Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamils - a Trans State NationStruggle for Tamil Eelam > Liberation Tigers of Tamil Eelam  > Department of International Relations  > Selvarasa Pathmanathan (KP) Blog > 8 July 2009 > 15 July 2009 > 22 July 2009 > 29 July 2009 > 5 August 2009

Liberation Tigers of Tamil Eelam

Department of International Relations
 

Pathmanathan Pages

Some thoughts on a political programme of Eelam Tamils
in the current context of our homeland

Selvarasa Pathmanathan (KP) Blog, 5 August 2009

[see also Selvarasa Pathmanathan abducted in Kuala Lumpur, 7 August 2009
and Concerning KP - Nadesan Satyendra,  6 August 2009 ]
 



Writing in these pages, last week, I pointed out that it is not easy to travel the path of politico-diplomatic path. I have also underlined the fact that the journey would be long, arduous and would require immense patience.

I stressed the importance of the political programme for this journey and indicated that we would discuss issues related to our political programme this week.

How can we formulate the political programme for the next phase of our struggle? This is a million dollar question that needs careful examination through different political angles. The political programme will be fashioned by current realities, steadfastness of our commitment to our goals and a proper evaluation of the tasks ahead. More importantly, the attitudes and approach of the Government of Sri Lanka would determine the intensity and the form of our political programme.

At this stage, we have to consider an important dimension: The success of the politico-diplomatic path of Eelam Tamil nation depends on the unity of our nation based on three fundamental political principles : Tamil nationhood, historical homelands and Tamils inalienable right to self- determination.

The political aspirations of the people of Tamil Eelam were built on the above mentioned principles. These were explicitly expressed and clearly articulated through the Vaddukoddai resolution of 1976, during the negotiations at the Thimbu talks in 1985 and in the proposal for an Interim Self Governing Authority (ISGA) in 2003. These aspirations should be kept alive, politically nurtured and ideologically renewed and strengthened in the changing global and regional context.


Nallur Temple

Our homeland is under Sri Lankan military occupation. Avenues for free expression are closed. All the doors to articulate our just political demands are firmly shut. However, we as oppressed nation and people are no longer confined to the �nation-space� of one country. Our politics is not just �national� or nationalist politics. Ours is now a transnational politics, in the era of globalization and any political programme we come up with should reflect this crucial reality. Our political programme for the liberation of our nation has to be undertaken simultaneously in our homeland and in the transnational arenas and spaces that we occupy as transnational citizens, diasporics and enlightened cosmopolitans.

The situation, then, demands two parallel political programmes in accord with the political conditions in the homeland and amongst the Tamil diaspora. We may have to deploy different strategies but the purpose, ideals and common understanding would remain the same. Both programmes would complement each other.

I use the phrase �the political programme of Eelam Tamil Nation� intentionally. It is to stress the importance of unification of our nation based on our fundamental political principles, nationhood, homeland and right to self determination.

I think that it would be appropriate to discuss the current political conditions of our homeland in order for all of us to better understand the political programme of Eelam Tamil Nation.
At present, there is no democratic space exists for Tamil nation in our homeland to express our political aspirations openly.

Eelam Tamil Nation can only freely express its political aspirations� when it is totally freed from the Sri Lankan military occupation, when our people have resurrected their life from the brutal war and return to normalcy in their own homes and hearths, when they are able to write, discuss and debate politics openly without fear of prosecution.

Freedom of expression of our nation is not only robbed from us by the Government of Sri Lanka but also by the oppressive legislations of that country. For example, if a �Sri Lankan, citizen� expresses his or her opinion within the country or abroad that Tamil Nation is entitled to form an independent state in their historical homeland of the island on the basis of Tamil nationhood, homeland and right to self determination , it is a punishable offence under the sixth amendment of the Sri Lankan constitution.

Furthermore, The Government of Sri Lanka claims that it rejects ethnic politics, while simply implementing an ethnic chauvinistic programme and pogrom to cleanse us from Sri Lanka. It also claims that there are no minorities in Sri Lanka.

While ruling the country under Sinhala hegemony, by maintaining the country as a Buddhist country through the constitution, by allocating just two small straps in the Sri Lankan national flag to depict Tamils and Muslims, it is absurd to make such claims.

