|
காப்பு |
6
|
நீர்வளம் நிலவளம் நிறைந்த பொற்பது
கார்வளர் பொழில்புடை கவின்ற காட்சிய
தேர்வளர் நலனெலாம் என்றும் உள்ளது
சீர்வளர் தலங்களுள் திலகம் என்பது.
|
1 |
7
|
திருவளர் புயத்தனும் திசைமு கத்தனும்
தருவளர் மகத்தனும் சார்ந்து நாடொறும்
மருவளர் மலர்கொடு வழிபட் டெண்ணிய
உருவளர் சிறப்பெலாம் உற்ற மாண்பது.
|
2 |
8
|
அற்றமில் சண்பைய ராதி மூவரும்
சொற்றமிழ்ப் பதிகங்கள் தோறும் சேர்வது
நற்றவர் புகழ்வது நாயினே னுக்கும்
கற்றவர் உறவினைக் காட்டி நின்றது.
|
3 |
9
|
தவநெறி தழைத்துமெய்ச் சாந்தம் பூத்துவன்
பவநெறி காய்த்தருட் பழம்ப ழுத்திடும்
நவநெறி தரும்பர நவிற்றும் சைவமாம்
சிவநெறி தரும்தருச் சிறந்த சீரது.
|
4 |
10
|
சோலையும் தடங்களும் துரிசி லாஅறச்
சாலையும் மடங்களும் சத்தி ரங்களும்
பாலையும் பழத்தையும் பருகல் ஒத்தசொன்
மாலையும் தொடுப்பவர் வாழ்வும் உள்ளது.
|
5 |
11
|
அந்தணர் அறுதொழில் ஆற்றும் சால்பது
மந்தண மறைமுடி வழுத்தும் மாண்பது
சுந்தர நீற்றணி துலங்கும் அன்பர்கள்
வந்துவந் தனைசெய்து வசிக்கும் பேறது.
|
6 |
12
|
பூவெலாம் புதுமணம் பொலியும் ஒண்தளிர்க்
காவெலாம் சிவமணம் கமழு கின்றது
தேவெலாம் செறிவது சிவம்க னிந்தமெய்ந்
நாவெலாம் புகழ்வது நன்மை சான்றது.
|
7 |
13
|
சாலியும் போலிய தழைகொள் கன்னலின்
வேலியு முக்கனி விளைவும் தாழைகள்
கோலிய பொங்கரும் குறைவி லாதது
பாலியின் வடகரைப் படியின் மேலது.
|
8 |
14
|
எண்டிசை புகழநின் றிலங்கு கின்றது
அண்டர்கள் முடிவினும் அழிவி லாதது
தொண்டமண் டலவடற் றூய கீழ்த்திசை
கண்டல்சூழ் கடற்கரை காண உள்ளது.
|
9 |
15
|
திருமகள் கலைமகள் சிறந்த ஞானமாம்
குருமகள் மூவரும் கூடி வாழ்வது
தெருமரல் அகற்றும்எம் சிவபி ரான்மலை
ஒருமகள் உடனுறை ஒற்றி மாண்பதி.
|
10 |
16
|
அப்பெரும் பதியிடை அயன்முன் னாகிய
முப்பெருந் தலைவரும் முடிவ ணங்கிட
ஒப்பருஞ் சிவபிரான் உருவு கொண்டருள்
செப்பருங் கோயிலைச் சேர்ந்த சூழலில்.
|
11 |
17
|
கிள்ளைகள் ஆகமம் கிளக்கக் கேட்டதற்
குள்ளுணர் பூவைகள் உரைவி ரித்திடத்
தெள்ளிய மயிலினம் தேர்ந்துள் ஆனந்தம்
கொள்ளைகொண் டயல்நடம் குயிற்ற உள்ளது.
|
12 |
18
|
சைவயா கங்களும் சாற்று மற்றைய
தெய்வயா கங்களும் செய்ய ஓங்கிய
மைவிடாப் புகையொடு மழையும் கூடினும்
மெய்விடார் உளமென விளங்கு கின்றது.
|
13 |
19
|
கண்டவர் உளமெலாம் கட்டு கின்றது
தண்டமிழ்க் கவிதைபோல் சாந்தம் மிக்கது
விண்டயன் பதமுதல் விரும்பத் தக்கது
எண்டரும் தவம்அர சிருக்கும் சீரது.
|
14 |
20
|
வந்தியார் அமுதையும் வாங்கி உண்டருள்
அந்தியார் வண்ணர்தம் அருளில் நின்றது
நந்திஆச் சிரமமாம் நாமம் பெற்றது
நிந்தியா நெறியதோர் நிலையுண் டாயிடை.
|
15 |
21
|
வேதமும் ஆகம விரிவும் மற்றைநூற்
போதமும் மன்னுறப் போதிப் போர்களும்
வாதமும் விதண்டமும் மருவுறா(413) வகைப்
பேதமும் அபேதமும் பேசு வோர்களும்.
|
16
|
|
(413). மருளுறா - பொ. சு., பி. இரா., ச. மு. க. |
22
|
பவமெலாம் தவிர்த்தருட் பதம்அ ளிப்பது
தவமலா திலைஎனச் சார்ந்து ளோர்களும்
அவமெலாம் அகன்றபின் அனுப விப்பது
சிவமலா திலைஎனச் சேர்ந்து ளோர்களும்.
|
17 |
23
|
ஞான யோகத்தினை நண்ணி னோர்களும்
மோனமே பொருள்என முன்னி னோர்களும்
வானமே பெறினும்இம் மாய வாழ்க்கையில்
ஊனமே இருத்தல்என் றுவட்டி னோர்களும்.
|
18 |
24
|
மறந்திலர் உலகர்இவ் வஞ்ச வாழ்க்கையைத்
துறந்திலர் என்எனச் சொல்கின் றோர்களும்
இறந்திலர் பிறந்திலர் இன்பம் எய்தினர்
வறந்திலர் தவர்என வகுக்கின் றோர்களும்.
|
19 |
25
|
தென்சொலும் வடசொலும் தெரிந்து ளோர்களும்
இன்சொலும் வாய்மையும் இசைக்கின் றோர்களும்
வன்சொலும் மடமையும் மறமும் வஞ்சமும்
புன்சொலும் உடையர்பால் பொருந்து றார்களும்.
|
20 |
26
|
கருநெறித் தமிழ்எலாம் கைய கன்றுமெய்த்
திருநெறித் தமிழ்மறை தேர்ந்து ளோர்களும்
அருநெறித் தனிஎழுத் தைந்தின் உட்பொருள்
குருநெறித் தகவுறக் குறிக்கின் றோர்களும்.
