புரிந்துணர்வு
ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, ஐந்து
ஆண்டுகள் முழுமையடையப் போகின்ற இக்காலகட்டத்தில் சிறிலங்கா அரசு
வெளிப்படையான,
வலிந்த போர் ஒன்றை தமிழ் மக்கள் மீது மேற்கொண்டு வருகின்றது.
சிறிலங்காவின் தற்போதைய அரச அதிபர் மகிந்த ராஜபக்ச போர் நிறுத்த
ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள விடயங்களை முறையாக
நடைமுறைப்படுத்தாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றிற்கு எதிரான
செயற்பாடுகளைத்தான் முடுக்கி விட்டு வருகிறார்.
மகிந்த
ராஜபக்ச சிறிலங்காவின் அரச அதிபராகப் பதவியேற்ற பின்பு நடைபெற்ற ஜெனிவா
பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்களை கூட அவர்
நடைமுறைப்படுத்த முன்வரவில்லை. சிறிலங்கா அரசின் அராஜக போக்குகள்
மேலும் தொடர்ந்தும் பெருகி வருவதைத்தான் நிலைமைகள்
சட்டிக்காட்டுகின்றன.
�இலங்கை இனப்பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு உகந்தது
அல்ல�- என்று அனைத்துலக நாடுகள் தொடர்ந்தும் கூறி வருகின்ற போதிலும்
மகிந்தவின் அரசு அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை. ஜெனிவாப் பேச்சு
வார்த்தைகளின் போது ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்களை களைவதற்கு சிறிலங்கா
அரசு இணங்கியது.
ஆனால்
அவ்வாறு நடைபெறாதது மட்டுமல்ல, ஒட்டுக்குழுக்கள் புதிய அலுவலகங்களை
கொழும்பு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை போன்ற பகுதிகளில்
அமைப்பதற்கும் சிறிலங்கா அரசு உதவிகளை செய்தது. தமிழ்ப் பகுதிகளுக்கான
பிரதான நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன.
தமிழ்
மக்கள் மீது பொருளாதார, உணவு, மருந்துத் தடைகள் விதிக்கப் பட்டன.
பொதுமக்கள் மீதான வன்முறைகள், படுகொலைகள், கட்டாய ஆட்கடத்தல்கள் என்பன
முடுக்கி விடப்பட்டுள்ளன. மாவிலாறு-சம்பூர்-வாகரை என்று தொடர்ச்ச்யான
இராணுவ ஆக்கிரமிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்ப்பொதுமக்கள்மீது வான் தாக்குதல்களும், எறிகணைத் தாக்குதல்களும்
நடாத்தப்பட்டு வருகின்றன.
�இப்படிப்பட்ட மிகக் கடுமையான சூழ்நிலையில் அனைத்துலக நாடுகள், வெறும்
அசைவற்ற நிலையில், எந்தவிதமான உணர்வையும் வெளிப்படையாக தெரிவிக்காத
போக்க்ல் இருப்பதனால், சிறிலங்கா அரசு, தனது வன்முறை அரசியலையும்,
இராணுவத் தீர்வையும் தொடர்ந்து முன்னெடுக்கிறது�- என்று தமிழீழ
விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு சு.ப.
தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். �இதனால் அனைத்துலகத்தின் நிலைப்பாடு
தொடர்பாக தமிழ் மக்களின் சந்தேகம் அதிகரித்து செல்கிறது. இலங்கைப்
பிரச்சனை தொடர்பில் இரண்டு தரப்பினர்கள் மீதும் அனைத்துலகம் கொண்டுள்ள
அணுகுமுறை தொடர்பாகக் கடும் சந்தேகமும் தமிழ் மக்களிடம்
காணப்படுகின்றது� - என்றும் திரு.சு.ப. தமிழ்ச்செல்வன் மேலும் சுட்டிக்
காட்டியுள்ளார்.