We, Eelam Tamil people have demanded the recognition of our Nation. We have fought for it. While recognizing Sinhala people as a Nation, we fought for our recognition through non-violent means and the failure of that process required an armed struggle. Successive Sinhala Governments did not recognize Eelam Tamils as a Nation. The governments that have ruled the country before the present government at least recognized the ethnic identity of Tamils and attempted to deal with the Tamil national question as the question of �minority�.

Here, we have to clearly distinguish the differences between a Nation and a minority. The Eelam Tamil Nation is numerically six times smaller than the Sinhala Nation. However, we are not a minority. We, having north and east of the island as our historical homeland, having Tamil as our distinguished language and having a common cultural life based on our Tamil culture � we are people of Tamil Nation who have the right to Self determination.

We are eligible for all the rights that the Sinhala Nation has, including the right to Self determination. Previous Sri Lankan Governments did not accept our claim to Nationhood. But we fought for our nation.

Mahinda Rajapakse regime takes a dangerous position by denying not only our claim to nationhood, but also our ethnic identity. It proclaims that there are no minorities in the country. It says that our country is Sri Lanka � we are all �Sri Lankans�. We do not accept that.

Sri Lanka is the identity of the Sinhala people. It does not represent Tamil Nation. We are Eelam Tamil People. We are not Sri Lankans. This is the sense of identity every Eelam Tamil has in their consciousness.

I would categorize the nation building project of the Mahinda regime as �forced nation building�. By denying the identity of Tamil people, the Rajapakse regime erases our very existence. I would hope that Political and social scientists would study the forced nation building project. It is obvious that the project of forced nation building would fail and would be placed in the right spot in history: dustbin!

As one of the aspects of this project, Sinhala regime tries to weaken the political organizations and parties that carry an ethnic identity. It is also not ready to allow the Tamils parties, who are working with the regime to carry their ethnic identity. It was evident during the local and provincial council elections in the East and now becoming very clear in the local council elections in the North.

By planting the candidates under the common symbol of the ruling parties �betel leave � and winning the elections through military domination, elections fraud, manipulations and bribes, Sinhala regime works with the agenda to demonstrate to the world that Tamil people have rejected ethnic politics.

After having achieved some �success� in the East on this account, Sinhala regime has intensified this policy in the North too.

To destabilize the Tamil national politics, weakening Tamil National Alliance (TNA) is an important agenda for the Sinhala regime. Sinhala regime operates with a strategy of shrinking the political space for Tamil national politics.

Based on this strategy, Tamil Media have been threatened not to engage with or write about Tamil national political debates and discussions.

In addition, it is expected by certain sections that we have to work with the government or not to confront with the government for the benefit of the people who are kept in the internment camps.

We have to analyze the present political condition of the homeland based on the above mentioned scenarios.

Under these conditions, how do we deal with the immediate issues and larger political issues of the Tamil Nation?
As our liberation movement has decided to silence the guns and follow a politico diplomatic path, our cadres in the homeland would follow this decision. Since we do not have an open political space in the homeland to engage in political activates, our carders can not openly engage in any political activates at this point in time.

However, our cadres are determined to engage in political activities in the future according to the thoughts of our national leader powerfully articulated in his 2008 National Hero Day address: � travel through the path left by history and follow the order of time.

Political activities in the Tamil homeland have to be undertaken by the political forces that are loyal to the interests our people and have the space to function openly. This force should give importance and priority for mass mobilization championing Tamil national interests.

I will continue next week (12.08.2009) on the political programme in the homeland.
 



Please send forth your opinions that you wish to share to the email address below. I wish to publish some of these in this web site. Please inform me if you do not wish your comments to be made public.

The email address to receive your comments or opinions is:[email protected]

Thank you. We will meet again next week.

Respectfully
KP

05.08.2009


 

தாயகத்தின் தற்போதய அரசியல் சூழலும் ஈழத் தமிழர் தேசத்திற்கான அரசியல் வேலைத்திட்டமும் !
August 1, 2009 | வலைப்பதிவு | எழுதியவர்: செல்வராசா பத்மநாதன்

அரசியல் இராசதந்திரப் பாதையின் ஊடாக பயணம் செய்வது என்பது இலகுவான ஒரு விடயம் அல்ல எனவும் பல சவால்களையும் எதிர் கொண்டு மிகுந்த சகிப்புத்தன்மையுடன் மேற்கொள்ள வேண்டிய நீண்ட தூரப் பயணம் இது எனவும் கடந்த வாரப்பக்கங்களில் குறிப்பிட்டிருந்தேன்.

