Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Nation without a State > Struggle for Tamil Eelam > Democracy, Sri Lanka Styleஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களும் - மா.க.ஈழவேந்தன்

 Democracy Continues, Sri Lanka Style...

ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களும்
தமிழ் இனத்தை அழித்துக்கட்ட உறுதி பூண்டுள்ள மகிந்த

மா.க.ஈழவேந்தன்

29 October 2005

"..இரு தலைவர்களுடைய தேர்தல் அறிக்கைகளிலும் படைப்பலப் பெருக்கம் பேசப்படுகின்றது. படைப்பயிற்சி பற்றியும் பேசப்படுகின்றது. அத்தோடு அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது பாதுகாப்பு நிதியாகக் கோடிக்கணக்கை அரசாங்கம் ஒதுக்கிய போது ஐ.தே.கட்சி அதற்கு ஆமோதித்து வாக்களித்தது. அவசரகாலச் சட்டம் நீடிப்பதைப் பற்றி நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்த போதுகூட, அரசுக்கு ஆதரவாகத்தான் ஐ.தே.கட்சி வாக்களித்தது. இவை அண்மைக்கால நிகழ்ச்சிகள். தமிழர்களை அழிப்பது என்று வரும் போது இரு கட்சிகளும் ஒன்றுபடுவர்... தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்று எம் விடுதலைப் புலிகளுடன் நாம் எழுப்புகின்ற குரல் பொருள் பொதிந்த குரலாக விளங்க வேண்டின் நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலை நாம் புறக்கணித்தே ஆகவேண்டும். "


குடியரசுத் தலைவராக வெற்றி பெற்ற நிலையில் இலங்கையில் எழுந்துள்ள இனச்சிக்கலைத் தீர்க்க பிரபாகரனைத் தான் அழைத்துப் பேச இருப்பதாக மகிந்த ராஜபக்ஷ கூறியதாக ஊடகங்கள் ஊடாக அறிகிறோம்.

இதையொட்டி நாம் முதலில் கேட்கும் கேள்வி மகிந்த ராஜபக்ஷ நடைபெறும் தேர்தலில் வெற்றி பெறுவாரா என்பதே. வெற்றி பெறுவார் என்பது அவருடைய நம்பிக்கை. எம்மைப் பொறுத்தவரை அது ஒரு கேள்விக்குறி. வெற்றி பெறுவார் என்ற ஊகத்தில் இவர் விடுக்கின்ற அழைப்பை, விலைபோக மறுக்கின்ற எம் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஏற்பாரா என்பது நம் எல்லோரும் எதிர்நோக்கும் மிகப் பெரும் கேள்வியாகும்.

இலங்கையில் இனச்சிக்கல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக புரையோடிய புண்ணாக விளங்குகிறது. புரையோடிய புண்ணாக விளங்குவதற்கு அடிப்படைக் காரணம் ஒற்றையாட்சி அமைப்பே. பல்லினம், பல்மொழி, பல்சமயம் உள்ள ஒரு நாட்டில் தொடர்ந்து ஒற்றையாட்சி கடைப்பிடிக்கப்படின் காலப்போக்கில் சிறுபான்மை இனங்கள் சீரழிவுக்காளாகி ஒழிந்து போவது தவிர்க்க முடியாததாகும்.

“Perpetual rule of the permanent sinhala Majority will eventually result in the liquidation of the Tamil speaking minorty” என்பது டாக்டர் இ.எம்.வி.நாகநாதனின் அழகிய ஆழமான ஆங்கிலச் சொல்லாட்சி ஆகும். (நிரந்தரப் பெரும்பான்மையான சிங்கள ஆட்சி, காலப்போக்கில் சிறுபான்மை இனமான தமிழ்பேசும் இனத்தை முற்றாக ஒழித்துக் கட்டும் என்பது அவரின் ஆங்கிலக் கூற்றின் தமிழ் ஆக்கம்).

இதே கருத்தை அடங்காத் தமிழன் பேராசிரியர் சுந்தரலிங்கம் தனக்கேயுரிய நடையில் “counting of heads will lead to the cracking of heads” என கூறியுள்ளார். (முதலில் தலைகள் எண்ணப்படும் பின்பு தலைகள் உடைக்கப்படும் என்பது இதனின் தமிழாக்கம்).

