Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > உரிமை இல்லாத சமாதானமா? அல்லது சமாதானம் இல்லாத உரிமையா?
 

Selected Writings by Sanmugam Sabesan,  
சபேசன், அவுஸ்திரேலியா

உரிமை இல்லாத சமாதானமா?
அல்லது சமாதானம் இல்லாத உரிமையா?
[together with Translation in English]

2 May 2006

"..சமாதானப்பேச்சு வார்த்தைகளின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்திப்பேசி வருகின்ற சர்வதேச நாடுகளும் களயதார்த்தத்தையும் உண்மை நிலையை உணர்ந்து பேச வேண்டும். சிங்கள அரசு வேண்டுமென்றால் மாயையில் கண்மூடி இருக்கட்டும். ஆனால் சர்வதேச நாடுகள் தங்களுக்கு உண்மை நிலையும், களநிலையும் தெரியாது என்பது போல் நடிப்பதை இனியாவது நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் தமிழர் பிரச்சனைகளுக்கான தீர்வு முயற்சிகளில் சர்வதேச நாடுகள் பங்கேற்க முடியாமல் போவது மட்டுமல்ல பார்வையாளர்களாகவும் இருக்க முடியாத நிலைதான் ஏற்படும்..."

கடந்த வாரம் சிறிலங்காவின் இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதல், திருமலை-மூதூர் பகுதிகளில் சிறிலங்காவின் முப்படைகள் தமிழர்கள் மீது நடாத்திய தாக்குதல்கள், ஆகியவற்றை அடுத்து மீண்டும் போர் ஆரம்பமாகக் கூடும் என்று பரவலாக எதிர்பார்க்கப் பட்டது.

ஆயினும் விரைவில் ஜெனிவாவில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகும் என்று நோர்வே அரசு தெரிவித்துள்ளது. தென் தமிழீழத் தளபதிகளின் கிளிநொச்சிக்கான பயணம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் சமாதானப் பேச்சுவார்த்தைகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகரக்கூடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்துக்களை வெளியிட்டு உள்ளார்கள்.

கடந்த வாரம் இலங்கைத்தீவில் நடைபெற்ற வன்முறைகள் குறித்துப் பலவிதமான கருத்துக்களையும், கண்டனங்களையும் சர்வதேச நாடுகள் தெரிவித்துள்ள போதிலும் அடிப்படையாக ஒரு விடயத்தை வலியுறுத்தியுள்ளதை நாம் அவதானிக்கின்றோம். �சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும்� என்றும் �சமாதானப் பேச்சுவார்த்தைகள் அவசியம்� என்றும் சர்வதேச நாடுகள் இம்முறையும் வலியுறுத்தி உள்ளன. சமாதானப் பேச்சு வார்த்தைகளின் அவசியத்தை சர்வதேச நாடுகள் தொடர்ந்து வலியுறுத்துவதன் மூலம் ஒரு முக்கியமான விடயம் கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதை நாம் இங்கே சுட்டிக்காட்ட விழைகின்றோம்.

சமாதானப்பேச்சு வார்த்தைகளின் முக்கியத்துவம் மற்றும் அவசியம் குறித்து சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருவதன் மூலம் �தமிழ் மக்களின் பிரச்சனைகள் இன்றுவரை தீர்க்கப்படாமல் இருக்கின்றன.� - என்கின்ற கருத்து வெளிப்படையாகவே ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கின்றது.

சரி, தமிழ் மக்களுடைய பிரச்சனைகள் இன்றுவரை தீர்க்கப்படாமல் இருக்கின்றன. �ஆனால் இன்றுவரை தீர்க்கப்படாமல் இருக்கின்ற இப்பிரச்சனைகளை இன்றைய சிறிலங்கா அரசு சமாதானப்பேச்சுக்கள் ஊடாக தீர்த்து வைக்குமா?� என்கின்ற கேள்விக்கு உரிய பதில் என்ன?