அனைத்துலக நாடுகள் இவ்வாறான அசைவற்ற நிலையில் இருக்கும் வேளையில்,
தற்போது �அசைவதாக� தெரிகின்ற இந்தியாவிற்கு, சிறிலங்காவின் அரச அதிபர்
மகிந்த ராஜபக்சவும் அவரது அமைச்சர்களும், அதிகாரிகளும் விஜயங்களை
மேற்கொண்டு வருவதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது.
இவை
குறித்து கருத்து வெளியிட்ட திரு சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் �மகிந்த
ராஜபக்ச தன்னுடைய சிங்கள-பௌத்த பேரினவாதச் சிந்தனையையும், தான்
நடத்திவருகின்ற தமிழினப் படுகொலைகளையும் மறைத்து நாடகம் ஆடும்
பொருட்டும், தமிழீழ மக்களுக்கும், இந்தியாவுக்கும் இடையே உள்ள உறவுக்கு
ஆப்பு வைப்பதற்காகவும், தமிழ் நாட்டு மக்களினால் எழுந்துள்ள
அழுத்தங்களைத் தணிப்பதற்காகவும, இந்திய விஜயங்களை மேற்கொள்ளுகின்றார்�
என்று நிலைமையை தெளிவாக கூறியுள்ளார்.
அத்தோடு திரு சு.ப. தமிழ்ச்செல்வன் மிக முக்கியமான கருத்துக்களையும்
நியாயமான எதிர்பார்ப்புக்களையும் வெளிப்படுத்தியுள்ளார். �இலங்கைப்
பிரச்சனை குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி, இந்திய மத்திய அரசிடம்
விடுத்துள்ள கோரிக்கைகள் தமிழ் நாட்டு மக்களின் மனநிலையை
பிரதிபலிப்பவையாகும். உண்மையான கள நிலரவரத்தை, இந்திய மத்திய அரசு
இப்போது புரிந்து கொண்டிருக்க கூடுமாகையால் இந்திய அரசு சிறிலங்கா
குறித்து உறுதியான முடிவுகளை இனி எடுக்க வேண்டும்.
இந்தியா ஒரு
பிராந்திய வல்லரசு. இந்தியாவில் வாழுகின்ற கோடிக்கணக்கான தமிழ் மக்கள்
எமது சகோதர இனத்தவர்கள். ஆகையால் தமிழ் மக்களின் உணர்வுகளையும்
எதிர்பார்ப்புகளையும் வேட்கைகளையும் இந்திய அரசு புரிந்து கொண்டு
எமக்கு நீதியான ஆதரவை தரவேண்டும்.
இந்தியா
சிறிலங்காவிற்கு அளித்து வருகின்ற நிதியுதவிகளை நிறுத்தி சிறிலங்கா
அரசை ஓர் ஒழுங்குக்கு கொண்டு வரவேண்டும். அத்தோடு மட்டுமல்லாது மற்றைய
சர்வதேச நாடுகளும் இவ்வாறு செய்ய வேண்டும் என்று சர்வதேச நாடுகளுக்கு
இந்தியா வேண்டுகோள் விடுக்க வேண்டும்�- என்று தமிழீழ விடுதலைப்
புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் திரு சுப. தமிழ்சசெல்வன்
கேட்டுக்கொண்டுள்ளார்.
மிகமுக்கியமான காலகட்டத்தில், மிகமுக்கியமான கருத்துக்களையும்,
எதிர்பார்ப்புகளையும், வேண்டுகோளையும் திரு. சு.ப தமிழ்ச்செல்வன்
வெளியிட்டுள்ளார். இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில அடிப்படையான
விடயங்களைச் சுட்டிகாட்டி தர்க்கிப்பது பொருத்தமானதாக அமையக் கூடும்.
இந்தியாவின் பூகோள நலன், ஈழத்தமிழர்களோடு இணைந்த ஒன்றாகும். இது
வரலாற்று ரீதியான உண்மையாகும். அடிப்படையில் சிங்கள தேச மக்கள்
இந்தியாவின் நலனுக்கு எதிரான எண்ணங்களைக் கொண்டிருக்கையில் தமிழீழ
மக்கள் இந்திய தேசத்தின் நலனில் அக்கறை கொண்டவர்களாக இருந்து
வந்துள்ளார்கள்.
