அதிகாரம் 1. 
	
	
	
1.       
	யூதா அரசன் யோயாக்கிமின் மூன்றாம் ஆட்சியாண்டில் பாபிலோனிய அரசன் நெபுகத்னேசர் 
	எருசலேமுக்கு வந்து முற்றுகையிட்டான்.
2.       
	தலைவராகிய ஆண்டவர் யூதா அரசனாகிய யோயாக்கிமையும் கடவுளுடைய கோவிலின் கலன்கள் 
	சிலவற்றையும் அவனிடம் கையளித்தார். அவனும் அவற்றைச் சீனார் நாட்டிலிருந்த தன் 
	தெய்வத்தின் கோவிலுக்கு எடுத்துச் சென்று அவற்றைத் தன் தெய்வத்திற்குரிய 
	கருவூலத்தில் சேர்த்தான்.
3.       
	அப்பொழுது, அரசன் தன் அரண்மனை அலுவலரின் தலைவனாகிய அஸ்பெனாசுக்கு, 
	அரசகுலத்தையும் உயர் குடியையும் சார்ந்த இஸ்ரயேலர் சிலரைக் கொண்டுவருமாறு 
	கட்டளையிட்டான்.
4.       அக்கட்டளைப்படி 
	அவர்கள் உடல் ஊனமற்ற, அழகுமிக்க, எல்லா ஞானத்திலும் தேர்ச்சி பெற்ற, அறிவிலும் 
	உணர்விலும் கல்வியிலும் சிறந்த, அரசனின் அரண்மனையில் பணியாற்றும் திறமை பெற்ற 
	இளைஞர்களாய் இருக்க வேண்டும். மேலும் அவர்கள் கல்¥தேய மொழியை எழுதவும் பேசவும் 
	கற்றுக் கொள்ளவேண்டும். 
5.       அரசன் தான் 
	உண்டுவந்த சிறப்புணவிலும், பருகி வந்த திராட்சை இரசத்திலும் நாள் தோறும் ஒரு 
	பங்கை அவர்களுக்குக் கொடுக்கும்படி ஏற்பாடு செய்தான். இவ்வாறு மூன்றாண்டுகள் 
	பயிற்சி அளித்தபின், இறுதியில் அவர்களை அரசன் முன்னிலையில் கொண்டு வந்து 
	நிறுத்தவேண்டும் என்று ஆணையிட்டான். 
6.       
	இப்படித் தேர்ந்ததெடுக்கப்பட்டவர்களுள் யூதா குலத்தைச் சார்ந்த தானியேல், 
	அனனியா, மிசாவேல், அசரியா என்பவர்களும் இருந்தார்கள். 
7.       
	அலுவலரின் தலைவன் தானியேலுக்குப் பெல்தசாச்சர் என்றும் அனனியாவுக்குச் 
	சாத்ராக்கு என்றும் மிசாவேலுக்கு மேசாக்கு என்றும், அசரியாவுக்கு ஆபேத்¥¥ நெகோ 
	என்றும் மாற்றுப் பெயரிட்டான். 
8.       
	அரசனது சிறப்புணவினாலும், அவன் பருகிவந்த திராட்சை இரசத்தினாலும் தம்மைத் 
	தீட்டுப்படுத்திக் கொள்ளலாகாது என்று தானியேல் தம் உள்ளத்தில் உறுதி செய்து 
	கொண்டார்: அவ்வாறே தாம் தீட்டுப்படாதிருக்க அலுவலர் தலைவனிடம் அனுமதி கேட்டார்.
	9.       அலுவலர் தலைவன் தானியேலுக்குப் பரிவும் 
	இரக்கமும் காட்டுமாறு கடவுள் அருள்கூர்ந்தார். 
10.       
	அலுவலர் தலைவன் தானியேலை நோக்கி, உங்களுக்கு உணவும் பானமும் ஏற்பாடு 
	செய்திருக்கும் அரசனாகிய என் தலைவருக்கு நான் அஞ்சிகிறேன். ஏனெனில் உங்களையொத்த 
	வயதினரை விட நீங்கள் களை குன்றியிருப்பதை அரசன் கண்டால் என் தலையே போய்விடும்: 
	நீங்கள்தான் அதற்குக் காரணமாவீர்கள் என்றான். 
11.       
	தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா ஆகியவர்களுக்கென அலுவலர் தலைவனால் 
	நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளரிடம் தானியேல் கூறியது:
12.       
	ஜயா! தயை கூர்ந்து பத்து நாள் உம் ஊழியர்களாகிய எங்களைச் சோதித்துப் பாரும். 
	எங்களுக்கு உண்பதற்கு மரக்கறிகளையும், குடிப்பதற்குத் தண்ணீரையும் மட்டுமே 
	தாரும். 
	
13.       அதற்குப் பிறகு, எங்களது 
	தோற்றத்தையும் அரசனது சிறப்புணவை உண்ணும் மற்ற இளைஞர்களின் தோற்றத்தையும் 
	ஒப்பிட்டுப்பாரும்: அதன்பின் உமக்குத் தோன்றியபடி உம்முடைய பணியாளர்களாகிய 
	எங்களுக்குச் செய்தருளும் என்றார். 
	
14.       அவனும் இக்காரியத்தில் 
	அவர்களுக்கு இணங்கி அவர்களைப் பத்து நாள் சோதித்துப் பார்த்தான். 
15.       
	பத்து நாள்கள் ஆயின. அரசனது சிறப்புணவை உண்டுவந்த இளைஞர்கள் அனைவரையும் விட 
	அவர்களது தோற்றம் மிகக் களையுள்ளதாயும் உடற்கட்டு மிகச் செழுமையுள்ளதாயும் 
	காணப்பட்டது. 
16.       ஆதலால் 
	மேற்பார்வையாளன் அவர்கள் உண்ணவேண்டிய சிறப்புணவுக்கும் பருகவேண்டிய திராட்சை 
	இரசத்திற்கும் பதிலாக மரக்கறி உணவையே அவர்களுக்குக் கொடுத்து வந்தான். 
17.       
	கடவுள் இந்த நான்கு இளைஞர்களுக்கும் அறிவையும் அனைத்து இலக்கியத்தில் 
	தேர்ச்சியையும் ஞானத்தையும் அருளினார். சிறப்பாக, தானியேல் எல்லாக் 
	காட்சிகளையும் கனவுகளையும் உய்த்துணரும் ஆற்றல் பெற்றிருந்தார். 
	
18.       அரசன் தன் முன்னிலைக்கு அவர்களைக் 
	கொண்டு வரவேண்டுமென்று குறித்த நாள் வந்தது. அலுவலர் தலைவனும் அவர்களை 
	நெபுகத்¥னேசர் முன்னிலையில் கொண்டுவந்து நிறுத்தினான். 
19.       
	அரசன் அவர்களோடு உரையாடலானான்: அப்பொழுது அவர்கள் அனைவருள்ளும் தானியேல், 
	அனனியா, மிசாவேல், அசரியா ஆகியோருக்கு இணையாக யாரும் காணப்படவில்லை: எனவே 
	அவர்கள் அரசன் முன்னிலையில் பணிபுரியலாயினர். 
20.       
	ஞானம், விவேகம் சார்ந்தவற்றில் அரசன் அவர்களோடு கலந்துரையாடினான். அப்பொழுது 
	அவனது அரசில் இருந்த எல்லா மந்திரவாதிகளையும் மாயவித்தைக்காரர்களையும் விட 
	அவர்கள் பத்து மடங்கு சிறந்தவர்களாய் இருந்ததைக் கண்டறிந்தான். 
21.       
	இவ்வாறு சைரசு என்ற அரசனது முதலாம் ஆட்சியாண்டுவரை தானியேல் தொடர்ந்து 
	பணிபுரிந்தார். 
	
	அதிகாரம் 2. 
	
	
	
1.       
	நெபுகத்¥னேசர் தனது இரண்டாம் ஆட்சியாண்டில் கனவுகள் சில கண்டு, உள்ளம் கலங்கி, 
	உறக்கமின்றித் தவித்தான். 
2.       
	அப்பொழுது அரசன் தன் கனவுகளைத் தனக்கு விளக்கும்படி மந்திரவாதிகளையும் 
	மாயவித்தைக்காரர்களையும் சூனியக்காரர்களையும் கல்தேயர்களையும் அழைத்துவரக் 
	கட்டளையிட்டான். அவர்களும் வந்து அரசன் முன்னிலையில் நின்றார்கள்.
3.       
	அரசன் அவர்களை நோக்கி, நான் ஒரு கனவு கண்டேன்: அதனால் என்னுள்ளம் 
	கலக்கமுற்றிருக்கிறது: நான் கண்டது இன்னதென்று அறிய விரும்புகிறேன் என்றான். 
	4.       அப்பொழுது கல்தேயர் அரசனை நோக்கி, 
	(அரமேய மொழியில்) அரசரே! நீர் நீடுழி வாழ்க! நீர் கண்ட கனவை உம் 
	பணியாளர்களுக்குச் சொல்லும். நாங்களும் அதன் பொருளை உமக்கு விளக்கிக் கூறுவோம் 
	என்று கூறினார்கள். 
5.       அரசன் 
	கல்தேயருக்கு மறுமொழியாக, நான் கண்ட கனவையும் அதன் உட்பொருளையும் எனக்கு 
	நீங்கள் விளக்கிக் கூறாவிடில், உங்களைக் கண்டந்துண்டமாய் வெட்டிவிடுவேன்: 
	உங்கள் வீடுகளும் தரைமட்டமாக்கப்படும்: இது என் திண்ணமான முடிவு. 
6.       
	ஆனால் கனவையும் அதன் உட்பொருளையும் விளக்கிக் கூறுவீர்களாகில், அன்பளிப்புகளும் 
	பரிசுகளும் பெரு மதிப்பும் என்னிடமிருந்து பெற்றுக் கொள்வீர்கள். ஆகையால் 
	கனவையும் அதன் உட்பொருளையும் எனக்கு விளக்கிக் கூறுங்கள் என்று கூறினான். 
	7.       அதற்கு அவர்கள் மீண்டும், அரசர் அந்தக் 
	கனவைத் தம் பணியாளர்களுக்குச் சொல்லட்டும்: அப்பொழுது அதன் உட்பொருளை விளக்கிக் 
	கூறுவோம் என்று பதிலளித்தார்கள். 
	
8.       அதற்கு அரசன் மறுமொழியாகக் 
	கூறியது: நான் முடிவெடுத்துவிட்டேன் என்பதை அறிந்தே நீங்கள் காலம் தாழ்ந்த 
	முயலுகிறீர்கள்: இது எனக்குத் திண்ணமாய்த் தெரியும். 
9.       
	கனவு இன்னதென்று உங்களால் தெரிவிக்க இயலாதெனில், உங்கள் எல்லாருக்கும் ஒரே 
	தீர்ப்புதான். சூழ்நிலை மாறும்வரை பொய்யும் புரட்டுமான வீண் கதைகளைச் சொல்ல 
	உங்களுக்குள் உடன்பட்டிருக்கிறீர்கள். ஆதலால் கனவை முதலில் சொல்லுங்கள்: 
	அப்பொழுதுதான் அதன் உட்பொருளையும் உங்களால் விளக்கிக் கூறமுடியும் என்பதை நான் 
	அறிந்துகொள்ள இயலும். 
	
10.       கல்தேயர் மறுபடியும் அரசனை 
	நோக்கி, அரசரே! உமது விருப்பத்தை நிறைவேற்றக் கூடியவன் இவ்வுலகில் 
	ஒருவனுமில்லை: வலிமையுடைய எந்தப் பேரரசனும் இத்தகைய காரியத்தை எந்த 
	மந்திரவாதியிடமாவது, மாய வித்தைக்காரனிடமாவது, கல்தேயனிடமாவது, இதுகாறும் 
	கேட்டது கிடையாது. 
11.       ஏனெனில், நீர் 
	கேட்கும் காரியம் செயற்கரிய ஒன்று: தெய்வங்களாலன்றி வேறெவராலும் அரசருக்கு 
	அதனைத் தெரிவிக்க முடியாது: ஆனால், மானிடர் நடுவில் தெய்வங்கள் இருத்தலில்லையே! 
	என்று மறுமொழி கூறினார்கள்.
12.       அரசன் 
	இதைக் கேட்டுக் கடுஞ்சினமுற்றுச் சீறி எழுந்து பாபிலோனில் இருந்த எல்லா 
	ஞானிகளையும் அழித்து விடும்படி ஆணையிட்டான். 
13.       
	ஞானிகள் கொலை செய்யப்படவேண்டும் என்ற ஆணையின்படி தானியேலையும் அவருடைய 
	தோழர்களையும் கொலை செய்யத் தேடினார்கள். 
14.       
	அரசனுடைய காவலர்த் தலைவன் அரியோக்கு பாபிலோனிய ஞானிகளைக் கொலைசெய்யப் 
	புறப்பட்டு வந்தான்.
15.       தானியேல் 
	முன்னெச்சரிக்கையுடனும் விவேகத்துடனும் அரசனுடைய காவலர்த் தலைவனாகிய 
	அரியோக்கிடம், அரசனின் ஆணை இவ்வளவு கடுமையாயிருப்பது ஏன்? என்று கேட்டார். 
	அதற்குரிய காரணத்தை அரியோக்கு தானியேலுக்குத் தெரிவித்தான். 
16.       
	உடனே தானியேல் அரசனிடம் போய், கனவின் உட்பொருளை அவனுக்கு விளக்கிக்கூறத் 
	தமக்குச் சில நாள் கெடு தருமாறு கேட்டுக்கொண்டார். 
17.       
	பின்னர், தானியேல் வீட்டுக்குத் திரும்பிச் சென்று, அனனியா, மிசாவேல், அசரியா 
	ஆகிய தோழர்களிடம் செய்தியைக் கூறினார். 
18.       
	பாபிலோனிய ஞானிகளோடு அவரும் அவர்களுடைய தோழர்களும் கொல்லப்படாதிருக்க, விண்ணகக் 
	கடவுள் கருணை கூர்ந்து அம் மறைபொருளை வெளிப்படுத்தியருள வேண்டுமென்று அவரை 
	மன்றாடுமாறு அவர்களிடம் சொன்னார். 
19.       
	அவ்வாறே அன்றிரவு கண்ட காட்சி ஒன்றில், தானியேலுக்கு அம்மறைபொருள் 
	வெளிப்படுத்தப்பட்டது. அப்பொழுது தானியேல் விண்ணகக் கடவுளை வாழ்த்திப் 
	போற்றினார்.
20.       அவர் கூறியது: 
	கடவுளின் திருப்பெயர் என்றென்றும் வாழத்தப்படுவதாக! ஏனெனில், ஞானமும் 
	வல்லமையும் அவருக்கே உரியன!
21.       
	காலங்களையும் பருவங்களையும் மாற்றுபவர் அவரே! அரசர்களை விலக்கி மாற்று அரசர்களை 
	நிலைநிறுத்துபவர் அவரே! ஞானிகளுக்கு ஞானம் வழங்குபவர் அவரே! அறிவாளிகளுக்கு 
	அறிவை அருள்பவர் அவரே!
22.       ஆழ்ந்த 
	மறைபொருள்களை வெளிப்படுத்துபவர் அவரே! இருளில் உள்ளதை அறிபவர் அவரே! ஒளியும் 
	வாழ்வது அவருடனே! 
23.       எங்கள் 
	தந்தையரின் இறைவா! உமக்கு நன்றியும் புகழும் கூறுகின்றேன்: ஏனெனில், எனக்கு 
	ஞானமும் ஆற்றலும் தந்தவர் நீரே! நாங்கள் உம்மிடம் கேட்டதை இப்பொழுது எனக்குத் 
	தெரியப்படுத்தியவர் நீரே! அரசனது காரியத்தை எங்களுக்கு அறிவித்தவரும் நீரே! 
	24.       பின்பு தானியேல், பாபிலோனிய ஞானிகளை 
	அழிப்பதற்கு அரசனால் நியமிக்கப்பட்ட அரியோக்கிடம் போய், அவனை நோக்கி, நீர் 
	பாபிலோனிய ஞானிகளை அழிக்க வேண்டாம்: என்னை அரசர் முன்னிலைக்கு அழைத்துச் 
	செல்¥லும்: நான் அரசரது கனவின் உட்பொருளை விளக்கிக் கூறுவேன் என்றார். 
25.       
	எனவே, அரியோக்கு தானியேலை அரசன் முன்னிலைக்கு விரைவாய் அழைத்துச் சென்று, 
	அரசனிடம், அரசரே! சிறைப்பட்ட யூதா நாட்டினருள், அரசருடைய கனவின் உட்பொருளை 
	விளக்கிக் கூறவல்ல ஒருவனைக் கண்டுபிடித்துவிட்டேன் என்றான்.
26.       
	அரசனோ பெல்தசாச்சர் என்று பெயரிடப்பட்ட தானியேலைப் பார்த்து, நான் கண்ட 
	கனவையும் அதன் உட்பொருளையும் எனக்கு விளக்கிக் கூற உன்னால் இயலுமா? என்று 
	கேட்டான்.
27.       தானியேல் அரசனுக்குச் 
	சொன்ன மறுமொழி: அரசர் கேட்கும் மறைபொருளை அரசருக்கு அறிவிக்க எந்த ஞானியாலும் 
	மாயவித்தைக்காரனாலும் மந்திரவாதியாலும் சோதிடனாலும் இயலாது.
28.       
	ஆனால் அரசரே! மறைபொருள்களை வெளிப்படுத்தும் விண்ணகக் கடவுள் பிற்காலத்தில் 
	நிகழப்போவதை நெபுகத்னேசர் என்னும் உமக்குத் தெரிவித்துள்ளார்: நீர் கண்ட 
	கனவும், நீர் படுத்திருந்த பொழுது, உம் மனக்கண் முன்னே தோன்றின காட்சிகளும் 
	பின்வருமாறு: 
29.       அரசரே! நீர் 
	படுத்திருந்த பொழுது, எதிர்காலத்தில் நிகழப்போவதைப் பற்றி நினைக்கத் 
	தொடங்கினீர்: அப்பொழுது மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவர் இனி நடக்க விருப்பதை 
	உமக்குக் காண்பித்தார். 
30.       ஆனால் 
	என்னைப் பொறுத்தமட்டில் மற்றெல்லா உயிர்களையும்விட நான் ஞானம் மிக்கவன் 
	என்பதால் எனக்கு வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால் அரசருக்கு அதன் உட்பொருளைத் 
	தெரிவிக்கவும் உமது இதயத்தின் நினைவுகளை நீர் அறிந்துகொள்ளவும் அவை எனக்கு 
	வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 
	
