Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - M.Thanapalasingham  > சாகாவரம் பெற்ற அமெரிக்க சுதந்திரப் பிரகடனமும், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணயப் போராட்டமும்
 

Selected Writings
M.Thanapalasingham, Australia
ம.தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா

சாகாவரம் பெற்ற அமெரிக்க சுதந்திரப் பிரகடனமும்
ஈழத்தமிழர்களின் சுயநிர்ணயப் போராட்டமும்

"அமெரிக்க சதந்திர பிரகடனத்தின் தர்மமே தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டம். அமெரிக்க மக்கள் சுதந்திரம் பெற்றமைக்கு இந்த தர்மமே காரணம். ஈழத் தமிழ் மக்களும் வெற்றி பெறுவர் ஏனெனில்...

"தார்மீக அடிப்படையில் நாம் ஒரு உறுதியான அத்திவாரத்தில் நிற்கின்றோம். எமது போராட்ட இலட்சியம் நியாயமானது. சர்வதேச மனித அறத்திற்கு இசைவானது. எமது மக்கள் தன்னாட்சி உரிமைக்கு உரித்தானவர்கள். தனி அரசை அமைக்கும் தகுதி பெற்றவர்கள். சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் இந்த உரிமையை எவரும் நிராகரித்துவிட முடியாது " தமிழ் ஈழ தேசியத்தலைவர் திரு வே. பிரபாகரன்.

"தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்
தர்மம் மறுபடி வெல்லும் எனு மியற்கை
மருமத்தை நம்மாலே உலகம் கற்கும்......" பாரதி

எமது போராட்டத்தின் தர்மம் அது தரித்துள்ள காண்டீபம் காலத்தை மாற்றிக்கொண்டிருக்கும் காட்சிகள் எம் கண்முன்னே விரிகின்றது."

 


இன்று அமெரிக்க அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் அடக்கியுள்ளது. இதன் விளைவாக,  தமிழ் மக்களின் சுயநிர்ணயபோராட்டத்தின் தர்மத்தை, நியாயத்தை அதன் பின்னால் உள்ள இரத்தம் தோய்ந்த சிங்கள அரச பயங்கரவாதத்தை,  தமிழ் மக்கள் அமெரிக்க மக்களுக்கு விளக்கவோ, அவர்களின் அங்கீகாரத்தைப் பெறவோ முடியாத நிலை மாத்திரமல்ல, அமெரிக்க அரசின் பிரதிநிதிகளும் தமிழ் மக்களுடன் உறவுகளை வளர்க்க முடியாத துர்பாக்கிய நிலை இன்று நிலவுகின்றது. சுனாமி அனர்தத்தின் மனிதாபிமானம் கூட இந்த நிலைப்பாட்டின் உறைவுநிலையை உருக்கவில்லை என்பது வேதனைக்குரியது.

பிரித்தானியரின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறும் போர்க்குரலை பதின்மூன்று அமெரிக்க கொலனிகளுள் Georgia  தவிர்ந்த ஏனைய கொலனிகள் 1774 இல் எழுப்பினர். 1775இல் இதற்கான போராட்டம் ஆயுதம் தாங்கியதாக அமையவேண்டும் என்றும்இ கட்டளை தளபதியாக George Washington  இருப்பார் எனவும் முடிவு எடுத்தனர்.

எட்டு ஆண்டுகள் தொடர்ந்த யுத்தத்தில் பிரித்தானியர் பல சண்டைகளில் வெற்றி பெற்றபோதும் போரில் தோல்வி கண்டனர். சாதுரியமான கெரிலா யுக்திகளை கையாண்ட புநழசபந றுயளாiபெவழn இனின் போர் நுட்பம் ஒரு காரணமாக இருந்தபோதும்இ இவர்களது விடுதலை வேட்கையும்இ வெறியுமே முக்கிய காரணம் எனக் கூறப்படுகின்றது. இதனால்தான் 1777 இல் ஏற்பட்ட கோரமான,  இரக்கமற்ற பனிக்குளிரின் மத்தியிலும் இவர்கள் சளைக்காது போராடினர், அன்னியர் ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதற்கான புகழ்பெற்ற அமெரிக்க சுதந்திர பிரகடனம் July 4,  1776 இல் இடம்பெற்றது.

