லாயினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"எனக்கொரு வாய்ப்பை இப்போ
தருவாய்
இனிவரப் போவது எந்தன் முறையே!"
அப்போ(து) வடபுல அந்நாட் டதிபன்
செப்பிய மொழிக்குச் செவிசாய்த் திலனே
அறைந்தான் ஓயா தறைந்தான் மீண்டும்
குறிபார்த் தானெனில் குறிதவ றிற்று. 360
தீப்பொறி பயங்கர
இரும்புசிந் திற்று
உருக்கின் அலகில் நெருப்பு எழுந்தது
குறும்பன் லெம்மின்
கைனனின் கையில்
எழுந்து சென்றதோர் இகல்ஒளிப் பிழம்பு
நோக்கிக் கழுத்தை
நுழைந்தழிப் பதற்கு
வடபால் நிலத்தின் மைந்தனின் கழுத்தை.
எழிலார் தூர
நெஞ்சினன் இயம்பினன்:
"ஆஹா, வடபால் அகல்நிலத் தலைவ!
இழிந்த மனிதனே இயைந்தநின்
கழுத்து
மிகச்சிவந் துளது விடியலைப் போல." 370
அப்போ வடபால்
அகல்நில மைந்தன்
அவன்தான் வடபுல அந்நாட் டதிபன்
தனது பார்வையைத் தான்பின்
திருப்பி
நோக்கினன் சொந்த நுவல்தன் கழுத்தை;
குறும்பன் லெம்மின் கைனனப் போது
அறைந்தனன் ஓங்கி விரைந்தே வாளால்
மனிதனை அங்கே வாளால் அடித்தனன்
தாக்கினன்
வீசித் தன்வாள் அலகை.
அறைந்தான் பின்னர் அங்கே ஒருதரம்
பெயர்த்தான்
தலையைப் பெருந்தோ ளிருந்து 380
மண்டையை நொருக்கினன் வன்கழுத்
திருந்து
**கிழங்கின் தண்டை எழுந்தொடிப் பதுபோல்
கதிர்த் தானியத்தை
அறுத்தெடுப் பதுபோல்
முழுமீன் சிறகை முன்அரி தலைப்போல்;
முன்றிலில் உருண்டு
முன்தலை சென்றது
மனிதனின் மண்டை வெளித் தோட் டத்தில்
செருகணை தூக்கிச்
சென்றது போல
மரத்தினால் விழுந்ததொர் மரக்கோ ழியைப்போல்.
நின்றன கழுமரம்
குன்றிலே நூறு
முன்றிலில் ஆயிரம் முன்எழுந் திருந்தன 390
கழுவிலே நூற்றுக்
கணக்காம் தலைகள்
இருந்தது தலையிலா தொருகழு மரந்தான்
அந்தக் குறும்பன்
லெம்மின் கைனன்
மதிப்புறும் பையனின் வன்தலை எடுத்தான்
முன்றிலி லிருந்து
மண்டையைக் கொணர்ந்தான்
அந்தக் கழுமர அருமுனை தனக்கு.
பின்னர் அஹ்தி
என்னும் தீவினன்
அழகிய தூர நெஞ்சினன் அவனே
உள்ளே திரும்பி உடன்இல் வந்து
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: 400
"வெறும்புனல் கொணர்வாய்,
வெறுப்புறு பெண்ணே!
எனது கைகளை இங்கே கழுவிட
தீய தலைவனின் செந்நீ ரிருந்து
கொடியோன் உறைந்த குருதியி லிருந்து!"
வடநில முதியவள் மாசின முற்றனள்
சினமே கொண்டாள் சீற்றமும் கொண்டாள்
வாளுடை வீணரர்கள் வரவெளிப் பாடினள்
நற்படைக் கலம் கொடு நாயகர் வெளிவர
வாள்கைக் கொண்ட மனிதர்கள் நூறுபேர்
வாள்களைச் சுமந்து வந்தபே ராயிரம் 410
லெம்மின் கைனனின்
நிமிர்தலை குறித்து
தூர நெஞ்சினன் தொடுகழுத் ததில்விழ.
நிசமாய் இப்போ(து)
நேரமும் வந்தது
சென்று கொண்டிருந்தது நிகழ்நாள் நழுவி
வருந்தத் தக்கதாய்
வந்தது சூழ்நிலை
அனைத்தும் தொல்லையாய் ஆனது நிலமை
அஹ்திப் பையன் அங்கிருப்
பதற்கு
தங்கி இருந்திட லெம்மின் கைனன்
வடபால் நிலத்து நடைபெறு விருந்தில்
இரகசியக் குடியரின் இகல்கூட் டத்தில். 420
பாடல் 28 - லெம்மின்கைனனும் அவனது அன்னையும்
அடிகள் 1 - 164 : லெம்மின்கைனன் வடநாட்டிலிருந்து விரைவாகத் திரும்பி
வீட்டுக்கு வருகிறான். வடநாட்டிலிருந்து ஏராளமானோர் தன்னுடன் போருக்கு வருவதாகவும்,
தான் எங்கே போய் மறைந்து வாழலாம் என்றும் தாயிடம் ஆலோசனை கேட்கிறான்.
அடிகள்
165 - 294 : வடநாட்டுக்குச் சென்றதற்காக முதலில் தாய் அவனைக் கடிந்தாலும் பின்னர்
மறைந்து வாழக்கூடிய பல்வேறு இடங்களைப் பற்றிக் கூறுகிறாள். கடைசியாக, ஒரு பெரிய
போர் நடைபெற்ற காலத்தில் அவனுடைய தந்தை அமைதியாக வாழ்ந்த இடமான, பல கடல்களுக்கு
அப்பால் உள்ள ஒரு தீவுக்குச் செல்லும்படி ஆலோசனை கூறுகிறாள்.
இப்போ(து) அஹ்தி என்னும் தீவினன்
குறும்பன் லெம்மின் கைனன் அவன்தான்
ஓரிடம் தேடினான் ஒளிந்து வாழ்ந்திட
விரைந்தே யவ்விடம் விட்டே ஓடினான்
இருள்நிறை வடபால் இயைநிலத் திருந்து
மங்கிய *சராவின் வாழ்வீ டிருந்து.
பனிப்புயல் போலவன் புறப்பட் டேகினன்
மூடு புகைபோல் முன்றிலை யடைந்தான்
தீச்செய லிருந்து சென்று விடுபட
தனதுகுற் றத்தால் தான்மறை தற்காய்.
10
அங்ஙனம் முன்றிலால் அவன்வரு கையிலே
செலுத்தினான் பார்வை திரும்பினான்
சுற்றி
முன்னர் கொணர்ந்த மொய்ம்பரி தேடினான்
முந்திய பரியை முயன்றவன்
கண்டிலன்
ஆனால் வயலிலோ அமைந்ததோர் பாறை
அலரிப் பற்றையோர் அருகினில் இருந்தது.
இப்போ(து) நல்ல தெதுவாம் உபயம்
எதைப்பின் பற்றலாம் ஏற்றநல் வழியென
செறும்அவன்
தலைக்குத் தீது வாராமல்
அவன்கே சத்துக் கழிவுநே ராமல் 20
அல்லது
எழில்மயிர் அதுவீழ்ந் திடாமல்.
இந்த வடநிலத் திருக்கும் முன்றிலில்
கிராமத்
திப்போ கேட்டதோர் ஓசை
இரைச்சலும் கேட்டது எலாஅயல் இல்லிலும்
உட்கிரா
மத்திலோர் ஒளிக்கீற்று மின்னல்
சாளரத் தூடாய்த் தரிசித் தனகண்.
குறும்பன்
லெம்மின் கைனன் அங்கே
அவன்தான் தீவில் வாழ்பவன் அஹ்தி
மற்றெது வாகவோ வரநேர்ந்
ததுவே
ஏற்றுள தன்னுரு மாற்றநே ரிட்டது: 30
கழுகாய் மாறிக்
ககனத் தெழும்பினன்
விண்ணினை நோக்கி மேற்பறக்(க) எண்ணினன்
கன்னம் இரண்டையும்
காய்ந்தது சூரியன்
புருவம் இரண்டையும் எரித்தது சந்திரன்.
குறும்பன் லெமம்ன்
கைனனு மங்கே
மானிட முதல்வனை மனதில் வணங்கினன்:
"ஓ,முது மனிதனே, உயர்நல்
தெய்வமே!
விண்ணிலே உறையும் மெஞ்ஞா னவனே!
முழங்கும் முகில்களை முழுதாள்
சக்தியே!
நீராவி அனைத்தையும் நிதமாள் பவனே! 40
புகாருள காலப்
புதுநிலை யாக்குவாய்
சிறிது சிறிதாய் செழுமுகில் படைப்பாய்
அந்த
ஒதுக்கில்நான் அகன்றுபோய்ச் சேரலாம்
எந்தன்இல் லத்தை நனிபெற முயலலாம்
மீண்டுமென் அன்புறும் மேலாம் தாயிடம்
என்றன் புகழ்சேர் ஈன்றவ ரிடத்தே."
அங்ஙனம் அவனும் அகன்றனன் பறந்து
செல்கையில் ஒருமுறை திரும்பிப் பார்த்தனன்
கலங்கிய நிறத்தொரு கருடனைக் கண்டனன்
அதனுடை விழிகள் அனலாய் எரிந்தன
50
வடபால் நிலத்து மைந்தனைப் போலவே
வடக்கின் முன்னால் திடத்தலை வன்போல்.
கலங்கிய நிறத்தக் கருடன் மொழிந்தது:
"ஓகோ, அஹ்தி, என் உயர்சோ தரனே!
முன்னாள்
யுத்தம் நின்நினை வுளதா
சமமாய் நடந்த சமர்நினை வுளதா?"
செப்பினன் அஹ்தி
என்னும் தீவினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"ஓ,என் கருடனே, ஒளிருமென்
பறவையே!
வீட்டினை நோக்கிநீ விரைவாய்த் திரும்பி 60
சென்றதும் அங்கு செப்புவாய் இங்ஙனம்
இருள்நிறை வடபால் இயைநிலத் தாங்கே:
'கழுகொன்று பிடிப்பதும் கடினம் கைகளால்
உளசிறப் பறவையை உண்பதும் உகிர்களால்.' "
விரைந்தே அவனும் வீட்டினை யடைந்தான்
அன்புறும் தாயின் அருகினில் வந்தான்
முகத்தில் கவலை முழுமையாய் இருந்தது
நெஞ்சமும் துயரம் நிறைந்தே கிடந்தது.
அன்னையின் எதிரில் அவனும் வந்தான்
ஒழுங்கையில் அவளும் உடன்நடக் கையிலே
70
விரைந்தடி வைக்கையில் வேலியின் அருகில்;
ஆவலாய்க் கேட்டாள் அப்போ தன்னை:
"எந்தன் மகனே, என்னிளம் மகனே!
எந்தன் பிள்ளையே, இகல்மிகும் பிள்ளையே!
மனதிலே
கவலை வந்தது எதனால்
திகழ்வட நாட்டினால் திரும்பிய வேளை?
அநீதி நற்சாடி
அளிக்கையில் நடந்ததா?
வடநில விருந்து வைபவம் அதிலே?
அநீதி நற்சாடி
அளிக்கையில் நடந்தால்
பெருந்திறச் சாடியைப் பெறுமை நீயிங்கு 80
உந்தையார் போரிலே உரிமையாய்ப் பெற்றது
அமரில் பெற்றிங் கரிதே கொணர்ந்தது."
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"எநதன் அன்னையே, எனைச்சுமந் தவளே!
சாடியால் அநீதி தாமிழைப் பவர்யார்?
தலைவரைக் கூடநான் தனிஏ மாற்றுவேன்
வீரர்நூற் றுவரை ஏமாற்ற வல்லவன்
எதிர்கொள்ள முடிந்தவன் எதிர்க்குமா யிரவரை."
லெம்மின் கைனனின் அன்னை கூறினள்:
"ஆயினும் எதனால் அகத்துயர் கொண்டாய்?
90
பொலிப்பரி உந்தனைப் புறமுறச் செய்ததா?
அவமானம் குதிரைக் குட்டியால் ஆனதா?
பொலிப்பரி உந்தனைப் புறமுறச் செய்திடில்
சிறப்புடைப் பொலிப்பரி தேர்ந்தொன்று
வாங்குவாய்
உந்தை பெற்றிட்ட உயர்பொருட் களினால்
பெற்றவர் தேடிய சொத்துக்
களினால்."
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"எந்தன் அன்னையே,
எனைச்சுமந் தவளே
அவமதிப் பதற்கு எவருளர் பரியால்?
என்னை வெல்பவர் எவர்பரிக்
குட்டியால்? 100
நானே தலைவரை நன்கவ மதிப்பவன்
மாபரி யோடும்
மனிதரை வெல்பவன்
வலியுடை மனிதரை மற்றவர் குதிரையை
வீரரை அவரவர் விறற்பொலிப்
பரியுடன்."
லெம்மின் கைனனின் அன்னை கூறினள்:
"ஆயினும் எதனால் அகத்துயர்
கொண்டாய்?
நெஞ்சில் துயரமும் நிறைந்தது எதனால்?
வடநிலத் திருந்து வந்திடும்
வேளை
நங்கையர் பார்த்துனை நகைத்தது முண்டா?
அல்லது கேலி அரிவைசெய் தனரா?
110
அங்ஙனம் உனைப்பார்த் தரிவையர் நகைத்தால்
அல்லது கேலி அரிவையர் செய்தால்
அரிவையர் மீண்டும் அதேசெயப் படுவர்
நங்கையர் பின்னர் நகைத்திடப் படுவர்."
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"எந்தன் அன்னையே, எனைச்சுமந் தவளே!
எவருளர் மகளிரால் எள்ளியே நகைப்பவர்,
யாருளர் மகளிரால் கேலிசெய்(து) நகுபவர்!
நானே தலைவரை நகைப்பவன் பார்த்து
எல்லாப் பெண்ணையும் கேலியே செய்பவன்
120
நானே நகைப்பவன் நங்கைநூற் றுவரை
மணக்கோ லத்து மாதரா யிரவரை."
லெம்மின் கைனனின் அன்னை கூறினள்:
"என்றன் மைந்தஉன் சங்கதி என்ன?
நிசமாய்
உனக்கு நேர்ந்தது என்ன
நீவட பாலாம் நிலம்சென்(ற) நேரம்,
அல்லது அதிகமாய்
அயின்றதன் பின்னர்
அதிகமாய் உண்டு அருந்திய பின்னர்
நூதன மான நுவல்கனா வந்ததா
நீதுயின் றிட்ட நீள்இரா வேளை? " 130
குறும்பன் லெமமின் கைனனப் போது
இவ்வித வார்த்தையில் இயம்பவும் முடிந்தது:
"முதிய மாதர் அதைநினைக் கட்டும்
கார்நிசி தோன்றிய கனவுகள் பற்றி!
என்இராக் கனவுகள் இருப்பன நினைவில்
தெளிவாய்
மேலும் திகழ்வது பகற்கனா;
அன்னையே, என்றன் அரும்முது பெண்ணே!
சாக்கிலா காரத்
தகுபொருள் கட்டு
சணல்நூற் பையிலே உணவுகள் வைப்பாய்
துணிப்பை ஒன்றிலே
கட்டுவாய் **உப்பினை 140
புறப்படும் வேளை புணர்ந்தது பையற்(கு)
சுயநா டகன்று பயணிக்கும் நேரம்
பொன்னெனும் இந்தப் போற்றும்இல் லிருந்து
அழகுறு தோட்ட அகல்வெளி கடந்து
வாள்களைத் தீட்டுவர் மனிதர்கள் இங்கே
சாணை
பிடிக்கிறார் சமர்க்காம் ஈட்டிகள்."
அன்னையும் விரைந்து இங்ஙனம் கேட்டனள்
வருத்தம் கண்டு வாகாய் வினவினள்:
"வாள்களை எதற்கு வலிதே தீட்டுவார்
எதற்காய்
ஈட்டியைப் பிடிக்கிறார் சாணை? " 150
குறும்பன் லெம்மின் கைனன்
கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"வாள்தீட்டு கின்றனர் வலிந்திதற்
காக
ஈட்டியைச் சாணை இதற்காய்ப் பிடிக்கிறார்:
இல்லாப் பாக்கியன் என்தலைக் காக
இழிந்த மனிதன் என்கழுத் துக்காய்;
அங்கொரு நிகழ்ச்சி, சங்கதி நடந்தது,
அந்த
வடநில அகல்முற் றங்களில்
வடபுல மைந்தனை வலிந்துநான் கொன்றேன்
அந்த வடநாட்
டதிபதி அவனையே 160
வடநாடு போர்க்கு வரத்திரண் டெழுமால்
கலகக் காரர்கள் கடும்போர்க் கெழுகிறார்
இருந்துயர் கொண்டவன் எந்தனுக் கெதிராய்
தனியனாய் நிற்கும் தமியனைச் சுற்றி."
இந்த சொற்களில் இயம்பினள் அன்னை
முதியவள் மகற்கு மொழிந்தனள் இவ்விதம்:
"ஏலவே உனக்குநான் இயம்பிய துண்டு
இதையே
நிசமாய் எச்சரித் துள்ளேன்
முயன்றேன் எவ்வளவோ முன்உனைத் தடுக்க
வடபால்
நிலத்து வழிசெலல் நிறுத்த; 170
சரியாம் வழிநீ தான்நடந்
திருக்கலாம்
தாயின் வசிப்பிடம் நீவாழ்ந் திருக்கலாம்
உரியபெற் றோர்பரா
மரிப்பில்நின் றிருக்கலாம்
உன்னைச் சுமந்தோள் தன்தோட் டவெளி(யில்)
அமரென
எதுவும் அடுத்திருக் காது
சண்டைசச் சரவு தான்நிகழ் திராது.
இப்போது
எங்கே, அதிர்ஷ்டமில் என்மகன்,
எங்குநான் சுமந்து ஈன்றசேய் ஏழ்மையன்
நவையிழைத்
தமையால் மறைவிடம் ஏகவா
தீச்செயல் புரிந்ததால் மூச்சிலா தோடவா
180
கேடுன் தலைக்குக் கிட்டி வராதிட
எழிலார் கழுத்தும் உடையா திருந்திட
சடைமயிர் துயரம் தான்கொளா திருக்க
உதிரா திருக்க உன்சீர்க் கேசம்?"
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"எனக்கு ஓரிடமும் இன்னும் தெரிந்தில
எங்கே
செல்லலாம் எங்ஙனம் செல்லலாம்
என்நவைச் செயல்களில் இருந்தே மறைய;
எந்தன்
அன்னையே, எனைச்சுமந் தவளே!
எங்கே மறைந்து இருக்கலாம், சொல்வாய்? "
190
லெம்மின் கைனனின் அன்னை கூறினள்
இயம்பினள் அவளே இயம்பினள் இவ்விதம்:
"எங்கென்று சொல்ல, எனக்குத் தெரிந்தில,
எங்கெனச் சொல்ல, எங்கே செல்லென,
தேவநல் தாருவாய் சென்றுநில் குன்றிலே
சூரைச் செடியாய் மாறுவாய் புதரில்
ஆயினும் அங்கும் அழிவுநேர்ந் திடலாம்
துரதிர்ஷ்டம் அங்கும் துரத்தியே வருமுனை
ஏனெனில் அடிக்கடி எழில்மலைத் தாருவும்
சிறுதுண்டுப் பலகைக்குச் சிதைந்தறு படல்உள
200
புதருள சூரைப் பொழிற்செடி அடிக்கடி
கம்புகள் அமைக்கக் கழிப்பதுண்
டழித்து.
நீயெழு மிலாறுவாய் நிலச்சதுப் பதனிடை
புர்ச்சநல் மரமெனப்
பொதுப்பொழில் ஒன்றில்நில்
ஆயினும் அங்கும் அழிவுநேர்ந் திடலாம்
துரதிர்ஷ்டம்
அங்கும் துரத்தியே வருமுனை
ஏனெனில் சதுப்பிலே இம்மிலா றடிக்கடி
விறகினைப்
பெற்றிட வெட்டிடப் படலுள
பொதுப்பொழி லதிலுள பூர்ச்சமும் அடிக்கடி
விளைநில
மாக்கவே வெட்டியும் சுடலுள. 210
சென்றுநீ மலைமேல் சிறுபழ
மாகிநில்
பசும்புல் தரையிலே **பழமொன் றாயிரு
எழிற்செம் **பழமென இருப்பைநீ
பூமியில்
நீலக் **கருங்கனி யாகுவே றிடங்களில்
ஆயினும் அங்கும் அழிவுநேர்ந்
திடலாம்
துரதிர்ஷ்டம் அங்கும் துரத்தியே வருமுனை
உன்னைப் பொறுக்குவர் ஒளிரிள
மங்கையர்
**ஒடித்தீய நெஞ்சத்து ஒண்டொடி எடுப்பர்.
கோலாச்சி மீனாய்
குடாக்கடற் செல்லுக
மெதுவாம் நதியிலே வெள்ளைமீ னாகுக 220
ஆயினும்
அங்கும் அழிவுநேர்ந் திடலாம்
துரதிர்ஷ்டம் அங்கும் துரத்தியே வருமுனை
புகார்போல் நிறத்தோர் புத்திளம் மனிதன்
வலைகொடு வருவான் வளர்நீர்ப் பரப்பெலாம்
கரைவலை யிளமீன் கவர்ந்திழுத் திடுவான்
மீன்வலை யால்முது மீனெலாம் பிடிப்பான்.
ஓநாய் உருவெடு உயர்வனம் சென்று
காட்டினுட் புறத்தில் கரடியாய் மாறுவாய்
ஆயினும் அங்கும் அழிவுநேர்ந் திடலாம்
துரதிர்ஷ்டம் அங்கும் துரத்தியே வருமுனை
230
புகார்த்தோற் றத்தோர் புத்திள மனிதன்
ஈட்டிகள் தீட்டி எடுப்பான்
கூர்மையாய்
காட்டோ நாய்களைக் கடிதுகொன் றழிக்க
மிகுவனக் கரடிகள் வீழ்த்தி
யொழித்திட."
குறும்பன் லெம்மின் கைனனப் போது
உரைத்தான் ஒருசொல் உரைத்தான்
இவ்விதம்:
"அறிவேன் பயங்கர அகலிடங் களைநான்
எனக்குத் தெரியும் எலாக்கொடும்
இடங்களும்
மரணம் எங்குதன் வாய்க்கவ் வும்என
எங்கெ கொடுமுடி வேற்படும் என்று;
240
எந்தன் அன்னையே, எனைவளர்த் தவளே!
அம்மா, எனக்கு அரும்பா லூட்டினோய்!
எங்கே மறைந்து இருக்கச் சொல்கிறாய்
எங்ஙனம் மொழிகிறாய், எங்ஙனம் இசைக்கிறாய்?
வாயெதிர் வந்தே மரணம்நிற் கிறது
தாடிக்கு நேரா்த் தீநாள்நிற் கிறது
ஒருமனி
தன்தலை தப்பஓர் நாள்உள
ஒருமுழு நாளே உளததில் தப்பிட."
லெம்மின் கைனனின்
அன்னையப் போது
உரைத்தாள் அவளே உரைத்தாள் இவ்விதம்: 250
"நல்லதோ ரிடத்தை
நானிவண் மொழிவேன்
பெருஞ்சிறப் பொருவிடம் பெயரொடு மொழிவேன்
தீச்செய லிருந்து
தெரிந்திடா தொளிக்க
இழிந்த குணமுளோன் விரைந்துபோய் மறைய:
இப்போ தொருசிறு
இடத்தை நினைக்கிறேன்
ஒருஇடம் பற்றி ஒருசிறி தறிவேன்
உணப்படா திருக்க, அடிபடா
திருக்க
வாள்வீ ரர்களும் வந்துசே ராவிடம்,
என்றென்றும் நிலைக்க இடுவையோர் ஆணை
பொய்யும் கேலியும் புணர்ந்திடா ஆணையொன்(று) 260
ஆறு,பத் தாண்டு அருங்கோ
டைருது
இகல்போ ருக்குஏ கேனென் றாணை
வெள்ளியை விரும்பியும் செல்லேன் அத்தோடு
பொன்வேண் டியும்நான் புகேன்என் றாணை."
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"ஆணையொன் றிட்டேன் அதிபல மாய்இதோ!
