சுவிற்சர்லாந்தில் உள்ள
இந்து ஆலயங்களில் வெள்ளிக்கிழமை (21.11.08) மாவீரர் வணக்க
பூசையும் ஆத்ம சாந்தி வழிபாடும் நடைபெற்றது.
ஆலயங்களில் வழமையான பூசை
வழிபாட்டினைத் தொடர்ந்து இந்நிகழ்வு இடம்பெற்றது.
அடியார்கள் தீபம்
ஏந்தியும், மலர் கொண்டும் தமது இலட்சிய நாயகர்களுக்கு கண்ணீர்
மல்க அஞ்சலி செலுத்தினர். வருடா வருடம் தேசிய மாவீரர் நாளினை
முன்னிட்டு ஆலயங்களில் இந்த வழிபாடு நடைபெறுவது வழமை.
இந்த வருடமும்
சைவத்தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் அனைத்து ஆலயங்களிலும்
மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஆலயங்களில் அடியார்கள் கூட்டம்
நிரம்பி வழிந்ததை காணக்கூடியதாக இருந்தது.
அருள்மிகு சிவன் கோவிலில் நடைபெற்ற நிகழ்வில் ஆலயத்தின் உள்ளே
மாவீரர் துயிலும் அமைத்து வழமையான பூசை வழிபாட்டினைத்
தொடர்ந்து மாவீரர் துயிலும் இல்லத்திற்கு ஆலய குருவினால் பூசை
ஆரம்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மாவீரர் துயிலும் இல்ல பாடல் இசைக்க, பிரதான
சுடர் ஏற்றப்பட்டு, மலர்மாலை அணிவித்து, அடியார்கள் தீபம்
எந்தி வணக்கம் செலுத்தினர்.
இடையிடையே கவிதா நிகழ்வும், தமிழ்க் கல்விச்சேவையினால்
நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முதலாம் இடத்தை பெற்ற மாணவர்கள்
நிகழ்வுக்கு இடையிடையே பேச்சுத்திறனை வெளிக்காட்டினர்.
இதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினராக வருகை
தந்திருந்த ஊடகவியலாளர் சண். தவராசா சிறப்புரையாற்றினார்.
|