Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > Ramalinga Atikal - Vallalar >  திருவருட்பா - முதல் திருமுறை (1 - 537) > இரண்டாம் திருமுறை (571 - 1006) > இரண்டாம் திருமுறை (1007 - 1543) > இரண்டாம் திருமுறை (1544 - 1958) > மூன்றாம் திருமுறை (1959 - 2570) > நான்காம் திருமுறை (2571- 3028) >  ஐந்தாம் திருமுறை (3029-3266) >ஆறாம் திருமுறை (3267 -3871) > ஆறாம் திருமுறை (3872 - 4614) > ஆறாம் திருமுறை - (4615 - 5063) > ஆறாம் திருமுறை - (5064 -5818) > திருவருட்பா - பல்வகைய தனிப்பாடல்கள் > திருவருட்பா அகவல் & திருவொற்றியூர் வடிவுடை மாணிக்க மாலை


tiruvarutpA of rAmalinga aTikaL
tirumuRai -VI part IV (verses 5064 -5818)
 

திருவருட்பா
இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது
ஆறாம் திருமுறை - நான்காம் பகுதி
பாடல்கள் (5064 -5818)


Etext preparation (inaimathi format) Mr. Sivakumar of Singapore (www.vallalar.org)
Proof-reading: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
� Project Madurai 1999 - 2004 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of  electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


113.

அம்பலத்தரசே

(5064 - 5155)

மின்பதிப்பு

114

சம்போ சங்கர

(5156 - 5177)

மின்பதிப்பு

115

சிவபோகம்

(5178 - 5217)

மின்பதிப்பு

116

அம்பலத்தமுதே

(5218 - 5225)

மின்பதிப்பு

117

திருநட மணியே

(5226 - 5240)

மின்பதிப்பு

118

ஞான சபாபதியே

(5241 - 5250)

மின்பதிப்பு

119.

விரைசேர் சடையாய்

(5251 - 5254)

மின்பதிப்பு

120

ஜோதி ஜோதி

(5255 - 5257)

மின்பதிப்பு

121

கண்புருவப் பூட்டு

(5258 - 5268)

மின்பதிப்பு

122

ஊதூது சங்கே

(5269 - 5284)

மின்பதிப்பு

123

சின்னம் பிடி

(5285 - 5294)

மின்பதிப்பு

124

முரசறைதல்

(5295)

மின்பதிப்பு

125

தனித்திரு அலங்கல்

(5296 - 5456)

மின்பதிப்பு

126

சிற்சத்தி துதி

(5457 - 5466)

மின்பதிப்பு

127

இன்பத் திறன்

(5467 - 5476)

மின்பதிப்பு

128

உற்ற துரைத்தல்

(5477 - 5486)

மின்பதிப்பு

129

சுத்த சிவநிலை

( 5487 - 5533)

மின்பதிப்பு

130

உலகப் பேறு

(5534 - 5543)

மின்பதிப்பு

131.

அன்புருவமான சிவம் ஒன்றே உளதெனல்

(5544 - 5555)

மின்பதிப்பு

132.

உலகர்க்கு உய்வகை கூறல்

(5556 - 5565)

மின்பதிப்பு

133

புனிதகுலம் பெறுமாறு புகலல்

(5566 - 5575)

மின்பதிப்பு

134

மரணமிலாப் பெருவாழ்வு

(5576 - 5603)

மின்பதிப்பு

135

சமாதி வற்புறுத்தல்

(5604 - 5613)

மின்பதிப்பு

136

சன்மார்க்க உலகின் ஒருமைநிலை

(5614 - 5624)

மின்பதிப்பு

137

திருவடிப் பெருமை

(5625 - 5669)

மின்பதிப்பு

138.

தலைவி தலைவன் செயலைத் தாய்க் குரைத்தல்

(5670 - 5679)

மின்பதிப்பு

139.

நற்றாய் செவிலிக்குக் கூறல்

(5680 - 5689)

மின்பதிப்பு

140

தோழிக்குரிமை கிளத்தல்

(5690 - 5703)

மின்பதிப்பு

141

தலைவி கூறல்

(5704 - 5713)

மின்பதிப்பு

142

அனுபவ மாலை

(5714 - 5813)

மின்பதிப்பு

143

சத்திய வார்த்தை

(5814)

மின்பதிப்பு

144

சத்திய அறிவிப்பு

(5815 - 5818)

மின்பதிப்பு

அடிக்குறிப்புகளில் காணப்படும் பதிப்பாசிரியர்களின் பெயர்ச் சுருக்க விரிவு
திருச்சிற்றம்பலம்

 
ஆறாம் திருமுறை - நான்காம் பகுதி - பாடல்கள் (5064 -5818)

113. அம்பலத்தரசே

நாமாவளி

சிந்து

5064.

சிவசிவ கஜமுக கணநா தா
சிவகண வந்தித குணநீ தா.

1

5065

சிவசிவ சிவசிவ தத்துவ போதா
சிவகுரு பரசிவ சண்முக நாதா.(374)

2

(374)ஆ பா. பதிப்பைத் தவிர மற்றைப் பதிப்புகள் அனைத்திலும்
"அம்பலத்தரசே" முதலாக நாமாவளி தொடங்குகிறது. ஆ. பா.பதிப்பில் மட்டும்
இவ்விரண்டு நாமாவளிகளும் முன்வைக்கப் பெற்று "அம்பலத்தரசே" மூன்றாவதாக
வைக்கப்பெற்றுள்ளது. இறுக்கம் இரத்தின முதலியார், வேட்டவலம் ஜமீன்தார்
அப்பாசாமி பண்டாரியார் இவ்விருவரின் படிகளில் மட்டுமே இவ்விரண்டு
நாமாவளிகள் காணப் பெறுவதாயும், கிடைத்த மற்றைப் படிகளில் இவை இல்லை என்றும்,
அவற்றில் "அம்பலத்தரசே" என்பதே தொடக்கம் என்றும் ஆ. பா. குறிக்கிறார்.
இப்பதிப்பில் இவ்விரு நாமாவளிகளும் தனியாக எண்ணிடப் பெற்றுத் தனிப்படுத்திக்
காட்டப் பெற்றுள்ளன.அம்பலத்தரசே எனத் தொடங்கும் நாமாவளிக்கு இவ்விரண்டையும்
காப்பாகக் கொள்ளலாம்.

5066

அம்பலத் தரசே அருமருந் தே
ஆனந்தத் தேனே அருள்விருந் தே.

1

5067

பொதுநடத் தரசே புண்ணிய னே
புலவரெ லாம்புகழ் கண்ணிய னே.

2

5068

மலைதரு மகளே மடமயி லே
மதிமுக அமுதே இளங்குயி லே.

3

5069

ஆனந்தக் கொடியே இளம்பிடி யே
அற்புதத் தேனே மலைமா னே.

4

5070

சிவசிவ சிவசிவ சின்மய தேஜா
சிவசுந் தரகுஞ் சிதநட ராஜா.

5

5071

படன விவேக பரம்பர வேதா
நடன சபேச சிதம்பர நாதா.

6

5072

அரிபிர மாதியர் தேடிய நாதா
அரகர சிவசிவ ஆடிய பாதா.

7

5073

அந்தண அங்கண அம்பர போகா
அம்பல நம்பர அம்பிகை பாகா.

8

5074

அம்பர விம்ப சிதம்பர நாதா
அஞ்சித ரஞ்சித குஞ்சித பாதா.

9

5075

தந்திர மந்திர யந்திர பாதா
சங்கர சங்கர சங்கர நாதா.

10

5076

கனக சிதம்பர கங்கர புரஹர
அனக பரம்பர சங்கர ஹரஹர.

11

5077

சகல கலாண்ட சராசர காரண
சகுண சிவாண்ட பராபர பூரண.

12

5078

இக்கரை கடந்திடில் அக்கரை யே
இருப்பது சிதம்பர சர்க்கரை யே.

13

5079

என்னுயிர் உடம்பொடு சித்தம தே
இனிப்பது நடராஜ புத்தமு தே.

14

5080

ஐயர் திருச்சபை ஆடக மே
ஆடுதல் ஆனந்த நாடக மே.

15

5081

உத்தர ஞான சிதம்பர மே
சித்திஎ லாந்தரும் அம்பரமே.

16

5082

அம்பல வாசிவ மாதே வா
வம்பல வாவிங்கு வாவா வா.

17

5083

நடராஜன் எல்லார்க்கும் நல்லவ னே
நல்லஎ லாம்செய வல்லவ னே.

18

5084

ஆனந்த நாடகம் கண்டோ மே - பர
மானந்த போனகம் கொண்டோ மே.

19

5085

சகள உபகள நிட்கள நாதா
உகள சததள மங்கள பாதா.

20

5086

சந்தத மும்சிவ சங்கர பஜனம்
சங்கிதம் என்பது சற்சன வசனம்.

21

5087

சங்கர சிவசிவ மாதே வா
எங்களை ஆட்கொள வாவா வா.

22

5088

அரகர சிவசிவ மாதே வா
அருளமு தம்தர வாவா வா.

23

5089

நடனசி காமணி நவமணி யே
திடனக மாமணி சிவமணி யே.

24

5090

நடமிடும் அம்பல நன்மணி யே
புடமிடு செம்பல பொன்மணி யே.

25

5091

உவட்டாது சித்திக்கும் உள்ளமு தே
தெவிட்டாது தித்திக்கும் தெள்ளமு தே.

26

5092

நடராஜ வள்ளலை நாடுத லே
நம்தொழி லாம்விளை யாடுத லே.

27

5093

அருட்பொது நடமிடு தாண்டவ னே
அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ னே.

28

5094

நடராஜ மாணிக்கம் ஒன்றது வே
நண்ணுதல் ஆணிப்பொன் மன்றது வே.

29

5095

நடராஜ பலமது நம்பல மே
நடமாடு வதுதிரு அம்பல மே.

30

5096

நடராஜர் பாட்டே நறும்பாட்டு
ஞாலத்தார் பாட்டெல்லாம் வெறும்பாட்டு.

31

5097

சிதம்பரப் பாட்டே திருப்பாட்டு
ஜீவர்கள் பாட்டெல்லாம் தெருப்பாட்டு.

32

5098

அம்பலப் பாட்டே அருட்பாட்டு
அல்லாத பாட்டெல்லாம் மருட்பாட்டு.

33

5099

அம்பல வாணனை நாடின னே
அவனடி யாரொடும் கூடின னே.

34

5100

தம்பத மாம்புகழ் பாடின னே
தந்தன என்றுகூத் தாடின னே.

35

5101

நான்சொன்ன பாடலும் கேட்டா ரே
ஞான சிதம்பர நாட்டா ரே.

36

5102

இனித்துயர் படமாட்டேன் விட்டே னே
என்குரு மேல்ஆணை இட்டே னே.

37

5103

இனிப்பாடு படமாட்டேன் விட்டே னே
என்னப்பன் மேல்ஆணை இட்டே னே.

38

5104

சன்மார்க்கம் நன்மார்க்கம் நன்மார்க்கம்
சகமார்க்கம் துன்மார்க்கம் துன்மார்க்கம்.

39

5105

நாதாந்த நாட்டுக்கு நாயக ரே
நடராஜ ரேசபா நாயக ரே.

40

5106

நான்சொல்லும் இதுகேளீர் சத்திய மே
நடராஜ எனில்வரும் நித்திய மே.

41

5107

நல்லோர் எல்லார்க்கும் சபாபதி யே
நல்வரம் ஈயும் தயாநிதி யே.

42

5108

நடராஜர் தம்நடம் நன்னட மே
நடம்புரி கின்றதும் என்னிட மே.

43

5109

சிவகாம வல்லிக்கு மாப்பிள்ளை யே
திருவாளன் நான்அவன் சீர்ப்பிள்ளை யே.

44

5110

சிவகாம வல்லியைச் சேர்ந்தவ னே
சித்தெல்லாம் செய்திடத் தேர்ந்தவ னே.

45

5111

இறவா வரம்தரு நற்சபை யே
எனமறை புகழ்வது சிற்சபை யே.

46

5112

என்இரு கண்ணுள் இருந்தவ னே
இறவா தருளும் மருந்தவ னே.

47

5113

சிற்சபை அப்பனை உற்றே னே
சித்திஎ லாம்செயப் பெற்றே னே.

48

5114

அம்பல வாணர்தம் அடியவ ரே
அருளர சாள்மணி முடியவ ரே.

49

5115

அருட்பெருஞ்சோதியைக் கண்டே னே
ஆனந்தத் தெள்ளமு துண்டே னே.

50

5116

இருட்பெரு மாயையை விண்டே னே
எல்லாம்செய் சித்தியைக் கொண்டே னே.

51

5117

கருணா நிதியே குணநிதி யே
கதிமா நிதியே கலாநிதி யே.

52

5118

தருணா பதியே சிவபதி யே
தனிமா பதியே சபாபதி யே.

53

5119

கருணா நிதியே சபாபதி யே
கதிமா நிதியே பசுபதி யே.

54

5120

சபாபதி பாதம் தபோப்ர சாதம்
தயாநிதி போதம் சதோதய வேதம்.

55

5121

கருணாம் பரவர கரசிவ பவபவ
அருணாம் பரதர ஹரஹர சிவசிவ.

56

5122

கனகா கரபுர ஹரசிர கரதர
கருணா கரபர சுரவர ஹரஹர.

57

5123

கனக சபாபதி பசுபதி நவபதி
அனக உமாபதி அதிபதி சிவபதி.

58

5124

வேதாந்த பராம்பர ஜயஜய(375)
நாதாந்த நடாம்பர ஜயஜய.

59

(375). சவுதய - ஆ. பா. பதிப்பு.

5125

ஏகாந்த சர்வேச சமோதம
யோகாந்த நடேச நமோநம.

60

5126

ஆதாம்பர ஆடக அதிசய
பாதாம்புஜ நாடக ஜயஜய.

61

5127

போதாந்த புரேச சிவாகம
நாதாந்த நடேச நமோநம.

62

5128

ஜால கோலகன காம்பர சாயக
கால காலவன காம்பர நாயக.

63

5129

நாத பாலசு லோசன வர்த்தன
ஜாத ஜாலவி மோசன நிர்த்தன.

64

5130

சதபரி சதவுப சதமத விதபவ
சிதபரி கதபத சிவசிவ சிவசிவ.

65

5131

அரகர வரசுப கரகர பவபவ
சிரபுர சுரபர சிவசிவ சிவசிவ.

66

5132

உபல சிரதல சுபகண வங்கண
சுபல கரதல கணபண கங்கண.

67

5133

அபயவ ரதகர தலபுரி காரண
உபயப ரதபத பரபரி பூரண.

68

5134

அகரஉ கரசுப கரவர சினகர
தகரவ கரநவ புரசிர தினகர.

69

5135

வகரசி கரதின கரசசி கரபுர
மகரஅ கரவர புரஹர ஹரஹர.

70

5136

பரமமந் திரசக ளாகன கரணா
படனதந் திரநிக மாகம சரணா.

71

5137

அனந்தகோ டிகுண கரகர ஜொலிதா
அகண்டவே தசிர கரதர பலிதா.

72

5138

பரிபூரண ஞானசி தம்பர
பதிகாரண நாதப ரம்பர.

73

5139

சிவஞானப தாடக நாடக
சிவபோதப ரோகள கூடக.

74

5140

சகல லோகபர காரக வாரக
சபள யோகசர பூரக தாரக.

75

5141

சத்வ போதக தாரண தன்மய
சத்ய வேதக பூரண சின்மய.

76

5142

வரகே சாந்த மகோதய காரிய
பரபா சாந்த சுகோதய சூரிய.

77

5143

பளித தீபக சோபித பாதா
லளித ரூபக ஸ்தாபித நாதா.

78

5144

அனிர்த(376) கோபகரு ணாம்பக நா தா
அமிர்த ரூபதரு ணாம்புஜ பா தா.

79

(376). அனுர்த - ச. மு. க. பதிப்பு.

5145

அம்போ ருகபத அரகர கங்கர
சம்போ சிவசிவ சிவசிவ சங்கர.

80

5146

சிதம்பிர காசா பரம்பிர கா சா
சிதம்ப ரேசா சுயம்பிர கா சா.

81

5147

அருட்பிர காசம் பரப்பிர காசம்
அகப்பிர காசம் சிவப்பிர காசம்.

82

5148

நடப்பிர காசம் தவப்பிர காசம்
நவப்பிர காசம் சிவப்பிர காசம்.

83

5149

நாத பரம்பர னே பர - நாத சிதம்பர னே
நாத திகம்பர னே தச - நாத சுதந்தர னே.

84

5150

ஞான நடத்தவ னே பர - ஞானிஇ டத்தவ னே
ஞான வரத்தவ னே சிவ - ஞான புர்தவ னே.

85

5151

ஞான சபாபதி யே மறை - நாடு சதாகதி யே
தீன தாயாநிதி யே பர - தேவி உமாபதி யே.

86

5152

புத்தம்தரும் போதா வித்தம்தரும் தாதா
நித்தம்தரும் பாதா சித்தம்திரும் பாதா.

87

5153

நடுநாடி நடுநாடி நடமாடு பதியே
நடராஜ நடராஜ நடராஜ நிதியே.

88

5154

நடுநாடி யொடுகூடி நடமாடும் உருவே
நடராஜ நடராஜ நடராஜ குருவே.

89

5155

நடுநாடி இடைநாடி நடமாடும் நலமே
நடராஜ நடராஜ நடராஜ பலமே.

80


திருச்சிற்றம்பலம்
Back


114. சம்போ சங்கர

சிந்து

5156.

தம்குறுவம்பு மங்கநிரம்பு சங்கம்இயம்பும் நம்கொழுகொம்பு
சங்கரசம்பு சங்கரசம்பு சங்கரசம்பு சங்கரசம்பு.

1

5157

சந்தம்இயன்று அந்தணர்நன்று சந்ததம்நின்று வந்தனம்என்று
சந்திசெய்மன்று மந்திரம்ஒன்று சங்கரசம்பு சங்கரசம்பு.

2

5158

நனம்தலைவீதி நடந்திடுசாதி நலம்கொளும்ஆதி நடம்புரிநீதி
தினம்கலைஓதி சிவம்தரும்ஓதி சிதம்பரஜோதி சிதம்பரஜோதி.

3

5159

நகப்பெருஞ்சோதி சுகப்பெருஞ்சோதி

நவப்பெருஞ்சோதி சிவப்பெருஞ்சோதி
அகப்பெருஞ்சோதி நடப்பெருஞ்சோதி

அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி.

4

5160.

உமைக்கொருபாதி கொடுத்தருள்நீதி

உவப்புறுவேதி நவப்பெருவாதி
அமைத்திடுபூதி அகத்திடும்ஆதி

அருட்சிவஜோதி அருட்சிவஜோதி.

5

5161

ஓதஅடங் காதுமடங் காதுதொடங் காது

ஓகைஒடுங் காதுதடுங் காதுநடுங் காது
சூதமலங் காதுவிலங் காதுகலங் காது

ஜோதிபரஞ் ஜோதிசுயஞ் ஜோதிபெருஞ் ஜோதி.

6

5162

ஏதமுயங் காதுகயங் காதுமயங் காது

ஏறிஇறங் காதுஉறங் காதுகறங் காது
சூதமிணங் காதுபிணங் காதுவணங் காது

ஜோதிபரஞ் ஜோதிசுயஞ் ஜோதிபெருஞ் ஜோதி.

7

5163

அகரசபாபதி சிகரசபாபதி அனகசபாபதி கனகசபாபதி
மகரசபாபதி உகரசபாபதி வரதசபாபதி சரதசபாபதி.

8

5164

அமலசபாபதி அபயசபாபதி அமுதசபாபதி அகிலசபாபதி
நிமலசபாபதி நிபுணசபாபதி நிலயசபாபதி நிபிடசபாபதி.

9

5165

பரநடம்சிவ சிதம்பரநடமே பதிநடம்சிவ சபாபதிநடமே
திருநடனம்பர குருநடமே சிவநடம்அம்பர நவநடமே.

10

5166

அம்பலத்தொருநடம் உருநடமே அருநடம் ஒருநடம் திருநடமே
எம்பலத்தொருநடம் பெருநடமே இதன்பரத்திடுநடம் குருநடமே.

11

5167

அஞ்சோடஞ்சவை ஏலாதே அங்கோடிங்கெனல் ஆகாதே

அந்தோவெந்துயர் சேராதே அஞ்சோகஞ்சுகம் ஓவாதே
தஞ்சோபம்கொலை சாராதே சந்தோடம்சிவ மாம்ஈதே

சம்போசங்கர மாதேவா சம்போசங்கர மாதேவா.

12

5168

எந்தாய் என்றிடில் இந்தா நம்பதம் என்றீ யும்பர மன்றா டும்பத

என்றோ டிந்தன நன்றா மங்கண வெங்கோ மங்கள வெஞ்சா நெஞ்சக
சந்தே கங்கெட நந்தா மந்திர சந்தோ டம்பெற வந்தா ளந்தண

சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர.

13

5169

நஞ்சோ என்றிடு நங்கோ பங்கெட நன்றே தந்தனை நந்தா மந்தண

நம்பா நெஞ்சில் நிரம்பா நம்பர நம்பா நம்பதி யம்பா தம்பதி
தஞ்சோ வென்றவர் தஞ்சோ பந்தெறு தந்தா வந்தன நுந்தாள் தந்திடு

சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர.

14

5170

பொதுநிலை அருள்வது பொதுவினில் நிறைவது

பொதுநலம் உடையது பொதுநடம் இடுவது
அதுபரம் அதுபதி அதுபொருள் அதுசிவம்

அரஅர அரஅர அரஅர அரஅர.

15

5171

நவநிலை தருவது நவவடி வுறுவது

நவவெளி நடுவது நவநவ நவமது
சிவமெனும் அதுபதம் அதுகதி அதுபொருள்

சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ.

16

5172

சந்திர தரசிர சுந்தர சுரவர

தந்திர நவபத மந்திர புரநட
சங்கர சிவசிவ சங்கர சிவசிவ

சங்கர சிவசிவ சங்கர சிவசிவ.

17

5173

வானசிற்கன மந்திரதந்திர வாதசிற்குண மந்தணவந்தண

வாரசற்சன வந்திதசிந்தித வாமஅற்புத மங்கலைமங்கல
ஞானசிற்சுக சங்கரகங்கர ஞாயசற்குண வங்கணஅங்கண

நாதசிற்பர வம்பரநம்பர நாததற்பர விம்பசிதம்பர.

18

5174

பாரதத்துவ பஞ்சகரஞ்சக பாதசத்துவ சங்கஜபங்கஜ

பாலநித்திய வம்பகநம்பக பாசபுத்தக பண்டிதகண்டித
நாரவித்தக சங்கிதவிங்கித நாடகத்தவ நம்பதிநங்கதி

நாதசிற்பர நம்பரஅம்பர நாததற்பர விம்பசிதம்பர.

19

5175

பதநம்புறு பவர்இங்குறு பவசங்கடம் அறநின்றிடு

பரமம்பொது நடம்என்தன துளம்நம்புற அருள்அம்பர
சிதகுஞ்சித பதரஞ்சித சிவசுந்தர சிவமந்திர

சிவசங்கர சிவசங்கர சிவசங்கர சிவசங்கர.

20

5176

கலகந்தரும் அவலம்பன கதிநம்பல நிதமும்

கனகந்தரு மணிமன்றுறு கதிதந்தருள் உடலஞ்
சலசந்திரன் எனநின்றவர் தழுவும்பத சரணம்

சரணம்பதி சரணம்சிவ சரணம்குரு சரணம்.

21

5177

எனதென்பதும் நினதென்பதும் இதுஎன்றுணர் தருணம்

இனம்ஒன்றது பிறிதன்றென இசைகின்றது பரமம்
தனதென்பது மனதென்பது ஜகமென்றனை சரணம்

சரணம்பதி சரணம்சிவ சரணம்குரு சரணம்.

22


திருச்சிற்றம்பலம்
Back


115. சிவபோகம்

சிந்து

5178.

போகம் சுகபோகம் சிவபோகம் அதுநித்தியம்
ஏகம் சிவம்ஏகம் சிவம்ஏகம் இதுசத்தியம்.

1

5179

நலமங்கலம் உறும்அம்பல நடனம்அது நடனம்
பலநன்கருள் சிவசங்கர படனம்அது படனம்.

2

5180

சூதுமன்னும் இந்தையே சூடல்என்ன விந்தையே
கோதுவிண்ட சிந்தையே கோயில்கொண்ட தந்தையே.

3

5181

அன்புமுந்து சிந்தையே அம்பலங்கொள் விந்தையே
இன்பமென்பன் எந்தையே எந்தைதந்தை தந்தையே.

4

5182

ஞானசித்தி புரத்தனே நாதசத்தி பரத்தனே
வானம்ஒத்த தரத்தனே வாதவித்தை வரத்தனே.

5

5183

நீஎன்னப்பன் அல்லவா நினக்கும்இன்னஞ் சொல்லவா
தாயின்மிக்க நல்லவா சர்வசித்தி வல்லவா.

6

5184

பலத்தில்தன்னம் பலத்தில்பொன்னம் பலத்தில்துன்னும் நலத்தனே
பலத்தில்பன்னும் பரத்தில்துன்னும் பரத்தில்மன்னும் குலத்தனே.

7

5185

ஆயவாய நேயஞேய மாயஞாய வாதியே
தூயவாய காயதேய தோயமேய ஜோதியே.

8

5186

ஆதவாத வேதகீத வாதவாத வாதியே
சூதவாத பாதநாத சூதஜாத ஜோதியே.

9

5187

அங்கசங்க மங்கைபங்க ஆதிஆதி ஆதியே
துங்கபுங்க அங்கலிங்க ஜோதிஜோதி ஜோதியே.

10

5188

அத்தமுத்த அத்தமுத்த ஆதிஆதி ஆதியே
சுத்தசித்த சப்தநிர்த்த ஜோதிஜோதி ஜோதியே.

11

5189

அஞ்சல்அஞ்சல் என்றுவந்தென் நெஞ்சமர்ந்த குழகனே
வஞ்சநஞ்சம் உண்டகண்ட மன்றுள்நின்ற அழகனே.

12

5190

தொண்டர்கண்டு கண்டுமொண்டு கொண்டுள்உண்ட இன்பனே
அண்டர்அண்டம் உண்டவிண்டு தொண்டுமண்டும் அன்பனே.

13

5191

கந்ததொந்த பந்தசிந்து சிந்தவந்த காலமே
எந்தஎந்த சந்தமுந்து மந்தவந்த கோலமே.

14

5192

என்றும்என்றின் ஒன்றுமன்றுள் நன்றுநின்ற ஈசனே
ஒன்றும்ஒன்றும் ஒன்றும்ஒன்றும் ஒன்றதென்ற தேசனே.

15

5193

எட்டஎட்டி ஒட்டஒட்டும் இட்டதிட்ட கீர்த்தியே
அட்டவட்டம் நட்டமிட்ட சிட்டவட்ட மூர்த்தியே.

16

5194

சேர்இகார சாரவார சீர்அகார ஊரனே
ஓர்உகார தேரதீர வாரவார தூரனே.

17

5195

வெய்யநொய்ய நையநைய மெய்புகன்ற துய்யனே
ஐயர்ஐய நையும்வையம் உய்யநின்ற ஐயனே.

18

5196

பாசநாச பாபநாச பாததேச ஈசனே
வாசவாச தாசர்நேச வாசகாச பேசனே.

19

5197

உரியதுரிய பெரியவெளியில் ஒளியில்ஒளிசெய் நடனனே
பிரியஅரிய பிரியமுடைய பெரியர்இதய படனனே.

20

5198

அகிலபுவன உயிர்கள்தழைய அபயம்உதவும் அமலனே
அயனும்அரியும் அரனும்மகிழ அருளும்நடன விமலனே.

21

5199

அகரஉகர மகரவகர அமுதசிகர சரணமே
அபரசபர அமனசமன அமலநிமல சரணமே.

22

5200

தகரககன நடனகடன சகளவகள சரணமே
சகுணநிகுண சகமநிகம சகிதவிகித சரணமே.

23

5201

அனகவனஜ அமிதஅமிர்த அகலஅகில சரணமே
அதுலவனத அசுதவசல அநிலவனல சரணமே.

24

5202

தனககனக சபையஅபய சரதவரத சரணமே
சதுரசதர சகசசரித தருணசரண சரணமே.

25

5203

உளமும்உணர்வும் உயிரும்ஒளிர ஒளிரும்ஒருவ சரணமே
உருவின்உருவும் உருவுள்உருவும் உடையதலைவ சரணமே.

26

5204

இளகும்இதய கமலம்அதனை இறைகொள்இறைவ சரணமே
இருமைஒருமை நலமும்அருளும் இனியசமுக சரணமே.

27

5205

அடியும்நடுவும் முடியும்அறிய அரியபெரிய சரணமே
அடியர்இதய வெளியில்நடனம் அதுசெய்அதிப சரணமே.

28

5206

ஒடிவில்கருணை அமுதம்உதவும் உபலவடிவ சரணமே
உலகமுழுதும் உறையநிறையும் உபயசரண சரணமே.

29

5207

அறிவுள்அறியும் அறிவைஅறிய அருளும்நிமல சரணமே
அவசம்உறுமெய் யடியர்இதயம் அமரும்அமல சரணமே.

30

5208

எறிவில்உலகில்(377) உயிரைஉடலில் இணைசெய்இறைவ சரணமே
எனையும்ஒருவன் எனவுள்உணரும் எனதுதலைவ சரணமே.

31

(377). இருமைஉலகில் - முதற்பதிப்பு. பொ. சு. பதிப்பு.

5209

நினையும்நினைவு கனியஇனிய நிறைவுதருக சரணமே
நினையும்எனையும் ஒருமைபுரியும் நெறியில்நிறுவு சரணமே.

32

5210

வனையுமதுர அமுதஉணவு மலியஉதவு சரணமே
மருவுசபையில் நடனவரத வருகவருக சரணமே.

33

5211

நினைக்கில்நெஞ்சம் இனிக்கும்என்ற நிருத்தமன்றில் ஒருத்தனே
நினைக்கும்அன்பர் நிலைக்கநின்று பொருத்துகின்ற கருத்தனே.

34

5212

மயங்கிநெஞ்சு கலங்கிநின்று மலங்கினேனை ஆண்டவா
வயங்கிநின்று துலங்குமன்றில் இலங்குஞான தாண்டவா.

35

5213

களங்கவாத களங்கொள்சூதர் உளங்கொளாத பாதனே
களங்கிலாத உளங்கொள்வாருள் விளங்குஞான நாதனே.

36

5214

தடுத்தமலத்தைக் கெடுத்துநலத்தைக் கொடுத்தகருணைத் தந்தையே
தனித்தநிலத்தில் இனித்தகுலத்தில் குனித்தஅடிகொள் எந்தையே.

37

5215

எச்சநீட்டி விச்சைகாட்டி இச்சைஊட்டும் இன்பனே
அச்சம்ஓட்டி அச்சுநாட்டி வைச்சுள்ஆட்டும் அன்பனே.

38

5216

சபாசிவா மஹாசிவா சகாசிவா சிகாசிவா
சதாசிவா சதாசிவா சதாசிவா சதாசிவா.

39

5217

வாசிவா சதாசிவா மஹாசிவா தயாசிவா
வாசிவா சிவாசிவா சிவாசிவா சிவாசிவா.

40


திருச்சிற்றம்பலம்
Back


116. அம்பலத்தமுதே

கலிவிருத்தம்

5218.

நீடிய வேதம் தேடிய பாதம்
நேடிய கீதம் பாடிய பாதம்
ஆடிய போதம் கூடிய பாதம்
ஆடிய பாதம் ஆடிய பாதம்.

1

5219

சாக்கிய வேதம் தேக்கிய பாதம்
தாக்கிய ஏதம் போக்கிய பாதம்
சோக்கிய வாதம் ஆக்கிய பாதம்
தூக்கிய பாதம் தூக்கிய பாதம்.

2

5220

ஏன்றிய சூதம் தோன்றிய பாதம்
ஈன்றிய நாதம் ஆன்றிய பாதம்
ஓன்றிய பூதம் ஞான்றிய பாதம்
ஊன்றிய பாதம் ஊன்றிய பாதம்.

3

5221

சஞ்சிதம் வீடும் நெஞ்சித பாதம்
தஞ்சித மாகும் சஞ்சித பாதம்
கொஞ்சித மேவும் ரஞ்சித பாதம்
குஞ்சித பாதம் குஞ்சித பாதம்.

4

5222

எண்ணிய நானே திண்ணியன் ஆனேன்
எண்ணிய வாறே நண்ணிய பேறே
புண்ணியன் ஆனேன் அண்ணியன் ஆனேன்
புண்ணிய வானே புண்ணிய வானே.

5

5223

தொத்திய சீரே பொத்திய பேரே
துத்திய பாவே பத்திய நாவே
சத்தியம் நானே நித்தியன் ஆனேன்
சத்திய வானே சத்திய வானே.

6

5224

எம்புலப் பகையே எம்புலத் துறவே
எம்குலத் தவமே எம்குலச் சிவமே
அம்பினில் கனலே அந்தணர்க் கிறையே
அம்பலத் தரசே அம்பலத் தரசே.

7

5225

இன்புடைப் பொருளே இன்சுவைக் கனியே
எண்குணச் சுடரே இந்தகத் தொளியே
அன்புடைக் குருவே அம்புயற் கிறையே
அம்பலத் தமுதே அம்பலத் தமுதே.

1


திருச்சிற்றம்பலம்
Back


117. திருநட மணியே

தாழிசை

5226.

பசியாத அமுதே பகையாத பதியே

பகராத நிலையே பறையாத சுகமே
நசியாத பொருளே நலியாத உறவே

நடராஜ மணியே நடராஜ மணியே.

1

5227

புரையாத மணியே புகலாத நிலையே

புகையாத கனலே புதையாத பொருளே
நரையாத வரமே நடியாத நடமே

நடராஜ நிதியே நடராஜ நிதியே.

2

5228

சிவஞான நிலையே சிவயோக நிறைவே

சிவபோக உருவே சிவமான உணர்வே
நவநீத மதியே நவநாத கதியே

நடராஜ பதியே நடராஜ பதியே.

3

5229

தவயோக பலமே சிவஞான நிலமே

தலையேறும் அணியே விலையேறு மணியே
நவவார நடமே சுவகார புடமே

நடராஜ பரமே நடராஜ பரமே.

4

5230

துதிவேத உறவே சுகபோத நறவே

துனிதீரும் இடமே தனிஞான நடமே
நதியார நிதியே அதிகார பதியே

நடராஜ குருவே நடராஜ குருவே.

5

5231

வயமான வரமே வியமான பரமே

மனமோன நிலையே கனஞான மலையே
நயமான உரையே நடுவான வரையே

நடராஜ துரையே நடராஜ துரையே.

6

5232

பதியுறு பொருளே பொருளுறு பயனே

பயனுறு நிறைவே நிறைவுறு வெளியே
மதியுறும் அமுதே அமுதுறு சுவையே

மறைமுடி மணியே மறைமுடி மணியே.

7

5233

அருளுறு வெளியே வெளியுறு பொருளே

அதுவுறு மதுவே மதுவுறு சுவையே
மருளறு தெருளே தெருளுறு மொளியே

மறைமுடி மணியே மறைமுடி மணியே.

8

5234

தருவளர் நிழலே நிழல்வளர் சுகமே

தடம்வளர் புனலே புனல்வளர் நலனே
திருவளர் உருவே உருவளர் உயிரே

திருநட மணியே திருநட மணியே.

9

5235

உயிருறும் உணர்வே உணர்வுறும் ஒளியே

ஒளியுறு வெளியே வெளியுறு வெளியே
செயிரறு பதியே சிவநிறை நிதியே

திருநட மணியே திருநட மணியே.

10

5236

கலைநிறை மதியே மதிநிறை அமுதே

கதிநிறை கதிரே கதிர்நிறை சுடரே
சிலைநிறை நிலையே நிலைநிறை சிவமே

திருநட மணியே திருநட மணியே.

11

5237

மிகவுயர் நெறியே நெறியுயர் விளைவே

விளைவுயர் சுகமே சுகமுயர் பதமே
திகழுயர் உயர்வே உயருயர் உயர்வே

திருநட மணியே திருநட மணியே.

12

5238

இயல்கிளர் மறையே மறைகிளர் இசையே

இசைகிளர் துதியே துதிகிளர் இறையே
செயல்கிளர் அடியே அடிகிளர் முடியே

திருநட மணியே திருநட மணியே.

13

5239

புரையறு புகழே புகழ்பெறு பொருளே

பொருளது முடிபே முடிவுறு புணர்வே
திரையறு கடலே கடலெழு சுதையே

திருநட மணியே திருநட மணியே.

14

5240

நிகழ்நவ நிலையே நிலையுயர் நிலையே

நிறையருள் நிதியே நிதிதரு பதியே
திகழ்சிவ பதமே சிவபத சுகமே

திருநட மணியே திருநட மணியே.

10


திருச்சிற்றம்பலம்
Back


118. ஞான சபாபதியே

தாழிசை

5241.

வேத சிகாமணியே போத சுகோதயமே
மேதகு மாபொருளே ஓதரும் ஓர்நிலையே
நாத பராபரமே சூத பராவமுதே
ஞான சபாபதியே ஞான சபாபதியே.

1

5242

ஏக சதாசிவமே யோக சுகாகரமே
ஏம பராநலமே காம விமோசனமே
நாக விகாசனமே நாத சுகோடணமே
ஞான சபாபதியே ஞான சபாபதியே.

2

5243

தூய சதாகதியே நேய சதாசிவமே
சோம சிகாமணியே வாம உமாபதியே
ஞாய பராகரமே காய புராதரமே
ஞான சபாபதியே ஞான சபாபதியே.

3

5244

ஆரண ஞாபகமே பூரண சோபனமே
ஆதிஅ னாதியனே வேதிய னாதியனே
நாரண னாதரமே காரண மேபரமே
ஞான சபாபதியே ஞான சபாபதியே.

4

5245

ஆகம போதகமே யாதர வேதகமே
ஆமய மோசனமே ஆரமு தாகரமே
நாக நடோ தயமே நாத புரோதயமே
ஞான சபாபதியே ஞான சபாபதியே.

5

5246

ஆடக நீடொளியே நேடக நாடளியே
ஆதி புராதனனே வேதி பராபரனே
நாடக நாயகனே நானவ னானவனே
ஞான சபாபதியே ஞான சபாபதியே.

6

5247

ஆரிய னேசிவனே ஆரண னேபவனே
ஆலய னேஅரனே ஆதர னேசுரனே
நாரிய னேவரனே நாடிய னேபரனே
ஞான சபாபதியே ஞான சபாபதியே.

7

5248

ஆதர வேதியனே ஆடக ஜோதியனே
ஆரணி பாதியனே ஆதர வாதியனே
நாத விபூதியனே நாம வனாதியனே
ஞான சபாபதியே ஞான சபாபதியே.

8

5249

தேவ கலாநிதியே ஜீவ தயாநிதியே
தீன சகாநிதியே சேகர மாநிதியே
நாவல ரோர்பதியே நாரி உமாபதியே
ஞான சபாபதியே ஞான சபாபதியே.

9

5250

ஆடிய நாடகனே ஆலமர் ஆதியனே
ஆகம மேலவனே ஆரண நாலவனே
நாடிய காரணனே நீடிய பூரணனே
ஞான சபாபதியே ஞான சபாபதியே.

10


திருச்சிற்றம்பலம்
Back


119. விரைசேர் சடையாய்

சிந்து

5251.

விரைசேர் சடையாய் விடையாய் உடையாய்
விகிர்தா விபவா விமலா அமலா
வெஞ்சேர்(378) பஞ்சார் நஞ்சார் கண்டா விம்பசி தம்பர னே.

1

(378). வெஞ்சோ - ஆ. பா. பதிப்பு.

5252

அரைசே குருவே அமுதே சிவமே
அணியே மணியே அருளே பொருளே
அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம்பதி யே.

2

5253

உருவே உயிரே உணர்வே உறவே
உரையே பொருளே ஒளியே வெளியே
ஒன்றே என்றே நன்றே தந்தாய் அம்பர(379) நம்பர னே.

3

(379). உம்பரி னம்பரனே - ஆ. பா. பதிப்பு.

5254

அருவே திருவே அறிவே செறிவே
அதுவே இதுவே அடியே முடியே
அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம்பதி யே.

4


திருச்சிற்றம்பலம்
Back


120. ஜோதி ஜோதி

சிந்து

5255.

ஜோதி ஜோதி ஜோதி சுயஞ்
ஜோதி ஜோதி ஜோதி பரஞ்
ஜோதி ஜோதி ஜோதி யருட்
ஜோதி ஜோதி ஜோதி சிவம்.

1

5256

வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி
மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி
ஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி
ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி.

2

5257

ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே
வாதிஞான போதனே வாழ்கவாழ்க நாதனே.

3


திருச்சிற்றம்பலம்
Back


121. கண்புருவப் பூட்டு

தாழிசை

5258.

கையறவி லாதுநடுக் கண்புருவப் பூட்டு

கண்டுகளி கொண்டுதிறந் துண்டுநடு நாட்டு
ஐயர்மிக உய்யும்வகை அப்பர்விளை யாட்டு

ஆடுவதென் றேமறைகள் பாடுவது பாட்டு.

