Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil National ForumSelected Writings - M.Thanapalasingham > Tamil Eelam Struggle for Freedom and the New Cold War

Selected Writings

M.Thanapalasingham, Australia
-
ம. தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டமும் , அது தழுவிய சமச்சீரற்ற வல்லரசுகளுக்கிடையிலான புதிய பனிப்போரும்

18 July 2008

"இலங்கைத் தீவில் இன்று இரண்டு போராட்டங்கள் இடம் பெறுகின்றது. ஒன்று சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையேயான போராட்டம். மற்றது இப் பிராந்தியத்தில் தமது நலன்களைப் பேண தமிழர்களின் போராட்டத்தை கருவியாக்கும் வல்லரசுகளுக்கிடையேயான போராட்டம்."

[see also International Frame & the Tamil Eelam Struggle for Freedom]


" எமக்கு நிரந்தரமான நண்பர்களும் இல்லை, நித்தியமான பகைவர்களும் இல்லை. எங்கள் நலன்கள் நிரந்தரமானவை. அவை தொடர்ந்தும் இருப்பவை. அந்த நலன்களைப் பேணுவதே எமது பணி" பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் பாமஸ்ரன் ப்ரபு (1784 � 1865)  

We have no eternal allies and we have no perpetual enemies. Our interests are eternal and perpetual, and those interests it is our duty to follow." - British Foreign Secretary, Lord Palmerston (1784-1865) 

உலகம் தர்மச்சக்கரத்தில் சுழலவில்லை என்பதை நாம் அறிவோம். இந்த உலகத்தில் ஒவ்வொரு நாடும் தத்தம் நலன்களையே பேணுகின்றனர். இன்றைய உலக ஒழுங்கை பொருளாதார வர்த்தக நலன்களே தீர்மானிக்கின்றன, நீதிக்கான சட்டங்களோ மக்களின் உரிமைகளோ அல்ல. இத்தகைய நலன்களே நாடுகளுக்கிடையேயான உறவுகளையும் இராசதந்திரத்தையும் தீர்மானிக்கின்றன. இதனால் எமது போராட்டத்யதின் ஞாயத்திற்கான அங்கிகாரத்தை சர்வதேசச் சமூகத்திடம் உடனடியாக நாம் எதிர்பார்க்கமுடியாது. உண்மையில் எமது போராட்டத்தின் வெற்றி எம்மிலே தங்கியுள்ள்து, உலகத்தில் அல்ல. எமது வெற்றி எங்கள் முயற்சிகளில், எமது பலத்தில், எமது உறுதியில் மட்டுமே தங்கியுள்ளது என தமிழீழத்தேசியத் தலைவர் திரு வே.பிரபாகரன் கூறியுள்ளமை மனம் கொள்ளத்தக்கது.

"We are fully aware that the world is not rotating on the axis of human justice. Every country in this world advances its own interests. Economic and trade interests determine the order of the present world, not the moral law of justice nor the rights of people. International relations and diplomacy between countries are determined by such interests. Therefore we cannot expect an immediate recognition of the moral legitimacy of our cause by the international community... In reality, the success of our struggle depends on us, not on the world. Our success depends on our own efforts, on our own strength, on our own determination." Velupillai Pirabakaran, 1993

இலங்கைத் தீவில் இன்று இரண்டு போராட்டங்கள் இடம் பெறுகின்றது. ஒன்று சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையேயான போராட்டம். மற்றது இப் பிராந்தியத்தில் தமது நலன்களைப் பேண தமிழர்களின் போராட்டத்தை கருவியாக்கும் வல்லரசுகளுக்கிடையேயான போராட்டம்.

இலங்கை காலனித்துவ ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெற்றது முதல் ஒற்றையாட்சி அமைப்பின்கீழ் எண்ணிக்கையில் பெரும்பான்மையினரான சிங்களவர் நிரந்தரமான ஆழ்வோர்களாகவும் எண்ணிக்கையில் குறைவான தமிழ் மக்கள் நிரந்தரமாக ஆளப்படுவோர்களாகவும் ஆக்கப்பட்டனர். நாட்டின் அரசியல் பொருளாதாரம் மற்றும் சமூக கலாசார வாழ்வில் தமிழ் மக்கள் புறம் தள்ளப் பட்டனர். இதற்கு எயதிரான தமிழ் மக்களின் போராட்டம் பாராளுமன்றத்தின் உள்ளே வாதங்களாகவும் பாராளுமன்றத்திற்கு வெளியே அகிம்சைப் போராட்டங்களாகவும் வடிவம் பெற்றன. அரசியல் கோசமாக சமஸ்டிக் கோட்பாடு முன் வைக்கப்பட்டது. இவையாவும் அரச பயங்கரவாதத்தால் நசுக்கப்பட்டன.

