"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Tamil Language & Literature > Project Madurai >Index of Etexts released by Project Madurai - Unicode & PDF > கலேவலா - பின்லாந்தின் தேசிய காவியம் - நூல் அமைப்பு, அறிமுகம், சொற்றொகுதி, விளக்கக் குறிப்புகள் > பாடல் 1 & 2 > பாடல்கள் 3-10 > பாடல்கள் 11-18 > பாடல்கள் 19-25 > பாடல்கள் 25-35 > பாடல் 36 - 50 >
கலேவலா - பின்லாந்தின் தேசிய காவியம்
பாடல்கள் 3-10
தொகுப்பு: எலியாஸ் லொண்ரொத் தமிழ் மொழிபெயர்ப்பு: ஆர். சிவலிங்கம் (உதயணன்) நூல் அமைப்பும் அறிமுகமும்: டாக்டர் அஸ்கொ பார்பொலா (பேராசிரியர் - இந்திய இயல்) |
Compiled by: Elias Lonnrot Translated into Tamil by R.Sivalingam Edited with an introduction by Asko Parpola |
Etext Preparation (input) : Ms. Sarala Sandirasegarane
Etext Preparation (proof-reading) : Udhayanan
Etext Preparation (webpage) : Kumar Mallikarjunan
?Project Madurai 1999
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted
to preparation of electronic texts of tamil literary works and to
distribute them free on the Internet. Details of Project Madurai are
available at the website http://www.tamil.net/projectmadurai
You are welcome to freely distribute this file, provided this
header page is kept intact.
பாடல் 3 - பாடற்போட்டி
அடிகள் 1 - 30: வைனாமொயினன் யொவுகாஹைனனின் சகோதரி ஐனோவைக் காட்டில் சந்தித்து
உரையாடுகிறான்.
அடிகள் 31 - 116: ஐனோ அழுதபடியே வீட்டுக்கு ஓடிப் போய்த்
தாயாருக்குச் சொல்லுகிறாள்.
அடிகள் 117 - 188: தாயார் அழுகையை
நிறுத்திவிட்டு, அலங்காரம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் இருக்கச்
சொல்லுகிறாள்.
அடிகள் 189 - 254: ஐனோ மென்மேலும் அழுது ஒரு வயோதிப மனிதனை
விவாகம் செய்ய முடியாது என்கிறாள்.
அடிகள் 255 - 370: ஐனோ கவலையில்
காடுகளில் திரிந்து, ஒரு அபூர்வமான கடற்கரையை அடைந்து அதில் குளிக்கும் பொழுது
அமிழ்ந்து போகிறாள்.
அடிகள் 371 - 434: அவளுடைய மரணச் செய்தியை ஒரு முயல்
போய் வீட்டில் சொல்லுகிறது.
அடிகள் 435 - 518: அவளுடைய தாய் இரவு பகலாக
அழுகிறாள்.
பாடல் 9 - இரும்பின் மூலக்கதை
அடிகள் 1 - 100 : வைனாமொயினன் வீட்டுக்கு வந்து, இல்மரினனை வட பகுதிக்குச்
சென்று சம்போவைச் செய்து வடநில மங்கையைப் பெறும்படி கூறுகிறான்.
அடிகள் 101
- 200 : இல்மரினன் வடபகுதிக்குச் செல்ல மறுக்கிறான். வைனாமொயினன் வேறு வழிகளைக்
கையாண்டு அவனை வடபகுதிக்கு அனுப்புகிறான்.
அடிகள் 201 - 280 : இல்மரினன்
வடபகுதிக்கு வருகிறான். அங்கு அவன் நன்கு வரவேற்கப்பட்டுச் சம்போவைச் செய்வதாக
வாக்கு அளிக்கிறான்.
அடிகள் 281 - 432 : இல்மரினன் சம்போவைச் செய்து
முடித்ததும் வடநிலத் தலைவி அதை வடக்கே மலைப் பாறைகளில் வைக்கிறாள்.
அடிகள்
433 - 462 : இல்மரினன் தனது வேலைக்கு ஊதியமாக வடநில மங்கையைக் கேட்கிறான். அவள்
தான் இன்னமும் வீட்டை விட்டுப் புறப்படக்கூடிய நிலையில் என்கிறாள்.
அடிகள்
463 - 510 : இல்மரினன் ஒரு படகைப் பெற்று வீட்டுக்குத் திரும்பி, தான் வட பகுதியில்
சம்போவைச் செய்துவிட்டதாக வைனாமொயினனுக்குக் கூறுகிறான்.