1

5259

சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு

தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு
இற்சமய வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு

என்பிறப்புத் துன்பமெலாம் இன்றோடே போச்சு.

2

5260

ஐயர்அருட் சோதியர சாட்சிஎன தாச்சு

ஆரணமும் ஆகமமும் பேசுவதென் பேச்சு
எய்யுலக வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு

என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.

3

5261

ஈசன்அரு ளால்கடலில் ஏற்றதொரு ஓடம்

ஏறிக்கரை ஏறினேன் இருந்ததொரு மாடம்
தேசுறும்அம் மாடநடுத் தெய்வமணி பீடம்

தீபஒளி கண்டவுடன் சேர்ந்ததுசந் தோடம்.

4

5262

மேருமலை உச்சியில்வி ளங்குகம்ப நீட்சி

மேவும்அதன் மேல்உலகில் வீறுமர சாட்சி
சேரும்அதில் கண்டபல காட்சிகள்கண் காட்சி

செப்பல்அரி தாம்இதற்கென் அப்பன்அருள் சாட்சி.

5

5263

துரியமலைமேல்உளதோர் சோதிவள நாடு

தோன்றும்அதில் ஐயர்நடம் செய்யுமணி வீடு
தெரியும்அது கண்டவர்கள் காணில்உயி ரோடு

செத்தவர் எழுவார்என்று கைத்தாளம் போடு.

6

5264

சொல்லால் அளப்பரிய சோதிவரை மீது

தூயதுரி யப்பதியில் நேயமறை ஓது
எல்லாம்செய் வல்லசித்தர் தம்மைஉறும் போது

இறந்தார்எழுவாரென்றுபுறந்தாரைஊது.

7

5265

சிற்பொதுவும் பொற்பொதுவும் நான்அறிய லாச்சு

சித்தர்களும் முத்தர்களும் பேசுவதென் பேச்சு
இற்பகரும்(380) இவ்வுலகில் என்னைஇனி ஏச்சு

என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.

8

(380). இப்பெரிய விவ்வுலகில் - முதற்பதிப்பு., ச. மு. க. பதிப்பு.

5266

வலதுசொன்ன பேர்களுக்கு வந்ததுவாய்த் தாழ்வு

மற்றவரைச் சேர்ந்தவர்க்கும் வந்ததலைத் தாழ்வு
வலதுபுஜம் ஆடநம்பால் வந்ததருள் வாழ்வு

மற்றுநமைச் சூழ்ந்தவர்க்கும் வந்ததுநல் வாழ்வு.

9

5267

அம்பலத்தில் எங்கள்ஐயர் ஆடியநல் லாட்டம்

அன்பொடுது தித்தவருக் கானதுசொல் லாட்டம்
வம்புசொன்ன பேர்களுக்கு வந்ததுமல் லாட்டம்

வந்ததலை யாட்டமின்றி வந்ததுபல் லாட்டம்.

10

5268

நாத்திகம்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு

நாக்குருசி கொள்ளுவதும் நாறியபிண் ணாக்கு
சீர்த்திபெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்கு

செல்வாக்கு நல்வாக்கு தேவர்திரு வாக்கு.

11

Back


122. ஊதூது சங்கே

தாழிசை

5269.

கைவிட மாட்டான்என்று ஊதூது சங்கே

கனக சபையான்என்று ஊதூது சங்கே
பொய்விடச் செய்தான்என்று ஊதூது சங்கே

பூசைப லித்ததென்று ஊதூது சங்கே.

1

5270

தூக்கம் தொலைத்தான்என்று ஊதூது சங்கே

துன்பம் தவிர்த்தான்என்று ஊதூது சங்கே
ஏக்கம் கெடுத்தான்என்று ஊதூது சங்கே

ஏம சபையான்என்று ஊதூது சங்கே.

2

5271

பொன்னடி தந்தான்என்று ஊதூது சங்கே

பொன்னம் பலத்தான்என்று ஊதூது சங்கே
இன்னல் அறுத்தான்என்று ஊதூது சங்கே

என்னுள் அமர்ந்தான்என்று ஊதூது சங்கே.

3

5272

அச்சம் தவிர்த்தான்என்று ஊதூது சங்கே

அம்பல வாணன்என்று ஊதூது சங்கே
இச்சை அளித்தான்என்று ஊதூது சங்கே

இன்பம் கொடுத்தான்என்று ஊதூது சங்கே.

4

5273

என்உயிர் காத்தான்என்று ஊதூது சங்கே

இன்பம் பலித்ததென்று ஊதூது சங்கே
பொன்உருத் தந்தான்என்று ஊதூது சங்கே

பொற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே.

5

5274

சிவமாக்கிக்கொண்டான்என்று ஊதூது சங்கே

சிற்றம் பலத்தான்என்று ஊதூது சங்கே
நவநோக் களித்தான் என்று ஊதூது சங்கே

நான்அவன் ஆனேன்என்று ஊதூது சங்கே.

6

5275

நாத முடியான்என்று ஊதூது சங்கே

ஞானசபையான்என்று ஊதூது சங்கே
பாத மளித்தான்என்று ஊதூது சங்கே

பலித்தது பூசைஎன்று ஊதூது சங்கே.

7

5276

தெள்ளமு தானான்என்று ஊதூது சங்கே

சிற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே
உள்ளம் உவந்தான்என்று ஊதூது சங்கே

உள்ள துரைத்தான்என்று ஊதூது சங்கே.

8

5277

என்னறி வானான்என்று ஊதூது சங்கே

எல்லாம்செய் வல்லான்என்று ஊதூது சங்கே
செந்நிலை தந்தான்என்று ஊதூது சங்கே

சிற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே.

9

5278

இறவாமை ஈந்தான்என்று ஊதூது சங்கே

எண்ணம் பலித்ததென்று ஊதூது சங்கே
திறமே அளித்தான்என்று ஊதூது சங்கே

சிற்றம் பலத்தான்என்று ஊதூது சங்கே.

10

5279

கரவு தவிர்ந்ததென்று ஊதூது சங்கே

கருணை கிடைத்ததென்று ஊதூது சங்கே
இரவு விடிந்ததென்று ஊதூது சங்கே

எண்ணம் பலித்ததென்று ஊதூது சங்கே.

11

5280

எல்லாம்செய் வல்லான்என்று ஊதூது சங்கே

எல்லார்க்கும் நல்லான்என்று ஊதூது சங்கே
எல்லாம் உடையான்என்று ஊதூது சங்கே

எல்லாமும் ஆனான்என்று ஊதூது சங்கே.

12

5281

கருணா நிதியர்என்று ஊதூது சங்கே

கடவுள் அவனேஎன்று ஊதூது சங்கே
அருள்நா டகத்தான்என்று ஊதூது சங்கே

அம்பலச் சோதிஎன்று ஊதூது சங்கே.

13

5282

தன்னிகர் இல்லான்என்று ஊதூது சங்கே

தலைவன் அவனேஎன்று ஊதூது சங்கே
பொன்னியல் வண்ணன்என்று ஊதூது சங்கே

பொதுநடம் செய்வான்என்று ஊதூது சங்கே.

14

5283

ஆனந்த நாதன்என்று ஊதூது சங்கே

அருளுடை அப்பன்என்று ஊதூது சங்கே
தானந்தம் இல்லான்என்று ஊதூது சங்கே

தத்துவச் சோதிஎன்று ஊதூது சங்கே.

15

5284

பொய்விட் டகன்றேன்என்று ஊதூது சங்கே

புண்ணியன் ஆனேன்என்று ஊதூது சங்கே
மெய்தொட்டு நின்றேன்என்று ஊதூது சங்கே

மேல்வெளி கண்டேன்என்று ஊதூது சங்கே.

16

திருச்சிற்றம்பலம்
Back


123. சின்னம் பிடி

தாழிசை

5285.

அம்பலவர் வந்தார்என்று சின்னம் பிடி

அற்புதம்செய் கின்றார்என்று சின்னம் பிடி
செம்பலன் அளித்தார்என்று சின்னம் பிடி

சித்திநிலை பெற்றதென்று சின்னம் பிடி.

1

5286

சிற்சபையைக் கண்டோ ம்என்று சின்னம் பிடி

சித்திகள்செய் கின்றோம்என்று சின்னம் பிடி
பொற்சபை புகுந்தோம்என்று சின்னம் பிடி

புந்திமகிழ் கின்றோம்என்று சின்னம் பிடி.

2

5287

ஞானசித்திபுரம்என்று சின்னம் பிடி

நாடகம்செய் இடம்என்று சின்னம் பிடி
ஆனசித்தி செய்வோம்என்று சின்னம் பிடி

அருட்சோதி பெற்றோம்என்று சின்னம் பிடி.

3

5288

கொடிகட்டிக்கொண்டோ ம்என்று சின்னம் பிடி

கூத்தாடு கின்றோம்என்று சின்னம் பிடி
அடிமுடியைக் கண்டோ ம்என்று சின்னம் பிடி

அருளமுதம் உண்டோ ம்என்று சின்னம் பிடி.

4

5289

அப்பர்வரு கின்றார்என்று சின்னம் பிடி

அற்புதம்செய் வதற்கென்று சின்னம் பிடி
செப்பநிலை பெற்றதென்று சின்னம் பிடி

சித்திபுரம்இடமென்று சின்னம் பிடி.

5

5290

தானேநான் ஆனேன்என்று சின்னம் பிடி

சத்தியம்சத் தியம்என்று சின்னம் பிடி
ஊனே புகுந்ததென்று சின்னம் பிடி

ஒளிவண்ணம் ஆனதென்று சின்னம் பிடி.

6

5291

வேகாதகால்உணர்ந்து சின்னம் பிடி

வேகாத நடுத்தெரிந்து சின்னம் பிடி
சாகாததலைஅறிந்து சின்னம் பிடி

சாகாத கல்விகற்றுச் சின்னம் பிடி.

7

5292

மீதான நிலைஏறிச் சின்னம் பிடி

வெட்டவெளி நடுநின்று சின்னம் பிடி
வேதாக மம்கடந்து சின்னம் பிடி

வேதாந்தச் சித்தாந்த சின்னம் பிடி.

8

5293

பன்மார்க்க மும்கடந்து சின்னம் பிடி

பன்னிரண்டின் மீதுநின்று சின்னம் பிடி
சன்மார்க்கம் மார்க்கம்என்று சின்னம் பிடி

சத்தியம்செய் கின்றோம்என்று சின்னம் பிடி.

9

5294

சித்தாடு கின்றார்என்று சின்னம் பிடி

செத்தார் எழுவார்என்று சின்னம் பிடி
இத்தா ரணியில்என்று சின்னம் பிடி

இதுவே தருணம்என்று சின்னம் பிடி.

10


திருச்சிற்றம்பலம்
Back


124. முரசறைதல்

தாழிசை

5295.

அருட்சோதி ஆனேன்என்று அறையப்பா முரசு

அருளாட்சி பெற்றேன்என்று அறையப்பா முரசு
மருட்சார்பு தீர்ந்தேன்என்று அறையப்பா முரசு

மரணந்த விர்ந்தேன்என்று அறையப்பா முரசு.

1


திருச்சிற்றம்பலம்
Back


125. தனித் திருஅலங்கல் (381)


ஆன்மநேய ஒருமைப்பாடு (382)

(382). இஃதும் இதுபோன்று பின்வரும் சிறுதலைப்புகளும் யாம் இட்டவை.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

5296.

எவ்வுயிரும் பொதுஎனக்கண் டிரங்கிஉப

கரிக்கின்றார் யாவர் அந்தச்
செவ்வியர்தம் செயல்அனைத்தும் திருவருளின்

செயல்எனவே தெரிந்தேன் இங்கே
கவ்வைஇலாத் திருநெறிஅத் திருவாளர்

தமக்கேவல் களிப்பால் செய்ய
ஒவ்வியதென் கருத்தவர்சீர் ஓதிடஎன்

வாய்மிகவும் ஊர்வ தாலோ.

1

5297

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்

தம்உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்

யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்

இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்

சிந்தைமிக விழைந்த தாலோ.

2

5298

கருணைஒன்றே வடிவாகி எவ்வுயிரும்

தம்உயிர்போல் கண்டு ஞானத்
தெருள்நெறியில் சுத்தசிவ சன்மார்க்கப்

பெருநீதி செலுத்தா நின்ற
பொருள்நெறிசற் குணசாந்தப் புண்ணியர்தம்

திருவாயால் புகன்ற வார்த்தை
அருள்நெறிவே தாகமத்தின் அடிமுடிசொல்

வார்த்தைகள்என் றறைவ ராலோ.

1

சாலையப்பனை வேண்டல்

கொச்சகக் கலிப்பா

5299

மன்னப்பா மன்றிடத்தே மாநடஞ்செய் அப்பாஎன்
தன்னப்பா சண்முகங்கொள் சாமியப்பா எவ்வுயிர்க்கும்
முன்னப்பா பின்னப்பா மூர்த்தியப்பா மூவாத
பொன்னப்பா ஞானப் பொருளப்பா தந்தருளே.

1

கட்டளைக் கலித்துறை

5300

ஆதிஅப் பாநம் அனாதியப் பாநங்கள் அம்மைஒரு
பாதிஅப் பாநிரு பாதிஅப் பாசிவ பத்தர்அனு
பூதிஅப் பாநல் விபூதிஅப் பாபொற் பொதுநடஞ்செய்
சோதிஅப் பாசுயஞ் சோதிஅப் பாஎனைச் சூழ்ந்தருளே.

5

5301

அண்டஅப் பாபகிர் அண்டஅப் பாநஞ் சணிந்தமணி
கண்டஅப் பாமுற்றும் கண்டஅப் பாசிவ காமிஎனும்
ஒண்தவப் பாவையைக் கொண்டஅப் பாசடை ஓங்குபிறைத்
துண்டஅப் பாமறை விண்டஅப் பாஎனைச் சூழ்ந்தருளே.

6

5302

வேலைஅப் பாபடை வேலைஅப் பாபவ வெய்யிலுக்கோர்
சோலைஅப் பாபரஞ் சோதிஅப் பாசடைத் துன்றுகொன்றை
மாலைஅப் பாநற் சமரச வேதசன் மார்க்கசங்கச்
சாலைஅப் பாஎனைத் தந்தஅப் பாவந்து தாங்கிக்கொள்ளே.

7

5303

மெச்சிஅப் பாவலர் போற்றப் பொதுவில் விளங்கியஎன்
உச்சிஅப் பாஎன் னுடையஅப் பாஎன்னை உற்றுப்பெற்ற
அச்சிஅப் பாமுக்கண் அப்பாஎன் ஆருயிர்க் கானஅப்பா
கச்சிஅப் பாதங்கக் கட்டிஅப் பாஎன்னைக் கண்டுகொள்ளே.

8

5304

எக்கரை யும்மின்றி ஓங்கும் அருட்கடல் என்றுரைக்கோ
செக்கரை வென்றபொன் என்கோ படிகத் திரளதென்கோ
திக்கரை அம்பரன் என்கோஎன் உள்ளத்தில் தித்திக்கின்ற
சக்கரைக் கட்டிஎன் கோநினைத் தான்மன்றில் தாண்டவனே.

9

5305

ஒட்டிஎன் கோதறுத் தாட்கொண் டனைநினை ஓங்கறிவாம்
திட்டிஎன் கோஉயர் சிற்றம் பலந்தனில் சேர்க்கும்நல்ல
வெட்டிஎன் கோஅருட் பெட்டியில் ஓங்கி விளங்கும்தங்கக்
கட்டிஎன் கோபொற் பொதுநடஞ் செய்யுமுக் கண்ணவனே.

1

மாயை நீக்கம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5306

அருட்பெருங் கடலே என்னை ஆண்டசற் குருவே ஞானப்
பொருட்பெருஞ் சபையில் ஆடும் பூரண வாழ்வே நாயேன்
மருட்பெரு மாயை முற்றும் மடிந்தன வினைக ளோடே
இருட்பெருந் தடையை நீக்கி இரவியும் எழுந்த தன்றே.

11

5307

மாணவ நிலைக்கு மேலே வயங்கிய ஒளியே மன்றில்
தாணவ நடஞ்செய் கின்ற தனிப்பெருந் தலைவ னேஎன்
கோணவ மாயை எல்லாம் குலைந்தன வினைக ளோடே
ஆணவ இருளை நீக்கி அலரியும் எழுந்த தன்றே.

12

5308

தற்பரம் பொருளே வேதத் தலைநின்ற ஒளியே மோனச்
சிற்பர சுகமே மன்றில் திருநடம் புரியுந் தேவே
வற்புறு மாயை எல்லாம் மடிந்தன வினைக ளோடே
இற்படும் இருளை நீக்கி இரவியும் எழுந்த தன்றே.

13

சிதம்பரேசன் அருள்

கலி விருத்தம்

5309

சிற்றறி வுடையநான் செய்த தீமைகள்
முற்றவும் பொறுத்தருள் முனிந்திடேல் இன்றே
தெற்றென அருட்பெருஞ் சோதிச் செல்வமும்
மற்றவும் வழங்குக வரதனே என்றேன்.

14

5310

என்றசொல் செவிமடுத் திறையும் அஞ்சிடேல்
இன்றுனக் கருட்பெருஞ் சோதி ஈந்தனம்
நன்றுற மகிழ்கஎந் நாளுஞ் சாவுறா
வென்றியும் அளித்தனம் என்று மேவினான்.

15

5311

மேவிஎன் உள்ளகத் திருந்து மேலும்என்
ஆவியிற் கலந்திவன் அவன்என் றோதும்ஓர்
பூவியற் பேதமும் போக்கி ஒன்றதாய்த்
தேவியற் புரிந்தனன் சிதம்ப ரேசனே.

16

போற்றிச் சந்த விருத்தம்

சந்த விருத்தம்

5312

போற்றி நின்அருள் போற்றி நின்பொது
போற்றி நின்புகழ் போற்றி நின்உரு
போற்றி நின்இயல் போற்றி நின்நிலை
போற்றி நின்நெறி போற்றி நின்சுகம்
போற்றி நின்உளம் போற்றி நின்மொழி
போற்றி நின்செயல் போற்றி நின்குணம்
போற்றி நின்முடி போற்றி நின்நடு
போற்றி நின்அடி போற்றி போற்றியே.

17

5313

போற்றி நின்இடம் போற்றி நின்வலம்
போற்றி நின்நடம் போற்றி நின்நலம்
போற்றி நின்திறம் போற்றி நின்தரம்
போற்றி நின்வரம் போற்றி நின்கதி
போற்றி நின்கலை போற்றி நின்பொருள்
போற்றி நின்ஒளி போற்றி நின்வெளி
போற்றி நின்தயை போற்றி நின்கொடை
போற்றி நின்பதம் போற்றி போற்றியே.

18

5314

போற்று கின்றஎன் புன்மை யாவையும்

பொறுத்த நின்பெரும் பொறுமை போற்றிஎன்
ஆற்று வேன்உனக் கறிகி லேன்எனக்

கறிவு தந்தபே ரறிவ போற்றிவான்
காற்று நீடழல் ஆதி ஐந்துநான்

காணக் காட்டிய கருத்த போற்றிவன்
கூற்று தைத்துநீத் தழிவி லாஉருக்

கொள்ள வைத்தநின் கொள்கை போற்றியே.

19

பாடமும் படிப்பும்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5315

அம்பலம் சேர்ந்தேன் எம்பலம் ஆர்ந்தேன்

அப்பனைக் கண்டேன் செப்பமுட் கொண்டேன்
உம்பர் வியப்ப இம்பர் இருந்தேன்

ஓதா துணர்ந்தேன் மீதானம் உற்றேன்
நம்பிடில் அணைக்கும் எம்பெரு மானை

நாயகன் தன்னைத் தாயவன் தன்னைப்
பம்புறப் பாடிப் படிக்கின்றேன் மேலும்

படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.

20

5316

கள்ளத்தை அற்ற உள்ளத்தைப் பெற்றேன்

கன்றிக் கனிந்தே மன்றில் புகுந்தேன்
தெள்ளத் தெளிந்த வெள்ளத்தை உண்டேன்

செய்வகை கற்றேன் உய்வகை உற்றேன்
அள்ளக் குறையா வள்ளற் பொருளை

அம்பலச் சோதியை எம்பெரு வாழ்வை
பள்ளிக்குட் பாடிப் படிக்கின்றேன் மேலும்

படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.

21

5317

காட்டைக் கடந்தேன் நாட்டை அடைந்தேன்

கவலை தவிர்ந்தேன் உவகை மிகுந்தேன்
வீட்டைப் புகுந்தேன் தேட்டமு துண்டேன்

வேதாக மத்தின் விளைவெலாம் பெற்றேன்
ஆட்டைப் புரிந்தே அம்பலத் தோங்கும்

ஐயர் திருவடிக் கானந்த மாகப்
பாட்டைப் படித்தேன் படிக்கின்றேன் மேலும்

படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.

22

பாட்டும் திருத்தமும்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5318

தேன்பாடல் அன்புடையார் செயப்பொதுவில் நடிக்கின்ற சிவமே ஞானக்
கான்பாடிச் சிவகாம வல்லிமகிழ் கின்றதிருக் கணவா நல்ல
வான்பாட மறைபாட என்னுளத்தே வயங்குகின்ற மன்னா நின்னை
யான்பாட நீதிருத்த என்னதவஞ் செய்தேனோ எந்தாய் எந்தாய்.

23

5319

ஆன்பாலும் நறுந்தேனும் சர்க்கரையும் கூட்டியதெள் ளமுதே என்றன்
ஊன்பாலும் உளப்பாலும் உயிர்ப்பாலும் ஒளிர்கின்ற ஒளியே வேதம்
பூம்பாடல் புனைந்தேத்த என்னுளத்தே ஆடுகின்ற பொன்னே நின்னை
யான்பாட நீதிருத்த என்னதவஞ் செய்தேனோ எந்தாய் எந்தாய்.

24

அம்பலத்தரசே அபயம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5320

பொருட்பெருந் தனிமெய்ப் போகமே என்னைப்

புறத்தினும் அகத்தினும் புணர்ந்த
தெருட்பெருஞ் சிவமே சுத்தசன் மார்க்கச்

செல்வமே நான்பெற்ற சிறப்பே
மருட்பெருங் கடலைக் கடத்திஎன் தன்னை

வாழ்வித்த என்பெரு வாழ்வே
அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே

அம்மையே அப்பனே அபயம்.

25

5321

பொருட்பெரு மறைகள் அனந்தம்ஆ கமங்கள்

புகலும்ஓர் அனந்தம்மேற் போந்த
தெருட்பெரு வெளிமட் டளவிலாக் காலம்

தேடியும் காண்கிலாச் சிவமே
மருட்பெரும் பகைதீர்த் தென்னைஆட் கொண்ட

வள்ளலே தெள்ளிய அமுதே
அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே

அம்மையே அப்பனே அபயம்.

26

5322

பொருட்பெருஞ் சுடர்செய் கலாந்தயோ காந்தம்

புகன்றபோ தாந்த நாதாந்தம்
தெருட்பெரு வேதாந் தம்திகழ் சித்தாந்

தத்தினும் தித்திக்கும் தேனே
மருட்பெரு இருளைத் தீர்த்தெனை வளர்க்கும்

மாபெருங் கருணையா ரமுதே
அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே

அம்மையே அப்பனே அபயம்.

27

அருட்பெருஞ்சோதி அபயம்

நேரிசை வெண்பா

5323

அருட்பெருஞ் சோதி அபயம் அபயம்
அருட்பெருஞ் சோதி அபயம் - அருட்பெருஞ்
சோதி அபயம்சிற் சோதி அபயம்பொற்
சோதி அபயம் துணை.

28

5324

துணைவா அபயம் துயர்அகல என்பால்
அணைவா அபயம் அபயம் - பணைவாய்
வடலா அபயம் வரதா அபயம்
நடநாய காஅபயம் நான்.

29

5325

நானாகித் தானாய் நடித்தருள்கின் றாய்அபயம்
தேனாய் இனிக்கும் சிவஅபயம் - வானாடு
மெய்யா அபயம் விமலா அபயமென்றன்
ஐயா அபயமப யம்.

30

5326

அபயம் பதியே அபயம் பரமே
அபயம் சிவமே அபயம் - உபய
பதத்திற் கபயம் பரிந்தென்உளத் தேநல்
விதத்தில் கருணை விளை.

31

5327

கருணா நிதியே அபயம் கனிந்த
அருணா டகனே அபயம் - மருணாடும்
உள்ளக் கவலை ஒழிப்பாய்என் வன்மனத்துப்
பொள்ளற் பிழைகள் பொறுத்து.

32

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5328

இணக்கறியீர் இதம்அறியீர் இருந்தநிலை அறியீர்

இடம்அறியீர் தடம்அறியீர் இவ்வுடம்பை எடுத்த
கணக்கறியீர் வழக்கறியீர் அம்பலத்தே மாயைக்

கலக்கம்அற நடிக்கின்ற துலக்கம்அறி வீரோ
பிணக்கறிவீர் புரட்டறிவீர்(383) பிழைசெயவே அறிவீர்

பேருணவைப் பெருவயிற்றுப் பிலத்தில்இட அறிவீர்
மணக்கறியே பிணக்கறியே வறுப்பேபேர்ப் பொரிப்பே

வடைக்குழம்பே சாறேஎன் றடைக்க அறிவீரே.

33

(383). பிரட்டறிவீர் - பொ. சு. பதிப்பு.

5329

உழக்கறியீர் அளப்பதற்கோர் உளவறியீர் உலகீர்

ஊர்அறியீர் பேர்அறியீர் உண்மைஒன்றும் அறியீர்
கிழக்கறியீர் மேற்கறியீர் அம்பலத்தே மாயைக்

கேதம்அற நடிக்கின்ற பாதம்அறி வீரோ
வழக்கறிவீர் சண்டையிட்டே வம்பளக்க அறிவீர்

வடிக்கும்முன்னே சோறெடுத்து வயிற்றடைக்க அறிவீர்
குழக்கறியே(384) பழக்கறியே கூட்டுவர்க்கக் கறியே

குழம்பேசா றேஎனவும் கூறஅறி வீரே.

34

(384). குழைக்கறியே - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா., ச. மு. க.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5330

உணிக்கும் மூட்டுக்கும் கொதுகுக்கும்

பேனுக்கும் உவப்புறப் பசிக்கின்றீர்
துணிக்கும் காசுக்கும் சோற்றுக்கும்

ஊர்தொறும் சுற்றிப்போய் அலைகின்றீர்
பிணிக்கும் பீடைக்கும் உடலுளம்

கொடுக்கின்றீர் பேதையீர் நல்லோர்கள்
பணிக்கும் வேலைசெய் துண்டுடுத்

தம்பலம் பரவுதற் கிசையீரே.

35

5331

மழவுக்கும் ஒருபிடிசோ றளிப்பதன்றி

இருபிடிஊண் வழங்கில் இங்கே
உழவுக்கு முதல்குறையும் எனவளர்த்தங்

கவற்றைஎலாம் ஓகோ பேயின்
விழவுக்கும் புலால்உண்ணும் விருந்துக்கும்

மருந்துக்கும் மெலிந்து மாண்டார்
இழவுக்கும் இடர்க்கொடுங்கோல் இறைவரிக்கும்

கொடுத்திழப்பர் என்னே என்னே.

36

5332

கடுகாட்டுக் கறிக்கிடுக தாளிக்க

எனக்கழறிக் களிக்கா நின்ற
சுடுகாட்டுப் பிணங்காள்இச் சுகமனைத்தும்

கணச்சுகமே சொல்லக் கேண்மின்
முடுகாட்டுக் கூற்றுவரும் சாவீரால்

சாவதற்கு முன்னே நீவீர்
இடுகாட்டுப்பிணங்கண்டால் ஏத்துமினோ

எமையும்இவ்வா றிடுகஎன்றே.

37

5333

மதிப்பாலை அருட்பாலை ஆனந்தப்

பாலைஉண்ண மறந்தார் சில்லோர்
விதிப்பாலை அறியேம்தாய்ப் பாலைஉண்டு

கிடந்தழுது விளைவிற் கேற்பக்
கொதிப்பாலை உணர்வழிக்கும் குடிப்பாலை

மடிப்பாலைக் குடிப்பார்அந்தோ
துதிப்பாலை அருள்தருநம் தேவசிகா

மணித்தேவைத் துதியார் அன்றே.

38

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5334

சிரிப்பிலே பொழுது கழிக்கும்இவ் வாழ்க்கைச்

சிறியவர் சிந்தைமாத் திரமோ
பொருப்பிலே தவஞ்செய் பெரியர்தம் மனமும்

புளிப்பிலே துவர்ப்பிலே உவர்ப்புக்
கரிப்பிலே கொடிய கயப்பிலே கடிய

கார்ப்பிலே கார்ப்பொடு கலந்த
எரிப்பிலே புகுவ தன்றிஎள் அளவும்

இனிப்பிலே புகுகின்ற திலையே.

39

கலிநிலைத்துறை

5335

பூவார் கொன்றைச் செஞ்சடை யாளர் புகழாளர்
ஈவார் போல்வந் தென்மனை புக்கார் எழில்காட்டி
தேவார் தில்லைச் சிற்சபை மேவும் திருவாளர்
ஆவா என்றார் என்னடி அம்மா அவர்சூதே.

40

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5336

நல்வினை சிறிதும் நயந்திலேன் என்பாள்

நான்செயத் தக்கதே தென்பாள்
செல்வினை ஒன்றுந் தெரிந்திலன் ஐயோ

தெய்வமே தெய்வமே என்பாள்
வெல்வினை மன்றில் நடம்புரி கின்றார்

விருப்பிலர் என்மிசை என்பாள்
வல்வினை உடையேன் என்றுளம் பதைப்பாள்

வருந்துவாள் நான்பெற்ற மகளே.

41

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5337

நாதரருட் பெருஞ்சோதி நாயகர்என் தனையே

நயந்துகொண்ட தனித்தலைவர் ஞானசபா பதியார்
வாதநடம் புரிகருணை மாநிதியார் வரதர்

வள்ளல்எலாம் வல்லவர்மா நல்லவர்என் இடத்தே
காதலுடன் வருகின்றார் என்றுபர நாதம்

களிப்புறவே தொனிக்கின்ற தந்தரதுந் துபிதான்
ஏதமற முழங்குகின்ற தென்றுசொல்லிக் கொண்டே

எழுகின்றாள் தொழுகின்றாள் என்னுடைய மகளே.

42

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

33

5338.

அன்பாடு திருப்பொதுவில் ஆடுகின்ற

அரசேநின் அடிமேல் ஆணை
என்பாடென் றிலைஎன்னால் துரும்பும்அசைத்

திடமுடியா திதுகால் தொட்டுப்
பொன்பாடெவ் விதத்தானும் புரிந்துகொண்டு

நீதானே புரத்தல் வேண்டும்
உன்பாடு நான்உரைத்தேன் நீஇனிச்சும்

மாஇருக்க ஒண்ணா தண்ணா.

43

5339.

முன்பாடு பின்பயன்தந் திடும்எனவே

உரைக்கின்றோர் மொழிகள் எல்லாம்
இன்பாடும் இவ்வுலகில் என்னறிவில்

இலைஅதனால் எல்லாம் வல்லோய்
அன்பாடு திருப்பொதுவில் ஆடுகின்றோய்

அருட்சோதி அளித்துக் காத்தல்
உன்பாடு நான்உரைத்தேன் எனக்கொருபா

டுண்டோ நீ உரைப்பாய் அப்பா.

44

5340..

உன்ஆணை உன்னைவிட உற்றதுணை

வேறிலைஎன் உடையாய் அந்தோ
என்நாணைக் காத்தருளி இத்தினமே

அருட்சோதி ஈதல் வேண்டும்
அந்நாள்நை யாதபடி அருள்புரிந்த

பெருங்கருணை அரசே என்னை
முன்னாள்நின் அடியவன்என் றுலகறிந்த

இந்நாள்என் மொழிந்தி டாதே.

45

5341.

தூங்காதே விழித்திருக்கும் சூதறிவித்

தெனைஆண்ட துரையே என்னை
நீங்காதே என்னுயிரில் கலந்துகொண்ட

பதியேகால் நீட்டிப் பின்னே
வாங்காதே விரைந்திவண்நீ வரல்வேண்டும்

தாழ்த்திடில்என் மனந்தான் சற்றும்
தாங்காதே இதுநினது தனித்ததிரு

வுளமறிந்த சரிதம் தானே.

46

5342.

இயங்காளி புலிகரடி எனப்பெயர்கேட்

டுளம்நடுங்கி இருந்தேன் ஊரில்
சயங்காளிக் கோயிலைக்கண் டஞ்சிமனம்

தழுதழுத்துத் தளர்ந்தேன் இந்தப்
பயங்காளிப் பயல்போலப் பயந்தவர்கள்

எங்குளர்காண் பதியே என்னை
வயங்காளில் ஒருவன்என நினையேல்கைப்

பிள்ளைஎன மதித்தி டாயே.

47

5343.

சிறுசெயலைச் செயும்உலகச் சிறுநடையோர்

பலபுகலத் தினந்தோ றுந்தான்
உறுசெயலை அறியாஇச் சிறுபயலைப்

பிடித்தலைத்தல் உவப்போ கண்டாய்
தெறுசெயலைத் தவிர்த்தெல்லாச் சித்தியும்பெற்

றிடஅழியாத் தேகன் ஆகப்
பெறுசெயலை எனக்களித்தே மறுசெயலைப்

புரிகஎனைப் பெற்ற தேவே.

48

கலிநிலைத்துறை

5344

அங்கே உன்றன் அன்பர்கள் எல்லாம் அமர்கின்றார்
இங்கே நீதான் என்னள வின்னும் இரங்காயேல்
எங்கே போகேன் யாரொடு நோகேன் எதுசெய்கேன்
செங்கேழ் வேணித் திங்கள் அணிந்தருள் சிவனேயோ.

49

5345

ஈயோ டுறழும் சிறியேன் அளவில் எந்தாய்நின்
சேயோ டுறழும் பேரருள் வண்ணத் திருவுள்ளம்
காயோ பழமோ யாதோ அறியேன் கவல்கின்றேன்
தீயோ டுறழும் திருவருள் வடிவச் சிவனேயோ.

50

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5346

உடைய நாயகன் பிள்ளைநான்

ஆகில்எவ் வுலகமும் ஒருங்கின்பம்
அடைய நான்அருட் சோதிபெற்

றழிவிலா யாக்கைகொண் டுலகெல்லாம்
மிடைய அற்புதப் பெருஞ்செயல்

நாடொறும் விளைத்தெங்கும் விளையாடத்
தடைய தற்றநல் தருணம்இத்

தருணமாத் தழைக்கஇத் தனியேற்கே.

51

5347

கோது கொடுத்த மனச்சிறியேன்

குற்றம் குணமாக் கொண்டேஇப்
போது கொடுத்த நின்அருளாம்

பொருளை நினைக்கும் போதெல்லாம்
தாது கொடுத்த பெருங்களிப்பும்

சாலா தென்றால் சாமிநினக்
கேது கொடுப்பேன் கேட்பதன்முன்

எல்லாம் கொடுக்க வல்லாயே.

52

5348

கன்றுடைய பசுப்போலே கசிந்துருகும்

அன்பரெலாம் காணக் காட்டும்
என்றுடைய நாயகனே எல்லாஞ்செய்

வல்லவனே இலங்குஞ் சோதி
மன்றுடைய மணவாளா மன்னவனே

என்னிருகண் மணியே நின்னை
அன்றுடையேன் இன்றுவிடேன் ஆணைஉன்மேல்

ஆணைஉன்மேல் ஆணை ஐயா.

53

5349

திருநி லைத்துநல் அருளொடும்

அன்பொடும் சிறப்பொடும் செழித்தோங்க
உருநி லைத்திவண் மகிழ்வொடு

வாழ்வுற உவந்துநின் அருள்செய்வாய்
இருநி லத்தவர் இன்புறத்

திருவருள் இயல்வடி வொடுமன்றில்
குருநி லைத்தசற் குருஎனும்

இறைவநின் குரைகழற் பதம்போற்றி.

54

5350

குற்றம் புரிதல் எனக்கியல்பே

குணமாக் கொள்ளல் உனக்கியல்பே
சிற்றம் பலவா இனிச்சிறியேன்

செப்பும் முகமன் யாதுளது
தெற்றென் றடியேன் சிந்தைதனைத்

தெளிவித் தச்சந் துயர்தீர்த்தே
இற்றைப் பொழுதே அருட்சோதி

ஈக தருணம் இதுவாமே.

55

5351

அருளா ரமுதே என்னுடைய

அன்பே என்றன் அறிவேஎன்
பொருளாய் அகத்தும் புறத்தும்என்னைப்

புணர்ந்த கருணைப் பொருப்பேமெய்த்
தெருளாம் ஒளியே வெளியாகச்

சிற்றம் பலத்தே நடிக்கின்றோய்
இருளா யினஎல் லாம்தவிர்த்தென்

எண்ணம் முடிப்பாய் இப்போதே.

56

5352

மந்திரம் அறியேன் மற்றை

மணிமருந் தறியேன் வேறு
தந்திரம் அறியேன் எந்தத்

தகவுகொண் டடைவேன் எந்தாய்
இந்திரன் முதலாம் தேவர்

இறைஞ்சப்பொன் மன்றில் வேணிச்
சந்திரன் ஆட இன்பத்

தனிநடம் புரியும் தேவே.

57

5353.

கருணைக் கடலே அதில்எழுந்த

கருணை அமுதே கனியமுதில்
தருணச் சுவையே சுவைஅனைத்தும்

சார்ந்த பதமே தற்பதமே
பொருண்மெய்ப் பரமே சிதம்பரமாம்

பொதுவில் நடிக்கும் பரம்பரமே
தெருண்மெய்க் கருத்தில் கலந்தெனையும்

சித்தி நிலைகள் தெரித்தருளே.

58

5354.

கலக்கம் அற்றுநான் நின்றனைப்

பாடியே களிக்கின்ற நாள்எந்நாள்
இலக்கம் உற்றறிந் திடஅருள்

புரிகுவாய் எந்தைஇவ் விரவின்கண்
துலக்க முற்றசிற் றம்பலத்

தாடுமெய்ச் சோதியே சுகவாழ்வே
அலக்கண் அற்றிடத் திருவருள்

புரியும்என் அப்பனே அடியேற்கே.

59

கட்டளைக் கலிப்பா

5355

பண்டு நின்திருப் பாதம லரையே

பாடி யாடிய பத்திமை யோரைப்போல்
தொண்டு கொண்டெனை ஆண்டனை இன்றுதான்

துட்டன் என்றுது ரத்திடல் நன்றுகொல்
குண்டு நீர்க்கடல் சூழுல கத்துளோர்

குற்றம் ஆயிரங் கோடிசெய் தாலும்முன்
கொண்டு பின்குலம் பேசுவ ரோஎனைக்

குறிக்கொள் வாய்எண் குணந்திகழ் வள்ளலே.

60

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5356

கண்ணெலாம் நிரம்பப் பேரொளி காட்டிக்

கருணைமா மழைபொழி முகிலே

விண்ணெலாம் நிறைந்த விளக்கமே என்னுள்
மேவிய மெய்ம்மையே மன்றுள்
எண்ணெலாம் கடந்தே இலங்கிய பதியே

இன்றுநீ ஏழையேன் மனத்துப்
புண்ணெலாம் தவிர்த்துப் பொருளெலாம் கொடுத்துப்

புகுந்தென துளங்கலந் தருளே.

61

5357

அன்பிலேன் எனினும் அறிவிலேன் எனினும்

அன்றுவந் தாண்டனை அதனால்
துன்பிலேன் எனஇவ் வுலகெலாம் அறியச்

சொல்லினேன் சொல்லிய நானே
இன்பிலேன் எனஇன் றுரைத்திடல் அழகோ

எனைஉல கவமதித் திடில்என்
என்பிலே கலந்தாய் நினக்கும்வந் திடுமே

எய்துக விரைந்தென திடத்தே.

62

கட்டளைக் கலித்துறை

5358

வான்வேண்டு சிற்றம் பலத்தே வயங்கி வளரமுதத்
தேன்வேண்டி னேன்இத் தருணத் தருள்செய்க செய்திலையேல்
ஊன்வேண்டும் என்னுயிர் நீத்துநின் மேற்பழி யோவிளைப்பேன்
நான்வேண்டு மோபழி தான்வேண்டு மோசொல்க நாயகனே.

63

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5359

செவ்வணத் தவரும் மறையும்ஆ கமமும்

தேவரும் முனிவரும் பிறரும்
இவ்வணத் ததுஎன் றறிந்திடற் கரிதாம்

எந்தைநின் திருவருள் திறத்தை
எவ்வணத் தறிவேன் எங்ஙனம் புகல்வேன்

என்தரத் தியலுவ தேயோ
ஒவ்வணத் தரசே எனக்கென இங்கோர்

உணர்ச்சியும் உண்டுகொல் உணர்த்தே.