இப் பயணத்திற்கு உரிய அரசியல் வேலைத்திட்டம் மிகவும் முக்கியம் எனவும் இது குறித்த சில கருத்துக்களுடன் நாம் இவ் வாரம் சந்திப்பதாகவும் கடந்த வாரப் பக்கங்களின் இறுதியில் குறிப்பிட்டிருந்தேன்.

நமது அடுத்த கட்டப் போராட்டத்திற்குரிய அரசியல் வேலைத்திட்டம் எவ்வாறு அமையப்போகிறது என்பது பல்வேறு அரசியல் கோணங்கள் ஊடாகவே பார்க்கப்படல் வேண்டும். சமகால நிலவரங்கள், எதிர்காலம் பற்றிய எமது நோக்கமும் � மதிப்பீடும் இந்த வேலைத்திட்டங்களை வடிவமைக்கின்றன. அனைத்திலும் மேலாக சிங்கள அரசின் நடவடிக்கைகள் எமது வேலைத்திட்டத்தின் தீவிரத்தினையும், வடிவங்களையும் பாதிக்கும்.

நாம் இவ்விடயத்தில் முக்கியமான அம்சத்தினைக் கவனத்திற் கொள்ள வேண்டும். ஈழத் தமிழர் தேசத்தின் அடுத்த கட்ட அரசியல் இராசதந்திர போராட்டத்தின் வெற்றி ஒட்டு மொத்தமான ஈழத் தமிழர் தேசத்தினையும் தமிழர் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் என்ற உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் ஒருங்கிணைப்பதிலேயே தங்கியுள்ளது.

தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகள் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து கட்டப்பட்டவை. 1976ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம், 1985ம் ஆண்டு திம்புப் பிரகடனம், 2003ம் ஆண்டு இடைக்கால நிர்வாக அதிகாரசபைத் திட்டம் ஆகியன ஊடாக வெளிப்படுத்தப்பட்டவை. இவ் அரசியல் அபிலாசைகள் உயிர்ப்பாகப் பேணப்பட்டு பலப்படுத்தப்படவேண்டியவை.

இதேவேளை, இன்றைய தாயகச் சூழலில் சிறிலங்காவின் இராணுவ ஆதிக்கப்பிடிக்குள் சிக்கியுள்ள நமது மக்களால் உடனடியாக தமது அரசியல் அபிலாசைகளை ஓங்கி ஒலிப்பதற்கான வழிகள் மூடப்பட்டுள்ளன.

எனினும், ஈழத்தமிழ்த் தேசத்தின் அரசியல் இலங்கைத் தீவின் வடக்கு கிழக்குப் பகுதியோடு சுருங்கி விடாமல் நாடுகடந்த அரசியலாக விரிவாக்கம் கண்டுள்ள இன்றைய சூழலில் நமது தேசத்தின் விடுதலைக்கான அரசியல் வேலைத்திட்டம் நமது தாயகத்திலும் நாடு கடந்த நிலையிலும் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமானதாகும்.

இவ் அடிப்படையில் தாயகத்திலும் புலத்திலும் நிலவும் அரசியல் சூழலுக்கு ஏற்ப � ஒரு பொதுநோக்குடன் பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் � தாயகத்திலும் புலத்திலும் இரு வேறுபட்ட ஆனால் ஒன்றுக்கொன்று துணைபுரியக்கூடிய செயற்திட்டங்களை தமிழர் தேசம் சமாந்திரமாக முன்னெடுக்க வேண்டும்.

இங்கு நான் தமிழர் தேசத்தின் திட்டங்கள் என்று கூறுவதற்கு காரணம் உண்டு. தேசியம், தாயகம், சுயநிர்ணயம் என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் நாம் ஒன்றுபட்ட தேசமாக இயங்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தவே இவ்வாறு குறிப்பிடுகிறேன்.

நமது அடுத்த கட்டப் போராட்டத்திற்கான அரசியல் வேலைத் திட்டம் தொடர்பான நமது சிந்தனைகளை நமது தாயகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழலை ஆய்வு செய்வதுடன் ஆரம்பிப்பது பொருத்தமானது எனக் கருதுகிறேன்.