|
21 |
27
|
இரவொடு பகல்இலா திருக்கின் றோர்களும்
வரவொடு போக்கிலா வழிநின் றோர்களும்
கரவொடு மாயையைக் கடிந்த சீலரும்
உரவொடு மெய்ந்நிலை ஓங்கு வோர்களும்.
|
22 |
28
|
பொறிவழி மனம்செலாப் புனித சித்தரும்
அறிவழி அவ்வழி அகன்று ளோர்களும்
செறிவழி யாவகைச் சிறந்த முத்தரும்
குறிவழி திறம்புறாக் கொள்கை யோர்களும்.
|
23 |
29
|
மால்வகை முழுவதும் நீக்கி மன்னருள்
நூல்வகை ஞானத்தின் நுவலு கின்றதோர்
நால்வகை நிலைகளின் நண்ணு வோர்களும்
ஏல்வகை இணையடி ஏத்திச் சூழ்ந்திட.
|
24 |
30
|
தெள்ளிய அமுதவெண் திங்க ளோநறை
துள்ளிய நறுமணம் சூழ்ந்த லர்ந்திடும்
ஒள்ளிய கமலமோ என்ன ஓங்கிய
வள்ளிய திருமுக மண்ட லத்திலே.
|
25 |
31
|
கடைவரை நிறைபெறும் கருணை வெள்ளமேல்
மடைதிறந் தொழுகிவான் வழிந்து பாரெலாம்
தடைபடாத் தண்ணளி ததும்பி ஆனந்தக்
கொடைதரும் விழிமலர் குலவி வாழ்ந்திட.
|
26 |
32
|
சிறைதெறும் சிவசிவ சிவஎன் றன்பொடு
மறைமொழி சிறக்கும்வாய் மலரும் விண்ணக
நிறையமு தொழுகிவெண் ணிலவ லர்ந்தருள்
இறைபெறும் புன்னகை எழிலும் ஓங்கிட.
|
27 |
33
|
வேதபுத் தகம்திகழ் மென்கை யும்திருப்
பாதபங் கயங்களும் பரவு நீற்றொளி
போதஉத் தூளனம் பொலிந்த மேனியும்
ஓதுகல் மரங்களும் உருகத் தோன்றிட.
|
28 |
34
|
அருஞ்சிவ ஞானமும் அமல இன்பமும்
திருந்தஓர் உருக்கொடு சேர்ந்த தென்னவே
தரும்சிவ குருஎனும் தக்க தேசிகன்
இருந்தனன் இருந்தவா றிருந்த நாளினே.
|
29 |
|
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
35
|
ஒருநாளில் ஒருமகன்ஓர் பதினாறாண்
டகவைநல முடையான் ஒற்றித்
திருநாளில் எம்பெருமான் தியாகேசன்
திருப்பவனிச் சேவை செய்து
மருநாள மலர்த்தடம்சூழ்ந் தெழில்பெறும்அவ்
வாச்சிரம வனத்துட் போந்து
கருநாளின் கரிசறுக்கும் குருநாதன்
இருக்கைஎதிர் கண்டான் மன்னோ.
|
30 |
36
|
கண்டவன்அக் குருநாதன் கடைக்கணிக்கப்
பெற்றதனால் கடத்தில் சற்றே
திண்டகுதே றிடச்சிறிது தெளிநீர்போல்
தெளிந்தறிவு சிறிது தோன்றத்
தண்டம்எனக் கீழ்விழுந்து வணங்கிஎதிர்
நின்றுகரம் தலைமேற் கூப்பிப்
பண்டுறும்அன் பொடுவிழிகள் நீர்சொரிய
வியந்துதுதி பண்ணு வானால்.
|
31 |
37
|
கருணைநெடுங் கடல்என்கோ கல்லாலின்
அடிஅமர்ந்த கடவுள் என்கோ
அருணகிரிக் கருள்புரிந்த ஆறுமுகக்
குருஎன்கோ அமுதம் என்கோ
மருள்நலிய வரும்பிறவி மருந்தென்கோ
அடியேன்கண் மணிஎன் கோமெய்த்
தெருள்நிறைந்த சிவகுருவே நின்தனைஈண்
|
38
|
என்றானைக் கருணையொடும் சிவகுருஅங்
கெதிர்நோக்கி இளையோய் உன்றன்
நன்றான சரிதம்எது நவிலுதிஎன்
றுரைத்தருள ஞான யோகம்
குன்றாத குணக்குன்றே குறையாத
குளிர்மதியே குருவே என்றும்
பொன்றாத நிலைஅருள்வோய் கேட்டருள்க
எனவணங்கிப் புகல்வான் மாதோ.
|
33 |
39
|
கற்றவர்சூழ் இத்தலத்துக் கைங்கடிகை
எல்லைதனில்(414) கவின்சேர் சென்னை
உற்றடியேன் இருக்கும்ஊர் சூத்திரர்தம்
குலத்(து)ஆசை உடையான் என்னைப்
பெற்றவன்பேர் வினைச்சிஎனைப் பெற்றவள்பேர்
எனக்குமுன்னே பிறந்தார் மற்றும்
சுற்றமிக உடையேன்சஞ் சலன்எனும்பேர்
என்பெயராச் சொல்வ ராலோ.
|
34
|
|
(414). ஐங்கடிகை எல்லை - ஐந்து நாழிகை வழி. |
40
|
குடிப்பேறில் தாய்முலைப்பால் ஏழாண்டு
மட்டுமிகக் குடித்து நாக்குத்
தடிப்பேறிற் றாதலினால் படிப்பேறிற்
றிலைஅடியேன் தனக்குக் கல்விப்
பிடிப்பேறிச் சிறியேன்முன் பிறந்தவர்தம்
பெயர்எழுதப் பெரிதும் கற்று
நடிப்பேறி னார்அவர்முன் நொடிப்பேற
நின்றேன் இந்நாயி னேனே.
|
35 |
41
|
தந்தைஉணர்ந் திவன்மிகநாத் தடிப்பேறி
னான்உடம்பும் தடித்தான் மற்றைப்
புந்தியிலும் காரிருப்புப் பொருப்புலக்கைக்
கொழுந்தானான் போதஞ் சாரா
மந்தன்எனப் பயின்றகலைச் சாலையினின்
றகற்றிஅவ்வை வாக்கு(415) நாடிப்
பந்தமனைப் பண்டமெலாம் கடைஉழன்று
சுமந்துவரப் பணித்தான் எந்தாய்.
