"To us all towns
are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Truth is a Pathless Land > Selected Writings by Nadesan Satyendra > |
|
Sathyam Commentary US - India - China: Changing
Dynamics Nadesan Satyendra 23 February 2009
|
In 1983, I stumbled into a lecture on International
Relations at Cambridge University. The lecture was by a
visiting German Professor. I forget her name. But
something that she said has remained with me over the
past several years. She said:
Ofcourse at the time she spoke in 1983, we lived in a bi polar world with the US and the Soviet Union as the two super powers. Other countries, whether they regarded themselves 'non aligned' or not, leaned for support on one or the other of the two super powers to a lesser or greater extent. With the collapse of the Soviet Union in 1991, we saw the emergence of an uni polar world with the US as the world's sole super power. The Project for the New American Century, 2000 articulated the vision of that unipolar world where the US would reign supreme -
President George W. Bush, assuming office in 2001, pushed forward US supremacist policies directed to secure, permanently, American military pre eminence and American geopolitical leadership -
But the limits of US power were soon exposed by the events of 9/11, the Afghan War as well as by the adventure in Iraq -
In the years following the Iraq adventure, the unipolar moment of US supremacy passed. Timothy Garton Ash, Professor of European Studies, University of Oxford wrote in 2007, -
Today, the global economic crisis has brought about another sea change. It has served to bring into sharp focus the dependence of the US (a debtor country) on foreign (read China) savings. Strange bedfellows it may seem to some - but it is true. The US with an average income of around 40,000$ is a debtor country whilst China with an average income of 2000$ is a creditor country. During the past decade or so China has in effect financed the US credit boom.
And it appears that just as the beginning of the end of the 'uni polar moment' was signalled with the Iraq war in 2002, we are today, witnessing the beginning of the end of the 'multi polar moment' as well. The global economic crisis has set the stage for an emerging bi polar world. It is this which led Senator Hillary Clinton to conclude in 2008 that "our [US] relationship with China will be the most important bilateral relationship in the world in this century" and for Secretary of State Hillary Clinton to say last week -
Indian career diplomat M K Bhadrakumar was right to point out some of the effects of this paradigm shift in India Grapples with the Obama Era, February 2009 -
In the Indian perception, South Asia and the Indian Ocean just aren't 'big enough' for India and China. But India may be compelled to change this world view and Indian Foreign Minister Pranab Mukherjee may need to reconsider the remarks that he made in October 2008 (with the Bush administration in place) -
New Delhi may want to recognise that given the emerging bi polar world, and given the strategic significance of the Indian Ocean region to both the US and China, New Delhi may be powerless to prevent 'countries like Pakistan and China gaining a strategic foothold in the island nation'. Again, it may be that this was the case with the Bush administration as well, but with the difference that New Delhi was persuaded that the Bush administration was 'building India's military capacity in order to counter potential rivals China and Russia in the region'.