 இக்கூற்றுக்களை மெய்ப்பிக்கின்ற முறையில்தான் நாடாளுமன்ற நாளாந்த நடவடிக்கைகளும், நாளும் பொழுதும் நடைபெறும் நாட்டின் நிகழ்ச்சிகளும் எம்மை உறுத்தியபடி உள்ளன. முன்பு கூறியதற்கமைய அதிகாரப் பரவலுக்கு மருந்தளவும் இடந்தராத ஒற்றையாட்சி அமைப்பே எம் இனத்தின் அழிவிற்கு காரணமாக அமைவதை நாம் அறிவோம்.

ஆனால் நீண்ட காலமாக அரசியலிலும், இன்று தலைமை அமைச்சராகவும் விளங்கும் மகிந்த ராஜபக்ச அவர்கள் இந்த அரிச்சுவடி அரசியலைக்கூட அறியாதிருப்பது எமக்கு வியப்பைத் தருகின்றது. தமிழ்பேசும் இனத்தின் பேரழிவிற்கும், நாட்டின் அரசியலில் ஓர் நிலையற்ற தன்மை நிலவுவதற்கும், நாட்டின் பொருளாதாரம் படுகுழியில் இன்று விழுவதற்கும் அடிப்படைக் காரணம் ஒற்றையாட்சி அமைப்பே என்பதற்கு நாம் பெரும் ஆய்வு செய்யத்தேவையில்லை. ஆனால் ஒற்றையாட்சி அடிப்படையில்தான் இனச் சிக்கலுக்குத் தீர்வு காண்பேன் என்று அவர் கொக்கரிப்பது எமக்குப் புரிய முடியாத புதிராக இருக்கின்றது.

அவர் இன்று எடுத்துள்ள முடிவு இலங்கையில் எழுந்துள்ள இனச் சிக்கலுக்குத் தீர்வாக அமையப்போவதில்லை. மாறாக தமிழினத்தைப் பூண்டோடு தீர்த்துக்கட்டும் முயற்சியாகும். தீர்வு வேறு தீர்த்துக் கட்டுவது என்பது வேறு.

அனைத்துச் சிக்கலுக்கும் ஒற்றையாட்சியில் தான் தீர்வு காண்போம் என்று கூறும் இவர் மேலும் ஒருபடி சென்று தமிழர் ஒரு தேசிய இனம் என்பதைத் தாம் ஏற்கவில்லை என்றும், தமிழர் தாயகக் கோட்பாட்டை மறுப்பதாகவும், தமிழரின் தன்னுரிமை (சுயநிர்ணய) கோட்பாட்டை தாம் முற்றாக எதிர்ப்பதாகவும் கூறுகிறார்.

Monkஇவை ஒருபுறம் இருக்க, கடல் கோளினால் பேரழிவிற்கு ஆளாகி தாங்க முடியாத துன்பத்துள் மூழ்கியிருக்கின்ற மக்களின் துயர் துடைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள பொதுக்கட்டமைப்பைக்கூட தாம் முற்றாக நிராகரிப்பதாக, மருந்தளவும் மனிதாபிமானம் அற்ற நிலையில் - புத்த மதத்தின் பேரிலும், சிங்கள வல்லாண்மையின் பேரிலும் வெறியாட்டம் ஆடுகின்ற இம்மகிந்த ராஜபக்ஷ தான் குடியரசுத் தலைவராக வெற்றி பெற்ற நிலையில் பிரபாகரனுடன் பேசப் போவதாகக்கூறும் கூற்று ஒரு பொறுப்பு வாய்ந்த தலைவனின் பேச்சாக இருக்க முடியாது.

மாறாக சிங்கள பௌத்த வல்லாண்மையின் முழு வடிவமாகவே அவர் விளங்குகிறார். இப்படிப்பட்ட ஒருவருடனும் எங்கள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பேச வருவார் என்று மகிந்த ராஜபக்ஷ காண்கின்ற கனவு வெறும் பகற்கனவே ஆகும்.

ஈழத் தமிழினம் பல தமிழ்த் தலைவர்களைத் தோற்றுவித்துள்ளது. ஆனால் அவர்கள் பல தடவைகள் தடம் புரண்ட தலைவர்களாக மாறியதன் விளைவுதான் இன்று இத்தமிழினம் கதிகலங்கிய நிலையில், எம்மண்ணிலேயே வேரோடு சாய்க்கப்பட்ட நிலைக்கு ஆளாகியுள்ளது. தந்தை செல்வா போன்ற சில தலைவர்கள் தொலை நோக்குடன் சிந்தித்து செயலாற்றியது உண்மை.