முடிவில் சமஸ்டிக்கோரிக்கையை முன்வைத்து காந்திய வழிப்பட்ட அகிம்சைப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த தமிழ்த் தலைவர் தந்தை செல்வா அதனை கைவிடுவதாக 1976 ஆம் ஆண்டு அறிவித்து தன் பாராளுமன்றப் பதவியைத் துறந்து தேர்தலில் குதித்தார். அவர் ஈட்டிய அமோக வெற்றியைத் தொடர்ந்து சமஸ்டிக் கோரிக்கையை கைவ்ட்டு ப்ரிந்துபோகும் தனி நாட்டுக்கான ப்ரகடனத்தை அறிவ்த்தார்.  

" We have completely abandoned the Federal concept, we have decided to separate. If we don't separate we can never win back our lost rights. We will try in every way to set up a Separate State. This is certain. As the voice of my people I tell this to Sri Lanka and the world from this house. We know this is not an easy task. We know it is a difficult path. But either we must get out of the rule of the Sinhalese or perish. This is our ideal. "

" சமஸ்டிக் கோட்பாட்டை நாம் முற்றாகக் கைவிட்டு விட்டோம். பிரிந்து போவதாக நாம் முடிவு செய்து விட்டோம். நாம் பிரிந்து செல்லாது விட்டால் இழந்த எமது உரிமைகளை ஒருபோதும் திரும்பப் பெற முடியாது. தனிநாடு ஒன்றை உருவாக்க நாம் எல்லா வழிகளையும் முயற்சிப்போம். இது நிச்சயம். என் மக்களின் குரலாக நான் இந்தச் சபையில் இருந்துகொண்டு சிறிலங்காவிற்கும் உலகத்திற்கும் கூறுகின்றேன். இது ஒரு சுலபமான காரியம் அல்ல என்பது எமக்குத் தெரியும். இது ஒரு கடினமான காரியம் என்பதும் எமக்குத் தெரியும். ஆனால் ஒன்றில் நாம் சிங்களவரின் ஆட்சியில் இருந்து வெளியேற வேண்டும் அல்லது அழிந்து போகவேண்டும். இது எமது இலட்சியம் "

தந்தை செல்வா நாம் பிரிந்துபோவதைத் தவிர வேறுவழி இல்லை என்பதை சிங்களவருக்கு மட்டுமல்ல உலகத்திற்கும் அறிவிக்கிறார். ஒரு நாட்டின் பிறப்பிற்கும் அதற்கான அங்கீகாரத்திற்கும் சர்வதேசத்தின் ஆதரவு வேண்டும் என்பதை அவர் அறியாமலா என்ன. தனிநாட்டை அமைக்க நாம் எல்லா வழிகழையும் நாடுவோம் என அவர் கூறியபோது ஆயுதப் போராட்டத்திற்கான சாளரம் திறகப்படவேண்டிய வரலாற்றின் நிற்பந்தத்தையும் அவர் அறியாமலா இருந்திருப்பார்..

ஆனால் தந்தை செல்வா இறந்தபோது யாழ் ஆயர் அம்பலவாணர் கூறியதுபோல்
 

"He died like Moses himself , without reaching the promised land but the vision he saw, he leaves behind as the heritage and challenge to his people "

யூதர்களின் மோசசைப் போல் இவர் மரணம் இவரால் உறுதியழிக்கப்பட்ட தனிநாட்டை அடையமுன்பே நிகழ்ந்துவிட்டது. ஆனாலும் இவர் கண்ட காட்சி தன் மக்களுக்கு இவரால் விட்டுச்செல்லப்பட்ட பாரம்பரியமும் சவாலுமாகும்.

இந்தப் பாரம்பரியத்தை சுமந்தவண்ணம் இதற்காக உயிரையே அர்பணிக்கும் தொன்மமாக நச்சுக் குப்பியை கழுத்தில் கட்டிய தலைமுறையொன்று தமிழ் மண்ணில் வேர்விட்டு எழுந்தது.
 