Again, even if India's Sonia Gandhi-Manmohan Singh administration is content to play the US client role, this may not have the support of large segments of the Indian polity - more so in an election year. Given an emerging bi polar world, India may go back to its old 'non aligned' foreign policy approach and at the same time strengthen its links with its old friend, Russia. It is an approach that will have the support of the Communist Party of India. And in relation to the conflict in the island of Sri Lanka, the old adage that countries have permanent interests but do not have permanent friends may persuade New Delhi to change course and also recognise the significance of something that Dr. M. S. S. Pandian, Visiting Fellow of the Sarai Programme, Centre for the Study of Developing Societies, Delhi said in October 2008 -
New Delhi will want to recognise that despite its best efforts it cannot prevent the continued presence of US and China in Sinhala Sri Lanka (in what New Delhi regards as its backyard) and that India's strategic interests in an emerging bi polar world may be best served by the creation of an independent Tamil Eelam rather than by preventing its formation. Steadfastly defending the inviolability of territorial boundaries of existing states, regardless of how and when they were determined may not be the path to a stable world order. There is a need to defend the very real values that a people stand for and speak from the heart to the hearts of those people. A people's struggle for freedom is also a nuclear energy and India may need to adopt a more 'principle centred' approach towards struggles for self determination in the Indian region. A myopic approach, apart from anything else, may well encourage the very outside 'pressures' which New Delhi seeks to exclude. |
அமெரிக்கா
- இந்தியா -
சீனா :
மாற்றமுறும்
விசை
இயக்கமும் தமிழாக்கம்
- ம.தனபாலசிங்கம் |
1983 ஆம் ஆண்டு எதிர்பாராதவாறு கேம்பிறிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சர்வதேச உறவுகள் சம்பந்தமான விரிவுரை ஒன்றில் நான் கலந்துகொண்டிருந்தேன். யேர்மனியில் இருந்து வந்த அதிதிப் பேராசிரியர் ஒருவரால் இந்த விரிவுரை நிகழ்த்தப்பட்டது. அவரின் பெயரை நான் மறந்துவிட்டேன். ஆனாலும் அவரால் சொல்லப்பட்ட சிலகாரியங்கள் கடந்த பல ஆண்டுகளாக என்னோடு நிலைத்துவிட்டது.
1983 இல் அவர் பேசியபோது நாம் அமெரிக்கா, சோவியத்யூனியன் என்னும் இரு வல்லரசுகளைக்கொண்ட இருமுனை உலகில் வாழ்ந்துகொண்டிருந்தோம். மற்றைய நாடுகள் தம்மை "அணிசேரா நாடுகள்" எனக் கூறிக்கொண்டாலும்சரி கூறாவிட்டாலும்சரி தமக்கு ஆதரவாக இரு வல்லரசுகளில் ஒன்றில் குறைந்த அளவோ கூடிய அளவோ சார்ந்திருந்தனர். 1991 இல் சோவியத்யூனியனின் உடைவுடன் உலகின் ஏக வல்லரசான அமெரிக்காவுடனான ஒருமுனை உலகின் வெளிப்பாட்டினை நாம் கண்டோம். புதிய அமெரிக்க நூற்றாண்டிற்கான 2000 ஆம் ஆன்டுத் திட்டம் .The Project for the New American Century, 2000 அந்த ஒருமுனை உலகில் அமெரிக்காவின் ஆட்சி ஆதிக்கம் செலுத்தும் என்னும் காட்சியை வெளிப்படுத்தியது.
2001 இல் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி ஜோர்ஸ் .டபிள்யூ. புஷ் அமெரிக்க இராணுவ முதன்மையையும் அமெரிக்க புவிசார் அரசியலுக்கான தலைமையையும் நிரந்தரமாகப் பெற்றுக் கொள்வதற்கான அமெரிக்க மேலாதிக்கக் கொள்கைகளை வலியுறுத்தினார்.
ஆனால் 9/11 இன் நிகழ்வுகளும், ஆப்கானிஸ்தான் யுத்தமும் ஈராக் மீதான வீரப்பிரதாபமும் அமெரிக்க வலுவின் எல்லைகளை விரைவாக அம்பலப்படுத்தியது.
ஈராக் மீதான படையெடுப்பின் பின்னான ஆண்டுகளில் அமெரிக்க மேலாதிக்கத்தின் ஒருமுனை இயக்கம் முடிவடைந்துவிட்டது என்கிறார் ஒக்ஸ்பேட் பல்கலைக்கழகப் பேராசிரியர். Timothy Garton Ash, Professor of European Studies, University of Oxford wrote in 2007 -
இன்று உலகப் பொருளாதார நெருக்கடி இன்னொரு பெரும் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. இது அன்னிய (சீனாவின் என வாசிக்கவும்) சேமிப்பில் தங்கிவாழும் அமெரிக்காவின் (கடன் வாங்கும் நாடு) நிலையை தெளிவாகக் காட்ட வைத்துள்ளது. இவர்கள் விசித்திரமான கூட்டாளிகளாக சிலருக்கு படலாம். ஆனால் இதுதான் உண்மை. சராசரி 40 ஆயிரம் டொலர் வருமானத்தைக் கொண்ட அமெரிக்கா கடன்வாங்கும் ஒரு நாடு. ஆனால் சராசரி 2 ஆயிரம் டொலர் வருமானத்தைக்கொண்ட சீனா கடன் கொடுக்கும் ஒரு நாடு. கடந்த ஒரு தசாப்தமாக அல்லது அதற்கும் மேலாக அமெரிக்காவின் கடன் வீக்கத்தை சீனாவே செய்துள்ளது.