|
36
|
|
(415). அவ்வை வாக்கு- பீரம்பேணி பாரம் தாங்கும்- கொன்றைவேந்தன். |
42
|
அண்ணுறும்என் தந்தைதாய்க் கடியனேன்
கடைப்பிள்ளை யான தொன்றோ
கண்ணுறுநற் கல்வியினும் கடைப்பிள்ளை
ஆனேன்பின் கருதும் வாழ்க்கை
நண்ணுறுபல் பண்டமெலாம் கொள்வதினும்
கடைப்பிள்ளை நானே ஆனேன்
உண்ணுறும்இவ் வுடலோம்பி ஒதியேபோல்
மிகவளர்ந்தேன் உணர்வி லேனே.
|
37 |
43
|
பெருஞ்செல்வப் பெருக்கத்தில் பிறந்தேன்நான்
பிள்ளையாப் பிறந்த நாள்தொட்
டிருஞ்செல்வத் திந்நாள்மட் டயல்வேறு
குறைசிறிதும் இல்லை எந்தாய்
அருஞ்செல்வம் எனும்கல்வி அறிவில்லாக்
குறைஒன்றே அடைந்திட் டேன்அவ்
வருஞ்செல்வத் தாசையுளேன் பேடிமணம்
நாடிமனம் வருந்தல் போன்றே. |
38 |
44
|
இன்னவகை உழல்கின்றேன் இத்தலத்தில்
திருநாளென் றிசைக்கக் கேட்டிங்
கென்னனைய சிறுவர்களோ டெய்தினேன்
திருப்பவனி இனிது கண்டேன்
பின்னர்என துடனுற்றோர் பிரிந்தனர்நா
யடியேன்முன் பிறப்பிற் செய்த
தன்னனைய தவப்பயனால் தேவேநின்
திருச்சமுகம் தரிசித் தேனே. |
39 |
45
|
ஈதெனது சரிதம்ஒரு தெய்விகத்தால்
களர்நிலத்தின் இடையே செந்நெல்
பேதமற முளைத்ததுபோல் தேவேநின்
திருச்சமுகப் பெருமை யாலே
மூதறிவு சிறிதென்னுள் முளைத்ததது
பயிராக முழுதுங் கல்விக்
காதலுறு சிறியேனைக் காத்தருள
வேண்டும்எனக் கழறி னானே. |
40 |
46
|
அன்னவன்சொல் மொழிகேட்டுச் சிவகுருஅங்
கிளநிலா அரும்ப உள்ளே
புன்னகைகொண் டுன்னகத்தில் புரிந்ததுநன்
றாயினும்இப் போது நீஉன்
மன்னகருக் கேகிஅவண் தந்தைதாய்க்
குரைத்தவர்சம் மதம்பெற் றீண்டித்
தொன்னகருக் கெய்துதிஎன் றுரைத்தருளச்
சஞ்சலன்கை தொழுது சொல்வான். |
41 |
47
|
வேர்ப்புலகின் புவப்புறும்என் தந்தைதாய்
சம்மதத்தை வேண்டி மீண்டே
ஆர்ப்புலவாச் சென்னைநகர் அடைந்தேனேல்
பெருங்குகையில் அமர்ந்த செங்கட்
போர்ப்புலியைப் பார்த்துவரப் போனகதை
யாய்முடியும் பொருளாய் என்னைச்
சேர்ப்புடைய குருமணியே என்செய்கேன்
அறிவறியாச் சிறிய னேனே. |
42 |
48
|
கண்பார்என் றயர்ந்துபணிந் தழுதிருகண்
ணீர்சொரியக் கலங்கி னானை
நண்பார்மெய்க் குருநாதன் நோக்கிஇவண்
இருந்திடநீ நயப்பாய் அப்பா
பண்பார்இங் குறுமவர்தாம் பிச்சைச்சோ
றுச்சியிலே பரிந்து வாங்கி
உண்பார்மற் றவ்வகைநீ உண்ணுதியோ
உண்ணுதியேல் உறைதி என்றான். |
43 |
49
|
உச்சியிலே பிச்சைஎடுத் துண்பதுவோ
பெரிதெளியேற் கோவா தோடிக்
கச்சியிலே பிச்சைகொண்டு காசியிலே
நீராடிக் கடிது போகிக்
கொச்சியிலே செபமுடித்துக் கொங்கணத்தி
லேபுசித்துக் கொள்ளென் றாலும்
மெச்சிஉளே மிகமகிழ்ந்து செய்வேன்என்
றனைஐயா விட்டி டேலே. |
44 |
50
|
புல்லமுதே நல்லமுது புரைக்குடிலே
புனைமாடம் புடைக்கும் பாறைக்
கல்லணையே மெல்லணைநாள் கழிந்தபழங்
கந்தையே கலைஎன் றாலும்
அல்லலுறேன் அரசேநின் சொல்லமுதுண்
டருந்தவமா டத்தே வைகி
ஒல்லுமனோ திடஅணைகொண் டருட்போர்வை
போர்த்துநலம் உடுக்கின் மாதோ. |
45 |
51
|
சைவநீ றணிவிளங்கி நகைதுளும்பி
உபசாந்தம் ததும்பிப் பொங்கித்
தெய்வநீ டருட்கருணை நிறைந்துவழிந்
தழகொழுகிச் செம்பொற் கஞ்சப்
பொய்கைவாய் மலர்ந்தசெழும் போதனைய
நின்முகத்தின் பொலிவு நோக்கும்
செய்கையேன் உலகுறுபுன் சுகம்பொசித்தல்
மிகையன்றோ தேவ தேவே. |
46 |
52
|
எவ்வகைநின் திருவுளப்பாங் கிருப்பதெளி
யேன்அளவில் எந்தாய் எந்தாய்
அவ்வகைநின் றிடச்சிறிதும் அஞ்சேன்என்
றன்னைவிடேல் ஆள்க என்றே
இவ்வகையில் பலபகர்ந்து விழுந்திறைஞ்சி
எழுந்திரா திருகண் ணீரால்
செவ்வகையில் குருநாதன் திருவடிக்கீழ்
நிறையாறு செய்தான் மன்னோ. |
47 |
53
|
தெருளுறும்அவ் வாச்சிரமத் திருந்துதுற
வறம்காக்கும் செல்வர் எல்லாம்
அருளுறுமெய்ச் சிவகுருவின் அடிவணங்கிச்
சிறியோமை அடர்ந்த பாச
மருளுறுவன் கடல்கடத்தி வாழ்வித்த
குணக்கலமே மணியே இந்த
இருளுறும்ஓர்(416) சிறுவனையும் காத்தருள
வேண்டுமென இரந்தார் ஐயன். |
48
|
|
(416). இருளுறும் ஒண் - பொ. சு., பி. இரா., ச. மு. க. |
54
|
மற்றவனை எழுகஎனக் கருணைபுரிந்
தமலமுகம் மலர்ந்து நோக்கிப்
