Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

 Home > Spirituality & the Tamil Nation  > திருவிவிலியம் - பழைய ஏற்பாடு > புத்தகம் 1 - தொடக்கநூல் > புத்தகம் 2 - விடுதலைப் பயணம் > புத்தகம் 3 - லேவியர் > புத்தகம் 4. எண்ணிக்கை > புத்தகம் 5. இணைச் சட்டம் > புத்தகம் 6. யோசுவாபுத்தகம் 7. நீதித்தலைவர்கள் புத்தகம் 8. ரூத்து > புத்தகம் 9. சாமுவேல் - முதல் நூல் >  புத்தகம் 10. சாமுவேல் - இரண்டாம் நூல் > புத்தகம் 11. அரசர்கள் - முதல் நூல் > புத்தகம் 12. அரசர்கள் - இரண்டாம் நூல் > புத்தகம் 13 - குறிப்பேடு - முதல் நூல் > புத்தகம் 14  - குறிப்பேடு - இரண்டாம் நூல் > புத்தகம் 15 - எஸ்ரா > புத்தகம் 16 -  நெகேமியா > புத்தகம் 17 - எஸ்தர் > புத்தகம் 18 - யோபு > புத்தகம் 19 - திருப்பாடல்கள் > புத்தகம் 20 - நீதிமொழிகள் > புத்தகம் 21 - சபை உரையாளர் &  புத்தகம் 22 - இனிமைமிகுபாடல் > புத்தகம் 23 - எசாயாபுத்தகம் 24 - எரேமியா >  புத்தகம் 25 - புலம்பல் > புத்தகம் 26 - எசேக்கியேல் > புத்தகம் 27 - தானியேல் > புத்தகம் 28 - ஒசாயா > புத்தகம் 29 (யோவேல்); 30 (ஆமோஸ்), 31(ஒபதியா); புத்தகம் 32 (யோனா); 33 (மீக்கா); 34 (நாகூம்) புத்தகம் 35 (அபகூக்கு); 36 (செப்பனியா); 37 - ஆகாய் & புத்தகம் 38 (செக்கரியா) > புத்தகம் 39 (மலாக்கி), புத்தகம் 40 (தோபித்து), புத்தகம் 41 (யூதித்து) புத்தகம் 42 (எஸ்தா(கி)) & புத்தகம் 43 (சாலமோனின் ஞானம்) > புத்தகம் 44 (சீராக்கின் ஞானம்) & புத்தகம் 45 (பாரூக்கு > புத்தகம் 46 (தானியேல் இணைப்புகள்), 47 (மக்கபேயர் - முதல் நூல்) 48 -மக்கபேயர் - இரண்டாம் நூல்


 

Holy Bible - Old Testament
Book 10. Samuel-II

விவிலியம் - பழைய ஏற்பாடு
புத்தகம் 10. சாமுவேல் - இரண்டாம் நூல்


Acknowledgements: Our sincere thanks to Rev.Fr. Adaikalarasa, SDB of the Don Bosco Mission, Madurai for providing us with the "bamini" Tamil font e-version of this work and for his help in proof-reading of the TSCII version.  PDF and Web versions Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland © Project Madurai 2006. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/  You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.



அதிகாரம் 1.


1.     சவுல் இறந்தபின், அமலேக்கியரைத் தோற்கடித்து திரும்புகையில் தாவீது சிக்லாவில் இரண்டு நாள் தங்கினார்.
2.     மூன்றாம் நாள், சவுலின் பாசறையிலிருந்து கிழிந்த ஆடைகளோடும் ஒருவன் வந்தான். அவன் தாவீதிடம் வந்ததும், தரையில் வீழ்ந்து வணங்கினான்.
3.     நீ எங்கிருந்து வருகிறாய்? என்று தாவீது அவனை வினவ, நான் இஸ்ரயேல் பாசறையிலிருந்து தப்பி வந்துவிட்டேன் என்று அவன் பதில் கூறினான்.
4.     என்ன நடந்தது? என்னிடம் சொல், என்று தாவீது கேட்க, அவன் வீரர்கள் போரினின்று ஓடிவிட்டனர்: அவர்களுள் பலர் வீழ்ந்து மடிந்து விட்டனர்: சவுலும் அவருடைய மகன் யோனத்தானும் இறந்துமடிந்துவிட்டனர் என்று கூறினான்.
5.     சவுலும் அவனுடைய மகன் யோனத்தானும் இறந்துவிட்டனர் என்று உனக்கு எப்படி தெரியும்? என்று தன்னிடம் பேசிக் கொண்டிருந்த இளைஞனிடம் தாவீது கேட்டார்.
6.     அதற்கு அந்த அளைஞன் நான், தற்செயலாக கில்போவா மலையில் இருந்தேன். சவுல் தன் ஈட்டியின் மீது சாய்ந்து கொண்டிருந்தார். அப்போது தேர்களும் குதிரை வீரர்களும் அவரை நெருங்கிக் கொண்டிருந்தனர்.
7.     அவர் பின்னால் திரும்பிய போது என்னை பார்த்து கூப்பிட்டார், இதோ இருக்கிறேன் என்று நான் கூறினேன்.
8.     யார் நீ? என்று அவர் என்னை வினவ, நான் ஓர் அமலேக்கியன் என்று பதிலளித்தான்.
9.     என்மீது நின்று, என்னைக் கொல், ஏனெனில் நான் மரணவேதனையில் நான் சிக்கியுள்ளேன். ஆனால் என் உயிர் இன்னும் ஊசலாடிக்கொண்டுயிருக்கிறது என்று அவர் என்னிடம் கூறினார்.
10.     நான் அவர் மீது நின்று அவரைக் கொன்றேன். ஏனெனில் விழுந்த பின்பு அவர் பிழைக்கமாட்டார் என நான் அறிவேன். அவர் தலையிலிருந்த மகுடத்தையும் பையிலிருந்த காப்பையும் எடுத்துக் கொண்டு, உம்மிடம் வந்துள்ளேன் என்று கூறினார்.
11.     தாவீது தம் ஆடைகளை பற்றிக் கிழித்தார். அவரோடு இருந்தவர்களும் அவ்வாறே செய்தனர்.
12.     சவுலுக்காகவும் அவருடைய மகன் யோனத்தானுக்காகவும் ஆண்டவரின் மக்களுக்காகவும் இஸ்லயேல் வீட்டாருக்காகவும் அவர்கள் அழுது புலம்பி மாலை வரை நோன்பு இருந்தார்கள். ஏனெனில் அவர்கள் வாளால் மடிந்துவிட்டார்க்ள.
13.     தாவீது தமக்கு செய்தி கொண்டு வந்த இளைஞனிடம், நீ எங்கிருந்து வருகிறாய்? என்று மீண்டும் வினவ, நான் ஒரு வேற்றினத்தான், அமலேக்கியன் என்று மறுமொழிக் கூறினான்.
14.     ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரைக் கையோங்கிக் கொலை செய்ய நீ அஞ்சாதது ஏன்? என்று தாவீது அவனைக் கேட்டார்.
15.     பின்பு தாவீது இளைஞன் ஒருவனைக் கூப்பிட்டுபோ, அவனை வெட்டு என்றார். அந்த இளைஞன் அவனை வெட்டி வீழ்த்த, அவன் இறந்தான்.
16.     இரத்தம் உன் தலைமேல் இருக்கட்டும். ஏனெனில் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரை நான் கொன்றேன் என்ற உன் வாயே எனக்கு சான்று சொல்லிவிட்டது என்று தாவீது அவனை நோக்கி கூறினார்.
17.     பிறகு தாவீது சவுலையும் அவருடைய மகள் யோனத்தானையும் குறித்து இரங்கற்பா ஒன்ற பாடினார்.
18.     யூதாவின் மக்களுக்கும் இது கற்ப்பிக்கப்பட வேண்டும் என்ற யாசாரின் நூலில் எழுதப்பட்டுள்ள வில்லலின் பாடல் :
19.     இஸ்ரயேல்! உனது மாட்சி உனது மலைகளிலே மாண்டு கிடக்கிறதா! மாவீரர் எவ்வாறு மடிந்தார்!
20.     காத்தில் இதைச் சொல்ல வேண்டாம்: அஸ்கலோன் பகுதிகளில் இதை அறிவிக்கப்பட வேண்டாம்: ஏனெனில், பெலிஸ்தியரின் மனைவிகள் அகமகிழக்கூடாது: விருத்தசேதனமற்றோரின் புதல்வியர் ஆர்ப்பரிக்கக்கூடாது.
21.     கில்போவா மலைகளே! பனியோ மழையோ உம்மீது பொழியாதிருப்பதாக! வயல்கள் முதற்கனிகளை தராதிருப்பனவாக! ஏனெனில் வீரர்கள் கேடயங்கள் தீட்டப்பட்டனவே! சவுலின் கேடயங்கள் எண்ணெயால் மெருகு பெறாதே!
22.     வீழ்த்தப்பட்டோரின் இரத்தத்தினின்றும் வீரர்களின் கொழுப்பினின்றும் யோனத்தானின் அம்பு பின் வாங்கியதும் இல்லை!
23.     சவுல்! யோனத்தான்! அன்புடையார், அருள்வுடையார! வாழ்விலும் சாவிலும் இணைப்பிரியார்! கழுகினும் அவர்கள் விரைந்து செல்வார்! அரியினும் அவர்கள் வலிமைமிக்கோர்!
24.     இஸ்ரயேல் புதல்வியரே! சவுலுக்காக அழுங்கள்! செந்நிற மென்துகிலால் உங்களை உடுத்தியவர் அவரே! பொன்னின் நகைகளினால் உம் உடைகளை ஒளிரச் செய்தாரே!
25.     போர் முனையில் வீரர் எங்ஙனம் வீழ்த்தபட்டனர்!உன் மலைகளிலே யோனத்தான் மாண்டு கிடக்கின்றான்!
26.     சகோதரன் யோனத்தான்! உனக்காக என் உள்ளம் உடைந்து போனது! எனக்கு உவகை அளித்தவன் நீ! என் மீது அளித்த பேரன்பை என்னென்பேன்! அது மகளிரின் காதலை மிஞ்சியது அன்றோ!
27.     மாவீரர் எவ்வாறு மடிந்தனர்! போர்க்கலன்கள் எங்ஙனம் அழித்தன!

அதிகாரம் 2.


1.     இதன்பின் தாவீது, நான் யூதாவின் நகருக்கு ஏதேனும் ஒன்றிற்கு செல்லட்டுமா? என்று ஆண்டவரிடம் கேட்டார். செல் என்றார் ஆண்டவர். எங்கு செல்லலாம்? என்று தாவீது மீண்டும் வினவ, எபிரான் என்று ஆண்டவர் மீண்டும் பதிலளித்தார்.
2.     ஆகவே தாவீது தம் இரு மனைவியரான இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமுடனும், கர்மேலைச் சார்ந்த நாபாலின் கைம்பெண்ணான அபிகாயிலுடனும் அங்கு சென்றார்.
3.     தம்மோடு இருந்த ஆள்களையும் அவரது குடும்பத்தினரோடு, தாவீது அங்கே கூட்டி வந்தார். அவர்கள் எபிரோன் நகர்களில் குடியேறினர்.
4.     யூதாவின் மக்கள் வந்து, தங்கள் குலத்தின் அரசராக தாவீதை திருப்பொழிவு செய்தார். யாபோசு கிலயாதின் ஆள்கள் சவுலை அடக்கம் செய்தார்கள். என்று அவர் தாவீதிடம் கூறினர்.
5.     யாபேசு கிலயாதின் ஆள்களுக்கு தாவீது தூதுனுப்பி, நீங்கள் உங்கள் தலைவர் சவுல் மீது அன்புகாட்டி அவரை அடக்கம் செய்தீர்கள். ஆண்டவரின் ஆசி பெறுவீர்களாக!
6.     ஆண்டவர் உங்களுக்கு நிலையான அன்பும் அடக்கமும் காட்டுவாராக! நீங்கள் இவவாறு செய்ததால் நானும் உங்களுக்கு நன்மை செய்வேன்!
7.     வலிமைப் பெற்ற வீரர்களாக திகழுங்கள்! உங்கள் தலைவர் சவுல் இறந்துவிட்டார்: எனினும் யூதா குலத்தார் தங்கள் அரசனாக என்னைத் திருப்பொழிவு செய்துள்ளனர் என்று கூறினார்.
8.     இதற்கிடையில் சவுலின் படைத்தலைவனாகிய நேரின் மகன் அப்பேனர் சவுலின் மகன் இஸ்பொசேத்தை மகனயிமுக்கு அழைத்துச் சென்று
9.     கிலயாது, அசூரி, இஸ்ரியேல், எப் ராயிம், பென்யமின் மேலும் அனைத்து இஸ்ரயேல் மேலும் அவனை அரசனாக்கினான்.
10.     சவுலின் மகன் இஸ்பொசத்து இஸ்ரயேல் மீது அரசனாய் தொடங்கிய போது அவனுக்கு வயது நாற்பது. இரண்டு ஆண்டு அவன் அரசனாய் இருந்தான். ஆனால் யூதா குலமோ தாவீதை பின்பற்றியது.
11.     தாவீது எபிரோனில் யூதா குலத்தின் மீது ஆட்சி புரிந்த காலம் ஏழு ஆண்டுகளும் ஆறு மாதங்களுமே.
12.     நேரின் மகன் அப்னேரும் சவுலின் மகன் இஸ்பொசத்தின் பணியாளர்களும் மகனயிமியிலிருந்து புறப்பட்டுக் கிபயோனுக்குச் சென்றனர்.
13.     செரூயாவின் மகன் யோவாபும் தாவீதின் பணியாளர்களும் புறப்படடுச் சென்று அவர்களைக் கிபயோன் குளத்தருகே எதிர் கொண்டனர். ஒரு சாரார் இப்பக்கமும் மறுசாரார் அப்பக்கமும் குளத்தின் அருகே அமர்ந்தனர்.
14.     இளைஞர்கள் எழுந்து நமக்கு முன்பு வாள் போர் செய்யட்டும் என்று அப்னேர் யோவாபிடம் கூறினார். அவர்கள் அவ்வாறே செய்யட்டும் என்று யோவாபு கூறினான்.
15.     பென்யமின் மற்றும் சவுலின் மகன் இஸ்பொசேத்து சார்பில் பன்னிருவரும், தாவீதின் பணியாளர் பன்னிருவரும் எழுந்து வந்தனர்.
16.     ஒவ்வொருவனும் தன் எதிரியின் தலையைப் பிடித்துக் கொண்டு அவனது விலாவில் வாளை ஊடுருவினான். இருவரும் ஒன்றாக மடிந்தனர். அந்த இடத்தை எல்காத் அட்சூரிம் என்று அழைத்தனர்.
17.     போர் அன்று மிகக் கடுமையாக உருவெடுத்தது, அப்னேரும் இஸ்ரயேல் ஆள்களும் தாவீதின் பணியாளர்கள் முன் முறியடிக்கப்பட்டனர்.
18.     அங்கே செரூயாவின் புதல்வர் யோவாபு, அபிசாய், அசாவேல் ஆகிய மூவரும் இருந்தனர். அசாவேல் காட்டு மான் போல் வேகமாக ஓடக் கூடியவன்.
19.     அசாவேல் அப்னோரை பின் தொடர்ந்து, வலமோ, இடமோ விலகாமல் துரத்தினான்.
20.     அப்னேர் பின்னால், திரும்பி அசாவேல் நீயா? என்று கேட்டான் நான் தான் என்று அவன் பதில் கூறினான்.
21.     வலமோ இடமோ விலகி இளைஞன் ஒருவனை பிடித்து, அவன் உடைமைகளை பிடுங்கிக் கொள் என்று அப்னேர் அசாவேலிடம் கூறினான். ஆனால் அசாவேலுக்கு அவனை பின்தொடர்வதிலிருந்து விலகிவிட மனம் இல்லை.
22.     என்னை பின்தொடர்வதிலிருந்து விலகி விடு. நான் உன்னைக் குத்தி வீழ்த்த வேண்டும்? உன் சகோதரன் யோவாபுக்கு நான் எவ்வாறு முகத்தைக் காட்டுவேன்? என்று மீண்டும் அப்னேர் அசாவேலிடம் கூறினான்.
23.     ஆனால் அசாவேல் அதைக் கேட்காமல் தொடர்ந்தான் ஆகவே அப்னேர் அவனை ஈட்டியின் முனையால் அவன் வயிற்றில் குத்த, அது அவனை பின்னாக ஊடுருவியது. அந்த இடத்திலேயே அவன் விழுந்து இறந்தான். அசாவேல் விழுந்து இறந்த இடத்திற்கு வந்த அனைவரும் நிலைகுலைந்து நின்றனர்.
24.     பின் யோவாபுக்கு அபிசாயும் அப்னேரைப் பின் தொடர்ந்தனர். கிபயோன் பாலைநிலப் பாதையில் கீகுக்கு முன்பாக அம்மா மலையை அவர்கள் வந்தடைந்த போது கதிரவன் மறைந்துக் கொண்டிருந்தான்.
25.     அப்போது பென்யமின் ஆள்கள் அப்னேருக்கு பின் ஒரே படையாக நின்று ஒரு குன்றின் உச்சியில் நின்றனர்.
26.     அப்னேர் யோவாபைக் கூப்பிட்டு, வாளுக்கு இரை கொடுக்க வேண்டுமா? முடிவு கசப்பாக இருக்கும் நீ அறிவாயா? தங்கள் சகோதரர்களை பின் தொடராமல் திரும்பச் செல்லுமாறு மக்களிடம் நீ சொல்ல மாட்டாயோ? என்று கூறினான்.
27.     அதற்கு யோவாபு வாழும் கடவுள் மேலும் ஆணை! நீ பேசாதிருந்தால், காலையிலேயே தங்கள் சகோதரர்களை பின் தொடராமல் மக்கள் விலகியிருப்பார்கள் என்று கூறி,
28.     எக்காளம் ஊதினான். அனைத்து மக்களும் நின்றனர். அதற்கு மேல் அவர்கள் இஸ்ரயேலை பின்தொடவில்லை. போரிடவுமில்லை.
29.     அப்னேரும் அவனுடைய ஆள்களும் இரவு முழுவதும் பயணம் செய்து அராபா வழியாக யோர்தானைக் கடந்தனர். தொடர்ந்து பிக்ரோன் முழுவதும் கடந்து மகனயிமை அடைந்தார்.
30.     யோவாபு அப்னேரைப் பின்தொடர்வதினின்று திரும்பியபின் தன் ஆள்கள் அனைவரையும் ஒன்று திராட்டினான். அசாவேல் நீங்கலாக, தாவீதின் பணியாளர்களும் பத்தொன்பது பேரைக் காணவில்லை.
31.     தாவீதின் பணியாளர்களோ அப்னேரின் ஆள்களான முந்நூற்று அறுபது பென்யமினியரைக் கொன்றிருந்தனர்.
32.     அவர்கள் அசாவேலின் சடலத்தைத் தூக்கி வந்து பெத்லகேமிலிருந்த அவனுடைய தந்தையின் கல்லறையில் அடக்கம் செய்தார்கள். யோவாபும் அவனுடைய ஆள்களும் இரவு முழுவதும் பயணம் செய்து, பொழுது புலர்ந்ததும் எபிரோனை அடைந்தனர்.

அதிகாரம் 3.


1.     சவுலின் வீட்டாருக்கும் தாவீதின் வீட்டாருக்கும் இடையே ஒரு நீண்ட போர் ஏற்பட்டது: தாவீது வலிமை பெற்றோர்: சவுலின் வீட்டாரோ தொடர்ந்து வலிமை இழந்தவர்.
2.     எபிரோனில் தாவீதுக்கு புதல்வர்கள் பிறந்தனர். இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமுக்குப் பிறந்த அம்னோன் அவர்தம் தலைமகன்.
3.     கர்மேலைச் சார்ந்த நாபாலின் கைம்பெண்ணான அபிகாயிலுக்குப் பிறந்த கிலயாபு அவர்தம் இரண்டாம் மகன். கெசூர் மன்னனான தால்மாயின் மகன் மாக்கவுக்குப் பிறந்த அப்சலோம் அவர்தம் மூன்றாம் மகன்.
4.     அகீத்துக்குப் பிறந்த அதோனியா நான்காம் மகன்: அபித்தாலு்குப் பிறந்த செபற்றியா ஜந்தாம் மகன்:
5.     தாவீதின் மனைவி எக்லாவுக்குப் பிறந்த இத்ராயம் ஆறாம் மகன்: இவர்கள் தாவீதுக்க எப்ரோனில் பிறந்தவர்கள்.
6.     சவுலின் வீட்டாருக்கும் தாவீதின் வீட்டாருக்கும் பூசல் நிலவிய போது, சவுலின் வீட்டில் அப்னேர் தன்னையும் வலிப்படுத்திக் கொண்டான்.
7.     அய்யாவின் மகனான இரிஸ்பா, சவுலின் வைப்பாட்டியாக இருந்தவள். இஸ்பொசேத்து அப்னேரை நோக்கி, என் தந்தையின் வைப்பாட்டியோடு நீ என்ன உறவு கொண்டாய்? என்று கேட்டான்.
8.     இஸ்பொசேத்தின் கேள்வி அப்னேருக்குக் கடுஞ்சினத்தை ஏற்படுத்தியது. நான் என்ன யூதாவுக்கு வாலாட்டும் நாயா? என் தந்தை சவுலின் வீட்டாருக்கும் அவருடைய சகோதரர் நண்பர்களுக்கும் இன்று நான் உண்மையுள்ளவனாய் இருக்கிறேன். தாவீதின் கைகளில் நான் ஒப்புவிக்கவில்லை. நீயோ, இன்று ஒரு பெண்ணைக் குறித்து குற்றம் சாட்டுகிறாய்!
9.     தாவீதுக்கு கடவுள் ஆணையிட்டுக் கூறியவாறே சவுலின் வீட்டிலிருந்து என்னை மாற்றச் செய்து, தாணிலிருந்து பெயேர்! செபா வரை இஸ்ரயேல் மீதும் தாவீதின் அரியணையை நிறுவவில்லையென்றால்,
10.     கடவுள் அப்னேருக்கு உரியதும் கொடுமைத்தனமாய் தண்டனையை அளிப்பாராக! என்று அப்னேர் கூறினான்.
11.     இஸ்பொசேத்து அப்னேருக்கு அஞ்சியதில் மறுமொழி எதுவும் பேசவில்லை.
12.     பிறகு அப்னேர் தன் சார்பாக தாவீதிடம் தூதனுப்பி நாடு யாருடையது? என்னோடு உடன்படிக்கை செய்து கொள்ளும். அனைத்து இஸ்ரயேலையும் உம்மிடம் கொண்டுவர, எனது கை உம்மோடு இருக்கட்டும் என்று கூறினான்.
13.     தாவீது நல்லது உன்னோடு நான் உடன்படிக்கை செய்து கொள்கிறேன். ஆனால் உன்னிடமிருந்து நான் ஒன்று கேட்கிறேன்: அதாவது நீ என்னுடன் வரும் போது சவுலின் மகள் மீக்காலை கொண்டு வரவேண்டும். இல்லையெனில் என் முகத்தில் விழிக்காதே என்று மறுமொழி கூறினான்.
14.     அதற்குபின் தாவீது சவுலின் மகன் இஸ்பொசேத்திடம் தூதனுப்பி, பெலிஸ்தியர் நூறு பேரின் நுனித் தோலை ஈடாகக் கொடுத்து நான் மணந்த என் மீக்காலை எனக்குக் கொடு என்ற கேட்டார்.
15.     இஸ்பொசேத்து ஆளனுப்பி அவளை அவள் கணவன் இலாயிசின் மகன் பல்தியேலிடமிருந்து கொண்டுவரச் செய்தான்.
16.     அவள் கணவனோ அழுது கொண்டே அவளைத் தொடர்ந்து பகுரிம் வரை சென்றான். அங்கே அப்னேர் அவனிடம் திரும்பிச் செல் என்றான்: அவனும் திரும்பிச் சென்றான்.
17.     அப்னேர் இஸ்ரயேலின் பெரியோர்களிடம் இவ்வாறு பேசினான்: தாவீது உங்கள் மீது ஆட்சி செய்ய வேண்டுமென்று கடந்த சில நாள்களாக நீங்கள் விரும்பிக் கொண்டிருந்தீர்கள்.
18.     இப்போது அதை நிலை நாட்டுங்கள்: ஏனெனில் ஆண்டவர் தாவீதிடம் என் ஊழியன் தாவீதின் கையால் என் மக்கள் இஸ்ரயேலை பெலிஸ்தியரிடமிருந்து அவர்களின் அனைத்து எதிரிகளிடமிருந்தும் நான் காப்பாற்றுவேன் என்று கூறியுள்ளார்.
19.     அப்னேர் பென்யமினரோடு தனியாகப் பேசியப்பின், எபிரோனுக்குச் சென்று இஸ்ரளேலுக்கும் பென்யமின் வீட்டாருக்கும் நல்ல தெனப்பட்ட அனைத்தையும் திடம் எடுத்துக் கூறினான்.
20.     ஆப்னேர் இருபது ஆள்களோடு தாவீதைக் காண எபிரோன் வந்தான். அப்னேருக்கும் அவரோடு இருந்த ஆள்களுக்கும் தாவீது விருந்து படைத்தார்.
21.     பிறகு அப்னேர் தாவீதிடம், நான் எழுந்து சென்று அனைத்து இஸ்ரயேலையும் அரசரும் என் தலைவருமாகிய உமக்கு முன் ஒன்று திரட்டி வருகிறேன். அவர்கள் உம்மோடு உடன்படிக்கை செய்து கொள்ளட்டும், நீரும் உம் விருப்படி ஆட்சி செய்யலாம். என்று கூறினான். தாவீது அப்னேரை வழியனுப்ப அவனும் பாதுகாப்புடன் சென்றான்.
22.     அப்போது தாவீதின் பணியாளர்களும் யோவாபும் கொள்ளையடித்து திரும்பினர். தங்களோடு மிகுதியான கொள்ளைப் பொருள்களைக் கொண்டுவந்தனர். அச்சமயம் அப்னேர் தாவீதோடு எபிரோனில் இல்லை. ஏனெனில் அவர் ஏற்கனவே வழியனுப்ப்பட்டு பாதுகாப்புடன் சென்றுவிட்டான்.
23.     யோவாபும் படைவீரர் அனைவரும் வந்தபோது, நேரின் மகன் அப்னேர் தாவீதிடம் வந்தான். அவர் அவனை வழியனுப்ப அவனும் பாதுகாப்புடன் சென்று விட்டான் என்று யோவாபிடம் கூறப்பட்டது.
24.     யோவாபு அரசனிடம் சென்று, நீர் என்ன காரியம் செய்தீர்! அப்னேர் உன்னிடம் வந்தானல்லவா? நீர் ஏன் அவரை போகவிட்டீர்? அவனும் சென்று விட்டானே!
25.     நேரின் மகன் அப்னேர் உனக்கு தெரியும். உமது போக்குவரத்தையும் நீர் செய்வது அனைத்தையும் அறிந்து கொண்டு உம்மை ஏமாற்றவே அவன் வந்தான் என்றான்.
26.     யோவாபு தாவீதைவிட்டுச் சென்று அப்னேரின் பின்னால் தூதர்களை அனுப்பினான். அவர்கள் அவனைச் சீராவின் ஊற்றினருவிலிருந்து திருப்பியழைத்து வந்தார்கள். தாவீதுக்கோ இது தெரியாது.
27.     அப்னேர் எபிரோனுக்கு திரும்பி வந்ததும் யோவாபு அவனிடம் தனிமையில் பேசுவதற் கென ஒதுக்கமாக அவனை வாயில் மையத்திற்கு அழைத்துச் சென்றான். தன் சகோதரன் அசாவேலின் இரத்தத்திற்காக அவன் வாயில் குத்த, அவன் இறந்தான்.
28.     பிறகு தாவீது அதை கேள்வியுற்ற போது, நேரின் மகன் அப்னேரின் இரத்தத்தின் மட் டில் நானும் என் அரசர் ஆண்டவர் முன்பு என்றென்றும் குற்றமற்றவர்.
29.     யோவாபின் தலைமீதும், அவன் தந்தையின் வீட்டார் மீதும் அது விழட்டும். இரத்த கசிவு உடையவனோ, தொழுநோயாளியோ, அண்ணகனோ, வாளால் மடிபவனோ, உணவுக்காகத் தவிப்பனோ, யோவாபின் குடும்பத்தில் இல்லாமல் போகமாட்டார்கள். என்றார்.
30.     தங்கள் சகோதரர் அசாவேலைக் கிபியோனில் நடந்த போரில் அப்னேர் கொன்றத்தற்காக யோவாபும் அவன் சகோதரன் அவிசாயும் அவனைக் கொன்றார்கள்.
31.     உங்கள் உடைகளை கிழித்துக் கொள்ளுங்கள். சாக்கு உடைகளை அணியுங்கள்: அப்னேருக்காகப் புலம்புங்கள் என்று தாவீது யோவாபுக்கும் அவனோடு இருந்த அனைத்து மக்களுக்கும் கட்டளையிட்டார். பாடையின் பின்னால் அரசர் தாவீது நடந்து சென்றார்.
32.     அப்னேரை எபிரோனில் அடக்கம் செய்தார்கள். அப்னேரின் கல்லறையருகே
33.     அரசர் இவ்வாறு கூறி அழுதார்: மூடன் மடிவதுபோல் அப்னேர் மடியவேண்டுமா?
34.     கைகள் விலங்கிடப்படவில்லை: உன் பாதங்கள் கட்டப்படவில்லை: தீயோர் முன் வீழ்பவன் போல், நீயும் வீழ்ந்தாயே! மீண்டும் அனைத்து மக்களும் அவனுக்காக புலம்பினார்கள்.
35.     பிறகு மக்கள் அனைவரும் தாவீதிடம் வந்து பகலாக இருக்கும் போதே உண்ணும் படி அவரைத் தூண்டினர். கதிரவன் மறைவதற்குள் நான் உணவையோ வேறு எதையோ சுவைத்தேனாகில், கடவுள் தக்கவாறு அதற்கு மேலும் என்னைத்தண்டிப்பாராக! என்று தாவீது ஆணையிட்டுக் கூறினார்கள்.
36.     மக்கள் அனைவரும் இதைக் கேட்டார்கள். அவர்களுக்கு அது நல்லதெனபட்டது. அரசன் செய்ததெல்லாம் மக்களுக்கு நல்லதெனப்பட்டது.
37.     நேரின் மகன் அப்னேரின் கொலையில் அரசருக்கு பங்கில்லை, என்று மக்கள் அனைவருக்கும் அனைத்து இஸ்ரயேலுக்கும் தெரிய வந்துள்ளது.
38.     மேலும் அரசர் தம் பணியாளர்களிடம் இவ்வாறு கூறினார்: இன்று இஸ்ரயேலில் தலைவனும் உயர்குடிமகனுமான ஒருவன் மடிந்துவிட்டான் என்று நீங்கள் அறியீரோ?
39.     நான் அரசனாய் திருப்பொழிவு செய்யபட்டும் இன்று வலுவிழந்தனவாய் இருக்கிறேன்! செரூபாவின் புதல்வர்களான இவர்கள் என்னைவிட வலியவர் ஆகிவிட்டனர்! தீங்கிழைப்பவனுக்கு அவன் தீங்கிற்கு ஏற்ப ஆண்டவர் தண்டனை வழங்கட்டும்.

