Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > பிணம் தின்னும் கழுகுகள் வழங்கும் மூன்றாவது சுனாமி

Selected Writings by Sanmugam Sabesan,  
சபேசன், அவுஸ்திரேலியா

பிணம் தின்னும் கழுகுகள்
வழங்கும் மூன்றாவது சுனாமி


தமிழும், தமிழினமும்,  தமிழரின் தேசங்களும் முன்னரும் பலதடவைகள் கடற்கோள் தந்த அவலங்களுக்கு முகம் கொடுத்ததாக கருத்துக்கள் பல உண்டு.

பண்டைய காலத்தில் “சம்புத்தீவு” என்கின்ற நாவலந்தீவின் தெற்குப்பகுதியே தமிழகம் ஆகும். வடக்கே விந்தியமலை, தெற்கே அவுஸ்திரேலியா, மேற்கே ஆபிக்கா, கிழக்கே சீனம் - என்கின்ற இலெமூரியாக் கண்டம், முதலில் ஏற்பட்ட கடற்கோளினால் துண்டாடப்பட்டது.

இதனால் விந்தியத்திற்கு வடக்கே இருந்த கடல் வற்றியது. இமயமலை தோன்றியது. பின்னர் ஏற்பட்ட இரண்டாவது கடற்கோளில்ää மூதூருடன் கூடிய தமிழகத்தின் பெரும்பகுதியைக் கடல் கொண்டது. இம்மூதூரே பின்னாட்களில் பாண்டிய அரசனால் ஆளப்பட்ட மதுரையாகும். இப்பெரு ஆழிப்பேரலையின் போதே இலங்கை தமிழகத்தினின்று பிரிந்தது. பஃறுளிää குமரி ஆறுகளும் குமரிக்குன்றமும் அழிந்து போயின. முத்துக்குப் புகழ் பெற்ற பாண்டியனின் தலைநகரான கபாடபுரம் மூன்றாவது கடற்கோளின் போது அழிவைச் சந்தித்தது.

இவ்வாறு தொல்காப்பியப் பாயிரச் செய்யுளையும் சிலப்பதிகாரத்தையும், புறநானூறையும் மேற்கோள் காட்டி பேராசிரியர் பெ. ராசாராமன் போன்றோர் குறிப்பிடுவதுண்டு.

ஆனால் கிறிஸ்துவுக்கு பின் மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியங்களில் கடற்கோள் பற்றிய குறிப்புக்கள் கிடையாது. என்றும் சிலப்பதிகாரம், கலித்தொகை போன்ற இலக்கியங்களில் உள்ள குறிப்புக்களை பல நூற்றாண்டுகளுக்குப் பின் வந்த உரைகாரர்கள் மிகைப்படுத்தினார்கள் என்றும் வரலாற்று ஆசிரியர் சுப்பிரமணியம் போன்றோர் கூறுவதுண்டு.

பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழ்தெங்கம் ஏழ்மதுரை, ஏழ்முன்பாலை, ஏழ்குறும்பனை... என்ற பட்டியலில் உள்ள ஏழ்தெங்க நாட்டை, ஈழவர் வாழ்ந்த தெங்க நாடு என்றே பொருள் கொள்ள வேண்டும் - என்ற ஆய்வுக் கருத்தையும் நாம் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

எவ்வாறு பாண்டியர் வாழ்ந்த நாடு பாண்டியநாடு என்ற பெயர் பெற்றதோ அதேபோல் ஈழவர் வாழ்ந்த நாடுää ஈழநாடு என வழங்கப்பட்டது. எழு அல்லது இழு என்ற வினையடியே திரிந்து ஏழ் என்ற ஆனது என்பதே பொருத்தமானதாகும். ஈழர் அல்லது ஈழவரே, ஈழத்தின் ஆதிக்குடியினர் ஆவர்கள். ஈழர் என்பவரையே ஆரியர்ää இயக்கர் என்று அழைத்தார்கள். மகாவம்சமும் சிங்களவர் குடியேறுவதற்கு முன்னரேயே அங்கு இருந்த இயக்கர் குறித்துக் கூறுகின்றது.