புற்றவரம் அரைக்கசைத்த ஒற்றிநகர்ப்
பெருமானைப் போது மூன்றும்
நற்றகைஅன் புடன்தரிசித் தவன்கோயிற்
பணியாற்றி(417) நாளும் நம்பால்
கற்றவர்தம் சொல்வழியிற் கலைபயின்று
நெறிநிற்கக் கடவாய் என்று. |
49
|
|
(417). பணி இயற்றி - பொ. சு., பி. இரா., ச. மு. க. |
55
|
தனிமலர்வாய் மலர்ந்தருளிப் பின்னர்அவண்
மாணாக்கர் தம்மை நோக்கிப்
புனிதநெறி யீர்இவனைப் புதியன்எனக்
கருதாமல் புரிந்து நாளும்
கனிவுறஈண் டிவன்அகத்தில் கல்லாமை
எனும்இருளைக் கடியும் வண்ணம்
இனியகலை விளக்கிடுவீர் என்றான்சஞ்
சலன்அதுகேட் டின்பம் எய்தா. |
50 |
56
|
அடியனேன் உய்ந்தனன்நின் அருள்நோக்கம்
பெறற்கேது வாய தூய
நெடியமா தவம்எதுசெய் திருந்தேன்என்
றகம்குளிர்ந்து நெஞ்சந் தேறி
முடியினால் பன்முறைதாழ்ந் துடம்பொடுக்கித்
தூசொடுக்கி முறையால் பேசும்
படியின்வாய்ப் பொத்திஎதிர் நின்றான்பின்
குருநாதன் பணித்த வாறே. |
51 |
57
|
வேதமுதல் கலைஅனைத்தும் விதிப்படிகற்
றுணர்ந்தறிவால் மேலோர் ஆகிப்
போதமனச் செறிவுடைய மாணாக்கர்
சஞ்சலனைப் புரிந்து நோக்கி
மூதறிவன் தேசிகன்தன் திருவாக்கின்
படிஇன்று முதல்ஓர் கன்னற்(418)
போதுகலை பயின்றுமற்றைப் போதெலாம்
சிவபணியே புரிதி என்றார். |
52 |
58
|
என்றஅருட் சிதம்பரமா முனிவர்அவன்
தனையருகே இருத்தி அன்பால்
ஒன்றியவெண் ணீறணிந்து தூலஎழுத்
தைந்துணர்த்தி உடையான் கோயில்
சென்றுதொழும் நெறியனைத்தும் விளக்கிஅருட்
சிவபணியும் தேற்றி உள்ள
மன்றஅவன் பருவமறிந் ததற்கியைந்த
கலைபயிற்றி மகிழ்வித் தாரால். |
53 |
குருதரிசனப் படலம் முற்றிற்று.
|
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
59
|
அவ்வண்ணம் சஞ்சலன்தான் புரிந்தியற்றும்
முயற்சியெலாம் அளவிட் டோ தச்
செவ்வண்ணம் பழுத்தஒற்றிச் சிவக்கொழுந்தின்
திருவருளைச் சேர்ந்தோர்க் கன்றி
இவ்வண்ணம் எனப்பகர்தல் பிறர்க்கரிதே
ஆயினும்அவ் விறைவன் தாளை
வெவ்வண்ணச் சிறியேன்உள் ளமர்த்திஒரு
சிறிதறிய விளம்பு வேனால். |
1 |
60
|
மேலையிலே படுத்திருந்த வெஞ்சுடரோன்
குணபாலின் விழித்துப் பூவோர்
வேலையிலே முயலுறக்கீழ் வேலையிலே
எழுவதற்கு மேவு மாதி
காலையிலே எழுந்தேகிக் கங்கையிலே
மிக்கதெனக் கருதி மேலோர்
ஓலையிலே பொறித்தநந்தி ஓடையிலே
தெய்வநன்னீர் ஓடி ஆடி. |
2 |
61
|
வெண்ணிலவு ததும்புதிரு வெண்ணீறைந்
தெழுத்தோதி மிகவும் பூசி
உண்ணிலவு சிவகுருவின் அடித்துணையும்
திருவொற்றி உவந்து மேவும்
கண்ணிலவு நுதற்கரும்பின் கழற்பதமும்
அன்பினொடு கருதிச் சென்றே
எண்ணிலவு குருபரன்தன் திருமுன்அடைந்
தஞ்சலிசெய் திறைஞ்சி மன்னோ. |
3 |
62
|
முன்னறியான் பின்னறியான் முழுமூடன்
என்றென்னை முனியா தாண்ட
நின்னருளை என்னெனயான் நிகழ்த்துறுவேன்
பெருங்கருணை நிறைவே தூய
நன்னெறியே நடக்கஅருட் போதமெனும்
செங்கோலை நடத்தா நின்ற
மன்னவனே சிவகுருவாம் வள்ளலே
நின்துணைப்பொன் மலர்த்தாள் போற்றி. |
4 |
63
|
அருந்தவரும் உணவின்இயல் எதுவென்றால்
இதுஎனவும் அறிய நீநின்
றிருந்ததிசை எதுவென்றால் இதுஎனச்சுட்
டவும்தெரியா திருந்த என்னைத்
திருந்தஅருட் கடைநோக்கஞ் செய்தளித்த
பெருங்கருணைச் செல்வ மேநன்
மருந்தமுதம் அனையஅருட் சிவகுருவே
போற்றிஎன வழுத்திப் பின்னர். |
5 |
64
|
ஆங்குவிடை கொண்டுகுரு அருள்நோக்கால்
சிவயோக மாதி நண்ணி
ஓங்குதிருக் கூட்டத்தைத் தனித்தனிநின்
றிறைஞ்சிஎனை உவக்கும் வண்ணம்
தீங்ககற்றும் சிவகுருவின் திருவுளத்தை
நாயேன்மேல் திருப்பி இன்பம்
வாங்கிஎனக் களித்தஅருண் மாதவரே
நும்முடைய மலர்த்தாள் போற்றி. |
6 |
65
|
குருவெல்லை கடவாத குணக்குன்றம்
அனையீரே கோதில் வாய்மை
மருவெல்லை நெறிநின்ற மனத்தீரே
போற்றிஎன வழுத்திப் பின்னர்ப்
பொருவெல்லை அகன்றோங்கும் அன்பினொடும்
அவண்நின்று போந்தவ் வொற்றித்
திருவெல்லை தனைமகிழ்வில் கருவெல்லை
கடக்கவலம் செய்து மாதோ. |
7 |
66
|
தொழுந்தகைய முனிவரரும் சுரரும்மிகத்
தொழுதேத்தத் துலங்கும் திங்கட்
கொழுந்தசையச் சடைஅசையக் கூத்தாடிக்
கொண்டேஎம் கோமான் நாளும்