அதிகாரம் 4.


1.     அப்னேர் எபிரோில் இறந்ததை கேட்டதும் சவுலின் மகன் இஸ்பொசேத்து நிலைக்குலைந்தான். அனைத்து இஸ்ரயேலும் கலங்கியது.
2.     சவுலின் மகனிடம் இரண்டு படைத்தலைவர்கள் இருந்தனர். ஒருவன் பெயர் பானா: மற்றவன்பெயர் இரோக்காபு. பென்யமின் குலத்தைச் சார்ந்த பெயரோத்தில் வாழும் ரிம்மோன் என்பவனின் புதல்வர்கள் இவர்கள். பெயரோத்தும் பென்மினியரைச் சார்ந்ததாகவே கருதப்பட்டது.
3.     பெயரோத்தியர் கித்தாயிமுக்குத் தப்பியோடி இந்நாள்வரை அங்கே அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.
4.     சவுலின் மகன் யோனத்தானுக்கு மெபிபொசேத்து என்ற மகன் ஒருவன் இருந்தான். இஸ்ரயேலிலிருந்து, சவுல் யோனத்தான் பற்றிய செய்தி வந்தபோது அவனுக்கு வயது ஜந்து. அவனுடைய செவிலித் தாய் அவனைத் தூக்கிக் கொண்டு தப்பி ஓடுகையில் விரைந்து சென்றதால், அவன் கீழே விழுந்து கால் முடமானவன்.
5.     பெயரோத்தைச் சார்ந்த ரிம்மேனின் புதல்வர்களான இரோக்கபும் பானாவும் உச்சிவேளையில் இஸ்பொசேத்தின் வீட்டுக்கு வந்தார்கள். நண்பகல் வேளையில் அவன் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான்.
6.     கோதுமை கொண்டு செல்பவர்கள் போல் நடுவீட்டிற்கு வந்து, அவனது வயிற்றில் ஊடுருவக் குத்திவிட்டு, இரோக்காபும் அவனுடைய சகோதரன் தப்பிவிட்டார்கள்.
7.     இவ்வாறு அவர்கள் வீட்டினுள் நுழைந்து, தன் படிக்கை அறையில் கட்டினில் படுத்திருந்த போது அவனை ஊடுருவக் குத்திக் கொன்று தலையை வெட்டினார்கள். அத்தலையை எடுத்துக் கொண்டு இரவு முழுவதும் அராபா வழியாகப் பயணம் செய்தார்கள்.
8.     இஸ்பொசேத்தின் தலையை எபிரோனில் இருந்த தாவீதிடம் கொண்டு வந்தார்கள். உமது உயிரை பறிக்கத் தேடிய உம் எதிரி சவுலின் மகன் இஸ்பொசேத்தின் தலை இதோ! ஆண்டவர் தலைவராம் அரசர் சார்பாக சவுலையும் அவனுடைய வாரிசையும் பழிவாங்கி விட்டார் என்று அவர்கள் கூறினார்கள்.
9.     பெயரோத்தைச் சார்ந்த ரிம்மோனின் புதல்வர்களான இரோக்காபையும் அவனுடைய சகோதரன் பானாவையும் நோக்கி தாவீது இவ்வாறு கூறினார்கள். அனைத்து துயரங்களினின்றும் என்னை விடுவித்த ஆண்டவர் பெயரால் ஆணையிட்டு சொல்கிறேன்.
10.     இதோ சவுல் இறந்து விட்டான் என்று எனக்குச் சொல்ல வந்தான், தான் நற்செய்தி கொண்டு வந்தவனாகவே இருந்தான். நானோ அவனை பிடித்துச் சிக்லாவில் கொன்றேன். அவனுக்கு நான் வெகுமதியாகக் தந்தது அதுவே.
11.     இப்பொழுது குற்றமற்றவனைத் தீயவர்கள் அவன் வீட்டிலே அவனது படுக்கையிலே கொன்று விட்டார்கள். அவனது இரத்தத்தை சிந்திய பழிக்கு ஈடாக உங்களை நான் உலகினின்றே அழித்துவிடமாட்டேனோ?
12.     தாவீது ஆணையிட்டு அவர்தம் பணியாளர் அவர்களை கொன்றனர்: கைகளையும் கால்களையும் வெட்டியபின் அவர்களை எபிரோன் குளத்தருகே தொங்கவிட்டனர்: இஸ்பொசேத்தின் தலையை எடுத்து எபிரோனில் அப்னேரின் கல்லறைக்கு அருகே புதைத்தனர்.

அதிகாரம் 5.


1.     இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களும் எபிரோனுக்கு வந்து தாவீதிடம் கூறியது: நாங்கள் உம் எலும்பும் சதையுமானவர்கள்.
2.     சவுல் எங்கள் மீது ஆட்சி செய்த கடந்த காலத்திலும் கூட நீரே இஸ்ரயேலை நடத்திச் சென்றவர். நீயே என் மக்கள் இஸ்ரயேலின் ஆயனாக இருப்பாய்: நீயே இஸ்ரயேலுக்கு தலைமைதாங்குவாய் என்று உமக்கே ஆண்டவர் கூறினார்.
3.     இஸ்ரயேலின் பெரியோர்கள் அனைவரும் அரசரைக் காண எபிரோனுக்கு வந்தனர். அரசர் தாவீது எபிரோனில் ஆண்டவர் திருமுன் அவர்களோடு எபிரோனில் உடன்படிக்கை செய்து கொண்டார். இஸ்ரயேலின் அரசராக அவர்கள் தாவீதை திருப்பொழிவு செய்தார்கள்.
4.     முப்பது வயதில் அரசரான தாவீது, நாற்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.
5.     எபிரோனில் தங்கி யூதாவை ஏழு ஆண்டுகள் ஆறு மாதங்களும், பிறகு எருசலேமில் தங்கி அனைத்து இஸ்ரயேல் யூதாவை மூன்று ஆண்டுகளும் அவர் ஆட்சி புரிந்தார்.
6.     அரசரும் அவருடைய ஆள்களும் அம்மண்ணின் மைந்தர் எபூசியருக்கு எதிராக எருசலேம் சென்ற போது, அவர்கள் தாவீதை நோக்கி, நீர் இங்கே வர முடியாது. பார்வையற்றவரும் முடவரும் கூட உம்மை அப்புறப்படுத்திவிடுவார்கள் அதாவது இங்கே தாவீது வர முடியாது என்றார்.
7.     இருப்பினும் தாவீது சீயோன் கோட்டையைக் கைப்பற்றினார். அதுவே தாவீது நகர்.
8.     அன்று தாவீது, எபூசியரைத் தாக்குகின்றவர்கள் குடைகால்வாய் வழியே தாவீது உளமார வெறுக்கும் முடவரையும் பார்வையற்றவரையும் கைப்பற்றட்டும் என்று கூறினார். ஆகவே, பார்வையற்றவரும் முடவரும் கோவிலுனுள் நுழையலாகாது என்று கூறப்பட்டது.
9.     தாவீது கோட்டையில் தங்கி, அதற்கு தாவீது நகர் என்று பெயரிட்டார். மில்லோவிலிருந்து உட்புறமாக தாவீது சுற்றிலும் மதில் எழுப்பினார்.
10.     தாவீது தொடர்ந்து வளர்ச்சி பெற்றார். படைகளின் கடவுளாகிய ஆண்டவர் அவரோடு இருந்தார்.
11.     தீர் மன்னன் ஈராம் தாவீதிடம் தூதர்களையும், கேதுரு மரங்களோடு தச்சர், கொத்தர்களையும் அனுப்பினான். அவர்கள் தாவீதுக்கு ஓர் அரண்மனை கட்டினர்.
12.     ஆண்டவர் தம்மை இஸ்ரயேலின் அரசராக தம்மை நியமித்தார் என்றும் தம் மக்கள் இஸ்ரயேலுக்காகவே அவர் தம்மை உயர்த்தினார் என்றும் தாவீது உணர்ந்தார்.
13.     எபிரோனை விட்டு வந்ததும் தாவீது மேலும் பல வைப்பாட்டியரையும் மனைவியரையும் எருசலேமில் தேர்ந்தெடுத்தார். மேலும் பல புதல்வர்களும் புதல்வியரும் தாவீதுக்குப் பிறந்தனர்.
14.     எருசலேமில் அவருக்குப் பிறந்தவர்களின் பெயர்களாவன: சம்மூவா, சோபாபு, நாத்தான், சாலமோன்,
15.     இப்கார், எலிசுவா, நேபேகு, யாபியா,
16.     எலிசாமா, எலயாதா, எலிப்பலேற்று.
17.     தாவீது இஸ்ரயேலின் அரசராக திருப்பொழிவு செய்யப்பட்டார் என்று கேட்டதும் பெலிஸ்தியர் அனைவரும் தாவீதை பிடிப்பதற்கு புறப்பட்டுச் சென்றனர். தாவீது அதைக் கேட்டதும் கோட்டைக்குள் புகுந்துவிட்டார்.
18.     பெலிஸ்தியர் வந்து இரபாயிம் பள்ளத்தாக்கில் பரவினர்.
19.     பெலிஸ்தியருக்கு எதிராக நான் செல்லட்டுமா? நீர் அவர்களை என் கையில் ஒப்புவிப்பீரா? என்று தாவீதிடம் ஆண்டவர் கேட்டார். சொல், உறுதியாக நான் பெலிஸ்தியரை உன் கையில் ஒப்புவிப்பேன் என்று ஆண்டவர் தாவீதிடம் கூறினார்.
20.     தாவீது பாபால் பெராட்சிம்வரை வந்து அவர்களை தோற்கடித்தார். தகர்த்தெறியும் வெள்ளம் போல் ஆண்டவர் என் எதிரிகளை உன் கண்முன்னே தகர்த்தெறிந்தார் என்ற தாவீது கூறினார். ஆகவே தான் இந்த இடம் பாகால் பெராட்சியம் என்று அழைக்கப்படுகிறது.
21.     பெலிஸ்தியர் தங்களை தெய்வச்சிலைகளை விட்டு செல்ல, தாவீதும் அவர்தம் ஆள்களும் அவற்றை எடுத்துச் சென்றனர்.
22.     பெலிஸ்தியர் மீண்டும் எதிர்த்து வந்து இராபாயிம் பள்ளத்தாக்கில் பரவினர்.
23.     தாவீது ஆண்டவரிடம் ஆலோசனைக் கேட்க, நீ எதிர்த்துச் செல்ல வேண்டாம். சுற்றி வளைத்து அவர்கள் பின்னால் சென்று, முசுக்கொட்டை மரங்களுக்கு எதிரில் அவர்களை அணுக வேண்டும்.
24.     முசுக் கொட்டை மரங்களுக்கு மேல் அணி வகுப்புப் பேரொலி ஒலிக்கும் போது நீ தயாராக இருக்கவேண்டும். ஏனெனில் அப்போது ஆண்டவர் பெலிஸ்தியர் படைகளை தாக்குவதற்காக உனக்கு முன்பாக செல்கிறார் என்று ஆண்டவர் கூறினார்.
25.     ஆண்டவர் தமக்கு கட்டளையிட்டவாறே தாவீது சென்று, பெலிஸ்தியரை கெபா முதல் பெசேர் வரை தாக்கினார்.

அதிகாரம் 6.


1.     தாவீது அனைத்து இஸ்ரயேலிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பதாயிரம் பேரை மீண்டும் என்று திரட்டனார்.
2.     தாவீது அவரோடு இருந்த மக்கள் அனைவரும் கடவுளின் பேழையைக் கொண்டுவர பாலை யூதாவுக்குச் சென்றனர். இது கெருபுகளின் மீது வீற்றிருக்கும் படைகளின் பெயரால் ஆண்டவர் அழைக்கப்படுகிறது.
3.     குன்றின் மீது இறந்த அபினதாபின் இல்லத்திலிருந்து கடவுளின் பேழையை ஒரு புதிய வண்டியில் வைத்துக் கொண்டு வந்தார்கள். அபினதாபின் புதல்வர்கள் உசாவும் அகியோவும் அப் புது வண்டியை நடத்திவந்தார்கள்.
4.     குன்றின் மீது இறந்த அபினதாபின் இல்லத்திலிருந்து அவர்கள் கடவுளின் பேழையைக் கொண்டு வந்தார்கள். அகியோ பேழைக்கு முன்னால் சென்றார்.
5.     தாவீது இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் தேவதாரு மரத்தாலான இசைக்கருவிகளோடு, யாழ், வீணை, சுரமண்டலம், மேளம், தாளம் ஆகியவற்றோடும் ஆண்டவருக்கு முன்பாக ஆடிப்பாடிக் கொண்டு வந்தார்கள்.
6.     அவர்கள் நாக்கோனின் களத்திற்கு வந்தபோது காளைமாடுகள் மிரள, உசா கடவுளின் பேழையை தாக்கிப் பிடித்தான்.
7.     அப்போது உசாவுக்கு எதிராக ஆண்டவரின் சினம் பற்றி எரிந்தது. கடவுள் அவனது தவற்றுக்காக அங்கேயே அவனை வீழ்த்தினார். அவன் கடவுலின் பேழைக்கருகே இறந்தான்.
8.     ஆண்டவர் சினமுற்று உசாவைத் திடீரெனத் தாக்கியதால் தாவீது மனவேதனை அடைந்தார். இந்நாள் வரை பெரேசு உசா என்று அழைக்கப்பட்டது.
9.     அன்று தாவீது ஆண்டவருக்கு அஞ்சி, இத்தகைய பேழையை நான் எவ்வாறு ஏற்றுக் கொள்வேன்? என்று வினவினார்.
10.     எனவே, ஆண்டவரின் பேழையைத் தாவீதின் நகருக்குத் தம்மோடு எடுத்துச் செல்ல அவர் விரும் பவில்லை. கித்தியான ஓபோது ஏதோமின் இல்லத்திற்கு அதை திருப்பிவிட்டார்.
11.     ஆண்டவரின் பேழை கித்தியான ஓபோது ஏதோமின் மூன்று மாதங்கள் தங்கிற்று. ஆண்டவர் ஓபோது ஏதோமுக்கும் அவன் வீட்டார் அனைவருக்கும் ஆசி வழங்கினார்.
12.     ஆண்டவரின் பேழையை முன்னிட்டு ஓபோது ஏதோமின் வீட்டாருக்கும் அவனுக்குரிய அனைத்துக்கும் ஆண்டவர் ஆசி வழங்கினார் என்று அரசர் தாவீதுக்குச் சொல்லப்பட்டது. எனவே, தாவீது புறப்பட்டுச் சென்று கடவுளின் பேழையை ஓபோது ஏதோமின் நகருக்கு அக்களிப்போடு கொண்டு வந்தார்.
13.     ஆண்டவரின் பேழையை ஏந்தியவர்கள் ஆறு அடிகள் எடுத்து வைத்தும் ஒரு காளையையும் ஒரு ஆட்டுக் கிடாவையையும் பலியிட்டார்.
14.     நார்ப்பட்டால் நெய்யப்பட்ட ஏபோதை அணிந்து கொண்டு, தாவீது தம் முழுவலிமையோடு ஆண்டவர் முன்பாக நடமாடிக் கொண்டிருந்தார்.
15.     தாவீது இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆரவாரத் தோடும் ஆண்டவரின் பேழையைக் கொண்டு வந்தார்கள்.
16.     ஆண்டவரின் பேழை தாவீதின் நகரை அடைந்த போது சவுலின் மகள் மீக்கால் பலகணி வழியாகப் பார்த்தாள். அரசர் தாவீது முன்பு ஆடிக் கொண்டிருப்பதைக் கண்டு அவர் தன் உள்ளத்தில் வெறுத்தாள்.
17.     ஆண்டவரின் பேழையைக் கொணர்ந்து அதற்கென நிறுவிய கூடாரத்தின் நடுவில் அதை வைத்தார்கள். தாவீது ஆண்டவர் முன்பு எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தினார்.
18.     எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தியப்பின் தாவீது படைகளின் ஆண்டவரின் பெயரால் மக்களுக்கு ஆசி வழங்கினார்.
19.     பிறகு தாவீது ஆண் முதல் பெண் வரை உள்ள அனைவருக்கும் இஸ்ரயேல் கூட்டம் முழுவற்கும் ஆளுக்கொரு அப்பத்தையும், பொரித்த இறைச்சியையும், திராட்சைப்பழ அடையையும் கொடுத்தார். மக்கள் அனைவரும் தம் இல்லங்களுக்கு சென்றனர்.
20.     தாவீது தம் வீட்டாருக்கு ஆசி வழங்க வந்தார். அப்போது சவுலின் மகள் மீக்கால் தாவீதை எதிர் கொண்டு, இழிந்தவன் ஒருவன் வெட்கமின்றித் தன் ஆடைகளைக் கழட்டுவது போல, இஸ்ரயேலின் அரசர் தன் பணியாளரின் பணிப்பெண்களுக்கு முன்பாகத் தம் ஆடைகளைக் கழற்றி இன்று பெருமைக் கொண்டாரே! என்று ஏளனம் செய்தாள்.
21.     ஆண்டவரின் மக்கள் மீதும் இஸ்ரயேல் மீதும் தலைவனாக இருக்குமாறு உன் தந்தையும் அவர் தம் வீட்டாரையும் ஒதுக்கிட்டு, என்னைத் தேர்ந்து கொண்ட ஆண்டவர் திருமுன் நான் ஆடினேன்: இன்னும் ஆடுவேன்.
22.     நான் என்னை இன்னும் என்னைக் கடையவனாக்கிக் கொள்வேன்: நீ குறிப்பிட்ட பெண்களுக்கு முன்பா நான் பெருமை அடைவேன் என்று தாவீது மீக்காலிடம் கூறினார்.
23.     சவுலின் மகள் மீக்காலுக்குச் சாகும் வரை குழந்தைப் பேறு கிட்டவில்லை.

அதிகாரம் 7.