ஆனால் அவர்களுடைய அற வழிப்போராட்டம் வெறிபிடித்த சிங்களத் தலைமைப்பீடத்திடம் எடுக்கப்படவில்லை. எனவே தான் 1976ம் ஆண்டு நவம்பர் 19ம் திகதி தந்தை செல்வா நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய இறுதி உரையில் - தமிழ் மக்களுக்கு அளித்த இறுதி உயிலில்,

"சிங்கள மக்களின் ஆட்சியில் இருந்து நாம் விடுபடாத நிலையில் தமிழினம் பூண்டோடு அழிந்துவிடும். எனவே தமிழீழம் தான் எமது இறுதித் தீர்வு"

என்று கூறிய கூற்று இங்கு நாம் நினைவு கொள்ளத்தக்கது.

இவற்றின் அடிப்படையில் பார்க்கையில் "எம்மை நத்துவாய் என எதிரிகள் கோடிட்டு அழைத்தாலும் தொடமறுக்கின்ற"- ஆவது அறியும் தொலைநோக்குச் சிந்தனை உடைய உள்ளுணர்வு உள்ள எம் தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஏமாற்றலாம் என்று மகிந்த ராஜபக்ஷ கருதுவாராயின் அவர் தன்னைத் தானே ஏமாற்றுகிறார் என்பது பொருள்.

மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் ஞானத்தை - இல்லை அரசியல் அஞ்ஞானத்தை இவ்விதம் புட்டுக்காட்டி விளக்கியுள்ள நாம் ஐ.தே.கட்சியைச் சார்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீது எமக்கு ஏதோ தீராத காதல் என்று எவரும் எண்ணி ஏமாற வேண்டாம்.

ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் அறிக்கையில் இனச்சிக்கலைத் தீர்க்க இணைப்பாட்சி என்ற சொல் கையாளப்பட்டிருப்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் அதே அறிக்கையில் இணைப்பாட்சியின் சாயல் கொண்டுள்ள, இந்திய அரசியல் அமைப்பை பின்பற்றலாம் என்று கூறும் சொற்றொடர்கள் எமக்கு எவ்வளவு ஆபத்தை உண்டாக்கும் என்பதை எம்மில் எத்தனை பேர் உணர்வோமோ நாமறியோம்.

பிரிவு 356 ஐ வைத்துக் கொண்டு மாநில அரசுகளைக் கலைக்கின்ற அதிகாரம் இந்திய மைய அரசுக்கு உண்டு. இதனை சிறிலங்கா அர சும் கடைப்பிடிக்கின் எத்தகைய சீரழிவு ஈழத்தமிழருக்கு உருவாகும் என்பதை எம்மில் எத்தனை பேர் எண்ணிப் பார்க்கின்றார்கள். நிலப்பரப்பற்ற நிலையில் இணைப்பாட்சி இயங்க முடியுமா?

இணைப்பாட்சியை வாயளவில் உச்சரிக்கின்ற ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தமிழர் ஒரு தேசிய இனம் என்பதை, தமிழருக்குத் தாயகம் உண்டு என்பதை, தமிழருக்குத் தன்னுரிமையை நிலைநாட்டுகின்ற உரிமை உண்டு என்பதை, அவர் ஏற்கிறாரா என்பதை நாம் அறிய விரும்புகின்றோம். இவற்றை ஏற்காத நிலையில் இணைப்பாட்சி எவ்விதம் உருவாக முடியும். "அந்தரத்தில் இருக்கின்ற இந்திரலோகத்திலா" இணைப்பாட்சியை உருவாக்கித்தர இருக்கிறார். மக்கள் தீர்ப்பின் அடிப்படையில் இனச்சிக்கலுக்குத் தீர்வு காணலாம் என இரு தலைவர்களும் கூறுகிறார்கள்.

மிக்க எண்ணிக்கைப் பெருக்கமுடைய சிங்கள மக்கள், பொதுமக்கள் வாக்கெடுப்பில் (சுநகநசநனெரஅ) இணைப்பாட்சிக்கு இசைவு தெரிவிப்பார்களா? இரண்டு கட்சிகளும் இணைந்த நிலையில்தான் 2/3 விகிதாசார அடிப்படையில்தான் இணைப்பாட்சிக்கு ஆதரவாக நாடானுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்ற முடியும். இது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக்கூடிய நிகழ்ச்சியா? யார் யாரை ஏமாற்ற முயல்கிறார்கள்.