31.       அரசரே! நீர் பெரிய சிலை ஒன்றைக் 
	கண்டீர். உம் கண் எதிரே நின்ற அம் மாபெரும் சிலை பளபளக்கும் ஒளிமிக்கதாயும் 
	அச்சுறுத்தும் தோற்றமுடையதாயும் இருந்தது.
32.       
	அச்சிலையின் தலை பசும்பொன்னால் ஆனது: அதன் மார்பும் புயங்களும் வெள்ளியால் 
	ஆனவை: வயிறும் தொடைகளும் வெண்கலத்தால் ஆனவை.
33.       
	அதன் கால்கள் இரும்பினால் ஆனவை: அதன் காலடிகள் ஒரு பகுதி இரும்பினாலும் 
	மறுபகுதி களிமண்ணாலும் ஆனவை. நீர் அச்சிலையைப் பார்த்துக்கொண்டிருந்த பொழுது, 
	மனிதக் கை படாத கல் ஒன்று பெயர்ந்து உருண்டு வந்தது. 
34.       
	அந்தக் கல் இரும்பினாலும் களி மண்ணாலுமான அதன் காலடிகளில் வந்து மோதி அவற்றை 
	நொறுக்கியது. 
35.       அப்பொழுது இரும்பு, 
	களிமண், வெண்கலம், வெள்ளி, பொன் ஆகியவையாவும் நொறுங்கி, கோடை காலத்தில் 
	கதிரடிக்கும் களத்துப் பதரைப் போல் ஆயின. அவற்றின் அடையாளம் இராதபடி காற்று 
	அவற்றை அடித்துக் கொண்டு போய்விட்டது: ஆனால் சிலையை மோதிய அந்தக் கல் பெரிய மலை 
	ஆகி உலகம் முழுவதையும் நிரப்பிற்று. 
36.       
	அரசரே! இதுவே நீர் கண்ட கனவு: அதன் உட்பொருளையும் உமக்கு இப்பொழுது விளக்கிக் 
	கூறுவோம். 
37.       அரசரே! நீர் 
	அரசர்க்கரசராய் விளங்குகின்றீர். விண்ணகக் கடவுள் உமக்கு அரசுரிமை, ஆற்றல், 
	வலிமை, மாட்சி ஆகியவற்றைத் தந்துள்ளார். 
38.       
	உலகெங்கும் உள்ள மனிதர்களையும், வயல்¥¥ வெளி விலங்குகளையும், வானத்துப் 
	பறவைகளையும் உம் பொறுப்பில் அவர் ஒப்படைத்து, அவற்றையெல்லாம் நீர் ஒருவரே 
	ஆளும்படி செய்துள்ளார். எனவே, பொன்னாலாகிய சிலையின் தலை உம்மையே குறிக்கின்றது. 
39.       உமக்குப்பின் உமது அரசைவிட ஆற்றல் 
	குறைந்த வேறோர் அரசு தோன்றும்: அடுத்து வெண்கலம் போன்ற மூன்றாம் அரசு 
	எழும்பும்: அது உலகெல்லாம் ஆளும். 
40.       
	பின்னர், அனைத்தையும் நொறுக்கும் இரும்பைப் போல் வலிமை வாய்ந்த நான்காம் அரசு 
	தோன்றும்: அந்த அரசும் இரும்பு நொறுக்குவது போல் அனைத்தையும் தகர்த்துத் 
	தவிடுபொடியாக்கும். 
41.       மேலும், நீர் 
	அச்சிலையின் அடிகளையும் கால் விரல்களையும், ஒரு பகுதி குயவனின் களிமண்ணாகவும், 
	மறு பகுதி இரும்பாகவும் கண்டதற்கிணங்க, அந்த அரசு பிளவுபட்ட அரசாய் இருக்கும். 
	ஆனால், சேற்றுக் களிமண்ணோடு இரும்பு கலந்திருக்க நீர் கண்டதற்கிணங்க, இரும்பின் 
	உறுதியும் ஓரளவு காணப்படும். 
42.       
	அடிகளின் விரல்கள் ஒரு பகுதி இரும்பும் மறு பகுதி களிமண்ணுமாய் இருந்ததுபோல் 
	அந்த அரசும் ஓரளவு வலிமையுள்ளதாயும் ஓரளவு வலிமையற்றதாயும் இருக்கும்.
43.       
	இரும்பு களிமண்ணோடு கலந்திருப்பதாக நீர் கண்டதற்கிணங்க, அவர்களும் தங்களுக்குள் 
	திருமணத்தின் மூலம் உறவு கொள்வார்கள்: ஆனால் இரும்பு களிமண்ணோடு கலக்காததுபோல், 
	அவர்கள் ஒருவரோடொருவர் ஒன்றித்திருக்கமாட்டார்கள். 
44.       
	அந்த அரசர்களின் காலத்தில் விண்ணகக் கடவுள் ஓர் அரசை நிறுவுவார்: அது என்றுமே 
	அழியாது: அதன் ஆட்சியுரிமை வேறெந்த மக்களினத்திற்கும் தரப்படாது. அது மற்ற 
	அரசுகளை எல்லாம் நொறுக்கி அவற்றிற்கு முடிவுகட்டும்: அதுவோ என்றென்றும் 
	நிலைத்திற்கும். 
45.       மனிதக் கை படாது பெயர்ந்து 
	மலையிலிருந்து உருண்டு வந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்ணையுயம் 
	வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கியதாக நீர் கண்ட அந்தக் கல் இந்த அரசையே 
	குறிக்கிறது. இவ்வாறு எதிர்காலத்தில் நிகழப்போவதை மாபெரும் கடவுள் அரசருக்குத் 
	தெரிவித்திருக்கிறார். கனவும் உண்மையானது: அதன் உட்பொருள் நிறைவேறுவதும் உறுதி. 
	46.       அதைக் கேட்ட அரசன் நெபுகத்னேசர் 
	தானியேலின் அடிகளில் வீழ்ந்து வணங்கினான்: அவருக்குக் காணிக்கைப் பொருள் களைப் 
	படைத்துத் பபமிடுமாறு ஆணையிட்டான்.
47.       
	மேலும் , அரசன் தானியேலை நோக்கி, நீர் வணங்கும் கடவுளே தெய்வங்களுக்கெல்லாம் 
	கடவுள்: அரசர்களுக்கெல்லாம் ஆண்டவர்: அவர் ஒருவரே மறைபொருள்களை எல்லாம் 
	வெளிப்படுத்த வல்லவர். இது உண்மையிலும் உண்மை: ஏனெனில் உம்மால் மட்டுமே 
	இம்மறைபொருளை விளக்கிக் கூறமுடிந்தது என்றான். 
48.       
	பின்பு அரசன் தானியேலை உயர்ந்த முறையில் சிறப்பித்து அவருக்குப் பரிசில் பல 
	தந்து, பாபிலோன் நாடு முழுவதற்கும் அவரை ஆளுநராக ஏற்படுத்தினான்: பாபிலோனிய 
	ஞானிகள் அனைவர்க்கும் தலைவராகவும் நியமித்தான். 
49.       
	மேலும் தானியேலின் வேண்டுகோளின்படி சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்¥¥நெகோ 
	ஆகியோரைப் பாபிலோன் நாட்டின் புறப்பகுதிகளுக்குப் பொறுப்பாளராக நியமித்தான். 
	தானியேலோ அரசனது அவையில் தொடர்ந்து பணியாற்றினார்.
	
	அதிகாரம் 3. 
	
	
	
1.       
	நெபுகனேசர் அரசன் அறுபது முழ உயருமும் ஆறு முழ அகலமுமான பொற்சிலை ஒன்றைச் 
	செய்வித்து, அதைப் பாபிலோன் நாட்டிலிருந்த பரா என்னும் சமவெளியில் நிறுத்தி 
	வைத்தான். 
2.       பின்பு நெபுகத்னேசர் 
	அரசன் தான் நிறுவிய சிலையின் அர்ப்பணிப்புக்கு சிற்றரர்களும் அதிகாரிகளும் 
	ஆளுநரும் அறிவுரை கூறுவோரும் நிதிப்பொறுப்பாளரும் நீதிபதிகளும் மணியக்காரரும் 
	மற்றெல்லா அலுவலரும் ஒன்றாய்க் கூடி வரவேண்டுமென்று ஆணையிட்டான். 
3.       
	அவ்வாறே சிற்றரசர்களும் அதிகாரிகளும் ஆளுநரும் அறிவுரை கூறுவோரும் 
	நிதிப்பொறுப்பாளரும் நீதிபதிகளும் மணியக்காரரும் மாநிலங்களின் மற்றெல்லா 
	அலுவலரும் நெபுகத் னேசர் அரசன் நிறுவிய சிலையின் அர்ப்பணிப்புக்கு ஒன்றாய்க் 
	கூடி வந்து சேர்ந்தனர்: அவர்கள் நெபுகத்னேசர் நிறுவிய சிலை முன் வந்து 
	நின்றனர். 
4.       கட்டியக்காரன் ஒருவன் 
	உரத்த குரலில், இதனால் மக்கள் அனைவர்க்கும், எல்லா இனத்தவர்க்கும், 
	மொழியினருக்கும் அறிவிக்கப்படுவது யாதெனில்:
5.       
	எக்காளம், நாதசுரம், யாழ், கின்னரம், வீணை, பைக்குழல் முதலிய எல்லா வகை இசைக் 
	கருவிகளும் ஒலிக்கத் தொடங்கிய அந்த நொடியில், நீங்கள் தாழவீழ்ந்து நெபுகத்னேசர் 
	அரசன் நிறுவிய பொற்சிலையைப் பணிந்து தொழவேண்டும். 
6.       
	எவராகிலும் தாழவீழ்ந்து பணிந்து தொழவில்லையெனில், அவர்கள் அந்நேரமே 
	தீச்சூளையில் பக்கிப்போடப்படுவார்கள் என்று கூறி முரசறைந்தான்.
7.       
	ஆகையால், எக்காளம், நாதசுரம், யாழ், கின்னரம், வீணை, பைக்குழல் முதலிய எல்லா 
	வகை இசைக் கருவிகளும் ஒலிக்கத் தொடங்கியவுடன், எல்லா மக்களும் தாழவீழ்ந்து 
	நெபுகத்தேனசர் அரசன் நிறுவிய பொற்சிலையைப் பணிந்து தொழுவார்கள்.
8.       
	அப்பொழுது கல்தேயர் சிலர் தாமே முன்வந்து யூதர்கள் மேல் குற்றம் சாட்டலாயினர். 
	9.       அவர்கள் நெபுகத்னேசர் அரசனிடம் 
	சொன்னது: அரசரே! நீர் நீடூழி வாழ்க! 
10.       
	அரசரே! எக்காளம், நாதசுரம், யாழ், கின்னரம், வீணை, பைக்குழல் முதலிய எல்ா வகை 
	இசைக் கருவிகளும் ஒலிக்கக் கேட்கும் எந்த மனிதனும் உடனே தாழவீழ்ந்து 
	பொற்சிலையைப் பணியவேண்டும் என்று, நீர் கட்டளை பிறப்பித்தீர் அல்லவா? 
11.       
	எவராகிலும் தாழவீழ்ந்து பணியாமல் போனால் அவர்கள் எரிகிற தீச்சூளையில் 
	போடப்படுவார்கள் என்றும் நீர் ஆணை விடுத்தீர் அல்லவா? 
12.       
	அரசரே! பாபிலோன் நாட்டின் புறப்பகுதிகளுக்குப் பொறுப்பாளர்களாக சாத்ராக்கு, 
	மேசாக்கு, ஆபேத்நெகோ என்னும் யூதர்களை நீர் நியமித்தீர் அல்லவா? அந்தப் 
	பேர்வழிகள் உமது கட்டளையை மதிக்கவில்லை: உம் தெய்வங்களை வணங்கவில்லை, நீர் 
	நிறுவின பொற் சிலையைப் பணிந்து தொழவும் இல்லை. 
13.       
	உடனே நெபுகத்¥ னேசர் கடுஞ்சினமுற்று, சாத்ராக்கையும், மேசாக்கையும், 
	ஆபேத்நெகோவையும் பிடித்து வரும்படி கட்டளையிட்டான். அவ்வாறே அரசன் முன்னிலைக்கு 
	அவர்களைப் பிடித்துக் கொண்டு வந்தனர். 
14.       
	நெபுகத்னேசர் அவர்களை நோக்கி, சாத்ராக்கு! மேசாக்கு! ஆபேத்நெகோ! நீங்கள் 
	மூவரும் என் தெய்வங்களை வணங்கவில்லை என்பதும், நான் நிறுவிய பொற்சிலையைப் 
	பணிந்து தொழவில்லை என்பதும் உண்மைதானா? 
15.       
	இப்பொழுதாவது எக்காளம், நாதசுரம், யாழ், கின்னரம், வீணை, பைக்குழல் முதலிய 
	எல்லாவகை இசைக் கருவிகளும் ஒலிக்கக் கேட்டவுடன், நீங்கள் தாழவீழ்ந்து நான் 
	செய்துவைத்துள்ள சிலையைப் பணிந்து தொழத் தயாராயிருக்கிறீர்களா? தொழாவிட்டால் 
	அந்த நொடியிலேயே எரிகிற தீச்சூளையில் பக்கிப் போடப்படுவீர்கள். உங்களை என் 
	கைகளிலிருந்து தப்புவிக்கக்கூடிய தெய்வம் ஒன்று உண்டோ? என்றான்.
16.       
	சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ என்பவர்கள் செபுகத் னேசர் அரசனை நோக்கிப் 
	பதில்மொழியாக, இதைக் குறித்து நாங்கள் உமக்கு மறுமொழி கூறத் தேவையில்லை. 
	17.       அப்படியே எது நிகழ்ந்தாலும், நாங்கள் 
	வழிபடுகின்ற எங்கள் கடவுள், எரிகின்ற தீச்சூளையினின்று எங்களை மீட்க வல்லவர். 
	18.       அவரே எங்களை உம் கையினின்றும் 
	விடுவிப்பார். அப்படியே அவருக்கு மனமில்லாமல் போனாலும், அரசரே! நாங்கள் 
	உம்முடைய தெய்வங்களை வழிபடமாட்டோம்: நீர் நிறுவிய பொற்சிலையையும் நாங்கள் 
	தொழப்போவதில்லை. இது உமக்குத் தெரிந்திருக்கட்டும் என்றார்கள்.
19.       
	இதைக் கேட்ட நெபுத்னேசர் அரசன் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோர்மீது 
	வெகுண்டெழ, அவனது முகம் சினத்தால் சிவந்தது. வழக்கத்தைவிட ஏழு மடங்கு 
	மிகுதியாகத் தீச்சூளையைச் சூடாக்கும்படி அரசன் கட்டளையிட்டான். 
20.       
	பின்னர் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரைக் கட்டி, எரியும் 
	தீச்சூளைக்குள் பக்கிப் போடுமாறு தன் படைவீரர்களுள் வலியவர் சிலருக்குக் 
	கட்டளையிட்டான்.
21.       அவ்வாறே அந்த 
	வீரர்கள் அவர்களை மேற்பார்வையோடும் உள்ளாடையோடும் தலைப்பாகையோடும் மற்ற 
	ஆடைகளோடும் சேர்த்துக்கட்டி, எரியும் தீச்சூளைக்குள் பக்கிப் போட்டார்கள். 
	22.       அரசனது கட்டளை மிகக் கண்டிப்பானதாக 
	இருந்ததாலும் தீச்சூளை செந்தணலாய் இருந்ததாலும் சாத்ராக், மேசாக்கு, ஆபேத்நெகோ 
	ஆகியோரைத் தீச்சூளையில் போடுவதற்குத் பக்கிச் சென்றவர்களையே அத்தீப்பிழம்பு 
	கூட்டெரித்துக் கொன்றது. 
23.       
	சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகிய மூவரும் கட்டுண்டவர்களாய் எரிகிற 
	தீச்சூளையினுள் வீழ்ந்தார்கள். 
24.       அப்பொழுது நெபுகத்னேசர் அரசன் 
	வியப்புற்று விரைந்தெழுந்து தன் அமைச்சரை நோக்கி, மூன்று பேரைத்தானே கட்டி 
	நெருப்பினுள் எறிந்தோம்! என்றான். ஆம் அரசரே என்று அவர்கள் விடையளித்தனர். 
	25.       அதற்கு அவன், 
	கட்டவிழ்க்கப்பட்டவர்களாய் நெருப்பின் நடுவில் நான்கு பேர் உலவுகிறதை நான் 
	காண்கிறேன்! அவர்களுக்கோ ஒரு தீங்கும் நேரவில்லையே! மேலும் நான்காவது ஆள் தெய்வ 
	மகன் ஒருவன் போல் தோன்றுகிறானே! என்றான். 
26.       
	உடனே நெபுகத்னேசர் எரிகிற தீச்சூளையின் வாயிலருகில் வந்து நின்று, உன்னதக் 
	கடவுளின் ஊழியர்களாகிய சாத்ராக்கு! மேசாக்கு! ஆபேத்¥நெகோ! வெளியே வாருங்கள் 
	என்றான். அவ்வாறே சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்¥நெகோ ஆகியோர் நெருப்பைவிட்டு 
	வெளியே வந்தனர். 
27.       சிற்றரர்களும் 
	அதிகாரிகளும் ஆளுநரும் அரசனுக்கு அறிவுரை கூறுவோரும் கூடிவந்து, அந்த 
	மனிதர்களின் உடலில் தீப்பட்ட அடையாளமே இல்லாமலும் அவர்களது தலைமுடி கருகாமலும் 
	அவர்களுடைய ஆடைகள் தீப்பற்றாமலும் நெருப்பின் புகை நாற்றம் அவர்களிடம் 
	வீசாமலும் இருப்பதைக் கண்டார்கள். 
28.       
	அப்பொழுது நெபுகத்னேசர், சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரின் கடவுள் 
	புகழப்படுவாராக! தங்கள் கடவுளைத் தவிர வேறெந்த தெய்வத்தையும் பணிந்து தொழ 
	மறுத்து, அரசனது கட்டளையையும் பொருட்படுத்தாமல், அவர்மேல் நம்பிக்கை வைத்துத் 
	தங்கள் உடலைக் கையளித்த அவருடைய ஊழியர்களை அவர் தம் பதரை அனுப்பி 
	மீட்டருளினார். 
29.       ஆதலால் 
	சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரின் கடவுளுக்கு எதிராகப் பழிச்சொல் 
	கூறும் எந்த இனத்தவனும் எந்த நாட்டவனும் எந்த மொழியினனும் கண்டந்துண்டமாக 
	வெட்டப்படுவான்: அவனுடைய வீடும் தரைமட்டமாக்கப்படும்: இதுவே என் ஆணை! ஏனெனில், 
	இவ்வண்ணமாய் மீட்கின்ற ஆற்றல் படைத்த கடவுள் வேறெவரும் இல்லை என்றான். 
30.       
	பிறகு அரசன் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோர்க்குப் பாபிலோனின் 
	மாநிலங்களில் பெரும் பதவி அளித்துச் சிறப்புச் செய்தான். 
	