கோடை முதல்வரும் காலத்தி லில்லை
அல்லது
பருவம் அடுத்ததில் இல்லை
போர்பெரி துக்கும் போவதே யில்லை
மொய்ம்வாள் அவைகள்
மோதிடங் களுக்கு; 270
காயங்கள் இன்னும் கவின்தோள் உள்ளன
ஆழத்
துவாரம் அகல்மார் புளது
நடந்து முடிந்த நாட்களி யாட்டம்
கடந்த மோதல் களினால்
இவைகள்
பெரும்போர் நிகழ்ந்த பெருமலை களிலே
மனிதரின் கொலைவீழ் தனிக்களங்
களிலே."
லெம்மின் கைனனின் அன்னையப் போது
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள்
இவ்விதம்:
"உன்றன் தந்தையின் உயர்பட கெடுப்பாய்
அங்கே சென்று அரும்மறை
வேற்பாய் 280
ஒன்பது கடல்களில் சென்றப் பாலே
பத்தாம்
கடலின் பாதியைக் கடந்து
திறந்தநீர்ப் பரப்பின் தீவகம் ஒன்றிலே
பரவையி லுள்ள
பாறைத் தீவிலே
உந்தை முன்னர் ஒளித்த இடமது
ஒளித்துத் தன்னைக் காத்த ஓரிடம்
கோடைக் காலக் கொடும்போர் தம்மிலே
கடும்போர் நிகழ்ந்த கொடும்வரு டங்களில்
அவரங் கிருந்தது ஆனது நன்மையாய்
நாட்களைக் கழிப்பது நன்மையாய் யிருந்தது;
290
அங்கே ஒளிப்பாய் ஓர்ஈர் ஆண்டு
அகத்தினை நோக்கி ஆண்டுமூன் றினில்வா
உன்றன் பழகிய தந்தையார் மனைக்கு
பெற்றார் அமைத்த நற்பட குத்துறை."
பாடல் 29 - லெம்மின்கைனனின் அஞ்ஞாத வாசமும் துணிக்கர செயல்களும்
அடிகள் 1 - 78 : லெம்மின்கைனன் தனது படகில் கடல்களின் ஊடாகப் பயணம் செய்து
பாதுகாப்பாக அந்தத் தீவை அடைகிறான்.
அடிகள் 79 - 290 : லெம்மின்கைனன் அந்தத்
தீவில் பருவமடைந்த மகளிருடனும் மற்றும் மாதருடனும் உல்லாசமாகக் காலம் கழிக்கிறான்.
போருக்குச் சென்றிருந்த ஆண்கள் திரும்பி வந்து அவனுடைய செய்கைகளைக் கண்டு
ஆத்திரமடைந்து அவனைக் கொல்வதற்குச் சதித் திட்டம் வகுக்கிறார்கள்.
அடிகள்
291 - 402 : லெம்மின்கைனன் தீவைவிட்டு ஓடிப் போகிறான்; அதனால் அவனும் அவனில்
பிரியம் கொண்ட பெண்களும் வருந்துகிறார்கள்.
அடிகள் 403 - 452 :
லெம்மின்கைனனின் படகு ஒரு பெரும் புயலில் அகப்பட்டுச் சேதமடைகிறது. அவன்நீந்திக்
கரையை அடைந்து, அங்கு ஒருபடகைப் பெற்றுத் தனது நாட்டின் கரைக்கு வந்து சேர்கிறான்.
அடிகள் 453 - 514 : லெம்மின்கைனன் தனது பழைய வீடு எரிக்கப் பட்டிருப்பதையும் எல்லா
இடங்களும் அழிக்கப்பட்டிருப்பதையும் கண்டு வருந்துகிறான்; குறிப்பாகத் தனது தாயும்
இறந்திருக்கலாம் என்று எண்ணி அழுகிறான்.
அடிகள் 515 - 546 : ஆனால் அவனுடைய
அன்னை அப்பொழுது உயிரோடுதான் இருந்தாள்; கடுங்காட்டில் தஞ்சம் புகுந்திருந்தாள்;
இதனை அறிந்த லெம்மின்கைனன் மகிழ்ச்சியடைகிறான்.
அடிகள் 547 - 602 :
லெம்மின்கைனனின் தாய் வடநாட்டு மக்கள் வந்து வீடுகளை எரித்துச் சாம்பராக்கிய
விபரங்களைக் கூறுகிறாள்; லெம்மின்கைனன் இன்னமும் சிறந்த வீடுகளை அமைப்பேன் என்றும்
தன் தாய் பட்ட துன்பங்களுக்காக வடநாட்டைப் பழிக்குப்பழி வாங்குவேன் என்றும் சபதம்
செய்கிறான்; அத்துடன் தீவில் அஞ்ஞாதவாசம் செய்த காலத்தில் தான் மகிழ்ச்சியாக
வாழ்ந்த விபரங்களையும் தாய்க்குக் கூறுகிறான்.
லெம்மின் கைனன் குறும்புப் பையன்
அவன்தான் அழகிய தூர நெஞ்சினன்
தன்உண
வுப்பொருள் சாக்கிலே பெற்றான்
கோடை வெண்ணெயைக் கொண்டான் பெட்டியில்
ஒருவரு
டம்மவன் உண்டிட வெண்ணெய்
அடுத்த ஆண்டில் அயிலப் பன்றியூன்;
மறைவிடம் நோக்கி
மற்றவன் சென்றான்
சென்றான் அத்துடன் சென்றான் விரைந்து
உரைத்தான் ஒருசொல்
உரைத்தான் இவ்விதம்:
"செல்கிறேன் இப்போ செல்கிறேன் விரைந்து 10
முழுதாய் எதிர்கொளும் மூன்று கோடைக்கு
அடுத்தே வந்திடும் ஐந்தாண் டுக்கு
புழுக்களை விடுகிறேன் புசிக்கவிந் நாட்டை
எழிற்பொழில் **சிவிங்கி இருந்திளைப்
பாற
கழனியில் புரண்டு கலையுரு ளட்டும்
வனத்து வெளிகளில் வாத்து வாழட்டும்.
என்நலத் தாயே, இதோவிடை பெற்றேன்,
வடபுல மக்கள் வந்தால் இவ்விடம்
இருண்ட
பூமியின் திரண்டிடும் மக்கள்
உறும்என் தலையை உசாவிக் கொண்டு
20
நான்புறப் பட்டதாய் நவில்வாய் அவர்க்கு
இவ்விட மிருந்துநான் எழுந்துபோ
னேனென
சுட்டுக் கொழுத்திய சுடுகானக வெளி
கதிர்களை வெட்டிக் கட்டிய பின்னர்."
படகை நீரின் பரப்பில் தள்ளினான்
கப்பலை அலைமேல் கடிதே விட்டான்
உருக்கினா லான
உருளைக ளிருந்து
செப்புப் படகுத் திகழ்துறை யிருந்து
பாய்மரம் தனிலே பாயினை
விரித்தான்
கம்பத் தேதுணி கட்டிப் பரத்தினான்; 30
அகல்பின்
னணியம் அவனும் அமர்ந்தான்
ஆயத்த மானான் அவன்புறப் படற்கு
நம்பியே மிலாறு
நல்முன் னணியம்
தொடர்கலம் நடத்தும் சுக்கான் துணையுடன்.
உரைத்தான்
ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
உரைத்தே அவன்தான் உரைசெய லாயினன்:
"காற்றே வீசு
கப்பலின் பாய்க்கு
வாயுவே விரட்டி வன்கலம் செலுத்து
விரிமரக் கலத்தை விடுவாய்
ஓட
தாருவின் படகைத் தான்செல விடுவாய் 40
**உறுசொற் களேயிலா ஒருதீ வுக்கு
பெயரிடப் படாத பெருங்கடல் முனைக்கு.
தவழ்கால் படகைத் தாலாட் டியது
தண்கடல்
நுரையும் தள்ளிச் சென்றது
திறந்து பரந்தநீர்ச் செழும்பரப் பதனில்
விரிந்த
விசால வியன்கடற் புறத்தில்;
மாதம் இரண்டு தாலாட் டியது
மூன்றிலும் அங்ஙனம்
முன்விரைந் திட்டது.
அவ்விடம் கடல்முனை அரிவையர் இருந்தனர்
நீலக் கடலின்
நீள்கரை யோரம் 50
அவர்கள் பார்த்தனர் அவர்கள்
திரும்பினர்
நீலக் கடற்றிசை நீந்தின கண்கள்
சகோதர னுக்காய்த் தரித்தனள்
ஒருத்தி
எதிர்பார்த் திருந்தாள் வரும்தந் தையினை
ஆயினும் உண்மையில்
ஒருத்தியாங் கிருந்தது
மணமகன் தனக்காய் வருவதை நோக்கி.
தொலைவில்
தெரிந்தனன் தூர நெஞ்சினன்
தூரநெஞ் சினன்கலம் தொலைவிலே வந்தது
நளிர்சிறு
முகிற்திடர் நகர்வதைப் போல
வயன்நீ ருக்கும் வானுக் கும்நடு.
60
கடல்முனை அரிவையர் கடிதுசிந் தித்தினர்
தீவின் கன்னியர் செப்பினர்
இவ்விதம்:
"அதெ(ன்)னப்பா கடலிலே அபூர்வமாக தெரிவது
அலைமேல் அதிசயம் ஆனது
எவ்விதம்?
எங்களைச் சார்ந்ததாய் இருந்தால் கப்பல்
தீவின் பாய்மரச் செழும்பட
கானால்
இல்லத்தை நோக்கி இப்புறம் திரும்பு
தீவின் படகுத் துறையதை நோக்கி:
செய்திகள் நாங்கள் செவிமடுக் கவுளோம்
வெளிநிலப் புதினம் தெரியவு முள்ளோம்
70
கரையோர மாந்தர் அமைதியில் உளரா
அல்லது போரோ அவர் வாழ்வென்றே."
காற்றும் கலத்தைக் கடத்திச் சென்றது
அலையும் கப்பலை அடித்துச் சென்றது
குறும்பன் லெம்மின் கைனன் விரைவாய்
படகை ஓட்டினன் பாறை ஒன்றுக்கு
தீவினெல்
லைக்குச் செலுத்தினன் கப்பல்
தீவின் கடல்முனை நுனிக்குச் சென்றனன்.
சென்றதும் அங்கு செப்பினன் இங்ஙனம்
வந்து சேர்ந்ததும் வருமா றுசாவினன்:
80
"இந்தத் தீவிலே இடமெது முளதோ
தீவின் தலையிடத் திருக்குமோ நிலமெதும்
கப்பல் ஒன்றினைக் கரையிலே சேர்க்க
கலத்தைக் கவிழ்க்கக் காய்ந்த மண்ணிலே?"
தீவின் கன்னியர் செப்பினர் இவ்விதம்
கடல்முனைக் கன்னியர் கூறினர் உத்தரம்:
"ஆமப்பா தீவிலே அதற்கிட முள்ளன
தீவின் தலையிடத் திருப்பன நிலங்கள்
கப்பல்
ஒன்றினைக் கரையிலே சேர்த்திட
கலத்தைக் கவிழ்த்திடக் காய்ந்த மண்ணிலே:
90
இங்குள துறைகள் இருப்பன விசாலமாய்
கரைகளில் நிறைய உருளைகள் உள்ளன
நூறு
கலங்களில் ஏறிநீ வரிலும்
ஆயிரம் மரக்கலம் அவையிங் கடையினும்."
குறும்பன்
லெம்மின் கைனன் பின்னர்
கலத்தை இழுத்துக் கரையில் சேர்த்தனன்
மரத்து
உருளைமேல் வடிவாய் ஏற்றினன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"இந்தத் தீவிலே
இடமெது முளதோ
தீவின் தலையிடத் திருக்குமோ நிலமெதும் 100
ஒருசிறு
மனிதன் ஒளிப்பதற் காக
அங்கோர் மெலிந்தவன் அடைக்கலம் தேட
முழங்கும் பெரும்போர்
முனைகளி லிருந்து
கூரிய வாள்களின் மோதலி லிருந்து?"
தீவின் கன்னியர்
செப்பினர் இவ்விதம்
கடல்முனைக் கன்னியர் கூறினர் உத்தரம்:
"ஆமப்பா தீவிலே
அதற்கிட முள்ளன
தீவின் தலையிடத் திருப்பன நிலங்கள்
ஒருசிறு மனிதன் ஒளிப்பதற்
காக
அங்கோர் மெலிந்தவன் அடைக்கலம் தேட: 110
எம்மிடம் உண்டிங் கேற்றபல்
கோட்டைகள்
வாழ்வதற் குண்டு வனப்புள தோட்டம்
வீரர்கள் வந்துற்ற போதிலும்
நூற்றுவர்
ஆயிரம் மனிதர்வந் தடைந்தபோ தினிலும்."
குறும்பன் லெம்மின்
கைனன் பின்னர்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"இந்தத் தீவிலே இடமெது
முளதோ
தீவின் தலையிடத் திருக்குமோ நிலமெதும்
மிலாறு மரத்து வனத்திலோர் பகுதி
மற்றும் காட்டு வளர்புறத் தொருநிலம் 120
வெட்டிச் சுட்டது
மிக்கழித் திடநான்
நல்லதோர் இடம்நான் நனிமுன் னோடியாய்?"
தீவின் கன்னியர்
செப்பினர் இவ்விதம்
கடல்முனைக் கன்னியர் கூறினர் உத்தரம்:
"இந்தத் தீவிலே
இடமெது மில்லை
தீவின் தலையிடத் தில்லை நிலமெதும்
இகல்உன் முதுகள விடமுமே
யில்லை
நிகர்**பறை யளவு நிலமுமே யில்லை
வெட்டிச் சுட்டது மிக்கழித் திடநீ
நல்லதோர் இடம்நீ நனிமுன் னோடியாய்: 130
தேர்ந்தள பட்டன தீவகக் காணிகள்
வயல்கள்கோல் களினால் வகுக்கப் பட்டன
பல்காட்டு வெளிகள் பங்கிடப் பட்டன
நீதிமன் றங்களாய் நிலைத்தன புற்றரை."
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் உசாவினன்:
"இந்தத் தீவிலே இடமெது முளதோ
தீவின்
தலையிடத் திருக்குமோ நிலமெதும்
எந்தன் பாடல்கள் இசைத்தே மகிழ்ந்திட
நீண்டகா
வியங்களை நன்றாய்த் தொனிக்க 140
என்வாயி லேசொல் இனிதுரு(கு) கின்றன
முரசி லிருந்தவை முளைத்தெழு கின்றன."
தீவின் கன்னியர் செப்பினர் இவ்விதம்
கடல்முனைக் கன்னியர் கூறினர் உத்தரம்:
"ஆமப்பா தீவிலே அதற்கிட முள்ளன
தீவின்
தலையிடத் திருப்பன நிலங்கள்
இனியஉன் பாடல்கள் இசைத்து மகிழ்ந்திட
நல்லகா
வியங்களை நன்றாய்த் தொனித்திட
சோலைகள் உனக்குள சுகம் விளையாட
நடனங்கள் ஆடவும்
நல்வெளி நிலமுள." 150
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
பாடலைத் தானே
பாடத் தொடங்கினன்
முன்றிலில் **பேரி முளைக்கப் பாடினன்
திகழ்களஞ் சியவெளி
சிந்துர மரங்கள்
சிந்துர மரத்தில் சிறப்புறு கிளைகள்
ஒவ்வொரு கிளையிலும்
ஒளிரும் பழமாம்
அந்தப் பழங்களில் தங்கப் பந்துகள்
தங்கப் பந்திலே வந்தது
ஓர்குயில்
குலவுமக் குயிலும் கூவிய வேளையில்
வாயிலே தங்கம் வந்தது பெருகி
160
அலகிலே செம்பு அருவியாய்ச் சொரிந்தது
வெள்ளியும் நுரைத்து வெளியே வந்தது
பொன்னிலே ஆன பொன்மே டொன்றிலே
வெள்ளியா லான வெண்மலை யொன்றிலே.
மேலும்
பாடினன் லெம்மின் கைனன்
மற்றும் பாடினன் மந்திரப் பாடல்கள்
மணலின் துகள்களை
வெண்முத் தாக்கினன்
பளிச்சொளி விடும்வரை பாறையைப் பாடினன்
வண்செஞ் சுடர்விட
மரங்களைப் பாடினன்
பொன்னிறம் பெறும்வரை பூக்களைப் பாடினன். 170
மேலும் பாடினன் லெம்மின் கைனன்
தோட்ட வெளிகளில் தோன்றின கிணறுகள்
அந்தக்
கிணறெலாம் தங்கநல் மூடிகள்
மூடியின் மேலொரு முகிழ்பொன் வாளியாம்
சகோதரர்
குடிக்கலாம் அந்தக் கிணற்றுநீர்
சோதரி கள்தம் சுழல்விழி கழுவலாம்.
தரையிலே தோன்றவும் தடாகம் பாடினன்
நீலவாத் துக்கள் நீந்தின பொய்கையில்
தங்கத்தில் நெற்றி தலைகளோ வெள்ளி
எல்லா விரல்களும் இயைந்தன செம்பினால்.
180
தீவகக் கன்னியர் திகைத்துப் போயினர்
கடல்முனைக் கன்னியர் கண்டதி
சயித்தனர்
லெம்மின் கைனனின் நிகரில் பாடலால்
வீரன் காட்டிய மிகுதிறன்
கண்டதால்.
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன்
இயம்பினன்:
"நலமுறு பாடலை நயத்தொடு பாடுவேன்
சிறப்புறும் பாடலைச் சீராய்ப்
பாடுவேன்
ஒருகூ ரையின்கீழ் உவந்துநா னிருந்தால்
முன்நீள் மேசை முகப்பிலே
யிருந்தால்; 190
வழங்கு வதற்கொரு வனப்பில் இலையெனில்
தருவதற்
கேயொரு தரையே யிலையெனில்
தொல்கா னடைந்தென் சொற்களைப் பாடுவேன்
பற்றையி
னுள்ளென் பாடலைப் போடுவேன்."
தீவகக் கன்னியர் செப்பினர் இவ்விதம்
கடல்முனைக் கோதையர் கவின்மனத் தெண்ணினர்:
"வருவதற் கெம்மிடம் வாய்ந்துள வீடுகள்
வசிப்பதற் குள்ளன வளர்பெரும் தோட்டம்
பனிக்குளி ரிருந்து பாடலைக் கொணர
வெளிப்புறத் திருந்து மிகுசொற் பெறற்கு." 200
குறும்பன்
லெம்மின் கைனன் பின்னர்
வாழ்இல் லத்துள் வந்த கணத்தில்
பாடினன் அப்புறப்
பக்கச் சளளாடிகள்
மேசையின் முனைவரை மிகநீண் டிருந்தவை,
'பீர்'பெரு கிற்றுச்
சாடிகள் நிறைந்து
கலயத்து வந்தது கடிகமழ் தரத்தேன்
தகழிகள் எல்லாம் ததும்பி
வழிந்தன
விளிம்பு வரைக்கும் நிறைந்தன கிண்ணம்
இருந்தது சாடிகள்
நிறைந்து'பீர்'ப் பானம்
நறைகொணர்ப் பட்டது நிறையக் கலயம் 210
தயாராய்
இருந்தது தண்ணொளிர் வெண்ணெய்
அத்துடன் பன்றி அதனூ னிருந்தது
குறும்பன்
லெம்மின் கைனன் உண்டிட
தூர நெஞ்சினன் துய்ப்பதற் காக.
தூர நெஞ்சினன்
இறுமாப் புற்றனன்
சுவையுண வுணணத் தொடங்கவே யில்லை
முற்றும் வெள்ளி முனைக்கத்
தியிலா(து)
பொன்னில் குறுவாள் தன்கை யிலாமல்.
முற்றும் வெ(ள்)ளி
முனைக்கத்தி கிடைத்தது
பொன்னில் குறுவாள் பின்வரப் பாடினன் 220
அதற்குப்
பின்னர் அயின்றனன் நிறைய
வேண்டிய வரைக்கும் மிகு'பீர்' பருகினன்.
பின்னர்
குறும்பன் லெம்மின் கைனன்
கிராமப் புறங்களில் உலாவித் திரிந்தனன்
தீவரி
வையரொடு தினங்களித் திருந்தனன்
எழிலார் பினனல் இணைதலை யார்நடு
தலையை எப்புறம்
தானே திருப்பினும்
அப்புறம் ஒருவாய் முத்தம் பொழிந்தது
எப்புறம் கையை எடுத்தே
நீட்டினும்
அப்புறம் ஒருகை அதனைப் பிடித்தது. 230
இரவு
முழுவதும் இருந்தனன் வெளிப்புறம்
இருண்ட கரிய இருளின் நடுவிலே
கிடந்தஅத்
தீவில் கிராமமே ஒன்றிலை
இனியபத் தில்லம் இல்லாக் கிராமமாய்,
அக்கிரா மத்தில்
அமைந்தவீ டொன்றிலை
ஏந்திழை பதின்மர் இல்லாஇல் லமாய்,
யாருமே மகளெனக் கூறுதற்
கில்லையே
அன்னையீன் பிள்ளைகள் அங்கொருத் தியுமிலை
பக்கத் தவன்போய்ப்
படுக்காப் பாவையாய்
அவன்சென் றணையா அழகுக் கரத்தளாய். 240
ஆயிரம்
மணப்பெண் அவனும் அறிந்தனன்
நூறு விதவையோ டோ ய்வுற் றிருந்தனன்
அரிவை
பதின்மரல் அங்கிலை இருவரும்
முழுநூறு பேரிலே மூவரும் இல்லையே
அவன் அணைக்காத
அரிவையென் றிம்ப
படுக்காத விதவைப் பாவையென் றுரைக்க.
குறும்பன் லெம்மின்
கைனன் இவ்விதம்
சுகபோக வாழ்க்கை சுகித்தே நடத்தினன்
மூன்று கோடையின் முழுக்கா
லத்திலும்
இருந்தஅத் தீவின் பெருங்கிரா மத்தில், 250
கிராமப்
பெண்களுக் கருமின் பூட்டினன்
விதவை யெலாரையும் நிறைவு படுத்தினன்;
திருப்திப்
படாமல் இருந்தவள் மிஞ்சி
இழிந்தவள் ஒருத்தி முதிர்ந்ததோர் கன்னி
தீவின்
நீள்தலைத் திகழ்புற மிருந்தவள்
பத்தாம் கிராமம் பாவையங் குறைபவள்.
பயணிக்க இப்போ அவனும் விரும்பினன்
உரியநா டேக உன்னினன் அவனே
வந்தாள் முதிய
வன்முது கன்னி
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே: 260
"இழிந்த தூர
நெஞ்சினன் எழிலோன்
என்னை உனக்கு இல்லையேல் நினைவு
இங்கிருந் தேநீ ஏகலில்
செய்வேன்
பாறையில் படகை மோதவே செய்வேன்."
துயிலெழச் சேவல் தொனிகேட் டிலது
இலை**குக் குடக்குஞ் சிலைப்புறப் பாடும்
இனபமக் காரிகைக் கினிதே தரற்கு
நாரியவ் வேழையை **நகைக்கவைத் தற்கு.
போயின பலநாள் புலர்ந்தது ஒருநாள்
பலமா லைகளில் ஒருநாள் மாலை 270
நிச்சயம் எழற்கோர் நேரம்
குறித்தான்
சேவல் கூவற்கும் திகழ்நிலா வுக்கும்முன்.
எழுந்தான் வழமையாய்
எழுநேர த்துமுன்
குறித்த பொழுதுமுன் கொள்துயி லெழுந்தான்
எழுந்ததும் உடனே
புறப்பட் டேகினன்
கிராமத் தூடாய்த் திரிந்தான் அலைந்து
அந்தக் காரிகைக்கு
கின்பம் தரற்காய்
நாரியவ் வேழையை நகைக்கவைத் தற்கு.
இரவுநே ரத்தில்
ஏகினன் தனியாய்
கிராமத் தூடாய்ப் புறப்பட் டேகினான் 280
நீண்ட கடல்முனை
நேர்தலை யிடத்தே
பத்தாவ தான படர்கிரா மத்துள்
அங்கொரு வீட்டையும் அவன்கண்
டிலனே
மூன்று மனைகள் மூண்டுள வீட்டை
அங்கொரு மனையையும் அவன்கண் டிலனே
மூன்று மனிதர்கள் ஈண்டிவாழ் மனையை
அவன்எம் மனிதரும் அங்குகண் டிலனே
தம்தம்
வாளை நன்குதீட் டார்களை
போர்க்கோ டாரியைக் கூராக் கானை
லெம்மின் கைனனின்
நிமிர்தலை குறித்து. 290
குறும்பன் லெம்மின் கைனனப் போது
உரைத்தான்
ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"ஓகோ, அன்பே, உதித்தனன் ஆதவன்,
இனிய சூரியன்
இதமாய் எழுந்தான்
எழைப் பையன் எந்தன் தலைக்கு
இழிந்தவன் எனது எழிற்கழுத்
துக்கு!