1.     அரசர் தம் அரண்மனையில் குடியேறியப்பின், சுற்றிலிருந்த எல்லா எதிரிகளின் தொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு ஓய்வு அளித்தார்.
2.     அப்போது இறைவாக்கினர் நாத்தானைத் தாவீது அழைத்து, பாரும் நான் கேதுரு மரங்களான அரண்மனையில் நான் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் வாழ்கிறது என்று கூறினார்.
3.     அதற்கு நாத்தான் நீர் விரும்பிய அனைத்தையும் செய்துவிடும்: ஏனெனில் ஆண்டவர் என்னோடு இருக்கிறார் என்று அரசனிடம் சொன்னார்.
4.     அன்று இரவே ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது.
5.     நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: நான் தாக்குவதற்காக எனக்கு கோவில் கட்டப்போகிறாயா?
6.     இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து நான் அழைத்துவந்ததும் இந்நாள் வரை நான் ஒரு நிலையான இல்லத்தில் தங்கவில்லை: மாறாக ஒரு நடமாடும் கூடாரமே எனக்குத் தங்குமிடாய் இருந்தது.
7.     இஸ்ரயேல் அனைவரும் சென்ற இடமெல்லாம் நானும் உடன் சென்றேன். அப்பொழுது என் மக்கள் இஸ்ரயேலைப் பேணும்படி குலத் தலைவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன் அவர்களுள் எவரிடமாவது எனக்காக கேதுரு மரங்களால் ஒரு கோவில் கட்டாததேன்? என்று ஒரு வார்த்தை சொல்லியிருப்பானோ?
8.     எனது ஊழியன் தாவீதிடம் படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன்.
9.     நீ சென்றவிடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்: உன் கண்முன் உன் எதிரிகள் அனைவரையும் அழித்தேன்: மேலும் உலகில் வாழும் பெரும் மனிதர் போல் நீ புகழுறச் செய்தேன்.
10.     எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஓர் இடத்தை அளிப்பேன். அவர்கள் அந்த இடத்திலேயே வாழ வைப்பேன். என் மக்களாகிய இஸ்ரயேல் மீதும் நீதித் தலைவர்களை ஏற்படுத்திய நாள்களாகிய தொடக்கத்தில் தீயவர்கள் அவர்கள் ஒடுக்கப்பட்டது போல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள்.
11.     அனைவரின் தொல்லைகளினின்றும் எனக்கு நான் ஓய்வு அளிப்பேன். மேலும் ஆண்டவர் தாமே என் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார்.
12.     வாழ் நாள் நிறைவுபெற்று நீ என் மூதாதையரோடு துயில்கொள்ளும் போது, உனக்கு பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப் பின் நான் உயர்த்தி அவனது அரசை நான் நிலைநாட்டுவேன்.
13.     எனது பெயருக்காக கோவில் கட்டவிருப்பவன் அவனே. அவனது அரசை நான் என்றும் நிலைநிறுத்துவேன்.
14.     நான் அவனுக்கு தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் தவறுசெய்யும்போது மனித இயல்புக்கேற்ப அடித்து, மனிதருக்கே உரிய துன்பங்களைத் தருவேன்.
15.     முன்பாக நான் சவுலை விலக்கியது போல, என் பேரன்பினின்றும் அவனை விலக்கமாட்டேன்.
16.     முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அியணை என்றுமே நிலைத்திருக்கும்!
17.     மேற்கூறிய வெளிப்பாட்டின் வார்த்தைகள் அனைத்தையும் நாத்தான் தாவீதுக்கு எடுத்துரைத்தார்.
18.     பின் தாவீது ஆண்டவர் திருமுன் வந்து அமர்ந்து இவ்வாறு பேசினார்: என் தலைவராம் ஆண்டவரே! இதுவரை நீர் என்னை வழி நடத்தி வந்தமைக்கும், நான் யார்? என் குடும்பம் யாது?
19.     இருப்பினும் என் தலைவராம், ஆண்டவரே உம் திருமுன் இது சிறிது, உம் ஊழியனின் குடும்பத்தைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் பேசியுள்ளீர்! என் தலைவராம் ஆண்டவரே மனித வழக்கம் இது வல்லவே!
20.     தாவீது மேலும் உன்னிடம் என்ன கூற முடியும்? என் தலைவராம் ஆண்டவரே! உம் ஊழியனைப் பற்றி உமக்கே தெரியும்.
21.     உம் ஊழியன் அறிந்து கொள்ளட்டும் என்று உம் வார்த்தையை முன்னிட்டும் உம் இதயத்திற்கு ஏற்பவும் மாபெரும் செயல்கள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளீர்.
22.     ஆகவே என் தலைவராம் ஆண்டவரே! எங்கள் காதுகளால் கேட்ட அனைத்தின்படி நீர் மகத்தானவர்: வேறு எவரும் இலர்: உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை.
23.     உம் மக்கள் இஸ்ரயேலைப் போல் வேறு யார் உளர்? அவர்கள் உம் மக்களாக்கிக் கொள்ளுமாறும் உம் பெயர் விளங்குமாறும் கடவுளாகிய நீரே சென்று உலகின் ஒப்பற்ற அந்த இனத்தை மீட்டு, அவர்களுக்காக வியத்தகு அருஞ்செயல்கள் புரிந்தீர்! எகிப்து நாட்டினின்றும் வேற்று இனங்களினின்றும் அவர்களின் தெய்வங்களினின்றும் நீரே உம் மக்களை மீட்டீர்!
24.     என்றும் உம் மக்களாகவே நிலைத்து இருக்குமாறு இஸ்ரயேலை நீர் உமக்கு உரியவர் ஆக்கினீர்! ஆண்டவரே! நீரே அவர்களின் கடவுள் ஆனீர்!
25.     ஆண்டவராகிய கடவுளே! உமது ஊழியனைப் பற்றியும் உமது குடும்பத்தைப் பற்றியும் நீர் தந்த உறுதி மொழியை என்றும் நிலைநாட்டும்! நீர் வாக்குறுதி அளித்தவாறே செய்யும்!
26.     உமது பெயர் என்றும் மாட்சி பெறுவதாக! அப்பொழுது மாந்தர் படைகளின் ஆண்டவரே இஸ்ரயேலின் கடவுள் என்பர். உமது ஊழியன் தாவீதின் குடும்பமும் உம் திருமுன் நிலைத்திருக்கும்.
27.     ஏனெனில் படைகளின் ஆண்டவரே! இஸ்ரயேலின் கடவுளே! நான் உனக்கு ஓர் இல்லம் எழுப்புவேன் என்று உமது ஊழியனுக்கு வெளிப்படுத்தியவர் நீரே! ஆகவே இவ்வாறு மன்றாட உம் ஊழியனுக்கு மனத்துணிவு ஏற்பட்டது.
28.     தலைவராம் ஆண்டவரே! நீரே கடவுள்! உமது வார்த்தைகள் நம்பிக்கைக்கு உரியவை! இந்த நல்வாக்கை அடியவனுக்கு அருளியவர் நீரே!
29.     உம் ஊழியனின் குடும்பம் என்றும் உம் திருமுன் இருக்குமாறு நீர் அருள் கூர்ந்து அதற்கு ஆசி வழங்கும்! தலைவராகிய நீர் உரைத்துள்ளீர்! உம் ஊழியன் குடும்பம் என்றும் உமது ஆசியைப் பெறுவதாக!

அதிகாரம் 8.


1.     இதன் பிறகு தாவீது பெலிஸ்தியரைத் தோற்கடித்து அவர்களை அடிமைப்படுத்தினார். மெதகம்மாவை தாவீது பெலிஸ்தியரிடமிருந்து கைப்பற்றினார்.
2.     அவர் மோவாபியரையும் தோற்கடித்தார். அவர்களை தரையில் படுக்கச் செய்து நூலால் அளந்து இருபகுதியினரைக் கொன்று ஒரு பகுதியினரை வாழவிட்டார். மோவாபியர் தாவீதின் அடிமைகளாகி அவருக்குக் கப்பம் கட்டினார்கள்.
3.     மேலும் யூப்பரத்தீசு நதியருகே தனது ஆட்சியை மீண்டும் அமைக்கச் சென்ற சோபா மன்னன் இரகோபின் மகன் அத்தேசரையும் தாவீது தோற்கடித்தார்.
4.     தாவீது அவனிடமிருந்து ஆயிரத்து எழுநூறு குதிரை வீரர்களையும், இருபதாயிரம் காலாள் படையினரையும் சிறைப்பிடித்தார். நூறு தேர்களுக்குத் தேவையானவற்றைத்தவிர மீதியான தேர்க்குதிரைகளைத் தாவீது நரம்பறுக்கச் செய்தார்.
5.     தமஸ்கு நாட்டுச் சிரியர்கள் சோபா மன்னன் அத்தேசருக்கு உதவவந்தபோது, இருபத்து இரண்டாயிரம் பேரைக் கொன்றார்.
6.     பிறகு தமஸ்கு நகரின் ஆராம் பகுதியில் தாவீது படைத்தளங்களை அமைத்தார். சிரியா நாட்டினர் தாவீதின் அடிமைகளாகி அவருக்கு கப்பம் கட்டினர். தாவீது சென்ற இடமெல்லாம் அவருக்கு சிறப்பு அளித்தார்.
7.     அத்தேசரின் பணியாளர் தாங்கிச் சென்ற பொற் கேடயங்களைத் தாவீது கைப்பற்றி அவற்றை எருசலேமுக்கு கொண்டு வந்தார்.
8.     அத்தேசரின் நகர்களான பெற்றகுவிலிருந்து, பெரோத்தாவிலிருந்தும் தாவீது மிகுதியான வெண்கலத்தைக் கொண்டு வந்தார்.
9.     அத்தேசரின் அனைத்துப் படையையும் தாவீது முறியடித்ததை ஆமாத்து மன்னன் தோயி கேள்வியுற்றான்.
10.     உடனே அவன் தன் மகன் யோராமைத் தாவீது அரசரிடம் அனுப்பி அவரை வாழ்த்திப் பாராட்டினான்: ஏனெனில் தோயி அத்தேசரைத் தோற்கடித்திருந்தான். யோராம் தன்னோடு வெள்ளி, பொன், வெண்கலத்தால் ஆகிய பொருள்களைக் கொண்டு வந்தான்.
11.     இவற்றையும் தாம் தோற்கடித்த அனைத்து நாடுகளின் வெள்ளி, பொன்னையும் தாவீது அரசர் ஆண்டவருக்கு காணிக்கையாக்கினார்.
12.     அந்நாடுகளாவன: ஏதோம், அம்மோனியர், பெலிஸ்தியர், அமலேக்கியர், சோபாவின் மன்னன் அத்தேசரிடமிருந்து எடுத்த கொள்ளைப் பொருளையும் காணிக்கையாக்கினார்.
13.     தாவீது உப்புக் கணவாயில் பதினெட்டாயிரம் ஏதோமியரை முறியடித்துத் திரும்பியபின் அவருக்கு பெரும் புகழ் உண்டாயிற்று.
14.     அவ+ ஏதோம் முழுவதும் படைத்தளங்களை அமைத்தார். ஏதோமியர் அனைவரும் அவருக்கு கப்பம் கட்டலாயினர். தாவீது எங்குச் சென்றாலும் அவருக்கு ஆண்டவர் வெற்றி அளித்தார்.
15.     தாவீது அனைத்து இஸ்ரயேல் மீதும் ஆட்சிப்புரிந்து நீதியும் நேர்மையும் விளங்கச் செய்தார்.
16.     செரூயாவின் மகன் யோவாபு படைத்தலைவராகவும் அகிலூதின் மகன் யோசபத்து ஆவணக் காப்பளராகவும்
17.     அகிதூபின் மகன் சாதோக்கும் அபியத்தார் மகன் அகிமெலக்கும் குருக்களாகவும், செராயா செயலாரகவும் பணியாற்றினார்.
18.     யோயாதாவின் மகன் பெனாயா கெரேத்தியருக்கும் பெலேத்தியருக்கும் மேலாளராக இருந்தார். தாவீதின் புதல்வர்கள் குருக்களாக இருந்தார்கள்.

அதிகாரம் 9.


1.     யோனத்தானின் பொருட்டு சவுலின் வீட்டாருக்கும் நான் கருணைக் காட்டுவதற்கு இன்னும் யாராவது இருக்கின்றனரா? என்று தாவீது கேட்டார்.
2.     சவுலின் வீட்டைச் சார்ந்த சீபா என்ற ஓர் பணியாளன் இருந்தான். அவனை தாவீதிடம் கூட்டிச் சென்றனர். நீ தான் சீபாவா? என்று அரசர் அவனிடம் கேட்க, அடியேன் தான் என்று அவன் பதிலளித்தான்.
3.     கடவுளின் கருணையை நான் சவுலின் வீட்டாருக்குக் காட்டுவதற்கு இன்னும் யாராவது இருக்கின்றனரா? என்று அரசர் கேட்டார். யோனத்தானின் இருகால் ஊனமுற்ற மகன் ஒருவன் இருக்கிறான் என்று அரசனிடம் சீபா பதிலளித்தான்.
4.     எங்கே அவன்? என்று அரசர் அவனிடம் கேட்க, லோதாபாரில் அம்மியேலின் மகன் மாக்கிரின் வீட்டில் அவன் இருக்கிறான் என்று அரசனிடம் சீபா கூறினான்.
5.     லோதாபாருக்கு ஆளனுப்பி அம்மியேலின் மகன் மாக்கிரின் வீட்டிலிருந்த அவனை அரசர் தாவீது கொண்டு வரச் செய்தார்.
6.     சவுலின் புதல்வனான யோனத்தானின் மகன் மெபிபொசேத்து தாவீதிடம் வந்து முகம் குப்புற வீழ்ந்து வணங்கினான். மெபிபொசேத்து என்று தாவீது அழைக்க, இதோ! உம் அடியான் என்று அவன் பதிலிறுத்தான்.
7.     தாவீது அவனிடம் அஞ்சாதே! உன் தந்தை யோனத்தானின் பொருட்டு நான் உனக்க கருணை காட்டுவது உறுதி, உன் மூதாதை சவுலின் நிலம் அனைத்தையும் உனக்க மீண்டும் கிடைக்கச் செய்வேன். நீ எப்போதும் என்னுடன் உணவருந்துவாய் என்று கூறினார்.
8.     அவன் வணங்கி, நான் செத்த நாய் போன்ற பணியாளன்: நீர் என்னைக் கடைக்கண் பார்ப்பதற்கு எனக்கு என்ன தகுதி உள்ளது? என்றான்.
9.     பிறகு அரசர் சவுலின் பணியாளன் சீபாவை அழைத்து சவுலுக்கும் அவர் தம் அனைத்து வீட்டாருக்கும் உரியதெல்லாம் நான் உன் தலைவரின் பேரனுக்கு அளித்துவிட்டேன்.
10.     தலைவரின் பேரன் உண்பதற்காக நீயும், உன் பிள்ளைகளும், உன் பணியாளரும் அவனுக்காக நிலத்தை உழுது விளைச்சலைக் கொண்டு வருவீர்கள். ஆனால் உன் தலைவரின் பேரன் மெபிபோசேத்து எப்போதும் உன்னுடன் உணவருந்துவான் என்று கூறினார்.
11.     தலைவராம் அரசர் தம் பணியாளனுக்கு இட்ட கட்டளைபடியே உம் பணியாளனும் செய்வான் என்று அரசரிடம் சீபா கூறினான். இளவரசர்களில் ஒருவரைப் போலவே மெபிபொசேத்து தாவீதுடன் உணவருந்தி வந்தான்.
12.     மெபிபொசேத்துக்கு மீக்கா என்ற ஓர் இளம் மகன் இருந்தான். சீபாவின் வீட்டைச் சார்ந்த அனைவரும் மெபிபொசேத்து பணியாளராக இருந்தனர்.
13.     இரு கால் ஊனமான மெபிபொசேத்து அரசருடன் தொடர்ந்து உணவருந்திவந்தான், எனவே எருசலேமிலேயே தங்கியிருந்தான்.

அதிகாரம் 10.


1.     இதன் பிறகு அம்மோனியரின் மன்னன் இறந்தான். அவனுக்குப் பதிலாக அவன் மகன் ஆனூன் அரசாண்டான்.
2.     நாகாசின் மகன் ஆனூனுடன் நான் நம்பிக்கைக்குரியவனாய் நடந்து கொள்வேன்: ஏனெனில் அவன் தந்தையும் என்னோடு அவ்வாறே நடந்து கொண்டார் என்று தாவ¤து கூறனார். அவனுடைய தந்தையை குறித்து அவனுக்கு ஆறுதல் சொல்ல தாவீது தம் பணியாளரை அனுப்பினார். தாவீதின் பணியாளரும் அம்மோனியர் நாட்டுக்கு சென்றார்.
3.     ஆறுதல் கூறுமாறு ஆள்களை அனுப்பியதால் தாவீது உம் தந்தையை மேம்படுத்துகிறா என்று நினைக்கிறாயா? நகரைக் கண்டு வேவுபார்த்து அதை அழிக்கவன்றோ உன்னிடம் தாவீது தம் பணியாளரை அனுப்பியுள்ளார்! என்று ஆனூனிடம் அம்மோனியத் தலைவர்கள் கூறினார்கள்.
4.     எனவே ஆனூன் தாவீதின் பணியாளரை பிடித்து அவர்களுடைய தாடியில் ஒரு பகுதியைச் சிரைத்து அவர்களுடைய ஆடைகளை இடுப்புவரை கத்திரித்து அவர்களை அனுப்பி வைத்தான்.
5.     இது தாவீதுக்க அறிவிக்கப்பட, அவரும் தம் பணியாளரை சந்திக்க ஆளனுப்பினார். உங்கள் தாடிகள் வளரும் வரை எரிகோவில் தங்கி பிறகு திரும்புங்கள் என்ற அரசர் சொல்லியனுப்பினார். ஏனெனில் அவர்கள் மிகவும் அவமானப்பட்டிருந்தனர்.
6.     அம்மோனியர் தாங்கள் தாவீதின் வெஞ்சினத்திற்கு உள்ளானதைக் கண்டனர். அவர்கள் ஆளனுப்பி பெத்ரகோபிலிருந்து சோபாவிலிருந்தும் இருபதாயிரம் காலாள் படையினரையும், மாக்கா நாட்டு அரசரோடும் ஆயிரம் ஆள்களோடும் தோபிலிருந்து பன்னீராயிரம் ஆள்களையும் கூலிக்கு அமர்த்தினர்.
7.     தாவீது இதைக் கேட்டு, யோவாபையும் வலிமை மிகு வீரர் அனைவரையும் அனுப்பினார்.
8.     அம்மோனியர் புறப்பட்டு வந்து நுழைவாயில் அருகே போருக்காக அணிவகுத்தனர். சோபாவிலிருந்தும் இரகோபிலிருந்தும் வந்த சிரியர்களும் தோபையும் மாக்காவையும் சார்ந்த ஆள்களும் திறந்த வெளியில் தனியாக இந்தனர்.
9.     தனக்கு எதிராக முன்னும் பின்னும் போரணிகள் இருந்ததைக் கண்ட யோவாபு இஸ்ரயேலின் வலிமை மிகு வீரருள் சிலரைத் தேர்ந்தெடுத்து சிரியருக்கு எதிராக நிறுத்தினார்.
10.     மீதியானவரைத் தம் சகோதரன் அபிசாயின் பொறுப்பில் ஒப்படைத்தார்: அவன் அவர்களை அம்மோனியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தினான்.
11.     மேலும் யோவாபு சிரியர் என்னை மேற்கொள்வதாக இருந்தால், நீ எனக்கு உதவ வரவேண்டும்.
12.     நம் மக்களுக்காகவும் நம் கடவுளின் நகர்களுக்காகவும் நாம் வீறுகொண்டு போரிடுவோம், ஆண்டவர் தம் விருப்பப்படி செய்யட்டும் என்று கூறினார்.
13.     யோவாபும் அவரோடு இருந்தவர்களும் சிரியருக்கு எதிராகப் போரிடுமாறு அணிவகுத்துச் சென்றனர்: சிரியர் புறமுதுகு காட்டி ஓடினர்.
14.     சிரியர் தப்பியோடியதைக் கண்ட அம்மோனியரும் அபிசாயிடமிருந்து தப்பியோடி நகருக்குள் வந்தனர். அம்மோனியருடன் போரிட்ட யோவாபு எருசலேமுக்கு திரும்பிவந்தார்.
15.     இஸ்ரயேலிடம் தாங்கள் தோற்றத்தைக் கண்ட சிரியர் மீண்டும் ஒன்றாக கூடினர்.
16.     அததேசர் ஆளனுப்பி யூப்பிரத்தீசு ஆற்றுக்கு அப்பால் இருந்த சிரியரையும் திரட்டிக் கொண்டு வரச்செய்தான். படைத்தலைவனான சோபாக்கின் தலைமையில் அவர்கள் ஏலாமுக்கு வந்தனர்.
17.     தாவீது இதைக் கேட்டதும் இஸ்ரயேலையும் ஒன்று திரட்டி யோர்தானைக் கடந்து ஏலாமுக்கு வந்தார். சிரியர் தாவீதுக்கு எதிராக அணிவகுத்து அவரோடு போரிட்டனர்.
18.     சிரியர் இஸ்ரயேலருக்குமுன்பாக புறமுதுகாட்டி ஓடினர். சிரியருள் எழுநூறு தேர்வீரர்களையும், நாற்பதாயிரம் குதிரை வீரர்களையும் தாவீது கொன்றார். மேலும் படைத்தலைவன் சோபாக்கை அவர் வாளால் தாக்க அவனும் அங்கே மடிந்தான்.
19.     அததேசருக்குத் கப்பம் கட்டி வந்த மன்னர்கள் அனைவரும் இஸ்ரயேலிரிடம் தாங்கள் தோற்றத்தைக் கண்டு, அவர்களோடு சமாதானம் செய்து அவர்களுக்குப் பணிந்திருந்தனர். இதற்கு பின் சிரியர் அம்மோனியருக்கு உதவ அஞ்சினர்.

அதிகாரம் 11.


1.     இளவேனில் காலத்தில் அரசர்கள் போருக்கு செல்வது வழக்கம். அப்பொழுது தாவீது யோவாபைத் தம் பணியாளரோடும் இஸ்ரயேலர் அனைவரோடும் அனுப்பினார். அவர்கள் அம்மோனியரைத் தோற்கடித்து இராபாவை முற்றுக்கையிட்டனர். தாவீதோ எருசலேமிலேயே தங்கிவிட்டார்.
2.     ஒரு நாள் மாலை வேளை, தாவீது தம் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனை மாடியில் உலாவிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் குளித்துக் கொண்டிருப்பதைக் தாவீது கண்டார். அவள் மிகவும் அழகிய தோற்றம் கொண்ருந்தாள்.
3.     தாவீது அவளை யார் என்று கேட்க, ஆளனுப்பினார். அவள் எலியாவின் மகளும் இத்தியர் உரியாவின் மனைவியுமான பத்சேபா என்று கூறினர்.
4.     தாவீது தூதனுப்பி அவளை வரவழைத்தார். அப்பொழுதுதான் மாதவிலக்கு முடிந்து அவள் தன்னைத் தூய்மைப்படுத்தியிருந்தாள். அவள் தம்மிடம் வந்ததும் அவர் அவளோடு உடலுறவு கொண்டார். பிறகு அவள் தம் இல்லம் சென்றாள்.
5.     அப்பெண் கருவுற்று தாவீதிடம் ஆளனுப்பி, தான் கருவுற்றிருப்பதாக அவரிடம் தெரிவித்தாள்.
6.     அப்பொழுது தாவீது இத்தியனான உரியவை என்னிடம் அனுப்பி வை என்று யோபாவுக்குச் செய்தி செய்தி அனுப்பினார். யோவாபு உரியாவைத் தாவீதிடம் அனுப்பிவைத்தார்.
7.     உரியா தாவீதிடம் வந்ததும் அவர் யோவாபின் நலம் பற்றியும் வீரர்களின் நலம் பற்றியும் போரின் போக்குப் பற்றியும் விசாரித்தார்.
8.     பிறகு தாவீது உரியாவிடம் உன் வீட்டுக்குச் சென்று உன் பாதங்களைக் கழுவிக் கொள் என்றார். உரியா அரண்மனையை விட்டுச் சென்றதும் அவர் பின்னாலேயே அரசர் அன்பளிப்பு அனுப்பி வைத்தார்.
9.     உரியாவோ தம் தலைவரின் பணியாளர் அனைவரோடும் அரண்மனை வாயிலிலேயே படுத்துக் கொண்டார். தம் வீட்டுக்குச் சென்றார்.
10.     உரியா தம் வீட்டுக்கு செல்லவில்லை என்று தாவீது அறிந்தும் அவரிடம் நீ நெடும் தொலைவிலிருந்தும் வரவில்லையா? பின் ஏன் நீ வீட்டிற்குச் செல்லவில்லை? என்று கேட்டார்.
11.     அதற்கு உரியா தாவீதிடம் பேழையும் இஸ்ரயேலரும் யூதாவினரும் கூடாரங்கிளல் தங்கியிருந்தனர். என் தலைவர் யோவாபும் என் தலைவரின் பணியாளர்களும் திறந்த வெளியல் த்கியிருக்கின்றனர். நான் மட்டும் என் வீட்டிற்குச் சென்று உண்டு குடித்து என் மனைவியோடு இருப்பேனா? உம் மேலும் உம் உயிர்மேலும் ஆணை! நான் அப்படிச் செய்யமாட்டேன் என்று சொன்னார்.
12.     தாவீது உரியாவிடம் இன்னும் இங்கேயே தங்கு. நாளை உன்னை அனுப்பிவைக்கிறேன் என்றார். அன்றும் மறுநாளும் உரியா எருசலேமிலேயே தங்கினார்.
13.     தாவீது அவரை அழைத்து அவரோடு உண்டு குடித்து, அவருக்கு குடிப்போதை யூட்டினார். தலைவரின் பணியாளரோடு தம் படுக்கையில் தூங்கச் சென்றார். தம் வீட்டுக்கு அவர் செல்லவே இல்லை.
14.     காலையில் தாவீது யோவாபுக்கு ஒரு மடல் எழுதி அதை உரியாவின் கையில் கொடுத்தனுப்பினார்.
15.     அம்மடலில் அவர், உரியாவைப் போர் கடுமையாக நடக்கும் முன்னிலையில் நிறுத்தி, அவனைவிட்டு பின்வாங்கு அவன் வெட்டுண்டு மடியட்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
16.     யோவாபு நகரை முற்றுகையிட்டுக் கொண்டிருந்த போது வலிமைமிகு எதிரிகள் இருந்த இடத்தை அறிந்து அங்கே உரியாவை நிறுத்தினார்.
17.     நகரின் ஆள்கள் புறப்பட்டு வந்து யோவாபைத் தாக்கினர். அப்பொழுது போரில் வீழ்ந்தவருள் தாவீதின் வீரர்களும் சிலர். இத்தியர் உரியாவும் மாண்டார்.
18.     பிறகு யோவாபு போரைப் பற்றிய அனைத்துச் செய்திகளையும் தாவீதுக்கு சொல்லி அனுப்பினார்.
19.     மேலும் அவர் தூதனுக்கு இவ்வாறு கட்டளையிட்டிருந்தார்: போரைப் பற்றிய அனைத்துச் செய்திகளையும் அரசருக்கு சொல்லி முடிப்பதற்குள்
20.     அரசர் ஒரு வேளை வெகுண்டெழுந்து, உன்னிடம், நீங்கள் ஏன் நகரை அணுகிப் போரிட்டீர்கள்? அவர்கள் மதில்களினின்று தாக்குவார்கள் என அறியீரோ?
21.     எருபசத்தின் மகன் அபிமெலக்கை கொன்றது யார்? மதில் சுவரினின்று ஒரு எந்திரக் கல்லை எறிந்தவள் ஒரு பெண்ணல்லவா? அவன் தேபேசில் இறந்துவிட்டானே? நீங்கள் ஏன் மதில்களை நெருங்கினீர்கள்? என்று கேட்டால், நீ உம் பணியாளன் இறந்து விட்டான் என்று சொல்.
22.     தூதன் புறப்பட்டுச் சென்று யோவு¡பு சொல்லியனுப்பிய அனைத்தையும் தாவீதிடம் கூறினான்.
23.     அந்த ஆள்கள் எங்களை மேற்கொண்டு எங்களுக்கு எதிராக திறந்த வெளிக்கு வந்தார். நாங்களோ நுழைவாயில்வரை அவர்களைத் துரத்தினோம்.
24.     அப்போது மதில் மேலிருந்து வில்வீரர் உம் பணியாளரைத் தாக்கினார். அரசரின் பணியாளருள் சிலர் இறந்தனர். இத்தியரான உம் பணியாளர் உரியாவும் இறந்துவிட்டார்.
25.     அப்போது தாவீது தூதனிடம் நீ யோவாபிடம் சென்று இதைப்பற்றி நீ கவலைப் படவேண்டாம். இங்கொருவனும் அங்கொருவனும் வாளுக்கு இரையாக்கின்றனர். நகருக்கு எதிராக இன்னும் கடுமையாகப் போர் புரிந்து அதை அழைத்து விடு என்று அவனை உற்சாகப்படுத்து என்றார்.
26.     உரியானின் மனைவி தன் கணவன் இறந்துவிட்டதைக் கேள்வியுற்று அவருக்காகப் புலம்பி அழுதார்கள்.
27.     துக்ககாலம் முடிந்ததும் தாவீது ஆளனுப்பி அவளைத் தம் வீட்டிற்கு கொண்டு வந்தார். அவள் அவருக்கு மனைவியாகி ஆண்குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள். தாவீது செய்த இச்செயல் ஆண்டவரின் பார்வையில் தீயதாக இருந்தது.