	அதிகாரம் 4. 
	
	
	
1.       
	அரசர் நெபுகத் னேசர் உலகில் எங்கணுமுள்ள எல்லா இனத்தார்க்கும் நாட்டினர்க்கும் 
	மொழியினருக்கும் அறிவிப்பது: 
2.       
	உங்களுக்குச் சமாதானம் பெருகுவதாக! மாட்சிமிகு கடவுள் எனக்காகச் செய்தருளிய 
	அடையாளங்களையும் விந்தைகளையும் வெளிப்படுத்துவது நலமென எனக்குத் தோன்றுகிறது. 
	3.       அவர் தந்த அடையாளங்கள் எத்துணைப் 
	பெரியன! அவர் ஆற்றிய விந்தைகள் எத்துணை வலியன! அவரது அரசு என்றுமுள அரசு! அவரது 
	ஆட்சியுரிமை வழிவழி நிலைக்கும். 
4.       
	நெபுகத்னேசராகிய நான் வீட்டில் மன் அமைதியுடனும் அரண்மனையில் வளமுடனும் 
	வாழ்ந்து வந்தேன். 
5.       நான் ஒரு கனவு 
	கண்டேன்: அது என்னை அச்சுறுத்தியது: நான் படுத்திருக்கையில் எனக்குத் தோன்றிய 
	கற்பனைகளும் காட்சிகளும் என்னைக் கலங்க வைத்தன.
6.       
	ஆதலால் நான் கண்ட கனவின் உட்பொருளை எனக்கு விளக்கிக் கூறும்படி பாபிலோனிய 
	ஞானிகள் அனைவரையும் என் முன்னிலைக்கு அழைத்துவரவேண்டும் என்று கட்டளை 
	பிறப்பித்தேன். 
7.       அவ்வாறே, 
	மந்திரவாதிகளும் மாயவித்தைக்காரரும் கல்தேயரும் சோதிடரும் வந்து கூடினர்: நான் 
	கண்ட கனவை அவர்களிடம் கூறினேன்: ஆனால் அவர்களால் அதன் உட்பொருளை எனக்கு 
	விளக்கிக் கூற முடியவில்லை. 
8.       
	இதற்காக, என் சொந்தத் தெய்வமாகிய பெல்¥தசாச்சாரின் பெயர் சூட்டப்பெற்ற தானியேல் 
	வந்தார்: அவர் புனிதமிகு கடவுளின் ஆவியால் நிரப்பப்பெற்றவர்: அவரிடம் நான் கண்ட 
	கனவைக் கூறினேன்: 
	
9.       மந்திரவாதிகளின் தலைவராகிய 
	பெல்தசாச்சார்! புனிதமிகு கடவுளின் ஆவி உம்மிடம் உள்ளது என்பதையும், உம்மால் 
	விளக்கமுடியாத மறைபொருள் எதுவுமில்லை என்பதையும் நான் அறிவேன். நான் கனவில் 
	கண்ட காட்சி இதுதான்: அதன் உட்பொருளை விளக்கிக் கூறுவீர். 
10.       
	நான் படுக்கையில் கிடந்த போது, என் மனக்கண் முன்னே தோன்றிய காட்சிகளாவன: இதோ! 
	நிலவுலகின் நடுவில் மரம் ஒன்றைக் கண்டேன்: அது மிக உயர்ந்து நின்றது. 
11.       
	அது வளர்ந்து வலிமை மிக்கதாய், வானத்தைத் தொடுமளவுக்கு உயர்ந்து காணப்பட்டது. 
	நிலவுலகின் எல்லைகளிலிருந்துகூட அதைப் பார்க்கலாம். 
12.       
	அதன் இலைகள் மிகவும் அழகாய் இருந்தன: மரத்தில் கனிகள் மிகுதியாய் இருந்தன: 
	அதில் எல்லா உயிர்களுக்கும் போதிய உணவு இருந்தது: அதன் நிழலில் காட்டு 
	விலங்குகள் தங்கியிருந்தன: அதன் கிளைகளில் வானத்துப் பறவைகள் குடியிருந்தன: 
	அனைத்து உயிர்களுக்கும் அதிலிருந்து உணவு கிடைத்தது. 
13.       
	நான் படுக்கையில் கிடந்த போது என் மனக்கண்முன்னே இக்காட்சிகளைக் கண்டேன்: 
	அப்பொழுது, இதோ! காவலராகிய பயவர் ஒருவர் வானத்திலிருந்து இறங்கி வந்தார். 
	14.       அவர் தமது குரலை உயர்த்திக் கூறியது 
	இதுவே: இந்த மரத்தை வெட்டுங்கள்: கிளைகளைத் தறித்து விடுங்கள்: இதன் இலைகளை 
	எல்லாம் பறித்தெறியுங்கள்: இதன் கனிகளைச் சிதறடியுங்கள்: இதன் கீழ் வாழும் 
	விலங்குள் ஓடிப்போகட்டும்: இதன் கிளைகளில் தங்கிய பறவைகள் பறந்தோடட்டும். 
	15.       ஆயினும் வேர்கள் நிறைந்த அடிமரத்தை 
	அப்படியே நிலத்தில் விட்டுவையுங்கள்: இரும்பாலும் வெண்கலத்தாலுமான சங்கிலியால் 
	அது கட்டப்பட்டு, வயல்வெளிப் பசும்புல் நடுவில் கிடக்கட்டும். வானத்தின் 
	பனியால் அந்த மனிதன் நனையட்டும்: தரையில் புல்வெளியில் விலங்குகளோடு அவன் 
	கிடக்கட்டும். 
16.       அவனது மனித உள்ளம் 
	மாற்றப்பட்டு, அவனுக்கு விலங்கின் மனம் கொடுக்கப்படட்டும். 
17.       
	ஏழு ஆண்டுகள் அவனைக் கடந்து செல்லட்டும். காவலர் விதித்த தீர்ப்பு இதுவே: பயவர் 
	வாய்மொழியின் முடிவும் இதுவே: மனிதர்களின் அரசை உன்னதமானவரே ஆள்கின்றார் 
	என்பதையும், தாம் விரும்பியவர்க்கே அதனைத் தந்தருள்வார் என்பதையும், மனிதருள் 
	தாழ்ந்தவர்களையே அதற்குத் தலைவர்களாக்குகின்றார் என்பதையும் உயிர்கள் அனைத்தும் 
	அறியும்படி இவ்வாறு விதிக்கப்பட்டது. 
18.       
	அரசர் நெபுகத்தேனசராகிய நான் கண்ட கனவு இதுவே: பெல்தசாச்சார்! இதன் உட்பொருளை 
	எனக்குத் தெரிவியும்! என் நாட்டிலுள்ள எல்லா ஞானிகளாலும் இதன் உட்பொருளை 
	விளக்கிக் கூற இயலவில்லை. நீர் ஒருவரே இதைத் தெரிவிக்கக்கூடியவர்: ஏனெனில் 
	புனிதமிகு கடவுளின் ஆவி உம்மிடம் உள்ளது. 
19.       
	இதைக் கேட்டவுடன் பெல் தசாச்சார் என்னும் பெயர்கொண்ட தானியேல் ஒரு கணம் 
	திகைத்து நின்றார்: அவருடைய எண்ணங்கள் அவரைக் கலக்கமுறச் செய்தன. அதைக் கண்ட 
	அரசன், பெல்தசாச்சார், கனவோ அதன் உட்பொருளோ உம்மைக் கலக்கமுறச் செய்யவேண்டாம் 
	என்றான். பெல்தசாச்சார் மறுமொழியாக, என் தலைவரே! இந்தக் கனவு உம் 
	பகைவர்களுக்கும் இதன் உட்பொருள் உம் எதிரிகளுக்குமே பலிப்பதாக!
20.       
	நீர் கண்ட மரம் வளர்ந்து வலிமைமிக்கதாய் வானத்தைத் தொடுமளவுக்கு 
	உயர்ந்திருந்தது. நிலவுலகின் எல்லைகளிலிருந்துகூட அதைப் பார்க்கலாம். 
	
21.       அதன் இலைகள் மிகவும் அழகாய் 
	இருந்தன. மரத்தில் கனிகள் மிகுதியாய் இருந்தன. அதில் எல்லா உயிர்களுக்கும் 
	போதிய உணவு இருந்தது. அதன் நிழலில் காட்டு விலங்குகள் தங்கியிருந்தன. 
22.       
	அரசரே! அந்த மரம் வேறு யாருமல்ல: மிகப் பெரியவராயும் வலிமையுள்ளவராயும் 
	உயர்ந்துள்ள நீர்தாம். உமது புகழ் வளர்ந்து வானைத் தொடுமளவு உயர்ந்துள்ளது. 
	உமது ஆட்சி உலகின் எல்லைகள் வரை பரவியுள்ளது. 
23.       
	மேலும், அரசரே! காவலராகிய பயவர் ஒருவர் வானத்திலிருந்து இறங்கி வந்ததை நீர் 
	கண்டீர் அல்லவா! அவர், “இந்த மரத்தை வெட்டி அழித்துப்போடுங்கள்: ஆனால் வேர்கள் 
	நிறைந்த அடிமரத்தை அப்படியே நிலத்தில் விட்டுவையுங்கள்: இரும்பாலும் 
	வெண்கலத்தாலுமான சங்கிலியால் அது கட்டப்பட்டு வயல்வெளிப் பசும்புல் நடுவில் 
	கிடக்கட்டும்: வானத்தின் பனியால் அவன் நனையட்டும். ஏழு ஆண்டுகள் அவனைக் கடந்து 
	செல்லும்வரை அவன் விலங்கோடு விலங்காய்த் திரிவான் என்று சொன்னதையும் கேட்டீர். 
	24.       அரசரே! இதுதான் உட்பொருள்: என் 
	தலைவரும் அரசருமான உமக்கு உன்னதரது தீர்ப்பின்படி நடக்கவிருப்பதும் இதுவே: 
	25.       மனித சமுதாயத்தினின்று நீர் 
	விரட்டப்படுவீர்: காட்டு விலங்களோடு வாழ்ந்து, மாடுபோல புல்லை மேய்ந்து, 
	வானத்தின் பனியில் நனைந்து கிடப்பீர். இவ்வாறு ஏழு ஆண்டுகள் உம்மைக் கடந்து 
	செல்லும், மனிதர்களின் அரசை உன்னதமானவரே ஆள்கின்றார் என்றும், தாம் 
	விரும்பியவர்க் கே அதனைத் தந்தருள்வார் என்றும் நீர் உணரும் வரை அந்நிலை 
	நீடிக்கும்.
26.       வேர்கள் நிறைந்த 
	அடிமரத்தை விட்டுவைக்க வேண்டும் என்று கட்டளை பிறந்தது அல்லவா? அதன்படி, 
	விண்ணகக் கடவுளே உலகை ஆள்கின்றார் என்பதை நீர் உணர்ந்தவுடன், அரசுரிமை மீண்டும் 
	உனக்குக் கிடைக்கும். 
27.       எனவே, 
	அரசரே! என் அறிவுரை உம்மால் ஏற்றுக் கொள்ளத்தக்கது ஆக! நல்லறத்தைப் பேணித் 
	தீச்செயல்களை நீக்குக! ஒடுக்கப்பட்டோர்க்கு இரக்கம் காட்டி உம் பாவக்கறைகளைப் 
	போக்கிக்கொள்க! ஒருவேளை உமது வளமை நீடிப்பதற்கு ஒது வழியாகலாம் என்றார். 
	28.       அவ்வாறே அரசன் நெபுகத்னேசருக்கு 
	அனைத்து நேர்ந்தது. 
29.       ஓராண்டு 
	சென்றபின், ஒருநாள் அரசன் பாபிலோன் அரண்மனையின் மேல் மாடத்தில் 
	உலவிக்கொண்டிருந்தான்.
30.       அப்பொழுது 
	அவன், என் வலிமையின் ஆற்றலால் அரசன் வாழும் மாளிகையாகவும், எனது மாட்சியும் 
	மகுடமாகவும் நான் கட்டியெழுப்பியதன்றோ இந்த மாபெரும் பாபிலோன்! என்றான்.
31.       
	இந்தச் சொற்களை அரசன் சொல்லி முடிக்கும் முன்பே, வானத்திலிருந்து ஒரு குரலொலி 
	கேட்டது: நெபுகத்னேசர் அரசனே! உனக்கே இந்தச் சொல்! உன்னுடைய அரசு 
	உன்னிடமிருந்து அகன்று விட்டது. 
32.       
	மனித சமுதாயத்தினின்று நீ விரட்டப்படுவாய். காட்டு விலங்களோடு வாழ்ந்து, 
	மாடுபோலப் புல்லை மேய்வாய்: மனிதர்களின் அரசை உன்னதரே ஆள்கின்றார் என்றும், 
	தாம் விரும்பியவர்க்கே அதனைத் தந்தருள்வார் என்றும் நீ உணர்ந்து கொள்வதற்குள் 
	ஏழு ஆண்டுகள் உன்னைக் கடந்து செல்லும். 
33.       
	உடனே இந்த வாக்கு நெபுகத்னேசரிடம் நிறைவேறிற்று. மனித சமுதாயத்தினின்று அவன் 
	விரட்டப்பட்டான். மாட்டைப்போலப் புல்லை மேய்ந்தான்: தலைமயிர் கழுகுகளின் இறகு 
	போலவும், அவனுடைய நகங்கள் பறவைகளின் நகங்கள் போலவும் வளரத் தொடங்கும்வரை அவனது 
	உடல் வானத்தின் பனியினால் நனைந்தது. 
34.       
	குறித்த காலம் கடந்தபின், நெபுகத் னேசராகிய நான் என் கண்களை வானத்திற்கு 
	உயர்த்தவே, என் பகுத்தறிவு எனக்கு மறுபடியும் அருளப்பட்டது. நானோ உன்னதரை 
	வாழ்த்தி, என்றுமுள கடவுளைப் புகழ்ந்து போற்றினேன்! அவரது ஆட்சியுரிமை என்றுமே 
	அழியாது! அவரது அரசு வழிவழி நிலைக்கும்! 
35.       
	உலகின் உயிர்கள் அனைத்தும் அவர் திருமுன் ஒன்றுமில்லை! வான்படை நடுவிலும் 
	உலகில் வாழ்வோர் இடையிலும் அவர் தாம் விரும்புவதையே செய்கின்றார்! அவரது வலிய 
	கையைத் தடுக்கவோ நீர் என்ன செய்கிறீர்? என்று அவருடைய செயல்களைப்பற்றி வினவவோ 
	எவராலும் இயலாது! 
36.       அதே நேரத்தில், 
	என் பகுத்தறிவு எனக்கு மறுபடியும் அருளப்பட்டது: என் அரசின் மேன்மைக்காக என் 
	சீரும் சிறப்பும் எனக்கு மீண்டும் கிடைத்தன: என் அமைச்சர்களும் உயர்குடி 
	மக்களும் என்னைத் தேடி வந்தார்கள்: எனது அரசுரிமை மீண்டும் உறுதி பெற்றது. 
	முன்னிலும் அதிக மாண்பு எனக்குக் கிடைத்தது. 
	
