"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Selected Writings தமிழ்த் தேசியமும் தனிதாயகம் அடிகளாரும் 13 February 2007 உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் என்றதுமே பலரின் கண்முன் வருபவர் தனிநாயகம் அடிகளார் என்றால் அது மிகையாகாது. இன்று பலரும் மேடைகளில் தம் பேச்சின் ஆரம்பத்தில் அல்லது முடிவில்:
எனக்
கூறுவதைக் கேட்கின்றோம்.
இதில் முதல் இரு அடிகள் எமது பிறப்பின் இருப்பை எமது செயல்களே நிர்ணயிக்கின்றன என்ற கருத்தையும் கடைசி இரு அடிகள் நல்வினைகளின் விளைவால் வரும் பிறப்பு அன்பின் வழி சிவத்தைத் தேடும் என்ற அர்த்தத்தையும் தருகின்றது. இந்த அன்பு தமிழாக, பக்தியாக ,ஆர்வத்தோடு வாழ்ந்த வாழ்வாக அடிகளாருக்கு அமைந்ததைப் பார்க்கின்றோம். அவரின் பார்வையில் இது தமிழ்ப் பண்பாட்டின் வெளிப்பாடு எனலாம். இந்த இரு இறுதி வரிகளை 1966 ஆம் ஆண்டில் அடிகளார் தானே முன்நின்று ஒழுங்கு செய்த முதலாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை ஆரம்பித்து வைத்தபோது குறிப்பிட்டார். இதன் பின் இவ் வரிகள் தாரக மந்திரமாகத் தமிழ் கூறும் நல்லுலகம் எங்கணும் ஒலித்து வருவதைக் கேட்கின்றோம். இதனை ஏன் அழுத்திக் கூறுகின்றோம் எனில் அடிகளார் தமிழ் மக்களைத் தட்டி எழுப்பியதற்கு இதுபோன்ற பல உத்திகளைக் கையாண்டு அதில் பெரும் வெற்றி கண்டார் என்பதை விளக்குவதற்கே. இவரின் இந்த உத்தியை விவேகானந்தரின், பாரதியின், விபுலானந்தரின், ஆங்கிலக்கவிஞன் ரெனிசன் பிரபு போன்றோரின் "எழு , விழி , பற " என்ற நிலைப்பாட்டிற்கு ஒப்பிடலாம். கிரேக்கர் ,ரோமர், சீனர், அரேபியர் , வட இந்தியர் என பல்வேறு நாகரிகங்களுடன் ஆதித் தமிழர் கொண்டிருந்த வர்த்தக ,பண்பாட்டுத் தொடர்புகளும் : " யாதும்
ஊரே யாவரும் கேளிர் " " யாதானும்
நாடாமரல் ஊராமரல் என் ஒருவன் அதேசமயம் தமிழர் தமது மொழியை , பண்பாட்டை பேணிப் பாதுகாப்பதுடன் புதியன செய்வதன் மூலமே தமது தேசியத்தை உலகத்தேசியத்திற்கு உவந்து அளிக்கலாம் என்கின்றார். இதனையே Reciprocal Bases of National Culture and the fight for Freedom ( தேசியப் பண்பாட்டிற்கும் சுதந்திரப்போராட்டத்திற்குமான பரஸ்பர தளங்கள் ) என்ற தலைப்பில் ஆபிரிக்க கறுப்பின எழுத்தாளர் மாநாட்டில் ஆற்றிய உரையில் Frantz Fanon
தனது செயல்களாலும், தனது திறமைகள் வாழ்வின் வசதிகள், கிடைத்த வாய்ப்புக்கள் அத்தனையையும் தமிழ் இனத்தை சிந்திக்க, செயல்பட வைத்தவர் தனிநாயகம் அடிகளார். இவருக்கு தமிழ்ப் பண்பாட்டை பேணி வளர்ப்பது என்பது தெளிவான சிந்தனையின் அடிப்படையில் அமையும்போதே பயன்தருவதாகும். 1955 ஆம் ஆண்டு கொழும்பில் அமைந்திருந்த தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தில் ஆற்றிய உரையில்
ஒருவரின் பண்பாட்டிற்காக , தாயகத்திற்காக இறைவன் தந்த காலத்தையும் சக்தியையும் அர்ப்பணிப்பது உயர்வானதும் தன்னலம் அற்றதுமாகும். தமிழ்ச் சான்றோர் தமிழ்ப்பண்பாடு தமிழ் மக்களின் கிடைத்தற்கரிய பொக்கிசம். எனவும் இதனைப் பேணுவதற்கு எந்தத் தியாகங்களும் ஈடாகா. உயிரும் தான் எனக் கூறியுள்ளனர். ஏனெனில்
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் யாழ்பாணமாவட்டத்தில் கரம்பன் என்னும் ஊரில் பிறந்த அடிகளார் கால் படாத நாடுகளே இல்லை எனலாம். இவர் பயணம் எல்லாம் தமிழ்த் தேடலாக தமிழ்த்தேசியத்திற்கு உரமூட்டுவதாக அமைந்தன. முடிவில் இவரும் தான் தொடங்கிய இடமான கரம்பனுக்கு வந்து அமைதிகண்டார். தன்னையும் முதன் முதலாகத் தரிசித்திருப்பார். இளங்கோ அடிகளாரைப்போல் , விபுலானந்த அடிகளாரைப்போல் எதைத்துறந்தாலும் தமிழையும் தமிழச்க செய்யும் வாழ்வையும் துறவாத துறவியானார். இதுவும் " மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே " என வாழ்வில் கொண்ட பற்றின் பண்பாடே எனலாம்.
என்னும் தாகூரின் அஞ்சலியை நினைவு கூர்ந்து அமைகின்றேன்.
|