எழுந்தருளும் பெருஞ்செல்வத் திருமாட
வீதிதனை இறைஞ்சி ஏத்தி
அழுந்தியசற் பத்தியுடன் மூன்றுமுறை
வலஞ்செய்தங் கதற்குப் பின்னர். |
8 |
67
|
உளந்தெளிந்து விளங்குகின்ற உத்தமர்செய்
தவமேபோல் ஓங்கி வானம்
அளந்ததிருக் கோபுரம்கண் டஞ்சலிசெய்
திறைஞ்சிமுகி லாதி சூடி
இளங்கதிர்வெண் திங்கள்அணி எம்பெருமான்
சடைமுடிமேல் இலங்கும் தூய
வளங்கெழுமோர் திருமதிலை ஐந்துமுறை
வலமாக வந்து மாதோ. |
9 |
68
|
உட்புகுந்து திருவாயல் இடைஓங்கும்
விடைக்கொடியை உவந்து நோக்கிக்
கட்புனலில் குளித்திரண்டு கைகுளிரத்
தொழுதிறைஞ்சிக் கருணை செய்யும்
ஒட்புடைய நம்பெருமான் மாளிகையை
வலம்ஏழின் உவந்து செய்து
நட்புடைய மனங்கசிய ஐந்தெழுத்துள்
நினைந்துமெல்ல நடந்து மாதோ. |
10 |
69
|
அம்பொடித்துப் பகைதுரக்கும் கயமுகனைக்
கருணையினால் ஆளும் வண்ணம்
கொம்பொடித்து வீசிஅவன் கோளொடித்துக்
கோலொடித்துக் கோதில் விண்ணோர்
வம்பொடித்து வாழ்வித்த ஆனைமுகப்
பெருமானை வணங்கித் தன்தே
கம்பொடித்துக் கைகுவித்துக் கருத்துருகிக்
கண்களில்நீர் காண நின்றே. |
11 |
70
|
தடைஉடைக்கும் தனிமுதலே தண்ணமுதே
எங்கள்பெருந் தகையே ஓங்கி
மடைஉடைக்கும் பெருங்கருணை மதமலையே
ஆனந்த மலையே உள்ளத்
திடைஉடைக்கும் துயர்நீக்கி இன்பளிக்கும்
ஐந்துகரத் திறையே மாயைக்
கடைஉடைக்கும் கழற்புனைதாட் கணபதியே
போற்றிஎனக் கனிந்து மன்னோ. |
12 |
71
|
திறம்பழுத்த அருணந்தி தேவர்அடி
வணங்கிஅருட் சிவத்தின் செய்ய
நிறம்பழுத்த மலரடியை மால்முதலோர்
அழுக்காறு நிரம்ப மேற்கொண்
டறம்பழுத்த விடைஉருவத் தண்ணலே
எனப்பரவி அனுக்ஞை பெற்று
மறம்பழுத்தார்க் கரியதிரு விமானத்தை
அனந்தமுறை வலஞ்செய் தேத்தி. |
13 |
72
|
வன்னிதியை மருவாத மாதவரும்
மால்அயனும் வணங்கிப் போற்றும்
சந்நிதியைச் சார்ந்துவிழி யானந்த
நீர்வெள்ளந் ததும்பப் பல்கால்
நன்னிதிபெற் றிடப்பணிந்து கரங்குவித்துப்
படம்பக்க நாதன் என்னும்
செந்நிதியிற் பரஞ்சுடரைப் பொன்னிதிகண்
டவன்போல்கண் செழிக்கக் கண்டு. |
14 |
73
|
உடல்முழுதும் புளகம்எழ உளமுழுதும்
உருக்கம்எழ உவந்தா னந்தக்
கடல்முழுதும் கண்கள்எழக் கரசரணங்
கம்பமெழக் கருத்தி னோடு
மடல்முழுதும் எழமலர்ந்த மலரின்முக
மகிழ்ச்சிஎழ மலிந்த பாசத்
திடல்முழுதும் அகன்றன்பே வடிவாக
நின்றுதுதி செய்வான் மாதோ. |
15 |
74
|
உடையானே எவ்வுயிர்க்கும் ஒருமுதலே
இளம்பிறைகொண் டோ ங்கும் கங்கைச்
சடையானே அன்பருளத் தாமரையில்
அமர்ந்தபெருந் தகையே வெள்ளை
விடையானே மறைமுடிபின் விளங்கியமெய்ப்
பொருளேமெய் விளங்கார் தம்மை
அடையானே திருவொற்றி ஆலயத்தெம்
அரசேநின் னடிகள் போற்றி. |
16 |
75
|
கலைமகளும் திருமகளும் கழுத்தணிந்த
மங்கலநாண் கழற்றா வண்ணம்
அலைகடலின் எழுவிடத்தை அடக்கியருள்
மணிமிடற்றெம் அமுதே தெய்வ
மலைமகளை ஒருபுறம்வைத் தலைமகளை
முடியிட்ட மணியே மேருச்
சிலைவளைத்துப் புரம்எரித்த சிறுநகைஎம்
பெருமான்நின் திருத்தாள் போற்றி. |
17 |
76
|
மறைதேட அயன்தேட மால்தேட
அன்பர்உள மலரி னுள்ளே
இறையேனும் பிரியாமல் இருந்தருளும்
பெருவாழ்வே இறையே என்றும்
குறையாத குளிர்மதியே கோவாத
ஒளிமணியே குணப்பொற் குன்றே
பொறையாளர் வழுத்தும்ஒற்றிப் பூங்கோயிற்419
பெருமானே போற்றி போற்றி. |
18 |
|
பூங்கோயில் - ஒற்றியூர்க் கோயிலுக்குப் பூங்கோயில்
என்று பெயர். திருவாரூர்க் கோயிலுக்கும் பெயர். |
77
|
எனப்பெரிதும் துதித்திறைஞ்சி ஆடுகின்ற
பெருமான்முன் எய்தித் தூக்கும்
வனப்புடைய மலர்ப்பதமும் மாயைதனை
மிதித்தூன்றும் மலர்ப்பொற் றாளும்
மனப்பருவ மலர்மலரக் கண்குளிரக்
கண்டுமிக வணங்கிப் பல்கால்
இனப்பெரியார்க் கின்பருளும் கூத்துடைய
மாமணியே இன்ப வாழ்வே. |
19 |
78
|
காரணமுக் கண்கொளும்செங் கரும்பேசெங்
கனியேஎன் கண்ணே மேலை
ஆரணத்துட் பொருளாகி அனைத்துமாய்
யாதொன்றும் அல்லா தாகிப்
பூரணசின் மயவெளியில் சச்சிதா
னந்தநடம் புரியுந் தேவே
ஏரணவு நடராயப் பெருமானே(420)
எம்மானே என்று வாழ்த்தி.(421) |
20
|
|
(420). பெம்மானே - பொ. சு., பி. இரா., ச. மு. க.