அதிகாரம் 12.


1.     ஆண்டவர் நாத்தானைச் தாவீதிடம் அனுப்பினார்: நாத்தான் அவரிடம் வந்து, பின்வருமாறு கூறினார்: ஒரு நகரில் இரு மனிதர்கள் இருந்தனர். ஒருவன் செல்வன் மற்றவன் ஏழை.
2.     செல்வனிடம் ஆடு, மாடுகள் ஏராளமாய் இருந்தன.
3.     ஏழையிடம் ஒரு ஆட்டுக் குட்டியைத் தவிர வேறு எதுவுமே இல்லை. அவன் அதை விலைக்கு வாங்கியிருந்தான். அது அவனோடும் அவன் குழந்தைகளோடும் இருந்து வளர்ந்து பெரியதாகியது. அவனது உணவை உண்டு, அவனது கிண்ணத்திலிருந்தும் நீர்குடித்து அவனது மடியில் உறங்கி, அவனுக்கு ஒரு மகனைப் போலவே அது இருந்தது.
4.     வழிப்போக்கான ஒருவன் செல்வனிடம் வந்தான். தன்னிடம் வந்த வழிப்போக்கானுக்கு உணவு தயார் செய்ய தன் ஆடுமாடுகளினின்று ஒன்றை எடுப்பதை விட்டு, அந்த ஏழையின் ஆட்டுக் குட்டியை எடுத்து அந்த வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்தான்.
5.     உடனே தாவீது அம்மனிதன் மேல் சீற்றம் கொண்டு, ஆண்டவர் மேல் ஆணை! இதைச் செய்தவன் கட்டாயம் சாகவேண்டும்.
6.     இரக்கமின்றி அவன் செய்ததால் அவன் ஓர் ஆட்டுக்குட்டிக்கான நான்கு மடங்கு திருப்பித் தரவேண்டும் என்று நாத்தானிடம் கூறினார்.
7.     அப்போது நாத்தான் தாவீதிடம், நீயே அம்மனிதன். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார். நான் இஸ்ரயேலின் அரசனாய் உன்னைத் திருப்பொழிவு செய்தேன். நான் உன்னைச் சவுலின் கையிலினின்று விடுவித்தேன்.
8.     தலைவரிடம் வீட்டையும் ஒப்படைத்தேன்: அவன் மனைவியரையும் உன் மனைவியர் ஆக்கினேன்: இஸ்ரயேல் குடும்பத்தையும் யூதா குடும்பத்தையும் உனக்கு அளித்தேன்: இது போதாதென்றால் நான் மேலும் உனக்கு மிகுதியாய் கொடுத்திருப்பேன்.
9.     பின் ஏன் நீ ஆண்டவரின் வார்த்தையைப் புறக்கணித்து அவர்தம் வார்த்தையில் தீங்கு செய்தாய்? இத்தியன் உரியாவை நீ வாளுக்கு இறையாக்கினாய், அவன் மனைவியை உன் மனைவியாய் ஆக்கிக் கொண்டாய்: அம்மோனியரின் வாளால் அவனை மாய்த்துவிட்டாய்!
10.     இனி உன் குடும்பத்தினின்று வாள் என்றுமே விலகாது. ஏனெனில் இத்தியன் உரியாவின் மனைவியை உன் மனைவியாய் ஆக்கிக் கொண்டாய்.
11.     இதோ! ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உன் குடும்பத்தினின்றே நான் எனக்கு தீங்கை வர வழைப்பேன்: உன் கண்கள் காண, உன் மனைவியரை உனக்கு அடுத்திருப்பவனிடம் ஒப்புவிப்பேன். அவன் பட்டப் பகலில் உன் மனைவியரோடு படுத்திருப்பான்.
12.     நீ மறைவில் செய்ததை இஸ்ரயேலும் காணுமாறு நான் பட்டப்பகலில் நிகழச் செய்வேன் என்று கூறினார்.
13.     அப்போது தாவீது நாத்தானிடம், நான் ஆண்டவருக்கு எதிராக பாவம் செய்துவிட்டேன் என்று சொன்னார். நாத்தான் தாவீதிடம், ஆண்டவர் பாவத்தை நீக்கிவிட்டார்.
14.     ஆயினும், ஆண்டவர் எதிரிகள் அவரை இழிவாக எண்ணும்படி நீ இவ்வாறு செய்தால் உனக்கு பிறக்கும் மகன் உறுதியாகவே சாவான் என்று சொன்னார்.
15.     பின்பு நாத்தான் தம் வீட்டுக்குச் சென்றார். உரியாவின் தாவீதிற்கு பெற்றெடுத்த குழந்தையை ஆண்டவர் தாக்க, அது நோயுற்றுச் சாகக் கிடந்தது.
16.     தாவீது அக்குழந்தைக்காக ஆண்டவரிடம் மன்றாடினார். உண்ணா நோன்பு மேற்கொண்டு உள்ளே சென்று இரவெல்லாம் படுத்துக்கிடந்தார்.
17.     அவர்கள் வீட்டின் பெரியோர்கள் தரையினின்று அவரை எழுப்பச் சென்றனர்: அவருக்கோ விருப்பமில்லை: அவர்களோடு அவர்களும் உண்ணவில்லை.
18.     பின்பு ஏழாவது நாள் குழந்தை இறந்தது. குழந்தை இறந்ததை தாவீதிடம் பணியாளர் சொல்ல அஞ்சினர். குழந்தை உயிரோடு இருந்தும் நாம் அவரிடம் பேசிய போது அவர் நம் குரலுக்கு செவி கொடுக்கவில்லையே! குழந்தை இறந்து விட்டது நாம் அவரிடம் சொன்னால் அவர் தமக்கு என்ன தீங்கு இழைத்துக் கொள்வாரோ! என்று அவர்கள் பேசிக் கொண்டார்கள்.
19.     பணியாளர்கள் தங்களுக்குள் இரகசியமாக பேசிக்கொண்டதைத் தாவீது கண்டு, குழந்தை இறந்து விட்டதை உணர்ந்து, தம் பணியாளரிடம் குழந்தை இறந்து விட்டதா? என்று கேட்க அவர்களும், ஆம் இறந்துவிட்டது என்று பதில் கூறினர்.
20.     உடனே தாவீது தரையினின்று எழுந்தார். குளித்து, நறு நெய் பூசி, உடைகளை மாற்றிக் கொண்டார். கடவுளின் இல்லம் சென்று அவரைத் தொழுதார். பிறகு அவர்தம் இல்லம் வந்தார். அவரே கேட்க, உணவு பரிமாறப்பட்டது. அவர் அதை உண்டார்.
21.     நீவிர் செய்ததை என்னென்போம்! உயிரோடிருந்த குழந்தைக்காக நீர் உண்ணாமல் அழுதீர்: ஆனால் குழந்தை இறந்ததும் எழுந்து உணவு கொண்டீரே! என்று அவருடைய பணியாளர் அவரிடம் கூறினார்.
22.     குழந்தை உயிரோடிருந்த போது ஒரு வேளை ஆண்டவர் இரங்குவார்: அவனும் பிழைப்பான் என்று நினைத்து நான் உண்ணா நோன்பிருந்து அழுதேன்.
23.     இப்போது அவன் இறந்துவிட்டான். இனி நான் ஏன் உண்ணா நோன்பு இருக்கவேண்டும்? என்னால் அவனைத் திருப்பி கொண்டுவர முடியுமா? நான் தான் அவனிடம் சொல்ல முடியுமோ ஒழிய, அவன் என்னிடம் திரும்பி வர மாட்டான் என்று கூறினார்.
24.     தாவீது தம் மனைவி பத்சேபாவுக்கு ஆறுதல் கூறினார். பிறகு அவளுடன் உடலுறவு கொண்டார். அவள் ஒரு குழந்தையை பெற்றெடுக்க அவனை சாலமோன் என்று அழைத்தார். ஆண்டவர் அவன் மீது அன்பு கொண்டிருந்தார்.
25.     ஆண்டவர் இறைவாக்கினர் நாத்தானை அனுப்பினார். அவர் ஆண்டவரை முன்னிட்டு அவனை எதிதியா என்று அழைத்தார்.
26.     யோவாபு அம்மோனியரின் நகரான இரபாவுக்கு எதிராகப் போரிட்டு அதன் கோட்டையை கைப்பற்றினார்.
27.     யோவாபு தாவீதிடம் தூதரை அனுப்பி, இராபாவுக்கு எதிராக போரிட்டு அதன் நீருற்றுகளை கைப்பற்றிவிட்டேன்.
28.     இப்போது எஞ்சியுள்ள மக்களை நீர் ஒன்றுதிரட்டி நகருக்கு எதிரே கூடாரமிட்டு அதைக் கைப்பற்றிக்கொள்ளும். ஏனெனில் நான் இந்நகரைக் கைப்பற்றிக் கொண்டால் அதை என் பெயரால் அழைக்க நேரிடும் அல்லவா? என்று கூறினார்.
29.     தாவீது மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி இரபாவுக்கு சென்று அதற்கு எதிராக போரிட்டு அதைக் கைப்பற்றினார்.
30.     அதன் மன்னனின் தலையிலிருந்த மகுடத்தை எடுத்தார். பொன்னாலும் விலையுயர்ந்த கற்களாலுமான அம் மகுடம் ஒரு தாலந்து எடைக் கொண்டதாய் இருந்தது. அதைக் கொண்டு தாவீது முடி சூட்டினார். அந்நகரிலிருந்து கொள்ளைப் பொருளையும் மிகுதியாக கொண்டு வந்தார்.
31.     அங்கிருந்த மக்களையும் கொண்டு வந்து இரம்பம், கடப்பாரை, கோடரி வேலைகளுக்கும் செங்கல் சூளை வேலைகளுக்கும் அவர்களை அமர்த்தினார். இவ்வாறே அனைத்து அம்மோனிய நகர்களுக்கும் செய்தார். பிறகு தாவீதும் மக்கள் அனைவரும் எருசலேம் திரும்பினர்.

அதிகாரம் 13.


1.     பின்னர் நிகழ்ந்தது: தாவீதின் மகன் அப்சலோமிற்குத் தாமார் என்ற சகோதரி இருந்தாள். அவள் பேரழகி. தாவீதின் இன்னொரு மகன் அம்னோன் அவள் மீது மோகம் கொண்டிருந்தான்.
2.     அம்மோன் தன் சகோதரி தாமாருக்காக மிகவும் ஏங்கி நோயுற்றான். அவள் கன்னியாக இருந்ததால். அவளிடம் அவனால் ஒன்றும் செய்யமுடியவில்லை.
3.     அம்மோனுக்கு யோனத்தாபு என்ற ஒரு நண்பன் இருந்தான். அவன் தாவீதின் சகோதரனான சிமயியின் மகன் யோனத்தாபு சூழ்ச்சி மிக்கவன்.
4.     இளவரசே!நீர் நாளுக்கு நாள் சோர்ந்து போவதேன்? என்னிடம் சொல்லமாட்டீரா? என்று கேட்க, அதற்கு அம்மோன், என் சகோதரன் அப்சலோமின் சகோதரி மீது நான் மையல் கொண்டுள்ளேன் என்று அவனிடம் கூறினான்.
5.     யோனத்தாபு அவனிடம், உம் படுக்கையில் படுத்துக்கொண்டு நோயுற்றவர் போல் பாசாங்கு செய்யும். உம் தந்தை உம்மைக் காணவருவார். அவரிடம் என் சகோதரி தாமாரைத் தயைகூர்ந்து அனுப்பி வையுங்கள். அவள் எனக்கு உணவு தரட்டும். என் கண்முன்னே அவள் உணவு தயாரிக்கட்டும். நான் அதைக் கண்டு அவள் கையிலிருந்து உண்பேன் எனச் சொல்லும் என்று யோத்தாபு அவனுக்கு ஆலோசனைக் கூறினார்.
6.     அவ்வாறே இம்மோன் படுத்துக் கொண்டு நோயுற்றவன் போல் பாசாங்கு செய்தான். அரசர் அவனைக் காண வந்தபோது, அம்மோன் அவரிடம், தயைகூர்ந்து என் சகோதரி தாமாரை அனுப்பி வையுங்கள், அவள் என் கண்முன்னே இரண்டொரு பணியாரங்கள் செய்தால், நான் அவள் கையிலிருந்து உண்பேன் எனக் கூறினான்.
7.     தாவீது வீட்டுக்கு ஆளனுப்பி தாமாரை வரச்சொல்லி, உடனே உன் சகோதரன் அம்மோன் வீட்டுக்குச் சென்று அவனுக்கு உணவு தயார் செய் என்றார்.
8.     தாமார் தன் சகோதரன் அம்மோன் வீட்டுக்குச் சென்றாள். அவனோ படுத்திருந்தான். அவள் மாவு எடுத்து அவன் கண்முன்னே பணியாரங்கள் சுட்டாள்.
9.     பிறகு அவள் பாத்திரத்தைக்கொண்டு வந்து அவனுக்குப் பரிமாறினாள். அவன் உண்ண மறுத்தான். எல்லாரையும் என்னிடமிருந்து போகச் சொல் என்று அம்மோன் கேட்க, எல்லோரும் அவனை விட்டுச் சென்றனர்.
10.     உணவை உள்ளறைக்குக் கொண்டுவா. நான் உன் கையிலிருந்து உண்பேன் என்று அம்மோன் தாமாரிடம் கூறினான். தாமார் சுட்ட பணியாரங்களை எடுத்துக் கொண்டு தன் சகோதரன் அம்மோனிடம் படுக்கையறைக்குள் சென்றாள்.
11.     அவன் உண்பதற்காக அவற்றை எடுத்துக் கொண்டு அவனருகே சென்ற போது அவன் அவளை பிடித்து இழுத்து, என் சகோதரியே! வா என்னோடு படு என்றான்
12.     வேண்டாம் சகோதரனே! என்னைக் கட்டாயப் படுத்த வேண்டாம். ஏனெனில் இஸ்ரயேலில் இவ்வாறு நடப்பதில்லை. இந்த மடமையைச் செய்யாதே.
13.     எனது அவமானத்தை நான் எப்படி போக்குவேன்? நீயும் இஸ்ரயேலில் மதிக் கெட்ட ஒருவனாய் இருப்பாய். தயைகூர்ந்து அரசரிடமே கேள். அவர் என்னை உனக்குக் கொடுக்க மறுக்க மாட்டார் என்று அவளிடம் கெஞ்சினாள்.
14.     அவனோ அவளது குரலுக்கு செவிகொடுக்கவில்லை. அவளை விட வலிமைமிக்கவனாக இருந்ததால், அவன் அவளை கற்பழித்தான்.
15.     அதன் பிறகு அம்மோன் அவளை மிகவும் அதிகமாக வெறுத்தான். அவன் எந்த அளவுக்கு அவள் மீது மோகம் கொண்டிருந்தானோ அந்த அளவுக்கு மிகுதியாக அவளை வெறுத்து, எழுந்து சென்று விடு என்று அவளிடம் கூறினான்.
16.     அவளோ, வேண்டாம், என்னை அனுப்பிவிடும் கொடுமை, நீ எனக்குச் செய்த முன்னைய கொடுமையை விடவும் மோசமானது என்று கதறினாள். ஆனால் அவன் அவளுக்குச் செவிகொடுக்க விரும்பவில்லை.
17.     தனக்குப் பணிவிடை செய்து வந்த இளைஞனை அவன் அழைத்து, இந்தப் பெண்ணை என்னிடமிருந்து வெளியேற்று: அவள் சென்றதும் கதவைத் தாழிடு என்று கூறினான்.
18.     பணியாளன் அவளை வெளியேற்றி, அவள் சென்றதும் கதவைத் தாழிட்டான். கன்னியராக இருந்த அரச மகளிரின் வழக்கப்படி அவள் பல்வண்ண, நீண்ட ஆடை அணிந்திருந்தாள்.
19.     தாமார் தன் தலைமீது சாம்பல் தூவினான்: தன் மீதிருந்த பல்வண்ண ஆடையைக் கிழித்தாள்: தன் தலை மீது கைவைத்து அழுதுக் கொண்டே சென்றாள்.
20.     அப்பொழுது அவள் சகோதரன் அப்சலோம் அவளிடம், இதை எனக்குச் செய்தது அம்னோனா? என் சகோதரி! இப்போது நீ அமைதியாய் இரு. அவன் என் சகோதரன்! இதை மனதில் வைக்காதே என்று கூறினான். தாமார் தன் சகோதரன் அப்சலோமின் வீட்டில் ஆறுதலின்றி வாழ்ந்தாள்.
21.     நடந்த இவ்வனைத்தையும் தாவீது கேள்வியுற்றுக் கடுஞ்சினம் கொண்டார்.
22.     அப்சலோம் அம்னோனுடன் நல்லதோ தீயதோ ஒன்றுமே பேசவில்லை. ஏனெனில் தன் சகோதரி தாமாரைக் கற்பழித்ததற்காக அப்சலோம் அம்னோனை வெறுத்தாள்.
23.     ஈராண்டுகள் கழிந்தபிறகு அப்சலோம் எப்ராயிம் அருகே பாகால் ஆட்சோரில் ஆடுகளுக்கு முடிகத்தரித்தான். அப்போது அப்சலோம் இளவரசர் அனைவரையும் அழைத்திருந்தான்.
24.     அப்சலோம் அரசரிடம் வந்து, இதோ! அடியேன் ஆடுகளுக்கு முடிக்கத்தரிக்கிறேன். அரசரும் அவருடைய பணியாளரும் தயைகூர்ந்து அடியேனோடு வாருங்கள் என்றான்.
25.     அரசர் அப்சலோமிடம், என் மகன், அப்சலோம் வேண்டாம்! உனக்கு நாங்கள் சுமையாக இருக்க வேண்டாம் என்று கூறினார். அவன் அவரை வலியுறுத்தியு் அவர் சொல்ல விரும்பாமல், அவனுக்கு ஆசியளித்தார்.
26.     பின் அப்சலோம், இல்லாவிடில் என் சகோதரன் அம்மோன் உங்களோடு செல்லட்டும் என்று கேட்க, அரசர், அவன் உன்னோடு ஏன் செல்ல வேண்டும்? என்று அவனிடம் வினவினார்.
27.     அவன் அவரை வற்புறுத்தியதால் அம்னோனையும் இளவரசர் அனைவரையும் அவரோடு அனுப்பி வைத்தார்.
28.     அப்சலோம் தம் பணியாளரிடம், அம்னோனின் மனம் மதுவால் மயங்கும் நேரம் பாருங்கள்: அம்னோனைத் தாக்குங்கள் என்று நான் உங்களிடம் கூறும் போது, அவனைக் கொன்றுவிடுங்கள். அஞ்சவேண்டாம். உங்களுக்குக் கட்டளையிடுபவன் நான் அல்லவா? உறுதிபூண்டு வீரர் புதல்வர்களாகச் செயல்படுங்கள் என்று கூறினான்.
29.     அப்சலோமின் பணியாளன் அவன் கட்டளையிட்டவாறே அம்மோனுக்குச் செய்தார்கள். இளவரசர் அனைவரும் அவரவர் தம் கழுதைகளில் ஏறித் தப்பி ஓடினார்.
30.     அவர்கள் திரும்பிச் செல்கையில் அப்சலோம் இளவரசர் அனைவரையும் கொன்றதாகவும் அவருக்குள் ஒருவரும் தப்பவில்லை என்றும் தாவீதுக்குச் செய்து கிடைத்தது.
31.     அரசர் எழுந்து தம் ஆடைகளை கிழித்து கொண்டு தரையில் படுத்தார். அங்கே நின்று கொண்டிருந்த பணியாளர் அனைவரும் தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டனர்.
32.     தாவீதின் சகோதரன் சிமயாவின் மகன் யோனத்தாபு, உம் புதல்வர்களாகிய இளவரசர்கள் அனைவரையும் கொன்றுவிட்டார்கள் என்று என் தலைவர் நினைக்க வேண்டாம். ஏனெனில் அம்னோன் மட்டுமே இறந்துள்ளான். தன் சகோதரி கற்பழிக்கப்பட்ட நாளிலிருந்து அப்சலோம் தன் எண்ணத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தான்.
33.     ஆகவே என் தலைவராம் அரசர், இளவரசர் அனைவரும் இறந்துவிட்டதாக நினைத்துக் கவலைப்படவேண்டாம்: ஏனெனில் அம்னோன் மட்டுமே இறந்துள்ளான் என்று கூறினான்.
34.     இதற்கிடையில் அப்சலோம் ஓட்டம் பிடித்தான். அப்போது அரண்மனைக் காவலன் தன் கண்களை உயர்த்திப் பார்த்த பொழுது, இதோ, திரளான மக்கள் மலையோரமாகப் பின்னால் இருந்த சாலைவழியாக வந்து கொண்டிருந்தனர்.
35.     அப்போது யோனதாபு அரசரிடம் பாருங்கள் இளவரசர் வந்துவிட்டனர்: நான் சொன்னது போலவே நிகழ்ந்து விட்டது என்றான்.
36.     அவன் பேசி முடிக்கும் போது இளவரசரும் வந்து, ஓலமிட்டு அழுதனர். அரசரும் பணியாளர் அனைவரும் வெகுவாய்ப் புலம்பி அழுதனர்.
37.     தப்பியோடிய அப்சலோம் கெசூர் அரசன் அம்மிகூதின் மகள் தல்மாயிடம் சென்றடைந்தான். தாவீது தம் மகனுக்காக நாள்தோறும் புலம்பிக் கொண்டிருந்தார்.
38.     கெசூருக்குத் தப்பியோடிய அப்சலோம் அங்கே மூன்று ஆண்டுகள் தங்கியிருந்தான்.
39.     அம்மோனின் மறைவு பற்றிய கவலை நீங்கியப் பின், அரசர் தாவீது அப்சலோமைக் காணும் ஏக்கத்தில் இருந்தார்.

அதிகாரம் 14.