64

5360

உணர்ந்துணர்ந் தாங்கே உணர்ந்துணர்ந் துணரா

உணர்ந்தவர் உணர்ச்சியான் நுழைந்தே
திணர்ந்தனர் ஆகி வியந்திட விளங்கும்

சிவபதத் தலைவநின் இயலைப்
புணர்ந்தநின் அருளே அறியும்நான் அறிந்து

புகன்றிடும் தரஞ்சிறி துளனோ
கொணர்ந்தொரு பொருள்என் கரங்கொளக் கொடுத்த

குருஎனக் கூறல்என் குறிப்பே.

65

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5361

அயலறியேன் நினதுமலர் அடிஅன்றிச் சிறிதும்

அம்பலத்தே நிதம்புரியும் ஆனந்த நடங்கண்
டுயலறியேன் எனினும்அது கண்டுகொளும் ஆசை

ஒருகடலோ எழுகடலோ உரைககவொணா துடையேன்
மயலறியா மனத்தமர்ந்த மாமணியே மருந்தே

மதிமுடிஎம் பெருமான்நின் வாழ்த்தன்றி மற்றோர்
செயலறியேன் எனக்கருளத் திருவுளஞ்செய் திடுவாய்

திருஎழுத்தைந் தாணைஒரு துணைசிறிதிங் கிலனே.

66

5362

கொழுந்தேனும் செழும்பாகும் குலவுபசும் பாலும்

கூட்டிஉண்டாற் போல்இனிக்குங் குணங்கொள்சடைக் கனியே
தொழுந்தேவ மடந்தையர்க்கு மங்கலநாண் கழுத்தில்

தோன்றவிடம் கழுத்தினுளே தோன்றநின்ற சுடரே
எழுந்தேறும் அன்பருளத் தேற்றுதிரு விளக்கே

என்உயிர்க்குத் துணையேஎன் இருகண்ணுள் மணியே
அழுந்தேற அறியாதென் அவலநெஞ்சம் அந்தோ

அபயம்உனக் கபயம்எனை ஆண்டருள்க விரைந்தே.

67

5363

என்னால்ஓர் துரும்பும்அசைத் தெடுக்கமுடி யாதே

எல்லாஞ்செய் வல்லவன்என் றெல்லாரும் புகலும்
நின்னால்இவ் வுலகிடைநான் வாழ்கின்றேன் அரசே

நின்அருள்பெற் றழியாத நிலையைஅடைந் திடஎன்
தன்னால்ஓர் சுதந்தரமும் இல்லைகண்டாய் நினது

சகலசுதந் தரத்தைஎன்பால் தயவுசெயல் வேண்டும்
பின்நாள்என் றிடில்சிறிதும் தரித்திருக்க மாட்டேன்

பேராணை உரைத்தேன்என் பேராசை இதுவே.

68

5364

இச்சைஎலாம் புகன்றேன்என் இலச்சைஎலாம் விடுத்தேன்

இனிச்சிறிதும் தரியேன்இங் கிதுதருணத் தடைந்தே
அச்சைஎலாம் வெளிப்படுத்தி அச்சம்எலாம் அகற்றி

அருட்சோதித் தனிஅரசே ஆங்காங்கும் ஓங்க
விச்சைஎலாம் எனக்களித்தே அவிச்சைஎலாம் தவிர்த்து

மெய்யுறஎன் னொடுகலந்து விளங்கிடுதல் வேண்டும்
பச்சைஎலாம் செம்மைஎலாம் பொன்மைஎலாம் படர்ந்த

படிகமணி விளக்கேஅம் பலம்விளங்கும் பதியே.

69

5365

தருவகைஇத் தருணம்நல்ல தருணம்இதில் எனக்கே

தனித்தஅருட் பெருஞ்சோதி தந்தருள்க இதுதான்
ஒருவகைஈ திலைஎனில்வே றொருவகைஎன் னுடைய

உடல்உயிரை ஒழித்திடுக உவப்பினொடே இந்த
இருவகையும் சம்மதமே திருவடிசாட் சியதாய்

இயம்பினன்என் இதயம்உன்றன் இதயம்அறிந் ததுவே
அருவகையோ உருவகையும் ஆகிஎன்னுள் அமர்ந்தாய்

அம்மேஎன் அப்பாஎன் அய்யாஎன் அரசே.

70

5366

வருமுன் வந்ததாக் கொள்ளுதல் எனக்கு

வழக்கம் வள்ளல்நீ மகிழ்ந்தருட் சோதி
தருமுன் தந்தனை என்றிருக் கின்றேன்

தந்தை நீதரல் சத்தியம் என்றே
குருமுன் பொய்யுரை கூறலேன் இனிஇக்

குவலை யத்திடைக் கவலையைத் தரியேன்
திருமுன் விண்ணப்பம் செய்தனன் கருணை

செய்க வாழ்கநின் திருவருட் புகழே. .

71

5367

வினைத்தடைதீர்த் தெனைஆண்ட மெய்யன்மணிப் பொதுவில்

மெய்ஞ்ஞான நடம்புரிந்து விளங்குகின்ற விமலன்
எனைத்தனிவைத் தருளொளிஈந் தென்னுள்இருக் கின்றான்

எல்லாஞ்செய் வல்லசித்தன் இச்சையருட் சோதி
தினைத்தனைபெற் றவரேனும் சாலுமுன்னே உலகில்

செத்தவர்கள் எல்லாரும் திரும்பவரு கென்று
நினைத்தவுடன் எதிர்வந்து நிற்பர்கண்டாய் எனது

நெஞ்சேநீ அஞ்சேல்உள் அஞ்சேல்அஞ் சேலே. .

72

குறட்டாழிசை.

5368

அணியே எனதுமெய் யறிவே பொதுவளர் அரசே திருவளர் அமுதே
இனிதருள் வாய்இது தருணம் அமுதரு ளாய்இது தருணம்
மணியே எனதுகண் மணியே பொதுவளர் மதியே திருவருண் மதியே
அருள்புரி வாய்இது தருணம் அருள்புரி வாய்இது தருணம். .

73

நேரிசை வெண்பா.

5369

இதுவே தருணம் எனைஅணைதற் கிங்கே
பொதுவே நடிக்கும் புனிதா - விதுவேய்ந்த
சென்னியனே சுத்த சிவனே உனக்கடியேன்
அன்னியனே அல்லேன் அறிந்து. .

74

கலித்துறை.

5370

ஆதி யேதிரு அம்பலத் தாடல்செய் அரசே
நீதி யேஎலாம் வல்லவா நல்லவா நினைந்தே
ஓதி யேஉணர் தற்கரி தாகிய ஒருவான்
சோதி யேஎனைச் சோதியேல் சோதியேல் இனியே. .

75

கட்டளைக் கலித்துறை.

5371

போதோ விடிந்த தருளரசேஎன் பொருட்டுவந்தென்
தாதோர் எழுமையும் நன்மையுற் றோங்கத் தருவதுதான்
மாதோட நீக்கும் கனிரச மோவந்த வான்கனியின்
கோதோ அறிந்திலன் யாதோ திருவுளம் கூறுகவே. .

76

5372

அப்பனை இப்பனை ஆக்கிச் சிவிகை அமர்ந்தவன்சொல்
அப்பனை என்னுயிர்க் கானசெந் தேனை அமுதைஅந்நாள்
அப்பனை ஆழி கடத்திக் கரைவிட் டளித்தசடை
அப்பனைச் சிற்றம் பலவனை நான்துதித் தாடுவனே. .

77

5373

மாதோர் புடைவைத்த மாமருந் தேமணி யேஎன் மட்டில்
யாதோ திருவுளம் யானறி யேன்இதற் கென்னசெய்வேன்
போதோ கழிகின்ற தந்தோநின் தன்னைப் பொருந்துகின்ற
சூதோர் அணுவும் தெரியேன்நின் பாதத் துணைதுணையே. .

78

தரவு கொச்சகக் கலிப்பா.

5374

ஆர்ந்தஅருட் பெருஞ்சோதி அப்பாநான் அடுத்தவர்தம்
சோர்ந்தமுகம் பார்க்கஇனித் துணியேன் நின்அருள்ஆணை
நேர்ந்தவர்கள் நேர்ந்தபடி நெகிழ்ந்துரைக்கும் வார்த்தைகளும்
ஓர்ந்துசெவி புகத்துணியேன் உன்ஆணை உன்ஆணை. .

79

5375

அழியா நிலையாதது மேவிநின் அன்பினோடும்
ஒழியா துனைப்பாடி நின்றாடி உலகினூடே
வழியாம் உயிர்க்கின்பம் புரிந்து வயங்கல்வேண்டும்
இழியா தருள்வாய் பொதுமேவிய எந்தைநீயே. .

80

5376

கரும்பசைக்கும் மொழிச்சிறியார் கல்மனத்தில் பயின்றுபயின்
றிரும்பசைக்கும் மனம்பெற்றேன் யானோஇவ் வேழைகள்தம்
அரும்பசிக்கு மருந்தளிப்பேன் அந்தோஇங் கென்னாலே
துரும்பசைக்க முடியாதே சோதிநடப் பெருமானே.

81

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5377.

மதிக்களவா மணிமன்றில் திருநடஞ்செய்

திருத்தாளை வழுத்தல் இன்று
பதிக்களவா நலந்தருவல் என்றுநினை

ஏத்துதற்குப் பணிக்கின் றேன்நீ
விதிக்களவாச் சித்திகள்முன் காட்டுகஇங்

கென்கின்றாய் விரைந்த நெஞ்சே
பொதிக்களவா முன்னர்இங்கே சத்தத்துக்

களவென்பார் போன்றாய் அன்றே.

82

5378.

ஆடியகால் மலர்களுக்கே அன்புடையார்

யாவரிங்கே அவர்க்கே இன்பம்
கூடியதென் றாரணமும் ஆகமமும்

ஆணையிட்டுக் கூறும்வார்த்தை
ஓடியதோ நெஞ்சேநீ உன்னுவதென்

பற்பலவாய் உன்னேல் இன்னே
பாடிஅவன் திருப்பாட்டைப் படிகண்டாய்

இன்புகலப் படிகண் டாயே.

83

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5379

ஒன்றுமுன் எண்பால் எண்ணிடக் கிடைத்த

வுவைக்குமேற் றனைஅருள் ஒளியால்
நன்றுகண் டாங்கே அருட்பெருஞ் சோதி

நாதனைக் கண்டவன் நடிக்கும்
மன்றுகண் டதனில் சித்தெலாம் வல்ல

மருந்துகண் டுற்றது வடிவாய்
நின்றுகொண் டாடுந் தருணம்இங் கிதுவே

நெஞ்சமே அஞ்சலை நீயே.

84

5380

கலைவளர் முடிய தென்னைஆட் கொண்ட

கருணையங் கண்ணது ஞான
நிலைவளர் பொருள துலகெலாம் போற்ற

நின்றது நிறைபெருஞ் சோதி
மலைவளர் கின்றது அருள்வெளி நடுவே

வயங்குவ தின்பமே மயமாய்த்
தலைவளர் திருச்சிற் றம்பலந் தனிலே

தனித்தெனக் கினித்ததோர் கனியே.

85

5381

மன்றுள்நின் றாடும் வள்ளலே எனது

வள்ளல்என் றெனக்குளே தெரிந்த
அன்றுதான் தொடங்கி அம்மையே அப்பா

ஐயனே அன்பனே அரசே
என்றுநின் தனையே நினைத்திருக் கின்றேன்

எட்டுணை எனினும்வே றிடத்தில்
சென்றுநின் றறியேன் தெய்வமே இதுநின்

திருவுளம் தெரிந்தது தானே.

86

5382

உள்ளலேன் உடையார் உண்ணவும் வறியார்

உறுபசி உழந்துவெந் துயரால்
வள்ளலே நெஞ்சம் வருந்தவும் படுமோ

மற்றிதை நினைத்திடுந் தோறும்
எள்ளலேன் உள்ளம் எரிகின்ற துடம்பும்

எரிகின்ற தென்செய்வேன் அந்தோ
கொள்ளலேன் உணவும் தரிக்கிலேன் இந்தக்

குறையெலாம் தவிர்த்தருள் எந்தாய்.

87

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5383.

ஐவகைத் தொழிலும் என்பால்

அளித்தனை அதுகொண் டிந்நாள்
செய்வகை தெரிவித் தென்னைச்

சேர்ந்தொன்றாய் இருத்தல் வேண்டும்
பொய்வகை அறியேன் வேறு

புகலிலேன் பொதுவே நின்று
மெய்வகை உரைத்தேன் இந்த

விண்ணப்பம் காண்க நீயே.

88

5384.

உருவ ராகியும் அருவின

ராகியும் உருஅரு வினராயும்
ஒருவ ரேஉளார் கடவுள்கண்

டறிமினோ உலகுளீர் உணர்வின்றி
இருவ ராம்என்றும் மூவரே

யாம்என்றும் இயலும்ஐ வர்கள்என்றும்
எருவ ராய்உரைத் துழல்வதென்

உடற்குயிர் இரண்டுமூன் றெனலாமே.

89

கட்டளைக் கலித்துறை

5385

சேய்போல் உலகத் துயிரைஎல் லாம்எண்ணிச் சேர்ந்துபெற்ற
தாய்போல் உரைப்பர்சன் மார்க்கசங் கத்தவர் சாற்றும்எட்டிக்
காய்போல் பிறர்தமைக் கண்டால் கசந்து கடுகடுத்தே
நாய்போல் குரைப்பர்துன் மார்க்கசங் கத்தவர் நானிலத்தே.

90

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5386

வண்டணிபூங் குழல்அம்மை எங்கள்சிவ காம

வல்லியொடு மணிமன்றில் வயங்கியநின் வடிவம்
கண்டவரைக் கண்டவர்தம் கால்மலர்முத் தேவர்

கனமுடிக்கே முடிக்கின்ற கடிமலராம் என்றால்
பண்டகுநின் திருத்தொண்டர் அடிப்பெருமை எவரே

பகர்ந்திடுவர் மறைகளெலாம் பகர்ந்திடுவான் புகுந்தே
விண்டுலர்ந்து வெளுத்தஅவை வெளுத்தமட்டோ அவற்றை

வியந்தோதும் வேதியரும் வெளுத்தனர்உள் உடம்பே.

91

5387

கிழக்குவெளுத் ததுகருணை அருட்சோதி உதயம்

கிடைத்ததென துளக்கமலம் கிளர்ந்ததென தகத்தே
சழக்குவெளுத் ததுசாதி ஆச்சிரமா சாரம்

சமயமதா சாரம்எனச் சண்டையிட்ட கலக
வழக்குவெளுத் ததுபலவாம் பொய்ந்நூல்கற் றவர்தம்

மனம்வெளுத்து வாய்வெளுத்து வாயுறவா தித்த
முழக்குவெளுத் ததுசிவமே பொருள்எனும்சன் மார்க்க

முழுநெறியில் பரநாத முரசுமுழங் கியதே.

92

நிலைமண்டில ஆசிரியப்பா

5388

சிற்சபைக் கண்ணும் பொற்சபைக் கண்ணும்
திருநடம் புரியும் திருநட ராஜ
எனக்கருள் புரிந்த நினக்கடி யேன்கைம்
மாற்றை அறிந்திலன் போற்றிநின் அருளே.

93

5389

நாயினும் சிறியேன் ஆயினும் பெரியேன்
யாதிற் பெரியேன் தீதிற் பெரியேன்
என்னைஆண் டருளினை என்னைஆண் டவனே
அம்பலத் தாடல்செய் எம்பெரும் பொருளே. 94

94

நேரிசை வெண்பா

5390

உண்மைஉரைத் தருள்என் றோதினேன் எந்தைபிரான்
வண்மையுடன் என்அறிவில் வாய்ந்துரைத்தான் - திண்மையுறு
சித்திநிலை எல்லாம் தெரிவித் தருள்கின்றேம்
இத்தருணம் சத்தியமே என்று.

95

5391

உலகமெலாம் போற்ற ஒளிவடிவ னாகி
இலகஅருள் செய்தான் இசைந்தே - திலகன்என
நானேசன் மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான்
தானே எனக்குத் தனித்து.

96

5392

தனித்துணையாய் என்றன்னைத் தாங்கிக்கொண் டென்றன்
மனித்த உடம்பழியா வாறே - கனித்துணையாம்
இன்னமுதம் தந்தெனக்கே எல்லாமும் வல்லசித்தி
தன்னையுந்தந் துட்கலந்தான் றான்.

97

5393

சர்க்கரைஒத் தான்எனக்கே தந்தான் அருளென்மனக்
கற்கரையச் செய்தே களிப்பித்தான் - கற்க
இனியான் அருட்சோதி எந்தைஎன்னுள் உற்றான்
இனியான் மயங்கேன் இருந்து.

98

5394

உன்னைவிட மாட்டேன்நான் உன்ஆணை எம்பெருமான்
என்னைவிட மாட்டாய் இருவருமாய் - மன்னிஎன்றும்
வண்மை எலாம்வல்ல வாய்மைஅரு ளால்உலகுக்
குண்மைஇன்பம் செய்தும் உவந்து.

99

கட்டளைக் கலித்துறை

5395

நஞ்சுண் டுயிர்களைக் காத்தவ னேநட நாயகனே
பஞ்சுண்ட சிற்றடிப் பாவைபங் காநம் பராபரனே
மஞ்சுண்ட செஞ்சடை மன்னாபொன் அம்பல வாவலவா
பிஞ்சுண்ட வாய்க்குப் பழம்அளித் தாண்ட பெரியவனே.

100

5396

அப்பூறு செஞ்சடை அப்பாசிற் றம்பலத் தாடுகின்றோய்
துப்பூறு வண்ணச் செழுஞ்சுட ரேதனிச் சோதியனே
வெப்பூறு நீக்கிய வெண்ணீறு பூத்தபொன் மேனியனே
உப்பூறு வாய்க்குத்தித் திப்பூறு காட்டிய உத்தமனே.

101

5397

நான்செய்த புண்ணியம் என்னுரைக் கேன்பொது நண்ணியதோர்
வான்செய்த மாமணி என்கையில் பெற்றுநல் வாழ்வடைந்தேன்
ஊன்செய்த தேகம் ஒளிவடி வாகநின் றோங்குகின்றேன்
கோன்செய்த விச்சை குணிக்கவல் லார்எவர் கூறுமினே.

102

5398

பண்ணிய பூசை நிறைந்தது சிற்றம் பலநடங்கண்
டெண்ணிய எண்ணம் பலித்தன மெய்இன்பம் எய்தியதோர்
தண்ணியல் ஆரமு துண்டனன் கண்டனன் சாமியைநான்
நண்ணிய புண்ணியம் என்னுரைக் கேன்இந்த நானிலத்தே.

103

5399

அருட்பெருஞ் சோதிஎன் அம்மையி னோடறி வானந்தமாம்
அருட்பெருஞ் சோதிஎன் அப்பன்என் உள்ளத் தமர்ந்தன்பினால்
அருட்பெருஞ் சோதித்தெள் ளாரமு தம்தந் தழிவற்றதோர்
அருட்பெருஞ் சோதிச்செங் கோலும் கொடுத்தனன் அற்புதமே.

104

கலிவிருத்தம்

5400

அருட்பெருஞ் சோதிஎன் அகத்தில் ஓங்கின
மருட்பெரும் திரைஎலாம் மடிந்து நீங்கின
இருட்பெரு மலமுதல் யாவும் தீர்ந்தன
தெருட்பெரும் சித்திகள் சேர்ந்த என்னையே.

105

5401

ஓவுறாத் துயர்செயும் உடம்புதான் என்றும்
சாவுறா தின்பமே சார்ந்து வாழலாம்
மாவுறாச் சுத்தசன் மார்க்க நன்னெறி
மேவுறார் தங்களை விடுக நெஞ்சமே.

106

5402

பொத்திய மலப்பிணிப் புழுக்கு ரம்பைதான்
சித்தியல் சுத்தசன் மார்க்கச் சேர்ப்பினால்
நித்திய மாகியே நிகழும் என்பது
சத்தியம் சத்தியம் சகத்து ளீர்களே.

107

கொச்சகக் கலிப்பா

5403

வானாகி வானடுவே மன்னும்ஒளி யாகிஅதில்
தானாடு வானாகிச் சன்மார்க்கர் உள்ளினிக்கும்
தேனாகித் தெள்ளமுதாய்த் தித்திக்கும் தேவேநீ
யானாகி என்னுள் இருக்கின்றாய் என்னேயோ.

108

5404

ஞானா கரச்சுடரே ஞான மணிவிளக்கே
ஆனா அருட்பெருஞ்சிற் றம்பலத்தே ஆனந்தத்
தேனார் அமுதாம் சிவமே சிவமேநீ
நானாகி என்னுள் நடிக்கின்றாய் என்னேயோ.

109

5405

என்தரத்துக் கேலாத எண்ணங்கள் எண்ணுகின்றேன்
முன்தரத்தின் எல்லாம் முடித்துக் கொடுக்கின்றாய்
நின்தரத்தை என்புகல்வேன் நின்இடப்பால்(385) மேவுபசும்
பொன்தரத்தை என்உரைக்கேன் பொற்பொதுவில் நடிக்கின்றோய்.

110

(385). வலப்பால் - முதற்பதிப்பு., பொ. சு. ச. மு. க.

5406

என்னுடைய விண்ணப்பம் இதுகேட்க எம்பெருமான்
நின்னுடைய பெருங்கருணை நிதிஉடையேன் ஆதலினால்
பொன்னுடையான் அயன்முதலாம் புங்கவரை வியவேன்என்
தன்னுடைய செயலெல்லாம் தம்பிரான் செயலன்றே.

111

5407

ஓங்கும்அன்பர் எல்லாரும் உள்ளே விழித்துநிற்கத்
தூங்கிய என்தன்னை எழுப்பிஅருள் தூயபொருள்
வாங்குகஎன் றென்பால் வலியக் கொடுத்தமுதும்
பாங்குறநின் றூட்டினையே எந்தாய்நின் பண்பிதுவே.

112

5408

நாட்பாரில் அன்பரெலாம் நல்குகன் றேத்திநிற்ப
ஆட்பாரில் அன்போர் அணுத்துணையும் இல்லேற்கே
நீட்பாய் அருளமுதம் நீகொடுத்தாய் நின்னை இங்கே
கேட்பார் இலைஎன்று கீழ்மேல தாக்கினையே.

113

5409

எல்லார்க்கும் கடையாகி இருந்தேனுக் கருள்புரிந்தே
எல்லார்க்கும் துணையாகி இருக்கவைத்தாய் எம்பெருமான்
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்றாய் இவ்வண்ணம்
எல்லார்க்கும் செய்யாமை யாதுகுறித் திசைஎனக்கே.

114

5410

நான்ஆனான் தான்ஆனான் நானும்தா னும்ஆனான்
தேன்ஆனான் தெள்ளமுதாய்த் தித்தித்து நிற்கின்றான்
வான்ஆனான் ஞான மணிமன்றில் ஆடுகின்றான்
கோன்ஆனான் என்னுட் குலாவுகின்ற கோமானே.

115

கட்டளைக் கலித்துறை

5411

எல்லாக் குறையும் தவிர்ந்தேன்உன் இன்னருள் எய்தினன்நான்
வல்லாரின் வல்லவன் ஆனேன் கருணை மருந்தருந்தி
நல்லார் எவர்க்கும் உபகரிப் பான்இங்கு நண்ணுகின்றேன்
கொல்லா விரதத்தில் என்னைக் குறிக்கொண்ட கோலத்தனே.

116

5412

முன்னாள்செய் புண்ணியம் யாதோ உலகம் முழுதும்என்பால்
இந்நாள் அடைந்தின்பம் எய்திட ஓங்கினன் எண்ணியவா
றெந்நாளும் இவ்வுடம் பேஇற வாத இயற்கைபெற்றேன்
என்னாசை அப்பனைக் கண்டுகொண் டேன்என் இதயத்திலே.

117

5413

கண்டேன் சிற்றம்பலத் தானந்த நாடகம் கண்டுகளி
கொண்டேன் எல்லாம்வல்ல சித்தனைக் கூடிக் குலவிஅமு
துண்டேன் மெய்ஞ்ஞான உருஅடைந் தேன்பொய் உலகொழுக்கம்
விண்டேன் சமரச சன்மார்க்கம் பெற்ற வியப்பிதுவே.

118

5414

கண்கொண்ட பூதலம் எல்லாம்சன் மார்க்கம் கலந்துகொண்டே
பண்கொண்ட பாடலில் பாடிப் படித்துப் பரவுகின்றார்
விண்கொண்ட சிற்சபை ஒன்றே நிறைந்து விளங்குகின்ற
தெண்கொண்ட மற்றை மதமார்க்கம் யாவும் இறந்தனவே.

119

5415

தாழைப் பழம்பிழி(386) பாலொடு சர்க்கரைச் சாறளிந்த
வாழைப் பழம்பசு நெய்நறுந் தேனும் மருவச்செய்து
மாழைப் பலாச்சுளை மாம்பழம் ஆதி வடித்தளவி
ஏழைக் களித்தனை யேஅரு ளாரமு தென்றொன்றையே.

120

(386). தாழைப்பழம் - தேங்காய்.

5416

தென்பால் முகங்கொண்ட தேவேசெந் தேனில் சிறந்தபசு
வின்பால் கலந்தளி முக்கனிச் சாறும் எடுத்தளவி
அன்பால் மகிழ்ந்து மகனே வருகென் றழைத்தருளி
என்பால் அளித்தனை யேஅரு ளாரமு தென்றொன்றையே.

121

5417

செத்தார் எழுந்தனர் சுத்தசன் மார்க்கம் சிறந்ததுநான்
ஒத்தார் உயர்ந்தவர் இல்லா ஒருவனை உற்றடைந்தே
சித்தாடு கின்றனன் சாகா வரமும் சிறக்கப்பெற்றேன்
இத்தா ரணியில் எனக்கிணை யார்என் றியம்புவனே.

122

கலிநிலைத்துறை

5418

கருணை யாம்பெருங் கடல்அமு தளித்தனை எனக்கே
தருண வாரிச மலர்ப்பதம் தந்தனை நின்னை
அருண வண்ணஒண் சுடர்மணி மண்டபத் தடியேன்
பொருள்ந யப்புறக் கண்டுகண் டுளமகிழ் போதே.

123

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5419

முந்தைநாள் அயர்ந்தேன் அயர்ந்திடேல் எனஎன்

முன்னர்நீ தோன்றினை அந்தோ
அந்தநாள் தொடங்கி மகிழ்ந்திருக் கின்றேன்

அப்பனே அய்யனே அரசே
இந்தநாள் கவலை இடர்பயம் எல்லாம்

என்னைவிட் டொழிந்திடப் புரிந்தாய்
எந்தநாள் புரிந்தேன் இப்பெரும் பேறிங்

கெய்துதற் குரியமெய்த் தவமே.

124

5420

வாய்க்குறும் புரைத்துத் திரிந்துவீண் கழித்து

மலத்திலே கிடந்துழைத் திட்ட
நாய்க்குயர் தவிசிட் டொருமணி முடியும்

நன்றுறச் சூட்டினை அந்தோ
தூய்க்குணத் தவர்கள் புகழ்மணி மன்றில்

சோதியே நின்பெருந் தயவைத்
தாய்க்குறு தயவென் றெண்ணுகோ தாயின்

தயவும்உன் தனிப்பெருந் தயவே.

125

5421

பேரிடர் தவிர்த்துப் பேரருள் புரிந்த

பெருமநின் தன்னைஎன் றனக்கே
சாருறு தாயே என்றுரைப் பேனோ

தந்தையே என்றுரைப் பேனோ
சீருறு குருவே என்றுரைப் பேனோ

தெய்வமே என்றுரைப் பேனோ
யாரென உரைப்பேன் என்னெனப் புகழ்வேன்

யாதுமொன் றறிந்திலேன் அந்தோ.

126

5422

சிறுநெறிக் கெனைத்தான் இழுத்ததோர் கொடிய

தீமன மாயையைக் கணத்தே
வெறுவிய தாக்கித் தடுத்தெனை ஆண்ட

மெய்யநின் கருணைஎன் புகல்வேன்
உறுநறுந் தேனும் அமுதும்மென் கரும்பில்

உற்றசா றட்டசர்க் கரையும்
நறுநெயுங் கலந்த சுவைப்பெரும் பழமே

ஞானமன் றோங்கும்என் நட்பே.

127

5423

புல்லிய நெறிக்கே இழுத்தெனை அலைத்த

பொய்ம்மன மாயையைக் கணத்தே
மெல்லிய தாக்கித் தடுத்தெனை ஆண்ட

மெய்யநின் கருணைஎன் புகல்வேன்
வல்லிநின் அம்மை மகிழமன் றோங்கும்

வள்ளலே மறைகள்ஆ கமங்கள்
சொல்லிய பதியே மிகுதயா நிதியே

தொண்டனேன் உயிர்க்குமெய்த் துணையே.

128

5424

அருந்தவர் காண்டற் கரும்பெருங்கருணை

அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே
இருந்தனன் அம்மா நான்செய்த தவந்தான்

என்னையோ என்னையோ என்றாள்
திருந்துதெள் ளமுதுண் டழிவெலாந் தவிர்த்த

திருவுரு அடைந்தனன் ஞான
மருந்துமா மணியும் மந்திர நிறைவும்

வாய்த்தன வாய்ப்பின்என் றாளே.

129

5425

இன்பிலே வயங்கும் சிவபரம் பொருளே

என்உயிர்க் கமுதமே என்தன்
அன்பிலே பழுத்த தனிப்பெரும் பழமே

அருள்நடம் புரியும்என் அரசே
வன்பிலே விளைந்த மாயையும் வினையும்

மடிந்தன விடிந்ததால் இரவும்
துன்பிலேன் இனிநான் அருட்பெருஞ் சோதிச்

சூழலில் துலங்குகின் றேனே.

130

5426

உயிரெலாம் ஒருநீ திருநடம் புரியும்

ஒருதிருப் பொதுஎன அறிந்தேன்
செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்

சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன்
மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்து

மலர்ந்தனன் சுத்தசன் மார்க்கப்
பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப்

பாடுகின் றேன்பொதுப் பாட்டே.

131

5427

படித்தஎன் படிப்பும் கேள்வியும் இவற்றின்

பயனதாம் உணர்ச்சியும் அடியேன்
பிடித்தநல் நிலையும் உயிரும்மெய் இன்பும்

பெருமையும் சிறப்பும்நான் உண்ணும்
வடித்ததெள் ளமுதும் வயங்குமெய் வாழ்வும்

வாழ்க்கைநன் முதலும்மன் றகத்தே
நடித்தபொன் னடியும் திருச்சிற்றம் பலத்தே

நண்ணிய பொருளும்என் றறிந்தேன்.

132

5428

கலையனே எல்லாம் வல்லஓர் தலைமைக்

கடவுளே என்இரு கண்ணே
நிலையனே ஞான நீதிமன் றிடத்தே

நிருத்தஞ்செய் கருணைமா நிதியே
புலையனேன் பொருட்டுன் திருவடி அவனி

பொருந்திய புதுமைஎன் புகல்வேன்
சிலையைநேர் மனத்தேன் செய்தவம் பெரிதோ

திருவருட் பெருந்திறல் பெரிதே.

133

5429

தரம்பிறர் அறியாத் தலைவஓர் முக்கண்

தனிமுதல் பேரருட் சோதிப்
பரம்பர ஞான சிதம்பர நடஞ்செய்

பராபர நிராமய நிமல
உரம்பெறும் அயன்மால் முதற்பெருந் தேவர்

உளத்ததி சயித்திட எனக்கே
வரந்தரு கின்றாய் வள்ளல்நின் கருணை

மாகடற் கெல்லைகண் டிலனே.

134

5430

யான்முனம் புரிந்த பெருந்தவம் யாதோ

என்சொல்வேன் என்சொல்வேன் அந்தோ
ஊன்மனம் உருக என்தனைத் தேற்றி

ஒளிஉருக் காட்டிய தலைவா
ஏன்மனம் இரங்காய் இன்றுநீ என்றேன்

என்றசொல் ஒலிஅடங் குதன்முன்
ஆன்மகிழ் கன்றின் அணைத்தெனை எடுத்தாய்

அருட்பெருஞ் சோதிஎன் அரசே.

135

5431

பனிப்பறுத் தெல்லாம் வல்லசித் தாக்கிப்

பரம்பரம் தருகின்ற தென்றோர்
தனிப்பழம் எனக்கே தந்தைதான் தந்தான்

தமியனேன் உண்டனன் அதன்தன்
இனிப்பைநான் என்என் றியம்புவேன் அந்தோ

என்னுயிர் இனித்ததென் கரணம்
சனிப்பற இனித்த தத்துவம் எல்லாம்

தனித்தனி இனித்தன தழைத்தே.

136

5432

விண்ணெலாம் கலந்த வெளியில்ஆ னந்தம்

விளைந்தது விளைந்தது மனனே
கண்ணெலாம் களிக்கக் காணலாம்

பொதுவில் கடவுளே என்றுநம் கருத்தில்
எண்ணலாம் எண்ணி எழுதலாம் எழுதி

ஏத்தலாம் எடுத்தெடுத் துவந்தே
உண்ணலாம் விழைந்தார்க் குதவலாம் உலகில்

ஓங்கலாம் ஓங்கலாம் இனியே.

137

5433

வள்ளலாம் கருணை மன்றிலே அமுத

வாரியைக் கண்டனம் மனமே
அள்ளலாம் எடுத்துக் கொள்ளலாம் பாடி

ஆடலாம் அடிக்கடி வியந்தே
உள்எலாம் நிரம்ப உண்ணலாம் உலகில்

ஓங்கலாம் உதவலாம் உறலாம்
கள்எலாம் உண்ட வண்டென இன்பம்

காணலாம் களிக்கலாம் இனியே.

138

5434.

சனிதொ லைந்தது தடைத விர்ந்தது

தயைமி குந்தது சலமொடே
துனிதொ லைந்தது சுமைத விர்ந்தது

சுபமி குந்தது சுகமொடே
கனிஎ திர்ந்தது களைத விர்ந்தது

களிமி குந்தது கனிவொடே
புனித மன்றிறை நடம லிந்தது

புகழ்உ யர்ந்தது புவியிலே.

139

5435,

உரையும் உற்றது ஒளியும் உற்றது

உணர்வும் உற்றது உண்மையே
பரையும் உற்றது பதியும் உற்றது

பதமும் உற்றது பற்றியே
புரையும் அற்றது குறையும் அற்றது

புலையும் அற்றது புன்மைசேர்
திரையும் அற்றது நரையும் அற்றது

திரையும் அற்றுவி ழுந்ததே.

140

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5436

அம்பலத்தே ஆடுகின்ற ஆரமுதே அரசே

ஆனந்த மாகடலே அறிவேஎன் அன்பே
உம்பர்கட்கே அன்றிஇந்த உலகர்கட்கும் அருள்வான்

ஒளிர்கின்ற ஒளியேமெய் உணர்ந்தோர்தம் உறவே
எம்பலத்தே வாகிஎனக் கெழுமையும்நற் றுணையாய்

என்உளத்தே விளங்குகின்ற என்இறையே நினது
செம்பதத்தே மலர்விளங்கக் கண்டுகொண்டேன் எனது

சிறுமைஎலாம் தீர்ந்தேமெய்ச் செல்வமடைந் தேனே.

141

5437

அடிவிளங்கக் கனகசபைத் தனிநடனம் புரியும்

அருட்சுடரே என்உயிருக் கானபெருந் துணையே
துடிவிளங்கக் கரத்தேத்தும் சோதிமலை மருந்தே

சொற்பதம்எல் லாம்கடந்த சிற்சொருபப் பொருளே
பொடிவிளங்கத் திருமேனிப் புண்ணியனே ஞானப்

போனகரைச் சிவிகையின்மேல் பொருந்தவைத்த புனிதா
படிவிளங்கச் சிறியேன்நின் பதமலர்கண் டுவந்தேன்

பரிவொழிந்தேன் அருட்செல்வம் பரிசெனப்பெற் றேனே.

142

5438

அன்புடை யவரேஎல் லாம்உடை யவரே

அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேஎன்
வன்புடை மனத்தைநன் மனமாக்கி எனது

வசஞ்செய்வித் தருளிய மணிமன்றத் தவரே
இன்புடை யவரேஎன் இறையவ ரேஎன்

இருகணுள் மணிகளுள் இசைந்திருந் தவரே
என்புடை எனைத்தூக்கி எடுத்தீர்இங் கிதனை

எண்ணுகின் றேன்அமு துண்ணுகின் றேனே.

143

5439

கலக்கம் நீங்கினேன் களிப்புறு கின்றேன்

கனக அம்பலம் கனிந்தசெங் கனியே
துலக்கம் உற்றசிற் றம்பலத் தமுதே

தூய சோதியே சுகப்பெரு வாழ்வே
விலக்கல் இல்லதோர் தனிமுதல் அரசே

வேத ஆகமம் விளம்புமெய்ப் பொருளே
அலக்கண் அற்றமெய் அன்பர்தம் உளத்தே

அமர்ந்த தோர்சச்சி தானந்த சிவமே.

144

5440

ஓங்கார அணைமீது நான்இருந்த தருணம்

உவந்தெனது மணவாளர் சிவந்தவடி வகன்றே
ஈங்காரப் பளிக்குவடி வெடுத்தெதிரே நின்றார்

இருந்தருள்க எனஎழுந்தேன் எழுந்திருப்ப தென்நீ
ஆங்காரம் ஒழிஎன்றார் ஒழிந்திருந்தேன் அப்போ

தவர்நானோ நான்அவரோ அறிந்திலன்முன் குறிப்பை
ஊங்கார இரண்டுருவும் ஒன்றானோம் அங்கே

உறைந்தஅனு பவம்தோழி நிறைந்தபெரு வெளியே.

145

5441

சொல்லுகின்றேன் பற்பலநான் சொல்லுகின்ற வெல்லாம்

துரிசலவே சூதலவே தூய்மையுடை யனவே
வெல்லுகின்ற வார்த்தைஅன்றி வெறும்வார்த்தை என்வாய்

விளம்பாதென் ஐயர்நின்று விளம்புகின்ற படியால்
செல்லுகின்ற படியேநீ காண்பாய்இத் தினத்தே

தேமொழிஅப் போதெனைநீ தெளிந்துகொள்வாய் கண்டாய்
ஒல்லுகின்ற வகைஎல்லாம் சொல்லுகின்றேன் அடிநான்

உண்மைஇது உண்மைஇது உண்மைஇது தானே.

146

5442

தந்தை தன்மையே தனையன்தன் தன்மை

என்று சாற்றுதல் சத்தியம் கண்டீர்
எந்தை எம்பிரான் ஐந்தொழில் புரியும்

இறைவன் மன்றுளே இயல்நடம் புரிவான்
மைந்தன் என்றெனை ஆண்டவன் எல்லாம்

வல்ல நாயகன் நல்லசீர் உடையான்
அந்த ணாளன்மெய் அறிவுடை யவன்என்

அப்பன் தன்மைஎன் தன்மைஎன் றறிமின்.

147

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5443

என்உடலும் என்உயிரும் என்பொருளும்

நின்னஎன இசைந்தஞ் ஞான்றே
உன்னிடைநான் கொடுத்தனன்மற் றென்னிடைவே

றொன்றும்இலை உடையாய் இங்கே
புன்னிகரேன் குற்றமெலாம் பொறுத்ததுவும்

போதாமல் புணர்ந்து கொண்டே
தன்னிகர்என் றெனவைத்தாய் இஞ்ஞான்றென்

கொடுப்பேன்நின் தன்மைக் கந்தோ.

148

5444

என்னுரைக்கேன் என்னுரைக்கேன் இந்தஅதி

சயந்தன்னை எம்ம னோர்காள்
பொன்னுரைக்கும் மணிமன்றில் திருநடனம்

புரிகின்ற புனிதன் என்னுள்
மின்உரைக்கும் படிகலந்தான் பிரியாமல்

விளங்குகின்றான் மெய்ம்மை யான
தன்னுரைக்கும் என்னுரைக்கும் சமரசம்செய்

தருள்கின்றான் சகத்தின் மீதே.

149

5445

ஆடுகின்ற சேவடிக்கே ஆளானேன்

மாளாத ஆக்கை பெற்றேன்
கூடுகின்ற சன்மார்க்க சங்கத்தே

நடுவிருந்து குலாவு கின்றேன்
பாடுகின்றேன் எந்தைபிரான் பதப்புகழை

அன்பினொடும் பாடிப் பாடி
நீடுகின்றேன் இன்பக்கூத் தாடுகின்றேன்

எண்ணமெலாம் நிரம்பி னேனே.

150

5446

ஆணை ஆணைநீ அஞ்சலை அஞ்சலை

அருள்ஒளி தருகின்றாம்
கோணை மாநிலத் தவரெலாம் நின்னையே

குறிக்கொள்வர் நினக்கேஎம்
ஆணை அம்பலத் தரசையும் அளித்தனம்

வாழ்கநீ மகனேஎன்
றேணை பெற்றிட எனக்கருள் புரிந்தநின்

இணைமலர்ப் பதம்போற்றி.

151

கட்டளைக் கலிப்பா

5447

நாய்க்கும் ஓர்தவி சிட்டுப்பொன் மாமுடி

நன்று சூட்டினை என்றுநின் அன்பர்கள்
வாய்க்கு வந்த படிபல பேசவே

மதியி லேனையும் மன்னருட் சத்தியாம்
தாய்க்குக் காட்டிநல் தண்ணமு தூட்டிஓர்

தவள மாடப்பொன் மண்டபத் தேற்றியே
சேய்க்கு நேரஎன் கையில்பொற் கங்கணம்

திகழக் கட்டினை என்னைநின் செய்கையே.