நமது தாயகத்தின் தற்போதைய நிலையில் தமிழர் தேசம் தனது அரசியல் அபிலாசைகளை வெகுசன வடிவங்கள் ஊடாக வெளிப்படுத்தக்கூடிய சனநாயகச் சூழல் இல்லை.

சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்குள் சிக்கியுள்ள ஈழத் தமிழர் தேசம் இராணுவ ஆக்கிரமிப்பு அகன்ற ஒரு சூழலில் � கொடிய யுத்தத்தினால் நிலை குலைந்து போன தமது வாழ்வினை மீளக் கட்டியமைத்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள ஒரு சூழலில் � எவ்வித அச்சமுமின்றி � ஆபத்துக்களுமின்றி அரசியல் கருத்துக்களை வெளிப்படையாக எழுதவும் பேசவும் விவாதிக்கவும் முடியக்கூடிய ஒரு சூழலில் மட்டுமே � தமது அரசியல் அபிலாசைகளை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியும்.

நமது தாயகத்தில் மக்களின் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பால் மட்டுமல்ல � சிறிலங்காவின் சட்டங்களுக்கூடாகவும் மறுக்கப்பட்டிருக்கிறது.

உதாரணமாக தமிழர் தேசத்தின் அரசியல் அபிலாசைகளான தேசியம், தாயகம் எனும் அடிப்படைகளோடு கூடிய சுயநிர்ணயத்தை அதன் முழுமையான அர்த்தத்துடன் � அதாவது ஈழத் தமிழ்த் தேசிய இனம் தனது அரசியல் தலைவிதியினைத் தானே தீர்மானிக்கக்கூடிய உரிமையே சுயநிர்ணய உரிமை எனும் அடிப்படையில் � தமக்கென ஒரு தனிநாட்டினை அமைத்துக் கொள்ள உரிமையுடையது என்ற கருத்தினை உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ ஒரு �சிறிலங்காப்பிரசை� வெளியிட்டால் � சிறிலங்காவின் அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச்சட்டத்தின் கீழ் இது தண்டனைக்குரிய ஒரு குற்றம்.

மேலும் தற்போதய சிறிலங்கா அரசு தான் இனத்துவ அரசியலை நிராகரிப்பதாகக் கூறுகிறது. சிறுபான்மை என எவரும் இலங்கைத்தீவில் இல்லை எனவும் கூறுகிறது.

சிங்கள இனத்தின் அரசியல் ஆதிக்கத்துக்குள் இலங்கைத்தீவினை அமிழ்த்திக் கொண்டு � பௌத்த நாடாகப் அரசியல் சட்டரீதியாகப் நாட்டைப் பேணிக்கொண்டு � சிறிலங்காவின் தேசியக்கொடியில் �சிறுபான்மையினரான� தமிழருக்கும் முஸ்லீம்களுக்கும் இரு சிறிய கோட்டுத்துண்டுகளை ஒதுக்கிக் கொண்டு இவ்வாறு பேசுவது மிகப் பெரும் அபத்தம்.

இலங்கைத்தீவில் நாம் ஈழத் தமிழ் தேச மக்களாகிய நாம் ஒரு தேசம் (Nation) என்ற அங்கீகாரத்தைக் கோரினோம். அதற்காகப் போரிட்டோம். சிங்கள தேசத்தை அங்கீகரித்தவாறு � தமிழ்த் தேசத்திற்கு உரிய அங்கீகாரத்திற்காக அகிம்சை வழியிலும் ஆயுதம் தாங்கியும் ஈழத் தமிழர் தேச மக்களாகிய நாம் போராடினோம்.

சிங்கள அரசுகள் ஈழத் தமிழ் மக்களை தேசமாக அங்கீகரிக்கவில்லை. ஆனால் மகிந்த அரசுக்கு முன்னைய சிங்கள அரசுகள் தமிழரின் இனத் தனித்துவத்தை ஏற்றுக்கொண்டு �சிறுபான்மையினர்� என்ற அடிப்படையில் நமது பிரச்சினைகளை அணுக முற்பட்டனர்.