சிறிலங்காவின் அரசுகள் தமிழருக்குரிய உரிமைகளை சமாதானப் பேச்சுக்கள் ஊடாக முன்னரும் எப்போதும் தந்ததில்லை. அதிலும் இந்த அரசு இன்றைய சிறிலங்கா அரசு அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரசு ஒருபோதும் தமிழர்களின் உரிமைகளை சமாதானப் பேச்சுக்கள் ஊடாக தருவதற்கு முன்வரப் போவதுமில்லை.

எம்முடைய இந்தக் கருத்துக்குச் சார்பாக சில விடயங்களை முன்வைத்து தர்க்கிக்க விழைகின்றோம்.

சிறிலங்காவின் இன்றைய அரசு அதிபரான மகிந்த ராஜபக்ச இன்னமும் 1958ம் ஆண்டுக் காலப்பகுதிச் சிந்தனைகளிலேயே திளைத்து நிற்கின்றார். �மகிந்தவின் சிந்தனைகள்� என்று புது முலாமிடப்பட்டுள்ள அவருடைய சிந்தனைகள் அடிப்படையில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் சிந்தனைகளும் அவருடைய முன்னோடியான முன்னாள் பிரதமரான S.W.R.D. பண்டாரநாயக்கவின் பேரினவாதக் கோட்பாடுகளும்தான்.!

ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக முன்னரும் இப்போதும் நடைபெற்ற இரண்டு சம்பவங்களைத் தர்க்கிக்க விரும்புகின்றோம்.

S.W.R.D. பண்டாரநாயக்கா அன்று சிங்களம் மட்டும் என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தியபோது அதனை எதிர்த்து தந்தை செல்வநாயகத்தின் தலைமையில் நடந்த வெகுசனப் போராட்டங்களும், சத்தியாக்கிரகப் போராட்டங்களுக்கான முன்னெடுப்புக்களும், சிங்கள இனவெறியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. இந்த இனவெறி கூர்மையடைந்து 1958ல் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரமாக வெடித்து நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும், காயப்படுத்தப்பட்டும் அவர்களது சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டும், தீக்கிரையாக்கப்பட்டும் கொடுமைகளுக்கு உள்ளானார்கள்.

அன்று தமிழர்கள் உயிரிழந்து, உடமையிழந்து, உறைவிடம் இழந்து, இடம்பெயர்ந்து கொண்டிருந்தபோது அன்றைய பிரதமர் ளுறுசுனு பண்டாரநாயக்கா அபகீர்த்தி வாய்ந்த வசனம் ஒன்றை தமிழர்கள் குறித்து வெளியிட்டார்.

அவர் ஆங்கலத்தில் கூறிய வசனம் வருமாறு: Let Tamils get a taste of violence�.

அதாவது வன்முறையின் சுவையைத் தமிழர்கள் அனுபவித்துப் பார்க்கட்டும் என்ற கருத்தப்பட S.W.R.D. பண்டாரநாயக்கா அன்று கூறியிருந்தார். ஆனால் அவரே வன்முறையின் �சுவையை� அடுத்த ஆண்டு அனுபவிக்க நேர்ந்தது. செப்டெம்பர் மாதம் 25ம்திகதி 1959ம் ஆண்டு வணக்கத்துக்குரிய சிங்கள பௌத்த பிக்குவான சோமராமதேரோ என்பவர் தன்னுடைய பிரதம மந்திரியான S.W.R.D. பண்டாரநாயக்காவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.

இங்கே ஒரு அதிசயமான விடயத்தையும் சொல்லியாக வேண்டும். தமிழர்களின் சத்தியாக்கிரக அகிம்சை வழிப்போராட்டங்களை அழிப்பதற்காக குண்டு வீசித்தாக்கும் ஜெற் போர்விமானங்கள் பன்னிரண்டை பிரதமர் S.W.R.D. பண்டாரநாயக்கா வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்திருந்தார். தமிழர்களை அழிப்பதற்காக வாங்கப்பட்ட அந்தப் பன்னிரண்டு ஜெற் போர்விமானங்கள் கொழும்பு வந்திறங்க வேண்டிய திகதி செப்டெம்பர் மாதம் 30ம் திகதி 1959ம் ஆண்டு. ஆனால் இந்தப்போர் விமானங்கள் வந்து சேர்வதைக் காணாமல் அதற்கு ஐந்து தினங்களுக்கு முன்னாலேயே ளுறுசுனு பண்டாரநாயக்கா கொலையுண்டு மாண்டு போனார்.