152

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5448

தன்னைவிடத் தலைமைஒரு தகவினும்இங் கியலாத்

தனித்தலைமைப் பெரும்பதியே தருணதயா நிதியே
பொன்னடிஎன் சிரத்திருக்கப் புரிந்தபரம் பொருளே

புத்தமுதம் எனக்களித்த புண்ணியனே நீதான்
என்னைவிட மாட்டாய்நான் உன்னைவிட மாட்டேன்

இருவரும்ஒன் றாகிஇங்கே இருக்கின்றோம் இதுதான்
நின்னருளே அிந்ததெனில் செயுஞ்செய்கை அனைத்தும்

நின்செயலோ என்செயலோ நிகழ்த்திடுக நீயே.

153

5449

கடல்கடந்தேன் கரையடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில்

கதவுதிறந் திடப்பெற்றேன் காட்சியெலாம் கண்டேன்
அடர்கடந்த திருஅமுதுண் டருள்ஒளியால் அனைத்தும்

அறிந்துதெளிந் தறிவுருவாய் அழியாமை அடைந்தேன்
உடல்குளிர்ந்தேன் உயிர்கிளர்ந்தேன் உள்ளமெலாம் தழைத்தேன்

உள்ளபடி உள்ளபொருள் உள்ளனவாய் நிறைந்தேன்
இடர்தவிர்க்கும் சித்திஎலாம் என்வசம்ஓங் கினவே

இத்தனையும் பொதுநடஞ்செய் இறைவன்அருட் செயலே.

154

5450

காற்றாலே புவியாலே ககனமத னாலே

கனலாலே புனலாலே கதிராதி யாலே
கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே

கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்

மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்

எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.

155

5451

எல்லா உலகமும் என்வசம் ஆயின

எல்லா உயிர்களும் என்உயிர் ஆயின
எல்லா ஞானமும் என்ஞானம் ஆயின

எல்லா வித்தையும் என்வித்தை ஆயின
எல்லா போகமும் என்போகம் ஆயின

எல்லாஇன்பமும் என்இன்பம் ஆயின
எல்லாம் வல்லசிற் றம்பலத் தென்னப்பர்

எல்லாம் நல்கிஎன் உள்ளத்துள் ளாரே.

156

5452

சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது

தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்
என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர்

எல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர்
புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே

புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்
தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே

தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே.

157

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5453

ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா

அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே
நீதியில் கலந்து நிறைந்தது நானும்

நித்தியன் ஆயினேன் உலகீர்
சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே

சத்தியச் சுத்தசன் மார்க்க
வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை

விளம்பினேன் வம்மினோ விரைந்தே.

158

5454

வாது பேசிய மனிதர் காள்ஒரு

வார்த்தை கேண்மீன்கள் வந்துநும்
போது போவதன் முன்ன ரேஅருட்

பொதுவி லேநடம் போற்றுவீர்
தீது பேசினீர் என்றி டாதுமைத்

திருவு ளங்கொளும் காண்மினோ
சூது பேசிலன் நன்மை சொல்கின்றேன்

சுற்றம் என்பது பற்றியே.

159

5455

தூக்கமும் துயரும் அச்சமும் இடரும்

தொலைந்தன தொலைந்தன எனைவிட்
டேக்கமும் வினையும் மாயையும் இருளும்

இரிந்தன ஒழிந்தன முழுதும்
ஆக்கமும் அருளும் அறிவும்மெய் அன்பும்

அழிவுறா உடம்பும்மெய் இன்ப
ஊக்கமும் எனையே உற்றன உலகீர்

உண்மைஇவ் வாசகம் உணர்மின்.

160

கலிப்பா

5456

பிச்சுலகர் மெச்சப் பிதற்றிநின்ற பேதையனேன்
இச்சைஎலாம் எய்த இசைந்தருளிச் செய்தனையே
அச்சம்எலாம் தீர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன்
நிச்சலும்பே ரானந்த நித்திரைசெய் கின்றேனே.

161


திருச்சிற்றம்பலம்
Back


126. சிற்சத்தி துதி

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5457.

சோதிக் கொடியே ஆனந்த

சொருபக் கொடியே சோதிஉருப்
பாதிக் கொடியே சோதிவலப்

பாகக் கொடியே(387) எனைஈன்ற
ஆதிக் கொடியே உலகுகட்டி

ஆளுங் கொடியே சன்மார்க்க
நீதிக் கொடியே சிவகாம

நிமலக் கொடியே அருளுகவே.

1

(387). இடப்பாகக் கொடியே - பி. இரா. பதிப்பு.

5458.

பொருணற் கொடியே மாற்றுயர்ந்த

பொன்னங் கொடியே போதாந்த
வருணக் கொடியே எல்லாஞ்செய்

வல்லார் இடஞ்சேர் மணிக்கொடியே
தருணக் கொடியே என்தன்னைக்

தாங்கி ஓங்குந் தனிக்கொடியே
கருணைக் கொடியே ஞானசிவ

காமக் கொடியே அருளுகவே.

2

5459.

நீட்டுக் கொடியே சன்மார்க்க

நீதிக் கொடியே சிவகீதப்
பாட்டுக் கொடியே இறைவர்வலப்

பாகக் கொடியே(388) பரநாத
நாட்டுக் கொடியே எனைஈன்ற

ஞானக் கொடியே என்னுறவாம்
கூட்டுக் கொடியே சிவகாமக்

கொடியே அடியேற் கருளுகவே.

3

(388). இடப்பாகக் கொடியே - பி. இரா. பதிப்பு.

5460.

மாலக் கொடியேன் குற்றமெலாம்

மன்னித் தருளி மரணமெனும்
சாலக் கொடியை ஒடித்தெனக்குட்

சார்ந்து விளங்கும் தவக்கொடியே
காலக் கருவைக் கட்தொளிர்வான்

கருவும் கடந்து வயங்குகின்ற
கோலக் கொடியே சிவஞானக்

கொடியே அடியேற் கருளுகவே.

4

5461.

நாடாக் கொடிய மனம்அடக்கி

நல்ல மனத்தைக் கனிவித்துப்
பாடாப் பிழையைப் பொறுத்தெனக்கும்

பதம்ஈந் தாண்ட பதிக்கொடியே
தேடாக் கரும சித்திஎலாம்

திகழத் தயவால் தெரிவித்த
கோடாக் கொடியே சிவதருமக்

கொடியே அடியேற் கருளுகவே.

5

5462.

மணங்கொள் கொடிப்பூ முதல்நான்கு

வகைப்பூ வடிவுள் வயங்குகின்ற
வணங்கொள் கொடியே ஐம்பூவும்

மலிய மலர்ந்த வான்கொடியே
கணங்கொள் யோக சித்திஎலாம்

காட்டுங் கொடியே கலங்காத
குணங்கொள் கொடியே சிவபோகக்

கொடியே அடியேற் கருளுகவே.

6

5463.

புலங்கொள் கொடிய மனம்போன

போக்கில் போகா தெனைமீட்டு
நலங்கொள் கருணைச் சன்மார்க்க

நாட்டில் விடுத்த நற்கொடியே
வலங்கொள் ஞான சித்திஎலாம்

வயங்க விளங்கு மணிமன்றில்
குலங்கொள் கொடியே மெய்ஞ்ஞானக்

கொடியே அடியேற் கருளுகவே.

7

5464.

வெறிக்கும் சமயக் குழியில்விழ

விரைந்தேன் தன்னை விழாதவகை
மறிக்கும் ஒருபே ரறிவளித்த

வள்ளற் கொடியே மனக்கொடியைச்
செறிக்கும் பெரியர் உளத்தோங்கும்

தெய்வக் கொடியே சிவஞானம்
குறிக்கும் கொடியே ஆனந்தக்

கொடியே அடியேற் கருளுகவே.

8

5465.

கடுத்த விடர்வன் பயம்கவலை

எல்லாம் தவிர்த்துக் கருத்துள்ளே
அடுத்த கொடியே அருளமுதம்

அளித்தென் தனைமெய் அருட்கரத்தால்
எடுத்த கொடியே சித்திஎலாம்

இந்தா மகனே என்றெனக்கே
கொடுத்த கொடியே ஆனந்தக்

கொடியே அடியேற் கருளுகவே.

9

5466.

ஏட்டைத் தவிர்த்தென் எண்ணமெலாம்

எய்த ஒளிதந் தியான்வனைந்த
பாட்டைப் புனைந்து பரிசளித்த

பரம ஞானப் பதிக்கொடியே
தேட்டைத் தனிப்பேர் அருட்செங்கோல்

செலுத்தும் சுத்த சன்மார்க்கக்
கோட்டைக் கொடியே ஆனந்தக்

கொடியே அடியேற் கருளுகவே.

10


திருச்சிற்றம்பலம்
Back


127. இன்பத் திறன்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5467.

உலகுபுகழ் திருவமுதம் திருச்சிற்றம் பலத்தே

உடையவர்இன் றுதவினர்நான் உண்டுகுறை தீர்ந்தேன்
இலகுசிவ போகவடி வாகிமகிழ் கின்றேன்

இளைப்பறியேன் தவிப்பறியேன் இடர்செய்பசி அறியேன்
விலகல்இலாத் திருவனையீர் நீவிர்எலாம் பொசித்தே

விரைந்துவம்மின் அம்பலத்தே விளங்குதிருக் கூத்தின்
அலகறியாத் திறம்பாடி ஆடுதும்நாம் இதுவே

அருள்அடையும் நெறிஎனவே தாகமம்ஆர்ப் பனவே.

1

5468

மாதவத்தால் நான்பெற்ற வானமுதே எனது

வாழ்வேஎன் கண்ணமர்ந்த மணியேஎன் மகிழ்வே
போதவத்தால் கழித்தேனை வலிந்துகலந் தாண்ட

பொன்னேபொன் னம்பலத்தே புனிதநடத் தரசே
தீதவத்தைப் பிறப்பிதுவே சிவமாகும் பிறப்பாச்

செய்வித்தென் அவத்தையெலாம் தீர்த்தபெரும் பொருளே
பூதலத்தே அடிச்சிறியேன் நினதுதிரு வடிக்கே

புகழ்மாலை சூட்டுகின்றேன் புனைந்துகலந் தருளே.

2

5469

அளந்திடுவே தாகமத்தின் அடியும்நடு முடியும்

அப்புறமும் அப்பாலும் அதன்மேலும் விளங்கி
வளர்ந்திடுசிற் றம்பலத்தே வயங்கியபே ரொளியே

மாற்றறியாப் பொன்னேஎன் மன்னேகண் மணியே
தளர்ந்தஎனை அக்கணத்தே தளர்வொழித்தா னந்தம்

தந்தபெருந் தகையேஎன் தனித்ததனித் துணைவா
உளந்தருசம் மதமான பணிஇட்டாய் எனக்கே

உன்பணியே பணியல்லால் என்பணிவே றிலையே.

3

5470

நாடுகலந் தாள்கின்றோர் எல்லாரும் வியப்ப

நண்ணிஎனை மாலைஇட்ட நாயகனே நாட்டில்
ஈடுகரைந் திடற்கரிதாம் திருச்சிற்றம் பலத்தே

இன்பநடம் புரிகின்ற இறையவனே எனைநீ
பாடுகஎன் னோடுகலந் தாடுகஎன் றெனக்கே

பணிஇட்டாய் நான்செய்பெரும் பாக்கியம்என் றுவந்தேன்
கோடுதவ றாதுனைநான் பாடுதற்கிங் கேற்ற

குணப்பொருளும் இலக்கியமும் கொடுத்துமகிழ்ந் தருளே.

4

5471

நண்புடையாய் என்னுடைய நாயகனே எனது

நல்உறவே சிற்சபையில் நடம்புரியும் தலைவா
எண்புடையா மறைமுடிக்கும் எட்டாநின் புகழை

யாதறிவேன் பாடுகஎன் றெனக்கேவல் இட்டாய்
பண்புடைநின் மெய்யன்பர் பாடியபே ரன்பில்

பழுத்தபழம் பாட்டில்ஒரு பாட்டும்அறி யேனே
தண்புடைநன் மொழித்திரளும்(389) சுவைப்பொருளும் அவைக்கே

தக்கஇயல் இலக்கியமும் தந்தருள்வாய் எனக்கே.

5

(389). மொழித்திறனும் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.

5472

பணிந்தடங்கும் மனத்தவர்பால் பரிந்தமரும் பதியே

பாடுகின்றோர் உள்ளகத்தே கூடுகின்ற குருவே
கணிந்தமை பலகோடி ஆகமம்பல் கோடி

கடவுள்நின தருட்புகழைக் கணிப்பதற்குப் பலகால்
துணிந்துதுணிந் தெழுந்தெழுந்து தொடர்ந்துதொடர்ந் தடிகள்

சுமந்துசுமந் திளைத்திளைத்துச் சொல்லியவல் லனவென்
றணிந்தமொழி மாற்றிவலி தணிந்தஎன்றால் அந்தோ

அடியேன்நின் புகழ்உரைக்கல் ஆவதுவோ அறிந்தே.

6

5473

விதிப்பவர்கள் பலகோடி திதிப்பவர்பல் கோடி

மேலவர்கள் ஒருகோடி விரைந்துவிரைந் துனையே
மதிப்பவர்கள் ஆகிஅவர் மதியாலே பலகால்

மதித்துமதித் தவர்மதிபெண் மதியாகி அலந்தே
துதிப்பதுவே நலம்எனக்கொண் டிற்றைவரை ஏற்ற

சொற்பொருள்கள் காணாதே சுழல்கின்றார் என்றால்
குதிப்பொழியா மனச்சிறிய குரங்கொடுழல் கின்றேன்

குறித்துரைப்பேன் என்னஉளம் கூசுகின்ற தரசே.

7

5474

ஒளியாகி உள்ஒளியாய் உள்ஒளிக்குள் ஒளியாய்

ஒளிஒளியின் ஒளியாய்அவ் ஒளிக்குளும்ஓர் ஒளியாய்
வெளியாகி வெளிவெளியாய் வெளியிடைமேல் வெளியாய்

மேல்வெளிமேல் பெருவெளியாய்ப் பெருவெளிக்கோர் வெளியாய்
அளியாகி அதுஆகி அதுவும்அல்லா தாகி

அப்பாலாய் அப்பாலும் அல்லதுவாய் நிறைவாம்
தளியாகி எல்லாமாய் விளங்குகின்ற ஞான

சபைத்தலைவா நின்இயலைச் சாற்றுவதெவ் வணமே.

8

5475

வாக்கொழிந்து மனம்ஒழிந்து மதிஒழிந்து மதியின்

வாதனையும் ஒழிந்தறிவாய் வயங்கிநின்ற இடத்தும்
போக்கொழிந்தும் வரவொழிந்தும் பூரணமாய் அதுவும்

போனபொழு துள்ளபடி புகலுவதெப் படியோ
நீக்கொழிந்த நிறைவேமெய்ந் நிலையேஎன் னுடைய

நேயமே ஆனந்த நிருத்தமிடும் பதியே
ஏக்கொழிந்தார் உளத்திருக்கும் இறையேஎன் குருவே

எல்லாமாய் அல்லதுமாய் இலங்கியமெய்ப் பொருளே.

9

5476

என்இயலே யான்அறியேன் இவ்வுலகின் இயல்ஓர்

எள்அளவும் தான்அறியேன் எல்லாமும் உடையோய்
நின்இயலை அறிவேனோ அறிந்தவனே போல

நிகழ்த்துகின்றேன் பிள்ளைஎன நிலைப்பெயர்பெற் றிருந்தேன்
தன்இயலாம் தனிஞான சபைத்தலைமைப் பதியே

சத்தியனே நித்தியனே தயாநிதியே உலகம்
பின்இயல்மா னிடப்பிள்ளை பேச்சினும்ஓர் பறவைப்

பிறப்பின்உறும் கிளிப்பிள்ளைப் பேச்சுவக்கின் றதுவே.

10


திருச்சிற்றம்பலம்
Back


128. உற்ற துரைத்தல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5477.

துனிநாள் அனைத்தும் தொலைத்துவிட்டேன்

தூக்கம் தவிர்த்தேன் சுகம்பலிக்கும்
கனிநாள் இதுவே என்றறிந்தேன்

கருத்து மலர்ந்தேன் களிப்புற்றேன்
தனிநா யகனே கனகசபைத்

தலைவா ஞான சபாபதியே
இனிநான் இறையும் கலக்கமுறேன்

இளைக்க மாட்டேன் எனக்கருளே.

1

5478

அருளும் பொருளும் யான்பெறவே

அடுத்த தருணம் இதுஎன்றே
தெருளும் படிநின் அருள்உணர்த்தத்

தெரிந்தேன் துன்பத் திகைப்பொழிந்தேன்
மருளும் மனந்தான் என்னுடைய

வசத்தே நின்று வயங்கியதால்
இருளும் தொலைந்த தினிச்சிறிதும்

இளைக்க மாட்டேன் எனக்கருளே.

2

5479

அருளே உணர்த்த அறிந்துகொண்டேன்

அடுத்த தருணம் இதுஎன்றே
இருளே தொலைந்த திடர்அனைத்தும்

எனைவிட் டகன்றே ஒழிந்தனவால்
தெருளே சிற்றம் பலத்தாடும்

சிவமே எல்லாம் செய்யவல்ல
பொருளே இனிநான் வீண்போது

போக்க மாட்டேன் கண்டாயே.

3

5480

கண்டே களிக்கும் பின்பாட்டுக்

காலை இதுஎன் றருள்உணர்த்தக்
கொண்டே அறிந்து கொண்டேன்நல்

குறிகள் பலவுங் கூடுகின்ற
தொண்டே புரிவார்க் கருளும்அருட்

சோதிக் கருணைப் பெருமனே
உண்டேன் அமுதம் உண்கின்றேன்

உண்பேன் துன்பை ஒழித்தேனே.

4

5481

ஒழித்தேன் அவலம் அச்சம்எலாம்

ஓடத் துறந்தேன் உறுகண்எலாம்
கழித்தேன் மரணக் களைப்பற்றேன்

களித்தேன் பிறவிக் கடல்கடந்தேன்
பழித்தேன் சிற்றம் பலம்என்னாப்

பாட்டை மறந்தேன் பரம்பரத்தே
விழித்தேன் கருத்தின் படிஎல்லாம்

விளையா டுதற்கு விரைந்தேனே.

5

5482

விரைந்து விரைந்து படிகடந்தேன்

மேற்பால் அமுதம் வியந்துண்டேன்
கரைந்து கரைந்து மனம்உருகக்

கண்ணீர் பெருகக் கருத்தலர்ந்தே
வரைந்து ஞான மணம்பொங்க

மணிமன் றரசைக் கண்டுகொண்டேன்
திரைந்து நெகிழ்ந்த தோலுடம்பும்

செழும்பொன் உடம்பாய்த் திகழ்ந்தேனே.

6

5483

தேனே கன்னல் செழும்பாகே

என்ன மிகவும் தித்தித்தென்
ஊனே புகுந்தென் உளத்தில்அமர்ந்

துயிரில் கலந்த ஒருபொருளை
வானே நிறைந்த பெருங்கருணை

வாழ்வை மணிமன் றுடையானை
நானே பாடிக் களிக்கின்றேன்

நாட்டார் வாழ்த்த நானிலத்தே.

7

5484

நிலத்தே அடைந்த இடர்அனைத்தும்

நமிடத் தொழித்தே நிலைபெற்றேன்
வலத்தே அழியா வரம்பெற்றேன்

மணிமன் றேத்தும் வாழ்வடைந்தேன்
குலத்தே சமயக் குழியிடத்தே
விழுந்திவ் வுலகம் குமையாதே
நலத்தே சுத்த சன்மார்க்கம்
நாட்டா நின்றேன் நாட்டகத்தே.

8

5485

அகத்தே கறுத்துப் புறத்துவெளுத்

திருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க

சங்கத் தடைவித் திடஅவரும்
இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந்

திடுதற் கென்றே எனைஇந்த
உகத்தே இறைவன் வருவிக்க

உற்றேன் அருளைப் பெற்றேனே.

9

5486

பெற்றேன் என்றும் இறவாமை

பேதம் தவிர்ந்தே இறைவன்எனை
உற்றே கலந்தான் நானவனை

உற்றே கலந்தேன் ஒன்றானேம்
எற்றே அடியேன் செய்ததவம்

யாரே புரிந்தார் இன்னமுதம்
துற்றே உலகீர் நீவிர்எலாம்

வாழ்க வாழ்க துனிஅற்றே.

10


திருச்சிற்றம்பலம்
Back


129. சுத்த சிவநிலை

நேரிசை வெண்பா

5487.

கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்என்
எண்ணிற் கலந்தே இருக்கின்றான் - பண்ணிற்
கலந்தான்என் பாட்டிற் கலந்தான் உயிரில்
கலந்தான் கருணை கலந்து.

1

5488

எல்லா நலமும் எனக்கே கொடுக்கின்றான்
எல்லாம் செயவல்லான் எம்பெருமான் - எல்லாமாய்
நின்றான் பொதுவில் நிருத்தம் புரிகின்றான்
ஒன்றாகி நின்றான் உவந்து.

2

5489

எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்
பண்ணுகின்றேன் பண்ணுவித்துப் பாடுகின்றான் - உண்ணுகின்றேன்
தெள்ளமுதம் உள்ளந் தெளியத் தருகின்றான்
வள்ளல்நட ராயன் மகிழ்ந்து.

3

5490

சித்தியெலாந் தந்தே திருவம் பலத்தாடும்
நித்தியனென் உள்ளே நிறைகின்றான் - சத்தியம்ஈ
தந்தோ உலகீர் அறியீரோ நீவிரெலாம்
சந்தோட மாய்இருமின் சார்ந்து.

4

5491

அய்யாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே
எய்யேன் மகனேஎன் றெய்துகின்றான் - ஐயோஎன்
அப்பன் பெருங்கருணை யார்க்குண் டுலகத்தீர்
செப்பமுடன் போற்றுமினோ சேர்ந்து.

5

5492

அப்பாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே
அப்பா மகனேஎன் றார்கின்றான் - துப்பார்
சடையான்சிற் றம்பலத்தான் தானேதான் ஆனான்
உடையான் உளத்தே உவந்து.

6

5493

தானேவந் தென்உளத்தே சார்ந்து கலந்துகொண்டான்
தானே எனக்குத் தருகின்றான் - தானேநான்
ஆகப் புரிந்தானென் அப்பன் பெருங்கருணை
மேகத்திற் குண்டோ விளம்பு.

7

5494

பாலும் கொடுத்தான் பதிதிறக்கும் ஓர்திறவுக்
கோலும் கொடுத்தான் குணங்கொடுத்தான் - காலும்
தலையும் அறியும் தரமும் கொடுத்தான்
நிலையும் கொடுத்தான் நிறைந்து.

8

5495

வெவ்வினையும் மாயை விளைவும் தவிர்ந்தனவே
செவ்வைஅறி வின்பம் சிறந்தனவே - எவ்வயினும்
ஆனான்சிற் றம்பலத்தே ஆடுகின்றான் தண்அருளாம்
தேன்நான் உண் டோ ங்கியது தேர்ந்து.

9

5496

வஞ்சவினை எல்லாம் மடிந்தனவன் மாயைஇருள்
அஞ்சிஎனை விட்டே அகன்றனவால் - எஞ்சலிலா
இன்பமெலாம் என்றனையே எய்தி நிறைந்தனவால்
துன்பமெலாம் போன தொலைந்து.

10

5497

அம்மை திரோதை அகன்றாள் எனைவிரும்பி
அம்மையருட் சத்தி அடைந்தனளே - இம்மையிலே
மாமாயை நீங்கினள்பொன் வண்ணவடி வுற்றதென்றும்
சாமா றிலைஎனக்குத் தான்.

11

5498

நானே தவம்புரிந்தேன் நானிலத்தீர் அம்பலவன்
தானேவந் தென்னைத் தடுத்தாண்டான் - ஊனே
புகுந்தான்என் உள்ளம் புகுந்தான் உயிரில்
புகுந்தான் கருணை புரிந்து.

12

5499

ஒன்றே சிவம்என் றுணர்ந்தேன் உணர்ந்தாங்கு
நின்றேமெய்ஞ் ஞான நிலைபெற்றேன் - நன்றேமெய்ச்
சித்தியெலாம் பெற்றேன் திருஅம்ப லத்தாடி
பத்திஎலாம் பெற்ற பலன்.

13

5500

தூக்கங் கெடுத்தான் சுகங்கொடுத்தான் என்னுளத்தே
ஏக்கந் தவிர்த்தான் இருள்அறுத்தான் - ஆக்கமிகத்
தந்தான் எனைஈன்ற தந்தையே என்றழைக்க
வந்தான்என் அப்பன் மகிழ்ந்து.

14

5501

வாட்டமெலாம் தீர்த்தான் மகிழ்வளித்தான் மெய்ஞ்ஞான
நாட்டமெலாம் தந்தான் நலங்கொடுத்தான் - ஆட்டமெலாம்
ஆடுகநீ என்றான்தன் ஆனந்த வார்கழலைப்
பாடுகநீ என்றான் பரன்.

15

5502

தான்நான் எனும்பேதந் தன்னைத் தவிர்த்தான்நான்
ஆனான்சிற் றம்பலவன் அந்தோநான் - வானாடர்
செய்தற் கரியதவம் செய்தேன் மகிழ்கின்றேன்
எய்தற் கரியசுகம் ஏய்ந்து.

16

5503

சுத்த வடிவும் சுகவடிவாம் ஓங்கார
நித்த வடிவும் நிறைந்தோங்கு - சித்தெனும்ஓர்
ஞான வடிவுமிங்கே நான்பெற்றேன் எங்கெங்கும்
தானவிளை யாட்டியற்றத் தான்.

17

5504

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்சொல் வார்த்தைஅன்றி
நான்உரைக்கும் வார்த்தைஅன்று நாட்டீர்நான் - ஏன்உரைப்பேன்
நான்ஆர் எனக்கெனஓர் ஞானஉணர் வேதுசிவம்
ஊன்நாடி நில்லா உழி.

18

5505

ஆரணமும் ஆகமமும் ஆங்காங் குரைக்கின்ற
காரணமும் காரியமும் காட்டுவத்தான் - தாரணியில்
கண்டேன் களிக்கின்றேன் கங்குல்பகல் அற்றவிடத்
துண்டேன் அமுதம் உவந்து.

19

5506

துன்மார்க்கம் எல்லாம் தொலைத்துவிட்டேன் சுத்தசிவ
சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் - என்மார்க்கம்
நன்மார்க்கம் என்றேவான் நாட்டார் புகழ்கின்றார்
மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து.

20

5507

பன்மார்க்கம் எல்லாம் பசையற் றொழிந்தனவே
சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே - சொன்மார்க்கத்
தெல்லா உலகும் இசைந்தனவே எம்பெருமான்
கொல்லா நெறிஅருளைக் கொண்டு.

21

5508

சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப
நீதிஇயல் ஆச்சிரம நீட்டென்றும் - ஓதுகின்ற
பேயாட்ட மெல்லாம் பிதிர்ந்தொழிந்த வேபிறர்தம்
வாயாட்டம் தீர்ந்தனவே மற்று.

22

5509

சிந்தா குலந்தவிர்த்துச் சிற்றம் பலப்பெருமான்
வந்தான் எனைத்தான் வலிந்தழைத்தே - ஐந்தொழிலும்
நீயேசெய் என்றெனக்கே நேர்ந்தளித்தான் என்னுடைய
தாயே அனையான் தனித்து.

23

5510

கூகா எனஅடுத்தோர் கூடி அழாதவண்ணம்
சாகா வரம்எனக்கே தந்திட்டான் - ஏகாஅன்
ஏகா எனமறைகள் ஏத்துஞ்சிற் றம்பலத்தான்
மாகா தலனா மகிழ்ந்து.

24

5511

நாடுகின்ற தெம்பெருமான் நாட்டமதே நான்உலகில்
ஆடுகின்ற தெந்தைஅருள் ஆட்டமதே - பாடுகின்ற
பாட்டெல்லாம் அம்பலவன் பாத மலர்ப்பாட்டே
நீட்டெல்லாம் ஆங்கவன்றன் நீட்டு.

25

5512

சத்தியஞ்செய் கின்றேன் சகத்தீர் அறிமின்கள்
சித்திஎலாம் வல்ல சிவம்ஒன்றே - நித்தியம்என்
றெண்ணுமெண்ணத் தாலேநம் எண்ணமெலாம் கைகூடும்
நண்ணுமின்பத் தேன்என்று நான்.

26

5513

நானே தவம்புரிந்தேன் நம்பெருமான் நல்அருளால்
நானே அருட்சித்தி நாடடைந்தேன் - நானே
அழியா வடிவம் அவைமூன்றும் பெற்றேன்
இழியாமல் ஆடுகின்றேன் இங்கு.

27

5514

எவ்வுலகும் அண்டங்கள் எத்தனையும் நான்காண
இவ்வுலகில் எந்தை எனக்களித்தான் - எவ்வுயிரும்
சன்மார்க்க சங்கம் தனைஅடையச் செய்வித்தே
என்மார்க்கம் காண்பேன் இனி.

28

5515

சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி
நேத்திரங்கள் போற்காட்ட நேராவே - நேத்திரங்கள்
சிற்றம் பலவன் திருவருட்சீர் வண்ணமென்றே
உற்றிங் கறிந்தேன் உவந்து.

29

5516

வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்
வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்
சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை
என்ன பயனோ இவை.

30

5517

சாகாத கல்வித் தரம்அறிதல் வேண்டுமென்றும்
வேகாத கால்உணர்தல் வேண்டுமுடன் - சாகாத்
தலைஅறிதல் வேண்டும் தனிஅருளால் உண்மை
நிலைஅடைதல் வேண்டும் நிலத்து.

31

5518

பொய்உரைஎன் றெண்ணுதிரேல் போமின் புறக்கடையில்
மெய்யுரைஎன் றெண்ணுதிரேல் மேவுமினோ - ஐயனருள்
சித்திஎலாம் வல்ல திருக்கூத் துலவாமல்
இத்தினந்தொட் டாடுகிற்பான் இங்கு.

32

5519

வான்வந்த தேவர்களும் மால்அயனும் மற்றவரும்
தான்வந்து சூழ்ந்தார் தலைக்கடையில் - தேன்வந்த
மங்கை சிவகாம வல்லியொடும் எம்பெருமான்
இங்குநடஞ் செய்வான் இனி.

33

5520

சத்திஎலாம் கொண்டதனித் தந்தை நடராயன்
சித்திஎலாம் வல்லான் திருவாளன் - நித்தியன்தான்
ஊழிபல சென்றாலும் ஓவாமல் இவ்விடத்தே
வாழிநடஞ் செய்வான் மகிழ்ந்து.

34

5521

இன்று தொடங்கியிங்கே எம்பெருமான் எந்நாளும்
நன்று துலங்க நடம்புரிவான் - என்றுமென்சொல்
சத்தியம்என் றெண்ணிச் சகத்தீர் அடைமின்கள்
நித்தியம்பெற் றுய்யலாம் நீர்.

35

5522

என்உடலும் என்பொருளும் என்உயிரும் தான்கொண்டான்
தன்உடலும் தன்பொருளும் தன்உயிரும் - என்னிடத்தே
தந்தான் அருட்சிற் சபையப்பா என்றழைத்தேன்
வந்தான்வந் தான்உள் மகிழ்ந்து.

36

5523

செத்தாரை எல்லாம் திரும்ப எழுப்புதல்இங்
கெத்தால் முடியுமெனில் எம்மவரே - சித்தாம்
அருட்பெருஞ் சோதி அதனால் முடியும்
தெருட்பெருஞ் சத்தியம்ஈ தே.

37

5524

இவ்வுலகில் செத்தாரை எல்லாம் எழுகஎனில்
எவ்வுலகும் போற்ற எழுந்திருப்பார் - செவ்வுலகில்
சிற்றம் பலத்தான் திருவருள்பெற் றார்நோக்கம்
உற்றவரை உற்றவர்கள் உற்று.

38

5525

யான்புரிதல் வேண்டுங்கொல் இவ்வுலகில் செத்தாரை
ஊன்புரிந்து மீள உயிர்ப்பித்தல் - வான் புரிந்த
அம்பலத்தான் நல்லருளால் அந்தோநான் மேற்போர்த்த
கம்பலத்தால் ஆகும் களித்து.

39

5526

என்னே உலகில் இறந்தார் எழுதல்மிக
அன்னே அதிசயமென் றாடுகின்றார் - இன்னே
திருவம் பலத்தான் திருநோக்கம் பெற்றார்க்
குருவம் பலத்தேஎன் றுன்.

40

5527

ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை
நாடாதீர் பொய்உலகை நம்பாதீர் - வாடாதீர்
சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினிஇங்
கென்மார்க்க மும்ஒன்றா மே.

41

5528

மார்க்கமெலாம் ஒன்றாகும் மாநிலத்தீர் வாய்மைஇது
தூக்கமெலாம் நீக்கித் துணிந்துளத்தே - ஏக்கம்விட்டுச்
சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திடுமின் சத்தியம்நீர்
நன்மார்க்கம் சேர்வீர்இந் நாள்.

42

5529

இந்நாளே கண்டீர் இறந்தார் எழுகின்ற
நன்னாள்என் வார்த்தைகளை நம்புமினோ - இந்நாள்
அருட்பெருஞ் சோதி அடைகின்ற நாள்மெய்
அருட்பெருஞ் சத்தியம்ஈ தாம்.

43

5530

ஏமாந் திருக்கும் எமரங்காள் இவ்வுலகில்
சாமாந்தர் ஆகாத் தரம்பெறவே - காமாந்த
காரத்தை விட்டுக் கருதுமினோ இத்தருணம்
நீரத்தைச் சேர்வீர் நிஜம்.

44

5531

வீணே பராக்கில் விடாதீர் உமதுளத்தை
நாணே உடைய நமரங்காள் - ஊணாகத்
தெள்ளமுதம் இன்றெனக்குச் சேர்த்தளித்தான் சித்தாட
உள்ளியநாள் ஈதறிமின் உற்று.

45

5532

போற்றி உரைக்கின்றேன் பொய்என் றிகழாதீர்
நாற்றிசைக்கண் வாழும் நமரங்காள் - ஆற்றலருள்
அப்பன்வரு கின்றான் அருள்விளையாட் டாடுதற்கென்
றிப்புவியில் இத்தருணம் இங்கு.

46

5533

ஆளுடையான் நம்முடைய அப்பன் வருகின்ற
நாள்எதுவோ என்று நலியாதீர் - நீள
நினையாதீர் சத்தியம்நான் நேர்ந்துரைத்தேன் இந்நாள்
அனையான் வருகின்றான் ஆய்ந்து.

47


திருச்சிற்றம்பலம்
Back


130. உலகப்பேறு

கலிவிருத்தம்

5534.

இன்பால் உலகங்கள் யாவும் விளங்கின
துன்பால் இறந்தவர் துன்பற்றுத் தோன்றினர்
அன்பால் அடியவர் ஆடினர் பாடினர்
என்பால் அருட்பெருஞ் சோதியார் எய்தவே.

1

5535

பாம்பெலாம் ஓடின பறவையுட் சார்ந்தன
தீம்பலா வாழைமாத் தென்னை சிறந்தன
ஆம்பலன் மென்மேலும் ஆயின என்னுளத்
தோம்பல்என் அருட்பெருஞ் சோதியார் ஓங்கவே.

2

5536

மலங்கழிந் துலகவர் வானவர் ஆயினர்
வலம்பெறு சுத்தசன் மார்க்கம் சிறந்தது
பலம்பெறு மனிதர்கள் பண்புளர் ஆயினர்
நலம்பெறும் அருட்பெருஞ் சோதியார் நண்ணவே.

3

5537

முன்னுள மார்க்கங்கள் யாவும் முடிந்தன
மன்னுள சுத்தசன் மார்க்கம் சிறந்தது
பன்னுளந் தெளிந்தன பதிநடம் ஓங்கின
என்னுளத் தருட்பெருஞ் சோதியார் எய்தவே.

4

5538

இடம்பெற்ற உயிர்எலாம் விடம்அற்று வாழ்ந்தன
மடம்பெற்ற மனிதர்கள் மதிபெற்று வாழ்கின்றார்
திடம்பெற்றே எழுகின்றார் செத்தவர் தினந்தினம்
நடம்பெற்ற அருட்பெருஞ் சோதியார் நண்ணவே.

5

5539

அண்டமும் அகிலமும் அருளர சாட்சியைக்
கொண்டன ஓங்கின குறைஎலாம் தீர்ந்தன
பண்டங்கள் பலித்தன பரிந்தென துள்ளத்தில்
எண்டகும் அருட்பெருஞ் சோதியார் எய்தவே.

6

5540

குணங்கள் சிறந்தன குற்றங்கள் அற்றன
மணங்கள் விளங்கின வாழ்வுகள் ஓங்கின
பிணங்கள் எலாம்உயிர் பெற்றெழுந் தோங்கின
இணங்க அருட்பெருஞ் சோதியார் எய்தவே.

7

5541

பத்தர்கள் பாடினர் பணிந்துநின் றாடினர்
முத்தர்கள் மெய்ப்பொருள் முன்னி மகிழ்ந்தனர்
சித்தர்கள் ஆனந்தத் தெள்ளமு துண்டனர்
சுத்த அருட்பெருஞ் சோதியார் தோன்றவே.

8

5542

ஏழுல கவத்தைவிட் டேறினன் மேனிலை
ஊழிதோ றூழியும் உயிர்தழைத் தோங்கினன்
ஆழியான் அயன்முதல் அதிசயித் திடஎனுள்
வாழிஅ ருட்பெருஞ் சோதியார் மன்னவே.

9

5543

இருட்பெரு மலமுழு துந்தவிர்ந் திற்றது
மருட்பெரும் கன்மமும் மாயையும் நீங்கின
தெருட்பெருஞ் சித்திகள் சேர்ந்தன என்னுளத்
தருட்பெருஞ் சோதிஎன் அன்பிற் கலந்ததே.

10


திருச்சிற்றம்பலம்
Back


131. அன்புருவமான சிவம் ஒன்றே உளதெனல்

கலிநிலைத் துறை

5544.

அருட்பெ ருந்தனிச் சோதிஅம் பலத்திலே நடிக்கும்
பொருட்பெ ருந்திரு நடமது போற்றுவீர் புலவீர்
மருட்பெ ரும்பகை நீக்கிமெய் வாழ்வுபெற் றிடலாம்
தெருட்பெ ரும்பதத் தாணைஈ தறிமினோ தெளிந்தே.

1

5545

வாரம் செய்தபொன் மன்றிலே நடிக்கும்பொன் அடிக்கே
ஆரம் செய்தணிந் தவர்க்குமுன் அரிஅயன் முதலோர்
வீரம் செல்கிலா தறிமினோ வேதமேல் ஆணை
ஓரம் சொல்கிலேன் நடுநின்று சொல்கின்றேன் உலகீர்.

2

5546

ஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத் தாடும்
சோதி தன்னையே நினைமின்கள் சுகம்பெற விழைவீர்
நீதி கொண்டுரைத் தேன்இது நீவீர்மேல் ஏறும்
வீதி மற்றைய வீதிகள் கீழ்ச்செலும் வீதி.

3

5547

நாதம் சொல்கின்ற திருச்சிற்றம் பலத்திலே நடிக்கும்
பாதம் சொல்கின்ற பத்தரே நித்தர்என் றறிமின்
வேதம் சொல்கின்ற பரிசிது மெய்ம்மையான் பக்க
வாதஞ் சொல்கிலேன் நடுநின்று சொல்கின்றேன் மதித்தே.

4

5548

துரிய மேல்பர வெளியிலே சுகநடம் புரியும்
பெரிய தோர்அருட் சோதியைப் பெறுதலே எவைக்கும்
அரிய பேறுமற் றவைஎலாம் எளியவே அறிமின்
உரிய இம்மொழி மறைமொழி சத்தியம் உலகீர்.

5

5549

ஆக மாந்தமும் வேதத்தின் அந்தமும் அறையும்
பாக மாம்பர வெளிநடம் பரவுவீர் உலகீர்
மோக மாந்தருக் குரைத்திலேன் இதுசுகம் உன்னும்
யோக மாந்தர்க்குக் காலமுண் டாகவே உரைத்தேன்.

6

5550

வான நாடரும் நாடரும் மன்றிலே வயங்கும்
ஞான நாடகக் காட்சியே நாம்பெறல் வேண்டும்
ஊன நாடக் காட்சியால் காலத்தை ஒழிக்கும்
ஈன நாடகப் பெரியர்காள் வம்மினோ ஈண்டே.

7

5551

சமயம் ஓர்பல கோடியும் சமயங்கள் தோறும்
அமையும் தெய்வங்கள் அனந்தமும் ஞானசன் மார்க்கத்
தெமையும் உம்மையும் உடையதோர் அம்பலத் திறையும்
அமைய ஆங்கதில் நடம்புரி பதமும்என் றறிமின்.(390)

8

(390). அமைய அம்பலத்தாடும் பொற்பதமும் என்றறிமின் - முதற்பதிப்பு,
பொ. சு., பி. இரா.