பிசாசு வீரனைப் பெரிதுகாக் கட்டும்
ஒருதனி வீரனை உரிய உடையினில்
அவனது ஆடையில் அவனை வைத்திருக்க
அவனது போர்வையில் அவனைக் காக்க
300
எதிர்த்து நூற்றுவர் எழுந்திடும் போது
ஆயிரம் பேர்கள் தாக்க வருகையில்! "
அணைக்கப் படாமலே அரிவைய ரிருந்தனர்
அணைக்கப் பட்டவர் அணைபடா திருந்தனர்
படகின் உருளையைப் பார்த்தே நடந்தனன்
பாககிய மிலான்தன் படகினை நோக்கி
எரிந்து
படகாங் கிருந்தது சாம்பராய்
உருந்திரிந் திருந்தது சாம்பராய் துகளாய்.
அழிவொன் றடுப்பதை அவனும் உணர்ந்தனன்
தொல்லை நாட்கள் தொடர்வதும் தெரிந்தது
310
செதுக்கத் தொடங்கினான் செம்பட கொன்றை
படகைப் புதிதாய்ப் படைக்கத்
தொடங்கினன்.
மரக்கல மமைத்திட மரங்கள்தாம் வேண்டுமே
படகுசெய் வோற்குப் பலகைகள்
வேண்டுமே
மரங்கள் கிடைத்தன வருமிகு கொஞ்சம்
பபலகைகள் கிடைத்தன பயனிலா அற்பம்
நூல்நூற் கும்தடி நுவல்ஐந்(து) துண்டு
இராட்டினப் பலகையில் இருமுத் துண்டு.
அவற்றினி லிருந்தே அமைத்தான் படகை
தோணியைச் செய்யத் தொடங்கினான் புதிதாய்
320
மந்திர அறிவால் மரக்கலம் கட்டினன்
ஆற்றலால் அறிவால் ஆக்கம் செய்தனன்;
ஒருமுறை அறைந்தான் ஒருபுறம் வந்தது
மறுமுறை அடித்தான் மறுபுறம் பிறந்தது
மூன்றாம் முறையும் மீண்டும் அறைந்தான்
அப்போ(து) வந்தது அகல்முழுப் படகு.
இப்போ(து) படகை இகல்நீர்த் தள்ளினான்
விட்டான் கப்பலை விரியலை களின்மேல்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்
உரைத்தே அவன்தான் உரைசெய லாயினன்: 330
"நீரில் படகே நீர்க்குமி ழாய்ச்செல்
அலையிலே மிதந்துசெல் அணிநீ ராம்பல்போல்
கழுகே(யுன்) இறகில் கொணர்வாய் மூன்றை
கழுகே மூன்று **காகமே இரண்டு
இச்சிறு
படகின் இணைகாப் பாக
காத்திட ஏழைக் கவின்கல முன்புறம்."
கலத்தின் உள்ளே
காலடி வைத்தான்
திருப்பினன் படகின் திகழ்பின் னணியம்
தாழ்ந்த தலையுடன்
வீழ்ந்த மனத்துடன்
தொய்ந்து சரிந்த தொப்பியை அணிந்து 340
இரவிலே
அங்கு இருக்கொணா ததனால்
வருபகல் அங்கு வாழொணா ததனால்
இன்பம் தீவக மகளிர்க்
கீந்திட
பின்னிய கூந்தற் பெண்களோ டாட.
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"பையன் புறப்படப் படர்ந்தது வேளை
இவ்வில்
களிலிருந் தேகும் பாதையில்
இந்தப் பெண்ணின இன்பத் திருந்து
அழகிய மாதரின்
ஆடலி லிருந்து; 350
ஆயினும் நான்எழுந் தப்புறம் போனபின்
நானிங் கிருந்துபோய் நடந்து முடிந்தபின்
இங்குள பெண்கள் இன்பமே யடையார்
பின்னிய கூந்தலார் பேசார் மகிழ்வுடன்
இருண்ட இந்த இல்லங் களிலே
எளியஇத்
தோட்டத் தியைந்த பரப்பிலே."
அழுதனர் தீவதன் அரிவையர் இப்போ(து)
கடல்முனைக் கோதையர் கலங்கித் தவித்தனர்:
"ஏன் புறப்பட்டாய் லெம்மின் கைனனே
ஏன்பய ணித்தாய் இனியமாப் பிள்ளையே 360
பெண்புனி தத்தால் பெயரலுற்
றனையா
அல்லது அரிவையர் அரிதென்ப தாலா?"
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"பெண்புனி தத்தால் பெயர்ந்திட வில்லைநான்
அல்லது அரிவையர் அரிதென்று மல்ல
நூறு பெண்களை நான்பெறு வேனிங்(கு)
ஆயிரம்
மாதரை அணைத்தெடுத் திருப்பேன்;
லெம்மின் கைனன் புறப்பட லிதற்கே
இனியமாப்
பிள்ளையின் பயணம் இதற்கே 370
எனக்கொரு பெரிய ஏக்கம் வந்தது
சொந்த
நாட்டைத் தொட்டதவ் வேக்கம்
சொந்தநாட் டினது **சிறுபழத் தெண்ணம்
உரியகுன் றோர
**ஒருபழத் தாசை
சொந்தக் கடல்முனை மங்கையர் தவிப்பு
கொடும்சொந் தப்பொழிற்
கோழிகள் கலக்கம்."
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
தனது கப்பலைத்
தள்ளினன் வெளிப்புறம்
காற்று வந்தது கடத்திச் சென்றது
அலையும் எழுந்தது
இழுத்துச் சென்றது 380
நீல நிறத்து நீள்கடற் பரப்பில்
விரிந்து பரந்த வியன்கடல் மடியில்;
இழிந்த பாவையர் எஞ்சினர் கரையில்
மென்மன
மங்கையர் மிகுஈர்ம் பாறையில்
தீவகத் தோகையர் தேம்பினர் துயருடன்
பொன்போற்
பாவையர் புலம்பித் தவித்தனர்.
தீவகப் பாவையர் தேம்பினர் துயரதால்
கடல்முனைக் கன்னியர் கலங்கிப் புலம்பினர்
பாய்மரம் பார்வையில் படிகின்(ற)
வரையிலும்
இரும்பதன் இணைப்புகள் தெரிந்திடும் வரையிலும்; 390
பாய்மரத் துக்காய்ப் பாவையர் அழுதிலர்
இரும்பிணைப் புக்காய்ப் பெருந்துய
றுற்றிலர்
பாய்மரக் கீழுறும் பையனுக் கழுதனர்
சுக்கான் பீடத் தோனுக் கழுதனர்.
லெம்மின் கைனனும் நெஞ்சுற அழுதனன்
ஆனால் அழுததும் அடைகடுந் துயரும்
தீவதன்
தரையே தெரிகின்ற வரைதான்
கடல்தீவு மேடுகள் காண்கிற வரைதான்;
தீவதன்
தரைக்காய்த் திகைப்புற் றழுதிலன்
தீவுமேட் டுக்காய்ச் சேர்துயர் கொண்டிலன் 400
ஆனால் தீவதன் அரிவையர்க் கழுதனன்
மேட்டு நிலத்து வாத்துகட் கழுதனன்.
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
நீலக் கடலில் நெடுந்தொலை சென்றனன்
சென்றனன்
ஒருநாள் சென்றனன் இருநாள்
மூன்றாம் நாளில் முழுமையும் சென்றனன்
அப்போ(து)
காற்று அங்கார்ந் தெழுந்தது
அத்துடன் அடிவான் அதுஇடித் தார்த்தது
வலியகாற்
றொன்று வடமேற் கினிலே
கடுமகாற் றொன்று காண்வட கிழக்கிலே 410
பற்றிய தொருபுறம் பற்றிய(து) மறுபுறம்
முற்றாய்ப் படகை முடித்தது புரட்டி.
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
நீரை நோக்கி நீள்கரம் திருப்பி
வலித்துச்
சென்றனன் வன்விரல் களினால்
உதைத்துச் சென்றனன் உறுதன் கால்களால்.
நேர்இரா
நெடும்பகல் நீந்திச் சென்றபின்
அதிக தூரம் அவன்உதைத் தானபின்
நகர்வதைக்
கண்டனன் நன்கோர் சிறுமுகில்
விரிவட மேற்கதன் விளிம்பைக் கண்டனன் 420
அதுபின் நிலமாய் அங்குமா றிட்டது
கடலின் முனையாய்க் காட்சியும் தந்தது.
கரையில் ஏறினன் கரையிலோர் இல்லம்
ரொட்டிகள் தலைவி சுட்டவா றிருந்தனள்
தையலர்
அவற்றைத் தட்டிட லாயினர்:
"ஓ,நற் கருணைகூர் உயர்ந்த தலைவியே!
உன்னால் என்பசி
உணர்ந்திட முடிந்தால்
எந்தன் நிலமையை இனிதுநீ அறிந்தால்
களஞ்சிய அறையை காணநீ
ஓடு!
பனிப்புய லாய்ப்'பீர்'ப் பானத் தறைக்கு 430
சாடியொன்
றார்'பீர்'ப் பானம் கொணர்வாய்
பன்றி யிறைச்சித் துண்டுகள் கொணர்வாய்
அவற்றைப்
பின்னர் அனலில் வாட்டுவாய்
மிகைஅவை மீது வெண்ணெயைப் பூசுவாய்
இளைத்ததோர்
மனிதன் எடுத்துணற் காக
நீந்திய நாயகன் சோர்ந்தவன் அருந்த
நானிராப் பகலாய்
நளிர்கடல் நீந்தினன்
திறந்த கடலதன் பரந்த அலைகளில்
காற்றொவ் வொன்றையும்
கருதித் தஞ்சமாய்
கடலின் அலைகளைக் கருணையாய்க் கருதி." 440
அப்போ(து) கருணைகூர் அந்தத் தலைவி
கவின்குன்றி லேயமை களஞ்சியம் சென்றனள்
வெண்ணெயைக் களஞ்சியத் திருந்தே வெட்டினள்
பன்றி யிறைச்சியைத் துண்டுதுண்
டாக்கினள்
அவற்றை வாட்ட அனலில் போட்டனள்
பசியுறு மனிதன் புசிப்பதற் காக
சாடியொன் றினில்'பீர்'ப் பானம் கொணர்ந்தனள்
நீந்திய நாயகன் சோர்ந்தவன் அருந்த;
பின்னர் புதியதோர் பெரும்பட கீந்தனள்
தயாராய் இருந்த தக்கதோர் தோணி
450
மனிதன் வேறொரு நனிநா டேக
இல்லினை நோக்கி எழுந்திடப் பயணம்.
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
இல்லம் வந்து இறங்கிய போது
அறிந்தனன்
நிலத்தை அறிந்தனன் கரையை
தீவுக ளோடு தெரிந்தனன் நீரிணை
தொன்நாட் படகுத்
துறையையும் உணர்ந்தனன்
வழக்கமாய் வாழ்ந்த வளவிடம் உணர்ந்தனன்
குன்றையும்
குன்றின் குலத்**தேவ தாருவும்
மேட்டையும் மேட்டின் வியன்**தாரு மரத்தையும்
460
ஆயினும் இல்லத் தடத்தை யறிந்திலன்
இல்லதன் சுவர்கள் இருந்தஅவ் விடத்தை
இல்லம் இருந்த இடத்திலிப் போது
இளம்பழச் **செடிகள் சலசலத் திருந்தன
தேவதா
ரிருந்தது திகழ்மனைக் குன்றிலே
சூரைச் செடிகளாம் சுவரின் பாதையில்.
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"நான்உலா
வியபொழில் நன்கதோ உள்ளது
அங்கே யுளனயான் அடியிட்ட பாறைகள் 470
நான்விளை யாடிய நற்புற் றரையதோ
துள்ளித் திரிந்தஎன் நல்வயற் கரைஅதோ;
பழகிய
என்னிலைப் பறித்தே கியதெது
அழகிய கூரையை அகற்றிய வர்யார்?
வீட்டை யெரித்ததால்
சாம்பரா யானது
சாம்பரைக் காற்றும் தானடித் தகன்றது."
அங்கே அவன்பின்
அழவும் தொடங்கினன்
ஒருநாள் அழுதனன் இருநாள் அழுதனன்;
அவனே அழுதது அகத்துக்
கல்லவே
களஞ்சிய அறைக்காய்க் கவலையு முற்றிலன் 480
இ(ல்)லத்துப்
பழகிய ஏந்திழைக் கழுதான்
அக்களஞ் சியவறை அன்புளாட் கழுதான்.
பறவை ஒன்று
பறப்பதைக் கண்டனன்
ஓர்கழு கங்கு உயர்ந்தசைந் தகல்வதை
அதனை இவ்விதம் அவனும்
வினவினன்:
"ஓ,என் கழுகே, உயர்நற் பறவையே!
உரைத்திட எனக்கு உனாலா காதா
எனது
முந்திய இனியதாய் எங்கே
என்னைச் சுமந்தஅவ் வெழில்மகள் எங்கே
எனைமுலை யுட்டிய
இனியவள் எங்கே? " 490
எதுவும் நினைவிலை ஏகிய கழுகுக்(கு)
மூடப் பறவை முற்றொன் றறியா(து)
இறந்தாள் அவளே எனக்கழு கறியும்
காணா
தொழிந்ததைக் **காகமும் அறியும்
ஒருவாள் செயலால் வறிதே மறைந்தாள்
கொடும்போர்க்
கோடரிக் கொலையுண் டனள்என.
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர
நெஞ்சினன் இயம்பினன்:
"ஐயகோ எனைச்சுமந் தளித்த அழகியே!
முலையுட்டி வளர்த்த
முந்தென் இனியளே! 500
எனைச் சுமந்தவளே, இறந்து போயினையோ?
அன்புறும் அன்னாய், அகன்று போனாயோ?
அன்னாய் தசைநிலத் தழுகி யழிந்ததோ!
தேவதா
ரதன்மேல் செறிந்து முளைத்ததோ!
குதிக்கால் சூரைக் கொழும்செடி வளர்ந்ததோ!
அலரியும் விரல்நுனி அவற்றில் எழுந்ததோ!
தண்டனைக் குரியவன் தான்நான் இழியவன்
துர்பாக் கியவான் அற்பப தராதி
எந்தன் வாளை எடுத்தாங் குயர்த்தினேன்
அழகிய
ஆயுதம் அதைநான் ஏந்தினேன் 510
அங்கே வடபால் அகல்நில முன்றிலில்
வல்லிருட் பூமியின் வயற்கரை யோரம்
சொந்த இனத்தொரு தோகையைக் கொல்ல
அன்றெனைச்
சுமந்த அன்னையை இழக்க."
பார்த்தனன் திரும்பிப் பார்த்தனன் சுற்றிலும்
காற்சுவ டொன்றைக் கண்டனன் சிறிதே
காண்புல் நடுவில் கசங்கிக் கிடந்ததை
அப்பசும் புற்றரை அழிந்து கிடந்ததை;
அந்தப் பாதையில் அறிதற் கேகினன்
அவ்வழி
ஏகினன் அதைஓர் வதற்காய் 520
அவ்வழி வனத்தின் அமைவுட் சென்றது
அவ்வழி அவனை அழைத்துச் சென்றது.
ஏகினன் ஒன்று இரண்டு**மைல் தூரம்
சிறிதே
தூரம் தரையில் விரைந்தனன்
உயர்இருட் காட்டின் உள்ளே நுழைந்தனன்
வலிதடர்
காட்டின் வளைவில் மூலையில்;
இரகசியச் சவுனா இருக்கக் கண்டனன்
மறைந்தொரு சிறிய
மனைக்குடில் இருந்தது
இருஉயர் பாறை இடைநடு வினிலே
முத்தேவ தாரு மூலையின் கீழே
530
அன்புறும் அன்னையை அங்கே கண்டனன்
உயர்சிறப் புடையாள் ஒளித்தாங்
கிருந்தனள்.
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
பெரிதும் மகிழ்ந்தான்
பேர்களிப் படைந்தான்
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்
இந்தச் சொற்களில்
இவ்விதம் மொழிந்தான்:
"ஓகோ, எந்தன் உயர்வன் பன்னாய்!
தாயே, என்னைத் தனிவளர்த்
தவளே!
இன்னும் உயிரோ டிருக்கிறா யம்மா!
ஈன்றநீ இன்னும் இருக்கிறாய்
விழிப்பாய் 540
இறந்து போனதாய் இதுவரை அறிந்தேன்
எல்லா வகையிலும்
இழந்ததாய் நினைத்தேன்
வாளின் வலியால் வலிதே சென்றதாய்
ஈட்டி குத்தியும்
இறந்ததாய் நினைத்தேன்;
அழுதேன் இனிய அகல்விழி மறைய
அழகிய முகமும் அழிந்தே
போக."
லெம்மின் கைனனின் அன்னை கூறினள்:
"இன்னும் உயிரோ டிருக்கிறேன்,
ஆமாம்,
அங்கிருந் தேநான் அகன்றிட நேரினும்,
மறைந்து வாழ்நிலை வந்திட்ட
போதிலும், 550
இந்தக் காட்டின் இருண்டவிவ் விடத்தே
அடர்ந்த
காட்டின் அமைவளை மூலையில்;
ஒருபெரும் யுத்தம் வடநிலம் தொடுத்தது
போருக்கு
வந்ததோர் புதுப்பெருங் கூட்டம்
இழிந்த மனிதன் எதிராய் உனக்கு
அதிர்ஷ்ட மற்றவ
னாமுனக் கெதிராய்
இல்களைச் சாம்பராய் எரித்தே யாக்கினர்
எங்கள் தோட்டம்
எல்லாம் வீழ்த்தினர்."
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:
"என்றன்
அன்னையே, எனைச்சுமந் தவளே! 560
என்றுமே இதற்காய் இனித்துயர்
வேண்டாம்
அதற்காக வேனும் எதற்காக வேனும்
கவின்மனை புதிதாய்க் கட்டத்
தொடங்கலாம்
இன்னும் சிறந்த இல்கள் கட்டலாம்
வடநில மீது வன்போர் தொடுபடும்
பிசாச இனத்தவர் பேரழி வுறுவர்."
பின்னர் லெம்மின் கைனனின் அன்னை
இந்தச்
சொற்களில் இயம்பினள் அவளே:
"வெகுநாள் தங்கினாய் வெளியே மகனே
தூரநெஞ் சினனே
தொலைவிலே வாழ்ந்தாய் 570
அந்த வெளிப்புற அயல்நா டுகளில்
அன்னிய
மான அம்மனை வாயிலில்
பெயரிடப் படாத பெருங்கடல் முனைகளில்
**உறுசொற் களேயிலா
ஒருதீ வதனில்."
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன்
இயம்பினன்:
"அங்குநான் வாழ்ந்தது அருமையா யிருந்தது
திரிந்து மகிழ்ந்தது
தினம் இனிப்பானது
திகழுமம் மரங்கள் சிவப்பாய் மிளிர்ந்தன
மரங்களோ சிவப்பு
மண்ணதோ நீலம் 580
ஊசி யிலைமரத் துயர்கிளை வெள்ளி
புதர்ச்செடிப்
**பூக்கள் பொன்னா லானவை;
தேன்நிறை குன்றுகள் செறிந்தாங் குள்ளன.
பாறைகள்
எங்ஙணும் கோழியின் முட்டைகள்
பட்ட**தா(ரு) மரமெலாம் பசுந்தேன் வடிந்தது
உழுத்திடும் **தேவதா ரூற்றிய துபால்
வேலிகள் மூலையில் வெண்ணெயாய் வழிந்தது
வேலியின் கம்பத்தில் மிகுந்த'பீ ரொ'ழுகிற்று.
அங்குநான் வாழ்ந்தது அருமையா
யிருந்தது
காலம் மதுரமாய்க் கழிந்துகொண் டிருந்தது; 590
அங்குபின் வாழ்வது ஆனது கொடுமையாய்
அங்குநான் இருப்பது அன்னிய மானது:
அஞ்சினர் அவர்கள்தம் பெண்களைப் பற்றியே
நம்பினர் கெட்டவர் நடத்தையில், என்பதாய்,
எளிய பிறவிகள் இரும்பானை **வயிறுளார்
தீய கொழுத்த செயல்கெடும் பிறவிகள்,
தையலர் இருந்தனர் தகாத நடத்தையில்
என்னுடன் கழித்தனர் இரவுகள் பலவென;
மறையலா யினேன்நான் மங்கைய ரிடத்திருந்(து)
கவனமா யிருந்தேன் வனிதையர்
மகளார்க்(கு) 600
ஓநாய் பன்றிகட் கொளிப்பதைப் போல
கிராமக்கோ
ழிக்குக் கழுகு மறைதல்போல்."
பாடல் 30 - லெம்மின் கைனனும் உறைபனி மனிதனும்
அடிகள் 1-122 : லெம்மின்கைனன் வடநாட்டின் மீது போர் தொடுப்பதற்கு உதவுமாறு தனது
பழைய தோழனான தியேராவைக் கேட்கிறான்.
அடிகள் 123-316 : வடநிலத் தலைவி
உறைபனியை உருவாக்கி கடலில் இருந்த கப்பல்களை உறையச் செய்கிறாள். உடன் இருந்த
வீரர்களும் உறையப் போகும் சமயத்தில் லெம்மின்கைனன் தனது மந்திர சக்தியாலும் மாயச்
செயல்களாலும் உறைபனியினால் ஏற்பட்ட அகோரத்தைத் தாங்குகிறான்
அடிகள் 317- 500
: லெம்மின்கைனன் பனிக்கட்டி மேல் நடந்து கடற்கரைக்கு வருகிறான். பின்னர் வெகுகாலம்
காடுகளில் துன்பத்துடன் அலைந்து திந்து கடைசியில் தனது வீட்டை அடைகிறான்.
அஹ்திப் பையன் அவன்நிக ரற்றோன்
குறும்புப் பையன் லெம்மின் கைனன்
காலை
ஒருநாள் வேளை வைகறை
அந்த நாளில் முன்புலர் நேரம்
படகுச் சாலையுட் பதித்தான்
காலடி
நற்கப் பற்றுறை நடந்தான் நோக்கி.
அங்கே மரத்தின் அகல்பட கழுதது
புலம்பிற் றிரும்பின் துடுப்புப் பூட்டு:
"எவரோ கட்டிய எனக்கெது வுண்டு
எவரோ
செதுக்கிய எளியேன் எனக்கு? 10
செருபோ ருக்கெனைச் செலுத்திலன் அஹ்தி
ஆறு,பத்
தாண்டு அருங்கோ டைருது
வெள்ளியை அவனும் விரும்பிய தில்லை
பொன்னைத் தேடிப்
போனது மில்லை."
குறும்பன் லெம்மின் கைனன் அவனே
படகினை அறைந்தான் பருகை
யுறையால்
எழிலாய் மின்னும் இகத்தோ லுறையால்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"தாருவின் மிதவையே தனித்துயர் வேண்டாம்
மரத்தின் புறமே முறையிடல் வேண்டாம் 20
இனியும் போர்க்கெழ இருக்கும் வாய்ப்பு
சண்டைக் கேகும் சந்தர்ப் பம்வரும்:
துடுப்புக் காரரால் நிரப்பப் படுவைநீ
நாளை விடியும் நற்பொழு திருந்து."
அன்னையின் அருகே அடிவைத் தடைந்தான்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"அன்னையே இப்போ தழுவது வேண்டாம்!
பெற்றவ ளேயெனை, பொதும் புலம்பேல்!
எங்கா
வதுதான் ஏகுவ தானால்
போர்க்களத் துக்குப் போவதா யிருந்தால்; 30
என்றன் மனதில் இதுதோன் றியது
எனக்கு வந்த எண்ணமு மிதுவே
வீழ்த்துதல் வேண்டும்
மிகுவட நாட்டாரை
தண்டிக்க வேண்டும் தாழ்விழி மாந்தரை."
அவனைத் தடுக்க
அன்னையும் முயன்றாள்
எச்சாத் தனளவ் விருமுது பெண்ணே:
"செல்லுதல் வேண்டாம்,
செல்வஎன் மகனே!
அந்த வடபால் அகல்நிலப் போர்க்கு!
எதிர்நோக் கிவரும் இறப்பே
யங்கு
சந்திக்க நேரும் தனிநின் மரணம்." 40
எதைத்தான்
ஏற்றான் லெம்மின் கைனன்
செல்வது என்றே தீர்மா னித்தான்
புறப்பட் டேக ஒரேமுடி
வெடுத்தான்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"இன்னொரு மனிதனை எங்கே
பெறலாம்
இன்னொரு மனிதனும் இன்னொரு வாளும் அஹ்தி போர்க்கே அருந்துணை யாக
உதவிக் கின்னொரு உரமுறு மனிதனை?