" In the long history of the world only a few generations have been granted the role of defending freedom in its hour of maximum danger" JFK

 உலகின் நீண்ட வரலாற்றில் , சுதந்திரத்திற்கு கடுமையான அபாயம் ஏற்படும்போது அதை பாதுகாக்கும் பொறுப்பு சில தலைமுறையினருக்கு மட்டும் வழங்கப்படுகிறது எனக் கூறினார் ஜோன் எவ் கெனடி. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவகையில் வரலாறு அந்தச் சுமையை எம் பிள்ளைகளான புலிகளுக்கு அளித்துள்ளது.

இந்த எழுச்சியின் விளைவான தேசிய விடுதலைப்போராட்டம் மூன்று தசாப்தங்களாகத் தொடர்கின்றன. இந்தப் போராட்டம் சிங்களவருக்கும் தமிழர்களுக்கும் இடையேயான போராட்டமாக இருந்திருப்பின் அது எப்போவோ ஒரு முடிவிற்கு வந்திருக்கும். இங்குதான் மற்றவர்களின் போராட்டம் நிகழ்கின்றது.

இன்று சர்வதேச சமூகத்தில் இருந்து இப்பிரச்சனைக்கான தீர்வாக நீதியுடன் கூடிய சமாதானம் என்ற குரல்களும் , இராணுவத் தீர்வல்ல அரசியல் தீர்வே என்ற குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றபோதும் தத்தம் நலன்களைப் பேணும் அவர்களின நடைமுறையானது தமிழ் மக்களுக்கு நீதியினை வழங்க மறுக்கின்றது. ஒருபுறம் சர்வதேச சக்திகள் இலங்கைத்தீவில் இடம் பெறும் முரண்பாட்டால் ஏற்பட்டுள்ள வாய்ப்புக்களை தமது நலன்களைப் பேணுவதற்காகப் பயன்படுத்துகின்றனர். மறுபுறம் சிங்கள ஆட்சியாளர் இதனால் கிடைத்துள்ள அரசியல் வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் தேசியவிடுதலைப் போராட்டத்தை நசுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது இன்றுள்ள கசப்பான உண்மையாகும்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இன்று ஒரு புதிய பனிப்போரில் இறங்கியுள்ள அமெரிக்கா - இந்தியா - சீனா ஆகிய மும் மூர்த்திகளால் ஏற்படுத்தப்பட்டுள்ள வாய்ப்பினைப் பயன்படுத்தி அவர்கள் மூவரதும் ஆதரவுடன் தமிழ் மக்களை மீளா அடிமைகளாக வைத்திருக்க சிங்கள ஆட்சியாளர் கங்கணம் கட்டி நிற்கின்றனர். இதற்காகக் தீவின் பல பகுதிகளையும் அவைசார்ந்த கடல்பகுதிகளையும் சிங்கள அரசு ஏலம் போடுகின்றது.

இந்தியாவிற்கு திருகோணமலை எண்ணைக்குதங்கள், சீனாவிற்கு அம்பாந்தோட்டையில் துறைமுக அமைப்பு, அமெரிக்காவுடன் இராணுவம் சம்பந்தமான பத்து வருட ஒப்பந்தம்
(Ten year Acquisition and cross-servicing Agreement) அத்தோடு அமெரிக்க ஒலிபரப்பு (Voice of America) சம்பந்தப்பட்ட இணைப்புக்கள், ஆத்திலை போற தண்ணீலை அண்ணைகுளி தம்பிகுளி என எல்லோருக்கும் மன்னார் கடல் வேள்வியில் கூறுகள் என ஏலவிற்பனை தொடர்கிறது.

இந்த வல்லரசுகளை தன் வசப்படுத்த சிறிலங்காவும் இவர்களுக்கிடையே ஒரு வலுச் சமநிலையை கையாள முனைகிறது. ஆனால் சிலரை சில நேரங்களில் ஏமாற்றலாம் எல்லாரையும் எல்லா நேரங்களிலும் ஏமாற்ற முடியுமா? குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்தியா இதனை அனுமதிக்குமா. அத்தோடு வந்திருக்கும் மும்மூர்திகளும் தமக்குள் ஒத்துழைப்பார்களா. எதில் ஒத்துச் செல்வர். எதில் போட்டிபோடுவர். யார் யாருடன் ஒத்துழைப்பர். யாருடன் போட்டிபோடுவர். 1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா அளித்த ஆதரவு போல் இனியும் ஆதரவு நல்குமா?. அது பனிப்போர்காலம் மட்டுமல்ல இந்தியா மூக்கு உடைபட்டு வெளியேறும் என்பதும் அமெரிக்காவால் எதிர்பார்க்கப் படாத ஒன்றா?