(421) அடிகளது தொடக்க காலத் தனிப் பாடல்கள் சிற்சில
கொண்ட ஒரு சுவடியில் ஓர் ஏட்டில் இந்தப்பாட்டு மட்டும்
பின்வருமாறு காணப்படுவதாக ஆ. பா. குறிப்பிடுகிறார்
பூரணசின் மயவெளியிற் சச்சிதா
நந்தநடம் புரியுந் தேவே
காரணமுக் கண்கொளும்செங் கரும்பேஎன்
கண்ணேமெய்க் கடவு ளேநால்
ஆரணமும் கடந்தப்பால் அனைத்துமாய்
யாதொன்றும் அல்லா தாகி
ஏரணவு நடராஜப் பெருமானே
எம்மானே என்று போற்றி. |
79
|
சடையாடச் சடைமீதிற் சலமகளும்
இளமதியும் ததும்பக் கொன்றைத்
தொடையாடக் கருணைவிழிக் கடைதுளும்பப்
புன்னகைஉள் துலங்க வெள்ளைக்
கொடையாட இமயமடக் கொடியாடத்
தனிநெடுவேற் குழந்தை மேவி
இடையாடப் பவனிவரும் எம்பெருமான்
தியாகன்எதிர் இறைஞ்சி நின்று. |
21 |
80
|
இருந்தேஎன் உளத்திலங்கும் செழுஞ்சுடரே
ஓவாத இன்ப மேயா
வருந்தேறா நிலைநின்ற வான்பொருளே
பவப்பிணியை மாற்றும் தெய்வ
மருந்தேஎன் கண்ணேகண் மணியேசெம்
மணியேஎன் வாழ்வே எங்கள்
பெருந்தேவே தருந்தியாகப் பெருமானே
கடவுளர்தம் பிரானே போற்றி. |
22 |
81
|
என்றுதுதித் தருள்வடிவிற் கல்லாலின்
அடியமர்ந்த இறைவன் முன்னின்
றொன்றுமனத் தன்புடன்கீழ் விழுந்துபணிந்
தெழுந்திருகை உச்சி கூப்பி
நன்றுணர்ந்த நால்வருக்கன் றருள்மொழிந்த
குருமணியே நாயி னேனை
இன்றுமகிழ்ந் தாட்கொண்ட சிவகுருவே
சற்குருவே என்று வாழ்த்தி. |
23 |
82
|
மயிலேறும் பெருமான்(422) முன் இறைஞ்சிமலர்க்
கரங்கூப்பி வணங்கி நின்றே
அயிலேறும் கதிர்வேற்கை ஐயாஎன்
அப்பாஎன் அரசே அன்பர்
கையிலேறும் கனியேமுக் கண்ஏறு
பெற்றஇளங் காளாய் நீலக்
குயிலேறு மொழிக்கடவுட் குஞ்சரந்தோய்
களிறேஎன் குருவே போற்றி. |
24
|
|
(422). மயிலேறும் பெருமாள் - பொ. சு., ச. மு. க. |
83
|
ஓடுகின்ற சிறுவர்களோ டுடன்கூடி
விளையாட்டே உவந்து நாளும்
ஆடுகின்ற பருவத்தே அடியேனுள்
அமர்ந்தருளி அன்பால் நின்னை
நாடுகின்ற வகைசிறிதே அளித்தீண்டு
குருவாகி நலந்தந் துள்கிப்
பாடுகின்ற வகைஅளித்த பரகுருவே
போற்றிஎனப் பரவி மன்னோ.(423) |
25
|
|
(423). இப்பாடல் பின்வருமாறு சில பாடபேதங்களுடன்
குருட்டாட்டம் எழுதியுள்ள ஏடுகளுள் ஒன்றன் ஒதுக் கிடங்களில்
அடிகளால் எழுதப்பட்டுள்ளதாக ஆ. பா. குறிப்பிட்டுள்ளார்.
ஓடுகின்ற சிறுவர்களோ டுடன்கூடி
விளையாட்டே உவந்து நாளும்
ஆடுகின்ற பருவத்தே அடியேனுள்
எழுந்தருளி அன்பால் நின்னை
நாடுகின்ற வகைசிறிதே அளித்தின்று
குருவாகி நலந்தந் துன்னைப்
பாடுகின்ற பணிஅளித்த பரகுருவே
போற்றி எனப்பரவி மன்னோ. |
84
|
பன்முறைநாத் தழும்பேறத் துதித்துநெடுங்
கடல்முழுதும் பருகிக் கந்நாள்
நன்முறைசெய் மணக்கோலங் காட்டியருள்
பெருமான்முன் நண்ணி நின்று
தொன்முறைமா றாமல்அருள் சுந்தரிசேர்
கல்யாண சுந்த ரர்முன்
சொன்முறைசேர் சுந்தரன்தன் தோழாஎன்
றகங்குளிர்ந்து துதித்து வாழ்த்தி. |
26 |
85
|
மான்மகனை நான்முகனா வைத்தவன்றன்
சிரநகத்தால் வகிர்ந்து வாங்கித்
தேன்மலர்ப்பொற் கரத்தேந்தும் காபாலி
முன்பணிந்து திருமால் வேதன்
வான்மகனா தியர்தம்மை வருத்தியஅந்
தகன்செருக்கு மாளச் சூலத்
தூன்மலர நுழைத்தேந்தும் வயிரவநிற்
போற்றிஎன உவந்து வாழ்த்தி. |
27 |
86
|
நிலையாய்நின் றுயர்ந்தவர்கட் கருள்புரியும்
பரம்பரையை நிமலை தன்னைத்
தலையால்மெய் யுறவணங்கி உலகமெலாம்
அளித்தபெருந் தாயே மேருச்
சிலையான்தன் இடத்தமர்ந்த தெள்ளமுதே
ஆனந்தத் தேனே மானே
மலையான்தன் ஒருமகளே வடிவுடைய
இளங்குயிலே மயிலே போற்றி. |
28 |
87
|
வான்வளர்த்த மலர்க்கொடியே மலைவளர்த்த
மடப்பிடியே மணியே வாசக்
கான்வளர்த்த மலர்க்கோதைக் கனியேமுக்
கனியேபைங் கரும்பே செங்கை
மான்வளர்த்துச் சடையில்இள மதிவளர்த்த
ஒருகிழவன் மகிழ வாய்த்த
தேன்வளர்த்த மொழிக்குமரி கௌரிஎன
மறைபுகழ்மா தேவி போற்றி. |
29 |
88
|
போற்றிஎனப் புகழ்ந்துசண்பைப் புனிதமறைக்