37.       நெபுகத்னேசராகிய நான் விண்ணக 
	அரசரப் போற்றிப் புகழ்ந்து, ஏத்திப் பாடுகின்றேன்: அவருடைய செயல்கள் யாவும் 
	நேரியவை! அவருடைய வழிவகைகள் சீரியவை! ஆணவத்தின் வழி நடப்போரை அவர் தாழ்வுறச் 
	செய்வார்! 
	
	
	அதிகாரம் 5. 
	
	
	
1.       
	பெல்சாட்சர் என்ற அரசன் உயர்குடி மக்கள் ஆயிரம் பேருக்குப் பெரியதொரு விருந்து 
	வைத்தான்: அந்த ஆயிரம் பேருடன் அவனும் திராட்சை மது குடித்தான்.
2.       
	அவ்வாறு குடித்துக்கொண்டிருந்தபொழுது, அரசன் தானும் தன் மனைவியரும் 
	வைப்பாட்டிகளும் குடிப்பதற்கென்று, தன் தந்தையாகிய நெபுகத்னேசர் எருசலேம் 
	திருக்கோவிலிருந்து கொண்டு வந்திருந்த பொன், வெள்ளிக் கிண்ணங்களைக் கொண்டுவரச் 
	சொன்னான்.
3.       அதன்படி, எருசலேமிலிருந்த 
	கடவுளின் கோவிலிருந்து கொண்டுவந்த பொன் கிண்ணங்களை எடுத்து வந்தார்கள்: அரசனும் 
	அவனுடைய உயர்குடி மக்களும், அவனுடைய உயர்குடி மக்களும், அவனுடைய மனைவியரும், 
	வைப்பாட்டியரும் அந்தக் கிண்ணங்களிலிருந்து குடித்தார்கள். 
4.       
	அவர்கள் திராட்சை மது குடித்துக்கொண்டே பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, மரம், 
	கல் ஆகியவற்றாலான தங்கள் தெய்வங்களைப் புகழ்ந்தார்கள். 
5.       
	திடீரென்று ஒரு மனிதனுடைய கைவிரல்கள் தோன்றி அரசனது அரண்மனை உட்சுவரில் 
	விளக்குத் பணுக்கு எதிரே எழுதத் தொடங்கின. அவ்வாறு எழுதும்போது அரசன் அந்த 
	உள்ளங்கையைப் பார்த்தான். 
6.       அதைக் 
	கண்டு அரசன் முகம் கறுத்து, நெஞ்சம் கலங்கி, குலைநடுங்கி, தொடை நடுக்கமுற்றான். 
	7.       உடனே அரசன் மாயவித்தைக் காரரையும் 
	கல்தேயரரையும் சோதிடரையும் கூட்டிவரும்வடி உரக்கக் கத்தினான். அரசன் பாபிலோனிய 
	ஞானிகளை நோக்கி, இந்தச் சொற்களைப் படித்து, இவற்றின் உட்பொருளை எனக்கு 
	வெளிப்படுத்துகிறவன் எவனோ அவனுக்கு அரச உடை அணிவித்து என் அரசின் மூன்றாம் 
	நிலையில் அமர்த்துவேன் என்றான். 
8.       
	பிறகு அரசனின் ஞானிகள் எல்லாரும் உள்ளே சென்றனர்: ஆனால் அந்த சொற்களைப் 
	படிக்கவோ அவற்றின் உட்பொருளை அரசனுக்கு விளக்கவோ அவர்களால் இயலவில்லை.
9.       
	அதைக் கண்ட பெல்சாட்சர் அரசன் மிகவும் மனக்கலக்க முற்றான்: அவனது முகம் 
	வெளிறியது. அவனுடைய உயர்குடி மக்களும் திகைத்து நின்றனர். 
10.       
	அரசனும் உயர்குடி மக்களும் எழுப்பிய கூச்சலைக் கேட்டு, அரசி 
	விருந்துக்கூடத்திற்குள் விரைந்து வந்து, அரசரே! நீர் நீடூழி வாழ்க! நீர் வீணாக 
	அச்சமுற்று, முகம் வெளிறவேண்டாம். 
11.       
	புனிதமிகு கடவுள் ஆவி நிறைந்த மனிதன் ஒருவன் உமது அரசில் இருக்கிறான். உம் 
	தந்தையின் ஆட்சிக் காலத்தில் அறிவொளியும் நுண்ணறிவும் தெய்வங்களுக்கொத்த 
	ஞானமும் அவனிடம் திகழ்ந்தது தெரிய வந்தது. எனவே உம் தந்தையாகிய நெபுகத்னேசர் 
	அரசர் அவனை மந்திரவாதிகளுக்கும் மாயவித்தைக்காரருக்கும் கல்தேயருக்கும் 
	சோதிடருக்கும் தலைவனாக்கினார்.
12.       
	அந்தத் தானியேல் வியத்தகு விவேகமும் அறிவும் உடையவன்: கனவுகளுக்கு விளக்கம் 
	கூறும் அறிவாற்றல் படைத்தவன்: விடுகதைகளுக்கு விடைகூறும் ஆற்றல் உடையவன்: 
	சிக்கல்களைத் தீர்க்கும் திறமை வாய்ந்தவன்: அவனுக்கு அரசர் பெல்தெசாச்சார் 
	என்று பெயரிட்டுள்ளார். அவன் உடனே இங்கு அழைக்கப்படட்டும்: அவன் விளக்கம் 
	கூறுவான் என்றாள்.
13.       அவ்வாறே அரசன் 
	முன்னிலைக்குத் தானியேல் அழைத்து வரப்பட்டார். அரசன் அவரைப் பார்த்து, என் 
	தந்தையாகிய அரசன் யூதாவிலிருந்து சிறைப்பிடித்துவந்தவர்களுள் ஒருவனாகிய 
	தானியேல் என்பவன் நீதானே?
14.       
	உன்னிடத்தில் புனிதமிகு கடவுளின் ஆவியும் அறிவொளியும் நுண்ணறிவும் சிறந்த 
	ஞானமும் உண்டென உன்னைப் பற்றிக் கேள்விப் பட்டுள்ளேன். 
15.       
	இப்பொழுது இந்தச் சொற்களைப் படித்து இவற்றின் உட்பொருளை எனக்கு விளக்கிக் 
	கூறுமாறு, இந்த ஞானிகளும் மாயவித்தைக்காரரும் என்முன் அழைத்து வரப்பட்டனர். 
	ஆனால், அவர்களால் இந்தச் சொற்களின் உட்பொருளை விளக்கிக்கூற முடியவில்லை. 
	16.       விளக்கங்கள் கூறவும் சிக்கல்களைத் 
	தீர்க்கவும் உன்னால் முடியும் எனக் கேள்விப்படுகிறேன். இப்பொழுது நீ இந்தச் 
	சொற்களைப் படித்து இவற்றின் உட்பொருளை விளக்கினால், உனக்கு அரச உடை உடுத்தி, 
	கழுத்தில் பொன்மாலை அணிவித்து, என் அரசில் மூன்றாம் நிலையில் உன்னை 
	அமர்த்துவேன் என்றான்.
17.       அப்பொழுது 
	அரசனுக்குத் தானியேல் மறுமொழியாகக் கூறியது: உம்முடைய அன்பளிப்புகள் உம்மிடமே 
	இருக்கட்டும்: உம் பரிசுகளை வேறு யாருக்காவது கொடும். ஆயினும், இந்தச் சொற்களை 
	அரசருக்குப் படித்துக் காட்டி அவற்றின் உட்பொருளை விளக்கிக் கூறுவேன். 
18.       
	அரசரே! உன்னதரான கடவுள் உம் தந்தையாகிய நெபுகத் னேசருக்குப் பேரரசையும் 
	சிறப்பையும் மேன்மையையும் மாண்பையும் அளித்தார். 
19.       
	அவருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பின் காரணமாய் எல்லா இனத்தாரும் நாட்டினரும் 
	மொழியினரும் அவருக்கு அஞ்சி நடுங்கினர். அவர் தம் விருப்பப்படி யாரையும் 
	வாழவிடுவார்: தம் விருப்பப்படியே யாரையும் உயர்த்துவார்: தம் விருப்பப்படியே 
	யாரையும் தாழ்த்துவார். 
	
20.       ஆனால் அவருடைய உள்ளம் 
	இறுமாப்புற்று, அவருடைய மனம் செருக்கினால் கடினப்பட்டது. உடனே அவர் அரசின் 
	அரியணையிலிருந்து தள்ளப்பட்டார்: அவரிடமிருந்து அரசது மேன்மை பறிக்கப்பட்டது. 
	21.       மனித சமுதாயத்தினின்று அவர் 
	விரட்டப்பட்டார். மேலும் அவரது உள்ளம் விலங்குகளின் மனமாக மாற்றப்படவே, அவர் 
	காட்டுக் கழுதைகளோடு வாழ்ந்துவந்தார். மனிதர்களின் அரசுகளை உன்னதரே ஆள்கின்றார் 
	என்றும், தாம் விரும்பியவர்க்கே அவற்றை வழங்குகின்றார் என்றும் உணரும்வரை, அவர் 
	மாடுபோல் புல்லை மேய்ந்தார்: அவரது உடல் வானத்துப் பனியில் நனைந்து கிடந்தது.
	22.       அவருடைய மகனாகிய பெல்சாட்சர்! இவற்றை 
	எல்லாம் நீர் அறிந்திருந்தும் உன் இதயத்தைத் தாழ்த்திக் கொள்ளவில்லை. 
23.       
	ஆனால் விண்ணுலக ஆண்டவருக்கு எதிராக உம்மையே உயர்த்தினீர்: அவரது கோவிலின் 
	கிண்ணங்களைக் கொண்டு வரச் செய்து, நீரும் உம் உயர்குடி மக்களும், உம்முடைய 
	மனைவியரும் வைப்பாட்டியரும் அவற்றிலிருந்து திராட்சை மது குடித்தீர்கள்: மேலும் 
	காணவோ, கேட்கவோ, எதையும் உணரவோ இயலாத வெள்ளி, பொன், வெண்கலம், இரும்பு, மரம், 
	கல் ஆகியவற்றாலான தெய்வங்களைப் புகழ்ந்தீர்கள். ஆனால் உமது உயிரையும் உம் 
	வழிகளையும் தம் கைக்குள் வைத்திருக்கும் கடவுளை நீர் பெருமைப்படுத்தவில்லை. 
	24.       ஆகையால் அவர் இந்தக் கையைத் தம் 
	திருமுன்னிருந்து அனுப்பி, இந்த எழுத்துகளைப் பொறிக்கச் செய்தார். 
25.       
	பொறிக்கப்பட்ட சொற்களாவன: மேனே மேனே, தேகேல், பார்சின் 
26.       
	இவற்றின் உட்பொருள்: மேனே: கடவுள் உமது அரசின் நாள்களை எண்ணி வரையறுத்து அதனை 
	முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டார். 
27.       
	தேகேல்: நீர் தராசில் நிறுக்கப்பட்டீர்: எடையில் மிகவும் குறைந்துள்ளீர். 
	28.       பார்சின்: உமது அரசு பிரிக்கப்பட்டு 
	மேதியருக்கும் பாரசீகருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது .
29.       
	உடனே, பெல்சாட்சரின் ஆணைப்படி, தானியேலுக்கு அரச உடை உடுத்தி, கழுத்தில் 
	பொன்மாலை அணிவித்தனர். மேலும், அரசில் மூன்றாம் நிலையில் தானியேல் 
	அமர்த்தப்படுவார் என்றும் முரசறைந்தனர். 
30.       
	அன்றிரவே கல்தேய அரசனாகிய பொல்சாட்சர் கொலை செய்யப்பட்டான். 
	
	
	அதிகாரம் 6. 
	
	
	