இங்கு எண்ணிக்கையில் குறைந்த தேசிய இனம் என்பது வேறு. சிறுபான்மையினர் என்பது வேறு. இந்த வேறுபாட்டை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

சிங்கள தேசத்துடன் ஒப்பிடும் போது தமிழர் தேசம் ஆறு மடங்கு எண்ணிக்கையில குறைந்தது தான். ஆனால் ஈழத் தமழ் மக்கள் சிறுபான்மையினர் அல்லர். இலங்கைத்தீவின் வடக்குக்கிழக்குப் பகுதிகளை தமது தாயகமாகக் கொண்டு தமிழ் மொழி, தமிழ்ப்பண்பாடு அடிப்படையில் தனித்தவமாக வாழ்ந்து வரும் � சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய ஒரு தேசம்.

சிங்கள தேசத்திற்குரிய அனைத்துரிமைகளுக்கும் தன்னாட்சி உரிமைக்கும் தமிழர் தேசம் உரித்துடையது. இதனை முன்னைய சிங்கள அரசுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனை எதிர்த்துத் தமிழர் தேசம் போராடியது.

ஆனால் தற்போதைய மகிந்த அரசு இன்னும் ஓர்படி மோசமாகப் போய் ஈழத்தமிழ் மக்களாகிய நாம் ஒரு தேசம் என்பதை நிராகரிப்பது மட்டுமன்றி � நமது இனத் தனித்துவத்தையே மறுக்கிறது. சிறுபான்மை என இங்கு எவரும் இல்லை. நமது நாடு சிறிலங்கா � நாம் அனைவரும் சிறிலங்கரே � எனக் கூறுகிறது. இதுவே மகிந்த அரசின் கொள்கைப் பிரகடனம்.

சிறிலங்கா சிங்கள தேசத்திற்குரிய. அடையாளம். தமிழர் தேசத்திற்குரியது அல்ல. நாம் ஈழத் தமிழர். சிறிலங்கர் அல்ல. இது ஒவ்வொரு ஈழத் தமிழருக்குள்ளும் ஆழ உறைந்திருக்கும் அடையாள நியமம்.

இதனை மறுதலித்து மகிந்த அரசு செய்ய முனையும் சிறிலங்கா தேச நிர்மாணத்தை நான் வலிந்த தேச நிர்மாணம் (Forced Nation Building) என வகைப்படுத்த விரும்புகிறேன். அரசியல் அறிஞர்கள் இந்த வகையான வலிந்த தேச நிர்மாணத்தை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். வரலாற்றில் மகிந்த அரசின் வலிந்த தேச நிர்மாணம் தோல்வியினைத் தழுவுவது திண்ணம்.

ஆனால் சிறிலங்கா அரசு தற்போது கொண்டுள்ள இராணுவ மேலாதிக்க நிலையினூடாக தனது வலிந்த தேசநிர்மாண முயற்சியினை தமிழர் தேசத்தின் மீது பலாத்காரமாக திணிக்கவே முயலும்.

இதன் ஓரம்சமாக இனத்தனித்துவத்துடனான அரசியல் அமைப்புக்களை, கட்சிகளை தனது அதிகாரத்தின் மூலம் பலவீனப்படுத்தவே சிங்கள அரசு முயற்சிக்கிறது. தன்னோடு இணைந்து இயங்கும் தமிழ்க்கட்சிகளைக்கூட தமது அடையாளங்களோடு இயங்கவிட சிங்கள அரசு தயாராய் இல்லை.

கிழக்கில் நடைபெற்ற மாகாணசபை மற்றும் உள்ளுராட்சித் தேர்தல்களிலும் தற்போது யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தல்களிலும் இதனை வெளிப்படையாக அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

தனது ஆழும் கூட்டணியின் கூட்டுச்சின்னமான வெற்றிலை சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தி � இராணுவ மேலாதிக்கத்தினாலும், தேர்தல் மோசடிகளினாலும், அழுத்தங்களினாலும், சலுகைகளினாலும் தேர்தல் முடிவுகளைத் தனக்குச் சாதகமாக வென்றெடுத்து � தமிழ்த் தேசிய அரசியலை தமிழ் மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்ற கருத்து நிலையை உருவாக்கும் திட்டத்துடன் சிங்கள அரசு செயற்பட்டு வருகிறது.

இத் திட்டத்தில் கிழக்கில் தான் அடைந்த குறிப்பிடத்தக்களவு �வெற்றியை� தொடர்ந்து வடக்கிலும் இவ் அணுகுமுறையை சிங்கள அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

தமிழ்த் தேசிய அரசியலைப் பலவீனப்படுத்த தமிழர் தேசியக் கூட்டமைப்பினைப் பலவீனப்படுத்தல் சிங்கள அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்று. தமிழ்த் தேசிய அரசியலுக்கான அரசியல் வெளியினைச் (political space) சுருக்குதல் என்ற மூலோபாயத்தின் அடிப்படையில் சிங்கள அரசு இயங்கி வருகிறது.