1.     அரசரின் உள்ளம் அப்சலோமின் மீது அன்பு கொண்டிருந்ததை செரூயாவின் மகன் யோவாபு அறிந்திருந்தான்.
2.     தெக்கோவாவுக்கு ஆளனுப்பி அங்கிருந்து கூர்ந்த அறிவுடைய ஒரு பெண்ணை யோவாபு தன்னிடம் கூட்டிவரச்சொல்லி, அவளிடம், நீ துக்கம் கொண்டாடுபவளைப் போல் நடி: இழவு ஆடைகளை அணிந்து கொள்: நறு நெய் பூசிக் கொள்ளாதே: இறந்தவர்க்காக பல நாள்கள் இழவு கொண்டாகிறவளைப்போல் நீ இருக்க வேண்டும்.
3.     பின் அரசரிடம் சென்று அவரிடம் நீ இவ்வாறு பேச வேண்டும், என்று கூறி அவள் என்ன பேச வேண்டும் என்றும் யோவாபு சொல்லிக் கொடுத்தார்.
4.     தெக்கோவாவைச் சார்ந்த பெண் அரசனிடம் சென்று முகம் குப்புறத் தரையில் வீழ்ந்து வணங்கி, அரசே காப்பாற்றும் என்று கதறினாள்.
5.     உனக்கு என்ன வேண்டும்? என்று அரசர் அவளிடம் கேட்டார்.
6.     நான் ஒரு கைம்பெண். என் கணவர் இறந்துவிட்டார். உம் அடியவளுக்கு இரு பிள்ளைகள் இருந்தனர். இருவரும் திறந்த வெளியில் சண்டையிட்டுக் கொண்டனர். அவரைத் தடுத்து நிறுத்த யாரும் இல்லாததால் ஒருவன் மற்றவனைத் தாக்கிக் கொன்று விட்டான்.
7.     இதோ! உம் அடியவளுக்கு எதிராக என் குடும்பத்தார் அனைவரும் எழும்பி, தன் சகோதரனைக் கொன்றவனைக் கொடுத்து விடு. அவன் சகோதரனின் உயிருக்காக நான் அவனைக் கொல்ல வேண்டும் என்று கூறுகின்றனர். இவ்வாறு அவர்கள் எனக்கு இருக்கும் ஒவ்வொரு வாரிசையும் அவர்கள் அழைத்து எனக்கு எஞ்சியுள்ள ஒளியையும் அணைத்து, இவ்வுலகில் என் கணவனுக்குப் பெயரும் வழிமரபும் இல்லாமல் செய்து விடுவார்கள் என்று அவள் சொன்னாள்.
8.     நீ உன் வீட்டுக்குச் செல். உனக்காக நான் கட்டளை பிறப்பிப்பேன் என்று அரசர் அப்பெண்ணிடம் கூறினார்.
9.     பின் தெக்கோவாவைச் சார்ந்த பெண் அரசரிடம், என் தலைவராம் அரசே! என் குற்றம் என் மீதும் என் தந்தையின் வீட்டின் மீதும் இருக்கட்டும். அரசரும் அவரது அரியணையும் குற்றமற்று இருக்கட்டும் என்று கூறினாள்.
10.     உன்னிடம் யார் எதைச் சொன்னாலும் அவனை என்னிடம் கொண்டு வா, அவன் இனி உன்னைத் தொடவே மாட்டான் என்று அரசர் கூறினார்.
11.     இரத்தப் பழி வாங்க விழைவோர் இனிக் கொல்லாமல் இருக்கவும் என் மகன் சாகாமல் இருக்கவும் அரசராகிய நீர் ஆண்டவராகிய கடவுளிடம் மன்றாடுவீர் என்று அவள் சொன்னாள். வாழும் ஆண்டவர் மேல் ஆணை! உன் மகனின் ஒரு முடி கூடத் தரையில் விழாது என்று அவர் பதிலளித்தார்.
12.     பிறகு அப்பெண், உம் அடியவள் என் தலைவராம் அரசரிடம் ஒரு வார்த்தை சொல்ல அனுமதி தாரும் என்ற கேட்க, அவரும் சொல் என்று பதிலளித்தார்.
13.     அவள் சொன்னது: கடவுளின் மக்களுக்கு எதிராக இத்தகைய எண்ணத்தை நீர் கொண்டிருப்பது ஏன்? தம்மால் துரத்தப்பட்டவனை அரசர் திரும்ப அழைக்காமல் இருப்பதனால் இந்தத் தீர்ப்பு அவரையே குற்றவாளி ஆக்குகிறது!
14.     நாம் இறப்பது உறுதி. தரையில் சிந்தப்பட்டு மீண்டும் சேகரிக்க முடியாத நீரைப் போன்றவர்கள் நாம். ஆனால் துரத்தப்பட்டவனைப் பொறுத்த மட்டில், அவன் தம்மிடமிருந்து விலகிவிடாதபடி கடவுள் திட்டமிடுகிறார். அவன் உயிரை எடுக்க மாட்டார்.
15.     இதைக் என் தலைவராம் அரசரிடம் நான் கூறவந்தபோது, மக்கள் என்னை அச்சுறுத்தினர்: உமது அடியவளோ நான் அரசரிடம் போவோம். ஒரு வேளை அரசர் அடியவளின் வார்த்தைக்குச் செவிக் கொடுப்பார்.
16.     அரசர் செவி கொடுத்து, என்னையும் என் மகனையும் கடவுளின் உரிமைச்சொத்தினின்று அழிக்க வருபவனின் கையினின்று தம் அடியவளைக் காப்பாற்றுவார் என்று எண்ணினேன்.
17.     ஏனெனில் உம் அடியவள் எண்ணப்படி, எம் தலைவராம் அரசரின் வார்த்தை எனக்கு அமைதி தரும்: கடவுளின் தூதரைப் போல் என் தலைவராம் அரசர் நன்மையும் தீமையும் புரிந்துகொள்வார். ஆண்டவராம் கடவுள் உம்மோடு இருப்பார் என்று கூறினாள்.
18.     அதன்பின் தாவீது அப்பெண்ணிடம் மறுமொழியாக, நான் உன்னிடம் கேட்பது எதற்கும் மறைக்காமல் பதில் சொல்! என்றார். அதற்கு அவள், தயைகூர்ந்து என் தலைவராம் அரசர் கேட்கட்டும் என்றாள்.
19.     இதிலெல்லாம் உன்னோடு யோவாபுக்குப் பங்கு உண்டு அல்லவா? என்று அரசர் தாவீதிடம் கேட்டார். என் தலைவராம் அரசே! உம் உயிர் மேல் ஆணை! என் தலைவராம் அரசரின் வார்த்தையிலிருந்து யாரும் வலமோ இடமோ திரும்ப முடியாது. உம் அடியான் யோவாபுதான் என்னைப் பணித்தவர். அவரே இச்சொற்கள் அனைத்தையும் உம் அடியவளுக்குச் சொல்லித் தந்தார்.
20.     உம் அடியான் யோவாபு தற்போதைய நிலை மாற வேண்டுமென இதைச் செய்தார். ஆனால் கடவுளின் தூதருக்கு நிகரான பேரறிவு கொண்ட என் தலைவர் உலகில் நடக்கும் அனைத்தையும் அறிவார் என்று அப்பெண் கூறினாள்.
21.     அப்போது அரசர் யோவாபை அழைத்து, இதைச் செய்தவன் நீயே போ! இளைஞன் அப்சலோமைக் கூட்டிவா என்றார்.
22.     யோவாபு முகம் குப்புறத் தரையில் வணங்கி, அரசரை வாழ்த்தி, என் தலைவராம் அரசே! உம் அடியானின் சொற்படி அரசர் செய்துவிட்டார். இதிலிருந்து நான் உன் கண்முன் கருணைப் பெற்றுவிட்டேன் என்று உம் அடியான் அறிவான் என்று கூறினார்.
23.     யோவாபு எழுந்து கெசூருக்குச் சென்று அப்சலோமை எருசலேமுக்குச் கூட்டி வந்தார்.
24.     அவன் தன் வீட்டுக்கே திரும்பட்டும். என் முகத்தில் அவன் விழிக்கக்கூடாது என்று அரசர் கூற, அப்சலோம் தன் வீட்டுக்குத் திரும்பினான். அரசரின் முகத்தில் அவன் விழிக்கவில்லை.
25.     இஸ்ரயேல் அனைத்திலும் அப்சலோமைப் புகழ்பெற்ற அழகன் வேறு எவனும் இல்லை. உச்சி முதல் உள்ளங்கால் வரை எந்தக் குறையும் இல்லை.
26.     அவன் முடிவெட்டிக் கொள்ளும் போது ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் தலைக்குப் பாரமாயிருந்தால், அவன் முடி வெட்டிக் கொள்வான் அது அரச அளவையின் படி இரண்டு கிலோவுக்கு மேலாக இருக்கும்.
27.     அப்சலோமுக்கு மூன்று ஆண்குழந்தைகள் பிறந்தன. தாமார் என்ற பெயர் கொண்ட இரு மகளும் இருந்தாள். அவள் பேரழகியாக இருந்தாள்.
28.     அப்சலோம் எருசலோமில் ஈராண்டுகள் வாழ்ந்தான்: ஆனால் அவன் அரசன் முகத்தில் விழிக்கவில்லை.
29.     அப்சலோம் யோவாபை அரசனிடம் அனுப்புவதற்காக அவனைத் தன்னிடம் வரும்படி அழைத்தான். ஆனால் யோவாபு அவனிடம் செல்ல விரும்பவில்லை. இரண்டாம் முறை ஆளனுப்பியும் யோவாபு அவனிடம் செல்ல விரும்பவில்லை.
30.     அப்போது அவன் தன் பணியாளரிடம், கவனியுங்கள், யோவாபின் வயல் என் வயலுக்கு அருகே உள்ளது. அங்கே வாற்கோதுமை விளைந்துள்ளது. நீங்கள் சென்று அதற்கு தீ வையுங்கள் என்றான். அப்சலோமின் பணியாளர்கள் அதற்குத் தீ வைத்தனர்.
31.     பின் யோவாபு புறப்பட்டு அப்சலோம் வீட்டுக்குச் சென்று அவனிடம், உன் பணியாளன் என் வயலுக்கு தீ வைத்தது ஏன்? என்று கேட்டார்.
32.     அதற்கு அப்சலோம் யோவாபிடம் கூறியது: நான் கெசூரியாவிலிருந்து இங்கு வந்தது ஏன்? நான் அங்கேயே இருந்திருந்தால் நலமாய் இருந்திருக்கும். என்று அரசரிடம் கேட்க விரும்புகிறேன். இதற்காக உம்மை அவரிடம் அனுப்ப, உமக்கு ஆளனுப்பினேன். நான் இப்போது அரசனின் முகத்தில் விழிக்க வழி செய்யும். ஏனெனில் ஏதாவது குற்றம் இருப்பின் அவர் என்னைக் கொல்லட்டும்.
33.     யோவாபு அரசனிடம் சென்று இதைத் தெரிவித்தார். அவர் அப்சலோமை அழைத்து வரச்செய்தார். அவன் அரசனிடம் சென்று முகம் குப்புற அரசர் முன் தரையில் வீழ்ந்து வணங்கினான். அரசர் அப்சலோமை முத்தமிட்டார்.

அதிகாரம் 15.


1.     அதற்குப் பின்னர் அப்சலோம் தனக்கென ஒரு தேரையும் குதிரையும் தனக்கு முன்பாக ஓட ஜம்பது ஆள்களையும் அமர்த்திக்கொண்டான்.
2.     அப்சலோம் அதிகாலையில் எழுந்து நகர வயலின் பாதை அருகே நிற்பான்: யாரேனும் தனக்கிருந்த வழக்கை முன்னிட்டு அரசரிடம் தீர்ப்பு கேட்க வந்தால் அவனை அப்சலோம் தன்னிடம் அழைத்து, நீ எந்நகரிலிருந்து வருகிறாய்? என்று கேட்பான். அவன், உம் அடியான் இந்த நகரிலிருந்து இஸ்ரயேலின் இந்தக் குடும்பத்திலிருந்து வருகிறேன் என்று பதில் சொல்வான்.
3.     அப்போது அப்சலோம், உன் வழக்கு சரியானது, நியாயமானது. ஆனால் அரசரின் சார்பாக உன்னை விசாரிக்க எவரும் இல்லை.
4.     நான் மட்டும் இந்நாட்டில் நீதிபதியாக இருந்தால் வழக்குள்ளவர்கள் அனைவரும் என்னிடம் வருவார்கள். நானும் அவர்களுக்கு நீதிவழங்குவேன் என்பான்.
5.     யாரேனும் அவனை வணங்குவதற்காக நெருங்கினால், தன் கையை நீட்டி அவனை முத்தமிடுவான்.
6.     அரசரிடம் வழக்கை முன்னிட்டு வந்த இஸ்ரயேல் அனைவரிடமும் அப்சலோம் இவ்வாறு செய்து இஸ்ரயேலின் உள்ளங்களைக் கொள்ளைக் கொண்டான்.
7.     நான்கு ஆண்டுகள் கழிந்தபின் ஒருநாள் அப்சலோம் அரசரிடம், நான் ஆண்டவருக்குச் செய்துள்ள நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டும். எபிரோன் செல்ல தயைகூர்ந்து அனுமதிதாரும்.
8.     உமது அடியான் சிரியாவிலுள்ள கெசூரில் வாழ்ந்த போது, ஆண்டவர் எருசலோமுக்குத் திரும்பிக் கொண்டு சென்றால், நான் ஆண்டவரைத் தொழுவேன், என்று ஒரு நேர்ச்சை செய்தேன் என்றான்.
9.     நலமாய்ச் சென்று வா, என்று அரசர் அவனிடம் கூற அவனும் புறப்பட்டு எபிரோனுக்குச் சென்றான்.
10.     பின் அப்சலோம் இஸ்ரயேல் அனைத்துக் குலங்களுக்கும் இரகசியத் தூதர் மூலம் நீங்கள் எக்காள முழக்கம் கேட்டவுடன் அப்சலோம் எபிரோனில் அரசர் ஆகிவிட்டார் என்று முழங்குங்கள் என்று சொல்லியனுப்பினான்.
11.     எருசலோமிலிருந்து அழைக்கப்பட்ட இருநூறு பேர் சென்றனர். வஞ்சகமின்றி இதுபற்றி ஏதும் அறியாதவராய் அப்சலோமிடம் சென்றார்.
12.     அப்சலோம் பலி செலுத்திய போது, தாவீதின் ஆலோசகனான கீலோவியன் அகிதோபலை அவனது நகர் கீலோவிலிருந்து வருமாறு சொல்லியனுப்பினான். சதி வலுவடைந்தது: அப்சலோமின் ஆதரவாளருடைய எண்ணிக்கையும் மிகுதியானது.
13.     அப்போது தூதுன் ஒருவன் தாவீதிடம் வந்து, அப்சலோம் இஸ்ரயேலின் உள்ளங்களைக் கவர்ந்து கொண்டான் என்று கூறினான்.
14.     தாவீது தம்மோடு எருசலேமிலிருந்த அலுவலர் அனைவரிடமும், வாருங்கள் நாம் தப்பியோடுவோம், ஏனெனில் அப்சலோமிற்கு முன்பாக நாம் தப்பியோட முடியாது. விரைவில் வெளியேறுங்கள். இல்லையேல் அவன் நம்மை விரைவில் மேற்கொண்டு, நமக்குத் தீங்கு விளைவிப்பான்: நகரையும் வாள்முனையால் தாக்குவான் என்றார்.
15.     அதற்கு அரச அலுவலர், எம் தலைவராம் அரசரின் ஏவல்களுக்காகவே உம் அடியார்கள் காத்திருக்கிறோம் என்று அரசரிடம் கூறினார்.
16.     அரசரும் அவருடன் அவர் வீட்டார் அனைவரும் வெளியேறினர். ஆனால் வீட்டைக் காக்கும்படி தம் வைப்பாட்டியர் பத்துப் பேரை அரசர் விட்டுச் சென்றார்.
17.     அரசரும் அவர் மக்கள் அனைவரும் வெளியேறி சிறிது தூரம் சென்று ஓரிடத்தில் நின்றார்கள்.
18.     அவர் தம் அனைத்து அலுவலர்களும் அவர் முன் அணிவகுத்துச் சென்றனர். காத்திலிருந்து அவர் பின் வந்த அறுநூறு பேர் கெரேத்தியர், பெலேத்தியர், கித்தியர் ஆகியோர் அனைவரும் அரசருக்கு முன்பாக அணிவகுத்துச் சென்றனர்.
19.     அப்போது அரசர் கித்தியன் இத்தாயிடம், நீ ஏன் எங்களோடு வருகிறாய்? திரும்பிச் சென்று அரசனோடு தங்கு. ஏனெனில் நீர் ஓர் அன்னியன். நாடு கடத்தப்பட்டவன்.
20.     நீ நேற்று வந்தவன். இன்று நான் எங்களோடு அலையச் செய்யலாமா? கால் போன போக்கிலே நான் போகின்றேன். திரும்பிச் செல். உன் சகோதரர்களையும் கூட்டிச் செல். உண்மையுள்ளவரின் பேரன்பு உன்னோடு இருப்பதாக என்று கூறினார்.
21.     இத்தாய் அதற்கு மறுமொழியாக, வாழும் ஆண்டவர் மேல் ஆணை! என் தலைவராம் அரசர் மேல் ஆணை! வாழ்வாகட்டும். சாவாகட்டும். என் தலைவர் அரசர் எங்கிருப்பாரோ, அங்கே உம் அடியேனும் இருப்பான் என்று அரசரிடம் கூறினான்.
22.     தாவீது இத்தாயிடம், சரி முன்னே செல் என்று சொல்ல, கித்தியான இத்தாயும் அவனோடு அவன் ஆள்களும் சிறுவர் சிறுமியர் அனைவரும் முன்சென்றனர்.
23.     மக்கள் யாவரும் கடந்து சென்றதைக் கண்டு, நாடு முழுவதும் புலம்பிற்று, அரசர் கிதரோன் அருவியைக் கடந்தார். மக்கள் அனைவரும் பாலை நிலத்தை நோக்கிச் சென்றனர்.
24.     இதோ! சாதோக்கும் அவரோடு லேவியர் அனைவரும் கடவுளின் பேழையைச் சுமந்து கொண்டு வந்தனர். மக்கள் அனைவரும் நகரைக் கடக்கும் வரை கீழே வைத்திருந்தனர். அபியாத்தார் அங்கே வந்தார்.
25.     அரசர் சாதோக்கை நோக்கி, கடவுளின் பேழையை நகருக்குத் திருப்பி எடுத்துச் செல். ஆண்டவரின் பார்வையில் எனக்கு கருணைக் கிடைத்தால், அவர் என்னை திருப்பிக் கொணர்ந்து அதனையும் அதன் உறைவிடத்தையும் நான் காணச் செய்வார்.
26.     மீது எனக்கு விருப்பமில்லை என்று அவர் கூறினால், இதோ நான் இருக்கிறேன்! அவர் விருப்படியே எனக்கு செய்யட்டும் என்று கூறினார்.
27.     மேலும் அரசர் குருவாகிய சாதோக்கை நோக்கி, நீரும், திருக்காட்சியாளர்தாமே. நீரும் உம்மோடு இருக்கும் இரு புதல்வரும், உம் மகன் அகிமாசும், அபியத்தாரின் மகன் யோனத்தானின் நலத்துடன் நகருக்குத் திரும்புங்கள்.
28.     நான் பாலைநிலத்தில் எல்லைப் பகுதிகளில் உன்னிடமிருந்து எனக்கு செய்தி வரும் வரை நான் காத்திருப்பேன் என்றார்.
29.     அவ்வாறே சாதோக்கும் அபியத்தாரும் கடவுளின் பேழையோடு எருசலோம் திரும்பி, அங்கேயே தங்கிவிட்டார்கள்.
30.     தாவீது அழுதுக் கொண்டே ஒலிவமலை ஏறிச்சென்றார். தலையை மூடிக் கொண்டு வெறுங்காலோடு அவர் நடந்தார். அவரோடிருந்த மக்கள் அனைவரும் தன் தலையை மூடிக் கொண்டே ஏறிச் சென்றனர்.
31.     அப்சலோமுடன் இருக்கும் சதிகாரருள் அகிதோபாலும் ஒருவன் என்று கூறப்பட்ட போது, தாவீது, ஆண்டவரே! உம்மை வேண்டுகிறேன். அகிதோபல் மூடத்தனமான ஆலோசனையை அளிப்பானாக! என்றார்.
32.     மக்கள் கடவுளைத் தொழுத மலையுச்சிக்குத் தாவீது வந்து சேர்ந்தார். அப்போது அர்க்கியனான ஊசாய் கிழிந்த ஆடையோடும் புழிதிபடிந்த தலையோடும் அவரைச் சந்தித்தான்.
33.     தாவீது அவனிடம், நீ என்னோடு வந்தால் எனக்குச் சுமையாக இருப்பாய்.
34.     ஆனால் நீ நகருக்குத் திரும்பினால், அப்சலோமிடம் அரசே நான் முன்பு உம் தந்தைக்கு பணியாளாக இருந்தது போலவே இனி உனக்கும் பணியானாக இருப்பேன் எனச் சொல்லி எனக்காக அகிதோபலின் ஆலோசனையை முறியடிக்க முடியும்.
35.     அங்குக் குருசாதோக்கும் அபியத்தாரும் உன்னோடு இருக்கின்றனர் அல்லவா? அரச மாளிகையிலிருந்து நீ கேட்கின்ற அனைத்தையும் குரு சாதோக்கிடம் அபியத்தாரிடமும் எடுத்துச் செல்.
36.     அவர்களோடு இரு புதல்வர்களும், அதாவது சாதோக்கின் மகன் அகிமாசும் அபியத்தாரின் மகன் யோனத்தானும் இருக்கின்றனர். நீ கேட்ட அனைத்தையும் அவர்கள் வழியாக எனக்கு சொல்லி அனுப்பு என்று கூறினார்.
37.     தாவீதின் மகன் ஓசாய் நகருக்குள் சென்று கொண்டிருந்த போது, அப்சலோம் எருசலோமுக்குள் நுழைந்தான்.

அதிகாரம் 16.


1.     தாவீது தலை உச்சியைக் கடந்து சிறிது தொலை சென்றதும் மெபிபொசேத்தின் பணியாளன் அவரைச் சந்திக்க வந்தான். அவன் இருநூறு அப்பங்கள், நூறு உலர்ந்த திராச்சை அடைகள், நூறு அத்திப் பழ அடைகள், ஒரு தோற்பை திராட்சை இரசம் ஆகியவற்றைக் கழுதைகளின் மேல் ஏற்றிக் கொண்டு வந்தான்.
2.     இதெல்லாம் என்ன? என்று சீபாவை அரசர் கேட்க கழுதைகள் அரச வீட்டார் சவாரி செய்யவும் அப்பமும் அத்திப்பழமும் இளைஞர்கள் உண்ணவும், திராட்சை இரசம் பாலைநிலத்தில் களைப்புற்றோர் குடிக்கவும் தான் என்று சீபா பதிலளித்தான்.
3.     சவுலின் பேரன் எங்கே? என்று தாவீது மீண்டும் வினவ, அவர் எருசலேமிலேயே தங்கியுள்ளார். ஏனெனில் அவர் இன்று இஸ்ரயேல் வீட்டார் என் பாட்டனாரின் வீட்டை எனக்கு திருப்பித் தருவார். என எண்ணுகிறார். என்று சீபா அரசனிடம் கூறினார்.
4.     இதோ மெபிபொசேத்தின் உடைமையெல்லாம் உன்னுடையதே என்று அரசர் சீபாவிடம் கூற, நான் பணிவோடு வணங்குகிறேன்: என் தலைவராம் அரசே! உம் கண்முன் நான் கருணைப் பெறுவேனாக என்று சீபா அரசருக்கு மறுமொழி கூறினான்.
5.     தாவீது பகூரிம் வந்தபோது சவுலின் குடும்பத்தையும் வீட்டையும் சார்ந்த ஒருவன் அவனை எதிர்கொண்டான். அவன் கேராவின் மகனான சிமயி. அவன் பழித்துக் கொண்டே எதிரே வந்தான்.
6.     அவன் தாவீது மீதும், தாவீது அரசரின் எல்லாப் பணியாளர் மீதும் எல்லா மக்கள் மீதும், அவர்தம் வலமும் இடமும் இருந்த வீரர்கள்மீதும் கல்லெறிந்தான்.
7.     சிமயி பழித்துக் கூறியது: இரத்த வெறியனே! பரத்தை மகனே! போ! போ!.
8.     நீ சிந்திய சவுல் வீட்டாரின் இரத்தப் பழி அனைத்தையும் ஆண்டவர் என்மீது வரச்செய்துள்ளார். சவுலுக்குப் பதிலாக நீ ஆட்சி செய்தாய் அன்றோ! ஆண்டவர் மகன் அப்சலோமின் கையில் அரசைத் தருவார்! இரத்த வெறியனான நீ உன் தீமையிலேயே அழிவாய் .
9.     அப்போது செரூயவின் மகன் அபிசாய் அரசரிடம் வந்து, இச்செத்த நாய் என் தலைவராம் அரசைப் பழிப்பதா? இதோ நான் சென்று தலையைக் கொய்து எறிய எனக்கு அனுமதிதாரும் என்றான்.
10.     அதற்கு அரசர் செரூயாவின் மக்களே! இதைப்பற்றி நீங்கள் கவலைக் கொள்ள வேண்டாம். அவன் பழிக்கட்டும்! ஒரு வேளை தாவீதைப் பழி! என்று ஆண்டவரே அவனுக்குச் சொல்லியிருந்தால், இவ்வாறு நீ ஏன் செய்தாய்? என்று யார் சொல்ல முடியும் என்றார்.
11.     மீண்டும் தாவீது அபிசாயிடம் தம் பணியாளர் அனைவரிடமும் கூறியது: இதோ எனக்கு பிறந்த மகன் என் உயிரைப் பறிக்கத் தேடுகிறான். பென்யமின் குலத்தைச் சார்ந்த இவன் செய்யலாகாதோ? அவனை விட்டுவிடு! அவன் பழிக்கட்டும்! ஏனெனில் ஆண்டவரே அவனைத் தூண்டியுள்ளார்.
12.     ஒருவேளை ஆண்டவர் என் துயரத்தை காண்பார். இன்று அவன் பழித்து பேசியதற்காக எனக்கு அவர் நன்மை செய்வார்.
13.     தாவீது தன் ஆள்களோடு பயணத்தை தொடர்வார். சிமயி அவருக்கு எதிராகப் பழித்துரைத்து கல்லெறிந்து, புழுதியை வாரித் தூற்றிக் கொண்டு மலையோரமாகச் சென்றான்.
14.     அரசரும் அவரோடிருந்த மக்கள் அனைவரும் யோர்தானை வந்தடைந்தார். அங்கே அவர் இளைப்பாறினார்.
15.     இதற்கிடையில் அப்சலோமும் இஸ்ரயேல் அரனைவரும் எருசலோம் வந்தடைந்தார். அகிதோபலும் அவனோடு இருந்தான்.
16.     தாவீதின் நண்பனான அர்க்கியன் ஊசாய் அப்சலோமிடம் சென்று, வாழ்க அரசர்! வாழ்க அரசர்! என்று வாழ்த்தினான்.
17.     அப்சலோம் ஊசாயை நோக்கி, உன் நண்பருக்கு நீ காட்டும் விசுவாசம் இதுதானா? நீ ஏன் உன் நண்பரோடு செல்லவில்லை? என்று கேட்டான்.
18.     அதற்கு ஊசாய் அப்சலோமிடம் கூறியது: இல்லை! ஆண்டவரும் இந்த இஸ்ரயேல் மக்கள் அனைவரும் யாரைத் தேர்ந்தெடுத்துள்ளார்களோ அவருக்காகவே நான் இருப்பேன்: அவரோடு தான் நான் தங்குவேன்:
19.     நான் யாருக்கு பணிபுரிய வேண்டும்? அவருடைய மகனுக்கு அல்லவா? என் தந்தைக்கு நான் பணிபுரிந்தது போலவே நான் உனக்கும் பணிபுரிவேன்.
20.     அப்சலோம் அகிதோபலிடம், நான் என்ன செய்யலாம் என்று அறிவுரை கூறு என்று கேட்டான்.
21.     அகிதோபல் அப்சலோமிடம், என் தந்தை தன் வீட்டைக் காக்க இங்கு விட்டுச் சென்றுள்ள வைப்பாட்டியரிடம் சென்று அவர்களோடு உறவு கொள். நீ உன் தந்தையின் வெறுப்புக்கு ஆளாகிவிட்டாய் என்று இஸ்ரயேல் அனைவரும் கேள்விப்படுவர். உன்னொடு இருப்பவர் கை ஓங்கும் என்றான்.
22.     அப்சலோமுக்காக மாடியில் ஒரு கூடாரம் அடைக்கப்பட்டது. இஸ்ரயேல் முழுவதும் அறிய, அப்சலோம் தன் தந்தையின் வைப்பாட்டியரோடு உறவு கொண்டான்.
23.     அந்நாளில் அகிதோபலின் ஆலோசனை கடவுளின் வாக்காக கருதப்பட்டது. இவ்வாறு தான் தாவீது அப்சலோமும் அகதோபலின் அனைத்து ஆலோசனைகளையும் கருதினர்.