1.       
	மேதியனாகிய தாரியு என்பவன் தன் அறுபத்திரண்டாம் வயதில் அரசை ஏற்றுக்கொண்டான். 
	தன் நாடு முழுவதும் வரி வசூலிப்பதற்கென்று மற்றிருபது தண்டல்காரரைத் தாரியு 
	நியமித்தான். 
2.       இத்தண்டல்காரரைக் 
	கண்காணிப்பதற்கென்று மூன்று மேற்பார்வையாளரை ஏற்படுத்தினான். அரசனுக்கு எவ்வித 
	இழப்பும் நேரிடாவண்ணம் இம் மூவரிடமும் அத்தண்டல்காரர்கள் கணக்குக் 
	கொடுக்கவேண்டும்.
3.       இம்மூவருள் 
	தானியேலும் ஒருவர். இவர் மற்ற மேற்பார்வையாளரையும் தண்டல்காரரையும்விடச் 
	சிறந்து விளங்கினார்: ஏனெனில், வியத்தகு ஆவி அவரிடத்தில் இருந்தது. தன் அரசின் 
	முழுப் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைக்கலாம் என அரசன் எண்ணிக் கொண்டிருந்தான். 
	4.       ஆனால் மற்ற மேற்பார்வையாளரும் 
	தண்டல்காரரும் அரசைக் கண்காணிப்பதில் தானியேலின்மீது குற்றம்சாட்ட வகை 
	தேடினார்கள். அவரிடத்தில் குற்றம் சாட்டுவதற்குரிய எந்தத் தவற்றையும் ஊழலையும் 
	அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை: ஏனெனில் அவர் நேர்மையாய் நடந்துகொண்டார். 
	அவரிடம் எவ்விதத் தவறும் ஊழலும் காணப்படவில்லை.
5.       
	அப்பொழுது அவர்கள், இந்தத் தானியேலுக்கு எதிராக அவருடைய கடவுளின் சட்டத்தைப் 
	பின்பற்றுவதில் தவிர வேறெதிலும் அவர்மீது குற்றம் காணமுடியாது என்றார்கள். 
	6.       எனவே, இந்த மேற்பார்வையாளரும் 
	தண்டல்காரரும் தங்களுக்குள் கூடிப்பேசி அரசனிடம் வந்து அவனிடம், தாரியு அரசரே! 
	நீர் நீடூழி வாழ்க! 
7.       அதிகாரிகள், 
	தண்டல்காரர்கள், அமைச்சர், ஆளுநர் ஆகிய நாங்கள் அனைவரும் கலந்தாலோசித்துக் 
	கூறுவது: முப்பது நாள் வரையில் அரசராகிய தங்களிடமன்றி வேறெந்தத் தெய்வத்திடமோ 
	மனிதனிடமோ யாதொரு விண்ணப்பமும் செய்கின்ற எந்த மனிதனும் சிங்கக் குகைக்குள் 
	தள்ளப்படுவான் என்று நீர் சட்டம் இயற்றித் தடையுத்தரவு போடவேண்டும்.
8.       
	ஆகையால், அரசரே! இப்பொழுதே அச்சட்டத்தை இயற்றித் தடையுத்தரவில் கையெழுத்திடும்: 
	அப்பொழுதுதான் மேதியர், பாரசீகரின் சட்டங்கள் மாறாதிருப்பது போல, இச்சட்டமும் 
	மாறாதிருக்கும் என்றார்கள். 
9.       
	அவ்வாறே தாரியு அரசன் சட்டத்தில் கையொப்பமிட்டுத் தடையுத்தரவு பிறப்பித்தான். 
	10.       தானியேல் இந்தச் சட்டம் 
	கையொப்பமிடப்பட்டதை அறிந்தபின், தம் வீட்டுக்குச் சென்றார். அவர் வீட்டு 
	மேலறையின் பலகணிகள் எருசலேமை நோக்கித் திறந்திருந்தன. தமது வழக்கப்படி 
	நாள்தோறும் மூன்று வேளையும் தம் கடவுளுக்கு முன்பாக முழந்தாளிலிருந்து மன்றாடி 
	அவருக்கு நன்றி செலுத்துவார். 
11.       
	முன்னரே கூடிப் பேசிக்கொண்டபடி, அந்த மனிதர்கள் உள்ளே நுழைந்து தானியேல் தம் 
	கடவுளிடம் வேண்டுவதையும் மன்றாடுவதையும் கண்டார்கள்.
12.       
	உடனே அவர்கள் அரசனை அணுகி, அவனது தடையுத்தரவைப் பற்றிக் குறிப்பிட்டு, அரசரே! 
	முப்பது நாள் வரையில் அரசராகிய உம்மிடமன்றி வேறெந்தத் தெய்வத்திடமோ மனிதனிடமோ 
	யாதொரு விண்ணப்பமும் செய்கின்ற எந்த மனிதனும் சிங்கக் குகையில் தள்ளப்படுவான் 
	என்ற தடையுத்தரவில் கையொப்பமிட்டுள்ளீர் அல்லவா? என்றார்கள். அதற்கு அரசன், 
	ஆம், மேதியர், பாரசீகரின் சட்டங்கள் மாறாதிருப்பது போல், இதுவும் மாறாததே 
	என்றான். 
13.       உடனே அவர்கள் அரசனை 
	நோக்கி, யூதாவிலிருந்து சிறைப்பிடித்துக் கொண்டு வரப்பட்டவர்களுள் ஒருவனாகிய 
	தானியேல் உம்மை மதியாமல், நீர் கையொப்பமிட்டுள்ள தடையுத்தரவை மீறி நாள்தோறும் 
	மூன்று வேளையும் வேண்டுதல் செய்கிறான் என்றார்கள். 
14.       
	ஆனால், அரசன் இந்தச் சொற்களைக் கேட்டு மிகவும் மனம் வருந்தினான்: தானியேலைக் 
	காப்பாற்றத் தனக்குள் உறுதி பூண்டவனாய், அன்று கதிரவன் மறையும் வரையில் அவரைக் 
	காப்பாற்ற வழி தேடினான். 
15.       ஆனால் 
	அந்த மனிதர்கள் முன்னரே கூடிப் பேசிக்கொண்டபடி, அரசனிடம் வந்து, அவனை நோக்கி, 
	அரசரே! மேதியர், பாரசீகரின் சட்டப்படி, அரசன் விடுத்த தடையுத்தரவோ சட்டமோ 
	மாற்றத்திற்கு அப்பாற்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ளும் என்றனர்.
16.       
	ஆகவே, அரசனுடைய கட்டளைப்படி தானியேல் கொண்டுவரப்பட்டுச் சிங்கக் குகையில் 
	தள்ளப்பட்டார். அப்பொழுது அரசன் தானியேலை நோக்கி, நீ இடைவிடாமல் வழிபடும் உன் 
	கடவுள் உன்னை விடுவிப்பாராக! என்றான். 
17.       
	அவர்கள் ஒரு பெரிய கல்லைப் புரட்டிக் கொண்டுவந்து குகையின் வாயிலை 
	அடைத்தார்கள்: தானியேலுக்குச் செய்யப்பட்டதில் யாதொன்றும் 
	மாற்றப்படாதிருக்கும்படி அரசன் தன் மோதிரத்தாலும் தம் உயர்குடி மக்களின் 
	மோதிரங்களாலும் அதற்கு முத்தரையிட்டான். 
18.       
	பின்னர் அரசன் அரண்மனைக்குத் திரும்பிச்சென்று, அன்றிரவு முழுவதும் உணவு 
	கொள்ளவில்லை: வேறு எந்தக் களியாட்டத்திலும் ஈடுபடவில்லை. உறக்கமும் அவனை 
	விட்டகன்றது. 
19.       பொழுது 
	புலர்ந்தவுடன், அவன் எழுந்து சிங்கக் குகைக்கு விரைந்து சென்றான். 
20.       
	தானியேல் இருந்த குகையருகில் வந்தவுடன் துயரக் குரலில் அவன் தானியேலை நோக்கி, 
	தானியேல்! என்றுமுள கடவுளின் ஊழியனே! நீ இடைவிடாமல் வழிபடும் உன் கடவுளால் 
	உன்னைச் சிங்கங்களினின்று விடுவிக்க முடிந்ததா? என்று உரக்கக் கேட்டான். 
	21.       அதற்குத் தானியேல் அரசனிடம், அரசரே! 
	நீர் நீடூழி வாழ்க!
22.       என் கடவுள் தம் 
	பதரை அனுப்பிச் சிங்கங்களின் வாய்களைக் கட்டிப்போட்டார். அவை எனக்குத் தீங்கு 
	எதுவும் செய்யவில்லை: ஏனெனில் அவர் திருமுன் நான் மாசற்றவன். மேலும் அரசரே! உம் 
	முன்னிலையிலும் நான் குற்றமற்றவனே என்று மறுமொழி கொடுத்தார். 
23.       எனவே, அரசன் மிகவும் மனம் மகிழ்ந்து, 
	உடனே தானியேலைக் குகையிலிருந்து விடுவிக்குமாறு கட்டளையிட்டான். அவ்வாறே 
	தானியேலைக் குகையிலிருந்து வெளியே பக்கினார்கள். அவருக்கு யாதொரு தீங்கும் 
	நேரிடவில்லை: ஏனெனில் அவர் தம் கடவுளை உறுதியாக நம்பினார்.
24.       
	பிறகு அரசனது கட்டளைக்கிணங்க, தானியேலைக் குற்றம் சாட்டியவர்கள் இழுத்துக் 
	கொண்டுவரப்பட்டனர். அவர்களும் அவர்களுடைய மனைவி, மக்களும் சிங்கக் குகையினுள் 
	தள்ளப்பட்டார்கள். அவர்கள் குகையின் அடித்தளத்தை அடையும் முன்னே சிங்கங்கள் 
	அவர்களைக் கவ்விப் பிடித்து, அவர்களுடைய எலும்புகளை எல்லாம் நொறுக்கிவிட்டன. 
	25.       அப்பொழுது தாரியு அரசன் நாடெங்கும் 
	வாழ்ந்துவந்த எல்லா இனத்தவர்க்கும் நாட்டினர்க்கும் மொழியினர்க்கும் ஓர் 
	அறிக்கை விடுத்தான். 
26.       உங்களுக்கு 
	மிகுந்த சமாதானம் உண்டாவதாக! என் ஆட்சிக்குட்பட்ட நாடு முழுவதும் உள்ள மக்கள் 
	தானியேலின் கடவுளுக்கு அஞ்சி நடுங்க வேண்டும். இது என் ஆணை. ஏனெனில், அவரே 
	வாழும் கடவுள்: அவர் என்றென்றும் நிலைத்திருக்கின்றார்: அவரது ஆட்சி என்றும் 
	அழிவற்றது: அவரது அரசுரிமைக்கு முடிவே இராது.
27.       
	தானியேலைச் சிங்கங்களின் பிடியினின்று காப்பாற்றியவர் அவரே: அவரே மீட்பவர்! 
	விடுதலை அளிப்பவரும் அவரே! விண்ணிலும் மண்ணிலும் அரிய செயல்களையும் 
	விந்தைகளையும் ஆற்றுபவர் அவரே! 
28.       
	இவ்வாறு, தானியேல் தாரியுவின் ஆட்சிக் காலத்திலும், பாரசீகனான சைரசு மன்னனின் 
	ஆட்சிக் காலத்திலும் சீரும் சிறப்புமாய் இருந்தார். 
	
	அதிகாரம் 7. 
	
	
	
1.       
	பாபிலோனிய அரசனாகிய பெல்சாட்சரின் முதலாண்டில் தானியேல் கனவு கணடார்: அவர் 
	படுத்திருக்கையில், அவரது மனக்கண்முன் காட்சிகள் தோன்றின. பிறகு அந்தக் கனவை 
	எழுதிவைத்து அதைச் சுருக்கமாகச் சொன்னார். 
2.       
	தானியேல் கூறியது: இரவில் நான் கண்ட காட்சியில் வானத்தின் நான்கு திசைக் 
	காற்றுகளும் பெருங்கடலைக் கொந்தளிக்கச் செய்தன.
3.       
	அப்பொழுது நான்கு பெரிய விலங்குள் கடலினின்று மேலெழும்பின. 
4.       
	அவை வெவ்வேறு உருவம் கொண்டவை. அவற்றுள் முதலாவது கழுகின் இறக்கைகளை உடைய 
	சிங்கத்தைப்போல் இருந்தது. நான் பார்த்துக் கொண்டிருக்கையில், அதன் இறக்கைகள் 
	பிடுங்கப்பட்டன: அது தரையினின்று பக்கப்பட்டு மனிதனைப்போல் இரண்டு கால்களில் 
	நின்றது: அதற்கு மனித இதயமும் கொடுக்கப்பட்டது.
5.       
	அடுத்து, வேறொரு இரண்டாம் விலங்கைக் கண்டேன். கரடியைப் போன்ற அந்த விலங்கு 
	பின்னங்கால்¥களை ஊன்றி எழுந்து நின்றது: தன் மூன்று விலா எலும்புகளைத் தன் 
	வாயின் பற்களுக்கு இடையில் கவ்விக்கொண்டிருந்தது. “எழுந்திரு, ஏராளமான 
	இறைச்சியை விழுங்கு“ என்று அதற்குச் சொல்லப்பட்டது. 
6.       
	இன்னும் நோக்குகையில், வேங்கை போன்ற வேறோரு விலங்கு காணப்பட்டது. அதன் முதுகில் 
	பறவையின் இறக்கைகள் நான்கு இருந்தன: அந்த விலங்குக்கு நான்கு இருந்தன: அதற்கும் 
	ஆளும் உரிமை கொடுக்கப்பட்டது. 
7.       
	இவற்றுக்குப் பிறகு, இரவின் காட்சியில் கண்ட நான்காம் விலங்கு, அஞ்சி நடுங்க 
	வைக்கும் தோற்றமும் மிகுந்த வலிமையும் கொண்டதாய் இருந்தது. அதற்கு பெரிய 
	இரும்புப் பற்கள் இருந்தன. அது பள் பளாக நொறுக்கி விழுங்கியது: எஞ்சியதைக் 
	கால்களால மிதித்துப் போட்டது. இதற்குமுன் நான் கண்ட விலங்குகளுக்கு இது 
	மாறுபட்டது. இதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தன. 
8.       
	அந்தக் கொம்புகளை நான் கவனித்துப் பார்க்கையில், அவற்றின் நடுவில் வேறொரு சிறிய 
	கொம்பு முளைத்தது: அதற்கு இடமளிக்கும் வகையில், முன்னைய கொம்புகளுள் மூன்று 
	வேரோடு பிடுங்கப்பட்டன: அந்தக் கொம்பில் மனிதக் கண்களைப் போலக் கண்களும் பெருமை 
	பேசும் வாயும் இருந்தன. 
9.       நான் 
	பார்த்துக் கொண்டிருக்கையில், அரியணைகள் அமைக்கப்பட்டன: தொன்மை வாய்ந்தவர் 
	அங்கு அமர்ந்தார்: அவருடைய ஆடை வெண்பனி போலவும், அவரது தலைமுடி பய பஞ்சு 
	போலவும் இருந்தன: அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும் அதன் சக்கரங்கள் எரி 
	நெருப்பாயும் இருந்தன. 
10.       அவர் 
	முன்னிலையிலிருந்து நெருப்பாலான ஓடை தோன்றிப் பாய்ந்தோடி வந்தது: பல்லாயிரம் 
	பேர் அவருக்குப் பணிபுரிந்தார்கள்: பலகோடி பேர் அவர்முன் நின்றார்கள்: 
	நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமர்ந்தது: மல்கள் திறந்து வைக்கப்பட்டன. 
	
11.       அந்தக் கொம்பு பேசின பெருமை மிக்க 
	சொற்களை முன்னிட்டு நான் அதைக் கவனித்துப் பார்த்தேன். அப்படிப் பார்க்கையில், 
	அந்த விலங்கு கொல்லப்பட்டது: அதன் உடல் சிதைக்கப்பட்டு நெருப்பிற்கு 
	இரையாக்கப்பட்டது. 
12.       மற்ற 
	விலங்குகளிடமிருந்து அவற்றின் ஆட்சியுரிமை பறிக்கப்பட்டது: ஆயினும் அவற்றின் 
	வாழ்நாள் குறிப்பிட்ட கால நேரம்வரை நீட்டிக்கப்பட்டது. 
13.       
	இரவில் நான் கண்ட காட்சியாவது: வானத்தின் மேகங்களின் மீது மானிட மகனைப் போன்ற 
	ஒருவர் தோன்றினார்: இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்: அவர் 
	திருமுன் கொண்டு வரப்பட்டார். 
14.       
	ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்கு கொடுக்கப்பட்டன: எல்லா இனத்தாரும் 
	நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்: அவரது ஆட்சியுரிமை 
	என்றுமுளதாகும்: அதற்கு முடிவே இராது: அவரது அரசு அழிந்து போகாது.
15.       
	தானியேல் ஆகிய நான் உள்ளம் கலங்கினேன். மனக்கண்முன் தோன்றிய காட்சிகள் என்னை 
	அச்சுறுத்தின. 
16.       அங்கு நின்று 
	கொண்டிருந்தவர்களுள் ஒருவரை அணுகி, “இவற்றிற்கெல்லாம் பொருள் என்ன?“ என்று 
	கேட்டேன். அவர் அவற்றின் உட்பொருளை எல்லாம் எனக்கு விளக்கிக் கூறினார். 
17.       
	இந்த நான்கு விலங்குகளும் உலகில் எழும்பப்போகும் நான்கு அரசர்களைக் 
	குறிக்கின்றன. 
18.       ஆனால் உன்னதரின் 
	புனிதர்கள் அரசுரிமை பெறுவர்: அந்த அரசுரிமையை என்றும் ஊழ்ஊழிக் காலமும் 
	கொண்டிருப்பர். 
19.       அதன் பின்னர், மற்ற விலங்குகளினின்று 
	மாறுபட்டு, மிகவும் அஞ்சி நடுங்கவைக்கும் தோற்றத்துடன், இரும்புப் பற்களும் 
	வெண்கல நகங்களும் கொண்டு, அனைத்தையும் பள் பளாக நொறுக்கி விழுங்கி, எஞ்சியதைக் 
	கால்களால் மிதித்துப்போட்ட அந்த நான்காம் விலங்கைப்பற்றி அறிந்து கொள்ள 
	விரும்பினேன். 
20.       அதன் தலையில் 
	இருந்த பத்துக் கொம்புகளைப் பற்றியும், மூன்று கொம்புகள் தன் முன்னிலையில் 
	விழுந்து போக அங்கே முளைத்த கண்களும் பெருமையாகப் பேசும் வாயும் கொண்டிருந்த 
	ஏனையவற்றைவிடப் பெரியதாகத் தோன்றிய அந்தக் கொம்பைப் பற்றியும் தெரிந்து கொள்ள 
	விரும்பினேன். 
21.       நான் பார்த்துக் 
	கொண்டிருக்கையில், அந்தக் கொம்பு புனிதர்களுக்கு எதிராகப் போர் புரிந்து 
	அவர்களை வென்றது. 
22.       தொன்மை 
	வாய்ந்தவர் வந்து உன்னதரின் புனிதர்களுக்கு நீதி வழங்கும் வரையிலும் உரிய 
	காலத்தில் புனிதர்கள் அரசுரிமை பெறும் வரையில் இவ்வாறு நடந்தது. 
23.       
	அவர் தொடர்ந்து பேசினார்: அந்த நான்காம் விலங்கோ உலகில் தோன்றப்போகும் நான்காம் 
	அரசைக் குறிக்கின்றது: இது மற்றெல்லா அரசுகளையும் விட வேறுபட்டதாகும். உலக 
	முழுவதையும் அது மிதித்துத் பள்பளாக நொறுக்கி விழுங்கிவிடும். 
24.       
	அந்தப் பத்துக் கொம்புகளோ இந்த அரசினின்று தோன்றவிருக்கும் பத்து மன்னர்களைக் 
	குறிக்கின்றன. அவர்களுக்குப் பிறகு மற்றொருவன் எழும்புவான்: முந்தினவர்களைவிட 
	வேறுபட்டிருப்பான்: மூன்று அரசர்களை முறியடிப்பான்: 
25.       
	அவன் உன்னதர்க்கு எதிரான சொற்களைப் பேசுவான்: உன்னதரின் புனிதர்களைத் 
	துன்புறுத்துவான்: வழிபாட்டுக் காலங்களையும் திருச்சட்டத்தையும் மாற்ற 
	நினைப்பான். மூன்றரை ஆண்டுகள் புனிதர்கள் அவனது கையில் ஒப்புவிக்கப்படுவர். 
	26.       ஆனால், நீதிமன்றம் தீர்ப்பு வழங்க 
	அமரும்: அவனது ஆட்சி அவனிடமிருந்து பறிக்கப்பட்டு, எரியுண்டு ஒன்றுமில்லாது 
	அழிக்கப்படும்.
27.       ஆட்சியும் 
	அரசுரிமையும், வானத்தின் கீழுள்ள உலகனைத்திலும் உள்ள அரசுகளின் மேன்மையும் 
	உன்னதரின் புனித மக்களுக்குத் தரப்படும். அவர்களது அரசு என்றென்றும் நிலைக்கும் 
	அரசு: எல்லா அரசுகளும் அவர்களுக்குப் பணிந்து கீழ்ப்படியும்.
28.       
	இத்தோடு விளக்கம் முடிகிறது. தானியேல் ஆகிய நான் என் நினைவுகளின் பொருட்டு 
	மிகவும் கலங்கினேன்: என் முகம் வெளிறியது: ஆயினும் இவற்றை என் மனத்திற்குள் 
	வைத்துக் கொண்டேன். 
	