5552

ஆறு கோடியாம் சமயங்கள் அகத்தினும் அவைமேல்
வீறு சேர்ந்தசித் தாந்தவே தாந்தநா தாந்தம்
தேறும் மற்றைய அந்தத்தும் சிவம்ஒன்றே அன்றி
வேறு கண்டிலேன் கண்டிரேல் பெரியர்காள் விளம்பீர்.

9

5553

கலைஇ ருந்ததோர் திருச்சிற்றம் பலத்திலே கருணை
நிலைஇ ருந்தது நினைத்தவை யாவையும் பெறலாம்
மலைஇ ருந்தென இருப்பிரேல் வம்மினோ அன்றிக்
கொலைவி ரும்புவீர் எனிற்புறத் தேகுமின் குலைந்தே.

10

5554

கதிஇ ருக்கின்ற திருச்சிற்றம் பலத்திலே கருணை
நிதிஇ ருக்கின்ற தாதலால் நீவீர்கள் எல்லாம்
பதிய இங்ஙனே வம்மினோ கொலைபயில் வீரேல்
விதியை நோமினோ போமினோ சமயவெப் பகத்தே.

11

5555

அருள்வி ளங்கிய திருச்சிற்றம் பலத்திலே அழியாப்
பொருள்வி ளங்குதல் காண்மினோ காண்மினோ புவியீர்
மருள்உ ளங்கொளும் வாதனை தவிர்ந்தருள் வலத்தால்
தெருள்வி ளங்குவீர் ஞானசன் மார்க்கமே தெளிமின்.

12

திருச்சிற்றம்பலம்
Back


132. உலகர்க்கு உய்வகை கூறல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5556.

கட்டோ டே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர்

கண்ணோடே கருத்தோடே கருத்தனைக் கருதீர்
பட்டோ டே பணியோடே திரிகின்றீர் தெருவில்

பசியோடே வந்தாரைப் பார்க்கவும் நேரீர்
கொட்டோ டே முழக்கோடே கோலங்காண் கின்றீர்

குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர்
எட்டோ டே இரண்டுசேர்த் தெண்ணவும் அறியீர்

எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.

1

5557

ஆறாமல் அவியாமல் அடைந்தகோ பத்தீர்

அடர்வுற உலகிடை அஞ்சாது திரிவீர்
மாறாமல் மனஞ்சென்ற வழிசென்று திகைப்பீர்

வழிதுறை காண்கிலீர் பழிபடும் படிக்கே
நாறாத மலர்போலும் வாழ்கின்றீர் மூப்பு

நரைதிரை மரணத்துக் கென்செயக் கடவீர்
ஏறாமல் வீணிலே இறங்குகின் றீரே
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.

2

5558

ஆயாமை யாலேநீர் ஆதிஅ னாதி

ஆகிய சோதியை அறிந்துகொள் கில்லீர்
மாயாமை பிறவாமை வழியொன்றும் உணரீர்

மறவாமை நினையாமை வகைசிறி தறியீர்
காயாமை பழுக்கின்ற கருத்தையும் கருதீர்

கண்மூடித் திரிகின்றீர் கனிவொடும் இரப்போர்க்
கீயாமை ஒன்றையே இன்துணை என்பீர்

எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.

3

5559

சாமாந்தர் ஆகாத் தரஞ்சிறி துணரீர்

தத்துவ ஞானத்தை இற்றெனத் தெரியீர்
மாமாந்த நோயுற்ற குழவியில் குழைந்தீர்

வாழ்க்கையி லேஅற்ப மகிழ்ச்சியும் பெற்றீர்
காமாந்த காரத்தில் கண்மூடித் திரிவீர்

கற்பன கற்கிலீர் கருத்தனைக் கருதா
தேமாந்து தூங்குகின் றீர்விழிக் கின்றீர்

எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.

4

5560

அச்சையும் உடம்பையும் அறிவகை அறியீர்

அம்மையும் அப்பனும் ஆர்எனத் தெரியீர்
பச்சையும் செம்மையும் கருமையும் கூடிப்

பலித்தநும் வாழ்க்கையில் பண்பொன்றும் இல்லீர்
பிச்சையிட் டுண்ணவும் பின்படு கின்றீர்

பின்படு தீமையின் முன்படு கின்றீர்
இச்சையில் கண்மூடி எச்சகம் கண்டீர்

எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.

5

5561

வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர்

வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர்
பெட்டிமேல் பெட்டிவைத் தாள்கின்றீர் வயிற்றுப்

பெட்டியை நிரப்பிக்கொண் டொட்டியுள் இருந்தீர்
பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர்

பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்
எட்டிபோல் வாழ்கின்றீர் கொட்டிபோல் கிளைத்தீர்

எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.

6

5562

வன்சொல்லின் அல்லது வாய்திறப் பறியீர்

வாய்மையும் தூய்மையும் காய்மையில் வளர்ந்தீர்
முன்சொல்லும் ஆறொன்று பின்சொல்வ தொன்றாய்

மூட்டுகின் றீர்வினை மூட்டையைக் கட்டி
மன்சொல்லும் மார்க்கத்தை மறந்துதுன் மார்க்க

வழிநடக் கின்றீர்அம் மரணத்தீர்ப் புக்கே
என்சொல்ல இருக்கின்றீர் பின்சொல்வ தறியீர்

எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.

7

5563

துன்மார்க்க நடையிடைத் தூங்குகின் றீரே

தூக்கத்தை விடுகின்ற துணைஒன்றும் கருதீர்
சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திட விழையீர்

சாவையும் பிறப்பையும் தவிர்ந்திட விரும்பீர்
பன்மார்க்கம் செல்கின்ற படிற்றுளம் அடக்கீர்

பசித்தவர் தம்முகம் பார்த்துண வளியீர்
என்மார்க்கம் எச்சுகம் யாதுநும் வாழ்க்கை

எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.

8

5564

பொய்கட்டிக் கொண்டுநீர் வாழ்கின்றீர் இங்கே

புலைகட்டிக் கொண்டஇப் பொய்யுடல் வீழ்ந்தால்
செய்கட்டி வாழ்கின்ற செருக்கற்று நரகில்

சிறுபுழு ஆகித் திகைத்திடல் அறியீர்
கைகட்டி வாய்பொத்தி நிற்பாரைக் கண்டே

கைகொட்டிச் சிரிக்கின்றீர் கருணைஒன் றில்லீர்
எய்கட்டி இடைமொய்க்கும் ஈயினும் சிறியீர்

எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.

9

5565

பண்ணாத தீமைகள் பண்ணுகின் றீரே

பகராத வன்மொழி பகருகின் றீரே
நண்ணாத தீயினம் நண்ணுகின் றீரே

நடவாத நடத்தைகள் நடக்கவந் தீரே
கண்ணாகக் காக்கின்ற கருத்தனை நினைந்தே

கண்ணார நீர்விட்டுக் கருதறி யீரே
எண்ணாத தெண்ணவும் நேரும்ஓர் காலம்

எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.

10


திருச்சிற்றம்பலம்
Back


133. புனித குலம் பெறுமாறு புகலல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5566.

சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே

சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்

அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த

நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய

மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.

1

5567

காடுவெட்டி நிலந்திருத்திக் காட்டெருவும் போட்டுக்

கரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர்
கூடுவிட்டுப் போயினபின் எதுபுரிவீர் எங்கே

குடியிருப்பீர் ஐயோநீர் குறித்தறியீர் இங்கே
பாடுபட்டீர்(391) பயன்அறியீர் பாழ்க்கிறைத்துக் கழித்தீர்

பட்டதெலாம் போதும்இது பரமர்வரு தருணம்
ஈடுகட்டி வருவீரேல் இன்பம்மிகப் பெறுவீர்

எண்மைஉரைத் தேன்அலன்நான் உண்மையுரைத் தேனே.

2

(391). பாடுபட்டுப் - ச. மு. க. பதிப்பு.

5568

ஆற்றுவெள்ளம் வருவதன்முன் அணைபோட அறியீர்

அகங்காரப் பேய்பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர்
கூற்றுவருங் கால்அதனுக் கெதுபுரிவீர் ஐயோ

கூற்றுதைத்த சேவடியைப் போற்றவிரும் பீரே
வேற்றுரைத்து வினைபெருக்கி மெலிகின்ற உலகீர்

வீணுலகக் கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின்
சாற்றுவக்க எனதுதனித் தந்தைவரு கின்ற

தருணம்இது சத்தியஞ்சிற் சத்தியைச்சார் வதற்கே.

3

5569

பொய்விளக்கப் புகுகின்றீர் போதுகழிக் கின்றீர்

புலைகொலைகள் புரிகின்றீர் கலகலஎன் கின்றீர்
கைவிளக்குப் பிடித்தொருபாழ்ங் கிணற்றில்விழு கின்ற

களியர்எனக் களிக்கின்றீர் கருத்திருந்தும் கருதீர்
ஐவிளக்கு மூப்புமர ணாதிகளை நினைத்தால்

அடிவயிற்றை முறுக்காதோ கொடியமுயற் றுலகீர்
மெய்விளக்க எனதுதந்தை வருகின்ற தருணம்

மேவியதீண் டடைவீரேல் ஆவிபெறு வீரே.

4

5570

எய்வகைசார்392 மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள்

எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்று
கைவகையே கதறுகின்றீர் தெய்வம்ஒன்றென் றறியீர்

கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்
ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என் புரிவீர்

அழியுடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்
உய்வகைஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்

உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே.

5

(392). எவ்வகைசார் - முதற்பதிப்பு., பொ. சு. பதிப்பு.

5571

உடம்புவரு வகைஅறியீர் உயிர்வகையை அறியீர்

உடல்பருக்க உண்டுநிதம் உறங்குதற்கே அறிவீர்
மடம்புகுபேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை

வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறைகற் றறியீர்
இடம்பெறுபொய் வாழ்க்கையிலே இன்பதுன்பம் அடுத்தே

எண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழைஉல கீரே
நடம்புரிஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்

நண்ணியது நண்ணுமினோ புண்ணியஞ்சார் வீரே.

6

5572

நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரே

நற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர்
வரையில்உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும்

வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர்
புரையுறுநும் குலங்கள்எலாம் புழுக்குலம்என் றறிந்தே

புத்தமுதம் உண்டோ ங்கும் புனிதகுலம் பெறவே
உரைபெறும்என் தனித்தந்தை வருகின்ற தருணம்

உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே.

7

5573

கனமுடையேம் கட்டுடையேம் என்றுநினைத் திங்கே

களித்திறுமாந் திருக்கின்றீர் ஒளிப்பிடமும் அறியீர்
சினமுடைய கூற்றுவரும் செய்திஅறி யீரோ

செத்தநும தினத்தாரைச் சிறிதும்நினை யீரோ
தினகரன்போல் சாகாத தேகமுடை யவரே

திருவுடையார் எனஅறிந்தே சேர்ந்திடுமின் ஈண்டே
மனமகிழ்ந்து கேட்கின்ற வரமெல்லாம் எனக்கே

வழங்குதற்கென் தனித்தந்தை வருதருணம் இதுவே.393

8

(393). முதற்பதிப்பிலும், பொ. சு. பதிப்பிலும் 'கனமுடையேம்'
என்பது ஒன்பதாம் பாடலாகவும் 'வையகத்தீர்' என்பது
எட்டாம் பாடலாகவும் உள்ளன.

5574

வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமது

வாழ்க்கைஎலாம் வாழ்க்கைஎன மதித்துமயங் காதீர்
மையகத்தே உறுமரண வாதனையைத் தவிர்த்த

வாழ்க்கையதே வாழ்க்கைஎன மதித்ததனைப் பெறவே
மெய்அகத்தே விரும்பிஇங்கே வந்திடுமின் எனது

மெய்ப்பொருளாம் தனித்தந்தை இத்தருணந் தனிலே
செய்அகத்தே வளர்ஞான சித்திபுரந் தனிலே

சித்தாடல் புரிகின்றார் திண்ணம்இது தானே.

9

5575

கரணம்மிகக் களிப்புறவே கடல்உலகும் வானும்

கதிபதிஎன் றாளுகின்றீர் அதிபதியீர் நீவிர்
மரணபயம் தவிராதே வாழ்வதில்என் பயனோ

மயங்காதீர் உயங்காதீர் வந்திடுமின் ஈண்டே
திரணமும்ஓர் ஐந்தொழிலைச் செய்யஒளி வழங்கும்

சித்திபுரம் எனஓங்கும் உத்தரசிற் சபையில்
சரணம்எனக் களித்தெனையும் தானாக்க எனது

தனித்தந்தை வருகின்ற தருணம்இது தானே.

10


திருச்சிற்றம்பலம்
Back


134. மரணமிலாப் பெருவாழ்வு

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5576.

நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே

நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண் ணீரதனால் உடம்பு
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான

நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்

மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்

பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.

1

5577

புகுந்தருணம் இதுகண்டீர் நம்மவரே நான்தான்

புகல்கின்றேன் என்மொழிஓர் பொய்மொழிஎன் னாதீர்
உகுந்தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும்

உடைமைகளும் உலகியலும் உற்றதுணை அன்றே
மிகுந்தசுவைக் கரும்பேசெங் கனியேகோற் றேனே

மெய்ப்பயனே கைப்பொருளே விலையறியா மணியே
தகுந்ததனிப் பெரும்பதியே தயாநிதியே கதியே

சத்தியமே என்றுரைமின் பத்தியொடு பணிந்தே.

2

5578

பணிந்துபணிந் தணிந்தணிந்து பாடுமினோ உலகீர்

பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே
துணிந்துவந்த வேதாந்த சுத்தஅனு பவமே

துரியமுடி அனுபவமே சுத்தசித்தாந் தமதாய்த்
தணிந்தநிலைப் பெருஞ்சுகமே சமரசசன் மார்க்க

சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே என்று
கணிந்துளத்தே கனிந்துநினைந் துரைத்திடில்அப் பொழுதே

காணாத காட்சிஎலாம் கண்டுகொளல் ஆமே.

3

5579

கண்டதெலாம் அனித்தியமே கேட்டதெலாம் பழுதே

கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே
உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே

உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே
விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க

மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே
எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்

இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.

4

5580

இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம்

எல்லாம்செய் வல்லசித்தி இறைமையும்பெற் றிடலாம்
அன்புடையீர் வம்மின்இங்கே சமரசசன் மார்க்கம்

அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப்
பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞான

பூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே
வன்புடையார் பெறற்கரிதாம் மணியேசிற் சபையின்

மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே.

5

5581

தீமைஎலாம் நன்மைஎன்றே திருஉளங்கொண் டருளிச்

சிறியேனுக் கருளமுதத் தெளிவளித்த திறத்தை
ஆமயந்தீர்த் தியற்கைஇன்ப அனுபவமே மயமாய்

அம்பலத்தே விளங்குகின்ற அருட்பெருஞ்சோ தியைஓர்
ஓமயவான் வடிவுடையார் உள்ளகத்தே நிறைந்த

ஒருபொருளைப் பெருங்கருணை உடையபெரும் பதியை
நாமருவி இறவாத நலம்பெறலாம் உலகீர்

நல்லஒரு தருணம்இது வல்லைவம்மின் நீரே.

6

5582

நீர்பிறரோ யான்உமக்கு நேயஉற வலனோ

நெடுமொழியே உரைப்பன்அன்றிக் கொடுமொழிசொல் வேனோ
சார்புறவே அருளமுதம் தந்தெனைமேல் ஏற்றித்

தனித்தபெரும் சுகம்அளித்த தனித்தபெரும் பதிதான்
சீர்பெறவே திருப்பொதுவில் திருமேனி தரித்துச்

சித்தாடல் புரிகின்ற திருநாள்கள் அடுத்த
ஓர்புறவே இதுநல்ல தருணம்இங்கே வம்மின்

உலகியலீர் உன்னியவா றுற்றிடுவீர் விரைந்தே.

7

5583

விரைந்துவிரைந் தடைந்திடுமின் மேதினியீர் இங்கே

மெய்மைஉரைக் கின்றேன்நீர் வேறுநினை யாதீர்
திரைந்துதிரைந் துளுத்தவரும் இளமைஅடைந் திடவும்

செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய
வரைந்துவரைந் தெல்லாஞ்செய் வல்லசித்தன் தானே

வருகின்ற தருணம்இது வரம்பெறலாம் நீவீர்
கரைந்துகரைந் துளம்உருகிக் கண்களின்நீர் பெருகிக்

கருணைநடக் கடவுளைஉட் கருதுமினோ களித்தே.

8

5584

களித்துலகில் அளவிகந்த காலம்உல கெல்லாம்

களிப்படைய அருட்சோதிக் கடவுள்வரு தருணம்
தெளித்திடும்எத் தருணம்அதோ என்னாதீர் இதுவே

செத்தவரை எழுப்புகின்ற திகழ்தருணம் உலகீர்
ஒளித்துரைக்கின் றேன்அலன்நான் வாய்ப்பறைஆர்க் கின்றேன்

ஒருசிறிதும் அச்சமுறேன் உள்ளபடி உணர்ந்தேன்
அளித்திடுசிற் றம்பலத்தென் அப்பன்அருள் பெறவே

ஆசைஉண்டேல் வம்மின்இங்கே நேசமுடை யீரே.

9

5585

ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்

அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்
ஏசறநீத் தெனைஆட்கொண் டெண்ணியவா றளித்தான்

எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்
தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத்

திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே
மோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர்

முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே.

10

5586

அடைந்திடுமின் உலகீர்இங் கிதுதருணம் கண்டீர்

அருட்சோதிப் பெரும்பதிஎன் அப்பன்வரு தருணம்
கடைந்ததனித் திருவமுதம் களித்தருத்தி எனக்கே

காணாத காட்சிஎலாம் காட்டுகின்ற தருணம்
இடைந்தொருசார் அலையாதீர் சுகம்எனைப்போல் பெறுவீர்

யான்வேறு நீர்வேறென் றெண்ணுகிலேன் உரைத்தேன்
உடைந்தசம யக்குழிநின் றெழுந்துணர்மின் அழியா

ஒருநெறியாம் சன்மார்க்கத் திருநெறிபெற் றுவந்தே.

11

5587

திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச்

சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு
வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்து

வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்
பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்

பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே
கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்

கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.

12

5588

உண்மையுரைக் கின்றேன்இங் குவந்தடைமின் உலகீர்

உரைஇதனில் சந்தேகித் துளறிவழி யாதீர்
எண்மையினான் எனநினையீர் எல்லாஞ்செய் வல்லான்

என்னுள்அமர்ந் திசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர்
தண்மையொடு சுத்தசிவ சன்மார்க்க நெறியில்

சார்ந்துவிரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக்
கண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள்எனப் புகலும்

கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே.

13

5589

தானேதான் ஆகிஎலாம் தானாகி அலனாய்த்

தனிப்பதியாய் விளங்கிடும்என் தந்தையைஎன் தாயை
வானேஅவ் வான்கருவே வான்கருவின் முதலே

வள்ளால்என் றன்பரெலாம் உள்ளாநின் றவனைத்
தேனேசெம் பாகேஎன் றினித்திடுந்தெள் ளமுதைச்

சிற்சபையில் பெருவாழ்வைச் சிந்தைசெய்மின் உலகீர்
ஊனேயும் உடலழியா தூழிதொறும் ஓங்கும்

உத்தமசித் தியைப்பெறுவீர் சத்தியம்சொன் னேனே.

14

5590

சத்தியவே தாந்தமெலாம் சித்தாந்தம் எல்லாம்

தனித்தனிமேல் உணர்ந்துணர்ந்தும் தனையுணர்தற் கரிதாய்
நித்தியசிற் சபைநடுவே நிறைந்துநடம் புரியும்

நித்தபரி பூரணனைச் சித்தசிகா மணியை
அத்தகையோர் பெரும்பதியை அருமருந்தை அடியேன்

ஆவியைஎன் ஆவியிலே அமர்ந்ததயா நிதியைச்
சித்தியெலாம் எனக்களித்த சிவகதியை உலகீர்

சிந்தைசெய்து வாழ்த்துமினோ நிந்தைஎலாம் தவிர்ந்தே.

15

5591

நிந்தையிலார் நெஞ்சகத்தே நிறைந்தபெருந் தகையை

நிலையனைத்தும் காட்டியருள் நிலைஅளித்த குருவை
எந்தையைஎன் தனித்தாயை என்னிருகண் மணியை

என்உயிரை என்உணர்வை என்அறிவுள் அறிவை
சிந்தையிலே தனித்தினிக்கும் தெள்ளமுதை அனைத்தும்

செய்யவல்ல தனித்தலைமைச் சிவபதியை உலகீர்
முந்தைமல இருட்டொழிய முன்னுமினோ கரண

முடுக்கொழித்துக் கடைமரண நடுக்கொழித்து முயன்றே.

16

5592

முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும்

முடுகிஅழிந் திடவும்ஒரு மோசமும்இல் லாதே
இயன்றஒரு சன்மார்க்கம் எங்குநிலை பெறவும்

எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர்
துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம்

தோன்றஎழு கின்றதிது தொடங்கிநிகழ்ந் திடும்நீர்
பயின்றறிய விரைந்துவம்மின் படியாத படிப்பைப்

படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே.

17

5593

சுகமறியீர் துன்பம்ஒன்றே துணிந்தறிந்தீர் உலகீர்

சூதறிந்தீர் வாதறிந்தீர் தூய்மையறிந் திலிரே
இகம்அறியீர் பரம்அறியீர் என்னேநுங் கருத்தீ

தென்புரிவீர் மரணம்வரில் எங்குறுவீர் அந்தோ
அகமறிந்தீர்(394) அனகமறிந் தழியாத ஞான

அமுதவடி வம்பெறலாம் அடைந்திடுமின் ஈண்டே
முகமறியார் போலிருந்தீர் என்னைஅறி யீரோ

முத்தரெலாம் போற்றும்அருட் சித்தர்மகன் நானே.

18

(394). அகமறியீர் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க.

5594

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை

நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே
வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்

வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலா் பெறவே
தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்

தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்
ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்

யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே.

19

5595

குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின்

கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்
வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது

மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்
பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்

புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்
செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்

சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.

20

5596

சேர்ந்திடவே ஒருப்படுமின் சமரசசன் மார்க்கத்

திருநெறியே பெருநெறியாம் சித்திஎலாம் பெறலாம்
ஓர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர்

உலகமெலாம் கண்டிடும்ஓர் உளவைஅறிந் திலிரே
வார்ந்தகடல் உலகறிய மரணம்உண்டே அந்தோ

மரணம்என்றால் சடம்எனும்ஓர் திரணமும்சம் மதியா
சார்ந்திடும்அம் மரணமதைத் தடுத்திடலாம் கண்டீர்

தனித்திடுசிற் சபைநடத்தைத் தரிசனஞ்செய் வீரே.

21

5597

செய்தாலும் தீமைஎலாம் பொறுத்தருள்வான் பொதுவில்

திருநடஞ்செய் பெருங்கருணைத் திறத்தான்அங் கவனை
மெய்தாவ நினைத்திடுக சமரசசன் மார்க்கம்

மேவுகஎன் றுரைக்கின்றேன் மேதினியீர் எனைத்தான்
வைதாலும் வைதிடுமின் வாழ்த்தெனக்கொண் டிடுவேன்

மனங்கோணேன் மானம்எலாம் போனவழி விடுத்தேன்
பொய்தான்ஓர் சிறிதெனினும் புகலேன்சத் தியமே

புகல்கின்றேன் நீவிர்எலாம் புனிதமுறும் பொருட்டே.

22

5598

பொருட்டலநும் போகம்எலாம் பொய்யாம்இங் கிதுநான்

புகலுவதென் நாடொறுநும் புந்தியிற்கண் டதுவே
மருட்டுலகீர் இருட்டுலகில் மடிவதழ கலவே

மரணமிலாப் பெருவாழ்வில் வாழவம்மின் இங்கே
பொருட்டிறஞ்சேர் சுத்தசிவ சன்மார்க்க நிலையில்

பொருந்துமின்சிற் சபைஅமுதம் அருந்துமின்அன் புடனே
அருட்டிறஞ்சேர்ந் தெண்ணியவா றாடுமினோ நும்மை

அடுப்பவரே அன்றிநின்று தடுப்பவர்மற் றிலையே.

23

5599

மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்

மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ
சற்றும்அதை நும்மாலே தடுக்கமுடி யாதே

சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை
எற்றிநின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும்

இல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர்
பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டருளம்

பலப்பற்றே பற்றுமினோ எற்றும்இற வீரே.

24

5600

இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்

இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்
மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு

மறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்
சிறந்திடுசன் மார்க்கம்ஒன்றே பிணிமூப்பு மரணம்

சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே
பிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு

பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.

25

5601

உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே

உறவன்அன்றிப் பகைவன்என உன்னாதீர் உலகீர்
கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர்

கரணம்எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ
சற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது

தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்
இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும்சேர்ந் திடுமின்

என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே.

26

5602

சன்மார்க்கப் பெருங்குணத்தார் தம்பதியை என்னைத்

தாங்குகின்ற பெரும்பதியைத் தனித்தசபா பதியை
நன்மார்க்கத் தெனைநடத்திச் சன்மார்க்க சங்க

நடுவிருக்க அருளமுதம் நல்கியநா யகனைப்
புன்மார்க்கர்க் கறிவரிதாம் புண்ணியனை ஞான

பூரணமெய்ப் பொருளாகிப் பொருந்தியமா மருந்தை
அன்மார்க்கம் தவிர்த்தருளி அம்பலத்தே நடஞ்செய்

அருட்பெருஞ்சோ தியைஉலகீர் தெருட்கொளச்சார் வீரே.

27

5603

சார்உலக வாதனையைத் தவிர்த்தவர்உள் ளகத்தே

சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை
நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம்

நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி
ஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னை

எல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை
ஓர்உறவென் றடைந்துலகீர் போற்றிமகிழ்ந் திடுமின்

உள்ளம்எலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே.

28


திருச்சிற்றம்பலம்
Back


135. சமாதி வற்புறுத்தல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5604.

ஆய்உரைத்த அருட்ஜோதி வருகின்ற

தருணம்இதே அறிமின் என்றே
வாய்உரைத்த வார்த்தைஎன்றன் வார்த்தைகள்என்

கின்றார்இம் மனிதர்அந்தோ
தாய்உரைத்த திருப்பொதுவில் நடம்புரிந்தென்

உளங்கலந்த தலைா இங்கே
நீஉரைத்த திருவார்த்தை எனஅறியார்

இவர்அறிவின் நிகழ்ச்சி என்னே.

1

5605

இறந்தவர்கள் பலரும்இங்கே எழுகின்ற

தருணம்இதே என்று வாய்மை
அறந்தழைய உரைக்கின்ற வார்த்தைகள்என்

வார்த்தைகள்என் றறைகின் றாரால்
மறந்தசிறி யேன்உரைக்க வல்லேனோ

எல்லாஞ்செய் வல்லோய் உன்றன்
சிறந்ததிரு வார்த்தைஎனத் தெரிந்திலர்இம்

மனிதர்மதித் திறமை என்னே.

2

5606

சோற்றாசை யொடுகாமச் சேற்றாசைப்

படுவாரைத் துணிந்து கொல்லக்
கூற்றாசைப் படும்எனநான் கூறுகின்ற

துண்மையினில் கொண்டு நீவீர்
நேற்றாசைப் பட்டவருக் கின்றருள்வார்

போலும்அன்றி நினைத்த வாங்கே
பேற்றாசைக் கருள்புரியும் ஞானசபா

பதிப்புகழைப் பேசு வீரே.

3

5607

தொண்டாளப் பணந்தேடுந் துறையாள

உலகாளச் சூழ்ந்த காமப்
பெண்டாளத் திரிகின்ற பேய்மனத்தீர்

நும்முயிரைப் பிடிக்க நாளைச்
சண்டாளக் கூற்றுவரில் என்புகல்வீர்

ஞானசபைத் தலைவன் உம்மைக்
கொண்டாளக் கருதுமினோ ஆண்டபின்னர்

இவ்வுலகில் குலாவு வீரே.

4

5608

பிறந்தவரை நீராட்டிப் பெருகவளர்த்

திடுகின்றீர் பேய ரேநீர்
இறந்தவரைச் சுடுகின்றீர் எவ்வணஞ்சம்

மதித்தீரோ இரவில் தூங்கி
மறந்தவரைத் தீமூட்ட வல்லீரால்

நும்மனத்தை வயிரம் ஆன
சிறந்தவரை எனப்புகழச் செய்துகொண்டீர்

ஏன்பிறந்து திரிகின் றீரே.

5

5609

அணங்கெழுபே ரோசையொடும் பறையோசை

பொங்கக்கோ ரணிகொண் டந்தோ
பிணங்கழுவி எடுத்துப்போய்ச் சுடுகின்றீர்

இனிச்சாகும் பிணங்க ளேநீர்
கணங்கழுகுண் டாலும்ஒரு பயனுண்டே

என்னபயன் கண்டீர் சுட்டே
எணங்கெழுசாம் பலைக்கண்டீர் அதுபுன்செய்

எருவுக்கும் இயலா தன்றே.

6

5610

குணம்புதைக்க உயிரடக்கம் கொண்டதுசுட்

டால்அதுதான் கொலையாம் என்றே
வணம்புதைக்க வேண்டும்என வாய்தடிக்கச்

சொல்கின்றேன் வார்த்தை கேட்டும்
பிணம்புதைக்கச் சம்மதியீர் பணம்புதைக்கச்

சம்மதிக்கும் பேய ரேநீர்
எணம்புதைக்கத் துயில்வார்நும் பாற்றுயிலற்

கஞ்சுவரே இழுதை யீரே.

7

5611

கட்டாலும் கனத்தாலும் களிக்கின்ற

பேயுலகீர் கலைசோர்ந் தாரைப்
பொட்டாலும் துகிலாலும் புனைவித்துச்

சுடுகின்றீர் புதைக்க நேரீர்
சுட்டாலும் சுடுமதுகண் டுமதுடம்பு

துடியாதென் சொல்லீர் நும்மைத்
தொட்டாலும் தோஷமுறும் விட்டாலும்

கதியிலைமேல் சூழ்வீர் அன்றே.

8

5612

பரன்அளிக்கும் தேகம்இது சுடுவதப

ராதம்எனப் பகர்கின் றேன்நீர்
சிரம்நெளிக்கச் சுடுகின்றீர் செத்தவர்கள்

பற்பலரும் சித்த சாமி
உரனளிக்க எழுகின்ற திருநாள்வந்

தடுத்தனஈ துணர்ந்து நல்லோர்
வரனளிக்கப் புதைத்தநிலை காணீரோ

கண்கெட்ட மாட்டி னீரே.

9

5613

புலைத்தொழிலே புரிகின்றீர் புண்ணியத்தைக்

கருங்கடலில் போக விட்டீர்
கொலைத்தொழிலில் கொடியீர்நீர் செத்தாரைச்

சுடுகின்ற கொடுமை நோக்கிக்
கலைத்தொழிலில் பெரியர்உளம் கலங்கினர்அக்

கலக்கம்எலாம் கடவுள்நீக்கித்
தலைத்தொழில்செய் சன்மார்க்கம் தலைஎடுக்கப்

புரிகுவதித் தருணம் தானே.

10


திருச்சிற்றம்பலம்
Back


136. சன்மார்க்க உலகின் ஒருமைநிலை

நேரிசை வெண்பா

5614.

சித்திபுரத்தே தினந்தோறும் சீர்கொளருள்
சத்திவிழா நீடித் தழைத்தோங்க - எத்திசையில்
உள்ளவரும் வந்தே உவகை உறுகமதத்
துள்ளல் ஒழிக தொலைந்து.

1

5615

ஒன்றே சிவம்என் றுணர்ந்திவ் வுலகமெலாம்
நன்றே ஒருமையுற்று நண்ணியே - மன்றே
நடம்புரியும் பாத நளினமலர்க் குள்ளம்
இடம்புரிக வாழ்க இசைந்து.

2

5616

சிற்சபையும் பொற்சபையும் சித்தி விளக்கத்தால்
நற்சகமேல் நீடூழி நண்ணிடுக - சற்சபையோர்
போற்றிவரம் பெற்றுவகை பூரிக்க வாழ்ந்திடுக
நாற்றிசையும் வாழ்க நயந்து.

3

5617

அச்சந் தவிர்த்தே அருளிற் செலுத்துகின்ற
விச்சை அரசே விளங்கிடுக - நச்சரவம்
ஆதிக் கொடியஉயிர் அத்தனையும் போய்ஒழிக
நீதிக் கொடிவிளங்க நீண்டு.

4

5618

கருணைஇலா ஆட்சி கடுகி ஒழிக
அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க - தெருள்நயந்த
நல்லோர் நினைத்த நலம்பெறுக நன்றுநினைத்
தெல்லோரும் வாழ்க இசைந்து.

5

5619

புல்லொழுக்கம் எல்லாம் புணரியிடைப் போய்ஒழிக
நல்லொழுக்கம் ஒன்றே நலம்பெறுக - இல்லொழுக்கில்
செத்தார்கள் எல்லாம் திரும்ப எழுந்துமனம்
ஒத்தாராய் வாழ்க உவந்து.

6

5620

செத்தார் எழுக சிவமே பொருள்என்றே
இத்தா ரணியில் இருந்தொளிர்க - சுத்தசிவ
சன்மார்க்கம் ஒன்றே தழைக்க தயவறியாத்
துன்மார்க்கம் போக தொலைந்து.

7

5621

செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்துவரச்
சித்தம்வைத்துச் செய்கின்ற சித்தியனே - சுத்தசிவ
சன்மார்க்க சங்கத் தலைவனே நிற்போற்றும்
என்மார்க்கம் நின்மார்க்க மே.

8

5622

நல்லாரும் என்னை நயந்தாரும் நன்மைசொல
வல்லாரும் என்னை வளர்த்தாரும் - எல்லாரும்
நீஎன் றிருக்கின்றேன் நின்மலனே நீபெற்ற
சேய்என் றிருக்கின்றேன் சேர்ந்து.

9

5623

ஆடஎடுத் தான்என் றறைகின்றீர் என்தலைமேல்
சூடஎடுத் தான்என்று சொல்கின்றேன் - நாடறிய
இவ்வழக்கை யார்பால் இசைத்தறுத்துக் கொள்கிற்பாம்
கவ்வைஅற்ற அம்பலத்தான் கால்.

10

5624

நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
சாவா வரம்எனைப்போல் சார்ந்தவரும் - தேவாநின்
பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
யார்உளர்நீ சற்றே அறை.

11


திருச்சிற்றம்பலம்
Back


137. திருவடிப் பெருமை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5625.

திருவாளர் கனகசபைத் திருநடஞ்செய் தருள்வார்

தேவர்சிகா மணிஎனக்குத் திருமாலை கொடுத்தார்
உருவாளர் அருவாகி ஒளியாகி வெளியாய்

ஓங்குகின்றார் என்னுடைய உயிர்த்துணைவர் அவர்தம்
பெருவாய்மைத் திறம்சிறிதும் பேசமுடி யாதே

பேசுவதார் மறைகள்எலாம் கூசுகின்ற என்றால்
துருவாமல் இங்கெனக்குக் கிடைத்ததைஎன் சொல்வேன்

சொல்அளவல் லாதசுகம் தோன்றுவதென் தோழி.

1

5626

அருளாளர் பொற்பொதுவில் அற்புதநா டகஞ்செய்

ஆனந்த வண்ணர்எனை ஆளுடையார் சிறியேன்
தெருளாத பருவத்தே தெருட்டிமணம் புரிந்த

சீராளர் அவர்பெருமைத் திறத்தைஎவர் புகல்வார்
மருளாத ஆகமங்கள் மாமறைகள் எல்லாம்

மருண்டனவே என்னடிஎன் மனவாக்கின் அளவோ
இருளாமை என்றுறுமோ அன்றுசிறி துரைப்பேன்

என்னவும்நாண் ஈர்ப்பதிதற் கென்புரிவேன் தோழி.

2

5627

செம்பவளத் திருமலையோ மாணிக்க விளக்கோ

செழுஞ்சோதித் தனிப்பிழம்போ செவ்வண்ணத் திரளோ
அம்பதுமத் திருவிளங்கும் அகலத்தான் பிரமன்

அரன்முதலோர் ஐவர்களும் அப்பால்நின் றோரும்
எம்பரம்என் றெம்பெருமான் புறவண்ணம் எதுவோ

என்பாரேல் அகவண்ணம் யார்உரைக்க வல்லார்
தம்பரம்என் றென்னைஅன்று மணம்புரிந்தார் கனக

சபைநாதர் அவர்பெருமை சாற்றுவதென் தோழி.

3

5628

தேவர்களோ சித்தர்களோ சீவன்முத்தர் தாமோ

சிறந்தமுனித் தலைவர்களோ செம்பொருள்கண் டோ ரோ
மூவர்களோ அறுவர்களோ முதற்சத்தி அவளோ

முன்னியநம் பெருங்கணவர் தம்இயலை உணர்ந்தோர்
யாவர்களும் அல்லஎன்றால் யான்உணர்ந்து சொல்ல

அமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய்
ஆவலொடும் அன்பர்தொழக் கனகசபை நடிப்பார்

அவர்பெருமை எவ்விதத்தும் அவர்அறிவார் தோழி.

4

5629

பதிஉடையார் கனகசபா பதிஎனும்பேர் உடையார்

பணம்பரித்த395 வரையர்என்னை மணம்புரிந்த கணவர்
விதியுடையார் ஏத்தநின்ற துதிஉடையார் ஞான

விளக்கனைய மெய்உடையார் வெய்யவினை அறுத்த
மதிஉடையார் தமக்கருளும் வண்கைபெரி துடையார்

மங்கைசிவ காமவல்லி மணவாளர் முடிமேல்
நதிஉடையார் அவர்பெருமை மறைக்கும்எட்டா தென்றால்

நான்உரைக்க மாட்டுவனோ நவிலாய்என் தோழி.

5

(395). பணம்புரிந்த - பி. இரா. பதிப்பு.

5630

வெடித்தளிந்த முக்கனியின் வடித்தரசந் தனிலே

விரும்புறநின் றோங்கியசெங் கரும்பிரதம் கலந்து
தடித்தசெழும் பாற்பெய்து கோற்றேன்விட் டதனைத்

தனித்தபரா அமுதத்தில் தான்கலந்துண் டாற்போல்
இடித்திடித்தென் உளமுழுதும் தித்திக்கும் வார்த்தை

இனிதுரைத்து மணம்புரிந்த என்னுயிர்நா யகர்வான்
பொடித்திருமே னியர்நடனம் புரிகின்றார் அவர்தம்

புகழ்உரைக்க வல்லேனோ அல்லேன்காண் தோழி.

6

5631

திருச்சிற்றம் பலத்தின்பத் திருஉருக்கொண் டருளாம்

திருநடஞ்செய் தருளுகின்ற திருவடிகள் இரண்டும்
அருச்சிக்கும் பேரன்பர் அறிவின்கண் அறிவாய்

அவ்வறிவில் விளைந்தசிவா னந்தஅமு தாகி
உருச்சிக்கும் பரநாதத் தலங்கடந்தப் பாற்சித்

துருவுகடந் திருக்கும்என உணர்ந்தோர்சொல் வாரேல்
பெருச்சித்தெல் லாம்வல்ல நடராஜப் பெருமான்

பெருமையையாம் பேசுவதென் பேசாய்என் தோழி.

7

5632

நாதவரை சென்றுமறை ஓர்அனந்தம் கோடி

நாடிஇளைத் திருந்தனஆ கமங்கள் பரநாத
போதவரை போந்துபல முகங்கொண்டு தேடிப்

புணர்ப்பறியா திருந்தனஎன் றறிஞர்புகல் வாரேல்
பாதவரை வெண்ணீறு படிந்திலங்கச் சோதிப்

படிவம்எடுத் தம்பலத்தே பரதநடம் புரியும்
போதவரைக் காண்பதலால் அவர்பெருமை என்னால்

புகலவச மாமோநீ புகலாய்என் தோழி.

8

5633

பரைஇருந் வெளிமுழுதும் பரவிஅப்பால் பரையின்

பரமாகி அப்பரத்தில் பரம்பரமாய் விளங்கித்
திரைகடந்த திருவெளியில் ஆனந்தா தீதத்

திருநடஞ்செய் யாதுசெயும் திருவடிகள் என்றே
புரைகடந்தோர் புகல்கின்றார் கேட்கின்றோம் என்றால்

புண்ணியர்என் தனித்தலைவர் புனிதநட ராஜர்
வரைகடந்த திருத்தோள்மேல் திருநீற்றர் அவர்தம்

வாய்மைசொல வல்லேனோ அல்லேன்காண் தோழி.