தவிரவும்,
சிறிலங்கா அரசுகளின் இந்திய விரோத மனப்பான்மை என்பதானது ஒரு
வெளிப்படையான விடயமாகும். வரலாற்றைத் திரும்பி பார்த்தால் சில
விடயங்களை சுட்டிக்காட்ட முடியும்.
இந்திய சீன யுத்தத்தின் போதும, இந்தியா-பாகிஸ்தான்
யுத்தத்தின் போதும் சிறிலங்கா அரசுகள் இந்தியாவின் நலனுக்கு எதிரான
கோட்பாட்டையும், செயற்பாடுகளையும் கொண்டிருந்தன. இந்தியா-சீனா
யுத்தத்தின் போது இலங்கைத்தமிழ் மக்கள் இந்திய அரசுக்கு அனுப்புவதாக
நிதி சேகரிப்பை நடாத்தி, சேகரித்த நிதியை, இலங்கைக்கான இந்தியத்
தூதுவரிடம் கையளித்தார்கள்.
ஆனால் அந்த
நிதியை இந்தியாவிற்கு அனுப்ப விடாமல் சிறிலங்கா அரசு தடை செய்து
விட்டது. ஓரு காலகட்டத்தில் இந்திய திரைப்படங்கள், சஞ்சிகைகள்
போன்றவற்றின் இறக்குமதியையும், வணிகப்பொருட்களின் இறக்குமதியையும்
சிறிலங்கா அரசு மட்டுப்படுத்தியிருந்ததையும் நாம் அறிவோம்.
சிறிலங்காவின் பொருளாதார நலன் குறித்த அக்கறையையும் விட தமிழ்- இந்திய
வெறுப்பு மனப்பான்மைதான் சிங்கள அரசுளிடம் மேலோங்கி இருந்தது. இலங்கை
சுதந்திரம் அடைந்த உடனேயே இந்திய வம்சாவழி தமிழர்களை இந்தியாவிற்கு
அனுப்ப் விடுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வரலாற்றின் அவமானகரமான
அடையாளங்களாகும்.!
சிங்கள மக்கள், சிங்கள அரசுகள், சிங்கள தலைவர்கள் என்று சகல
மட்டங்களிலும் இந்திய வெறுப்புணர்ச்ச் மேலோங்கி நிற்கின்றது. முன்னாள்
ஜனாதிபதி ஜெஆர் ஜெயவர்த்தனாவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற கிரிக்கெட்
போட்டியொன்றில் சிறிலங்காவின் கிரிக்கெட்குழு இந்தியாவின் கிரிக்கெட்
குழுவினை வென்றததைக் கொண்டாடும் விதமாக, ஒரு நாளை, பொது விடுமுறை
தினமாகவே ஜனாதிபதி ஜேஆர்.ஜெயவர்த்தனா அறிவித்ததை ஓர் உரிய உதாரணமாக
நாம் இங்கே சுட்டிக் காட்டலாம்,
�ஜேஆர் ஜெயவர்த்தனா வெறுப்பது இந்தியாவை மட்டுமல்ல, இந்திராவையும்
கூடத்தான்�- என்று மறைந்த இந்தியப்பிரதமர் இந்திரா காந்தி அவர்கள்
(தனிப்பட்ட உரையாடலின் போது) தெரிவித்தமை இங்கு நினைவு கூரத்
தக்கதாகும்.!
இந்தியாவிற்கும், இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கும் ஆதரவாக இருப்பது
தமிழீழ மக்களும், தமிழீழ விடுதலைப் புலிகளும் தான் என்கின்ற எமது
கருத்தை நாம் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். நாம் முன்னரும் பல
தடவைகள் இந்தக் கருத்தை வௌவேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி வந்துள்ள
போதிலும் இந்தக் கட்டுரையின் சாராம்சம் கருதி மீளவும் வலியுறுத்த
விரும்புகின்றோம்.