இதுவே போருக்கான அத்திவாரமாகியது. இதனை முதன்முதலில் July 7 1776 இல் Virginia  மாநிலத்தைச் சார்ந்த Richard Henry Lee என்பார் முன்மொழிந்தார். இதனை அடுத்து July 10, 1776 இல் ஐவரைக் கொண்ட குழு சுதந்திர பிரகடன தயாரிப்பில் ஈடுபட்டனர்.

யோன் அடம்ஸ் (John Adams), பென்ஜமின் பிராங்ளின் (Benjamin Frankilin) றொஜர் ஷெர்மன்(Roger Sherman), ஆர்.ஆர் லிவிங்ஸ்ரன் ( R.R.Livingstone) தொமஸ் ஜெஃபர்சன் (Thomas Jefferson) என்போரே இந்த ஐவர். இந்த பஞ்ச பாண்டவருள் Thomas Jefferson என்பாரே இந்த பிரகடனத்தை எழுதினார். இந்த பிரகடனத்தின் அழியாத சிரம்சீவித்தன்மையைக் கொண்ட வரிகள்....

" ...We hold these truths to be self evident: that all men are created equal; that they are endowed by their creator with certain inalienable rights; that among these are life, liberty, and the pursuit of happiness."

"எல்லா மக்களையும் பிரமதேவன் சமமாகப் படைத்துள்ளான். அத்தோடு எவராலும் அபகரிக்க முடியாத சில உரிமைகளையும் எமக்கு அளித்துள்ளான். அவற்றுள், வாழ்வுரிமை (life), எவருக்கும் அடிபணியாத பிறப்பரிமை (liberty,  மண்ணில் நல்லவண்ணம் வாழ்வதற்கான வழிகளை தேடும் உரிமை (pursuit of happiness) என்பன வெளிப்படையாகக் காணப்படும் உண்மைகள் என்பதை உளம் கொள்கின்றோம். " என்பதே இதன் தாற்பரியமாகும்.

"பாரினில் எவர்கும் இனி அடிமை செய்யோம், பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்"

என்ற பாரதியின் குரலையும்,

"நாமார்க்கும் குடியல்லோம், யமனை அஞ்சோம்"

 என்ற அப்பரின் குரலையும் இப்பிரகடனத்தில் கேட்கிறோம்.

இந்த வாசகத்தில் வரும் வாழ்வுரிமை, பிறப்புரிமை, இன்பத்திற்கான முயற்சிகளில் ஈடுபடும் உரிமை என்பன மானிடத்தின் அடிப்படை உரிமைகள். அதை அபகரிக்கும் உரிமை எவர்கும் இல்லை. இவை மானிடத்தின் அம்சங்கள் என்பதே இந்த பிரகடனத்தின் அழியாத்தன்மையாகும். காலம் தோறும் இந்த வார்தைகள் மனிதத்தின் ஆழத்தில் இருந்து ஒலித்தவண்ணமே இருக்கும்.

இந்த அடிப்படை உரிமைகளைப் பேணுவதற்காகவே பூமியில் மக்களிடையே அரசாங்கங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த அரசாங்கங்கள் ஆளப்படுவோரின் சம்மதத்துடனேயே அவர்களை ஆளும் உரிமையைப் பெறுகின்றனர். இந்த உரிமையை எப்போவாவது அந்த அரசாங்கங்கள் துஸ்பிரயோகம் செய்து, இவற்றிற்குச் சாவுமணி அடிக்கும்போது அந்த அரசாங்கங்களை மாற்றும் அல்லது கலைக்கும் உரிமை அந்த மக்களுக்கு உண்டு என்பதும் இப்பிரகடனத்தில் கூறப்படுகின்றது.

