Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamils - a Nation without a State> Pongu Thamizh  > Pongu Thamizh 2005 > எமது போராட்டம் நீதியானது, நியாயமானது,  தர்மத்தின்பாற்பட்டது > Struggle for Tamil Eelam


PONGU THAMIL:2005

"எமது போராட்டம் நீதியானது, நியாயமானது, 
தர்மத்தின்பாற்பட்டது.."

ம.தனபாலசிங்கம்
சிட்ணியில் வவுனியா பிரகடனத்திற்கு ஆதரவாக
இடம்பெற்ற கூட்டத்தில் ஆற்றிய உரை

2  October 2005

" எப்பொழுதெல்லாம் அதர்மம் தலைதூக்கி தர்மம் நலிவுறுகின்றதோ அப்பொழுதெல்லாம் நான் வருவேன் " என்றான் கீதாசிரியன். அவன் வரக்காணோம். ஆனால் எம் உடன்பிறப்புக்கள் ஆணாகப் பெண்ணாக விடுதலைப்படையாக ஈற்றில் அடிபணியமறுக்கும் தேசமாக அவதரித்துச் சென்ற எம் மண்ணும் இந்தப்போராட்டத்தை ஒரு யோகமாக தவமாக அவர்கள் வரித்துக் கொண்டுள்ளமையும் எமது மக்களை ஆகர்சித்துக் கொண்டுள்ளதன் வெளிப்பாடுகளில் ஒன்றே பொங்கு தமிழ் எழுச்சிகளாகும்..."


 

 

 

 

 

 

இந்த மாபெரும் ஒன்று கூடலில் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

எனக்கு முன்பு பேசியோர் வவுனியாப் பிரகடனம் பற்றி விரிவாக விளக்கியுள்ளனர். எமது மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் அன்னிய சிங்களராணுவம் எமது மண்ணை விட்டு வெளியேற வேண்டும் என்பது முதலாவது கோரிக்கை. எமது மக்களை கொன்றுகுவித்து,  எமது சகோதரிகளை கற்பளித்து, எமது சிறுவர்களை பாடசாலைகளில் குண்டு வீசி கொலை செய்து, கிரிசாந்திகளை கடத்தி கற்பழித்து புதை குழிகளில் புதைத்து, ஏதிலிகளாய் தேவாலயங்களிலும்,  கோவில்களிலும் அடைக்கலம் புகுந்த பெண்களையும் சிறார்களையும் கொன்று குவித்த அன்னிய சிங்கள ராணுவத்திற்கு எம்மண்னில் இருக்க என்ன தகுதி.

அதனால்தான் அவர்கள் உடனடியாக எம்மண்ணைவிட்டு வெளியேறவேண்டும் என வவுனியாப் பிரகடனம் வேண்டுகின்றது. அத்தோடு எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்குமாறு சர்வதேச சமூகத்தை வேண்டுகின்றோம்.

எமது போராட்டம் நீதியானது, நியாயமானது தர்மத்தின்பாற்பட்டது. " எப்பொழுதெல்லாம் அதர்மம் தலைதூக்கி தர்மம் நலிவுறுகின்றதோ அப்பொழுதெல்லாம் நான் வருவேன் " என்றான் கீதாசிரியன். அவன் வரக்காணோம். ஆனால் எம் உடன்பிறப்புக்கள் ஆணாகப் பெண்ணாக விடுதலைப்படையாக ஈற்றில் அடிபணியமறுக்கும் தேசமாக அவதரித்துச் சென்ற எம் மண்ணும் இந்தப்போராட்டத்தை ஒரு யோகமாக தவமாக அவர்கள் வரித்துக் கொண்டுள்ளமையும் எமது மக்களை ஆகர்சித்துக் கொண்டுள்ளதன் வெளிப்பாடுகளில் ஒன்றே பொங்கு தமிழ் எழுச்சிகளாகும்.

பசித்த வயிறோடு எங்கள் பூபதி அம்மா மட்டக்களப்பில் தவம் இருந்தும் " பஞ்சம் படை வந்தாலும் இபாரெல்லாம் வெந்தாலும் அஞ்சுவமோ நாங்களடி ஆறுமுகன் தஞ்சமடி " என யோகசுவாமிகளால் பாடப்பட்ட நல்லூரான் வீதியிலே தன்னை அழித்து காந்தி பிறந்த தேசத்தை தலை குனிய வைத்த எங்கள் திலீபனும் எமது தேசத்தின் ஆத்மாவுடன் கலந்து விட்ட சக்தியும் நாமறிந்ததே.

விடுதலை வேட்கை என்னும் நூலில் எமது மக்களின் தணியாத சுதந்திர தாகத்தை அடேல் பாலசிங்கம் பின்வருமாறு கூறுகின்றார்

" சுயநிர்ணயம் என்ற தமது நியாயபூர்வமான உரிமைப் போராட்டத்திற்கு எதிர்ப்புக்கள் கிளர்ந்தபோதும் எத்தகைய பாரிய இடைலூறுகளையும் எதிர்கொண்டு தமது அரசியல் இலட்சியத்தை அடைவதில் தமிழீழ மக்கள் உறுதிபூண்டு நிற்கின்றார்கள். இத்தகைய தளர்வுறா மன உறுதியை சுதந்திர வேட்கையை தமிழ் ஈழத்தின் போராளிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் காணக்கூடியதாக இருந்தது. இச்சுதந்திர வேட்கையானது இறுதியில் வெற்றி பெறும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்"