குலமணியைப் போந்து போற்றி
நாற்றிசையும் புகழ்கின்ற நாவரசைப்
பணிந்துசிவ ஞானந் தேறித்
தோற்றியஓர் சங்கிலியால் துடக்குண்ட
யானைதனைத் தொழுது மாயை
மாற்றியநம் மாணிக்க வாசகப்பொன்
மலையடியை வணங்கி மாதோ. |
30 |
89
|
தொண்டுநிலை சேர்ந்துயர்ந்த சண்டேசர்(424)
முதலோரைத் தொழுது போற்றி
விண்டுமுதல் நெருங்குதிரு வாயலிடை
அன்பினொடு மேவி ஆங்குத்
தண்டுவிழுந் தெனவிழுந்து பணிந்துபணிந்
திருவிழியில் தரள மாலை
கொண்டுநடங் கொண்டுநெறி கொண்டுமகிழ்
கொண்டுமனங் குளிர்ந்தான் பின்னர். |
31
|
|
(424). தண்டேசர் - பொ. சு. |
90
|
கருவலகிட் டருள்புரியும் கண்ணுடையான்
விமானத்தின் கனகச் சூழல்
மருவலகின் மணித்திரள்மா ளிகைமண்ட
பங்கள்முதல் வகுத்த எல்லாம்
திருவலகிட் டணிசாந்தத் திருமெழுக்கிட்
டன்பினொடும் திருவா யற்கண்
ஒருவலகில் திரணமொடு புல்லாதி
களைக்களைந்தாங் குவந்து மாதோ. |
32 |
91
|
புறத்தணுகித் திருமதிலின் புறத்தினும்நல்
திருக்குளத்தின் புறத்தும் ஞானத்
திறத்தர்மகிழ்ந் தேத்துகின்ற திருமாட
வீதியினும் தெரிந்து காலின்
உறத்தருமுட் கல்லொடுபுல் லாதிகளை
நீக்கிநல முறுத்திப் பாசம்
அறத்தொழுநல் அறத்தொழுகும் சிவனடியர்க்
கேவல்பல அன்பாற் செய்து. |
33 |
92
|
கருமுடிக்கும் களம்(425) உடையான் கண்ணுடையான்
எம்முடைய கருத்தன் செய்ய
திருமுடிக்கும் செங்கமலத் திருவடிக்கும்
புனைந்திடுவான் சிறப்ப வைத்த
மருமுடிக்கு மலர்நந்த வனத்தினையுள்
அன்புடனே வணங்கித் தூநீர்
உருமுடிக்கட் சுமந்துகொணர்ந் துட்குளிர
விடுத்துவிடுத் தூட்டி மாதோ. td valign=bottom>34 |
|
(425). கனம் - ச. மு. க. |
93
|
தேங்கமழ்பொற் கொன்றைநறும் பாடலம்மா
லதிவகுளம் சிறந்த சாதிக்
கோங்குவழை மயிலைநறு மல்லிகைஒண்
தளவமலர்க் குரவம் தும்பைப்
பாங்கறுகு கூவிளநற் பத்திரமா
தியமிகுசற் பத்தி உள்ளத்
தோங்குறமெய்ப் புனிதமொடும் உவந்துபறித்
தைந்தெழுத்தும் உன்னி ஆங்கே. |
35 |
94
|
பொன்மாலை யனையகொன்றைப் பூமாலை
முதற்பிணையல் புனித மாலை
என்மாலை யகற்றுடையான் திருமுடிக்குச்
சாத்துதிரு இண்டை மாலை
கன்மாலை நெஞ்சமுறான் கழல்மாலை
தோள்மாலை கன்னி மாலை
மன்மாலை தார்மாலை வகைமாலை
தொடுத்தெடுத்து வந்து மாதோ. |
36 |
95
|
மீண்டுமருட் கோயிலினுட் புகுந்துச்சிப்
பூசனைசெய் வேலை தன்னில்
ஆண்டவனுக் கணிவித்து வலம்புரிந்து
தொழுதுதுதித் தாடிப் பாடி
ஆண்டமரும் பரிவாரத் தேவர்முதல்
அனைவரையும் அன்பால் ஏத்தி
வேண்டுவிருப் புடன்பிரியா விடைகொண்டு
புறத்தணுகி மேவி ஆங்கண். |
37 |
96
|
சீரேனம் அறியாத திருவடியும்
குருவடியும் சிந்தித் தேகி
யாரேனும் கொலைகுறியார் எமக்குரியார்
எனஅவர்தம் இல்லந் தோறும்
போரேர்நெற் சோறேனும் புதுக்கஞ்சி
யேனும்அன்றிப் புளித்த காடி
நீரேனும் கூழேனும் கிடைத்ததுகை
யேற்றுவந்து நின்று வாங்கி. |
38 |
97
|
அங்குருவின் தகைதெரிக்கும் ஆச்சிரமத்
திடைஅணுகி அன்பி னோடும்
தங்குருவின் அடிமுடிமண் ணுறவணங்கி
இருகரமும் தலைமேற் கூப்பி
எங்குருவே சிவகுருவே எழிற்குமர
குருவேஇவ் வெளியேன் தன்பால்
இங்குருவிற் கருணைபுரி திருவாக்கின்
படிபிச்சை ஏற்ற தீதால். |
39 |
98
|
எனத்தொழுது நின்றானைக் கருணையொடும்
கடைக்கணித்தே இறைவன் கோயிற்
கனத்தபணி புரிந்தனைநின் இளைத்தஉடல்
ஆங்கதனைக் காட்டு கின்ற
தினத்தவரோ டுண்ணுதிபின் பெய்துதிஈண்
டெனஉரைப்ப இறைஞ்சி வாழ்த்திச்
சினத்தழல்நீத் தருள்மிகுத்த திருக்கூட்டந்
தனைவணங்கிச் சிந்தித் தேத்தி. |
40 |
99
|
அக்கூட்டந் தனில்உண்ணா அருந்தவரை
வினவிஅவ ரடியில் தாழ்ந்து
மிக்கூட்டும் அன்னையினும் மிகப்பரிவின்
அவர்க்கூட்டி மிகுந்த சேடங்
கைக்கூட்டக் காணாதே ஆயினும்மற்
றதுகுருவின் கழல்கள் ஏத்தி
மெய்க்கூட்டம் விழைந்தவன்றான் மிகமகிழ்ச்சி