அதிகாரம் 17.


1.     அப்போது அகிதோபல் அப்சலோமை நோக்கி, நான் பன்னீராயிரம் ஆள்களைத் தேர்வு செய்துஇன்றிரவே புறப்பட்டு தாவீதை பின் தொடர்வேன்.
2.     அவர் களைத்துச் சோர்ந்த வேளையில் அவர் மேல் பாய்ந்து அவரை அச்சுறுத்துவேன். அவரோடு இருக்கும் மக்கள் அனைவரும் தப்பி ஓடுவர்: அரசரை மட்டும் நான் வெட்டி வீழ்த்துவேன்.
3.     மக்கள் அனைவரையும் உன்னிடம் திருப்பிக் கொணர்வேன். நீ தேடும் ஒரு மனிதரைத் தவிர அனைவரையும் அழைத்து வருவேன். மக்கள் அனைவரும் நலமாய் இருப்பர்.
4.     அப்சலோமுக்கும் இஸ்ரயேலின் பெரியோருக்கும் இந்தக் கருத்து பிடித்திருந்தது.
5.     அப்சலோம், அர்க்கியனான ஊசாவை அழையுங்கள். அவன் சொல்ல வேண்டியதை கேட்போம் என்றான்.
6.     ஊசாய் அப்சலோமிடம் வர, அப்சலோம், இது அகிதோபலின் அறிவுரை. இவ்வாறு நாம் செய்யலாமா? இல்லையேல் என் கருத்து என்ன? என்று அவனிடம் கேட்டான்.
7.     ஊசாய் அப்சலோமை நோக்கி, அகிதோபல், கருத்து இப்போதைக்கு சரியானதல்ல என்றான்.
8.     மேலும் ஊசாய் அப்சலோமிடம் கூறியது: என் தந்தையும் அவர்தம் ஆள்களும் வலிமைமிகு வீரர் என்பதை நீ அறிவாய். காட்டில் தன் குட்டிகளை இழந்த கரடிபோல் அவர்கள் சினமுற்றிருக்கிறார்கள். உன் தந்தை போர்திறன் மிக்கவர்: இரவில் மக்களோடு தங்கமாட்டார்.
9.     இப்பொழுது கூட அவர் ஒரு குகையிலோ வேறெந்த இடத்திலோ ஒளிந்து கொண்டிருப்பார். அவர் அவர்களைத் தாக்கியவுடன் அதைக் கேட்பவர்கள், அப்சலோமைப் பின்பற்றும் மக்கள் வீழ்ந்தனர் என்று சொல்வார் என்றான்.
10.     அப்போது சிங்கத்தின் வலிமைக் கொண்ட அஞ்சா நெஞ்சனும் அச்சத்தால் அறவே நிலைகுலைந்து விடுவான். உன் தந்தை வலியவர் என்றும் அவரோடு இருப்பவர்களும் வலிமைவாய்ந்தவர்கள் என்றும் இஸ்ரயேல் அனைவரும் அறிவர்.
11.     ஆகவே எனது கருத்து என்வென்றால், தாண் முதல் பெயேர் செபா வரை கடற்கரை மணல் திறன் போல் உள்ள இஸ்ரயேல் அனைவரும் உன்னிடம் ஒன்றுதிரளட்டும். பிறகு நீயே போருக்குச் செல்.
12.     நாம் அவரை எதிர்த்து சென்று அவர் தங்கியுள்ள இடத்தை கண்டுபிடிப்போம். தரையின் மீது விழும் பனி போல், அவர் மீது நாமும் விழுவோம். அவரும், அவரோடு இருக்கும் ஆள்களும் எவரும் தப்பமாட்டார்கள்.
13.     ஒரு வேளை அவர் ஒரு நகரினுள் நுழைந்திரந்தால், இஸ்ரயேலர் கொண்டுவரும் கயிறுகளால் அந்நகரைக் கட்டியிழுத்து அங்கே ஒரு சிறு கல்லும் இராதபடி ஒரு கணவாய்க்குள் தள்ளுவோம்
14.     அப்சலோமும் இஸ்ரயேலர் அனவைரும் அர்க்கியனான ஊசாயின் கருத்து அகிதோபலின் அறிவுரையை விடச் சிறந்தது என்று கூறினர். ஆனால், ஆண்டவர் அப்சலோமிற்குத் தீங்கிழைக்குமாறு அகிதோபலின் சிறந்த அறிவுரை எடுபடாது போகச் செய்தார்.
15.     பின்பு ஊசாய் குரு சாதோக்கிடமும் அபியத்தாரிடமும் அப்சலோமுக்கும் அகிதோபல் இவ்வாறு அறிவுரைத் தந்தான், நானோ இவ்வாறு கருத்துச் சொன்னேன்.
16.     இப்போது உடனே ஆளனுப்பி, பாலைநில எல்லைப் பகுதியில் இரவு தங்க வேண்டாம் என்று அரசரும் அவரோடுள்ள மக்களும் இரையாகதபடி அவர்கள் கண்டிப்பாக வேறிடத்திற்ச செல்ல வேண்டும் என்று தாவீதிடம் சொல்லுங்கள் என்றான்.
17.     அப்போது யோனத்தானும் அகிமாசும் ஏன்ரோகேலில் காத்திருக்க, ஒரு பணிப்பெண் அவர்களிடம் சென்று செய்தி சொல்ல, அவர்கள் தாவீதிடம் சென்று அதை அறிவித்தார்கள். ஏனெனில் அவர்கள் நகருக்குள் செல்வது, யாரும் காணமல் இருக்க வேண்டியிருந்தது.
18.     ஆனால் சிறுவன் ஒருவன் பார்த்து விட்டு அப்சலோமுக்குத் தெரியப்படுத்தினான். இருவரும் விரைவாகச் சென்று பகூரிமில் ஒருவரின் வீட்டில் நுழைந்தனர். அவரது முற்றத்தில் ஒரு கிணறு இருந்தது. அவர்கள் அதற்குள் இறங்கினார்கள்.
19.     வீட்டுக்காரி கிணற்று முகப்பினை ஒரு போர்வையால் மூடி அதன்மேல் தானியங்களைப் பரப்பினாள். அவர்கள் இறங்கியது யாருக்கும் தெரியவில்லை,
20.     அப்சலோமின் பணியாளர் வீட்டினுள் நுழைந்து அப்பெண்ணை நோக்கி, அனிமாசும் யோனத்தானும் எங்கே? என்று கேட்க, அவள், அவர்கள் ஆற்றைக் கடந்து சென்றுவிட்டார் என்று சொன்னான். அவர்கள் தேடியும் கண்டுபிடிக்க இயலாததால் எருசலேம் திரும்பினர்.
21.     அவர்கள் அகன்றதும் யோனத்தானும் அகிமாசும் கிணற்றிலிருந்து ஏறி வந்து அரசர் தாவீதிடம் சென்று, உடனே புறப்பட்டு ஆற்றைக் கடந்து செல்லுங்கள். ஏனெனில் அகிதோபல் உமக்கு எதிராக இவ்வாறு கூறியுள்ளான் என்று தாவீதிடம் உரைத்தார்.
22.     தாவீதும் அவரோடு இருந்த மக்களும் புறப்பட்டு யோர்த்தானைக் கடந்து சென்றார்கள். பொழுது புலர்ந்த போது யோர்த்தானைக் கடக்காதவன் எவனும் இல்லை.
23.     தன் அறிவுரை ஏற்றுக் கொள்ளபடவில்லை என்று கண்டதும் அகிதோபல் தன் கழுதைக்குச் சேணமிட்டு, தன் நகருக்குப் புறப்பட்டு தன் வீட்டை அடைந்தான். தன் வீட்டை ஒழுங்குபடுத்திவிட்டு அவன் நான்று கொண்டு இருந்தான். அவனை அவனுடைய தந்தையின் கல்லறையில் அடக்கம் செய்தனர்.
24.     தாவீது மகனயிம் வந்தடைந்தார்: அப்சலோமும் அவனோடு இஸ்ரயேலும் அனைவரும் யோர்த்தானைக் கடந்தார்கள்.
25.     அப்சலோம் யோவாபுக்குப் பதிலாக அமாசாவைப் படைத் தலைவனாக நியமித்திருந்தான். இவன் இஸ்ரயேலன் இத்ரா என்பவனின் மகன். இந்த இத்ராதான் அபிகாலை மணந்தான். இவள் யோவாபின் தாயும் செரூயாவின் சகோதிரியுமான நாகசின் மகள்.
26.     அப்சலோமும் இஸ்ரயேலரும் கிலயாது நாட்டில் பாளையம் இறங்கினர்.
27.     தாவீது மகனயிம் வந்தடைந்த போது அம்மோனியரின் இராபாவிலிருந்து நாகாசின் மகன் சோபியும் லோதபாரிலிருந்து அம்மியேலின் மகன் மாக்கிரும், ரோகிலிமிலிருந்து கிலயாதியன் பர்சில்லாயும்
28.     தாவீதிடம் வந்து அவருக்கு படுக்கைகள், கிண்ணங்கள், மண்பாண்டங்கள். கோதுமை, வாற்கோதுமை, மாவு, வறுத்த தானியம், மொச்சை, அவரை, பயிறு, தேன், தயிர், ஆடுகள், பசும்பாற்கட்டிகள் ஆகியவற்றைக் கொடுத்தார்.
29.     பாலைவெளியில் மக்கள் பசித்தும் களைத்தும் தாகமாகவும் இருக்கிறார்க்ள என்று சொல்லி, தாவீதும் அவரோடு இருந்தவர்கள் உண்பதற்காக அவர்கள் இவற்றைத் தந்தனர்.

அதிகாரம் 18.


1.     தாவீது தம்மோடிருந்த வீரர்களை கணக்கெடுத்து, அவர்கள் மீது, ஆயிரத்தவர்,நூற்றவர், தலைவர்களை நியமித்தார்.
2.     வீரர்கள் மூன்றில் ஒருபகுதியினரை யோவாபின் தலைமையிலும், அடுத்த மூன்றில் ஒரு பகுதியினரை யோவாபின் சகோதரன் செரூயாவின் மகன் அபிசாயின் தலைமையிலும், இன்னும் மூன்றில் ஒரு பகுதியினரை கித்தியன் இத்தாயின் தலைமையிலும் தாவீது அனுப்பினார். தாமும் அவர்களோடு புற்ப்படுவதாக அரசர் வீரர்களிடம் கூறினார்.
3.     நீர் வெளியே வரவேண்டாம். ஏனெனில் நாங்கள் புறமுதுகாட்டி ஓடினால், அவர்கள் எங்களைப் பற்றிக் கவலைப்படமட்டார்கள். எங்களுள் பாதிப்போர் மடிந்தாலும் எங்களைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள். நீர் ஒருவர் எங்களுள் பத்தாயிரம் பேருக்குச் சமம். தற்போது நீர் எங்களுக்கு நகரிலிருந்தே உதவி செய்வது நல்லது என்று வீரர்கள் அவரிடம் சொன்னார்கள்.
4.     எங்களுக்கு எதுநல்லதெனப்படுகிறதோ அதையே நான் செய்வேன் என்று அரசர் அவர்களிடம் கூறி, வாயிலருகே நின்றார். வீரர்கள் நாநூறாகவும் ஆயிரம் ஆயிரமாகவும் புறப்பட்டுச் சென்றனர்.
5.     பொருட்டு எந்த இளைஞனும் அப்சலோமுக்கு தீங்கிழைக்க வேண்டாம் என்று யோவாபு அபிசாய், இ்தாய் ஆகியோருக்கு அரசர் கட்டளையிட்டார். எல்லாப் படைத்தலைவருக்கும் அரசர் கட்டளையிட்டதை வீரர்கள் அனைவரும் கேட்டார்கள்.
6.     இஸ்ரயேலரை எதிர்கொள்ள வீரர்கள் புறப்பட்டுத் திறந்த வெளிக்குச் சென்றனர்.போர் எப்ராயிம் காட்டில் நடந்தது.
7.     இஸ்ரயேல் தாவீது பணியாளரால் தோற்கடிக்கப்பட்டனர். அன்று மாபெரும் அழிவு ஏற்பட்டது. இருபதாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
8.     நாடெங்கும் போர் பரவியது. அன்று வாளுக்கு இரையானவர்களைவிடக் காட்டுக்கு இரையானவர்களே மிகுதியானவர்.
9.     அப்சலோம் தாவீதின் பணியாளரை எதிர்கொள்ள நேர்ந்தது. அவன் ஒரு கோவேறு கழுதை மீது ஏறி வந்துக் கொண்டிருந்தான். அது ஒரு பெரிய கருவாலி மரத்தின் அடர்த்தியான கிளைகளுக்குக் கீழே சென்று கொண்டிருந்தது. அப்போது அவனது தலை கருவாலி மரத்தில் சிக்கிக் கொள்ள, அவன் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே தங்கினான். அவன் ஏறிவந்த கோவேறு கழுதை முன்னே சென்றுவிட்டது.
10.     இதைக் கண்ட ஒரு வீரன் யோவாபிடம் சென்று இதோ! அப்சலோம் கருவாலி மரத்தில் தொங்குவதைக் கண்டேன் என்று கூறினான்.
11.     யோவாபு அதைச் சொன்னவனை நோக்கி, என்ன? நீ கண்டாயா? அவனை ஏன் நீ வெட்டித் தரையில் வீழ்த்தவில்லை? நான் உனக்குப் பத்து வெள்ளிக் காசுகளையும் ஒரு கச்சையையும் தந்திருப்பேனே! என்று கூறினார்.
12.     அதற்கு அம்மனிதன் யோவாபிடம் கூறியது: என் கையில் ஆயிரம் வெள்ளிக் காசுகளை நீர் நிறுத்துக் கொடுத்தாலும் அரசரின் மகனுக்கு எதிராக நான் கையோங்க மாட்டேன். இளைஞன் அப்சலோமுக்குத் தீங்கிழைக்க வேண்டாம் என்று உமக்கும், அபிசாய்க்கும், இத்தாய்க்கும் அரசர் கட்டளையிட்டதை நாங்கள் கேட்டோமே!
13.     மாறாக நான் என் மனச்சான்றுக்கு எதிராக நடந்திருந்தால், அது அரசருக்குத் தெரியாமல் போகாது நீர் என்னைக் கைவிட்டிருப்பீர்.
14.     உன்னோடு இவ்வாறு நான் நேரத்தை வீணாக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு யோவாபும் கையில் மூன்று ஈட்டிகளை எடுத்துச் சென்று உயிருடன் கருவாலி மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த அப்சலோமின் நெஞ்சில் அவற்றைப் பாய்ச்சினார்.
15.     மேலும் யோவாபின் படைக்கலன் தாங்கிய பத்துப்பேர் அப்சலோமைச் சூழ்ந்து வெட்டிக் கொன்றனர்.
16.     யோவாபு எக்காளம் ஊத, வீரர்களை நிறுத்தி அவர்கள் இஸ்ரயேலைப் பின் தொடர்வதை விட்டனர்.
17.     அவர்கள் அப்சலோமைத் தூக்கிச் சென்ற காட்டில் ஒரு பெருங்குழியில் தள்ளி, அவன்மேல் பெரும் கற்குவியலை எழுப்பினர். அச்சமயம் இஸ்ரயேலர் அனைவரும் தம் வீடுகளுக்கு ஓடி விட்டனர்.
18.     அப்சலோம் தனக்கு ஒரு மகன் இல்லாத காரணத்தால் தன் பெயரை நினைவுகூறுவதற்காக, தன் வாழ்நாளிலேயே தனக்கென்று அரசக் கணவாயில் ஒரு தூண்நிறுவியிருந்தான். அதற்கு அவன் தன் பெயரையே வைத்தான். இந்நாள்வரை அது அப்சலோமின் நினைவுச் சின்னமாக இருக்கிறது.
19.     சாதோக்கின் மகனாகிய அகிமாசு, நான் ஓடி அரசரிடம் சென்று ஆண்டவர் தன் எதிரிகளிடமிருந்து விடுவித்துள்ளார் என்ற செய்தியை அறிவிக்க அனுமதி தாரும் என்று சொன்னான்.
20.     அதற்கு யோவாபு, இன்று நீ செய்தியை எடுத்துச் செல்ல வேண்டாம்: இளவரசர் இறந்து விட்டதால் இன்று வேண்டாம்: வேறொரு நாள் செய்தியை எடுத்துச் செல்லலாம் என்று சொன்னார்.
21.     ஆனால், யோவாபு ஒரு கூசியனிடம் நீ சென்று கண்டவை அனைத்தையும் அரசரிடம் சொல், என்று சொல்ல, அவனும் யோவாபை வணங்கிட்டு ஓடிச் சென்றான்.
22.     சாதோக்கின் மகன் அகிமாசு மீண்டும் யோவாபிடம், என்ன நேரிடினும் நானும் கூசியனின் பின் ஓட எனக்கு அனுமதி தாரும். என்று கேட்டான். மகனே! இச்செய்தியை சொல்வதனால், உனக்கு எப்பரிசும் கிடைக்கப்போவதில்லை. பின் ஏன் நீ ஓட வேண்டும்? என்று யோவாபு பதில் கூறினார்.
23.     நடப்பது நடக்கட்டும். நான் ஓட விரும்புகிறேன் என்று அவன் மீண்டும் சொல்ல, சரி ஓடு என்று யோவாபு மறுமொழி கூறினார். அகிமாசு குறுக்குப்பாதையில் ஓடி கூசியனை முந்திச் சென்றான்.
24.     அப்போது தாவீது இரு வாயில்களுக்குமிடையே அமர்ந்துக்கொண்டிருந்தார். காவலன் மதிலின் வாயிலுக்கு மேல் ஏறிச் சென்று கண்களை ஏறெடுத்துப் பார்த்தான். ஓர் ஆள் தனியாக ஓடி வருவதைக் கண்டான்.
25.     காவலன் குரலெழுப்பி அரசரிடம் கூற, அரசர், தனியாக வந்தால் அவனிடம் நற்செய்தியுள்ளது என்றார். அந்த ஆள் இன்னும் அருகில் வந்துக்கொண்டிருந்தான்.
26.     காவலன் இன்னொரு ஆளும் ஓடிவருவதைக் கண்டான். கண்டு அவன் குரலெழுப்பி வாயில் காப்பானிடம். இதோ, இன்னொருவன் தனியாக ஓடிவருகிறான் என்று கூற அரசர், இவனும் நற்செய்தி கொண்டு வருகிறான் என்றார்.
27.     முதலில் வருகிறவனின் ஓட்டம் சாதோக்கின் மகன் அகிமாசின் ஓட்டத்தைப்போல் உள்ளது என்று காவலன் உரைக்க, அதற்கு அரசர், இவன் நல்லவன், இவன் நற்செய்தியோடு வருகிறான் என்றான்.
28.     அப்போது அகிமாசு குரலெழுப்பி, நலம் உண்டாகுக! என்று அரசரிடம் சொன்னான். அவன் முகம் குப்புற தரையில் வீழ்ந்து அரசரை வணங்கி, என் தலைவராம் அரசருக்கு எதிராகக் கையோங்கியவர்களை ஒப்படைத்த உம் கடவுளாகிய ஆண்டவர் போற்றி! போற்றி! என்றான்.
29.     இளைஞன் அப்சலோம் நலமா? என்று அரசர் வினவ, அகிமாசு, அரச பணியாளனும் உம் அடியானுமாகிய என்னை யோவாபு அனுப்பும் போது அங்கு பெரும் குழப்பமாக இருந்தது. ஆனால் அது என்ன வென்று எனக்கு தெரியாது என்றான்.
30.     அரசர் அவனை நோக்கி, விலகி, அங்கே நில் என்று கூற அவனும் விலகி நின்றான்.
31.     அப்போது கூசியனும் வந்து, என் தலைவராம் அரசே! நற்செய்தி! இன்று ஆண்டவர் உமக்கு எதிராக எழுபவர்களின் காத்தினின்று உம்மை விடுவித்துள்ளார் என்று கூறினான்.
32.     இளைஞன் அப்சலோம் நலமா? என்று அரசர் வினவ, கூசியன், என் தலைவராம் அரசரின் எதிரிகளும் எனக்கு எதிராக தீங்கிழைக்க எழுந்துள்ள அனைவரும், அந்த இளைஞனைப் போல் ஆவார்களாக! என்றான்.
33.     அப்போது அவர் அதிர்ச்சியுற்று, என்மகன் அப்சலோமே! என் மகனே! என் மகன் அப்சலோமே! உனக்கு நான் பதில் நான் இறந்திருக்கலாமே! அப்சலோமே! என் மகனே! என்று கதறிக்கொண்டே அவர் வாயிலின் மாடியறைக்குச் சென்றார்.

அதிகாரம் 19.