இன்று தமிழீழத்திற்கு உரித்தான கடற்பரப்பின் பல பகுதிகள், தமிழீழ
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதனால் இன்று இந்தியாவின்
கடற்பிராந்திய நலன் உண்மையான பாதுகாப்பு நிலையில் உள்ளது. மாறாக இந்தக்
கடற்பிராந்தியப் பகுதிகள், சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டுக்குள்
இருக்குமானால், வேளைகளிலும் சரி கடற்பிராந்திய பகுதிகளை, இந்தியாவிற்கு
எதிரான வேறு அந்நிய சக்திகள் குத்தகைக்கு எடுத்திருக்கும்.
அடிப்படையில் இந்திய விரோதப் போக்கைக் கொண்டிருக்கின்ற சிறிலங்கா
அரசுகள் இந்தக் கடற் பிராந்தியப் பகுதிகளை, இந்திய விரோத சக்திகளான
சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு குத்தகைக்கு விட்டிருக்கும்.
இங்கே ஒரு சந்தேகத்திற்கு இடமான விடயத்தைச் சுட்டிக்காட்ட
விரும்புகின்றோம். அண்மையில் காலித் துறைமுகத்தில் தாக்குதல் ஒன்று
நடாத்தப் பட்டது. அது குறித்த முழுமையான செய்திகள் வெளிவராமல்
மறைக்கப்பட்டு விட்டன. கிடைக்கப்பெற்ற சில தகவல்கள் புதிய கரிசனைகளை
ஏற்படுத்துகின்றன. காலித்துறை முகத்தில் இருந்த ஆயுதக் களஞ்சியம்
சிறிலங்காவிற்கு சொந்தமானது அல்ல என்றும், அது வேறு ஒரு நாட்டுக்கு
சொந்தமானது என்றும், சில தகவல்கள் கசிந்து வந்துள்ளன. �சீனாவின் இராணுவ
அமைப்புக்களின் ஒன்றான நொரிங்கோவிற்குச் சொந்தமான ஆயுதக்களஞ்சியம்தான்
அது� என்றும், இங்கே சீனாவின் ஆயுதக் களஞ்சியம் வைக்கப்படுவததற்காக,
சிறிலங்காவோடு இணக்கப்பாடு ஒன்றை, சீனா முன்னர் கொண்டுள்ளதாகவும்
வதந்திகள் உலாவின. இந்தியாவின் பிராந்திய நலனுக்கும், பாதுகாப்புக்கும்
அச்சுறுத்தலாக அமையக்கூடிய இந்த விடயம் உண்மைதானா?
இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியா குறித்தும், இந்தியாவின் நலன்
குறித்தும், இந்தியாவின் பிராந்திய நலன் குறித்தும் தமிழீழ
விடுதலைப்புலிகள் கொண்டிருக்கின்ற கோட்பாட்டையும், நிலைப்பாட்டையும்
தர்க்கிக்க விழைகின்றோம்.
இந்தியாவுடனான உளப்பூர்வமான, ஆத்மார்த்தமான நட்புறவை நாடி, தன்னுடைய
உள்ளக் கிடக்கையை, விருப்பத்தை, வேண்டுகோளை, தமிழீழத் தேசியத் தலைமை
தொடர்ந்தும் தெரிவித்தே வந்துள்ளது. இயக்கத்தின்மீது இந்தியாவின்
அரசியல்-இராணுவ அழுத்தங்கள் இருந்த வேளைகளிலும் சரி, இந்த
அரசியல்-இராணுவ அழுத்தங்களை எதிர் கொண்டு வெற்றி கொண்ட வேளைகளிலும்
சரி, சிங்களப் பேரினவாத அரசுகள் மேற்கொண்ட போர்களிலும் இராணுவ
வெற்றிகளையும் அரசியல் வெற்றிகளையும் பெற்ற்ட்ட வேளைகளிலும் சரி,
தமிழீழத் தேசியத் தலைமை தன்னுடைய உள்ளக் கிடக்கையை, இந்திய தேசத்தின்
மீதான தன்னுடைய நட்புணர்வை வெளிப்படையாகவே வெளிப்படுத்தி வந்துள்ளது.
