Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Nation without a State> Pongu Thamizh > Pongu Thamizh 2005 > யாழ் பொங்குதமிழ் ஏற்பாட்டுக்குழு அறிக்கை > Struggle for Tamil Eelam

PONGU THAMIL:2005

யாழ் பொங்குதமிழ் ஏற்பாட்டுக்குழு அறிக்கை

19 September 2005

"தமிழீழ தனியரசுக் கோரிக்கையை சர்வதேச சமூகம் அங்கிகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்வரும் 30ம் திகதி யாழ்குடாநாட்டில் நடைபெறவுள்ள �பொங்குதமிழ் 2005� எழுச்சி நிகழ்வுக்கு சர்வதேச நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் எம்தமிழ் உறவுகள், பொதுஅமைப்புக்கள், பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியங்கள் என்பன ஆதரவு செய்திகளை அனுப்ப விரும்பின், எதிர்வரும் 27ம் திகதி முன்பாக [email protected] எனும் emailக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். நன்றி."

தமிழ் இனம் தனது தாயகப் பிரதேசத்தில், தனக்கே உரிய மொழி, கலாச்சாரத்துடன், தமிழீழத் தனியரசை சர்வதேசம் அங்கீகரிக்க வேண்டும்....இதற்கு ஈழத்தமிழ் மக்களால் முன்வைக்கப்படும் காரணங்கள்...

"In the ultimate analysis, the struggle of the people of Tamil Eelam  is about democracy.  If democracy means the rule of the people, by the people, for the people then it must follow, as night follows day, that no one people may rule another. The right of self determination provides the framework within which democracy may flower. Every people have the right to freely determine their political status and the terms on which they may associate with another people. Democracy and the right to self determination go hand in hand - one cannot exist without the other. The struggle of the people of Tamil Eelam is about their democratic right to rule themselves. "The Charge is Genocide, the Struggle is for Freedom, 1998

"...The problem in nationally divided societies is that the different groups have different political identities, and, in cases where the identities are mutually exclusive (not nested), these groups see themselves as forming distinct political communities. In this situation, the options available to represent these distinct identities are very limited, because any solution at the state level is inclined to be biased in favour of one kind of identity over another. ... One conclusion that can be drawn is that, in some cases, secession/partition of the two communities, where that option is available, is the best outcome overall. .." Professor Margaret Moore in Nations & Nationalism in 2001

"..The demand for Tamil Eelam is not negotiable. But an independent Tamil Eelam will negotiate. And there will be everything to negotiate about. ..A meaningful negotiating process will need to address the question of working out a legal framework for two free and independent peoples to co-exist - a legal framework where they may pool their sovereignty in certain agreed areas, so that they may co-exist in peace..." The Singer Error, 2001

"..Whilst the demand for an independent Tamil state is not negotiable, there may be a need to explore fresh pathways concerning the terms on which an independent Tamil Eelam may associate with an independent Sri Lanka..." Sri Lanka - Tamil Eelam: Getting to Yes

1. வரலாற்றக்கு முற்பட்ட காலம் முதல் நாகரீகமாக வாழ்ந்து வருகின்றது.

2. தமிழ் இனத்தின் சுயாதீன செயற்பாடுகளை பெரும்பான்மை சிங்கள இனம் அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் கட்டுப்படுத்துகின்றது. இதனை சனநாயகம் என்று கூறமுடியாது. இதனை எதிர்கொள்ள சுயாதீன அரசு அமைதல் அவசியம்.

3. கூட்டான சித்திரவதைகள், படுகொலைகள், நிரப்பரப்பு ஆக்கிரமிப்பு எனத் திட்டமிட்ட இனப்படுகொலைகள் இலங்கை ஜனநாயகச் சாசனத்தில் நடைபெறுகின்றது. இதனை உடைப்பதற்கு புதிய அரசியல் கட்டமைப்பு அவசியம்.

4. சிங்கள மேலாதிக்க எண்ணமும், தமிழரை இரண்டாம் தரபிரஜைகளாக நோக்கும் எண்ணமும் சிங்கள மக்களிடம் உள்ளது. இதனை அவர்களிடம் இருந்து அகற்றமுடியாது. இதனை ஆழிப்பேரலை அனர்த்த புனர்வாழ்விலேயே காணலாம். இதற்கு ஒரே ஒரு மருந்து பிரிந்து வாழுதலே. அன்று தமிழரசுக்கட்சியினர் சுட்டமண்ணும், பச்சைமண்ணும் ஒட்டாது என்றனர். இன்று நாம் இனமேலாதிக்க மனநோய் உள்ள சமூகத்துடன் ஒன்றாக வாழமுடியாது என்கிறோம்.