தொந்தவன் எனக்குத் *தியேரா உள்ளான்
*பனிப்பத மனிதனை பல்கால் அறிவேன் 50
பெறுவேன் அவனைப் பிறிதொரு
மனிதனாய்
பிறிதொரு மனிதனும் பிறிதொரு வாளும்
அஹ்தி போர்க்கே அருந்துணை யாக
உதவிக் கின்னொரு உரமுறு மனிதன்.
கிராமத் தூடாய் விரைந்தவ னேகினன்
தியேரா
தோட்டத் தெருக்களின் வழியாய்
அங்கவ னடைந்தது மிங்ஙனம் மொழிந்தான்
சேர்ந்ததும்
வந்து செப்பினன் விவரம்:
"தியேரா, என்விசு வாசத் தோழனே!
இன்னரும் நண்பனே,
இனிய மித்திரனே! 60
அந்தநாள் ஞாபகம் சிந்தையி லுளதா
வந்ததா
அந்தநாள் வாழ்க்கையும் நினைவில்
இருவரும் ஒன்றாய் ஏகினோம் அன்று
பொயதாய்
நடந்த பேரமர்க் களங்களில்?
அப்போ கிராமம் அங்கொன் றிலையே
இல்லம் பத்தே
இல்லாக் கிராமமாய்.
அப்போ தங்கொரு அகமுமே யிலையே
வீரர்கள் பதின்மர் விளங்கா
இல்லமாய்,
அங்கொரு வீரனும் அப்போ தில்லையே
கணிப்புள மனிதனாய் மதிப்புள
மனிதனாய் 70
வீரர்நா மிருவரும் வீழ்த்தா மனிதனாய்
தருக்கிநாம் வெட்டிச்
சாதிக்கா மனிதனாய்."
சாளரப் பீடம் தந்தையார் இருந்தார்
பிடிஈட் டிக்குச்
செதுக்கிய வாறே
அன்னையும் களஞ்சியக் கூடத் தமர்ந்தனள்
தாய்மத் தொன்றால்
தயிர்கடை தன்மையில்
வாயிலில் சகோதரர் வழியினில் நின்றனர்
சறுக்கு வண்டியைப்
பிணைத்த வண்ணமாய்
சோதா முனையில் துறையதில் நின்றனர்
கழுவித் துணிகளை அலசிய
வண்ணமாய். 80
சாரளத் திருந்த தங்தையும் மொழிந்தார்
களஞ்சியக் கூடத் திருந்ததாய் கேட்டனள்
வாயிலில் நின்ற சகோதரர் விளித்தனர்
துறைமுனைச் சோதா சொல்லினர் இப்படி:
"நேரமே யில்லை தியேராபோர்க் கேக
தியேரா
ஈட்டி செய்சமர்க் கலக்க;
தியேராவோர் இணக்கம் செய்தனன் புகழுற
நீடுமொப் பந்தம் நேர்ந்தொன் றியற்றினன்
இளம்பெண் ஒருத்தியை இப்போ மணந்தனன்
தனக்கென உத்தாய்த் தலைவியை ஏற்றனன்
90
இன்னும் விரல்படா திருப்பன முலைக்காம்(பு)
திகழ்மார் பின்னும் தேய்படா
துள்ளன."
இருந்தனன் தியேரா இதஅடுப் பருகே
கணப்பின் மூலையில் பனிப்பத
மனிதன்
ஒருகால ணியை அடுப்பின் அருகிலும்
மற்றதைப் பீடமேல் வைத்தனன் கணப்பில்
இடுப்பின் பட்டியை இட்டே வாயிலில்
நடைபயின் றிட்டான் நன்கே வெளிப்புறம்;
தியேரா(தன்) ஈட்டியைச் செங்கர மெடுத்தான்
பென்னம் பொய ஈட்டியஃ தல்ல
100
சின்னஞ் சிறிய ஈட்டியு மல்ல
ஆயினும் ஒருநடுத் தரமே யானது:
அதன்முனை
**பாயொன் றங்கே நின்றது
அலகின் அருகிலே முயலும் குதித்தது
ஓநாய்ப்
பொருத்தில் ஊளை யிட்டது
கரடி குமிழில் கனன்றுறு மியது.
அவன்தன் ஈட்டியை
அங்கே சுழற்றினான்
சுழற்றினான் ஈட்டி சுற்றி விசிறினான்
ஆறடி ஈட்டியின்
அலகைச் செலுத்தினான்
வயலின் களியாம் மண்ணா ழத்தில் 110
ஏதும் பயிரிலா இயல்பொது மண்தரை
மேடுஇல் புற்றரை மீதே நிலத்தில்.
திணித்தான் தனது ஈட்டியைத் தியேரா
அஹ்திவைத் திருந்த அவனது ஈட்டியுள்
வந்தான் பின்அவன் வந்தான் விரைவாய்
போரிலஹ் திக்குப் பொருந்தும் உறுதுணை
பின்னர் அஹ்தி பெருந்தீ வின்மகன்
இறக்கினன் தோணியை இரும்நீர்த் தள்ளி
வெளிர்புல் லுறையும் வியன் பாம்புபோல்
அல்லது உயிருடை அரவம் போல
120
புறப்பட் டேகினர் புறம்வட மேற்காய்
வடபுலப் பூமியின் கடலதி லாங்கே.
அந்த வடநிலத் தலைவியைப் போது
*உறைபனி
மனிதனை உருச்செய் தனுப்பினள்
வடபுலப் பூமியின் கடலதி லாங்கே
விந்து பரந்த
வியன்கடல் மடியில்;
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே
கூறினாள் இவ்விதம்
கொடுத்தாள் கட்டளை:
"உறைபனி மைந்தனே ஓ,சிறு பையனே!
என்றன் சொந்த எழிலார்
வளர்ப்பே! 130
நான்புகல் இடத்தே நீசெலல் வேண்டும்
நான்புகல்
இடத்தே நன்கென் ஆணைபோல்:
துடுக்கான் தோணியைப் படுத்துறை குளிராய்
குறும்பன்
லெம்மின் கைனனின் படகை
உயர்ந்த தெளிந்த ஒளிர்கடல் மேலே
விந்து பரந்த
வியன்கடல் மடியில்!
தலைவன் தனையே சாயாய்க் குளிர்செய்
துடுக்கனை நீல்
உறைந்து போகச்செய்
என்றும் அவன்வெளி வந்திடா திருக்க
என்றுமே விடுதலை யில்லா
திருக்க 140
விரும்பி நானே விடுத்தால் தவிர
சென்றுநான்
விடுதலை தந்தால் தவிர!"
உறைபனி யோன்எனும் நிறைதீச் சக்தி
தீய மனத்தொடு
திகழுமப் பனிப்பையல்
புறப்பட் டான்கடல் நிறைகுளி ராக்க
அலைகளை நிறுத்தி
அவையுறைந் திடச்செய;
அவ்வா றவனும் அவ்வழி செல்கையில்
தரையிலே நடந்து தான்செல்
வேளையில்
மரங்களைக் கடித்து மரத்திலை யகற்றினான்
புற்களின் தாள்களைப்
போக்கினான் அவ்விதம். 150
அங்கே பின்அவன் அடைந்தநே ரத்தில்
வடபுலக்
கடலின் வருவிளிம் பெல்லையில்
முடிவே யில்லாப் படிநீர்க் கரையில்
உடன்வரு
முதலாம் உறுஇர வதனில்
குளிர்வித் தான்குடா, குளிர்வித் தான்குளம்,
கடலின்
கரைகளைக் **கடினம தாக்கினான்
ஆனால் இன்னும் ஆழியை ஆக்கிலன்
படிய வைத்திலன்
படரலை நிறுத்தி;
ஒலிகடல் நீர்மேல் ஒருசிறு **குருவி
வளர்அலை மேலொரு **வாலாட்
டிப்புள் 160
இன்னும் குளிர(க) விலையதன் நகங்கள்
குளிர்பிடித்
திலதது கொள்சிறு தலையில்.
அதிலிருந் திருநிசி அங்கே கடந்தபின்
வளர்ந்தது
மாபெரும் வல்லமை யுடையதாய்
ஈடுபா டுற்றது எழு**நா ணின்றியே
மிகமிகப் பயங்கர
மாய்மேல் வளர்ந்தது
உள**விசை முழுதினால் உறையவே வைத்தது
உறைபனி யோன்விசை
உக்கிர மானது
உதித்தது பனிக்கட்(டி) ஒருமுழத் தடிப்பில்
சறுக்கணித் தடியாழ்
உறைபனி பொழிந்தது 170
வந்தது துடுக்கனின் வன்கலம் குளிராய்
அஹ்தியின் கப்பலும் அலைகடல் மீதே.
அஹ்தியைக் குளிர்செய அங்கவன் கருதினன்
விறைக்கவைக்(க) எண்ணினன் மிகுவீ றுடையனை
அவனுடை உகிர்களை அவன்கேட் டேகினன்
அடிமுதல் விரல்வரை அவன்தேடி யேகினன்;
லெ(ம்)மின்கைன னப்போ நெடுஞ்சினங் கொண்டனன்
பாதிப்பு முற்றனன் படுபெருஞ் சினத்தொடே
உறைபனி யோனையே உடன்அனல் இட்டனன்
தள்ளினான் இரும்பினால் தானமை சூளையுள். 180
உறைபனி யோனிலே உடன்கரம்
வைத்தவன்
கொடுங்கால நிலையினை கொண்டிட லாயினன்
இனிவரும் சொற்களில் இவ்விதம்
சொன்னான்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்:
"உறைபனி யோனே, உயர்வாடை மைந்த!
குளிர்ப்பரு வத்துக் குளிராம் மகனே!
எனது நகங்களுக் கேற்றிடேல் குளிரை
எனது
விரல்களை இனிக்கேட் காதே
எனது செவிகளை இனிநீ தொடாதே
எனது சிரத்தை இனிக்கடிக்
காதே! 190
நீகுளி ராக்க நிறையவே யுள்ளன
குளிரூட் டுதற்குக்
கோடிகள் உள்ளன
மனிதனின் தோல்தனை மாத்திரம் தவிர்த்து
அன்னைபெற் றெடுத்த
அழகுடல் தவிர்த்து:
குளிரூட்(டு) சதுப்பைக் குளிரூட்(டு) நிலத்தை
குளிராம்
பாறை குளிரூட் டிடுமேல்
நீர்க்கரை அலாயை நீகுளி ராக்கு
காட்டர சதனின்
கணுக்களைக் குளிரச்செய்
மிலாறுவின் பட்டையைமிக்நோ கச்செய்
இளம்ஊ சி(யி)லை
எழில்மர மாத்தெடு 200
ஆனால் வேண்டாம் அருமானுடன் தோல்
ஒருபெண்
ஈன்ற உத்தமன் மயிரும்!
இதுவும் போதா தின்னமு மென்றால்
மற்றும் அதிசய
மாம்பொருள் குளிர்ச்செய்
கொதிக்கும் பாறைக் கொடுங்கல் குளிர்ச்செய்
கனன்றே
எயும் கற்பா ளங்களை
இரும்பால் ஆன எழிற்குன் றுகளை
உருக்கினா லான உயர்ந்த
மலைகளை
வுவோக்சியின் பயங்கர முறுநீர் வீழ்ச்சியை
கொடுமையே தானாய்க் கொள்இமாத்
திராவை 210
நீர்ச்சுழல் தொண்டை நெடுமதன் வாயை
கொடிய பயங்கரம்
கொள்நீர்ச் சுழியை!
உனதுவம் சத்தை உரைக்கவா இப்போ
உன்கெள ரவத்தை உறவெளிப்
படுத்தவா
உன்வம் சத்தின் உடைமைகள் அறிவேன்
நீவளர்ந் தவித நிசமெலா மறிவேன்:
உறைபனி யோனின் உதிப்பல ச்செடி
வெய்யகா லநிலை மிலாறுவின் மத்தி
வடபால்
நிலத்து வசமுள இல்லுள்
இருள்சூழ் வசிப்பிட இயைஆ ழத்தில் 220
மாசு படிந்ததோர் வன்தந் தைக்கு
பயனில் லாததோர் பதராம் தாய்க்கு.
யார்உறை
பனியனை நேர்பால் ஊட்டினர்
பெருங்கொடுங் காற்றைப் பேணி வளர்த்தவர்
அன்னை யிடம்பால் அற்றவந் நேரம்
அன்னை யிடம்முலை இல்லா நிலையில்?
வியன்பா லூட்டிய துறைபனி யோற்கு
வியன்பா லூட்ட ஒருபாம் பூட்டுமூண்
முனையில் லாத முலைக்காம் புகளால்
பால்அற நேர்ந்த மார்பகங் களினால்; 230
அவனை வாடை அங்குதா லாட்ட
அவனைக்
குளிர்காற் றாராட் டிற்று
கொடிய அலா கொள்நீ ரோடையில்
நிரம்பி வழிந்த சதுப்பு நிலங்களில்.
தீய மனத்தவன் ஆனான் சிறுபையல்
அழிக்கும் ஆற்றலை அவன்பெற் றிருந்தான்
இன்னும் அவனுக் கிடுபெய ரொன்றிலை
பயனெது மற்ற பைய னவற்கு;
தீப்பைய னுக்குச் செப்பினர் ஒருபெயர்
உறைபனி யோனென
உரைத்தனர் அவனை. 240
வேலிகள் மீதவன் மோதிச் சென்றனன்
தண்பற்
றைகளிடைச் சலசலத் திட்டனன்
கோடையில் சேற்றில் குறைவிலா துலவினன்
தனிப்பெரும்
திறந்த சதுப்பு நிலங்களில்
குளிர்கா லத்தில் குதித்தான் தாருவில்
வளர்தேவ
தாரு மரங்களில் இரைந்தான்
மோதித் திந்தான் மிலாறு மரங்களை
பூர்ச்சம்
பொழிலில் புகுந்தே யாடினான்
வழுதுகள் மரங்களைக் குளிரச் செய்தனன்
மேட்டு
நிலங்களை மட்டம தாக்கினன் 250
மரங்களைக் கடித்து மரத்திலை
அகற்றினான்
புதர்ச் **செடிகளிலே பூக்களை அழித்தான்
பூர்ச்ச மரங்களில்
போக்கினான் பட்டையை
ஊசி யிலைமரத் துறுசு(ள்)ளி வீழ்த்தினான்
இப்போ துநீ
எடுத்தனை பேருரு
அழகாய் மிகவும் வளர்ந்தவ னானாய்
எனைக்குளி ராக்கலாம் என்றா
கருதினை
என்செவி வீங்கவைத் திடுதற் கெண்ணமா
அடியிருந் தென்கால் அடையும்
நினைவா
மேலிருந் தெனது விரல்நகம் கேட்கவா? 260
ஆனால் நீயெனை
அக்குளி ராக்கிடாய்
கொடுமையா யுறையக் கூடிய தாக்கிடாய்
நெருப்பைத்
திணிக்கிறேன் நிறையஎன் காலுறை
கொள்ளி களையென் குளிர்கா லணிக்குள்
தணலையென்
ஆடை தம்விளிம் புகளுள்
காலணி களின்நூற் கோலநா டாக்கீழ்
உறைபனி யோனெனை உறைய
வைத்திடான்
கொடுங்கால நிலையும் குறித்தெனைத் தொடாது.
உன்னைச் சபித்துநான்
ஓட்டுகி றேனங்(கு)
வடபால் நிலத்தின் வளர்கோ டிக்கரை; 270
அந்த
இடத்தைநீ அடைந்ததன் பின்னர்
உனது வீட்டைநீ ஓடி யடைந்தபின்
அனலுறும் கலயம் அறக்குளி ராக்கு
அடுப்பிலே
எயும் அந்த அனலையும்
மாப்பசை யில்லுள மங்கையர் கைகளை
பாவையர் மார்புப்
பையன் களையும்
செம்மறி யாட்டின் சேர்மடிப் பாலை
குதிரையின் வயிறுறும்
குதிரைக் குட்டியை!
அதற்கும் நீபணி யாதே போனால்
அதற்குமப் பாலுனைச்
சபித்துத் துரத்துவேன் 280
அரக்கான் மத்தியில் இருக்கும் அனலிடை
பிசாசு
களின்பெரு நெருப்புச் சூளை(க்கு)
நீயே அங்குனைத் தீயில் திணிப்பாய்
கொல்லுலை
தன்னிலே உன்னைக் கொடுப்பாய்
கொல்லன் சுத்தியல் கொண்டடிப் பதற்கு
சம்மட்டி
யாலுனைச் சாடியே நொருக்க
சுத்திய லாலுனைத் தொடர்ந்துரத் தறைய
சம்மட்டிக்
கொண்டுனைச் சாயாய் நொருக்க!
அதற்கும் நீபணி யாதே போனால்
அதைநீ சற்றும்
கவனியா திருந்தால் 290
இன்னொரு இடத்தை எடுப்பேன் நினைவில்
மற்றொரு புறத்தை மெத்தவும் உணர்வேன்
உன்வாய் தென்திசைக் கோட்டிச் செல்வேன்
கோடைவீட் டுக்குக் கொடியவுன் நாவை
என்றும்நீ அங்கிருந் தெழுந்திட முடியா
என்றுமே விடுதலை ஏற்றிட மாட்டாய்
விரைந்துநான் வந்துனை விடுத்தலே யன்றி
நானே
விடுதலை நல்கினா லன்றி."
வாடையின் மைந்தன் வருமுறை பனியோன்
உறுமழி
வொன்றினை உணர்ந்தான் தானே 300
கருணைக் கேட்டுக் கெஞ்சத் தொடங்கினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"இப்போ செய்யலாம் ஒப்பந்த மொன்றுநாம்
ஒருவரை யொருவர் வருத்துவ திலையென
என்றுமே வருத்துவ தில்லை நாமென
பொன்னில்லாத்
திகழும் பொற்பொழு தெல்லாம்.
நான்குளி ரூட்டலாய் நீயுணர்ந் தாயேல்
திரும்பவும் தவறைச் செய்வதை யறிந்தால்
திணிப்பாய் அடுப்பில் திகழும் நெருப்பில்
புதைப்பாய் கனன்று பொங்கும் தீய்க்குள் 310
கொல்லன் உலையில்
கொடுங்கன லுள்ளே
இல்மா னன்னவன் கொல்லுலைக் குள்ளே
அல்லது கொண்டுசெல்
அங்குதெற் கென்வாய்
கோடைவீட் டுக்குக் கொடும்என் நாக்கை
என்றுமே வெளிவரா
திருப்பேன் அங்கு
என்றுமே விடுதலை யில்லா திருப்பேன்."
குறும்பன்
லெம்மின் கைனன் பின்னர்
விட்டான் குளிருறக் கப்பலை யங்கே
நிற்கப் போர்க்கலம்
நிலையாய் அங்கே
தானே புறப்பட் டேகிட லானான்; 320
இரண்டாம்
ஆளாய் இணைந்தான் தியேரா
துடுக்குப் பையனின் சுவட்டின் பின்னால்.
மட்ட
மாம்பனிக் கட்டிமேல் நடந்தான்
பனிக்கட்டி மென்மையில் படர்ந்தான் வழுக்கி;
ஒருநாள் நடந்தான் இருநாள் நடந்தான்
மூன்றா வதுநாள் முன்வரு போதில்
**பசிக்கடல் முனையைப் பார்க்க முடிந்தது
இழிந்த கிராமம் எட்டிற் றுவிழி(யில்).
கடல்முனைக் கோட்டையின் இடம்கீழ் வந்தனன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
330
"இந்தக் கோட்டையில் இறைச்சியு முளதோ
மிளிருமித் தோட்டம் மீன்களு முளவோ
இளைத்துப் போன இகல்வீ ரனுக்காய்
களைத்துப் போன கவின்மனி தனுக்காய்?"
அந்தக்
கோட்டையில் அமைந்தில திறைச்சி
அந்தத் தோட்டத் தங்குமீ னில்லை.
குறும்பன்
லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"எப்பாய்
நெருப்பே, இம்மடக் **கோட்டையை!
எடுப்பாய் நீரே இத்தகு இடத்தைநீ!" 340
முன்னே றியவன் முனைந்துமுன் சென்றான்
காட்டின் உள்ளே கடுகியே சென்றான்
வசிப்பிட மில்லா வழியினில் சென்றனன்
முன்னறி யாத முனைவழிச் சென்றான்.
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
அவன்தான் அழகிய தூர நெஞ்சினன்
கம்பளி
நூலைக் கற்களிற் பிடுங்கினான்
பாறை முனையில் உரோமம் கிழித்தான்
அவற்றில் செய்தனன் அழகிய கையுறை
கைக்கு
அணியும் கவினுறை இயற்றினான் 350
குளிர்ஆ திக்கம் கொள்இடத் துக்கு
உறைபனி யோனின் உயர்கடி தாங்க.
அறியப் பாதையை அவன்மேற் சென்றனன்
சென்றான் தொடர்ந்து தொந்திட வழிகள்;
பாதைகள் உள்ளே படர்ந்தன காட்டில்
வழிகள் அவனை வரவேற் றேகின.
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர
நெஞ்சினன் இயம்பினன்:
"ஓ, தியேரா, உயர்என் சோதர!
இப்போது வந்து எங்கேயோ
சேர்ந்துளோம் 360
திங்களும் தினங்களும் திந்தலை தற்கு
என்றென்று மந்த
அடிவான் நோக்கி."
தியேரா இந்தச் சொற்களில் சொன்னான்
இயம்பினன் அவனே
இயம்பினன் இவ்விதம்:
"வஞ்சம் தீர்க்கநாம் வருமிழி பிறப்புகள்
வஞ்சம்
தீர்க்கநாம் வறியபாக் கியர்கள்
பெற்றோம் ஒன்றினைப் பெரும் போராக
இருள்நிறை
வடபால் இயைநிலத் தாங்கே
எங்கள் சொந்த இழப்பிற் குயிர்களை
எம்மையே என்றும்
இழப்பதற் காக 370
தீமைகள் நிறைந்தவித் தீதா மிடங்களில்
முன்னறி
யாதவிம் வன்தெருக் களிலே.
எதுவும் தொயவே யில்லையெங் களுக்கு
தொயவு
மில்லைநாம் தேர்ந்துணர்ந் ததுமிலை
எத்தெரு அழைத்து எங்களைச் செல்லும்
எவ்வழி
செல்லும் எமைவழி காட்டி
அடர்ந்த வனத்தில் இறந்துபோ தற்கு
புதால் புற்றரையில்
போய்வீழ் வதற்கு
அண்டங் காக்கையின் அவ்வில் லங்களில்
காகம் வாழும் கவின்பெரு
வெளியில். 380
அண்டங்கா கங்கள் அங்கிடம் மாற்றும்
கொடிய பறவைகள்
கடிதெமைச் சுமக்கும்
இறைச்சி கிடைக்கும் எல்லாப் புட்கும்
காகங் களுக்குச்
சூடாம் குருதி
அண்டங் காக்கையின் அலகை நனைக்க
இழிவாம் எங்கள் இரும்பிணத்
திருந்து
எங்கள் எலும்பை இடும்பா றைகளில்
கற்குன் றுக்குக் கடிதுகொண் டேகும்.
இதனை அறிந்திடாள் என்தாய் பேதை
என்னைச் சுமந்தவள் இதனை உணர்ந்திடாள்
390
அவளது தசையெங் கசைகிற தென்பதை
அவளது குருதியெங் கதிர்ந்தோடு மென்பதை
பொதாய்ப் பொருதும் அமாலா என்பதை
சமமாம் ஓர்பெரும் சமாலா என்பதை
அல்லது
பெருங்கடல் அதனிலா என்பதை
மிகுந்துயர் அலைகளின் மீதிலா என்பதை
அல்லது
தாருக்குன் றலையுமா என்பதை
சிறுபற்றை வனங்களில் தியுமா என்பதை.