	அதிகாரம் 8. 
	
	
	
1.       
	முன்பு தோன்றிய காட்சிக்குப் பிறகு, பெல்சாட்சரின் மூன்றாம் ஆட்சியாண்டில் 
	தானியேல் என்னும் நான் வேறொரு காட்சி கண்டேன். 
2.       
	அந்தக் காட்சியில் நான் கண்டது பின்வருமாறு: ஏலாம் மாநிலத்தின் தலைநகரான சூசா 
	நகரில் நான் இருந்தேன்: அந்தக் காட்சியில் நான் ஊலாய் ஆற்றின் அருகே 
	நின்றுகொண்டிருந்தேன். 
3.       நான் கண்களை உயர்த்திப் பார்த்தபொழுது, 
	ஒரு செம்மறிக்கிடாய் அந்த ஆற்றங்கரையில் நிற்கக் கண்டேன். அதற்கு இரண்டு 
	கொம்புகள் இருந்தன: இரண்டும் நீளமான கொம்புகள்: ஒன்று மற்றதைவிட நீளமானது: 
	நீளமானது இரண்டாவதாக முளைத்து. 
4.       
	அந்தச் செம்மறிக்கிடாய் தன் கொம்புகளால் மேற்கு நோக்கியும் வடக்கு நோக்கியும் 
	தெற்கு நோக்கியும் பாய்ந்து முட்டுவதைக் கண்டேன். அதன் எதிரே நிற்க எந்த 
	விலங்காலும் இயலவில்லை: அதன் வலிமையிலிருந்து விடுவிக்க வல்லவர் யாருமில்லை. 
	அது தன் விருப்பப்படியே நடந்து தற்பெருமை கொண்டு திரிந்தது. 
5.       
	நான் இதை உற்று நோக்கிக் கொண்டிருக்கையில், மேற்கிலிருந்து வெள்ளாட்டுக்கிடாய் 
	ஒன்று புறப்பட்டு வந்து, நிலவுலகின் எம்மருங்கிலும் சுற்றியது. அது நிலத்தில் 
	கால் ஊன்றவே இல்லை. அந்த வெள்ளாட்டுக்கிடாயின் கண்களுக்கு இடையில் எடுப்பாகத் 
	தோன்றும் ஒரு கொம்பு இருந்தது. 
	
6.       ஆற்றங்கரையில் நிற்கையில் நான் 
	கண்டவாறு, அந்த வெள்ளாட்டுக்கிடாய் இரு கொம்புடைய அச்செம்மறிக்கிடாயை நோக்கிச் 
	சென்று, தன் முழு வலிமையோடும் அதைத் தாக்க அதன்மேல் பாய்ந்தது.
7.       
	அது செம்மறிக்கிடாயை நெருங்கி அதன்மேல் கடுஞ்சினம் கொண்டு அதைத் தாக்கி, அதன் 
	கொம்புகள் இரண்டையும் முறித்துவிட்டதை நான் கண்டேன். அதன் எதிரே நிற்கச் 
	செம்மறிக்கிடாய்க்கு வலிமை இல்லை. ஆகவே வெள்ளாட்டுக்கிடாய் அதைத் தரையில் தள்ளி 
	மிதித்து விட்டது. செம்மறிக்கிடாயை முன்னதன் வலிமையினின்று விடுவிக்க வல்லவர் 
	யாருமில்லை. 
8.       அதன் பின்னர் 
	வெள்ளாட்டுக்கிடாய் தற்பெருமை மிகக் கொண்டு திரிந்தது: ஆனால் அது வலிமையாக 
	இருந்த பொழுதே அதன் பெரிய கொம்பு முறிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக, எடுப்பாகத் 
	தோன்றிய வேறு நான்கு கொம்புகள் முளைத்து, வானத்தின் நான்கு பக்கங்களையும் 
	நோக்கி வளர்ந்தன. 
9.       அவற்றுள் 
	ஒன்றிலிருந்து சிறிய கொம்பு ஒன்று முளைத்தெழுந்து, தெற்கு நோக்கியும் கிழக்கு 
	நோக்கியும் அழகுமிக்க நாட்டை நோக்கியும், மிகப் பெரிதாக வளர்ந்து நீண்டது. 
	10.       அது வான் படைகளைத் தொடுமளவு உயர்ந்து 
	வளர்ந்து, விண்மீன் திரள்களுள் சிலவற்றையும் தரையில் வீழ்த்தி மிதித்துவிட்டது. 
	11.       மேலும், அது வான்படைகளின் தலைவரையே 
	எதிர்த்துத் தன்னை உயர்த்திக் கொண்டது. இடையறாது செலுத்தப்பட்ட எரிபலியையும் 
	அவரிடமிருந்து பறித்துக்கொண்டு அவரது பயகத்தையும் அழித்துப் போட்டது. 
12.       
	குற்றங்களை முன்னிட்டு, வான்படைகளும் அன்றாட எரிபலியும் அதற்கு ஒப்புக் 
	கொடுக்கப்பட்டன. அது உண்மையை மண்ணுக்குத் தள்ளியது. அது தன் செயலில் வெற்றி 
	கண்டது.
13.       அப்பொழுது புனிதர் ஒருவர் 
	பேசுவதைக் கேட்டேன். வேறொரு புனிதர் முன்பு பேசியவரிடம், இடையறாது 
	செலுத்தப்பட்ட எரிபலியையும், நடுங்கவைக்கும் குற்றத்தையும் பயகமும் வான் 
	படைகளும் மிதிபடுவதற்குக் கையளிக்கப்படுவதையும் பற்றிய இந்தக் காட்சி இன்னும் 
	எத்தனை நாள் நீடிக்கும்? என்று கேட்டார். 
14.       
	அதற்கு அவர், இரண்டாயிரத்து முன்டீறு மாலையும் காலையும் இது நீடிக்கும். 
	பின்னரே பயகம் அதற்குரிய நிலைக்குத் திரும்பும் என்றார். 
15.       
	தானியேல் ஆகிய நான் இந்தக் காட்சியைக் கண்டபின், அதன் உட்பொருளை அறியத் 
	தேடினேன். அப்பொழுது மனிதத் தோற்றம் கொண்ட ஒருவர் எனக்கு முன்பாக வந்து 
	நின்றார். 
16.       ஊலாய் ஆற்றின் 
	நடுவிலிருந்து ஒரு மனிதக் குரல் ஒலித்தது. அது, கபிரியேல்! இந்தக் காட்சி 
	இவருக்கு விளக்குமாறு செய் என்று கூப்பிட்டுச் சொன்னது. 
	
17.       அவ்வாறே அவர் நான் நின்ற 
	இடத்திற்கு வந்தார். அவர் வருவதைப் பார்த்து, நான் திடுக்கிட்டு முகங்குப்புற 
	விழுந்தேன். அவர் வருவதைப் பார்த்து, நான் திடுக்கிட்டு முகங்குப்புற 
	விழுந்தேன். அவர் என்னைநோக்கி, மானிடா! இந்தக் காட்சி இறுதிக் காலத்தைப் 
	பற்றியது எனத் தெரிந்துகொள் என்றார். 
18.       
	அவர் என்னுடன் பேசிக் கொண்டிருக்கையில், நான் தரையில் முகங்குப்புற விழுந்து 
	மயக்கத்தில் ஆழ்ந்துகிடந்தேன். அவர் என்னைத் தொட்டு எழுப்பி என்னைக் காழன்றி 
	நிற்கச் செய்தார். 
19.       
	பெருஞ்சினத்தின் முடிவு நாளில் நிகழப்போவதை உனக்குத் தெரிவிப்பேன்: ஏனெனில், 
	அது குறிக்கப்பட்ட இறுதி காலத்தைப் பற்றியது. 
20.       
	இரு கொம்பு உடையதாக நீ கண்ட செம்மறிக்கிடாய் மேதியர், பாரசீகரின் அரசர்களைக் 
	குறிக்கிறது. 
21.       வெள்ளாட்டுக்கிடாய் 
	கிரேக்க நாட்டின் அரசனைக் குறிக்கிறது: அதன் கண்களுக்கு இடையிலிருந்த பெரிய 
	கொம்பு முதல் அரசன் ஆகும்.
22.       அது 
	முறிந்துபோன பின் அதற்குப் பதிலாக முளைத்தெழுந்த நான்கு கொம்புகள், அவனது 
	அரசினின்று தோன்றவிருக்கும் நான்கு அரசுகள் ஆகும்: ஆனால், முன்னதன் ஆற்றல் 
	இவற்றுக்கு இராது.
23.       இவற்றின் ஆட்சி 
	முடிவுற்று, குற்றங்கள் மலிந்து உச்சநிலை அடையும்போது, கடுகடுத்த முகமும் வஞ்சக 
	நாவும் கூர்மதியும் கொண்ட ஓர் அரசன் தோன்றுவான். 
24.       
	அவனது வலிமை பெருகும். அது அவனது சொந்த ஆற்றலினால் அல்ல. அவன் அஞ்சத்தக்க 
	வகையில் அழிவு வேலை செய்வான்: தன் செயலில் வெற்றி காண்பான்: 
	வலிமைமிக்கவர்களையும் புனித மக்களையும் அழித்து விடுவான். 
25.       
	நயவஞ்சகத்தின் மூலம் அவன் பொய் புரட்டை வளர்ப்பான். அவன் தன் உள்ளத்தில் 
	தற்பெருமை கொண்டிருப்பான்: முன்னெச்சரிக்கை தராமல் பலரைக் கொலை செய்வான்: 
	இறுதியில் மன்னர்க்கு மன்னரையே எதிர்க்கத் துணிவான். ஆயினும், எந்த மனித முயற் 
	சியும் இன்றி, அவன் அழிவுறுவான். 
	
26.       மாலைகளையும் காலைகளையும் பற்றிய 
	காட்சியைக் குறித்து இதுவரை சொல்லப்பட்டது முற்றிலும் உண்மையானது. ஆயினும், நீ 
	இந்தக் காட்சியை உன் மனத்தில் மறைத்துவை. ஏ¦னில், பல நாள்களுக்குப்பிறகே இது 
	நிறைவேறும். 
27.       தானியேல் ஆகிய நான் 
	சோர்வடைந்து சில நாள்கள் நோயுற்று நலிந்து கிடந்தேன்: பிறகு எழுந்து அரசனின் 
	அலுவல்களில் ஈடுபட்டேன். ஆயினும் அந்தக் காட்சி என்னைத் திகைப்பில் ஆழ்த்தியது: 
	அதன் பொருளும் எனக்குச் சரியாக விளங்கவில்லை. 
	
	அதிகாரம் 9. 
	
	
	
1.       
	பிறப்பினால் மேதியனாகிய அகஸ்வேருவின் மகன் தாரியு கல்¥தேய நாட்டின் அரசனாகி 
	ஆட்சி புரிந்த முதல் ஆண்டு. 
2.       அவனது 
	முதல் ஆட்சியாண்டில் தானியேல் ஆகிய நான், எருசலேம் பாழ்நிலையில் கிடக்கும் 
	காலம், எரேமியா இறைவாக்கினர்க்கு ஆண்டவர் உரைத்தபடி எழுபது ஆண்டுகள் ஆகும் 
	என்று மல்களிலிருந்து படித்தறிந்தேன். 
3.       
	நான் நோன்பிலிருந்து சாக்கு உடை அணிந்து சாம்பலில் அமர்ந்து என் தலைவராகிய 
	கடவுளிடம் திரும்பி மன்றாடி வேண்டிக் கொண்டேன். 
4.       
	என் கடவுளாகிய ஆண்டவர்முன் என் பாவங்களை அறிக்கையிட்டு நான் மன்றாடியது: என் 
	தலைவரே! நீர் மாட்சிமிக்க அஞ்சுதற்குரிய இறைவன். உம்மீது அன்புகொண்டு உம் 
	கட்டளைகளின்படி நடப்பவர்களுடன் நீர் செய்துகொண்ட உடன்படிக்கையைக் காத்து 
	அவர்களுக்குப் பேரன்பு காட்டுகின்றீர்! 
5.       
	நாங்கள் பாவம் செய்தோம்: வழி தவறி நடந்தோம்: பொல்லாதவர்களாய் வாழ்ந்து உம்மை 
	எதிர்த்து நின்றோம். உம் கட்டளைகளையும் நீதிநெறிகளையும் கைவிட்டோம். 
	
6.       எங்களுடைய அரசர்கள், தலைவர்கள், 
	தந்தையர்கள், நாட்டிலுள்ள மக்கள் அனைவர்க்கும் இறைவாக்கினர்களாகிய உம் 
	ஊழியர்கள் உமது பெயரால் பேசியதற்கு நாங்கள் செவி கொடுக்கவில்லை.
7.       
	என் தலைவரே! நீதி உமக்கு உரியது: எம்கோ இன்று வரை கிடைத்துள்ளது அவமானமே. 
	ஏனெனில், யூதாவின் ஆண்களும் எருசலேம்வாழ் மக்களும், இஸ்ரயேலைச் சார்ந்த யாவரும் 
	ஆகிய நாங்கள், உமக்கு எதிராகச் செய்த துரோகத்தின் பொருட்டு, அருகிலோ தொலையிலோ 
	உள்ள எல்லா நாடுகளுக்கும் உம்மால் இன்றுவரை விரட்டப்பட்டுள்ளோம்.
8.       
	ஆம், ஆண்டவரே! அவமானமே எங்களுக்கும் எங்கள் அரசர்களுக்கும் தலைவர்களுக்கும் 
	தந்தையர்களுக்கும் கிடைத்துள்ளது. ஏனெனில், நாங்கள் உமக்கு எதிராகப் பாவம் 
	செய்தோம். 
9.       எங்கள் தலைவரும் 
	கடவுளுமாகிய உம்மிடத்தில் இரக்கமும் மன்னிப்பும் உண்டு. நாங்களோ உம்மை 
	எதிர்த்துநின்றோம்.
10.       எங்கள் 
	கடவுளாகிய ஆண்டவர் தம் ஊழியர்களான இறைவாக்கினர் மூலம் தம் திருச்சட்டங்களை 
	அளித்து அவற்றின் வழியில் நடக்குமாறு பணித்தார்.
11.       
	நாங்களோ அவரது குரலொளியை ஏற்கவில்லை. இஸ்ரயேலர் யாவரும் உமது திருச்சட்டத்தை 
	மீறி உம் குரலுக்குப் பணிய மறுத்து, விலகிச் சென்றனர். கடவுளின் ஊழியரான 
	மோசேயின் திருச்சட்டத்தில் எழுதப்பட்டபடி, சாபமும் கேடும் எங்கள் தலைமேல் 
	கொட்டப்பட்டன. ஏனெனில், நாங்கள் அவருக்கு எதிராகப் பாவம் செய்தோம்.
12.       
	எங்களுக்கும் எங்களை ஆண்டுவந்த எங்கள் அரசர்களுக்கும் எதிராக அவர் கூறியதை 
	எங்கள்மீது அவர் சுமத்தியுள்ள பெரும் துன்பத்தின் வழியாய் 
	உறுதிப்படுத்தியுள்ளார். ஏனெனில், எருசலேமுக்கு எதிராக நிகழ்ந்ததுபோல் உலகில் 
	வேறெங்கும் நடக்கவே இல்லை. 
13.       
	மோசேயின் திருச்சட்டத்தில் எழுதியுள்ளவாறே, இத்துணைத் துன்பமும் எங்கள்மேல் 
	வந்துள்ளது. ஆயினும், நாங்கள் எங்கள் கொடிய செயல்களை விட்டொழித்து, உமது உண்மை 
	வழியை ஏற்று, ஆண்டவரும் எம் கடவுளுமான உமக்கு உகந்தவர்களாய் நடக்க முயலவில்லை.
	14.       ஆகையால் ஆண்டவர் எங்களுக்கு உரிய 
	தண்டனையைத் தயாராக வைத்திருந்தது எங்கள்மீது சுமத்தினார். ஏனெனில் எங்கள் 
	கடவுளாகிய ஆண்டவர் தாம் செய்யும் செயல்கள் அனைத்திலும் நீதியுள்ளவர். ஆனால், 
	நாங்கள்தான் அவரது குரலுக்குப் பணிய மறுத்தோம்.
15.       
	அப்படியிருக்க, எங்கள் தலைவராகிய கடவுளே! உம் மக்களை நீர் மிகுந்த ஆற்றலோடு 
	எகிப்து நாட்டிலிருந்து மீட்டு, இன்றுவரை உமது பெயருக்குப் புகழ் 
	தேடிக்கொண்டீர். நாங்களோ பாவம் செய்தோம், பொல்லாதன புரிந்தோம். 
16.       
	ஆனால், எம் தலைவரே! உம்முடைய நீதிச் செயல்களுக்கேற்ப உமது நகரமும் உமது 
	திருமலையுமாகிய எருசலேமைவிட்டு உம் சினமும் சீற்றமும் விலகுவதாக! ஏனெனில் 
	எங்கள் பாவங்கள் தந்தையரின் கொடிய செயல்களில் காரணமாக, எருசலேமும் உம் மக்களும் 
	எங்களைச் சுற்றி வாழும் மக்களிடையே நிந்தைப் பொருளாக மாறிவிட்டனர். 
17.       
	ஆகையால், எங்கள் கடவுளே! இப்பொழுது உம் அடியானின் வேண்டுதலையும் 
	விண்ணப்பங்களையும் ஏற்றுக்கொள்ளும். பாழாய்க் கிடக்கிற உமது பயகத்தின்மீது 
	தலைவராகிய உம்மை முன்னிட்டே உமது முகத்தை ஒளிரச் செய்வீராக!
18.       
	என் கடவுளே! செவி சாய்த்துக் கேட்டருளும்: உம் கண்களைத் திறந்து எங்கள் 
	பாழிடங்களையும் உமது பெயர் தாங்கிய நகரையும் நோக்கியருளும். நாங்கள், எங்கள் 
	நேர்மையை நம்பாமல், உமது பேரிரக்கத்தையே நம்பி, எங்கள் மன்றாட்டுகளை உமது 
	முன்னிலையில் சமர்ப்பிக்கிறோம். 
	