ஆனால் 48 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய பிரதமர் S.W.R.D. பண்டாரநாயக்க தமிழர்கள் குறித்துச் சொன்ன Let Tamils get a taste of violence� என்ற வார்த்தைப் பிரயோகத்தின் இன்னுமொரு செயல்வடிவைத்தான் சிறிலங்காவின் தற்போதைய அரச அதிபரான மகிந்த ராஜபக்சவும் 48 ஆண்டுகளுக்கு பின்னர் புரிந்திருக்கின்றார்.

திருகோணமலை-மூதூர் பகுதித்தமிழ் பொதுமக்கள் மீது விமானக் குண்டுத் தாக்குதல்களை நடாத்துமாறு சிறிலங்காவின் விமானப்படையினருக்கு அதிபர் மகிந்த ராஜபக்ச விடுத்த உத்தரவானது அவர் இன்னமும் 1958ம்ஆண்டு பேரினவாதச் சிந்தனைகளிலேயே ஊறியிருக்கின்றார் என்பதனைத் தெளிவாக்குகின்றது. இது அது அதிபர் மகிந்த ராஜபக்சவின் �Let Tamils get a taste of violenceஎன்கின்ற செய்தியாகும். இந்த விமானத் தாக்குதல் பற்றிக் குறிப்பிடுகின்ற BBC செய்தி நிறுவனம் இத்தாக்குதல் முன்னரேயே திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்ட தாக்குதல் என்று குறிப்பிடுகின்றது.

இந்த 2006ம் ஆண்டுக் காலத்தில் பழைய பண்டாரநாயக்கா காலத்தைப் பற்றியும் அவரது பேரினவாதக் கோட்பாடுகளைப் பற்றியும் பேசுவதால் பயன் இல்லை என்பதை அதிபர் ராஜபக்ச உணர்ந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இதனை அவர் உணர்ந்து கொள்ளும் நேரம் விரைவில் வந்து சேரும் பண்டாரநாயக்காவின் காலத்து நிலைமை இன்று மாறி விட்டது. களயதார்த்த நிலைமை என்பது இன்று வேறாகும்.!

இதேபோல்தான் சமாதானப்பேச்சு வார்த்தைகளின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்திப்பேசி வருகின்ற சர்வதேச நாடுகளும் களயதார்த்தத்தையும் உண்மை நிலையை உணர்ந்து பேச வேண்டும். சிங்கள அரசு வேண்டுமென்றால் மாயையில் கண்மூடி இருக்கட்டும். ஆனால் சர்வதேச நாடுகள் தங்களுக்கு உண்மை நிலையும், களநிலையும் தெரியாது என்பது போல் நடிப்பதை இனியாவது நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் தமிழர் பிரச்சனைகளுக்கான தீர்வு முயற்சிகளில் சர்வதேச நாடுகள் பங்கேற்க முடியாமல் போவது மட்டுமல்ல பார்வையாளர்களாகவும் இருக்க முடியாத நிலைதான் ஏற்படும்.

இராணுவத் தலைமையகத் தாக்குதல் என்றால் குற்றம். திருமலையில் பொதுமக்கள் மீதான விமானத்குண்டு வீச்சுக்கள் என்றால் யதார்த்தம் என்பது போன்ற கொள்கை விளக்கங்களையும் போரியல் குறித்துப் புதுப்புது வரைவிலக்கணங்களையும், சர்வதேசம் தொடர்ந்தும் கற்பித்துக் கொண்டிருக்க முடியாது.

போரியல் வரலாற்றில் இருந்து ஓரிரு தகவல்களை இவ்வேளையில் எமது வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம். �போர்� என்பது வன்முறை சார்ந்ததாகும். வன்முறை சார்ந்து போரை எதிர்கொள்ளும் போது புதுப்புது உத்திகள் உருவாக்கப்பட்டு, கையாளப்பட்டு வந்ததைப் போரியல் வரலாறு சுட்டிக்காட்டுகின்றது.