மனித செயற்பாடுகளின் விளைவாக ஒரு மக்கள் தம்மை இன்னொரு மக்களுடன் இணைத்த அரசியல் பிணைப்பில் இருந்து பிரிந்து செல்வது தவிர்கமுடியாததாகும். அவ்வாறு பிரிந்து உலகில் உள்ள மற்றைய அரசுகளுடன் பிறிதாக சரியாசனம் பெறுவதும் தவிர்க்கமுடியாததொன்றாகும். பிரிவதற்காகத் தம்மைத் தள்ளும் காரணங்களை அவர்கள் வெளிப்படுத்தும் போது அதை மதிக்கவேண்டியது மனுக்குலத்தின் கடமை என்பதும் இப்பிரகடனத்தில் தொனிக்கின்றது.

அமெரிக்கா சுதந்திர பிரகடனம் செய்தபோது தமிழ் மக்கள் அதே பிரித்தானிய சாம்ராச்சியத்தின் ஆளுகைக்குள் இருந்தனர். ஆயினும் தமிழர் தேசத்தின் தனித்துவத்தை அப்போது அவர்கள் உருக்கவில்லை. அது நடந்தது 57 ஆண்டுகளுக்குப் பின்னராகும். அந்தக் கலப்பு தந்த கொடுமைகளில் இருந்து விடுபடுவதற்கான பிரகடனத்தைத் தமிழ் மக்கள் 1977 இல் வழங்கினர். அந்த பிரகடனத்தின் தாற்பரியமாக இன்றைய ஆயுதப்போராட்டம் தமிழ் மண்ணில் வேர் விட்டு நிற்கிறது. George Washington போல் ஒரு தலைமையில் சில சண்டைகளில் தமிழ் மக்கள் தோற்றாலும் போரில் வென்று சிங்களதேசத்துடன் ஒரு இராணுவ சமநிலையில் இன்று நிற்கிறார்கள்.

இந்த இராணுவ சமநலையினால்தான் அமெரிக்க சதந்திர பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள சிரம்சீவித்தன்மை கொண்ட வாழ்வுரிமை பிறப்புரிமை, இன்பத்திற்கான தேடலில் ஈடுபடும் உரிமை என்பவற்றை தமிழ் மக்கள் அடையும் வாய்ப்புத் தோன்றியுள்ளது. திரு வேலுப்பிள்ளை பிரபாகரனின் இராணுவ,  அரசியல் மதிநுட்பங்கள் இதற்குக் காரணமாக இருந்தாலும் இதற்குப் பின்னால் பறிக்கப்பட முடியாத "தன்மானம்" தமிழ் தேசியத்தின் இருப்பு என்பதை அமெரிக்கா விளங்கிக்கொள்ளும் என எதிர்பார்க்கலாம். அந்த தன்மானத்தை :

நீரினால் அள்ளிச் செல்ல முடியாது
காற்றினால் உலரவைக்க முடியாது
தீயினால் பொசிக்கிவிட முடியாது
வாளினால் வெட்டிவிட முடியாது

அமெரிக்க சதந்திர பிரகடனத்தின் தர்மமே தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டம். அமெரிக்க மக்கள் சுதந்திரம் பெற்றமைக்கு இந்த தர்மமே காரணம். ஈழத் தமிழ் மக்களும் வெற்றி பெறுவர் ஏனெனில்...

"தார்மீக அடிப்படையில் நாம் ஒரு உறுதியான அத்திவாரத்தில் நிற்கின்றோம். எமது போராட்ட இலட்சியம் நியாயமானது. சர்வதேச மனித அறத்திற்கு இசைவானது. எமது மக்கள் தன்னாட்சி உரிமைக்கு உரித்தானவர்கள். தனி அரசை அமைக்கும் தகுதி பெற்றவர்கள். சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் இந்த உரிமையை எவரும் நிராகரித்துவிட முடியாது " தமிழ் ஈழ தேசியத்தலைவர் திரு வே. பிரபாகரன்.

"தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்
தர்மம் மறுபடி வெல்லும் எனு மியற்கை
மருமத்தை நம்மாலே உலகம் கற்கும்......" பாரதி

எமது போராட்டத்தின் தர்மம் அது தரித்துள்ள காண்டீபம் காலத்தை மாற்றிக்கொண்டிருக்கும் காட்சிகள் எம் கண்முன்னே விரிகின்றது.

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home