"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Selected Writings
M.Thanapalasingham, Australia
ம. தனபாலசிங்கம்,
அவுஸ்திரேலியா
இன்றைய நிகழ்வின் நாயகனான கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்களே இனிய தமிழ் உறவுகளே உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள். வரலாறு, அதற்கான மூலாதாரங்கள், அவை சம்பந்தமான தேடல்கள் பற்றிய நண்பர் குணசிங்கத்தின் PRIMARY SOURCES FOR HISTORY OF THE SRI LANKAN TAMILS-World wide search என்னும் அரிய பொக்கிசத்தினை அரங்கேற்ற இங்கு கூடியிருக்கின்றோம். உண்மையின் தேடலுக்காக பகையையும் துன்பங்களையும் சந்தித்த ஒளவையும், கபிலரும், கம்பனும் எமது முன்னோர்கள். நெற்றிக் கண்கூட அவர்களை எரித்துவிடவில்லை. உண்மையில் பற்றுறிதி கொண்ட நண்பர் குணசிங்கத்தின் தேடலின் விளைச்சலே இன்று எம்முன் அரங்கேறுகின்றது. " கருதிய பொருளெல்லாவற்றையும் எதனாற் பெறலாம்? தவத்தினால் பெறலாம். இடையறாத முயற்சியே தவமெனப்படுவது " என்ற விபுலானந்த அடிகளாரின் வார்த்தைக்கு குணசிங்கம் ஒரு நல்ல உதாரணம் என்பேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் அவரது இலங்கை தமிழ் தேசியவாதம் அதன் ஆரம்ப தோற்றம் பற்றியதோர் ஆய்வு என்னும் நூலை வெளஹயிட்டமையை நாம் அறிவோம். அந்நூலைப்பற்றி கூறுகையில்
என தந்தை செல்வாவின் மருமகனும் அரசியல் விஞ்ஞானத்தில் துறைபோகியவருமான ஏ.ஜே.வில்சன் குறிப்பிட்டுள்ளார். இந்த நூலும் புலமைத்துவ உலகிற்கு, அறிவுலகிற்கு, கல்வி உலகிற்கு குணசிங்கம் வழங்கிய பெரும் கொடை என்பேன். இந்தப் பணியை ஒரு யோகமாக, தவமாக அவர் வரித்துக்கொண்டதையும், அதற்காக அவர் பட்ட பாடுகளையும், சந்தித்த சவால்களையும், மன உளைச்சல்களையும் பணநெருக்கடிகளையும்,அதனால் அவர் குடும்ப பழுக்களையும் நான் அறிவேன். இவை எதுவுமே முடிவில் அவரின் வேகத்தை தணிக்கவில்லை. இதுவே அவரின் பலம். வாழ்க்கை வெறுமையிலும், சூனியத்திலும் நிகழ்வதில்லை. பரதேசி கூட வெளியிலும் (space) காலத்திலும் (time ) வாழ்கின்றான். பரதேசியே வரலாற்றில் வாழும்போது எமது நிலை என்ன. எனவேதான் வரலாறு வாழ்வு சம்பந்தப்பட்டது. வரலாற்று ஞானம் வாழும் சமுதாயத்திற்கு வேண்டப்படுவது. இதனால்தான்போலும், "Those who cannot remember the past are condemned to fulfill it " � George Santayana கூறியுள்ளார். ஒரே சமயத்தில் நாம் முக்காலத்திலும் வாழவில்லையா? வரலாறு என்றால் எழுத்து வடிவத்துடனான
கடந்த காலத்தின் ஒரு பகுதி. எழுத்து ஆதாரம் இல்லாத கடந்த காலத்தை
வரலாற்றிற்கு முற்பட்ட காலம் என்பர் ("History" means that part of the
past for which there is written record,all before it is
pre-history") இதனால்தான் வரலாற்றின் பெரும் திருப்புமுனை எழுத்தின்
கண்டுபிடிப்பே எனக்கூறப்படுகின்றது. (The biggest turing point
in history was literaly "history" itself. The invention of the
written word ) CLIO-in Greek mythology one of the nine muses, patron of history வரலாற்றியலின் தந்தை எனப் போற்றப்படும் ஹெறோடோற்றஸ் கி.மு 484 இல் வாழ்ந்தவர். இவர் எழுத்தில் வரலாற்றை பதித்தார். அவ்வாறு பதிக்கும்போது அதற்கான மூலாதாரங்களை தேடினார். உதாரணமாக ஹோமர் என்னும் கிரேக்க ஆதிக்கவியால் பாடப்பட்டதெனக் கூறப்படும் இலியட் என்னும் இதிகாசத்தில் இடம் பெறும் றோயன் யுத்தம் உண்மையில் நிகழ்ந்ததா என்பதை,
இதுவே அணுகுமுறை. இதையே குணசிங்கம் போத்துக்கல் லிஸ்பன், நெதர்லாந்து ஹேக் நகரம், பிரித்தானியா, கோவா, தமிழ்நாடு, அமெரிக்கா எங்கணும் உள்ள ஆவணக்காப்பகங்களிலும், தேசிய நூலகங்களிலும் தேடி பட்டியல் இட்டுள்ளார். இவை கௌரவப் பேராசிரியர் கா.சிவத்தம்பி கூறுவதுபோல்
ஈழத்தமிழ் மக்கள் படையும் கொடியும் கொண்டு நடத்திவரும் இன்றைய போராட்ட காலகட்டத்தில், தமிழ் தேசியம் முதிர்ந்து நிற்கும் இன்றைய சூழலில் நண்பர் குணசிங்கத்தின் இந்தப் படையல் காலதேவதையை களிப்பில் ஆழ்த்தும். காலத்தால் செய்த சேவைக்காக அவருக்கு எமது நன்றிகள். கலாநிதி கே.இந்திரபாலாவின் அண்மைய
வெளியீடான
THE
EVOLUTION OF AN ETHNIC IDENTITY � THE TAMILS IN SRI LANKA
C.300 BCE TO C.1200 CE என்னும் நூலை அவர் வரலாற்றின் ஆதிக்கத்தை,வலுவை நாம் சரியாக
விளங்கிக் கொள்ள வேண்டும். |