9

5634

ஏய்ப்பந்தி வண்ணர்என்றும் படிகவண்ணர் என்றும்

இணையில்ஒளி உருவர்என்றும் இயல்அருவர் என்றும்
வாய்ப்பந்தல் இடுதலன்றி உண்மைசொல வல்லார்

மண்ணிடத்தும் விண்ணிடத்தும் மற்றிடத்தும் இலையே
காய்ப்பந்த மரம்என்று கண்டுசொல்வ தன்றிக்

காய்த்தவண்ணம் பூத்தவண்ணம் கண்டுகொள மாட்டாத்
தாய்ப்பந்த உணர்வுடையேன் யானோசிற் சபையில்

தனிமுதல்வர் திருவண்ணம் சாற்றவல்லேன் தோழி.

10

5635

கலைக்கடலைக் கடந்தமுனிக் கணங்களும்மும் மலமாம்

கரிசகன்ற யோகிகளும் கண்டுகொள மாட்டா
தலைக்கடலில் துரும்பாகி அலைகின்றார் மன்றுள்

ஆடுகின்றார் என்பதலால் அவர்வண்ணம் அதுவும்
நிலைக்குரிய திருச்சபையின் வண்ணமும்அச் சபைக்கண்

நிருத்தத்தின் வண்ணமும்இந் நீர்மையன என்றே
மலைக்குநிறை கண்டாலும் காணவொணா தம்ம

வாய்ப்பதர்கள் தூற்றுவதில் வரும்பயன்என் தோழி.

11

5636

சிதமலரோ சுகமலரும் பரிமளிக்க ஓங்கும்

திருச்சிற்றம் பலநடுவே திருநடனம் புரியும்
பதமலரோ பதமலரில் பாதுகையோ அவையில்

படிந்ததிருப் பொடியோஅப் பொடிபடிந்த படியோ
இதமலரும் அப்படிமேல் இருந்தவரோ அவர்பேர்

இசைத்தவரும் கேட்டவரும் இலங்குமுத்தர் என்றால்
நிதமலரும் நடராஜப் பெருமான்என் கணவர்

நிலைஉரைக்க வல்லார்ஆர் நிகழ்த்தாய்என் தோழி.

12

5637

சுத்தமுற்ற ஐம்பூத வெளிகரண வெளிமேல்

துலங்குவெளி துரியவெளி சுகவெளியே முதலாம்
இத்தகைய வெளிகளுள்ளே எவ்வெளியோ நடனம்

இயற்றுவெளி என்கின்றார் என்றால்அவ் வெளியில்
நித்தபரி பூரணமாய் ஆனந்த மயமாய்

நிருத்தமிடும் எம்பெருமான் நிபுணநட ராயர்
சித்துருவாம் திருவடியின் உண்மைவண்ணம் அறிந்து

செப்புவதார் என்வசமோ செப்பாய்என் தோழி.

13

5638

காற்றுருவோ கனல்உருவோ கடவுள்உரு என்பார்

காற்றுருவும் கனல்உருவும் கண்டுரைப்பீர் என்றால்
வேற்றுருவே புகல்வர்அதை வேறொன்றால் மறுத்தால்

விழித்துவிழித் தெம்போல்வார் மிகவும்மருள் கின்றார்
தோற்றும்அந்தத் தத்துவமும் தோற்றாத்தத் துவமும்

துரிசாக அவைகடந்த சுகசொருபம் ஆகி
மாற்றமனம் உணர்வுசெல்லாத் தலத்தாடும் பெருமான்

வடிவுரைக்க வல்லவர்ஆர் வழுத்தாய்என் தோழி.

14

5639

நாதமட்டும் சென்றனம்மேல் செல்லவழி அறியேம்

நவின்றபர விந்துமட்டும் நாடினம்மேல் அறியேம்
ஏதமிலாப் பரநாத எல்லைமட்டும் சென்றேம்

இனிச்செல்ல வழிகாணேம் இலங்குபெருவெளிக்கே
ஆதரவில் சென்றனம்மேல் செல்லவழி தெரியேம்

அம்மம்ம என்றுமறை ஆகமங்கள் எல்லாம்
ஓதநின்ற திருநடனப் பெருமானார் வடிவின்

உண்மைசொல வல்லவர்ஆர் உரையாய்என் தோழி.

15

5640

தோன்றுசத்தி பலகோடி அளவுசொல ஒண்ணாத்

தோற்றுசத்தி பலகோடித் தொகைஉரைக்க முடியா
சான்றுலகம் தோற்றுவிக்கும் சத்திபல கோடி

தனைவிளம்பல் ஆகாஅச் சத்திகளைக் கூட்டி
ஏன்றவகை விடுக்கின்ற சத்திபல கோடி

இத்தனைக்கும் அதிகாரி என்கணவர் என்றால்
ஆன்றமணி மன்றில்இன்ப வடிவாகி நடிக்கும்

அவர்பெருமை எவர்உரைப்பார் அறியாய்என் தோழி.

16

5641

தோற்றம்ஒன்றே வடிவொன்று வண்ணம்ஒன்று விளங்கும்

சோதிஒன்று மற்றதனில் துலங்கும்இயல் ஒன்று
ஆற்றஅதில் பரமாய அணுஒன்று பகுதி

அதுஒன்று பகுதிக்குள் அமைந்தகரு ஒன்று
ஏற்றமிக்க அக்கருவுள் சத்திஒன்று சத்திக்

கிறைஒன்றாம் இத்தனைக்கும் என்கணவர் அல்லால்
ஆற்றமற்றோர் அதிகாரி இல்லையடி மன்றில்

ஆடும்அவர் பெருந்தகைமை யார்உரைப்பார் தோழி.

17

5642

ஒருமைபெறு தோற்றம்ஒன்று தத்துவம்பல் வேறு

ஒன்றின்இயல் ஒன்றிடத்தே உற்றிலஇங் கிவற்றை
இருமையினும் மும்மைமுதல் எழுமையினும் கூட்டி

இலங்கியசிற் சத்திநடு இரண்டொன்றென் னாத
பெருமைபெற்று விளங்கஅதின் நடுஅருள்நின் றிலங்கப்

பெரியஅருள் நடுநின்று துரியநடம் புரியும்
அருமைஎவர் கண்டுகொள்வர் அவர்பெருமை அவரே

அறியாரே என்னடிநீ அறைந்தவண்ணம் தோழி.

18

5643

படைத்தபடைப் பொன்றதிலே பரம்அதிற்கா ரணமாம்

பகுதிஅதில் பகுக்கின்ற பணிகள்பல பலவாம்
புடைத்தஅவை புகுந்துலவும் புரம்ஒன்றப் புரத்தில்

பூபதிஒன் றவர்க்குணர்த்தும் பூரணசித் தொன்று
மிடைத்தஇவை எல்லாஞ்சிற் றம்பலத்தே நடிக்கும்

மென்பதத்தோர் சிற்றிடத்து விளங்கிநிலை பெறவே
அடைத்துமற்றிங் கிவைக்கெல்லாம் அப்புறத்தே நிற்பார்

அவர்பெருமை எவர்அறிவார் அறியாய்நீ தோழி.

19

5644

சிருட்டிஒன்று சிற்றணுவில் சிறிததனில் சிறிது

சினைத்தகர ணக்கருஅச் சினைக்கருவில் சிறிது
வெருட்டியமான் அம்மானில் சிறிதுமதி மதியின்

மிகச்சிறிது காட்டுகின்ற வியன்சுடர்ஒன் றதனில்
தெருட்டுகின்ற சத்திமிகச் சிறிததனில் கோடித்

திறத்தினில்ஓர் சிறிதாகும் திருச்சிற்றம் பலத்தே
அருட்டிறத்தின் நடிக்கின்ற என்னுடைய தலைவர்

அருட்பெருமை எவர்உரைப்பார் அறியாய்என் தோழி.

20

5645

நான்முகர்கள் மிகப்பெரியர் ஆங்கவரில் பெரியர்

நாரணர்கள் மற்றவரின்396 நாடின்மிகப் பெரியர்
வான்முகத்த உருத்திரர்கள் மற்றவரில் பெரியர்

மயேச்சுரர்கள் சதாசிவர்கள் மற்றவரில் பெரியர்
மீன்முகத்த விந்ததனில் பெரிததனில் நாதம்

மிகப்பெரிது பரைஅதனில் மிகப்பெரியள் அவளின்
ஆன்முகத்தில் பரம்பரந்தான் பெரிததனில் பெரிதாய்

ஆடுகின்ற சேவடியார் அறிவார்காண் தோழி.

21

(396). மற்றவர்கள் - ச. மு. க. பதிப்பு.

5646

மண்அனந்தங் கோடிஅள வுடையதுநீர் அதனில்

வயங்கியநூற் றொருகோடி மேல்அதிகம் வன்னி
எண்ணியஆ யிரம்அயுதம் கோடியின்மேல் இலக்கம்

எண்பத்து நான்கதின்மேல் அதிகம்வளி யொடுவான்
விண்ணளவு மூலமுயிர் மாமாயை குடிலை

விந்தளவு சொலமுடியா திந்தவகை எல்லாம்
அண்ணல்அடிச் சிறுநகத்தில் சிற்றகத்தாம் என்றால்

அவர்பெருமை எவர்உரைப்பார் அறியாய்நீ தோழி.

22

5647

மண்ணாதி ஐம்பூத வகைஇரண்டின் ஒன்று

வடிவுவண்ணம் இயற்கைஒரு வாலணுச்சத் தியலாய்க்
கண்ணென்னும் உணர்ச்சிசொலாக் காட்சியவாய்க் நிற்பக்

கருதும்அவைக் குட்புறங்கீழ் மேற்பக்கம் நடுவில்
நண்ணிஒரு மூன்றைந்து நாலொடுமூன் றெட்டாய்

நவமாகி மூலத்தின் நவின்றசத்திக் கெல்லாம்
அண்ணுறும்ஓர் ஆதார சத்திகொடுத் தாடும்

அடிப்பெருமை யார்அறிவார் அவர்அறிவார் தோழி.

23

5648

மண்பூத முதற்சத்தி வால்அணுவில் அணுவாய்

மதித்தஅதன் உள்ஒளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்
எண்பூதத் தவ்வொளிக்குள் இலங்குவெளி யாய்அவ்

வியல்வெளிக்குள் ஒருவெளியாய் இருந்தவெளி(397) நடுவே
பண்பூத நடம்புரியும் பதப்பெருமை எவரும்

பகுத்துணர முடியாதேல் பதமலர்என் தலைமேல்
நண்பூற வைத்தருளும் நடராஜப் பெருமான்

நல்லசெயல் வல்லபம்ஆர் சொல்லுவர்காண் தோழி.

24

(397). இந்தவெளி - பி. இரா. பதிப்பு.

5649

வண்கலப்பில் சந்திசெயும் சத்தியுளே ஒருமை

வயங்கொளிமா சத்திஅத னுள்ஒருகா ரணமாம்
விண்கரண சத்திஅத னுள்தலைமை யாக

விளங்குகுருச் சத்திஅதின் மெய்ம்மைவடி வான
எண்குணமா சத்தி இந்தச் சத்திதனக் குள்ளே

இறையாகி அதுஅதுவாய் இலங்கிநடம் புரியும்
தண்கருணைத் திருவடியின் பெருமைஅறி வரிதேல்

சாமிதிரு மேனியின்சீர் சாற்றுவதென் தோழி.

25

5650

பெரியஎனப் புகல்கின்ற பூதவகை எல்லாம்

பேசுகின்ற பகுதியிலே வீசுகின்ற சிறுமை
உரியபெரும் பகுதியும்அப் பகுதிமுதல் குடிலை

உளங்கொள்பரை முதல்சத்தி யோகமெலாம் பொதுவில்
துரியநடம் புரிகின்ற சோதிமலர்த் தாளில்

தோன்றியதோர் சிற்றசைவால் தோன்றுகின்ற என்றால்
அரியபெரும் பொருளாக நடிக்கின்ற தலைவர்

அருட்பெருமை என்அளவோ அறியாய் என்தோழி.

26

5651

பொன்வண்ணப் பூதமுதல் தன்மைஉண்மை அகத்தே

பொற்புறமாக் கருவிளக்கம் பொருந்தவெண்மை செம்மை
தன்வண்ணப் பசுமையொடு கருமைகலப் பாகும்

தன்மையினில் தன்மையதாய்த் தனித்ததற்கோர் முதலாய்
மன்வண்ணத் தொளிஉருவம் உயிர்ப்பினொடு தோன்ற

வால்அணுக்கூட் டங்களைஅவ் வகைநிறுவி நடத்தும்
மின்வண்ணத் திருச்சபையில் ஆடுகின்ற பதத்தின்

மெய்வண்ணம் புகலுவதார் விளம்பாய்என் தோழி.

27

5652

பொற்புடைய ஐங்கருவுக் காதார கரணம்

புகன்றஅறு கோடிஅவைக் காறிலக்கம் அவற்றுக்
கற்புறும்ஓர் அறுபதினா யிரம்அவற்றுக் கடையா

றாயிரமாங் கவற்றுக்கோர் அறுநூறிங் கிவைக்கே
விற்பொலியும் அறுபதுமற் றிவைக்காறிங் கிந்த

வியன்கரண சத்திகளை விரித்துவிளக் குவதாய்ச்
சிற்பரமாய் மணிமன்றில் திருநடனம் புரியும்

திருவடியின் பெருமைஎவர் செப்புவர்காண் தோழி.

28

5653

ஏற்றமுறும் ஐங்கருவுக் கியல்பகுதிக் கரணம்

எழுகோடி ஈங்கிவற்றுக் கேழ்இலக்கம் இவைக்கே
தோற்றமுறும் எழுபதினா யிரமிவற்றுக் கெழுமை

துன்னியநூ றிவற்றினுக்குச் சொல்லும் எழுபதுதான்
ஆற்றலுறும் இவைதமக்கோர் ஏழாம்இக் கரணம்

அனைத்தினையும் தனித்தனியே தோற்றிநிலை பொருத்திச்
சாற்றரிய வடிவுவண்ணம் சுவைப்பயன்உண் டாக்கும்

சாமிதிரு வடிப்பெருமை சாற்றுவதார் தோழி.

29

5654

விளங்கியஐங் கருச்சத்தி ஓர்அனந்தங் கருவில்

விளைகின்ற சத்திகள்ஓர் அனந்தம்விளை வெல்லாம்
வளம்பெறவே தருகின்ற சத்திகள்ஓர் அனந்தம்

மாண்படையத் தருவிக்கும் சத்திகள்ஓ் அனந்தம்
உளங்கொளநின் றதிட்டிக்கும் சத்திகள்ஓர் அனந்தம்

ஓங்கியஇச் சத்திகளைத் தனித்தனியே இயக்கித்
தளங்கொளஈண் டவ்வவற்றிற் குட்புறம்நின் றொளிரும்

சாமிதிரு வடிப்பெருமை சாற்றுவதார் தோழி.

30

5655

காணுகின்ற ஐங்கருவின் வித்தின்இயல் பலவும்

கருதுறும்அங் குரத்தின்இயல் பற்பலவும் அடியின்
மாணுகின்ற இயல்கள்பல பலப்பலவும் நடுவில்

மன்னும்இயல் பலபலவும் பலப்பலவும் முடியின்
பூணும்இயல் அனந்தவகை புரிந்தபல பலவும்

பொருந்துவதாய் அவ்வவற்றின் புணர்க்கையுந்தான் ஆகி
ஏணுகின்ற அவைகளுக்குட் பற்றாமல் நடிக்கும்

எழிற்கருணைப் பதப்பெருமை இயம்புவதார் தோழி.

31

5656

மண்முதலாம் தத்துவத்தின் தன்மைபல கோடி

வயங்குசத்திக் கூட்டத்தால் வந்தனஓர் அனந்தம்
பண்ணுறும்அத் தன்மையுளே திண்மை(398) ஒருகோடி

பலித்தசத்திக் கூட்டத்தால் பணித்தனஓர் அனந்தம்
எண்ணுறும்இத் திண்மைகளும் இவற்றினது விகற்பம்

எல்லாமும் தனித்தனிநின் றிலங்கநிலை புரிந்தே
விண்ணென்னும் படிஅவற்றில் கலந்துகல வாது

விளையாடும் அடிப்பெருமை விளம்புவதார் தோழி.

32

(398). திண்மையுளே திண்மை - முதற்பதிப்பு, பொ. சு. பதிப்பு.
தண்மையுளே திண்மை - பி. இரா. பதிப்பு.
திண்மையுளே தண்மை - ச. மு. க. பதிப்பு

5657

விண்ணிடத்தே முதன்முப்பூ விரியஅதில் ஒருபூ

விரியஅதின் மற்றொருபூ விரிந்திடஇவ் வைம்பூக்
கண்ணிடத்தே பிறிதொருபூ கண்மலர அதிலே

கட்டவிழ வேறொருபூ விட்டஎழு பூவும்
பெண்ணிடத்தே நான்காகி ஆணிடத்தே மூன்றாய்ப்

பிரிவிலவாய்ப் பிரிவுளவாய்ப் பிறங்கியுடல் கரணம்
நண்ணிடத்தேர்ந் தியற்றிஅதின் நடுநின்று விளங்கும்

நல்லதிரு வடிப்பெருமை சொல்லுவதார் தோழி.

33

5658

வண்பூவில் வடிவுபல வண்ணங்கள் பலமேல்

மதிக்கும்இயல் பலஒளியின் வாய்மைபல ஒளிக்குள்
நண்பூறும் சத்திபல சத்திகளுள் வயங்கும்

நாதங்கள் பலநாத நடுவணைஓர் கலையில்
பண்பாய நடங்கள்பல பலபெயர்ப்பும் காட்டும்

பதிகள்பல இவைக்கெல்லாம் பதியாகிப் பொதுவில்
கண்பாய இவற்றினொடு கலந்துகல வாமல்

காணுகின்ற திருவடிச்சீர் கழறுவதார் தோழி.

34

5659

ஓங்கியஐம் பூஇவைக்குள் ஒன்றின்ஒன்று திண்மை

உற்றனமற் றதுஅதுவும் பற்றுவன பற்றத்
தாங்கியமா சத்திகளின் பெருங்கூட்டம் கலையாத்

தன்மைபுரிந் தாங்காங்குத் தனித்தனிநின் றிலங்கித்
தேங்கியபோ தவைகலையச் செய்கைபல புரிந்து

திகழ்ஒளியாய் அருள்வெளியாய்த் திறவில்ஒளி(399) வெளியில்
பாங்குறநேர் விளங்குகின்ற திருவடியின் பெருமை

பகுத்துரைக்க வல்லவர்ஆர் பகராய்என் தோழி.

35

(399). திருவில்ஒளி - பி. இரா. திருவிலொளி என்றும்
பாடம் - ச. மு. க. அடிக்குறிப்பு.

5660

விரிந்திடும்ஐங் கருவினிலே விடயசத்தி அனந்த

விதமுகங்கொண் டிலகஅவை விகிதவிகற் பாகிப்
பிரிந்திடுமான் இலக்கணங்கள் பலகோடி பிரியாப்

பெருஞ்சத்தி இலக்கணங்கள் பற்பலகோ டிகளாய்த்
தெரிந்திடுநா னிலைக்குள்ளே இருந்துவெளிப் படவும்

செய்கைபல புரிகின்ற திறல்உடைத்தா ரகமேல்
எரிந்திடுதீ நடுவெளிக்கண் இருந்ததிரு வடியின்

எல்லையையார் சொல்லவல்லார் இயம்பாய்என் தோழி.

36

5661

தோன்றியஐங் கருவினிலே சொல்லரும்ஓர் இயற்கைத்

துலங்கும்அதில் பலகோடிக் குலங்கொள்குருத் துவிகள்
ஆன்றுவிளங் கிடும்அவற்றின் அசலைபல கோடி

அமைந்திடும்மற் றவைகளுளே அமலைகள் ஓர்அனந்தம்
ஏன்றுநிறைந் திடும்அவற்றிற் கணிப்பதனுக் கரிதாய்

இலங்குபிர காசிகள்தாம் இருந்தனமற் றிவற்றில்
ஊன்றியதா ரகசத்தி ஓங்குமதின் நடுவே

உற்றதிரு வடிப்பெருமை உரைப்பவரார் தோழி.

37

5662

உறைந்திடும்ஐங் கருவினிலே உருவசத்தி விகற்பம்

உன்னுதற்கும் உணர்வதற்கும் ஒண்ணாஎண் ணிலவே
நிறைந்தஅவை தனித்தனியே நிகழ்ந்திலங்க அவைக்குள்

நேர்மைஒண்மை உறுவித்தந் நேர்மைஒண்மை அகத்தே
குறைந்திலவாம் பலவேறு குணங்கள்உறப் புரிந்து

குணங்களுளே குறிகள்பல கூட்டுவித்தாங் கமர்ந்தே
மறைந்தமணம் வெளிப்படுத்தும் மலரடியின் பெருமை

வகுத்துரைக்க வல்லவரார் வழுத்தாய்என் தோழி.

38

5663

சூழ்ந்திடும்ஐங் கருவினிலே சொருபசத்தி பேதம்

சொல்லினொடு மனங்கடந்த எல்லையிலா தனவே
தாழ்ந்திலவாய் அவைஅவையும் தனித்தனிநின் றிலங்கத்

தகும்அவைக்குள் நவவிளக்கம் தரித்தந்த விளக்கம்
வாழ்ந்திடஓர் சத்திநிலை வயங்கியுறப் புரிந்து

மதிக்கும்அந்தச் சத்திதனில் மன்னுசத்தர் ஆகி
ஆழ்ந்திடும்ஓர் பரம்பரத்தை அசைத்துநின்று நடிக்கும்

அடிப்பெருமை உரைப்பவரார் அறியாய்என் தோழி.

39

5664

பசுநிறத்த ஐங்கருவில் பகர்ந்தசுவைத் தன்மை

பற்பலகோ டிகளாம்அவ் வுற்பவசத் திகளில்
வசுநிறத்த விவிதநவ சத்திபல கோடி

வயங்கும்அவைக் குள்ஆதி வயங்குவள்அவ் வாதி
தசநிறத்த வாகஅதில் தனித்தனிஓங் காரி

சார்ந்திடுவள் அவள்அகத்தே தனிப்பரைசார்ந் திடுவள்
திசைநிறத்தப் பரைநடுவில் திருநடனம் புரியும்

திருவடியின் பெருவடியைச் செப்புவதார் தோழி.

40

5665

பூத்தசுடர்ப் பூஅகத்தே புறத்தேசூழ் இடத்தே

பூத்துமிகக் காய்த்துமதி அமுதொழுகப் பழுத்து
மாத்தகைய பெருஞ்ஜோதி மணிமன்றுள் விளங்கும்

வண்ணம்ஒரு சிறிதறிய மாட்டாமல் மறைகள்
ஏத்துவதும் ஏறுவதும் இறங்குவதும் ஆகி

இருக்கின்ற என்றுணர்ந்தோர் இயம்பிடில்இச் சிறியேன்
தோத்திரஞ்செய் தம்மைகண்டு மகிழ்ந்திடஅம் மன்றில்

துலங்கும்அடிப் பெருமையைஎன் சொல்லுவது தோழி.

41

5666

வளம்பெறுவிண் அணுக்குள்ஒரு மதிஇரவி அழலாய்

வயங்கியதா ரகையாய்இவ் வகைஅனைத்தும் தோற்றும்
தளம்பெறுசிற் சொலிதபரா சத்திமயம் ஆகித்

தனித்தசத்தி மான்ஆகித் தத்துவம்எல் லாம்போய்
உளம்புகுத மணிமன்றில் திருநடம்செய் தருளும்

ஒருதலைவன் சேவடிச்சிர் உரைப்பவர்எவ் வுலகில்
அளந்தறிதும் எனமறைகள் அரற்றும்எனில் சிறிய

அடிச்சியுரைத் திடப்படுமோ அறியாய்என் தோழி.

42

5667

பரவியஐங் கருவினிலே பருவசத்தி வயத்தே

பரைஅதிட்டித் திடநாத விந்துமயக் கத்தே
விரவியதத் துவஅணுக்கள் ஒன்றொடொன் றாய்ஒன்றி

விளங்கஅவற் றடிநடுவீ றிவற்றினில்மூ விதமாய்
உரவியலுற் றுயிர்இயக்கி அறிவைஅறி வித்தே

ஓங்குதிரு அம்பலத்தில் ஒளிநடனம் புரியும்
தரவியலிற் றிதுஎனயார் தெரிந்துரைப்பார் சிறிய

தமியள்உரைத் திடுந்தரமோ சாற்றாய்என் தோழி.

43

5668

சோதிமலை ஒருதலையில் சோதிவடி வாகிச்

சூழ்ந்தமற்றோர் தலைஞான சொரூபமய மாகி
ஓதியவே றொருதலையில் உபயவண்ணம் ஆகி

உரைத்திடும்ஐங் கருவகைக்கோர் முப்பொருளும் உதவி
ஆதிநடு அந்தம்இலா ஆனந்த உருவாய்

அம்பலத்தே ஆடுகின்ற அடிஇணையின் பெருமை
வேதியனும் திருமாலும் உருத்திரரும் அறியார்

விளைவறியேன் அறிவேனோ விளம்பாய்என் தோழி.

44

5669

பூஒன்றே முப்பூஐம் பூஎழுபூ நவமாம்

பூஇருபத் தைம்பூவாய்ப் பூத்துமலர்ந் திடவும்
நாஒன்று மணம்வேறு வணம்வேறு வேறா

நண்ணிவிளங் குறவும்அதின் நற்பயன்மாத் திரையில்
மேவொன்றா இருப்பஅதின் நடுநின்று ஞான

வியன்நடனம் புரிகின்ற விரைமலர்ச்சே வடியின்
பாஒன்று பெருந்தகைமை உரைப்பவர்ஆர் சிறியேன்

பகர்ந்திடவல் லுநள் அல்லேன் பாராய்என் தோழி.

45


திருச்சிற்றம்பலம்
Back


138. தலைவி தலைவன் செயலைத் தாய்க் குரைத்தல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5670.

அன்னப்பார்ப் பால்(400)அழ காம்நிலை யூடே

அம்பலம் செய்துநின் றாடும் அழகர்
துன்னப்பார்த் தென்னுயிர்த் தோழியும் நானும்

சூதாடு கின்றஅச் சூழலில் வந்தே
உன்னைப்பார்த் துன்னுள்ளே என்னைப்பா ராதே

ஊரைப்பார்த் தோடி உழல்கின்ற பெண்ணே
என்னைப்பார் என்கின்றார் என்னடி அம்மா

என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

1

(400). அன்னைப்பார்ப்பால் - ஆ. பா. பதிப்பு.

5671

அதுபா வகமுகத் தானந்த நாட்டில்

அம்பலம் செய்துநின் றாடும் அழகர்
விதுபா வகமுகத் தோழியும் நானும்

மெய்ப்பா வனைசெய்யும் வேளையில் வந்து
பொதுபா வனைசெய்யப் போகாதோ பெண்ணே

பொய்ப்பா வனைசெய்து கைப்பானேன் ஐயோ
இதுபாவம் என்கின்றார் என்னடிஅம்மா

என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

2

5672

அறங்காதல் செய்தேனை ஆண்டுகொண் டிங்கே

அருட்பெருஞ் சோதியாய் ஆடும் அழகர்
உறங்காத வண்ணஞ்சிற் றம்பலம பாடி

உதிக்கின்ற ஒண்மையில் துதிக்கின்ற போது
புறங்காதல் செய்வார்போல் செய்யாதே பெண்ணே

பொற்கம்பம் ஏறினை சொர்க்கம்அங் கப்பால்
இறங்காதே என்கின்றார் என்னடி அம்மா

என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

3

5673

அந்நாள்வந் தென்றனை ஆண்டருள் செய்த

அய்யர் அமுதர்என் அன்பர் அழகர்
நன்னாள் கழிக்கின்ற நங்கைய ரோடு

நான்அம் பலம்பாடி நண்ணுறும் போது
பின்னாள்என் றெண்ணிப் பிதற்றாதே பெண்ணே

பேரருட் சோதிப் பெருமணம் செய்நாள்
இந்நாளே என்கின்றார் என்னடி அம்மா

என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

4

5674

தப்போது வார்உளம் சார்ந்திட உன்னார்

சத்தியர் உத்தமர் நித்தம ணாளர்
ஒப்போத ஒண்ணாத மெய்ப்போத மன்றின்

உண்மையைப் பாடிநான் அண்மையில் நின்றேன்
அப்போதென் றெண்ணி அயர்ந்திடேல் பெண்ணே

அன்புடை நின்னையாம் இன்புறக் கூடல்
இப்போதே என்கின்றார் என்னடி அம்மா

என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

5

5675

மெய்க்குலம் போற்ற விளங்கு மணாளர்

வித்தகர் அம்பலம் மேவும் அழகர்
இக்குல மாதரும் யானும்என் நாதர்

இன்னருள் ஆடல்கள் பன்னுறும் போது
பொய்க்குலம் பேசிப் புலம்பாதே பெண்ணே

பூரண நோக்கம் பொருந்தினை நீதான்
எக்குலம் என்கின்றார் என்னடி அம்மா

என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

6

5676

வெம்மத நெஞ்சிடை மேவுற உன்னார்

வெம்பல மாற்றும்என் அம்பல வாணர்
சம்மத மாமட வார்களும் நானும்

தத்துவம் பேசிக்கொண் டொத்துறும் போது
இம்மதம் பேசி இறங்காதே பெண்ணே

ஏகசி வோகத்தை எய்தினை நீதான்
எம்மதம் என்கின்றார் என்னடி அம்மா

என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

7

5677

பாரொடு விண்ணும் படைத்தபண் பாளர்

பற்றம் பலத்தார்சொல் சிற்றம் பலத்தார்
வாரிடு கொங்கையர் மங்கைய ரோடே

மன்றகம் பாடி மகிழ்கின்ற போது
ஏருடம் பொன்றென எண்ணேல்நீ பெண்னே

எம்முடம் புன்னை(401) இணைந்திங் கெமக்கே
ஈருடம் பென்கின்றார் என்னடி அம்மா

என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

8

(401). எம்முடம் பும்மை - ஆ. பா. பதிப்பு.,

5678

மறப்பற்ற நெஞ்சிடை வாழ்கின்ற வள்ளல்

மலப்பற் றறுத்தவர் வாழ்த்து மணாளர்
சிறப்புற்ற மங்கையர் தம்மொடு நான்தான்

சிற்றம் பலம்பாடிச் செல்கின்ற போது
புறப்பற் றகற்றத் தொடங்காதே பெண்ணே

புலைஅகப் பற்றை அறுத்தாய் நினக்கே
இறப்பற்ற தென்கின்றார் என்னடி அம்மா

என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

9

5679

ஆறெனும் அந்தங்கள் ஆகிஅன் றாகும்

அம்பலத் தாடல்செய் ஆனந்த சித்தர்
தேறறி வாகிச் சிவானு பவத்தே

சின்மய மாய்நான் திளைக்கின்ற போது
மாறகல் வாழ்வினில் வாழ்கின்ற பெண்ணே

வல்லவள் நீயேஇம் மாநிலை மேலே
ஏறினை என்கின்றார் என்னடி அம்மா

என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

10


திருச்சிற்றம்பலம்
Back


139. நற்றாய் செவிலிக்குக் கூறல்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5680.

உணர்ந்தவர் தமக்கும் உணர்வரி யான்என்

உள்ளகத் தமர்ந்தனன் என்றாள்
அணிந்தனன் எனக்கே அருண்மண மாலை

அதிசயம் அதிசயம் என்றாள்
துணிந்துநான் தனித்த போதுவந் தென்கை

தொட்டனன் பிடித்தனன் என்றாள்
புணர்ந்தனன் கலந்தான் என்றுளே களித்துப்

பொங்கினாள் நான்பெற்ற பொன்னே.

1

5681

தனிப்பெரும் பதியே என்பதி ஆகத்

தவம்எது புரிந்ததோ என்றாள்
அனித்தநீத் தெனைத்தான் அன்பினால் அணைத்தான்

அதிசயம் அதிசயம் என்றாள்
இனித்துயர் சிறிதும் அடைந்திடேன் என்றாள்

எனக்கிணை யார்கொலோ என்றாள்
சனிப்பிறப் பறுத்தேன் என்றுளே களிப்புத்

ததும்பினாள் நான்பெற்ற தனியே.

2

5682

புண்ணிய பதியைப் புணர்ந்தனன் நான்செய்

புண்ணியம் புகல்அரி தென்றாள்
தண்ணிய மதியின் அமுதெனக் களித்த

தயவைநான் மறப்பனோ என்றாள்
எண்ணிய அனைத்தும் ஈந்தருள் கின்றான்

என்னையோ என்னையோ என்றாள்
அண்ணிய பேரா னந்தமே வடிவம்

ஆயினாள் நான்பெற்ற அணங்கே.

3

5683

சத்திய ஞான சபாபதி எனக்கே

தனிப்பதி ஆயினான் என்றாள்
நித்திய வாழ்வு பெற்றுநான் இன்ப

நிலைதனில் நிறைந்தனன் என்றாள்
பித்தியல் உலகீர் காண்மினோ சித்திப்

பேறெலாம் என்வசத் தென்றாள்
எத்திசை யீரும் ஒத்திவண் வருக

என்றனள் எனதுமெல் லியலே.

4

5684

திருமணிப் பொதுவில் ஒருபெரும் பதிஎன்

சிந்தையில் கலந்தனன் என்றாள்
பெருமையில் சிறந்தேன் என்பெருந் தவத்தைப்

பேசுதல் அரிதரி தென்றாள்
இருமையும் என்போல் ஒருமையில் பெற்றார்

யாண்டுளர் யாண்டுளர் என்றாள்
மருமலர் முகத்தே இளநகை துளும்ப

வயங்கினாள் நான்பெற்ற மகளே.

5

5685

வள்ளலைப் புணர்ந்தேன் அம்மவோ இதுதான்

மாலையோ காலையோ என்றாள்
எள்ளலைத் தவிர்ந்தேன் உலகெலாம் எனக்கே

ஏவல்செய் கின்றன என்றாள்
தெள்ளமு தருந்தி அழிவிலா உடம்பும்

சித்தியும் பெற்றனன் என்றாள்
துள்ளிய மடவீர் காண்மினோ என்றாள்

சோர்விலாள் நான்பெற்ற சுதையே.

6

5686

கனகமா மன்றில் நடம்புரி பதங்கள்

கண்டனன் கண்டனன் என்றாள்
அனகசிற் சபையில் ஒருபெரும் பதிஎன்

அன்பிலே கலந்தனன் என்றாள்
தினகர சோமாக் கினிஎலாம் எனக்கே

செயல்செயத் தந்தனன் என்றாள்
தனகரத் தெனைத்தான் தழுவினான் என்றாள்

தவத்தினால் பெற்றநம் தனியே.

7

5687

கொடிப்பெரு மணிப்பொற் கோயில்என் உளமாக்

கொண்டுவந் தமர்ந்தனன் என்றாள்
கடிப்புது மலர்ப்பூங் கண்ணிவேய்ந் தெனைத்தான்

கடிமணம் புரிந்தனன் என்றாள்
ஒடிப்பற எல்லாம் வல்லதோர் சித்தாம்

ஒளிஎனக் களித்தனன் என்றாள்
இடிப்பொடு நொடித்தீர் காண்மினோ என்றாள்

என்தவத் தியன்றமெல் லியலே.

8

5688

வாழிமா மணிமன் றிறைவனே எனக்கு

மாலைவந் தணிந்தனன் என்றாள்
ஊழிதோ றூழி உலவினும் அழியா

உடம்பெனக் களித்தனன் என்றாள்
ஆழிசூழ் உலகோ டண்டங்கள் அனைத்தும்

அளிக்கஎன் றருளினான் என்றாள்
ஏழியன் மாட மிசையுற வைத்தான்

என்றனள் எனதுமெல் லியலே.

9

5689

ஏலுநன் மணிமா மன்றருட் சோதி

என்னுளத் தமர்ந்தனன் என்றாள்
பாலும்இன் சுவையும் போன்றென தாவி

பற்றினன் கலந்தனன் என்றாள்
சாலும்எவ் வுலகும் தழைக்கஎன் தனக்கே

சத்தியை அளித்தனன் என்றாள்
மேலும்எக் காலும் அழிவிலேன் என்றாள்

மிகுகளிப் புற்றனள் வியந்தே.

10


திருச்சிற்றம்பலம்
Back


140. தோழிக் குரிமை கிளத்தல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5690.

நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும்

நாடியமந் திரங்கள்சில கூடிஉரை யிடவே
வியந்துமற்றைத் தேவர்எலாம் வரவும்அவர் நேயம்

விரும்பாதே இருப்பதென்நீ என்கின்றாய் தோழி
வயந்தரும்இந் திரர்பிரமர் நாரணர்கா ரணர்கள்

மற்றையர்கள் மற்றையர்கள் மற்றையர்கள் எவர்க்கும்
பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே

பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே.

1

5691

நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும்

நங்கைநினைக் கண்டிடவே நாடிமற்றைத் தலைவர்
வியந்துவரு கின்றதுகண் டுபசரியா திங்கே

மேல்நோக்கி இருப்பதென்நீ என்கின்றாய் தோழி
வயந்தருபார் முதல்நாத வரையுளநாட் டவர்க்கும்

மற்றவரை நடத்துகின்ற மாநாட்டார் தமக்கும்
பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே

பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே.

2

5692

நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும்

நாடும்மற்றைத் தலைவர்தமைக் கண்டபொழு தெனினும்
வியந்தவர்க்கோர் நல்லுரையும் சொல்லாதே தருக்கி

வீதியிலே நடப்பதென்நீ என்கின்றாய் தோழி
வயந்தரும்இவ் வண்டபகி ரண்டமட்டோ நாத

வரையோஅப் பாலும்உள மாநாட்டார் தமக்கும்
பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே

பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே.

3

5693

கடுங்குணத்தோர் பெறற்கரிய நடத்தரசே நினக்குக்

கணவர்எனி னும்பிறரைக் கண்டபொழு தெனினும்
நடுங்குணத்தால் நின்றுசில நல்வார்த்தை பகராய்

நங்காய்ஈ தென்எனநீ நவில்கின்றாய் தோழி
ஒடுங்குபல தத்துவர்க்கும் தத்துவரை நடத்தும்

உபயநிலைத் தலைவருக்கும் அவர்தலைவர் களுக்கும்
நடுங்குகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே

நடஞ்செய்அடிப் பணிக்கென்றே நாட்டியநற் குடியே.

4

5694

மடங்கலந்தார் பெறற்கரிய நடத்தரசே நினக்கு

மணவாளர் எனினும்உன்பால் வார்த்தைமகிழ்ந் துரைக்க
இடங்கலந்த மூர்த்திகள்தாம் வந்தால்அங் கவர்பால்

எண்ணம்இலா திருக்கின்றாய் என்கொல்என்றாய் தோழி
மடங்குசம யத்தலைவர் மதத்தலைவர் இவர்க்கும்

வயங்கும்இவர்க் குபகரிக்கும் மாத்தலைவர் களுக்கும்
அடங்குகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே

ஆடல்அடிப் பணிக்கென்றே அமைத்தகுடி அறியே.

5

5695

அறங்குலவு தோழிஇங்கே நீஉரைத்த வார்த்தை

அறிவறியார் வார்த்தைஎத னால்எனில்இம் மொழிகேள்
உறங்குவதும் விழிப்பதும்பின் உண்ணுவதும் இறத்தல்

உறுவதுடன் பிறத்தல்பல பெறுவதுமாய் உழலும்
மறங்குலவும் அணுக்கள்பலர் செய்தவிர தத்தால்

மதத்தலைமை பதத்தலைமை வாய்த்தனர்அங் கவர்பால்
இறங்கலிலேன் பேசுதலால் என்பயனோ நடஞ்செய்

இறைவர்அடிப் புகழ்பேசி இருக்கின்றேன் யானே.

6

5696

சிவமயமே வேறிலைஎல் லாம்எனநீ தானே

தேமொழியாய் பற்பலகால் செப்பியிடக் கேட்டேன்
தவமயத்தார் பலசமயத் தலைவர்மதத் தலைவர்

தத்துவர்தத் துவத்தலைவர் அவர்தலைவர் தலைவர்
இவர்அவர்என் றயல்வேறு பிரித்தவர்பால் வார்த்தை

இயம்புவதென் என்றாய்ஈ தென்கொல்என்றாய் தோழி
நவமயம்நீ உணர்ந்தறியாய் ஆதலில்இவ் வண்ணம்

நவின்றனைநின் ஐயமற நான்புகல்வேன் கேளே.

7

5697

ஒளிஒன்றே அண்டபகிர் அண்டம்எலாம் விளங்கி

ஓங்குகின்ற தன்றிஅண்ட பகிர்அண்டங் களிலும்
வெளிநின்ற சராசரத்தும் அகத்தினொடு புறத்தும்

விளம்பும்அகப் புறத்தினொடு புறப்புறத்தும் நிறைந்தே
உளிநின்ற இருள்நீக்கி இலங்குகின்ற தன்மை

உலகறியும் நீஅறியா தன்றுகண்டாய் தோழி
தளிநின்ற ஒளிமயமே வேறிலைஎல் லாமும்

தான்எனவே தாகமங்கள் சாற்றுதல்சத் தியமே.