 புதிய உத்திகளை எதிர்கொள்ள நேர்கின்ற ஆக்கிரமிப்புக்காரர்கள் அவற்றை ஏளனப்படுத்தியதையும் கொச்சைப் படுத்தியதையும் போரியல் வரலாறு விளக்குன்றது. உதாரணத்திற்குத் துருக்கியரின் ஒட்டொமொன் பேரரசின் மீது படையெடுத்த மேற்குலகத்தின் கருத்துக்களை கவனிக்கலாம். துருக்கியர் CROSS BOW� என்று அழைக்கப்பட்ட �குறுக்குவில்� என்ற ஆயுதத்தை உபயோகித்து தமது எதிரிகளை தாக்கினார்கள்.

இந்தக் குறுக்கு வில்லின் ஊடாக அதிக விசையோடு கிளம்பிச் செல்கின்ற அம்பு மிக அதிக தூரத்தில் உள்ள எதிரியின் மார்புக் கவசங்களையும் துளைத்துச் செல்லும் வலுவைப் பெற்றிருந்தது. அத்துடன் துருக்கியரின் போரிடும் பாணியும் வித்தியாசமானது. ஆனால் இந்தக் குறுக்கு வில் ஆயுதத்தையும் துருக்கியரின் போரிடும் பாணியையும, கோழைத்தனமான விடயங்கள் என்றும் போரியல் முறைக்குப் புறம்பானவை என்றும் அவர்கள்pன் எதிரிகள் கண்டித்து கேலி செய்தார்கள்.

ஆயினும் புதியபுதிய ஆயுதவகைள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு உருவாக்கப்பட்டதோடு போர் புரியும் உத்திகளும் கூர்மையடைந்தன. தமது பக்கத்தில் மிக்க குறைந்த அளவு இழப்பினையும் எதிரியின் பக்கத்தில் ஆகக் கூடிய இழப்பினையும் உருவாக்குவதற்கான ஆயுதங்களும் உத்திகளும் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வந்ததையும் வருவதையும் போரியல் வரலாறு எடுத்துக் காட்டும். உதாரணமாக வல்லரசு நாடான அமெரிக்காவின் அணுகுண்டு கண்டுபிடிப்பையும், அந்த அணு குண்டின் பிரயோகத்தையும் சுட்டிக்காட்டலாம்.

அதேபோல் மிகப்பலம் வாய்ந்த ஆக்கிரமிப்பாளனாக எதிரி இருக்கும் பட்சத்தில் அவனது வன்முறையை எதிர்கொள்வதற்காகவும், வெற்றி கொள்வதற்காகவும் புதிய உத்திகள் உருவாகின. எதிரியின் ஓர் இலக்கை அழிப்பதற்காக ஆயிரம் போராளிகள் இறப்பதை தவிர்த்து, ஒரே ஒரு போராளியின் இறப்பின் ஊடாக எதிரியின் அந்த இலக்கை முழுமையாக ஒழிப்பதற்குரிய உத்திகளும் போரியல் வரலாற்றில் உருவாகின.

தமக்கு எதிராக நடாத்தப்படுகின்ற வன்முறையை எதிர் வன்முறைகொண்டு நேர் கொள்கின்ற தாக்குதல் உத்தியாகவும் எதிரியின் தாக்குதலை மட்டுமன்றி அவனுடைய வலிமையையும் அழித்தொழிக்கும் ஆயுதமாகவும், தங்களுடைய உயிரையும் உடலையும் தற்கொடையாக்கி தருகின்ற தற்கொலைத் தாக்குதல்கள் என்கின்ற புதிய போரியல் உத்தி போரியல் வரலாற்றில் உருவாகியது.

இங்கே ஓர் அடிப்படை உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். போர் என்பது வன்முறையூடாகத் திணிக்கப்படும்போது அதனை எதிர்கொள்வதும் வன்முறையூடாகவே அமைகின்றது. நவீன போரியல் உத்தியின்படி தற்கொலைத் தாக்குதல் என்பதானது மிகக்குறைந்த உயிர் இழப்பின் ஊடாக எதிரியின் முக்கிய இலக்குகளை முழுமையாக அழிப்பதானதாகும். இங்கே எல்லாமே வெடிப்பொருள் சம்பந்தப்பட்டவைதான்.