என்னுடை
அன்னை எதையுமே அறியாள்
அபாக்கிய மானதன் அருமகன் பற்றி 400
தன்மகன் இறந்ததைத் தாயவள் அறிவாள்
தூயதான் சுமந்தவன் தொலைந்தான் என்பதை;
என்றன் அன்னை இவ்விதம் அழுவாள்
புகழ்ந்தெனைப் பெற்றவள் புலம்புவாள் இவ்விதம்:
'பாக்கியம் அற்றஎன் பாலகன் அங்கே
அறியாப் பாவிஎன் ஆத()ரம் அங்கே
துவோனியின்
விளைவுறும் தொன்னிலம் தன்னில்
படர்கல் லறையிடம் பரவிய மண்ணில்;
இப்போ தென்றன்
எழில்மகன் விடுகிறான்
பாக்கிய மற்றஎன் பாலகன் அவனே 410
உயர்தன் குறுக்குவில் ஓய விடுகிறான்
கடிவலு வில்லினைக் காய விடுகிறான்
பறவைகள் நன்கே பாங்குறக் கொழுக்க
காட்டின் கோழிகள் கனகுதூ கலம்பெற
சிறப்பாய்க் கரடிகள் செழிப்புடன் வாழ
வயல்களில் கலைமான் இனிதலைந் துலவ.' "
குறும்பன் லெம்மின் கைனன் கூறினன்
எழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:
"ஆமாம்,
அதுசா, அன்னை ஏழையள்,
ஆமப்பா, பாவியே, அன்றெனைச் சுமந்தாய்! 420
ஒருவைப்பின் கோழிகள் உவந்துநீ வளர்ந்தாய்
அன்னக் கணமென் றனைத்தையும் வளர்த்தாய்
செறிகாற் றடித்தது சிதறச் செய்தது
கலையச் செய்தது கடும்பேய் வந்தது
ஒன்று
அங்கே இன்னொன் றிங்கே
மூன்றாவ தெங்கோ முன்னே போனது.
இன்றந் நாட்களை
எண்ணிப் பார்க்கிறேன்
சிறந்தவப் பொழுதைச் சிந்தனைச் செய்கிறேன்
மலர்களைப்
போலநாம் உலாவிய நாட்களை
உயநம் நிலத்து உயாய பழம்போல்; 430
எமதுதோற் றங்களை அனைவரும் பார்த்தனர்
உற்றுப் பார்த்தனர் உருவம் எமதை
அதுஇந்
நாட்கள்போல் அறவே இல்லை
தீமைகள் நிறைந்தஇத் தீயநாட் களிலே;
காற்றொன் றேயெமக்
கேற்றநட் பாயுள
தொன்னாட் கண்டதில் சூயன் ஒன்றுதான்
முகில்கூட இப்போ மூடி
விலகிட
மழையும் மறைந்து மறைந்து செல்கிறது.
எனக்கெதும் அக்கறை யிலையே இதனால்
இனிப்பெருந் துயர்ப்பட எதுவுமே இல்லை 440
கன்னிப் பெண்கள் களிப்புடன்
வாழ்ந்தால்
மகிழ்வுடன் பின்னல் தலையினர் உலவினால்
நங்கைய ரனைவரும் நகைப்புட
னிருந்தால்
வதுவை மகளிர் மனமகிழ் வடைந்தால்
ஏக்கத் தாலெழும் இன்னலை விடுத்து
தொல்லைகள் தந்திடும் துயரம் ஒழித்து.
எமையினும் மயக்கிலர் இம்மாந் திணகரே
பார்ப்பவர் பார்வைமாந் திணகான் மயக்கலும்,
இந்த வழிகளில் இறந்தொழி தற்கு
பயணப் பாதையில் புதைந்துபோ தற்கு 450
இளம்பராய த்திலேயே உறக்கம்
கொளற்கு
இரத்தச் செழிப்புடன் இறந்துவீழ் தற்கு.
மயக்குவோன் எந்தமாந்
திணகனே யாயினும்
பார்ப்பவன் எத்தகு பார்வையோன் ஆயினும்
அவன் செயல் அவனுடை
அகத்திருக் கட்டும்
அவன்வசிப் பிடத்தில் அடிகோ லட்டும்;
அவர்களை யேமயக்
கத்தில்ஆழ்த் தட்டும்
பாடட்டும் அவர்கள்ம் பாலர்கள் மீதே
அவர்கள்தம் இனத்தையே
அழித்தொழிக் கட்டும்
தம்முற வையவர் தாம்சபிக் கட்டும்! 460
எந்தைமுன் என்றுமே இதுபுந் தாலை
உயர்ந்த சீர்ப்பெற்றார் ஒருக்கா லும்மிலை
மாந்திணகன் மனதை மதித்தது மில்லை
லாப்பியற் கீந்ததும் இல்லை வெகுமதி;
இவ்வா
றுரைத்தார் என்னுடைத் தந்தை
நானுமவ் விதமே நவில்கிறேன் இங்கு:
நிலைபெரும்
கர்த்தரே நீரெனைக் காப்பீர்
எழிலார் தெய்வமே எனைக்காப் பாற்றுவீர்
உதவிக்கு
வாரும் உமதின் கரங்களால்
நீர்பெற் றிருக்கும் மேதகு சக்தியால் 470
மானுடர்
மனத்திலே வருவிருப் பிருந்து
எழும்முது மாதான் எண்ணத் திருந்து
தாடிசேர்
வாய்களின் தகுமொழி யிருந்து
தாடியற் றோர்கள் தம்சொல் லிருந்து!
என்றும்
எமக்கே இருப்பீர் உறுதுணை
ஆகுவீர் நிலைபெறும் பாதுகா வலராய்
பிந்துபோ
காதெப் பிள்ளையு மிருக்க
அன்னையீன் மதலை அழிந்திடா திருக்க
ஆண்டவன் படைத்த
அருநெறி யிருந்து
இறைவனார் ஈந்த இவ்வழி யிருந்து!" 480
குறும்பன் லெம்மின் கைனன் பின்னர்
அவன்தான் அழகிய தூர நெஞ்சினன்
கவனம்
அனைத்தையும் கனபா யாக்கினான்
கவலை அனைத்தையும் கருமா வாக்கினான்
தீயநாட்
களினால் சேர்ந்தது தலைக்கணி
இரகசிய வெறுப்பினால் இயைந்தது ஆசனம்;
அதன்நல்
முதுகில் அவன்பாய்ந் தேறினன்
நற்சுடர் நுதலுடை மெச்சிடும் சடைமேல்
பயணம் தனது
பாதையில் தொடங்கினன்
சேர்தன் தோழன் தியேரா தன்னுடன் 490
கடற்கரை தனிலே கலகலத் தோடினன்
சென்றனன் தொடர்ந்து திகழ்மணற் றரைமேல்
அன்பான
அன்னையின் அருகே மீண்டும்
சீர்மிகும் பெற்றோர் திருமுகம் நோக்கி.
என்தூர
நெஞ்சனை அங்கே விடுகிறேன்
எனதுஇக் கதையி லிருந்தே சிலகால்
தியேரா வைவழிச்
செல்லவே விடுகிறேன்
அவன்இல் நோக்கி அவன்பய ணிக்க
இந்தக் கதையை இப்போ
மாற்றுவேன்
மற்றொரு பாதையில் வழிச்செல விடுகிறேன். 500
பாடல் 31- குலப் பகையும் அடிமை வாழ்வும்
அடிகள் 1-82 : உந்தமோ தனது சகோதரன் கலர்வோ என்பவனுக்கு எதிராகப் போர்த்தொடுத்து
அவனையும் அவனுடைய படையையும் அழிக்கிறான். கலர்வோவின் இனத்தில் கர்ப்பவதியான ஒரு
பெண் மட்டுமே உயிர்வாழ விடப்படுகிறாள். அழைத்துச் செல்லப்படும் அந்தப் பெண்ணுக்கு
உந்தமோவின் தோட்டத்தில் குல்லர்வோ என்ற மகன் பிறக்கிறான்.
அடிகள் 83-202 :
குல்லர்வோ தொட்டிலில் இருக்கும் பொழுதே உந்தமோவைப் பழிக்குப்பழி வாங்கத்
தீர்மானிக்கிறான். உந்தமோ குல்லர்மோவைக் கொல்லப் பலவழிகளில் முயன்றும்
அம்முயற்சிகள் பலனளிக்கவில்லை.
அடிகள் 203-374 : குல்லர்வோ வளர்ந்ததும்
உந்தமோவுக்குப் பலவழிகளிலும் தொல்லை தருகிறான். அலுத்துப் போன உந்தமோ குல்லர்வோவை
இலமானனுக்கு அடிமையாக விற்று விடுகிறான்.
வளர்த்தாள் கோழி வளர்குஞ் சொருதாய்
ஒருபெருங் கூட்டம் உயரன் னங்களை
கோழிக் குஞ்சுகள் வேலியில் வைத்தாள்
அன்னங் களையெடுத்(து) **ஆறு கொணர்ந்தாள்;
அங்கொரு கழுகுவந் தவற்றைப் பிடித்தது
கருடன் வந்து சிதறிடச் செய்தது
கவின்சிறைப் பறவை கலையச் செய்தது:
கடத்திய தொன்றைக் *கர்யா லாவுக்(கு)
ஒன்றைக் கொணர்ந்தது ரஷ்ய மண்ணிடை
வீட்டொடு மூன்றா வதையது விட்டது.
10
ரஷ்ய நாட்டுக் குடன்கொடு சென்றது
வர்த்தக மனிதனாய் வளர்ந்தது அங்கே;
கர்யலா வுக்குக் கடத்திச் சென்றது
*கலர்வோ வாக கவினுற வளர்ந்தது;
வீட்டோ
டிருக்க விட்டுச் சென்றது
*உந்தமோ வாக உயர்ந்து நிமிர்ந்தது
தினமெலாம்
பிதாவின் தீயவன் அவனே
அன்னையின் உளத்தை அவனே உடைப்பவன்.
உந்தமோ வித்து
உயர்வலை பரப்பினன்
மீன்களைக் கலர்வோ விரும்பிப் பிடிப்பிடம்; 20
வந்தவன் கலர்வோ வலைகளைக் கண்டனன்
மீன்களைத் தன்பை மிகச்சேர்த் திட்டனன்;
வீரமும் வலிமையும் மிகுந்தவன் உந்தமோ
அவன்சினங் கொண்டனன் ஆத்திரப் பட்டனன்
விரல்களி லிருந்தே விறற்போர் தொடங்கினன்
உள்ளங்கை அருகினால் உறுபோர் கேட்டனன்
மீன்குட லால்ஒரு மிகுபோர்க் கெழுந்தனன்
பொத்தநன் னீர்மீனால் பெருத்தபோ
ரொன்றுக்(கு).
செய்தனர் கலகம் செருத்துப் பார்த்தனர்
ஒருவரை ஒருவர்
உறவென் றிலராம் 30
எவன்மற் றவனை ஓங்கி அடித்தானோ
அவனே கொடுத்ததை
அதன்பதில் பெற்றனன்.
இதற்குப் பின்னர் இன்னொரு வேளை
இரண்டு மூன்றுநாள்
ஏகிமுடிந்த பின்
கொஞ்சம் கலர்வோ **கூலம் விதைத்தான்
உந்தமோ வாழ்ந்த ஓல்
லின்பின்.
உந்தமோ தோட்டத் துரம்பெறும் செம்மறி
கலர்வோ தானியக் கதிரைத்
தின்றது
கலர்வோ பயங்கரக் கடிநாய் அப்போ
உந்தமோ செம்மறி உடலம் கிழித்தது.
40
உந்தமோ பின்பய முறுத்திட லாயினன்
கலர்வோஓர் வயிற்றில் கனிந்த சோதரனை
சொன்னான் கலர்வோ சுற்றம் கொல்வதாய்
அடிப்பதாய்ப் பொதாய் அடிப்பதாய்ச் சிறிதாய்
அனைத்து இனத்தையும் அழிப்பதாய் மாய்ப்பதாய்
இல்களைச் சாம்பராய் எத்து
முடிப்பதாய்.
மனிதான் பட்டியில் வாள்களைச் செருகினன்
ஆயுதம் தந்தனன்
அவன்மற வோர்கரம்
சிறுவர்கள் பட்டியில் சேர்ந்தகுத் தூசிகள்
அழகிய தோள்களில்
அபுல் வாள்களும்; 50
பொதிலும் பொதாம் பெரும்போர்க் கேகினர்
கூடிப் பிறந்தவர் குறையில்சோ தரனுடன்.
கலர்வோ(வின்) மருமகள் கவினுறு
மொருத்தி
அமர்ந்து சாரளத் தருகினில் இருந்தனள்
சாரளத் தூடாய்த் தான்வெளிப்
பார்த்தனள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"அங்கே தடித்த அதுவென்ன
புகையாய்
அல்லது நிறத்தில் அதுகரு முகிலோ
தொலைவிலே தொயும் தொடர்வயல்
வெளிகளில்
புதிய ஒழுங்கையின் புறக்கடை முடிவினில்?" 60
ஆயினும் அதொன்றும் புகாரான புகாரல்ல
அல்லது தடிப்புறும் புகையுமே அல்லவாம்:
அங்ஙனம் தொந்தனர் உந்தமோ வீரர்கள்
புறப்பட்டு வந்தனர் போர்பொ துக்கென.
வந்தனர் உந்தமோ என்பவன் வீரர்கள்
வாள்பட்டி யதிலுறும் மனிதர்கள் சேர்ந்தனர்
கலர்வோ(வின்) கூட்டத்தைக் கடிதுகீழ் வீழ்த்தினர்
பொதான இனமதைப் பொதுகொன்
றழித்தனர்
இல்களைச் சாம்பராய் எத்தவர் முடித்தனர்
மாற்றியே அமைத்தனர்
வரவெ(ற்)று நிலமதாய். 70
கலர்வோவின் ஒருத்தியே காகை
மிஞ்சினாள்
அவளுக்கு வயிறதோ அதிகனத் திருந்தது
உந்தமோ என்பவன் உறுவீர
ரப்போ(து)
தம்முடன் வீட்டிடைத் தையலைக் கொணர்ந்தனர்
சிறியதாம் ஓர்அறை
செய்யவும் சுத்தமாய்
தரையினைப் பெருக்கியே தான்கூட்டி வைக்கவும்.
சிறுகாலம் மெதுவாகச் சென்றிட லானது
சிறியதோர் பையனாய் ஒருசேயும் பிறந்தது
மகிழ்ச்சியே இல்லாத மங்கையவ் வன்னைக்கு;
பாடல்-32 குல்லர்வோவும்
இல்மா�னனின் மனைவியும்
அடிகள் 1-32 : இல்மா�னனின் மனைவி கால்நடைகளை மேய்ப்பவனாக
வேலை பார்க்கும் குல்லர்வோவுக்கு உள்ளே கல்வைத்துச் சுட்ட
உணவைக் கொடுக்கிறாள்.
அடிகள் 33-548 : மேய்ச்சல் நிலத்தில் கால்நடைகளைக் கரடிகளிடமிருந்து
பாதுகாப்பதற்கான மந்திர வேலைகள் பிராத்தனைகளை வழக்கம் போல
முடித்த பின்னர் இல்மா�னனின் மனைவி அவற்றை வெளியே அனுப்புகிறாள்.
--------------------------------------------------------------------------------
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
முழுநீல் காலுறை முதியவன் பிள்ளை
மஞ்சள் கேசமும் வனப்பும் வாய்ந்தவன்
கவின்தரத் தோலில் காலணி கொண்டவன்
கொல்லனின் இல்போய்க் கூடிய வுடனே
வேலைதான் கேட்டான் மாலையாம் வேளை
தலைவனை மாலைத் தருணம் கேட்டனன்
தலைவனை காலைத் தருணம் கேட்டனன்:
"இங்குள தொழில்கட் கடும்பெயர் புகல்வீர்
ஒவ்வொரு தொழிற்கும் ஒவ்வொரு பெயராய் 10
எந்த வேலையை இப்போ செய்யலாம்
இங்கெனக் கென்று எத்தொழில் உளது?"
கொல்லன் அவன்*இல் மா�னனின் தலைவி
அப்போ சிந்தனை அவளும் செய்தாள்
புத்தடி மைக்கு எத்தொழில் தரலாம்
பணத்துக் கெடுத்தோன் தனக்கெவ் வேலை
ஆக்கினள் கால்நடை காப்பவன் தாதனை
படர்பெரு மந்தையைப் பார்ப்பவன் ஆக்கினள்.
கொடியவள் அந்தக் கொல்லனின் துணைவி
இளிக்கும் பல்லுள இகல்கொ(ல்)லன் மனைவி 20
சுட்டனள் இடையனுக் கென்றொரு ரொட்டி
அகல்பெருங் கனமாய் அடையொன் றமைத்தாள்
மேற்படைத் தானியம் கீழ்ப்படைத் **தானியம்
இரண்டினுக் கிடையில் இருத்தினள் ஒருகல்.
உருகிய வெண்ணெய் அடைமேல் பூசினள்
கொழுப்பையும் அடைமேல் குணமாய்த் தடவினள்
அன்றைய பங்கென அடிமைக் கீந்தனள்
இடையனின் அன்றைய உணவாய்க் கொடுத்தனள்
அடிமைக் கவளே அறிவுரை தந்தனள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்: 30
"இந்த உணவைநீ எடுத்துணல் ஆகா
காட்டினுள் மந்தை கடந்துசெல் முன்னர்".
அதன்பின் அவன்இல் மா�னனின் தலைவி
மேய்ச்சல் நிலத்தே விரட்டினள் மந்தை
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னாள்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தாள்:
"அனுப்பு கிறேன்என் ஆவினம் பொழிற்கு
பால்தரும் விலங்குகள் பசுந்தோப் புக்கு
அகல்கொம் புடையன அரசுக ளுக்கு
கோணல்கொம் புடையன கொழுமிலா றுக்கு; 40
அவைகொழுப் பதற்கே அனுப்புகி றேன்நான்
மாட்டு நிணத்தை மற்றாங் குறற்கு
பரந்து அகன்ற பசுந்தோப் புகளில்
அகன்று பரந்த தோப்பு நிலங்களில்
உயர்ந்து நிமிர்ந்து உளமிலா றுகளில்
தாழ்ந்து வளர்ந்த தனிக்காட் டரசினில்
பொன்னாய் மிளிறும் நன்னூ சி(யி)லைமரம்
வெள்ளியாய் விளங்கும் மிகுவன வெளிகளில்.
அழகிய இறைவனே, அவற்றை நீர்பாரும்!
நிலைபெறும் கர்த்தரே, நீர்அவை காப்பீர்! 50
தீநெறி யிருந்தவை திண்ணம்நீர் மீட்பீர்
அனைத்துக் கொடிதிலும் அவைபாது காப்பீர்
அல்லல் வராது அவையிருக் கட்டும்
துன்பம் எதுவும் தொடாதிருக் கட்டும்.
அவற்றைத் தொழுவில்நீர் அ��துகாத் ததுபோல்
வலியநின் காப்பில் வைத்தது போலவே
தொழுவம் இலாத **வெளிக்கணும் பார்ப்பீர்
இயைகாப் பிலாத இடத்திலும் காப்பீர்
ஆயனுக் கதனால் அழகு வரட்டும்
தலைவிக் கதனால் தனம்சே ரட்டும் 60
நல்மன முள்ளோர் நச்சுதல் போல
வெம்தீ மனத்தார் விரும்பா ததேபோல்.
எனது மேய்ப்பன் இழிந்தவ னானால்
மேய்ப்போள் நாணம் மிகுந்தவ ளானால்
ஆக்குக இடையனாய் **அலா�ச் செடியை
பசுக்கா வலனாய்ப் படைப்பாய் **பூர்ச்சம்
மாற்று **போ�யைப் பசுமேய்ப் போனாய்
விரட்டி வரட்டும் **சிறுபழச் செடிமனை
இறைவிதே டாது இருந்திட அவற்றை
அல்லது வருந்தா தமைந்திட மற்றோர். 70
அலா� இடையனாய் ஆகா விட்டால்
போ�யும் பசுக்களை மேய்க்கா விட்டால்
பூர்ச்சமும் பசுக்களைப் பார்க்கா திருந்தால்
விரட்டா விட்டால் பழச்செடி மனைக்கு
அனப்புக நினது அதியுயர் சக்தியை
ஏவுக நினது இயற்கை மகளிரை
சீர்பெற வைக்கத் திகழும்என் செல்வம்
காத்திட முழுமையாய்க் காணுமென் மந்தை!
நின்னிடம் தாதியர் நிரம்பவு முள்ளனர்
ஏவல் கேட்பவர் ஏராள முள்ளனர் 80
இந்தவான் கீழே இருந்தே வாழ்பவர்
இயற்கை பெற்ற இளநல் மகளிர்.
கோடையின் சக்தியே, கொண்ட **தேர்ச் சியளே!
தென்காற் றா�வையே, திகழ்இயற் கையளே!
பைம்மரப் பாவையே, பயில்நல் தலைவியே!
சூரையின் சக்தியே, பேரெழிற் பெண்ணே!
**போ�யின் மகளே, பெண்ணில் சிறியளே!
தன்பழச் **செடிச்சேய், தப்பியோ மகளே!
மியெலிக்கி வனத்தின் வியன்மரு மகளே!
தப்பியோ மகளே, தனித்தெல் லர்வோ! 90
பார்ததுமேய்த் திடுவீர் படருமென் மந்தையை
சீர்பெற வைப்பீர் திகழுமென் செல்வம்
மிகவும் சிறப்பாய் வி��கோ டையெலாம்
முளைத்து ஓ��லை தழைவளர் காலம்
மரமதில் இலையும் வந்தசை நேரம்
பூமியில் புல்லின் புதுமுளைப் பொழுது.
கோடையின் சக்தியே, குலவுசீர்ப் பாவாய்!
தென்காற் றா�வையே, திகழ் இயற் கையளே!
மெதுவாய் வி��நின் விளங்குமே லாடை
வி��த்துப் பரப்புக வியனார் நின்உடை 100
எனதுமந் தைக்கு இருக்கக் கூரையாய்
என்சிறு பிராணிகட் கிருக்கப் புகலிடம்
தொடர்சினக் காற்றுத் தூக்கிவீ சாமல்
பொல்லாச் சினமழை பொழியா திருக்க.
வருதீ திருந்தென் மந்தையைக் காப்பாய்
கொடுவழி யிருந்தாக் கூட்டம் மீட்பாய்
அசையும் சேற்று அகல்குழி யிருந்து
பெருகியே ஓடுமவ் வருவியி லிருந்து
நிதம்நகர் சதுப்பு நிலங்களி லிருந்து
வட்டமாய் அமைந்த வண்குளத் திருந்து 110
மற்றவைக் கல்லல் வராதிருக் கட்டும்
நிதம்எத் துன்பமும் நேரா தாகுக
சேறதில் குளம்புகள் சறுக்கா தொழிக
சதுப்பு நிலத்தில் வழுக்கா தமைக
விதித்த கடவுளின் விருப்புக் கெதிராய்
எமைஆ சித்தவன் எண்ணத் தெதிராய்.
**கொம்பினைக் கொணர்வீர் கூர்தொலை விருந்து
அந்தச் சுவர்க்கத் தருமுனை யிருந்து
தேனிகர் குழலை திகழ்விண் ணிருந்து
மதுரக் கொம்பைமண் மாதாவிடத் திருந்(து)! 120
உங்கள்அம் குழலை உடனெடுத் தூதுக
புகழார் கொம்பில் புத்தொலி எழுப்புக
உங்கள் மேட்டு உயர்நிலம் மலர
புற்றரை விளிம்பு புதுவனப் புறட்டும்
எழிற்பொழில் எல்லைகள் இனிமையே பெறட்டும்
வியன்தோப் போரம் மென்மையே யுறட்டும்
நனிசதுப் புக்கரை நறையுரு கட்டும்
உயர்சே றுளதரை உருண்டோ டட்டும்!
பின்என் நிரைக்குப் பேருண வூட்டுக
என்கால் நடைக்கு இரையினை யூட்டுக 130
தேன்சேர் உணவை தேர்ந்தவைக் கிடுக
குடிக்கக் கொடுங்கள் கொழும்தேன் பானம்;
பொன்னிகர் புற்களால் புத்துண வூட்டுக
வெ(ள்)ளிப்புற் றாள்களால் **மிகுவிரை வூட்டுக
துளிதுளி சொட்டும் தொல்சதுப் பிருந்து
பெருகியே ஓடுநீர் அருவியி லிருந்து
விரைந் திரைந்தெழுநீர் வீழ்ச்சியி லிருந்து
சீறிப் பாயுநற் செழுநதி யிருந்து
பொன்முடி யமைந்த புகார்க்குன் றிருந்து
வெள்ளியாய் மிளிரும் வெளிவனத் திருந்து. 140
பொன்னிகர் கிணறு பூதிதாய் வெட்டுக
மந்தை நிலத்தின் மற்றிரு மருங்கிலும்
கால்நடை அங்கே நீரருந் தற்கு
தேனிகர் நீரைச் சேர்ந்தருந் தட்டும்
பால்மடி ஊதிப் பருக்கும் வரையில்
பால்மடிக் காம்புகள் படுநோ வுறும்வரை;
பால்மடி நரம்புகள் பலஅசை வுறட்டும்
பாலாறு சுரந்து பல்கிப்பா யட்டும்
கிளைவிட் டோடுக கிளர்பால் அருவிகள்
நுரைஎழும் பட்டும் நுவல்பால் வீழ்ச்சிகள் 150
பால்ஓ டைகளில் பாலோ டட்டும்
பால்கால் வாய்களில் பாலோ டட்டும்
ஒவ்வொரு தடவையும் உவப்பாய்க் கொடுக்க
ஒவ்வொரு முறையும் ஊற்றிடு தற்கு
வெறுப் புளோர் நெஞ்ச விருப்புகட் கப்பால்
தீநினை வுடையோர் சேர்விரற் கப்பால்
மாய்வுல கம்பால் **போகா திருக்க
பசுவின் கொடைகள் பாழ்படா திருக்க!