ஆழிப்பேரலை தந்த அழிவினால் தமிழீழமும் தமிழீழத்தவரும் பாதிக்கப்பட்டிருக்கும் இவவேளையில் கடற்கோள் குறித்த விரிவான வரலாற்று ஆய்வைச் செய்வது அல்ல எமது நோக்கம். அதற்கு வேறு சந்தர்ப்பம் உண்டு. ஆனால் சமீபகால வரலாற்றில் இப்படிப்பட்ட இயற்கை அனர்த்தம் எதுவும் தமிழீழ மண்ணில் நிகழ்ந்ததில்லை.

தவிரவும் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்ட அனர்த்தங்கள் யாவும் இயற்கையோடு மட்டுமே சம்பந்தப்பட்டவையாக இருந்ததைச் சுட்டிக் காட்டுவதுதான் எமது நோக்கமாக இருந்தது. முன்னைய கடற்கோள் அழிவுகளின் போது இயற்கை தந்த அவலங்களை மட்டுமே பண்டைத் தமிழகம் எதிர் கொண்டது. ஆனால் இன்று தமிழீழமும் தமிழினமும் எதிர்கொள்வது ஆழிப்பேரலை அனர்த்தங்கள் மட்டும்தானா? என்ற கேள்விக்குரிய விடையைத் தர்க்கி;ப்பதே எமது நோக்கமாகும்.

ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற தமிழர் தாயகத்தை கட்டி எழுப்புவதற்காக சகல வளங்களையும் ஒன்று திரட்டித் தீவிரமாக உழைக்குமாறு தமிழீழத் தேசியத் தலைவர் அழைப்பு விடுத்திருக்கின்றார். அந்த அழைப்பின் போது தேசியத்தலைவர் ஒரு முக்கிய விடயத்தை மிகத்தெளிவாகக் கூறியிருந்தார். எமது மக்களின் துயர் குறித்தும், பாதிப்புக் குறித்தும் தலைவர் கீழ்வருமாறு கூறியிருந்தார்:-

“அழிவுகளும் இழப்புகளும் எமது மக்களுக்குப் பரீட்சயப்பட்டுப்போனவை. எனினும் சுனாமியால் ஏற்பட்ட அதிகமான உயிரிழப்பும் இடப்பெயர்வும் இயற்கையின் சீற்றத்தால் மிகவும் குறுகிய நேரத்தில் நிகழ்ந்ததென்ற வகையில் அதிர்ச்சியான ஒன்றாக உள்ளது. கடந்தகாலத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் நடவடிக்கைகளாலும் இராணுவ தந்திரோபாயங்களாலும் எமது மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு இடம் பெயரவும் சொத்துக்களை இழக்கவும் நேரிட்டது. இது சர்வதேசமும் அறியப்படாமல் மௌனமாக எமது மக்களையும் தேசத்தையும் சிதைத்த முதலாவது சுனாமியாகும்! இந்நிலையில் டிசம்பர் 26ம் திகதி இடம்பெற்ற அனர்த்தம்ää எமது மக்களைப் பொறுத்தவரையில் இரண்டாவது சுனாமியே!”

சகல வளங்களையும் திரட்டி தமிழர் தாயகத்தைக் கட்டி எழுப்பிää எமது மக்களின் துயர் துடைத்து அவர்களைத் துரிதகதியில் இயல்பு வாழ்க்கைக்கு இட்டுச்செல்வதற்கான முயற்சிகளில் தமிழீழத் தேசியத்தலைவரும்ää அவருடைய வழிநடத்தலில் விடுதலைப்புலிகளின் அனைத்துப் படையணிகளும் மற்றும் தொண்டர் நிறுவனங்களும் பணி புரிந்து கொண்டிருக்கின்ற இந்த வேளையில் மூன்றாவது சுனாமி ஒன்றை உருவாக்குகின்ற செயல்பாட்டில் சிலர் இறங்கியுள்ளதை இப்போது நாம் காணக்கூடியதாக உள்ளது.

சிங்கள பௌத்தப் பேரினவாத அரசும்,  அதன் தமிழ்விரோத அரசியல் கூட்டணியும், இவர்களுக்கு துணைபோகின்ற புலம் பெயர்ந்த பிணம் தின்னிக்கழுகுகளும் தமிழ் மக்களுக்கு எதிரான மூன்றாவது சுனாமியொன்றை உருவாக்கும் செயல்பாட்டில் சிலர் இறங்கியுள்ளதை இப்போது நாம் பார்க்கக்கூடியதாக உள்ளது.