இரு தலைவர்களுடைய தேர்தல் அறிக்கைகளிலும் படைப்பலப் பெருக்கம் பேசப்படுகின்றது. படைப்பயிற்சி பற்றியும் பேசப்படுகின்றது. அத்தோடு அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது பாதுகாப்பு நிதியாகக் கோடிக்கணக்கை அரசாங்கம் ஒதுக்கிய போது ஐ.தே.கட்சி அதற்கு ஆமோதித்து வாக்களித்தது. அவசரகாலச் சட்டம் நீடிப்பதைப் பற்றி நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்த போதுகூட, அரசுக்கு ஆதரவாகத்தான் ஐ.தே.கட்சி வாக்களித்தது. இவை அண்மைக்கால நிகழ்ச்சிகள். தமிழர்களை அழிப்பது என்று வரும் போது இரு கட்சிகளும் ஒன்றுபடுவர்.

சிறிது பின்நோக்கிப் பார்ப்போமாயின் புத்த தர்மம் பேசும் சிங்களக் கட்சிகள் வாள் ஏந்திய சிங்கக் கொடியைத் தம் தேசியக் கொடியாக ஏற்றியுள்ளது. இதை எதிர்த்து அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் நாடாளுமன்றத்தில் நடாத்திய போராட்டம், பின்பு பதவி துறந்து தன் கொள்கையை நிலைநாட்டியதை வரலாறு பதித்துள்ளது. "இந்திய வம்சாவழி மக்களின் குடியுரிமை வாக்குரிமைச் சட்டம்"இன்று இந்திய வம்சாவழித் தமிழ் மக்களின் கழுத்தை அறுக்கின்றது. நாளை எமக்கும் இதுவே ஏற்படும் என்று இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட போது தந்தை செல்வா கூறிய தீர்க்க தரிசனம் எவ்வளவு தூரம் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் கண்ணாரக் கண்டுள்ளோம். நாடாளுமன்றத்தில் தமிழனின் பிரதிநிதித்துவம் பாதிக்கு மேல் குறைக்கப்பட்டு பலவீனமான குரலாக இன்று மாறியிருப்பதற்கு ஐ.தே.கட்சிதான் காரணம் என்பதை சிந்திக்கின்ற தமிழன் எவனும் மறுக்க முடியுமா? இக்குடியுரிமை வாக்குரிமை பறிக்கப்பட்டதனால் மலையக மக்களின் எட்டுப் பிரதிநிதிகள் வெளியேற்றப்பட்டதனை வசதிக்காக யார் மறந்தாலும் நாம் மறப்பதற்கில்லை. இவ்வெட்டுத் தமிழ்ப் பிரதிநிதிகளுக்குப் பதிலாக இவ்வெற்றிடத்தைச் சிங்களப் பிரதிநிதிகள் நிரப்பயிருப்பதையும் நாம் எளிதில் மறக்க முடியாது.

எங்கள் தமிழீழ மண்ணில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் திட்டமிட்டு அரசின் ஆதரவோடு அம்பாறையை அபகரித்த நிகழ்ச்சியையும், திருகோணமலையில் திரியாய்த் தொகுதியைச் சிங்களவருக்காக உருவாக்கியதையும், முல்லைத்தீவில் மணலாற்றை விழுங்கி ஏப்பமிட எடுக்கும் முயற்சியையும் நாம் ஆழ்ந்த கவலையுடன் கவனித்துக் கொண்டிருக்கின்றோம். தமிழீழ மண்ணின் நிலப்பரப்பையும், கடற்பரப்பையும் அபகரித்து தமிழீழ மண்ணைத் துண்டாடுகின்ற முயற்சிகளுக்கு ஐ.தே.கட்சியே பெருங்காரணம் என்பதை வரலாற்று ஆசிரியர்கள் வரைந்தே உள்ளனர். எனவேதான் மகிந்த ராஜபக்ஷவை வேண்டாம் என ஒதுக்குகின்ற நாம், ரணில் விக்கிரமசிங்காவையும் அதே கண்ணோடு பார்த்து அவரையும் எமக்கு வேண்டாதவர் என ஒதுக்குகின்றோம்.