2002 இல் ஈராக் யுத்தத்துடன் ஒருமுனை உலக இயக்கத்தின் முடிவு ஆரம்பமானதுபோல் நாம் இன்று பலமுனை உலக இயகத்தின் முடிவிற்கான ஆரம்பத்திற்குச் சாட்சியாக உள்ளோம். உலகப் பொருளாதார நெருக்கடியானது எழுச்சிபெறும் இருமுனை உலகிற்கான மேடையை அமைத்துள்ளது. இதுவே 2008 இல் "சீனாவுடனான எமது (அமெரிக்கா) தொடர்பு உலகில் இந்த நூற்றாண்டில் இரு நாடுகளுக்கிடையேயான மிக முக்கிய உறவாக அமையும்." என கிலாரி கிளின்ரனை சொல்ல வைத்தது. இதுவே அவரை கடந்த வாரம்:
எனச் சொல்ல வைத்தது. ஒபாமா யுகத்துடன் இந்தியா போராடிவெற்றிபெற முயலல் என்னும் தலைப்பில் பெப்பிரவரி 2009 இல் இந்தியாவின் துறைசார் இராசதந்திரியான எம்.கே பத்திரகுமார் இதன் தாக்கம் பற்றி கூறுவது சரியானதாகும்:
ஆனால் இந்தவிதமான உலகப்பார்வையை மாற்றும்படி இந்தியா நிற்பந்திக்கப்படலாம். அத்தோடு அக்ரோபர் 2008 இல் (புஷ் நிர்வாகம் நிலவியபோது) இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்ட கருத்தையும் மீள் பரிசீலனை செய்ய வேண்டி வரலாம்.
எழுச்சி பெறும் இருமுனை உலகத்தையும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தித்தின் கேந்திர முக்கியத்துவத்தையும் இந்தியா விளங்கிக் கொள்ளவேண்டி இருக்கலாம். இலங்கைத் தீவில் பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகள் தமது கேந்திர நலன்களுக்காக கால்பதிப்பதை தடுக்கும் வல்லமை புதுடெல்கிக்கு இல்லாது இருக்கலாம். புஷ் நிர்வாகத்திலும் இதுதான் விசயமாக இருந்திருக்கலாம். ஆனால் உள்ளாரரந்த சக்தியுடைய எதிரிகளான சீனாவும் றஸ்சியாவும் இந்தப் பிராந்தியத்தில் செல்வாக்குப் பெறுவதை தடுக்கும் வகையில் இந்தியாவின் இராணுவ வலுவை வளர்க்க அமெரிக்கா உதவும் என்ற வகையில் இது அமைந்திருந்தது.