ஆம் தமிழ் ஈழத்தின் மூத்த கவிஞர்களில் ஒருவரான முருகையன் 1992 இல் எழுதிய கவிதை ஒன்றில்

" திமிரினால் நம்மேல் ஏறிச் செய்யலாம் சவாரி என்ற
நினைவை நீ விடுதல் வேண்டும்,  நெற்றியில் கல்லை வீசி
சமரிலே கோலியாத்தைத் தாவீது வெற்றி கொண்டான்
எமனாகி முடிவு கண்டான்,  இதனை நீ நினைக்க வேண்டும் "

இன்று இறைமை அரசியல்யாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு,  என்றெல்லாம் பிதற்றுகிறார்கள். தமிழ் மக்கள் தமது இறைமையை என்றுமே சிங்களத்திடம் அடைவு வைக்கவில்லை சிங்கள தேசத்தின் அரசியல் யாப்பினை வரைவதில் அவர்கள் பங்குபற்றவும் இல்லை. எமது தாயக எல்லைகளை நாம் சிங்களத்துடன் இணைக்க சம்மதம் அளிக்கவுமில்லை, அன்று பிரித்தானியா எம்மைக் கேட்காது எமது மண்ணை சிங்களத்துடன் இணைத்தார்கள்.  இன்று அதே பிரித்தானியா எம்மை வேண்டா விருந்தாளிகள் எனக்கூறுகின்றனர். இதுவே அவர்களது இறுதி நடவடிக்கையாக இருக்கலாம். தமிழ் மக்கள்மேல் சவாரி செய்வதை எம்மக்கள் ஏற்கப்போவதில்லை என்பதை காலம் அவர்களுக்குப் புகட்டும். ஏனெனில்

" பொய்க்கும் கலியை நான் வென்று பூலோகத்தார் கண்முன்னே
மெய்க்கும் கிருத யுகத்தினையே கொணர்வேன் தெய்வ விதியிதுவே "

என்ற பாரதியின் சபதமும்

" அணிபெறத் தமிழர்கூட்டம் போர்தொழில் பயில்வதெண்ணிப்
புவியெல்லாம் நடுங்கிற்று என்ற வார்த்தையைக் கேட்டு நெஞ்சு
மகிழ்ந்து கூத்தாடல் என்றோ "

என ஏங்கிய பாரதிதாசனாரின் கனவுகளும் தமிழ் ஈழமண்ணில் நிழல் அல்ல நிசமாகின்றது.

ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் வீரமும் தன்நம்பிக்கையும் கொண்ட மக்கள் கூட்டம் பொங்கு தமிழாக எழுச்சி பெற்றுள்ளதை காண்கின்றோம்....

Ms Virginia Judge MP (Strathfield) , New South Wales - Legislative Assembly - Parliamentary Debates (Hansard)
53rd Parliament - First Session Thursday - 15 September 2005"...The Tamils are a resilient people. I observed that in a remarkable three year period the Tamils developed a virtual state within the north and north-east of Sri Lanka.I visited their judiciary and court, school of law, police station, police academy, medical and technical colleges and small industries, a community bank plus a children's home housing 278 children left orphaned by the war and the recent tsunami. The Tamil Rehabilitation Organisation (TRO) runs a variety of development, relief and reconstruction projects as well as assisting several non-government organisations with their projects. All this is a tribute to the spirit and resilience of the Tamil people."

இன்று எம்மண்ணின் பெரும் பகுதி அன்னிய ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. அங்கு நஞ்சணிந்த வீரர் நாடமைத்து வருகின்றனர். புதுவையார் கூறுவதுபோல் இனிமேல் பேச்சுவார்த்தை என்பது

" எமக்குரியதுக்கான எல்லைகளை தீர்மானிக்க நல்ல நண்பர்களாக, நல்ல அயலவர்களாக ஒன்றெனில் ஓடிவரும் உறவினராக அருகருகே குடியிருப்பதற்கே ஆகும் "

அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தின் சிரஞ்சீவித்தன்மையே வவுனியாப் பிரகடனத்தின் சாராம்சம் எனலாம்.

" எல்லா மக்களையும் பிரமதேவன் சமமாகப் படைத்துள்ளான். அத்தோடு எவராலும் அபகரிக்க முடியாத சில உரிமைகளையும் எமக்கு அளித்துள்ளான். அவற்றுள் வாழ்வுரிமை,  நாமார்க்கும் குடியல்லோம் என்னும் பிறப்புரிமை,  மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்கான வழிகளை தேடும் உரிமை " என்பனவே அவை.

தமிழ் ஈழத் தேசியத்தலைவர் கூறியதுபோல்

" தார்மீக அடிப்படையில் நாம் உறுதியான அத்திவாரத்தில் நிற்கின்றோம். எமது போராட்ட இலட்சியம் நியாயமானது. சர்வதேச மனித அறத்திற்கு இசைவானது. எமது மக்கள் தன்னாட்சி உரிமைக்கு உரித்தானவர்கள். தனி அரசை அமைக்கும் தகுதி பெற்றவர்கள். சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் இந்த உரிமையை எவரும் நிராகரித்து விட முடியாது"

வவுனியாப் பிரகடனம் இதனையே வலியுறுத்துகின்றது. எமது போராட்டத்தின் தர்மம் அது தரித்துள்ள காண்டீபம் காலத்தை மாற்றிக்கொண்டிருக்கும் காட்சிகள் எம் கண்முன்னே விரிகின்றது .
நன்றி. வணக்கம்.

 

 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home