வரலாற்றிலிருந்து சில சம்பவங்களைச் சுட்டிக்காட்டுவது இவ்வேளையில்
பொருத்தமாக இருக்கும்.
இந்திய இலங்கை ஒப்பந்தக் காலகட்டதின்போது,- அதாவது சுமார் இருபது
ஆண்டுகளுக்கு முன்பு- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன்
அவர்கள், தன்னுடைய
சுதுமலை பிரகடன பேச்சின் போதும், இந்தியாவுடனான நட்புறவை
வலியுறுத்திப் பேசியிருந்ததை நாம் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிகாட்ட
விழைகிறோம். �இந்திய
இலங்கை ஒப்பந்தமானது, தமிழ் மக்களுக்கு எந்தவிதமான உரிமையையும்
பெற்றுத் தராது,� என்பதை விளக்கிய தமிழீழத் தேசியத்தலைவர் அதே
மேடையிலேயே இந்தியாவின் மீதான தன்னுடைய நம்பிக்கையையும், நட்புறவையும்
தெளிவு படுத்தயியிருந்தார். �நாம் இந்தியாவை நேசிக்கிறோம். இந்திய
மக்களை நேசிக்கின்றோம். நாம் இந்தியாவிற்கு எதிரானவர்கள் அல்ல� என்று
தமிழீழ விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டை, அன்றே தேசியத் தலைவர்
தெளிவாக்கியிருந்தார்.
பின்னர் 2002ம் ஆண்டு மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், உலக நாடுகள்
அனைத்தினது கவனத்தையும் ஈர்த்து நடைபெற்ற, சர்வதேச ஊடகவியலாளர்
மகாநாட்டின் போதும், தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் இந்தியாவுடனான
நட்புறவு குறித்து மீண்டும் வலியுறுத்திப் பேசியிருந்தார். இங்கே ஒரு
விடயத்தை வலியுறுத்த விரும்புகிறோம்.
1987ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கொண்டிருந்த இராணுவ
அரசியல் பலம் வேறு. 2002ம் ஆண்டில் விடுதலைப் புலிகள் இயக்கம்
கொண்டிருந்த இராணுவ அரசியல் பலமும், பரிமாணமும் வேறு. அந்தப் பதினைந்து
ஆண்டு காலப்பகுதிக்குள், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவ
அரசியல் வளர்ச்சி மிகப்பெரிய பலத்தையும், பரிமாணத்தையும் எட்டிவிட்டது.
ஆயினும் இந்த இரண்டு வித்தியாசமான காலப்பகுதிகளிலும், அதாவது 1987ம்
ஆண்டிலும், 2002ம் ஆண்டிலும், இந்தியாவுடனான நட்புறவு குறித்து ஒரே ஒரு
கருத்தைத்தான் தமிழீழத் தேசியத் தலைமை கொண்டிருந்தது.
பின்னர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசுடனான பேச்சு வார்த்தைகளின்
போதும், இந்தியாவின் அனுசரணையையும் நட்பையும் நாடி விடுதலைப்புலிகள்
வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆனால் துர்அதிஸ்டவசமாக இந்தியாவின்
முன்னைய அரசு விடுதலைப் புலிகளின் நேசக்கரத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் இந்தியாவுடனான நட்புறவை நாடி
தமது எண்ணத்தை தொடர்ந்தும் வெளிப்படுத்தியே வந்துள்ளார்கள். தேசத்தின்
குரல் அன்ரன் பாலசிங்கம், அரசியல் துறைப்பொறுப்பாளர் திரு
சு.ப.தமிழ்ச்செல்வன், வரலாற்றுத்துறை பொறுப்பாளர் திரு. யோகரட்னம்
யோகி, மூத்த உறுப்பினர் திரு வே பாலகுமாரன் போன்றோர் இத்தகைய நட்புக்
கருத்துக்களை மீண்டும் மீண்டும் தெரிவித்தே வந்துள்ளார்கள்.