பேராசிரியர் நவரட்ண பண்டார கூறுவதுபோல் தமிழ்த் தேசிய முரண்பாடு எண்பதுகளில் சிறீலங்கா என்னும் தீவைக் கடந்து இந்திய வல்லரசின் கரைகளை வலம்வந்தபோது இந்தியாவே தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிட்டது. இப்போது இந்தக் கிள்ளலுக்கும் தடவலுக்குமான ஏகபோக உரிமையை அவர்கள் உதாசீனம் செய்துவிட்டார்கள். இப்போது மேற்கு உலகம் இதனை கையாளத் தொடங்கியுள்ளது. சிங்களத்தின் மனித உரிமை மீறல்கள் தொடக்கம் பல அழுத்தங்களை இவர்கள் இப்போது அடக்கிவாசிப்பதில்லை. இது எதற்காக?

இந்த வல்லரசுகள் ஏன் இங்கு நங்கூரம் இடத் துடிக்கின்றன? ஆசியாவில் வலுமை பெற்று வரும் சீனாவும் இந்தியாவும் 21 ஆம் யிற்றாண்டின் முக்கிய நாயகர்கள் எனவும் இந்து சமுத்திரம் 21 ஆம் யிற்றாண்டினை வசப்படுத்தும் திறவுகோலை தன்னகத்தே கொண்டுள்ளதெனவும் அமெரிக்க மற்றும் இராணுவ பொருளாதார ��கங்களுக்கான கற்கைகளில் ஈடுபட்டுள்ள பலரும் கூறுகின்றனர். துரித வளர்ச்சியினைப் பெற்று வரும் சீனா இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அதற்கான எரிபொருள் ,எண்ணை என்பன தங்கு தடையின்றி ஓட இந்து சமுத்திரத்தின் கடல்வழிப் பாதைகளும் போக்குவரத்துப் பாதைகளும் முக்கியமாகின்றன. எண்ணை மற்றும் எரிபொருள்களை கொண்டுள்ள நாடுகளின் முக்கியமான ஓடுபாதை இந்து சமுத்திரமே. இந்தச் சமுத்திரத்தில் இலங்கைத் தீவின் அமைவிடம் அதன் கேந்திரச் சொத்தாகும்.

இந்தக் கடல்வழிப் பாதையை தன் வசப்படுத்த சீனா கையாளும் வி�கத்தை முத்துச்சரம் என்பர் (வுhந ளவசiபெ ழக pநசடள ளவசயவநபல) பர்மா, பங்களாதேஸ், மடகாஸ்கர், பாகிஸ்தான் என்னும் நாடுகளில் கடல்சார் தளங்களை அமைத்துவரும் சீனாவிற்கு சிறீலங்காவின் அம்பாந்தோட்டையும் அதில் கோர்க்கப்படும் ஒரு முத்தாகும். இந்தக் கோர்ப்பு இந்தியாவைச் சுழ இடம்பெறுவது அங்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளதை அவர்களின் செயல்பாடுகள் காட்டுகின்றன. சீனாவை சுற்றிவளைத்து கட்டுப்படுத்த முயலும் அமெரிக்காவிற்கும் இது ஒரு சவாலாகிறது.

சிறிலங்காவின் கேந்திர அமைவிடம் , அதன் அமைவு ஒரு பெரும் தொடர்பாடலுக்கான மையமாக அமைந்திருத்தல், பிரித்தானிய கடல்படைத்தளபதி நெல்சனால் உலகின் அற்புதமான துறைமுகம் என வர்ணிக்கப்பட்ட திருகோணமலைத் துறைமுகம் என்பன இந்த வல்லருசுகளுக்கிடையே ஒரு புதிய பனிப்போரை உருவாக்கியுள்ளது எனலாம். இவர்களோடு பாகிஸ்தான், ஈரான், றஸ்சியா, யப்பான் ,பிரித்தானியா மற்றும் ஜரோப்பிய நாடுகள் தங்கள் மூக்குகளையும் நுளைத்துள்ளன. முடிவில் இவர்கள் ஏதோ ஒரு வகையில் அந்த மும் மூர்திகள் பின்னே விரும்பிச் செல்லும் கூட்டாளிகளாக இடம்பிடிக்கலாம். தம்மைத் தாமே இணைத்தலைமை நாடுகள் என்று சிலர் கூறவில்லையா.