வருகின்ற குடியரசுத் தேர்தலில் நாம் உணர்ந்தோ, உணராமலோ எந்தக் குடியரசுத் தலைவருக்காவது வாக்களிப்போமாயின் நாம் தேசிய நீரேட்டத்தில் இரண்டறக் கலந்து கொள்கிறோம் என்றுதான் பொருள் கொள்ளப்படும். தமிழ்த் தேசியத்தைப் பேசுகின்ற நாம் தமிழீழம் தான் எங்கள் முடிந்த முடிவென்று கூறுகின்ற நாம். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்று எம் விடுதலைப் புலிகளுடன் நாம் எழுப்புகின்ற குரல் பொருள் பொதிந்த குரலாக விளங்க வேண்டின் நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலை நாம் புறக்கணித்தே ஆகவேண்டும். வழக்காற்றில் உள்ள புரியும் பிறமொழியில் கூறின் நாம் இத்தேர்தலைப் பகிஷ்கரித்தே ஆக வேண்டும். "மக்களெல்லாம் பிரபாகரன் பக்கமென்று"நாம் வாயளவில் கூறுவதானால் எதுவிதப் பயனுமில்லை. அதற்குச் செயல்வடிவம் கொடுக்கின்ற முறையில் வருகின்ற தேர்தலையொட்டி நாம் அளிக்கின்ற தீர்ப்புத்தான் உலகின் கவனத்தை எம்பால் ஈர்க்கும் செயலாகும். "செய் அல்லது செத்துமடி| என்பது நாம் கடைப்பிடிக்கும் தாரகமந்திரமாக அமையட்டும். "தமிழன் வாழவேண்டின் தமிழன் தன்னை ஆழவேண்டும்"என்பது நாம் தருகின்ற புதிய குறள், குரல்.
இலங்கையில் இனச்சிக்கல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக புரையோடிய புண்ணாக விளங்குகிறது. புரையோடிய புண்ணாக விளங்குவதற்கு அடிப்படைக் காரணம் ஒற்றையாட்சி அமைப்பே. பல்லினம், பல்மொழி, பல்சமயம் உள்ள ஒரு நாட்டில் தொடர்ந்து ஒற்றையாட்சி கடைப்பிடிக்கப்படின் காலப்போக்கில் சிறுபான்மை இனங்கள் சீரழிவுக்காளாகி ஒழிந்து போவது தவிர்க்க முடியாததாகும்.

“Perpetual rule of the permanent sinhala Majority will eventually result in the liquidation of the Tamil speaking minorty” என்பது டாக்டர் இ.எம்.வி.நாகநாதனின் அழகிய ஆழமான ஆங்கிலச் சொல்லாட்சி ஆகும். (நிரந்தரப் பெரும்பான்மையான சிங்கள ஆட்சி, காலப்போக்கில் சிறுபான்மை இனமான தமிழ்பேசும் இனத்தை முற்றாக ஒழித்துக் கட்டும் என்பது அவரின் ஆங்கிலக் கூற்றின் தமிழ் ஆக்கம்) இதே கருத்தை அடங்காத் தமிழன் பேராசிரியர் சுந்தரலிங்கம் தனக்கேயுரிய நடையில் “counting of heads will lead to the cracking of heads” என கூறியுள்ளார். (முதலில் தலைகள் எண்ணப்படும் பின்பு தலைகள் உடைக்கப்படும் என்பது இதனின் தமிழாக்கம்) இக்கூற்றுக்களை மெய்ப்பிக்கின்ற முறையில்தான் நாடாளுமன்ற நாளாந்த நடவடிக்கைகளும், நாளும் பொழுதும் நடைபெறும் நாட்டின் நிகழ்ச்சிகளும் எம்மை உறுத்தியபடி உள்ளன. முன்பு கூறியதற்கமைய அதிகாரப் பரவலுக்கு மருந்தளவும் இடந்தராத ஒற்றையாட்சி அமைப்பே எம் இனத்தின் அழிவிற்கு காரணமாக அமைவதை நாம் அறிவோம்.

ஆனால் நீண்ட காலமாக அரசியலிலும், இன்று தலைமை அமைச்சராகவும் விளங்கும் மகிந்த ராஜபக்ச அவர்கள் இந்த அரிச்சுவடி அரசியலைக்கூட அறியாதிருப்பது எமக்கு வியப்பைத் தருகின்றது. தமிழ்பேசும் இனத்தின் பேரழிவிற்கும், நாட்டின் அரசியலில் ஓர் நிலையற்ற தன்மை நிலவுவதற்கும், நாட்டின் பொருளாதாரம் படுகுழியில் இன்று விழுவதற்கும் அடிப்படைக் காரணம் ஒற்றையாட்சி அமைப்பே என்பதற்கு நாம் பெரும் ஆய்வு செய்யத்தேவையில்லை. ஆனால் ஒற்றையாட்சி அடிப்படையில்தான் இனச் சிக்கலுக்குத் தீர்வு காண்பேன் என்று அவர் கொக்கரிப்பது எமக்குப் புரிய முடியாத புதிராக இருக்கின்றது. அவர் இன்று எடுத்துள்ள முடிவு இலங்கையில் எழுந்துள்ள இனச் சிக்கலுக்குத் தீர்வாக அமையப்போவதில்லை. மாறாக தமிழினத்தைப் பூண்டோடு தீர்த்துக்கட்டும் முயற்சியாகும். தீர்வு வேறு தீர்த்துக் கட்டுவது என்பது வேறு.