ஆனால் தற்கொலைத் தாக்குதல்களை எதிரி தடுக்க முடியாத நிலைவரும்போது அல்லது அத்தாக்குதல்களைத் தங்களது இயலாமை காரணமாக முறியடிக்க முடியாதபோது இத்தகைய தாக்குதல்களுக்கு எதிராகப் புதிய வரைவிலக்கணங்களை எதிரில் பிறப்பிக்க முயல்வது வழக்கமாகி வருகின்றது. ஏனென்றால் தற்கொலைத் தாக்குதல் ஒன்றை நடாத்தவதற்கு எவற்றிற்கும் அப்பாலான ஓர்மமும், உறுதியும் ஒரு போராளிக்குத் தேவையாக உள்ளது. இந்த உறுதியும், ஓர்மையும் அவனுக்கு ஓர் உந்துசக்தியாக அமைகின்றது.

 இங்கே �மூளைச்சலவை� என்கின்ற வார்த்தைப் பிரயோகம் எடுபடாது. உலகப்போரியல் வரலாறு ஓர் உண்மையை எடுத்துக் காட்டுகின்றது. எதனைப் பெரிய ஆயுதம் என்ற ஒரு போராளி கருதுகின்றானோ அந்த ஆயுதத்தை அந்தப்போராளி கைவிடப் போவதில்லை.

அது அணுகுண்டுஆக இருந்தாலும் சரி மனித குண்டாக இருந்தாலும் சரி.

நாம் இப்போது தெரிவித்த கருத்துக்கள் தர்க்கத்திற்காகச் சொன்ன கருத்துக்கள் அல்ல! ஏனென்றால் எது சரி எது பிழை என்பதல்ல இதன் நோக்கம் போரியல் வரலாறு எந்த யதார்த்தத்தைச் சுட்டிக்காட்டுகின்றது என்ற உண்மையைப் பகிர்ந்து கொள்வதுதான் எமது நோக்கம்.!

இதைப்போலவே சிங்கள அரசுகளோடு நடாத்துகின்ற பேச்சுவார்த்தைகள் தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கப் போவதில்லை என்கின்ற வரலாற்று யதார்த்தத்தையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்தக்கருத்தைத் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமை தொடர்ந்தும் தெரிவித்தே வந்துள்ளது. ஆயினும் சமாதானப்பேச்சு வார்த்தைகள் ஊடாக உரிய தீர்வு ஒன்றை உண்மையாகவே அடையலாம் என்கின்ற எதிர்பார்ப்புக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்கின்ற நல்லெண்ணத்தின் காரணமாக விடுதலைப்புலிகள், சமாதானப் பேச்சுக்களைப் புறம் தள்ளாமல் இருப்பதை நாம் அவதானிக்கின்றோம்.

இந்தச் சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஒரு சரியான தீர்வைக் காணக் கூடும் என்றால் அது நல்லதுதான். ஆனால் மீண்டும் மீண்டும் இந்தச் சிங்கள அரசுகள் 1958ம் ஆண்டுக் காலப்பகுதிக்குரிய சிங்கள பேரினவாதச் சிந்தனைகளிலேயே திளைத்து நின்று செயலாற்ற முனைந்தால் இந்தப்பேச்சு வார்த்தைகள் விரைவிலேயே முறிந்து போய்விடும். குறைந்த பட்சம் கூட்டாச்சி என்கின்ற எண்ணத்தை இந்தச் சர்வதேச நாடுகள் கொண்டிருக்கின்ற போதிலும் மகிந்தவின் அரசோ ஒற்றையாட்சி என்ற கோட்பாட்டில் உறுதியாக நிற்கின்றது.