இந்திய அமைதி காக்கும் படையினருடனான போர் குறித்து, நாம்
விருப்பு-வெறுப்பின்றி சிந்தித்துப் பார்த்தால் அதில் ஓர் அடிப்படை
நியாயம் பலமாக இருப்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.
சுருக்கமாக
கூறினால் ஈழத்தமிழர்கள் குறித்த ஆனால் ஈழத்தமிழர்களின் பிரச்சனையை
தீர்க்கமுடியாத ஒப்பந்தம் ஒன்றை, ஈழத்தமிழர்கள் மீது திணிக்க
முயன்றபோது, தனது உரிமையையும், சுதந்திரத்தையும் காப்பாற்ற,
ஈழத்தமிழினம் போராடியது. இதனையே மறுவழமாகச் சிந்தித்து பார்ப்போம்.
இதேபோல்
வேறு ஒரு வல்லரசு, இந்தியா குறித்த, ஆனால் இந்திய மக்கள்
சம்பந்தப்படாத, இந்தியாவின் பிரச்சனையை தீர்க்க முடியாத, ஒப்பந்தம்
ஒன்றை இந்தியா மீது திணிக்க முனைந்திருந்தால், இந்தியா தன்னுடைய
உரிமையையும் சுதந்திரத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காகப்
போராடியிருக்கும். இதில் இருக்கும் அடிப்படை நியாயம் ஒன்றுதான். இதனை
புரிந்து கொள்வது கடினமான ஒன்றல்ல.
ஆனால் இந்த ஒப்பந்தத்திற்குக்கூட, இன்று நேர்ந்து விட்ட கதி என்ன?
சிறிலங்கா அரசும் இந்திய அரசும் கைச்சாத்திட்ட இந்த ஒப்பந்தம் இன்று
சிறிலங்கா அரசினாலேயே தூக்கி எறியப்பட்டு விட்டது. �வடக்கு கிழக்கு
இணைப்பு, சிறிலங்காவின் யாப்புக்கு முரணானது, சட்ட விரோதமானது. ஆகையால்
இந்த ஒப்பந்தம் செல்லாது�- என்று சிறிலங்காவின் உச்ச நீதிமன்றத்தின்
தீர்ப்புச் சொல்லியிருக்கிறது.
இந்த ஒப்பந்தத்தில் உள்ள குறைகள் பற்றியும், நிறைவற்ற தன்மை பற்றியும்,
இவற்றை கூட சிறிலங்கா அரசு நிறைவேற்ற மாட்டாது என்றும்,
விடுதலைப்புலிகள் நன்கு உணர்ந்திருந்தார்கள். ஆனால், இந்தியா சிறிலங்கா
அரசை நம்பியது. நம்பிய இந்திய அரசுக்கு நாமம் போட்டு விட்டது சிறிலங்கா
அரசு.
இதன் மூலமும், தங்களுடைய கடந்தகாலச் செயற்பாட்டுக்கள் மூலமும்
சிறிலங்கா, இந்தியாவிற்குச் சில செய்திகளை சொல்லியுள்ளது. இந்தியா இவை
குறித்துத் தீவிரமாச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.
இந்தியாவிற்கு, சிறிலங்கா சொல்லுகின்ற செய்திகள்:-
� எமது நடவடிக்கைகள் தமிழர்களுக்கு எதிரானது என்பதையும் விட,
இந்தியாவுக்கு எதிரான, இந்தியாவின் ராஜதந்திரத்துக்கு எதிரான எமது
நிலைப்பாட்டின் நடவடிக்கைகளேயாகும்.
� நீங்கள் (இந்தியா) நல்லநோக்கம் என்று நினைத்துக் கொண்டு
வருகின்றவற்றை, நாங்கள் ஏதாவது ஒரு வகையில் முறியடித்தே தீருவோம்.
� உங்களுடைய பிராந்திய நலனுக்கு எதிராக நாம் செயல்படுவோம்.
� இந்தியா ஊடாக தமிழர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்றால்,
இந்தியாவிற்கு எதிராக சிறிலங்கா இயல்பாகவே திரும்பும் என்பதுதான்
அடிப்படையான விடயமாகும்.