அனைத்துச் சிக்கலுக்கும் ஒற்றையாட்சியில் தான் தீர்வு காண்போம் என்று கூறும் இவர் மேலும் ஒருபடி சென்று தமிழர் ஒரு தேசிய இனம் என்பதைத் தாம் ஏற்கவில்லை என்றும், தமிழர் தாயகக் கோட்பாட்டை மறுப்பதாகவும், தமிழரின் தன்னுரிமை (சுயநிர்ணய) கோட்பாட்டை தாம் முற்றாக எதிர்ப்பதாகவும் கூறுகிறார். இவை ஒருபுறம் இருக்க, கடல் கோளினால் பேரழிவிற்கு ஆளாகி தாங்க முடியாத துன்பத்துள் மூழ்கியிருக்கின்ற மக்களின் துயர் துடைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள பொதுக்கட்டமைப்பைக்கூட தாம் முற்றாக நிராகரிப்பதாக, மருந்தளவும் மனிதாபிமானம் அற்ற நிலையில் - புத்த மதத்தின் பேரிலும், சிங்கள வல்லாண்மையின் பேரிலும் வெறியாட்டம் ஆடுகின்ற இம்மகிந்த ராஜபக்ஷ தான் குடியரசுத் தலைவராக வெற்றி பெற்ற நிலையில் பிரபாகரனுடன் பேசப் போவதாகக்கூறும் கூற்று ஒரு பொறுப்பு வாய்ந்த தலைவனின் பேச்சாக இருக்க முடியாது. மாறாக சிங்கள பௌத்த வல்லாண்மையின் முழு வடிவமாகவே அவர் விளங்குகிறார். இப்படிப்பட்ட ஒருவருடனும் எங்கள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பேச வருவார் என்று மகிந்த ராஜபக்ஷ காண்கின்ற கனவு வெறும் பகற்கனவே ஆகும்.

ஈழத் தமிழினம் பல தமிழ்த் தலைவர்களைத் தோற்றுவித்துள்ளது. ஆனால் அவர்கள் பல தடவைகள் தடம் புரண்ட தலைவர்களாக மாறியதன் விளைவுதான் இன்று இத்தமிழினம் கதிகலங்கிய நிலையில், எம்மண்ணிலேயே வேரோடு சாய்க்கப்பட்ட நிலைக்கு ஆளாகியுள்ளது. தந்தை செல்வா போன்ற சில தலைவர்கள் தொலை நோக்குடன் சிந்தித்து செயலாற்றியது உண்மை. ஆனால் அவர்களுடைய அற வழிப்போராட்டம் வெறிபிடித்த சிங்களத் தலைமைப்பீடத்திடம் எடுக்கப்படவில்லை. எனவே தான் 1976ம் ஆண்டு நவம்பர் 19ம் திகதி தந்தை செல்வா நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய இறுதி உரையில் - தமிழ் மக்களுக்கு அளித்த இறுதி உயிலில், "சிங்கள மக்களின் ஆட்சியில் இருந்து நாம் விடுபடாத நிலையில் தமிழினம் பூண்டோடு அழிந்துவிடும். எனவே தமிழீழம் தான் எமது இறுதித் தீர்வு"என்று கூறிய கூற்று இங்கு நாம் நினைவு கொள்ளத்தக்கது.

இவற்றின் அடிப்படையில் பார்க்கையில் "எம்மை நத்துவாய் என எதிரிகள் கோடிட்டு அழைத்தாலும் தொடமறுக்கின்ற"- ஆவது அறியும் தொலைநோக்குச் சிந்தனை உடைய உள்ளுணர்வு உள்ள எம் தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஏமாற்றலாம் என்று மகிந்த ராஜபக்ஷ கருதுவாராயின் அவர் தன்னைத் தானே ஏமாற்றுகிறார் என்பது பொருள்.

மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் ஞானத்தை - இல்லை அரசியல் அஞ்ஞானத்தை இவ்விதம் புட்டுக்காட்டி விளக்கியுள்ள நாம் ஐ.தே.கட்சியைச் சார்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீது எமக்கு ஏதோ தீராத காதல் என்று எவரும் எண்ணி ஏமாற வேண்டாம். ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் அறிக்கையில் இனச்சிக்கலைத் தீர்க்க இணைப்பாட்சி என்ற சொல் கையாளப்பட்டிருப்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் அதே அறிக்கையில் இணைப்பாட்சியின் சாயல் கொண்டுள்ள, இந்திய அரசியல் அமைப்பை பின்பற்றலாம் என்று கூறும் சொற்றொடர்கள் எமக்கு எவ்வளவு ஆபத்தை உண்டாக்கும் என்பதை எம்மில் எத்தனை பேர் உணர்வோமோ நாமறியோம்.

பிரிவு 356 ஐ வைத்துக் கொண்டு மாநில அரசுகளைக் கலைக்கின்ற அதிகாரம் இந்திய மைய அரசுக்கு உண்டு. இதனை சிறிலங்கா அர சும் கடைப்பிடிக்கின் எத்தகைய சீரழிவு ஈழத்தமிழருக்கு உருவாகும் என்பதை எம்மில் எத்தனை பேர் எண்ணிப் பார்க்கின்றார்கள். நிலப்பரப்பற்ற நிலையில் இணைப்பாட்சி இயங்க முடியுமா?

இணைப்பாட்சியை வாயளவில் உச்சரிக்கின்ற ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தமிழர் ஒரு தேசிய இனம் என்பதை, தமிழருக்குத் தாயகம் உண்டு என்பதை, தமிழருக்குத் தன்னுரிமையை நிலைநாட்டுகின்ற உரிமை உண்டு என்பதை, அவர் ஏற்கிறாரா என்பதை நாம் அறிய விரும்புகின்றோம். இவற்றை ஏற்காத நிலையில் இணைப்பாட்சி எவ்விதம் உருவாக முடியும். "அந்தரத்தில் இருக்கின்ற இந்திரலோகத்திலா" இணைப்பாட்சியை உருவாக்கித்தர இருக்கிறார்.

மக்கள் தீர்ப்பின் அடிப்படையில் இனச்சிக்கலுக்குத் தீர்வு காணலாம் என இரு தலைவர்களும் கூறுகிறார்கள். மிக்க எண்ணிக்கைப் பெருக்கமுடைய சிங்கள மக்கள், பொதுமக்கள் வாக்கெடுப்பில் இணைப்பாட்சிக்கு இசைவு தெரிவிப்பார்களா?

இரண்டு கட்சிகளும் இணைந்த நிலையில்தான் 2/3 விகிதாசார அடிப்படையில்தான் இணைப்பாட்சிக்கு ஆதரவாக நாடானுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்ற முடியும். இது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக்கூடிய நிகழ்ச்சியா? யார் யாரை ஏமாற்ற முயல்கிறார்கள்.

இரு தலைவர்களுடைய தேர்தல் அறிக்கைகளிலும் படைப்பலப் பெருக்கம் பேசப்படுகின்றது. படைப்பயிற்சி பற்றியும் பேசப்படுகின்றது. அத்தோடு அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது பாதுகாப்பு நிதியாகக் கோடிக்கணக்கை அரசாங்கம் ஒதுக்கிய போது ஐ.தே.கட்சி அதற்கு ஆமோதித்து வாக்களித்தது. அவசரகாலச் சட்டம் நீடிப்பதைப் பற்றி நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்த போதுகூட, அரசுக்கு ஆதரவாகத்தான் ஐ.தே.கட்சி வாக்களித்தது. இவை அண்மைக்கால நிகழ்ச்சிகள். தமிழர்களை அழிப்பது என்று வரும் போது இரு கட்சிகளும் ஒன்றுபடுவர்.