கொடியமா னுடர்பலர் கூடவிங் குள்ளனர்
அவர்கள்பால் மரண உலகெடுத் தேகுவர் 160
பசுவின் கொடையைப் பாழுறச் செய்பவர்
எடுத்துச் செல்பவர் எங்கோ பசுவளம்;
நல்ல மனிதர்கள் சிலபேர் இங்குளர்
சாவுல கிருந்து பாலைத் தடுப்பவர்
**புளிப்பாலைக் கிராமப் பிடியினி லிருந்து
எங்கேனு மிருந்து இனிய தூயபால்
முன்னொரு போதும் இல்லையென் அன்னை
கிராமஆ லோசனை கேட்டது மில்லை
அயல்வீட்டில் கேட்டது மில்லை அவ்விதம்;
சாவுல கிருந்து தான்பால் பெற்றனள் 170
**புளித்த பால்பறிப் போ��ட மிருந்து
எங்கேனு மிருந்து இனிய தூயபால்;
தொலைவிருந் ததுவரத் தொடர்ந்தனு மதித்தனள்
மிகமிகத் ொலைவிலே யிருந்தது வருவதை:
துவோனலா விருந்து தூயபால் வருவதை
இப்புவிக் கீழுறும் இறப்புல கிருந்து
தானே இரவில் தனிமையில் வருவதை
இருட்டுவே ளையிலே ஒளித்தே வருவதை
கடுங்கொடு மனிதா�ன் காதினில் விழாது
கடுந்தீ மனிதரால் காணப் படாமல் 180
தீவெறுப் புடையரால் சிந்தப் படாமல்
பொறாமைப் படுவோர் பொறாமைப் படாமல்.
இங்ஙனம் கூறினள் என்னுடை அன்னை
நானும் அதையே நவில்வேன் இங்ஙனம்:
பசுச்செல் வம்தடைப் பட்டது எங்கே?
புனிதபால் மறைந்து போனதும் எங்கே?
எங்கேனு மயல்நா டெடுத்தேகப் பட்டதா
கிராம முன்றிலில் வராக்கட் டுண்டதா
மாசுறும் சமூக மாதா�ன் மார்பில்
பொறாமையே கொண்டோர் புணர்கக் கத்திலே 190
அல்லது மரங்களில் அதுசிக் குண்டதா
வனத்து வெளிகளில் மறைந்தே போனதா
பொழிலார் நிலங்களில் போய்ச்சிந் துற்றதா
காணாது மறைந்ததா கடும்புற் றரைகளில்?
மரண உலகிலே மறையா பால்போய்
செல்லா பசுவின் செல்வம் வெளியூர்
சமூகப் பரத்தையர் தம்மார் பகத்தே
அழுக்கா றுடையார் அகல்கரங் களின்கீழ்
சிக்கவும் மாட்டா திகழ்மர மத்தியில்
அடவியின் மத்தியில் அழியவும் மாட்டா 200
சிந்திச் சிதறிப் போகா சோலையில்
புற்றரை மேட்டிலும் போகா வீழ்ந்து;
வீட்டு(க்கு)த் தேவை வியன்பால் என்பது,
வேளைக ளெல்லாம் விரும்பப் படுவது:
காத்துக் கிடப்பது கவின்இல் தலைவி
மரத்தின் **வாளியை வன்கரத் தேந்தி.
கோடையின் சக்தியே, கொண்ட**தேர்ச் சியளே!
தென்காற் றா�வையே, திகழ்இயற் கையளே!
**உண்பவள் தனக்கு உணவினை ஊட்டு
**பருகுவாள் தனக்குப் பானம் காட்டு 210
**நரம்புளாள் தனக்கு நற்பால் படைப்பாய்
புதியவள் தன்னை அதிசுரக் கச்செய்
இனியவ ளுக்கு இனிதளி பாலை
அப்பிளாள் தனக்கு அரும்புதுத் **தயிரை
ஒளிரும் வைக்கோல் ஒள்நுனி யிருந்து
அழகிய பனிபடர் இளம்புல் லிருந்து
இனிய புவியாம் எழில்தா யிருந்து
தேனிறைப் புல்லின் செறிமே டிருந்து
தேன்வடி இனிய செடிகளி லிருந்து
சிறுபழத் தண்டுத் திகழ்புவி யிருந்து 220
தண்மலர்ப் பற்றையின் சக்தியி லிருந்து
அலர்வைக் கோற்புதர் ஆவியி லிருந்து
**புகார்ப்பா லாடைப் பூவைய ��ருந்து
விண்ணகத் தூணின் வன்மையி லிருந்து
பாலுறும் பால்மடி பதமாய்க் கொணர்வாய்
நிறைந் தெப்போதும் நேர்வழி மடிகளை
பாவையர் மெல்லியர் பால்கறப் பதற்கு
சிறிய பூவையர் தினம்பால் பெறற்கு.
பாவையே எழுவாய் பள்ளத் திருந்து!
சிறந்த உடையுடன் சேற்றினி லிருந்து! 230
அருவியி லிருந்து அதிவெம் வனிதாய்!
தெளிந்த முகத்தளே, திகழ்ஊற் றிருந்து!
அருவியி லிருந்துநீர் அள்ளியே எடுத்து
எனது மந்தைமேல் இனிதாய்த் தெளிப்பாய்!
வளர்க சிறப்பாய் மந்தைக ளதனால்
தலைவியின் செல்வம் தனிபெரு கட்டும்
வெளியே தலைவியும் விரைவதன் முன்னர்
நிரைகளை இடைச்சியும் நேர்சா� பார்க்குமுன்,
தகுதியு மற்றுத் தலைவி இருந்தனள்
இடைச்சியும் கொண்டவ ளாயினள் மருட்சி. 240
மியெலிக்கி யே,வன மேன்மைத் தலைவியே!
தயாளக் கரமுடை(தகு) ஆநிரை மாதே!
உனது பெண்களில் உயர்ந்தவள் ஒருத்தியை
நின்பணிப் பெண்களில் நிகா�லாள் ஒருத்தியை
காத்திட அனுப்பு கடிதுஎன் செல்வம்
பார்த்திட அனுப்பு படருமென் மந்தை
பொ�யஇக் கோடைப் பருவத் தினிலே
இறைவனின் வெப்பம் நிறையுமிக் கோடையில்
கர்த்தர் அளித்தஇக் காலகட் டத்தில்
கருணையால் கிடைத்தஇக் காலநாட் களிலே! 250
தப்பியோ மகளே, தகுதெல்லர் வோவே!
குள்ளமாய் வளர்ந்த குலவனப் பெண்ணே!
இனியமேற் சட்டை எழிற்பா வாடை
மஞ்சள் கூந்தல் மனோகரத் தோற்றம்
மந்தையைக் காக்கும் மாதவள் நீயே
தலைவியின் செல்வம் தனைவளர்ப் பவள்நீ
இனிமை நிறைந்த இந்த வனத்திலே
தனிக்கவ னம்நிறை தப்பியோ லாவிலே
கால்நடை சிறப்பாய்க் காத்தலைச் செய்வாய்
அத்துடன் செல்வம் அனைத்தையும் வளர்ப்பாய். 260
அழகிய கரங்களால் அவற்றினைக் காப்பாய்
வனப்புறும் விரல்களால் வழிவகை காட்டு
சிறப்புறும் வகையில் சிவிங்கியின் தோல்போல்
சீருறும் வரையும் திகழ்மீன் சிறைபோல்
குரைகடற் கன்னியின் கூந்தலைப் போல
வியன்வனச் செம்மறி மென்மை மயிர்போல்!
வருவாய் மாலையில் வளர்இருள் இரவில்
மங்கிய பொழுது மறையும் வேளையில்
மந்தையைத் திருப்பி மனைக்குக் கொணர்வாய்
சீரார் தலைவியின் திருமுன் கெணர்வாய், 270
அவற்றின் முதுகில் அசையும் நீர்ப்பை
பால்மடி தன்னில் பாற்குளம் இருக்கும்.
உறைகதி ரோன்தன் உறைவிடம் சேர்கையில்
மாலைப் புள்ளினம் மகிழ்ந்தே இசைக்கையில்
என்மந் தைக்கு இயம்புவேன் நானும்
கொம்புள பிராணிக் குரைப்பேன் நானும்:
'கோணல் கொம்பே, குறுகுக வீடு!
பாலளிப் பவரே, பார்ப்பீர் தொழுவம்!
வீட்டில் இருப்பது மிகநன் றுமக்கு
உயர்இன் னிலமும் உறங்கற குகந்தது 280
காடும் நடக்கக் காணும் மங்கலாய்
நீர்க்கரை தி��ய நேர்ந்திடும் அவ்விதம்;
நீங்கள் வந்து நேர்இல் சேர்ந்ததும்
கன்னியர் வந்து கனலதை மூட்டுவர்
தேன்செடி நிறைந்த புல்மே டதனில்
சிறுபழத் தண்டுகள் திகழ்திரு நிலத்தில்.'
தப்பியோ மகனே, தகுநுயீ ��க்கியே!
நீல உடைகொள் நிலப்புதர்ப் பையனே,
அம்தேவ **தாருவின் அடிமரத் துண்டையும்
**தாருவின் முடியையும் தகுமொழுங் கமைப்பாய் 290
அழுக்கின் மேலொரு அ��ய பாலமாய்
நெடுந்தீ நிலத்தை நிரப்பிய பாதையாய்
நீர்தான் ததும்பும் நிலத்திலும் சேற்றிலும்
ஆடி யசையும் அகல்குள மீதும்;
நடந்து செல்லட்டும் நனிவளை கொம்பு
பிளவுடைக் குளம்பு பெயர்த்தடி யிடட்டும்
புகைவரும் ஒவ்வொரு இடத்தையும் புகட்டும்
இலாமல் காயம் இலாமல் சேதம்
தாழ்ந்துபோ காமல் தளர்சேற் றுநிலம்
அழுக்கிலே விழுந்து அமிழ்ந்துபோ காமல்! 300
கால்நடை களையே கவனிக் காவிடில்
இரவு வீட்டுக்கு வராமலே போகில்
**போ�யின் சக்தியே, சீர்ச்சிறு பெண்ணே!
**சூரையின் சக்தியே, சுந்தரப் பாவாய்!
வெட்டொரு மிலாறு வியன்தோப் பிருந்து
ஒடித்தெடு குச்சி ஒன்றினைப் புதா�ல்
போ�யின் கோலைப் பெரும்பயன் படுத்து
அமைப்பாய் சூரையில் சாட்டைஆ னிரைக்கு
தப்பியோ கோட்டை சார்பின் புறத்து
சிறுபழச் **செடிநில மறுபுறத் திருந்து; 310
தோட்டம் நோக்கி ஓட்டிடு மந்தையை
சவுனா வெப்பம் தான்அமை விடத்தே
வீட்டு மந்தையை வீட்டினை நோக்கி
காட்டு மந்தையைக் காட்டினை நோக்கி!
அ��ய கரடியே, அடவியின் **அப்பிளே!
முன்வளை **முதுகே முதிர்தேன் பாதமே!
இப்போ **பொருத்தனை இனிதொன் றியற்றுவோம்
தவிர்ப்போம் எல்லைத் தகரா றிவ்விதம்
என்றென்று மேஎம் இன்னுயி ருளவரை
ஆயுள் வரையிலும் ஆகுவாழ் நாள்வரை 320
**வி��குளம் பதனை இனித்தாக் காயென
பால்சுமப் பவளை ப் படிவீழ்த் தாயென
இப்பெருங் கோடை ஒப்பரும் போதில்
கனவெப் பம்நிறை கர்த்தா�ன் கோடையில்.
கிளர்மணி ஓசைநீ கேட்கும் வேளை
காதில் **எக்காள ஓசை வீழ்கையில்
பசும்புல் மேட்டின் பள்ளம் படுப்பாய்
புற்றரை மீதில் நித்திரை செய்வாய்
செவிகளைப் புற்களில் சேர அழுத்துவாய்
பசும்புல் மேட்டில் பதியவை தலையை 330
அல்லது கானகம் அதனுட் செல்வாய்
பாசி படர்ந்தவுன் பைங்குடி லடைவாய்
மறுபுற முள்ள மலைக்கே நகர்வாய்
வேறு புறத்தே விரைவாய் திடற்கு
மந்தையின் மணியுனை வந்தடை யற்க
ஆயனின் பேச்சுனை அடையா திருக்க!
அ��யஎன் கரடியே, அன்புடைக் கரடியே!
தேன்நிகர் பாதமே,திகழ்என் அழகே!
நீஅலை தற்கே நான்தடை யில்லை
உலாவி வரற்கு உளமறுப் பெதுமிலை; 340
நாவினால் தொடற்கே நா்தடை யிடுவேன்
கொடுயநின் வாயைக் கொண்டுநீ தாக்கலை
எயிறுகள் கொண்டுநீ சிதறச் செய்வதை
அவற்றைநின் கால்களால் அறையும் செயலதை.
நடந்துசெல் மந்தையின் நன்னிலம் விலக்கி
தயிர்தரும் புதரைத் தவிர்த்து மறைந்துசெல்
மணியொலிப் பகுதியில் வளைந்துசெல் திரும்பி
ஆயா�ன் குரலுக் ககன்று விரைந்துசெல்!
பசும்புல் தரையில் பசுநிரை நிற்கையில்
நீசெல் சதுப்பு நிலத்தினை நோக்கி; 350
சதுப்பு நிலத்தினில் தாம்நிரை நிற்கையில்
அடர்ந்த காட்டை விரைந்துநீ அடைவாய்;
மலைகளின் மீது மந்தைகள் செல்கையில்
மலைகளின் கீழே வந்துநீ அடிவை;
மலைகளின் கீழே மந்தைகள் செல்கையில்
மலைகளின் மேலே வலுவிரைந் தேகுவை;
வெட்ட வெளிகளில் வியன்நிரை நிற்கையில்
பற்றை புதர்களில் பையநீ நடந்துசெல்;
பற்றை புதர்களில் பசுநிரை செல்கையில்
வெட்ட வெளிகளில் விரைவாய் நடந்துசெல்; 360
தங்கக் குயில்போல் தனிநீ போவாய்
வெள்ளிப் புறாப்போல் விரைந்துநீ போவாய்
வெண்மீன் போல்நீ வியப்புறத் திரும்பு
மீனதைப் போல வெளியில்நீ புரள்வாய்
கம்பளிக் கட்டுப்போல் கவினுற உருள்வாய்
சணல்கொத் துப்போல் தங்கிநீ நகர்வாய்
உரோமத் துள்நின் உகிர்களை மறைப்பாய்
முரசின் உள்ளே எயிறுகள் வைப்பாய்
அதனால் மந்தைகள் அஞ்சா திருக்கும்
கூசா தேகிடும் குறைவில்செல் வங்கள். 370
அமைதியைக் கால்நடைக் கருள்வாய் நீயே
**வி��குளம் புக்கு விடுதலை தருவாய்
மந்தைகள் அமைதியாய் வரட்டும் உலாவி
அமைதியாய் எங்கும் அலைந்து வரட்டும்
சதுப்புகள் ஊடாய் தம்நிலத் தூடாய்
காட்டுப் பசும்புல் கவின்தரை யூடாய்
என்றும் அவற்றைநீ இருப்பாய் தொடாது
அவற்றைக் கொடுமைக் காளாக் காதிரு.
பழையநின் ஆணையை பாங்காய் நினைவுகொள்
அங்கே துவோனலா ஆற்றின் பக்கலில் 380
தீய *நகத்துநீர் வீழ்ச்சியின் அருகினில்
கர்த்தா�ன் நல்முழங் கால்களின் முன்பு;
அனுமதி அங்குனக் கதுதரப் பட்டது
மூன்று முறைகள் முதிரும் கோடையில்
மணியொலி காதில் வந்துவீழ் தொலைவில்
பசுக்களின் மணிகள் இசைக்கும் நிலங்களில்
ஆயினும் உனக்கு அளிக்கவு மில்லை
அனுமதி உனக்கு அளிக்கப் படவிலை
தீச்செயல் எதுவும் செய்யத் தொடங்க
எதுவும் குழப்படி இயற்றி முடிக்க. 390
சினமோ உனக்குச் சீற்றமோ வந்தால்
கடிக்கும் வேகம் எயிற்றிலே வந்திடில்
காட்டுஉன் சீற்றம் கனத்திடும் புதா�ல்
ஊசிலை மரத்தில் உடற்றுநின் வேகம்
உழுத்த மரங்களைக் கடித்துநீ போடு
மிலாறுக் கட்டையை வீழ்த்திநீ போடு
மரத்துக் குற்றியை வலிதுநீர்த் திருப்பு
சிறுபழ மேட்டைப் புரட்டி எடுத்திடு!
உனக்குத் தேவை உணவா யிருந்தால்
உண்ணும் எண்ணம் உதித்தால் நெஞ்சில் 400
காட்டில் வளரும் காளான் உண்பாய்
எறும்புகள் வாழும் இரும்புற் றுடைப்பாய்
செந்நிறக் கிழங்கு தேர்வகை உண்பாய்
தேனிகர் காட்டுத் திகழ்சுவை யுணவுகள்
தாவர பட்சணித் தரைபுல் தவிர்த்து
வந்துநான் **தங்கிடும் வைக்கோல் தவிர்த்து.
தொடர்கான் பகுதியின் தொட்டித் தேனது
கொதித்துப் போனதால் அதிநுரைக் கிறது
பொன்னினால் ஆன பொலிகுன் றுச்சியில்
வெள்ளியில் ஆன வியன்வரை முடிகளில்; 410
ஊண்பொ� தயில்வோற் குண்டுண வாங்கு
பெருங்குடி யர்க்கு அருந்துபா னமுமுள
அயில்வதால் உணவு அருகி விடாது
குடிப்பதால் பானம் குறைந்து விடாது.
என்றுமோர் பொருத்தனை இவ்விதம் செய்வோம்
என்றுமே சிக்கல் இல்லா பொருத்தனை
அதனால் என்றும் அன்புடன் வாழலாம்
இனிதாய்க் கோடையாம் இவ்ருது முழுவதும்;
எமக்கு நிலங்கள் இருக்கும் பொதுவாய்
தயாராம் பொருட்கள் தனியாய் இருக்கும். 420
ஆயினுன் நீயோ அமர்செய விரும்பில்
வன்போர் மடியிலே வாழ விரும்பினால்
குளிர்கா லத்திலே கொள்வோம் சமரை
தண்பனி பொழிகையில் சச்சர விடுவோம்.
வருகையில் கோடை **உருகையில் சதுப்பு
ஏ��கள் வெப்பமாய் இயைந்துமா றுகையில்
என்றுமே இப்புறம் எழுந்து வராதே
கிளர்பொன் கால்நடை கேட்கும் தொலைவரை.
நேர்ந்தால் இந்த நிலத்திடை நீவர
வரவேண்டி யிந்த வனங்களுக் கிருந்தால் 430
இங்கு எப்போதும் எய்தல் நடைபெறும்;
எய்பவர் வீட்டில் இல்லா தொழியின்
செயலுடை மாதர் செறிமனை யுள்ளனர்
வல்ல மனைவியர் இல்லகத் துள்ளனர்
பாழாக் கிடுவர்நின் பாதையை இங்கே
அவர்கள் பயணம் அழித்தே விடுவர்
உன்னால் தொடவும் ஒண்ணா தவர்களை
உன்னால் அவர்களுக் குறாது கெடுதலும்
இறைவன் என்பார் எண்ணத் தெதிராய்
ஆசி அருள்பவர் அகநிலைக் கெதிராய். 440
ஓ, முது மனிதனே, உயர்மா தெய்வமே!
அதனுடை வரவுநீ அறிந்திடும் வேளை
வேற்றுப் பொருட்களாய் மாற்றென் பசுக்களை
மாற்றுப் பொருட்களாய் மாற்றென் மந்தையை
என்சொந் தத்தை இயற்றிடு கற்களாய்
கட்டைக ளாக்கென் கவின்இன் பிறவிகள்
அதிசயப் பிராணி அகல்நிலம் உலவையில்
அலைந்து தி��கையில் அக்கொழும் விலங்கு.
ஒருகான் கரடி உருவில்நான் இருந்தால்
**தேன்பாதம் போலத் தி��வதா யிருந்தால் 450
இங்கே வாழவே மாட்டேன் இங்ஙனம்
அனுதினம் முதிய அ��வையர் அடிகளில்;
வேறுள பகுதியில் வி��நிலம் உண்டே
**அடைப்புகள் வேறு அனேகமே யுளதே
ஒருதொழி லற்றோன் ஓடிச் சென்றிட
வேலை யிலாதவன் விரைந்தே முட்டிட
பாதத்து நுனிபிள பட்டிடும் வரையும்
ஆடு தசையெனும் அதுவெளி வரும்வரை
நீல நிறத்து நெடுங்காட் டுப்புறம்
வனத்தின் புகழுறும் வளைவின் அப்புறம். 460
தாருவின் புல்வெளி நீடுநீ நடக்க
அடிவைத் தேக அம்மணல் வெளிகள்
போகப் பாதைகள் புனயப் பட்டன
ஒலிகடல் ஓரம் ஓடித் தி��ய
வலுதொலை வுள்ள வடநிலம் வரைக்கும்
லாப்பு லாந்தின் எழிற்பெரு வெளிவரை;
அங்கு இருப்பது அதிர்ஷ்டம் உனக்கு
பொழுது அங்கு போகும் இனிமையாய்
காலணி யின்றிக் கோடையில் நடக்கலாம்
இலையுதிர் காலம் இன்றியே காலுறை 470
பொ�தாய் வி��ந்த அ��ய சதுப்பினில்
பரந்தகல் சேற்றுப் பாங்கார் நிலங்களில்.
புறப்பட் டங்குநீ போகா திருந்தால்
சா�யாகப் போகத் தொ�யா திருந்தால்
ஓடிப் போக ஒருவழி யின்றெனின்
குதித்துச் செல்வதற் கொருநெறி யிலையெனின்
அந்தத் துவோனலா அடவிக் காங்கே
கல்லறைச் சக்தியின் கனபுற் றரைமேல்.
அடிவைத் தேக அங்கே சதுப்புள
பாங்குற நடக்கப் பசும்புற் றரைகள் 480
அங்கே **கி��யா அங்கே **கா�யா
அங்கே வேறு அழகிளங் கன்றுகள்
இரும்பினால் ஆன இழுசங் கிலியில்
பத்தாய்ப் பிணைத்த பல்பிணை(ப்பு) நுனிகளில்;
மெலிந்தது அங்கே மிகக்கொழுத் துயரும்
எலும்பும் தசையை ஏற்றுப் பெருகும்.
இனிமைகொள் பொழிலே, இதமென் வனமே!
நெகிழ்ச்சிதான் கொண்ட நீல்நிறக் காடே!
நிம்மதி கொடுப்பாய் நிரைகளுக் கினிதே
**வி��குளம் புக்குத் தருவாய் அமைதி 490
இம்முறை வந்துள இனிதுயர் கோடையில்
தொல்இறை தந்தஇச் சூடார் கோடையில்.
*குய்ப்பன, கானகக் குலநல் லரசனே!
நரைத்தா டியுறு நல்வனக் காவல!
உமது நாய்களை உடனழைத் தேகுவீர்
நீச நாய்களை நீக்கியே வைப்பீர்.
எடுத்துக் காளான் இடும்ஓர் நாசியில்
அப்பிளை எடுத்து அடுத்ததில் வைப்பீர்
எவ்வித மணமும் எட்டா திருக்க
மந்தையின் மணமும் மணக்கா திருக்க 500
பட்டுத் துணியால் கட்டுக கண்கள்
சுற்றுத் துணியால் சுற்றுக செவிகள்
செல்வதை அசைந்து செவிகேட் கற்க
நடந்து செல்வதை நாடற் கவிழி.