இந்தப் பகைப்புலத்தில் நிகழ்வதே தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டமாகும். தேசத்தை நோக்குவதால் இது தேசியம். அன்னிய சிங்கள அடக்குமுறையில் இருந்து விடுபடுவதால் இது விடுதலைப் போராட்டம். இதனால் சர்வதேச அங்கீகாரம் எமக்கு வேண்டும். நாடுகளுக்கு நிரந்தரமாகவும் தொடர்ச்சியாகவும் இருப்பவை அவர்களின் நலன்களே. அந்த வகையில் எமது எதிரிகள் நாளை நமது நண்பர்களாகலாம். தாரக்கி டி.சிவராம் கூறியதுபோல் சிறிலங்காவில் உறுதிநிலையை ஏற்படுத்த முயலும் இந்தியாவினதோ அமெரிக்காவினதோ நலன்களுக்காக எம் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த எம் தந்தையர் மண்ணை, அவர் தங்கமதலைகள் ஈன்று அமு�ட்டி பின்னர் அங்கவர்மாய அவர் உடல் �ந்துகள் ஆர்ப்பரித்த எம் தாய்நாட்டை நாம் எவர்க்கும் தாரைவார்க்கமாட்டோம். எல்லோர் நலன்களும் எம்நலன்களாக வாழ நாம் தயாராக உள்ளோம்.

" யாவரும் கேளீர் " என்பது எமது பாரம்பரியம். சிவராம் கூறியதுபோல் ஓரு நாட்டு மக்கள் பிளவுபட்டு இருக்கும்போதே அன்னியப் படைகள் நுழைந்து வெற்றிபெற முடியும். மக்களை அரசியல் விழிப்புணர்ச்சி கொண்டவர்களாகவும் இனப்பற்றுள்ளவர்களாகவும் அவர்களின் புத்தியை, சிந்தனை ஆற்றலை வளர்பதற்கான செயல்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். இந்த வகையில் பொங்குதமிழ் நிகழ்வுகளோடு நின்றுவிடாது கலாசாரம் பண்பாடு தழுவிய உன்னதங்களால் மக்களை ஆகர்சித்து நிற்கவேண்டும். எமது இலட்சியம் புனிதமானது. அதில் உறுதியாக இருப்போமேயானால் யார் வலைப்பின்னல்களை பின்னினாலும் அதை மனித ஆற்றலால் உடைத்து வெளியேற முடியும் என்பதற்கு வரலாறு சாட்சி.

1505 ஆம் ஆண்டு லொறன்ஸ் டஷி அல்மைடா என்னும் போர்துக்கேய மாலுமி புயலால் சிக்குண்டு காலித்துறைமுகத்தை வந்தடைந்ததும் அவர்கள் முதலில் கேட்டது ஒரு வெறும் பண்டகசாலையே என்பதும் அதை கோட்டை மன்னன் புவனேகபாகு கொடுத்ததும் அதன் விழைவுகளும் பழையகதை. ஆனாலும்
The Life of Reason என்னும் யிலின் ஆசிரியர் George Santayana  கூறும் " "Those who cannot remember the past are condemned to repeat it � வரலாற்றை ஞாபகத்தில் வைக்காதோர் அதனை மீண்டும் எழுத நிற்பந்திக்கப்படுவர் என்பதை இங்கு சிங்கள ஆட்சியாளர்களுக்கு அழுத்திக் கூறுவதில் பிழையில்லை.

தேசிய விடுதலைக்காகப் போராடும் மக்கள் இத்தகைய பின்புலத்தில் மிகவும் விழிப்புடன் செயல்படவேண்டும். தேசிய விடுதலைப் போராட்டமே வரலாற்றில் அந்தத் தேசத்தினை அதற்குரிய பங்கைச் செலுத்த வழிசமைக்கின்றது. தேசியப் பிரக்ஞையின் இதயத்தில்தான் உலகம்தழுவிய பிரக்ஞை வாழவும் வளரவும் முடியும். இதற்காக நாம் எமது இலட்சியத்தில் உறுதியுள்ளவர்களாக இருக்கவேண்டும். ஏனெனில்;

" உலகெங்கும் தமிழினம் பரந்து வாழ்ந்தாலும் தமிழீழத்திலேதான் தேசிய ஆன்மா விழிப்புப் பெற்றிருக்கின்றது , தமிழீழத்திலேதான் தேசிய ஆளுமை பிறந்திருக்கின்றது , தமிழீழத்திலேதான் தனியரசு உருவாகும் வரலாற்றுப் புறநிலை தோன்றியிருக்கின்றது. " தமிழீழத் தேசியத்தலைவர் திரு. வே. பிரபாகரன்

ஆயின் எமது தேசிய விடுதலை , தேசநிர்மாணம் என்பன மனிதத்தின் உன்னதங்களைத் தட்டி எழுப்பும்போதே, வீறுணர்ச்சி பெறும்.