19.       என் தலைவரே! கேளும்: என் தலைவரே! 
	செவிகொடுத்துச் செயலாற்றும்: என் கடவுளே! உம்மை முன்னிட்டுக் காலம் 
	தாழ்த்தாதேயும்: ஏனெனில் உமது நகரமும் உம் மக்களும் உமது பெயரையே 
	தாங்கியுள்ளனர். 
20.       நான் இவ்வாறு 
	சொல்லி வேண்டிக் கொண்டு, என் பாவங்களையும் என் இனத்தாராகிய இஸ்ரயேல் மக்களின் 
	பாவங்களையும் அறிக்கையிட்டு, என் கடவுளின் திரு மலைக்காக என் விண்ணப்பங்களை என் 
	கடவுளாகிய ஆண்டவர்முன் சமர்ப்பித்தேன்.
21.       
	இவ்வாறு நான் வேண்டுதல் செய்து கொண்டிருக்கும்பொழுது, முதல் காட்சியில் நான் 
	கண்ட கபிரியேல் என்ற மனிதர் மாலைப் பலிவேளையில் விரைவாய்ப் பறந்து வந்து, 
	என்னைத் தொட்டு என்னிடம் பின்வருமாறு சொன்னார்: 
22.       
	தானியேல்! உனக்கு விவேகத்தையும் மெய்யுணர்வையும் அளிக்க நான் புறப்பட்டு 
	வந்துள்ளேன்.
23.       நீ வேண்டுதல் செய்யத் 
	தொடங்கிய போதே கட்டளை ஒன்று பிறந்தது: நான் அதை உனக்குத் தெரிவிக்க வந்தேன்: 
	ஏனெனில் நீ மிகுதியான அன்புக்கு உரியவன்: ஆதலால் நான் சொல்வதைக் கவனித்து 
	காட்சியின் உட்பொருளை உணர்ந்துகொள். 
24.       
	உன்னுடைய இனத்தவம் உனது புனித நகரும் குற்றங்கள் புரிவதையும் பாவம் செய்வதையும் 
	நிறுத்தி விடுவதற்கும், கொடிய செயல்களுக்கும் கழுவாய் தேடுவதற்கும், முடிவற்ற 
	நீதியை நிலைநாட்டுவதற்கும், திருக்காட்சியையும் இறைவாக்குகளையும் 
	முத்திரையிடுவதற்கும், திருத்பயகத்தைத் திருநிலைப்படுத்துவதற்கும் 
	குறிக்கப்பட்ட கெடு எழுபது வாரங்கள் ஆகும்.
25.       
	ஆகவே, நீ அறிந்து தெளிவுபெற வேண்டியதாவது: எருசலேமை மீண்டும் கட்டி எழுப்புமாறு 
	கட்டளை பிறப்பதற்கும், அரசராகத் திருப்பொழிவு செய்யப்பட்டவர் வருவதற்கும் இடையே 
	உள்ள காலம் ஏழு வாரங்கள் ஆகும். பின்பு சதுக்கங்களும் அகழிசூழ் அரண்களும் 
	அமைத்து அந்நகரத்தை மீண்டும் கட்டியெழுப்ப அறுபத்திரண்டு வாரங்கள் ஆகும். 
	ஆயினும் அது தொல்லை நிறைந்த காலமாய் இருக்கும். 
26.       
	அதன் பிறகு திருப்பொழிவு செய்யப்பட்டவர் குற்றமற்றவராயிருந்தும் கொலை 
	செய்யப்படுவார். படையெடுத்து வரவிருக்கும் அரசனின் குடிமக்கள் நகரையும் 
	பயகத்தையும் அழித்துவிடுவர். பெரும் பிரளயம் போல முடிவு வரும். கடவுளின் 
	ஆணைப்படி இறுதிவரை போரும் பேரழிவுமாய் இருக்கும். 
27.       
	ஒரு வாரம் அவன் பலரோடு உடன்படிக்கை செய்து கொண்டு அரசாள்வான். அந்த வாரத்தின் 
	பாதி கழிந்தபின், பலியையும் காணிக்கையையும் நிறுத்திவிடுவான். திருக்கோவிலின் 
	முனையில் பாழாக்கும் அருவருப்பு வைக்கப்படும். அதை அங்கு வைத்துப் 
	பாழ்படுத்தியவன் கடவுளின் ஆணைப்படி இறுதியில் அழிவுறுவான். 
	
	அதிகாரம் 10. 
	
	
	
1.       
	பாரசீக அரசராகிய சைரசின் மூன்றாம் ஆட்சியாண்டில் பெல்தசாச்சர் என்று 
	பெயரிடப்பட்டிருந்த தானியேலுக்கு ஒரு வாக்கு வெளிப்படுத்தப்பட்டது. அது 
	உண்மையான வாக்கு: அது ஒரு பெரும் தொல்லையைப் பற்றியது. அதைப் புரிந்துகொள்ள 
	முயற்சி செய்தார். அதைப் பற்றிய தெளிவு, காட்சி வாயிலாகக் கிடைத்தது.
2.       
	அந்நாளில் தானியேல் ஆகிய நான் மூன்று வாரங்களாக அழுது கொண்டிருந்தேன். 
3.       அந்த மூன்று வாரம் முழுவதும் நான் 
	சுவையான உணவு அருந்தவில்லை. இறைச்சியோ திராட்சை இரசமோ என் வாயில் படவில்லை: என் 
	தலையில் எண்ணெய்கூடத் தடவிக் கொள்ளவில்லை.
4.       
	முதல் மாதத்தின் இருபத்து நான்காம் நாளன்று நான் திக்¡£சு என்னும் பெரிய 
	ஆற்றின் கரையில் நின்று கொண்டிருந்தேன்.
5.       
	என் கண்களை உயர்த்திப் பார்க்கையில், மெல்லிய பட்டாடை உடுத்திக் கொண்டு தம் 
	இடையில் ஊபாசு நாட்டுத் தங்கக்கச்சை கட்டியிருந்த ஒருவரைக் கண்டேன். 
6.       
	அவரது உடல் பளிங்கு போல் இருந்தது: அவர் முகம் ஒளிவிடும் மின்னலைப்போல் 
	இருந்தது: அவருடைய கண்கள் பொறி பறக்கும் தீப்பந்தங்கள் போலும், கைகளும் 
	கால்களும் மினுமினுக்கும் வெண் கலம் போலும், அவரது பேச்சொலி மக்கள் கூடத்தின் 
	ஆரவாரம் போலும் இருந்தன. 
7.       தானியேல் 
	ஆகிய நான் மட்டுமே இந்தக் காட்சியைக் கண்டேன். என்னுடன் இருந்தவர்கள் அதைப் 
	பார்க்கவில்லை: ஆனால் அவர்கள் மிகுந்த நடுக்கமுறறு ஒளிந்துகொள்ள 
	ஓடிவிட்டார்கள்.
8.       தனித்து விடப்பட்ட 
	நான் மட்டுமே இப்பெரும் காட்சியைக் கண்டேன். நான் வலுவிழந்து போனேன்: என் 
	முகத்தோற்றம் சாவுக்கு உள்ளானவனைப்போல் வெளிறியது. என்னிடம் ஆற்றலே இல்லாது 
	போயிற்று.
9.       அப்போது அவரது பேச்சொலி 
	என் காதில் விழுந்தது. அதைக் கேட்டதும் தரையில் முகம் குப்புற விழுந்து 
	மயக்கத்தில் ஆழ்ந்து கிடந்தேன். 
10.       
	அப்பொழுது ஒரு கை என்னைத் தொட்டது: கைகளையும் முழங்¥ கால்களையும் நான் ஊன்றி 
	எழுந்து நிற்கும்படி செய்தது. ஆயினும், நான் நடுங்கிக் கொண்டே இருந்தேன். 
	11.       அவர் என்னை நோக்கி, மிகவும் 
	அன்புக்குரிய தானியேல்! நான் உனக்குச் சொல்லும் வார்த்தைகளைக் கேள்: நிமிர்ந்து 
	நில். ஏனெனில், உன்னிடம்தான் நான் அனுப்பப்பட்டேன் என்றார். இவ்வாறு அவர் 
	சொன்னவுடன் நடுங்கிக் கொண்டே நான் எழுநது நின்றேன். 
12.       
	அப்பொழுது அவர் என்னைப் பார்த்துக் கூறியது: தானியேல்! அஞ்ச வேண்டாம், 
	உய்த்துணர வேண்டும் என்னும் உள்ளத்தோடு என் கடவுள் முன்னிலையில் நீ உன்னைத் 
	தாழ்த்திக் கொண்ட முதல் நாள் தொடங்கி உன் மன்றாட்டுக் கேட்கப்பட்டு வருகிறது. 
	உன் மன்றாட்டுக் கேற்ப இதோ! நான் வந்துள்ளேன். 
13.       
	பாரசீக நாட்டின் காவலனாகிய பதன் இருபத்தொரு நாள் என்னை எதிர்த்து நின்றான். 
	அங்கே பாரசீக அரசர்களோடு நான் தனித்து விடப்பட்டதால், தலைமைக் காவலர்களுள் 
	ஒருவராகிய மிக்கேல் எனக்குத் துணைசெய்ய வந்தார்.
14.       
	உன் இனத்தார்க்கு இறுதி நாள்களில் நடக்கவிருப்பதை உனக்கு உணர்த்துவதற்காக நான் 
	உன்னிடம் வந்தேன். இந்த காட்சி நிறைவேற இன்னும் நாள்கள் பல ஆகும். 
15.       
	அவர் இந்த வார்த்தைகளை எனக்குச் சொன்னபோது நான் தலைகவிழ்ந்து, தரையை நோக்கி, 
	பேசாதிருந்தேன். 
16.       அப்போது, மானிட 
	மகனின் தோற்றம் கொண்ட ஒருவர் என் உதடுகளைத் தொட்டார். நானும் வாய் திறந்து 
	பேசி, எனக்கு எதிரில் நின்றவரை நோக்க, என் தலைவரே! இந்தக் காட்சியின் காரணமாய் 
	நான் வேதனையுற்றேன். என்னிடம் ஆற்றலே இல்லாது போயிற்று. 
	
17.       என் தலைவருடைய ஊழியனாகிய நான் என் 
	தலைவராகிய உம்மோடு உரையாடுவது எப்படி? ஏனெனில் நான் வலிமை இழந்துவிட்டேன்: என் 
	மூச்சும் அடைத்துக் கொண்டது என்றேன். 
18.       
	அப்பொழுது, மனிதச் சாயல் கொண்ட அவர் மறுபடியும் என்னைத் தொட்டு வலுவூட்டினார்.
	19.       மேலும் அவர், மிகுந்த 
	அன்புக்குரியவனே! அஞ்சாதே: உனக்குச் சமாதானம் உண்டாவதாக! திடங்கொண்டு 
	துணிவாயிரு என்றார். இவ்வாறு அவர் பேசியபோது, எனக்குத் துணிவு உண்டாகி, என் 
	தலைவர் பேசட்டும்: ஏனெனில், நீர் எனக்கு வலுவூட்டினீர் என்றேன். 
20.       
	அப்பொழுது அவர் கூறியது: உன்னிடம் நான் வந்த காரணம் உனக்குத் தெரிகிறதா? 
	இப்பொழுது பாரசீக நாட்டுக் காவலனோடு மீண்டும் போரிடச் செல்கிறேன். நான் அவனை 
	முறியடித்தபின் கிரேக்க நாட்டுக் காவலன் வருவான். 
21.       
	ஆனால் அதற்கு முன் உண்மை மலில் எழுதியுள்ளதை உனக்குத் தெரிவிப்பேன். இவர்களை 
	எதிர்த்துப் போராடுவதில் உங்கள் காவலராகிய மிக்கேலைத் தவிர எனக்குத் துணை 
	நிற்பார் யாருமில்லை. 
	
	அதிகாரம் 11 
	
	
	
1.       
	ஆனால் நான், மேதியனான தாரியுவின் முதல் ஆண்டிலிருந்தே அவனைத் திடப்படுத்தவும் 
	உறுதிப்படுத்தவும் அவனுக்கு அருகில் நின்றேன். 
2.       
	இப்பொழுது, நான் உனக்கு உண்மையை வெளிப்படுத்துகிறேன்: இதோ! இன்னும் மூன்று 
	மன்னர்கள் பாரசீகத்தில் அரியணை ஏறுவார்கள்: நான்காம் அரசன் மற்ற எல்லாரையும் 
	விடப் பெருஞ் செல்வம் படைத்தவனாய் இருப்பான். அவன் தன் செல்வத்தால் வலிமை பெற்ற 
	பிறகு, கிரேக்க அரசுக்கு எதிராக எல்லாரையும் பண்டியெழுப்புவான்.
3.       
	பிறகு வலிமைமிக்க அரசன் ஒருவன் தோன்றி, மிகுதியான ஆற்றலோடு அரசாண்டு, தான் 
	விரும்பியதை எல்லாம் செய்வான். 
4.       
	அவன் உயர்நிலை அடைந்தபின், அவனது அரசு சிதைக்கப்பெற்று, வானத்தின் நான்கு 
	திசையிலும் பிரிக்கப்படும்: ஆயினும் அது அவனுடைய வழிமரபினருக்குத் தரப்படாது. 
	அவனது ஆட்சிக்காலத்திலிருந்த வலிமையும் அதற்கு இராது. ஏனெனில் அவர்களிடமிருந்து 
	அவனுடைய அரசு பறிக்கப்பட்டு வேறு சிலருக்குப் பிரித்துக் கொடுக்கப்படும்.
5.       
	பின்பு தென்திசை மன்னன் வலிமை பெறுவான். ஆயினும் அவனுடைய படைத்தலைவர்களுள் 
	ஒருவன் அவனை விட வலிமை பெற்று ஆட்சி செய்வான்: அவனது அரசும் மிகப் பெரியதாய் 
	விளங்கும். 
6.       சில ஆண்டுகள் 
	சென்றபின், அவர்கள் ஓர் உடன்படிக்கை செய்து கொள்வார்கள்: இந்தச் சமாதான உறவை 
	உறுதிப்படுத்தத் தென்திசை மன்னனின் மகள் வடதிசை மன்னனிடம் வந்து சேர்வாள்: 
	ஆனால் அவளது செல்வாக்கு நீடிக்காது: அவனும் அவனது வழிமரபும் அற்றுப் போவார்கள். 
	அவளும் அவளை அழைத்துவந்தவரும், அவளைப் பெற்றவனும், அவளைக் கைப்பிடித்தவனும் 
	கைவிடப்படுவார்கள். 
	