தமிழீழ மக்களுக்குச் செல்லக்கூடிய நிவாரணப்பணிகளையும் நிவாரண நிதிகளையும் தடுத்து நிறுத்துவதே இந்தப் பிணம் தின்னும் கழுகுகளின் முக்கியமான பணியாக இருக்கின்றது. இந்த கேவலமான செயல்பாட்டிற்கு உறுதுணையாகப் புலம் பெயர்ந்த சில கதிர்காமக் கனவான்கள் திகழ்வது இன்னும் வேதனையாகத்தான் உள்ளது. ஆனால் இது இனியும் வியப்பூட்டுவதாக இல்லை.

ஏனென்றால் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதும் நாட்டுப்பற்றாளர்கள் மீதும் இக்கனவான்கள் கொண்டுள்ள தனிப்பட்ட சுயநலக் காழ்ப்புணர்ச்சி காரணமாக இவர்கள் தமிழ்த் தேசிய நலனுக்கு எதிராகச் செயல்பட்டதும் செயல்பட்டு வருவதும் தெரிந்த விடயங்;களே!. ஆனால் இம்முறையோää இக்கனவான்கள் ஆழிப்பேரலை தந்த அனர்த்தங்களுக்கும் மேலான அனர்த்தங்களைத் தமிழ் மக்களுக்குத் தருவதாக முடிவு செய்து விட்டார்கள் போலும்.

ஆமாம், தமிழீழ மக்களின் துயர் துடைப்பதற்காகத் திரட்டப்படும் நிதியை எவ்விதமாகவாவது தடுப்பதன்மூலம் தமிழர் தாயகத்திற்கு மேலும் அழிவைக் கொண்டுவருவதே இவர்களின் மேலான நோக்கமாகும். அதற்காக இவர்கள் மேற்கொண்டுள்ள திட்டங்களில் ஒன்று தமிழர் புனர்வாழ்வுக்கழகம் போன்ற உத்தமமான நிறுவனங்களுக்கு எதிராகப் பொய் பிரசாரம் செய்வதாகும்.

பிணம் தின்னும் கழுகுகள் வழங்குகின்ற-வழங்க முயற்சிக்கின்ற-மூன்றாவது சுனாமி இது.

சுனாமி என்ற ஆழிப்பேரலை, டிசம்பர் மாதம் 26ம் திகதி தமிழர் தாயகத்திற்கும் தாயகத்து உறவுகளுக்கும் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியபோது துடித்து எழுந்தது உலகத்தமிழ் இனம்.

அவுஸ்திரேலியா உட்பட புலம் பெயர்ந்த நாடுகளில் வாழுகின்ற தமிழினம் உடல் சிலிர்த்து உள்ளம் குமுறி தம் உடன்பிறப்புக்களுக்கு உதவமுன் வந்தது. ஆண்டாண்டு காலமாக தன்னலமற்ற உயரிய பணிகளைச் செவ்வனே செய்து வருகின்ற தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஊடாக உலகளாவிய ரீதியில் உலகத்தமிழர்கள் தமது தார்மீக பங்கினை வழங்கினார்கள். தொடர்ந்தும் வழங்கி வருகின்றார்கள்.

இது பொறுக்கவில்லை, இந்த கதிர்காமக் கனவான்களுக்கு. ஏற்கனவே பொருமிக் கொண்டிருந்த ஜேவிபி யினருக்கும் மேலாக இந்தக் கதிர்காமக் கனவான்கள் பொங்கி எழுந்தார்கள்! சிறிலங்கா அரசும் அதன் இராணுவமும் தமிழீழப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிவாரணப் பொருட்களைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்ததை உலகச் செய்தியாளர்களே வெளிக்கொண்டு வந்திருந்தபோதும் இந்தக் கதிர்காமக் கனவான்கள் கிஞ்சித்தும் கவலைப்படவில்லை!

மாறாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் உயரிய மனிதாபிமானப் பணிகளை இயலுமான வரையில் தடை செய்வதே இவர்களது முழுநேரப் பணியாக இருந்தது. அங்கே தமிழர் தாயகத்தில் எமது உடன்பிறப்புக்கள் சொந்தம் இழந்து சொத்து இழந்து உடுக்க உடையின்றி உறைவிடம் எதுவும் இல்லாமல் பரிதவித்துக்கொண்டிருக்கையில் இந்தக் கதிர்காமக் கனவான்கள் எமது மக்களின் கதறல்கள் கூட வெளிவரக்கூடாது என்று அவர்களின் குரல்வளைகளை நெரிக்கின்ற பணியில் ஈடுபட்டார்கள்.

இவர்களுடைய இந்தப்பணியில் அவுஸ்திரேலிய நாட்டுக் கதிர்காமக் கனவான்களே உலகில் முதலிடம் பெற்றார்கள். சிறிலங்கா அரசின் பரிசில்கள் மேலும் மேலும் அவர்களுக்கு கிட்டுமோ யார் அறிவார்?

சிங்கள பௌத்த பேரினவாதச் சக்திகள் உலகலாவிய வகையில் ஒரு விடயத்தில் அதிக கவனம் எடுத்துக் கொண்டன. தமிழர் புனர் வாழ்வுக் கழகத்திற்கு நிதி எதுவும் போய்ச் சேர்ந்து விடக் கூடாது என்பதற்காக பல விஷமத்தனமான கீழ்தரமான பிரச்சாரங்களை இச்சிங்கள அமைப்புக்கள் செய்தன. சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்கள்ää தமிழ் மக்களுக்குத் தந்த அவலங்கள் கூட இக்கல்நெஞ்சக்காரர்களுக்கு போதவில்லை போலும். இருபது ஆண்டு அரச பயங்கரவாதப் போர்களினால் தமிழ் மக்கள் அடைந்திட்ட அவலநிலை சுனாமி நிவாரணநிதியால் மாறிவிடுமோ என்று கூட அஞ்சினார்கள் போலும் இந்த உத்தமர்கள்!

ஒருபுறம் சிறிலங்கா அரசானது போதிய நிவாரணத்தை தமிழ்பிரதேசங்களுக்கு அனுப்பாமலும்ää பலவற்றைப் பாதிக்கப்படாத சிங்கள பிரதேசங்களுக்கு அனுப்பியும் தனது அராஜகத்தை நடாத்தியதை உலக ஊடகவியலாளர்கள் உலகிற்கு வெளிக்கொண்டு வந்தார்கள். அதன் இன்னொரு பக்க விளைவாக ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகமான திரு கோபி அனன் அவர்கள் தமிழரின் தாயகப்பகுதிகளுக்குச் செல்வதற்கு சந்திரிக்கா அரசானது இராஜக தந்திர ரீதியில் தடையை விதித்து தமிழ் மக்களை ஏமாற்றக் கடலில் மீண்டும் தள்ளியது.

மறுபுறமோ புலம் பெயர்ந்த நாடுகளில் சிங்கள-பௌத்த பேரினவாத சக்திகளும் கதிர்காமக் கனவான்களும் கைகோர்த்துக் கொண்டு தமிழினத்திற்கான நிவாரணநிதிகளுக்கு ஆப்பு வைக்கும் வேலைகளில் இறங்கினார்கள்.

இவையெல்லாம் போதாதென்று தமிழ்மக்கள் மீது யுத்தம் ஒன்றை வலிந்து திணிக்கின்ற முயற்சியிலும் சிறிலங்கா அரசு இறங்கியது. சமாதானத்திற்கான காலத்தில் அரசியல் பணிகளில் ஈடுபட்டு, சுனாமியின் கோரதாண்டவத்தில் சிக்குண்டு அல்லல்படுகின்ற எமது மக்களுக்கான நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வந்தவருமான மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களின் அரசியல்துறைப் பொறுப்பாளருமான லெப்டினட் கேணல் கௌசல்யனைக் குறிவைத்து கொலை செய்தது சிறிலங்கா இராணுவம்.

இந்தப் படுகொலைச் சம்பவத்தில் லெப்டினட் கேணல் கௌசல்யனுடன் மேஜர் புகழன், மேஜர் செந்தமிழ்,  இரண்டாம் லெப்டினட் விதிமாறன் ஆகியோரும் வீரச்சாவை தழுவிக்கொண்டனர்.