சிறிது பின்நோக்கிப் பார்ப்போமாயின் புத்த தர்மம் பேசும் சிங்களக் கட்சிகள் வாள் ஏந்திய சிங்கக் கொடியைத் தம் தேசியக் கொடியாக ஏற்றியுள்ளது. இதை எதிர்த்து அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் நாடாளுமன்றத்தில் நடாத்திய போராட்டம், பின்பு பதவி துறந்து தன் கொள்கையை நிலைநாட்டியதை வரலாறு பதித்துள்ளது. "இந்திய வம்சாவழி மக்களின் குடியுரிமை வாக்குரிமைச் சட்டம்"

இன்று இந்திய வம்சாவழித் தமிழ் மக்களின் கழுத்தை அறுக்கின்றது. நாளை எமக்கும் இதுவே ஏற்படும் என்று இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட போது தந்தை செல்வா கூறிய தீர்க்க தரிசனம் எவ்வளவு தூரம் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் கண்ணாரக் கண்டுள்ளோம். நாடாளுமன்றத்தில் தமிழனின் பிரதிநிதித்துவம் பாதிக்கு மேல் குறைக்கப்பட்டு பலவீனமான குரலாக இன்று மாறியிருப்பதற்கு ஐ.தே.கட்சிதான் காரணம் என்பதை சிந்திக்கின்ற தமிழன் எவனும் மறுக்க முடியுமா?

இக்குடியுரிமை வாக்குரிமை பறிக்கப்பட்டதனால் மலையக மக்களின் எட்டுப் பிரதிநிதிகள் வெளியேற்றப்பட்டதனை வசதிக்காக யார் மறந்தாலும் நாம் மறப்பதற்கில்லை. இவ்வெட்டுத் தமிழ்ப் பிரதிநிதிகளுக்குப் பதிலாக இவ்வெற்றிடத்தைச் சிங்களப் பிரதிநிதிகள் நிரப்பயிருப்பதையும் நாம் எளிதில் மறக்க முடியாது.

எங்கள் தமிழீழ மண்ணில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் திட்டமிட்டு அரசின் ஆதரவோடு அம்பாறையை அபகரித்த நிகழ்ச்சியையும், திருகோணமலையில் திரியாய்த் தொகுதியைச் சிங்களவருக்காக உருவாக்கியதையும், முல்லைத்தீவில் மணலாற்றை விழுங்கி ஏப்பமிட எடுக்கும் முயற்சியையும் நாம் ஆழ்ந்த கவலையுடன் கவனித்துக் கொண்டிருக்கின்றோம்.

தமிழீழ மண்ணின் நிலப்பரப்பையும், கடற்பரப்பையும் அபகரித்து தமிழீழ மண்ணைத் துண்டாடுகின்ற முயற்சிகளுக்கு ஐ.தே.கட்சியே பெருங்காரணம் என்பதை வரலாற்று ஆசிரியர்கள் வரைந்தே உள்ளனர். எனவேதான் மகிந்த ராஜபக்ஷவை வேண்டாம் என ஒதுக்குகின்ற நாம், ரணில் விக்கிரமசிங்காவையும் அதே கண்ணோடு பார்த்து அவரையும் எமக்கு வேண்டாதவர் என ஒதுக்குகின்றோம்.

வருகின்ற குடியரசுத் தேர்தலில் நாம் உணர்ந்தோ, உணராமலோ எந்தக் குடியரசுத் தலைவருக்காவது வாக்களிப்போமாயின் நாம் தேசிய நீரேட்டத்தில் இரண்டறக் கலந்து கொள்கிறோம் என்றுதான் பொருள் கொள்ளப்படும். தமிழ்த் தேசியத்தைப் பேசுகின்ற நாம் தமிழீழம் தான் எங்கள் முடிந்த முடிவென்று கூறுகின்ற நாம். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்று எம் விடுதலைப் புலிகளுடன் நாம் எழுப்புகின்ற குரல் பொருள் பொதிந்த குரலாக விளங்க வேண்டின் நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலை நாம் புறக்கணித்தே ஆகவேண்டும்.

வழக்காற்றில் உள்ள புரியும் பிறமொழியில் கூறின் நாம் இத்தேர்தலைப் பகிஷ்கரித்தே ஆக வேண்டும். "மக்களெல்லாம் பிரபாகரன் பக்கமென்று"நாம் வாயளவில் கூறுவதானால் எதுவிதப் பயனுமில்லை. அதற்குச் செயல்வடிவம் கொடுக்கின்ற முறையில் வருகின்ற தேர்தலையொட்டி நாம் அளிக்கின்ற தீர்ப்புத்தான் உலகின் கவனத்தை எம்பால் ஈர்க்கும் செயலாகும். "செய் அல்லது செத்துமடி| என்பது நாம் கடைப்பிடிக்கும் தாரகமந்திரமாக அமையட்டும். "தமிழன் வாழவேண்டின் தமிழன் தன்னை ஆழவேண்டும்"என்பது நாம் தருகின்ற புதிய குறள், குரல்.

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home