7.       அந்நாள்களில் அவளுடைய 
	வேர்களிலிருந்து அவனது இடத்தில் ஒரு முளை தோன்றும். அவ்வாறு தோன்றுபவன் பெரும் 
	படையுடன் வந்து, வடதிசை மன்னனின் கோட்டைக்குள் புகுந்து அவர்களைத் தாக்கி 
	முறியடிப்பான். 
8.       அவர்களுடைய 
	தெய்வங்களையும் சிலைகளையும் விலையுயர்ந்த வெள்ளி, பொன் பாத்திரங்களையும் 
	எகிப்துக்குக் கொண்டு போவான்: சில காலத்திற்கு வடதிசை மன்னன் மேல் 
	படையெடுக்காமல் இருப்பான்.
9.       பின்பு, 
	வடதிசை மன்னன் தென்திசை மன்னனது நாட்டின்மேல் படையெடுத்து வருவான்: ஆனால் அவன் 
	தன் நாட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும். 
10.       
	பிறகு அவனுடைய மைந்தர்கள் திரளான, வலிமைமிக்க படையைத் திரட்டிக்கொண்டு 
	வருவார்கள்: அவர்கள் பெருவெள்ளம் போலத் திடீரெனப் பாய்ந்துவந்து மீண்டும் 
	தென்னவனின் கோட்டைவரை சென்று போரிடுவார்கள். 
11.       
	அப்பொழுது தென்திசை மன்னன் வெகுண்டெழுந்து புறப்பட்டுப்போய் வடதிசை மன்னோடு 
	போரிடுவான். வடநாட்டான் பெரியதொரு படை திரட்டியிருந்தும், அப்படை பகைவன் கையில் 
	அகப்படும். 
12.       அப்படையைச் 
	சிறைப்பிடித்ததால் தென்னவன் உள்ளம் இறுமாப்புக் கொள்ளும். பல்லாயிரம் பேரை அவன் 
	வீழ்த்துவான்: ஆயினும் அவன் முழு வெற்றி அடையமாட்டான். 
13.       ஏனெனில் வடதிசை மன்னன் முன்னதைவிடப் 
	பெரிய படையை மீண்டும் திரட்டுவான்: சில ஆண்டுகளுக்குப் பிறகு அவன் திடீரெனப் 
	பெரிய படையோடும் மிகுந்த தளவாடங்களோடும் தாக்க வருவான்.
14.       
	அக்காலத்தில் தென்திசை மன்னனுக்கு எதிராகப் பலர் எழும்புவர். உன் சொந்த 
	இனத்தாரின் மக்களுள் வன்முறையில் ஈடுபடுகிறவர்களும் காட்சியை நிறைவேற்றும்படி 
	எழுப்புவார்கள்: ஆனால் அவர்கள் தோல்வியுறுவார்கள். 
15.       
	வடதிசை மன்னன் வந்து முற்றுகையிட்டு நன்கு அரண் செய்யப்பட்ட நகரத்தைக் 
	கைப்பற்றுவான்: தென்னகப் படைகள் எதிர்க்க வலிமையற்றுப் போகும்: அப்படைகளின் 
	தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களும் எதிர்த்து நிற்க முடியாது போவார்கள்: ஏனெனில் 
	அவர்களிடம் வலிமையே இராது. 
16.       வடதிசை 
	மன்னன் தென்திசை மன்னனுக்கு எதிராகப் புறப்பட்டுவந்து தன் மனம் போலச் செய்வான்: 
	அவனை எதிர்த்து நிற்பவன் எவனும் இல்லை: சிறப்புமிக்க நாட்டினுள் நுழைந்து அது 
	முழுவதையும் தன் ஆட்சிக்கு உட்படுத்துவான். 
17.       
	அவன் முழு அரசின் வலிமையோடு படையெடுக்கத் திட்டமிடுவான்: ஆகவே தென்திசை 
	மன்னனோடு நட்புக் கொண்டாடுவது போல நடித்து, அவனை வஞ்சகமாய் 
	ஒழித்துக்கட்டும்படித் தன் புதல்வியருள் ஒருத்தியை அவனுக்கு மணம் செய்து 
	கொடுப்பான்: ஆனால் அவன் நினைத்து நிறைவேறாது: அந்த நாடும் அவனுக்குச் 
	சொந்தமாகாது. 
	
18.       பிறகு அவன் தன் கவனத்தைக் கடலோர 
	நாடுகள் மேல் திருப்பி, அவற்றுள் பலவற்றைப் பிடிப்பான்: ஆனால் படைத் தலைவன் 
	ஒருவன் அவன் திமிரை அடக்கி அத்திமிர் அவனையே அழிக்கும்படி செய்வான். 
19.       
	ஆகையால் அவன் தன் சொந்த நாட்டின் கோட்டைக்குள் திரும்பிவிட முடிவுசெய்வான்: 
	ஆனால் அவன் தடுமாறி விழுந்து அடையாளமின்றி அழிந்து போவான். 
20.       
	நாட்டின் செழிப்பான பகுதிகளுக்கு வரிவசூழிப்பவனை அனுப்பும் வேறொருவன் 
	அவனுக்குப் பதிலாகத் தோன்றுவான். அவன் எவரது சினத்தின் காரணமாகவோ போர் முனையிலோ 
	சாகாமல், தானே மடிந்து போவான். 
21.       
	அவனது இடத்தில் இழிந்தவன் ஒருவன் எழும்புவான்: அவனுக்கு எவ்வித அரசுரிமையும் 
	கிடையாது: ஆயினும் எதிர்பாராத நேரத்தில் வந்து முகப்புகழ்ச்சியால் அரசைக் 
	கைப்பற்றிக் கொள்வான். 
22.       அவனை 
	எதிர்த்துப் போர் புரியும் படை தோல்வியடைந்து நசுக்கப்படும். அவ்வாறே 
	உடன்படிக்கை செய்து கொண்ட தலைவனும் ஒழிக்கப்படுவான். 
23.       
	உடன்படிக்கை செய்து கெண்ட பிறகும் அவன் வஞ்சகமாய் நடந்துகொள்வான். அவன் 
	குடிமக்கள் சிலரே ஆயினும், அவன் வலிமை பெற்று விளங்குவான். 
24.       
	செல்வச் சிறப்புமிக்க நகரங்களுள் அவன் முன்னெச்சரிக்கை இன்றி நுழைந்து, தன் 
	தந்தையரும் முன்னோரும் செய்யாததை எல்லாம் செய்வான்: அந்நகரங்களில் கொள்ளையடித்த 
	பொருள்களையும் கைப்பற்றிய செல்வங்களையும் வாரியிறைப்பான்: அந்நகரங்களின் 
	அரண்களைப் பிடிக்கப் பல்வேறு வழிமுறைகளைக் கையாள்வான்: ஆயினும் இந்த நிலை 
	சிறிது காலமே நீடிக்கும். 
25.       பிறகு 
	அவன் தன் வலிமையை நம்பித் தென்திசை மன்னனுக்கு எதிராகப் பெரும்படையோடு போரிடத் 
	துணிந்து செல்வான். அப்பொழுது, தென்திசை மன்னனும் வலிமைமிக்க பெரும் படையோடு 
	வந்து போர்முனையில் சந்திப்பான்: ஆனால் அவனுக்கு எதிராகச் சதித்திட்டங்கள் 
	செய்யப்பட்டிருந்தபடியால், அவன் நிலைகுலைந்து போவான். 
26.       
	அவனோடு விருந்துணவு உண்டவர்களே அவனுக்கு இரண்டகம் செய்வார்கள். அவனுடைய படை 
	முறியடிக்கப்படும்: பலர் கொலையுண்டு அழிவார்கள்: 
	
27.       இரு அரசர்களும் ஒருவருக்கொருவர் 
	தீங்கு செய்ய நினைப்பார்கள்: ஒரே பந்தியில் இருந்து கொண்டே பொய் பேசுவார்கள்: 
	ஆயினும் அது அவர்களுக்குப் பயன் தராது: ஏனெனில், முடிவு குறிக்கப்பட்ட 
	காலத்தில் வரவிருக்கின்றது. 
28.       
	வடநாட்டு மன்னன் மிகுந்த கொள்ளைப் பொருள்களோடு தன் நாட்டுக்குத் திரும்பிப் 
	போவான். அவனுடைய உள்ளம் புனிதமான உடன்படிக்கைக்கு எதிராக இருக்கும். தான் 
	நினைத்ததைச் செய்துமுடித்தபின் அவன் தன் நாட்டுக்குத் திரும்புவான். 
29.       
	குறிக்கப்பட்ட காலத்தில் அவன் மறுபடியும் தென்னாட்டுக்கு வருவான்: ஆனால் 
	இம்முறை முன்புபோல் இராது. 
30.       
	அவனுக்கு எதிராக இத்தியர்கள் கப்பல்களில் வருவார்கள்: அவனோ அவர்களுக்கு அஞ்சிப் 
	பின்வாங்கிப் புறமுதுகிட்டு ஓடுவான்: அவன் கடுஞ்சினமுற்று புனித 
	உடன்படிக்கைக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுப்பான்: மீண்டும் வந்து, புனித 
	உடன்படிக்கையைக் கைவிட்டவர்கள்மேல் தன் கவனத்தைத் திருப்புவான். 
31.       
	அவனுடைய படை வீரர்கள் வந்து திருக்கோவிலையும் கோட்டையையும் தீட்டுப்படுத்தி, 
	அன்றாடப் பலியை நிறுத்திவிட்டு, நடுங்கவைக்கும் தீட்டை அங்கே அமைப்பார்கள். 
	32.       உடன்படிக்கையை மீறுகிறவர்களை அவன் 
	பசப்புமொழிகளால் தன் பக்கம் ஈர்ப்பான்: ஆனால் தங்கள் கடவுளை அறிந்திருக்கும் 
	மக்கள் திடம் கொண்டு செயலில் இறங்குவார்கள்.
33.       
	ஞானமுள்ள பலர் மக்களுக்கு அறிவூட்டுவார்கள்: சில காலம் அவர்கள் வாளாலும் 
	நெருப்பாலும் சிறைத் தண்டனையாலும் கொள்ளையினாலும் மடிவார்கள்.
34.       
	அவர்கள் வீழ்ச்சியுறும்போது, அவர்களுக்கு உதவி செய்ய ஒருசிலர் இருப்பர்: 
	ஆயினும் அவர்களது துணைக்கு வருபவர் தன்னல நோக்குடனே உதவி செய்வர். 
35.       
	ஞானிகள் சிலர் கொல்லப்படுவர். இதன்மூலம் மக்கள் புடம்போடப்பட்டு 
	பய்மைப்படுத்தப்பட்டு வெண்மையாக்கப்பெறுவர். இறுதியாக, குறிக்கப்பட்ட 
	முடிவுகாலம் வரும். 
36.       அரசன் தன் 
	மனம்போன போக்கில் நடந்துகொள்வான். அவன் தன்னையே உயர்த்திக்கொள்வான்: எல்லாத் 
	தெய்வத்திற்கும் மேலாகத் தன்னையே பெருமைப்படுத்திக் கொண்டு 
	தெய்வங்களுக்கெல்லாம், இறைவனானவர்க்கே எதிராகப் பழிச்சொற்களைப் பேசுவான். 
	இறைவனின் சினம் நிறைவேறும் நாள் வரும்வரை அவன் வாழ்க்கை வளம்பெறும்: ஏனெனில், 
	குறிக்கப்பட்டது நடந்தேற வேண்டும். 
37.       
	அவன் தன் தந்தையர் வழிபட்ட தெய்வங்களையோ வேறெந்தத் தெய்வத்தையோ 
	பொருட்படுத்தாமல், அவற்றுக்கெல்லாம் மேலாகத் தன்னையே உயர்த்திக் கொள்வான். 
	38.       அவற்றிற்குப் பதிலாக, அரண்களின் 
	தெய்வத்தை மட்டும் வணங்குவான். தன் தந்தையர் அறிந்திராத அந்தத் தெய்வத்தை அவன் 
	பொன்னாலும் வெள்ளியாலும் மாணிக்கக் கல்லாலும் விலையுயர்ந்த பொருள்களாலும் 
	பெருமைப்படுத்தி வழிபடுவான். 
39.       தன் 
	வலிமைமிக்க கோட்டைகளின் காவலர்களாக, அயல் தெய்வத்தை வழிபடும் மக்களை 
	நியமிப்பான். அவனை அரசனாக ஏற்றுக்கொண்டவர்களைச் சிறப்பித்து, மக்களின் 
	அதிகாரிகளாக நியமித்து, பணத்திற்காக நிலத்தைப் பிரித்துக் கொடுப்பான்.
40.       
	முடிவுக்காலம் வரும் போது தென்திசை மன்னன் அவனைத் தாக்குவான்: வடதிசை மன்னனும் 
	தேர்ப்படை, குதிரை வீரர்கள், கப்பற்படை ஆகியவற்றுடன் சுழற்காற்றைப் போல் அவனை 
	எதிர்த்து வருவான்: அவன் நாடுகளுக்குள் வெள்ளம்போல் பாய்ந்து அழிவு 
	விளைவித்துக்கொண்டே போவான். 
41.       பிறகு 
	அவன் சிறப்புமிக்க நாட்டினுள் நுழைவான். பல்லாயிரக் கணக்கானோர் அழிக்கப்படுவர்: 
	ஆனால் ஏதோமியர், மோவாபியர், அம்மோனியரின் தலைவர்கள் ஆகியோர் மட்டும் 
	தப்பித்துக்கொள்வர். 
42.       அவன் மற்ற 
	மாநிலங்கள் மேலும் தன் கையை ஓங்குவான். 
43.       
	அவன் கைக்கு எகிப்து நாடும் தப்பாது. அங்குள்ள பொன், வெள்ளி முதலிய 
	செல்வங்களையும், விலையுயர்ந்த எல்லாப் பொருள்களையும் கைப்பற்றிக்கொள்வான். 
	லிபியரும் எத்தியோப்பியரும் அவன் பின்னே செல்வார்கள். 
44.       
	ஆனால் கிழக்கிலும் வடக்கிலும் இருந்து வரும் செய்திகள் அவனைக் கலங்கச்செய்யும். 
	பலரைக் கொன்றொழிப்பதற்கு அவன் பெரும் சீற்றத்துடன் புறப்பட்டுச் செல்வான். 
	45.       பிறகு கடலுக்கும் மாட்சிமிகு 
	திருமலைக்கும் இடையே தன் அரச கூடாரங்களை அமைப்பான்: ஆயினும் உதவி செய்வார் 
	யாருமின்றி அவன் தன் முடிவைக் காண்பான். 
	
	அதிகாரம் 12 
	
	
	
1.       
	அக்காலத்தில் உன் இனத்தார்க்குத் தலைமைக் காவலரான மிக்கேல் எழும்புவார். 
	மக்களினம் தோன்றியது முதல் அக்காலம் வரை இருந்திராத துன்ப காலம் வரும். 
	அக்காலத்தில் உன் இனத்தார் விடுவிக்கப்படுவர். மலில் யார் யார் பெயர் 
	எழுதப்பட்டுள்ளதோ, அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள். 
2.       
	இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர்: அவருள் சிலர் 
	முடிவில்லா வாழ்வு பெறுவர்: வேறு சிலரோ வெட்கத்திற்கும் முடிவில்லா இழிவுக்ும் 
	உள்ளாவர். 
3.       ஞானிகள் வானத்தின் 
	பேரொலியைப் போலவும், பலரை நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண்மீன்களைப் போலவும், 
	என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசித் திகழ்வர். 
4.       
	தானியேல்! நீ குறித்த முடிவுகாலம் வரும்வரை இந்த வார்த்தைகளை மூடி வைத்து இந்த 
	மலை முத்திரையிட்டுவை. உலகில் நிகழ்வதைப் பலர் தெரிந்து கொள்ள வீணிலே 
	முயற்சிசெய்வர். 
5.       அப்பொழுது, 
	ஆற்றுக்கு இக்கரையில் ஒருவரும் அக்கரையில் ஒருவருமாக இருவர் நிற்பதைத் தானியேல் 
	ஆகிய நான் கண்டேன். 
6.       அப்பொழுது, 
	மெல்லிய பட்டாடை உடுத்தி ஆற்றுநீரின்மேல் நின்றுகொண்டிருந்த மனிதரை நோக்கி, 
	இந்த விந்தைகள் எப்பொழுது முடிவுக்கு வரும்? என்று கேட்டேன். 
7.       
	அப்பொழுது, மெல்லிய பட்டாடை உடுத்தி ஆற்று நீரின்மேல் நின்றுகொண்டிருந்த அந்த 
	மனிதர் தம் இரு கைகளையும் வானத்தை நோக்கி உயர்த்தி, இன்னும் மூன்றரை ஆண்டுகள் 
	கடந்தபின், புனித மக்களின் ஆற்றலைச் சிதறடிப்பது முடிவுறும் வேளையில், இவை 
	யாவும் நிறைவேறும் என்றும் வாழ்பவரின் பெயரால் ஆணையிட்டுக் கூறியதைக் கேட்டேன். 
	8.       நான் அதைக் கேட்டும் அதன் பொருளை 
	அறிந்து கொள்ளவில்லை. அப்பொழுது அவரை நோக்கி, என் தலைவரே! இவற்றிற்குப் பிறகு 
	என்ன நடக்கும்? என்று கேட்டேன்.
9.       
	அதற்கு அவர், தானியேல்! நீ போகலாம்: குறிக்கப்பட்ட நாள் வரையில் இந்தச் சொற்கள் 
	மறைக்கப்பட்டு முத்திரையிடப்பட்டிருக்கும். 
10.       
	பலர் தம்மைத் பய்மைப்படுத்திக் கொள்வர்: புடம்போடப்படுவர்: தம்மை 
	வெண்மையாக்கிக் கொள்வர். பொல்லாதவர் தீய வழியில் நடப்பர்: அவர்கள் அதை உணரவும் 
	மாட்டார்கள்: ஆனால் ஞானிகள் உணர்ந்து கொள்வார்கள். 
11.       
	அன்றாடப் பலி நிறுத்தப்பட்டு நடுங்கவைக்கும் தீட்டு அமைக்கப்படும் காலம்வரை 
	ஆயிரத்து இருமற்றுத் தொண்ணு¡று நாள் செல்லும். 
12.       
	ஆயிரத்து முந்மற்று முப்பத்தைந்து நாள்வரை காத்திருப்பவரே பேறு பெற்றவர். 
	13.       நீயோ தொடர்ந்து வாழ்வை முடி: நீ 
	இறந்து அமைதி பெறுவாய்: முடிவு காலம் வந்தவுடன் உனக்குரிய பங்கைப் பெற்றுக் 
	கொள்ள நீ எழுந்து வருவாய் என்றார்.