8

5698

ஏற்றிடுவே தாகமங்கள் ஒளிமயமே எல்லாம்

என்றமொழி தனைநினைத்தே இரவில்இருட் டறையில்
சாற்றிடுமண் பாத்திரத்தை மரவட்டில் களைக்கல்

சட்டிகளை வேறுபல சார்ந்தகரு விகளைத்
தேற்றமிகு தண்ணீரைச் சீவர்கள்பற் பலரைச்

செப்பியஅவ் விருட்டறையில் தனித்தனிசேர்த் தாலும்
ஊற்றம்உறும் இருள்நீங்கி ஒளிகாண்ப துளதோ

உளதேல்நீ உரைத்தமொழி உளதாகும் தோழி.

9

5699

பரமதனோ டுலகுயிர்கள் கற்பனையே எல்லாம்

பகர்சிவமே எனஉணர்ந்தோம் ஆதலினால் நாமே
பிரமம்எனப் பிறர்க்குரைத்துப் பொங்கிவழிந் தாங்கே

பேசுகின்ற பெரியவர்தம் பெரியமதம் பிடியேல்
உரமிகுபேர் உலகுயிர்கள் பரமிவைகா ரியத்தால்

உள்ளனவே காரணத்தால் உள்ளனஇல் லனவே
தரமிகுபேர் அருள்ஒளியால் சிவமயமே எல்லாம்

தாம்எனவே உணர்வதுசன் மார்க்கநெறி பிடியே.

10

5700

பிரமம்என்றும் சிவம்என்றும் பேசுகின்ற நிலைதான்

பெருநிலையே இந்நிலையில் பேதமுண்டோ எனவே
தரம்அறிய வினவுகின்றாய் தோழிஇது கேள்நீ

சமரசசன் மார்க்கநிலை சார்திஎனில் அறிவாய்
திரமுறவா யினும்எல்லாம் ஆகிஅல்லா தாகும்

திருவருளாம் வெளிவிளங்க விளங்குதனிப் பொருளாம்
சிரமுறும்ஓர் பொதுஉண்மைச் சிவம்பிரம முடியே

திகழ்மறைஆ கமம்புகலும் திறன்இதுகண் டறியே.

11

5701

இலங்குகின்ற பொதுஉண்மை இருந்தநிலை புகல்என்

றியம்புகின்றாய் மடவாய்கேள் யான்அறியுந் தரமோ
துலங்கும்அதை உரைத்திடவும் கேட்டிடவும் படுமோ

சொல்அளவோ பொருள்அளவோ துன்னும்அறி வளவோ
விலங்குகின்ற தத்துவங்கள் அத்தனையும் கடந்த

மேனிலைஎன் றந்தமெலாம் விளம்புகின்ற தன்றி
வலங்கொளும்அம் மேனிலையின் உண்மைஎது என்றால்

மவுனஞ்சா திப்பதன்றி வாய்திறப்ப திலையே.

12

5702

வாய்திறவா மவுனமதே ஆகும்எனில் தோழி

மவுனசத்தி வெளிஏழும் பரத்தபரத் தொழியும்
தூயபரா பரம்அதுவே என்றால்அங் கதுதான்

துலங்குநடு வெளிதனிலே கலந்துகரை வதுகாண்
மேயநடு வெளிஎன்றால் தற்பரமாம் வெளியில்

விரவியிடும் தற்பரமாம் வெளிஎன்றால் அதுவும்
ஆயபெரு வெளிதனிலே அடங்கும்இது மட்டே

அளப்பதொரு வாறதன்மேல் அளப்பதரி தரிதே.

13

5703

கிளக்கின்ற மறைஅளவை ஆகமப்பே ரளவை

கிளந்திடுமெய்ச் சாதனமாம் அளவைஅறி வளவை
விளக்கும்இந்த அளவைகளைக் கொண்டுநெடுங் காலம்

மேலவர்கள் அளந்தளந்து மெலிகின்றார் ஆங்கே
அளக்கின்ற கருவிஎலாம் தேய்ந்திடக் கண்டாரே

அன்றிஒரு வாறேனும் அளவுகண்டார் இலையே
துளக்கம்உறு சிற்றறிவால் ஒருவாறென் றுரைத்தேன்

சொன்னவெளி வரையேனும் துணிந்தளக்கப் படுமோ.

14


திருச்சிற்றம்பலம்
Back


141. தலைவி கூறல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5704.

தந்தேகம் எனக்களித்தார் தம்அருளும் பொருளும்

தம்மையும்இங் கெனக்களித்தார் எம்மையினும் பிரியார்
எந்தேகம் அதிற்புகுந்தார் என்உளத்தே இருந்தார்

என்உயிரில் கலந்தநடத் திறையவர்கா லையிலே
வந்தேஇங் கமர்ந்தருள்வர் ஆதலினால் விரைந்தே

மாளிகையை அலங்கரித்து வைத்திடுதி இதற்குச்
சந்தேகம் இல்லைஎன்றன் தனித்தலைவர் வார்த்தை

சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.

1

5705

நன்பாட்டு மறைகளுக்கும் மால்அயர்க்கும் கிடையார்

நம்அளவில் கிடைப்பாரோ என்றுநினைத் தேங்கி
என்பாட்டுக் கிருந்தேனை வலிந்துகலந் தணைந்தே

இன்பமுறத் தனிமாலை இட்டநடத் திறைவர்
முன்பாட்டுக் காலையிலே வருகுவர்மா ளிகையை

முழுதும்அலங் கரித்திடுக ஐயுறவோ டொருநீ
தன்பாட்டுக் கிருந்துளறேல் ஐயர்திரு வார்த்தை

சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.

2

5706

முன்பாட்டுக் காலையிலே வருகுவர்என் கணவர்

மோசம்இலை மோசம்என மொழிகின்றார் மொழிக
பின்பாட்டுக் காலையிலே நினைத்தஎலாம் முடியும்

பிசகிலைஇம் மொழிசிறிதும் பிசகிலைஇவ் வுலகில்
துன்பாட்டுச் சிற்றினத்தார் சிறுமொழிகேட் டுள்ளம்

துளங்கேல்நம் மாளிகையைச் சூழஅலங் கரிப்பாய்
தன்பாட்டுத் திருப்பொதுவில் நடத்திறைவர் ஆணை

சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.

3

5707

உள்ளுண்ட உண்மைஎலாம் நான்அறிவேன் என்னை

உடையபெருந் தகைஅறிவார் உலகிடத்தே மாயைக்
கள்ளுண்ட சிற்றினத்தார் யாதறிவார் எனது

கணவர்திரு வரவிந்தக் காலையிலாம் கண்டாய்
நள்ளுண்ட மாளிகையை மங்கலங்கள் நிரம்ப

நன்குபுனைந் தலங்கரிப்பாய் நான்மொழிந்த மொழியைத்
தள்ளுண்டிங் கையமுறேல் நடத்திறைவர் ஆணை

சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.

4

5708

என்னுடைய தனிக்கணவர் அருட்ஜோதி உண்மை

யான்அறிவேன் உலகவர்கள் எங்ஙனம்கண் டறிவார்
உன்னல்அற உண்ணுதற்கும் உறங்குதற்கும் அறிவார்

உலம்புதல்கேட் டையமுறேல் ஓங்கியமா ளிகையைத்
துன்னுறும்மங் கலம்விளங்க அலங்கரிப்பாய் இங்கே

தூங்குதலால் என்னபலன் சோர்வடையேல் பொதுவில்
தன்னுடைய நடம்புரியும் தலைவர்திரு ஆணை

சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.

5

5709

என்னைமண மாலைஇட்டார் என்னுயிரில் கலந்தார்

எல்லாம்செய் வல்லசித்தர் எனக்கறிவித் ததனை
இன்னஉல கினர்அறியார் ஆதலினால் பலவே

இயம்புகின்றார் இயம்புகநம் தலைவர்வரு தருணம்
மன்னியகா லையில்ஆகும் மாளிகையை விரைந்து

மங்கலங்கள் புனைந்திடுக மயங்கிஐயம் அடையேல்
தன்நிகர்தான் ஆம்பொதுவில் நடம்புரிவார் ஆணை

சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.

6

5710

கிளைஅனந்த மறையாலும் நிச்சயிக்கக் கூடாக்

கிளர்ஒளியார் என்அளவில் கிடைத்ததனித் தலைவர்
அளையஎனக் குணர்த்தியதை யான்அறிவேன் உலகர்

அறிவாரோ அவர்உரைகொண் டையம்உறேல் இங்கே
இளைவடையேன் மாளிகையை மங்கலங்கள் நிரம்ப

இனிதுபுனைந் தலங்கரிப்பாய் காலைஇது கண்டாய்
தளர்வறச்சிற் றம்பலத்தே நடம்புரிவார் ஆணை

சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.

7

5711

ஆர்அறிவார் எல்லாம்செய் வல்லவர்என் உள்ளே

அறிவித்த உண்மையைமால் அயன்முதலோர் அறியார்
பார்அறியா தயல்வேறு பகர்வதுகேட் டொருநீ

பையுளொடும் ஐயமுறேல் காலைஇது கண்டாய்
நேர்உறநீ விரைந்துவிரைந் தணிபெறமா ளிகையை

நீடஅலங் கரிப்பாய்உள் நேயமொடு களித்தே
தாரகமிங் கெனக்கான நடத்திறைவர் ஆணை

சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.

8

5712

ஐயர்எனக் குள்ளிருந்திங் கறிவித்த வரத்தை

யார்அறிவார் நான்அறிவேன் அவர்அறிவார் அல்லால்
பொய்உலகர் அறிவாரோ புல்லறிவால் பலவே

புகல்கின்றார் அதுகேட்டுப் புந்திமயக் கடையேல்
மெய்யர்எனை ஆளுடையார் வருகின்ற தருணம்

மேவியது மாளிகையை அலங்கரிப்பாய் விரைந்தே
தையல்ஒரு பாலுடைய நடத்திறைவர் ஆணை

சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.

9

5713

உடையவர்என் உளத்திருந்தே உணர்வித்த வரத்தை

உலகவர்கள் அறியார்கள் ஆதலினால் பலவே
இடைபுகல்கின் றார்அதுகேட் டையமுறேல் இங்கே

இரவுவிடிந் ததுகாலை எய்தியதால் இனியே
அடைவுறநம் தனித்தலைவர் தடையறவந் தருள்வர்

அணிபெறமா ளிகையைவிரைந் தலங்கரித்து மகிழ்க
சடையசையப் பொதுநடஞ்செய் இறைவர்திரு வார்த்தை

சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.

10


திருச்சிற்றம்பலம்
Back


142. அனுபவ மாலை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5714.

அம்பலத்தே திருநடஞ்செய் அடிமலர்என் முடிமேல்

அணிந்துகொண்டேன் அன்பொடும்என் ஆருயிர்க்கும் அணிந்தேன்
எம்பரத்தே மணக்கும்அந்த மலர்மணத்தைத் தோழி

என்உரைப்பேன் உரைக்கஎன்றால் என்னளவன் றதுவே
வம்பிசைத்தேன் அன்றடிநீ என்அருகே இருந்துன்

மணிநாசி அடைப்பதனைத் திறந்துமுகந் தறிகாண்
நம்புறுபார் முதல்நாத வரையுளநாட் டவரும்

நன்குமுகந் தனர்வியந்தார் நன்மணம்ஈ தெனவே.

1

5715

கண்உறங்கேன் உறங்கினும்என் கணவரொடு கலக்கும்

கனவேகண் டுளமகிழ்வேன் கனவொன்றோ நனவும்
எண்அடங்காப் பெருஞ்ஜோதி என்இறைவர் எனையே

இணைந்திரவு பகல்காணா தின்புறச்செய் கின்றார்
மண்உறங்கும் மலைஉறங்கும் வளைகடலும் உறங்கும்

மற்றுளஎல் லாம்உறங்கும் மாநிலத்தே நமது
பெண்உறங்காள் எனத்தாயர் பேசிமகிழ் கின்றார்

பெண்கள்எலாம் கூசுகின்றார் பெருந்தவஞ்செய் கிலரே.

2

5716

எல்லாஞ்செய் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்

எவ்வுலகில் யார்எனக்கிங் கீடுரைநீ தோழீ
நல்லாய்மீக் கோளுடையார் இந்திரர்மா முனிவர்

நான்முகர்நா ரணர்எல்லாம் வான்முகராய் நின்றே
பல்லாரில் இவள்புரிந்த பெருந்தவத்தை நம்மால்

பகர்வரிதென் கின்றார்சிற் பதியில்நடம் புரியும்
வல்லானை மணந்திடவும் பெற்றனள்இங் கிவளே

வல்லாள்என் றுரைக்கின்றார் நல்லார்கள் பலரே.

3

5717

இச்சைஎலாம் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்

யான்செய்தவம் யார்செய்தார் இதுகேள்என் தோழி
எச்சமயத் தேவரையும் சிற்றுரும்பென் றேனும்

எண்ணுவனோ புண்ணியரை எண்ணுமனத் தாலே
பிச்சிஎன நினைத்தாலும் நினையடிநீ அவரைப்

பிரிவேனோ பிரிவென்று பேசுகினும் தரியேன்
விச்சைநடம் கண்டேன்நான் நடங்கண்டால் பேயும்

விடத்துணியா தென்பர்கள்என் விளைவுரைப்ப தென்னே.

4

5718

வஞ்சமிலாத் தலைவருக்கே மாலைமகிழ்ந் தணிந்தேன்

மறைகளுடன் ஆகமங்கள் வகுத்துவகுத் துரைக்கும்
எஞ்சலுறா வாழ்வனைத்தும் என்னுடைய வாழ்வே

எற்றோநான் புரிந்ததவம் சற்றேநீ உரையாய்
அஞ்சுமுகம் காட்டியஎன் தாயர்எலாம் எனக்கே

ஆறுமுகம் காட்டிமிக வீறுபடைக் கின்றார்
பஞ்சடிப்பா வையர்எல்லாம் விஞ்சடிப்பால் இருந்தே

பரவுகின்றார் தோழிஎன்றன் உறவுமிக விழைந்தே.

5

5719

அன்னம்உண அழைக்கின்றாய் தோழிஇங்கே நான்தான்

அம்பலத்தே ஆடுகின்ற அண்ணல்அடி மலர்த்தேன்
உன்னைநினைத் துண்டன்என் உள்ளகத்தே வாழும்

ஒருதலைமைப் பெருந்தலைவ ருடையஅருட் புகழாம்
இன்னமுதில் என்னுடைஅன் பென்னும்நறுங் கனியின்

இரதமும்என் தனிக்கணவர் உருக்காட்சி எனும்ஓர்
கன்னல்உளே தனித்தெடுத்த தேம்பாகும் கலந்தே

களித்துண்டேன் பசிசிறிதும் கண்டிலன்உள் ளகத்தே.

6

5720

பொதுநடஞ்செய் துரைமுகத்தே தளதளஎன் றொளிரும்

புன்னகையே ஒருகோடிப் பொன்பெறும்என் றுரைப்பார்
இதுவரையோ பலகோடி என்னினும்ஓர் அளவோ

எண்இறந்த அண்டவகை எத்தனைகோ டிகளும்
சதுமறைசொல் அண்டவகை தனித்தனியே நடத்தும்

சத்தர்களும் சத்திகளும் சற்றேனும் பெறுமோ
துதிபெறும்அத் திருவாளர் புன்னகையை நினைக்குந்

தோறும்மனம் ஊறுகின்ற சுகஅமுதம் பெறுமே.

7

5721

கண்கலந்த கணவர்எனைக் கைகலந்த தருணம்

கண்டறியேன் என்னையும்என் கரணங்கள் தனையும்
எண்கலந்த போகம்எலாம் சிவபோகம் தனில்ஓர்

இறைஅளவென் றுரைக்கின்ற மறைஅளவின் றறிந்தேன்
விண்கலந்த திருவாளர் உயிர்கலந்த தருணம்

வினைத்துயர்தீர்ந் தடைந்தசுகம் நினைத்திடுந்தோ றெல்லாம்
உண்கலந்த ஆனந்தப் பெரும்போகம் அப்போ

துற்றதென எனைவிழுங்கக் கற்றதுகாண் தோழி.

8

5722

மாடமிசை ஓங்குநிலா மண்டபத்தே எனது

மணவாளர் கொடுத்ததிரு அருளமுதம் மகிழ்ந்தே
ஏடவிழ்பூங் குழலாய்நான் உண்டதொரு தருணம்

என்னைஅறிந் திலன்உலகம் தன்னையும்நான் அறியேன்
தேடறிய நறும்பாலும் தேம்பாகும் நெய்யும்

தேனும்ஒக்கக் கலந்ததெனச் செப்பினும்சா லாதே
ஈடறியாச் சுவைபுகல என்னாலே முடியா

தென்னடியோ அவ்வமுதம் பொன்னடிதான் நிகரே.

9

5723

கற்பூரம் மணக்கின்ற தென்னுடம்பு முழுதும்

கணவர்திரு மேனியிலே கலந்தமணம் அதுதான்
இற்பூத மணம்போலே மறைவதன்று கண்டாய்

இயற்கைமணம் துரியநிறை இறைவடிவத் துளதே
பொற்பூவும் நறுமணமும் கண்டறியார் உலகர்

புண்ணியனார் திருவடிவில் நண்ணியவா றதுவே
நற்பூதி அணிந்ததிரு வடிவுமுற்றும் தோழி

நான்கண்டேன் நான்புணர்ந்தேன் நான்அதுஆ னேனே.

10

5724

மன்னுதிருச் சபைநடுவே வயங்குநடம் புரியும்

மணவாளர் திருமேனி வண்ணங்கண் டுவந்தேன்
என்னடிஇத் திருமேனி இருந்தவண்ணம் தோழி

என்புகல்வேன் மதிஇரவி இலங்கும்அங்கி உடனே
மின்னும்ஒன்றாய்க் கூடியவை எண்கடந்த கோடி

விளங்கும்வண்ணம் என்றுரைக்கோ உரைக்கினும்சா லாதே
அன்னவண்ணம் மறைமுடிவும் அறைவரிதே அந்த

அரும்பெருஞ்சோ தியின்வண்ணம் யார்உரைப்பர் அந்தோ.

11

5725

கள்ளுண்டாள் எனப்புகன்றார் கனகசபை நடுவே

கண்டதுண்டு சிற்சபையில் உண்டதும்உண் டடிநான்
எள்ளுண்ட பலவிடயத் திறங்குங்கள் அன்றே

என்றும்இற வாநிலையில் இருத்துங்கள் உலகர்
உள்ளுண்ட போதுமயக் குற்றிடுங்கள் அலவே

உள்ளமயக் கனைத்தினையும் ஒழித்திடுங்கள் மடவாய்
அள்ளுண்ட பிறரும்எனை அடுத்தடுத்துக் கண்டால்

அறிவுதரும் அவர்க்கும்இங்கே யான்உண்ட கள்ளே.

12

5726

காரிகைநீ என்னுடனே காணவரு வாயோ

கனகசபை நடுநின்ற கணவர்வடி வழகை
ஏரிகவாத் திருவடிவை எண்ணமுடி யாதேல்

இயம்பமுடிந் திடுமோநாம் எழுதமுடிந் திடுமோ
பேரிகவா மறைகளுடன் ஆகமங்கள் எல்லாம்

பின்னதுமுன் முன்னதுபின் பின்முன்னா மயங்கிப்
பாரிகவா தின்றளவும் மிகஎழுதி எழுதிப்

பார்க்கின்ற முடிவொன்றும் பார்த்ததிலை அம்மா.

13

5727

கண்ணாறு(402) படும்எனநான் அஞ்சுகின்றேன் பலகால்

கணவர்திரு வடிவழகைக் கண்டுகண்டு களிக்கில்
எண்ணாஎன் ஆசைவெள்ளம் என்சொல்வழி கேளா

தெனைஈர்த்துக் கொண்டுசபைக் கேகுகின்ற தந்தோ
பெண்ணாசை பெரிதென்பர் விண்ணாளும் அவர்க்கும்

பெண்ணாசை பெரிதலகாண் ஆணாசை பெரிதே
உண்ணாடிப் பற்பலகால் கண்ணாறு கழிக்கல்

உறுகின்றேன் தோழிநின்னால் பெறுகின்ற படியே.

14

(402). இப்பதிகத்தில் அடிகளார் எழுத்து 'கண்ணாறு'
என்பதுபோல் காண்கிறது. ஓர் அன்பர் படியில்
உள்ளதும் 'கண்ணாறு'. திருத்தணிகைப் பகுதி
ஜீவசாட்சி மாலையில் அவர்கள் எழுதி உள்ளது
'கண்ணேறு' என்பது. முதல் அச்சும் 'கண்ணேறு'.- ஆ. பா.

5728

கற்பூரம் கொணர்ந்திடுக தனித்தோழி எனது

கணவர்வரு தருணம்இது கண்ணாறு கழிப்பாம்
எற்பூத நிலைஅவர்தம் திருவடித்தா மரைக்கீழ்

இருப்பதடி கீழிருப்ப தென்றுநினை யேல்காண்
பற்பூத நிலைகடந்து நாதநிலைக் கப்பால்

பரநாத நிலைஅதன்மேல் விளங்குகின்ற தறிநீ
இற்பூவை அவ்வடிக்குக் கண்ணாறு கழித்தால்

எவ்வுலகத் தெவ்வுயிர்க்கும் இனிதுநலந் தருமே.

15

5729

மனைஅணைந்து மலர்அணைமேல் எனைஅணைந்த போது

மணவாளர் வடிவென்றும் எனதுவடி வென்றும்
தனைநினைந்து பிரித்தறிந்த தில்லையடி எனைத்தான்

சற்றுமறி யேன்எனில்யான் மற்றறிவ தென்னே
தினைஅளவா யினும்விகற்ப உணர்ச்சிஎன்ப திலையே

திருவாளர் கலந்தபடி செப்புவதெப் படியோ
உனைஅணைந்தால் இவ்வாறு நான்கேட்பேன் அப்போ

துன்னறிவும் என்னறிவும் ஓரறிவாம் காணே.

16

5730

தாழ்குழலாய் எனைச்சற்றே தனிக்கவிட்டால் ஞான

சபைத்தலைவர் வருகின்ற தருணம்இது நான்தான்
வாழ்வடைபொன் மண்டபத்தே பளிக்கறையி னூடே

மலரணையை அலங்கரித்து வைத்திடுதல் வேண்டும்
சூழுறநான் அலங்கரிப்பேன் என்கின்றாய் தோழி

துரைக்குமனம் இல்லைஅது துணிந்தறிந்தேன் பலகால்
ஏழ்கடலில் பெரிதன்றோ நான்அடைந்த சுகம்இங்

கிதைவிடநான் செய்பணிவே றெப்பணிநீ இயம்பே.

17

5731

தனித்தலைவர் வருகின்ற தருணம்இது தோழி

தனிக்கஎனை விடுநீயும் தனித்தொருபால் இருத்தி
இனித்தசுவைத் திரள்கலந்த திருவார்த்தை நீயும்

இன்புறக்கேட் டுளங்களிப்பாய் இதுசாலும் நினக்கே
மனித்தர்களோ வானவரோ மலர்அயனோ மாலோ

மற்றையரோ என்புகல்வேன் மகேசுரர்ஆ தியரும்
தனித்தஒரு திருவார்த்தை கேட்பதற்கே கோடித்

தவஞ்செய்து நிற்கின்றார் நவஞ்செய்த நிலத்தே.

18

5732

மணவாளர் வருகின்ற தருணம்இது மடவாய்

மாளிகையின் வாயல்எலாம் வளம்பெறநீ புனைக
குணவாளர் அணையும்மலர் அணைஅகத்தை நானே

குலவுமணி விளக்கத்தால் அலங்கரிக்கப் புகுவேன்
தணவாத சுகந்தரும்என் தனிக்கணவர் வரிலோ

சற்றுமயல் வாதனைகள் உற்றிடுதல் ஆகா
அனவாத மனத்தவரைப் புறப்பணிக்கே விடுக

அன்புடையார் களுக்கிடுக அகப்பணிசெய் திடவே.

19

5733

அரும்பொன்அனை யார்எனது கணவர்வரு தருணம்

ஆயிழைஈ தாதலினால் வாயல்முகப் பெல்லாம்
விரும்புறுதோ ரணம்கொடிகள் பழுத்தகுலை வாழை

விரைக்கமுகு தெங்கிளநீர் எனைப்பலவும் புனைக
கரும்புநெல்லின் முளைநிறைநீர்க் குடம்இணைந்த கயலும்

கண்ணாடி கவரிமுதல் உண்ணாடி இடுக
இரும்பொடுகல் ஒத்தமனங் களும்கனிய உருக்கும்

இறைவர்திரு வரவெதிர்கொண் டேத்துவதற் கினிதே.

20

5734

பதிவரும்ஓர் தருணம்இது தருணம்இது தோழி(403)

பராக்கடையேல் மணிமாடப் பக்கமெலாம் புனைக
அதிகநலம் பெறுபளிக்கு மணிமேடை நடுவே

அணையைஅலங் கரித்திடநான் புகுகின்றேன் விரைந்தே
கதிதருவார் நல்வரவு சத்தியம்சத் தியம்நீ

களிப்பினொடு மணிவிளக்கால் கதிர்பரவ நிரைத்தே
புதியநவ மணிகுயின்ற ஆசனங்கள் இடுக

புண்ணியனார் நல்வரவை எண்ணிஎண்ணி இனிதே.

21

(403) இப்பதிகத்தில் சிற்சில இடங்களில் "தோழீ"
என்பதுபோல் காண்கிறது - ஆ. பா.

5735

மன்றாடும் கணவர்திரு வரவைநினைக் கின்றேன்

மகிழ்ந்துநினைத் திடுந்தோறும் மனங்கனிவுற் றுருகி
நன்றாவின் பால்திரளின் நறுநெய்யும் தேனும்

நற்கருப்பஞ் சாறெடுத்த சர்க்கரையும் கூட்டி
இன்றார உண்டதென இனித்தினித்துப் பொங்கி

எழுந்தெனையும் விழுங்குகின்ற தென்றால்என் தோழி
இன்றாவி அன்னவரைக் கண்டுகொளும் தருணம்

என்சரிதம் எப்படியோ என்புகல்வேன் அந்தோ.

22

5736

கூடியஎன் தனிக்கணவர் நல்வரத்தை நானே

குறிக்கின்ற தோறும்ஒளி எறிக்கின்ற மனந்தான்
நீடியபொன் மலைமுடிமேல் வாழ்வடைந்த தேவர்

நீள்முடிமேல் இருக்கின்ற தென்றுரைக்கோ அன்றி
ஆடியபொற் சபைநடுவே சிற்சபையின் நடுவே

ஆடுகின்ற அடிநிழற்கீழ் இருக்கின்ற தென்கோ
ஏடவிழ்பூங் குழலாய்என் இறைவரைக்கண் ணுற்றால்

என்மனத்தின் சரிதம்அதை யார்புகல்வார் அந்தோ.

23

5737

அருளாளர் வருகின்ற தருணம்இது தோழி

ஆயிரம்ஆ யிரங்கோடி அணிவிளக்கேற் றிடுக
தெருளாய பசுநெய்யே விடுகமற்றை நெய்யேல்

திருமேனிக் கொருமாசு செய்தாலும் செய்யும்
இருள்ஏது காலைவிளக் கேற்றிடவேண் டுவதோ

என்னாதே மங்கலமா ஏற்றுதலாங் கண்டாய்
மருளேல்அங் கவர்மேனி விளக்கமதெண் கடந்த

மதிகதிர்செங் கனல்கூடிற் றென்னினும்சா லாதே.

24

5738

என்னிருகண் மணிஅனையார் என்னுயிர்நா யகனார்

என்உயிருக் கமுதானார் எல்லாஞ்செய் வல்லார்
பொன்அணிபொற் சபையாளர் சிற்சபையார் என்னைப்

புறம்புணர்ந்தார் அகம்புணர்ந்தார் புறத்தகத்தும் புணர்ந்தார்
அன்னியர்அல் லடிஅவரே எனதுகுல தெய்வம்

அருந்தவத்தால் கிடைத்தகுரு வாகும்அது மட்டோ
மன்னுறும்என் தனித்தாயும் தந்தையும்அங் கவரே

மக்கள்பொருள் மிக்கதிரு ஒக்கலும்அங் கவரே.

25

5739

தந்தைஎன்றாய் மகன்என்றாய் மணவாளன் என்றாய்

தகுமோஇங் கிதுஎன்ன வினவுதியோ மடவாய்
சிந்தைசெய்து காணடிநீ சிற்சபையில் நடிக்கும்

திருவாளர் எனைப்புணர்ந்த திருக்கணவர் அவர்தம்
அந்தநடு முதலில்லா அரும்பெருஞ்சோ தியதே

அண்டசரா சரங்கள்எலாம் கண்டதுவே றிலையே
எந்தவகை பொய்புகல்வேன் மற்றையர்போல் அம்மா

வீறுமவர்(404) திருமேனி நானும்என அறியே.

26

( 404). ஈங்கவர்தம் - முதற்பதிப்பு, பொ.சு., பி. இரா., ச. மு. க.

5740

எல்லாமுஞ் செயவல்ல தனித்தலைவர் பொதுவில்

இருந்துநடம் புரிகின்ற அரும்பெருஞ்சோ தியினார்
நல்லாய்நல் நாட்டார்கள எல்லாரும் அறிய

நண்ணிஎனை மணம்புரிந்தார் புண்ணியனார் அதனால்
இல்லாமை எனக்கில்லை எல்லார்க்கும் தருவேன்

என்னுடைய பெருஞ்செல்வம் என்புகல்வேன் அம்மா
செல்லாத அண்டமட்டோ அப்புறத்தப் பாலும்

சிவஞானப் பெருஞ்செல்வம் சிறப்பதுகண் டறியே.

27

5741

வான்கண்ட பிரமர்களும் நாரணரும் பிறரும்

மாதவம்பன் னாட்புரிந்து வருந்துகின்றார் அந்தோ
நான்கண்ட காட்சியவர் கண்டிலரே உலகில்

நான்ஒருபெண் செய்ததவம் எத்தவமோ அறியேன்
கோன்கண்ட குடிக்கொன்றும் குறைவிலையேல் அண்ட

கோடிஎலாம் தனிப்பெருஞ்செங் கோல்நடத்தும் இறைவர்
தான்கண்ட குடியானேன் குறைகளெலாம் தவிர்ந்தேன்

தனித்தவள மாடமிசை இனித்திருக் கின்றேனே.

28

5742

என்கணவர் பெருந்தன்மை ஆறந்த நிலைக்கே

எட்டிநின்று பார்ப்பவர்க்கும் எட்டாதே தோழி
பொன்கணவர் கலைமடந்தை தன்கணவர் முதலோர்

புனைந்துரைக்கும் கதைபோல நினைந்துரைக்கப் படுமோ
புன்கணவர் அறியாதே புலம்புகின்றார் அவர்போல்

புகல்மறையும் ஆகமமும் புலம்புகின்ற தம்மா
உன்கணவர் திறம்புகல்என் றுரைக்கின்றாய் நீதான்

உத்தமனார் அருட்சோதி பெற்றிடமுன் விரும்பே.

29

5743

ஈங்குசிலர் உண்ணுகஎன் றென்னைஅழைக் கின்றார்

என்தோழி நான்இவர்கட் கென்புகல்வேன் அம்மா
ஓங்குநிலா மண்டபத்தே என்கணவ ருடனே

உவட்டாத தெள்ளமுதம் உண்டுபசி தீர்ந்தேன்
தேங்குழல்இங் கினிஎனக்குப் பசிவரில்அப் போது

செப்புகின்றேன் இப்போது சிலுகிழைத்தல் வேண்டா
ஏங்கல்அற நீஅவர்க்குத் தெளிவிப்பாய் மற்றை

இருந்தவரும் விருந்தவரும் இனிதுபுசித் திடற்கே.

30

5744

ஐயர்எனை ஆளுடையார் அரும்பெருஞ்சோ தியினார்

அம்பலத்தே நடம்புரியும் ஆனந்த வடிவர்
மெய்யர்எனை மணம்புரிந்த தனிக்கணவர் துரிய

வெளியில்நிலா மண்டபத்தே மேவிஅமு தளித்தென்
கையகத்தே ஒருபசும்பொற் கங்கணமும் புனைந்தார்

கங்கணத்தின் தரத்தைஎன்னால் கண்டுரைக்கப் படுமோ
வையகமும் வானகமும் கொடுத்தாலும் அதற்கு

மாறாக மாட்டாதேல் மதிப்பரிதாம் அதுவே.

31

5745

தன்வடிவம் தானாகும் திருச்சிற்றம் பலத்தே

தனிநடஞ்செய் பெருந்தலைவர் பொற்சபைஎங் கணவர்
பொன்வடிவம் இருந்தவண்ணம் நினைத்திடும்போ தெல்லாம்

புகலரும்பே ரானந்த போகவெள்ளம் ததும்பி
என்வடிவில் பொங்குகின்ற தம்மாஎன் உள்ளம்

இருந்தபடி என்புகல்வேன் என்அளவன் றதுதான்
முன்வடிவம் கரைந்தினிய சர்க்கரையும் தேனும்

முக்கனியும் கூட்டிஉண்ட பக்கமும்சா லாதே.

32

5746

இவ்வுலகில் எனைப்போல்வார் ஓர்அனந்தம் கோடி

என்னில்உயர்ந் திருக்கின்றார் எத்தனையோ கோடி
அவ்வுலகில் சிறந்துநின்றார் அளவிறந்த கோடி

அத்தனைபேர் களும்அந்தோ நித்தம்வருந் திடவும்
எவ்வுலகும் உணர்வரிய திருச்சிற்றம் பலத்தே

இனிதமர்ந்த தலைவர்இங்கே என்னைமணம் புரிந்தார்
நவ்விவிழி மடமாதே கீழ்மேல்என் பதுதான்

நாதர்திரு அருட்சோதி நாடுவதொன் றிலையே.

33

5747

திருவாளர் பொற்சபையில் திருநடஞ்செய் தருள்வார்

சிற்சபையார் என்தனக்குத் திருமாலை கொடுத்தார்
உருவாளர் அருவாகி ஒளியாகி வெளியாய்

ஓங்குகின்றார் என்னுடைய உயிர்த்துணைவர் அவர்தம்
பெருவாய்மைத் திருவருளே பெருவாழ்வென் றுணர்ந்தோர்

பேசியமெய் வாசகத்தின் பெருமையைஇன் றுணர்ந்தேன்
துருவாத எனக்கிங்கே அருள்நினைக்கும் தோறும்

சொல்லளவல் லாதசுகம் தோன்றுவதென் தோழி.

34

5748

அருளாளர் பொற்பொதுவில் ஆனந்த நடஞ்செய்

ஆனந்த வண்ணர்எனை ஆளுடையார் நான்தான்
தெருளாத பருவத்தே தெருட்டிமணம் புரிந்த

திருவாளர் அவர்பெருமைத் திறத்தைஎவர் புகல்வார்
மருளாத ஆகமங்கள் மாமறைகள் எல்லாம்

மருண்டனவேல் என்னடிநம் மனவாக்கின் அளவோ
இருளாமை என்றுறுமோ அன்றுசிறி துரைப்பாம்

என்னவும்நாண் ஈர்ப்பதிதற் கென்புரிவேன் தோழி.

35

5749

செம்பவளத் திருமலையோ மாணிக்க விளக்கோ

தெய்வமர கதத்திரளோ செழுநீலப் பொருப்போ
பம்புமணி ஒளியோநற் பசும்பொன்னின் சுடரோ

படிகவண்ணப் பெருங்காட்சி தானோஎன் றுணர்ந்தே
எம்பரமன் றெம்பெருமான் புறவண்ணம் யாதோ

என்பாரேல் அகவண்ணம் யார்உரைக்க வல்லார்
தம்பரமென் றென்னைஅன்று மணம்புரிந்தார் ஞான

சபைத்தலைவர் அவர்வண்ணம் சாற்றுவதென் தோழி.

36

5750

தேவர்களோ முனிவர்களோ சிறந்தமுத்தர் தாமோ

தேர்ந்தசிவ யோகிகளோ செம்பொருள் கண்டோ ரோ
மூவர்களோ ஐவர்களோ முதற்பரையோ பரமோ

முன்னியஎன் தனித்தலைவர் தம்இயலை உணர்ந்தார்
யாவர்களும் அல்லஎன்றால் யான்உணர்ந்து மொழிதற்

கமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய்
ஆவலொடும் அன்பர்தொழச் சிற்சபையில் நடிப்பார்

அவர்பெருமை அவர்அறிவர் அவரும்அறிந் திலரே.

37

5751

திருச்சிற்றம் பலத்தின்பத் திருவுருக்கொண் டின்பத்

திருநஞ்செய் தருள்கின்ற திருவடிக்கே தொழும்பாய்
அருச்சிக்கும் பேரன்பர் அறிவின்கண் அறிவாய்

அவ்வறிவில் விளைந்தசிவா னந்தஅமு தாகிப்
பரிச்சிக்கும்405 அவ்வமுதின் நிறைந்தசுவை ஆகிப்

பயனாகிப் பயத்தின்அனு பவமாகி நிறைந்தே
உருச்சிக்கும் எனமறைகள் ஆகமங்கள் எல்லாம்

ஓதுகின்ற எனில்அவர்தம் ஒளிஉரைப்ப தெவரே.

38

(405). பரிச்சிக்கும் - பரிசிக்கும் என்பதன் விகாரம்.

5752

வெடித்தளிந்த முக்கனியின் வடித்தரசந் தனிலே

விரும்புறஉட் பிழிந்தெடுத்த கரும்பிரதம் கலந்தே
தடித்தசெழும் பாற்பெய்து கோற்றேன்விட் டதனைத்

தனித்தபர அமுதத்தில் தான்கலந்துண் டாற்போல்
இடித்திடித்தென் உளமுழுதும் தித்திக்கும் வார்த்தை

இனிதுரைத்து மணம்புரிந்த என்னுயிர்நா யகர்வான்
பொடித்திருமே னியர்அவரைப் புணரவல்லேன் அவர்தம்

புகழ்உரைக்க வல்லேனோ அல்லேன்காண் தோழீ.

39

5753

கன்னிஎனை மணந்தபதி கனிதருசிற் சபைக்கே

கலந்ததனிப் பதிவயங்கு கனகசபா பதிவான்
பன்னியருக் கருள்புரிந்த பதிஉலக மெல்லாம்

படைத்தபதி காத்தருளும் பசுபதிஎவ் வுயிர்க்கும்
அன்னியம்அல் லாதகத்தும் புறத்தும்அகப் புறத்தும்

அருட்செங்கோல் செலுத்துகின்ற அதிபதியாம் அதனால்
என்னியல்போல் பிறர்இயலை எண்ணியிடேல் பிறரோ

என்பதிபால் அன்பதிலார் அன்புளரேல் எண்ணே.

40

5754

என்னியல்போல் பிறர்இயலை எண்ணேல்என் றுரைத்தேன்

இறுமாப்பால் உரைத்தனன்என் றெண்ணியிடேல் மடவாய்
பன்னியநான் என்பதியின் பற்றலது வேறோர்

பற்றறியேன் உற்றவரும் மற்றவரும் பொருளும்
உன்னியஎன் உயிரும்என துடலும்என துணர்வும்

உயிர்உணர்வால் அடைசுகமும் திருச்சிற்றம் பலத்தே
மன்னியதா தலில்நான்பெண் மகளும்அலேன் வரும்ஆண்

மகனும்அலேன் அலியும்அலேன் இதுகுறித்தென் றறியே.

41

5755

பார்முதலாப் பரநாதப் பதிகடந்தப் பாலும்

பாங்குடைய தனிச்செங்கோல் ஓங்கநடக் கின்ற
சீர்தெரிந்தார் ஏத்துதொறும் ஏத்துதற்கோ எனது

திருவாளர் அருள்கின்ற தன்றுமனங் கனிந்தே
ஆர்தருபே ரன்பொன்றே குறித்தருளு கின்றார்

ஆதலினால் அவரிடத்தே அன்புடையார் எல்லாம்
ஓர்தரும்என் உறவினராம் ஆணைஇது நீயும்

உறவான தவர்அன்பு மறவாமை குறித்தே.

42

5756

நாதாந்த வரையும்எங்கள் நாயகனார் செங்கோல்

நடக்கின்ற தென்கின்றார் நாதாந்த மட்டோ
போதாந்த நிலையும்உயர் யோகாந்த நிலையும்

புனிதகலாந் தப்பதியும் புகல்கின்றார் புகலும்
வேதாந்த வெளியும்மிகு சித்தாந்த வெளியும்

விளங்கும்இவற் றப்பாலும் அதன்மேல்அப் பாலும்
வாதாந்தத் ததன்மேலும் அதன்மேல்அப் பாலும்

மன்றாடி அருட்செங்கோல் சென்றாடல் அறியே.