யுடன்உண்டு விரைந்து மாதோ. |
41 |
100
|
வாய்பூசிக் கைபூசி வந்துசிவ
குருவின்அடி வணங்கி நின்றான்
தாய்பூசித் தெதிர்நிற்கும் தனையனைப்பார்த்
துரைப்பதுபோல் தயவால் நோக்கிப்
பேய்பூசித் திடும்சிறிய பேதையர்போல்
அல்லாது பெரிது மிக்கன்
பாய்பூசித் திறைவனடி வணங்குகின்ற
நல்லோரைப் பணிந்து வாழ்த்தி. |
42 |
101
|
அன்பிரக்கம் அறிவூக்கம் செறிவுமுதல்
குணங்கள்உற அமைந்து நாளும்
இன்புறக்கண் ணுதலான்தன் திருக்கோயில்
பணிபுரிந்தீண் டிருக்கும் நல்லோர்
துன்பறச்சொல் வழிஎந்த வழிஅந்த
வழிநடந்து துகளில் கல்வி
பொன்புரக்கும் தொழில்வணிகர் போல்பயில்க
எனக்குரவன் புகன்றான் மன்னோ. |
43 |
102
|
அம்மொழியாஞ் செம்மணியை அடிமுடியின்
அணிந்துமன மலர்ந்து நாயேன்
இம்மொழிஆ ரமுதருந்த என்னஅருந்
தவமுன்னர் இயற்றி னேனோ
செம்மொழிஆ ரணம்பரவும் சிவகுருவே
எனத்துதித்துச் சினங்கொண் டோ தும்
வெம்மொழிஒன் றில்லாத திருக்கூட்டத்
தவர்களொடும் மேவி னானால். |
44 |
|
கலிவிருத்தம் |
103
|
கொற்றவர் புகழும்அக் கூட்டந் தன்னில்வாழ்
முற்றவர் சிதம்பர முனிவர் தம்முனர்
உற்றிடும் சஞ்சலன் உளத்தை ஓர்ந்தவன்
கற்றிடற் கேற்றநற் கலைகள் தேற்றவே.
|
45 |
104
|
உளங்கொண்டங் கவன்தனை உழையி ருத்திஓர்
வளங்கெழு கன்னலின் மட்டும் இன்சுவை
அளந்தறிந் தூட்டுநல் அன்னை போல்மனக்
களங்கறப் பருவநேர் கலைப யிற்றிட.
|
46 |
105
|
பயின்றனன் சஞ்சலன் பரிந்து தெள்ளமு
தயின்றனன் ஆமென அகங் களித்தனன்
வியந்தனன் ஆங்கவர் விடுக்க மீண்டுநல்
வயந்தரு கோயிலின் மருங்கு நண்ணினான்.
|
47 |
106
|
அன்புடன் புனிதநீ ராடி நீறணிந்
தின்புடன் கண்டிகை எடுத்துப் பூண்டுதன்
துன்பறக் குருபதந் துதித்துக் கோபுரம்
முன்புறப் பணிந்துமா முகனைப் போற்றியே.
|
48 |
107
|
அந்தியார் வண்ணனை அந்திப் பூசனை
சந்தியா நின்றஅச் சமயத் தெய்தியுட்
புந்தியால் நினைந்துடல் புளகம் போர்த்திட
வந்தியா நின்றடி வணங்கி ஏத்தியே.
|
49 |
108
|
பாங்கமர் சிவபரம் பரையை வாழ்த்திக்கை
ஓங்கயிற் பிள்ளையை உவந்து போற்றிநின்
றாங்கமர் மற்றுள அமல மூர்த்திகள்
பூங்கழல் வணங்கிஓர் புறத்தி ருந்தரோ.
|
50 |
109
|
வருநெறி மூலமாம் மந்தி ரத்தினை
மருவிய அக்கமா மணிவ டங்கொடு
இருமைகொள் ஆயிரத் தெட்டின் எல்லையாம்
உருவுறச் செபமுடித் துளத்தின் உன்னியே.
|
51 |
110
|
எழுந்துவீழ்ந் திறைஞ்சிநின் றேத்தி அன்பினில்
அழுந்துநெஞ் சகத்தொடு அமல மாம்சிவக்
கொழுந்தமர் தளிவலங் கொண்டு கண்ணடி
உழுந்துருள் அளவும்வே றுன்னல் இன்றியே.
|
52 |
111
|
மாலயற் கரியநம் வள்ள லார்வளர்
ஆலயத் திரவிடை ஆற்றத் தக்கன
ஏலநெய்த் திருவிளக் கேறப் பார்த்திடும்
மூலமெய்த் திருப்பணி முதல ஆற்றியே.
|
53 |
112
|
விடைகொடு புறத்துறீஇ விமலன்அன்பர்கட்
கடைவுறப் பணிகள்செய் தகங்கு ளிர்ந்துவான்
தடைபொழில் ஆச்சிர மத்திற் சார்ந்தவண்
இடைமகிழ் குருவடி இறைஞ்சி ஏத்தியே.
|
54 |
113
|
எண்ணுறு தவர்அடிக் கேவல் ஆற்றியும்
கண்ணுறு பாடம்உட் கருதி யும்அவை
நண்ணுறக் கேட்டும்சொல் நயங்கள் நாடியும்
பண்ணுறு பொருள்நலம் பாங்கின் ஓர்ந்துமே.
|
55 |
114
|
காமமும் வெகுளியும் கடுஞ்சொல் ஆதிய
நாமமும் கனவினும் நண்ணல் இன்றியே
சேமமும் ஒழுக்கமும் செறிவும் ஆதிய
தாமமும் மணியும்போல் தாங்கி ஓங்கியும்.
|
56 |
115
|
கண்வளர்ந் திடுதல்ஐங் கடிகை(426) மற்றைய
திண்வளர் பொழுதெலாம் தேசி கப்பிரான்
பண்வளர் திருவடிப் பணியும் எம்பிரான்
ஒண்வளர் பணிகளும் உஞற்றி வைகினான்.
|
57
|
|
(426). கடிகை - நாழிகை |
116
|
மாசறு தவர்கள்உள் மகிழ்ந்து நோக்கவும்
தேசிகன் திருவுளம் திரும்பித் தேக்கவும்
ஆசறு கலைபயின் றமர்ந்து ளான்இவன்(427)
ஏசற இவ்வணம் இயற்று நாளினே.
|
25
|
|
(427). இவண் - பி. இரா., ச. மு. க.
|
முயற்சிப்படலம் முற்றிற்று