இப்படிப்பட்ட செய்திகளை சிறிலங்கா அரசு இந்தியாவிற்கு கொடுத்துக்
கொண்டிருக்கையில், தமிழீழ விடுதலைப்புலிகள் என்னவிதமான செய்திகளை,
இந்தியாவிற்கு தெரிவித்து வருகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
பல்வேறு சமயங்களிலும், தொடர்ந்தும் தமிழீழ விடுதலை இயக்கம், இந்தியா
குறித்தும், இந்தியாவுடனான நட்புறவு குறித்தும் தெளிவாக வெளியிட்ட
கருத்துக்களை நாம் மீண்டும் இப்போது குறிப்பிட விரும்புகின்றோம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாடும், செய்திகளும் வருமாறு:
� இந்தியாவின் பிராந்திய மேலாண்மைக்குப் பங்கம் விளைவிக்க
விடுதலைப்புலிகள் விரும்பவில்லை.
� இந்தியாவின் இறையாண்மைக்கும், இந்திய நாட்டின் இந்திய மக்களுக்கும்
விடுதலைப்புலிகள் எதிரானவர்கள் அல்ல.
� இந்தியாவின் தேசிய நலன்களுக்கு விடுதலைப் புலிகள் தடையாக இருக்கப்
போவதில்லை.
� இந்தியாவின் புவியியல் கேந்திர நலனுக்கு எதிராக விடுதலைப் புலிகள்
செயல்படுபவர்கள் அல்லர்.
� இந்தியாவின் பொருளாதார நலன்களுக்குப் பங்கம் ஏற்படுத்த
விடுதலைப்புலிகள் விரும்பவில்லை.
� இந்தியாவின் பிராந்திய அரசியல் களத்தில், குழப்பம் எதையும் ஏற்படுத்த
விடுதலைப்புலிகள் விரும்பவில்லை.
மாறாக தமிழீழ விடுதலைப் புலிகள் விரும்புவதும், நாடி நிற்பதுவும்தான்
என்ன?
� விடுதலைப் புலிகள் இந்தியாவை நேசிக்கிறார்கள். இந்திய மக்களை
நேசிக்கிறார்கள். இந்தியாவுடன் உண்மையான நல்லுறவை பேணவே விடுதலைப்
புலிகள் விரும்புகிறார்கள்.
� இந்தியாவை ஒரு நட்புச் சக்தியாகவே, ஒரு நேச சக்தியாகவே விடுதலைப்
புலிகள் கருதுகின்றார்கள்.
� இந்தியாவுடன், நட்புறவோடு இணங்கிச் செயற்பட விடுதலைப்புலிகள்
மனப்பூர்வமாக விரும்புகிறார்கள்.
� தமிழ் மக்களின் உணர்வுகளையும், எதிர்பார்ப்புகளையும், வேட்கைகளையும்
இந்தியா புரிந்துகொண்டு எமக்கு நீதியான ஆதரவை தரவேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகளினதும, தமிழீழ மக்களினதும் இந்த நேர்மையான
உணர்வுகளை அறிந்து கொண்டு, அவர்களது நியாயாமான வேண்டுகோள்களை இந்தியா
ஏற்க வேண்டும். அதற்குரிய செயற்பாட்டுகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும்.
இன்று இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள் யாவும் சிறிலங்கா உட்பட
இந்தியாவிற்கு எதிராக இந்தியாவின் நலனுக்கு எதிராக செயற்பட்டு
வருவதையும் இந்தியாவே அறியும். எதிர்காலத் தமிழீழத் தனியரசு ஒன்றுதான்
இந்தியாவின் நெருங்கிய நேசநாடாக விளங்க முடியும் என்பதுவும் இந்தியா
அறியாதது அல்ல.!
இந்தியாவின் நேர்மையான சிந்தனையும், நீதியான ஆதரவும், நியாயத்தின்
பக்கம் நின்று செயற்படும் என்று நாமும் இவ்வேளையில்
எதிர்பார்க்கின்றோம்.!
|