43

5757

புண்ணியனார் என்உளத்தே புகுந்தமர்ந்த தலைவர்

பொதுவிளங்க நடிக்கின்ற திருக்கூத்தின் திறத்தை
எண்ணியநான் எண்ணுதொறும் உண்டுபசி தீர்ந்தே

இருக்கின்றேன் அடிக்கடிநீ என்னைஅழைக் கின்றாய்
பண்ணுறும்என் தனிக்கணவர் கூத்தாடுஞ் சபையைப்

பார்த்தாலும் பசிபோமே பார்த்திடல்அன் றியுமே
அண்ணுறும்அத் திருச்சபையை நினைக்கினும்வே சாறல்
ஆறுமடி ஊறுமடி ஆனந்த அமுதே.

44

5758

கூசுகின்ற தென்னடிநான் அம்பலத்தே நடிக்கும்

கூத்தாடிக் கணவருக்கே மாலையிட்டாய் எனவே
ஏசுகின்றார் ஆரடியோ அண்டபகிர் அண்டத்

திருக்கின்ற சத்தர்களும் சத்திகளும் பிறரும்
பேசுகின்ற வார்த்தைஎலாம் வள்ளல்அருட் கூத்தின்

பெருமையலால் வேறொன்றும் பேசுகின்ற திலையே
வீசுகின்ற பெருஞ்சோதித் திருக்கூத்தின் திறமே

வேதமுடன் ஆகமங்கள் விளம்புகின்ற தன்றே.

45

5759

குலமறியார் புலமறியார் அம்பலத்தே நடிக்கும்

கூத்தாடி ஐயருக்கே மாலையிட்டாய் எனவே
புலமறியார் போல்நீயும் புகலுதியோ தோழி

புலபுலஎன் றளப்பதெலாம் போகவிட்டிங் கிதுகேள்
அலகறியாத் திருக்கூத்தென் கணவர்புரி யாரேல்

அயன்அரியோ டரன்முதலாம் ஐவர்களும் பிறரும்
விலகறியா உயிர்பலவும் நீயும்இங்கே நின்று

மினுக்குவதும் குலுக்குவதும் வெளுத்துவிடும் காணே.

46

5760

கொடிஇடைப்பெண் பேதாய்நீ அம்பலத்தே நடிக்கும்

கூத்தாடி என்றெனது கொழுநர்தமைக் குறித்தாய்
படிஇடத்தே வான்இடத்தே பாதலத்தே அண்ட

பகிர்அண்ட கோடியிலே பதிவிளக்கம் எல்லாம்
அடிமலர்கொண் டையர்செய்யும் திருக்கூத்தின் விளக்கம்

ஆகும்இது சத்தியம்என் றருமறைஆ கமங்கள்
கெடியுறவே பறையடித்துத் திரிகின்ற அவற்றைக்

கேட்டறிந்து கொள்வாய்நின் வாட்டமெலாம் தவிர்ந்தே.

47

5761

இன்பவடி வந்தருதற் கிறைவர் வருகின்றார்

எல்லாஞ்செய் வல்லசித்தர் இங்குவரு கின்றார்
அன்பர்உளத் தேஇனிக்கும் அமுதர்வரு கின்றார்

அம்பலத்தே நடம்புரியும் ஐயர்வரு கின்றார்
என்புருப்பொன் உருவாக்க எண்ணிவரு கின்றார்

என்றுதிரு நாதஒலி இசைக்கின்ற தம்மா
துன்பமறத் திருச்சின்ன ஒலிஅதனை நீயும்

ுகம்பெறவே கேளடிஎன் தோழிஎனைச் சூழ்ந்தே.

48

5762

துரியபதம் கடந்தபெருஞ் சோதிவரு கின்றார்

சுகவடிவந் தரஉயிர்க்குத் துணைவர்வரு கின்றார்
பெரியபிர மாதியர்க்கும் அரியர் வருகின்றார்

பித்தர்என மறைபுகலும் சித்தர்வரு கின்றார்
இரிவகல்சிற் சபைநடஞ்செய் இறைவர்வரு கின்றார்

என்றுதிரு நாதஒலி இசைக்கின்ற தம்மா
உரிமைபெறும் என்தோழி நீயும்இங்கே சின்ன

ஒலிகேட்டுக் களித்திடுவாய் உளவாட்டம் அறவே.

49

5763

ஈசர்என துயிர்த்தலைவர் வருகின்றார் நீவிர்

எல்லீரும் புறத்திருமின் என்கின்றேன் நீதான்
ஏசறவே அகத்திருந்தால் என்எனக்கேட் கின்றாய்

என்கணவர் வரில்அவர்தாம் இருந்தருளும் முன்னே
ஆசைவெட்கம் அறியாது நான்அவரைத் தழுவி

அணைத்துமகிழ் வேன்அதுகண் டதிசயித்து நொடிப்பார்
கூசறியாள் இவள்என்றே பேசுவர்அங் கதனால்

கூறியதல் லதுவேறு குறித்ததிலை தோழீ.

50

5764

அரசுவரு கின்றதென்றே அறைகின்றேன் நீதான்

ஐயமுறேல் உற்றுக்கேள் அசையாது தோழி
முரசுசங்கு வீணைமுதல் நாதஒலி மிகவும்

முழங்குவது திருமேனி வழங்குதெய்வ மணந்தான்
விரசஎங்கும் வீசுவது நாசிஉயிர்த் தறிக

வீதிஎலாம் அருட்சோதி விளங்குவது காண்க
பரசிஎதிர் கொள்ளுதும்நாம் கற்பூர விளக்குப்

பரிந்தெடுத்தென் னுடன்வருக தெரிந்தடுத்து மகிழ்ந்தே.

51

5765

தாழ்குழல்நீ ஆண்மகன்போல் நாணம்அச்சம் விடுத்தே

சபைக்கேறு கின்றாய்என் றுரைக்கின்றாய் தோழி
வாழ்வகைஎன் கணவர்தமைப் புறத்தணைந்தாள் ஒருத்தி

மால்எனும்பேர் உடையாள்ஓர் வளைஆழிப் படையாள்
ஆழ்கடலில் துயில்கின்றாள் மாமணிமண் டபத்தே

ஆள்கின்றாள் ஆண்மகனாய் அறிந்திலையோ அவரைக்
கேழ்வகையில் அகம்புணர்ந்தேன் அவர்கருணை அமுதம்

கிடைத்ததுநான் ஆண்மகனா கின்றததி சயமோ.

52

5766

துடியேறும் இடைஉனக்கு வந்தஇறு மாப்பென்

சொல்என்றாய் அரிபிரமர் சுரர்முனிவர் முதலோர்
பொடிஏறு வடிவுடையார் என்கணவர் சபையின்

பொற்படிக்கீழ் நிற்பதுபெற் றப்பரிசு நினைந்தே
இடிஏறு போன்றிறுமாந் திருக்கின்றா ரடிநான்

எல்லாரும் அதிசயிக்க ஈண்டுதிருச் சபையின்
படிஏறித் தலைவர்திரு அடிஊறும் அமுதம்

பருகுகின்றேன் இறுமாக்கும் பரிசுரைப்ப தென்னே.

53

5767

ஈற்றறியேன் இருந்திருந்திங் கதிசயிப்ப தென்நீ

என்கின்றாய் நீஎனைவிட் டேகுதொறும் நான்தான்
காற்றறியாத் தீபம்போல் இருந்திடும்அத் தருணம்

கண்டபரி சென்புகல்வேன் அண்டபகிர் அண்டம்
தோற்றறியாப் பெருஞ்சோதி மலைபரநா தத்தே

தோன்றியதாங் கதன்நடுவே தோன்றியதொன் றதுதான்
மாற்றறியாப் பொன்ஒளியோ அவ்வொளிக்குள் ஆடும்

வள்ளல்அருள் ஒளியோஈ ததிசயிக்கும் வகையே.

54

5768

நடம்புரிவார் திருமேனி வண்ணம்அதை நான்போய்

நன்கறிந்து வந்துனக்கு நவில்வேன்என் கின்றாய்
இடம்வலம்இங் கறியாயே நீயோஎன் கணவர்

எழில்வண்ணம் தெரிந்துரைப்பாய் இசைமறையா கமங்கள்
திடம்படநாம் தெரிதும்எனச் சென்றுதனித் தனியே

திருவண்ணம் கண்டளவே சிவசிவஎன் றாங்கே
கடம்பெறுகள் உண்டவென மயங்குகின்ற வாறு

கண்டிலைநீ ஆனாலும் கேட்டிலையோ தோழீ.

55

5769

பொய்பிடித்தார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப்

பொதுநடங்கண் டுளங்களிக்கும் போதுமண வாளர்
மெய்பிடித்தாய் வாழியநீ சமரசசன் மார்க்கம்

விளங்கஉல கத்திடையே விளங்குகஎன் றெனது
கைபிடித்தார் நானும்அவர் கால்பிடித்துக் கொண்டேன்

களித்திடுக இனியுனைநாம் கைவிடோ ம் என்றும்
மைபிடித்த விழிஉலகர் எல்லாரும் காண

மாலையிட்டோ ம் என்றெனக்கு மாலையணிந் தாரே.

56

5770

பொருத்தமிலார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப்

பொதுநடங்கண் டுவந்துநிற்கும் போதுதனித் தலைவர்
திருத்தம்உற அருகணைந்து கைபிடித்தார் நானும்

தெய்வமலர் அடிபிடித்துக் கொண்டேன்சிக் கெனவே
வருத்தம்உறேல் இனிச்சிறிதும் மயங்கேல்காண் அழியா

வாழ்வுவந்த துன்தனக்கே ஏழுலகும் மதிக்கக்
கருத்தலர்ந்து வாழியஎன் றாழிஅளித் தெனது

கையினில்பொற் கங்கணமும் கட்டினர்காண் தோழி.

57

5771

தமைஅறியார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ச்

சபைநடங்கண் டுளங்களிக்கும் தருணத்தே தலைவர்
இமைஅறியா விழிஉடையார் எல்லாரும் காண

இளநகைமங் களமுகத்தே தளதளஎன் றொளிர
எமைஅறிந்தாய் என்றெனது கைபிடித்தார் நானும்

என்னைமறந் தென்இறைவர் கால்பிடித்துக் கொண்டேன்
சுமைஅறியாப் பேரறிவே வடிவாகி அழியாச்

சுகம்பெற்று வாழ்கஎன்றார் கண்டாய்என் தோழி.

58

5772

ஐயமுற்றார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்

அம்பலத்தே திருநடங்கண் டகங்களிக்கும் போது
மைஅகத்தே பொருந்தாத வள்ளல்அரு கணைத்தென்

மடிபிடித்தார் நானும்அவர் அடிபிடித்துக் கொண்டேன்
மெய்அகத்தே நம்மைவைத்து விழித்திருக்கின் றாய்நீ

விளங்குகசன் மார்க்கநிலை விளக்குகஎன் றெனது
கைஅகத்தே ஒருபசும்பொற் கங்கணமும் புனைந்தார்

கருணையினில் தாய்அனையார் கண்டாய்என் தோழி.

59

5773

காமாலைக் கண்ணர்பலர் பூமாலை விழைந்தார்

கணங்கொண்ட கண்ணர்பலர் மணங்கொள்ளத் திரிந்தார்
கோமாலை மனச்செருக்கால் மயங்கிஉடம் பெல்லாம்

குறிகொண்ட கண்ணர்பலர் வெறிகொண்டிங் கலைந்தார்
ஆமாலை அவர்எல்லாம் கண்டுளம்நாண் உறவே

அரும்பெருஞ்சோ தியர்என்னை விரும்பிமணம் புரிந்தார்
தேமாலை அணிகுழலாய் நான்செய்த தவந்தான்

தேவர்களோ மூவர்களும் செய்திலர்கண் டறியே.

60

5774

காமாலைக் கண்ணர்என்றும் கணக்கண்ணர் என்றும்

கருதுபல குறிகொண்ட கண்ணர்என்றும் புகன்றேன்
ஆமாலும் அவ்வயனும் இந்திரனும் இவர்கள்

அன்றிமற்றைத் தேவர்களும் அசைஅணுக்கள் ஆன
தாமாலைச் சிறுமாயா சத்திகளாம் இவர்கள்

தாமோமா மாயைவரு சத்திகள்ஓங் காரத்
தேமாலைச் சத்திகளும் விழித்திருக்க எனக்கே

திருமாலை அணிந்தார்சிற் சபையுடையார் தோழி.

61

5775

மாதேகேள் அம்பலத்தே திருநடஞ்செய் பாத

மலர்அணிந்த பாதுகையின் புறத்தெழுந்த அணுக்கள்
மாதேவர் உருத்திரர்கள் ஒருகோடி கோடி

வளைபிடித்த நாரணர்கள் ஒருகோடி கோடி
போதேயும் நான்முகர்கள் ஒருகோடி கோடி

புரந்தரர்கள் பலகோடி ஆகஉருப் புனைந்தே
ஆதேயர் ஆகிஇங்கே தொழில்புரிவார் என்றால்

ஐயர்திரு வடிப்பெருமை யார்உரைப்பார் தோழி.

62

5776

உருத்திரர்கள் ஒருகோடி நாரணர்பல் கோடி

உறுபிரமர் பலகோடி இந்திரர்பல் கோடி
பெருத்தமற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறரும்

பேசில்அனந் தங்கோடி ஆங்காங்கே கூடித்
திருத்தமுறு திருச்சபையின் படிப்புறத்தே நின்று

தியங்குகின்றார் நடங்காணும் சிந்தையராய் அந்தோ
வருத்தமொன்றும் காணாதே நான்ஒருத்தி ஏறி

மாநடங்காண் கின்றேன்என் மாதவந்தான் பெரிதே.

63

5777

பார்உலகா திபர்புவனா திபர்அண்டா திபர்கள்

பகிரண்டா திபர்வியோமா திபர்முதலாம் அதிபர்
ஏர்உலவாத் திருப்படிக்கீழ் நின்றுவிழித் திருக்க

எனைமேலே ஏற்றினர்நான் போற்றிஅங்கு நின்றேன்
சீர்உலவா யோகாந்த நடம்திருக்க லாந்தத்

திருநடம்நா தாந்தத்தே செயும்நடம்போ தாந்தப்
பேர்உலவா நடங்கண்டேன் திருஅமுதம் உணவும்

பெற்றேன்நான் செய்ததவம் பேருலகில் பெரிதே.

64

5778

என்புகல்வேன் தோழிநான் பின்னர்கண்ட காட்சி

இசைப்பதற்கும் நினைப்பதற்கும் எட்டாது கண்டாய்
அன்புறுசித் தாந்தநடம் வேதாந்த நடமும்

ஆதிநடு அந்தமிலாச் சோதிமன்றில் கண்டேன்
இன்பமய மாய்ஒன்றாய் இரண்டாய்ஒன் றிரண்டும்

இல்லதுவாய் எல்லாஞ்செய் வல்லதுவாய் விளங்கித்
தன்பரமாம் பரங்கடந்த சமரசப்பேர் அந்தத்

தனிநடமும் கண்ணுற்றேன் தனித்தசுகப் பொதுவே.

65

5779

தூங்குகநீ என்கின்றாய் தூங்குவனோ எனது

துரைவரும்ஓர் தருணம்இதில் தூக்கமுந்தான் வருமோ
ஈங்கினிநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால்

என்னுடைய தூக்கம்எலாம் நின்னுடைய தாக்கி
ஏங்கலறப் புறத்தேபோய்த் தூங்குகநீ தோழி

என்னிருகண் மணிஅனையார் எனைஅணைந்த உடனே
ஓங்குறவே நான்அவரைக் கலந்தவரும் நானும்

ஒன்றான பின்னர்உனை எழுப்புகின்றேன் உவந்தே.

66

5780

ஐயமுறேல் காலையில்யாம் வருகின்றோம் இதுநம்

ஆணைஎன்றார் அவராணை அருளாணை கண்டாய்
வெய்யர்உளத் தேபுகுதப் போனதிருள் இரவு

விடிந்ததுநல் சுடர்உதயம் மேவுகின்ற தருணம்
தையல்இனி நான்தனிக்க வேண்டுவதா தலினால்

சற்றேஅப் புறத்திருநீ தலைவர்வந்த உடனே
உய்யஇங்கே நான்அவரைக் கலந்தவரும் நானும்

ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.

67

5781

மன்றுடையார் என்கணவர் என்உயிர்நா யகனார்

வாய்மலர்ந்த மணிவார்த்தை மலைஇலக்காம் தோழி
துன்றியபேர் இருள்எல்லாம் தொலைந்ததுபன் மாயைத்

துகள்ஒளிமா மாயைமதி ஒளியொடுபோ யினவால்
இன்றருளாம் பெருஞ்சோதி உதயமுற்ற ததனால்

இனிச்சிறிது புறத்திருநீ இறைவர்வந்த உடனே
ஒன்றுடையேன் நான்அவரைக் கலந்தவரும் நானும்

ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.

68

5782

வைகறைஈ தருளுதயம் தோன்றுகின்ற தெனது

வள்ளல்வரு தருணம்இனி வார்த்தைஒன்றா னாலும்
சைகரையேல் இங்ஙனம்நான் தனித்திருத்தல் வேண்டும்

தாழ்குழல்நீ ஆங்கேபோய்த் தத்துவப்பெண் குழுவில்
பொய்கரையா துள்ளபடி புகழ்பேசி இருநீ

புத்தமுதம் அளித்தஅருட் சித்தர்வந்த உடனே
உய்கரைவாய் நான்அவரைக் கலந்தவரும் நானும்

ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.

69

5783

காலையிலே வருகுவர்என் கணவர்என்றே நினக்குக்

கழறினன்நான் என்னல்அது காதில்உற்ற திலையோ
வேலைஇலா தவள்போலே வம்பளக்கின் றாய்நீ

விடிந்ததுநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால்
சோலையிலே மலர்கொய்து தொடுத்துவந்தே புறத்தில்

சழ்ந்திருப்பாய் தோழிஎன்றன் துணைவர்வந்த உடனே
ஓலைஉறா தியானவரைக் கலந்தவரும் நானும்

ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.

70

5784

விடிந்ததுபேர் ஆணவமாம் கார்இருள்நீங் கியது

வெய்யவினைத் திரள்எல்லாம் வெந்ததுகாண் மாயை
ஒடிந்ததுமா மாயைஒழிந் ததுதிரைதீர்ந் ததுபேர்

ஒளிஉதயம் செய்ததினித் தலைவர்வரு தருணம்
திடம்பெறநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால்

தேமொழிநீ புறத்திருமா தேவர்வந்த உடனே
உடம்புறவே நான்அவரைக் கலந்தவரும் நானும்

ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.

71

5785

மாலையிலே உலகியலார் மகிழ்நரொடு கலத்தல்

வழக்கம்அது கண்டனம்நீ மணவாள ருடனே
காலையிலே கலப்பதற்கிங் கெனைப்புறம்போ என்றாய்

கண்டிலன்ஈ ததிசயம்என் றுரையேல்என் தோழி
ஓலையிலே பொறித்ததைநீ உன்னுளத்தே கருதி

உழல்கின்றாய் ஆதலில்இவ் வுளவறியாய் தருமச்
சாலையிலே சமரசசன் மார்க்கசங்கந் தனிலே

சற்றிருந்தாய் எனில்இதனை உற்றுணர்வாய் காணே.

72

5786

இரவகத்தே கணவரொடு கலக்கின்றார் உலகர்

இயல்அறியார் உயல்அறியார் மயல்ஒன்றே அறிவார்
கரவகத்தே கள்உண்டு மயங்கிநிற்கும் தருணம்

கனிகொடுத்தால் உண்டுசுவை கண்டுகளிப் பாரோ
துரவகத்தே விழுந்தார்போன் றிவர்கூடும் கலப்பில்

சுகம்ஒன்றும் இல்லையடி துன்பம்அதே கண்டார்
உரவகத்தே என்கணவர் காலையில்என் னுடனே

உறுகலப்பால் உறுசுகந்தான் உரைப்பரிதாம் தோழி.

73

5787

என்னுடைய தனித்தோழி இதுகேள்நீ மயங்கேல்

எல்லாஞ்செய் வல்லவர்என் இன்னுயிர்நா யகனார்
தன்னுடைய திருத்தோளை நான்தழுவும் தருணம்

தனித்தசிவ சாக்கிரம்என் றினித்தநிலை கண்டாய்
பன்னும்இந்த நிலைபரசாக் கிரமாக உணரேல்

பகர்பரசாக் கிரம்அடங்கும் பதியாகும் புணர்ந்து
மன்னுநிலை மற்றிரண்டும் கடந்தகுரு துரிய

மாநிலைஎன் றுணர்கஒளிர் மேனிலையில் இருந்தே.

74

5788

நான்புகலும் மொழிஇதுகேள் என்னுடைய தோழி

நாயகனார் தனிஉருவம் நான்தழுவும் தருணம்
வான்புகழும் சுத்தசிவ சாக்கிரம்என் றுணர்ந்தோர்

வழுத்துநிலை ஆகும்உருச் சுவைகலந்தே அதுவாய்த்
தேன்கலந்த சுவையொடுநன் மணிகலந்த ஒளியாய்த்

திரிபின்றி இயற்கைஇன்பச் சிவங்கலந்த நிலையே
தான்புகல்மற் றையமூன்றும் கடந்தப்பால் இருந்த

சாக்கிரா தீதம்எனத் தனித்துணர்ந்து கொள்ளே.

75

5789

இவ்வுலகோர் இரவகத்தே புணர்கின்றார் அதனை

எங்ஙனம்நான் இசைப்பதுவோ என்னினும்மற் றிதுகேள்
எவ்வமுறும் இருட்பொழுதில் இருட்டறையில் அறிவோர்

எள்ளளவும் காணாதே கள்ளளவின் றருந்திக்
கவ்வைபெறக் கண்களையும் கட்டிமறைத் தம்மா

கலக்கின்றார் கணச்சுகமும் கண்டறியார் கண்டாய்
செவ்வையுறக் காலையில்என் கணவரொடு நான்தான்

சேர்தருணச் சுகம்புகல யார்தருணத் தவரே.

76

5790

பொன்பறியாப் புகல்வார்போல் மறைப்பதென்னை மடவாய்

பூவையர்கா லையில்புணர நாணுவர்காண் என்றாய்
அன்பறியாப் பெண்களுக்கே நின்உரைசம் மதமாம்

ஆசைவெட்கம் அறியாதென் றறிந்திலையோ தோழி
இன்பறியாய் ஆதலினால் இங்ஙனம்நீ இசைத்தாய்

இறைவர்திரு வடிவதுகண் டிட்டதரு ணந்தான்
துன்பறியாக் காலைஎன்றும் மாலைஎன்றும் ஒன்றும்

தோன்றாது சுகம்ஒன்றே தோன்றுவதென் றறியே.

77

5791

அருளுடையார் எனையுடையார் அம்பலத்தே நடிக்கும்

அழகர்எலாம் வல்லவர்தாம் அணைந்தருளும் காலம்
இருளுடைய இரவகத்தே எய்தாது கண்டாய்

எதனால்என் றெண்ணுதியேல் இயம்புவன்கேள் மடவாய்
தெருளுடைஎன் தனித்தலைவர் திருமேனிச் சோதி

செப்புறுபார் முதல்நாத பரியந்தம் கடந்தே
அருளுறும்ஓர் பரநாத வெளிகடந்தப் பாலும்

அப்பாலும் விளங்குமடி அகம்புறத்தும் நிறைந்தே.

78

5792

அம்மாநான் சொன்மாலை தொடுக்கின்றேன் நீதான்

ஆர்க்கணிய என்கின்றாய் அறியாயோ தோழி
இம்மாலை அம்பலத்தே எம்மானுக் கன்றி

யார்க்கணிவேன் இதைஅணிவார் யாண்டைஉளார் புகல்நீ
செம்மாப்பில் உரைத்தனைஇச் சிறுமொழிஎன் செவிக்கே

தீநுழைந்தால் போன்றதுநின் சிந்தையும்நின் நாவும்
பன்மாலைத் தத்துவத்தால் அன்றிரும்பொன் றாலே

படைத்ததுனைப் பழக்கத்தால் பொறுத்தனன்என் றறியே.

79

5793

நாடுகின்ற பலகோடி அண்டபகிர் அண்ட

நாட்டார்கள் யாவரும்அந் நாட்டாண்மை வேண்டி
நீடுகின்ற தேவர்என்றும் மூர்த்திகள்தாம் என்றும்

நித்தியர்கள் என்றும்அங்கே நிலைத்ததெலாம் மன்றில்
ஆடுகின்ற திருவடிக்கே தங்கள்தங்கள் தரத்துக்

கானவகை சொல்மாலை அணிந்ததனால் அன்றோ
பாடுகின்ற என்னுடைய பாட்டெல்லாம் பொன்னம்

பலப்பாட்டே திருச்சிற்றம் பலப்பாட்டே தோழி.

80

5794

தொடுக்கின்றேன் மாலைஇது மணிமன்றில் நடிக்கும்

துரைஅவர்க்கே அவருடைய தூக்கியகால் மலர்க்கே
அடுக்கின்றோர்க் கருள்அளிக்கும் ஊன்றியசே வடிக்கே

அவ்வடிகள் அணிந்ததிரு லங்காரக் கழற்கே
கொடுக்கின்றேன் மற்றவர்க்குக் கொடுப்பேனோ அவர்தாம்

குறித்திதனை வாங்குவரோ அணிதரம்தாம் உளரோ
எடுக்கின்றேன் கையில்மழுச் சிற்சபைபொற் சபைவாழ்

இறைவர்அலால் என்மாலைக் கிறைவர்இலை எனவே.

81

5795

நான்தொடுக்கும் மாலைஇது பூமாலை எனவே

நாட்டார்கள் முடிமேலே நாட்டார்கள் கண்டாய்
வான்தொடுக்கும் மறைதொடுக்கும் ஆகமங்கள் தொடுக்கும்

மற்றவையை அணிவார்கள் மதத்துரிமை யாலே
தான்தொடுத்த மாலைஎலாம் பரத்தையர்தோள் மாலை

தனித்திடும்என் மாலைஅருட் சபைநடுவே நடிக்கும்
ஊன்றெடுத்த மலர்கள்அன்றி வேறுகுறி யாதே

ஓங்குவதா தலில்அவைக்கே உரித்தாகும் தோழி.

82

5796

வான்கொடுத்த மணிமன்றில் திருநடனம் புரியும்

வள்ளல்எலாம் வல்லவர்நன் மலர்எடுத்தென் உளத்தே
தான்கொடுக்க நான்வாங்கித் தொடுக்கின்றேன் இதனைத்

தலைவர்பிறர் அணிகுவரோ அணிதரந்தாம் உளரோ
தேன்கொடுத்த சுவைபோலே தித்தித்தென் உளத்தே

திருக்கூத்துக் காட்டுகின்ற திருவடிக்கே உரித்தாம்
யான்கொடுக்கும் பரிசிந்த மாலைமட்டோ தோழி

என்ஆவி உடல்பொருளும் கொடுத்தனன்உள் இசைந்தே.

83

5797

என்மாலை மாத்திரமோ யார்மாலை எனினும்

இறைவரையே இலக்கியமாய் இசைப்பதெனில் அவைதாம்
நன்மாலை ஆகும்அந்தச் சொன்மாலை தனக்கே

நான்அடிமை தந்தனன்பல் வந்தனம்செய் கின்றேன்
புன்மாலை பலபலவாப் புகல்கின்றார் அம்மா

பொய்புகுந்தால் போல்செவியில் புகுந்தோறும் தனித்தே
வன்மாலை நோய்செயுமே கேட்டிடவும் படுமோ

மன்றாடி பதம்பாடி நின்றாடும் அவர்க்கே.

84

5798

உரியபெருந் தனித்தலைவர் ஓங்குசடாந் தத்தின்

உட்புறத்தும் அப்புறத்தும் ஒருசெங்கோல் செலுத்தும்
துரியர்துரி யங்கடந்த சுகசொருபர் பொதுவில்

சுத்தநடம் புரிகின்ற சித்தர்அடிக் கழலே
பெரியபதத் தலைவர்எலாம் நிற்குநிலை இதுஓர்

பெண்உரைஎன் றெள்ளுதியோ கொள்ளுதியோ தோழி
அரியபெரும் பொருள்மறைகள் ஆகமங்கள் உரைக்கும்

ஆணையும்இங் கீதிதற்கோர் ஐயம்இலை அறியே.

85

5799

மதம்எனும்பேய் பிடித்தாட்ட ஆடுகின்றோர் எல்லாம்

மன்றிடத்தே வள்ளல்செயும் மாநடம்காண் குவரோ
சதம்எனவே இருக்கின்றார் படுவதறிந் திலரே

சாகாத கல்விகற்கும் தரம்இவர்க்கும் உளதோ
பதம்அறியா இந்தமதவாதிகளோ சிற்றம்

பலநடங்கண் டுய்ந்தேனைச் சிலபுகன்றார் என்றாய்
சுதைமொழிநீ அன்றுசொன்ன வார்த்தைஅன்றோ இன்று

தோத்திரஞ்செய் தாங்காங்கே தொழுகின்றார் காணே.

86

5800

எவ்வுலகில் எவ்வெவர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே

இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம்
கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலே

கதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார்
நவ்விவிழி யாய்இவரோ சிலபுகன்றார் என்றாய்

ஞானநடம் கண்டேன்மெய்த் தேன்அமுதம் உண்டேன்
செவ்வைபெறு சமரசசன் மார்க்கசங்கந் தனிலே

சேர்ந்தேன்அத் தீமொழியும் தேமொழிஆ யினவே.

87

5801

பெருகியபே ரருளுடையார் அம்பலத்தே நடிக்கும்

பெருந்தகைஎன் கணவர்திருப் பேர்புகல்என் கின்றாய்
அருகர்புத்த ராதிஎன்பேன் அயன்என்பேன் நாரா

யணன்என்பேன் அரன்என்பேன் ஆதிசிவன் என்பேன்
பருகுசதா சிவம்என்பேன் சத்திசிவம் என்பேன்

பரமம்என்பேன் பிரமம்என்பேன் பரப்பிரமம் என்பேன்
துருவுசுத்தப் பிரமம்என்பேன் துரியநிறை வென்பேன்

சுத்தசிவம் என்பன்இவை சித்துவிளை யாட்டே.

88

5802

சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார் தமக்குச்

சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய்
பிற்சமயத் தார்பெயரும் அவர்பெயரே கண்டாய்

பித்தர்என்றே பெயர்படைத்தார்க் கெப்பெயர்ஒவ் வாதோ
அச்சமயத் தேவர்மட்டோ நின்பெயர்என் பெயரும்

அவர்பெயரே எவ்வுயிரின் பெயரும்அவர் பெயரே
சிற்சபையில் என்கணவர் செய்யும்ஒரு ஞானத்

திருக்கூத்துக் கண்டளவே தெளியும்இது தோழி.

89

5803

எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும்

இயல்உண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும்
மெய்ப்பொருளாம் சிவம்ஒன்றே என்றறிந்தேன் உனக்கும்

விளம்புகின்றேன் மடவாய்நீ கிளம்புகின்றாய்406 மீட்டும்
இப்பொருள்அப் பொருள்என்றே இசைப்பதென்னே பொதுவில்

இறைவர்செயும் நிரதிசய இன்பநடந் தனைநீ
பைப்பறவே காணுதியேல் அத்தருணத் தெல்லாம்

பட்டநடுப் பகல்போல வெட்டவெளி யாமே.

90

406. கிளத்துகின்றாய் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.

5804

காணாத காட்சியெலாம் காண்கின்றேன் பொதுவில்

கருணைநடம் புரிகின்ற கணவரைஉட் கலந்தேன்
கோணாத மேல்நிலைமேல் இன்பஅனு பவத்தில்

குறையாத வாழ்வடைந்தேன் தாழ்வனைத்தும் தவிர்ந்தேன்
நாணாளும் திருப்பொதுவில் நடம்பாடிப் பாடி

நயக்கின்றேன் நற்றவரும் வியக்கின்ற படியே
மாணாகம் பொன்ஆகம் ஆகவரம் பெற்றேன்

வள்ளல்அருள் நோக்கடைந்தேன் கண்டாய்என் தோழி.

91

5805

சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த

சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே
ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே

அன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்
ஓதிஉணர்ந் தோர்புகழும் சமரசசன் மார்க்கம்

உற்றேன்சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப் பொருளாம்
சோதிநடத் தரசைஎன்றன் உயிர்க்குயிராம் பதியைச்

சுத்தசிவ நிறைவைஉள்ளே பெற்றுமகிழ்ந் தேனே.

92

5806

சரியைநிலை நான்கும்ஒரு கிரியைநிலை நான்கும்

தனியோக நிலைநான்கும் தனித்தனிகண் டறிந்தேன்
உரியசிவ ஞானநிலை நான்கும்அருள் ஒளியால்

ஒன்றொன்றா அறிந்தேன்மேல் உண்மைநிலை பெற்றேன்
அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம்

ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால்நின் றோங்கும்
பெரியசிவ அனுபவத்தால் சமரசசன் மார்க்கம்

பெற்றேன்இங் கிறவாமை உற்றேன்காண் தோழி.

93

5807

நான்பசித்த போதெல்லாம் தான்பசித்தார் ஆகி

நல்லதிரு அமுதளித்தே அல்லல்பசி தவிர்த்தே
ஊன்பதித்த என்னுடைய உளத்தேதம் முடைய

உபயபதம் பதித்தருளி அபயம்எனக் களித்தார்
வான்பதிக்கும் கிடைப்பரியார் சிற்சபையில் நடிக்கும்

மணவாளர் எனைப்புணர்ந்த புறப்புணர்ச்சித் தருணம்
தான்பதித்த பொன்வடிவம் தனைஅடைந்து களித்தேன்

சாற்றும்அகப் புணர்ச்சியின்ஆம் ஏற்றம்407 உரைப் பதுவே.

94

(407). புணர்ச்சியினோ வேற்றம் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
புணர்ச்சியினோ ரேற்றம் - பி. இரா. பதிப்பு.

5808

துருவுபர சாக்கிரத்தைக் கண்டுகொண்டேன் பரம

சொப்பனங்கண் டேன்பரம சுழுத்தியுங்கண் டுணர்ந்தேன்
குருபிரம சாக்கிரத்தைக் கண்டேன்பின் பிரமம்

குலவியசொப் பனங்கண்டேன் சிவசுழுத்தி கண்டேன்
குருதுரியம் காண்கின்றேன் சமரசசன் மார்க்கம்

கூடினேன் பொதுவில்அருட் கூத்தாடும் கணவர்
மருவிடப்பெற் றவர்வடிவம் நான்ஆனேன் களித்து

வாழ்கின்றேன் எதிர்அற்ற வாழ்க்கையில்என் தோழி.

95

5809

தனிப்படும்ஓர் சுத்தசிவ சாக்கிரநல் நிலையில்

தனித்திருந்தேன் சுத்தசிவ சொப்பனத்தே சார்ந்தேன்
கனிப்படுமெய்ச் சுத்தசிவ சுழுத்தியிலே களித்தேன்

கலந்துகொண்டேன் சுத்தசிவ துரியநிலை அதுவாய்ச்
செனிப்பிலதாய் எல்லாமாய் அல்லதுவாம் சுத்த

சிவதுரியா தீதத்தே சிவமயமாய் நிறைந்தேன்
இனிப்புறுசிற் சபைஇறையைப் பெற்றபரி சதனால்

இத்தனையும் பெற்றிங்கே இருக்கின்றேன் தோழி.

96

5810

அருட்சோதித் தலைவர்எனக் கன்புடைய கணவர்

அழகியபொன் மேனியைநான் தழுவிநின்ற தருணம்
இருட்சாதித் தத்துவங்கள் எல்லாம்போ யினவால்

எங்கணும்பே ரொளிமயமாய் இருந்தனஆங் கவர்தாம்
மருட்சாதி நீக்கிஎனைப் புணர்ந்தஒரு தருணம்

மன்னுசிவா னந்தமயம் ஆகிநிறை வுற்றேன்
தெருட்சார்பில் இருந்தோங்கு சமரசசன் மார்க்கத்

திருச்சபைக்கண் உற்றேன்என் திருக்கணவ ருடனே.

97

5811

புறப்புணர்ச்சி என்கணவர் புரிந்ததரு ணந்தான்

புத்தமுதம் நான்உண்டு பூரித்த தருணம்
சிறப்புணர்ச்சி மயமாகி அகப்புணர்ச்சி அவர்தாம்

செய்ததரு ணச்சுகத்தைச் செப்புவதெப் படியோ
பிறப்புணர்ச்சி விடயமிலை சுத்தசிவா னந்தப்

பெரும்போகப் பெருஞ்சுகந்தான் பெருகிஎங்கும் நிறைந்தே
மறப்புணர்ச்சி இல்லாதே நான்அதுவாய் அதுஎன்

மயமாய்ச்சின் மயமாய்த்தன் மயமான நிலையே.

98

5812

தாயினும்பே ரருளுடையார் என்னுயிரில் கலந்த

தனித்தலைவர் நான்செய்பெருந் தவத்தாலே கிடைத்தார்
வாயினும்ஓர் மனத்தினும்மா மதியினும்எத் திறத்தும்

மதித்தளத்தற் கருந்துரிய மன்றில்நடம் புரிவார்
ஆயினும்என் அளவின்மிக எளியர்என என்னை

அகம்புணர்ந்தார் புறம்புணர்ந்தார் புறப்புணர்ச்சித் தருணம்
தூயஒளி பெற்றழியா தோங்குவடி வானேன்

சுகமயமாம் அகப்புணர்ச்சி சொல்லுவதெப் படியோ.

99

5813

அறியாத பருவத்தே என்னைவலிந் தழைத்தே

ஆடல்செயும் திருவடிக்கே பாடல்செயப் பணித்தார்
செறியாத மனச்சிறியேன் செய்தபிழை எல்லாம்

திருவிளையாட் டெனக்கொண்டே திருமாலை அணிந்தார்
பிறியாமல் என்னுயிரில் கலந்துகலந் தினிக்கும்

பெருந்தலைவர் நடராயர் எனைப்புணர்ந்தார் அருளாம்
அறிவாளர் புறப்புணர்ச்சி எனைஅழியா தோங்க

அருளியதீண் டகப்புணர்ச்சி அளவுரைக்க லாமே.

100


திருச்சிற்றம்பலம்
Back


143. சத்திய வார்த்தை (408)

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5814.

சிவம்எ னும்பெயர்க் கிலக்கியம் ஆகிஎச் செயலும்தன் சமுகத்தே
நவநி றைந்தபேர் இறைவர்கள் இயற்றிட ஞானமா மணிமன்றில்
தவநி றைந்தவர் போற்றிட ஆனந்தத் தனிநடம் புரிகின்றான்
எவன்அ வன்திரு வாணைஈ திசைத்தனன் இனித்துய ரடையேனே.

1

(408) அடிகள் அருளிய தலைப்பு.


திருச்சிற்றம்பலம்
Back


144. த்திய அறிவிப்பு

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5815.

ஐயன்அருள் வருகின்ற தருணம்இது கண்டீர்

ஐயமிலை ஐயமிலை ஐயன்அடி ஆணை
மெய்யன்எனை ஆட்கொண்ட வித்தகன்சிற் சபையில்

விளங்குகின்ற சித்தன்எலாம் வல்லஒரு விமலன்
துய்யன்அருட் பெருஞ்சோதி துரியநட நாதன்

சுகஅமுதன் என்னுடைய துரைஅமர்ந்திங் கிருக்க
வையமிசைத் திருக்கோயில் அலங்கரிமின் விரைந்தே

மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே.

1

5816

தனித்தலைமைப் பெரும்பதிஎன் தந்தைவரு கின்ற

தருணம்இது சத்தியம்காண் சகதலத்தீர் கேண்மின்
இனித்தநறுங் கனிபோன்றே என்னுளம்தித் திக்க

இன்னமுதம் அளித்தென்னை ஏழுலகும் போற்ற
மனித்தஉடம் பிதைஅழியா வாய்மைஉடம் பாக்கி

மன்னியசித் தெல்லாம்செய் வல்லபமும் கொடுத்தே
கனித்தசிவா னந்தமெனும் பெரும்போகம் தனிலே

களித்திடவைத் திடுகின்ற காலையும்இங் கிதுவே.(409)

2

(409) இத்திருப்பாட்டின் இறுதியில் "சத்திய அறிவிப்பு, சத்திய வார்த்தை" என அடிகள்
எழுதியருளியுள்ளதாக ஆ.பா. குறிப்பிட்டுள்ளார்.

5817

சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்

சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்
இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்

இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்
சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்

தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்
செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்

திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.

3

5818

என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார்

இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார்
பின்சாரும் இரண்டரைநா ழிகைக்குள்ளே எனது

பேர்உடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார்
தன்சாதி உடையபெருந் தவத்தாலே நான்தான்

சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம்சத் தியமே
மின்சாரும் இடைமடவாய் என்மொழிநின் தனக்கே

வெளியாகும் இரண்டரைநா ழிகைகடந்த போதே.(410)

4

(410) இத்திருப்பாட்டின் இறுதியில் "இங்ஙனம் எல்லாம் வல்லவர் ஓதுக என்றபடி
உரைத்துளேன்" என அடிகள் எழுதியருளியுள்ளதாக ஆ.பா. குறிப்பிட்டுள்ளார்.


திருச்சிற்றம்பலம்

ஆறாம் திருமுறை முற்றிற்று

திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள் அருளிய திருவருட்பா முற்றும்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வாவதே

திருச்சிற்றம்பலம்

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home