5. சமாதான சூழலில் பிரிந்து வாழ்வதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்புத் தேவை. அன்றேல் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேசத்தின் பார்வைக்கு தெரியாமல் அழிக்கப்பட்டது போல் தொடர்ந்தும் எமது இனம் அழிக்கப்படும். ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் உடல், உள, ஊனமாக்கியும் பல மனித உரிமை மீறல்களைச் செய்த இலங்கை இராணுவத்தினை, ஜ.நா சமாதானப் படைக்கு அணிகலனாக்கியமை எமது மக்களின் கவலைக்கும், கண்டனத்திற்கும் உரியது.

மேலும் சர்வதேசம் சுதந்திர தேசமாக அங்கீகரித்தலேயே சிங்கள தேசம் சம அந்தஸ்தினை தமிழருக்கு வழங்க நிர்பந்திக்கலாம். அன்றேல், அடக்குமறைக்குள் தொடர்ச்சியாக வாழ வேண்டி ஏற்படும்.

6. இலங்கை இன்று இந்தியா, பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் என ஆறுக்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து இராணுவ உதவிகளைப் பெற்று பல்வேறு வண்ணங்களால் சித்திரம் வரைவது போல தமிழின அழிப்வோவியத்தை வரைகிறது. தொடர்ந்தும் இச்சமூக வன்முறைகளையும், மனிதநேயமற்ற செயற்பாடுகளையும் தமிழ் மக்கள் பொறுத்துக்கொண்டு இருக்கமாட்டார்கள். இதன் பிரதிபலன்களை சம்பந்தப்பட்டவர்கள் அனுபவிக்க வேண்டிவரும்.

7. நாகரீகமடைந்த உலகில், தகவல் தொழில்நுட்பம் மிகுந்த உலகில் இலங்கையில் தமிழர் அரச இயந்திரத்தினால் அடக்கப்பட்டு உள்ளனர். எமது உரிமைக்குரலை அரசு பயங்கரவாதம் எனப்பிரச்சாரம் செய்கின்றது. இதனை மக்கள் குரலாகவே எழுப்புகின்றோம்.

8. தமிழினம் இராணுவ ஆக்கிரமிப்பு யுத்தத்தினாலும் இன அழிப்பு நடவடிக்கைகளாலும் திட்டமிட்ட இன முன்னேறமுடியாது உள்ளது. இதனை அகற்ற சுயமான ஆளகை ஆவசியம்.

9. இன்று மனிதநேய பணிகளை சர்வதேச நிறுவனங்களே வடக்கு கிழக்கில் செய்கின்றன. ஆனால் சர்வதேச நிறுவனங்களுக்கே தெரியும் தமது செலவில் 5மூ மட்டுமே பாதிக்கப்பட்டவர்களை சென்றடையும். ஏனையவை சர்வதேச நிறுவன உத்தியோகத்தினர்களின் போக்குவரத்திற்கும், இதரசெலவுகளுக்கும். எனவே, தமிழ் மக்களுக்கு முழுமையான மனிதநேயப்பணியினை சுயமான அரசாலேயே ஆற்றமுடியும். மேலும், சர்வதேச ஊடுறுவல்களையும் தடுக்க முடியும்.

10. தமிழீழம் சர்வதேசத்தை அங்கீகரித்துவிட்டது. சர்வதேசம் தமிழீழத்தை அங்கீரிக்க எவ்வளவு காலம் காத்திருப்பது? அதனை தீர்மானிப்பது யார்? பொங்குதமிழே, தமிழினமே நீ பதில்கூறு.

"...In all regions of the world conflicts turn violent over the desire for full control by state governments, on the one hand, and claims to self-determination (in a broad sense) by peoples, minorities or other communities, on the other. Where governments recognise and respect the right to self-determination, a people can effectuate it in a peaceful manner. Where governments choose to use force to crush or prevent the movement, or where they attempt to impose assimilationist policies against the wishes of a people, this polarises demands and generally results in armed conflict. The Tamils, for example, were not seeking independence and were not using violence in the 1970s. The government response to further deny the Tamil people equal expression of their distinct identity led to armed confrontation and a war of secession..." UNESCO International Conference of Experts, Barcelona 1998

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home