தமிழ் மக்கள் மீதான வன்முறைகளையும் சமாதானத்திற்கு எதிரான செயற்பாடுகளையும் தொடர்ந்தும் சிறிலங்கா செய்துவருவதை சர்வதேச உலகம் கண்டிக்க வேண்டும். மாறாக சிங்கள அரசின் இத்தகைய மீறல்களைச் சர்வதேச உலகம் கண்டு கொள்ளாமல் விட்டால் அது போரில்தான் முடியும்.

முன்னைய பேச்சு வார்த்தைகள் முறிந்து போனதற்குரிய அக மற்றும் புற காரணிகள் இன்னும் மாறாமல் இருப்பதையும் நாம் அவதானிக்கின்றோம். கடந்த ஆறுசுற்றுச் சமாதான பேச்சுக்கள் பெரிய பலன்களைத் தராவிட்டாலும் தமிழ் மக்களின் பிரச்சனைகளைச் சரியாக இனம் கண்டு பரஸ்பர நல்லுறவுடன் இரு தரப்பும் மனம் திறந்து கருத்தாடக்கூடிய ஒரு நல்லெண்ணச் சூழ்நிலை ஏற்பட்டிருந்தது-என்று புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் தெரிவித்திருந்தார். இப்போது அந்த நல்லெண்ணச் சூழ்நிலையைக் கூட சிங்களஅரசு தகர்த்து எறிந்து விட்டது.

தமிழர்களுக்கு உரிமை எதுவும் இல்லாத சமாதானத்தைத்தான்(?) சிங்கள அரசு தரப்போகின்றதா? இல்லை இந்த எமாற்றுகின்ற சமாதானத்தை ஏற்காமல் நாம் உரிமையுடன் வாழப்போகின்றோம் என்று தமிழினம் சொல்லப்போகின்றதா?

தமிழீழ மக்கள் தங்கள் வாழ்வியல் பிரச்சனைக்கும் தேசியப் பிரச்சனைக்கும் தகுந்த தீர்வுகள் கிடைக்காமல் இருப்பதைக் கண்டு பொங்கி எழுந்து மக்கள் போராட்டங்களை ஆரம்பித்திருக்கின்ற இவ்வேளையில் சிலர் பேச்சு வார்த்தைக்குப் போகாவிட்டால் தமிழ் மக்கள் அழிந்து போய் விடுவார்கள்- என்ற கருத்தை வைப்பது மடமைத் தனமானதாகும்.!

பிரச்சனை முற்றும்போது உலகநாடுகள் சிங்களதேசத்தைச் சார்ந்து நிற்கக்கூடும் மேலும் பலதேவையற்ற தடைகளை அல்லது அழுத்தங்களைப் புலிகள் மீது பிரயோகிக்கக்கூடும்.

விடுதலைப்புலிகளின் சுதந்திரப்போராட்டம் என்பதானது உலகின் பல போராட்டங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றது. என்று சில உலக நாடுகள் அச்சம் கொண்டிருப்பதும் இத்தகைய அழுத்தங்களுக்குக் காரணமாக இருக்கக்கூடும்.

ஆனால் இன்று இலங்கைத்தீவில் சமாதானத்திற்கு எதிராக எந்த எந்த சக்திகள் இயங்கி வருகின்றன என்பதையும் இந்த உலக நாடுகள் நன்கு அறியும். இன்று தமிழ் மக்களின் வேட்கைக்கு எதிராக சமாதானத்திற்கு எதிராக இந்த சக்திகள் இன்று நிழல் யுத்தத்தை நடத்துவதோடு மட்டுமல்லாது வெளிப்படையான வன்முறைகளையும் புரிந்து வருகின்றன. சரியாக சொல்லப்போனால் இந்தச் சமாதான விரோத சக்திகளின் செயல்பாடுகள் தான் தமிழீழ மக்களின் விடிவுக்கான காலத்தை விரைவில் கொண்டு வந்து சேர்க்கப் போகின்றது.
 

Peace without Rights or Rights without Peace ?
 
Speculation rose high that a war may break following the suicide attack within the Sri Lanka Army headquarters in Colombo and the offensive on Trincomalee-Mutur regions by Sri Lanka armed forces on land, sea and sky. But Norway has indicated that Geneva talks would resume soon. Political analysts expressed view that once the LTTE Eastern Commanders' travel to Kilinochchi is finalised the peace talks would move on to its next stage.

