ஜனாதிபதி தேர்தலில்
தமிழ் மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பு
Tamilchelvan in
BBC தமிழோசை
17 November 2007
இலங்கை
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் எப்போதுமே தங்களது
அக்கறையின்மையை, ஆர்வமின்மையைக் காட்டியிருக்கிறார்கள் என்று
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர்
சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இந்த ஜனாதிபதி தேர்தல்கள் பொதுவாக தங்களை ஒடுக்கி
வைத்த
சிங்கள
பேரினவாத
தலைமைத்துவம் அதிகாரத்துக்கு வருவதையே குறியீடாக காட்டியது என்று
தமிழ் மக்கள் கருதிவந்துள்ளார்கள்.
யுத்தம் உக்கிரமாக ஏவிவிடப்பட்டபோது,
இடைக்காலத்தில், தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி
செய்யக்கூடிய ஒரு தீர்வைக் கொண்டுவருவோம் என்று சிங்கள
அரசியல்வாதிகள் கூறி தேர்தல்களில் நின்றபோது தமிழ் மக்கள்
மனங்களில் சிறிதளவு நம்பிக்கை தோன்றிய சூழ்நிலைகள் ஏற்பட்டது உண்மை
ஆனால் அந்த நம்பிக்கைகள் நிறைவேறவில்லை என்றார் அவர்.
இந்த முறையும், ரனில் விக்ரமசிங்க மற்றும்
சந்திரிகா குமாரதுங்க ஆகிய இருவரது ஆட்சிக்காலங்களிலும், தமிழர்
பிரச்சினைக்குத் தீர்வு ஏதும் ஏற்படவில்லை தமிழ் மக்கள்
உதாசீனப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என அவர் தெரிவித்தார்.
அந்த வகையில் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பின்
வெளிப்பாடாகத்தான் இந்த நிலையை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு
உள்ளானோம் என்றார் தமிழ்ச்செல்வன்.