இந்தியாவின் சோனியா காந்தி மன்மோகன் சிங் நிர்வாகத்தினர் அமெரிக்காவின் வாடிக்கையாளர் பாத்திரத்தை வகிப்பதில் திருப்திப் படினும் இதற்கான ஆதரவு அவர்களுக்கு இந்திய அரசியலின் பெரும் பகுதியினரிடம் இருந்து இல்லாது போகலாம். அதிலும் தேர்தல் காலம் ஒன்றில். எழுச்சி பெறும் இருமுனை உலகில் இந்தியா தனது பழைய அணிசேரா வெளியுறவுக் கொள்கை அணுகு முறைக்குத் திரும்பலாம். அதேசமயம் தனது பழைய நண்பனான றஸ்சியாவுடனான தனது தொடர்பை பலப்படுத்தலாம். இந்த அணுகுமுறை இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவைப் பெறும். இலங்கைத் தீவில் இடம்பெறும் முரண்பாடு சம்பந்தமாக நாடுகளுக்கு நிரந்தர நலன்களே உண்டு நிரந்தர நண்பர்கள் இல்லை என்னும் முதுமொழி இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றச் செய்யலாம். அத்தோடு டெல்கியில் உள்ள அபிவிருத்தியடையும் சமூகங்களின் கற்கைக்கான மையத்தில் அதிதிப் பேச்சாளராகக் கலந்து கொண்ட டாக்டர் எம்.எஸ்.எஸ் பாண்டியன் அக்ரோபர் 2008 இல் கூறியதை மனங்கொள்ளலாம். "இந்திய அமைப்பில் இருந்து பிரிந்து செல்வதற்கான கோரிக்கையை தமிழ்நாடு வைத்த வரலாறு ஒன்று உண்டு. இருந்தபோதும் காலப்போக்கில் (இந்திய) தேசிய நீரோட்டத்தில் தன்னை முழுமையாக இணைத்துக்கொள்ள அது முடிவு செய்தது. சிறீலங்கா மீதான தனது கொள்கையில் நியூடெல்கி மாற்றத்தை செய்யாதுவிடின் தமிழ்நாடு தன் பிரிவினைக் கொள்கைக்கான வரலாற்றை மீட்பிக்கலாம். அது இந்தியாவின் துர்அதிஸ்டமாகும்." தனது நல்ல முயற்சிகளின் பின்னரும் சிங்கள சிறீலங்காவில் (தனது கொல்லைப்புறம் என நியூடெல்கி கருதும்) அமெரிக்காவினதும் சீனாவினதும் தொடர்ச்சியான இருப்பை நியூடெல்கியால் தடுக்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முன்வரலாம். அத்தோடு எழுச்சிபெறும் இருமுனை உலகில் இந்தியாவின் கேந்திர நலன்ளைப் பாதுகாக்க சுதந்திர தமிழீழம் உருவாவதன் மூலமே முடியும். அதை தடுப்பதன் மூலம் அல்ல என்பதையும் உணர முற்படலாம். தற்போதுள்ள அரசுகளின் ஆட்புல ஒருமைப்பாடு மீறப்படமுடியாதவை என அடம்பிடிப்பது ஒழுங்கான உலக நியதிக்கான மார்க்கம் அல்ல. அதுவம் இந்த அரசுகள் எப்படி எப்போது உருவாக்கப்பட்டவை என்பதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். மக்களால் மதிக்கப்படும் உண்மையான விழுமியங்களை ஆதரிப்பது அவசியமாகும். இந்த விழுமியங்கள் அவர்களின் உள்ளங்களில் இருந்து அந்த மக்களின் உள்ளங்களை நோக்கிப் பேசப்படுவதாகும். விடுதலைக்கான
ஒரு
மக்களின்
போராட்டம்
ஆற்றல்
வாய்ந்த
ஒரு
சக்தியாகும்.
இந்தியப்
பிராந்தியத்தில்
சுயநிர்ணய
உரிமைகளுக்கான
போராட்டங்கள்
சார்ந்து
இந்தியா
மெய்மைத்
தத்துவம்
சார்ந்த
அணுகுமுறையை
கடைப்பிடிக்க
வேண்டும்.
இதைவிட்ட
ஒரு
குறுகிய
அணுகுமுறை
எந்த
வெளிச்
சக்திகளின்
அழுத்தங்களை
நியூடெல்கி
தவிர்க்க
முற்படுகிறதோ
அந்த
சக்திகளுக்கு
உள் நுழைய
ஊக்கம்
அளிப்பதாக
முடியும். |