1.     அரசர் தம் மகனுக்காக அழுது புலம்புவதாக யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது.
2.     அரசர் தம் மகனுக்காக வருந்துகிறார் என்று வீரர்கள் அனைவரும் கேள்விப்பட்டதால் அன்றைய வெற்றி அனைவருக்குமே ஒரு துக்கமாயிற்று.
3.     போர்¢லிருந்து புறமுதுகுகாட்டி வெட்கத்தோடு ஓடுபவர்களைப் போன்று அன்று வீரர்கள் யாருமறியாமல் நுழைந்தார்கள்.
4.     அரசர் தம் முகத்தை முடிக் கொண்டு, என் மகன் அப்சலோமே! அப்சலோமே!, என் மகனே! என் மகனே! என்று குரலெப்பி அழுதுகொண்டிருந்தார்.
5.     அப்போது யோவாபு அரசர் இருந்த வீட்டிற்குள் வந்து அவரை நோக்கி, உம் உயிரையும் உம் புதல்வர் புதல்வியர் உயிரையும், உம் மனைவியர், வைப்பாட்டியரின் உயிரையும் காத்த உம் பணியாளர் அனைவரையும் இன்று தாழ்வடையச் செய்துவிட்டீர்.
6.     உம்மை வெறுப்பவனுக்கு அன்பு செலுத்தி, உமக்கு அன்பு செலுத்துபவர்களை நீ வெறுப்பதால், படைத் தலைவர்களோ பணியாளர்களோ உமக்கு பொருட்டில்லை என்படை எடுத்துக்காட்டிவிட்டீர். இன்று அப்சலோம் உயிரோடு இருந்து, நாங்கள் அனைவருமே மடிந்திருந்தால் உமக்கு அது பிடித்திருக்கும் என்பதையும் நான் இன்று புரிந்து கொண்டேன்.
7.     இப்போது எுந்திரும். வெளியே சென்று உம் பணியாளர் மகிழ்ச்சியுறுமாறு பேசும். ஏனெனில் ஆண்டவர் மேல் ஆணை! நீர் வெளியே வராவிட்டால் ஒரு மனிதனும் இன்றிரவு வெளியே தங்கமாட்டான். உம் இளமைமுதல் இன்று வரை உமக்கு ஏற்பட்ட அனைத்துத் தீமைகளைவிடவும் இந்தத் தீமை கடுமையாக இருக்கும் என்று கூறினார்.
8.     அரசர் எழுந்து வாயிலில் அமர, இதோ அரசர் வாயிலில் அமர்ந்துள்ளார் என்று அனைவருக்கும் சொல்லப்பட்டது. வீரர்கள் அவர் முன் வந்தனர். இதற்கிடையில் இஸ்ரயேலர் தம் வீடுகளுக்குத் தப்பியேடினார்.
9.     அப்போது இஸ்ரயேலின் குலங்களின் மக்கள் அனைவரிடையே இவ்வாறு வாக்கு வாதம் ஏற்பட்டது: நம் எதிரிகளின் கையினின்று அரசர் நம்மை விடுவித்தார். பெலிஸ்தியரின் கையினின்று நம்மை விடுவித்தவரும் அவரே. அப்சலோமின் பொருட்டு அவர் இப்போது நாட்டினின்று வெளியேறியுள்ளார்.
10.     நம்மை ஆளுமாறு நாம் திருப்பொழிவு செய்த அப்சலோமோ போரில் இறந்துவிட்டான். இனி நீங்கள் அரசரைத் திருப்பியழைத்து வராமல் வாளாயிருப்பதேன்?
11.     அரசர் தாவீது
12.     நீங்கள் என் சகோதரர்கள்: நீங்கள் என் எலும்பும் சதையும் ஆனவர்கள்: அரசை பின் தங்குவதில் நீங்கள் ஏன் பின் தங்க வேண்டும்?
13.     அமாசாவிடம் இவ்வாறு கூறுங்கள்: நீ என் எலும்பும் சதையும் அல்லவா? யோவாபுக்குப் பதிலாக என்முன்பாக எந்நாளும் படைத்தலைவனாய் இராவிட்டால், கடவுள் என்னைத் தக்கவாறு, அதற்கு மேலும் தண்டிக்கட்டும்.
14.     யூதா வீரர்கள் அனைவரின் உள்ளங்களையும் அவன் இவ்வாறு இணங்கச் செய்து அவர்களை ஒருமனப்படுத்தினான். அவர்கள் அரசரிடம் ஆளனுப்பி, நீரும் உம் பணியாளர் அனைவரும் திரும்பி வாருங்கள் என்று கூறினார்.
15.     அரசர் திரும்பி யோர்த்தான்வரை வந்தார் யூதாவினர் கில்கால்வரை சென்று அரசை சந்தித்து அவர் யோர்த்தானைக் கடக்கச் செய்தனர்.
16.     பகூரிமைச் சார்ந்த பென்யமினியனான கேராவின் மகன் சிமயி யூதாவினரோடு அரசர் தாவீதை சந்திக்க விரைந்தான்.
17.     அவனோடு பென்யமினியர் ஆயிரம்பேர் இருந்தனர். சவுல் பணியாளன் சீபா தன் பதினைந்து புதல்வரோடும் இருபது பணியாளரோடும் அங்கே இருந்தான். அவர்கள் அரசர் வருமுன் யோர்த்தானுக்கு விரைந்தனர்.
18.     அரச குடும்பத்தினரைக் கொண்டு வரவும், அரசரின் ஏவல்களைச் செய்யவும் அவர்கள் துறைவழி ஆற்றைக் கடந்தனர். அரசர் யோர்தானைக் கடக்கவிருக்கையில் கேராவின் மகன் சிமயி அவர்முன் விழுந்தான்.
19.     தலைவரே! என் குற்றத்தைப் பொருட்படுத்தாதீர்! என் தலைவராம் அரசர் எருசலேமை விட்டுச் சென்ற போது உம் பணியாளன் செய்த தீமையை நினைவுகூராதேயும்! அரசர் அதை மனத்தில் கொள்ளாமல் இருப்பாராக!
20.     தான் பாவம் செய்துள்ளதைத் தங்கள் பணியாளன் அறிவான். இதோ இன்று யோசேப்பின் வீட்டார் அனைவரிலும் முதல் ஆளாக, என் தலைவராம் அரசரைச் சந்திக்க நான் வந்திருக்கிறேன் என்று அவன் அரசரிடம் கூறினான்.
21.     அப்போது செரூயாவின் மகன் அபிசாய், ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரை பழித்ததற்காக சிமயி கொல்லப்பட வேண்டாமா? என்று கேட்டான்.
22.     அதற்கு தாவீது செரூயாவின் புதல்வர்களே! இது பற்றி உங்களுக்கு என்ன? இன்று நீங்கள் எனக்கு எதிரிகள் போல் நடந்து கொள்வது ஏன்? இன்று இஸ்ரயேலில் யாராவது கொல்லப்பட வேண்டுமா? இன்று நான் இஸ்ரயேலின் அரசர் என்பது எனக்குத் தெரியாதா? என்று கூறினார்.
23.     பிறகு அரசர் சிமியயை நோக்கி, நீ சாக மாட்டாய் என்று அவனுக்கு ஆணையிட்டுச் சொன்னார்.
24.     சவுலின் பேரன் மெபிபொசேத்து அரசரைச் சந்திக்கச் சென்றான். அரசர் புறப்பட்டு சென்ற நாளிலிருந்து அவர் நலத்துடன் திரும்பிய நாள்வரை அவள் தன் பாதங்களை கழுவவில்லை. தாடியைத் திருத்தவில்லை: தன் ஆடைகளை வெளுக்கவுமில்லை.
25.     அவன் எருசலோமில் அரசரை சந்திக்க வந்தபோது, அரசர் அவரை நோக்கி, மெபிபொசேத்து! என்னோடு நீ ஏன் வரவில்லை? என்று வினாவினார்.
26.     அதற்கு என் தலைவராம் அரசரே! என் பணியாளன் என்னை ஏமாற்றி விட்டான். உம் அடியான் கால் ஊனமுற்றிருப்பதால், நானே என் கழுதைக்குச் சேணமிட்டு அதன் மீது சவாரி செய்து அரசரோடு செல்வேன் என்று உம் அடியானாகிய நான் கூறினேன்.
27.     அவனோ உம் அடியனைப் பற்றி என் தலைவராம் அரசரிடம் அவதூறு பேசினான். ஆனால் என் தலைவராம் அரசர் கடவுளின் தூதரைப் போன்றவர். உமக்குச் சரியெனப்பட்டதையே செய்யும்.
28.     தலைவராம் அரசரின் பார்வையில் என் தந்தையின் குடும்பத்தார் அனைவரும் சாவதைத் தவிர வேறு எதற்கும் உரியவர் அல்லர்! இருப்பினும் உம் அடியனை உம்மோடு உணவருந்துபவர்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டீர்! இனி அரசரிடம் எனக்கு மன்றாட என்ன உரிமை இருக்கிறது? என்று சொன்னான்.
29.     அதற்கு அரசர், உன்னைப்பற்றி இன்னும் பேசுவானேன்? நீயும் சீபாவும் நிலத்தைப்பகிர்ந்து கொள்ளுமாறு நான் சொல்லிவிட்டேன்! என்று அவனிடம் சொன்னார்.
30.     மெபிபொசேத்து மறுமொழியாக, இல்லை அவனே அனைத்தையும் எடுத்துக் கொள்ளட்டும். என் தலைவராம் அரசர் நலமே தம் வீடு திரும்பியதே எனக்கு போதும்! என்று அரசரிடம் கூறினான்.
31.     கிலயாதைச் சார்ந்த பர்சில்லாய் அவரைஅங்கிருந்து வழியனுப்புவதற்காக ரோகலிமிலிருந்து அரசரோடு யோர்த்தானைக் கடந்து வந்தார்.
32.     பர்சில்லாய் வயது முதிர்ந்தவர்: எண்பது வயதினர்: பெரும் பணக்காரர். அரசர் மகனயிமில் தங்கியிருந்த போது அவரின் தேவைகளைக் கொண்டவர்.
33.     அரசர் பர்சில்லாயிடம் இப்பொழுது ஆற்றைக் கடந்து என்னோடு எருசலேமுக்கு வந்து தங்கியிருக்கும். நான் உம் தேவைகளை கவனித்துக் கொள்வேன் என்றான்.
34.     அப்பொழுது பர்சில்லாய் மறுமொழியாகக் கூறியது: அரசரோடு வந்திருப்பதற்கேற்றவாறு நான் இன்னும் எத்தனை நாள் உயிரோடு இருக்கப்போகிறேன்?
35.     இப்பொழுதே எனக்கு வயது எண்பது ஆகிவிட்டது: நல்லதையும் கெட்டதையும் என்னால் வேறுபடுத்திச் சொல்ல முடியுமா? உம் அடியானால் உண்பதையும் குடிப்பதையும் அனுபவிக்க முடியுமா? என் தலைவராம் அரசருக்கு உம் அடியான் இன்னும் ஏன் சுமையாக இருக்க வேண்டும்?
36.     உம் பணியாளன் அரசரோடு சற்றுத் தொலைவே யோர்தான் மீது கடந்து வருவேன். அதற்காக அரசர் எனக்கு இத்தகைய கைம்மாறு செய்வானேன்?
37.     உம் பணியாளனைப் போகவிடு. நான் என் நகரில் என் தாய் தந்தையரின் கல்லறைக்கு அருகே இறப்பேன். இதோ! உம் பணியாளன் கிம்காம்! என் தலைவராம் அரசரோடு அவன் செல்லட்டும். உம் விருப்பம்போல் அவனுக்குச் செய்யும்.
38.     அப்பொழுது அரசர், கிம்காம் என்னோடு கடந்து வரட்டும். உம் விருப்பம்போல் நான் அவனுக்குச் செய்வேன். நீர் என்னிடமிருந்து எதை விருப்பினாலும் நான் உமக்குச் செய்வேன் என்று கூறினார்.
39.     பிறகு, மக்கள் அனைவரும யோர்தானைக் கடந்தனர். அரசரும் யோத்தானைக் கடந்தார். பர்சில்லாயை அரசர் முத்தமிட்டு வாழ்த்தினார். அவரும் தம் இடத்திற்கு திரும்பினார்.
40.     அரசர் கில்காலுக்குக் கடந்து சென்றார். கிம்காமும் அவரோடு கடந்து சென்றான். யூதாவினர் அனைவரும் இஸ்ரயேலில் பாதிப்பேரும் அரசரைக் கொண்டு வந்துவிட்டனர்.
41.     உடனே இஸ்ரயேல் அனைவரும் அரசரிடம் வந்து, எங்கள் சகோதர்களான யூதாவினர் அரசரையும் அவர் வீட்டாரையும் அவர் ஆள்கள் அனைவரையும் திருட்டுத்தனமாக் கொண்டு வந்து யோர்தானைக் கடக்கச் செய்தது ஏன்? என்று கேட்டார்கள்.
42.     யூதாவினர் அனைவரும் இஸ்ரயேலுக்க மறுமொழியாக, அரசர் எங்களுக்கு நெருங்கியவர். இக்காரியத்தைப்பற்றி நீங்கள் சினமுறுவது ஏன்? நாங்கள் அரசரிடம் ஏதாவது உண்டோமா? அவரிடமிருந்து நாங்கள் ஏதாவது பெற்றுக்கொண்டோமா? என்றார்கள்.
43.     இஸ்ரயேலர் யூதாவினரை நோக்கி, எங்களுக்கு அரசரிடம் பத்து பங்குகள் உண்டு. பின் ஏன் எங்களை அற்பமாக நடத்துகிறீர்? எங்கள் அரசரை திருப்பியழைத்து வர வேண்டுமென்று முதலில் சொன்னவர்கள் நாங்கள் அல்லவா? என்று பதில் சொன்னார்கள். இஸ்ரயேலின் பேச்சைவிட யூதாவினர் பேச்சு கடுமையாக இருந்தது.

அதிகாரம் 20.


1.     அப்போது பென்யமின் குலத்தைச் சார்ந்த, பிக்ரியின் மகன் சேபா என்ற இழி மகன் அங்கு இருந்தான். அவன் எக்காளம் ஊதி, எங்களுக்பு தாவீதிடம் பங்கு இல்லை: ஈசாயின் மகனிடம் மரபுரிமையும் இல்லை: இஸ்ரயேலரே! ஒவ்வொருவரும் உங்கள் கூடாரங்களுக்கச் செல்லுங்கள் என்றான்.
2.     இஸ்ரயேலர் அனைவரும் தாவீதைப் பின்பற்றுவதை விட்டுவிட்டுப் பிக்ரியின் மகன் சேபாவின் பின் சென்றனர்.ஆனால் யூதாவினரோ யோர்த்தான் முதல் எருசலேம் வரை, தங்கள் அரசரைச் சார்ந்திருந்தனர்.
3.     தாவீது எருசலேமிலுள்ள தம் வீட்டுக்கு வந்தார். தம் வீட்டை பாதுக்காக்க தாம் விட்டு வந்த பத்து வைப்பாட்டியரையும் அழைத்து, பாதுகாப்புள்ள ஒரு வீட்டில் அவரை வைத்துத் தேவையானவற்றைக் கொடுத்து வந்தார். ஆனால் அவர்களோடு உறவு கொள்ளவில்லை. அவர்கள் இறக்கும் வரை காவலில் வைக்கப்பட்டு கைம் பெண்களைப் போல் வாழ்ந்தனர்.
4.     பிறகு அரசர் அமாசாவை நோக்கி, மூன்று நாள்களுக்குள் யூதாவினரையும் என்னிடம் வரச்சொல் அப்போது நீயும் இங்கே இரு என்றார்.
5.     அமாசா யூதா மக்களை அழைத்துச் சென்றான். ஆனால் தனக்கு குறித்த காலத்தை மீறிக் காலம் தாழ்த்தினான்.
6.     தாவீது அபிசாயை நோக்கி, பிக்ரியின் மகன் சேபா அப்சலோமைவிட மிகுதியாக நமக்குத் தீங்கிழைப்பான். உன் தலைவரின் பணியாளரை அழைத்துக் கொண்டு, அவனைத் துரத்திச் செல்லுங்கள். இல்லையேல் அரண்சூழ் நகர்களைக் கண்டு நம் கண்ணிலிருந்து தப்பிவிடுவான் என்று சொன்னார்.
7.     யோவாபின் ஆள்களும், கெரேத்தியர், பெலேத்தியரும், வலிமைமிகு வீரர்கள் அனைவரும் தலைமையில் சென்றனர். அவர்கள் எருசலேமிலிருந்து புறப்பட்டுப் பிக்ரியின் மகன் சேபாவைப் பின்தொடர்ந்தனர்.
8.     அவர்கள் கிபயோனிலுள்ள பெருங்கல் அருகே வந்தனர். யோவாபு தாம் உடுத்தியிருந்த போருடைமீது ஒரு கச்சைக்கட்டியிருந்தார். அதிலே ஒரு உறையோடு கூடிய ஒரு குறிவாள் செருகப்பட்டிருந்தது. அவர் முன்னால் சென்றபோது அது கீழே வீழ்ந்தது.
9.     யோவாபு அமாசாவை நோக்கி, சகோதரனே நலமா? என்று அவனை கேட்டு அவனை முத்தமிடுவதற்காக வலக்கையால் அவனது தாடியைப் பற்றினார்.
10.     யோவாபின் இடக் கையிலிருந்து குறுவாளை பற்றி அமாசா எச்சரிக்கையாக இல்லை. யோவாபு அதை அவன் வயிற்றில் குத்த, அவனது குடல் தரையில் சரிந்தது. மீண்டும் குத்துவதற்கு அவசியமில்லாமல் அமாசா இறந்தான். அதன் பின் யோவாபும் அவருடைய சகோதரன் அபிசாயும் பிக்ரியின் மகன் சேபாவைப் பின் தொடர்ந்தனர்.
11.     யோவாபின் ஆள்களுள் ஒருவன் அவர் அருகே நின்று கொண்டு, யோவாபை விரும்புகிறவர்களும், தாவீதின் பக்கமுள்ளவர்களும், யோவாபின் பின் செல்லட்டும் என்றான்.
12.     சாலை நடுவே அமாசா தன் இரத்தத்தில் மூழ்கிக் கிடக்கவே, வீரர்கள் அனைவரும் அங்கேயே நின்றுவிட்டதை அவன் கண்டான். அமாசாயின் அருகே வந்தார்கள் அனைவரும் நின்றுவிட்டதைக் கண்டு, அவனைச் சாலையிலிருந்து வயலுக்கு இழுத்து ஒரு துணியால் மூடினான்.
13.     அமாசா சாலையிலிருந்து விலக்கப்பட்டதும் அனைவரும் யோவாபின் பின் சென்று, பிக்ரியின் மகன் சேபாவைப் பின் தொடர்ந்தனர்.
14.     சேபா அனைத்து இஸ்ரயேல் குலங்களின் நிலப்பகுதி வழியாக பெத்மாக்காவின் ஆபேல் வரை சென்றான். பெரியோர் அனைவரும் ஒன்று திரண்டு அவன் பின் சென்றனர்.
15.     யோவாபும் அவர் படையினரும் பெத்மாக்காவின் ஆபேலில் முற்றுக்கையிட்டு சேபாவை வளைத்தனர். நகருக்கு எதிராக முற்றுக் கோட்டை எழுப்பினர். அது மதிலுக்கு அருகில் இருந்தது. அதனின்று யோவாபோடு இருந்த வீரர்கள் அனைவரும் அம்மதிலை தகர்த்துக் கொண்டிருந்தனர்.
16.     அப்போது அறிவுக்கூர்மையுள்ள ஒரு பெண் நகரிலிருந்து குரல் கொடுத்து, கேளுங்கள்: கேளுங்கள். தயைகூர்ந்து யோவாபை இங்கே வரச் சொல்லுங்கள். நான் அவரிடம் பேச வேண்டும் என்றான்.
17.     அவரும் அவளருகே வந்தார். அப்பெண் அவரை நோக்கி, யோவாபு நீர் தாமா? என்றாள். நானேத்தான் என்றார் யோவாபு. உம் அடியவளின் வார்த்தைகளைக் கேளும் என்றான் அப்பெண். கேட்கிறேன் என்றார். யோவாபு.
18.     அவள் தொடர்ந்து கூறியது: முற்காலத்தில் அடிக்கடி கூறுவார்கள் ஆபேலுக்குச் சென்று ஆலோசனை கேட்பார்களாக! அதன் படியே பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
19.     இஸ்ரயேலில் நாங்கள் அமைதியும் நாணயமும் உடையவர்கள். இஸ்ரயேலின் தாயென விளங்கும் இந்நகரை நீர் அழிக்கத் தேடுவதேன்? ஆண்டவரின் உரிமைச் சொத்தை நீர் விழுங்குவானேன்? என்று அப்பெண் கேட்டாள்.
20.     அதற்கு யோவாபு இல்லை, விழுங்க வேண்டும் அல்லது அழிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை.
21.     காரியம் அதுவல்ல. எப்ராயிம் மலைப்பகுதியைச் சார்ந்த, பிக்ரியின் மகன் சேபா என்பவன் அரசர் தாவீதுக்கு எதிராகக் கையோங்கியுள்ளான். அவனை மட்டும் தாருங்கள். நான் நகரிலிருந்து விலகிச் செல்வேன் என்று பதில் கூறினார். அப்பொழுது அப்பெண் இதோ! அவன் தலை மதிலுக்கு அப்பால் உம்மிடம் தூக்கி எறியப்படும் என்றாள்.
22.     மக்கள் அனைவரும் அவள் அணுகி அறிவார்த்த ஆலோசனை கூறினாள். அவர்களும் பிக்ரியின் மகன் சேபாவின் தலையை வெட்டி யோவாபிடம் எறிந்தார்கள். யோவாபு எக்காளம் ஊத. அவர்கள் நகரை விட்டு நீங்கித் தம் வீடுகளுக்குச் சென்றனர். யோவாபு எருசலேமுக்குத் திரும்பி அரசரிடம் சென்றார்.
23.     யோவாபு அனைத்து இஸ்ரயேலின் படைத்தலைவராகவும், பெனாயாவின் மகன் யோயாதா கெரேத்தியர், பெலேத்தியரின் தலைவனாகவும் இருந்தனர்.
24.     அதோராம் கொத்தடிமைகளுக்குப் பொறுப்பாளனாகவும், அகிலுதின் மகன் யோசபாத்து பதிலாளனாகவும் இருக்க,
25.     சேவா செயலராகவும், சாதோக்கும் அபியத்தாரும் குருக்களாகவும் பணியாற்றினர்.
26.     யாயிரைச் சார்ந்த ஈசாவும் தாவீதின் குருக்கலில் ஒருவனாக இருந்தான்.

அதிகாரம் 21.


1.     தாவீதின் காலத்தில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பஞ்சம் ஏற்பட்டது. தாவீது ஆண்டவரின் திருவுள்ளத்தை நாடினார். கிபாயோனியரைச் சவுல் கொலை செய்ததன் காரணத்திற்காக அவன் மீதும் அவன் வீட்டார் மீதும் இரத்தப்பழி உள்ளது என்றார் ஆண்டவர்.
2.     அரசர் கிபயோனியரை அழைத்துப் பேசினார். கிபயோனியர் இஸ்ரயேலரை சார்ந்தவர் அல்ல: அவர்கள் எமோரியருள் எஞ்சியவர். இஸ்ரயேலர் அவர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தும், இஸ்ரயேல் மீதும் யூதாவின் மீதும் தாம் கொண்டிருந்த பேரார்வத்தின் காரணமாகச் சவுல் அவரை அழிக்க முயன்றார்.
3.     தாவீது கிபயோனியரிடம் உங்களுக்காக நான் செய்ய வேண்டியது என்ன? நீங்கள் ஆண்டவரின் உரிமைச் சொத்துக்கு ஆசிவழங்குமாறு நான் என்ன கழுவாய் செய்ய வேண்டும்? என்று கேட்டார்.
4.     கிபயோனிர் தாவீதிடம், சவுலிடமிருந்தோ அவன் வீட்டாரிடமிருந்தோ நாங்கள் பொன்னையோ வெள்ளியையோ எதிர்பாக்கவில்லை: இஸ்ரயேலருள் ஒருவனைக் கொல்ல வேண்டும் என்று நாங்கள் விருப்பவில்லை என்று கூறினார். தாவீது, நீங்கள் வீம்புவதை நான் செய்வேன் என்றார்.
5.     கிபயோனியர் அரசரிடம், நாங்கள் இஸ்ரயேல் எல்லையில் எங்குமே ஒழிந்து போகச் சதிசெய்தவன், எங்களை அழித்தவன் ஒருவன் உண்டு.
6.     அவன் புதல்வருள் ஏழு பேர் எங்களிடம் ஒப்புவிக்கப்பட்டும் ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட சவுலின் நகரான கிபயோனில் அவர்களை ஆண்டவருக்காகக் கழுவிலேற்றுவோம் என்று கூறினர். அரசரும் அவர்களை ஒப்புவிக்கிறேன் என்றார்.
7.     ஆனால் சவுலின் மகன் யோனத்தானும் ஆண்டவர் முன்னிலையில் செய்துகொண்ட வாக்குறுதியின் பொருட்டு சவுலின் மகன் யோனத்தானுக்குப் பிறந்த பெரிபொசேத்தை அரசர் தப்பவிட்டார்.
8.     அய்யாவின் மகள் இரிசபா சவுலுக்குப் பெற்றெடுத்த புதல்வர்களான அர்மோனி, மெபிபொசேத்து ஆகிய இருவரையும் சவுலின் மகள் மேராபு மெகொலாத்தியன் பர்சில்லாயின் மகன் அத்ரியேலுக்குப் பெற்றெடுத்த புதல்வர்கள் ஜவரையும் பிடித்து,
9.     கிபயோனியர் கையில் அரசர் ஒப்படைத்தார். இவர்களை ஆண்டவர் முன்னிலையில் மலையில் கழுவேற்றினர். அந்த ஏழுபேரும் ஒன்றாக மடிந்தார்கள். அவர்கள் வாற்கோதுமை அறுவடை தொடங்கிய முதல் நாள்களிலே கொலையுண்டார்கள்.
10.     அப்போழுது அய்யாவின் மகன் ரிஸ்பா சாக்குத் துணியை எடுத்துக் கொண்டுபோய் அதைப் பாறைமீது தனக்காக விரித்துக் கொண்டு, அறுவடை தொடங்கிய நாள் முதல் வானத்தினின்று அவர்கள் மீது மழை பொழியும்மட்டும் இருந்தாள்: பகலில் வானத்துப் பறவைகளையோ, இரவில் காட்டு விலங்குகளையோ அவர்களைத் தொட அனுமதிக்கவில்லை.
11.     சவுலின் வைப்பாட்டியான அய்யாவின் மகள் இரிசபா செய்தது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது.
12.     எனவே, தாவீது சவுலின் எலும்புகளையும் அவர் மகன் யோனத்தானின் எலும்புகளையும் யாபேசு கிவயாதின் மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டு வந்தார். பெலிஸ்தியர் அவர்களை கில்போவாவில் வெட்டி வீழ்த்தி, பெத்சான் நகர முற்றத்தில் கழுவிலேற்றினர். அந்த முற்றத்திலிருந்துதான் யாபேசு கியாதின் ஆள்கள் எலும்புகளை திருடிச் சென்றிருந்தனர்.
13.     சவுலின் எலும்புகளையும் யோனத்தானின் எலுக்புகளையும் அங்கிருந்து கழுவிலேற்றப்பட்ட இவர்களின் எலும்புகளையும் ஒன்று சேர்த்தனர்.
14.     சவுலின் எலும்புகளையும் அவர் மகன் யோனத்தானின் எலும்புகளையும் பென்யமின் நிலப்பகுதியான செலாவில் அவர்தம் தந்தை கீசின் கல்லறையில் அடக்கம் செய்தனர். அரசர் கட்டளையிட்டவாறே அனைத்தையும் செய்தனர். அதன் பின் நாட்டுக்காகச் செய்யப்பபட்ட வேண்டுதலைக் கடவுள் கேட்டார்.
15.     பெலிஸ்தியர் இஸ்ரயேலரோடு மீண்டும் போரிட வந்தனர். தாவீதும் அவரோடு அவருடைய பணியாளரும் இறங்கிச் சென்று பெலிஸ்தியரோடு போரிட்டனர். தாவீது களைப்புற்றிருந்தார்.
16.     அப்போது மூன்றரை கிலோகிராம் எடையுள்ள ஈட்டியை கையில் ஏந்தி, புதிய வாளை இடையில் கட்டியிருந்த, இஸ்பிபெனோபு என்னும் அரக்கர் இனத்தவன் ஒருவன், தாவீதைத் தாக்கவிருந்தான்.
17.     செரூயாவின் மகன் அபிசாய் அவருடைய உதவிக்கு வந்து அப்பெலிஸ்தியனைக் வெட்டிக் கொன்றான். எனவே தாவீதின் ஆள்கள், இஸ்ரயேலின் விளக்கு அணைந்து போகாதவண்ணம் நீர் இனி எங்களோடு போருக்கு வரக்கூடாது என்று அவரிடம் ஆணையிட்டுச் சொன்னார்கள்.
18.     இது நடந்தபின் மீண்டும் பெலிஸ்தியரோடு கோபி என்னுமிடத்தில் பேர் மூண்டது. அரக்கர் இனத்தவன் ஒருவரான சாபை ஊசாத்தியனான சிபெக்காய் கொன்றான்.
19.     மீண்டும் கோபில் பெலிஸ்தியரோடு போர் நடந்தது. பெத்லகேமைச் சார்ந்த யாகரே ஓர்கிமின் மகன் எல்கனான் கித்தியனான ஆகோலியாத்தைக் கொன்றான். அவனது ஈட்டியின் கோல் நெசவாளரின் படைமரம் போன்றிருந்தது.
20.     மீண்டும் காத்தில் போர் மூண்டது. கைகளிலும் கால்களிலும் ஆறு விரள்களுடன், இருபத்து நான்கு விரல்களைக் கொண்ட நெட்டையன் ஒருவன் இருந்தான்.
21.     அவன் இஸ்ரயேலை பழித்தவன். தாவீதின் சகோதரர் சிமயியின் மகன் யோனத்தான் அவனைக் கொன்றான்.
22.     தாவீதின் கையாலும் அவனது பணியாளரின் கையாலும் வீழ்த்தப்பட்ட இந்த நால்வரும் காத்து நாட்டில் அரக்கர் வழிமரபினரே.

அதிகாரம் 22.