 இச்சம்பவத்தில் காயமுற்றுப்பின் உயிரிழந்த முன்னாள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்ää மனித உரிமை ஆய்வாளருமான திரு சந்திரநேரு அரியநாயகம் அவர்களின் மகத்தான பணிகளைப் பாராட்டி போற்றி அவரை தமிழீழத்தின் மாமனிதராக தேசியத் தலைவர் அவர்கள் கௌரவித்தார். சமாதானத்திற்கான அதி உயர் விலையை அதிஉயர் தியாகங்களைää விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தச் சமாதானத்திற்கான காலத்திலும் கொடுத்து வருகின்றது என்ற கூற்றுமிகச் சரியானதாகும்.

அன்புக்குரிய நேயர்களே! கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் தமிழ்த்தேசிய இனம் பட்ட இன்னல்களுக்கும்ää கண்ட ஏமாற்றங்களுக்கும் அளவு கணக்கில்லை. குறிப்பாக இரண்டு தசாப்த காலத்திற்கும் மேலாக தமிழினத்தின் மீது சிங்களஅரசுகள் மேற்கொண்ட அரச பயங்கரவாதப்போர்கள் காரணமாக தமிழர் தாயகம் எதிர்கொண்ட இழப்புகளுக்கும்ää அவலங்களுக்கும் அளவுகணக்கில்ல. அதுமட்டுமல்ல சமாதானக்காலம் என்று சொல்லி கடந்த மூன்றாண்டுகளில் ஏற்பட்டுள்ள போர் ஓய்வுக் காலத்திற்கான புரிந்துணர்வுக்கான சமாதானத்திற்கான அறுவடையை தமிழர் தாயகம் மட்டும் பெற்றுக் கொள்ளவில்லை.

இந்தவேளையில் சுனாமி ஆழிப்பேரலை காரணமாக தமிழர் தேசம் கண்ட அழிவுகளில் இருந்தும் அனர்த்தங்களில் இருந்தும் மீள்பட்டு எழுந்து வருவதற்கும் சிங்கள பேரினவாதம் விடுவதாக இல்லை.

தமிழீழத் தேசியத்தலைவர் இந்த இயற்கை அனர்த்தத்தை இரண்டாவது சுனாமி என்று மிகத் தெளிவாக அன்று கூறியிருந்தார். இப்போது இந்தப்பிணம் தின்னிக்கழுகுகள் வழங்குகின்ற மூன்றாவது சுனாமியையும் நாங்கள் காண்கின்றோம்.

அன்புக்குரிய நேயர்களே! யதார்த்தநிலையைப் புலம் பெயர்ந்த தமிழர்களாகிய நாம் புரிந்து கொள்ள வேண்டிய நிலை வந்தாகி விட்டது என்றே நாம் கருதுகின்றோம். தமிழீழ விடுதலைப்புலிகள் இன்று இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பலம்பெற்ற ஒரு சக்தியாக மட்டுமல்லாது தமிழீழ மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக ஜனநாயக ரீதியிலும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளவர்களாகவும் திகழ்கிறார்கள். தமிழர் தாயகத்தையும், தமிழினத்தையும் காப்பார் வேண்டிய தார்மீகக் கடமை அவர்களுக்கு உண்டு.

எனவே இந்த நெருக்கடியான அரசியல் - இராணுவ காலகட்டத்தில் தீர்க்கமான இறுக்கமான முடிவுகள் தமிழின நலன் கருதி எடுக்க வேண்டிய கடமையும் கடப்பாடும் அவர்களுக்கு உண்டு. இப்படிப்பட்ட நிலையில் முன் எப்போதையும் விட இப்போது தலைமையின் கரத்தை பலப்படுத்த வேண்டிய கடமையும் -உரிமையும் எமக்குண்டு. அதனைச் செவ்வனே செய்வோம். அதனைச் செய்வதன் மூலம் இந்தப் பிணம் தின்னிக் கழுகுகளை அவர்களது மூன்றாவது சுனாமியே அடித்துச் செல்லட்டும்!

பாதகஞ் செய்வாரைக் கண்டால்-நாம்
பயங்கொள்ளல் ஆகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா-அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா.

என்ற பாரதியாரின் பாடல் கூட நம்மை வழிகாட்டக் காத்திருக்கின்றது.

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home