இன்னும் போதா திருக்கின்இவ் வளவும்
இன்னும் அக்கறை இல்லையேல் சா�யாய்
வைப்பாய் உந்தன் மைந்தனை விலக்கி
ஒழுங்கிலாப் பிறப்பை ஒதக்கியே வைப்பாய்
இக்கா டிருந்து நன்தொலை வைப்பாய்
விளங்குஇக் கரைகளால் விரட்டி யடிப்பாய் 510
குறுகிய கால்நடைத் தரையதற் கப்பால்
அகன்று பரந்தவிவ் வணிநிலத் தப்பால்;
குழிகளில் மறைப்பாய் கொளும்உன் நாய்களை
நீச நாய்களை நீகட் டிறுக்கமாய்
பொன்னினால் ஆன புதுச்சங் கிலிகளால்
வெள்ளியில் பின்னி மிளிரும் வார்களால்
அவைதீ தெதுவும் ஆக்கா தமைக
பொல்லாங் கெதையும் பு��யா தொழிக.
இன்னும் போதா திருக்கின்இவ் வளவும்
அக்கறை இன்னமும் அதற்கு இல்லையேல், 520
ஓ, முது மனிதனே, உயர்பொன் னரசனே!
ஆட்சியை நடத்தும் வெள்ளிஆ ளுனனே!
என்பொன் னானஇச் சொல் கேட்பீர்
வழங்குமென் இனிய வாக்கியம் கேட்பீர்!
அழுத்து போ�யின் கழுத்து **வளையம்
சப்பை மூக்கினைச் சா�யாய்ச் சுற்றி;
போ�யும் அதனைப் பிடியா திருப்பின்
செப்பிலே ஒன்றினைச் செய்தே எடுப்பாய்;
செப்பிலே செய்ததும் சேர்வலு வற்றதேல்
இரும்பிலே கழுத்து வளையம் இயற்று; 530
இரும்பு வளையமும் உடைந்தே போகில்
இன்னமும் செயல்கள் இருப்பின் தீதாய்
தங்கக் **காவடித் தண்டைச் செலுத்து
தாடையென் பிருந்து தாடையென் புக்கு
முனைகளை இறுக்கமாய் முடிந்துநீ வைப்பாய்
கெட்டியாய் அவற்றைக் கட்டு சா�யாய்
அசையாது இருக்க அக்கொடு மலகுகள்
விலகாது இருக்க வெளிர்பல் சிலது
அவற்றை இரும்பால் அகற்றினால் தவிர
உருக்கால் அவற்றைத் திருகினால் தவிர 540
கத்தியால் குருதியைக் காட்டினால் தவிர
கிட்டுகோ டா�யால் கிழித்தால் தவிர."
அதன்பின் இல்மா� னன்அவன் தலைவி
கைவினைக் கலைஞனின் கருத்துடை மனைவி
அனுப்பினள் தொழுவத் திருந்தவள் ஆனிரை
அனுப்பினள் மேச்சல் நிலத்துக் கானிரை
வைத்தனள் ஆயனை மந்தையின் பின்புறம்
ஆனிரை செலுத்த அடிமையை விட்டனள்.
பாடல்-33 இல்மா�னனின்
மனைவியின் மரணம்
அடிகள் 1-98 : மேய்ச்சல் நிலத்தில் இருந்த குல்லர்வோ மாலை நேரத்தில் தனது
பையிலிருந்த ரொட்டியை எடுத்து அதை வெட்ட முயன்றான். அப்பொழுது அவனுடைய கத்தி
உடைந்தது. அந்தக் கத்தி ஒன்றுதான் அவனுடைய வீட்டின் நினைவாக அவனிடம் இருந்தது.
அதுவும் சேதப்படவே மனதில் துன்பம் சூழ்ந்தது.
அடிகள் 99-184 : குல்லர்வோ இல்மா�னனின் மனைவியைப் பழிவாங்கத் தீர்மானிக்கிறான்.
காட்டுமிருகங்கள் உண்பதற்காகக் கால்நடைகளைச் சதுப்பு நிலத்துக்கு ஓட்டிச்
செல்கிறான். அங்கே கரடிகளையும் ஓநாய்களையும் சேர்த்து மாலையில் வீட்டுக்கு ஓட்டிச்
செல்கிறான்.
அடிகள் 185-296 : வீட்டின் தலைவி பால் கறக்கச் சென்ற நேரத்தில் காட்டு
மிருகங்களினால் கிழித்துக் கொல்லப் படுகிறாள்.
--------------------------------------------------------------------------------
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
உணவுப் பொருட்களை ஒருபை யிட்டனன்
செலுத்தினன் பசுக்களைச் சதுப்பின் வழியே
தான்புல் மேட்டில் தவழ்ந்தே ஏறினன்
செல்கையில் இவ்விதம் செப்பினான் ஒருசொல்
போகும் போதினில் புகன்றனன் இவ்விதம்:
"ஓ, நான் அதிர்ஷ்டம் ஒன்றிலாப் பையன்
ஓ,நான் அபாக்கிய ஒருபைய னாகினேன்
இப்போ தேநான் எங்கோ வந்துள்ளேன்
தீய வழிகளில் செயற்பட வந்துளேன் 10
எருத்தின் வாலுக் கிருக்கிறேன் ஆயனாய்
கன்றுக் குட்டிக் காவல னாகவும்
சதுப்பு நிலங்களை மிதித்தலை பவனாய்
பாழாம் பூமியில் பயணிப் பவனாய்."
புல்மே டொன்றின் பூமியில் அமர்ந்தனன்
தங்கினன் கதிரொளி தருமலை யோரம்
புகன்றனன் இவ்விதம் புனைகவி நடுவில்
பாடிடும் போதிலே பகர்ந்தனன் இவ்விதம்:
"இறைவனின் கதிரே, இகலொளி சிந்துவாய்!
ஆண்டவன் **ஆழியே அதிகனன் றொளிர்வாய் 20
கொல்லன் கால்நடை கொள்காப் பெல்லையில்
இல்லா அதிர்ஷ்டமிவ் விடையனின் மேலே
ஆயின்இல் மா�னன் வாழ்விடம் வேண்டாம்
அடியொடு தலைவி யவள்மேல் வேண்டாம்!
வாழ்கிறாள் தலைவி மகிமையோ டாங்கே
வெட்டிக் கோதுமை ரொட்டி எடுக்கிறாள்
விழுங்குவாள் பணிய(�)ர வியன்வகை தானே
வெண்ணெய் அவற்றின் மீதில் பூசியே;
அதிஷ்டமில் ஆயன் உலர்ந்த ரொட்டியை
உலர்ந்த துகள்களை உண்பவன் ஆயினன் 30
ஆனபுல் **அ��சியின் அடைகளில் இருந்து
பதரையும் சேர்த்துப் பண்ணிய ரொட்டியை
**அரைத்தவைக் கோலான் ஆகிய ரொட்டியை
**தாருவின் பட்டையில் சமைத்த ரொட்டியை,
மிலாறுக் காய்களின் மிளிர்செதில் ***அகப்பையில்
ஈரப்புல் மேடதன் இயல்உச்சி நீரதை.
ஆதித்த செல்லுக, அன்பே அகலுக!
ஆண்டவன் பொழுதே ஆழத் தமிழ்க;
தகிகதிர் நகர்க, தாருவின் அயலே,
பற்றையை நோக்கி நற்றிரு ஏகுக 40
சூரைப் பக்கமாய் தொல்கதிர் விரைக
அமைபூர்ச் சமர அளவினில் பறப்பாய்
ஆயனும் இல்லம் அடையநீ விடுவாய்
வெண்ணெய்க் கலயத் துண்டிட வெண்ணெய்
புளியா மாவின் எழுமடை உடைக்க
தேடிக் கிளறித் திணிஅடை எடுக்க."
அப்போ தில்மா� னன்அவன் தலைவி
இடையனும் மந்திரம் இசைத்திடும் வேளை
குல்லர்வோ குயில்போற் கூவிய நேரம்
கமழ்தன் வெண்ணெய்க் கலயத் துண்டனள் 50
உடைத்தனள் புளியா மாவின் ரொட்டி
தேடிக்கிளறி திணிஅடை எடுத்தனள்;
ஆயினும் நீ��ல் அமைத்தனள் ஒருரசம்
குளிராம் **கீரையில் குல்லர்வோ வுக்கு
அயின்றிருந் ததுவதன் கொழுப்பினை நீசநாய்
**கறுப்பும் உணவாகக் காலையில் தின்றது
**புள்ளியும் உண்டது புணர்விருப் பதன்படி
**பழுப்பும் வேண்டிய படியெல்லா முண்டது.
தொலைவில் பறவையும் தோப்பிலே இசைத்தது
புள்ஒரு சிறியது புதருள் இசைத்தது; 60
"அடிமையுண் பதற்கு ஆனநற் போதிதே
தந்தையிலா தோன் தன்அ(ந்)தி யுணவு."
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
கண்டனன் வானில் கவின்நீண் கதிரொளி
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"இதுநல் நேரம் என்னுண வுண்ண
உகந்ததோர் நேரம் உண்ணத் தொடங்க
உணவுகள் தேடி உடனெடுப் பதற்கு."
ஒருபுறம் பசுக்களை ஓய்வாய் விட்டனன்
படுத்தன மந்தை பரந்தபுல் வெளியில் 70
புல்மே டொன்றிலே போய்த்தான் அமர்ந்தனன்
பச்சையா யிருந்த பசும்புற் றரையில்;
எடுத்தான் முதுகில் இருந்தே பையினை
எடுத்தான் பையில் இருந்து ரொட்டியை
பார்த்தான் ரொட்டியைப் பார்த்தான் திருப்பி
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"பற்பல அடைகள் மேற்புறம் அழகு
அவற்றின் துகள்களும் அதில்மிக மென்மை
உள்ளே இருப்பதோ உமியே முழுவதும்
துகள்களின் கீழே தோன்றும் பதர்தான்." 80
உறையிலே யிருந்து உருவினன் கத்தியை
ரொட்டி யதனையே வெட்டி யெடுத்திட:
கத்தியும் உள்ளே கல்லிலே பட்டது
பாறைக் கல்லிலே பட்டுத் தெறித்தது;
கத்தியின் அலகு கழன்றே வந்தது
உறைக்கத்தி யலகு உடைந்தே போனது.
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
பார்த்தான் எடுத்துப் பகரருங் கத்தியை
அவனே பார்த்ததும் அழவும் தொடங்கினன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: 90
"உடன்பிறப் புப்போல் ஒரேயொரு கத்தி
அன்புக் கென்று அ��யதோர் இரும்பு
வாங்கித் தந்தையார் வைத்த பொருளது
பெற்றவர் பெற்ற பேராம் பொருளது
கத்தி உடைந்தது கல்லில் பட்டதால்
பாறைக் கல்லிலே மோதி ஒடிந்தது
தீயஅத் தலைவி செய்தஇவ் ரொட்டியால்
கெட்டஅப் பெண்ணவள் சுட்டஇவ் ரொட்டியால்.
வனிதையின் நகைக்கு வழங்கலாம் எவ்விலை
நங்கையின் சி��ப்பு நா��யின் இகழ்ச்சி 100
கொடியாள் முதியாள் கொடுத்த பொருட்கு
சுடும்தீப் பரத்தை சுட்டரொட் டிக்கு."
காகம் ஒன்று கரைந்தது புதா�ல்
அண்டம் காகம் அதுதான் கரைந்தது:
"பாக்கியம் அற்றோய், பசும்பொன் **வளையமே!
கலர்வோ என்பவன் நிகா�லா மகனே!
எதற்காய் வந்தது இத்துயர் மனதில்
இதயத் திருளும் எதற்காய்ச் சூழ்ந்தது?
ஒடிப்பாய் பற்றையில் ஒருகுச் சியினை
காட்டின் குகைவாய்க் கம்பை மிலாறுவில் 110
சாணத் **தொடைகளைச் சதுப்புக் கோட்டு
பசுக்களைச் சேற்றுப் பாதைக் கனுப்பு
பாதி ஒன்றினைப் பகிர்கஓ நாய்க்கு
அடவிக் கரடிகட் காம்மறு பாதி.
ஓநாய் அனைத்தையும் ஒன்றாய்ச் சேர்ப்பாய்
கரடிகள் அனைத்தையும் கொணர்வாய் கூட்டமாய்;
**சின்னவ ளாகச் செய்ஓ நாய்களை
ஆக்கு**வெண் முதுகளாய் அனைத்துக் கரடியும்
மந்தையை அடுத்து மனைக்கே ஓட்டு
பன்னிறப் பிராணிகள் பரந்ததோப் புக்கு 120
இவ்வாறு விலைகொடு ஏந்திழை நகைக்கு
இவ்வாறு கொடிய பெண்இகழ்ச் சிக்கு."
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"பொறுப்பாய், பொறுப்பாய், புன்பேய்ப் பரத்தாய்!
தந்தைகத் திக்கு தளர்ந்துநான் அழுவதால்
இதற்குமேல் நீயோ இங்கழப் போகிறாய்
பால்தரும் நிரைக்குப் பா�ந்தழப் போகிறாய்."
ஓடித்தான் குச்சி ஒன்றினை பற்றையில்
சூரைச் செடியிலே ஆனிரைச் சாட்டையை 130
பசுக்களைச் சேற்றுப் பாதையில் அமிழ்த்தினன்
கவிழ்த்தனன் வீழ்மரக் குவியலில் எருதுகள்
ஒருபா தியினை ஓநாய் உண்டிட
அடவிக் கரடி அடுத்தபா தியையுண
மந்திரத் தோநாய் மாற்றினன் மந்தையாய்
கானகக் கரடி கால்நடை யாக்கினான்
ஆக்கினன் சின்னவள் ஆகவொன் றினையே
மற்றதை ஆக்கினான் வளர்வெண் முதுகளாய்.
தென்மேற் புறத்துச் செங்கதிர் சாய்ந்தனன்
மாலையோர் பாதி மறையத் திரும்பினன் 140
தேவதா ரளவில் சிறிதாங் கிறங்கினன்
விரைந்தனன் **கறக்கும் வேளைப் பாலது;
அதிர்ஷ்டமே இல்லான் அங்குள இடையன்
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
வீடு நோக்கி விரட்டினன் கரடிகள்
ஓநாய் மந்தையை ஓட்டினன் தோட்டம்
அப்போ கரடிக் கறிவுரை புகன்றான்
ஓநாய்க் கிங்ஙனம் வாயாற் கூறினன்;
"தலைவி என்பவள் தசைத்தொடை கிழிப்பீர்
கடிப்பீர் கெண்டைக் காலா டுதசை 150
அவள்பார்ப் பதற்காய் அருகில் வருகையில்
பால்கறப் பதற்காய்ப் படியிற் குனிகையில்!"
செய்தனன் ஒருகுழல் செழும்பசு வெலும்பில்
எருதின் கொம்பில் இசைக்குழ லியற்றினன்
ஆக்கினன் **துவோமிக்கி காலிலெக் காளம்
ஒன்று**பன் னிறத்தாள் பின்கால் நரம்பினில்
ஊது குழலெடுத் தூதத் தொடங்கினன்
எக்காள மெடுத்து எக்காள மிட்டனன்
மும்முறை வீட்டின் வெளிப்புறக் குன்றினில்
ஊதினன் அறுதரம் ஒழுங்கை வாயிலில். 160
அப்போ தில்மா� னன்அவன் தலைவி
கொல்லனின் முதியோள் நல்லஅம் மங்கை
நேரம் வெகுவாய்ப் பாற்கெதிர் பார்த்தனள்
கோடைவெண் ணெய்க்கு நீடுகாத் திருந்தனள்;
இசைத்தல் சேற்றுப் புறத்தில் கேட்டனள்
மணியொலி புற்றரை வளர்புறம் கேட்டனள்
இனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னாள்
இந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தாள்:
"இறைவனே, நன்றியை இயம்பினேன் உமக்கு
எழுகிற திசையொலி வருகிற தானிரை 170
எக்காளம் அடிமைக் கெவ்விதம் கிடைத்தது
கூலியாட் கெங்ஙனம் குழலொன்று வந்தது
அதனால் இசைத்தே அவனும் வருகிறான்
எக்காளம் கொண்டே எக்காள மிடுகிறான்
ஊதுதல் என்செவி ஊடாய்ச் செய்கிறான்
இசைசெல் கிறது என்தலை துளைத்து."
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்;
"பெற்றனன் அடிமை எக்காளம் சேற்றில்
குழலொன்று சதுப்பி லிருந்தே கெணர்ந்தனன்; 180
மந்தை ஒழுங்கைப் புறம்வரு கின்றது
வயற்றொழு வப்புறம் வந்துநிற் பனபசு;
பரம்பிடச் செய்வாய் படர்புகை மூட்டி
பசக்களில் சென்று பாலினைக் கறப்பாய்!"
அப்போ தில்மா� னன்அவன் தலைவி
உரைத்தனள் கறக்க ஒருமுதி யவளை;
"பாலைக் கறக்கப் படர்க முதியளே
ஆற்றுக முன்சென் றானிரை அலுவல்
ஏனெனில் நேரம் எனக்கிங் கில்லை
மாப்பசை பிசையும் மறுதொழி லிருந்து." 190
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"எப்போதும் என்றும் இனிய தலைவியர்
சாதுர்ய மான தகும்இல் தையலர்
செல்வர் தாமே செழும்பசுக் கறக்க
ஆற்றுவர் முன்சென் றானிரை யலுவல்."
அதன்பின் இல்மா� னன்அவன் தலைவி
மூட்டினாள் புகையை முன்வந் தேதான்
அடுத்ததாய் வந்தனள் அவள்பால் கறக்க
முற்றிலும் மந்தைஓர் முறைஅவள் பார்த்தாள் 200
சுற்றிலும் கால்நடைத் தொழுவினைப் பார்த்தாள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"எழிலாய் உள்ளதிக் கால்நடைப் பண்ணை
உரோமம் மென்மை உடையன மந்தை
சிவிங்கி உரோமத் திகழ்மே லாடைபோல்
கானகச் செம்மறிக் கம்பளி போன்றவை
பால்மடி கனமாய்ப் பருத்தே யுள்ளன
பால்மடிக் காம்புகள் பருநிறை வுள்ளன."
சற்றே பால்பெறத் தாழ்ந்து குனிந்தனள்
கறந்தெடுத் தற்குக் கால்தாழ்ந் தமர்ந்தனள் 210
இழுத்தனள் ஒருமுறை இழுத்தனள் மறுமுறை
முயன்றாள் விரைந்து மூன்றாம் முறையும்:
ஓநாய் அவள்மேல் ஓடிப் பாய்ந்தது
அடுத்துக் கரடியும் அங்குதா வியது;
ஓநாய் விரைந்தவள் வாயைக் கிழித்தது
கரடியும் பிய்த்தது கால்களின் நரம்பை
ஆடு தசையின் அரைத்தசைத் தின்றது
கால்எலும் பிருந்து குதியை முறித்தது.
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
இகழ்ந்த பெண்பழி இவ்விதம் வாங்கினன் 220
பெண்இகழ்ச் சிக்குப் பேதையின் நகைக்கு
கொடியபெண் ணுக்குக் கூலி கொடுத்தனன்.
அரும்இல் மா�னனின் பெருமைகொள் தலைவி
அவளே கண்ணீர் அழுதே சொ��ந்தாள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:
"ஆயனே பாவி அடாதது செய்தனை
விரட்டிக் கரடிநீ வீட்டிடைக் கொணர்ந்தாய்
ஓநாய் கொணர்ந்தனை உயர்பெரும் முன்றிலில்."
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
இவனும் பதிலை இவ்விதம் மொழிந்தான்: 230
"ஆயன்நான் பாவி அடாதுதான் செய்தேன்
தலைவியே, நின்செயல் சா�ய(ல்)ல பாவியே,
ரொட்டியைக் கல்லிலே சுட்டே எடுத்தனை
பாறையில் அடையினைப் படைத்தே எடுத்தனை
கல்லின்மேல் என்றன் கத்திநான் வைத்தேன்
கத்தியால் பாறையைக் கடிதுநான் வெட்டினேன்
எந்தையின் கத்தியிங் கிருந்ததே ஒன்றுதான்
என்னுடைச் சுற்றத்து எழில்உறை கத்திதான்."
இல்மா� னன்துணை இவ்வாறி யம்பினள்:
"ஓ, நீ இடையனே, உயருமன் புடையனே! 240
உன்சொல் திரும்ப உடன்நீ பெறுவாய்
மந்திரச் சொற்களை வாங்குவாய் மீளவும்
ஓநாய் பிடியிருந் துகந்தெனை விடுவி
கரடியின் உகிர்களில் காப்பாய் என்றனை
நல்லமே லாடையில் நானுனை வைப்பேன்
எழிற்காற் சட்டை ஈவேன் உனக்குநான்
வெண்ணெயும் ரொட்டியும் வியன்வகை தருவேன்
பாங்கொடு புதுப்பால் பருகவும் தருவேன்;
ஓராண்டு வேலை ஒன்றிலா துணவும்
மறாண்டும் தருவேன் வழங்கேன் வேலைகள். 250
இதனால் விடுவியா திருப்பையேல் என்னை
கட்டவிழ்த் தென்னைக் காவா திருப்பையேல்
விரைந்தே மரணம் விரைவில் தழுவுவேன்
மடிந்துநான் மக்கி மண்ணாய்ப் போவேன்."
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"மரணிப்ப தாயின் மரணத்தை யடைநீ
மறைந்தே போகில் மறைந்தே போநீ
போனவர்க் கெல்லாம் பூமியில் இடமுள
மறைந்த மாந்தர்க்கு மயானமு மங்குள 260
பா��ய பலமுளோர் படுத்திளைப் பாற
பெருமைமிக் குடையோர் பொ�திருந் தோய்வுற."
இல்மா� னன்துணை இவ்வா றியம்பினள்:
"ஓ, முது மனிதனே, உயர்மா தெய்வமே!
உன்பெரும் குறுக்குவில் உடனே தயார்செய்
தொ�வுசெய் உனது சிறப்புறும் ஓர்கணை
குறுங்கணை ஒன்றினைப் பொருத்திடு செப்பில
கொதித்துக் கனலும் குறுக்குவில் மேலே
தீபோற் கணையைச் செலுத்திடு முன்னே
அனுப்பிடு செப்பினால் ஆன குறுங்கணை 270
உடனவன் கக்கத் தூடாய் எய்வாய்
கெட்டோன் தோட்டசை கிழித்தே எறிவாய்
கலர்வோ மகனைக் கவிழ்ப்பாய் கீழே
எய்வாய் இழிந்தோன் இறந்தே போக
உருக்கு முனைகொள் உயர்வம் பொன்றால்
செப்பினா லான சீர்க்குறுங் கணையால்."
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
இந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:
"ஓ, முது மனிதனே, உயர்மா தெய்வமே!
என்றனை நோக்கி எய்தலைச் செய்யேல் 280
இல்மா� னன்அவன் தலைவியை எய்வாய்
கீழாம் பெண்ணவள் கீழ்வைத் திடுவாய்
மாற்றா திருக்க மற்றவள் **தன்னிடம்
இங்கிருந் தவளசைந் திடாதிட எங்குமே."
அதன்பின் இல்மா� னன்அவன் தலைவி
கைவினைக் கலைஞனின் கருத்துடை மனைவி
இறந்தாள் உருண்டு புரண்டே இறுதியில்
கலயத் திரும்புகைக் **கறையென வீழ்ந்தாள்
அவளது சொந்த அகல்வதி விடத்தில்
அந்தத் தோட்டத் தமைகுறு வெளியில். 290
இளம்பெண் ஒருத்தி ஏகிய விதமிது
அத்துடன் சென்றாள் அழகிய தலைவியும்
கனநாள் கொல்லன் காத்திருந் தடைந்தபெண்
ஏங்கவைத் திருந்தபெண் இருமூன் றாண்டுகள்
என்றுமில் மா�னனின் இன்பமா யிருந்தவள்
**பெறுபுகழ்க் கொல்லனின் பெரும்பே றானபெண்.
பாடல் 34 - குல்லர்வோவும் அவனுடைய
பெற்றோரும்
அடிகள்-1-128 : குல்லர்வோ இல்மா�னனின் வீட்டிலிருந்து தப்பியோடிக் காடுகளில்
கவலையுடன் அலைந்து தி��கிறான். அப்பொழுது காட்டில் ஒரு வயோதிப மாதைச்
சந்திக்கிறான். குல்லர்வோவின் தந்தை, தாய், சகோதரன், சகோதா� ஆகியோர் இன்னமும்
உயிருடன் இருப்பதாக அந்த வயோதிப மாது கூறுகிறாள்.