1.     ஆண்டவர் தாவீதை அவருடைய எதிரிகள் கையினின்றும் சவுலின் கையினின்றும் விடுவித்தபோது அவர்கள் ஆண்டவருக்கு பண்ணிசைத்துப் பாடியது?
2.     ஆண்டவர் என் காப்பாறை: என் கோட்டை: என் மீட்பர்:
3.     கடவுள்: நான் புகலிடம் தேடும் மலை அவரே: என் கேடயம்: எனக்கு மீட்பளிக்கும் வல்லமை: என் அரண்: என் தஞ்சம்: என் மீட்பர்: கொடுமையினின்று என்னை விடுவிப்பவரும் அவரே.
4.     போற்றர்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன். என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன்.
5.     ஏனெனில், சாவின் அலைகள் என்னை சூழ்ந்துக் கொண்டன: அழிவின் சுழல்கள் என்னை மூழ்கடித்தன.
6.     பாதளக் கயிறுகள் என்னைச் சுற்றி இறுக்கின: சாவின் கண்ணிகள் என்னை சிக்க வைத்தன.
7.     நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்: என் கடவுளை நோக்கி கதறினேன். தமது கோவிலினின்று அவர் என் குரலைக் கேட்டார்: என் கதறல் அவர் செவிக்கு எட்டியது.
8.     அப்பொழுது, மண்ணுலகம் அசைந்து அதிர்ந்தது:
9.     அவரது நாசியினின்று புகை கிளம்புற்று: அவரது வாயினின்று எரித்தழிக்கும் தீ மூண்டது: அவரிடமிருந்து நெருப்பு கனல் வெளிப்பட்டது.
10.     வானை வாழ்த்தி அவர் கீழிறங்கினார்: கார் முகில் அவர் காலடியில் இருந்தது.
11.     கெரபுமீது அவர் ஏறிப் பறந்து வந்தார்: காற்றை இறக்கைகளாகக் கொண்டு விரைந்து வந்தார்.
12.     காரிருளை அவர் மூடுதிரை ஆக்கிக் கொண்டார்: நீர் கொண்ட முகிலைக் கூடாரமாக்கிக் கொண்டார்.
13.     அவர் தம் திருமுன்னின் பேரொளியினின்று நெருப்புக் கனல் தெரிந்தது.
14.     ஆண்டவர் வானங்களில் இடியென முழங்கினார்: உன்னதர் தம் குரலை அதிரச் செய்தார்.
15.     தம் அம்புகளை எய்து அவர் அவர்களை சிதறடித்தார்: மின்னல்களால் அவர்களை கலங்கடித்தார்.
16.     ஆண்டவரின் கடிந்துரையாலும் அவரது மூச்சுக் காற்றின் வலிமையாலும் கடவுளது அடிப்பரப்பு தென்பட்டது: நிலவுலகின் அடித்தளம் காணப்பட்டது.
17.     உயரத்தினின்று அவர் என்னை எட்டிப்பிடித்துக்கொண்டார்: வெள்ளைப் பெருக்கினின்று அவர் என்னை காப்பாற்றினார்.
18.     வலிமைமிகு எதிரிகளிடமிருந்து என்னை விடுவித்தார். என்னை விட வலிமைமிகு பகைவரிடமிருந்து என்னை பாதுகாத்தார்.
19.     எனக்கு இடுக்கண் வந்த நாளில் அவர்கள் என்னை எதிர்த்தார்கள்: ஆண்வரோ எனக்கு ஊண்று கோலாய் இருந்தார்.
20.     நெருக்கடியற்ற இடத்திற்கு அவர் என்னைக் கொணர்ந்தார்: நான் அவர் மனதிற்கு உகந்தவனாய் இருந்ததால் அவர் என்னைவிடுவித்தார்.
21.     ஆண்டவர் என் நேர்மைக்கு உரிய பயனை எனக்களித்தா+ என் மாசற்ற செயலுக்கு ஏற்பக் கைம்மாறு செய்தார்.
22.     ஏனெனில் நான் ஆண்டவர் காட்டிய நெறியைக் கடைப்பிடித்தேன்: பொல்லாங்கு செய்து என் கடவுளை விட்டு அகலவில்லை.
23.     அவர் தம் நீதி நெறிமுறைகளை எல்லாம் என் கண்முன் வைத்திருந்தேன்: அவர்தம் விதிமுறைகளை நான் ஒதுக்கித் தள்ளவில்லை.
24.     அவர் முன்னிலையில் நான் மாசற்றவனாய் இருந்தேன்: தீங்கு செய்யா வண்ணம் என்னைக் காத்துக்கொண்டேன்.
25.     ஆண்டவர் என் நேர்மைக்பு உரிய பயனை அளித்தார்: அவர்தம் பார்வையில் குற்றமற்றவனாய் இருந்தேன்.
26.     மாறா அன்பர்க்கு மாறா அன்பராகவும் மாசற்றோர்க்கு மாசற்றவராகவும் நீர் விளங்குகின்றீர்!
27.     தூயோர்க்கு தூயோராகவும் வஞ்சகர்க்கு விவேகியாகவும் உம்மை நீர் காட்டுகின்றீர்.
28.     எளியோர்க்கு நீர் மீட்பளிக்கின்றீர்: செருக்குற்றோரை ஏளனத்துடன் நீர் பார்க்கின்றீர்.
29.     ஆண்டவரே! நீரே என் ஒளி விளக்கு! ஆண்டவர் என் இருளை ஒளிமயமாக்குகின்றார்.
30.     உம் துணையுடன் நான் எப்படையையும் நசுக்குவேன்: என் கடவுளின் துணையால் எம்மதிலையும் நான் தாண்டுவேன்.
31.     இந்த இறைவனின் வழி நிறைவானது: ஆண்டவரின் வாக்கு நம்பத்தக்கது: அவரிடம் அடைக்கலம்புகும் அனைவர்க்கும் அவரே கேடயமாய் இருக்கின்றார்.
32.     ஏனெனில், ஆண்டவரைத் தவிர வேறு இறைவன் யார்? நம் கடவுளைத் தவிர நமக்கு வேறு கற்பாறை ஏது?
33.     இந்த இறைவன் எனக்கு வலிமைமிகு கோட்டையமாய் உள்ளார்: என் வழியை பாதுகாப்பானதாய்ச் செய்தவரும் அவரே.
34.     அவர் என் கால்களை மான்களின் கால்களைப் போல் ஆக்குகின்றார்: உயர்ந்த இடத்தில் என்னை நிலை நிறுத்துகின்றார்.
35.     போருக்கு என்னை அவர் பழக்குகின்றார்: எனவே வெண்கல வில்லையும் என் புயங்கள் வளைக்கும்!
36.     பாதுகாக்கும் உம் கேடயத்தை நீர் எனக்கு வழங்னீர்: உமது துணையால் என்னை நீர் பெருமைப்படுத்தினீர்.
37.     நான் நடக்கும் வழியை நீர் அகலமாக்கினீர்: என் கால்களை தடுமாறவில்லை.
38.     எதிரிகளைத் துரத்திச் சென்று அழித்தேன்: அவர்களை அழித்தொழிக்கும் வகையில் நான் திரும்பவில்லை.
39.     நான்அவர்களை கொன்று அழித்தேன்: அவர்கள் எழுந்திருக்கவில்லை: அவர்கள் என் காலடியில் வீழ்ந்துகிடந்தார்கள்.
40.     போரிடும் ஆற்றலை எனக்கு அரைக் கச்சையாக அளித்தீர்: என்னை எதிர்த்தவர்களை எனக்கு அடிப்பணியச் செய்தீர்.
41.     எதிரிகளைப் புறமுதுகிடச் செய்தீர்: என்னை வெறுத்தோரை நான் அழித்துவிட்டேன்.
42.     உதவி வேண்டி அவர்கள் கதறினார்கள்: ஆனால் அவர்களுக்கு உதவ யாருமில்லை: அவர்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடினார்கள்: ஆனால் அவர்கள்களுகு ஆண்டவர் பதிலளிக்கவில்லை.
43.     எனவே நான் அவர்கழள மண்ணின் பழுதியென நசுக்கினேன்: அவர்களைத் தெரு சேறென மிதித்துத் தெறிக்கச் செய்தேன்.
44.     மக்களின் கலத்தினின்று என்னை விடுவித்தீர்: பிற இனங்களுக்கு என்னைத் தலைவாக்கினீர்: முன்பின் அறியாத மக்கள் எனக்கும் பணிவிடை செய்தனர்.
45.     வேற்று நாட்டவர் என்னிடம் கூனிக்குறிகி வந்தனர்: அவர்கள் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் எனக்குக் கீழ்படிந்தனர்.
46.     வேற்று நாட்டவர் உள்ளம் தளர்ந்தனர்: தம் அரண்களிலிருந்து நடுங்கிக் கொண்டு வெளியே வந்தனர்.
47.     ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்: என் கற்பாறையாம் அவர் போற்றப் பெறுவாராக! என் மீட்பின் கற்பாறையாம் கடவுள் மாட்சியுறுவாராக!
48.     எனக்காகப் பழிவாங்கும் இறைவன் அவர்: மக்களினங்களைக் கீழ்ப்படுத்தியவரும் அவரே!
49.     பகைவரிடமிருந்து என்னை அழைத்து வந்தவரும் அவரே! என் எதிரிகளின் மேலாக என்னை உயர்த்தினீர்! என்னைக் கொடுமைப்படுத்தியவரிடமிருந்து நீர் என்னைக் காத்தீர்
50.     ஆகவே ஆண்டவரே! பிற இனத்தவரிடையே என்னைப் போற்றுவேன்: உம் பெயருக்குப் புகழ் மாலை சாற்றுவேன்.
51.     தாம் ஏற்படுத்திய அரசருக்கு வெற்றியை அவளிப்பவர் அவரே! தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கு அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே!

அதிகாரம் 23.


1.     மேன்மை மிக்கவரும் யாக்கோபின் கடவுளிடமிருந்து திருப்பொழிவு பெற்றவரும் இஸ்ரயேலின் இனிமைமிகு பாடகரும் ஈசாயின் மைந்தருமான தாவீதின் இறுதிமொழிகளாவன:
2.     ஆண்டவரின் ஆவி என் மூலம் பேசினார்: அவரது வார்த்தை என் நாவில் ஒலித்தது.
3.     இஸ்ரயேலின் கடவுள் என்னோடு பேசினார்: இஸ்ரயேலின் பாறை எனக்கு கூறினார்.
4.     விடியற்கால ஒளியென திகழ்கிறான்: முகிலற்ற காலை கதிரவனென ஒளிர்கிறான்: மண்ணின்று புல் முளைக்கச் செய்யும் மழையென விளங்குகிறான்.
5.     குடும்பம் இறைவனோடு இணைந்துள்ளது அன்றோ? அனைத்திலும், திட்டமிடப்பட்டு உறுதியாக்கப்பட்டு, என்றும் நிலைக்கும் உடன்படிக்கை அவர் என்னோடு செய்து கொண்டார். என் அனைத்து மீட்பும் விருப்பும் அவரால் உயர்வு பெறாதோ?
6.     இழிமக்கள் அனைவரும் இரும்பும் தடியும் ஈட்டிக் கோலும் கொண்டு, நெருப்பால் முற்றிலும் சுட்டெரிக்கப்படுவனவாகவும் கையால் தொடத்தகாதவனவுமான காட்டு முட்களைப் போன்றவர்.
7.     பாசெபத்து மூவருள் முதல்வனாக இருந்த அவன், எஸ்னீயன் அதினோ என்று அழைக்கப்பட்டான். ஏனெனில் அவன் ஒரே சமயத்தில் எண்ணூறு பேரைத் தக்கிக் கொன்றான்.
8.     அவனுக்கு அடுத்தவன் அகோகிக்குப் பிறந்த தோதோவின் மகன் எலியாசர், போரிடுமாறு ஒன்றுதிரண்டு வந்த பெலிஸ்தியரை எதிர்த்துச் சென்ற போது தாவீதுடன் இருந்த வலிமைமிகு வீரர் மூவருள் ஒருவன் அவன். முதலில் இஸ்ரயேலர் பின் வாங்கினர்.
9.     அப்பொழுது அவன் தனித்து நின்று, கை சோர்வுற்று வாளோடு ஒட்டிக்கொள்ளும் அளவிற்கு பெலிஸ்தியரைத் தாக்கினான்.
10.     ஆண்டவர் பெரும் வெற்றியைத் தந்தார். அவன் வீரர்கள் அவனை கொள்ளையடிப்பதற்காக அவனிடம் திரும்பினர்.
11.     அடுத்தவன் ஆராரியன் ஆகேயின் மகன் சம்பா. பயறு நிறைந்த வயல் ஒன்றில் பெலிஸ்தியர் கூட்டமாகத் திரள, மக்கள் புறமுதுகுகாட்டி ஓடினார்கள்.
12.     அபபோது அவன் வயல் நடுவே நின்று அதைப் பாதுகாத்தான்: பெலிஸ்தியரை வெட்டி வீழ்த்தினான். ஆண்டவர் மாபெரும் வெற்றியை தந்தார்.
13.     மூப்பது படைத்தலைவருள் மூவர் அறுவடைக் காலத்தில் தாவீது தங்கியிருந்த அதுல்லாம் குகைக்கு வந்தனர். அரக்கர்களின் கணவாயில் பெலிஸ்தியர் கூட்டம் பாளையம் இறங்கி இருந்தது.
14.     அப்போது தாவீது பாதுகாப்பான கோட்டைக்குள் இருந்தார். பெலிஸ்தியர் பெத்லகேமில் இருந்தார்.
15.     தாவீது, ஏக்கத்துடன், பெத்லகேம் வாயிலருகே உள்ள கிணற்றிலிருந்து எனக்குக் குடிக்க தருபவன் யார்? என்று கேட்டார்.
16.     அம்மூன்று வலிமைமிகு வீரரும் பெலிஸ்தியரின் அணிகளுக்குள் புகுந்து சென்று பெத்லகேம் வாயிலருகே உள்ள கிணற்றிலிருந்து நீர் மொண்டு, அதைத் தாவீதிடம் எடுத்து வந்தனர். தாவீதோ அதை குடிக்க விரும்பாமல் ஆண்டவருக்காக வெளியே ஊற்றினார்.
17.     தங்கள் உயிரைப் பணயம் வைத்துச் சென்றவர்களின் இரத்தமன்றோ இது! ஆண்டவரே, இதை நான் எவ்வாறு குடிக்க முடியும்? என்று சொல்லி, அவர் அதை குடிக்க விரும்பவில்லை. இம் மூன்று வீரரும் ஆற்றிய செயல்கள் இவையே.
18.     யோவாபின் சகோதரன், செரூயாவின் மகன் அபிசாய் முப்பதின்மருக்குத் தலைவனாக இருந்தான். அவன் முந்நூறுபேருக்கு எதிராக தன் ஈட்டியை சுழற்றி அவர்களை கொன்றான். மூவருக்கு இணையாக அவன் பெயர் பெற்றவன்.
19.     அம்முப்பதின்மரில் அவனல்லவோ அதிக புகழ்பெற்றவன்? அவர்களின் தலைவனும் அவனே. ஆயினும் முன்னைய மூவருக்கும் அவன் சமமாகஇல்லை.
20.     கப்சவேலைச் சார்ந்த யோயாதாவின் மகன் பெனாயா பல வீரச் செயல்கள் புரிந்தவன். சிங்கம் போன்ற இரு மோவாபிய வீரரைக் கொன்றவன். பனி பெய்து கொண்டிருந்த ஒருநாள் குகைக்குள் அவன் சென்று ஒரு சிங்கத்தைக் கொன்றான்.
21.     உருவில் பெரிய ஒரு எகிப்தியனை அவன் கொன்று போட்டான். ஈட்டியைக் கையில் கொண்டிருந்த அந்த எகிப்தியனிடம் இவன் ஒரு கோலோடு சென்று, ஈட்டியை அவன் கையிலிருந்து பிடுங்கினான். பின் அவன் ஈட்டியைக் கொண்டே அவனைக் கொன்றான்.
22.     யோயாதாவின் மகன் பெனாயா இவற்றைச் செய்து, முதல் மூவருக்கு இணையாக புகழ் பெற்று திகழ்ந்தான்.
23.     முப்பது பேரில் அவனும் புகழ் பெற்றிருந்தான். ஆனால் முதல் மூவருக்கு சமமாக இல்லை. ஆயினும் அவனைத் தாவீது தன் மெய்க்காப்பாளனாக ஏற்படுத்தினார்.
24.     யோவாபின் சகோதரன் அசாவேல் முப்பது பேரில் ஒருவன். அவர்கள் யாரெனில், பெத்லகேமைச் சார்ந்த தோதோவின் மகன் எல்கானான்.
25.     அரோத்தியன், சம்மா, அரோதியன், எலிக்கா,
26.     பல்தியன் ஏலேசு, தெக்கோவைச்சார்ந்த இக்கேசின் மகன் ஈரா.
27.     அனத்தோத்தியன் அபியேசர், ஊசாத்தியன் மெபுன்னாய்,
28.     அகோகியன் சல்மோன், நெற்றோபாயன் மகராய்,
29.     நெற்றோபாயன் பானாவின் மகன் ஏலேபு, பென்யதியனின் கிபயாவைச் சார்ந்த இரிபாயின் மகன் இத்தாய்,
30.     பிரத்தோனியன் பெனாயா, காகசு நீரோடைகளின் இதாய்,
31.     அர்பாத்தியன் அபிஅல்போன், பர்குமியன் அஸ்மவேத்து,
32.     சால்போனியன் எலியகுபா, யாசேனின் மகன் யோனத்தான்,
33.     அராரியன் சம்மா, அராரியன் சாராரின் மகன் அகீயாம்,
34.     மாகாத்தியன் அகஸ்பாயியின் மகன் எலிபலேற்று, கிலோனியன் அகித்தோபலின் மகன் எலியாம்,
35.     கர்மேலியன் எட்சரோ, அர்பியன் பாராய்,
36.     சோபாவைச் சார்ந்த நாத்தானின் மகன் இகால், காத்தியன்பானி,
37.     அம்மோனியனின் செலேக்கு, செரூயாவின் மகனும் யோவாபின் படைக்கலன் தாக்குவோனுமான பெயரோத்தியன் நகராய்,
38.     இத்ரியன் ஈரா, இத்ரியன் காரேபு,
39.     இத்தியன் உரியா, இவர்கள் அனைவருமே அந்த முப்பது பேர்.

அதிகாரம் 24.


1.     மீண்டும் இஸ்ரயேல் மீது ஆண்டவரின் சினம் பற்றி எரிந்தது. அவர்களுக்கு எதிராகச் செயல்பட அவர் தாவீதிடம், புறப்பட்டுப் போய், இஸ்ரயேல், யூதா மக்களை எண்ணுவாய் என்று தூண்டிவிட்டார்.
2.     அரசர் யோவாபையும் அவரோடிருந்த படைத்தலைவர்களையும் அழித்து, மக்கள் தொகை என்னவென்று நான் அறிய வேண்டும். நீங்கள் தாண் முதல் பெயேர்செபா வரை அனைத்து இஸ்ரயேல் குலங்களிடையே சென்று வீரர்கள் தொகையை கணக்கிடுங்கள் என்றார்.
3.     யோவாபு அரசரை நோக்கி, ஆண்டவராம் கடவுள் வீரர்களை இப்போது இருபதைப்போல் இன்னும் நூறு மடங்கு மிகுதிப்படுத்துவாராக! என் தரைவராம் அரசர் இதைக் காண்பாராக! ஆனால் என் தலைவராம் ஆண்டவர் இதை செய்ய விரும்புவது ஏன்? என்று கேட்டார்.
4.     இருப்பினும் யோவாபுக்கும் படைத்தலைவருக்கும் எதிராக அரசரின் வார்த்தையே நிலைத்தது. இஸ்ரயேல் வீரர்களைக் கணக்கிடுவதற்காக யோவாபும் படைத்தலைவர்களும் அரசர் முன்னிலையினின்று புறப்பட்டுச் சென்றனர்.
5.     அவர்கள் யோர்தானைக் கடந்து, காத்துப் பள்ளத்தாக்கின் நடுவே இருந்த நகரின் வலப்புறம் ஆரோயரில் கூடாரமிட்டு: பின் யாசேர் நோக்கிச் சென்றனர்.
6.     கிலாது வந்தடைந்த பிறகு, தத்தீம் கொத்சி எல்லைக்குள் சென்று, தாண்யானுக்கும் சீதோன் சுற்றுப்புறத்திற்கும் சென்றனர்.
7.     பிறகு தீர் கோட்டைக்கும், இப்பியர் கானானியரின் அனைத்து நகரங்களுக்கும் சென்று, அங்கிருந்து யூதாவின் தென்புறமான பெயேர்செபாவரை சென்றனர்.
8.     இவ்வாறு அவர்கள் நாடெங்கும் சென்று ஒன்பது மாதங்களும் இருபது நாள்களும் கடந்தபின் எருசலோமை வந்தடைந்தனர்.
9.     யோவாபு, வீரர்களின் தொகைக்கணக்கை அரசரிடம் தந்தார். வாளை ஏந்தும் வீரர்கள் எண்ணூறு பேர், இஸ்ரயேலிலும், ஜந்நூறு பேர் யூதாவிலும் இருந்தனர்.
10.     வீரர்களின் தொகையைக் கணக்கெடுத்தபிறகு தாவீது மனம் வருந்தினார். நான் மாபெரும் பாவம் செய்தேன்! ஆண்டவரே! உன் அடியானின் குற்றத்தை மன்னித்தருளும்! ஏனெனில் நான் பெரும் மதியீனனாய் நடந்து கொண்டேன் என்று தாவீது ஆண்டவரிடம் மன்றாடினார்.
11.     தாவீது காலையில் எழுந்தார். தாவீதின் திருக்காட்சியளராகிய இறைவாக்கினர் காதிற்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது.
12.     நீ சென்று ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகத் தாவீதிடம் சொல்: நான் உன் மீது மூன்று தண்டனைகளைக் குறிப்பிடுகிறேன். நீ ஒன்றைத் தேர்ந்தெடு. அதன் படி நான் செய்வேன்.
13.     காது தாவீதிடம் வந்து அவரிடம் பேசி வெளிப்படுத்தியது: உனது நாட்டில் ஏழு ஆண்டு பஞ்சம் வரட்டுமா? உன் எதிரிகள் உன்னைப்பின்தொடர, மூன்று மாதங்கள் நீ தப்பியோட வேண்டுமா? அல்லது உன் நாட்டில் மூன்று நாள்கள் கொள்ளை நோய் ஏற்படலாமா? என்னை அனுப்பியவருக்கு நான் என்ன மறுமொழி சொல்ல வேண்டும் என்று சிந்தித்து முடிவுசெய் .
14.     நான் மிகவும் மனவேதனையுற்றுள்ளேன். ஆண்டவரது கையில் நாம் விழுவோம். ஏனெனில் அவரது இரக்கம் பெரிது! மனிதரின் கையில் விழவேண்டாம் என்று தாவீது கூறினார்.
15.     ஆண்டவர் காலை முதல் குறித்த நேரம் வரை இஸ்ரயேலின் மீது கொள்ளை நோய் அனுப்பினார். தாண் முதல் பெயேர்செபாவரை எழுபதாயிரம் மக்கள் மாண்டனர்.
16.     வானதூதர் எருசலேமை அழிப்பதற்காக அவன்மீது தன் கையை ஓங்கினார். ஆண்டவர் அத்தீமையை குறித்து மனம் வருந்தி மக்களை அழித்துக் கொண்டிருந்த வானத்தூதரை நோக்கி, போதும்! உன் கையைக் கீழே போடு என்றார். அப்போது ஆண்டவரின் தூதர், எபூசியன் அரவுனாவின் போரடிக்கும் களத்தருகே இருந்தார்.
17.     மக்கள் அழித்துக் கொண்டிருந்த ஆண்டவரின் தூதரை தாவீது கண்டபோது, அவர் ஆண்டவரை நோக்கி, பாவம் செய்தவன் நானல்லவோ? தீச்செயல் புரிந்தவன் நானல்லவோ? இம்மந்தை எக்குற்றம் செய்தது? இப்போது உம் கை என்னையும் என் தந்தையின் வீட்டாரையும் வதைப்பதாக! என்று கூறினார்.
18.     அன்று காது தாவீதிடம் வந்து அவரை நோக்கி, நா சென்று எபூசியன் அரவுனாவின் போரடிக்கும் களத்தருகே ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பும் என்றார்.
19.     தாவீது காதின் வார்த்தைப்படி எழுந்து சென்று ஆண்டவரின் கட்டளையை நிறைவேற்றினார்.
20.     அப்போது அரசரும் அவருடைய பணியாளரும் தன்னை நோக்கி வருவதை அரவுனா கண்டான். அரவுனா புறப்பட்டு சென்று முகம் குப்புறத் தரையில் வீழ்ந்து வணங்கினான்.
21.     தலைவராம் அரசர் உம் அடியானிடம் வருவது ஏன்? என்று அரவுனா வினவ, தாவீது மக்களிடமிருந்து கொள்ளை நோய் விலக ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பவேண்டும். அதற்காக உன்னிடமிருந்து உன் போரடிக்கின்ற களத்தை விளைக்கு வாங்க வந்தேன் என்று கூறினார்.
22.     தலைவராம் அரசர் அதை எடுத்துக்கொண்டு தம் விருப்பம் போல் பலி செலுத்துவாராக! இதோ எரிபலிக்கு வேண்டிய காளைகள்: போரடிக்கும் உருளை காளைகளின் நுகத்தடிகளும் விறகாகட்டும்!
23.     அரசரே! இவையனைத்தையும் அரவுனா தங்களுக்குத் தருகிறான்! ஆண்டவராம் கடவுள் உம்மை ஏற்றுக் கொள்வாராக! என்று அரவுனா தாவீதிடம் கூறினான்.
24.     இல்லை! நான் உன்னிடம் விலைக்குத்தான் வாங்குவேன். நான் இலவசமாக பெற்று என் கடவுளாம் ஆண்டவருக்கு எரிபலி செலுத்தமாட்டேன் என்று அரசர் அரவுனாவிடம் கூறி, போரடிக்கும் களத்தையும் காளைகளையும் ஜம்பது வெள்ளிக் காசுகளுக வாங்கினார்.
25.     தாவீது அங்கே ஒரு பலிபீடம் எழுப்பி, ஆண்டவருக்கு எரிபலிகளும், நல்லுறவு பலிளும் செலுத்தினார். நாட்டுக்காகச் செய்த மன்றாட்டை ஆண்டவர் கேட்டருள, இஸ்ரயேலிலிருந்து கொள்ளை நோய் நீங்கியது.

 

 


 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home