The International countries, expressing various views and condemnation on the last week violence in Sri Lanka did stress one particular subject basically. 'Peace talks should commence', 'Peace talks are essential', emphasised the International countries again. We wish to point out here the fact that the importance and need of Peace talks have at least been accepted on principle by the international countries.

The insistence of the International countries on the importance and the need for peace talks indirectly indicates their acknowledgement of the fact that 'the problems of the Tamils remain unresolved until today.'.

Alright. The problems of the Tamils remain unresolved until today. But the question is: 'Will the Sri Lanka regime resolve the problems that remain unresolved even today through peace talks?' What is the answer to this question?

The governments of Sri Lanka have never given the Tamils their rights through peace talks even in the past. The ruling president of Sri Lanka, Mahintha Rajapakse will be the last person in the world to give Tamils back their due rights.

We wish to place certain matters for discussion here to establish the above conviction.

Sri Lanka President Mahintha Rajapakse still wallows with delight in the 1958 mindset mud. His newly gilded 'Mahintha Ideologies' are but thinly coated Sinhala Buddhist hegemony ideologies and his predecessor S.W.R.D.Bandaranayake's Sinhala Buddhist chauvinistic doctrines!

When Father Chelvanayagam led the mass protests and Sathyagraha demonstrations against the enactment of SWRD's Sinhala Only Act, the Sinhala racists were enraged. This racism grew in strength exploding in a genocide of the Tamils in 1958 in which hundreds of Tamils were killed, Tamil women raped, thousands injured and their properties looted and set fire to. When the entire Tamils were suffering from loss of lives, living places and belongings, S.W.R.D. Bandaranayake, the then prime minister in power, made an infamous statement on the Tamils' suffering.

"Let them (Tamils) get a taste of it!"

In other words, SWRD had wanted the Tamils to experience the taste of violence at the receiving end. But, it was he who had to experience the fatal 'taste' of violence the following year. Most venerable Sinhala Buddhist Monk Somarama Thero shot his prime minister to death, with a revolver he had concealed in his saffron Buddhist robe, on the 25th of September 1959.

A matter of surprise has to be mentioned here. SWRD had ordered 12 jet fighters to bomb and destroy the Tamils engaged in non-violent demonstrations. The jet bombers were due in Sri Lanka on the 3rd of September 1959. Poor Bandaranyake was murdered five days ahead without even seeing the jet bombers.

48 years ago SWRD, the then prime minister had said 'Let them get a taste of it' when the Tamils writhed in pain and Mahintha Rajapakse the present president has only expressed his predecessor's words in deed, 48 years later!

The fact that Mahintha had ordered his Air force to bomb Tamil civilians in the Trincomalee- Mutur region proves that he is seeped in the 1958 Sinhal Buddhist chauvinistic mindset of the SWRD era. This bombing on the Tamils is but the translation into deed SWRD's words: 'Let them get a taste of it!' The BBC, on reporting this violent bombing said that it was a pre-planned offensive.

President Mahintha Rajapakse should realise that there is no use in harping on the SWRD era and his Sinhala Buddhist chauvinistic doctrines even in the year 2006. If not, a time will soon come when Mahintha Rajapakse will be forced to realise it. Gone are the situation of the SWRD era; the ground realities have changed drastically.

In the same manner, the international countries emphasising the importance of peace talks, should take into account the ground realities and the facts. The Sinhala regime may indulge in illusions. But the international countries should stop at least now pretending as if they are ignorant of the current situation and realities. Otherwise they may find themselves in a situation they will be unable to actively participate in resolving the problems of the Tamils let alone being able to be passive audience.

The international community can no longer air interpretations on war strategy as they had classified the attack on SLA head quarters as violation of Cease fire agreement while naming the bombing of civilians in Trincomalee as realistic action.