இப் பின்னணியில் தமிழ்த் தேசியம் தாங்கிய கருத்தாடல்களை மேற்கொள்ள முடியாத வகையில் தமிழ் ஊடக உலகம் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப் பட்டிருக்கிறது.

இதனை விட சிங்கள அரசின் தடுப்பு முகாம்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நமது மக்களின் நல் வாழ்வுக்காக அரச எதிர்ப்பு அரசியலிலிருந்து விடுபட்டு அரசுடன் இணைந்து அல்லது அரசுடன் முரண்படாது செயற்படவேண்டும் என்ற வாதமும் சிலதரப்புக்களால் முன்வைக்ப்படுகிறது.

இப் பின்னணிகளிலிருந்தே நமது தாயகத்தின் அரசியல் சூழலை நாம் நோக்க வேண்டும்.

இச் சூழலுக்குள் இருந்து நமது மக்களின் உடனடிப்பிரச்சினைககளையும் அரசியல் பிரச்சினைககளையும் எவ்வாறு தமிழர் தேசம் அணுகப் போகிறது?

விடுதலைப்புலிகள் அமைப்பு ஆயுதங்களை மௌனிக்கச் செய்து அரசியல் இராசதந்திரப் பாதையினைப் பின்பற்ற முடிவு செய்துள்ளதால் தாயகத்தில் உள்ள நமது போராளிகள் இயக்கத்தின் முடிவைப் பின்பற்றிச் செயற்பட்டு வருகின்றனர்.

வெளிப்படையாக அரசியல் வேலைத்திட்டங்களில் ஈடுபடக்கூடிய எந்தவிதமான அரசியல் வெளிகளும் இல்லாமையால் விடுதலைப்புலிகள் இயக்கம் நமது தாயகத்தில் தற்போது எவ்விதமான அரசியல் வேலைத்திட்டங்களிலும் வெளிப்படையாக ஈடுபட முடியாது.

ஆயினும் கடந்த 2008ம் ஆண்டுக்கான மாவீரர்நாள் உரையில் நமது தலைவர் கோடிட்டுக் காட்டியது போன்று வரலாறு விட்ட வழியில் காலம் இடுகின்ற கட்டளைப்படி என்கின்ற சிந்தனையுடன் � எமது இயக்கத்தின் போராளிகள் தாயகம் பூராவும் எமது அரசியல் வேலைத்திட்டத்தினை பல்வேறுபட்ட வெகுசன வடிவங்களில் எதிர்காலத்தில் முன்னெடுக்க சங்கற்பம் பூண்டுள்ளனர்.

மறுபுறம் தாயகத்தின் அரசியல் வேலைத்திட்டங்களை தாயகத்தில் தற்போது வெளிப்படையாக இயங்கும் � தமிழ் மக்களின் நலன்களில் விசுவாசம் கொண்ட அரசியல் இயக்கங்களும், பிற அமைப்புக்களும் ஈடுபடுவது முக்கியமானதாகும். இந்தச் சக்திகள் தமிழ்மக்களின் தேசிய நலன்களுக்கான வெகுசன போராட்டங்களை முதன்மையானதாகக் கருதி முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

தாயகத்தில் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டிய அரசியல் வேலைத்திட்டம் எவ்வாறு அமையலாம் என்பது குறித்த எனது கருத்துக்ளை அடுத்த வாரப்பக்கங்களில் (08.08.2009) பகிர்ந்து கொள்கிறேன்.

என்னுடன் நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பம் கருத்துக்களை கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

இவற்றில் பொருத்தமானவற்றைப் இப் பகுதியில் பிரசுரிக்கவும் நான் விரும்புகிறேன். உங்கள் கருத்துக்கள் பிரசுரிக்கப்படுவதனைத் தாங்கள் விரும்பாவிடின் அதனையும் குறிப்பிடுங்கள்.

உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

நன்றி. மீண்டும் நாம் அடுத்த வாரம் சந்திப்போம்.


என்றும் அன்புடன்
கேபி
01.08.2009
 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home