சங்ககாலத்து ஒளவையார் கூறுவதுபோல் ஒரு நாட்டின் பெருமை அதன் வளங்களைப் பொறுத்தன்று. அது அங்குவாழும் மக்களைப் பொறுத்தது.

வீரம், தன்மானம் , தாரளமான நட்பு, விரிவான கலைப்பயிற்சி , பயனுள்ள தொழில் முயற்சி, சாதிமத பிடிவாதங்கள் அற்ற சுதந்திரமான நிமிர்ந்த நடை , செல்வச் செருக்கற்ற சரளமான உறவு என்பவற்றை வலியுறுத்தியவள் ஒளவை. �ரயுகம் ஒன்றின் கவியரசி அல்லவா அவள் . நாடு என்பது மக்களைத் தழுவியது என்கிறாள் ஒளவை. நாடாக இருந்தால் என்ன, காடாக இருந்தால் என்ன, மேடாக இருந்தால் என்ன, பள்ளமாக இருந்தால் என்ன எங்கு மக்கள் நல்லவர்களோ அந்த மக்களைக் கொண்ட நிலமே நீ வாழ்வாயாக.

" நாடா கொன்றோ, காடா கொன்றோ
அவலா கொன்றோ, மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை; வாழியநிலனே (புறநாணூறு 187)

சர்வதேசம் சிங்கள மக்களை நேசிக்கவும் இல்லை தமிழ் மக்களை வெறுக்கவும் இல்லை. அவர்கள் தங்கள் நலன்களைப் பேணவே வந்துள்ளனர். அதனை வெளிப்படையாகப் பேசுவோம் என நாம் கேட்கவேண்டும். ஏனெனில் இலங்கைத் தீவில் அவர்கள் வேண்டும் உறுதிநிலையை ஏற்படுத்த இது அவசியம் மட்டுமல்ல இதுவே சரியான வழியுமாகும்.

 பேராசிரியர் ஜோன் நீல்சென் (Prof.John P Neelsen) கூறவது போல் வரலாறும் புவியலும் சிங்களவரையும் தமிழரையும் முஸ்�ங்களையும் அருகருகே வாழ விதித்துள்ளது. அளவால், கலாசாரத்தால், செழிப்பால் வேறுபட்ட பல நாடுகளை ஒன்றுபடுத்தும் முயற்சியில் ஜரோப்பா முன்னணியில் நிற்கின்றது. அதிகாரங்களையும் வளங்களையும் பகிர்ந்கதும் குவித்தும் யெல்படும் தேசங்களே சுபீட்சமடையும் என்கிறார் இவர். இந்த வகையில் பல நூற்றாண்டுகளாகக் குரோதப்பட்டும் போரிட்டும் வந்த ஜேர்மனியும் பிரான்சும் சிறிலங்காவிற்கும் தமிழீழத்திற்கும் மாதிரியாக அமையலாம் என்ற இவரது கருத்து முரண்பாட்டை தீர்பதற்கான உரத்த சிந்தனை மட்டுமல்ல, புதிய ஓடுபாதையும்தான். ஒருமக்கள் தம்மைத் தாமே ஆள்வதும் , இன்னொரு மக்களை ஆள மறுப்பதும் சனநாயகத்தின் முதிர்ச்சியாகும். அங்குதான் உறுதியான ஸ்திரத்தன்மை நிலவும். எல்லோரும் வெல்ல முடியும். எல்லோரதும் நிரந்தரமான நலன்கள் பேணப்படுவதோடு எல்லோரும் பரஸ்பர நண்பர்களாவும் புதியதோர் உலகம் செய்வோம்.


பயன்பட்டவை

  1. International Dimensions of the Conflict in Sri Lanka (CJPD )
  2. www.tamilnation.org
  3. Envisioning New Trajectories for Peace in Sri Lanka
  4. புறநாணூறு

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home