அடிகள் 129-188 : காட்டில் சந்தித்த வயோதிப மாதின் அறிவுரைப்படி குல்லர்வோ
லாப்புலாந்தின் எல்லையில் தனது தந்தை, தாய், சகோதரன், சகோதா� ஆகியோரைக் காண்கிறான்.
அடிகள் 189-246 : குல்லர்வோ எப்பொழுதோ இறந்துவிட்டதாகவும் சிறுபழங்கள் பொறுக்கப்
போயிருந்த சமயம் மூத்த மகள் தொலைந்து விட்டதாகவும் தான் எண்ணியிருந்ததை அவனுடைய
தாய் கூறுகிறாள்.
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
முழுநீல் காலுறை முதியவன் பிள்ளை
மஞ்சள் கேசமும் வனப்பும் வாய்ந்தவன்
கவின்தரத் தோலதில் காலணி கொண்டவன்
புறப்பட் டவனே போயினன் விரைந்து
கொல்லஇல் மா�னனின் குடியிருப் பிருந்து
எசமான் செய்தியை இனிதறி வதன்முன்
மனை(வி)க்கு நேர்ந்த மரணம் பற்றி
நெஞ்சிலே அதனால் நெடுந்துயர் வந்து
போரென்று ஒன்றைப் பொரத்தொடங் கலின்முன். 10
கொல்லனைப் பி��ந்தான் குழல்இசைத் தபடி
*இல்மாவின் நாட்டை இனிதாய்க் கடந்தான்
எக்காள மூதி ஏகினான் புற்றரை
சத்தமிட் டேகினான் தனிக்கான் வெளியிலே:
ஒலிசேற்று நிலம்தரப் புவிநடுங் கிற்று
பதிலுக் கெதிரொலி பகர்ந்தன புற்றரை
குல்லர்வோ இசைத்த வல்லிசை கேட்டு
தீமகன் நடத்திய தீச்செயல் பார்த்து.
கொல்லனின் தலத்திலே அவ்வொலி கேட்டது
தலத்தினில் கொல்லன் இயக்கம் நிறுத்தினன் 20
ஒலியினைக் கேட்க ஒழுங்கையை யடைந்தனன்
முற்றத்து வந்தனன் முழுவதும் பார்த்திட
எழுங்காட் டிசையது என்னவென் றறிய
ஏற்பட்ட புற்றரை எக்காளம் ஏன்என.
உண்மை எதுவென உணர்ந்தனன் இப்போ
பொய்யலா நிச்சய மெய்நிலை யெதுவென:
துயிலினில் இருந்த தோகையைக் கண்டனன்
அங்குவீழ்ந் திருந்த அழகியைக் கண்டனன்
முற்றத்து வீழ்ந்து முன்கிடந் தனள்பெண்
சாய்ந்து புற்றரை தான்படுத் திருந்தனள். 30
கொல்லனவ் விடத்தில் கல்லாய் நின்றனன்
இதயம் முழுவதும் இன்னல்சூழ்ந் திருந்தது
ஏங்கி யழுதழு திரவைக் கழித்தனன்
விழிநீர் பெருக்கினன் வெகுகா லம்வரை
உளநிலை **கீலின் அளவிலும் சிறப்பிலை
படுமனம் கா�யைப் பார்க்கிலும் வெளுப்பிலை.
தானே குல்லர்வோ தனிநடந் தேகினன்
எங்கேனும் அடிவைத் தெதிரே சென்றனன்
நாளெல்லாம் காட்டில் நடந்தே சென்றனன்
பேய்மரம் நிறைந்த பெருங்கா னகமெலாம்; 40
எதிர்கொண்ட தந்தி இரவும் இருண்டிட
மேட்டு நிலத்திலே மெதுவாய்த் தங்கினன்.
அமர்ந்திருந் தான்பிதா அற்றதோர் பிள்ளையாய்
அன்பறி யாதான் அவன்இதை எண்ணினன்:
"என்னைப் படைத்தவர் எவரா யிருக்கலாம்
ஏழையை ஆக்கியோர் எவரா யிருக்கலாம்
இரவாய்ப் பகலாய் இவ்வா றலைந்திட
வானத் தின்கீழ் வாழ்நாள் முழுவதும்?
மற்றையோர் தத்தம் மனைகட் கேகுவர்
வதிவிடம் நோக்கி வழிச்செல முனைவர் 50
வெங்கான் எனக்கொரு வீடைமைந் துள்ளது
புற்றரை வெளியில் பொலித்தோப் புளது
அகல்வெளிக் காட்டில் அடுப்படி யுளது
வளர்கனற் சவுனா மழையிலே யுளது.
ஒருபோதும் வேண்டாம் உயர்தல் லிறைவனே!
இந்த உலகிலே என்றுமே வேண்டாம்
அதிர்ஷ்டமில் பிள்ளையை ஆக்கா திருப்பீர்
அன்பதை என்றுமே அறியாப் பிள்ளையை
பெருவா னின்கீழ் பிதாவிலாப் பிள்ளையை
அன்னை யிலாததை அறவே வேண்டாம் 60
இறைவனே, படைத்தது என்றனைப் போல
ஏழை என்றனை இங்குரு வாக்கல்போல்
ஒண்கடற் **புட்குலத் தொன்றெனப் படைத்தனை
கடற்பாறை மீதுள்ள **கடற்புள் ளாக்கினை.
கதிரொளித் **தூக்கணாங் குருவிக் கமைவதும்
வெண்மையைச் **சிட்டுக் குருவிக் களிப்பதும்
குதூகலம் காற்றுப் பறவைகட் காகுமாம்
ஆயினும் என்றுமே அமைந்தெனக் கிலையே
வாழ்நாளெப் போதுமே வராதுஏ ழைக்கு
ஆனந்த மென்றுமே ஆகா துலகிலே. 70
என்னைப் படைத்தவர் எவரென அறியேன்
என்றனை வளர்த்தவர் எவரெனத் தொ�யேன்
**பொன்வாத் தொன்று புனைந்ததா பாதையில்
சேற்றிலே **தாரா(வும்) செய்துதான் போட்டதா
கரையிலே உருவம் **கடல்வாத் தீந்ததா
பொந்திலே பாறையில் **புனல்வாத்து வேலையா?
தனிச் சிறுவயதில் தந்தையை இழந்தேன்
இளமையில் தாயும் இல்லா தாகினேன்
இறந்தனன் தந்தை இறந்தனள் அன்னை
ஏனையோர் பேராம் இனத்தோர் இறந்தனர்; 80
பனிக்க(ட்)டிக் காலணி எனக்கென விட்டனர்
நனிமறந் தேகினர் பனியுரு(கு) காலுறை;
பனிக்கட்டித் தடங்களில் எனைவிட்டே போயினர்
பனிமழை சுழன்றிடும் படியினில் விட்டனர்
ஒவ்வொரு சதுப்பிலும் உடலமிழ்ந் தேக
அழுக்குச் சேற்றிலே ஆழ்ந்துவீழ்ந் தகல.
இந்தவாழ் நாளில் இல்லைஆ னாலும்
அந்நிலை என்றும் அமைந்திட மாட்டா
சதுப்பு நிலமதன் தனிவழி மரம்போல்
அழுக்கு இடமதன் பலகைகள் அவைபோல் 90
சேற்றிலே ஆழ்ந்து செல்லநான் மாட்டேன்
என்னிடம் கரங்கள் இரண்டுள போதில்
விரல்கள் ஐந்தினை வி��த்துநான் நீட்டலில்
நகங்கள் பத்தினை நானுயர்த் துகையில்."
இப்போ அவனது இதயத் தெழுந்தது
மூளையில் சிந்தனை மூண்டது இவ்விதம்
உந்தமோ என்பான் சொந்தவூ ரடைந்து
தந்தையின் அடிப்பழி தான்தீர்க் கெண்ணினன்
தந்தையின் அடிக்கு தாய்விழி நீர்க்கு
தன்னை நடாத்திய தகாக்கொடும் செயற்கு. 100
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"உந்தமா என்போய், ஓ, பொறு, பொறுப்பாய்,
சற்றுக் காத்திரென் சுற்றம் அழித்தோய்
உன்னுடன் போர்க்கு உடன்றுநான் வருகையில்
ஆக்கேனா வதிவிடம் அனைத்தும் சாம்பராய்
தோட்டத்துக் காட்டையும் சுடர்கனற் கட்டையாய்?"
முதியவள் ஒருத்தி முன்எதிர் வந்தனள்
நீலமே லாடையில் நீள்புதர் வாழ்பவள்
இந்தச் சொற்களில் இயம்பினள் அவளே
இயம்பினள் அவளே இயம்பினள் இவ்விதம்: 110
"புறப்பட்ட தெங்கே புகல்கநீ குல்லர்வோ
கலர்வோ மைந்தனே கடிதகல் விடமெது?"
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"என்றன் நெஞ்சிலே எழந்தது இவ்விதம்
மூளையில் சிந்தனை மூண்டதும் இவ்விதம்
எவ்விட மாயினும் ஏகிடற் கெழுந்தேன்
உந்தமோ என்பான் சொந்தவூ ரடைய
சுற்றத் தழிவின் தொடர்பழி தீர்த்திட
தந்தையின் அடிக்குத் தாய்விழி நீர்க்கு 120
அனைத்தும் வதிவிடம் ஆக்கச் சாம்பலாய்
அனைத்தையும் துகள்களாய் அழித்திட மாற்றி."
முதியவள் பின்வரும் மொழிகளில் கூறினள்
இயம்பினள் அவளே இயம்பினள் இவ்விதம்:
"ஆனஉன் சுற்றம் அழிக்கவு மிலையே
இன்னமும் கலர்வோ இறந்திட விலையே
உன்றன் தந்தை உயிரோ டுள்ளனன்
நாட்டிலே தாயும் நலமா யுள்ளனள்."
"ஓ,என் அன்புடை உயர்மூ தாட்டியே,
அன்புமூ தாட்டியே, அதையெனக் குரைத்திடு! 130
என்றன் தந்தை எவ்விட முள்ளனர்
என்னைச் சுமந்த எழிலியும் எவ்விடம்?"
"அவ்விடம் இருக்கிறார் அ��யஉன் தந்தை
அடைந்துனைச் சுமந்த அழகியும் அவ்விடம்
லாப்பின் அகன்ற எல்லையின் அருகில்
மீன்குளம் ஒன்றின் மிகுமருங் குள்ளனர்."
"ஓ,என் அன்புடை உயர்மூ தாட்டியே,
அன்புமூ தாட்டியே, அதையெனக் குரைத்திடு!
அவ்விடம் நான்போய் அடைவது எவ்விதம்
எவ்வழி வாயிலாய் ஏகலாம் அவ்விடம்?" 140
"அங்குநீ செல்லல் அமையும் நன்மையாய்
அன்னிய னாகிலும் அவ்வழி யேகலாம்
நடந்துநீ செல்க நவில்கான் மூலையில்
ஓடியும் செல்க உறுநதிக் கரையினில்;
ஒருநாள் நடப்பாய் இருநாள் நடப்பாய்
மூன்றாம் நாளும் முன்விரைந் தேகுவாய்
வடமேல் திசையின் வழிநோக் கிடுவாய்
மரமடர் குன்று வந்துனைச் சேரும்:
அக்குன் றடிமருங் கடிவைத் தேகு
குன்றதன் இடப்புறம் குறுகி நடந்திடு. 150
அடுத்ததாய் அங்கே ஆறொன் றடுக்கும்
அதுவும் உன்றன் அகல்வலப் புறமாய்;
ஆற்றின் ஓரமாய் அங்குநீ நடப்பாய்
நுரைநீர் வீழ்ச்சி வருமூன் றினைக்கட;
கடல்முனை ஒன்றன் நுனியைநீ அடைவாய்
குடாநில நீண்ட முடிவினை யடைவாய்:
கடல்முனை நுனியில் வதிவிட மொன்றுள
குடாநிலை முடிவில்மீன் குடிலொன் றங்குள
அங்குதா னப்பாஉன் தந்தை வாழ்கின்றார்
உனைச் சுமந்தவளும் உளளங் கழகியும் 160
அங்குதா னப்பாஉன் அன்புச்சோ தா�கள்
அழகிய இரண்டு அ��வையர் அங்குளர்."
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
எழுந்தடி வைத்து ஏகினான் பாதையில்
ஒருநாள் நடந்தனன் இருநாள் நடந்தனன்
மூன்றாம் நாளிலும் முன்விரைந் தேகினன்
வடமேல் திசையின் வழியினை நோக்கி
மரமடர் குன்றினை வந்தே சேர்ந்தனன்:
அக்குன் றடிமருங் கடிவைத் தேகினன்
குன்றதன் இடப்புறம் குறுமருங் கேகினன் 170
அடுத்ததாய் அங்கே ஆறொன் றடுத்தது
ஆற்றின் ஓரமாய் அவன்நடந் தேகினன்
ஆற்றினைத் தொடர்ந்தனன் அவன்இடப் பக்கமாய்
மூன்றுநீர் வீழ்ச்சியை முன்கடந் தேகினன்
அடைந்தனன் கடல்முனை அதன்ஒரு நுனியினை
குடாநில நீண்ட முடிவுக் கேகினன்:
கடல்முனை நுனியினில் வதிவிடம் இருந்தது
குடாநில முடிவில்மீன் குடிலொன் றிருந்தது.
அடுத்துஅவன் வதிவிடத் ததனுட் சென்றனன்
அடைய(�)ளம் கண்டிலர் அங்குளோர் அவனை: 180
"இந்த அன்னியன் எங்கிருந் தடுத்தனன்
நாடோடித் தி��பவன் நல்வதி விடமெது?"
"உன்றன் மைந்தனை உளமறிந் திலதா?
உ��மைப் பிள்ளையைத் தொ�யவு மிலையா?
உந்தமோ என்பவன் மாந்தர்கள் ஒருதினம்
தம்முடன் இல்லகம் தாமெடுத் தேகினர்
அவன்பிதா கைச்சாண் அளவவ னிருக்கையில்
தாயவள் நூற்கோல் தன்நெடி திருக்கையில்?"
தாயால் இப்போ தான்சொல முடிந்தது
வயோதிப வனிதையும் வருமா றியம்பினள்: 190
"ஓ,என் மைந்தா, உயர்பாக் கியமிலாய்!
ஓகோ, ஏழ்மையோய், உயர்பொன் **னணியே,
உன்விழி யோடினும் உயிருட னுள்ளாய்
பலஇந் நாடுகள் பயணம் செய்கிறாய்
இறந்துபோ னாயென ஏங்கிநா னழுகையில்
தொலைந்துபோ னாயென நினைத்திட வேளையில்!
இருவர் மைந்தர்முன் எனக்கே இருந்தனர்
எழிலார் புதல்வியர் இருவரு மிருந்தனர்
அந்தப் பிள்ளைகட் கதிர்ஷ்ட மற்றநான்
இழந்தேன் மூத்த இருபிள் ளைகளை: 200
வந்த பெரும்போ ரதில்மைந் தனையும்
பு��யாத இடத்தில் புதல்வியும் இழந்தேன்;
மைந்தனோ மீண்டும் வந்திங் குற்றனன்
மகளின் வருகை நிகழமா ட்டாது."
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
அவனால் இவ்விதம் வினாவ முடிந்தது:
"எங்கே இழந்தனை உன்றன் மகளைநீ
என்றன் சோதா� எவ்வழி யேகினள்? "
இந்தச் சொற்களில் இயம்பினள் அன்னை
இயம்பினள் அவளே இயம்பினள் இவ்விதம்: 210
"என்றன் மகளை இழந்தது அங்கே
உன்றன் சோதா� உவ்வழி சென்றனள்:
சிறுபழம் பொறுக்கச் சென்றனள் வனத்தே
**ஒருபழம் பொறுக்க உயர்மலை யடியில்
தொலைந்தது கோழி தோன்றா தாங்கே
அகாலத் திறந்தது அங்கே பறவை
மற்றது புகலொணா மரணத் தொழிந்தது
விபா�க்க முடியா(த) மொழியில் விடிந்தது.
பெண்ணுக் காகப் பெருந்துயர் கொண்டதார்?
தாயல்ல என்னில் யார்வே றுள்ளனர்! 220
தாய்தான் முதலில் தான்போய்ப் பார்த்தனள்
தாயே தேடினள் தாய்துய ருழன்றனள்;
செய்பாக் கியமிலாள் தேடிநான் சென்றேன்
தேடிப் பார்த்தேன் செல்வஎன் மகளை
கரடியைப் போல காடெலாம் மோடினேன்
நீர்நாய் போல நீள்வனம் தி��ந்தேன்
ஒருநாள் தேடினேன் இருநாள் தேடினேன்
மூன்றாம் நாளும் முழுதும் தேடினேன்;
மூன்றாம் நாளும் முடிவுறும் போதினில்
கடைசியோர் வாரம் கழிந்தநே ரத்தில் 230
உயர்ந்த பெருமலை யொன்றினி லேறினேன்
உயரத் தடைந்து உச்சிசேர்ந் திட்டேன்
அங்கென் புதல்வியை அழைத்தேன் கூவி
தெலைந்தவள் எண்ணித் துயருற நின்றேன்:
'என்சிறு பெண்ணே எங்குநீ உள்ளாய்
என்தவ மகளே இல்லத்து வருவாய்!'
என்மகட் கூவி இவ்வா றழைத்தேன்
இழந்தவள் எண்ணி ஏங்கி யிருந்தேன்
மலைகூ றிற்று மறுமொழி யிப்படி
பசும்புற் றரையெலாம் பதில்எதி ரொலித்தது: 240
'தேடியுன் மகளைக் கூவி யழைத்திடேல்
கூவி யழைத்திடேல் குரலால் அழைத்திடேல்
இந்தவாழ் நாளில் என்றும் வந்திடாள்
அவள்தன் வாழ்நாள் என்றும் திரும்பிடாள்
அன்னைவாழ்ந் திட்ட முன்னாள் வதிவிடம்
வயதாம் தந்தையின் படகுத் துறைப்புறம்.' "
பாடல் 35 - குல்லர்வோவும் அவனுடைய
சகோதரியும்
அடிகள் 1-68 : குல்லர்வோ தன் பெற்றோருக்காகப் பலவித
வேலைகளைச் செய்தும் அவை பயனற்றுப் போனதால்,
அவனுடைய தந்தை வா�களைச் செலுத்துவதற்கு அனுப்புகிறார்.
அடிகள் 69-188 : குல்லர்வோ வரிகளைச் செலுத்திவிட்டுத்
திரும்பி வரும் வழியில் முன்னொரு நாள் சிறுபழங்கள்
பொறுக்கப் போய்த் தொலைந்து போன சகோதா�யைச்
சந்திக்கிறான். அவளைச் சகோதரிஎன்று அறியாமல் தனது
வண்டிக்குள் இழுத்து அவளுடன் தவறான முறையில் நடக்கிறான்.
அடிகள் 189-344 : பின்னர் அவர்கள் தங்களுடைய உறவு
முறையை அறிந்ததும், அவள் ஓடிப்போய் ஆற்றில் பாய்கிறாள்.
குல்லர்வோ வீட்டுக்கு விரைந்து நடந்த சம்பவங்களைத்
தாயிடம் கூறிவிட்டுத் தானும் தற்கொலை செய்ய எண்ணுகிறான்.
அடிகள் 345-372 : தாய் அவனுடைய தற்கொலை எண்ணத்தைத்
தடுத்து எங்காவது ஒரு தனியிடத்தில் போய் இருந்தால் மனம்
ஆறுதல் பெறும் என்று கூறுகிறாள். ஆனால் குல்லர்வோ
எல்லாவற்றுக்கும் முன்னர் உந்தமோவைப் பழிவாங்கத்
தீர்மானிக்கிறான்.
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
முழுநீள் காலுறை முதியவன் பிள்ளை
வாழ்வை நடத்த வாய்ப்புக் கிடைத்தது
பெற்றவர் தந்த பெருநிழ லதன்கீழ்
ஆயினும் விளங்கினான் அவன்எது மில்லை
மனிதன் ஒருவனின் மனதைப் பெற்றிலன்
ஏனெனில் தவறாய் எங்கோ வளர்ந்ததால்
மூடனைப் போல முன்தா லாட்டலா்
தவறாய் வளர்த்த எவரோ ஒருவரால்
மூடனாய்த் தாலாட் டியமுன் ஒருவரால். 10
வேலை(க்குப்) பையன் வெளிக்கிட லாயினன்
ஆயத்த மாயினான் அவனே உழைக்க
மீன்பிடித் தொழிலை விரும்பிப் பார்த்தனன்
பா��ய வலையிழு பணியினைக் கொண்டனன்;
இவ்விதம் பின்னர் இயம்பினன் அவனே
செங்கைத் துடுப்புடன் சிந்தனை செய்தான்:
"முழுப்பலம் அனைத்தும் மூட்டி இழுக்கவா
வலுவனைத் தினொடும் வலிக்கவா துடுப்பு
அல்லது கருவியின் அதன்இயல் பிழுக்கவா
வலிக்கவா துடுப்பு தேவைக் கேற்றதாய்?" 20
பேசினன் சாரதி பின்னணி யத்திருந்(து)
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"முழுப்பலம் அனைத்தையும் மூட்டி இழுப்பினும்
வலுஅனைத் தினிலும் வலிப்பினும் துடுப்பு
உன்னால் படகை உடன்நகர்த் தொண்ணா
**மிண்டுக் குவட்டை மிகநொருக் கொண்ணா."
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
முழுப்பலம் அனைத்தும் மூட்டி இழுத்தான்
வலுஅனைத் தினிலும் வலித்தான் துடுப்பு
மிண்டுக் குவடுகள் வேறாய்ப் பெயர்ந்தன 30
சூரைச் சட்டம் துகளா யுடைந்தன
காட்டர சுப்பட கதுநொருங் கியது.
கலர்வோ வந்தனன் கண்டிட நிகழ்ந்ததை
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"என்றும் துடுப்புநீ இழுப்பவன் ஆகாய்
மிண்டுக் குவட்டை வீணாய்ப் பெயர்த்தனை
சூரைச் சட்டம் துகளா யுடைத்தனை
முழுப்பட கினையும் முனைந்தே நொருக்கினை;
செல்வாய் வலைக்குள் செறிமீ னடிக்க
மீன்களை அடிக்கும் மிகுவலன் ஆகலாம்!" 40
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
அடிக்கச் சென்றான் அகல்வலைக் குள்மீன்
அடிக்கும் போதில் அவன்மீன் களையே
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"சக்தியும் பலமும் சார்த்தி அடிக்கவா
மனிதனின் தனியொரு வலியுட னடிக்கவா
அல்லது கருவியின் அதன்இயல் அடிக்கவா
தேவைக் கேற்றதாய்ச் செறிமீ னடிக்கவா?"
இழுத்தவன் வலையை இயம்பினன் இவ்விதம்:
"அடிப்பவன் ஒருவனால் ஆம்பய னெதுவுள 50
சக்தியும் பலமும் சேர்த்தடிக் காவிடில்
மனிதனின் வலியுடன் நனியடி யாவிடில்!"
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
சக்தியும் பலமும் சார்த்தியே அடித்தான்
மனிதனின் தனியொரு வலியுட னடித்தான்
கலக்கி நீரைக் கஞ்சியா யாக்கினான்
அடித்து வலையை ஆக்கினான் சணற்கூழ்
இடித்துப் பசைக்குழம் பியற்றினான் மீன்களை.
கலர்வோ வந்தனன் கண்டிட நிகழ்ந்ததை
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: 60
"அடிப்பவன் என்றும் **ஆகாய் மீன்நீ
அடித்து வலையை ஆக்கினை சணற்கூழ்
அடித்து மிதவையை ஆக்கினை துகள்கள்
கயிற்றை ஒடித்துக் கனதுண் டாக்கினை;
செல்வாய் வா�களை எடுத்துநீ செல்வாய்
செலுத்தவும் செல்வாய் செறிநில வா�களை
பயணம் செய்வதில் பல்வல னாகலாம்
செல்வழித் திறமை உள்ளவ னாகலாம்."
குல்லர்வோ என்பான் கலர்வோ மைந்தன்
முழுநீல் காலுறை முதியவன் பிள்ளை 70
மஞ்சள் கேசமும் வனப்பும் வாய்ந்தவன்
கவின்தரத் தோலதில் காலணி கொண்டவன்
எடுத்தவன் வா�களை எடுப்புடன் சென்றான்
நிலத்தின் தீர்வையைச் செலுத்திடச் சென்றான்.
எடுத்து வா�களை ஏகிய பின்னர்
ந