We wish to share one or two things with our readers here. 'War' is violence related. The history of war shows us that the engagement in a violence related war, new techniques were invented and applied. The invaders, facing altogether fresh techniques have been known to ridicule and belittle the new inventions. For example let us consider the westerners' views who invaded the Turkey Ottoman Empire. The crossbows used by the Turks against their enemies had high velocity arrows which were forceful to pierce even the metal breast plates of enemies at long distances. The Turkish art of war was different. But the westerners ridiculed the Turkish art of war describing it as cowardly.

But, new weapons were invented and war techniques developed. History shows us that weapons and techniques were invented with the view to lessen casualties on one's own sides while increasing them in the enemy ranks. We can cite the atom bomb invented by America and its usage as an example.

When the enemy happened to posses powerful weapons and great combat strength, fresh techniques were invented and used to face his violence and defeat him. Instead of loosing a thousand combatants to destroy a single target of the enemy, techniques were invented to loose a single combatant to destroy the enemy target.

Suicide attacks entered in the history of war techniques which proved successful not only in facing an attack but also to completely destroy the enemy's power. The body and the life of the suicide attackers were the weapons themselves used to annihilate the enemy.

We have to consider a basic fact in this context. When a war is forced upon through violence the response to it too is inevitably violence related. A suicide attack is only a technique in war used to cause greater destruction to the enemy's life and war equipments at the cost of the least number of lives. Everything here is related to explosives. But it has become customary for the enemy to give gruesome definitions anew when he finds himself unable to obstruct suicide attacks or incapable of confronting them. A combatant should possess a strong will and determinedness to engage in a suicide attack. The term 'brainwashed' is irrelevant in this context. The history of war techniques shows us the fact that a weapon considered invaluable by a combatant is never relinquished by the combatant.

Be it an atom bomb or a human bomb, the combatant will never relinquish it!

The views expressed here are not merely for argument sake! Our aim is not to determine the right and wrong of this fact but to share the reality which the history of war techniques presents us!

In the same vein, we should also realise the historical reality that the talks with the Sinhala regimes are not going to resolve the problems of the Tamils.The Liberation Tigers leadership has repeatedly expressed this view. Even then the LTTE, out of their good intentions, have not ruled out peace talks because they want to give a chance for the hope that may be a suitable solution could be reached through talks. It is good if the peace talks could bring about a proper solution. But the talks would soon break off should the Sinhala regimes act solely on the basis of the 1958 era Sinhala Bhuddhist chauvinistic mindset. Though a shared rule is the minimum that the International Community hopes for, Mahintha's regime stands rigid in its unitary rule doctrine.

The International Community should condemn the Sri Lanka government for its continuing violence against the Tamils and its actions against peace. If it fails to do this and continue to shut its eyes on the reality in Sri Lanka, the war wuold be inevtable.

We observe that the factors, both internal and external, which caused the talks to break, remain unchanged. Mr. Anton Balasingham, the political advisor of the LTTE had rightly said that, though the past six round of peace talks had failed to pay tangible dividends, they at least created an atmosphere of cordiality where both parties could openly discuss issues.

The present Sinhala regime had shattered even that cordial atmosphere now.

Is this Sinhala regime going to give the Tamils a peace without any rights? Or is the Tamil race going to reject this deceptive peace and choose to live a life of its own with its rights?

The Tamils, denied of a just solution to their livelihood problems and their national ethnic issue, are surging up in struggles in their homeland. Some, at this burning hour, warn that the Tamils would be destroyed if they do not go for talks - we say this is an utter foolish concept!

When the problem reaches climax, the International Community may support the Sinhala nation; it may even impose unnecessary sanctions on the Liberation Tigers.

The fact that the Liberation struggle of the Tigers is a role model for many of the world's liberation struggles, may have raised apprehension in some of these countries of the world. And this may be the reason for their pressure exerted on the Tigers.

The countries of the world are well aware which forces are against peace in Sri Lanka today. These forces are engaged in a shadow war to disrupt the peace initiatives.

Ironically, these very forces which work hard against any peace for the Tamils are going to usher in a dawn of peace and freedom to the Tamils!

This article is a translation of the analysis broadcast on Melbourne's 3CR Tamil Voice. The full Tamil version is published in www.tamilnaathaam.com. The article is written by sabesan and translated by SiberNews Media Team.
 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home